உள்நாட்டுச் சட்டங்களை மதிக்காத ராயல் என்பீல்டு நிறுவனம்

சுதந்திரம் அடைந்து எழுபது ஆண்டுகள் ஆனாலும், சங்கம் அமைக்கும் உரிமையையும், கூட்டுப் பேர உரிமையையும் நமது அரசுகளால் உறுதி செய்யமுடியவில்லை. இதற்கு சமீபத்திய உதாரணம் ராயல் என்பீல்டு. ஒரகடம் & வல்லம் பகுதியில் இயங்கி வருகிற இந்த வெளிநாட்டு நிறுவனம் இரு சக்கிர வாகன உற்பத்தி செய்கிறது. இதில் 8000 பேர் பணிபுரிந்தாலும் 1000 தொழிலாளர்களே நிரந்தரமான தொழிலாளர்கள்; இதர 7000 பேரும் ஒப்பந்தம், தினக்கூலி,பயிற்சியாளர், என பல்வேறு பெயர்களில் வேலை வாங்கப்படுகிறார்கள். இது நல்ல லாபம் … Continue reading உள்நாட்டுச் சட்டங்களை மதிக்காத ராயல் என்பீல்டு நிறுவனம்

4 மாதமாக தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காத மத்திய அரசு நிறுவனம்!

சென்னை, நந்தம்பாக்கத்தில் இந்தியன், டிரக்ஸ் & பார்மசூட்டிக்கல்ஸ் என்ற புகழ்பெற்ற மருந்து நிறுவனம் இருக்கிறது. இது மத்திய அரசின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் 32 தொழிலாளர்கள் மட்டுமே பணிபுரிகிறார்கள்; அத்தனை பேரும் தினக்கூலி தொழிலாளர்கள். ( இது தவிர ஒப்பந்தக்காரர் மூலம் பணி அமர்த்தப்பட்ட தொழிலாளர்களும் உண்டு ) இந்த 32 பேருக்கும் கடந்த நான்கு மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை.போனஸ் சட்டப்படி கடந்த மூன்று வருடங்களாக போனஸ் வழங்கப்படவில்லை. குறைந்த விலையில் மக்களுக்கு … Continue reading 4 மாதமாக தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காத மத்திய அரசு நிறுவனம்!

நீரைக் காக்க சிறுதுளி; விவசாயிகளுக்காக போராடினால் 8 நாள் சம்பளம் கட்; பிரிக்காலின் இரட்டை முகம்!

பள்ளி, கல்லூரிகள் திறக்கும் சமயத்தில் ஒவ்வொரு தொழிலாளிக்கும் ரூ.6000 முதல் ரூ.7000 வரை சம்பளப் பணத்தை பிடித்துக் கொண்டு Sadist போல மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

தீவிரமடைகிறது சேலம் உருக்காலைப் போராட்டம்!

சந்திரமோகன் "கார்ப்பரேட்டுகளின் டார்லிங் "ஆன மோடியின் விருப்பத்திற்கு ஏற்ப SAIL நிறுவனமானது, சேலம் உருக்காலைப் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய அறிவிப்பு வெளியிட்டுவிட்டது." 2010 ல் சேலம் உருக்காலை விரிவாக்கத்திற்காக வாங்கிய கடன் + வட்டியை செலுத்தவில்லை; நஷ்டம் அடையும் நிறுவனம் " என அறிக்கை தயாரித்துக் கொடுத்து சேவை செய்தது. தனியாருக்கு பங்குகளை விற்பதற்கு சேலம் உருக்காலையோடு, துர்காபூர்,பத்ராவதி உருக்காலைகளையும் இணைத்துக் கொண்டது. சில நவரத்னா பொதுத்துறை நிறுவனங்கள் வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய பெருங் கடன் … Continue reading தீவிரமடைகிறது சேலம் உருக்காலைப் போராட்டம்!

