“இவர்கள் சொல்வது ஜெய்ஹிந்த் அல்ல; ஜியோஹிந்த்!”: யெச்சூரி

ஏழை மக்கள் சாப்பிடுவதற்கு ரொட்டிகள் இல்லாவிட்டால் என்ன; கேக் சாப்பிடுங்களேன் என்று பிரெஞ்சு புரட்சி காலகட்டத்தில் அந்நாட்டின் மகாராணி கூறியதை போல, இப்போது கையில் ரூபாய் நோட்டு இல்லாவிட்டால் என்ன, பிளாஸ்டிக் ரூபாய் வரப் போகிறது, அதைப் பயன்படுத்துங்கள் என்று இந்திய ஏழைகளை ஏளனம் செய்கிறார் பிரதமர் நரேந்திர மோடி என நாடாளுமன்றத்தில் கடுமையாக சாடினார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி. 1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் … Continue reading “இவர்கள் சொல்வது ஜெய்ஹிந்த் அல்ல; ஜியோஹிந்த்!”: யெச்சூரி

“மாநிலங்களை கையேந்தும் நிலைக்குத் தாழ்த்திவிடாதீர்”: நாடாளுமன்றத்தில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு

சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டமுன்வடிவு கொண்டுவரப்படுகையில் மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படக்கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி எம்.பி. கூறினார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. புதனன்று மாநிலங்களவையில் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்புக்கு (ஜிஎஸ்டி) வகை செய்யும் விதத்தில் அரசமைப்புச்சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதற்கான சட்டமுன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது. இதில் பங்கேற்று சீத்தாராம் யெச்சூரி பேசியது: இப்போது கொண்டுவந்திருக்கிற இந்தச் சட்டத்திருத்தம் அரசமைப்புச் சட்டத்தில் மிகவும் முக்கியமான திருத்தம். … Continue reading “மாநிலங்களை கையேந்தும் நிலைக்குத் தாழ்த்திவிடாதீர்”: நாடாளுமன்றத்தில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு

”தெருச் சண்டைக்கு நாடாளுமன்ற விவாதத்துக்கும் வித்தியாசம் தெரியாதவர் சுப்ரமணியம் சுவாமி”

சமீபத்தில் மாநிலங்களவை எம்பியாக பாஜக சார்பில் நியமிக்கப்பட்டவர் பாஜக மூத்தத் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி. ஆதாரம் இல்லாத அவதூறு பேச்சுகளுக்கு சொந்தக் காரரான சு. சுவாமி, மாநிலங்களவையில் நுழைந்த நாளில் இருந்தே தெருச்சண்டை களமாகிவிட்டதாக எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளன. மாநிலங்களவையில் பேசிய சுப்ரமணியன் சுவாமி, அக‌ஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் விவகாரத்தில் சில சர்ச்சைக்குரிய கருத்துகளை மீண்டும் தெரிவித்தார். இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். அப்போது பேசிய அக்கட்சியின் மூத்த … Continue reading ”தெருச் சண்டைக்கு நாடாளுமன்ற விவாதத்துக்கும் வித்தியாசம் தெரியாதவர் சுப்ரமணியம் சுவாமி”

‘தேச துரோகி’கள் நிறைந்த ஜேஎன்யூ, எச்என்யூவை சிறந்த பல்கலைக்கழகங்களாக அறிவித்தார் ஸ்மிருதி இரானி!

ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகமும், ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகமும் நாட்டின் சிறந்த பல்கலைக் கழகங்களாக விளங்குகின்றன என்று அரசாங்கத்தின் ஆய்வறிக்கைகளே ஒப்புக் கொண்டிருக்கின்றன.தேசியவாதம் மற்றும் பேச்சுரிமை தொடர்பான விவாதங்களில் மத்திய அரசின் படுமோசமான நடவடிக்கைகளின் மூலம் மாணவர் சமுதாயத்தின் மத்தியில் கோபாவேசத்தை எழுப்பியுள்ள இந்த இரு பல்கலைக் கழகங்களும் தான் நாட்டின் முதன்மையான பல்கலைக் கழகங்களில் முதல் இரண்டு இடங்களை வகிக்கின்றன. மாணவர்களுக்கு ஆராய்ச்சி படிப்புகளுக்கான வசதிகளைச் செய்து தருவதிலும் சரி, அவர்கள் படித்து முடிந்தபின் … Continue reading ‘தேச துரோகி’கள் நிறைந்த ஜேஎன்யூ, எச்என்யூவை சிறந்த பல்கலைக்கழகங்களாக அறிவித்தார் ஸ்மிருதி இரானி!

பார்லிமென்ட்க்கு ஹார்லி டேவிட்சன் பைக் ; மகளிர் தினத்தில் அதிரடித்த பெண் எம்.பி !!!

பீகார் மாநிலம் சுபால் மக்களவைத் தொகுதியிலிருந்து காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ரஞ்ஜீத் ராஜன் . 42 வயதான ரஞ்சித் 'ஹார்லி-டேவிட்சன்' நிறுவனத்தின் பைக்கில் பாராளுமன்றம் வந்து இறங்கி, அனைவரையும் ஆச்சரியத்திற்கு ஆளாக்கினார். https://www.youtube.com/watch?v=FOBESM5gk6w பொதுவாக மக்களவைக்கு காரில் வரும் எம்.பிக்கள் தங்களது வாகனத்தைக்கூட பார்க்கிங்கில் நிறுத்த மாட்டார்கள்.அப்படியிருக்க காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி ரஞ்ஜீத் ரஞ்சன் இன்று தனது ஹார்லி டேவிட்சன் பைக்கை அவராகவே ஓட்டி வந்து பார்க்கிங் செய்து அனைவரையும் அதிர வைத்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் … Continue reading பார்லிமென்ட்க்கு ஹார்லி டேவிட்சன் பைக் ; மகளிர் தினத்தில் அதிரடித்த பெண் எம்.பி !!!

பாஜகவின் Z டீம் எது தெரியுமா?

ஹைதராபாத் பல்கலைக் கழக தலித் ஆராய்ச்சி மாணவர் ரோஹித் வெமுலாவின் மரணம் குறித்து நாடாளுமன்றத்தில் அப்பட்டமாக பொய்களை அள்ளி வீசி, நாடாளுமன்றத்திற்கும், நாட்டிற்கும் தவறான தகவல்களை அளித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி மீது காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மீதுஉரிமை மீறல் தீர்மானங்களை கொண்டு வந்தன. இந்த தீர்மானங்களை எதிர்கொள்ள முடியாமல், ஆளுங்கட்சியான பாஜக, உரிமை மீறல் தீர்மானத்திற்கு பதிலடி என்ற பெயரில் காங்கிரஸ் உறுப்பினர் ஜோதிர் ஆதித்யா சிந்தியாவுக்கு எதிராக … Continue reading பாஜகவின் Z டீம் எது தெரியுமா?

ஸ்மிருதி இரானியின் ‘நாடக உரை’க்கு விளக்கவுரை தந்த சீதாராம் யெச்சூரி

நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஜவஹர் லால்நேரு பல்லைக் கழகம் மற்றும் ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகம் ஆகியவற்றில் நடை பெற்றுவரும் நிகழ்வுகளால் எழுந்துள்ள நிலைமைகள் குறித்து குறுகிய கால விவாதம் வியாழன் அன்று நடை பெற்றது. அதில் பங்கேற்று சீத்தாராம் யெச்சூரி பேசினார். அதன் தமிழாக்கத்தை தீக்கதிர் வெளியிட்டிருக்கிறது. உரையின் முக்கியத்துவம் கருதி அதை இங்கே நன்றியுடன் மறுபதிப்பு செய்கிறோம். தமிழாக்கம்: ச. வீரமணி “நான் இந்தப் பிரச்சனைகள் மீது மிகவும் பொறுக்கமுடியாத மன வேதனை, மனக் கவலை … Continue reading ஸ்மிருதி இரானியின் ‘நாடக உரை’க்கு விளக்கவுரை தந்த சீதாராம் யெச்சூரி

