இது தீண்டாமைச் சுவர் இல்லை என்றால் வேறு எதுதான் தீண்டாமைச் சுவர்?

இரா. முருகவேள் மேட்டுப்பாளையத்தில் 17 பேரைப் பலிவாங்கிய சுவர் பற்றி வெளிவரும் உண்மைகள் படுமோசமானவையாக உள்ளன. அது ஒரு வீட்டின் காம்பவுண்ட் சுவர் மட்டுமல்ல. மேட்டுப்பாளையத்திலேயே வசதி படைத்தவர்கள் வாழும் பகுதியையும், அருந்ததிய மக்கள் வாழும் பகுதியையும் பிரிந்த்து எழுப்பப்பட்டிருந்த சுவருமாகும். அருந்ததிய மக்கள் லே அவுட் சாலைகளில் நடமாடுவதைத் தடை செய்யவே அமைக்கப்பட்ட தீண்டாமைச் சுவர் இது. மேட்டுப்பாளையத்தில் ஒரு கூட்டுறவு சங்கம் லேஅவுட் அமைத்த போது பெரும் பணக்காரர்கள் இங்கே வந்து குவிந்தனர். லேவுட்டுக்கு … Continue reading இது தீண்டாமைச் சுவர் இல்லை என்றால் வேறு எதுதான் தீண்டாமைச் சுவர்?

#கபாலிபாடல்: பா. ரஞ்சித்தின் இனிஷியலுக்கு புதிய பொருள் சொல்லும் முகநூல் சாதியவாதிகள்

பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி படத்தின் பாடல்கள் வெளியாகியிருக்கின்றன. படத்தின் பாடல் ஒன்றில் ‘ஆண்டைகளின் கதை முடிப்பான்’ என்ற வரி வருகிறது. இந்த வரிகளுக்காக பா. ரஞ்சித்தை அவருடைய சாதி சார்ந்து இழிபடுத்தி வருகின்றனர் முகநூல் சாதியவாதிகள் சிலர். ஒருவர் ரஞ்சித்தின் இனிஷியலுக்கு புது விளக்கம் சொல்ல; இன்னொருவர் திருமவளவன், கபாலிக்கு வசனம் எழுதியதாக பகடி செய்கிறார்.   “நீங்க நண்டு வறுக்கிறவங்க” என ஏளனத்துடன் மீம்ஸ் போடுகிறார் இன்னொருவர்.

’சாதிக்காரர்’ கிணற்றில் தண்ணீர் எடுக்கத் தடை; மனைவிக்காக பாறைகளைக் குடைந்து கிணறு வெட்டிய நம்பிக்கையாளர்!

மகாராஷ்டிர மாநிலத்தில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது தேசிய செய்தியாகியுள்ளது. வறண்ட நிலங்களும் வறண்ட குடங்களுமாக மக்கள் தண்ணீர் குடங்களுடன் வரிசை கட்டி நிற்பது தினசரிகளில் காண முடிகிறது. இத்தகைய பஞ்ச நிலையிலும் ‘சாதியத்தை’ பிடிவாதமாகக் கடைப் பிடிக்கும் மனிதம் அற்றவர்களை இந்திய மண்ணில் மட்டுமே காண முடியும். மகாராஷ்டிர மாநிலத்தின் வாசிம் மாவட்டத்தில் கலாம்பேஷ்வர் என்ற கிராமத்தைச் சேர்ந்த பாபுராவ், ஒரு ஏழை தலித் தொழிலாளி. மற்ற இடங்களைப் போல இவருடைய கிராமத்திலும் தண்ணீர் பஞ்சம். … Continue reading ’சாதிக்காரர்’ கிணற்றில் தண்ணீர் எடுக்கத் தடை; மனைவிக்காக பாறைகளைக் குடைந்து கிணறு வெட்டிய நம்பிக்கையாளர்!

#வீடியோ:புதுக்கோட்டையில் சாதி கலவர சூழல்: பின்னணியில் அமைச்சர் விஜயபாஸ்கர்?

புதுக்கோட்டை தொகுதியில் மக்கள் பணிகளால் செல்வாக்குமிக்கவராக அறியப்பட்டவர் சொக்கலிங்கம். அந்தப் பகுதியில் தனிப்பட்ட முறையில் செல்வாக்குடன் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவரை அதிமுக அழைத்து கட்சியில் சேர்த்தது.  சட்டப் பேரவைத் தேர்தலில் அவருக்கு சீட்டு கிடைக்கலாம் என பேச்சு எழுந்தது. ஆனால் அமைச்சர் விஜயபாஸ்கரின் தலையீட்டால் சீட்டு கிடைக்கவில்லை. இந்நிலையில் சொக்கலிங்கம் புதுக்கோட்டை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுவது என களமிறங்கினார். சொக்கலிங்கம் செல்வாக்கு காரணமாக அதிமுக தோல்வியடையலாம் என்கிற அச்சத்தில் திங்கள்கிழமை திருவிழாவுக்குச் சென்றிருந்த சொக்கலிங்கத்தையும் அவருடைய மனைவியையும் … Continue reading #வீடியோ:புதுக்கோட்டையில் சாதி கலவர சூழல்: பின்னணியில் அமைச்சர் விஜயபாஸ்கர்?

“சமையல்காரர்கள், வீட்டு வேலை செய்பவர்களுக்கு வீட்டு முற்றத்தில் நடக்க கண்டிப்பாக அனுமதி கிடையாது” கேட்டட் கம்யூனிடி என்னும் தீண்டாமை குடியிருப்புகள்!

“சமையல்காரர்கள், வீட்டு வேலை செய்பவர்களுக்கு வீட்டு முற்றத்தில் நடக்க கண்டிப்பாக அனுமதி கிடையாது”  பெங்களூரு ப்ரெஸ்டீஜ் சாந்திநிகேதன் என்னும் கேட்டட் கம்யூனிடி குடியிருப்பில் ஒட்டப்பட்டிருக்கும் அறிவிப்பு வாசகங்கள் இவை. கேட்டட் கம்யூனிடி என்னும் குடியிருப்புகள் தீண்டாமை குடியிருப்புகளாக மாறிவருவது குறித்து பெங்களூரு மிரர் A gulf, maid in B’luru என்னும் தலைப்பில் ( by Maitreyi Krishnan and Clifton D’ Rozario. (This is a guest post by the writers who are lawyers practicing in … Continue reading “சமையல்காரர்கள், வீட்டு வேலை செய்பவர்களுக்கு வீட்டு முற்றத்தில் நடக்க கண்டிப்பாக அனுமதி கிடையாது” கேட்டட் கம்யூனிடி என்னும் தீண்டாமை குடியிருப்புகள்!