கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, வன்னியர் இடஒதுக்கீடு அரசியலமைப்பிற்கு எதிரானது என்று கூறி தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்தது.இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. … Continue reading வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு அரசியலமைப்புக்கு எதிரானது: உச்சநீதிமன்றம்
பகுப்பு: நீதிமன்றம்
“உணவு அடிப்படை உரிமை”: மத்திய அரசின் மாட்டிறைச்சி உத்தரவுக்கு நீதிமன்றம் தடை
இறைச்சிக்காக மாடுகள் விற்பதைத் தடை செய்து மத்திய அரசு அண்மையில் ஒரு அறிவிக்கையை வெளியிட்டது. இதற்கு தடை விதிக்குமாறு மதுரையைச் சேர்ந்த செல்வகோமதி, ஆஷிக் இலாகி பாபா உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவில், ‘உணவைத் தெரிவு செய்வது அவரவர் தனிப்பட்ட உரிமை; அதில் தலையிட மத்திய அரசுக்கு அதிகாரமில்லை. இந்த சட்டம் கடந்த 1960ம் ஆண்டு இயற்றப்பட்ட மிருகவதைத் தடுப்பு சட்டத்துக்கு எதிராக இருக்கிறது. எனவே, இந்த புதிய … Continue reading “உணவு அடிப்படை உரிமை”: மத்திய அரசின் மாட்டிறைச்சி உத்தரவுக்கு நீதிமன்றம் தடை
ஊடகச் சுதந்திரத்தை உச்சநீதிமன்றமே மறுப்பது முறையா?: திருமாவளவன்
நீதிபதி கர்ணன் தொடர்பான உத்தரவை உச்சநீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு ஆறுமாத சிறை தண்டனை விதித்தும், ஊடகங்கள் அவரது பேட்டிகளையோ அறிக்கைகளையோ வெளியிடக்கூடாது எனத் தடை விதித்தும் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. நீதித்துறையின் மாண்பையும், ஜனநாயகத்தையும் காக்கும் விதமாக உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை மறு ஆய்வு செய்யவேண்டும்” என வலியுறுத்தியிருக்கும் … Continue reading ஊடகச் சுதந்திரத்தை உச்சநீதிமன்றமே மறுப்பது முறையா?: திருமாவளவன்
’3 ஆண்டுகளில் 80 % விவசாய நிலங்கள் அழிந்துபோகும்!’
தமிழ்நாட்டைப் போல புதுச்சேரியிலும் விவசாய நிலங்களை மனைகளாக பதிவு செய்ய தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் புதுச்சேரி அரசு இரண்டு வாரத்தில் பதிலளிக்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது: புதுச்சேரியில் விவசாய நிலங்களை வீட்டுமனைகளாக மாற்றி வருகின்றனர், இந்நிலை தொடர்ந் தால் அடுத்த மூன்றாண்டுகளில் 20 விழுக்காடு விவசாய நிலங்கள் மட்டுமே மீதமிருக்கும். எனவே தமிழகத்தைப் போல புதுச்சேரியிலும் விளைநிலங்களை பத்திரப்பதிவு செய்ய தடை … Continue reading ’3 ஆண்டுகளில் 80 % விவசாய நிலங்கள் அழிந்துபோகும்!’
பேராசிரியை கொலை வழக்கு: குற்றவாளிக்கு தூக்கு
கோவை மாவட்டம் காரமடையில் உள்ள பாலாஜி நகரைச் சேர்ந்தவர் தர்மராஜ். நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவரின் மூத்த மகள் ரம்யா கோவையை அடுத்து உள்ள கிணத்துக்கடவில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் உதவி பேராசிரியராக வேலைபார்த்து வந்தார். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி நள்ளிரவு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக நெல்லை மாவட்டம் தென்காசியை சேர்ந்த மகேஷ் … Continue reading பேராசிரியை கொலை வழக்கு: குற்றவாளிக்கு தூக்கு
ராம்குமார் மரணம்: மனித உரிமை ஆணையம் ஏ.டி.ஜி.பிக்கு நோட்டீஸ்
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருந்த ராம் குமார் மின்சார வயரைக் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ராம் குமாரின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய சில நிபந்தனைகளுடன் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து நான்கு மருத்துவர்கள் கொண்ட குழு செவ்வாய்கிழமை பிரேத பரிசோதனை மேற்கொள்ளவுள்ளது. மேலும் பிரேத பரிசோதனை செய்வது வீடியோவில் படம் பிடிக்கப்பட வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது செய்தித்தாள்களில் … Continue reading ராம்குமார் மரணம்: மனித உரிமை ஆணையம் ஏ.டி.ஜி.பிக்கு நோட்டீஸ்
சேல் கேஸ் எடுக்க தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது: பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் வைகோ வாதம்
காவிரி தீரத்தில் பாறைப்படிம எரிவாயு (சேல் கேஸ்) எடுக்க தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது என பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாதாடினார். இன்று (19.9.2016) தென்னிந்திய தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தில், பாறைப் படிம எரிவாயு குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் தமிழக விவசாயிகள் சார்பில் வாதாடிய வைகோ, முன்வைத்த கருத்துகள்: காவிரி தீரத்தில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் அபாயகரமான திட்டத்தை எதிர்த்து, இதே தீர்ப்பு ஆயத்தில் நான் வாதாடினேன். காவிரி தீர மக்களும், … Continue reading சேல் கேஸ் எடுக்க தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது: பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் வைகோ வாதம்
“மனிதநேயத் தமிழர்களின் மனுநீதி கொடூரங்கள்”
