இமையத்தின் ‘செல்லாத பணம்’ நாவல் : ஒரு மருத்துவமனை அனுபவம்

பீட்டர் துரைராஜ் இமையத்தின் படைப்புகளை நான் விரும்பி படிப்பவன்.'செல்லாத பணம்' அவரது ஐந்தாவது நாவல்; புதிதாக வந்துள்ளது."இன்னொரு முறை இமையம் பெண்களை மையப்படுத்திய ஒரு நாவலைப் படைத்துள்ளார்.இன்னொரு முறை நமது மனசாட்சியை உலுக்குகிறார் " என்று MIDS பேராசிரியர் லக்‌ஷ்மணன் தனது முகநூலில் குறிப்பிடுகிறார். எனவே இந்த நாவலை படித்தேன். பர்மாவிலிருந்து புலம் பெயர்ந்து வந்த குடும்பத்தைச் சார்ந்த ரவியை,தன் பெற்றோர் எதிர்ப்பை மீறி ரேவதி திருமணம் செய்துகொள்கிறாள். எந்த நல்ல பழக்கமும் இல்லாத கணவனின் அடி,உதை,கொடுமைகளின் … Continue reading இமையத்தின் ‘செல்லாத பணம்’ நாவல் : ஒரு மருத்துவமனை அனுபவம்

நூல் அறிமுகம் : எழுத்தாளர் சுகுமாரனின் ‘பெருவலி’

பீட்டர் துரைராஜ் முகலாய அரசன் ஷாஜகானின் மகள் ஜஹனாராவைச் சுற்றி சுகுமாரன் எழுதியுள்ள புதிய நாவல் Peruvali / பெருவலி. முகலாய அரசர்களைப் பற்றி பல கதைகள் வந்துள்ளன. இது பெண் பார்வையில் எழுதப்பட்டுள்ள நாவல். முகலாயப் பேரரசர் ஷாஜகான் அவரது மகன் அவுரங்கசீபால் சிறை வைக்கப்படுகிறார். ஷாஜகான் மீதுள்ள பிரியத்தினால் அவரது மூத்த மகள் ஜஹனாராவும் அவரோடு சிறையில் இருக்கிறார். அவள் திருமணம் செய்து கொள்ள முடியாது. ஏனெனில் "அரச குடும்பத்தைச் சார்ந்த இளவரசிகள் திருமணம் … Continue reading நூல் அறிமுகம் : எழுத்தாளர் சுகுமாரனின் ‘பெருவலி’

நூல் அறிமுகம்: கே.பாலகோபாலின் ‘உரிமைகள் : ஒரு தத்துவக் கண்ணோட்டம்’

பீட்டர் துரைராஜ் தன்முதலான( original) சிந்தனையாளரும் மனித உரிமைப் போராளியுமான,  டாக்டர். கே.பாலகோபால் தெலுங்கில் எழுதியவற்றை "உரிமைகள்: ஒரு தத்துவக் கண்ணோட்டம்" என்ற பெயரில் சிந்தன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. கே.மாதவ் மொழி பெயர்த்துள்ள இந்த நூல் ஜனநாயக ஆர்வலர்கள் மத்தியில் சலனத்தை, தூண்டுதலை கண்டிப்பாக ஏற்படுத்தும். பாலகோபால் முப்பதாண்டு காலம் உரிமைகள் இயக்கப் பயணத்தில் தீர்மானகரமான பங்காற்றியவர். அவருடைய கட்டுரைகள், சொற்பொழிவு, துண்டறிக்கை, பாடத்திட்டம் , கேள்வி-பதில், அஞ்சலி, தலையங்கம் ,பேட்டி இவைகளைத் தொகுத்து இந்த முன்னூறு … Continue reading நூல் அறிமுகம்: கே.பாலகோபாலின் ‘உரிமைகள் : ஒரு தத்துவக் கண்ணோட்டம்’

புத்தக அறிமுகம் – இந்தியா என்கிற கருத்தாக்கம்

பீட்டர் துரைராஜ் சுனில் கில்நானி தில்லியில் பிறந்து இலண்டன் அரசர் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றும் வரலாற்றுத்துறை ஆய்வாளர் ஆவார். இந்திய விடுதலையின் பொன்விழா ஆண்டில் (1997) அவருடைய Idea of India என்ற நூல் வெளிவந்து பரவலான வரவேற்பைப் பெற்றது. இது "இந்தியா என்கிற கருத்தாக்கம் " என்ற பெயரில் அக்களூர் ரவியால் மொழி பெயர்க்கப்பட்டு சந்தியா பதிப்பக வெளியீடாக இந்த ஆண்டு புத்தக கண்காட்சியின் போது வெளிவந்துள்ளது. கவனிக்க வேண்டிய ஐந்து புத்தகங்களில் ஒன்றாக இதனை … Continue reading புத்தக அறிமுகம் – இந்தியா என்கிற கருத்தாக்கம்

நூல் அறிமுகம்: ‘புத்தர் போதாது, அம்பேத்கரும் போதாது, மார்க்ஸ் அவசியம் தேவை’

பீட்டர் துரைராஜ் பட்டேல் அவரது சொந்த மாநிலமான குஜராத்தில் மட்டுமே மதிக்கப்படுகிறார்; போஸ் வங்காளத்தைத் தவிர மற்ற மாநிலங்களில் நினைவு கூறப்படுகிறார் என்று சொல்ல முடியாது; ஆசாத் முஸ்லிம்களாலும், முஸ்லிம் அல்லாதவர்களாலும் மறக்கப்பட்டு விட்டார். வலதுசாரிகளாலும், இடது சாரிகளாலும் நேரு விமர்சிக்கப் படுகிறார்; காந்தி குறிப்பிடத்தக்க அளவுக்கு மக்களால் மதிக்கப்படுகிறார் என்றாலும் பெரும்பாலானவர்கள் மீது அவர் தாக்கத்ததை தருகிறார் என்று சொல்ல முடியாது. இன்றைக்கு அம்பேத்கர் மட்டுமே நாடெங்கிலும் கொண்டாடப்படும் தலைவராக இருக்கிறார். அவரது பிறந்த நாளை … Continue reading நூல் அறிமுகம்: ‘புத்தர் போதாது, அம்பேத்கரும் போதாது, மார்க்ஸ் அவசியம் தேவை’

நூல் அறிமுகம்: அப்பாவின் விசில் சத்தம்!

