நெடுவாசல் எழுச்சி!

அருண் நெடுஞ்செழியன் ஹைட்ரோகார்பன் எடுப்புத் திட்டத்திற்கு எதிராக நெடுவாசல் தொடங்கி தமிழகம் முழுதும் பற்றிப் படறி வரும் எதிர்ப்புகள் எண்ணெய் இயற்கை வள கொள்ளையில் ஏகபோக ஆட்சி செலுத்திவருகிற பெரு முதலாளிகளுக்கும்,அவர்களுக்கு எடுபிடியாக சேவை செய்கிற மத்திய மாநில அரசுகளின் முகத்திரைகளை கிழித்துவருகிறது.இவர்களின் வர்க்க நலன் அரசியலை அம்பலப்படுத்திவருகிறது. நெடுவாசலில் நிலைகொண்டுள்ள இப்புயல் தமிழகத்தை தாண்டி தில்லியின் ஆளும்வர்க்கத்தை உலுக்கத் தொடங்கியுள்ளது. நிலக்கரி,கனிம வளம்,எண்ணெய் எரிவாவு என நாட்டின் தேச வளத்தை ஆளும் கட்சியாக இருக்கிற அரசியல் கட்சிகளும்,அரசு … Continue reading நெடுவாசல் எழுச்சி!

போராட்டங்களுக்காக திரளும் இளைஞர்கள்; புதிய அரசியலுக்கு வழிகாட்டுவார்களா?

சி. மதிவாணன் தமிழ்நாடு வரிசையாக சில எழுச்சிகளைக் கண்டு வருகிறது. பொதுவாக, திரளும் இளைஞர்கள், அவர்களைப் பின் தொடரும் பொது மக்கள் என்ற போக்குக் காணப்படுகிறது. நிகழ்ந்துகொண்டிருக்கும் நெடுவாசல் அதனை மற்றொரு முறை காட்டுகிறது. இது புதிய நிகழ்வு என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும். அதுமட்டும் போதாது... கற்றுக்கொள்ள வேண்டும். இப்படிச் சொல்வதற்கான காரணங்கள்... பன்னாட்டுக் கம்பெனிகளின் படையெடுப்பு, அவற்றின் கொள்ளை, இயற்கை வளத்தைச் சூறையாடல், அதனால் ஏற்படும் வாழ்வாதார இழப்பு கடந்த சில பத்தாண்டுகளில் வேகம் … Continue reading போராட்டங்களுக்காக திரளும் இளைஞர்கள்; புதிய அரசியலுக்கு வழிகாட்டுவார்களா?

ஒரு சிலை திறக்க வந்தார், இந்தியப் பிரதமர்! என்ன தவம் செய்தோம், ஈசா… சர்வேசா …?

சந்திர மோகன் " வன நிலங்கள் &நொய்யல் ஆறு அபகரிப்பு, இயற்கை/காடு அழிப்பு & யானைகள் அழிப்பு, சமூக செயற்பாட்டாளர்கள் முதல் ஆசிரம நிர்வாகிகள் வரையிலானக் கொலைகள், வனப்பகுதியில் சட்டவிரோத மாபெரும் காண்கிரீட் கட்டுமானங்களின் ஆக்கிரமிப்புகள்- ஆகியவற்றிற்குக் காரணமானவர் ஈசா யோகா மையத்தின் ஜக்கி வாசுதேவ் என்பதால், மஹாசிவராத்திரியான பிப்.24 , ஆதியோகி சிவன் சிலை திறப்பு விழாவிற்கு, நாட்டின் பிரதமர் வருகை தந்து ஒரு கிரிமினல் பேர்வழிக்கு அங்கீகாரம் வழங்கிவிடக் கூடாது "- என பழங்குடியினர் … Continue reading ஒரு சிலை திறக்க வந்தார், இந்தியப் பிரதமர்! என்ன தவம் செய்தோம், ஈசா… சர்வேசா …?

“நான் நயினார் நாகேந்திரன் பேசறேன் பட் ராங் நம்பர்”: அதிமுகவினர் அன்று இன்றும்!

சரவணன் சந்திரன் இரண்டு நாட்களாக கொஞ்சம் ஒதுங்கியிருந்து நிறைய எழுதினேன். ஒரு ஏழாயிரம் வார்த்தைகள் இருக்கும். தலைமுடி பற்றிய கட்டுரையொன்று எழுதினேன். ஈகா சலூனில் காத்திருக்கும் வணிகக் கழுகுகள் என்பது தலைப்பு. மாற்று விவசாயத்தில் கனி வளர்ப்பு பற்றி ஒருகட்டுரை. இரவு ராணியிடம் தஞ்சமடைந்த கதை என்பது தலைப்பு. இரண்டு பத்திரிகைகளுக்குக் கொடுத்திருக்கிறேன். விரைவில் வரலாம். இந்த அக்கப் போரில் ஒரு ஆங்கிளைச் சொல்லாமல் விட்டு விட்டேன். முன்பெல்லாம் ரிப்போர்ட்டர்ஸ் மத்தியில் ஏடியெம்கே பீட் என்றால் சிதறி … Continue reading “நான் நயினார் நாகேந்திரன் பேசறேன் பட் ராங் நம்பர்”: அதிமுகவினர் அன்று இன்றும்!

தமிழகத்தின் புதிய முதல்வரின் ரெக்கார்ட்! வேண்டாம் கிரிமினல்களின் ஆட்சி!

சந்திரமோகன் உச்சநீதிமன்றத்தால் கிரிமினல் குற்றவாளியாக தண்டிக்கப்பட்ட அ.இ.அ.தி.மு.க தற்காலிக பொது செயலாளர் V.K.சசிகலா பரப்பனஹள்ளி சிறைக்கு அனுப்பப்பட்டதால், தற்சமயம் தமிழகத்துக்கு 'எடப்பாடி' தான் முதல்வர் என்ற நிலைமை வந்துள்ளது. 15 நாட்களில் என்ன நடக்கும் என்ற போதிலும், முதல்வராகப் பொறுப்பேற்றுவிட்ட எடப்பாடி பழனிச்சாமியின் அரசியல் , பொருளாதார ஊழல் பின்னணி பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம். கமிசனுக்கு வெல்லம் விற்பதில் தனது வாழ்க்கையைத் துவங்கி, அரசியலில் நுழைந்தவர், எடப்பாடியார். MGR மறைவுக்குப் பின்னர், அ.தி.மு.க ஜானகி - … Continue reading தமிழகத்தின் புதிய முதல்வரின் ரெக்கார்ட்! வேண்டாம் கிரிமினல்களின் ஆட்சி!

