“போயி வேற வேலை பாருங்கடா”!: காட்டமான விஜய் சேதுபதி

சமீபத்தில் நடிகர் விஜய் வீட்டில் நடந்த வருமான வரி சோதனைகளின் பின்னணிக்கு கிறித்தவ மதமாற்ற நடவடிக்கைகளே காரணம் என பாஜக தரப்பினர் சொல்லி வந்தனர். நடிகர் விஜய், ஆர்யா, விஜய் சேதுபதி ஆகியோரின் பெயர் இந்த விவகாரத்தில் அடிபட்டது. இந்நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் காட்டமாக எதிர்வினை ஆற்றியுள்ளார் விஜய் சேதுபதி.

“வெட்கம் கெட்ட அரசே கோலம் போடுவது குத்தமா?”

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பெசண்ட் நகரில் கோலம் போடும் போராட்டத்தை முன்னெடுத்தவர்களை கைது செய்தது தமிழக போலீசு. கைதானபோது போராட்டத்தில் ஈடுபட்ட மதன்குமார் உள்ளிட்டோர் "வெட்கம் கெட்ட அரசே கோலம் போடுவது குத்தமா?" என முழக்கம் எழுப்பினர். https://www.facebook.com/madhankumar.madhankumar.376/videos/1708861345917723/

“முஸ்லீமுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?”: சொன்னவர் மேட்டுப்பாளையம் டி.எஸ்,பி. மணி

“சக்கிலியா நாய்களுகிட்ட கெஞ்சிட்ட இருக்கனுமா?”, “முஸ்லீமுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம், இந்த விசயதுள்ள நீங்க தலையிட கூடாது” இந்த இரண்டு கேள்விகள் திரும்ப திரும்ப தொந்தரவு செய்துகொண்டே இருக்கிறது. இந்த இரண்டு கேள்விகளையும் கேட்டவர் மேட்டுப்பாளையம் டி.எஸ்,பி. மணி. மேட்டுப்பாளையத்தில் 2.12.19 காலை இருபது அடி உயரம் உள்ள சுவர் இடிந்து விழுந்து 17பேர் என்ன நடந்தது என்று எதனையும் யூகிக்கும் முன்பே கொடுரமான மரணத்தை சந்தித்துள்ள சூழலில் அவை அனைத்தையும் வேறு பக்கம் திருப்பிவிடும் வேலையை … Continue reading “முஸ்லீமுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?”: சொன்னவர் மேட்டுப்பாளையம் டி.எஸ்,பி. மணி

ஆரிய எதிர்ப்பு நூலே திருக்குறள்: கி. வீரமணி

திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்தும், நெற்றியில் பட்டை தீட்டியும், கழுத்தில் உருத் திராட்சை போட்டும் காவி மயமாக்கிய கூட்டத்தின் முகத்திரையைக் கிழிக்க இதுவே சரியான சந்தர்ப்பம் - தமிழ் உணர்வாளர்களே வீறுகொள்வீர் என திராவிடர் கழகத் தலைவர்  கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கை: புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கருக்குக் காவி வண்ணம் பூசி, ஏதோ அவர்பால் மிகுந்த அன்பும், பாசமும் கொண்டதுபோல் பா.ஜ.க. சில காலமாக நாடகமாடி வருகிறது. இதைவிட மகா கேவலமான இழிசெயல் வேறு உண்டா? அதேபோல, தேசப்பிதா … Continue reading ஆரிய எதிர்ப்பு நூலே திருக்குறள்: கி. வீரமணி

கஜா புயல் நிவாரணம் கோரிய போராட்டங்களும் காவல்துறை தாக்குதல்களும்: உண்மை அறியும் குழு அறிக்கை

கஜா புயலால் இப்பகுதியில் பெரிய சேதம் ஏதும் இல்லை என அமைச்சர் மணியன் கூறியதாகப் பரவிய செய்தியைக் கேள்விப்பட்டு அதைக் கண்டித்து இனியவன் பேசிய வீடியோ நாக்கீரன் தளத்தில் வெளியிடப்பட்டு சில மணி நேரங்களில் ‘வைரல்’ ஆகப் பரவியுள்ளது. இன்று அவர் என்கவுன்டர் செய்யப்படலாம் என்கிற அளவிற்கு மக்கள் மத்தியில் அச்சம் உள்ளாகியுள்ள நிலை மிகவும் வருந்தத் தக்கது.