”அவன் எங்களை அணைப்பான்; மார்பகங்களை தொடுவான்”: திண்டுக்கல் ஆடை நிறுவனத்தில் நடக்கும் பாலியல் அத்துமீறல் குறித்து பெண்கள் எழுதிய கடிதம்

திண்டுக்கல் மாவட்டம் நல்லமனார் கோட்டை என்ற ஊரில் உள்ள ரமா ஸ்பின்னிங் மில்லில் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் அத்துமீறல்கள் குறித்து, ஆறு பெண்கள் இணைந்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். சமூக நலத்துறை அலுவலருக்கு அனுப்பிய அந்தக் கடிதம், பில்லியன் டாலர் வருமானம் ஈட்டும் டெக்ஸ்டைல் துறையின் அழுக்கு முகத்தைக் காட்டுவதாக அமைந்துள்ள அந்தக் கடிதம் என்கிறது ஹிந்துஸ்தான் டைம்ஸ். அந்நாளிதழில் வந்த கட்டுரையின் தமிழாக்கம் இங்கே: “அவன் எங்கள் மீது வேண்டுமென்றே விழுவான். இறுக்கிப் அணைப்பான், மார்பகங்களை தொட்டு, பிழிவான்” என்று … Continue reading ”அவன் எங்களை அணைப்பான்; மார்பகங்களை தொடுவான்”: திண்டுக்கல் ஆடை நிறுவனத்தில் நடக்கும் பாலியல் அத்துமீறல் குறித்து பெண்கள் எழுதிய கடிதம்

பொது வேலைநிறுத்தம் ஏன்?: சீத்தாராம் யெச்சூரி

பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி நாடுமுழுவதும் உள்ள தொழிற்சங்கங்கள் வெள்ளிக்கிழமை பொது வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளன. இந்த வேலை நிறுத்தம் ஏன் என சீத்தாராம் யெச்சூரி அளித்திருக்கும் கேள்வி-பதில் அறிக்கை: ஏன் இன்றைய தினம் (செப்டம்பர் 2) அகில இந்திய பொது வேலைநிறுத்தம் நடைபெறுகிறது? 12 கோரிக்கைகளை முன்வைத்து, அனைத்து தொழிற்சங்கங்களால் கூட்டாக வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கைகளை ஓராண்டுக்கு முன்பே அவர்கள் அரசாங்கத்திடம் சமர்ப்பித்துவிட்டார்கள். இந்தக் கோரிக்கைகள் நமது நாட்டின் உழைக்கும் மக்களது உரிமைகளையும், அடிப்படை வாழ்வாதாரங்களையும் உறுதிப்படுத்துவதற்காக … Continue reading பொது வேலைநிறுத்தம் ஏன்?: சீத்தாராம் யெச்சூரி

“தொழிலாளர்களுக்கு இரட்டை ஆயுள் பெற்றுத்தந்த வனிதா மோகனுக்கு நன்னெறிச் செம்மல் விருதா?” சூழலியலாளர்கள் எதிர்ப்பு

தொழிலாளர்களின் விரோதியும் கார்ப்பரேட் முதலாளியுமான கோவை பிரிக்கால் ஆலை இயக்குனர் வனிதா மோகனுக்கு “நன்னெறிச் செம்மல்” விருது வழங்குகிற கேலிக்கூத்து நிகழ்வைக் கண்டித்து புறக்கணிப்போம்” என சூழலியல் செயல்பாட்டாளர் அழைப்பு விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், “யாரிந்த வனிதா மோகன்? கோவை,பிரிக்கால் ஆலையின் அடக்குமுறைகளுக்கு எதிராக போராடிய தொழிலாளர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்தவர். தொழிலாளர் முன்னோடிகள் 8  பேருக்கு போலீஸ், நீதிமன்றத் துணையுடன்  இரட்டை ஆயுள் பெறுவதற்கு காரணமாக இருந்தவர். ஆலைத் தொழிலாளர்களின் அனுமதியின்றியே தனது … Continue reading “தொழிலாளர்களுக்கு இரட்டை ஆயுள் பெற்றுத்தந்த வனிதா மோகனுக்கு நன்னெறிச் செம்மல் விருதா?” சூழலியலாளர்கள் எதிர்ப்பு

