டிஜிட்டல் பர்தா – இது கலாச்சாரத்துக்கான காவல், பெண்களுக்கோ இன்னுமொரு அச்சுறுத்தல்

வில்லவன் இராமதாஸ் சேலம் வினுப்பிரியா மற்றும் சுவாதி வழக்குகளுக்குப் பிறகு கலாச்சாரக் காவலர்கள் தங்கள் பெண்கள் மீதான அக்கறையை உயிர்த்தெழ வைத்திருக்கிறார்கள். சமூக வலைதலத்தின் பக்கம் வராதீர்கள், வந்தாலும் படங்களைப் பகிராதீர்கள் எனும் ஆலோசனைகள் போலீஸ் உயரதிகாரிகளிடமிருந்து வருகிறது. இதே ஆலோசனையை ஒரு உள்ளூர் போலீஸ்காரர் முரட்டுத்தனமாக சொன்னதால்தான் வினுப்பிரியா தற்கொலை செய்துகொண்டார். இதில் சொல்பவரின் உள்நோக்கத்தை விட்டுவிட்டு ஆலோசனையை மட்டும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள முடியாது. காரணம் இவர்கள் தேர்ந்தெடுத்த சிக்கல்களில் மட்டுமே தலையிடுகிறார்கள். மேலும் இவர்களது … Continue reading டிஜிட்டல் பர்தா – இது கலாச்சாரத்துக்கான காவல், பெண்களுக்கோ இன்னுமொரு அச்சுறுத்தல்

கேரள கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் சுரண்டலுக்கு எதிராக இவர்கள் வெற்றி பெற்றது எப்படி?

தமிழகத்தின் சரவணா ஸ்டோர்ஸ், போத்தீஸ் போன்ற விற்பனை நிறுவனங்களில் அடிப்படையான எவ்வித உரிமைகளும் கிடைக்கப் பெறாமல் ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் வதைபடுகிறார்கள். சம்பளம், வேலை நேரம் உள்ளிட்ட விஷயங்களில் இதுபோன்ற நிறுவனங்கள் எவ்வித ஒழுங்கையும் பேணுவதில்லை. கொத்தடிமைகளைப் போலவே தங்களுடைய ஊழியர்களை வைத்திருக்கின்றன. தொழிலாளர்கள் ஒன்றுபட்டு போராடாடுவதன் மூலமே இத்தகைய ஒடுக்குமுறைகளை சுரண்டல்களை ஒழிக்க முடியும் என நிரூபித்த கேரள கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவன ஊழியர்கள் போராடி பெற்ற வெற்றியை உதாரணமாகக் கொள்ள வேண்டும். கேரளத்தில் முன்னணி … Continue reading கேரள கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் சுரண்டலுக்கு எதிராக இவர்கள் வெற்றி பெற்றது எப்படி?

ஆலோசனை கூட்டத்தில் பெண் கவுன்சிலருக்கு அடி…!

கர்நாடகாவில் கொப்பல் என்ற இடத்தில் கொப்பல், நகராட்சி தலைவர், துணை தலைவர் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.இதில் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் பா.ஜ.வைச் சேர்ந்தவரை ஆதரிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை மதச்சார்பற்ற கட்சியினர் ஒரு சேர கையை தூக்கினர். இதில் கலந்து கொண்ட சுயேட்சை பெண் கவுன்சிலர் விஜயா என்பவர் கையை தூக்காமல் காங். கட்சியை ஆதரித்தார். இதனால் ஆத்திரமடைந்த மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த கோதிஹால் என்பவர் … Continue reading ஆலோசனை கூட்டத்தில் பெண் கவுன்சிலருக்கு அடி…!

தன்னைவிட வயது குறைவான ஆணை காதலிப்பது குற்றம்: கலாச்சார காவலர்களான ஊடகங்கள் தரும் உடனடி தண்டனை!

