இறைவி….: ப்ரியா தம்பி

Priya Thambi கொஞ்ச நாட்களுக்கு முன்னால் உதவி இயக்குனர் நண்பர் ஒருவர் தன் கதையை என்னிடம் பகிர்ந்து கொண்டார். நாகர்கோயிலில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருப்பதாக சொன்னார். ஆணவக் கொலைக்கு எதிரான படம் என ஆவேசமாக வேறு கூறினார். அருந்ததியப் பெண்ணுக்கும், நாடார் பையனுக்கும் நடக்கும் காதல் கதை அது.... ‘’அவங்க இரண்டு பேரும் டெய்லி கிருஷ்ணன் கோயில்ல மீட் பண்ணிப்பாங்க.. அதுதாங்க அவங்க லவ் பிளேஸ்’’ என்று சொன்ன இடத்திலேயே, அதற்கு மேல் கேட்க ஒன்றுமில்லை என … Continue reading இறைவி….: ப்ரியா தம்பி

‘நாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்’:சிமாமந்தா எங்கோசி அடிச்சி

சிமாமந்தா எங்கோசி அடிச்சி தமிழில் - பிரேம் “பெண்ணியம் என்று தனியாக ஏன் சொல்ல வேண்டும்?” என்று சிலர் கேட்கிறார்கள். “மனிதவுரிமைகளில் நம்பிக்கை கொண்டவர்கள், அல்லது இது போன்ற வேறு பெயர்களை ஏன் பயன்படுத்தக் கூடாது?” ஏனென்றால் அது அவமதிப்பான பெயர் மாற்றம். பெண்ணியம் என்பது மனித உரிமையின் ஒரு பகுதி என்பது உண்மைதான், ஆனால் ‘மனித உரிமைகள்’ என்ற பொது அடையாளத்தைப் பயன்படுத்தும் போது பாலரசியலின் மிகக் குறிப்பான, தனித்த சிக்கல்களை அது இல்லாமாலாக்கி விடுகிறது. … Continue reading ‘நாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்’:சிமாமந்தா எங்கோசி அடிச்சி

#‎இறைவி‬ ஆண் எழுதி, ஆண் இயக்கி, ஆண்கள் நடித்து, ஆண்கள் பார்வையில் பெண்களைப் பற்றி ஒரு ‘புதிய’ படைப்பு…!

Vinitha P M Swamy #‎இறைவி‬ ஆண் எழுதி, ஆண் இயக்கி, ஆண்கள் நடித்து, ஆண்கள் பார்வையில் பெண்களைப் பற்றி ஒரு 'புதிய' படைப்பு... இதில் என்ன புதுமை?! ஏவாள் காலம் தொட்டு இது தானே நடக்கின்றது? சரி, இந்தப் படைப்பு சொல்ல வரும் கருத்து தான் என்ன? பெண்கள், அவர்களின் வாழ்க்கையை, தீர்மானங்களை, அதற்கான போராட்டத்தைக் கையிலெடுக்க வேண்டும்... நன்று! ஆனால் அந்த களத்திற்கான நீளம், அகலம், ஆழம், எல்லாம் ஆண்களே வரையறுத்தால் எப்படி? "எங்கள் … Continue reading #‎இறைவி‬ ஆண் எழுதி, ஆண் இயக்கி, ஆண்கள் நடித்து, ஆண்கள் பார்வையில் பெண்களைப் பற்றி ஒரு ‘புதிய’ படைப்பு…!

கேரள அமைச்சரவையில் முதன்முறையாக இரண்டு பெண்கள்!

கேரளத்தில் ஆட்சியமைத்திருக்கும் பினராயி விஜயன் தலைமையிலான இடது முன்னணி அமைச்சரவையில் இரண்டு பெண் அமைச்சர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இது கேரளத்தின் வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வு ஆகும். கேரள அரசியல் வரலாற்றில் அனைத்து அரசாங்கங்களிலுமே ஒரே ஒருபெண் அமைச்சர் மட்டுமே இடம்பெற்றுள்ள நிலையே இருந்தது. இதை முடிவுக்கு கொண்டுவந்துள்ளது பினராயி விஜயன் அரசு.முதல்முறையாக இரண்டு பெண்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர். இடதுஜனநாயக முன்னணி அரசில் பெண் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஒரு சீரிய முயற்சி எடுக்கப்பட்டு இரண்டு பெண் தலைவர்கள் … Continue reading கேரள அமைச்சரவையில் முதன்முறையாக இரண்டு பெண்கள்!

இறைவி சர்ச்சை: “என்னைத் தெரியல இந்தக் கருமத்தைக்கு”: நிகழ்ச்சி தொகுப்பாளினியை  மேடையில் சாடிய ராதாரவி

இறைவி திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளர் நிஷா, ராதாரவியின் பெயரைச் சொல்லாமல் விட்டுவிட்டதால் ஆத்திரமடைந்த ராதாரவி, அவரை மேடையிலே அநாகரிகமான முறையில், “ராதாரவியைப் பத்தித் தெரியல, இந்தக் கருமத்தை கூட்டியாந்து நிகழ்ச்சி நடத்துறீங்க” என பேசினார். நிகழ்ச்சி நடத்துபவர்கள் கொடுத்த ஸ்கிரிப்டையே தான் படித்ததாக தொகுப்பாளர் நிஷா, தெரிவித்த நிலையில், பெண்களின் பெருமை பேசுவதாக சொல்லிக் கொள்ளும் பட  நிகழ்ச்சியில் பெண்ணை பொது இடத்தில் அவமதிப்பதா என சர்ச்சை … Continue reading இறைவி சர்ச்சை: “என்னைத் தெரியல இந்தக் கருமத்தைக்கு”: நிகழ்ச்சி தொகுப்பாளினியை  மேடையில் சாடிய ராதாரவி

அமைச்சரவையில் பெண்களுக்கான இடம்: பெண்கள் ஏன் இரண்டாம்பட்சமாகவே நடத்தப்படுகிறார்கள்?

