மனைவியின் விருப்பம் இல்லாமல் கணவனே உறவு கொண்டாலும், அது பாலியல் வன்கொடுமையே: கர்நாடக உயர்நீதிமன்றம்

மனைவியின் விருப்பம் இல்லாமல் கட்டாயப்படுத்தி அவருடன் உடலுறவு கொள்வதும் ஒரு வகையான பாலியல் வன்கொடுமை தான் என கூறி கணவர் மீதான வழக்குப் பதிவை நீக்குவதற்கு கர்நாடகா உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.விருப்பமில்லாத மனைவியுடன் பாலியல் வல்லுறவு கொண்டதாக மனைவி அளித்த புகாரின் பேரில் கணவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அவர் தனது மகளையும் கட்டாயப்படுத்தி அவரை பாலியல் வல்லுறவு செய்ததாக புகார் அளித்ததால், அந்த நபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் … Continue reading மனைவியின் விருப்பம் இல்லாமல் கணவனே உறவு கொண்டாலும், அது பாலியல் வன்கொடுமையே: கர்நாடக உயர்நீதிமன்றம்

ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை புகாரின் பின்னணி என்ன?

சென்னை ஐஐடியில் சாதி ரீதியான பாகுபாடுகள் பார்க்கப்படுவதாக பல காலமாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு வருகிறது. இந்தப் பின்னணியில் ஐஐடி ஆய்வு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதோடு, அதுகுறித்த புகாரை நீர்த்துப்போக வைக்க ஐஐடி சென்னை நிர்வாகம் முயன்றது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.அண்மையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் (AIDWA) ஐஐடி-மெட்ராஸைச் சேர்ந்த 30 வயது பெண் பிஎச்டி பட்டதாரி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சாதிய ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக பரபரப்பு புகார் ஒன்றை செய்தியாளர் சந்திப்பில் முன்வைத்தது. … Continue reading ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை புகாரின் பின்னணி என்ன?

#MeToo 2.0 | ஸ்ரீதரன் சுப்ரமணியன்

ஸ்ரீதரன் சுப்ரமணியன் பத்மா சேஷாத்ரி கல்வி நிறுவனத்தில் பள்ளி மாணவிகள் சிலர் ஒரு ஆசிரியரால் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. அந்த விஷயத்தில் நம் ஒவ்வொருவரின் நிலைப்பாட்டுக்கு ஏற்றபடி நமது அணுகுமுறை வித்தியாசமாக வெளிப்படுகிறது. பிரச்சினை அந்தக் குற்றம் கூட அல்ல. அந்தப் பள்ளியில் இப்படி ஒரு குற்றம் அரங்கேறிக்கொண்டு இருந்தது என்பது அதிர்ச்சியாக இருக்கவில்லை. அப்படிப்பட்ட குற்றங்கள் தேசமெங்கும் பெண்கள் படித்துக் கொண்டிருக்கும் பல்வேறு பள்ளிகளில் நடந்து கொண்டுதான் இருக்கும். ஆனால் … Continue reading #MeToo 2.0 | ஸ்ரீதரன் சுப்ரமணியன்

சந்தர்ப்பவாத பெண்ணியம் | மாலதி மைத்ரி

மாலதி மைத்ரி அரசு அரசியல் இலக்கியம் கலை ஊடகம் உள்ளிட்ட எல்லா பொதுத்துறைகளில் இயங்கும் ஆண்களில் பொது ஒழுக்க கிரிபிலிட்டி கொண்டே ஒருவர் மதிக்கப்பட வேண்டும் அவன் நோபல் பரிசு வாங்க தகுதியானவன் ஆஸ்கர்வாங்க தகுதியானவன் எனவே அவனின் பாலியல் குற்றங்களை பொருட்படுத்த தேவையில்லை என்னும் ஆண்கள் உங்க பிரபலத்துக்கு நேரடியாய் போய் பாலியல் சேவை செய்யுங்கள் உங்களைத் தடுக்கவில்லை. கட்சி, நிறுவன பொருப்பாளர்கள் செக்ஸூவல் அபியூசர்களை அதிகாரத்தால் அரவணைத்து பெண்களிடம் பாலியல் அத்துமீற அங்கீகாரமளித்து விடாதீர்கள். … Continue reading சந்தர்ப்பவாத பெண்ணியம் | மாலதி மைத்ரி

பிஹெச்டி மாணவிகள் அனுபவிக்கிற பாலியல் சுரண்டல்களைப் பற்றி நிச்சயம் பேசத்தான் வேண்டும் | தீபா ஜானகிராமன்

தீபா ஜானகிராமன் இந்த நேரத்தில் கல்லூரி பேராசிரியர்களும் தங்கள் மனசாட்சியை கேள்விக்கு உட்படுத்த வேண்டும். பிஹெச்டி மாணவிகள் அனுபவிக்கிற பாலியல் சுரண்டல்களைப் பற்றி நிச்சயம் பேசத்தான் வேண்டும். காரணத்தை வெளியே சொல்ல முடியாமல் பாதியில் பிஹெச்டி முடிக்காமல் ஆய்வை நிறுத்திய மாணவிகள் அதிகம். ‘கையை அமுக்கி விடு..காலை பிடிச்சு விடு’ என்று தன்னிடம் சேரும் ஆராய்ச்சி மாணவிகளிடம் சொல்லும் பேராசிரியர்கள் எங்கும் காணக் கிடைக்கலாம். தன்னிடம் ஆய்வுக்காக வரும் மாணவிகள் தங்களுக்காக ‘நேர்ந்துவிடப்பட்டவர்கள்’ என்று நினைக்கும் பேராசிரியர்கள் … Continue reading பிஹெச்டி மாணவிகள் அனுபவிக்கிற பாலியல் சுரண்டல்களைப் பற்றி நிச்சயம் பேசத்தான் வேண்டும் | தீபா ஜானகிராமன்