சிறப்பு நீதிமன்ற தீர்ப்பு பல கேள்விகளை எழுப்புகிறது: சிபிஎம்

2ஜி அலைக்கற்றை வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, பல புதிய கேள்விகளையே எழுப்பியுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. 2ஜி வழக்கு தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள அக்கட்சி, “ 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டின் காரணமாக ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது என்பதை சி.ஏ.ஜி அறிக்கை தெளிவாக்கியிருந்தது. உச்ச நீதிமன்றமும், அலைக்கற்றை ஒதுக்கீட்டில் தவறிழைத்த சில தொலைத்தொடர்பு நிறுவனங்களை குற்றஞ்சாட்டியதுடன் அவர்களுடைய லைசன்சையும் ரத்துச் செய்திருந்தது. சிபிஐ இவ்வழக்கில் போதுமான வாதங்களை … Continue reading சிறப்பு நீதிமன்ற தீர்ப்பு பல கேள்விகளை எழுப்புகிறது: சிபிஎம்

அநீதி வீழ்ந்து அறம் வென்றிருக்கிறது: 2 ஜி வழக்கு தீர்ப்பு குறித்து மு. க. ஸ்டாலின்

திமுக தலைவர் கருணாநிதி “அநீதி வீழும் அறம் வெல்லும்” என்று சொன்னதைப் போல, இன்றைக்கு “அநீதி வீழ்ந்து அறம் வென்றிருக்கிறது” என திமுக செயல் தலைவர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  ஏழு ஆண்டுகளாக சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. நீதிபதி ஓ.பி. சைனி தன்னுடைய தீர்ப்பில் குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் தகவல் தொடர்பு துறை … Continue reading அநீதி வீழ்ந்து அறம் வென்றிருக்கிறது: 2 ஜி வழக்கு தீர்ப்பு குறித்து மு. க. ஸ்டாலின்

கோவையின் அடையாளம் ஈஷா மையமா? எதிர்ப்பால் பின்வாங்கிய ரயில்வே!

ந.பன்னீர் செல்வம் கோவையிலிருந்து சென்னை செல்லும் சேரன் அதிவிரைவு வண்டியில் கோவையின் அடையாளமாக ஈஷா யோக மையத்தின் லிங்கம் படம் போட்டிருப்பது தவறானது என்றும், கோவை ரயில் நிலையத்தின் படம் போட நடவடிக்கை கோரியும் அண்மையில் கோவையிலிருந்து சென்னை வரை செல்லும் சேரன் அதிவிரைவு வண்டியில் கோவையின் அடையாளமாக ஈஷா நிறுவனத்தின் புகைப்படம் போட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என சமூக நீதிக்கட்சி சார்பில் கண்டனம் தெரிவித்திருந்தோம். தென்னிந்திய இரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லையெனில் வரும் வெள்ளிக்கிழமை தார் … Continue reading கோவையின் அடையாளம் ஈஷா மையமா? எதிர்ப்பால் பின்வாங்கிய ரயில்வே!

கவின் கலை கல்லூரி மாணவர் பிரகாஷ் தற்கொலைக்கு நீதிகேட்டு போராட்டம்

சென்னை கவின் கலைக் கல்லூரி மாணவர் பிரகாஷ் கடந்த மாதம் தற்கொலை செய்துக் கொண்டார். கல்லூரியின் துறைத்தலைவர் ரவி்க்குமார் மற்றும் சிவராஜ் ஆகியோரின் சாதிய, மதவெறிக்கொண்டு கொடுத்த சித்ரவதை காரணமாகவே தான் தற்கொலை செய்வதாக அவர் கடிதம் மூலமாகவும் வீடியோவில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பிரகாஷின் மரணத்துக்கு நீதி கேட்டு கவின் கலைக் கல்லூரியின் முன்னாள், இன்னாள் மாணவர்கள் போராட்டம் நடத்துகின்றனர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நவம்பர் 15-ஆம் தேதி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

காவல்துறையின் அரசாக தமிழகம் மறிவிட்டது: பியூசிஎல் அறிக்கை

பத்திரிக்கைச் செய்தி தமிழகம் இதுவரைக் கண்டிராத அளவிற்கு சிவில் மற்றும் உரிமை மறுப்பு மாநிலமாக மாறி உள்ளது. ஜல்லிக்கட்டுப் போரட்டத்திற்குப் பின் அரசின் திட்டங்களுக்கு, செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எந்தவிதப் பொதுநிகழ்வுகளுக்கும் காவல் துறை அனுமதி அளிப்பதில்லை. அரசை பொது வெளிகளில் விமர்சிக்கும் பலர் பொருத்தமில்லா சட்டங்களின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்படுகின்றனர். இங்கு ஜனநாயக வெளிகள் சுருக்கப்பட்டு வருகிறது. இன்று அரசின் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை இல்லை. ஜனநாயக பூர்வமான செயல் பாடுகள் இல்லை என்பது … Continue reading காவல்துறையின் அரசாக தமிழகம் மறிவிட்டது: பியூசிஎல் அறிக்கை