பிரேம் (சாதிச்) சட்டம் தன் கடமையைச் செய்துவிட்டது... பிராமண சமூகத்தில் பிறந்த பெண் கொடிய முறையில் கொலை செய்யப்பட்டார். தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்திய அந்தக் கொலையைச் செய்தவர் என்று “குற்றம்சாட்டப்பட்டு” சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார் என்ற இளைஞர் தற்போது கொல்லப்பட்டிருக்கிறார். நீதி மன்றத்தின முன் ராம்குமார் பேசுவதால் வெளிவரக்கூடி உண்மைகளில் இருந்து பலரைக் காப்பற்ற செய்யப்பட்ட கொலையை தற்கொலை என்று ஊடகங்கள் அறிவித்துவிட்டன. சாதிச் சட்டமும் சதிச் செயல்களில் வல்ல காவல் துறையும் தன் கடமையைச் செய்துவிட்டது. … Continue reading “மனிதநேயத் தமிழர்களின் மனுநீதி கொடூரங்கள்”
அரசை விமர்சிப்பவர்கள் மீது தேச துரோக (அ) அவதூறு வழக்குப் போடக்கூடாது: உச்சநீதிமன்றம்
அரசுக்கு எதிராக விமர்சனம் செய்யும் யார் மீதும் தேச விரோத வழக்குப் பதிவு செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. "காமன் காஸ்' என்ற தன்னார்வ அமைப்பு தாக்கல் செய்திருந்த மனுவை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் முன்வைத்த வாதம்: தேச துரோகம் என்பது மிகப்பெரிய குற்றமாகும். ஆனால், தேச துரோக வழக்குகள், தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. சமூகப் பணிகளில் ஈடுபட்டு வரும் … Continue reading அரசை விமர்சிப்பவர்கள் மீது தேச துரோக (அ) அவதூறு வழக்குப் போடக்கூடாது: உச்சநீதிமன்றம்
“குரானில் சொல்லப்பட்ட சட்ட முறைகளை உச்ச நீதிமன்றம் மாற்றி விவரிக்க முடியாது”: இஸ்லாமிய வாரியம்
இஸ்லாமில் மூன்று முறை, 'தலாக்' கூறி, விவாகரத்து செய்யும் முறையை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண் தாக்கல் செய்துள்ள வழக்கில், அனைத்திந்திய இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம் உள்ளிட்டோருக்கு, தலைமை நீதிபதி, டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வு, அண்மையில் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இதற்கு பதிலளித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியத்தின் மனுவில், சமூக மாற்றம் என்ற பெயரில் குரானில் சொல்லப்பட்ட சட்ட முறைகளை உச்ச நீதிமன்றம் மாற்றி விவரிக்க முடியாது … Continue reading “குரானில் சொல்லப்பட்ட சட்ட முறைகளை உச்ச நீதிமன்றம் மாற்றி விவரிக்க முடியாது”: இஸ்லாமிய வாரியம்
விஷவாயு தாக்கி பலியான 41 தொழிலாளர்கள் குடும்பத்தினரை கண்டுபிடிக்க முடியவில்லை: தமிழக அரசு சொல்கிறது
தீக்கதிர் விஷவாயு தாக்கி இறந்த 41 துப்புரவுத் தொழிலாளர்களின் குடும்ப ங்களைக் கண்டுபிடிக்க முடியாததால், அவர்களுக்கு இழப்பீடு வழங்க முடியவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.‘தமிழகத்தில் கழிவுநீர் தொட்டி கள், குழாய்களுக்குள் இறங்கி அடைப்புகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டதுப்புரவுத் தொழிலாளர்களில், சுமார்200 பேர் விஷவாயு தாக்கி பலியாகி யுள்ளதாகவும், அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் ‘மாற்றத்திற்கான இந்தியா’ என்ற … Continue reading விஷவாயு தாக்கி பலியான 41 தொழிலாளர்கள் குடும்பத்தினரை கண்டுபிடிக்க முடியவில்லை: தமிழக அரசு சொல்கிறது
சவுக்கு சங்கர் மிரட்டியதாக செய்தி வாசிப்பாளர் மகாலட்சுமி கொடுத்த புகார் பொய்யானது: சிபிஐ குற்றப்பத்திரிகை
சவுக்கு இணையதளத்தில் தன் மீது அவதூறான கட்டுரை வெளி வந்தது குறித்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று சன் டிவியின் செய்தி வாசிப்பாளர் மற்றும் வழக்கறிஞரான மகாலட்சுமி காவல்துறையில் புகார் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, சில மாதங்கள் கழித்து, சவுக்கு தளத்தில் வந்த கட்டுரையை நீக்க வேண்டுமென்றால் 50 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்று சவுக்கு தளம் சார்பாக யாரோ ஒருவர் போனில் மிரட்டியதாக மற்றொரு புகாரை … Continue reading சவுக்கு சங்கர் மிரட்டியதாக செய்தி வாசிப்பாளர் மகாலட்சுமி கொடுத்த புகார் பொய்யானது: சிபிஐ குற்றப்பத்திரிகை
126 வழக்கறிஞர்கள் நீக்கம்; உயர்நீதிமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்த வழக்கறிஞர்கள் போராட்டம்
வழக்கறிஞர்கள் சட்ட விதிகளில் செய்யப்பட்ட திருத்தத்தை எதிர்த்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தை முற்றுகையிடத் திரண்டதால் திங்களன்று (ஜூலை 25) சென்னை பாரிமுனை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் ஸ்தம்பித்தன. போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்கள் இரவில் கைது செய்யப்பட்டனர். வழக்கறிஞர்கள் சட்ட விதிகளில்சில திருத்தங்களைக் கொண்டு வந்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு தமிழக அரசிதழிலும் வெளியிடப்பட்டது. இந்த திருத்தம் வழக்கறிஞர்களின் சுதந்திரத்தை பறிக்கும் … Continue reading 126 வழக்கறிஞர்கள் நீக்கம்; உயர்நீதிமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்த வழக்கறிஞர்கள் போராட்டம்
#கருத்து: உச்ச நீதிமன்றம் பாகுபாடுகளின் ஆலயம்!