தமிழர், ஆரியம், திராவிடம் என்று சாயம் பூசிக்கொள்கிறார்கள் |கொற்றவை

கொற்றவை என் குழந்தை பருவத்திலிருந்து நான் கடைசியாக இந்த வேலையே வேணாம் “மானத்தோட” பொழைச்சா போதும் என்று முடிவெடுத்து என் வேலையை ராஜினாமா செய்த 42, 43 வயது வரை நான் ஏதோ ஒரு வகையில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகிக் கொண்டே தான் இருந்தேன். (வேலையிடத்தில் நீ கொற்றவையா என்றா பார்க்கப் போகிறார்கள்? அங்கு நான் வெறும் கூலிக்கு என் உழைப்புச் சக்தியை விற்க வந்த ஒரு பண்டம்… அவ்வளவே). எனக்கு 10, 11 வயது இருக்கும் … Continue reading தமிழர், ஆரியம், திராவிடம் என்று சாயம் பூசிக்கொள்கிறார்கள் |கொற்றவை

கொடூரமான வழக்கறிஞர்கள் | சுரேஷ் கண்ணன்

சுரேஷ் கண்ணன் ‘இந்த வழக்கை தொடர்ந்து விடுவாயா?’ என்று பாதிக்கப்பட்டவர்களுக்கு அச்சமூட்டுவதுதான் இதன் நோக்கம். இது போன்ற பாலியல் வன்முறை விவகாரங்களை ‘அரசியல்சரித்தன்மையுடன்’ கறாராக எழுதுகிறோம் என்கிற அசட்டுத்தனத்துடன் கிளம்பியிருக்கும் சிலர், மேற்கண்ட வில்லன்களை விடவும் கொடூரமாக யோசித்து எழுதுகிறார்கள். அத்தனை கேவலமான சிந்தனையாக, தரவுகளாக அவை இருக்கின்றன. பாதகம் செய்த ஆசாமிகளே ‘பேஷ்.. பேஷ்’ என்று மகிழும்படி ஓவர்டைம் வக்கீல்களாக இவர்கள் மாறி விடுகிறார்கள். * தகுந்த ஆதாரமோ, சாட்சியமோ இன்றி ஓர் ஆணின் மீது … Continue reading கொடூரமான வழக்கறிஞர்கள் | சுரேஷ் கண்ணன்

மாதவிடாயின் முதல் நாளில் விடுமுறை: மாத்ருபூமி பெண்களுக்கு சலுகை

கேரளாவில் இயங்கிவரும் பிரபல தொலைக்காட்சி  ஊடக நிறுவனமான மாத்ருபூமியில் 75 பெண்கள் பணிபுரிகின்றனர். மாதவிடாய் காலத்தின் முதல் நாளில் தங்கள் நிறுவனத்தின் பெண் ஊழியர்களுக்கு விடுப்பு அறிவித்துள்ளது மாத்ருபூவி. இதுகுறித்து அதன் இணை இயக்குநர் எம்.வி. ஷ்ரேயாம்ஸ் குமார் அளித்த பேட்டியில், ‘நம் நாட்டில் மாதவிடாய் கோளாறு என்பது பெண்களின் பிரச்னையாக மட்டுமே பார்க்கப்படுகிறது. ஆண்களிடம் அதுகுறித்த போதிய விழிப்புணர்வு இல்லை. எனவே பெண்களுக்கு ஆதரவு தரும் விதமாக நாங்கள் இம்முடிவை மேற்கொண்டோம். எங்களுக்காக இரவு-பகல் பாராமல் … Continue reading மாதவிடாயின் முதல் நாளில் விடுமுறை: மாத்ருபூமி பெண்களுக்கு சலுகை

பெண்கள் முகத்தை மூடுவதுதான் ஹரியாணாவின் பாரம்பரியமா?

பெண்கள் தங்கள் முகத்தை முக்காடிட்டு மூடிக்கொள்கிற பெருமை ஹரியானாவின் அடையாளம்.”

-இது அங்கே யாரோ ஒரு மடாதிபதியின் உபதேசமோ பேட்டியோ அல்ல. மாநில அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிற ‘ஹரியானா சம்வாத்’ என்ற பத்திரிகையில் வந்துள்ள படக்குறிப்பு.

மாதவிடாய் வலி நிறைந்ததாக இருக்க வேண்டியதில்லை!

மாதவிடாய் வலியை இயல்பாக்குவதும் கூட பெண்களையும், அவர்கள் பிரச்சனைகளையும் வழக்கமான பாலியல் கண்ணோட்டத்தின் காரணமாக புறக்கணிப்பதே ஆகும்.

பாலியல் வன்கொடுமையால் ஆணுறுப்பு துண்டிக்கப்பட்ட சாமியாரின் பாஜக தொடர்பு

கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள கொள்ளச்சேரியைச் சேர்ந்தவர் ஹரிசாமி. 54 வயதான இவர் ‘புல்லட் சாமி’ என அந்தப் பகுதியில் பிரபலமானவர். தன் பெயரை கங்கேசானந்த தீர்த்தப்பதா என்று மாற்றிக்கொண்டு கேரளாவில் மதிப்பிற்குரியதாக கருத்தப்படும் ‘பன்மன ஆஸ்ரம’த்துடன் இணைந்து செயல்படுவதாக காட்டிகொண்டு வந்திருக்கிறார். ஹிந்து ஐக்கிய வேதி என்ற சங்பரிவார் அமைப்பில் ஹரிசாமி இயங்கியபோது தற்போது கேரள மாநிலத்தின் பாஜக தலைவராக உள்ள ராஜசேகரனுடன் நெருங்கி செயல்பட்டிருக்கிறார். 2013ஆம் ஆண்டு பாஜக முன்னெடுத்த ஆரன்முலா விமான தளம் … Continue reading பாலியல் வன்கொடுமையால் ஆணுறுப்பு துண்டிக்கப்பட்ட சாமியாரின் பாஜக தொடர்பு

நிர்பயாவுக்கு கிடைத்த நீதி நந்தினிக்கும் கிடைக்குமா?

சந்திரமோகன் நிர்பயா கொலை வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு வழங்கப்பட்ட மரணதண்டனையை உச்ச நீதி மன்றம் உறுதிசெய்துள்ளது. தலைநகர் தில்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி மருத்துவ மாணவி நிர்பயா கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி பலியானார். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்திற்காக டெல்லியில் பல நாட்கள் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் போராடினார்கள். நிர்பயாவுக்கு நீதி கேட்டு குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி பேரணி நடத்தப்பட்டது. இதனால், பெண்களுக்கு … Continue reading நிர்பயாவுக்கு கிடைத்த நீதி நந்தினிக்கும் கிடைக்குமா?