இன்றைய தமிழ் நாளிதழ்கள் அனைத்திலும் தவிர்க்கப்படாமல் வந்திருக்கும் செய்தி “மாணவனுடன் ஓடிய ஆசிரியர் கைது”; “ மாணவனுடன் ஓடிய ஆசிரியை சிக்கினார்” என்று இந்தச் செய்தியில் தொடர்புடைய பெண்ணை மிகக் குறிய மனோபாவத்துடன் எதிர்மறையாக எழுதியிருந்தனர். எந்தவொரு ஊடகமும் இதிலிருந்து தப்பவில்லை. விட்டால், இவர்களே தீர்ப்பு எழுதி, அந்தப் பெண்ணை கல்லால் அடித்துக் கொள்ளுங்கள் என தாலிபான் பாணியில் உடனடி நீதியும் தண்டனையும் அளித்திருப்பார்கள். அந்தப் என்ற பெண், எம். எஸ்ஸி படித்தவர். இவருடைய வயது என்ன என்பதை … Continue reading தன்னைவிட வயது குறைவான ஆணை காதலிப்பது குற்றம்: கலாச்சார காவலர்களான ஊடகங்கள் தரும் உடனடி தண்டனை!

#சர்ச்சை இமையத்தின் துபாய்காரன் பொண்டாட்டி: பத்மாவதிகளை தண்டவாளத்தில் சாகடிப்பதுதான் சமூக புரட்சியா?

தமயந்தி உயிர்மையில் இமையத்தின் கதை படித்தேன்...துபாய்காரன் பொண்டாட்டி. பெண்களின் கதையை , வாழ்க்கையை பெண்கள் மூலமாகவே சொல்லி பெண்களை சாவடிக்கும் கதை. இன்னொருவனுடன் இருந்த, அவனாலேயே அவமானப்படுத்தப்பட்ட துபாய்காரன் பொண்டாட்டி என்ன செய்ய வேண்டும்? அவனோடு படுத்தாயே என்று முலையை அடிக்க வேண்டும். தண்டவாளத்தில் தலை வைத்து சாக வேண்டும். துபாய்காரன் வீட்டுக்கு வருகிறான். எதுக்கு வருகிறான்.. விஷயம் தெரிந்தா என்று பயப்படும் பத்மாவதி இப்படி நினைக்கிறாள்..." எடுத்ததுமே அடிப்பானா......எது செய்தாலும் தடுக்க முடியாது. ஊர் மெச்ச தாலி … Continue reading #சர்ச்சை இமையத்தின் துபாய்காரன் பொண்டாட்டி: பத்மாவதிகளை தண்டவாளத்தில் சாகடிப்பதுதான் சமூக புரட்சியா?

“பெண் குழந்தைகள் முன் மனைவியை வல்லுறவு செய்த கணவனை காப்பாற்றவா சட்டம்?”: மேனகா காந்திக்கு சமூக செயற்பாட்டாளர் கேள்வி

கீதா நாராயணன் என் முதல் பணியை வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான ஆலோசகராகத்தான் தொடங்கினேன்.அதில் நான் கண்ட அனுபவங்கள் ஒரு முழு வாழ்க்கைக்குப்போதும். காவல்துறை, நீதிமன்றம்,அரசு மருத்துவமனை தீக்காயத்துறை, பிணவறை என்று சகல சிக்கல்களும் நிறைந்த துறை அது. அதில் ஒரே ஒரு சம்பவத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். ஒரு உயர்த்திக் கொண்ட சமூகத்தைச்சேர்ந்த பெண். இரு குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறித் தற்கொலைக்கு முயன்றதாக காவல்துறையின் மூலம் தற்காலிகத் தங்கும் விடுதிக்கு அழைத்து வரப்பட்டார்கள்.காரணம் கணவர் தொடர்ந்து குடித்து … Continue reading “பெண் குழந்தைகள் முன் மனைவியை வல்லுறவு செய்த கணவனை காப்பாற்றவா சட்டம்?”: மேனகா காந்திக்கு சமூக செயற்பாட்டாளர் கேள்வி

#பெண்கள்தினம்: “அறுவருப்பானவள் அல்ல நான்”: ஃபேஷன் உலகில் தனி இடம் பதித்த ஹர்ணம் கவுர்!