கிருபா முனுசாமி உச்ச நீதிமன்ற நீதிபதியாகக் கூட மூப்பு அடிப்படையில் கீழமை நீதிமன்றத்திலிருந்து ஒருவர் பணியுயர்வு பெற்றுவிடலாம். ஆனால், இங்கே வழக்கறிஞராக தொழில் நடத்துவது தான் கடினம். ஏனென்றால், உச்ச நீதிமன்ற விதிகளின் படி இந்நீதிமன்றம் ஆண்டுதோறும் நடத்தும் "அட்வகேட்-ஆன்-ரெக்கார்ட்" தேர்வில் தேர்ச்சியடையும் வழக்கறிஞர்கள் மட்டுமே உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடுக்கவும் வாதாடவும் முடியும் என்ற நிலை இருந்தது. அட்வகேட்-ஆன்-ரெகார்ட் என்பதை தமிழில் "பதிவிலிருக்கும் வழக்கறிஞர்" என்று பொருள் கொள்ளலாம். பின்னர், 2011-ஆம் ஆண்டு ஜூன் மாதம் … Continue reading #கருத்து: உச்ச நீதிமன்றம் பாகுபாடுகளின் ஆலயம்!
மூன்றாம் பாலினத்தவருக்கான இடஒதுக்கீடு: கடந்துவந்த பாதையும் கடக்க வேண்டிய தூரமும்
கிரேஸ் பானு 2013ல் முதல் முதலாக நானும் சுவப்னாவும் திருநருக்கான கல்வி வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்ற கோருக்கையை முன்வைத்து போராட்டக்களத்தில் இறங்க முடிவுசெய்தோம். அப்பொழுது இந்தக் கோரிக்கையை திருநர் சமூக மக்கள் கேலியாகவும் கிண்டலாகவும் தான் பார்த்தார்கள் "நாமலே மக்கள் தொகையில் மிக மிக குறைவு. இதுல இடஒதுக்கீடு கேட்கிறதுலாம் ஓவர் " என பேசிய அதே நாவுகள் இன்று அந்த கோரிக்கையை பேச வேண்டிய கட்டாயம் வந்தவுடன் பேச ஆரம்பித்தார்கள். நாங்கள் சோர்ந்து போகாமல் … Continue reading மூன்றாம் பாலினத்தவருக்கான இடஒதுக்கீடு: கடந்துவந்த பாதையும் கடக்க வேண்டிய தூரமும்
போலீஸ்தான் ராம்குமார் கழுத்தறுத்த நிலையில் இருந்த படத்தை எடுத்தது: ராம்குமார் அப்பா
ஸ்வாதி படுகொலை வழக்கில் கைதான ராம்குமாரின் தந்தை பரமசிவம் ஊடகங்கள் முன்பு பேசியிருக்கிறார். ராம்குமார் கைதின் போது என்ன நடந்தது என்பது குறித்து அவர் சொன்னது: “வழக்கமா என் பையன் பின்னால இருக்க ரூம்ல படுத்துக்குவான். நான், எங்கூட்டம்மா, ரெண்டு பிள்ளைங்க முன்னாடி படுத்திருந்தோம். 11.30 மணி வாக்குல எங்க வீட்டுக்கதவை தட்டினாங்க. இது முத்துகுமார் வீடான்னு கேட்டாங்க. எம் பொண்ணு இல்ல, முத்துகுமார்னு இங்க யாரும் இல்லைன்னு பதில் கொடுத்துச்சு. அப்புறம் கரெண்ட் இல்லாததால நான் … Continue reading போலீஸ்தான் ராம்குமார் கழுத்தறுத்த நிலையில் இருந்த படத்தை எடுத்தது: ராம்குமார் அப்பா
ராம்குமார் கைது: காற்றில் விடப்பட்ட குற்றவியல் நடைமுறைகள்
ராம்குமார் கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படும் நிலையில், அவரை நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்த காவல்துறையினர், 2 நாள் சிகிச்சைக்குப் பின், திங்களன்று சென்னைக்குக் கொண்டு வந்தனர். இங்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ராம்குமார் சேர்க்கப்பட்டுள்ளார். அவரிடம், எழும்பூர் 14-வது குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி கோபிநாத், மருத்துவமனைக்கே வந்து, வாக்குமூலம் பெற்றுள்ளார். மேலும், ராம்குமாரை ஜூலை 18-ஆம் தேதி வரை, நீதிமன்றக் காவலில் வைக்கவும் உத்தரவிட்டுள்ளார். அடுக்கடுக்கான கேள்விகள் இதனிடையே சுவாதி படுகொலை … Continue reading ராம்குமார் கைது: காற்றில் விடப்பட்ட குற்றவியல் நடைமுறைகள்
விநோதினி வழக்கில் மரண தண்டனை அளிக்க கூடிய அளவுக்கு பெரிய குற்றம் நிகழ்ந்திருக்கிறது: நீதிமன்றம்