வழக்கறிஞர் செம்மணி மீது தாக்குதல்: நீதிமன்ற புறக்கணிப்புக்கு வழக்கறிஞர் சங்கம் அழைப்பு

நாளை 07/11/2017 தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் பணிபுறக்கணிப்பு செய்ய அனைத்து வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை பெருமன்றம் அழைப்பு விடுத்துள்ளது. திருநெல்வேலி மாறன்குளம் வழக்கறிஞர் இராஜரத்தினம் @ செம்மணி அவர்கள் தனது கட்சிக்கார் ஒருவரது புகாரை பெற மறுத்த போலீசார் மீது நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்துள்ளார் இவர். அதனால்,  3/11/17 இரவு வீட்டில் இருந்த அவரை குற்றத்தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் செல்லதுரை, பலவந்தமாக வெளியே இழுத்துள்ளார். ராதாபுரம் உதவி ஆய்வாளர் … Continue reading வழக்கறிஞர் செம்மணி மீது தாக்குதல்: நீதிமன்ற புறக்கணிப்புக்கு வழக்கறிஞர் சங்கம் அழைப்பு

கேலிச்சித்திரம் ஆபாசமென்றால், கந்துவட்டி கொடுமையும் இசக்கிமுத்து குடும்பத்தின் நிர்வாணச் சாவும் ஆபாசமில்லையா?

கேலிச்சித்திரம் ஆபாசமென்றால், கந்துவட்டி கொடுமையும் இசக்கிமுத்து குடும்பத்தின் நிர்வாணச் சாவும் ஆபாசமில்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேலிச்சித்திரங்களை வரையும் ஓவியர் 'கார்டூனிஸ்ட்' பாலாவைத் தமிழகக் காவல்துறை திடீரென கைது செய்துள்ளது. அவர் தனது கேலிச்சித்திரங்களின் மூலம் ஆபாசத்தை பரப்பினார் என வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். அண்மையில் ஆட்சியாளர்களையும் அதிகாரிகளையும் விமர்சித்து அவர் தீட்டிய கேலிச்சித்திரம் இலட்சக்கணக்கான மக்களின் கவனத்தை … Continue reading கேலிச்சித்திரம் ஆபாசமென்றால், கந்துவட்டி கொடுமையும் இசக்கிமுத்து குடும்பத்தின் நிர்வாணச் சாவும் ஆபாசமில்லையா?

பத்திரிகையாளர் சங்க பொதுச்செயலாளர் மோகன் மரணம்

சென்னை பத்திரிகையாளர் சங்கம்(எம்யுஜே) பொது செயலாளர் மோகன்(வயது 54). இவர் சென்னை திருவல்லிக்கேணியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இன்று காலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.  உடனடியாக அவர் சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள கல்யாணி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். மோகன் சென்னை தினகரன் பத்திரிகையில் மூத்த நிருபராக பணியாற்றி வந்தார். அவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.    

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் கந்துவட்டியால் மூவர் தற்கொலை: மூவர் கைது

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகே உள்ள காசிதர்மத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி இசக்கிமுத்து (வயது28). இவரது மனைவி சுப்புலெட்சுமி (25). இவர்களது மகள்கள் மதி சாருண்யா (4), அக்சயா பரணிகா (2). திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை இசக்கிமுத்து, அவரது மனைவி, இரண்டு குழந்தைகள் தீ குளித்தனர். கந்துவட்டி கொடுமை காரணமாக இந்த தற்கொலைக்கு முயன்றது பின்னர் தெரியவந்தது. எழுபத்தைந்து சதவீத காயங்களுடன் நால்வரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தாயும் குழந்தைகளும் சிகிச்சை பலினின்றி இறந்தனர். இந்நிலையில், … Continue reading நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் கந்துவட்டியால் மூவர் தற்கொலை: மூவர் கைது

எச். ராஜாவுக்கு எதிராக அறிக்கைவிட்டதுதான் நடிகர் விஷால் அலுவலக ரெய்டுக்குக் காரணமா?