குதிரை பேர ஜனநாயகமும் மக்கள் குடியரசு ஜனநாயகமும்

அருண் நெடுஞ்செழியன் “உலக வரலாற்றில் இடம் பெற்றுள்ள மாபெரும் சம்பவங்கள் அனைத்தும் இரண்டு தடவை தோன்றுகின்றன.மாபெரும் தலைவர்களும் இரண்டு சந்தர்ப்பங்களில் தோன்றுகிறார்கள் என்று ஹெகெல் எழுதியுள்ளார்.அவர்களுடைய தோற்றம் முதல் சந்தர்ப்பதில் சோகக் கதையாகவும் இரண்டாவது சந்தர்ப்பத்தில் கேலிக் கூத்தாகவும் இருக்கிறது என்பதை எழுதுவதற்கு அவர் மறந்துவிட்டார்...” லூயீ போனபார்ட்டின் பதினெட்டாம் புரூமேர் நூலில் கார்ல் மார்க்ஸ்,1869. 1940-80 காலகட்டத்தைய இந்திய அரசியல் அரங்கில் தேசியப் பிராந்தியத் தலைவர்கள் வெகுஜன மக்களின் செல்வாக்கு பெற்ற கதாநாயகர்களாக கொண்டாடப்பட்டனர்.காலனியாதிக்க ஆட்சியை … Continue reading குதிரை பேர ஜனநாயகமும் மக்கள் குடியரசு ஜனநாயகமும்

”திமுக நம்மை ஒன்றும் செய்யாது என சசிகலா நம்புகிறார்!”

கதிர்வேல் ”வேலைக்காரி என்பதால் எதிர்ப்பதா? அப்படியானால் வேலைக்காரிகள் எல்லாம் கேவலமா? இதற்காகவே அவர் சீயெம் ஆக வேண்டும்” என்று ஒரு கோஷ்டி கிளம்பியிருக்கிறது. அந்த கோஷ்டியில் உள்ளவர்கள் ஆகட்டும், நீங்களாகட்டும், நானாகட்டும் எல்லோருமே வேலைக்காரன் அல்லது காரிகள்தான். உழைத்து சம்பளம் வாங்கும் எல்லோரும் வேலைக்காரர்கள் அல்லாமல் வேறென்னவாம்? எனவே, எதிர்ப்பு என்பது அவர் வேலைக்காரி என்ற அடிப்படையில் எழுந்தது அல்ல. சொல்லப் போனால் அவர் வேலைக்காரியாக இருந்ததே இல்லை. “அம்மாவுக்கு பணிவிடை செய்வதன்றி வேறேதும் அறியேன்” என்று … Continue reading ”திமுக நம்மை ஒன்றும் செய்யாது என சசிகலா நம்புகிறார்!”

வாளியுடன் மக்கள்: குற்ற உணர்ச்சியிலிருந்து மீள முயலும் மொன்னைத்தனம்!

ஜி. கார்ல் மார்க்ஸ் இப்போது சென்னையில் நடந்திருப்பதைப் போன்ற கப்பல் விபத்தும் அதன் விளைவாக கடலில் எண்ணெய் கசிவதும் எல்லா இடங்களிலும் நடக்கக் கூடியது தானா? ஆமாம். இத்தகைய விபத்துக்கள் நடக்கக்கூடியவைதான். கசிந்திருக்கும் எண்ணெயில் உயிருக்கு ஆபத்தான H2S போன்ற வாயுக்கள் கலந்திருக்க வாய்ப்பு உண்டு என்றும், அதனால் எந்த எண்ணையை அப்புறப்படுத்த முயல்வது உயிருக்கு ஆபத்தானது என்றும் சொல்லப்படுகிறதே உண்மையா? கசிந்திருப்பது அத்தகைய எண்ணெய் இல்லை என்பதுதான் இப்போது வெளிவந்திருக்கும் தகவல். அத்தைகைய வாய்ப்பு இருக்குமென்றால், … Continue reading வாளியுடன் மக்கள்: குற்ற உணர்ச்சியிலிருந்து மீள முயலும் மொன்னைத்தனம்!

ரூபெல்லா தடுப்பூசியால் ஆட்டிச ஆபத்து; உலக நாடுகளால் தடை செய்யப்பட்டதை தமிழக அரசு ஏன் அனுமதிக்கிறது?

நக்கீரன் எதிர்வரும் பிப்ரவரி மாதம் முதல் மாநிலம் முழுவதுமுள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு MR (தட்டம்மை –ரூபெல்லா) தடுப்பூசி போட போவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. தடுப்பூசிகளுக்குப் பின்னேயுள்ள ஆபத்துகள் குறித்து ‘குழந்தைகள் மீது மருத்துவம் நிகழ்த்தும் வன்முறைகள்’ என்ற தலைப்பில் ஏற்கனவே ஒரு கட்டுரை எழுதியிருப்பதால், கடந்த நான்கு நாட்களாகவே வாசகர்களும் ஊடகத் தோழர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர். எனவே இத்துறையில் முன்னோடிகளான மருத்துவர் வீ. புகழேந்தி, அ.உமர் ஃபாரூக் இருவரிடமும் கலந்து பேசிவிட்டு இப்பதிவை எழுதுகிறேன். … Continue reading ரூபெல்லா தடுப்பூசியால் ஆட்டிச ஆபத்து; உலக நாடுகளால் தடை செய்யப்பட்டதை தமிழக அரசு ஏன் அனுமதிக்கிறது?

குடிசைக்கு தீ வைத்த கைகளால்தானே தன் குழந்தையையும் அந்த பெண் காவலர் கொஞ்சுவார்!

