“பெப்ஸி ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்யவே திமுக வழக்கு தொடர்ந்திருக்கிறது”

முகிலன்  நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் 36 ஏக்கர் நிலத்தில் தினசரி தாமிரபரணி ஆற்றில் இருந்து 15லட்சம் லிட்டர் தண்ணீர் எடுத்து குடிநீர், குளிர்பானம் தயாரிக்க அமெரிக்காவின் பெப்சி ஆலைக்கு, தமிழக அரசிடம் ஜனவரி - 2014 இறுதியில் கேட்ட விண்ணப்பத்திற்க்கு 05.02.2014 அன்று பத்தே நாட்களில் அனுமதி அளித்து உத்தரவிட்டது தமிழக அரசு . நெல்லை- தூத்துக்குடி மாவட்டத்தில் 86,000 ஏக்கர் விவசாயத்திற்கும், நெல்லை-தூத்துகுடி- விருதுநகர் மாவட்ட மக்களுக்கும் குடிநீர் ஆதாரமாக விளங்குவது தாமிரபரணி. … Continue reading “பெப்ஸி ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்யவே திமுக வழக்கு தொடர்ந்திருக்கிறது”

சாதி கலவரத்துக்கு தயாராகும் தென்மாவட்டங்கள்: மாணவர்களை சாதிமையப்படுத்தும் ‘ஆபரேஷன் 100’

சரவணன் சந்திரன் கடந்த அக்டோபர் மாதம் விடுமுறைக்காக தென்மாவட்டத்திலுள்ள சொந்த ஊருக்குச் சென்றிருந்த போது, நீண்ட வருடங்கள் கழித்து பள்ளியில் உடன் படித்த நண்பன் ஒருவனைச் சந்தித்தேன். நண்பனுக்கு வலதுகையில் முழங்கைக்கு கீழே துண்டிக்கப் பட்டிருக்கும். உள்ளூர் தீப்பெட்டி அலுவலகம் ஒன்றில் கடைநிலை ஊழியனாகப் பணிபுரியும் அவனை வறுமை வாட்டியெடுப்பதை அவனது தோற்றத்தைப் பார்த்த எல்லோரும் சொல்லி விடுவார்கள். அப்போது சாரை சாரையாக பல வாகனங்கள் நாங்கள் பேசிக் கொண்டிருந்த பகுதியைக் கடந்தன. அந்த வாகனத்தில் குறிப்பிட்ட … Continue reading சாதி கலவரத்துக்கு தயாராகும் தென்மாவட்டங்கள்: மாணவர்களை சாதிமையப்படுத்தும் ‘ஆபரேஷன் 100’

இந்தப் பெண் மூன்று ஆண்டுகளாக நடந்து அல்ல, தவழ்ந்து வந்து ஆட்சியரிடம் உதவி கேட்கிறார்!

தூத்துக்குடி முள்ளக்காடு சாமிநகரைச் சேர்ந்தவர் கலையரசி. 14 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் கணவர் உயிரிழந்ததால், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மகன் மற்றும் வயது முதிர்ந்த தாயுடன் வசித்து வரும் கலையரசி, பணிக்கு சென்று வர மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருவதாக நியூஸ் 7 தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில், அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு உதவிடன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த கலையரசி, ஆட்சியர் ரவிக்குமாரிடம் மூன்று சக்கர வாகனம் கேட்டு கடந்த மூன்று ஆண்டுகளாக மனு … Continue reading இந்தப் பெண் மூன்று ஆண்டுகளாக நடந்து அல்ல, தவழ்ந்து வந்து ஆட்சியரிடம் உதவி கேட்கிறார்!

