இன்று ஜனநாயகத்தின் கறுப்பு நாள்: கேரளா முதல்வா் பினராயி விஜயன்

கர்நாடக ஆளுநா் வஜுபாய் வாலாவின் செயல்பாட்டுக்கு எதிா்ப்பு தொிவித்துள்ள கேரளா முதல்வா் பினராயி விஜயன் இன்று ஜனநாயகத்தின் கறுப்பு நாள் என்று கருத்து தொிவித்துள்ளாா். https://twitter.com/vijayanpinarayi/status/996796702387470337 தனது ட்விட்டா் பக்கத்தில், “இன்று கா்நாடகாவின் துயரமான நாள். இந்திய ஜனநாயகத்தின் கறுப்பு நாள். கர்நாடகம் மற்றும் இந்திய ஜனநாயகத்திற்கு ஒரு சோகமான நாள். கர்நாடகா கவர்னர் பிஜேபிக்கு அழைப்பு விடுக்கும் முடிவை நீதித்துறை மறு ஆய்வு செய்ய வேண்டும். இது போன்ற செயல்பாடுகள் ஆளுநர் என்ற பதவியின் மாண்பை … Continue reading இன்று ஜனநாயகத்தின் கறுப்பு நாள்: கேரளா முதல்வா் பினராயி விஜயன்

மோடியை அகற்றுவதே நான் செய்யவேண்டிய ஒரே பணி: முன்னாள் பாஜக அமைச்சர் ராம்ஜெத்மலானி

கர்நாடக ஆளுநர் வஜுபய் வாலா, பாஜக தலைவர் எடியூரப்பாவை ஆட்சியமைக்க அழைத்தைக் கண்டித்து மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருக்கிறார். நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி ஏ.எம். கான்வில்கர், நீதிபதி டி.ஒய். சந்திரசூத் அடங்கிய அமர்வு ஜெத்மலானி தன்னுடைய மனுவை அதற்கென்று ஒதுக்கப்பட்ட அமர்வில் வெள்ளிக்கிழமைக்குள் தாக்கல் செய்ய அறிவுறுத்தினர். வாய்பாயி தலைமையிலான பாஜக ஆட்சியின்போது மத்திய சட்டத்துறை அமைச்சராக  இருந்தவர் ராம்ஜெத்மலானி . இந்த மனு குறித்து ஊடகங்களிடம் பேசிய ஜெத்மலானி, நரேந்திர மோடியை … Continue reading மோடியை அகற்றுவதே நான் செய்யவேண்டிய ஒரே பணி: முன்னாள் பாஜக அமைச்சர் ராம்ஜெத்மலானி

கர்நாடக பாணியில் கோவா, மணிப்பூர், பீகார், மேகாலயா மாநிலங்களில் ஆட்சியமைக்க உரிமை கோர கட்சிகள் முடிவு!

கர்நாடகத்தில் நடந்துமுடிந்த தேர்தலில் ஆட்சியமைக்க போதிய இடங்களைப் பெறாத நிலையில் அதிக இடங்களைப் பிடித்த பாஜகவை ஆளுநர் பதவியில் அமர்த்தியிருக்கிறார். கோவா, பீகார், மணிப்பூர், மேகாலயா ஆகிய மாநிலங்களில் அதிக இடங்களைப் பிடித்த கட்சிகளை ஆட்சியமைக்க அழைக்காமல், தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைத்த கட்சிகளை, குறிப்பாக குறைவான இடங்களைப் பெற்ற பாஜகவினரை ஆட்சியமைக்க அந்தந்த மாநில ஆளுநர் அழைத்தனர். இந்த விஷயம் அப்போதே சர்ச்சையான நிலையில், கர்நாடக அரசியல் நிலவரத்துக்கு எதிர்வினையாக மீண்டும் இது பேசுபொருளாகியுள்ளது. கோவாவில் … Continue reading கர்நாடக பாணியில் கோவா, மணிப்பூர், பீகார், மேகாலயா மாநிலங்களில் ஆட்சியமைக்க உரிமை கோர கட்சிகள் முடிவு!