காதலை ஏற்க மறுத்ததால், கடந்த 2012 நவம்பர் மாதம் 14-ம் தேதி அமில வீச்சுக்கு ஆளானார் புதுச்சேரியைச் சேர்ந்த வினோதினி. மருத்துவமனையில் 2013-ம் ஆண்டு பிப்ரவரி 12-ம் தேதி அவர் மரணமடைந்தார். விநோதினி மீது அமிலம் வீசிய சுரேஷூக்கு காரைக்கால் நீதிமன்றம் ஆயுள் தண்டனை அளித்தது. அதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சுரேஷூக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது. விநோதினி வழக்கில் மரண தண்டனை அளிக்க கூடிய அளவுக்கு … Continue reading விநோதினி வழக்கில் மரண தண்டனை அளிக்க கூடிய அளவுக்கு பெரிய குற்றம் நிகழ்ந்திருக்கிறது: நீதிமன்றம்
அரசுத் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்.லுக்கு கட்டணத் திட்டங்களை வரையறுத்தது ரிலையன்ஸ்: எஸ்ஸார் டேப் வெளிப்படுத்தும் அதிர்ச்சி
By Meetu Jain with Ushinor Majumdar ‘எஸ்ஸார் டேப்ஸ்’ பெருமுதலாளிகள் இந்திய நீதித்துறையை, நாடாளுமன்றத்தை, வங்கிகளை, போட்டியாளர்களை, நிர்வாகிகளை எப்படி கையாண்டார்கள் என்பது குறித்து பயமுறுத்தும் உண்மையைச் சொல்கின்றன. ராடியா உரையாடல்களுக்கு பத்தாண்டுகளுக்கு முன்பே அரசாங்கம் எப்படியான மோசடிகளில் ஈடுபட்டது என்பதையும் இது காட்டுகிறது. முந்தைய பதிவை இங்கே படிக்கவும்: ராடியாவுக்கு முன்பே வாஜ்பாயி ஆட்சியில் இந்திய குடியரசு விற்பனைக்கு வந்தது; அதை வாங்கியது ரிலையன்ஸ்! எஸ்ஸார் ஒட்டுக்கேட்பு விவகாரத்தை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தவரான உபால், … Continue reading அரசுத் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்.லுக்கு கட்டணத் திட்டங்களை வரையறுத்தது ரிலையன்ஸ்: எஸ்ஸார் டேப் வெளிப்படுத்தும் அதிர்ச்சி
தலித்துகளுக்கு மேயர் பதவி: 10 ஆண்டு கால நீதிமன்றப் போராட்டத்துக்கு தீர்வு கிடைக்குமா?
சென்னை உயர்நீதிமன்றத்தில், கடந்த 2006-ஆம் ஆண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், பொதுச் செயலாளர் ரவிக்குமார், ரமேஷ்நாதன் ஆகியோர் உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவில், "நகராட்சி நிர்வாக சட்ட விதிகளின் படியும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் வலியுறுத்தி உள்ளபடியும், தலித் மக்கள் அதிகமுள்ள மாநகராட்சியில், அந்த மேயர் பதவியை தாழ்த்தப்பட்ட மக்களுக்கே வழங்க வேண்டும். கடந்த 2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 13.7 சதவீதம் தலித் மக்கள் சென்னையில் … Continue reading தலித்துகளுக்கு மேயர் பதவி: 10 ஆண்டு கால நீதிமன்றப் போராட்டத்துக்கு தீர்வு கிடைக்குமா?
கார்ப்பரேட் நலன்காக்கும் நீதிமன்றங்களும் களத்தில் வழக்கறிஞர்களும்: பாவெல் தருமபுரி
பாவெல் தருமபுரி சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தால் கொண்டுவரப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள வழக்கறிஞர் சட்டத்தில்(advocate practicing act 1961) செய்யப்பட்டுள்ள திருத்தம் குறித்து வழக்கறிஞர்கள் கடுமையான அதிருப்தியில் உள்ளனர். நீதிமன்ற புறக்கணிப்பும், ஊர்வலம் ஆர்ப்பாட்டமுமாக அவர்கள் ஆர்ப்பரித்து நிற்கிறார்கள். இது ஒருபுறம் என்றால் இன்னொருபுறம் சில முன்னாள், இந்நாள் நீதிபதிகளும், வழக்கறிஞர் பேராயத்தின் உறுப்பினர்களும் இந்த சட்டத்திருத்தத்துக்கு வரவேற்பு கம்பளம் விறிக்ககின்றனர். இந்த முரண்பாடு தொடர்பாகவும், வழக்கறிஞர் போராட்டங்களில் உள்ள சாதக பாதகங்கள் குறித்தும் இந்தக் கட்டுரை … Continue reading கார்ப்பரேட் நலன்காக்கும் நீதிமன்றங்களும் களத்தில் வழக்கறிஞர்களும்: பாவெல் தருமபுரி
பத்தி: பூவரசி எனும் இறைவியின் வாழ்க்கையைப் படமாக்க தைரியமிருக்கிறதா?
