தலித் பெண்ணுக்கு இழைக்கப்பட்ட கொடூரம்: அதிகபட்ச தண்டனை பெற்றுத்தரப்படும் என முதலமைச்சர் அறிவிப்பு!

விருதுநகரை சேர்ந்த 22 வயது தலீத் பெண் ஒருவர், ஆயத்த ஆடை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அதேப்பகுதி மேலரத வீதியை சேர்ந்த ஹரிஹரன் என்பவனுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.காதலிப்பதாக கூறி நெருக்கமாக பழகிய ஹரிஹரன் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒருநாள், பெத்தனாட்சி நகரில் உள்ள மருந்து குடோனுக்கு அப்பெண்ணை அழைத்து சென்று,அங்கு நயமாக பேசி அப்பெண்ணுடன் உடலுறவு வைத்துக்கொண்டான். இதை அப்பெண்ணுக்கு தெரியாமல் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளான் ஹரிஹரன். கொஞ்ச … Continue reading தலித் பெண்ணுக்கு இழைக்கப்பட்ட கொடூரம்: அதிகபட்ச தண்டனை பெற்றுத்தரப்படும் என முதலமைச்சர் அறிவிப்பு!

கீழத் தஞ்சையின் சாதிய வன்கொடுமைகள் | ஒரு பண்ணையடிமையின் விடுதலை போராட்டம்

எழுத்தாளர் யுகபாரதி தோழர் என்.ராமகிருஷ்ணனின் `ஒரு பண்ணையடிமையின் விடுதலை போராட்டம்’ நூலை மீண்டும் ஒருமுறை வாசிக்கத் தோன்றிற்று. 1993இல் `பண்ணையடிமைத் தனத்திற்கு எதிரான போராட்டத்தில் பி.எஸ்.தனுஷ்கோடி’ என்னும் தலைப்பில் வெளிவந்த அதே நூல், 2010இல் மேற்கூறிய தலைப்புடன் வந்தது. ஒன்றிணைந்த அன்றைய தஞ்சை மாவட்டத்தில் குறிப்பாக, கீழத் தஞ்சையில் நடந்த சாதிய வன்கொடுமைகளை எழுதியும் சொல்லியும் மாளாது. இன்றுவரை கம்யூனிஸ்ட்டுக் கட்சி அங்கே உயிர்ப்புடன் இருப்பதற்குத் தோழர் சீனிவாசராவ் போன்றோரின் அர்ப்பணிப்பும் ஆவேசமும்மிக்க போராட்டங்களே காரணம். தோழர்களை … Continue reading கீழத் தஞ்சையின் சாதிய வன்கொடுமைகள் | ஒரு பண்ணையடிமையின் விடுதலை போராட்டம்

தலித் மருத்துவ அதிகாரி மீது தாக்குதல்: அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பு இருப்பதாக புகார்

கொரோனா பணியின்போது, தலித் மருத்துவ அதிகாரி மீது தாக்குதல் நடத்தியதோடு, சாதியை சொல்லி இழிபடுத்தியதாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர் மீது சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்குற்றம்சாட்டியுள்ளது. இதில் அமைச்சரின் தலையீடு இருப்பதாகவும் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி. ஆர். இரவீந்திரநாத் புகார் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”கொரோனா பணி தொடர்பாக, தலித் மருத்துவ அதிகாரிகள் சொல்வதை, தலித் அல்லாத கீழ் மட்ட மருத்துவ அதிகாரிகள் ஏற்காத போக்கும், தலித் அதிகாரிகளை சாதியை குறிப்பிட்டு இழிவாக திட்டும் … Continue reading தலித் மருத்துவ அதிகாரி மீது தாக்குதல்: அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பு இருப்பதாக புகார்

“முஸ்லீமுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?”: சொன்னவர் மேட்டுப்பாளையம் டி.எஸ்,பி. மணி

“சக்கிலியா நாய்களுகிட்ட கெஞ்சிட்ட இருக்கனுமா?”, “முஸ்லீமுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம், இந்த விசயதுள்ள நீங்க தலையிட கூடாது” இந்த இரண்டு கேள்விகள் திரும்ப திரும்ப தொந்தரவு செய்துகொண்டே இருக்கிறது. இந்த இரண்டு கேள்விகளையும் கேட்டவர் மேட்டுப்பாளையம் டி.எஸ்,பி. மணி. மேட்டுப்பாளையத்தில் 2.12.19 காலை இருபது அடி உயரம் உள்ள சுவர் இடிந்து விழுந்து 17பேர் என்ன நடந்தது என்று எதனையும் யூகிக்கும் முன்பே கொடுரமான மரணத்தை சந்தித்துள்ள சூழலில் அவை அனைத்தையும் வேறு பக்கம் திருப்பிவிடும் வேலையை … Continue reading “முஸ்லீமுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?”: சொன்னவர் மேட்டுப்பாளையம் டி.எஸ்,பி. மணி

இது தீண்டாமைச் சுவர் இல்லை என்றால் வேறு எதுதான் தீண்டாமைச் சுவர்?

