கணினியைத் தாக்கி பணம் பறிக்கும் ரான்சம்வேர்: பாதுகாப்பு வழிமுறைகள்!

சந்திரமோகன் உங்களுக்கு ரான்சம்வேர் பற்றித் தெரியாதென்றால் இதை முழுவதுமாகப் படித்து முடிக்கும்வரை, உங்களுக்கு வரும் இ-மெயில் எதையும் திறந்து படிக்க வேண்டாம். சமீபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த கணினிகள் 'வான்னா க்ரை' (Wanna Cry) என்ற ரான்சம்வேர் தாக்குதல்களுக்கு உள்ளாகியிருக்கின்றன. இணையம் மூலமாக இது தொடர்ந்து பரவி வருவதால், எந்த நிமிடமும் உங்கள் கணினியையும் தாக்கும் அபாயம் இருக்கிறது. சமீபத்திய நிலவரப்படி, நூறு நாடுகளுக்கும் மேற்பட்ட சுமார் ஒரு லட்சம் கணினிகளில் இந்த 'வான்னா க்ரை' … Continue reading கணினியைத் தாக்கி பணம் பறிக்கும் ரான்சம்வேர்: பாதுகாப்பு வழிமுறைகள்!

அரசுத் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்.லுக்கு கட்டணத் திட்டங்களை வரையறுத்தது ரிலையன்ஸ்: எஸ்ஸார் டேப் வெளிப்படுத்தும் அதிர்ச்சி

By Meetu Jain with Ushinor Majumdar ‘எஸ்ஸார் டேப்ஸ்’ பெருமுதலாளிகள் இந்திய நீதித்துறையை, நாடாளுமன்றத்தை, வங்கிகளை, போட்டியாளர்களை, நிர்வாகிகளை எப்படி கையாண்டார்கள் என்பது குறித்து பயமுறுத்தும் உண்மையைச் சொல்கின்றன. ராடியா உரையாடல்களுக்கு பத்தாண்டுகளுக்கு முன்பே அரசாங்கம் எப்படியான மோசடிகளில் ஈடுபட்டது என்பதையும் இது காட்டுகிறது. முந்தைய பதிவை இங்கே படிக்கவும்: ராடியாவுக்கு முன்பே வாஜ்பாயி ஆட்சியில் இந்திய குடியரசு விற்பனைக்கு வந்தது; அதை வாங்கியது ரிலையன்ஸ்! எஸ்ஸார் ஒட்டுக்கேட்பு விவகாரத்தை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தவரான உபால், … Continue reading அரசுத் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்.லுக்கு கட்டணத் திட்டங்களை வரையறுத்தது ரிலையன்ஸ்: எஸ்ஸார் டேப் வெளிப்படுத்தும் அதிர்ச்சி

க்ரியா தமிழ் அகராதி android app அறிமுகம்!

க்ரியா தற்காலத் தமிழ் அகராதியை வெள்ளிக்கிழமை  (19/02/2016)முதல் android app வடிவில் பெறலாம்.  App வடிவிலான அகராதி பயன்பாட்டுக்கு எளிதாக இருக்கும் வகையில் பல வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆங்கில வழித் தேடல்: சொல்லுக்கான பொருளை ஆங்கிலச் சொற்களின் மூலமும் தேடலாம். வகை வழித் தேடல்: தனியொரு சொல்லாக மட்டுமின்றி, இலக்கண வகை, வழக்குக் குறிப்பு மற்றும் துறைவாரியாகவும் தேடலாம். எடுத்துக்காட்டாக, இலக்கணச் சொற்களைத் தேடும்போது, துணைவினை என்று பதிவிட்டால் தமிழில் உள்ள 52 துணைவினைகளையும் பெறலாம். ஒவ்வொரு துணை … Continue reading க்ரியா தமிழ் அகராதி android app அறிமுகம்!

சங்கு ஊதினால் நோய் குணமாகும்;சிவனே சூழலியல் முன்னோடி: இந்திய அறிவியல் மாநாடா? இந்திய ஆன்மீக மாநாடா?

“தினமும் இரண்டு நிமிடம் புனித சங்கை ஊதினால், எல்லா நோய்களும் நம்மை விட்டு ஓடிப்போய்விடும்” இதைச் சொல்வது ஏதோ மரத்தடி சாமியார் அல்ல, ஒரு ஐஏஎஸ் அதிகாரி. அவர் பெயர் ராஜுவ் சர்மா. சொன்ன இடம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அது சமீபத்தில் மைசூருவில் நடந்த இந்திய அறிவியல் மாநாடு. அகிலேஷ் கே. பாண்டே என்ற பேராசிரியர் சமர்பித்த ஆய்வுக்கட்டுரை எதைப்பற்றியது தெரியுமா? இந்துக் கடவுள் சிவன் தான், முன்னோடி சூழலியலாளராம். “கைலாய மலையில் இருக்கும் சிவன், … Continue reading சங்கு ஊதினால் நோய் குணமாகும்;சிவனே சூழலியல் முன்னோடி: இந்திய அறிவியல் மாநாடா? இந்திய ஆன்மீக மாநாடா?