ஜி. கார்ல் மார்க்ஸ் கீழே இருப்பது தினத்தந்தி செய்தி. இதை அப்படியே படமாக எடுப்பதற்கு யாருக்காவது தைரியம் இருக்கிறதா? நமது நிஜ வாழ்க்கை எவ்வளவு ராவாக இருக்கிறது பாருங்கள். தன்னைக் காதலித்தவளை 'வேறொருவனைக் கல்யாணம் செய்துகொள்' என்று அறிவுரை சொல்லும் ஒருவன். அவன் மீதுள்ள கோபத்தில் அவனது நான்கு வயது மகனைக் கொலைசெய்யும் இறைவியான காதலி. அன்பும், காமமும் துரோகமாக மாறும் புள்ளி அரூபமானது. நாம் கலையெனக் கொண்டாடுவதெல்லாம் எவ்வளவு போலியானவை என்று முகத்திலறைந்து உணர்த்துகிறாள் பூவரசி!! … Continue reading பத்தி: பூவரசி எனும் இறைவியின் வாழ்க்கையைப் படமாக்க தைரியமிருக்கிறதா?
“வழக்கறிஞர் சத்தமாக வாதிட்டார்”: தானாக முன்வந்து வழக்கு தொடுத்த மதுரை நீதிமன்றம்
வழக்கறிஞர் சத்தமாக வாதிட்டார் என்ற காரணத்தைச் சொல்லி தானாக முன்வந்து நீதிமன்றம் அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை. மனுவில், பி. செங்குட்டரசன் என்ற வழக்கறிஞர், நீதிபதி சி. சொக்கலிங்கம் முன்பு வாதாடியபோது வழக்கத்துக்கு மாறாக சத்தமாக வாதிட்டார். நீதிபதி சொல்லியும் கேட்காமல் அவர் மீண்டும் சத்தமாகவே பேசினார். நீதிபதியின் எச்சரிக்கையை அவர் மீறியதோடு நீதிமன்றத்தை சிரமத்திற்கு உள்ளாக்கினார். எனவே நீதிமன்றத்தை அவமதித்தார் என்பதற்காக அவர் மீது தாமாக முன்வந்து இந்த நீதிமன்றம் வழக்குத் … Continue reading “வழக்கறிஞர் சத்தமாக வாதிட்டார்”: தானாக முன்வந்து வழக்கு தொடுத்த மதுரை நீதிமன்றம்
ஒரு நீதிபதியின் கையில் வழக்குரைஞரின் பணியை தொடரும் அதிகாரம் வழங்குவது சர்வாதிகாரத்தனமானது: ச.பாலமுருகன்
ச.பாலமுருகன் சென்னை உயர்நீதிமன்றம் கடந்த வாரம் வழக்குரைஞர்கள் சட்டத்தில் பிறப்பித்த சட்டத்திருத்தத்தின் படி நீதிமன்றத்தில் போராட்டம் நடத்துவது, பதாகைகளை பிடிப்பது மற்றும் நீதிபதி பெயரைச்சொல்லி பணம் பெறுவது, நீதிபதிகளை ஆதாரமற்று விமர்சிப்பது மற்றும் குடி போதையில் நீதிமன்றத்திற்கு வருவது உள்ளிட்ட காரணங்களுக்காக உயர்நீதிமன்ற நீதிபதி அல்லது மாவட்ட நீதிபதியானவர் வழக்குரைஞர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம். உடனடியாக குறிப்பிட்ட காலத்திற்கு அந்த நபர் வழக்குரைஞராக தொழில் செய்வதை தடுத்து உத்திரவிடலாம். இது உடனடியாக தமிழக அரசிதழில் வெளியாகி … Continue reading ஒரு நீதிபதியின் கையில் வழக்குரைஞரின் பணியை தொடரும் அதிகாரம் வழங்குவது சர்வாதிகாரத்தனமானது: ச.பாலமுருகன்
“துப்புரவு பணியாளர்கள் லிஃப்டை பயன்படுத்தினால் சம்பள பிடித்தம் செய்யப்படும்”: இந்திய பார் கவுன்சில் சுற்றறிக்கை
இந்திய பார் கவுன்சில் கட்டத்தில் உள்ள லிஃப்டை யார் பயன்படுத்த வேண்டும், யார் பயன்படுத்தக் கூடாது என்பது குறித்து பார் கவுன்சில் தலைவர் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார். இதில், பணியாளருக்கும் கீழே உள்ள துணை செயலாளர்கள் போன்றோர், 50 வயதுக்கும் கீழே உள்ளவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள் தவிர மற்றவர்கள் லிஃப்டைப் பயன்படுத்தினால் அவர்களுடைய அந்த நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும். அதுபோல, துப்புரவாளர்கள், வெளி ஏஜென்ஸிகள் மூலம் பணியாற்ற வருபவர்கள் 50 வயதுக்கும் கீழே உள்ளவர்கள், … Continue reading “துப்புரவு பணியாளர்கள் லிஃப்டை பயன்படுத்தினால் சம்பள பிடித்தம் செய்யப்படும்”: இந்திய பார் கவுன்சில் சுற்றறிக்கை
மேக் இன் இந்தியாவிற்கு முன்பு, குஜராத்தின் அந்த குடியிருப்பு முழுவதும் இல்லாமல் ஆக்கப்பட்டது: சித்தார்த் வரதராஜன்
சித்தார்த் வரதராஜன் பிப்ரவரி 28, 2002 அகமதாபாத்தில் உள்ள குல்பர்க் குடியிருப்பு வளாகத்தில் 69 பேர் படுகொலை செய்யப்பட்டதற்கான தீர்ப்பு, மிக மோசமான இந்த நேரத்தில் வந்திருக்கக் கூடாது. பிரதமர் நரேந்திர மோடி, அப்போது குஜராத் முதலமைச்சராக இருந்தார். ஒரு தலைவராக மக்களின் பலமான உணர்வுகளை அவர் தூண்டுகிறார். பலர் அவர் தவறு செய்யமாட்டார் என நினைக்கிறார்கள். சிலர் அவரால் நல்லதை செய்யவே முடியாது என நம்புகிறார்கள். பிப்ரவரி 28, 2002 கொலைகள், அவர் விரும்பியதால் நிகழ்ந்தனவா? … Continue reading மேக் இன் இந்தியாவிற்கு முன்பு, குஜராத்தின் அந்த குடியிருப்பு முழுவதும் இல்லாமல் ஆக்கப்பட்டது: சித்தார்த் வரதராஜன்
கடந்த ஆறு ஆண்டுகளாக ஒரேஒரு தலித்/பழங்குடி நீதிபதிகூட உச்சநீதிமன்றத்தில் நியமனம் பெறவில்லை!