சுகந்தி நாச்சியாள்  முப்பத்திரண்டு ஆண்டுகள் கழித்து ஆளுங்கட்சியாக இருந்த கட்சியே ஆளும்கட்சியாக மீணும் ஆட்சிக் கட்டிலில் அமர்கிறது என்று சந்தோஷப்பட்டுக்கொண்டே, பெண்களின் தலையில் குட்டு வைக்கிறார்கள். தமிழக அமைச்சரவைப் பட்டியலை அறிவித்துவிட்டார்கள். மிகவும் சந்தோஷப்படக் கூடிய விஷயமாக மூன்று பெண்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டு இருக்கிறது. ராசிபுரம் தொகுதியில் வெற்றி பெற்ற டாக்டர் சரோஜா, ஸ்ரீரங்கம் இடைதேர்தலில் வெற்றிக்கனியைப் பறித்து வந்து அம்மாவிடம் சமர்பித்த எஸ். வளர்மதி, சாதி சான்றிதழை மாற்றியதாகக் கூறப்பட்ட சங்கரன்கோயில் ராஜலட்சுமி ஆகியோர் தான் … Continue reading அமைச்சரவையில் பெண்களுக்கான இடம்: பெண்கள் ஏன் இரண்டாம்பட்சமாகவே நடத்தப்படுகிறார்கள்?

“உங்கள் மகள் முடிய வெட்டிக்குவா போல? இப்படி எல்லாம் இங்க வர முடியாது. பொண்ணுன்னா நீண்ட கூந்தல் வளர்க்கணும்”: சென்னை பள்ளியில் கட்டுப்பாடு!

நலங்கிள்ளி நான் என் மகள் ஈரோடையை 7ஆம் வகுப்பில் சென்னையில் அரசுப் பள்ளி ஒன்றில் சேர்க்க முடிவெடுத்தேன். சேர்க்கைப் படிவம் நிரப்பும் சடங்குகளை முடித்த பிறகு என் மகளின் ஒளிப்படத்தைக் கொடுத்தேன். அப்போது அதைப் பெற்றுக் கொண்ட ஆசிரியர் என்ன? உங்கள் மகள் முடிய வெட்டிக்குவா போல? இப்படி எல்லாம் இங்க வர முடியாது. பொண்ணுன்னா நீண்ட கூந்தல் வளர்க்கணும். நடு வகிடு எடுத்து இரட்டைப் பின்னல் போட்டுக்கணும் எனப் பேசிக் கொண்டே சென்றார். பெண் இப்படித்தான் … Continue reading “உங்கள் மகள் முடிய வெட்டிக்குவா போல? இப்படி எல்லாம் இங்க வர முடியாது. பொண்ணுன்னா நீண்ட கூந்தல் வளர்க்கணும்”: சென்னை பள்ளியில் கட்டுப்பாடு!

ஜிஷா படுகொலையில் பேரமைதி:பெண்ணியவாதிகள் பார்ப்பனீய மயமாகிவிட்டதை போராளி சமூகம் உணரவேண்டும்: குட்டிரேவதி

குட்டி ரேவதி “எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல். * ஜிஷாவின் வல்லுறவு கொலைக்குப் பின், எங்கெங்கும் பெரும் அரற்றலாய் இருக்கிறது. ஆங்காங்கே, நண்பர்கள் ஃபேஸ்புக் பதிவுகளில், "இப்பொழுது இந்தப் பெண்ணியவாதிகள் என்ன செய்து கொண்டிருக்கின்றனர்?" என்று. ஒரு நண்பர் வேடிக்கையாக, 'ஓ, அவர்களா? பெண்ணியவாதிகளே பெண்ணியவாதிகளுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றனர், என்று பதில் இட்டிருந்தார். * 'ஜிஷா', தலித் என்பதால் பொதுச்சமூகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதைப் … Continue reading ஜிஷா படுகொலையில் பேரமைதி:பெண்ணியவாதிகள் பார்ப்பனீய மயமாகிவிட்டதை போராளி சமூகம் உணரவேண்டும்: குட்டிரேவதி

”ஜிஷாவுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக புகார் அளித்தும் போலீஸ் கண்டுகொள்ளவில்லை”: ஜிஷாவின் தாய்

கேரளத்தைச் சேர்ந்த தலித் மாணவி ஜிஷா, பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு, கொடூர மான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.பி.நாராயணன் நாடாளு மன்றத்தில் கிளப்பினார்.கேரள மாநிலத்துக்கே ஒரு கரும்புள்ளியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தில், கேரள போலீசார்உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார்.கேரள மாநிலம் எர்ணா குளம் மாவட்டத்தில் உள்ளபெரும்பாவூரைச் சேர்ந்தவர் ஜிஷா(29). ஒரு ஏழைதலித் குடும்பத்தைச் சேர்ந்த இவர், எர்ணா குளம் சட்டக் கல்லூரியில் எல்எல்பி படித்து வந்தார். … Continue reading ”ஜிஷாவுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக புகார் அளித்தும் போலீஸ் கண்டுகொள்ளவில்லை”: ஜிஷாவின் தாய்

கேரள சட்டக் கல்லூரி மாணவியின் கொடூர கொலை

சமீப காலத்தில் நடந்த மிகக் கொடூர கொலை இதுவாகத்தான் இருக்கும். கேரளத்தில் பெரும்பாவூரைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி, தன்னுடைய வீட்டில் தனியாக இருந்தபோது பாலியன் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு மிகக் கொடூரமாக கொலை செய்யப் பட்ட செய்தி இந்தியாவை உலுக்கிக் கொண்டிருக்கிறது. தன் தாயுடன் வசித்த எர்ணாகுளம் சட்டக் கல்லூரி மாணவி, கடந்த வியாழன் அன்று தன்னுடைய வீட்டில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இரவு 8.30 மணிக்கு வீட்டுக்குத் திரும்பிய அவருடைய தாய், மகள் ரத்த … Continue reading கேரள சட்டக் கல்லூரி மாணவியின் கொடூர கொலை

கேரள கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் சுரண்டலுக்கு எதிராக இவர்கள் வெற்றி பெற்றது எப்படி?

தமிழகத்தின் சரவணா ஸ்டோர்ஸ், போத்தீஸ் போன்ற விற்பனை நிறுவனங்களில் அடிப்படையான எவ்வித உரிமைகளும் கிடைக்கப் பெறாமல் ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் வதைபடுகிறார்கள். சம்பளம், வேலை நேரம் உள்ளிட்ட விஷயங்களில் இதுபோன்ற நிறுவனங்கள் எவ்வித ஒழுங்கையும் பேணுவதில்லை. கொத்தடிமைகளைப் போலவே தங்களுடைய ஊழியர்களை வைத்திருக்கின்றன. தொழிலாளர்கள் ஒன்றுபட்டு போராடாடுவதன் மூலமே இத்தகைய ஒடுக்குமுறைகளை சுரண்டல்களை ஒழிக்க முடியும் என நிரூபித்த கேரள கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவன ஊழியர்கள் போராடி பெற்ற வெற்றியை உதாரணமாகக் கொள்ள வேண்டும். கேரளத்தில் முன்னணி … Continue reading கேரள கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் சுரண்டலுக்கு எதிராக இவர்கள் வெற்றி பெற்றது எப்படி?