எம். புண்ணியமூர்த்தி மிக சாவகசமாக ஆட்டோவுக்கு தீ வைக்கிறார் ஒரு காவலர், தன் அம்மா வயதொத்த ஒரு பெண்ணின் முதுகில் தன் முழுபலம் கொண்டு லத்தியை செலுத்துகிறார் இன்னொரு போலீஸ். கற்பிணி பெண் என்று தெரிந்தும் பூட்ஸ் காலால் அவரை எட்டி உதைக்கிறார் இன்னொரு காக்கி. போராட்டக்காரர்களை தாக்குவதற்காக போலீஸ் குவித்து வைத்திருந்த கற்களை படம் எடுத்ததற்காக ஊடகவியலாளர் ஒருவரை ஓடிவந்து அறைகிறார் இன்னொரு காவல் அதிகாரி. ஒவ்வொரு வீடியோவைப் பார்க்கும் போதும் நெஞ்சு அதிர்கிறது; பயம் … Continue reading குடிசைக்கு தீ வைத்த கைகளால்தானே தன் குழந்தையையும் அந்த பெண் காவலர் கொஞ்சுவார்!

பொங்கல் விடுமுறை சர்ச்சை சில விளக்கங்கள்..!

மகாலிங்கம் பொன்னுசாமி பொங்கல் திருநாள் கட்டாய விடுமுறை பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது குறித்து பலர் பல்வேறு தகவல்களை தெரிவித்துவருகின்றனர். விளக்கமாக பார்ப்போம்.. தமிழகத்தில் பணியாற்றிவரும் மத்தியரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் இவ்வளவு கட்டாய விடுமுறை, இவ்வளவு வரையறுக்கப்பட்ட விடுமுறைதான் அறிவிக்க வேண்டும் என்று விதிமுறை இருக்கிறது. (அதாவது 14 (மத்தியரசு) +3 (மாநிலக்குழு) =17 நாட்கள் கட்டாயவிடுமுறை, மீதமுள்ளவை வரையறுக்கப்பட்ட விடுமுறை). ஒவ்வொரு மாநிலத்திலும் விடுமுறையை முடிவு செய்ய மத்திய அரசு ஊழியர்கள் நல்வாழ்வு ஒருங்கிணைப்புக் குழு செயல்படுகிறது. … Continue reading பொங்கல் விடுமுறை சர்ச்சை சில விளக்கங்கள்..!

குறைந்த மழையளவு: வரலாறு காணாத வறட்சியை நோக்கித் தமிழகம்…

சரவணன் சந்திரன் நம்மை மிரட்டப் போகிற, வதைக்கப் போகிற மிகப் பெரிய பிரச்சினை இது. ஏதோ இதில் விவசாயிகள் மட்டும்தான் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். நமக்கேன் கவலை என்றெல்லாம் ஒதுங்கிப் போக முடியாது. எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பும் போதெல்லாம் அடையாள ரீதியிலாக ஒரு அமைச்சரவை கூட்டத்தை மட்டும் போட்டு விட்டு, மத்தியானத்திற்கு மேல் போயஸ் கார்டனில் அட்டெண்டன்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதன் தீவிரத்தை உணர்ந்தார்களா என்று தெரியவில்லை? கொத்துக் கொத்தாக விவசாயிகள் செத்துக் கொண்டிருப்பதால், இது ஏதோ காவிரி டெல்டா … Continue reading குறைந்த மழையளவு: வரலாறு காணாத வறட்சியை நோக்கித் தமிழகம்…

நிதி மூலதன எழுச்சிப் போக்கும், இந்தியப் பொருளாதாரத்தின் நெருக்கடி நிலையும்…

அருண் நெடுஞ்செழியன் 2008 ஆம் ஆண்டில் அமெரிக்க வங்கிகளின் நிதி நெருக்கடியால் ஏற்பட்ட சர்வதேச பொருளாதார தேக்க நிலையின் போது, இங்கிலாந்து ராணி, முதலாளித்துவ பொருளாதார அறிஞர்களிடம் ஒரு கேள்வி கேட்டாராம். இவ்வளவு அறிஞர்கள், உள்கட்டமைப்பு வசதிகள், ஆய்வு நிறுவனங்கள் இருந்தும் இவ்வாறு ஒரு நெருக்கடி வர உள்ளது என முன் கூட்டியே உங்களால் ஏன் சொல்ல இயலவில்லை? என்றாராம்.  முதலாளித்துவ அறிவாளிப் பிரிவினர் இந்நெருக்கடியை அவதானிக்க இயலாமைக்கு காரணம் உண்டு. அவர்களின் சொந்த அமைப்பு முறையின் பலவீனங்களை அவர்களால் … Continue reading நிதி மூலதன எழுச்சிப் போக்கும், இந்தியப் பொருளாதாரத்தின் நெருக்கடி நிலையும்…

கொல்லைப்புறமாக முதலமைச்சராகும் சசிகலா; மு. க. ஸ்டாலின் எதிர்க்க ஏன் தயங்குகிறார்?

சரவணன் சந்திரன் இரண்டு வகை அரசியல் இருக்கிறது. சட்டத்தை முன்னிறுத்திய அரசியல். சில சமயங்களில் சட்டத்தைத் தாண்டி தார்மீகத்தை முன்னிறுத்தும் அரசியல். முன்னதில் இம்மி பிசகாமல் சட்டம் என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்பது முதன்மையானதாக இருக்கும். மு.க.ஸ்டாலின் இப்போது சட்டத்தை முன்னிறுத்திய அரசியலைச் செய்து கொண்டிருக்கிறார் என்பது தெரிகிறது. அது மிக முக்கியமானதும் மதிக்கத்தக்கதும் என்பதில் மாற்றுக் கருத்தே கிடையாது. அதே சமயம் ஜல்லிக்கட்டிற்கு நாட்டின் உச்ச நீதிமன்றம் தடைக்கல்லாக இருக்கும் சமயத்தில், அது சட்டப்படி செயல்படுகிறது … Continue reading கொல்லைப்புறமாக முதலமைச்சராகும் சசிகலா; மு. க. ஸ்டாலின் எதிர்க்க ஏன் தயங்குகிறார்?

இயற்கை பேரிடர்களைக் காட்டிலும் கொடூரமானது பணமதிப்பு இழப்பு நடவடிக்கை; ஒரு ஊடகவியலாளரின் அனுபவம்!