எழுதியவர்: Maneesh Chhibber கடந்த ஆறு ஆண்டுகளாக ஒரேஒரு தலித்/பழங்குடி நீதிபதிகூட உச்சநீதிமன்றத்தில் நியமனம் பெறவில்லை என இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி கட்டுரை வெளியிட்டுள்ளது. 2010 -ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த கே.ஜி. பாலகிருஷ்ணன் ஓய்வுபெற்றதற்குப் பிறகு, தலித் வகுப்பைச் சேர்ந்த எவரும் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படவில்லை. இதேபோல்தான் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களும் நியமிக்கப்படவில்லை. இந்திய மக்கள் தொகையில் 16 சதவீத மக்கள் தொகையுள்ள தலித்துகளில் ஒருவர்கூட நீதிபதியாக நியமனம் பெறவில்லை. கடந்த … Continue reading கடந்த ஆறு ஆண்டுகளாக ஒரேஒரு தலித்/பழங்குடி நீதிபதிகூட உச்சநீதிமன்றத்தில் நியமனம் பெறவில்லை!
33 கோடி மக்களுக்கு தண்ணீர் இல்லை;ஆனால், நாடே சுப்ரமணிய சாமியின் நாடாளுமன்ற தெருச் சண்டையில் லயித்திருக்கிறது!
அன்பே செல்வா 33 கோடி மக்கள் குடிக்கக் கூட தண்ணீர் இன்றி தவித்துக் கொண்டிருக்கிறார்கள், மாராஷ்டிரா, தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு என்று 12 மாநில மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக வல்லுனர்கள் சொல்கிறார்கள், ஆனால் மோடி சர்க்கார் இது மாநிலங்களின் பிரச்னை மொத்தமாக கைவிட்டு விட்டது, நமது தேசிய மீடியாக்களும் நாடாளுமன்றமும் சுப்பிரமணிய சாமி எழுப்பிய ராணுவ தளவாட ஊழலில் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருக்கையில் மகாராஸ்ட்ராவில் மட்டும் 1891 விவசாயிகள் தற்கொலை செய்து முடித்திருக்கிறார்கள், பெட்ரோல் விலை ஏற்றத்தையே அதுக்கும் மத்திய அரசுக்கும் … Continue reading 33 கோடி மக்களுக்கு தண்ணீர் இல்லை;ஆனால், நாடே சுப்ரமணிய சாமியின் நாடாளுமன்ற தெருச் சண்டையில் லயித்திருக்கிறது!
“நீ என்ன லாயர் மயிரு”; “வெளிநாட்டுலயா இருக்குறா”: பேண்ட் சட்டைப் போட்ட முகநூல் தமிழ் கலாச்சார காவலர்கள் இந்த உடைக்கு சொல்லும் கமெண்ட்!
கிருபா முனுசாமி உச்சநீதிமன்ற வழக்கறிஞராக உள்ளார். இவர் தன்னுடைய முகநூலில் ஒரு புதிய படத்தைப் பகிர்கிறார். அந்தப் படத்தை முகப்பில் தந்திருக்கிறோம். இந்த படத்தில் தமிழ் கலாச்சாரத்துக்கு விரோதமாக உடை (தமிழ் கலாச்சார உடை எது? ரவிக்கை அணியாமல் நீளமான புடவையை உடலில் சுற்றிக் கொள்வது இப்படித்தான் பண்டைய தமிழர்கள் உடையணிந்தனர். இதுதான் இவர்கள் குறிப்பிடும் தமிழ் கலாச்சார உடையா?) அணிந்தார் என்பதற்காக கிருபாவுக்கு அறிவுரை வழங்குகிறார் ஒருவர். அவர் அறிவுரை குறித்து கேள்வி எழுப்பும் கிருபாவை அத்துமீறி … Continue reading “நீ என்ன லாயர் மயிரு”; “வெளிநாட்டுலயா இருக்குறா”: பேண்ட் சட்டைப் போட்ட முகநூல் தமிழ் கலாச்சார காவலர்கள் இந்த உடைக்கு சொல்லும் கமெண்ட்!
கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதான யுவராஜ் மீதான குண்டர் சட்டம் ரத்து
மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் யுவராஜ் . இவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதனை எதிர்த்து அவரது மனைவி சுமிதா சென்னை உயர்நீதிமன்றத்தி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், யுவராஜ் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.
“பிரதமர் எஃப்டிஐ, மேக் இன் இந்தியா பற்றியெல்லாம் பேசுகிறார்”: மோடி முன்பு நா தழுதழுத்து விமர்சனம் செய்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி!