“நீ என்ன லாயர் மயிரு”; “வெளிநாட்டுலயா இருக்குறா”: பேண்ட் சட்டைப் போட்ட முகநூல் தமிழ் கலாச்சார காவலர்கள் இந்த உடைக்கு சொல்லும் கமெண்ட்!

கிருபா முனுசாமி உச்சநீதிமன்ற வழக்கறிஞராக உள்ளார். இவர் தன்னுடைய முகநூலில் ஒரு புதிய படத்தைப் பகிர்கிறார். அந்தப் படத்தை முகப்பில் தந்திருக்கிறோம். இந்த படத்தில் தமிழ் கலாச்சாரத்துக்கு விரோதமாக உடை (தமிழ் கலாச்சார உடை எது? ரவிக்கை அணியாமல் நீளமான புடவையை உடலில் சுற்றிக் கொள்வது இப்படித்தான் பண்டைய தமிழர்கள் உடையணிந்தனர். இதுதான் இவர்கள் குறிப்பிடும் தமிழ் கலாச்சார உடையா?) அணிந்தார் என்பதற்காக கிருபாவுக்கு அறிவுரை வழங்குகிறார் ஒருவர். அவர் அறிவுரை குறித்து கேள்வி எழுப்பும் கிருபாவை அத்துமீறி … Continue reading “நீ என்ன லாயர் மயிரு”; “வெளிநாட்டுலயா இருக்குறா”: பேண்ட் சட்டைப் போட்ட முகநூல் தமிழ் கலாச்சார காவலர்கள் இந்த உடைக்கு சொல்லும் கமெண்ட்!

டாஸ்மாக் ஒழிப்பு மாநாட்டில் பேசியவர்கள் மீது தேசத்துரோக வழக்கு: ஒன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு மாணவிகள் மீது எஃப் ஐ ஆர்!

கடந்த பிப்ரவரி மாதம் மக்கள் அதிகாரம் அமைப்பு டாஸ்மாக் ஒழிப்பு மாநாடு நடத்தியது. இதில் கலந்துகொண்டு பேசியவர்கள் மீது ஒன்றரை மாதங்கள் கழித்து தேசத் துரோக வழக்கு பதிவு செய்துள்ளது தமிழக காவல்துறை. இது குறித்து வினவு தளத்தில் வெளியான அறிக்கையில், டாஸ்மாக் எதிர்ப்பு பாடலைப் பாடிய ஒன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு மாணவிகளின் பெயரையும் முதல் தகவல் அறிக்கையில் சொல்லியிருப்பதாக தெரிவித்துள்ளனர். அறிக்கை முழுவிவரம் இங்கே: கடந்த பிப்ரவரி 14, 2016 அன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் … Continue reading டாஸ்மாக் ஒழிப்பு மாநாட்டில் பேசியவர்கள் மீது தேசத்துரோக வழக்கு: ஒன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு மாணவிகள் மீது எஃப் ஐ ஆர்!

”நீங்கள் எங்கே கை வைத்தாலும் நாங்கள் எதுவும் சொல்ல மாட்டோம்” சிக்கன் துண்டுகளை விற்க, பன்னாட்டு நிறுவனத்தின் ஆபாச விளம்பரம்

“மார்பு, தொடை, பின்புறம் என எதைத் தொட்டாலும் நாங்கள் எதுவும் சொல்லமாட்டோம்” என்கிற ஆபாச வார்த்தைகளுடன் நாண்டோ’ஸ் என்ற பன்னாட்டு நிறுவனத்தின் விளம்பரம், சமூக வலைத்தளங்களில் வசவுகளை வாங்கிக் கொண்டிருக்கிறது. ஜெம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா முதல்கொண்டு பலர் இந்த ஆபாச விளம்பரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். https://twitter.com/abdullah_omar/status/713763776500137986 டெல்லி இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழில் வெளிவந்த இந்த விளம்பரம், பாலியன் வன்முறை கலாச்சாரத்தை ஊக்குவிப்பதாக பெண்ணிய செயல்பாட்டாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். https://twitter.com/whimsydaisy/status/713867173244997632 https://twitter.com/SpoiltWoman/status/713987605277179904 https://twitter.com/anirbanblah/status/713796487281524737 https://twitter.com/PadmajaJoshi/status/713762011490885632 சமூக … Continue reading ”நீங்கள் எங்கே கை வைத்தாலும் நாங்கள் எதுவும் சொல்ல மாட்டோம்” சிக்கன் துண்டுகளை விற்க, பன்னாட்டு நிறுவனத்தின் ஆபாச விளம்பரம்

“ஒரு இரவுக்கு நீங்கள் எவ்வளவு பணம் வாங்குவீர்கள்” தொலைக்காட்சி நிருபரின் கேள்விக்கு சன்னி லியோன் தந்த அதிர்ச்சி பதில்!

பாலிவுட் நடிகை சன்னி லியோன், ஹோலி கொண்டாட்ட நிகழ்ச்சிக்காக வியாழக்கிழமை குஜராத் சென்றிருந்தார். குஜராத்தில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதியில் கணவர் டானியல் வெப்பருடன் தங்கியிருந்தார் சன்னி லியோனி.  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு இரவு தங்குவதற்காக விடுதி வந்துள்ளனர். அதிகாலை நேரத்தில் குடிபோதை கதவைத் தட்டிய ஒருவர் ஒரு உதவி வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.  அவர் குடித்திருக்கிறார் என்பதை அறிந்த சன்னியும் அவருடைய கணவரும் அவரை அங்கிருந்து வெளியிற்றினர். இந்நிலையில், தேசிய செய்தி தொலைக்காட்சி நிருபர் ஒருவர் … Continue reading “ஒரு இரவுக்கு நீங்கள் எவ்வளவு பணம் வாங்குவீர்கள்” தொலைக்காட்சி நிருபரின் கேள்விக்கு சன்னி லியோன் தந்த அதிர்ச்சி பதில்!