இரா. முருகவேள் மேட்டுப்பாளையத்தில் 17 பேரைப் பலிவாங்கிய சுவர் பற்றி வெளிவரும் உண்மைகள் படுமோசமானவையாக உள்ளன. அது ஒரு வீட்டின் காம்பவுண்ட் சுவர் மட்டுமல்ல. மேட்டுப்பாளையத்திலேயே வசதி படைத்தவர்கள் வாழும் பகுதியையும், அருந்ததிய மக்கள் வாழும் பகுதியையும் பிரிந்த்து எழுப்பப்பட்டிருந்த சுவருமாகும். அருந்ததிய மக்கள் லே அவுட் சாலைகளில் நடமாடுவதைத் தடை செய்யவே அமைக்கப்பட்ட தீண்டாமைச் சுவர் இது. மேட்டுப்பாளையத்தில் ஒரு கூட்டுறவு சங்கம் லேஅவுட் அமைத்த போது பெரும் பணக்காரர்கள் இங்கே வந்து குவிந்தனர். லேவுட்டுக்கு … Continue reading இது தீண்டாமைச் சுவர் இல்லை என்றால் வேறு எதுதான் தீண்டாமைச் சுவர்?

கீழ்வெண்மணி படுகொலை: தமிழ் இந்து நாளிதழின் விஷமத்தனம்!

அப்பணசாமி இந்தியாவில் காலனி ஆட்சிக்கு எதிராக மக்கள் ஒன்று திரண்டு போராடி, சுயராஜ்யம் கோரினார்கள். இந்தியா முழுவதும் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றனர். அன்னியத் துணியைப் புறக்கணித்துக் கதர் ஆடை அணிந்தனர். உப்பு காய்ச்சினர். அகிம்சை வழியில் போராடி விடுதலை பெற்றனர் என்று எழுதுவதைப் போல் இருக்கிறது, இன்று வெண்மணி படுகொலைகள் நினைவாக 'தமிழ் இந்து' எழுதியுள்ள தலையங்கமும் தோழர் ரவிகுமார் எழுதியுள்ள கட்டுரையும். காங்கிரஸ் கட்சி மீது எவ்வளவு விமர்சனம் இருந்தாலும் காங்கிரஸ் கட்சியின் பெயரை மறைத்துவிட்டு … Continue reading கீழ்வெண்மணி படுகொலை: தமிழ் இந்து நாளிதழின் விஷமத்தனம்!

புயல் கரையை கடந்துவிடும்.. சாதி?: இரா.வினோத்

இரா.வினோத் திருமணமான மூன்றே மாதங்களில் புதுமண தம்பதியை பெண்ணின் குடும்பத்தினரே கொடூரமாக கொலை செய்து, சடலங்களை க‌ர்நாடக ஆற்றில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. காதல் கைக்கூடிய அந்த இளம் ஜோடியின் கனவு, சாதி வெறியினால் சின்னாபின்னமாக்கப்பட்டு இருக்கிறது. கிருஷ்ணகிரி போலீஸ் எஸ்.பி.மகேஷ்குமார் அனுப்பிய கொலை படங்களும், மண்டியா போலீஸார் பகிர்ந்து கொண்ட தகவல்களும் ஏற்படுத்திய அதிர்வலையில் இருந்து மீள முடியவில்லை. ஓசூரை அடுத்துள்ள சூடகொண்டப்பள்ளியை சேர்ந்தவர் நந்தீஷ் (25). பட்டியல் வகுப்பை சேர்ந்த இவரும் … Continue reading புயல் கரையை கடந்துவிடும்.. சாதி?: இரா.வினோத்

ஓசூரில் சாதீய காட்டுமிராண்டிதனம்: முகங்களை எரித்து சாதிய ஆணவப் படுகொலை!

சந்திரமோகன் ஓசூர் அருகே உள்ள சூடுகொண்டபள்ளி கிராமத்தைச் சார்ந்த வன்னியர் சாதியைச் சேர்ந்த சுவாதியும், பறையர் சாதி இளைஞர் நந்தீஸ் என்பவரும் காதலித்து உள்ளனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஊரைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு திருப்பூர் சென்று தங்கி வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர். பிறகு ஒசூருக்கு திரும்பி வந்து நந்தீஸ் ஒரு மரக்கடையில் வேலை செய்து வந்துள்ளார். இந்த வாரம் இருவரும் காணாமல் போனார்கள். 13.11.2018 அன்று, நந்தீஸும் சுவாதியும் கர்நாடகா மாண்டியா பகுதியில் … Continue reading ஓசூரில் சாதீய காட்டுமிராண்டிதனம்: முகங்களை எரித்து சாதிய ஆணவப் படுகொலை!