கரை ஒதுங்கிய திமிங்கலங்கள் கொல்லப்பட்டனவா ? புகுஷிமா கதிர்வீச்சால் டால்பின்கள் இறந்ததை சுட்டிக்காட்டி அதிகரிக்கும் கண்டனம்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள் கரை ஒதுங்கிய நிலையில்,  புதன்கிழமை காலை வரை சுமார் 40-க்கும் அதிகமான திமிங்கலங்கள் உயிரிழந்து விட்டன. மேற்கூறிய கடற்கரை பகுதிகள் அருகில் தான் கூடன்குளம் அணுமின் நிலையம், தாது மணல் குவாரிகள், தாரங்கதாரா கெமிக்கல்ஸ் ஆலைகள் உள்ளன. மேலும், அண்மையில் பெய்த மழையின் போது தூத்துக்குடி பக்கிள்ஓடை வழியாக ஸ்டெர்லைட், விவி டைட்டானியம் ஆலைக் கழிவுகள் கடலில் கலந்து விட்டதாக புகார் எழுந்தது. #Video: கொத்துகொத்தாக கரை ஒதுங்கிய … Continue reading கரை ஒதுங்கிய திமிங்கலங்கள் கொல்லப்பட்டனவா ? புகுஷிமா கதிர்வீச்சால் டால்பின்கள் இறந்ததை சுட்டிக்காட்டி அதிகரிக்கும் கண்டனம்

அணுஉலை காரணமா என்பது இருக்கட்டும்; திமிங்கிலங்கள் ஒதுக்கியதற்கு வேறு காரணங்களும் இருக்கலாம்!

நரேன் ராஜகோபாலன் தூத்துக்குடியில் ஒதுங்கிய திமிங்கலங்கள் பற்றி அறிவியல் தன்மையில்லாத, கூடங்குளம் தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்பது மாதிரியான ஒரு பரப்புரை ஃபேஸ்புக்கில் முன்வைக்கப்படுகிறது. அறிவியலுக்கு எதிரான நிலைப்பாட்டினை சமூக நிலைப்பாடாக நாம் எடுக்கிறோம். இது கூடங்குளத்துக்கு மட்டுமல்லாமல், நியூட்ரீனோ, மீத்தேன் போன்றவற்றுக்கும் பொருந்தும். Whales stranding or beaching themselves என்பது உலகம் முழுவதும் நடக்கக்கூடிய ஒன்று. இதன் முழுமையான காரணம் தெரியாமல் போனாலும், அதற்கான பல்வேறு சாத்தியங்களை அறிவியலாளர்கள் முன்வைக்கிறார்கள். 1 ) உடல்நலம் … Continue reading அணுஉலை காரணமா என்பது இருக்கட்டும்; திமிங்கிலங்கள் ஒதுக்கியதற்கு வேறு காரணங்களும் இருக்கலாம்!

#Video:முதியவரின் சடலத்தை பொதுப்பாதையில் எடுத்துச் செல்ல முடியவில்லை: இதைவிடவா ஜல்லிக்கட்டு விவாதம் அவசியம்?

வில்லவன் இராமதாஸ் திங்கள்கிழமை ஜல்லிக்கட்டு தொடர்பான விவாதம் பு.த டிவியில் நடக்கிறது, இறுதியில் நெறியாளர் சொல்கிறார் “ஒரு தலித் முதியவர் சடலத்தை இன்னமும் பொதுப்பாதையில் எடுத்து செல்ல முடியாத நிலை நிலவுகிறது. ஆனால் நாம் அதை விவாதிக்காமல் ஜல்லிக்கட்டை விவாதிக்கும் சூழலில் இருக்கிறோம்” என வருந்துகிறார். உடனே ஃபேஸ்புக்கில் நெகிழ்ச்சிப்பதிவுகள் துவங்குகின்றன. இவ்விடயத்தில் ஒரு நெறியாளரின் கவலையை கண்டு நாம் பரவசப்பட்டால் மட்டும் போதுமா? தலித் முதியவரின் சடலம் பொதுப்பாதையில் போக முடியாத அவலத்தை டிவியில் விவாதிக்கவிடாமல் … Continue reading #Video:முதியவரின் சடலத்தை பொதுப்பாதையில் எடுத்துச் செல்ல முடியவில்லை: இதைவிடவா ஜல்லிக்கட்டு விவாதம் அவசியம்?