ஒடியன் லட்சுமணன் மற்ற பொழுதுகளைவிட, பனிபடர்ந்த அதிகாலைநேரங்கள் வாசிப்புக்கு உகந்ததாக இருக்கிறது . இந்தநேரத்தில் நிகழும் வாசிப்பு பாந்தமாக மனதோடு ஒட்டிக்கொள்வதை, அந்த கதாபத்திரங்கள் விருந்தினர்போல் நம்மோடே சிலகாலம் தங்கியிருப்பதை பலமுறை உணர்ந்திருக்கிறேன் அப்படிவாசிக்கப்படுகிற சிறுகதைகளை எழுதிய எழுத்தாளர் உங்கள் பிரபலப் பட்டியல்களில் இருக்கவேண்டிய அவசியமில்லை. அவர்கள் உங்களுக்கு அனுக்கமானவராக இருக்க வேண்டியதில்லை. ஏதுமற்ற மக்களோடு நெருங்கி நிற்பவராக , அன்றாடம் அவர்களை உள்வாங்குபவர்களாக, அவர்கள் வாழ்வின்மீது 50 சதமானம் கரிசனம் உள்ளவர்களாக இருந்தால் போதுமானது. தன்னியல்பான … Continue reading நூல் அறிமுகம்: அப்பாவின் விசில் சத்தம்!

 நூல் அறிமுகம் : ” ஊழல் – உளவு – அரசியல் “

பீட்டர் துரைராஜ் ' அதிகாரவர்க்கத்துடன் ஒரு சாமானியனின் போராட்டம் " என்ற அட்டைப்பட கட்டியத்துடன் தற்போது " ஊழல் - உளவு - அரசியல் " என்ற புத்தகம் வெளிவந்துள்ளது. சவுக்கு என்ற இணைய தளத்தை நடத்திவரும் சங்கர் என்பவர் இந்த நூலை எழுதியுள்ளார். தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத் துறையில் ஒரு குமாஸ்தாவாக  பணியாற்றியபோது அதிகார வர்க்கத்தின் ஊழலை எதிர்த்ததால் சிறை சென்று, வேலை நீக்கம் செய்யப்பட்டு வழக்குகளை எதிர் கொண்டவர். அவருடைய   தன் வரலாறுதான் … Continue reading  நூல் அறிமுகம் : ” ஊழல் – உளவு – அரசியல் “

ஒடுக்குகிற தேசியம் இல்லையென்றால் ஒடுக்குமுறை இல்லையென்று ஆகுமா?: தேசிய இனப் பிரச்னையும் மார்க்சியமும் நூல் விமர்சனம்

அருண் நெடுஞ்செழியன் இந்திய ஆளும்வர்க்கத்தின் குரலாக “மார்க்சியமும்  தேசிய இனப் பிரச்சனையும்” என்ற நூலொன்று வந்துள்ளது.தோழர். கே. சங்கர நாராயணன் எழுதியுள்ள இந்நூலை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. இந்நூலில் கே. சங்கர நாராயணன் ஒடுக்குகிற தேசியம் என இந்தியாவில் இல்லாத காரணத்தால் ஒடுக்கப்படுகிற தேசிய இனத்தின் சுய நிர்ணய உரிமை என்ற ஒன்று அவசியமில்லை என வாதிடுகிறார். தோழர் சுனிதி குமார் கோஷ் இதைக் காணத் தவறுவதாக கூறுகிறார். ஒடுக்குகிற தேசியம் இல்லை என வாதிட வருபவர்,இந்தியாவிலுள்ள தேசிய … Continue reading ஒடுக்குகிற தேசியம் இல்லையென்றால் ஒடுக்குமுறை இல்லையென்று ஆகுமா?: தேசிய இனப் பிரச்னையும் மார்க்சியமும் நூல் விமர்சனம்

“நிச்சயமின்மைகளுக்கு அப்பாலும் ஜீவித்திருக்கும் சொற்கள்”: கொமோரா நாவல் குறித்து லஷ்மி சரவணகுமார்

“மூன்றாம் உலக நாடுகளிலிருந்து வருகிற ஒரு மனிதனுக்கு கதைகள் எழுத மன அமைதி எப்படி கிடைக்கும்? அதிருஷ்டவசமாக கலை தாரளமாகவும் கருணையோடும் இருக்கிறது. பிரச்சனைகளற்ற சந்தோசங்களை மட்டும் கலை ஆகர்ஷிப்பதில்லை, துன்பத்தில் உழல்பவர்களை அது நிராகரித்து ஒதுக்குவதுமில்லை. அவரவர் நெஞ்சிற்குள் பொங்கும் உணர்வுகளை அவர்களுக்கே உரித்தானதொரு தனிமுறையில் வெளிப்படுத்திக் கொள்ள கலை அனுமதிக்கிறது.” - தனது நோபல் பரிசு ஏற்புரையில் ‘நாகிப் மாஃபஸ். கதைகளை கேட்பதைப் போல் வாசிப்பதைப் போல் எழுதுவதும் மகத்தான ஆறுதலைத் தருவதால்தான் எழுத்தின் … Continue reading “நிச்சயமின்மைகளுக்கு அப்பாலும் ஜீவித்திருக்கும் சொற்கள்”: கொமோரா நாவல் குறித்து லஷ்மி சரவணகுமார்