#அவசியம்வாசிக்க: ‘காவிக் கிண்ணத்தில் ஊழல் வழிகிறது’ சீதாராம் யெச்சூரியின் நேர்காணல்

பாஜக இந்து வாக்குவங்கியை ஒருமுகப்படுத்துவதற்காகவே, ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தேசவிரோத முழக்கங்களை எழுப்பினார்கள் என்று பொய்யாக ஜோடனை செய்து நடவடிக்கை எடுத்திருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார். டெக்கான் ஹெரால்ட் நாளேட்டின் நிருபர்கள் சஞ்சய் பசக் மற்றும் நம்ராதா பிஜி அஹூஜா ஆகியோருக்கு யெச்சூரி அளித்த நேர்காணல். தீக்கதிருக்காக தமிழாக்கம் செய்தவர் ச. வீரமணி கேள்வி: ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் எழுப்பப்பட்ட தேச விரோத முழக்கங்களை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? சீத்தாராம் யெச்சூரி: … Continue reading #அவசியம்வாசிக்க: ‘காவிக் கிண்ணத்தில் ஊழல் வழிகிறது’ சீதாராம் யெச்சூரியின் நேர்காணல்

பதிலில் திருப்தியில்லை;தலையை வெட்டிக் கொள்வீர்களா ஸ்மிருதி? : அதிரவைத்த மாயாவதி

ஹைதராபாத் பல்கலைக்கழக தலித் ஆராய்ச்சி மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலைக்கு தள்ளப்பட்ட விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, அப்பட்டமாக பொய்களை அள்ளி வீசியது கடும் கண்டனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. ஸ்மிருதி இரானி தனது பொய்களுக்கு உரிய விளக்கங்களை அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் காரசாரமான விவாதத்தை வெள்ளியன்றும் மேற்கொண்டனர். மாநிலங்களவையில் வெள்ளியன்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, மாயாவதி இடையே நேருக்கு நேர் மோதல் ஏற்பட்டது. மாயாவதி, “இந்த விசாரணைக் கமிஷனில் … Continue reading பதிலில் திருப்தியில்லை;தலையை வெட்டிக் கொள்வீர்களா ஸ்மிருதி? : அதிரவைத்த மாயாவதி

விவசாயத்தை கார்ப்பரேட் தொழிலாக்குங்கள்: பொருளாதார ஆய்வறிக்கை அரசுக்கு பரிந்துரை

இந்திய விவசாயத்தில் உணவு தானியத்திற்கான விவசாயம் பெரும் நட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அதனால் அதற்கு மாற்றாக மரபணு மாற்றுப்பயிர்கள் குறித்த பரிசோதனைகளை 6 மாதங்களுக்குள் முடித்துநாடு முழுவதும் விரிவாக அமல்படுத்தப்படும் எனவும் மோடி அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தீக்கதிர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் வந்துள்ள தகவல்கள்... பல ஆண்டுகளாக பெரும்பான்மையான இந்திய விவசாயத்தில் உணவுக்கான உற்பத்தியே நடந்து வருகிறது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் மட்டும் பணப்பயிர்களும் ஆடம்பரப் பயிர்களும் நமது விவசாயத்தில் திணிக்கப்பட்டன. இதன் … Continue reading விவசாயத்தை கார்ப்பரேட் தொழிலாக்குங்கள்: பொருளாதார ஆய்வறிக்கை அரசுக்கு பரிந்துரை

“இயற்கை உபாதை” என்று கூறுவது தவறா?: ஆபாச தாக்குதல் புகாரை கையிலெடுத்த ஸ்மிருதி இரானி !!!

