எல்&டி இன்ஃபோடெக் நிறுவனம் நாடு முழுவதிலுமிருந்து சுமார் 1,300 பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை கொடுப்பதாக ஒன்றரை வருடம் இழுத்தடித்து மோசடி செய்திருக்கிறது. 2014-ம் ஆண்டு பொறியியல் பட்டப் படிப்பை முடித்த இந்த மாணவர்களை பல கட்ட தேர்வுகளில் சோதனை செய்த பிறகு வேலை வழங்கும் கடிதத்தை (offer letter)-ஐ கொடுத்தது, எல்&டி இன்ஃபோடெக் நிறுவனம். ஆனால், வேலையில் சேர்வதற்கான தேதியை பல முறை ஒத்திப் போட்டு, 18 மாதங்களுக்குப் பிறகு இன்னும் ஒரு தகுதித் தேர்வு … Continue reading வேலை கொடுப்பதாக 1,300 பொறியியல் பட்டதாரிகளை மோசடி செய்த எல்.&.டி இன்ஃபோடெக் நிறுவனம்
பகுப்பு: தனியார்மயம்
33 கோடி மக்களுக்கு தண்ணீர் இல்லை;ஆனால், நாடே சுப்ரமணிய சாமியின் நாடாளுமன்ற தெருச் சண்டையில் லயித்திருக்கிறது!
அன்பே செல்வா 33 கோடி மக்கள் குடிக்கக் கூட தண்ணீர் இன்றி தவித்துக் கொண்டிருக்கிறார்கள், மாராஷ்டிரா, தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு என்று 12 மாநில மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக வல்லுனர்கள் சொல்கிறார்கள், ஆனால் மோடி சர்க்கார் இது மாநிலங்களின் பிரச்னை மொத்தமாக கைவிட்டு விட்டது, நமது தேசிய மீடியாக்களும் நாடாளுமன்றமும் சுப்பிரமணிய சாமி எழுப்பிய ராணுவ தளவாட ஊழலில் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருக்கையில் மகாராஸ்ட்ராவில் மட்டும் 1891 விவசாயிகள் தற்கொலை செய்து முடித்திருக்கிறார்கள், பெட்ரோல் விலை ஏற்றத்தையே அதுக்கும் மத்திய அரசுக்கும் … Continue reading 33 கோடி மக்களுக்கு தண்ணீர் இல்லை;ஆனால், நாடே சுப்ரமணிய சாமியின் நாடாளுமன்ற தெருச் சண்டையில் லயித்திருக்கிறது!
கேரள கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் சுரண்டலுக்கு எதிராக இவர்கள் வெற்றி பெற்றது எப்படி?
தமிழகத்தின் சரவணா ஸ்டோர்ஸ், போத்தீஸ் போன்ற விற்பனை நிறுவனங்களில் அடிப்படையான எவ்வித உரிமைகளும் கிடைக்கப் பெறாமல் ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் வதைபடுகிறார்கள். சம்பளம், வேலை நேரம் உள்ளிட்ட விஷயங்களில் இதுபோன்ற நிறுவனங்கள் எவ்வித ஒழுங்கையும் பேணுவதில்லை. கொத்தடிமைகளைப் போலவே தங்களுடைய ஊழியர்களை வைத்திருக்கின்றன. தொழிலாளர்கள் ஒன்றுபட்டு போராடாடுவதன் மூலமே இத்தகைய ஒடுக்குமுறைகளை சுரண்டல்களை ஒழிக்க முடியும் என நிரூபித்த கேரள கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவன ஊழியர்கள் போராடி பெற்ற வெற்றியை உதாரணமாகக் கொள்ள வேண்டும். கேரளத்தில் முன்னணி … Continue reading கேரள கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் சுரண்டலுக்கு எதிராக இவர்கள் வெற்றி பெற்றது எப்படி?
இந்தியாவில் பில்லியனர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு; என்ன காரணம்? பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா எழுதுகிறார்
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா பணக்காரர்கள் மீது வரியும் போடமாட்டோம், பொதுத்துறை பங்குகளையும் சகாய விலையில் அவர்களிடம் ஒப்படைப்போம் என்ற அரசின் கொள்கை பொதுத்துறையை பற்றி வைத்துள்ள அணுகுமுறை இதுதான்: ‘லாபத்தில் செயல்பட்டால் விற்று விடு, நட்டத்தில் இருந்தால் மூடி விடு’ வழக்கம் போல் மத்திய நிதி அமைச்சர் ஜெட்லி பிப்ரவரி இறுதி நாள் பட்ஜெட்டை சமர்ப்பித்தார். ஆனால் இதற்கு ஒருமாதம் முன்னதாகவே, முதலாளித்துவ பத்திரிகைகளிலும் தொலைக் காட்சி மற்றும் சமூக ஊடகங்களிலும் இந்த பட்ஜெட் எப்படி இருக்கவேண்டும் … Continue reading இந்தியாவில் பில்லியனர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு; என்ன காரணம்? பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா எழுதுகிறார்
தமிழில் எம். ஏ. படித்து வேலை பெற இதோ சில வழிகள்!