புதுதில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வருடாந்திர முதல்வர்கள் மற்றும் தலைமை நீதிபதிகள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி மேடையில் இருக்கும் போதே, நீதித்துறை விவகாரத்தில் மத்திய அரசின் செயலற்ற தன்மையை தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர் நா தழுதழுக்க விமர்சித்தார். “நாட்டின் வளர்ச்சிக்காக நான் இந்தத் தருணத்தில் கெஞ்சிக் கேட்கிறேன், நீதித்துறையை விமர்சிக்காதீர்கள். ஒட்டுமொத்த சுமையையும் நீதித்துறை மீது சுமத்தாதீர்கள். எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டு. நீதிமன்ற வழக்கில் ஈடுபட்டுள்ளவர்கள் சிறையில் வாடும் ஏழை வழக்காளிகள், (உணர்ச்சிவசப்பட்டு குரல் உடைந்து) … Continue reading “பிரதமர் எஃப்டிஐ, மேக் இன் இந்தியா பற்றியெல்லாம் பேசுகிறார்”: மோடி முன்பு நா தழுதழுத்து விமர்சனம் செய்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி!
எழுவரை விடுதலை செய்ய முடியாது: மத்திய அரசு திட்டவட்டம்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ஏழு பேரை விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய உள்துறை செயலர் ராஜிவ் மெஹ்ரிஷிக்கு, தமிழக அரசின் தலைமைச் செயலர் ஞானதேசிகன் கடந்த மார்ச் 2-ம் தேதி கடிதம் எழுதியிருந்தார். அதில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஏழு பேரும் ஏற்கனவே 24 ஆண்டுகள் சிறையில் கழித்துள்ளதால், அவர்களின் கோரிக்கையை ஏற்று விடுவிக்க அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஏழு பேரையும் … Continue reading எழுவரை விடுதலை செய்ய முடியாது: மத்திய அரசு திட்டவட்டம்
“பேரறிவாளன் குற்றவாளி இல்லை” தெளிவுபடுத்திய பல்நோக்கு விசாரணைக் குழு
இராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வேலூர் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், குற்றவாளி இல்லை என பல்நோக்கு விசாரணை குழு தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சில கேள்விகளை எழுப்பிய பேரறிவாளனுக்கு, அளித்த பதிலில் இதைக் குறிப்பிட்டிருக்கிறது பல் நோக்கு விசாரணைக் குழு. இதுகுறித்து வழக்குரைஞர்.சிவக்குமாரிடம் பேசினோம். "இராஜீவ் காந்தி கொலை வழக்கு இரண்டு நீதிமன்றங்களில் நடைபெற்றது.ஒன்று தடா நீதிமன்றம். மற்றொன்று பல்நோக்கு விசாரணை குழுவின் விசாரணை. தடா நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் … Continue reading “பேரறிவாளன் குற்றவாளி இல்லை” தெளிவுபடுத்திய பல்நோக்கு விசாரணைக் குழு
பி. ஆர்.பி. கிரானைட் வழக்கு: நீதிபதி மகேந்திர பூபதியின் தீர்ப்புக்குப் பின்னால்…
பாலச்சந்திரன் சட்டத்துக்கு புறம்பாக கிரானைட் கற்கள் வைத்திருந்தது தொடர்பாக, பி.ஆர்.பி கிரானைட் நிறுவனர் அய்யா பி.ஆர்.பழனிச்சாமி மற்றும் அதன் பங்குதாரர்கள் ஆகியோர் குற்றவாளிகள் இல்லை எனக்கூறி, மேலூர் மாவட்ட நீதிபதி மகேந்திரபூபதி உத்தரவிட்டுள்ளார். இவ்வழக்கில், மாவட்ட ஆட்சியராக இல்லாதபோது ஆட்சியராக இருந்ததுபோல் கையொப்பமிட்டு பொய்யாக புகார் மனு தாக்கல் செய்துள்ளதாக மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா மீது குற்றம் சாட்டிய நீதிபதி மகேந்திரபூபதி, அன்சுல் மிஸ்ராவுக்கு அரசு சிறப்பு வழக்கறிஞர்கள் ஷீலா, ஞானகிரி ஆகியோர் … Continue reading பி. ஆர்.பி. கிரானைட் வழக்கு: நீதிபதி மகேந்திர பூபதியின் தீர்ப்புக்குப் பின்னால்…
மனநோயாளிகள், பொய்வழக்கு, ஸ்மார்ட் போன், கரி சோறு, கஞ்சா: திலீபன் மகேந்திரனின் புழல் சிறை அனுபவங்கள்
திலீபன் மகேந்திரன் புழல் சிறையில் இருக்கும் 1800 கைதிகளில் 900 பேர் மீது பொய் வழக்கு. இதை என்னிடம் சொன்னது புழல் உயர் காவல் அதிகாரி குமார். கை, காலை உடைத்து புழல் சிறையில் இருப்பவர்கள் 200-க்கும் மேல், இவர்கள் அனைவரும் ஏழைகள் பஞ்சத்துக்கு திருடுபவர்கள். இதுவரை ஒரு பெருமுதலாளியோ அல்லது ஊழல் செய்த தொழிலதிபரையோ போலீஸ் அதிகாரிகள் கை, காலை உடைக்க வில்லை. கேள்வி கேட்க ஆளில்லாத அப்பாவி பொது மக்கள் மீது மட்டும் வன்மத்தை … Continue reading மனநோயாளிகள், பொய்வழக்கு, ஸ்மார்ட் போன், கரி சோறு, கஞ்சா: திலீபன் மகேந்திரனின் புழல் சிறை அனுபவங்கள்
உயர்பதவியில் இருப்போரின் பிரபுத்துவ மனப்பான்மை:நீதிபதி ஹரிபரந்தாமன்
உயர்பதவியில் இருப்பவர்கள் இன்னமும் பிரபுத்துவ மனப்பான்மையில் இருக்கிறார்கள் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி.ஹரிபரந்தாமன் கூறினார். நீதிபதி டி.ஹரிபரந்தாமன் பணி ஓய்வுபெற்றதையடுத்து, அவருக்கு பிரிவு உபசார விழா உயர் நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமை வகித்தார். தமிழக அரசு தலைமை வழக்குரைஞர் ஏ.எல்.சோமையாஜி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விழாவில், நீதிபதி டி.ஹரிபரந்தாமன் பேசியதாவது: பொதுவாக உயர் பதவியில் இருப்போர் ஒருபிரபுத்துவ மனப்பான்மையில் இருப்பது வருத்தத்துக்குரியது. சுதந்திரத்துக்கு முன்பு இந்தியா ஆங்கிலேயர்களாலும், பல … Continue reading உயர்பதவியில் இருப்போரின் பிரபுத்துவ மனப்பான்மை:நீதிபதி ஹரிபரந்தாமன்
ஆணவக் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் யுவராஜ், சங்கரின் கொலையை ஆதரித்து எழுதுகிறார்; நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்குமா?