பரியேறும் பெருமாளின் கருப்பி சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி? பகுதி – 2

பா. ஜெயசீலன் முழுக்க முழுக்க தலித் விரோத, மிக ஆபத்தானா தலித் கலை/அரசியல் விரோத கருத்துக்களை கொண்டுள்ள பரியேறும் பெருமாள் திரைப்படம் பல்வேறு மட்டங்களில் கேள்விகளற்ற ஏகோபித்த பாராட்டுதலை பெற்று வரும் நிலையில் அந்த படத்தினால் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ள நான் இன்னும் கொஞ்சம் புலம்ப வேண்டிய தேவையிருக்கிறது. யூதர்களை அழித்தொழித்த நாஜிக்கள் யூதர்களிடம் நீங்கள் நன்றாக படித்து ஐன்ஸ்டினை போல ஆகுங்கள் பிறகு நாங்கள் உங்களை கொல்வதை நிறுத்திவிடுகிறோம் என்று சொன்னால் நீங்கள் அந்த நாஜிக்களை … Continue reading பரியேறும் பெருமாளின் கருப்பி சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி? பகுதி – 2

”காவல்துறையின் பொறுப்பற்ற தன்மையால் சிவகங்கையில் பட்டியலினத்தோர் படுகொலை”

காவல்துறையின் பொறுப்பற்ற தன்மையால் சிவகங்கையில் பட்டியலினத்தவர் 2 பேர் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில், “சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் கிராமத்தைச் சார்ந்த ஆதிக்கக் சமூகத்தைச் சேர்ந்த சுமன் என்பவரின் குடும்பத்தினர் கஞ்சா வியாபாரம் செய்து வந்ததை தடுக்கக் கோரி அதே கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திர குல வேளாளர் சாதியினர். காவல்துறையினரிடம் புகார் கொடுத்துள்ளனர். காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் கடந்த 4 ஆண்டுகாலமாக அலட்சியம் செய்து … Continue reading ”காவல்துறையின் பொறுப்பற்ற தன்மையால் சிவகங்கையில் பட்டியலினத்தோர் படுகொலை”

“இதுதான் வளர்ச்சியின் மாதிரி”: தலித், இஸ்லாமியர் அடித்துக்கொல்லப்படுவது தொடர்கிறது!

பாஜக ஆளும் மாநிலங்களில் தலித், இஸ்லாமியர் மீதான தாக்குதல்கள் அதிகரித்தபடியே உள்ளன. மத்திய பிரதேசம் சாத்னா மாவட்டத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி இஸ்லாமியர் ஒருவர் அடித்துக் கொல்லப் பட்டுள்ளார். குஜராத்தில் தலித்  ஒருவர் தன்னுடைய பணியிடத்தில் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். மத்திய பிரதேசம் சாத்னா மாவட்டத்தில் சிராஜ் என்பவர் இறைச்சிக்காக காளை மாட்டை வெட்டியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பசு பாதுகாப்பு குண்டர்கள் சிராஜ்(45) மற்றும் அவருடைய நண்பர் ஷகிலை(35) அடித்துள்ளனர். இதில் சிராஜ் அந்த இடத்திலேயே … Continue reading “இதுதான் வளர்ச்சியின் மாதிரி”: தலித், இஸ்லாமியர் அடித்துக்கொல்லப்படுவது தொடர்கிறது!

“துலுக்கப்பட்டி பிரச்சனை தீவிரமானதல்ல!”: எழுத்தாளர் அன்புசெல்வம்

அண்மைக்காலத்தில் தான் சில தீய சக்திகள், இந்துத்துவ வெறி கொண்டு தங்களின் சுயநல அரசியலை, சந்தர்ப்பவாதமாக்கிக் கொள்ள இது போன்ற மோதலை உருவாக்கி வருகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