நடிகர் விஷாலுக்கு சொந்தமான தயாரிப்பு நிறுவன அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் நடத்தி வருகின்றனர். அண்மையில் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவுக்கு எதிராக அறிக்கைவிட்டதுதான் நடிகர் விஷால் அலுவலக ரெய்டுக்குக் காரணம் என்ற கருத்து சமூக ஊடகங்களில் எழுப்பப்பட்டிருக்கிறது. https://www.facebook.com/rajasangeethan.john/posts/10214837569879767 https://www.facebook.com/dayalan.shunmuga/posts/1570779452965732 https://www.facebook.com/sonia.arunkumar/posts/1692221857475008

முதலமைச்சரின் சொந்த மாவட்டத்தில் டெங்குக் காய்ச்சல் கட்டுப்படுத்த முடியாமல் பரவுகிறது!

புதிய பாதாள சாக்கடைத் திட்டம் துவங்கப்படவில்லை. சாக்கடை கழிவு செல்வதற்கு வழிகளே இல்லை. ஆங்காங்கே தேங்கிக் கிடந்த சாக்கடை நீர், பெய்து வரும் பெருமழையில் நிரம்பி ஓடுகிறது. வீடுகள், கடைகளில் மழைநீர் புகுந்து விடுகிறது. மாநகர சாலைகள் முதல் நெடுஞ்சாலைகள் வரை ஆறுகள் போல மழைநீர் புரண்டு ஓடுகிறது.

விசிக மாநில சுயாட்சி மாநாடு: நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இன்று சென்னையில்  மாநில சுயாட்சி மாநாடு நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மாநில அரசுகளின் அதிகாரங்களைப் பறிக்கும் வகையில் மத்திய அரசு வலிந்து திணித்துள்ள 'நீட்' என்னும் தேர்வு முறையால் பாதிக்கப்பட்டு தன்னைத்தானே மாய்த்துக் கொண்ட மாணவி குழுமூர் அனிதாவுக்கும்; மதவெறியர்களின் வெறுப்பு அரசியலை எதிர்த்துக் களமாடியதால்  படுகொலையான ஊடகவியலாளர் கௌரி லங்கேஷ் அவர்களுக்கும்; சாதிய- மதவாத கும்பலின் வெறியாட்டத்தால் அண்மையில் படுகொலையான தோழர்கள்  சிவகங்கை-வேம்பத்தூர் முருகன், மதுரை-வடபழஞ்சி முத்தமிழன், .விரகனூர் … Continue reading விசிக மாநில சுயாட்சி மாநாடு: நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!

டிடிவி தினகரன் எம்.எல்.ஏக்கள் 18பேர் தகுதிநீக்கம்: ‘ஜனநாயக படுகொலை’

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியுடன் ஓ.பன்னீர் செல்வம் அணி இணைந்ததை அடுத்து, டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாக டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்துத் தனித்தனியாகக் கடிதம் அளித்தனர். இதனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று அரசு கொறடா, சபாநாயகருக்கு பரிந்துரை செய்திருந்தார். இதுதொடர்பாக நேரில் விளக்கம் அளிக்குமாறு எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அளித்திருந்தார். அவர்களில் எம்.எல்.ஏ … Continue reading டிடிவி தினகரன் எம்.எல்.ஏக்கள் 18பேர் தகுதிநீக்கம்: ‘ஜனநாயக படுகொலை’

சட்டவிரோத தேர்தல்: எச்.ராஜா

சாரண, சாரணியர் இயக்க தலைவருக்கான தேர்தல் சட்ட விரோதமாக நடந்துள்ளதாக பாஜக தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.

மரு.கிருஷ்ணசாமி மகளுக்கு மருத்துவ சீட் வாங்கிக்கொடுத்தோம்; சட்டசபையில் சொன்ன ஓ.பி.எஸ்.

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் மரு. கிருஷ்ணசாமி தன் மகளுக்கு மருத்துவ சீட்டை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடன் கேட்டு பெற்றதாக, முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தன்னுடைய முகநூலில் எழுதிய பதிவு வைரலானது.  இதுகுறித்து கிருஷ்ணசாமியிடம் விளக்கம் கேட்கப்பட்டபோது, ‘அந்தப் பொம்பளையை நான் பார்த்ததே இல்லை’ என பேசினார். இந்நிலையில் மரு. கிருஷ்ணசாமி சட்டசபையில் என்ன பேசினார், தன் மகளுக்கு மருத்துவ சீட் பெற்ற விடயத்தை சட்டசபையில் சொன்ன அதிமுக எம்.எல்.ஏ. யார் என வெளிபடுத்தியுள்ளார் வீடியோ பதிவர் … Continue reading மரு.கிருஷ்ணசாமி மகளுக்கு மருத்துவ சீட் வாங்கிக்கொடுத்தோம்; சட்டசபையில் சொன்ன ஓ.பி.எஸ்.

அனிதா மரணம்; தற்கொலை அல்ல ஆட்சியாளர்களை எதிர்க்கும் யுத்தம்!