பெண்கள் தினம், அழகு சாதனப் பொருட்களின் விற்பனையை அதிகரிக்கும் தினமாகிவிட்டது.  சிவப்பும் பளபளப்புமே அழகானவை, பெண்மைக்கு உரியவை என கூவிக்கூவி தங்களுடைய தயாரிப்புகளை விற்கின்றன தயாரிப்பு நிறுவனங்கள். இதே அழகு சார்ந்த துறையில் தனித்து நின்று, அழகு என்றால் என்ன? என்று நம்மை மறுபரிசீலனை செய்துகொள்ளச் சொல்கிறார் தாடி வைத்த ஹர்ணம் கவுர். அவருடைய தாடியும் பென்சில் மீசையும் மேற்குலகை ரசிக்க வைத்திருக்கின்றன. ஹர்ணம் கவுர், இந்திய வம்சாவழியைச் சேர்ந்த இங்கிலாந்து பிரஜை. polycystic ovarian syndrome என்ற … Continue reading #பெண்கள்தினம்: “அறுவருப்பானவள் அல்ல நான்”: ஃபேஷன் உலகில் தனி இடம் பதித்த ஹர்ணம் கவுர்!

இந்தியாவின் முதல் திருநங்கை சப்-இன்ஸ்பெக்டர்;பணி நியமன ஆணை பெற்றார் ப்ரித்திகா யாஷினி!

தமிழக காவல் துறையில் உதவி காவல் ஆய்வாளராக தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை திங்கள்கிழமை அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டது. இதில், சேலம் கந்தம்பட்டியைச் சேர்ந்த திருநங்கை ப்ரித்திகா யாஷினி, உதவி காவல் ஆய்வாளருக்கான பணி நியமன ஆணையைப் பெற்றார். இதன்மூலம் நாட்டிலேயே முதல் திருநங்கை உதவி காவல் ஆய்வாளர் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார். ப்ரித்திகா அவ்வளவு எளிதில் எஸ்.ஐ. போட்டியில் கலந்து கொள்ளவில்லை. அதில் பங்கு கொள்ளவே பெரிய போட்டியைச் சந்தித்து இருக்கிறார். அதை … Continue reading இந்தியாவின் முதல் திருநங்கை சப்-இன்ஸ்பெக்டர்;பணி நியமன ஆணை பெற்றார் ப்ரித்திகா யாஷினி!

“நீ காதல்காரனோ காதல் காரியோ உனக்குதான் பால் பேதம் கிடையாதே!”

மாலினி ஜீவரத்னம் feeling love my self. சரியான காதல்காரி நீ... காதலிப்பதும் காதலிக்கப் படுவதுமாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறாய் ... யாராவது கொஞ்சி பேசினால் காதல் வந்துவிடுகிறது உனக்கு ... நாய் குட்டியா நீ கொஞ்சி தலைகோதிவிடும் யாரோ தெரியாத ஒருவர் பின்னால் வாலாட்டி வாஞ்சையுடன் செல்கிறாய் ... அவர்கள் சொல்கிறார்கள் நாய் இல்லையாம் பூனைக்குட்டியாம் நீ Ha ha ha... எதோ ஒன்று அன்புக்காக எங்கும் ஜீவனுக்கு பேதம் ஏது.. சரி போகட்டும் ... உன் … Continue reading “நீ காதல்காரனோ காதல் காரியோ உனக்குதான் பால் பேதம் கிடையாதே!”

பாண்டியனும், கோகிலாவும், மற்றும் பலரும்:இந்தியாவுக்கு ஓரினச்சேர்க்கை சட்டம் ஏன் தேவை?

இந்தியன் பீனல் கோட் 377-ம் பிரிவு என்றால் என்ன ? இயற்கைக்கு விரோதமான உடலுறவு பற்றி இந்த பிரிவு பேசுகிறது. இயற்கை நிமித்தத்திற்கு எதிராக மனிதர்களுடனோ, விலங்குகளுடனோ உடலுறவு கொண்டால், அது தண்டனைக்குரிய குற்றம் என்று கூறுகிறது. இதில் ஓரினசேர்க்கையும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் ஆங்கிலேயர்கள் இயற்றிய குற்றவியல் சட்டத்தின் பிரிவில் உள்ளது. இரு நூற்றாண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர்களின் கண்ணோட்டத்தில் எது பொது நெறி என்று நினைத்தார்களோ அதன் அடிப்படையில் இயற்றப்பட்டது. இன்று அவர்களுடைய நாட்டிலேயே இந்த … Continue reading பாண்டியனும், கோகிலாவும், மற்றும் பலரும்:இந்தியாவுக்கு ஓரினச்சேர்க்கை சட்டம் ஏன் தேவை?