மனுவின் மூத்த அடிமைகளின் துல்லியபதிவு: செம்புலம் நாவல் அறிமுகம்

செகா சாதியப் புறக்கணிப்பால் அவமானத்திற்குள்ளாகி , வேற்றூருக்கு அமைதியான வாழ்க்கைக்காக குடும்பத்தோடு புலம்பெயர இருக்கும் இடைச்சாதியைச் சார்ந்த நபராகவோ அல்லது அந்த நண்பர்களை உடைய நபராகவே இருப்பவர்களா? பத்து பேர் சேர்ந்து இருக்கும் கூட்டம்,"மாப்பிள்ளை மச்சான் " என்கிற சாதிய விளிச்சொற்களால் ஒரு தனிக்குழுவாகி உங்களை அம்போவென விடுகிற அவல நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறீர்களா? அம்பேத்கரைத் தவிர வேறு யாருடைய நூல்களை வேண்டுமானாலும் படி என்கிற வழிகாட்டல் உங்களுக்கு கிடைக்கப்பட்டிருக்கிறதா ? கற்பித்தல் சூழலில் சாதியை மட்டுமே … Continue reading மனுவின் மூத்த அடிமைகளின் துல்லியபதிவு: செம்புலம் நாவல் அறிமுகம்

எழுத்தாளர் தமிழ்மகனின் ” வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் ” நாவல் அறிமுகம்

"சிந்துசமவெளி நாகரிகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். 1920 களிலிருந்து ஆய்வுகள் வேகமாக நடந்து வந்தன . எப்போது சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் ; அங்கே கிடைத்த எழுத்துக்கள் தமிழ் தொடர்புடைய எழுத்துக்களாக இருக்கின்றன என்று சொன்னார்களோ அப்போதே அந்த ஆய்வு நிறுத்தப்பட்டது " என்று கவலையோடு சொன்னார் தமிழ்மகன்.அந்த நேர்காணலை நடத்தியவன் என்ற வகையில் ஒரு இலக்கியவாதியிடமிருந்து அப்படி ஒரு கருத்து வந்தது எனக்கு அப்போது பெருத்த ஆச்சரியமாக இருந்தது. அதற்கான விவரிப்பு தமிழ் மகனின் … Continue reading எழுத்தாளர் தமிழ்மகனின் ” வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் ” நாவல் அறிமுகம்

அருந்ததி ராயின் “The Ministry of Utmost Happiness”: நூறு சதம் சமகால  அரசியலைப் பேசும் நாவல்

பீட்டர் துரைராஜ் அருந்ததி ராய் God of small things நாவல் மூலம் புகழ்பெற்றவர்.19 ஆண்டுகளுக்குப் பிறகு இவர் எழுதி வெளிவந்திருக்கும் நாவல்  "The Ministry of Utmost Happiness".இந்த நாவலும் புக்கர் பரிசுக்கு தேர்ந்து எடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு  இருந்தது; முதல் சுற்றில் இந்நாவல் இடம் பெற்றிருந்தது." அருந்ததி ராய்க்கு புக்கர் புக்கர் பரிசு கிடைத்திருந்தால் காஷ்மீர் பிரச்சினைக்கு ஒரு வேகம் (traction) கிடைத்து இருக்கும்." என்கிறார் மூத்த பத்திரிக்கையாளர் த.நா.கோபாலன். அருந்ததி ராயின் மொழி … Continue reading அருந்ததி ராயின் “The Ministry of Utmost Happiness”: நூறு சதம் சமகால  அரசியலைப் பேசும் நாவல்

#நூல் அறிமுகம்: தமிழ் மகனின் சமூக அறிவியல் கதைகள் ’அமில தேவதைகள்’!

' இயல்பு மீறிய ஏதோ ஒரு அம்சத்தை கதையில் சொல்ல வேண்டும். எதிர் காலத்தில் நடப்பதாகவும், செவ்வாய் கிரகத்தில் நடப்பதாகவும் மட்டும் சொன்னால் அது அறிவியல் கதை ஆகாது'

அகதியும் அகதி சார்ந்த நிலமும்: அ.முத்துலிங்கத்தின் “கடவுள் தொடங்கிய இடம்” நாவல் அறிமுகம்

அவன் கடவுள் தொடங்கிய இடத்திற்குச் செல்ல வேண்டும்; அங்கு அகதி அந்தஸ்து பெற வேண்டும்.

கொக்குகளுக்காகவே வானம்: தியாக சேகரின் ஓரிகாமி மடிப்பு கலை நூல் வெளியீடு!

“சாதாரண சின்னகிராமத்தில் இருக்கும் ஒரு குழந்தை தான் மடித்துசெய்த கொக்கையோ, தும்பியையோ, யானையையோ உயிர்பொம்மையாக நினைத்து அதை எடுத்துக்கொண்டுபோய் அவளுடைய விளையாட்டுப்பொருட்களுடன் சேர்த்து வைத்துகொள்வாள் எனில் அதுதான் நான் நம்பும் புரட்சி”

எம்.ஜி. ஆர் முன்வைத்த கனவுலக தீர்வுகள்! பிம்பச்சிறை நூல் அறிமுகம்

பீட்டர் துரைராஜ் திராவிட இயக்க ஆய்வாளரான எம்.எஸ்.எஸ்.பாண்டியன் பராசக்தி திரைப்படம் குறித்த ஆய்விற்காக புகழ்பெற்றவர். எம்.ஜி.ஆரின் திரைப்பட வாழ்வையும் , அரசியலையும் ஆய்வு செய்து The Image Trap : M.G.Ramachandran in Film and Politics ( 2015 ) என்ற நூலை எழுதியுள்ளார். அதனை "பிம்பச்சிறை- எம்.ஜி.ராமச்சந்திரன் திரையிலும் ,அரசியலிலும் என்ற பெயரில் அழகாக மொழிபெயர்த்துள்ளார் பூ.கோ.சரவணன். நூலாசிரியரின் மறைவுக்குப் பின் இந்த நூல் வெளிவந்துள்ளது ( 2016). இந்த நூலில் எம்ஜிஆர் 1933 … Continue reading எம்.ஜி. ஆர் முன்வைத்த கனவுலக தீர்வுகள்! பிம்பச்சிறை நூல் அறிமுகம்

இரா. முருகவேளின் முகிலினி: ஒன்றுப்பட்ட கோவையின் 60 ஆண்டு வரலாறு!