சந்தையூர் தீண்டாமைச் சுவர்: தலித் ஒற்றுமை எங்கே? ஒரு நேரடி ஆய்வு அறிக்கை

பறையர்கள், அருந்ததியர்கள் மீது “தீண்டாமை மற்றும் சாதிய ஒடுக்குமுறைகளை,” கடைபிடிக்கிறார்கள் என்பதை ஏற்க தமிழகத்தில் உள்ள பலர் தயங்குகின்றனர் / மறுக்கின்றனர். இதற்கு காரணம், “தீண்டாமை மற்றும் சாதிய ஒடுக்குமுறைகள்,” என்பது தலித் அல்லாதோர், தலித்கள் மீது கடைபிடிப்பது என்று மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. இந்த வாதத்தின் படி, தலித் மக்கள் / அமைப்புகள், பார்ப்பனியத்தை / ஆதிக்க சாதிகளின் பண்புகளை உள்வாங்க முடியாது என்பதாகும். சந்தையூர் தீண்டாமைச் சுவர் சார்ந்த இந்த ஆய்வறிக்கை மேல் சொன்ன வாதத்தின் குறைபாடுகளை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. இந்த ஆய்வறிக்கை, பார்ப்பனியத்தை / ஆதிக்க சாதிகளின் பண்புகளை உள்வாங்கிய சில (சந்தையூர்) பறையர்களை பாதுகாக்க பெரும்பாலான பறையர்கள் / அமைப்புகள் / கட்சிகள் ஒன்று திரண்டு உள்ளார்கள் என்பதையும். அம்பேத்கரிய / பெரியாரிய பொதுவுடைமை தத்துவங்களை தாண்டி, இந்த பிரச்சினையில், சாதி வென்றுள்ளது என்பதையும் வலியுறுத்துகின்றது.

சிதைக்கப்பட்டு படுகொலையான வைத்தீஸ்வரி…

நிர்வாண நிலையில் பெண்ணுறுப்பு சிதைக்கப்பட்டு கிடக்கிற பெண்ணை, வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டவள் என ஒப்புக்கொள்ளவே, இந்த ஈனபுத்தி ஊடகங்கள் தயங்குகிறது என்றால் ஊடகங்களின் யோக்கியதை என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.

“பாரத் பந்த்” – கவனிக்க வேண்டியது!

இச்சட்டத்தை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நீதியரசர்களின் RSS தொடர்புகளை அம்பலப்படுத்த வேண்டும்.

சந்தையூர் கோவில் சுவர் : தலித் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வர‌ !

சந்தையூரில் சிறுபான்மையாக இருக்கும் பறையர்கள் இப்பிரச்சனையில் பெருந்தன்மையோடு நடந்து கொள்ள‌ வேண்டும், பிரச்சனையைப் பெருந்தன்மையோடு அணுக வேண்டும் என எதிர் பார்க்கிறோம்.

உச்ச நீதிமன்றத்தின் வன்கொடுமை – ஆதவன் தீட்சண்யா

தவறான தீர்ப்புகளை வழங்கியதற்காக இதுவரை எந்த நீதிமன்றமும் கலைக்கப்படாத போது, ஒரு சட்டத்தை சிலர் தவறாகப் பயன்படுத்துவதாலேயே அந்தச் சட்டத்தை ஏன் நீக்க வேண்டும் அல்லது நீர்த்துபோகச் செய்ய வேண்டும்?

குப்பை அள்ளுற உனக்கு அவ்வளவு எகத்தாளமா?; துப்புரவு பணியாளரை செருப்பால் அடிக்கவைத்த சாதிவெறி

இந்த நிமிஷம் என் உடம்புல உசுரு ஒட்டியிருக்கிறதுக்குக் காரணம், என் பொண்டாட்டி, புள்ளைங்கதான். நான் போயிட்டேன்னா அதுங்க பொழப்பு சிரிப்பா சிரிச்சிரும். என்னைய நம்பி யாரும் இல்லைன்னா இந்நேரம் நான் செத்திருப்பேன் சார். 'தூக்குல தொங்கிடலாமா’னு இருக்கு..

சந்தையூர் தீண்டாமைச் சுவர்: சந்தைக்கு வந்திருக்கும் தலித் “அரசியல்” சிக்கல்கள்!

அருந்ததியர்கள் சந்திக்கிற சிக்கல்களிலேயே முக்கியமான ஒன்றாக நான் கருத்துவது, அருந்ததியர்களுக்கும் மற்ற தலித் ஜாதியினருக்கும் இடையே இருக்கும் சிக்கல்களை பேசினாலே, தலித் ஒற்றுமை சீர்குலைவதாக அச்சுறுத்தப்படுவதுதான். அதன் காரணமாகவே, சந்தையூர் சிக்கல்குறித்து வெகுசன ஊடகங்களில் எந்த விவாதங்களும் நிகழவில்லை.

எச்சரிக்கையோடு இருப்போம்!: காலா, ரவிக்குமார் சர்ச்சை குறித்து வன்னி அரசு

சமீபத்தில் வெளியான காலா படத்தின் டீசர் குறித்து ரவிக்குமார் கூறிய கருத்து சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களுள் ஒருவரான வன்னி அரசு பதிவொன்றை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். “தோழர்களே! நாம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம் இது. ஒடுக்கப்பட்ட தலித்துகள் மற்றும் பழங்குடி மக்களை அமைப்பாய்த் திரட்டுவதும் அரசியல் சக்தியாய் வளர்த்தெடுப்பதும் லேசுபட்ட காரியமல்ல. அந்த முயற்சியில் நமது ‘தமிழ்த் தேசியப் பெருந்தலைவர்’ அண்ணன் தொல்.திருமாவளவன் … Continue reading எச்சரிக்கையோடு இருப்போம்!: காலா, ரவிக்குமார் சர்ச்சை குறித்து வன்னி அரசு