குழந்தைகள் மீதான வன்முறைக்குக் காரணமான உளவியல் என்ன? தீர்வு என்ன?

தமிழகத்தில் அடுத்தடுத்து பெண் குழந்தைகள் மீது நிழத்தப்பட்ட மோசமான வன்கொடுமைகள் சமூகத்தின் பேசுபொருளாகியுள்ளன. தாம்பரம் ஹாசினி பாலியன் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டார். எண்ணூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த 3 வயது குழந்தை நகைகளுக்காக கொல்லப்பட்டு குப்பையில் தூக்கிவீசப்பட்டிருக்கிறார். கொடூரமாக கொல்லப்பட்டதற்கான தடயங்கள் அந்தச் சிறுமியின் உடல் முழுவதும் காணக் கிடைக்கின்றன. அரியலூரில் நந்தினி என்ற பதின் பருவ சிறுமியும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருக்கிறார். இந்தச் சம்பவங்கள் சமூக சீரழிவை எடுத்துக்காட்டுகின்றன என்கிறார்கள் கருத்தாளர்கள். … Continue reading குழந்தைகள் மீதான வன்முறைக்குக் காரணமான உளவியல் என்ன? தீர்வு என்ன?

Stripper-களை விட நீங்கள் எந்த வகையில் பொறுப்புள்ளவர் ? ; நயன்தாராவுக்கு சில கேள்விகள்….

அன்புள்ள நயன்தாராவுக்கு… அரைகுறை ஆடையுடன் நடிகைகளின் படங்களை Double Spread-ல் கடை விரித்திருக்கும் புத்தகங்களிலும் (Book Requires it ? ),  thigh-high Slit- கவுன் அணிந்திருக்கும் நடிகைகளின் படங்களை upload-டியிருக்கும் இணையதளங்களிலும் நேற்றில் இருந்து Nayanthara Lashes Out, Lashes Out, என்று கூவிக்கூவி பெண்ணுரிமை விற்றதை பார்த்தபோது ஆச்சர்யமாக இருந்தது. சரி அப்படி என்னதான் நயன்தாரா Lashes out செய்திருக்கிறார்  என்று படித்தபோதுதான், என்னை போன்ற ஒரு சராசரி ரசிகைக்கு “சுராஜ் விவகாரம், நீங்களும், … Continue reading Stripper-களை விட நீங்கள் எந்த வகையில் பொறுப்புள்ளவர் ? ; நயன்தாராவுக்கு சில கேள்விகள்….

#நிகழ்வுகள்: மனிதிகளுக்காக ஒரு நடைப் பயணம்!

‘பெண்களை பாதுகாப்போம்! பெண் உரிமையைப் பாதுகாப்போம்’ என்ற முழக்கத்தோடு நடைப் பயணம் ஒன்றை ஒருங்கிணைத்திருக்கிறது மனிதி அமைப்பு. இதுகுறித்து வெளியிட்டப்பட்ட தகவலில், “கடந்த ஓராண்டில் தமிழகத்தில் தொடர்ச்சியாகப் பெண்களின் மீது நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்களைப் பார்க்கும் போது, பெண்களை மதிக்கவும், உண்மையாக அன்பு செலுத்தவும், சமமாக நினைக்கவும் தெரியாத ஒரு தலைமுறையையே இம்முதலாளித்துவ சமூகம் உருவாக்கியிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. சுவாதி, விஷ்ணுப்பிரியா, நவீனா, கலைச்செல்வி... என்று பட்டியல் நீண்டு செல்கிறது. இவர்களில் சிலர் கொலை … Continue reading #நிகழ்வுகள்: மனிதிகளுக்காக ஒரு நடைப் பயணம்!

“விவாகரத்தான பெண்கள் கவர்ச்சியானவர்கள்; குறும்பானவர்கள்” ட்விட்டரில் சீண்டியவருக்கு அமலா பாலின் பதில்

நடிகர் அமலா பால் சமீபத்தில் தன்னுடைய திருமண உறவை முறித்துக்கொள்வதாக அறிவித்தார். இது குறித்து ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் தொடர்ச்சியாக பேசப்பட்டது. இந்நிலையில், செலிபிரிட்டி பேட்மிண்டன் லீக் தொடக்கவிழாவில் எடுக்கப்பட்ட அமலாவின் படத்தைப் பகிர்ந்து அதில், “விவாகரத்தான பெண்கள் கவர்ச்சியானவர்கள்; குறும்பானவர்கள் என ட்விட்டியுள்ளார் ஒரு நபர். இதை அந்த நபர் அமலா பாலின் பார்வைக்கும் அனுப்பி வைத்துள்ளார். https://twitter.com/SfcRoshan/status/777371731266707456 அந்தப் பதிவிற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  இதற்கு அமலாவின் பதில், “உங்களின் லட்சியம்(அந்த நபர் பெயரில் லட்சியத்தை இணைத்திருப்பதால்) … Continue reading “விவாகரத்தான பெண்கள் கவர்ச்சியானவர்கள்; குறும்பானவர்கள்” ட்விட்டரில் சீண்டியவருக்கு அமலா பாலின் பதில்

பெண்களை தற்கொலைக்குத் தள்ளும் கட்டமைப்பு வன்முறை குறித்து நாம் என்றாவது பேசியிருக்கிறோமா?: அரவிந்தன் சிவக்குமார்

பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் எனும் பொருளில் கடந்த 3-ஆம் தேதியன்று சென்னை, நுங்கம்பாக்கத்தில் ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் திறந்தவெளிக் கருத்தரங்கு நடைபெற்றது. சுவாதி படுகொலை செய்யப்பட்ட பகுதியில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, பொருத்தமாக இருந்தது. சில வாரங்களுக்கு முன்னரே திட்டமிடப்பட்ட இந்நிகழ்வு நெருங்குகையில், சென்னை வட்டாரத்தில் திடீர் மழைச்சூழல் தொற்றிக்கொண்டது. ஆனாலும் திட்டமிட்டபடி நிகழ்வு நடந்தது. இதில் மனநல மருத்துவர் அரவிந்தன் சிவக்குமாரின் பேச்சு, தீர்மானிக்கப்பட்டிருந்த பொருளை மையப்படுத்தியதாக அமைந்தது.   அவரின் … Continue reading பெண்களை தற்கொலைக்குத் தள்ளும் கட்டமைப்பு வன்முறை குறித்து நாம் என்றாவது பேசியிருக்கிறோமா?: அரவிந்தன் சிவக்குமார்