ஆறு மாசுபடுகையில் தொழிலாளி கண்டு கொள்ளவில்லை.  ஆலை மூடப்படுகையில் கிராம மக்கள் கண்டுகொள்ளவில்லை.  இவையிரண்டு செயல்களுக்கும் ஒத்திசைவு வேண்டுமா ? வேண்டாமா இது முருகவேள் எழுப்பும் கேள்வி .

” பார்த்தீனியம் ” நாவல் இலக்கிய உலகில் , தமிழ் ஈழ வரலாற்றில் நிலைபெறும் !

பீட்டர் துரைராஜ் அமுதன் அடிகள் இலக்கிய விருது மார்ச்சு மாதம் தமிழ் நதிக்கு வழங்கப்பட்டுள்ளது. வாசகசாலை இந்நாவலுக்கு திறனாய்வுக் கூட்டம் நடத்தியுள்ளது. விகடன்.காமிற்காக நியாஸ் அகமது தொகுத்த 2016 ல் கவனம் கொள்ளத் தக்க நூட்கள் பட்டியலில் இதனைப் பரிந்துரைத்திருக்கிறார் பத்திரிக்கையாளர் மாரி செல்வராஜ். இந்நாவலைப் படித்து முடித்தபிறகு நாம் ஒரு மாற்றத்தை கண்டிப்பாக உணரமுடியும் என அறுதியிட்டு கூறுகிறார் தி.க. வழக்கறிஞர் அருள்மொழி. இவ்வளவு அங்கீகாரத்திற்கும் பொருத்தமானது இந்த நாவல். கிட்டத்தட்ட 1983 முதல் 1990 … Continue reading ” பார்த்தீனியம் ” நாவல் இலக்கிய உலகில் , தமிழ் ஈழ வரலாற்றில் நிலைபெறும் !

நூல் அறிமுகம்: ஒரு இலக்கிய விமர்சகரின் பார்வையில் தமிழ் சினிமா

விஜயமகேந்திரன் உலக திரைப்படங்கள் குறித்தான பல புத்தகங்கள் வரும் சூழ்நிலையில் தமிழ் சினிமா குறித்தான புத்தகங்கள் வெகு குறைவாகவே பதிப்பிக்கப்படுகின்றன. உலக சினிமா, உலக சினிமா இயக்குநர்கள் பற்றி எழுதப்படும் புத்தகங்களுக்கு தமிழில் இருக்கும் சந்தை மதிப்பு தமிழ் படங்கள் குறித்தான புத்தகங்களுக்கு இல்லை என்பதை பதிப்பாளர்களே ஒத்துக்கொள்வார்கள் என நினைக்கிறேன். அப்படியே விற்றாலும் ஒரு வெற்றி பெற்ற நடிகரின் வாழ்க்கை கதைகளோ, அல்லது வெற்றி பெற்ற படங்களின் திரைக்கதை பிரதிகளே அதிகமாக விற்கின்றன. இதை வாங்குபவர்கள் … Continue reading நூல் அறிமுகம்: ஒரு இலக்கிய விமர்சகரின் பார்வையில் தமிழ் சினிமா

எழுத்தாளர் பிரேம்மின் ’அயோத்திதாசர் தொடங்கி வைத்த அறப்போராட்டம்’: நூல் வெளியீடு தொடர் நிகழ்வுகள்

எழுத்தாளரும் கோட்பாட்டாளருமான பிரேம்மின் ‘அயோத்திதாசர் தொடங்கி வைத்த அறப்போராட்டம்’(ஆழி பதிப்பகம்) நூல் வெளியீடு ஞாயிற்றுக்கிழமை கவிக்கோ அரங்கில் நடைபெறுகிறது. நூலை வெளியிடுகிறார்  விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன். இந்நூலின் அறிமுக நிகழ்வுகள் மதுரை, திருச்சி ஆகிய இரண்டு இடங்களிலும் நிகழ உள்ளது. திங்கள்கிழமை (26-09-2016) அன்று மாலை 5.30 மணியளவில் மணியம்மை மழலையர் பள்ளியில் கலந்துரையாடல் நடைபெறுகிறது. திருச்சியில் செவ்வாய்கிழமை (27-09-2016) அன்று மாலை 6 மணிக்கு செவானா ஓட்டலில் கலந்துரையாடல் நடைபெறுகிறது.   … Continue reading எழுத்தாளர் பிரேம்மின் ’அயோத்திதாசர் தொடங்கி வைத்த அறப்போராட்டம்’: நூல் வெளியீடு தொடர் நிகழ்வுகள்

“பல்லி – ஓர் அறிவியல் பார்வை “

குளியல் அறையிலிருந்து மனைவி "என்னங்க... "என்றால்..! சுவற்றில் "பல்லி " இருக்கிறது என்று புரிந்து கொள்ளும் கணவன் தன்னை புத்திசாலியாகப் பாவித்துக்கொள்கிறான்! பல்லியை பயங்கொள்ளும் உயிரினமாய் மாற்றியது எது..? பல்லி உணவில் விழுந்தால் மரணம் என்று பத்திரிக்கைகளும், உடலில் விழுந்தால் சகுனம் என்று பஞ்சாங்கமும் அலறுவது எதற்காக ..? வீட்டுத்தங்குயிரியாக மனிதர்களுக்கு அருகாமையில் பல்லிகள் வாழ்வது ஏன்..? உதட்டோரம் சிறுசிறு கொப்பளங்களோடு எதிரே வரும் நண்பரிடம் "உதட்டில் என்ன கொப்பளம் என்றால்..!" பல்லி சிறுநீர் கழித்துவிட்டது என்பார் … Continue reading “பல்லி – ஓர் அறிவியல் பார்வை “