“மக்களவை தேர்தலுக்குபின் நடக்கவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒத்திகை கர்நாடகத்தில் நடக்கிறது”: யஷ்வந்த சின்ஹா எச்சரிக்கை

“மக்களவை தேர்தலுக்குபின் நடக்கவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒத்திகை கர்நாடகத்தில் நடக்கிறது” என பாஜகவிலிருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த சின்ஹா எச்சரிக்கை விடுத்துள்ளார். தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கர்நாடக அரசியல் நிலை குறித்து பதிவிட்டுள்ள அவர், “கர்நாடகத்தில் ஜனநாயகத்தை புதைக்க முயற்சித்துக்கொண்டிருக்கும் கட்சியிலிருந்து விலகியதில் மகிழ்ச்சியடைகிறேன். அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலில் போதிய பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் இதுதான் அப்போது நடக்கும். என்னுடைய எச்சரிக்கையை குறித்துக்கொள்ளுங்கள்” என்கிறார். https://twitter.com/YashwantSinha/status/996965531889651712 மற்றொரு பதிவி, கர்நாடகத்தில் நடந்துகொண்டிருப்பது, … Continue reading “மக்களவை தேர்தலுக்குபின் நடக்கவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒத்திகை கர்நாடகத்தில் நடக்கிறது”: யஷ்வந்த சின்ஹா எச்சரிக்கை

அரசியலைப்பு மீதான கர்நாடகத்தின் தாக்குதல் ஆரம்பம்: பிரகாஷ் ராஜ்

அரசியலைப்பு மீதான கர்நாடகத்தின் தாக்குதல் ஆரம்பமாகியுள்ளது என நடிகர் பிரகாஷ் ராஜ் கருத்து தெரிவித்துள்ளார். நடிகர் பிரகாஷ் ராஜ், நடந்துமுடிந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவை எதிர்த்து கடுமையான பிரச்சாரங்களை மேற்கொண்டார். தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 104 இடங்களைப் பிடித்த பாஜக ஆட்சியமைத்துள்ளது. பெரும்பான்மை பெற இன்னும் 7 எம்.எல்.ஏக்களின் ஆதரவு பாஜகவுக்கு தேவை. காங்கிரஸ், ம.ஜ.தா தேர்தலுக்கு பின்பு கூட்டணி அமைத்திருக்கின்றன. போதிய எம்.எல்.ஏக்கள் இல்லாத பாஜக இந்தக் கட்சிகளின் எம்.எல்.ஏக்களை … Continue reading அரசியலைப்பு மீதான கர்நாடகத்தின் தாக்குதல் ஆரம்பம்: பிரகாஷ் ராஜ்

“மோடி ஒரு ஹிட்லர்; ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதை நிரூபிக்கிறார்”: முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு

நீதிமன்றம், ஆளுநர் மாளிகையில் நேரடியாக அதிகாரத்தை செலுத்துவதன் மூலம் மோடி தன்னை ஒரு ஹிட்லர் என நிரூபித்துக்கொண்டிருக்கிறார் என கர்நாடக முன்னாள் சுகாதார துறை அமைச்சர் ரமேஷ் குமார் கடுமையாக விமர்சித்துள்ளார். பெரும்பான்மையை பெறாத நிலையில் பாஜகவைச் சேர்ந்த எடியூரப்பாவை அரசமைக்க அழைத்தார் கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா. காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனத தளம் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைத்து தங்களுக்கு போதிய பெரும்பான்மை இருப்பதாகவும் ஆட்சியமைக்க அழைக்கும்படியும் ஆளுநரிடம் கடிதம் அளித்திருந்தது. ஆனால், எடியூரப்பாவுக்கு … Continue reading “மோடி ஒரு ஹிட்லர்; ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதை நிரூபிக்கிறார்”: முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு

ஆளுநரின் முடிவில் தலையிடவோ, விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பவோ முடியாது.

கர்நாடக முதல் மந்திரியாக எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க எந்த கட்சிக்கு கவர்னர் அழைப்பு விடுப்பார் என கர்நாடகம் மட்டுமின்றி நாடே எதிர்பார்த்து கொண்டிருந்தது. இந்த சூழலில், ஆட்சி அமைக்க வருமாறு பா.ஜனதா தலைவர் எடியூரப்பாவுக்கு கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார் என்றும், இன்று (வியாழக்கிழமை) காலை 9.30 மணி அளவில் பெங்களூரு ராஜ்பவனில் உள்ள கண்ணாடி மாளிகையில் பதவி ஏற்பு விழா நடக்கிறது என்றும் பா.ஜனதா தலைவர்கள் நேற்று … Continue reading ஆளுநரின் முடிவில் தலையிடவோ, விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பவோ முடியாது.