#விவாதம்: “என் சாதி உயர்வானது என்று சொல்லும் எல்லோருமே பிராமணர்கள்தான்”

தமயந்தி இரண்டு நாட்களாய் இணையத்தில் நெஞ்சுரம் கொண்ட ஆணவக் கொலைக்கெதிரான கட்டுரை( புகைப்படம் ) பார்த்த போதே அதன் பின்னிருக்கும் அரசியல் எனக்கு நன்கு புரிந்தது. இணையத்தில் இதைப் புரிந்து கொள்ளாமல் அவரவர் அரசியல் புரிதலும் அவசரமான பழி வாங்கும் சொற்களும் மிக ஆபாசமாக பகிர்ந்து கொள்ளப்பட்டன. கொற்றவை, குட்டி ரேவதி ,முக்கியமாக ஜோதியின் களப்பணி நான் அறிந்ததே. அவர்கள் ஒருபோதும் அப்படிப்பட்ட நிலைப்பாட்டை எடுக்க முடியாதென திண்ணமாக எண்ணினேன். நம்பினேன். தனிவிரோத தாக்குதல்களாய் தூக்கி வீசப்பட்ட … Continue reading #விவாதம்: “என் சாதி உயர்வானது என்று சொல்லும் எல்லோருமே பிராமணர்கள்தான்”

ஆலோசனை கூட்டத்தில் பெண் கவுன்சிலருக்கு அடி…!

கர்நாடகாவில் கொப்பல் என்ற இடத்தில் கொப்பல், நகராட்சி தலைவர், துணை தலைவர் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.இதில் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் பா.ஜ.வைச் சேர்ந்தவரை ஆதரிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை மதச்சார்பற்ற கட்சியினர் ஒரு சேர கையை தூக்கினர். இதில் கலந்து கொண்ட சுயேட்சை பெண் கவுன்சிலர் விஜயா என்பவர் கையை தூக்காமல் காங். கட்சியை ஆதரித்தார். இதனால் ஆத்திரமடைந்த மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த கோதிஹால் என்பவர் … Continue reading ஆலோசனை கூட்டத்தில் பெண் கவுன்சிலருக்கு அடி…!

தன்னைவிட வயது குறைவான ஆணை காதலிப்பது குற்றம்: கலாச்சார காவலர்களான ஊடகங்கள் தரும் உடனடி தண்டனை!

இன்றைய தமிழ் நாளிதழ்கள் அனைத்திலும் தவிர்க்கப்படாமல் வந்திருக்கும் செய்தி “மாணவனுடன் ஓடிய ஆசிரியர் கைது”; “ மாணவனுடன் ஓடிய ஆசிரியை சிக்கினார்” என்று இந்தச் செய்தியில் தொடர்புடைய பெண்ணை மிகக் குறிய மனோபாவத்துடன் எதிர்மறையாக எழுதியிருந்தனர். எந்தவொரு ஊடகமும் இதிலிருந்து தப்பவில்லை. விட்டால், இவர்களே தீர்ப்பு எழுதி, அந்தப் பெண்ணை கல்லால் அடித்துக் கொள்ளுங்கள் என தாலிபான் பாணியில் உடனடி நீதியும் தண்டனையும் அளித்திருப்பார்கள். அந்தப் என்ற பெண், எம். எஸ்ஸி படித்தவர். இவருடைய வயது என்ன என்பதை … Continue reading தன்னைவிட வயது குறைவான ஆணை காதலிப்பது குற்றம்: கலாச்சார காவலர்களான ஊடகங்கள் தரும் உடனடி தண்டனை!

#சர்ச்சை இமையத்தின் துபாய்காரன் பொண்டாட்டி: பத்மாவதிகளை தண்டவாளத்தில் சாகடிப்பதுதான் சமூக புரட்சியா?

தமயந்தி உயிர்மையில் இமையத்தின் கதை படித்தேன்...துபாய்காரன் பொண்டாட்டி. பெண்களின் கதையை , வாழ்க்கையை பெண்கள் மூலமாகவே சொல்லி பெண்களை சாவடிக்கும் கதை. இன்னொருவனுடன் இருந்த, அவனாலேயே அவமானப்படுத்தப்பட்ட துபாய்காரன் பொண்டாட்டி என்ன செய்ய வேண்டும்? அவனோடு படுத்தாயே என்று முலையை அடிக்க வேண்டும். தண்டவாளத்தில் தலை வைத்து சாக வேண்டும். துபாய்காரன் வீட்டுக்கு வருகிறான். எதுக்கு வருகிறான்.. விஷயம் தெரிந்தா என்று பயப்படும் பத்மாவதி இப்படி நினைக்கிறாள்..." எடுத்ததுமே அடிப்பானா......எது செய்தாலும் தடுக்க முடியாது. ஊர் மெச்ச தாலி … Continue reading #சர்ச்சை இமையத்தின் துபாய்காரன் பொண்டாட்டி: பத்மாவதிகளை தண்டவாளத்தில் சாகடிப்பதுதான் சமூக புரட்சியா?

“பெண் குழந்தைகள் முன் மனைவியை வல்லுறவு செய்த கணவனை காப்பாற்றவா சட்டம்?”: மேனகா காந்திக்கு சமூக செயற்பாட்டாளர் கேள்வி

கீதா நாராயணன் என் முதல் பணியை வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான ஆலோசகராகத்தான் தொடங்கினேன்.அதில் நான் கண்ட அனுபவங்கள் ஒரு முழு வாழ்க்கைக்குப்போதும். காவல்துறை, நீதிமன்றம்,அரசு மருத்துவமனை தீக்காயத்துறை, பிணவறை என்று சகல சிக்கல்களும் நிறைந்த துறை அது. அதில் ஒரே ஒரு சம்பவத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். ஒரு உயர்த்திக் கொண்ட சமூகத்தைச்சேர்ந்த பெண். இரு குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறித் தற்கொலைக்கு முயன்றதாக காவல்துறையின் மூலம் தற்காலிகத் தங்கும் விடுதிக்கு அழைத்து வரப்பட்டார்கள்.காரணம் கணவர் தொடர்ந்து குடித்து … Continue reading “பெண் குழந்தைகள் முன் மனைவியை வல்லுறவு செய்த கணவனை காப்பாற்றவா சட்டம்?”: மேனகா காந்திக்கு சமூக செயற்பாட்டாளர் கேள்வி