வரலாற்றுப் பிழையான ஜெயமோகன்: விகடன் தடம் நேர்காணலுக்கு தமிழ்நதி எதிர்வினை

தமிழ்நதி  ஈழத்தில் நடந்த இனப்படுகொலை தொடர்பாக ‘தடம்’ இதழில் கேட்கப்பட்ட கேள்விக்கு கீழ்க்கண்டவாறு பதிலளித்திருக்கிறார் ஜெயமோகன். “முதலில் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை கிடையாது என்பது என் பார்வை… எந்தவோர் அரசும் தமக்கு எதிராக சில குழுக்கள் போரில் ஈடுபடும்போது அதை ஒரு போராகத்தான் பார்க்குமே தவிர, சிவில் சொசைட்டியின் எதிர்ப்பாகப் பார்க்காது.” இனப்படுகொலை குறித்து எந்தவொரு அடிப்படை அறிவும் இல்லாத ஒருவரால்தான் இவ்வாறு மொண்ணைத்தனமாக பேச இயலும். இனப்படுகொலை என்றால் என்ன என்பதை வரையறுப்பதற்குக் காரணமான ஆர்மீனிய … Continue reading வரலாற்றுப் பிழையான ஜெயமோகன்: விகடன் தடம் நேர்காணலுக்கு தமிழ்நதி எதிர்வினை

#வீடியோ: பகத்சிங்கின் நண்பர் யஷ்பால் எழுதிய நாவல் ‘காம்ரேட்’ அறிமுகம்

பெற்ற பிள்ளையை வளர்க்க ஒரு தாய் படும் துன்பத்தையும், மகளை மணம் செய்து கொடுக்க ஒரு தந்தை படும் துன்பத்தையும் உலகின் மாபெரும் துன்பங்களாகவும், தியாகங்களாகவும் பதிவு செய்கின்றன இலக்கியங்கள். ஆனால் ஏற்றத் தாழ்வுகளற்ற ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்க பல வகையான துன்பங்களையும் கடந்த மனிதர்களை நீங்கள் பார்த்ததுண்டா? அப்படிப் பார்க்காதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பை வழங்குகிறது ‘காம்ரேட்’ எனும் நூல். பகத்சிங்சின் நண்பரான யஷ்பால் அவர்கள் எழுதியிருக்கும் இவ்வரலாற்றுப் புதினத்தில் தன்னலத்தைத் துர எறிந்துவிட்டு … Continue reading #வீடியோ: பகத்சிங்கின் நண்பர் யஷ்பால் எழுதிய நாவல் ‘காம்ரேட்’ அறிமுகம்

#நிகழ்வுகள்: அருண் நெடுஞ்செழியனின் ‘அணுசக்தி அரசியல்’ நூல் வெளியீடு

அருண் நெடுஞ்செழியன் அவர்கள் எழுதிய ‘அணுசக்தி அரசியல்’ என்ற நூல் சென்னையில் நாளை [24.7.2016] ஞாயிறு  மயிலாப்பூரில் உள்ள பரிசல் புத்தக நிலையத்தில் வெளியிடப்படுகிறது. நூலை எழுத்தாளர் பாரதி நாதன் வெளியிட, ஊடகவியலாளர் விஜய் ஆனந்த் பெற்றுக் கொள்கிறார். மேலும், மேற்கண்ட நூலைப் பற்றி ஒரு கலந்துரையாடலும் இருக்கிறது. நேரம்; மாலை 5.30மணி. முகவரி; 71-A, R.K. மடம் சாலை, மயிலாப்பூர்.

காமிக்ஸ் பழங்குடியினரின் வாழ்வைச் சூறையாடுமா? ஓர் விவாதம்; ஓர் விளக்கம் – கௌதம சித்தார்த்தன்

கௌதம சித்தார்த்தன் தொன்மங்களுக்கு எதிராக களமிறக்கப்பட்ட ‘மாயாவி’ கட்டுரையை ஒட்டி //தற்போதைய வேதாளர், 21-ம் தலைமுறையைச் சார்ந்தவரான கிட் வாக்கர் என்றும், அவர் மனைவி ஐ.நா., சபையில் பணிபுரியும் டயானா பால்மர் என்றும் வாயைப் பிளக்க வைத்து, பழங்குடியினரின் வாழ்வியலைச் சூறையாடியது அமெரிக்க ஏகாதிபத்தியம்.// வாயைப் பிளக்கவைத்தால் வாழ்வியல் சூறையாடப்படுமா சார்? எழுத்து, படம், காணொலி என்பதைப் போல காமிக்ஸ் என்பதும் ஒரு ஊடகம். அது எப்படி பழங்குடியினரின் வாழ்வைச் சூறையாடியது என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும். … Continue reading காமிக்ஸ் பழங்குடியினரின் வாழ்வைச் சூறையாடுமா? ஓர் விவாதம்; ஓர் விளக்கம் – கௌதம சித்தார்த்தன்

தொன்மங்களுக்கு எதிராக களமிறக்கப்பட்ட ‘மாயாவி’ : கௌதம சித்தார்த்தன் 

கௌதம சித்தார்த்தன்  என் பால்ய பருவத்தில், காமிக்ஸ்களைத் தேடித் தேடிப் படித்திருக்கிறேன். எனக்கு இரும்புக்கை மாயாவியை ரொம்பப் பிடிக்கும். மாயாவியின் உலகம் பிரம்மாண்டமான சாகசங்கள் கொண்டது. நம்மூர் எம்ஜியார் போல. மாயாவி மாயமாய் மறைவதும், அந்தக் கை மட்டும் மறையாமல் நகர்ந்து நகர்ந்து சென்று கொள்ளையர்களைப் பிடிப்பதும் அபாரமாக இருக்கும். ஆனால், ரொம்ப நுட்பமான கதைப் போக்கெல்லாம் இருக்காது. ஆனால் சிஐடி லாரன்ஸ் - டேவிட்டின் கதைப்போக்கு மிக நுட்பமாக இருக்கும். மாயாவியை விடவும் எனக்கு இந்த இரட்டையர்களைத்தான் ரொம்பப் பிடிக்கும். அ.கொ.தீ., கழக (அழிவு, கொள்ளை, தீமை கழகம்) வில்லன்கள், நவீனத் தொழில் நுட்பமுறையில் இந்த உலகத்தை … Continue reading தொன்மங்களுக்கு எதிராக களமிறக்கப்பட்ட ‘மாயாவி’ : கௌதம சித்தார்த்தன் 