தூத்துக்குடி கடல் பகுதிகளில் செத்து ஒதுங்கிய 300க்கும் மேற்பட்ட டால்பின்கள்: கூடங்குளம் அணு உலை கதிர் வீச்சு காரணமா?

குணசீலன் வேலன் திங்கள்கிழமை மாலை முதல் சுமார் 300 க்கும் மேல் ஓங்கில் வகையை சேர்ந்த டால்பின்கள், திமிங்கலங்கள், தூத்துக்குடி- நெல்லை கடற்கரை ஓரங்களில் கரை ஒதுங்கி உள்ளன. நேற்று முன் தினம் கூடங்குளம் 2-வது அணு உலையில் எதோ சோதனைகள் நடந்ததாகவும் கதிர்வீச்சின் அளவு மிக அதிகமாக இருந்ததாகவும் சிலர் சொல்கின்றனர் .  தூத்துக்குடி, நெல்லை மாவட்ட ஆட்சியர்கள் மீன்கள் ஒதுங்கிய விவகாரத்தில் உண்மைநிலையை மக்களுக்கு விளக்கம் அளிப்பார்களா ? குணசீலன் வேலன், களச் செயல்பாட்டாளர். … Continue reading தூத்துக்குடி கடல் பகுதிகளில் செத்து ஒதுங்கிய 300க்கும் மேற்பட்ட டால்பின்கள்: கூடங்குளம் அணு உலை கதிர் வீச்சு காரணமா?

நெல்லைஅருகே சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து : டிரைவர் தூங்கியதால் 11 பேர் பலி

வேளாங்கண்ணியிலிருந்து திருவனந்தபுரம் சென்ற தனியார் பஸ், திருநெல்வேலி அருகே பனக்குடியை அடுத்து பிலாக்கொட்டைப்பாறையில் சாலை தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்ததில் 11 பேர் பலியாயினர். 20 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இவ்விபத்தில் மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணியில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.   டிரைவர் துாங்கியதே விபத்துக்கான காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

தீக்குளிப்பு, தடியடி,கைது: 4 நாள் போராட்டத்திற்குப் பின்னும் தலித் முதியவரின் பிணத்தை பொதுப் பாதையில் அனுமதிக்கவில்லை!

மயிலாடுதுறை அருகேயுள்ள "திருநாள் கொண்டச்சேரி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த 100 வயது முதியவர் செல்லமுத்து  கடந்த 3–ம் தேதி மரணமடைந்தார்.  மழை காரணாமாக, தலித் மக்களின் சுடுகாட்டுக்கு  செல்லும் வழக்கமான பாதை சரியில்லாததால், பொது பாதை வழியாக, உடலை எடுத்து செல்ல கோரிக்கை விடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மனுவை கடந்த 4–ம் தேதி விசாரித்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், முதியவரின் உடலை பொதுப் பாதையில் எடுத்து செல்ல அனுமதி வழங்கினார். இது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளவும், … Continue reading தீக்குளிப்பு, தடியடி,கைது: 4 நாள் போராட்டத்திற்குப் பின்னும் தலித் முதியவரின் பிணத்தை பொதுப் பாதையில் அனுமதிக்கவில்லை!

பிணத்தை புதைப்பதற்குக்கூட உரிமை மறுக்கப்படும் தலித் மக்கள்: இதுவும் தமிழகத்தில்தான் நடக்கிறது!