#வீடியோ: மெட்ரோ ரயிலில் இளைஞரை துன்புறுத்திய குடிபோதை பெண்கள்…

சர்வதேச பெண்கள் தினத்தன்று நான்கு இளம்பெண்கள் குடித்துவிட்டு டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர்.அப்போது, ரயிலில் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை வம்புக்கு இழுத்து அவரை காது கூசும் அளவுக்கு தகாத வார்த்தைகளால் அந்த பெண்கள் திட்டுவதும்,  அவரை நோக்கி அந்த நான்கு பெண்களும், கும்பலாக கத்தியவுடன் பீதியடையும் அந்த இளைஞர், அங்கிருந்து நகர்ந்து செல்வதையும் இந்த வீடியோவில் பதிவாகியுள்ளதையும்  பார்க்க முடிகிறது. http://www.youtube.com/watch?v=HoqpaCOfZ-4 இந்த சம்பவத்தை ரயிலில் இருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து … Continue reading #வீடியோ: மெட்ரோ ரயிலில் இளைஞரை துன்புறுத்திய குடிபோதை பெண்கள்…

தேசத்துக்கு எதிராக கோஷமிட்ட இந்திய பெண்கள் ; சில போராட்ட படங்கள்…

மும்பையில் ஆகஸ்ட் 15, 2010-ஆம் ஆண்டு, தேவதாசி பெண்கள் அரை நிர்வாணத்துடன் தங்களுக்கு மாத ஓய்வூதியமாக ரூ. 2000 வழங்கக் கேட்டுப் போராடினர்.  அப்போது இந்தியாவுக்கு எதிரான கோஷங்களை அவர்கள் எழுப்பினர். இந்து மதத்தில் இந்து கடவுள்களுக்கு பெண் குழந்தைகளை ‘நேர்ந்துவிடுவது’ சமீபம் வரை வழக்கத்தில் இருந்த ஒன்று. இவர்கள் கடவுளுக்கு பணிவிடை செய்பவர்கள் என்ற பொருளில் தேவதாசி என அழைக்கப்பட்டனர். (Photo by Nagesh Ohal/India Today Group/Getty Images)   காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் ஜூலை … Continue reading தேசத்துக்கு எதிராக கோஷமிட்ட இந்திய பெண்கள் ; சில போராட்ட படங்கள்…

#பெண்கள்தினம்: “அறுவருப்பானவள் அல்ல நான்”: ஃபேஷன் உலகில் தனி இடம் பதித்த ஹர்ணம் கவுர்!

பெண்கள் தினம், அழகு சாதனப் பொருட்களின் விற்பனையை அதிகரிக்கும் தினமாகிவிட்டது.  சிவப்பும் பளபளப்புமே அழகானவை, பெண்மைக்கு உரியவை என கூவிக்கூவி தங்களுடைய தயாரிப்புகளை விற்கின்றன தயாரிப்பு நிறுவனங்கள். இதே அழகு சார்ந்த துறையில் தனித்து நின்று, அழகு என்றால் என்ன? என்று நம்மை மறுபரிசீலனை செய்துகொள்ளச் சொல்கிறார் தாடி வைத்த ஹர்ணம் கவுர். அவருடைய தாடியும் பென்சில் மீசையும் மேற்குலகை ரசிக்க வைத்திருக்கின்றன. ஹர்ணம் கவுர், இந்திய வம்சாவழியைச் சேர்ந்த இங்கிலாந்து பிரஜை. polycystic ovarian syndrome என்ற … Continue reading #பெண்கள்தினம்: “அறுவருப்பானவள் அல்ல நான்”: ஃபேஷன் உலகில் தனி இடம் பதித்த ஹர்ணம் கவுர்!

#பெண்கள்தினம்: ‘கொலை செய்வேன்; குண்டுகள் தயாரிப்பேன்” விஷ்வ ஹிந்து பரிஷத்தின் “துர்காவாகினி” பற்றி தெரியுமா உங்களுக்கு?

இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் அரசியலை முன்னெடுப்பதாக கூறி கடந்த 20 வருடங்களில் விஷ்வ ஹிந்து பரிஷத் , ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் போன்ற அமைப்புகள் பெரும் வளர்ச்சி பெற்றிருக்கிறது  என்றால் அது கண்கூடான உண்மையே. ஆங்கில ஆட்சியில் அடிமைப்பட்டு கிடந்த இந்தியாவை, அதன் வேர்களுக்குத் திருப்பி அழைத்து வருவதாகக் கூறி பிரச்சாரம் செய்யும் இந்த அமைப்புகளுக்கு, வட இந்தியாவின், ஒடுக்கப்பட்ட இன மக்களும் தீவிர ஆதரவாளர்கள்தான். இந்த அமைப்புகளுக்கு மதச்சார்பின்மை என்றாலே ஒவ்வாமைதான். இந்து மரபுகள் என்று … Continue reading #பெண்கள்தினம்: ‘கொலை செய்வேன்; குண்டுகள் தயாரிப்பேன்” விஷ்வ ஹிந்து பரிஷத்தின் “துர்காவாகினி” பற்றி தெரியுமா உங்களுக்கு?

#பெண்கள்தினம்: ‘நீ பயணிக்க வேண்டியது அக்னிப்பாதை!

புதியவன் ராபர்ஸ் ஃப்ராஸ்டின் கவிதையை பகிர்ந்தபோது, நண்பர் ஒருவர், “அக்னிபத்” கவிதையையும் தமிழில் தாருங்களேன் என்று கேட்டார். அக்னிபத் கவிதை ஹரிவன்ஷ்ராய் பச்சன் எழுதியது. இந்தியில் மிகப்பிரபலமான கவிதை. அப்படியே தமிழில் தருவது சாத்தியமே இல்லை. முயற்சி செய்திருக்கிறேன். இந்தத் தமிழாக்கம் உலகின் மகளிர் அனைவருக்கும் சமர்ப்பணம் * மரங்கள் வளர்ந்தோங்கி நிற்கலாம் அடர்ந்தும் வலுவேறியும் இருக்கலாம் ஒற்றை இலையின் நிழலையும் கேட்காதே தேடாதே மயங்காதே நீ பயணிக்க வேண்டியது நெருப்புப் பாதை ஒருபோதும் களைத்து விடாதே … Continue reading #பெண்கள்தினம்: ‘நீ பயணிக்க வேண்டியது அக்னிப்பாதை!