பத்தி: 7-ஆவது சம்பளக் கமிஷன்; நாம் அறிந்தவையும் அறியாதவையும்

கண்ணன் ராமசாமி 7-ஆவது சம்பளக் கமிஷன் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே அரசு ஊழியர்களுக்கு போனான்சா என்று அனைத்து ஊடகங்களும் கூப்பாடு போடத் துவங்கி விட்டன. 7000 ரூபாயாக இருந்த சம்பளம் தற்போது 18000 ரூபாயாக உயர்ந்திருக்கிறது என்பதே இவர்களது கவலை. இதன் கணக்கை சரிபார்த்துக் கொண்டு மேற்படி கட்டுரையை தொடருகிறேன். சராசரியாக ஒரு அடிமட்ட மத்திய அரசுத் தொழிலாளியின் சம்பளம் எவ்வளவாக இருந்தது? அடிப்படை சம்பளம்: 7000 ரூ, அகவிலைப்படி 8750, மொத்தம் 15750. இதில் தேசிய … Continue reading பத்தி: 7-ஆவது சம்பளக் கமிஷன்; நாம் அறிந்தவையும் அறியாதவையும்

PPF வட்டி குறைப்பு: எதிர்கால இந்தியாவுக்கு கொள்ளி வைப்பது எப்படி?

நரேன் ராஜகோபாலன் பப்ளிக் ப்ராவிடண்ட் பண்ட் (PPF) என்பது பெரும்பாலான மத்திய வர்க்கம் தங்களுடைய ஒய்வு நாளுக்காக சேர்க்கும் ஒரு திட்டம். இதனுடைய வட்டி விகிதம் 8.7%. இது அரசாங்கத்தால் உறுதியளிக்கப்பட்ட நெடுநாளைய சேமிப்பு திட்டம். இதற்கு வரி விலக்கு உண்டு. நிதி ஆலோசகர்களைக் கேட்டால் ‘compounding' என்கிற ஒரு பதத்தினை சொல்லுவார்கள். அதாவது உங்களுடைய பணம் பெருகுவது என்பது ஒரு மல்டிப்ளையர் எஃபெக்ட். ரூ. 100க்கு 10% வருடாந்திர வட்டி என்றால் முதல்வருடம் 100+10 = … Continue reading PPF வட்டி குறைப்பு: எதிர்கால இந்தியாவுக்கு கொள்ளி வைப்பது எப்படி?

கோவை டயர் ஆலையில் கொதிகலன் வெடித்து விபத்து:6 தொழிலாளர்கள் பலி; ஆலை நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு உடனே ஜாமீனில் விடுவிப்பு

கோவை அருகே டயர் உருக்கு ஆலையில் கொதிகலன் வெடித்ததில் தீக்காயம் அடைந்த 6 தொழிலாளர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.கோவை மாவட்டம், செட்டிபாளையம் - கள்ளப்பாளையம் சாலையில், ஓரட்டுக்குப்பை என்ற இடத்தில் கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த பா.செந்தில் என்பவருக்குச் சொந்தமான ஸ்ரீநாகலட்சுமி பைரோலிசிஸ் கம்பெனி இயங்கி வந்துள்ளது. பழைய டயர்களை துண்டு துண்டாக வெட்டி கொதிகலனில் வைத்து உருக்கி பைரோலிசிஸ் என்ற ஆயிலை வெளியே எடுக்கும் பணி இங்கு நடந்து வந்துள்ளது. … Continue reading கோவை டயர் ஆலையில் கொதிகலன் வெடித்து விபத்து:6 தொழிலாளர்கள் பலி; ஆலை நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு உடனே ஜாமீனில் விடுவிப்பு