காதல் புனிதங்களின் மீது நிகழ்த்தப்படும் கொலைகள்: ஜி. கார்ல் மார்க்ஸ்

ஜி. கார்ல் மார்க்ஸ் காதல் என்ற பெயரில் அடுத்தடுத்து பெண்கள் மீதான நான்கு வன்முறைகள். அதில் இரண்டு அப்பட்டமான கொலைகளாக முடிந்திருக்கிறது. முதலில் இவற்றை ‘காதல் கொலைகள்’ என்று வகைப்படுத்துவதே தவறு. இதில் காதல் என்பதே கிடையாது. நமது ‘இளைஞர் திரள்’ காதல் என்று நம்பும் ஒன்றின் உள்ளீடற்ற மூர்க்கமே இத்தகைய கொலைகள். முன்பெல்லாம் காதல் சார்ந்த தற்கொலைச் செய்திகள்தான் காணக்கிடைக்கும். இப்போது அவை குறைந்திருக்கின்றன. இதன் பொருள் தற்கொலைகள் குறைந்துவிட்டன என்பதல்ல. அவை காதலித்தவளின் மீதான … Continue reading காதல் புனிதங்களின் மீது நிகழ்த்தப்படும் கொலைகள்: ஜி. கார்ல் மார்க்ஸ்

ஸ்ருதிஹாசனும், மலர் டீச்சரும் அடிமனதில் ஆழப் பதிந்திருக்கும் பெண் வெறுப்பும்

மோ. அருண் ப்ரேமம் என்றொரு அரத பழசான படத்தை மலையாளத்தில் எடுத்து அது பெரும் வெற்றிப்படமாக அமைந்ததே எதிர்பாராத விபத்து. சில படங்களுக்கு அப்படி நல்ல விபத்துகள் நேர்வதுண்டு. அதனை தற்போது தெலுங்கிலும் மறு உருவாக்கம் செய்திருக்கிறார்கள். மலர் கதாபாத்திரத்தில் ஸ்ருதிஹாசன் நடித்தது கண்டும், அவரது உடல்மொழி, மலையாளத்தில் நடித்தவரின் உடல்மொழியோடு ஒப்பிடுகையில் மோசமாக இருக்கிறது என்றும் எழுதப்பட்ட பல பதிவுகளை நேற்றில் இருந்து படித்துக்கொண்டிருக்கிறேன். ஒரு படத்தை ஒரு மொழியில் பார்த்துவிட்டு, இன்னொரு மொழியில் பார்க்கும்போது … Continue reading ஸ்ருதிஹாசனும், மலர் டீச்சரும் அடிமனதில் ஆழப் பதிந்திருக்கும் பெண் வெறுப்பும்

“600 ஆய்வுக்கட்டுரைகளையும் 81 நூல்களையும் எழுதியிருக்கும் என்னை பேராசிரியாராகக்கூட ஐஐடி கருதவில்லை”: பேரா. வசந்தா கந்தசாமி

  சென்னை ஐ.ஐ.டி.யில் கடந்த 1995-ஆம் ஆண்டு ஜனவரியில் இணைப் பேராசிரியர்கள், பேராசிரியர்கள் தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. கணிதத் துறையில் இணைப் பேராசிரியர் பதவிக்கு, டாக்டர் டபிள்யூ.பி.வசந்தா கந்தசாமி விண்ணப்பித்தார். ஆனால் அவர் தேர்வாகவில்லை. அதே சமயம், பேராசிரியர் தேர்வில் கலந்து கொண்ட அவர், இணை பேராசிரியராக நியமிக்கப்பட்டார். பேராசிரியர் பணிக்கு தன்னை தேர்வு செய்யாததை எதிர்த்தும், அடிப்படை தகுதிகள் இல்லாத சிலர் இணை பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டதாகக் கூறியும், அவர்களின் நியமனத்தை எதிர்த்தும், இந்த முறைகேடுகள் குறித்து … Continue reading “600 ஆய்வுக்கட்டுரைகளையும் 81 நூல்களையும் எழுதியிருக்கும் என்னை பேராசிரியாராகக்கூட ஐஐடி கருதவில்லை”: பேரா. வசந்தா கந்தசாமி

‘அப்பா’: இருக்கக்கூடாத பிற்போக்குத்தனத்தின் கடைக்கூறொன்று சமுத்திரக்கனியிடம் இருக்கிறது

நிலா லோகநாதன் அப்பா திரைப்படம் நல்ல திரைப்படமெனவும் அது கபாலி போன்ற வணிக சினிமாவினால் காணாமல் போய்விட்டதெனவும் நிறைய நண்பர்கள் வருத்தமுடன் எழுதியிருந்தார்கள். எனக்கென்னவோ சமுத்திரக்கனிக்கு இருக்கக் கூடாத பிற்போக்குத்தனத்தின் கடைக்கூறொன்று இருப்பதைப் போலப்படுகிறது. நாடோடிகள் மாதிரியான "மெச்சத்தக்க"படத்தை எடுத்தவரல்லவா? அப்பா திரைப்படம் தொடங்கும் போது, கூரையில் கயிற்றைக் கட்டி இழுத்துக்கொண்டு வலியைத் தாங்கி வீட்டில் பிரசவிக்கிறார் அந்தப் பெண். சமுத்திரக்கனி அதைத்தான் வலியுறுத்துகிறார். ஆஸ்பத்திரிக்குச் சென்றால் வெட்டிப்போட்டு விடுவார்கள் என்கிறார். அதற்கு முதற்காட்சியில், பக்கத்து வீட்டுப் … Continue reading ‘அப்பா’: இருக்கக்கூடாத பிற்போக்குத்தனத்தின் கடைக்கூறொன்று சமுத்திரக்கனியிடம் இருக்கிறது

“ஒரு பெண் தலையில் முடிவைத்துக் கொள்வதும், மொட்டை அடித்துக்கொள்வதும் அவள் இஷ்டம்”: ஜி. விஜயபத்மா