நியாண்டர் செல்வன் "என் இனிய தமிழ் சான்றோர்களே ! நம் மன்றத்தில் எத்துனையோ தமிழறிஞர்கள் உள்ளனர் . எனவே என் ஐயத்தை நீக்க வேண்டுகிறேன் . நான் இளங்களை தமிழ் முதலாமாண்டு பயிலும் சராசரியான, இலக்கியத்தில் சற்று ஈடுபாடுள்ள மாணவன் . என் எதிர்காலத்தில் என் தேவைகளை பூர்த்திக்க இத்துறை எனக்குதவும். எனக்கு என்னென்ன வாய்ப்புகள் இருக்கிறது . அதற்கு நான் இன்றிலிருந்து செய்யவேண்டியதென்ன ? இலக்கிய உலகில் நான் என்ன எவ்வாறு மேம்படுத்திக்கொள்வது ? கூறுங்கள்" … Continue reading தமிழில் எம். ஏ. படித்து வேலை பெற இதோ சில வழிகள்!
வரி ஏய்ப்பாளர்களை அன்பாக அழைப்பது எப்படி? அருண் ஜெட்லி வழிகாட்டுகிறார்!
பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயா பட்ஜெட் உரைகளில் ஆரவாரமான சொற்களும் கரவொலிக்கான அறிவிப்புகளுமாக இருக்கும். அதை வைத்து உண்மை பட்ஜெட்டை மதிப்பிட முடியாது. இந்த பட்ஜெட்டிலும் அப்படிப்பட்ட பகட்டுகள் நிறைய இருக்கின்றன.ஆனால், உண்மையான பட்ஜெட் அறிவிப்புகளோ மோசமான முன்னுதாரணமாக இருக்கின்றன. வரி ஏய்ப்பாளர்களுக்கு தாராள சலுகை அப்பட்டமாக தேசத்துரோகச் செயலில் ஈடுபடுகிறவர்களான வரி ஏய்ப்பாளர்களுக்கு அன்பான அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் தாங்கள் இதுவரை செலுத்தாத வரியில் 30 சதவீதத்தைச் செலுத்தினால் போதும், அதன் மீது ஒரு ஏழரை சதவீதம் … Continue reading வரி ஏய்ப்பாளர்களை அன்பாக அழைப்பது எப்படி? அருண் ஜெட்லி வழிகாட்டுகிறார்!
விவசாயத்தை கார்ப்பரேட் தொழிலாக்குங்கள்: பொருளாதார ஆய்வறிக்கை அரசுக்கு பரிந்துரை
இந்திய விவசாயத்தில் உணவு தானியத்திற்கான விவசாயம் பெரும் நட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அதனால் அதற்கு மாற்றாக மரபணு மாற்றுப்பயிர்கள் குறித்த பரிசோதனைகளை 6 மாதங்களுக்குள் முடித்துநாடு முழுவதும் விரிவாக அமல்படுத்தப்படும் எனவும் மோடி அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தீக்கதிர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் வந்துள்ள தகவல்கள்... பல ஆண்டுகளாக பெரும்பான்மையான இந்திய விவசாயத்தில் உணவுக்கான உற்பத்தியே நடந்து வருகிறது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் மட்டும் பணப்பயிர்களும் ஆடம்பரப் பயிர்களும் நமது விவசாயத்தில் திணிக்கப்பட்டன. இதன் … Continue reading விவசாயத்தை கார்ப்பரேட் தொழிலாக்குங்கள்: பொருளாதார ஆய்வறிக்கை அரசுக்கு பரிந்துரை
ரிலையன்ஸ் உருவாக்கும் இராணுவம்: இந்திய இராணுவத்தில் பணியாற்றிய 16 ஆயிரம் வீரர்கள் தேர்வு!
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னய்யா குமார் கைது விவகாரம், சத்தீஸ்கரில் போராளிகள், பத்திரிகையாளர் மீது தாக்குதல், ஜாட் சமூகத்தினரின் போராட்டம் என ஊடகங்கள் பரப்பரக்காக இயங்கிக் கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் ஒரு முக்கியமான செய்தியை ஊடகங்கள் ‘கண்டுகொள்ளாமல்’ இருக்கின்றன. கண்டுகொள்ளவில்லை என்பதைவிட, அது தம் எஜமானர் விஷயத்தில் தலையிடுவது போன்றதாகிவிடும் என்கிற பயமும் காரணமாக இருக்கலாம். இந்தியாவின் பெரிய ஊடக குழுமங்களில் ஒன்றான நெட்வொர்க் 18 குழுமத்தின் முதலீட்டாளர் முகேஷ் அம்பானி குறித்து செய்திகள் வெளியிடுவதில் கலக்கம் … Continue reading ரிலையன்ஸ் உருவாக்கும் இராணுவம்: இந்திய இராணுவத்தில் பணியாற்றிய 16 ஆயிரம் வீரர்கள் தேர்வு!