தயாளன் 2016 மட்டுமல்ல சுதந்திர இந்தியாவிலேயே மிகவும் கடுமையாக மக்களைப் பாதித்ததும், மக்கள் மீது ஏவப்பட்ட வன்முறைகளிலேயே மிகவும் தீவிரமானதும் என்று எனக்கு தோன்றுவது, நவம்பர் 8ம் தேதி பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்ட பணமதிப்பு இழப்பு நடவடிக்கையே. வர்தா போன்ற இயற்கைப் பேரிடர்கள் எல்லாம் சாதாரணமானதாகத் தோன்றுகிறது. மிசா காலம் குறித்து கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் நிச்சயமாக சாதரண பொதுமக்கள் மீது நிச்சயமாக இந்த அளவு தாக்குதல் இருந்திருக்காது என்றே நம்புகிறேன். யாதும் ஊரே படப்பிடிப்புக்காக கள்ளக்குறிச்சி அருகே … Continue reading இயற்கை பேரிடர்களைக் காட்டிலும் கொடூரமானது பணமதிப்பு இழப்பு நடவடிக்கை; ஒரு ஊடகவியலாளரின் அனுபவம்!

சமகால அரசியல் போக்குகளும் மாற்று அரசியலும்

அருண் நெடுஞ்செழியன் செல்லாக் காசு அறிவிப்பு,தமிழகத்தில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான அதிமுக கட்சியின் உள்முரண்பாடு, அதிமுகவிற்கும் Vs பாஜகவிற்குமான வெளி முரண்பாடு,தற்போது மக்கள் நலக் கூட்டணியில் இருந்து மதிமுக விலகல் என நடைபெறுகிற அனைத்து அரசியல் திசை மாற்றப் போக்குகள் மீதான விமர்சனங்களை, ஆய்வுகளை நிலவுகிற சட்டவாத முதலாளித்துவ ஜனநாயக சட்டகத்திற்குள்ளாக வைத்து விமர்சிக்க இயலுமா? நிலவுகிற அமைப்பை செப்பனிட்டால் இப்பிரச்சனைகளை தீர்க்க இயலுமா? நிலவுகிற அமைப்பிற்குள்ளாக மாற்று சாத்தியமா? முதலாளித்துவத்திற்கான ஜனநாயகம், அதை பிரதிபலிக்கிற முதலாளித்துவ, குட்டி … Continue reading சமகால அரசியல் போக்குகளும் மாற்று அரசியலும்

சிரியாவில் அமெரிக்காவின் வீழ்ச்சி: ஏகாதிபத்திய முகாம்களுக்கு இடையிலான உலகப்போரின் தொடக்கமா?

அருண் நெடுஞ்செழியன் மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணெய் வள வேட்டைக்கான அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்ய நாடுகளின் போரானது, சிரியாவின் அலெப்போ வீழ்ச்சியோடு ஒரு சுற்று முடிவுறுகிறது. அமெரிக்கா-இஸ்ரேல்-அமெரிக்க ஆதரவு கிளர்ச்சியாளர்கள்-குர்துகள் ஒரு முகாமாகவும் ஆசாத்தின் சிரியா அரசு-ரஷ்யா-ஈரான் மற்றொரு முகாமாகவும் மேற்கொண்ட சிரியாவின் மீதான பாகப்பிரிவனை யுத்தமானது கடந்த ஐந்து ஆண்டுகளில் லட்சக் கணக்கான உயிர்களை காவு கொண்டு முடிவடைந்துள்ளது. ஏகாதிபத்திய நாடுகளின் வள வேட்டைக்கான இரண்டாம் சுற்றுப் போரானது,கடந்த சில ஆண்டுகளில் நடைபெற்ற பிராக்சி போராக … Continue reading சிரியாவில் அமெரிக்காவின் வீழ்ச்சி: ஏகாதிபத்திய முகாம்களுக்கு இடையிலான உலகப்போரின் தொடக்கமா?

அன்னியமாக்கப்பட்ட நாட்டுப்பற்று ஆளும்வர்க்கத்தின் இறுதிப் புகலிடம்..

அருண் நெடுஞ்செழியன் அனைத்து திரையரங்குகளிலும் தேசிய கீதம் இசைக்கப்படவேண்டுமென்றும்,மக்கள் எழுந்து நின்று மரியாதை செய்ய வேண்டுமென்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை நாடுமுழுவதும் உள்ள திரையங்குகள் அமல்படுத்திவருகின்றன. பொழுதுபோக்கிற்காக திரையங்கிற்கு செல்கிற மக்களிடத்தில் நாட்டுப்பற்றை வலிந்து திணிப்பதை புறக்கணித்து எதிர்ப்பது என்ற எதிர்ப்பரசியலின் வெளிப்பாடாக கடந்த வாரம் ரெசிஸ்ட் தோழர்கள், சென்னை காசி திரையரங்கிற்கு சென்று தேசிய கீதம் இசைத்தபோது எழுந்து நிற்காமல் எதிர்ப்பை பதிவு செய்தனர்.அதன் தொடர்ச்சியாக சிறு கும்பல் ரெசிஸ்ட் தோழர்களிடம் மல்லுக்கு நின்றதும்,பின்னர் தோழர்கள் … Continue reading அன்னியமாக்கப்பட்ட நாட்டுப்பற்று ஆளும்வர்க்கத்தின் இறுதிப் புகலிடம்..

செல்லா நோட்டு அறிவிப்பு ஒரு மாத நிலவரம்: நடந்தது என்ன? நடக்கப்போவது என்ன?

வில்லவன் இராமதாஸ் 500, 1000 நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டபோது பெரிதும் பாதிப்புக்கு உள்ளான சிறிய மளிகைக் கடைகள் தற்காலிக ஏற்பாடாக கடனுக்கு வர்த்தகம் செய்ய ஆரம்பித்தன. அப்போது நான் விசாரித்த கடைக்காரர்கள் கொஞ்சம் கஷ்டம்தான் ஆனாலும் சமளிக்கிறோம் என்றார்கள். இப்போது அந்த ஏற்பாடும் பலனளிக்கவில்லை. அதே நபர்கள் இப்போது நெருக்கடி அதிகரிப்பதாக புலம்புகிறார்கள். கடன் நிலுவை உயர்வதாகவும் வரவு மிகக்குறைவாக இருப்பதாகவும் சொல்கிறார்கள். மளிகைப் பொருட்கள் விணியோகிக்கும் மொத்த விற்பனையாளர்களது நெருக்கடியை சமாளிக்கப் போதுமான பணம் … Continue reading செல்லா நோட்டு அறிவிப்பு ஒரு மாத நிலவரம்: நடந்தது என்ன? நடக்கப்போவது என்ன?

ஜெயலலிதாவிற்கு பிந்தைய தமிழக அரசியல் – கம்யூனிஸ்ட் கட்சிகள் முன்னுள்ள கடமைகள்!

