50 ஆண்டுகளாக வழங்கப்படாத நிலம்: கல்ராயன் மலை பழங்குடியினர் துயரை கண்டுகொள்ளாத அரசு

செம்மரக்கட்டை வெட்ட ஆந்திர வனங்களுக்குச் சென்று போலி மோதல்களில் சுட்டுக் கொல்லப்பட்ட போதும், சிறைகளில் சிக்கிச் சீரழியும் செய்திகள் வரும்போது மட்டுமே, பரபரப்புடன் பேசப்படும் கல்ராயன் மலைப் பழங்குடியினர் பல்லாயிரக்கணக்கானோர் நாடு சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளான பின்னரும் தங்களுடைய நிலங்களுக்கு பட்டா உரிமையை பெறமுடியவில்லை.

பழங்குடியினரின் வேலை வாய்ப்பைப் பறிக்கும் போலி பழங்குடிகள்!

994 ல் தான் போலிச் சான்றிதழ்களை களையெடுக்க SC க்கு மாவட்ட விழிப்புணர்வு குழுவும், ST பழங்குடிக்கு மாநில கூர்நோக்கு குழுவும் உருவாக்கப்பட்டன. கேரளாவில் "SC & ST சாதி சான்றிதழ் நெறிப்படுத்தும் சட்டம் 1996" உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ் நாட்டில் இன்றுவரை அத்தகைய பாதுகாப்பு வழங்கப்படவில்லை.

“நான் இந்து அல்ல” ஒரு பழங்குடியின் முகத்தில் அறையும் பதில்!

’ஒடியன்’ லட்சுமணன் பழங்குடிகளின் பல்வேறு்கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுதும் தனது போர்முழக்கத்தை தொடங்குகிறது தமிழ்நாடு் பழங்குடி மக்கள் சங்கம். கடம்பூர் ராமசாமி அந்தப்போராட்ட நோட்டீசின் நகலை அனுப்பியிருந்தார். அதிலொரு கோரிக்கை 'பழங்குடிகளுக்கு இனச்சன்று வழங்கும்போது மத அடையாளங்களை குறிப்பிடுவதை நிறுத்து' 2006வனச்சட்டத்தை அமுல் படுத்துதல், NTCA வை திரும்பப்பெறல் உள்ளிட்ட முக்கியமான கோரிக்கைகளோடு பண்பாட்டுக்கோரிக்கைகளையும் முன்னெடுப்பது உற்சாகமளிக்கிறது. இது எனக்கு 1998 ஆம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தை நினைவுக்கு கொண்டுவருகிறது காரமடை வனச்சரகத்தில், அடர்ந்த வனம் … Continue reading “நான் இந்து அல்ல” ஒரு பழங்குடியின் முகத்தில் அறையும் பதில்!

மல்கன்புரியில் 300க்கும் மேற்பட்ட குழந்தைகள் மரணம்: பழங்குடி இளைய தலைமுறையை அழிக்க முயற்சிக்கிறதா ஒடிசா அரசு?

மல்கன்கிரி- ஓடிசாவில் பழங்குடியினர் மிக அதிகமாக வாழும் பகுதிகளில் ஒன்று.கடந்த 2 மாதங்களில் மட்டும் 300க்கும் மேற்பட்ட பழங்குடியின குழந்தைகள் அரசின் அலட்சிய போக்கினாலும் போதிய மருத்துவ வசதியின்மையாலும் இறந்துள்ளனர். என்ன நடக்கிறது - குழந்தைகளின் இறப்புக்கு கூறப்படும் காரணங்களில் ஒன்றான Japanese Encephalitis என்னும் நோய் கொசுவினால் பரவக்கூடியது. தடுப்பூசியின் மூலம் தடுக்கப்படக் கூடிய இந்த நோயினால் ஏற்கனவே 2012 மற்றும் 2014 ஆண்டிலும் இதுபோல குழந்தைகள் இறந்தனர். இது போக பல்வேறு நோயிகளினாலும் கடந்த … Continue reading மல்கன்புரியில் 300க்கும் மேற்பட்ட குழந்தைகள் மரணம்: பழங்குடி இளைய தலைமுறையை அழிக்க முயற்சிக்கிறதா ஒடிசா அரசு?