ஜானி வந்துடாம்பா!: casteless collective இசை நிகழ்ச்சி குறித்து…

ப. ஜெயசீலன் அமெரிக்க கருப்பின போராட்ட வரலாறு அதி உன்னதமான அறம் சார்ந்த மானுட விடுதலைக்கான, சமுத்துவத்திற்கான எளிய,வறிய, தன்னடையாளம் பறிக்கப்பட்ட சிறுபான்மை மக்களின் போர் குணத்தையும், அவர்கள் அடைந்த உன்னத வெற்றிகளையும் உள்ளடக்கியது. அமெரிக்க கருப்பின மக்களின் போராட்டம் என்பது தங்களின் பூர்விக மண்ணிலிருந்து பிடுங்கி எறியப்பட்டு, அவர்களின் கலை,இலக்கியம், மொழி, மதம், அடையாளம், சடங்குகள் என அவர்கள் சார்ந்த எல்லாவற்றையும் இழந்து, எல்லாமும் பறிக்கப்பட்டு மிஞ்சிப்போனவைகளையும் இழிவென கற்பிக்கப்பட்டு அதை சார்ந்து அவமானத்திற்க்கு உள்ளான … Continue reading ஜானி வந்துடாம்பா!: casteless collective இசை நிகழ்ச்சி குறித்து…

சாதிய உளவியலும் பதற்றங்களும்

ஏர் மகாராசன் சங்கர் படுகொலைக் குற்றத்திற்காக கீழமை நீதிமன்றம் வழங்கி இருக்கும் இந்தத் தீர்ப்பைக் குறித்து நாம் கொண்டாட வேண்டிய அவசியமில்லை; எதிர்க்க வேண்டிய தேவையும் இல்லை. வரவேற்க வேண்டிய தீர்ப்பாகவே பார்க்க வேண்டும். இதுவே இறுதித் தீர்ப்பும் அல்ல. இங்குள்ள நீதிமன்றத் தீர்ப்புகள் சாதியத் தன்மைகளோடும் அவற்றின் சார்புகளோடும் தான் பெரும்பாலும் இயங்குகின்றன. விதிவிலக்காய் இந்தத் தீர்ப்பு அவ்வளவே. மரண தண்டனை அல்லாமல் மற்ற தண்டனை வழங்கினால் மட்டும் தீண்டாமையோ படுகொலை நிகழ்வுகளோ நடக்காமல் இருக்கப்போவதில்லை. … Continue reading சாதிய உளவியலும் பதற்றங்களும்

மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் பேரவலத்தை ஒழியுங்கள் ராகுல்: ஒரு காங். தொண்டரின் கடிதம்!

அன்புள்ள திரு ராகுல்காந்தி... வரும் 16ம்தேதி நீங்கள் காங்கிரஸ் தலைவராக பதவியேற்பீர்கள் என அறிந்தேன்.. இதில்எனக்கு புதிதாக ஏதுமில்லை. கடந்த 2007ம் ஆண்டு குஜராத் சட்டமன்றத்தேர்தல் பிரச்சாரத்தில் அன்பின் அரசியலைப்பற்றி பேசினீர்கள். அன்றே உங்களுடன் மனப்பூர்வமாக உடன்பட்டு விட்டதால் இது எனக்கு சடங்குதான்.. ஆனால் ஒரு கட்சியாக மட்டுமின்றி நூற்றிமுப்பது ஆண்டுகளாக நவீன இந்தியாவின் உருவாக்கத்திலும் அதன் சாதனைகளிலும் போதாமைகளிலும் பங்குபற்றிய ஓர் இயக்கமாக காங்கிரஸை கருதும் எனக்கு அன்றாட வாக்கரசியலுக்கு அப்பால் பேச சில விசயங்கள் உண்டு.. … Continue reading மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் பேரவலத்தை ஒழியுங்கள் ராகுல்: ஒரு காங். தொண்டரின் கடிதம்!

தமிழ் சாதியும் ஆங்கில நீதியும்

ஜெ. பாலசுப்ரமணியம் ஒரே நிறுவனத்திலிருந்து வெளியாகும் இரு செய்தித்தாள்கள் ஒரு சம்பவத்தை எப்படி பார்க்கின்றன என்பதற்கு ஒரு சான்று. தமிழ் ‘தி இந்து’வும் ஆங்கில ‘தி இந்து’வும் சாதிய விசயங்களை பார்ப்பதில் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது. மதுரை மாவட்டம் பன்னியான் கிராமத்தில் கடந்த 30.10.2017 அன்று மாலை 5 மணி அளவில் தலித் குடியிருப்புகளை அடித்து நொறுக்கியும், பைக்குகள், ஆட்டோக்கள், சுமோ வாகனங்கள் அடித்து தாக்கப்பட்டன. இதை பதிவு செய்த ஆங்கில தி இந்து நாளிதழ் 2ஆம் … Continue reading தமிழ் சாதியும் ஆங்கில நீதியும்

தலித் மாணவி அமராவதி மரணத்துக்கு நீதி விசாரணை வேண்டும் !