சந்திரமோகன் 1)பாரதீய சனதா'விற்கு ஆதாயம் :- ஜெயா மறைவுக்குப் பிறகு, தமிழ்நாட்டில் உள்ள அ.இ.அ.தி.மு.க அரசாங்கத்தையும், அதிமுக கட்சியையும் கட்டுப்படுத்துவதில் பிஜேபி வெற்றி பெற்றுள்ளது. கடந்த இருமாத காலமாக,தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் மற்றும் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு முக்கியமான பங்கு வகுத்தனர்.அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களைக் கையாளுவது உட்பட பல்வேறுபட்ட விவகாரங்களைக் கையாள்வதில், பிற பிஜேபி உயர் தலைவர்களும் பிடியை இறுக்கமாக வைத்துள்ளனர். ஜெயா & சசிகலா மீதான வருமானத்திற்கு பொருந்தாத வகையில் சொத்து குவித்த … Continue reading ஜெயலலிதாவிற்கு பிந்தைய தமிழக அரசியல் – கம்யூனிஸ்ட் கட்சிகள் முன்னுள்ள கடமைகள்!

”சசிகலாவின் தலைமையைத்தான் திமுகவும் காங்கிரஸூம் கூட விரும்பும்!”

வா. மணிகண்டன் தமிழக அரசியலில் சுவாரசியமான காட்சிகள் அரங்கேறத் தொடங்கியிருக்கின்றன. நிறையக் கட்டுரைகள் எழுதப்படுகின்றன. ஆனால் எதை நம்புவது எதை விடுவது என்றுதான் குழப்பமாக இருக்கிறது. ஒவ்வொரு கட்சியும் வாள்வீச்சுக்குத் தயராகிக் கொண்டிருக்கின்றன. ஜெயலலிதா உடல்நிலை மிகவும் பலவீனமாகிவிட்டதாக அறிவிக்கப்பட்ட டிசம்பர் 5 ஆம் தேதியன்று சென்னைக்கு வந்த வெங்கய்யா நாயுடு அடுத்த நாள் உடல் அடக்கம் செய்யும் வரைக்கும் இடத்தை விட்டு அசையாமல் தேவுடு காத்ததிலிருந்து பா.ஜ.கவின் அரசியல் வெளிப்படையாகத் தெரிகிறது. சசிகலா, அவரது குடும்பமெல்லாம் … Continue reading ”சசிகலாவின் தலைமையைத்தான் திமுகவும் காங்கிரஸூம் கூட விரும்பும்!”

”நானும் செத்து செய்தியாகியிருப்பேன்”: ஏடிஎம் வரிசையில் நின்று மீண்டு வந்த ஓர் ஆசிரியரின் அனுபவம்!

பார்வதி ஸ்ரீ நேற்று கையில் வெறும் 150 ரூபாய் மட்டுமே இருந்தது. மகள் விடுமுறை முடிந்து ஊருக்குச் செல்ல வேண்டும். ATM சென்று நின்றேன். எனக்கு முன்னால் சுமார் 200 பேர் நின்றிருந்தனர்.. என்னுடன் எங்கள் பக்கத்து ஊர் பள்ளி ஆசிரியர் ஒருவரும் உடனிருந்தார். இரண்டு சிறுவயது மகள்களைத் தனியே விட்டு வந்திருந்தார். அவரது அலைபேசியில் சார்ஜ் தீர்ந்திருந்ததால் எனது பேசியை வாங்கி தனது மகள்களுக்கு இன்னும் ஒருமணி நேரமாகும் எனவும் எச்சரிக்கையாக இருக்கும்படியும் கூறிவிட்டு தின்பண்டங்கள் … Continue reading ”நானும் செத்து செய்தியாகியிருப்பேன்”: ஏடிஎம் வரிசையில் நின்று மீண்டு வந்த ஓர் ஆசிரியரின் அனுபவம்!

பெண்கள் ஏன் ஜெயலலிதாவை ரோல்மாடல் என்கிறார்கள்?

ஆழி செந்தில்நாதன் ஜெயலலிதாவைப் பற்றி பாராட்டுகளாகவும் விமர்சனங்களாகவும் ஆயிரம் எழுதலாம். ஒரு விஷயத்தில் மட்டும் தமிழகமே உடன்படுகிறது என்பதை என் வீட்டில் நடக்கும் உரையாடல்கள் முதல் நூற்றுக்கணக்கான முகநூல் குறிப்புகள் வரை பார்க்கிறேன். தமிழ்நாட்டுப் பெண்களின் சார்பாக - மூன்றரை கோடி பெண்களின் சார்பாக - எல்லா ஆண்களுக்கும் எதிரான ஒரு யுத்தத்தை அவர் நடத்திக்காட்டியிருக்கிறார். அவரது யுத்தம் உளவியல் ரீதியில் தமிழகப் பெண்களை ஆட்கொண்டிருக்கிறது. அவரது வேறு எந்த சாதனை, வேதனைகளைவிட இந்த ஒன்று தமிழகப் … Continue reading பெண்கள் ஏன் ஜெயலலிதாவை ரோல்மாடல் என்கிறார்கள்?

கருப்பு பணம் பராமரிக்கும் தொழிலதிபர்களின், பெரிய வர்த்தகர்களின் “டார்லிங் ” ஆக. ICICI, HDFC வங்கிகள்

சந்திரமோகன் செல்லாமல் போய்விட்ட 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்கு, மக்கள் தினசரி நீண்ட வரிசையில் வங்கிகளில், தபால் அலுவலகங்களில் நிற்கின்றனர். வாய் வயிற்றை சுருக்கிக் கொண்டு விட்டனர். இந்த விவகாரங்களில், நாடு முழுவதும் 70 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். ஒரு பிரச்சினை மீது பல நாட்கள் பாராளுமன்றத்திலும், வீதிகளிலும் போராட்டங்கள், கிளர்ச்சிகளை நாடு சந்தித்து கொண்டுள்ளது. கருப்பு பணம் மாற்றுவதில் பாஜக கட்சியினர் முன்னிலை! புதிய நோட்டுக்கள் வரிசையில் நிற்பவர்களுக்கு ரூ.2000 கூட கிடைக்கவில்லை. நடப்பு … Continue reading கருப்பு பணம் பராமரிக்கும் தொழிலதிபர்களின், பெரிய வர்த்தகர்களின் “டார்லிங் ” ஆக. ICICI, HDFC வங்கிகள்