ஆதவன் தீட்சண்யா " ஒரு பட்டியலினத்தவர், பட்டியலினம் இல்லாத ஏதோ ஒரு சமூகத்தில் திருமணம் செய்துள்ள நிலையிலோ, காதலிக்கும் நிலையிலோ, சந்தேக மரணமோ, கொலையோ நடந்துவிட்டால் அதற்கு சாதி ஆணவக் கொலை என பெயர் சூட்டுவது ஏன்? இவ்வாறு பேசுபவர்கள், அவர்களுக்கு ஆதரவு தருபவர்கள் என அனைவரும் கூறும் ஒரே காரணம், அவன் பட்டியலினத்தை சேர்ந்த சமூகம். இப்படிப்பட்ட காரணங்களுக்காக ஒரு மரணம் நிகழ்த்தப்படுமானால் அதற்கு சமூகம் காரணம் இல்லை. பெண்ணை கவர்ந்து செல்பவன் பெண் வீட்டாரை … Continue reading ஆணவக் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் யுவராஜ், சங்கரின் கொலையை ஆதரித்து எழுதுகிறார்; நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்குமா?
நீதிபதியின் சாதி மனசாட்சி..!
வன்னி அரசு. சாதி மறுத்து காதல் மணம் புரிந்த சங்கர் கவுசல்யாவை பட்டப்பகலில் அரிவாளால் வெட்டிச் சாய்த்தது சாதிவெறி கும்பல். காதல் மணம் புரிந்த எட்டு மாதங்கள் முழுக்க கொலை மிரட்டல்கள், லட்சங்களில் பணம் தருகிறோம் என்று அவன் காதலுக்கு விலை சொல்லப்பட்ட போதும், இரண்டு முறை கொலை முயற்சி நடந்தபோதும் எந்த விதத்திலும் தன் காதலை விட்டுத்தராமல், உறுதியோடு நின்று, இந்த முறை நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டான் எங்கள் வீரன் சங்கர். எல்லாவற்றையும் விட தான் … Continue reading நீதிபதியின் சாதி மனசாட்சி..!
’ஜட்டியோட நிக்கவைத்து போட்டோ எடுத்தது ஏன்?’ நீதிபதிகள் கேள்வி
உடுமலைப் பேட்டையில் பொறியியல் மாணவரும் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட தலித் இளைஞருமான சங்கர் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் என ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களின் புகைப்படம் பத்திரிகைகளில் வெளியானது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்குக் தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணையில், நீதிபதிகள் நாகமுத்து, ஜெயச்சந்திரன் ஆகியோர் "பத்திரிகைகளில் வெளியான புகைபட்டத்தில் உள்ளபடி, கைது செய்யப்பட்டவர்களுக்கு உரிய ஆடையை வழங்காமல் போலீஸ் நிறுத்தியது ஏன்? " என்று கேள்வி எழுப்பியதுடன் … Continue reading ’ஜட்டியோட நிக்கவைத்து போட்டோ எடுத்தது ஏன்?’ நீதிபதிகள் கேள்வி
“தமிழக அரசு நினைத்தால் இன்றே எழுவரை விடுவிக்க முடியும்; கடிதம் எழுதுவது ஏமாற்று வேலை”: நளினியின் வழக்கறிஞர் எம்.ராதாகிருஷ்ணன்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ஏழு பேரை விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய உள்துறை செயலர் ராஜிவ் மெஹ்ரிஷிக்கு, தமிழக அரசின் தலைமைச் செயலர் ஞானதேசிகன் கடிதம் எழுதியுள்ளார். அதில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஏழு பேரும் ஏற்கனவே 24 ஆண்டுகள் சிறையில் கழித்துள்ளதால், அவர்களின் கோரிக்கையை ஏற்று விடுவிக்க அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஏழு பேரையும் விடுவிக்கும் முடிவு தொடர்பாக மத்திய … Continue reading “தமிழக அரசு நினைத்தால் இன்றே எழுவரை விடுவிக்க முடியும்; கடிதம் எழுதுவது ஏமாற்று வேலை”: நளினியின் வழக்கறிஞர் எம்.ராதாகிருஷ்ணன்