பள்ளிக்கூடத்தில் அல்லது சக மாணவர் குழுவில் ஒரு தலித் சாதி ரீதியாக இழிவுபடுத்தும்போது, வன்கொடுமைகளால் காயப்படும்போது ஏற்படும் உளவியல் வலியை யாரிடம் முறையிடுவது?

சீமானின் சாதிய முகம்!

சீமான் பல்லக்கு முறை கார் வந்ததால் மாறிவிட்டதாக சொல்கிறார். அடடே என்ன ஒரு கண்டுபிடிப்பு?

கோயிலில் வழிபட முனைந்த தலித்துகள் மீது தாக்குதல்…

மகனை தாக்கியதை தாங்கமுடியாத ராணி உள்ளேவிழந்து விளக்கிட முயலும் போது , ஆதிக்க சாதியினரிடமிருந்து "ஏன்டி தே.....யா முண்டே பள்ளசிறுக்கி எங்கள சாமி கும்பிட இடைஞ்சலா பண்றீங்க, என்றும் ,"எனது சேலையை பிடித்து இழுத்தனர் ,தப்பிக்க முயன்றபோது ஆதிக்க சாதியை சேர்ந்த மற்றொருவன் என் சட்டையை இழுத்தில் வலது கை சட்டை கிழிந்துவிட்டது, இவ்வளவு கேவலமாக கோவிலுக்கு முன்னால் வைத்து எங்கள இப்படி பன்னீட்டாங்களே, என கண்கலங்கினார், அவருடன் மருத்துவமனையில் இருந்த பஞ்சவர்ணம் வயது 50 என்பவரிடம் கேட்டப்போது இவ்வளவுக்கும் … Continue reading கோயிலில் வழிபட முனைந்த தலித்துகள் மீது தாக்குதல்…

கிருஷ்ணசாமி எங்கிருந்து வந்தார்…

முருகன் கன்னா அதிமுக ஆட்சியில் கொடியன்குளம் தாக்குதல் சம்பவத்தின் போது எங்கோ இருந்த யார் என்று எவருக்கும் தெரியாத நபர் கிருஷ்ணசாமி கொடியன்குளம் வந்து தன்னை பள்ளனாக அறிமுகபடுத்தி கொன்டார் அறியாமையில் இருக்கும் மக்களும் நம்பினார்கள். 1996ல் சுப்பிரமணியசாமி என்ற ஆர்எஸ்எஸ்ன் ஜனதா கட்சியின் சார்பில் களம் இறக்கப்பட்டு போட்டியிட்டு வெற்றி பெற்றார்.1998ல் திமுக ஆட்சியில் மாஞ்சோலை தொழிலாளர் கூலி உயர்வு போராட்டத்தில் காவல்துறையினரால் திட்டமிட்டு நெல்லை தாமிரபரணியில் 17 உயிர்கள் படுகொலை சம்பவம் நிகழ்ந்தது ஆனால் … Continue reading கிருஷ்ணசாமி எங்கிருந்து வந்தார்…

மூன்று பண்டிதர்களின் சாதியற்ற தமிழ் தேசியம் – அயோத்திதாச பண்டிதர், ஆபிரகாம் பண்டிதர், தேவநேயப் பாவாணர்!

டி. தருமராஜ் மூன்று பண்டிதர்களின் சாதியற்ற தமிழ் தேசியம் - அயோத்திதாச பண்டிதர், ஆபிரகாம் பண்டிதர், தேவநேயப் பாவாணர்! தமிழ் தேசியம் என்ற யோசனையின் மீது எனக்குக் கொஞ்சம் மரியாதை இருக்கிறதென்றால் அது இந்த மூன்று பண்டிதர்களால் மட்டுமே. துரதிர்ஷ்டவசமாக, இந்தப் பண்டிதர்களைப் பற்றி இன்றைய தமிழ் தேசியர்களுக்கு அட்சரமும் தெரியாது. பெயர்களைக் கூட கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். நேரடியாகவோ மறைமுகமாகவோ இந்த மூன்று பேரும் தமிழ் தேசியத்தையே பேசியிருந்தார்கள். அவர்களின் பேச்சு, புறக்கணிக்கப்படுகிற அளவுக்கு காத்திரமானதாக இருந்தது … Continue reading மூன்று பண்டிதர்களின் சாதியற்ற தமிழ் தேசியம் – அயோத்திதாச பண்டிதர், ஆபிரகாம் பண்டிதர், தேவநேயப் பாவாணர்!