மிடில் கிளாஸ்: பலியாகப்போகும் சாத்தானின் அழிவுகால சேனைகள்

வில்லவன் ராமதாஸ் ரூபாய் நோட்டு ஒழிப்பு குறித்து மோடி ஊடகங்களில் வாந்தியெடுத்தபோது எங்கள் அருகாமையில் உள்ள தெருக்களில் பட்டாசுகள் வெடித்தன. அதன் பிறகு வந்த உறவுக்காரர்கள் நால்வரின் தொலைபேசி அழைப்புக்கள் பெரும் பரவசத்தை சுமந்து வந்தன. அதன் மோசமான பின்விளைவுகளைப் பற்றி அறிந்துகொள்ளக்கூட அவர்கள் தயாரில்லை. ஒரு ரஜினி ரசிகன் அவர் படம் வெளியானால் எத்தகைய உணர்வுகளை வெளிப்படுத்துவானோ அவைதான் இந்த மத்தியதர வர்கத்தின் உடனடி எதிர்வினையாக இருந்தது. அவர்களின் ஆகப்பெரும்பாலானாவர்கள் இதனை அறிவுபூர்வமாக அணுகத் தெரியாதவர்களாக … Continue reading மிடில் கிளாஸ்: பலியாகப்போகும் சாத்தானின் அழிவுகால சேனைகள்

திமுகவின் போராட்ட குணம் எங்கே போனது?

வா. மணிகண்டன் கடந்த வாரம் திமுக நடத்திய மனிதச் சங்கிலிப் போராட்டம் கோவை, ஈரோடு உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் பிசுபிசுத்துப் போனதாக உள்ளூர் நண்பர்கள் சொன்னார்கள். பிற மாவட்டங்களைப் பற்றித் தெரியவில்லை. வழக்கமாக திமுகவின் போராட்டங்கள் குறித்து ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வரக் கூடிய செய்திகளும் படங்களும் கூட இந்த முறை இல்லை. ஐநூறு, ஆயிரம் ரூபாய்த் தாள் குறித்தான விவகாரம்தான் பேசப் பட்டுக் கொண்டிருக்கிறதே தவிர அதே பிரச்சினைக்காக மனிதச் சங்கிலி நடத்திய திமுக … Continue reading திமுகவின் போராட்ட குணம் எங்கே போனது?

மோடியின் துணிச்சல் அம்பானி, அதானிகளிடம் எடுபடுமா?

வி.களத்தூர் எம்.பாரூக் "ஊழல், கருப்பு பணத்திற்கு எதிராக மத்திய அரசு புனித போரை தொடுத்துள்ளது" என்று அனைத்து கட்சிகள் கூட்டத்தில் பிரதமர் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார். லஞ்சத்தாலும், ஊழலாலும், குறுக்கு வழியில் சேர்க்கப்படும் கருப்பு பணத்தாலும் இந்தியாவின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் சேதமடைந்துள்ளது. மக்களின் துயரங்கள் பன்மடங்கு அதிகரித்துள்ளது. ஆதலால் ஊழல், கருப்பு பணத்திற்கெதிராக ஒரு போர் அவசியமானதுதான். அவைகளுக்கு எதிரான ஒரு துல்லிய தாக்குதல் தேவையானதுதான். ஆனால் அந்த போரால் யார் பாதிக்கப்படுகிறார்கள். துல்லிய தாக்குதல் யாரை நோக்கி … Continue reading மோடியின் துணிச்சல் அம்பானி, அதானிகளிடம் எடுபடுமா?

“தாராளமயம்” ஏகாதிபத்தியத்தின் இறுதிக் கட்டமா?: அருண் நெடுஞ்செழியன்

அருண் நெடுஞ்செழியன் மூலதனத்தின் அடிப்படை முரண்பாடுகளை முதலாளியம் களையாதவரை,அதற்கு நிரந்தர தீர்வென்று எதுவும் இல்லை.அப்படி அது களையும் பட்சத்தில் அது முதலாளித்துவமாக இருக்க முடியாது. மூலதனத்தை திரட்டுதல்,மறு உற்பத்தியில் உபரி மூலதனத்தை முதலீடு செய்தல்,மீண்டும் உபரி மூலதனத்தை படைத்தல் என்ற அதன் சுற்றோடத்தில் எழுகிற அடிப்படை முரண்பாடுகளாக டேவிட் ஹார்வி(மார்க்சின் வழி) சுட்டிக் காட்டுவது • மூலதனத்திற்கும் உழைப்பிற்கும் இடையிலான அடிப்படையான முரண்பாடுகள் • உபரி மூலதனத்தை பங்கிடுவதில் எழுகிற (வறுமைx வளம்) ஏற்றத்தாழ்வுகளை மேலாண்மை செய்வதில் … Continue reading “தாராளமயம்” ஏகாதிபத்தியத்தின் இறுதிக் கட்டமா?: அருண் நெடுஞ்செழியன்

மோடியின் ரூபாய் நோட்டு அறிவிப்பு குஜராத்தி தொழிலதிபர்களுக்கு முன்பே தெரியும்: மோடியின் முன்னாள் கூட்டாளி யதின் ஓசா

விஜயசங்கர் ராமச்சந்திரன் யாதின் ஒசா. இவர் பிஜேபியின் குஜராத் எம்.எல்.ஏ மட்டுமல்ல; மோடி முதல்வராயிருந்தபோது அவருக்கு நெருக்கமான நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக இருந்தவர். அவர் மோடியின் கருப்புப் பண எதிர்ப்பு நடவடிக்கை மக்களை முட்டாள்களாக்கும் செயல் என்று கடுமையாகச் சாடியிருக்கிறார். நவம்பர் 8 இரவு 9 மணியிலிருந்து அடுத்த நாள் அதிகாலை 5 மணி வரை, குஜராத்தில் பிஜேபிக்கு நெருக்கமானவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து கூட்டுறவு வங்கிகளிலிருந்தும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டன என்றும் குற்றம்சாட்டுகிறார். … Continue reading மோடியின் ரூபாய் நோட்டு அறிவிப்பு குஜராத்தி தொழிலதிபர்களுக்கு முன்பே தெரியும்: மோடியின் முன்னாள் கூட்டாளி யதின் ஓசா

ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களின் கருத்து மட்டும்தான் மோடிக்கு தேவையா?