ஜி. விஜயபத்மா  ஒரு பெண் தலையில் முடிவைத்துக் கொள்வதும், மொட்டை அடித்துக்கொள்வதும் அவள் இஷ்டம். அவள் ஒரு ஆணுடன் தன் வாழ்வை பகிர்ந்து கொள்வதோ தேவையில்லை என முடிவு செய்வதோ அவள் சுய விருப்பம். அவள் வாழ்வை முடிவு செய்ய சமுகம் என்றழைக்கப்படும் உங்களுக்கோ, இல்லை அவள் பெற்றோருக்கோ கூட உரிமையில்லை. அவர்கள் ஈஷாவால் மூளை சலவை செய்யப்பட்டவர்கள் என்றால், அதை விமர்சிக்கும் நீங்களும் இந்த உலக நாற்றங்களினால் மூளை சலவை செய்யப்பட்டு இருக்கிறீர்கள் என்றே அர்த்தம். … Continue reading “ஒரு பெண் தலையில் முடிவைத்துக் கொள்வதும், மொட்டை அடித்துக்கொள்வதும் அவள் இஷ்டம்”: ஜி. விஜயபத்மா

பத்தி: “புலனாகா அரங்கில் பெண் எழுப்பும் கேள்வி”- கௌதம சித்தார்த்தன்

கௌதம சித்தார்த்தன் தமிழ்மண்ணின் தனிச்சிறப்பு மிக்க கதைப்பாடல்களில் ஒன்றான அண்ணமார் கூத்து நிகழ்ச்சியை சமீபத்தில் பார்க்க வாய்த்தது. தமிழகத்தின் மேற்குப்பகுதியான கொங்குமண்டலத்தின் செழுமையான மரபில் காலூன்றி நடக்கும் கதைப்போக்கும், குருட்சேத்திர யுத்தத்தை நினைவுபடுத்தும் படுகளக் காட்சிகளும் மிக அழகான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள பாங்கில் இந்த நாட்டுப்புறச் சொல்கதை, முக்கியத்துவம் பெறுகிறது. இந்தக் கதைப்பாடலை பலமுறை பாடல் வடிவத்தில் கேட்டிருக்கிறேன். சமீபத்தில், கூத்து வடிவத்தில் நிகழ்ச்சியைப் பார்க்க வாய்த்தபோது பிரமித்துப் போனேன். அதுவும் படுகளக் காட்சி உலகக் காவிய … Continue reading பத்தி: “புலனாகா அரங்கில் பெண் எழுப்பும் கேள்வி”- கௌதம சித்தார்த்தன்

வீடியோ: பெண்களின் சுமை ஏறிக்கொண்டே தான் இருக்கிறது! எழுத்தாளர் பா. ஜீவசுந்தரி நேர்காணல்

எழுத்தாளர் பா. ஜீவசுந்தரி, பெண்களையும் பெண்களின் பிரச்சினைகளையும் தன் எழுத்தில் ஆவணப்படுத்தி வருவதில் முன்னோடியாக இருப்பவர். மூவலூர் இராமாமிர்தம் வாழ்வும் பணியும் (புலம் வெளியீடு) என்ற நூல் மிக முக்கியமான ஆவணம். சமீபத்தில் மூவலூர் இராமாமிர்தம் எழுதிய ‘இஸ்லாமும் இந்தியர்களின் நிலைமையும்’ (கருப்புப் பிரதிகள் வெளியீடு) என்ற நூலை பதிப்பித்திருக்கிறார். ‘ரசிகை பார்வை’(கயல்கவின் வெளீயீடு), தமிழில் பெண்ணின் பார்வையில் தமிழ் சினிமாவில் ஜொலித்த பெண் நட்சத்திரங்களின் வாழ்க்கை ஆவணப்படுத்தியிருக்கிறது. அரிதான ஆவணமாக இது வெளிப்பட்டுள்ளது. வெகுஜென பத்திரிகைகளில் பெண்கள் … Continue reading வீடியோ: பெண்களின் சுமை ஏறிக்கொண்டே தான் இருக்கிறது! எழுத்தாளர் பா. ஜீவசுந்தரி நேர்காணல்

#கபாலி முதன்முறையாக ரஜினி பெண்களை தாழ்த்தி பேசாமல் நடித்திருக்கிறார்: மனநல மருத்துவர் ஷாலினியின் பாராட்டு

பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கபாலி’ குறித்து பாராட்டுகளும் சர்ச்சைகளும் விவாதங்களும் எதிர்ப்புகளும் வந்தவண்ணம் உள்ளன. மனநல மருத்துவர் ஷாலினி ஒரு  மாற்றுப்பார்வையில் ‘கபாலி’யைப் பார்த்திருக்கிறார். https://www.facebook.com/psrf.india/posts/10153667450916994 “முதன்முறையாக ரஜினிகாந்த், பெண்களை தாழ்த்தி பேசாமல் நடித்திருக்கிறார். அவருடைய மகள் சுயசார்புள்ள பெண்ணாக இருக்கிறார். இதுபோன்ற நேர்மறையான கதாபாத்திரங்களை காட்டியதற்காக இயக்குநர் ரஞ்சித்திற்கு நன்றி சொல்ல வேண்டும். ரஞ்சித்துக்கு என்னுடைய பாராட்டை எவரேனும் தெரிவியுங்கள். அதுபோல, அடுத்த படைப்பில் கருப்புத் தோலுடைய பெண்ணை கதாநாயகியாக நடிக்கவைக்க … Continue reading #கபாலி முதன்முறையாக ரஜினி பெண்களை தாழ்த்தி பேசாமல் நடித்திருக்கிறார்: மனநல மருத்துவர் ஷாலினியின் பாராட்டு

அறிவுலகைச் சேர்ந்தவர்களுக்கு ஏன் இவ்வளவு பெண் வெறுப்பு?

Divya Bharathi ஓலா கார் ஓட்டுனருக்கும் , தோழர் விலாசினிக்கும் இடையிலான பிரச்சனை ஒரு புறம் இருக்க, அதை ஆயுதமாக்கி பெண்களுக்கு எதிராய் தரம் தாழ்ந்த முறையில் "விமலாதித்த மாமல்லன்" போன்றோர் செய்து வரும், எழுதிவரும், கூறுகெட்டதனங்களை பார்க்கும் போது, பெண் வெறுப்பு என்பது இந்த சமூகத்தில் அனைத்து மட்டத்திலும் அதிலும் குறிப்பாக அறிவுலக(?) இலக்கிய உலகை (?) சார்ந்தவர்களிடம் எவ்வளவு தூரம் கொடூரமாக வேரூன்றியுள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.. அந்த மாமல்லன் சேகரித்து வரும் … Continue reading அறிவுலகைச் சேர்ந்தவர்களுக்கு ஏன் இவ்வளவு பெண் வெறுப்பு?