சாதி மறுப்பு இலக்கியத்திற்கான சாத்தியங்கள் : ஆதவன் தீட்சண்யா

ஆதவன் தீட்சண்யா சாகித்ய அகாடமி 2015 பிப்ரவரி 21,22 தேதிகளில் சென்னையில் நடத்திய "இலக்கிய முழுமையை நோக்கி- தலித் இலக்கியம்" என்கிற கருத்தரங்கிற்காக எழுதப்பட்ட கட்டுரை. தனிமனிதர்களின் அகநிலையையும் உலகு பற்றிய கண்ணோட்டத்தையும் வடிவமைப்பதில் இங்கு சாதியம் தீர்மானகரமான பங்கு வகிக்கிறது. மாற்றியமைக்கப்பட முடியாதபடி நெகிழ்ச்சியற்று இறுகக் கட்டப்பட்டுள்ள மேல்கீழ் படிவரிசையில் ஒவ்வொரு சாதிக்கும் ஒதுக்கப்பட்டுள்ள இடத்தைப் பொறுத்து அந்தச் சாதியினரின் அகநிலையும் கண்ணோட்டமும் உருவாகுகின்றன. அனிச்சை நிலையிலும் இயல்பிலும் சாதிசார்ந்தே யோசிப்பவராகவும் உள்வாங்குகிறவராகவும் அது சார்ந்தே … Continue reading சாதி மறுப்பு இலக்கியத்திற்கான சாத்தியங்கள் : ஆதவன் தீட்சண்யா

#வீடியோ: நூல் அறிமுகம் ‘பிம்பச் சிறை’

எம் ஜி ஆர் என்ற ,பிம்பச் சிறைக்குள் தமிழக மக்கள் இப்பொழுதும் இருப்பது ஏன் என்று அக்கு வேர் ஆணி வேராய் அலசும் நூல் ‘பிம்பச் சிறை’ (பிரக்ஞை வெளியீடு). நூல் அறிமுகம் செய்கிறார் கார்த்திக் கோபாலகிருஷ்ணன். https://youtu.be/ubT8mqVIizc

ஏன் தீர்ப்பை எதிர்க்கிறார்கள்: ச. தமிழ்ச்செல்வன்

Tamil Selvan கொங்கு வட்டாரத்தில் சாதிய அணிதிரட்டல் அரசியலை முன்னெடுக்க நினைப்போரும் மதவாத அரசியல் அணிதிரட்டலுக்காக உழைப்போரும் இந்தத் தீர்ப்பைக் கடுமையாக எதிர்க்கிறார்கள்.அந்தப்பகுதி மக்களின் மனம் காயப்பட்டதைப் பற்றி உருகி உருகிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். This is called Appeasing. இந்த சக்திகளைத் தாண்டி பொதுமக்கள் மனம் இவர்கள் தூண்டியதால் காயப்பட்டிருந்தாலும் கூட எழுத்தாளர் பெருமாள் முருகன் பொதுமக்களின் இயல்பான வாழ்க்கையை விட என் எழுத்து முக்கியமில்லை. நான் மன்னிப்புக் கேட்கிறேன். திருச்செங்கோடு என்ற ஊர்ப்பெயரை நாவலிலிருந்து நீக்குகிறேன் … Continue reading ஏன் தீர்ப்பை எதிர்க்கிறார்கள்: ச. தமிழ்ச்செல்வன்

அந்தப் பதிவை நீக்கிவிட்டேன்: லீனா மணிமேகலை

சர்ச்சைகளை உருவாக்கிய அந்தப் பதிவை நீக்கிவிட்டதாக தெரிவித்திருக்கிறார் கவிஞர் லீனா மணிமேகலை. என்ன சர்ச்சை என்பதை இங்கே படிக்கலாம். லீனாவின் விளக்கமளிக்கும் பதிவு கீழே: “பழனிவேள் தன் முகநூல் பக்கத்தில் எழுதும் பெண்களை இழிவுடுத்தி எழுதியிருந்தார் என்பதையும், அதைக் "லைக்கிட்டும்" "மெளனம் சாதித்தும்" உற்சாகப்படுத்திய நண்பர்களையும் கண்டித்து எழுதியிருந்த பதிவை நீக்கியிருக்கிறேன். காரணங்கள் இரண்டு. ஒன்று, பழனிவேள் தன் வசைகளை நீக்கிவிட்டதாக நண்பர்கள் அறியத் தந்தார்கள். இரண்டு, அந்த விவாதத்திலேயே, எழுதும் பெண்களைப் பற்றி யவனிகா சுதந்திரவள்ளியின் … Continue reading அந்தப் பதிவை நீக்கிவிட்டேன்: லீனா மணிமேகலை

இலக்கிய சர்ச்சைகளை உருவாக்குவது எப்படி?

நடந்த முடிந்த புத்தக கண்காட்சியை ஒட்டி சர்ச்சைகள் ஏதும் இல்லாதது ‘சப்’பென்று இருந்தது என ஒரு தமிழ் நாளிதழ் கவலைப்பட்டது. அந்தக் கவலையைப் போக்கும் வண்ணம் முகநூலில் ஒரு சர்ச்சையொன்று மையங்கொண்டுள்ளது. சர்ச்சையின் மையப்புள்ளி லீனா மணிமேகலை. சமீபத்தில் அவருடைய கவிதை நூல் (சிச்சிலி) ஒன்றும் நேர்காணல் நூல் (மொழி எனது எதிரி) ஒன்றும் வெளியானது. அந்த வெளியீட்டை ஒட்டி, கவிஞர் பழனிவேள் தனது முகநூல் பதிவில் இவ்வாறு பதிந்திருந்தார். Palani Vell இதனால் தான் இது கவிதையில்லை … Continue reading இலக்கிய சர்ச்சைகளை உருவாக்குவது எப்படி?