ராஜசங்கீதன் மோடி தன் அறிவாற்றலை பயன்படுத்தி, உருவாக்கியுள்ள மற்றுமொரு உத்திதான் இந்த மோடி ஆப் என்னும் ஸ்மார்ட்போன் செயலி. அதாவது இந்த செயலியை உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ளிட்டு இயக்கினால், முதலில் அழகிய மோடி முகம் தோன்றும். அதற்கு பிறகு நீங்கள் விடையளிக்கும் வண்ணம் சில கேள்விகள்! Demonetization பற்றிய உங்கள் கருத்தை இந்த கேள்விகளின் வழி மோடி அறிந்து கொள்ள விரும்புகிறாராம். மக்களின் கருத்தை கேட்காமல் எதையும் செய்யாத நல்லவர் இல்லையா அவர்? போகட்டும். இந்த கேள்விகள் … Continue reading ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களின் கருத்து மட்டும்தான் மோடிக்கு தேவையா?

65,000 கோடி ரூபாய்…..! வரி செலுத்துவதைப் பற்றிய திரைக்கதையிலிருந்து சில காட்சிகள்

ம.செந்தமிழன் எனது சட்டையின் விலை 10 இலட்சம் ரூபாய் அல்ல. என் வயதான தாயை நான் வங்கி வரிசையில் நிற்க வைக்கவும் இல்லை. அதைப் படம் பிடித்துக் காட்டி நாடகம் நடத்தவும் இல்லை. நேரடியாகச் சொல்வதானால், பத்து இலட்சம் ரூபாய் மதிப்புள்ள சட்டையை அணிந்துகொண்டு, தன் தாயை வெறும் 2000 ரூபாய்க்காக வங்கியில் காக்க வைக்கும் ‘சாமானியன்’ அல்ல நான். நீங்களும் இவ்வாறான ‘சாமானியர்கள்’ அல்ல என நினைக்கிறேன். நாம் உண்மையான சாமானியர்கள். இந்த நாடு, போலித்தனமான … Continue reading 65,000 கோடி ரூபாய்…..! வரி செலுத்துவதைப் பற்றிய திரைக்கதையிலிருந்து சில காட்சிகள்

ரூ.500, 1000 நோட்டுக்குத் தடை: நல்லதா? கெட்டதா?

இரா. ஜவஹர் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் அறிவித்துவிட்டார் “நல்ல நோக்கத்துக்கான நடவடிக்கை இது. எனவே கொஞ்சம் கஷ்டப்படலாம்“ என்று சிலர் கூறுகிறார்கள். ” நோக்கம் நல்லதுதான். ஆனால் தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்யாததுதான் தப்பு “ என்று சிலர் கூறுகிறார்கள். சரி. அந்த நோக்கங்கள் என்ன ? அவை இந்தத் தடை மூலம் நிறைவேறுமா ? நான்கு நோக்கங்களை மோடி தெரிவித்தார். ஒவ்வொன்றையும் மிகச் சுருக்கமாகப் பார்ப்போம். கறுப்புப் பணத்தை ஒழிப்பது. இது … Continue reading ரூ.500, 1000 நோட்டுக்குத் தடை: நல்லதா? கெட்டதா?

ஜெயலலிதா எதிர்த்த NEET தேர்வை அமைச்சர் பாண்டியராஜன் ஏன் ஆதரிக்கிறார்?

வா. மணிகண்டன்   மாஃபா பாண்டியராஜன் தமிழக கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட போது சந்தோஷமாக இருந்தது. படிப்பாளி, விவரம் தெரிந்தவர், சுயமாக முடிவெடுக்கும் திறன் வாய்ந்தவர் என்கிற நம்பிக்கையின் விளைவான சந்தோஷம் அது. ஆனால் தமிழக மாணவர்களின் தலையில் பெருங்கல்லைச் சுமந்து வைத்திருக்கிறார். மாநாடு ஒன்றுக்காக டெல்லி சென்றவர் ‘தமிழகத்தில் நீட் கட்டாயம் நடக்கும். மாணவர்களுக்கு பயிற்சியளிப்போம்’ என்று பேசிவிட்டு வந்திருக்கிறார். இதே நீட் தேர்வைத்தான் ஜெயலலிதா எதிர்த்துக் கொண்டிருந்தார். இப்பொழுது ஏன் அமைச்சர் பாண்டியராஜன் குறுக்கே … Continue reading ஜெயலலிதா எதிர்த்த NEET தேர்வை அமைச்சர் பாண்டியராஜன் ஏன் ஆதரிக்கிறார்?

வாராக் கடன்களை வசூலிக்க ரகுராம் ராஜன் ஏன் தீவிரம் காட்டினார்?

அருண் நெடுஞ்செழியன் 2008 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதாரா நெருக்கடி, அதைத்தொடர்ந்து 2012-13 இல் ஸ்பெயின்,கிரீசில் ஏற்பட்ட நெருக்கடி தற்போது 2016 இல் வளர்ந்து வருகிற நாடுகளான சீனா, இந்தியா மற்றும் பிரேசிலை சுற்றி சுருக்குக் கயிறாக சுற்றி வளைதுள்ளது. நெருக்கடியின் முதல் சுற்றானது, வளர்ந்த தொழில்மய நாடுகளில் துவங்கி அதன் இரண்டாம் சுற்று எம்ர்ஜிங் எகனாமி என சொல்லப்படுகிற ஆசிய, இலத்தீன் அமெரிக்க நாடுகளை முகாமிட்டுள்ளது. ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரமானது 3.5 விழுக்காடு அளவிற்கு … Continue reading வாராக் கடன்களை வசூலிக்க ரகுராம் ராஜன் ஏன் தீவிரம் காட்டினார்?

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு: இந்திய அரசுக்கும் பன்னாட்டு நிதியகத்திற்குமான முரண்பாட்டின் வெளிப்பாடா?