அழகு-அழகின்மை என்ற புனைவு நிலை: ப்ரேம்

பிரேம்  இறுதியாய் எஞ்சக்கூடிய வன்முறை வர்க்கம், சாதி, இனம், பாலினம், சமூக அதிகாரம் என்ற அனைத்து வகை அடக்குமுறை, ஏற்றத்தாழ்வு, ஒதுக்குதல்களும் கடந்து இரண்டு மனிதர்களுக்கிடையிலான ஆகக்கொடிய வன்முறையாக அமைவது அழகு-அழகின்மை என்ற புனைவு வழி கட்டப்பட்ட வன்முறைதான். இனவெறுப்பு-புனித வாதம்- தேர்ந்தெடுத்த உடல் என்ற பிழிந்து- பிரித்தெடுத்தல் செயல்பாடு வழி உருவாக்கப்பட்ட இயற்கை மறுத்த உளவியல்பின் நீட்சிதான் அழகு-அழகின்மை என்ற புனைவு நிலை. நோயற்ற, உறுப்புக் குறைபாடுகள் அற்ற, இயற்கையான உடல்கள் என்பதற்கு மேல் மனித … Continue reading அழகு-அழகின்மை என்ற புனைவு நிலை: ப்ரேம்

டிஜிட்டல் பர்தா – இது கலாச்சாரத்துக்கான காவல், பெண்களுக்கோ இன்னுமொரு அச்சுறுத்தல்

வில்லவன் இராமதாஸ் சேலம் வினுப்பிரியா மற்றும் சுவாதி வழக்குகளுக்குப் பிறகு கலாச்சாரக் காவலர்கள் தங்கள் பெண்கள் மீதான அக்கறையை உயிர்த்தெழ வைத்திருக்கிறார்கள். சமூக வலைதலத்தின் பக்கம் வராதீர்கள், வந்தாலும் படங்களைப் பகிராதீர்கள் எனும் ஆலோசனைகள் போலீஸ் உயரதிகாரிகளிடமிருந்து வருகிறது. இதே ஆலோசனையை ஒரு உள்ளூர் போலீஸ்காரர் முரட்டுத்தனமாக சொன்னதால்தான் வினுப்பிரியா தற்கொலை செய்துகொண்டார். இதில் சொல்பவரின் உள்நோக்கத்தை விட்டுவிட்டு ஆலோசனையை மட்டும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள முடியாது. காரணம் இவர்கள் தேர்ந்தெடுத்த சிக்கல்களில் மட்டுமே தலையிடுகிறார்கள். மேலும் இவர்களது … Continue reading டிஜிட்டல் பர்தா – இது கலாச்சாரத்துக்கான காவல், பெண்களுக்கோ இன்னுமொரு அச்சுறுத்தல்

பெண் உடல் பெண்ணுக்கானதல்ல : கௌதம சித்தார்த்தன்

கௌதம சித்தார்த்தன்   கடந்த வருடத்தில் இணையத்தில் வெளியான சர்வதேச மாடலிங் பெண்மணியான கிம் கார்டேஷியன் நிர்வாண மாடலிங் படங்கள் இணையத்தில் வெளியாகி இணையப் போக்குவரத்தையே ஸ்தம்பிக்க வைத்துவிட்டது. paper macஎன்னும் பத்திரிகைக்கு கொடுத்த அந்த மாடல் படம், சமூக பிரக்ஞை கொண்ட விமர்சகர்களாலும், பெண்ணியவாதிகளாலும் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. சர்வதேச மாடலிங் உலகில் பெண் உடல் எவ்வாறெல்லாம் மாற்றப்படுகிறது மேலும் எப்படி கொச்சைப் படுத்தப்படுகிறது என்று விமர்சகர்கள் விரிவான வாதப் பிரதிவாதங்களை முன்வைக்கிறார்கள். அதே சமயத்தில் … Continue reading பெண் உடல் பெண்ணுக்கானதல்ல : கௌதம சித்தார்த்தன்

“கழுத்தை அறுக்கறதுக்கு ரொம்ப நேரம் ஆகாது” பெண் பதிப்பாளரை மிரட்டிய ஓலா கார் ஓட்டுநர்

தனியார் கேப் நிறுவனங்கள் குறித்து நாடு முழுக்கவும் அவ்வவ்போது புகார்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. குறிப்பாக ஓட்டுநர்கள், பெண் பயணிகளை நடத்தும் விதம், பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது, சீண்டுவது, மிரட்டுவது என தொடர்ந்து ஊடகங்களில் செய்திகள் வந்தபடி இருக்கின்றன. இதற்கொரு உதாரணமாகியிருக்கிறது, பிரக்ஞை என்ற பெயரில் பதிப்பகம் நடத்திவரும் விலாசினி ரமணிக்கு நடந்த சம்பவம். இந்த சம்பவம் குறித்தி விலாசினி முகநூலில் எழுதியுள்ள பதிவு: “இரண்டு தினங்கள் முன்பு திருவான்மியூரிலிருந்து வளசரவாக்கம் வருவதற்கு (தனியாக) ஓலா கேப் கார்த்திக் … Continue reading “கழுத்தை அறுக்கறதுக்கு ரொம்ப நேரம் ஆகாது” பெண் பதிப்பாளரை மிரட்டிய ஓலா கார் ஓட்டுநர்

“என்ன நடந்ததுன்னு கேட்காமலேயே போலீஸ்காரர் அடிக்கிறாரு; பார்த்த மக்கள் யாரும் என்னன்னு கேட்கலை” கதறிய கர்ப்பிணிப் பெண்