உள்ளாடையை துவைக்காவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை?!! : பெண் உதவியாளருக்கு சார்பு நீதிபதி நோட்டீஸ்…

சத்திய மங்கலத்தில், சார்பு நீதிமன்றத்தில்  அலுவலக உதவியாளராக பணிபுரியும் வசந்தி என்பவருக்கு,  இரண்டு நாட்களுக்கு முன், சார்பு நீதிபதியிடம் இருந்து ஒரு ஆவேச நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் "சார்பு நீதிபதி வீட்டில் துவைப்பதற்கு போடப்படும் துணிகளை சரிவர துவைக்காமல் இருப்பதாகவும், குறிப்பாக உள்ளாடைகளை அருவருப்படைந்து தூக்கி வீசி விடுவதாகவும், இது குறித்து நீதிபதியும் அவரது மனைவியும் கேள்வி கேட்டால் எதிர்த்து பேசுவதாகவும்" குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல், இப்படி குற்றம் இழைத்திருப்பதற்காக , வசந்தி மீது ஏன் ஒழுங்கு … Continue reading உள்ளாடையை துவைக்காவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை?!! : பெண் உதவியாளருக்கு சார்பு நீதிபதி நோட்டீஸ்…

பி.ஆர்.ஓ. நிகில் முருகனை விலக்கிய கமல்ஹாசன்: தொலைக்காட்சி நிருபரிடம் தவறாக நடந்ததாக புகார்!

நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய தகவல் தொடர்புகளை தன்னுடைய நிறுவனத்தின் மூலமாகவே செய்வார் என்றும் நிகில் முருகன் இனி தன்னுடைய தகவல் தொடர்பு அதிகாரியாக நீடிக்க மாட்டார் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. https://twitter.com/Shailja/status/704515794449899522 தமிழ் சினிமாவில் சர்வ அதிகாரம் படைத்தவராக வலம் வந்த நிகில் முருகன் ஏன் இந்த நிலைக்கு தள்ளப்பட்டார் என்று சினிமா நிருபர்களிடம் விசரித்ததில் கிடைத்த சில தகவல்களை இங்கு பகிர்ந்துள்ளோம். *தனியார் தொலைக்காட்சியில் பணிபுரிந்த ஒரு பெண்ணிடம் நிகில் முருகன் தவறாக நடந்திருக்கிறார் … Continue reading பி.ஆர்.ஓ. நிகில் முருகனை விலக்கிய கமல்ஹாசன்: தொலைக்காட்சி நிருபரிடம் தவறாக நடந்ததாக புகார்!

வங்கிமேலாளார் முத்துசாமி மனைவி கழுத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது கவுண்டமார் தாலி: நாச்சியாள் சுகந்தி கவிதை

நாச்சியாள் சுகந்தி வங்கிமேலாளார் முத்துசாமி மனைவி கழுத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது கவுண்டமார் தாலி பழனி தாலுகா ஈசாம்பட்டி கிராமம் மருதமுத்து மகன் முத்துசாமி ஆதிதிராவிடர்-பறையர் என அரசுமுத்திரை குத்திய பச்சைத்தாள் வீட்டின் மூலையில் குப்புறக்கிடக்கிறது சாரயக்கடை வாசலில் விழுந்துகிடக்குமவன் பட்டாபட்டி டவுசரில் கலையாமல் இருக்கும் சாதிசங்க உறுப்பினர் அட்டையை பெரும்போதையிலும் இறுகப்பற்றியிருக்கிறான் சாதிஒழிய வேண்டுமென நடுநிசியில் ஒருவள் எழுதிக்கொண்டிருக்கிறாள் காலம் சும்மா உட்கார்ந்து எல்லாவற்றையும் வேடிக்கை பார்ப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறது காலம் மாறுதலுக்குட்பட்டது

எழுத்தாளர்களை கறிவேப்பிலையாக பயன்படுத்தி தூக்கியெறியும் இயக்குநர்கள்: குட்டி ரேவதி

குட்டி ரேவதி திரைத்துறையில் எழுதுபவர்களை, திரைக்கதை எழுதுபவர்களாக இருந்தாலும் சரி, பாடல் எழுதுபவர்களாக இருந்தாலும் சரி, அவர்களை ஏதோ கடைநிலை மனிதர்களைப் போல நடத்துவது ஓய்ந்தால் தான், சினிமா என்பது வெற்றிகரமான துறையாக விளங்கும். சமீபமாக, எழுத்தாளர்களை மதிக்காத அல்லது புறக்கணித்த திரை இயக்குநர்கள் குறித்த நிறைய சம்பவங்கள் மீடியா வரை வந்தது நாம் அறிந்தது தான். அதுமட்டுமின்றி,  நிறைய படைப்பாளிகள் தாங்கள் சந்தித்த சொந்தப்படிப்பினைகளையும் என்னிடம் பகிர்ந்து கொள்கிறார்கள். எழுத்தாளர்கள் பயன்படுத்தப்பட்டுவிட்டு, கறிவேப்பிலைகளைப்போல் தூக்கியெறிப்படுவது கண்கூடாக … Continue reading எழுத்தாளர்களை கறிவேப்பிலையாக பயன்படுத்தி தூக்கியெறியும் இயக்குநர்கள்: குட்டி ரேவதி

சமூக நீதியை பெண்கள் எழுதினால் தமிழக பத்திரிகைகள் பயந்து அலறுவது ஏன்?

மீனா சோமு பெண்களாகிய நாங்கள் (மீனா சோமு, கீதா இளங்கோவன், தயா மலர்) சமூக நீதிக்கு குரல் கொடுக்கிறோம் என்பதை செய்தியாகவும் தன் ப்ளாகிலும் பகிர்ந்த தோழர் இரா. எட்வின் அவர்களது செய்கை ஆரோக்கியமான மாற்றத்தை விதைக்கும். கட்டுண்டு கிடக்கும் பெண்களுக்கும் ஆணாதிக்க சாதிய சிந்தனைகளால் கட்டப்பட்டு இருக்கும் மக்களுக்கும் விழிப்புணர்வை தரும். தோழர். இரா எட்வின் அவர்களுக்கு நன்றியும் அன்பும். பெண்களுக்கான தளம் என்பது எழுத்திலும் சிந்தனையிலும் செயலிலும் கூட வரையறை செய்யும் சமூகம் இது. … Continue reading சமூக நீதியை பெண்கள் எழுதினால் தமிழக பத்திரிகைகள் பயந்து அலறுவது ஏன்?