”மோடி, ஷா, வாலா என்ற மூன்று குஜராத்திகள் தங்களுடைய கடையை திறந்திருக்கிறார்கள்”: குமாரசாமி

நடந்து முடிந்த கர்நாடக தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ் ஆதரவுடன் மதசார்பற்ற ஜனதாதளம் ஆட்சியமைக்க உரிமை கோரியது. ஆனால், பெரும்பான்மை இல்லாத அதிக இடங்களைப் பெற்ற பாஜகவை ஆட்சியமைக்க அழைத்தார் அம்மாநில ஆளுநர் வஜுபாய் வாலா. இதைக் கண்டித்து பேசிய மஜத தலைவர் குமாரசாமி, “குஜராத்தி வியாபாரிகள் கடை விரித்திருக்கிறார்கள். அவர்கள் மூவர். மோடி, ஷா, மற்றும் வாலா. நான் திருப்பி தாக்குவோம். நான் எச்சரிக்கிறேன், அவர்களை நாங்கள் எதிர்கொள்வோம்” என பேசினார்.

மிரட்டும் தொனியிலான பேச்சை பிரதமர் நிறுத்த வேண்டும்: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஜனாதிபதிக்கு கடிதம்

‘காங்கிரஸ் தலைவர்களே, கவனமாகக் கேளுங்கள்...உங்கள் எல்லையை மீறினால், நினைவில் வையுங்கள்...இது மோடி, அதற்கான விலையை நீங்கள் கொடுத்தாக வேண்டும்’

“எஸ்.வி. சேகரை கைது செய்வது தமிழக போலீசாரின் வேலை; என் வேலையல்ல!”: பொன். ராதா.

போலீஸாரால் தேடப்படும் பாஜக பிரமுகர் எஸ்.வி. சேகரை சந்தித்தது உண்மைதான் என ஒப்புக்கொண்டுள்ளார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். பா.ஜ.க. பிரமுகரும், திரைப்பட நடிகருமான எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்களுக்கு எதிராக அவதூறாக கருத்தை பகிர்ந்திருந்தார். இதையடுத்து அவருக்கு எதிராக தமிழகம் முழுவதும் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் எஸ்.வி.சேகர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்பட நான்கு … Continue reading “எஸ்.வி. சேகரை கைது செய்வது தமிழக போலீசாரின் வேலை; என் வேலையல்ல!”: பொன். ராதா.

கர்நாடக தேர்தல்: வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கணிப்பில் காங்கிரஸ் ஆட்சியமைக்க வாய்ப்பு!

கர்நாடக தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் இந்தியா டுடே தொலைக்காட்சியும் அக்ஸிஸ் இந்தியாவும் இணைந்து நடத்திய கருத்து கணிப்பில் காங்கிரஸ் ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. 70, 574 பேரிடம் நடத்தப்பட்ட கருத்து கணிப்பின் முடிவுகள்: காங்கிரஸ் 106 -118 இடங்களை பிடிக்க வாய்ப்பு பாஜக 72- 92 இடங்களைப் பெற வாய்ப்பு ஜனதா தளம்(ம) - 22 -30 இடங்கள் பெறலாம் மற்றவர்கள் - 1- 4 இடங்கள். மொத்தம் 224 தொகுதிகள் உள்ள கர்நாடக சட்ட … Continue reading கர்நாடக தேர்தல்: வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கணிப்பில் காங்கிரஸ் ஆட்சியமைக்க வாய்ப்பு!

பிறன் மனை நோக்காதவன் எவனோ அவன் முதலில் நிர்மலா தேவியின் மீது கல்லெறியட்டும் 

ஆசிபாவிற்கு நீதி வேண்டும் என்று கேட்கும் ப்ரொபைல் போட்டோவை வைத்து கொண்டு இன்னொரு பெண்ணை தேவுடியா என்று திட்டும் இவர்களை எப்படி புரிந்துகொள்வது?

4 மாதமாக தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காத மத்திய அரசு நிறுவனம்!

சென்னை, நந்தம்பாக்கத்தில் இந்தியன், டிரக்ஸ் & பார்மசூட்டிக்கல்ஸ் என்ற புகழ்பெற்ற மருந்து நிறுவனம் இருக்கிறது. இது மத்திய அரசின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் 32 தொழிலாளர்கள் மட்டுமே பணிபுரிகிறார்கள்; அத்தனை பேரும் தினக்கூலி தொழிலாளர்கள். ( இது தவிர ஒப்பந்தக்காரர் மூலம் பணி அமர்த்தப்பட்ட தொழிலாளர்களும் உண்டு ) இந்த 32 பேருக்கும் கடந்த நான்கு மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை.போனஸ் சட்டப்படி கடந்த மூன்று வருடங்களாக போனஸ் வழங்கப்படவில்லை. குறைந்த விலையில் மக்களுக்கு … Continue reading 4 மாதமாக தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காத மத்திய அரசு நிறுவனம்!

