“அக்ரஹாரம் மாதிரி குடியிருப்புகள் கட்டப் போகிறோம்” சைவம் மட்டும் என்று விளம்பரம் செய்தவர்களின் அடுத்தக்கட்ட முயற்சி!

‘அசைவம் உண்பவர்களுக்கு வீடு கொடுக்கமாட்டோம்; விற்க மாட்டோம்; இந்தக் குடியிருப்பில் சைவர்களுக்கு மட்டுமே வீடு’ என்கிற சகிப்பின்மை மனோபாவம் இந்திய சமூகத்தில் இயல்பானதாக மாறிவிட்டது. இந்நிலையில் இதற்கு அடுத்தக் கட்டமாக அக்ரஹாரம் போல ‘பாரம்பரிய’த்துடன் குடியிருப்புகளை உருவாக்க இருப்பதாக கும்பகோணத்தைச் சேர்ந்த வேதாந்தா என்கிற நிறுவனம் அறிவித்துள்ளது. தனது இணைய பக்கத்தில் வெளிப்படையாக விளம்பரம் செய்துள்ளது வேதாந்தா. இதுகுறித்து Thanthugi Blogspot தனது இணைய பக்கத்தில் இப்படி எழுதியிருக்கிறார்... “பாரம்பரியமான அக்ரஹாரம் மாதிரி கட்டப்போறோம்னு ஒருத்தன் ஆந்திராவில் ஆட்டையப் போட்டது பழைய … Continue reading “அக்ரஹாரம் மாதிரி குடியிருப்புகள் கட்டப் போகிறோம்” சைவம் மட்டும் என்று விளம்பரம் செய்தவர்களின் அடுத்தக்கட்ட முயற்சி!

தஞ்சையில் குறவர் சமூகத்தினர் மீது காவல்துறையே ஏவிவிடும் வன்முறை: அடைத்து வைத்து கொடுமை

இரா. முருகப்பன் தஞ்சாவூர் பகுதியில் குறவர் சமூகத்தினர் மீது காவல் துறையின் அத்துமீறல்கள் தொடர்பாக ஏற்கனவே பலமுறை குறிப்பிட்டுள்ளேன்..மொன்னையம்பட்டி கிராமத்தில் குறவர் சமூக மக்கள் மீது அண்மையில் நடந்த இரு சம்பவங்கள்.. சம்பவம்: 1 வியாழக்கிழமை மாலை 7.00 மணியளவில் இரு சக்கர வாகனங்களில் கிராமத்திற்கு சுமார் 15 போலீசார் சென்றுள்ளனர். போலீசாரின் அத்துமீறலில் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்களை போலீசார் மிகவும் இழிவுபடுத்திப் பேசியுள்ளனர். இறுதியில் முருகேசன் த\பெ குஞ்சப்பன் என்பவரை கடத்திச் சென்றுள்ளனர். இதுவரை அவரை … Continue reading தஞ்சையில் குறவர் சமூகத்தினர் மீது காவல்துறையே ஏவிவிடும் வன்முறை: அடைத்து வைத்து கொடுமை

உட்கட்சிப் பூசல்: அதிமுக அலுவலகத்தில் குண்டுகள் வீச்சு; திமுக அலுவலகம் முற்றுகை

மதுரையில், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூவின் மதுரையில்அலுவலகத்தில் சனிக்கிழமை நள்ளிரவில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, சென்னையிலுள்ள அவரது வீட்டில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. உட்கட்சிப் பூசல் காரணமாக அமைச்சர் அலுவலகத்தில், நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதிமுகவின் அலுவலகத்தில் குண்டுவீசும் அளவுக்கு உட்கட்சி பூசல் வளர்ந்திருக்க, திமுகவின் உட்கட்சி பூசல் ஓரளவுக்கு பராவயில்லை ரகம்தான்! திமுக ஆட்சியின் போது அமைச்சராக பதவி வகித்தவர் கே.என்.நேரு. தற்போது மாநிலங்களவை திமுக எம்.பி.யாக பதவி வகித்து வருபவர் … Continue reading உட்கட்சிப் பூசல்: அதிமுக அலுவலகத்தில் குண்டுகள் வீச்சு; திமுக அலுவலகம் முற்றுகை

மகா மகாமகம்: இந்த முறையும் முழுக்குப் போட அம்மாவும் தோழியும் வருவார்களா?

அ. மார்க்ஸ் குடந்தையில் இருக்கிறேன். ஆங்காங்கு "அவசரம்... மகாமகப் பணி" எனும் பேனர் தாங்கிய லாரிகள் அலைந்து கொண்டுள்ளன. ஆறு மாத காலமாக அரசு எந்திரம் முழுமையும் இந்த மகாமகப் பணியை நோக்கியே முடுக்கிவிடப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கிறது. நகர் முழுவதும் சாலைகள் கருப்பு வண்ணம் பூசி மினு மினுக்கின்றன. ஆங்காங்கு சதுக்கங்கள் அழகு படுத்தப்படுகின்றன. தனியார்கள் புதிய தங்கும் விடுதிகளைத் திறக்கின்றனர். பழைய விடுதிகள் புதுப்பிக்கப்படுகின்றன. குடந்தையில் மட்டுமின்றி குடந்தையைச் சுற்றிலும் கூட ஆலயங்கள் பலவும் குட … Continue reading மகா மகாமகம்: இந்த முறையும் முழுக்குப் போட அம்மாவும் தோழியும் வருவார்களா?