விண்வெளியில் இருந்து தமிழகம் இப்படித்தான் தெரியும்!

விண்வெளி வீரர் ஸ்காட் கெல்லி 283 நாட்களாக சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் இருக்கிறார். விண்வெளியில் இருந்தபடி புவியின் அழகை வெவ்வேறு பகுதிகளை படம் பிடித்துவருகிறார். சமீபத்தில் இவர் தென்னிந்திய பகுதிகளை படப்பிடித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்டார்...   https://twitter.com/StationCDRKelly/status/683751822767423488 https://twitter.com/StationCDRKelly/status/683652831023362048 https://twitter.com/StationCDRKelly/status/683643600127803392

#‎boycottfreebasics‬: மோடியை மார்க் கட்டியணைத்த ரகசியம் இதுதான்!

நரேன் ராஜகோபாலன் ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ள What Net Neutrality Activists Won't Tell you on The Top 10 Facts about Free Basics என்கிற விளம்பரத்தில் இடம்பெற்ற குறிப்புகளுக்கான எதிர்வினை... 1 . "Free basics is open to any carriers. Any mobile operator can join us in connecting India." எல்லா டெலிகாம் ஆபரேட்டர்களும் டேட்டா பயன்பாட்டினை அதிகரிக்க தான் 4ஜி அலைவரிசையினை வாங்கி இருக்கிறார்கள். ஆக, … Continue reading #‎boycottfreebasics‬: மோடியை மார்க் கட்டியணைத்த ரகசியம் இதுதான்!

65 ரூபாயில் பேப்பர் நுண்நோக்கி: குழந்தைகளுக்காக கலிபோர்னியா பேராசிரியரின் கண்டுபிடிப்பு

சுந்தரம் தினகரன்  கலிபோர்னியாவின் ஸ்டான்போர்ட் பல்கலையை சேர்ந்த பேராசிரியர் மனுபிரகாஷும் அவர் தம் குழுவினரும் பேப்பரில் மடிக்கக்கூடிய நுண்நோக்கியை கண்டுபிடித்துள்ளார்கள். இதன் விலை ஒரு டாலர் தான்! நம்மூர் மதிப்பில் ரூபாய் 65 இருக்கலாம். எளிமையாக உருவாக்கிவிடலாம். இந்த நுண்நோக்கியின் மூலம் 150 அல்லது 500 மடங்கு பெரிதுபடுத்தமுடியும். அதற்கான மிகச்சிறிய லென்சையும் உருவாகியுள்ளார். அனைத்துமே பேப்பரால் ஆனது. இதை உருவாக்க அவருக்கு உந்துதல் அளித்த இடம் மதுரை காந்தி அருங்காட்சியகம் என்றால் ஆச்சர்யம் தான்! அங்கு வந்தபோது … Continue reading 65 ரூபாயில் பேப்பர் நுண்நோக்கி: குழந்தைகளுக்காக கலிபோர்னியா பேராசிரியரின் கண்டுபிடிப்பு

அவசியம் படியுங்கள்: ஃபேஸ்புக் சொல்வதும் சொல்லாததும்!

 'இலவச அடிப்படை இணையம் (Free Basics)' என்ற சங்கதிக்கு ஆதரவு தருமாறு கேட்டு பேஸ்புக் பரப்புரை செய்கிறது. இது உங்களின் கருத்து சுதந்திரத்தையும், இலவச தகவல் அறியும் உரிமையையும் பாதிக்கும் செயல் மட்டுமல்ல. உங்களிடமிருந்து பெரிய அளவில் கார்ப்பரேட் கம்பெனிகள் கொள்ளையடிக்கும் திட்டமுமாகும்.  மேம்போக்காக பார்த்தால் அனைவருக்கும் இலவச இணையம் கிடைப்பது போன்ற பரப்புரையாக சமூக அக்கறை உடையதாக தெரியலாம். ஆனால் இதில் அவர்கள் சேர்த்திருக்கும் வார்த்தை மிக மிக உண்ணிப்பாக ஆராயப்பட வேண்டியது.  "Basics" அதாவது 'அடிப்படை.' அதென்ன … Continue reading அவசியம் படியுங்கள்: ஃபேஸ்புக் சொல்வதும் சொல்லாததும்!

சுந்தர் பிச்சை தமிழக வெள்ள பாதிப்புகள் குறித்து ஏன் பேசவில்லை?

இந்தியாவில் ரயில் நிலையங்களில் வை ஃபை வசதியை தங்கள் நிறுவனம் அடுத்தாண்டு இறுதிக்குள் தரும் என்று கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். வை ஃபை வசதியை தங்கள் நிறுவனம், ரெயில் டெல் அமைப்புடன் இணைந்து வழங்க உள்ளதாக அவர் தெரிவித்தார். முதல் கட்டமாக மும்பை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் வைஃபை செய்யப்படுகிறது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். தமிழரான சுந்தர் பிச்சை, கூகுள் நிறுவன தலைமை அதிகாரியாக பொறுப்பேற்ற பின் முதல்முறையாக இந்தியா … Continue reading சுந்தர் பிச்சை தமிழக வெள்ள பாதிப்புகள் குறித்து ஏன் பேசவில்லை?