அனிதா மரணம்; தற்கொலை அல்ல ஆட்சியாளர்களை எதிர்க்கும் யுத்தம் என தெரிவித்துள்ளார் விசிக தலைவர் தொல்.திருமாவளவன். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் கிராமத்தைச் சார்ந்த மூட்டைத் தூக்கும் தொழிலாளியின் மகள் அனிதா நீட் தேர்வை எதிர்த்து தன்னை தானே மாய்த்து கொள்ளும் அறப்போராட்டத்தை நடத்தியிருக்கிறார். அனிதாவின் சாவு தற்கொலை அல்ல மத்திய மாநில அரசுகளை எதிர்க்கும் யுத்தம். 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 1200க்கு 1176 மதிப்பெண்களை பெற்ற ஆற்றல் … Continue reading அனிதா மரணம்; தற்கொலை அல்ல ஆட்சியாளர்களை எதிர்க்கும் யுத்தம்!

“நிகழ்ந்தது மரணம் அல்ல; மத்திய மாநில அரசுகள் கூட்டுச் சேர்ந்து செய்த பச்சை படுகொலை”

மக்கள் விருப்பத்திற்கு மதிப்பளிக்காமல், அறுதிப் பெரும்பான்மையாக இருக்கிறோம் என்ற அகந்தையில் ஆர்.எஸ்.எஸ் திட்டங்களை, ஒவ்வொன்றாக நடைமுறைப் படுத்துவதில் மட்டுமே குறியாக இருந்து வருகிறது மத்திய அரசு..

மாணவி அனிதா தற்கொலை: முதலமைச்சர் எடப்பாடி பதவி விலக வேண்டும்!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கை: அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி அனிதா நடந்து முடிந்த 12ஆம் வகுப்பில் 1176 மதிப்பெண்களையும், கட்ஆஃப் மதிப்பெண்னாக 196.5 பெற்றார். மருத்துவம் பயில இரவும் பகலும் படித்து அதிக மதிப்பெண்களைப் பெற்ற அனிதா நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்களை பெற்றார் என்பதால் மருத்துவக் கல்வி பயிலமுடியாமல் மனவேதனை அடைந்து இன்று தற்கொலை செய்துக் கொண்டார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், … Continue reading மாணவி அனிதா தற்கொலை: முதலமைச்சர் எடப்பாடி பதவி விலக வேண்டும்!

மாணவி அனிதா தற்கொலைக்கு அரசுகளே பொறுப்பேற்க வேண்டும்!

அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா 12-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்தும் மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்டதயறிந்து அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாணவி அனிதாவின் தற்கொலை நடந்திருக்கக் கூடாத ஒன்றாகும். அனிதாவின் தற்கொலையை தடுக்கத் தவறியதற்காக சமூகம் வெட்கப்பட வேண்டும். மாணவி அனிதா 12-ஆம் … Continue reading மாணவி அனிதா தற்கொலைக்கு அரசுகளே பொறுப்பேற்க வேண்டும்!

வாதாட வேண்டியவர்கள் பேரம் பேசிக்கொண்டிருந்தால் எப்படி மக்கள் வாழ்வார்கள்?

வாதாட வேண்டியவர்கள் பேரம் பேசிக்கொண்டிருந்தால் எப்படி மக்கள் வாழ்வார்கள்? கமல்ஹாசன் என நடிகர் கமல்ஹாசன், மாணவி அனிதாவின் தற்கொலைக்கு தமிழக அரசை கடுமையாக சாடியுள்ளார். மத்திய மாநில அரசுகள் மட்டும் அல்ல நீதிமன்றமும் மக்கள் அமைத்தது தான் என்றும் நடிகர் கமல் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், "நீட் விவகாரத்தில் தோழர் திருமாவளவன் போன்றோர் கட்சிகளைக் கடந்து வெகுண்டெழுந்து போராட வேண்டும்!" என்றும் தெரிவித்தார்.    

12 ஆண்டுகள் தொடர் முயற்சியை ஒரு உத்தரவில் பறித்துக் கொண்ட மத்திய, மாநில அரசுகள்!

மாணவி அனிதாவின் தற்கொலை தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு பாடத்திட்டத்தில் படித்து +2 தேர்வில் 1176 மதிப்பெண் பெற்று, மருத்துவப் படிப்புக்கான கட்ஆப் மதிபெண் 196.5 பெற்றிருந்த அரியலூர் மாணவி அனிதா வின் தற்கொலை சாவு நெஞ்சை பிளக்கும் செய்தியாக கிடைத்து அதிர்ச்சியுற்றோம். சுமைப்பணித் தொழிலாளியான சண்முகம், தாயை இழந்த பிள்ளையான அனிதாவின் மருத்தவ கனவை நிறைவேற்ற அல்லும், பகலும் பாடுபட்டார். குடும்பக் கஷ்டத்தை உணர்ந்த அனிதா … Continue reading 12 ஆண்டுகள் தொடர் முயற்சியை ஒரு உத்தரவில் பறித்துக் கொண்ட மத்திய, மாநில அரசுகள்!