”உனக்கெல்லாம் குடும்பம்,குழந்தைன்னு இருந்தாதானே ஆண்களை மதிக்கத் தெரியும்”; ஜெயலலிதா பற்றி பிரேமலதாவின் பேச்சுக்கு ஏன் அவதூறு வழக்குத் தொடுக்கக்கூடாது?

வே.மதிமாறன் ‘மலடிகள் வாழத் தகுதியற்றவர்கள்’ - பிரேமலதா விஜயகாந்த் ‘உனக்கெல்லாம் குழந்தை பிறந்திருந்தால்தானே ஆண்களை மதிக்கத் தெரியும்’ எனறு தமிழக முதல்வரை பார்த்து, பிரேமலதா பேசிய வன்முறையான பேச்சு, ‘மலடி’ என்று மருமகளைத் துன்புறுத்துகிற மாமியாரின் பேச்சை விட இழிவானது. அதுகூட அறியாமையிலும் தன் மகன் மற்றும் குடும்ப வாரிசு ஏக்கத்திலும் வருகிற சொல். ஆனால் பிரேமலதாவின் பேச்சு குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத பெண்களை வாழத் தகுதியற்றவர்களாகச் சித்திரிக்கிறது. ஒரு முதல்வரையே இப்படிப் பார்க்கிறார் என்றால் சாமான்ய … Continue reading ”உனக்கெல்லாம் குடும்பம்,குழந்தைன்னு இருந்தாதானே ஆண்களை மதிக்கத் தெரியும்”; ஜெயலலிதா பற்றி பிரேமலதாவின் பேச்சுக்கு ஏன் அவதூறு வழக்குத் தொடுக்கக்கூடாது?

“நீ காதல்காரனோ காதல் காரியோ உனக்குதான் பால் பேதம் கிடையாதே!”

மாலினி ஜீவரத்னம் feeling love my self. சரியான காதல்காரி நீ... காதலிப்பதும் காதலிக்கப் படுவதுமாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறாய் ... யாராவது கொஞ்சி பேசினால் காதல் வந்துவிடுகிறது உனக்கு ... நாய் குட்டியா நீ கொஞ்சி தலைகோதிவிடும் யாரோ தெரியாத ஒருவர் பின்னால் வாலாட்டி வாஞ்சையுடன் செல்கிறாய் ... அவர்கள் சொல்கிறார்கள் நாய் இல்லையாம் பூனைக்குட்டியாம் நீ Ha ha ha... எதோ ஒன்று அன்புக்காக எங்கும் ஜீவனுக்கு பேதம் ஏது.. சரி போகட்டும் ... உன் … Continue reading “நீ காதல்காரனோ காதல் காரியோ உனக்குதான் பால் பேதம் கிடையாதே!”

காலங்களை கடந்த காதல்: ராணுவ வீரர்களால் பலாத்காரம் செய்யப்பட்ட நாகாலாந்து பெண்ணின் இறுதி கடிதம்!

ரோஸ். நாகாலாந்தின் பழங்குடியின குழுக்களில் ஒன்றான டேங்கூ (Tangkhul ) இனத்தை சேர்ந்த இளம் பெண். ராணுவம் ஆக்கிரமித்திருக்கும் அத்தனை பகுதிகளிலும் பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறைக்கு,  ரோஸ்ம் ஆளாக நேர்ந்தது.  1974-ம் ஆண்டு மார்ச் மாதம் 4-ம் தேதி, நாகாலாந்தை பாதுகாத்த இந்திய ராணுவ எல்லை பாதுகாப்பு படையின் அதிகாரிகள், ரோஸ் என்கிற அந்த இளம் பெண்ணை மணிக்கணக்கில் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தினர்.  சொந்த நாட்டு ராணுவத்தாலேயே பலாத்காரம் செய்யப்பட்டார் ரோஸ். அதே மாதம் 6-ம் தேதி தற்கொலை … Continue reading காலங்களை கடந்த காதல்: ராணுவ வீரர்களால் பலாத்காரம் செய்யப்பட்ட நாகாலாந்து பெண்ணின் இறுதி கடிதம்!

வருசநாட்டு மாப்பிள்ளை கைது; ஏன்?

தென் மாவட்டங்களில் எங்கெல்லாம் சாதிய மோதல்கள் வன்முறைகள் நடக்கிறதோ அங்கெல்லாம் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அரங்கேறுகின்றன என்று பொருள் கொள்ளலாம். சாதி ஆழமாக வேறூன்றி இருக்கும் மதுரை உசிலம்பட்டி வட்டாரத்தில் பெண்சிசுக் கொலைகளும் குழந்தை திருமணங்களும் அதிகம். பெண் குழந்தைகள் பிறந்துவிட்டால், வரதட்சணை தர வேண்டுமே என்பதைக் காட்டிலும் வேறு சாதி ஆணுடன் போய்விடுவாளோ என்கிற பயம் இந்தப் பகுதி மக்களுக்கு இருப்பதாக கள ஆய்வில் இருக்கும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள். அதேபோல்தான் 18 வயதை எட்டும் … Continue reading வருசநாட்டு மாப்பிள்ளை கைது; ஏன்?

சாதி உணர்வைத் தூண்டும் விளம்பரங்கள்!

அழகிய பெரியவன் பயணத்திட்டமின்றி, ஒரு தோள்பையை மாட்டிக்கொண்டு, வெளியூர் நிகழ்ச்சிகளுக்குப் புறப்பட்டுவிடுவது ஆர்வமூட்டும் அனுபவங்களைத் தரக்கூடிய ஒன்று. சென்ற வாரம் லாட்லி விருது தேர்வு கூட்டத்துக்கு அப்படி புறப்பட்டு சென்னை வந்தபோது அ.மார்க்சை ஒரு உணவகத்தில் சந்தித்தேன். எனக்கு அவரை சந்தித்து பல காலங்கள் ஆகியிருந்தது. அடையாறு பேருந்துப் பணிமனை நிறுத்தத்தில் இறங்கி இடதுபுறம் இருந்த உணவகத்தில் நுழைந்ததும் நண்பர் விஜயனோடு காபிகுடித்துவிட்டு அமர்ந்திருந்த அவரை என்னால் பார்க்க முடிந்தது. ஆர்வத்தோடு இருவரும் நலம் விசாரித்துக் கொண்டோம். … Continue reading சாதி உணர்வைத் தூண்டும் விளம்பரங்கள்!