விடியோ: சிவப்புச் சந்தை நூல் அறிமுகம்

"மனித உறுப்புகளின் களவு, விற்பனை, மோசடி, ஏழை நாடுகளின் மக்களை ஏமாற்றி அவர்களுடைய உடல் பாகங்களைத் திருடும் பன்னாட்டு நிறுவன வியாபாரிகளைப் பற்றி விரிவாகப் பேசுகின்றது சிவப்புச் சந்தை (The Red Market)" அடையாளம் பதிப்பக வெளியீடு. நூல் அறிமுகம்: கார்த்திக் கோபாலகிருஷ்ணன் https://youtu.be/N159nhZZaqM

வலியும் காயமுமாய் மெய்யின் சிலிர்ப்போடு ச. பாலமுருகனின் பெருங்காற்று

ஒடியன் லட்சுமணன் வலியில்லாத, அலைக்கழிக்காத எதையும் என்னால் எழுதமுடியாது என்ற பிடிவாதத்தோடு தொடர்ந்து களத்தில் இயங்கும் ச. பாலமுருகன், சோளகர் தொட்டிக்குப்பிறகு நீண்ட இடைவெளியெடுத்து எந்தவித ஆர்பாட்டமுமில்லாமல் பெருங்காற்றை சமீபத்தில் கொண்டு வந்திருக்கிறார். யாரும் அதிகம் தொடாத, போராட்டங்களோடு தான் பங்கெடுத்த களங்களை பின்புலமாக வைத்து மிகுந்த பிராசையோடும் அவருக்கே உரித்தான லாவகத்தோடும் கதைகளை அடர்த்தியாகப் பின்னியிருக்கிறார். வலியும் காயமுமாய் மெய்யின் சிலிர்ப்போடு அவ்வளவு சிறப்பாய் வந்திருக்கிறது பெருங்காற்று. முதலிரண்டு கதைகளான ஒரு கடல் இருகரைகளும் வேர்மண்ணும் நம்மை … Continue reading வலியும் காயமுமாய் மெய்யின் சிலிர்ப்போடு ச. பாலமுருகனின் பெருங்காற்று

இரா. முருகவேளின் ‘மிளிர்கல்’ நாவல் திரைப்படமாகிறது!

எழுத்தாளர் இரா. முருகவேளின் ‘மிளிர்கல்’ நாவல் திரைப்படமாகிறது. இந்தப் படத்தை மீரா கதிரவன் இயக்குகிறார். இதுகுறித்து தனது முகநூலில் இரா. முருகவேள் செய்துள்ள அறிவிப்பு: “தோழர் திருப்பூர் குணா சொன்னது உண்மையாகிவிட்டது. அவள் பெயர் தமிழரசி இயக்குநர் மீரா கதிரவன் மிளிர் கல் நாவலைத் திரைப்படமாக எடுக்க உள்ளார். தோழர் திருப்பூர் குணாவும் பச்சைக் கொடி காட்டிவிட்டார். எரியும் பனிக்காடு - பரதேசி பிரச்சினை சண்டைக்குப் பிறகு தமிழ் சினிமா நமக்கு ஒத்து வராது என்று கருதியிருந்தேன். மீரா கதிரவன் … Continue reading இரா. முருகவேளின் ‘மிளிர்கல்’ நாவல் திரைப்படமாகிறது!

“பிடித்தெழ முயல்கிறேன். எழுந்துவிடுவேன்” நீதிமன்ற தீர்ப்பு குறித்து பெருமாள் முருகன் அறிக்கை

மாதொருபாகன் நூலுக்குத் தடை விதிக்க முடியாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இதுகுறித்து பெருமாள் முருகன் அறிக்கை : “நண்பர்களே, வணக்கம். தீர்ப்பு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. உள்ளொடுங்கிப் புகைந்த மனத்திற்குப் பெரும் ஆறுதலாக இருக்கிறது. ‘எழுத்தாளர் உயிர்த்தெழுந்து மீண்டும் எழுதட்டும்’ என்னும் இறுதி வாசகத்தின் ஒளியைப் பற்றிப் பிடித்தெழ முயல்கிறேன். எழுந்துவிடுவேன். ஒன்றுமில்லை, மகிழ்ச்சிப் பரவசம் காரணமாக இன்னும் கொஞ்சம் அவகாசம் கேட்கிறது மனம். துணைநின்ற நண்பர்களுக்கு நன்றி. எதிர்நின்ற நண்பர்களுக்கும் நன்றி. 000 பூ பெருவெடிப்புக்குப் … Continue reading “பிடித்தெழ முயல்கிறேன். எழுந்துவிடுவேன்” நீதிமன்ற தீர்ப்பு குறித்து பெருமாள் முருகன் அறிக்கை

பெருமாள் முருகனின் மாதொருபாகன் வழக்கு;கருத்துரிமைக்காகக் கரம் உயர்த்துவோருக்கு நம்பிக்கை தரும் தீர்ப்பு!

அ. குமரேசன் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்காகப் போராடுவோருக்கு ஒரு முக்கிய வெற்றியாக, எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘மாதொருபாகன்’ நாவலுக்குத் தடை விதிக்க மறுத்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஜூலை 5) அளித்துள்ள தீர்ப்பைப் பார்க்கிறேன், வரவேற்கிறேன். எழுத்தாளர்களின் கருத்துச் சுதந்திரம் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு முக்கியமானதுதான் எழுத்தாளர்களின் சமூகப் பொறுப்பும். கருத்துரிமை, சமூகப்பொறுப்பு இரண்டிற்கும் சம முக்கியத்துவம் அளிக்கிற இயக்கம்தான் எமது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம். ஒரு ஊரைப்பற்றி, அதன் வாழ்க்கை … Continue reading பெருமாள் முருகனின் மாதொருபாகன் வழக்கு;கருத்துரிமைக்காகக் கரம் உயர்த்துவோருக்கு நம்பிக்கை தரும் தீர்ப்பு!