அமைச்சர் செங்கோட்டையனுடன் விவாதம்:அன்புமணி தேதி அறிவிப்பு

பள்ளிக் கல்வித் துறை செயல்பாடுகள் குறித்து அமைச்சர் செங்கோட்டையனுடன் வரும் 12-ஆம் தேதி விவாதம் நடத்த உள்ளதாக பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பள்ளிக்கல்வித் துறை செயல்பாடுகள் குறித்து தம்முடன் விவாதம் நடத்தத் தயாரா? என்று அமைச்சர் செங்கோட்டையன் சவால் விடுத்திருந்த நிலையில், அதையேற்று அவருடன் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் விவாதம் நடத்தத் தயாராக இருப்பதாக அறிவித்திருந்தேன். அதன்படி விவாதத்திற்கான நாளையும், இடத்தையும் அறிவித்து அதற்கான ஏற்பாடுகளை … Continue reading அமைச்சர் செங்கோட்டையனுடன் விவாதம்:அன்புமணி தேதி அறிவிப்பு

”அரசு கெஸட் வதந்தியை பரப்பும் பத்திரிகையா?”

“அரசு கெஸட் வதந்தியை பரப்பும் பத்திரிகையா?” என கேள்வி எழுப்பியுள்ளார் எழுத்தாளரும் திமுக நட்சத்திர பேச்சாளருமான மனுஷ்யபுத்திரன். தனது முகநூலில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “உணவுப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வருமானவரி செலுத்துபவர் ஒருவர் இருக்கும் குடும்பங்கள், ஃப்ரிட்ஜ் வைத்திருக்கும் குடும்பங்கள், ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் குடும்பங்களுகெல்லாம் இனி ரேஷன் கிடையாது என தமிழக அரசின் கெஸட்டில் வெளியிட்டிருக்கிறார்கள். ஆனால் உணவு அமைச்சர் காமராஜ் தற்போதைய பொது வினியோக திட்டத்தில் எந்த மாற்றமும் இருக்காது, மத்திய … Continue reading ”அரசு கெஸட் வதந்தியை பரப்பும் பத்திரிகையா?”

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலம் முழுவதும் மறியல் 15 ஆயிரம் பெண்கள் உட்பட 50 ஆயிரம் பேர் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலம் முழுவதும் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன்பு நடத்திய மறியல் போராட்டத்தில் 15 ஆயிரம் பெண்கள் உட்பட 50 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். இந்தி திணிப்பை மத்திய அரசு கைவிட வேண்டும். நீட் நுழைவுத் தேர்வை கைவிட்டு, தமிழ்நாட்டிற்கு விதிவிலக்கு அளித்திடல் வேண்டும். அனைத்து பகுதி மக்களையும், தொழில்களையும் பெரிதும் பாதித்துள்ள ஜிஎஸ்டி வரியை மறுபரிசீலனை செய்திட வேண்டும். விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடனை முழுமையாக ரத்து … Continue reading இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலம் முழுவதும் மறியல் 15 ஆயிரம் பெண்கள் உட்பட 50 ஆயிரம் பேர் கைது

2009-ஆம் ஆண்டு நடத்திய போராட்டத்துக்காக ஆவணப்பட இயக்குநர் திவ்ய பாரதி கைது!

ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி, மதுரையில் இன்று கைது செய்யப்பட்டார். 2009-ஆம் ஆண்டு விடுதி வசதி கேட்டு மாணவர் அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக திவ்யா கைது செய்யப்பட்டதாக அவருடைய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். வழக்கு விசாரணைக்கு வராத காரணத்தால் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தற்போது நிபந்தனை ஜாமீன் கிடைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மனிதர்கள் சக மனிதர்களின் கழிவுகளை அள்ளும் அவலம் குறித்து திவ்யபாரதி, 'கக்கூஸ்' என்ற ஆவணப்படத்தை எடுத்தவர். இந்தப் படத்துக்கு பல்வேறு சமூக அமைப்புகள் விருது அளித்துள்ளன. … Continue reading 2009-ஆம் ஆண்டு நடத்திய போராட்டத்துக்காக ஆவணப்பட இயக்குநர் திவ்ய பாரதி கைது!