பழங்குடிகளின் மீது திணிக்கப்படும் ஒவ்வாத கல்விக் கொள்கையும் சில பரிந்துரைகளும்

ஒடியன் லட்சுமணன் 537 வகையான பழங்குடிகள் இங்கே வாழ்கிறார்கள். அவர்களின் மொத்த மக்கள் தொகை 67 மில்லியன் பேருக்கு மேல் என்கிறது அரசு ஆவணம். ஆனால் இதுவரை உருவாக்கப்பட்ட கல்விக்கொள்கைகள், பெரும்பான்மை சமவெளிமக்களை கருத்தில்கொண்டேதான் உருவாக்கப்பட்டிருக்கிறது. பழங்குடிகளின் உண்மையான வாழ் நிலையையோ அவர்களின் பிரச்சினைப்பாடுகளையோ கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்பதற்கு இக்கொள்கைகளில் உள்ள பல சரத்துக்கள் சாட்சியாக நின்றுகொண்டிருக்கிறது . பல்வேறு முயற்சிகள் எடுத்தபின்னும் பழங்குடிகள் கல்விக்கு வெளியே நின்றிருப்பதற்கு இதுவே முக்கியமான காரணமாகப்படுகிறது. பிரிட்டிஷ் அரசின் ஆளுகையின்கீழ் இந்தியா … Continue reading பழங்குடிகளின் மீது திணிக்கப்படும் ஒவ்வாத கல்விக் கொள்கையும் சில பரிந்துரைகளும்

பழங்குடி தலைவர் K.A.குணசேகரன் அஞ்சலி

சந்திர மோகன் தமிழ்நாடு செட்யூல்டு டிரைப் (மலையாளீ) பேரவையின் நிறுவனத் தலைவரும், தென்னிந்திய பழங்குடியினர் யூனியன் தலைவருமான மதிப்பிற்குரிய K.A.குணசேகரன் அவர்கள், 71 வயதில் நோயின் காரணமாக இறந்தார். மாலை 4 மணியளவில், பள்ளிப்பாளையம் மின்மயானத்தில் அவரது உடல் எரியூட்டப்பட்டது. கொல்லிமலையைப் பூர்வீகமாகக் கொண்ட மலையாளீ பழங்குடியைச் சார்ந்தவர். தொலைத் தொடர்புத் துறையில் அரசுப் பணியில் ஊழியராக வாழ்க்கையைத் துவங்கிய அவர், 45 ஆண்டுகளுக்கும் மேலாக பழங்குடி மக்களுக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்து கொண்டார். நான் பயின்ற … Continue reading பழங்குடி தலைவர் K.A.குணசேகரன் அஞ்சலி

வயலுக்குச் சென்ற பெண்ணை வன்புணர்வு செய்து, மாவோயிஸ்ட் என சீருடை அணிவித்து என்கவுண்டர்

சத்தீஸ்கரின் கோம்பாட் என்ற கிராமத்தில் மத்கம் ஹித்மெ என்ற பழங்குடி பெண்ணை வன்புணர்வு செய்து, அவரை மாவோயிஸ்ட் என்று கூறி என்கவுண்டர் செய்துள்ளது போலீஸ். இந்தத் தகவலை பத்திரிகையாளர் ராகுல் பண்டிடா தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். மத்கம் வயலுக்குச் சென்றிருந்தபோது அவரை, போலீஸ் அழைத்துச் சென்றதாகவும் பிறகு அவர் என்கவுண்டர் செய்யப்பட்டது தெரியவந்ததாகவும் தெரிவித்துள்ள கிராம மக்கள் அவருடைய உடலை அடக்கம் செய்ய மறுத்து போராடி வருகின்றனர். தங்களுடைய குரல்களை பத்திரிகையாளர்களும் செயற்பாட்டாளர்களும் கேட்க வேண்டும் … Continue reading வயலுக்குச் சென்ற பெண்ணை வன்புணர்வு செய்து, மாவோயிஸ்ட் என சீருடை அணிவித்து என்கவுண்டர்

எஸ்.சி / எஸ்.டி. துணைத்திட்டத்திற்கு தனிச்சட்டம் வேண்டும்: எழுத்தாளர் அன்புசெல்வம் கிரண்பேடியிடம் கோரிக்கை