தமிழ் இருக்கையில் எதைக் கட்டமைக்க நினைக்கிறீர்கள்?: கௌதம சித்தார்த்தன்

கௌதம சித்தார்த்தன் சமீபத்தில், ‘அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை துவங்கவேண்டும் அதற்கு ஆதரவும் நிதியும் தாருங்கள்..’ என்ற குரல்கள் தமிழ்நாட்டில் பலமாக ஒலித்துக் கொண்டிருக்கின்றன. நமது 2000 ஆண்டுகால மொழியின் பெருமை உலகஅரங்குகளில் ஒலிக்கவேண்டுமானால் அந்தப் பல்கலைக்கழகத்தில் இருக்கை அமைந்தால்தான் நடக்கும் என்று இருக்கை ஒருங்கிணைப்பாளர்கள் கூறும் திருவாய்க்கும் உண்டோ மறுவாய்? உள்ளூர்களில் நிராகரிக்கப்படும் என் அன்னைத் தமிழுக்கு உலக அரங்குகளில் மகுடம் சூட்டப்படும் சூழல் உருவாவதை நான் எப்படி எதிர்ப்பேன்? இந்தத் தருணத்தில்தான் … Continue reading தமிழ் இருக்கையில் எதைக் கட்டமைக்க நினைக்கிறீர்கள்?: கௌதம சித்தார்த்தன்

ஞாயிறு கலை-இலக்கிய நிகழ்வுகள்: கவிஞர் குமரகுருபரன் நினைவஞ்சலி மற்றும் சில…

கவிஞர் குமரகுருபரன் நினைவலைகள் கூட்டம்: ஞாயிறு (26-06-2016) காலை பத்துமணிக்கு சென்னை கவிக்கோ மன்றத்தில் இயல்விருது பெற்ற மறைந்த கவிஞர் குமரகுருபரன் நினைவலைகள் கூட்டத்திற்கு உயிர்மை பதிப்பகம் ஏற்பாடு செய்துள்ளது. எழுத்தாளர் வெளி. ரங்கராஜனின் சமகால இலக்கிய உரையாடல்கள் குறித்த கலந்துரையாடல்:  எழுத்தாளர் வெளி. ரங்கராஜனின்அண்மைக்கால இலக்கியம், நாடகம் மற்றும் நிகழ்கலை கட்டுரைகளின் தொகுப்பான சமகால இலக்கிய உரையாடல்கள் குறித்த கலந்துரையாடல் கூட்டம் வருகிற ஜூன் 26 ஞாயிறு மாலை 6 மணிக்கு பரிசல் புத்தக நிலையம் மைலாப்பூரில் நடைபெற … Continue reading ஞாயிறு கலை-இலக்கிய நிகழ்வுகள்: கவிஞர் குமரகுருபரன் நினைவஞ்சலி மற்றும் சில…

“மிகையுணர்ச்சியில் திளைக்கும் குமர குருபரனின் மரணம்”: லக்‌ஷ்மி மணிவண்ணனின் சர்ச்சை பதிவு

Kumar

இயல் விருது பெற்ற குமரகுருபரனின் மரணத்தை மிகையுணர்ச்சியில் காட்டுவதாக லக்‌ஷ்மி மணிவண்ணன் எழுதிய முகநூல் பதிவு சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. லக்‌ஷ்மி மணிவண்ணன் எழுதியது: குமர குருபரனை நான் ஒரு கவிஞராகக் கருதவில்லை.அதற்கு அவர் கவிதைகள் இடம் தருபவையும் அல்ல.இதனை அவரிடமும் தெரிவித்திருக்கிறேன். அவரைப் பற்றிய பிற நண்பர்களின் நம்பிக்கையின் அடிப்படையிலேயே அவரது தொகுப்புகளை மிகுந்த எதிர்பார்ப்புடன் படித்தேன்.அவரது குணாதிசயங்கள் எனக்கு கவர்ச்சியை ஏற்படுத்துபவையாக இருந்ததை ஒட்டியே அவர் கவிதைகள் பற்றி எழுத வேண்டும் எனவும் எண்ணியிருந்தேன்.அவர் என்மீது மிகுந்த மதிப்பு … Continue reading “மிகையுணர்ச்சியில் திளைக்கும் குமர குருபரனின் மரணம்”: லக்‌ஷ்மி மணிவண்ணனின் சர்ச்சை பதிவு

இந்த மரணம், நனவாகியிருக்கக்கூடாத கனவு: பொன். வாசுதேவன்

பொன். வாசுதேவன்  எதையெதையோ எழுத நினைக்கிறது மனம். குறிப்பாக எனக்குள் அதிகம் உணர்வுக்குலையலை ஏற்படுத்திய மரணங்கள் குறித்து. மிக அதிகமில்லை வெகு சிலரது மரணம்தான். என்னுடைய பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வந்த தினம். மாலை செய்தித்தாளில்தான் தேர்வு முடிவுகள் வெளியாகும். செய்தித்தாள் மதுராந்தகம் வந்து சேர நான்கு மணி ஆகும் என்பதால் செங்கல்பட்டுக்குச் சென்று 2 மணிக்கே செய்தித்தாள் வாங்கி என்னுடைய தேர்வு எண்ணைப் பார்த்த மகிழ்ச்சியில் வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். எங்கள் வீட்டின் அருகே பெரும்கூட்டம். … Continue reading இந்த மரணம், நனவாகியிருக்கக்கூடாத கனவு: பொன். வாசுதேவன்