ஜே.என்.யூ விவகாரம் குறித்து லோக்சபாவில்   ஆவேசமாக பேசி, பத்திரிக்கைகளில், இணையங்களில் பாராட்டு பெற்ற ஸ்மிருதி இரானி, ராஜ்யசபாவில்  அந்தளவு ஆவேசத்தை காண்பிக்க முடியாமல் நேற்று (25.02.16)அவஸ்தைக்கு ஆளாகினர். இரானியின் குற்றச்சாட்டுக்களுக்கு, உடனுக்குடன் கம்யூனிஸ்ட்,  காங்கிரஸ்  உறுப்பினர்கள்  பதில் அளித்ததால், அமைச்சர் தடுமாறினார். அத்துடன் மட்டுமல்லாமல், அவையில் நாகரீகங்கள் தெரியாமல், அநாகரீகமாக இரானி நடந்துகொல்வதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. இந்நிலையில், "மகிசாசுரனை ஆதரித்து" ஜேஎன்யூ மாணவர்கள் நடத்திய போராட்டம் குறித்து லோக்சபாவில்  கூறிய அதே புகார்களை ராஜ்யசபாவில் முன் வைக்க  … Continue reading “இயற்கை உபாதை” என்று கூறுவது தவறா?: ஆபாச தாக்குதல் புகாரை கையிலெடுத்த ஸ்மிருதி இரானி !!!

நான் கம்யூனிஸ்ட் இல்லை;ஆனால் கம்யூனிஸ்ட்டின் பேச்சுரிமைக்காகவும் குரல் கொடுப்பேன்:பாராட்டை அள்ளும் திரிணாமுல் எம்பி.யின் உரை!!!

ஜே.என்.யூ மாணவர்கள் தேசவிரோத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது தொடர்பாக பாராளுமன்ற மக்களவையில் நேற்று விவாதம் நடைபெற்றது. அதில் பேசிய, ஹார்வார்டில் பாடங்கள் எடுத்தவரும், முப்பது வருடங்களாக பேராசிரியராக பணிபுரிந்தவருமான , திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி சுகதோ போசின் உரை, பெரும் பாராட்டை பெற்றுள்ளது. டிவிட்டரில் #praisesugato என்ற ஹேஷ் டேக் பிரபலமடைந்துள்ளது.  அந்த அற்புதமான உரையின் தமிழாக்கம் கீழே. *30 வருடங்களுக்கு மேலாக ஆசிரியராக இருந்தவன் என்கிற முறையில்,  மாண்புமிகு சக உறுப்பினர்கள், என்னுடைய உரையை … Continue reading நான் கம்யூனிஸ்ட் இல்லை;ஆனால் கம்யூனிஸ்ட்டின் பேச்சுரிமைக்காகவும் குரல் கொடுப்பேன்:பாராட்டை அள்ளும் திரிணாமுல் எம்பி.யின் உரை!!!

“ஆண்டி நேஷனல்”: ஸ்மிருதி இரானியின் நாடாளுமன்ற பேச்சை பகடி செய்யும் தி டெலிகிராப்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி வருகிறது. புதன்கிழமை ரோஹித் வெமுலாவின் தற்கொலையை ஒட்டி நாடாளுமன்றத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதிக்கும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கும் கடுமையான வாக்குவாதம் எழுந்தது. மாயாவதி பேசும்போது, “தலித் மாணவர் ஒருவர் பல்கலை தற்கொலை செய்து கொள்வது இது முதல்முறை அல்ல; குறிப்பாக அம்பேத்கரின் கொள்கைகளை முன்னெடுக்கும் ரோஹித் வெமூலா போன்ற மாணவர்களை ஆர். எஸ். எஸ். போன்ற அமைப்புகள் விரும்புவதில்லை. அவர்களை அழிக்க நினைக்கின்றன. தலித் மாணவர்கள் தொடர்ந்து … Continue reading “ஆண்டி நேஷனல்”: ஸ்மிருதி இரானியின் நாடாளுமன்ற பேச்சை பகடி செய்யும் தி டெலிகிராப்!