“என் நிறத்தைவிட உங்களில் கருப்பாக இருப்பவர்கள் அதிகம்;பிறகு, ஏன் எங்களை கருப்பர்கள் என்கிறீர்கள்” ஹைதராபாத்தில் படிக்கும் ஆப்பிரிக்க மாணவியின் கோபம் விடியோவாக!

பெங்களூருவில் செவ்வாய்கிழமை செய்யாத குற்றத்துக்காக கும்பல் ஒன்றால் கடுமையான தாக்குதலுக்கு ஆளானார் தான்சானியா நாட்டு மாணவி ஒருவர். அவருக்கு ஆதரவாக குரல்கள் பெருகிவரும் நிலையில், ஹைதராபாத்தில் வசிக்கும் அமீனா கரீம் என்ற மாணவி, அழுத்தமான கோபத்தால் இந்தியர்களை கேள்வி கேட்டிருக்கிறார். “என் நிறத்தைவிட உங்களில் கருப்பாக இருப்பவர்கள் அதிகம்.பிறகு, ஏன் எங்களை கருப்பர்கள் என்கிறீர்கள்?” என்ற கேள்வி நம் எல்லோரையும் துளைக்கக்கூடியது. அவருடைய நான்கு நிமிட பேச்சைக் கேளுங்கள்... http://www.youtube.com/watch?v=8xfaiT5ImRE  

குண்டாக இருப்பது அவ்வளவு கவலைக்குரிய விஷயமா?:நஸ்ரியா பற்றிய கேலிகளுக்கு பஹத் பாசில் பதில்

திருமணத்திற்கு பின், உடலில் இயல்பாக ஏற்படும் மாற்றங்கள், எடை அதிகரிப்பது போன்ற விஷயங்களினால் கேள்விகளுக்குள்ளாவது அனைவரும் எதிர்கொள்ளும் விஷயம்தான்.  என்றாலும், திரைப்பட நடிகர்கள், குறிப்பாக நடிகைகள் குண்டானால், ஒவ்வொருவரும் ஓராயிரம் கேள்விகளை, கருத்துக்களை, கேலிகளை அள்ளி தெளிக்க தொடங்கி விடுவார்கள். சமீபமாக... இல்லை. கடந்த ஓராண்டாகவே எடை அதிகரிப்பினால், சமூக வலைதளங்களில் அதிக கேலிக்கு ஆளாகி இருக்கிறார் நடிகை நஸ்ரியா. Manorama Online-ல் Me Myself என்கிற நிகழ்ச்சியில் பேட்டி அளித்த கேரளா நடிகர் பஹத் பாசிலிடம், … Continue reading குண்டாக இருப்பது அவ்வளவு கவலைக்குரிய விஷயமா?:நஸ்ரியா பற்றிய கேலிகளுக்கு பஹத் பாசில் பதில்

கருவிலிருப்பது ஆணா பெண்ணா என்று இனிமேல் கட்டாயமாக தெரிந்துகொள்ள வேண்டுமா?: மேனகா காந்தியின் யோசனை இது

பெண் குழந்தைகளை அழிப்பதை தடுக்கும் விதமாக, கருவிலிருப்பது ஆணா பெண்ணா என்று கண்டுபிடிப்பது குற்றமாக கருதப்பட்டு வந்த நிலையில்,  கருவிலிருப்பது ஆணா, பெண்ணா என்பதை கண்டறிந்து பதிவு செய்வது கட்டாயமாக்கப்படும் என்று பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி கூறியுள்ளார்.   இதன் மூலம் பெண் குழந்தைகள் , கருவிலயே அழிக்கப்படுவதை தடுக்கலாம் என்றும், கருவில் உள்ள குழந்தையின் பாலினம்  பதிவு செய்யப்படும் பட்சத்தில், ஒருவேளை கருக்கலைப்பு நடந்தால், அதற்கான காரணங்களையும் பெற்றோரிடம் கேட்டு … Continue reading கருவிலிருப்பது ஆணா பெண்ணா என்று இனிமேல் கட்டாயமாக தெரிந்துகொள்ள வேண்டுமா?: மேனகா காந்தியின் யோசனை இது

பெண்கள் குடும்பத் தலைவர்களாக ஆக முடியுமா?: தர்ம சாஸ்திரங்களை முன்னிறுத்தி நீதிமன்றம் தீர்ப்பு!

டெல்லியைச் சேர்ந்த ஒரு வர்த்தகரின் மூத்த மகளான சுஜாதா ஷர்மா, டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் "தனது தந்தை மறைந்த பின்னர் அவரது 3 தம்பிகள் சொத்துக்களை நிர்வகித்து வந்ததாகவும், தற்போது அவர்களும் மறைந்த பின்னர் தான் பொறுப்புக்கு வர முயன்றபோது தனது சித்தப்பா மகன் அதைத் தடுத்து விட்டதாகவும்" கூறி இருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நஜ்மி வசிரி பிறப்பித்துள்ள தீர்ப்பில், ‘இந்து கூட்டுக் குடும்பங்களில் மூத்த ஆண்மகன் குடும்பத் தலைவராவது எப்படி இயற்கையாக … Continue reading பெண்கள் குடும்பத் தலைவர்களாக ஆக முடியுமா?: தர்ம சாஸ்திரங்களை முன்னிறுத்தி நீதிமன்றம் தீர்ப்பு!

இஸ்லாமிய அடிப்படைவாதம் ஆக்கிரமிக்கும் முன் ஈரானிய பெண்கள்!

1979-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை பெண்களுக்கான முன்னேற்றத்துக்கு வாய்ப்புக் கொடுக்கும் தேசமாக இருந்த ஈரான், இஸ்மாயிய அடிப்படைவாதத்தால் பின்னோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது என்கிறார் ஈரானைச் சேர்ந்த பத்தி எழுத்தாளர் ரீடா. இஸ்லாமிய ஆட்சி அமைந்தபிறகு, சிறுமிகள்கூட ஹிஜப் அணிந்துகொள்ள வற்புறுத்தப்பட்டனர் என்கிறார். https://twitter.com/RitaPanahi/status/694024501399453696 https://twitter.com/RitaPanahi/status/694025507361280000 https://twitter.com/RitaPanahi/status/693934478884909056 ஹிஜப் அணிய வற்புறுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 1979-ஆம் ஆண்டில் பெண்கள் நடத்திய பேரணி https://twitter.com/RitaPanahi/status/693933421836390400