  ஜூன் 1 புதுச்சேரியில் புதிதாகப் பொறுப்பேற்றிருக்கின்ற துணைநிலை ஆளுநர் கிரன்பேடியை தலித் செயல்பாட்டுக்கான சிந்தனையாளர் வட்டம் சார்பில் எழுத்தாளர் அன்புசெல்வம் சந்தித்தார்.  எஸ்.சி / எஸ்.டி. துணைத்திட்டத்திற்கு புதுவை அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி  ஆளுநர் மாளிகையில் இந்த சந்திப்பு நடந்தது. அரசு வகுக்கின்ற பொதுத்திட்டங்களில் தலித் மற்றும் பழங்குடி மக்களின் வளர்ச்சிப் பயன்பாடுகள் விடுபட்டுப் போவதால் அதில் கூடுதல் கவனத்தை செலுத்த எஸ்.சி / எஸ்.டி. துணைத்திட்டத்தை மத்திய அரசு உருவாக்கி … Continue reading எஸ்.சி / எஸ்.டி. துணைத்திட்டத்திற்கு தனிச்சட்டம் வேண்டும்: எழுத்தாளர் அன்புசெல்வம் கிரண்பேடியிடம் கோரிக்கை

கல்வி பெற்ற முன்னாள் குழந்தை தொழிலாளியால் என்ன செய்ய முடியும்?

ஒடியன் ஜடையாம்பாளையம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சின்னஞ்சிறு கிராமம் கனகராஜ். 8 வயதுகூட நிரம்பாத சிறுவன் தந்தை மாற்றுத்திறனாளி தாய் விவசாயிக்கூலி தாயின் வருமானம் குடும்பத்துக்கு போதுமானதாக இருக்கவில்லை மூன்றாம் வகுப்பில் இருந்தே பள்ளியில் பாதி நேரம்தான் இருப்பான் மதியஉணவுக்குப்பிறகு ஏதாவது ஒரு வேலைக்கு சென்றுவிடுவான் . தந்தையின் உடல் நிலை மோசமானதை ஒட்டி தனது 11 ஆம் வயதில் படிப்பை முற்றாகக் கைவிட்டுவிட்டு வேலைக்கு செல்ல ஆரம்பிக்கிறான் கம்பனி அவனுக்கு பிடித்துவிடுகிறது காசும் … Continue reading கல்வி பெற்ற முன்னாள் குழந்தை தொழிலாளியால் என்ன செய்ய முடியும்?

ஏழ்மை அல்ல; சாதி சான்றிதழ்தான் இந்த மாணவர்களின் கல்விக்கு தடை போடுகிறது!

விழுப்புரம் மாவட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட பழங்குடி இருளர் மாணவர்கள் 2016 மார்ச் +2 பொதுத்தர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். அவர்களில் ஐந்து பேருக்கு சாதிச்சான்று இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் இவர்கள் மேற்படிப்பில் சேரமுடியாத நிலையில் உள்ளனர். ஏ.கண்ணப்பன். திருக்கோவிலூர் வட்டம் வடகரைதாழனூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை-சாரதா தம்பதியரின் மகன் கண்ணப்பன், அரகண்டநல்லூர் அ.மே.நி.பள்ளியில் 10-ம் வகுப்பில் 430/500 மதிப்பெண்களும், +2 பொதுத்தர்வில் 921/1200 மதிப்பெண்களும் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இவரது அண்ணன் தாமோதரனுக்கு 2006ல் சாதிசான்று வழங்கப்பட்டுள்ளது. ஆனால் … Continue reading ஏழ்மை அல்ல; சாதி சான்றிதழ்தான் இந்த மாணவர்களின் கல்விக்கு தடை போடுகிறது!

மலையாளி பழங்குடியினரை `மலையாளி கவுண்டர்’ ஆக்கிய அரசு!

ஈரோடு மாவட்ட மலையாளி என்ற பழங்குடியின மக்களை ‘மலையாளி கவுண்டர்’’ என்ற புதுப் பெயரில் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து மத்திய-மாநில அரசுகள் மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பெ.சண்முகம் தமிழக முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதம் வருமாறு: தமிழ்நாட்டில், பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரன், மலையாளி கவுண்டர் ஆகிய பிரிவினரை சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாக செய்திகள் வெளிவந்தன. தமிழக … Continue reading மலையாளி பழங்குடியினரை `மலையாளி கவுண்டர்’ ஆக்கிய அரசு!