தமிழர் எல்லோருக்குமான பிணமாய் மாறும் முன் அவள் பறைச்சியாய் இருந்தாள்

அனிதா தமிழர் எல்லோருக்குமான பிணமாக மாறுவதற்கு முன்பு ரத்தமும் சதையுமான பறைச்சியாய் இருந்தாள் தண்ணீர்,கழிப்பிட வசதியற்ற அவள் வீடு பறத்தெருவிலிருந்தது. ஜீன்ஸ் கூலிங் கிளாஸ் போட்டவர்கள் அவளது தெருவிலிருந்து அவளது படிப்பை கெடுக்கவில்லை பொட்டச்சிக்கு எதுக்கு படிப்பு என்று பறையன் அப்பா சொல்லவில்லை படிச்சு கிழிச்சது போதும் என்று பறையன் அண்ணன்கள் சொல்லவில்லை அடக்கமா ஒடுக்கமா இருன்னு பறைச்சி பாட்டி சொல்லவில்லை படிப்புதான் நமக்கு எல்லாமே என்று எல்லா பறையர்களும் தமது பிள்ளைகளுக்கு சொல்வதைத்தான் அனிதாவின் வீட்டிலும் … Continue reading தமிழர் எல்லோருக்குமான பிணமாய் மாறும் முன் அவள் பறைச்சியாய் இருந்தாள்

அனிதா மரணம்; தற்கொலை அல்ல ஆட்சியாளர்களை எதிர்க்கும் யுத்தம்!

அனிதா மரணம்; தற்கொலை அல்ல ஆட்சியாளர்களை எதிர்க்கும் யுத்தம் என தெரிவித்துள்ளார் விசிக தலைவர் தொல்.திருமாவளவன். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் கிராமத்தைச் சார்ந்த மூட்டைத் தூக்கும் தொழிலாளியின் மகள் அனிதா நீட் தேர்வை எதிர்த்து தன்னை தானே மாய்த்து கொள்ளும் அறப்போராட்டத்தை நடத்தியிருக்கிறார். அனிதாவின் சாவு தற்கொலை அல்ல மத்திய மாநில அரசுகளை எதிர்க்கும் யுத்தம். 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 1200க்கு 1176 மதிப்பெண்களை பெற்ற ஆற்றல் … Continue reading அனிதா மரணம்; தற்கொலை அல்ல ஆட்சியாளர்களை எதிர்க்கும் யுத்தம்!

“நிகழ்ந்தது மரணம் அல்ல; மத்திய மாநில அரசுகள் கூட்டுச் சேர்ந்து செய்த பச்சை படுகொலை”

மக்கள் விருப்பத்திற்கு மதிப்பளிக்காமல், அறுதிப் பெரும்பான்மையாக இருக்கிறோம் என்ற அகந்தையில் ஆர்.எஸ்.எஸ் திட்டங்களை, ஒவ்வொன்றாக நடைமுறைப் படுத்துவதில் மட்டுமே குறியாக இருந்து வருகிறது மத்திய அரசு..

அனிதாவின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வந்துட்டதா? காவல்துறை விசாரித்து சொல்லிவிட்டார்களா?: டாக்டர் கிருஷ்ணசாமி

நீட் தேர்வால் மருத்துவ கனவு சிதைந்துபோனதை அடுத்து தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதா குறித்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, அனிதாவின் தற்கொலைக்கு நீட் காரணம் அல்ல என்றும் மருத்துவம் படிக்க முடியவில்லை என்றால் வேறு படிப்புக்கு முயற்சிக்க வேண்டும் என்று பேசியிருந்தார். டாக்டர் கிருஷ்ணசாமியின் கருத்து, சமூக ஊடகங்களில் பலத்த எதிர்ப்பை கிளப்பியது. டாக்டர் கிருஷ்ணசாமியின் கருத்தை ஒட்டி விவாதம் நடத்தியது நியூஸ் 7 தொலைக்காட்சி விவாதம் நடத்தியது. இந்த விவாதத்தில் … Continue reading அனிதாவின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வந்துட்டதா? காவல்துறை விசாரித்து சொல்லிவிட்டார்களா?: டாக்டர் கிருஷ்ணசாமி

17 வயது தலித் பெண்ணின் மருத்துவ கனவு தூக்கில் தொங்கவிடப்பட்டது…

மத்திய அரசின் அரக்கத்தனம், மாநில அரசின் கையாலாகாத்தனம் - இவை இரண்டும் மட்டுமா அனிதாவின் மரணத்திற்குக் காரணம்?
நமக்குப் போதிய சுரணை எப்போது வரப் போகிறது?