தமிழர்களுக்கு எதிராக பாஜக; தமிழகம் வளர முதல்படி என்கிறார் எஸ்.வி.சேகர்!

தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் பாஜக அரசு எள் என்று சொல்லி முடிக்கும் முன்பே அதிமுக அரசு எண்ணெய்யாக செயல்படுவதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்ததார். இந்த செய்தி வந்த நாளிதழை மேற்கோள் காட்டி பாஜகவைச் சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர், இந்த செய்தி உண்மையானால் தமிழகம் வளர்வதற்கு முதல் படி என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கையில் என்பதை பார்க்காமல், பாஜக அரசு சொல்வதை அதிமுக அரசு கேட்கிறது என்பதாக எஸ். வி. சேகர் … Continue reading தமிழர்களுக்கு எதிராக பாஜக; தமிழகம் வளர முதல்படி என்கிறார் எஸ்.வி.சேகர்!

மத்திய அரசு எள் என்று சொன்னால், தமிழக அரசு எண்ணெயாக நிற்கிறது: மு. க. ஸ்டாலின்

காஞ்சிபுரத்தில் உள்ள செவிலிமேடு குளம், உத்திரமேரூர் தொகுதியில் உள்ள உத்திரமேரூர் குளம், செய்யூர் தொகுதிக்கு உட்பட்ட விளாகம் குளம் ஆகிய குளங்களை  தூர்வாரி, சீரமைத்தது திமுக. இந்த குளங்களை பார்வையிட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கு நிகழ்வை திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலையேற்று நடத்தினார். இந்நிகழ்வு குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: திமுக ஆட்சியில் இருந்தாலும், இல்லையென்று சொன்னாலும் இந்தப் பணிகள் பொதுமக்கள் பாராட்டும் வகையில் நடைபெறுவது, உள்ளபடியே தலைவர் கலைஞர் அவர்களுக்கும், திமுகவுக்கும் பெருமை … Continue reading மத்திய அரசு எள் என்று சொன்னால், தமிழக அரசு எண்ணெயாக நிற்கிறது: மு. க. ஸ்டாலின்

தமிழகத்தில்தான் அரசு பேருந்துகள் அதிகம்; வருமானம்தான் இல்லை!

தமிழகத்தில் தான் அரசு பேருந்துகள் அதிகளவு இயக்கப்படுகின்றன. சிறிய கிராமம், மலைப்பகுதி என அனைத்துப் பகுதிகளையும் இணைக்கும் வகையில் 23 ஆயிரத்து 500 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால் தமிழக போக்குவரத்து துறையில் கடந்த 2016ஆம் ஆண்டு மட்டும் 2600 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தணிக்கைத் துறை தெரிவித்துள்ளது. ஒன்றரை லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றும் இந்தத் துறை 24 மணி நேரம் பொதுமக்களுக்கான சேவையை வழங்கி வருகிறது. இதில் வருவாய் இழப்பு ஏற்படாமல் இருக்க அரசு ஆண்டுக்கு … Continue reading தமிழகத்தில்தான் அரசு பேருந்துகள் அதிகம்; வருமானம்தான் இல்லை!

கமலின் கருத்துகள் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை : கனிமொழி

நடிகர் கமல்ஹாசனை திமுக இயக்குவதாக கூறுவதில் உண்மை இல்லை என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,“திமுக என்பது மாபெரும் இயக்கம். அதில் நிறைய தலைவர்கள் இருக்கிறார்கள். எங்களுக்கு வேறு யாருடைய உதவியும் தேவையில்லை. கமலை இயக்க வேண்டிய அவசியம் திமுகவிற்கு இல்லை. கமல் போன்ற பிறரின் உதவி திமுகவிற்கு தேவையில்லை. கமல்ஹாசன் அவருடைய கருத்துக்களை சொல்லி வருகிறார். அது பற்றி நான் ஒன்றும் சொல்வதிற்கில்லை” … Continue reading கமலின் கருத்துகள் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை : கனிமொழி

“போராடத் தூண்டினால் குண்டர் சட்டம் கட்டாயம் பாயும்”: முதலமைச்சர் எச்சரிக்கை

"போராடத் தூண்டினால் குண்டர் சட்டம் கட்டாயம் பாயும்" என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது குறித்து சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அளித்த விளக்கத்தில், "மாணவி வளர்மதி மீது ஏற்கனவே 6 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மாணவி தன்னை மாற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டதால் சேலம் மாநகர காவல் ஆணையர் அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் … Continue reading “போராடத் தூண்டினால் குண்டர் சட்டம் கட்டாயம் பாயும்”: முதலமைச்சர் எச்சரிக்கை