Nallu R Lingam அப்பாவிகளிடம் வீரம் காட்டும் இவர்கள் மனிதர்களா? காக்கி உடை அணிந்தவுடன் மனிதாபிமானம் மரித்துவிடுமா? மு.கு.: இந்த செய்தி 'தி இந்து' இணையத்தில் வெளியாகி இருந்தது. செய்தியை வாசித்து பகிர முயன்றால், அதற்குள் பதிவை நீக்கிவிட்டார்கள். யார் தந்த அழுத்தம்? இந்தக் கோழைகளா மக்களுக்கு உண்மையான செய்திகளைத் தருவார்கள்? நல்ல வேளையாக, நான் பின்னோக்கி செல்லாததால் பதிவைக் காப்பி செய்துவிட்டேன். ஸ்கிரீன் ஷாட்டும் எடுத்து வைத்துள்ளேன். செய்தி கீழே... ------------------- திருவல்லிக்கேணி அரசு மருத்துவமனையில் … Continue reading “என்ன நடந்ததுன்னு கேட்காமலேயே போலீஸ்காரர் அடிக்கிறாரு; பார்த்த மக்கள் யாரும் என்னன்னு கேட்கலை” கதறிய கர்ப்பிணிப் பெண்

“காதல் பற்றிய மிகையான, கற்பனையான, தவறான கற்பிதங்கள்  வன்மக்கொலைகளுக்கு இட்டுச்செல்கின்றன”

அ. குமரேசன் ஒரு பெண் கொல்லப்பட்டதை அவர் ஒரு பிராமணர் என்பதற்காக ஒரு சதவீதம் கூட நியாயப்படுத்துவதற்கில்லை. அதே போல், ஒரு ஆண் கொலை செய்ததை, அவர் ஒரு ஒதுக்கப்பட்ட சமூகத்தவர் என்பதற்காக ஒரு சதவீதம் கூட நியாயப்படுத்துவதற்கில்லை. அதே வேளையில், இப்படிப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுகிற மற்றவர்கள் எளிதில் தப்பித்து சுதந்திரமாக உலாவிக்கொண்டிருக்க, ஒதுக்கப்பட்ட, சமூக அடிப்படையிலும் பொருளாதாரத்திலும் பின்னுக்குத் தள்ளப்பட்டவர்களிடையே இப்படிப்பட்ட குற்ற மனநிலை கொண்டவர்களும் உருவாவது எப்படி? அந்த சமூகப் பொருளாதார உளவியல் … Continue reading “காதல் பற்றிய மிகையான, கற்பனையான, தவறான கற்பிதங்கள்  வன்மக்கொலைகளுக்கு இட்டுச்செல்கின்றன”

விநோதினி வழக்கில் ம‌ரண தண்டனை அளிக்க கூடிய அளவுக்கு பெரிய குற்றம் நிகழ்ந்திருக்கிறது: நீதிமன்றம்

காதலை ஏற்க மறுத்ததால், கடந்த 2012 நவம்பர் மாதம் 14-ம் தேதி அமில வீச்சுக்கு ஆளானார் புதுச்சேரியைச் சேர்ந்த வினோதினி. மருத்துவமனையில் 2013-ம் ‌ஆண்டு பிப்ரவரி 12-ம் தேதி அவர் மரணமடைந்தார். விநோதினி மீது அமிலம் வீசிய சுரேஷூக்கு காரைக்கால் நீதிமன்றம் ஆயுள் தண்டனை அளித்தது‌. அதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சுரேஷூக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது. விநோதினி வழக்கில் ம‌ரண தண்டனை அளிக்க கூடிய அளவுக்கு … Continue reading விநோதினி வழக்கில் ம‌ரண தண்டனை அளிக்க கூடிய அளவுக்கு பெரிய குற்றம் நிகழ்ந்திருக்கிறது: நீதிமன்றம்

கருத்து: பெண்ணுடலை வெட்டுகிறோமா? பெண்ணை வெட்டுகிறோமா? நாச்சியாள் சுகந்தி

நாச்சியாள் சுகந்தி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் காலையில் கொடூரமாக வெட்டிக் கொல்லப்படுகிறார். அதற்கு அடுத்தநாளே வினுப்பிரியா என்கிற பெண் சேலத்தில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொள்கிறார். காரணம் அவருடைய முகநூலில், வாட்ஸப்பில் இருந்த புகைப்படங்களை மார்ஃபிங் மூலம் போர்னோ படமாக உருவாக்கி, அதை உலவவிடுகிறார்கள். சொந்தக்காரர் ஒருவர் பார்த்துவிட்டு, அக்குடும்பத்தினிடரிடம் சொல்ல பதைபதைத்துப் போகிறது அக்குடும்பம். உடனே காவல்துரைக்கு செல்கிறார்கள். ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையான நம் காவல்துறை 2000 ரூபாயும் ஒரு செல்போனூம் அன்பளிப்பாக(?) வாங்கிக்கொண்டு செயல்பட ஆரம்பிக்கிறது … Continue reading கருத்து: பெண்ணுடலை வெட்டுகிறோமா? பெண்ணை வெட்டுகிறோமா? நாச்சியாள் சுகந்தி

“என்னோட அப்பா அம்மாவே என்னை நம்பாதப்போ நான் உயிரோட இருந்து என்ன பிரயோஜனம்”

“மொதல்ல நீங்க எல்லோரும் என்னை மன்னிச்சிடுங்க, என்னோட லைஃப் போனதுக்கு அப்புறம் நான் வாழ்ந்து என்ன பண்ணப் போறேன். எனக்கு வாழப் புடிக்கல்ல, என்னோட அப்பா அம்மாவே என்னை நம்பாதப்போ நான் உயிரோட இருந்து என்ன பிரயோஜனம், அவங்களே என்னைப் பற்றி கேவலமா பேசுறாங்க, சத்தியமா சொல்றேன் நான் என் போட்டோவை யாருக்கும் அனுப்பல, நான் எந்த தப்பும் பண்ணல்ல.” தனது இறுதிக் கடிதத்தில் வினுப்ரியா எழுதியவை... சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வினுப்பிரியா என்ற இளம்பெண், மர்ம … Continue reading “என்னோட அப்பா அம்மாவே என்னை நம்பாதப்போ நான் உயிரோட இருந்து என்ன பிரயோஜனம்”

ஒரு கொலை ஏன் நடக்கிறது? ஒரு ஆண் ஒரு பெண்ணை ஏன் கொல்கிறான்?