மரக்காணம் பாலா நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ளது திருநாள்கொண்டச்சேரி கிராமம். பெயரிலேயே சேரியை கொண்டுள்ள இந்த கிராமத்தில், சேரி மக்கள் விலங்கினும் கீழாக நடத்தப்படுகின்றனர். இந்த ஊரில், 20 ஆண்டுகளாக ஊராட்சிமன்ற தலைவராக இருக்கும் வி.ஜே.கே செந்தில்நாதன் என்பவர், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எந்தவிதமான அடிப்படை வசதியும் செய்துகொடுக்கவில்லை. சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் செத்த பிணத்தை புதைப்பதற்குகூட அவர்களுக்கு அனுமதி இல்லை. 40 தலித் குடும்பங்களை சேர்ந்த திருநாள்கொண்டச்சேரி கிராமத்தில் பிணத்தை புதைக்கவேண்டும் என்றால், ஊருக்கு ஒதுக்குப்புறமாக … Continue reading பிணத்தை புதைப்பதற்குக்கூட உரிமை மறுக்கப்படும் தலித் மக்கள்: இதுவும் தமிழகத்தில்தான் நடக்கிறது!

ஊடகங்களில் முஸ்லீம் சித்தரிப்பும் விஜயகாந்தின் ‘த்தூ’வும்

Aloor Sha Navas நெல்லை ஏர்வாடி காஜா முகைதீன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான, பா.ஜ.க.வின் களக்காடு ஒன்றியச் செயலாளர் கதிர்வேல்சாமி உள்ளிட்ட, சங்பரிவார் தீவிரவாதிகள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காஜா கொலையான உடனேயே, ஊடகங்கள் அதை திசைமாற்ற முயன்றன. பெண் தொடர்பால் நிகழ்ந்த கொலை என்றும், காஜாவின் ஆட்டோவில் கடைசியாகப் பயணித்தவர் விபச்சார அழகி என்றும் எழுதின. எனினும் ஊடகங்களின் பொய்யை புறந்தள்ளி, காஜாவின் கொலைக்கு நீதிகேட்டு வெகுமக்கள் உறுதியுடன் போராடியதால், இப்போது உண்மைக் … Continue reading ஊடகங்களில் முஸ்லீம் சித்தரிப்பும் விஜயகாந்தின் ‘த்தூ’வும்

ஏர்வாடி காஜா முகைதீன் படுகொலை: பாஜகவினர் கைது

திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடியைச் சேர்ந்த காஜா முகைதீன் என்ற இளைஞர், கடந்த 21ஆம் தேதி கொலை செய்யப்பட்டார்.  இந்தக் கொலை குறித்து வழக்குப் பதிவு செய்து, டிஎஸ்பி தலைமையில் ஐந்து தனிப்படையினர் விசாரித்து வந்தனர். இந்நிலையில் இந்தக் கொலையில் தொடர்புடைய ஏழு பேரை போலீஸ் கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களின் விவரம்: பாஜக களக்காடு ஒன்றிய செயலாளர் கதிர் வேல் சாமி, சாலை புதூரைச் சேர்ந்த மகேஷ், களக்காடு ஜான்ஷன் தினேஷ், களக்காடு பாஜக ஒன்றிய பொதுசெயலாளர் முத்துராமன், ஏர்வாடி மணிகண்டன், … Continue reading ஏர்வாடி காஜா முகைதீன் படுகொலை: பாஜகவினர் கைது

ஏர்வாடி காஜா முகைதீன் கொலை: குற்றவாளிகளைப் பிடிக்க 5 தனிப்படை

  திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடியைச் சேர்ந்த காஜா முகைதீன் என்ற இளைஞர், கடந்த 21ஆம் தேதி கொலை செய்யப்பட்டுள்ளார்.  இந்தக் கொலை குறித்து வழக்குப் பதிவு செய்து, டிஎஸ்பி தலைமையில் 5 தனிப்படை அமைத்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் சமூக நல்லிணக்கத்துக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தான நடவடிக்கை என தெரிவித்துள்ள முஸ்லீம் அமைப்புகள், குற்றவாளிகளை துரிதமாக கண்டுபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். ஏர்வாடியில் கொலையான இளைஞரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு … Continue reading ஏர்வாடி காஜா முகைதீன் கொலை: குற்றவாளிகளைப் பிடிக்க 5 தனிப்படை