அருண் நெடுஞ்செழியன் ரூபாய் நோட்டு செல்லாது என்ற மோடியின் அறிவிப்பானது, இந்திய பெரு முதலாளி வர்க்கப் பண்புகளுக்கும் பன்னாட்டு நிதியகத்தின் பணக் கொள்கைகளுக்குமான முரண்பாட்டை பட்டவர்த்தமாக வெளிப்படுத்தியுள்ளது. மேலோட்டமாக மோடி எதிர்ப்பென்ற வகையில் இச்சிக்கலை பார்க்காமல் மோடி என்பவர் இந்திய அரசின் பிரதிநிதி என்ற வகையில்,இந்திய அரசு/இந்தியப் பெரு முதலாளிய வர்க்கம் Vs பன்னாட்டு நிதியகக் கொள்கை,ஏகாதிபத்திய மூலதனம் என்ற முரண்பாடுகளுக்கு இடையிலான பொருளாதாரக் பகுப்பாய்வின் அடித்தளத்தில் இச்சிச்சலை சற்று நெருக்கமாக பார்ப்போம். 1 தேசிய அரசுடனான … Continue reading செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு: இந்திய அரசுக்கும் பன்னாட்டு நிதியகத்திற்குமான முரண்பாட்டின் வெளிப்பாடா?

அணுக் காலனியம் …!

அருண் நெடுஞ்செழியன் அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத இந்தியாவுடன், முதன் முறையாக தனது அணு உலைகளை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்கிற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது ஜப்பான். (இவை போக ஜப்பானிடம் இருந்து அதிவேக ரயில், போர் விமானங்கள் வாங்குகிற ஒப்பந்த்தத்திலும் இந்தியா கையெழுத்திட்டுள்ளது) சிவில் பயன்பாடு ராணுவப் பயன்பாடு என்ற வகைமையில் தனது அணுசக்தி திட்டங்களை பிரித்த வைக்காத, அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் கையொப்பம் இடாத காரணத்தால் இந்தியாவுடனான ஜப்பானின் அணு உலை … Continue reading அணுக் காலனியம் …!

திப்புவை நாம் ஏன் கொண்டாட வேண்டும்?

சந்திரமோகன் நவம்பர் 10 - பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக்கு சவால்விட்டு போர் தொடுத்தால், கொல்லப்பட்ட "மைசூரு சிறுத்தை" திப்பு சுல்தானின் நினைவு நாள் ஆகும். 'கர்நாடக அரசு திப்பு ஜெயந்தியை நடத்தும்' என முதல்வர் சித்தராமைய்யா அறிவித்தார். உடனே பாஜக, இந்துத்துவா அமைப்புகள் "திப்பு மதவெறியர், கொலைகாரர்" என எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் இறங்கும் என மிரட்டல் விட்டன; இறங்கின. இன்று அங்கு 'இந்து ஜாக்ரண் வேதிகெ' என்ற அமைப்பு முழு அடைப்பை நடத்தியது. பாஜக தலைவர் … Continue reading திப்புவை நாம் ஏன் கொண்டாட வேண்டும்?

டொனால்ட் டிரம்ப்பும் மோடியும் சமூகத்தில் செல்வாக்குப் பெற்றது எப்படி?

அருண் நெடுஞ்செழியன் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளாராக அறிவித்த நாள்தொட்டு, அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதுவரை, டொனால்ட் டிரம்பின் எழுச்சியானது, பெருவாரியான ஜனநாயக சக்திகளுக்கு குறிப்பாக கம்யூனிஸ்டுகளுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோ நாட்டு ஏதிலிகளால்தான் அமெரிக்காவிற்கு பிரச்சனை,எனவே அவர்களை ஒட்டுமொத்தமாக அமெரிக்காவை விட்டு வெளியேற்றி,மெக்ஸிகோவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் சுவர்கட்டவேண்டும் என்றவர்.மெக்சிகோ நாட்டு ஏதிலிகள் வன்புணர்வாளர்கள் என்றவர்.குடியரசுக் கட்சி வேட்பாளர் என்பதையும் கடந்த வலது அடிப்படைவாதியாக,இன வெறியராக,பெண்களை இழிவாக பேசுகிற,இஸ்லாம் மத விரோதியாக இருந்தவர் ஜனநாயகமுறையில் நடைபெற்ற தேர்தலில் … Continue reading டொனால்ட் டிரம்ப்பும் மோடியும் சமூகத்தில் செல்வாக்குப் பெற்றது எப்படி?

ரூ.1000 – 500 சர்ச்சை: பணமற்ற பொருளாதாரத்தில் தொலைந்துபோன இந்தியாவின் ஆன்மா!

சி.  மதிவாணன் நியூஸ் 18 தமிழ் சானலில் ‘செல்லாத நோட்டு ... நெருக்கடி சாமாணியர்களுக்கா? பண முதலைகளுக்கா?“ என்றொரு விவாதம் நிகழ்ந்ததை ‘நேரலையாக‘ வலைமனை மூலம் பார்க்க நேர்ந்தது.  அதில் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், ஒரு விஷயத்தைப் பற்றி மட்டும் தற்போது பேசுவோம். இந்தியாவின் ஆன்மா கிராமங்கள் என்று காந்தி என்று ஒருவர் சொன்னதாக சொல்லிக்கொள்கிறார்கள். அப்படியொரு ஆன்மா இருப்பதையே இந்திய ஆளுகையும் ஊடகங்களில் பேசும் அறிவாளிகளும், ஊடகங்களும் அறியாதிருக்கிறார்கள் என்பதை இந்த நிகழ்ச்சி … Continue reading ரூ.1000 – 500 சர்ச்சை: பணமற்ற பொருளாதாரத்தில் தொலைந்துபோன இந்தியாவின் ஆன்மா!

“ரெண்டு நாள்தானே.. அவர்கள் பட்டினி கிடந்து விட்டுப் போகட்டுமே.. !”

நந்தன் ஸ்ரீதரன் நிறைய நண்பர்கள் மோடியின் இந்த முடிவை வரவேற்றிருக்கிறார்கள். மத்திய கிழக்கிலிருந்து போன் செய்த நெருங்கிய நண்பன் ஒருவன் கூட இதை வரவேற்பதாக போனில் சொன்னான். நல்ல வேளை போன் லைன் கட்டாகிவிட்டது.. மோடியின் இந்த முடிவின் மூலம் கறுப்புப் பணம் எல்லாம் வெளிவந்து விடும் என்று நம்பும் அப்பாவி நண்பர்களை நினைத்தால் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அப்படியாக நம்பும் நண்பர்களில் மெத்தப் படித்த அறிவுஜீவி நண்பர்களும் இருப்பது மிக மிக ஆச்சரியமாக இருக்கிறது.. வரி … Continue reading “ரெண்டு நாள்தானே.. அவர்கள் பட்டினி கிடந்து விட்டுப் போகட்டுமே.. !”