Rajasangeethan John   ஆண் தவறு செய்திருக்கலாம். பெண் தவறு செய்திருக்கலாம். கூலி வேலையாக இருக்கலாம். பெற்றோராக இருக்கலாம். ஆனால் எங்கோ ஏதோ ஒரு சிக்கல் நேர்ந்திருக்கிறது. ஏதோ இருவரின் வாழ்க்கை பாட்டங்களுக்கு தடை விழுந்திருக்கிறது. அந்த தடைக்கு அடுத்தவர் காரணம் என்ற புள்ளியில் தொடங்குகிறது குற்றத்துக்கான சிந்தனை. இந்த குற்றச்சிந்தனை பெருகுவதற்கு பல சமூக நடைமுறைகள் உதவுகின்றன. தடையிலிருந்து சுலபமாக வெளியே வர முடியாத அளவுக்கு அழுத்தம் தரும் சமூக நம்பிக்கைகள். சாதிகள், மதங்கள். அதை … Continue reading ஒரு கொலை ஏன் நடக்கிறது? ஒரு ஆண் ஒரு பெண்ணை ஏன் கொல்கிறான்?

பத்தி:ஆண் வளர்ப்பில் மாற்றம் வேண்டும்… இல்லையேல், பெண் கையில் ஆயுதம் தாரீர்!

அமுதா சுரேஷ் தினந்தோறும் செய்திகளை வாசிக்கும்போது, பெண்ணுக்கெதிரான ஏதோ ஒரு வன்முறை நிகழ்வை படிக்க நேர்கிறது! அரிதாகப் பெண்கள் நிகழ்த்தும் கொலைகளை விட, ஆண்கள் நிகழ்த்தும் கொலைகளை பார்க்கும்போது ஆண் இனம் மனதளவில் மிருக குணத்தை இன்னும் தாண்டி வரவில்லை என்றே தோன்றுகிறது! "நீ அம்பளைடா, அவளை வெட்டுடா" போன்ற சினிமா வசனங்கள், பெற்றோரின் காசில் வெட்டியாய் திரியும் நண்பர்களின் போதனைகள் என்று உடலளவில் பலம் பொருந்தியதாகக் கருதப்படும் ஆண்மக்கள், மனதளவில் பிறழ்ந்து தங்கள் பலத்தை எப்போதும் ஒரு … Continue reading பத்தி:ஆண் வளர்ப்பில் மாற்றம் வேண்டும்… இல்லையேல், பெண் கையில் ஆயுதம் தாரீர்!

ஸ்வாதியை படுகொலை செய்த ‘அந்த’ ஆண் யார்? ஒழுக்க மதிப்பீடுகள் ஏன் வலிந்து திணிக்கப்படுகின்றன?

விடியலை நோக்கிய காலை வேளை ஸ்வாதிக்கு அஸ்தனமாக இருக்கும் என ஸ்வாதிக்கும் தெரியாது, அவரை ரயில் நிலையம் வரை விட்டுவிட்டுச் சென்ற அவருடைய தந்தைக்கும் தெரியாது. ஆனால், அந்த அஸ்தமனத்தை எதிர் நோக்கியிருந்தது, ஸ்வாதியை இரக்கமின்றி வெட்டித்தள்ளிய ‘அந்த’ ஆண் தான். ஸ்வாதியின் சமூக வலைத்தள பக்கங்களில் அவர் காதல் வயப்பட்டிருப்பதற்கான எந்தவித அறிகுறியும் தென்படவில்லை. அந்த வயதுக்கே உரிய எதிர்ப்பார்ப்புகளைச் சொல்லும் சில சினிமா காட்சிகளின் படங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார். அவ்வளவே...மற்றபடி அவர் முகநூல் அலுவலக விஷயங்களை … Continue reading ஸ்வாதியை படுகொலை செய்த ‘அந்த’ ஆண் யார்? ஒழுக்க மதிப்பீடுகள் ஏன் வலிந்து திணிக்கப்படுகின்றன?

பத்தி: பூவரசி எனும் இறைவியின் வாழ்க்கையைப் படமாக்க தைரியமிருக்கிறதா?

ஜி. கார்ல் மார்க்ஸ் கீழே இருப்பது தினத்தந்தி செய்தி. இதை அப்படியே படமாக எடுப்பதற்கு யாருக்காவது தைரியம் இருக்கிறதா? நமது நிஜ வாழ்க்கை எவ்வளவு ராவாக இருக்கிறது பாருங்கள். தன்னைக் காதலித்தவளை 'வேறொருவனைக் கல்யாணம் செய்துகொள்' என்று அறிவுரை சொல்லும் ஒருவன். அவன் மீதுள்ள கோபத்தில் அவனது நான்கு வயது மகனைக் கொலைசெய்யும் இறைவியான காதலி. அன்பும், காமமும் துரோகமாக மாறும் புள்ளி அரூபமானது. நாம் கலையெனக் கொண்டாடுவதெல்லாம் எவ்வளவு போலியானவை என்று முகத்திலறைந்து உணர்த்துகிறாள் பூவரசி!! … Continue reading பத்தி: பூவரசி எனும் இறைவியின் வாழ்க்கையைப் படமாக்க தைரியமிருக்கிறதா?

#இறைவி: இது பெண்ணிய படமில்லாமல் வேறு எது பெண்ணிய படம்: விஜய் பாஸ்கர்விஜய்

விஜய்பாஸ்கர் விஜய் இறைவியில் இதை கவனித்தீர்களா ? -1 அதில் ஒரு தயாரிப்பாளர் டைரக்டரை மன்னிப்பு கேட்கச் சொல்வார். டைரக்டர் மன்னிப்புக் கேட்டதும் காலை நீட்டி கேட்கச் சொல்வார். பின்னர் வருந்தி விளக்கம் கொடுக்கும் போது “சார் அவன் மன்னிப்பு கேட்டா போதும்ன்னுதான் நினைச்சேன். ஆனா அவன பாத்த உடனே சர்ருன்னு ஏறிகிச்சி காலைத் தொட்டு மன்னிப்பு கேட்கச் சொன்னேன்” என்பார். பாபியை சேதுபதி மன்னித்து பிரச்சனையில்லாமல்தான் செல்ல நினைக்கிறார் ஆனால் திடீரென்று அவருக்கு சர்ருன்னு ஏறிக்கொள்ள … Continue reading #இறைவி: இது பெண்ணிய படமில்லாமல் வேறு எது பெண்ணிய படம்: விஜய் பாஸ்கர்விஜய்