கீழடி: மடைச்சி வாழ்ந்த தொல் நிலத்தில் எம் காலடித் தடங்கள்

ஏர் மகாராசன் மதுரை என்னும் சொல் கூட வரலாற்றுத் தொன்மங்களைப் புலப்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், மதுரையின் நிலப்பரப்பெங்கும் தொல்லியல் தடயங்களைப் புதைத்து வைத்திருக்கும் பெருங்களமாய் விரிந்து கிடக்கிறது. பண்பாட்டுப் பழமையும், செழுமையான வாழ்வியல் வரலாறும், மொழி உயிர்ப்பும் இன்னும் வலுவுடன் திகழும் தொல் நிலமாய் மதுரை மண் பரந்து கிடக்கிறது. மதுரையைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் நடைபெற்ற அகழாய்வுகள் புதிய வரலாற்றுத் தடயங்களை வெளிக் கொணர்ந்துள்ளன. அவ்வகையில், கடந்த ஓராண்டுக்கும் மேலாகக் கீழடி எனும் சிற்றூரில் நடைபெற்று … Continue reading கீழடி: மடைச்சி வாழ்ந்த தொல் நிலத்தில் எம் காலடித் தடங்கள்

குக்கூ காட்டு பள்ளி: நுகர்வின் விடுதலைக்கான ஓர் நிலம்!

தமிழ்ச் செல்வன் ஜவ்வாது மலையின் அடிவாரத்தில் ஒரு காட்டின் சூழலையும், ஒரு கிராமத்தின் தன்மையையும் தன்னகத்தே கொண்ட ஒரு சமவெளி நிலத்தில் அமைந்துள்ளது குக்கூ காட்டு பள்ளி. இயற்கை வாழ்வியலுடன் கூடிய ஒரு குழந்தையின் சுதந்திரத்திற்கான ஒரு அடித்தளத்தை உருவாக்கும் முயற்சியில் குக்கூ அமைப்பை சேர்ந்த அன்பர்கள் இந்த பள்ளியை உருவாக்கி வருகின்றனர். நிறைய அன்புள்ளம் கொண்ட தன்னார்வலர்களின் முயற்சியினால் பள்ளிக்கான வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கடந்த வாரம் TWA (The weekend Agriculturist) குழுவில் … Continue reading குக்கூ காட்டு பள்ளி: நுகர்வின் விடுதலைக்கான ஓர் நிலம்!

சாதி உணர்வைத் தூண்டும் விளம்பரங்கள்!

அழகிய பெரியவன் பயணத்திட்டமின்றி, ஒரு தோள்பையை மாட்டிக்கொண்டு, வெளியூர் நிகழ்ச்சிகளுக்குப் புறப்பட்டுவிடுவது ஆர்வமூட்டும் அனுபவங்களைத் தரக்கூடிய ஒன்று. சென்ற வாரம் லாட்லி விருது தேர்வு கூட்டத்துக்கு அப்படி புறப்பட்டு சென்னை வந்தபோது அ.மார்க்சை ஒரு உணவகத்தில் சந்தித்தேன். எனக்கு அவரை சந்தித்து பல காலங்கள் ஆகியிருந்தது. அடையாறு பேருந்துப் பணிமனை நிறுத்தத்தில் இறங்கி இடதுபுறம் இருந்த உணவகத்தில் நுழைந்ததும் நண்பர் விஜயனோடு காபிகுடித்துவிட்டு அமர்ந்திருந்த அவரை என்னால் பார்க்க முடிந்தது. ஆர்வத்தோடு இருவரும் நலம் விசாரித்துக் கொண்டோம். … Continue reading சாதி உணர்வைத் தூண்டும் விளம்பரங்கள்!

முப்போகம் விளையும் இடத்தில் சாட்டிலைட் சிட்டி: அரசியல்வாதிகளின் அபத்த முடிவுகள் எப்படி சென்னையை வெள்ளக்காடாக்கியது?

இளமதி சாய்ராம் "எந்த ஒரு நல்லரசும் நீர்வள ஆதாரத்தின் மேல் நகரம் கட்டமாட்டாங்க. எந்த நாட்டுலயாவது லேக் வ்யூ அபார்ட்மெண்ட்னு கேள்விப்பட்டுருக்கீங்களா? நீங்க ஆதாரம் கூட தேடவேணாம். இப்படியே எழுதுங்க. அப்படி கட்டுனா அது சுற்றுலாவிற்கான ஏரின்னு வகைபடுத்திருப்பாங்க. குடிநீர் ஆதாரத்துல கட்டமாட்டாங்க. சரி இந்த திருமழிசைய சுத்தி இருக்கற தொழிற்சாலைக் கழிவுகள்லாம் இந்த மழை வெள்ளத்தில் எங்க போய் சேர்ந்திருக்கும்? மெர்குரி, ஆயில், ஹெவி மெட்டல்ஸ்னு(கன உலோகங்கள்) அத்தனையும் நச்சுப்பொருட்கள். எல்லாம் இன்னைக்கு செம்பரம்பாக்கம் ஏரிலதான் … Continue reading முப்போகம் விளையும் இடத்தில் சாட்டிலைட் சிட்டி: அரசியல்வாதிகளின் அபத்த முடிவுகள் எப்படி சென்னையை வெள்ளக்காடாக்கியது?

காடுகள், விலங்குகள் மனிதர்கள்!

சரவணன் சந்திரன் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் நடைபெறும் வனவிலங்குகளின் வேட்டையை வெளிச்சத்திற்கு கொண்டுவருவதற்காக நானும் நேஷனல் ஜியாகரபி புகைப்படப் போட்டியில் உலகளவில் முதன்மை விருது பெற்ற புகைப்படக் கலைஞர் மதுரை செந்தில்குமரனும் ராஜபாளையம் துவங்கி மஹாராஷ்டிரா வரை நீண்டு புரண்டு கிடக்கிற மேற்குத் தொடர்ச்சி மலையில் தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாடுகள் சுவடு பதிக்காத இடங்களில்கூட சுற்றியலைந்தோம். ஆப்பிரிக்காவில் யானை வேட்டையைப் பற்றி எடுத்த புகைப்படங்களைப் போல எப்படியாவது ஒரு படமாவது எடுத்துவிட வேண்டும் என கங்கணம் … Continue reading காடுகள், விலங்குகள் மனிதர்கள்!