மிதிபட்டும் அடிபட்டும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது அவசியமா தலித்துகளே?#நல்லூர்கலவரம்

கல்பாக்கம் அடுத்த நல்லூர் காலனி பகுதியில் உள்ள தலித்துகள், பிள்ளையார் சதுர்த்தியை ஒட்டி சாலையோரத்தில் விநாயகர் சிலை வைத்து வெள்ளி இரவு  பூஜை செய்திருக்கிறார்கள். அப்போது வன்னியர் இனத்தை சேர்ந்த இளைஞர்கள் அவ்வழியாக பைக்கில் வேகமாக வந்ததாகவும், குழந்தைகள் விளையாடிக்கொண்டிருப்பதால் மெதுவாக செல்லும்படி அங்கிருந்த தலித்துகள்  கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வன்னிய இளைஞர்கள் தகாத வார்த்தைகளால் பேச, தொடர்ந்து இரு பிரிவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பைக்கில் வந்தவர்கள் போன் செய்ததையடுத்து, 200க்கும் … Continue reading மிதிபட்டும் அடிபட்டும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது அவசியமா தலித்துகளே?#நல்லூர்கலவரம்

வாஞ்சிக்கு தேவர் உதவிய ‘கதை’: தி இந்து மட்டுமே காரணமா?

தங்களுக்கு கிடைத்திருக்கும் புதிய அதிகாரத்திற்கான குலக்குறியாகக் கருதி தேவரை ஒரு அரசியல் தலைவர் என்பதை விடவும் புனிதர் என்று கட்டமைப்பது இங்கு ஊடகத்தில் ஆட்சி பெற்றிருக்கும் இவர்களுக்கு அவசியமாகிறது.

”தலித் மக்களை ஒன்றிணைத்து அரசியல் அதிகாரத்துக்காக போராடுவதே என் நோக்கம்” டாக்டர் கிருஷ்ணசாமியின் ஃபிளாஷ்பேக் பேட்டி

1998-ம் ஆண்டு பத்திரிக்கையாளர் ஷோபா வாரியாருக்கு, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் க்ருஷ்ணசாமி அளித்த பேட்டியின் ஒரு பகுதியை இங்கே தமிழாக்கம் செய்திருக்கிறோம். நீட் தேர்வுக்கு ஆதரவாக போராட்டம், இட ஒதுக்கீடுக்கு எதிராக போராட்டம், தேவேந்திர குல வேளாளர்களை தலித் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் இன்றைய டாக்டருக்கும், தலித்துகளை ஒன்றுபடுத்தி அரசியல் அதிகாரத்தை நோக்கி நகரவேண்டும் என்ற அன்றைய டாக்டருக்கும் எட்ட முடியாத அளவிலான வித்தியாசங்களைப் பார்க்க முடிகிறது. ஆச்சர்யமாகவும் … Continue reading ”தலித் மக்களை ஒன்றிணைத்து அரசியல் அதிகாரத்துக்காக போராடுவதே என் நோக்கம்” டாக்டர் கிருஷ்ணசாமியின் ஃபிளாஷ்பேக் பேட்டி

“பன்றி” யார்? : பகுதி -3 

தேசிய/மாநில விருது பெற்ற இயக்குனர் ரோஹித், முத்து கிருஷ்ணனின் மரணத்தை முன்னிட்டு தலித் அமைப்புகளை குற்றவாளி கூண்டில் ஏற்றுகிறார்...

“பன்றி” யார்? : பகுதி -2

வசந்தபாலனுக்கு மாடம் வைத்த தலித் வீட்டில் "நிலா காய்கிறது" பாடல் கேட்டால் சிரிப்பு சிரிப்பாய் வருகிறது. ஏனென்றால் ஒரு சாதி இந்துவின் மனதில் தலித்துகளை பற்றி அவர்களே உருவாக்கி கொண்ட கற்பிதங்களும் சித்திரங்களும் தலித்துகள் குறித்து கேள்விகளுக்கு அப்பாற்பட்ட தெளிவான வரையறையை கொடுத்துள்ளது.

“பன்றி” யார் ?

சாதிய படிநிலையில் தனது இருப்பை அறிவித்துக்கொள்பவன் தனக்கு மேல் இருப்பவனிடம் கொஞ்சமும் வெட்கமின்றி அடிமையாகவும் தனக்கு கீழ் உள்ளதாய் அவன் நம்புபவர்களின் உழைப்பை சுரண்டுபவனாகவும், ஏய்த்து பிழைப்பவனாகவும், அவர்களது எல்லா சமூக கலாச்சாரா பொருளாதார ஆதாரங்களையும்  இழிவு செய்பவனாகவும் எண்ணிலடங்கா கொலைகளும் வன்புணர்ச்சிகளும் செய்யும் ஒரு விலங்காகவும்  ஆகிறான். இப்படிபட்ட  சாதிய பெயரை சூட்டி கொள்ளும் தற்குறிகள் குறித்துதான் திரு கரு. பழனியப்பன் விருந்துண்ணுபவர்கள் என்கிறார்.