வழிச் செலவுக்குக்கூட பணம் இல்லாத வானதி ஸ்ரீனிவாசன் திடீர் பணக்காரர் ஆனது எப்படி? பாஜக பிரமுகர் வெளியிட்ட ஆதாரம்

வழிச் செலவுக்குக்கூட பணம் இல்லாத வானதி ஸ்ரீனிவாசன் திடீர் பணக்காரர் ஆனது எப்படி? என கேள்வி எழுப்பியுள்ளார் பாஜகவைச் சேர்ந்த பாலசுப்ரமணிய ஆதித்தன் என்பவர். தமிழக பாஜக பொதுச்செயலாளராக இருக்கும் வானதி ஸ்ரீனிவாசன் மீது இவர் பல திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை தனது முகநூலில் எழுதியுள்ளார். “திருமதி வானதி மற்றும் திரு சு.ஸ்ரீநிவாசன் அவர்களுக்கு வணக்கம். உங்கள் இருவர் சார்பிலும் தனித்தனியே எனக்கு Legal Notice அனுப்பியுள்ளீர்கள். அதை பெற்றுக் கொண்டேன்... கடந்த 2003 ம் ஆண்டு நான் … Continue reading வழிச் செலவுக்குக்கூட பணம் இல்லாத வானதி ஸ்ரீனிவாசன் திடீர் பணக்காரர் ஆனது எப்படி? பாஜக பிரமுகர் வெளியிட்ட ஆதாரம்

கரன்ஸி பாலிடிக்ஸில் நம்பிக்கை இல்லை என்று செங்கோட்டையனிடம் சொன்னேன்: பேரம்பேசியதை ஒப்புக்கொண்ட தமிமுன் அன்சாரி

அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்தபோது ‘கரன்ஸி பாலிடிக்ஸில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை’ என தெரிவித்ததாக மனிதநேய ஜனநாயக கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ தமிமுன் அன்சாரி கூறினார். சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமைச்சர் செங்கோட்டையனைச் சந்தித்த போது பூரண மதுவிலக்கு, 14 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறைவுசெய்த ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட 7 கோரிக்கைகளை மட்டுமே அளித்தோம். இதுதவிர அந்த சந்திப்பின்போது எதுவும் நடக்கவில்லை. கரன்சி பாலிடிக்ஸில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை … Continue reading கரன்ஸி பாலிடிக்ஸில் நம்பிக்கை இல்லை என்று செங்கோட்டையனிடம் சொன்னேன்: பேரம்பேசியதை ஒப்புக்கொண்ட தமிமுன் அன்சாரி

கூவத்தூர் எம் எல் ஏக்கள் பேரம்; பரபரக்கும் சமூக ஊடகங்கள்!

ஆட்சிக் கலைப்புக்கு தோதான ஒரு அயிட்டம் இப்பவே மோடி மஸ்தான் கைல சிக்கியிருச்சு.. பார்த்துக்கிட்டேயிருங்க.. வைச்சு செய்யப் போறாரு மோடி

கருப்புப் பணத்தை சம்பளமாக வாங்கியதில்லை என ரஜினி அறிவிப்பாரா? சுப. உதயகுமாரன் கேள்வி

ரஜினிகாந்த் ஆண்டவனிடம் தொலைபேசி வழியாகவோ. மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது வேறு வழிகளிலோ பேசிவிட்டு கட்சித் துவங்கட்டும். ஆனால் பொதுவாழ்வுக்கு வருவதற்கு முன்னர் கீழ்க்காணும் விடயங்களை அவர் கட்டாயம் செய்தாக வேண்டும்

“பெற்று எடுக்காத பிள்ளைக்கு” பெயர் வைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டாம்: ஸ்டாலின் காட்டம்

சென்னை மெட்ரோ சுரங்க ரயில் பாதையை திறந்து வைத்து பேசிய மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, மெட்ரோ ரயில் ஜெயலலிதாவின் கனவு என்று பேசினார். மெட்ரோ ரயில் திட்டம் திமுக தொடங்கியது என்பதும் ஜெயலலிதா அதை எதிர்த்தார் என்பதும் நிதர்சனமாக இருக்கும் நிலையில் மத்திய அமைச்சரின் கருத்து இது கடும் சர்ச்சையை கிளப்பியது. இதுகுறித்து திமுக செயல் தலைவர் மு. க. ஸ்டாலின் தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “எத்தனை முறை விளக்கம் கொடுத்தாலும் … Continue reading “பெற்று எடுக்காத பிள்ளைக்கு” பெயர் வைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டாம்: ஸ்டாலின் காட்டம்