சிறையில் உள்ள பேரா.சாய்பாபாவுக்கு மருத்துவ உதவி மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டு

மாவோயிஸ்டுகளுடன் தொடர்புள்ளதாகக் கூறி மகாராஷ்டிர நீதிமன்றம் பேராசிரியர் சாய்பாபாவுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. மாற்றுத்திறனாளியான சாய்பாபா, மிகக் கடுமையான உடல்நல பிரச்னைகளையும் எதிர்கொண்டிருக்கிறார். இந்நிலையில் பேரா. சாய்பாபாவின் மனைவி வசந்தா தன்னுடைய முகநூலில் உருக்கமான பதிவு ஒன்றை எழுதியிருக்கிறார். உடல்நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பேரா.சாய்பாபாவுக்கு அடிப்படையான மருத்துவ சிகிச்சையைக்கூட நாக்பூர் சிறை நிர்வாகம் அளிக்க மறுப்பதாக அந்தப் பதிவில் தெரிவிக்கிறார் வசந்தா.   அன்புள்ள நண்பர்களே... பேராசிரியர் ஜி. என். சாய்பாபாவின் உடல்நிலை குறித்து வழக்கறிஞர்கள் … Continue reading சிறையில் உள்ள பேரா.சாய்பாபாவுக்கு மருத்துவ உதவி மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டு

“மோடியே திரும்பிப்போ” முழுக்கத்தில் அனைவரும் பங்கெடுங்கள்!

காவிரி நதி நீர்ப் பங்கீட்டில் தமிழகத்தை வஞ்சித்து வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்தும், தமிழகத்தை பகை நாடாகக் கருதி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மோடி அரசைக் கண்டித்தும், கடந்த ஒரு வாரகாலமாகவே தமிழகம் போர்க்கோலம் பூண்டுள்ளது. மத்திய அரசின் அலுவலகங்கள், ரயில்கள், சுங்கச்சாவடிகள் அனைத்தையும் முடக்கும் போராட்டங்களை அதிமுக, பாஜக தவிர அனைத்து கட்சிகளும் நடத்தி வருகின்றன. ஆனாலும் மத்திய அரசு தமிழகத்தின் கோரிக்கைக்கு அசைந்து கொடுக்கவில்லை. ஐம்பது ஆண்டுகள் பொறுத்தவர்கள் ஐந்து மாதம் பொறுக்கக் கூடாதா … Continue reading “மோடியே திரும்பிப்போ” முழுக்கத்தில் அனைவரும் பங்கெடுங்கள்!

ஆர்.எஸ்.எஸ். திருத்தி எழுதிய வன்கொடுமை சட்டம்; 21 பேரை பலிவாங்கியது!

தீர்ப்பை எழுதிய நீதிபதிகள் ஆதர்ஷ் குமார் கோயல் மற்றும் உதய் உமேஷ் லலித் இருவரும் கடைந்தெடுத்த ஆர்.எஸ்.எஸ் பேர்வழிகள் ஆவர். நீதிபதியாவதற்கு முன்னர், ஆதர்ஷ் கே கோயல் RSS ன் வழக்கறிஞர்கள் பிரிவான All India Adiwakta Parishad என்ற அமைப்பின் பொது செயலாளராக இருந்தவர். பல சர்ச்சைகள் உள்ள தீர்ப்பை எழுதிய ஊழல் பேர்வழியும் ஆவார்.

டோல்கேட் மீது தாக்குதல்: தமிழ வாழ்வுரிமை கட்சி போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி நடத்திய போராட்டத்தில் சுங்கச் சாவடி அடித்து நொறுக்கப்பட்டது. https://www.facebook.com/arayanmagan/posts/2201035926579277

”புரோகித் நியமித்திருக்கும் சாஸ்திரி”: அம்பேத்கர் சட்ட பல்கலை துணைவேந்தர் நியமனத்துக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!

அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழக துணைவேந்தராக தம்ம சூர்ய நாராயண சாஸ்திரியை, தமிழக ஆளுநர் நியமித்துள்ளார்.  ஆர்.எஸ். எஸ். அமைப்போடு தொடர்புடையவரை துணைவேந்தராக நியமிப்பதா என எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன. திமுக செயல் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்திற்கு இந்துத்வாவின் சீடரான, திரு. தம்மா சூர்ய நாராயண சாஸ்திரியை துணைவேந்தராக நியமித்திருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மாண்புமிகு ஆளுநர் பன்வரிலால் புரோகித் அவர்கள், தமிழக ஆளுநராக பொறுப்பேற்றபோது, … Continue reading ”புரோகித் நியமித்திருக்கும் சாஸ்திரி”: அம்பேத்கர் சட்ட பல்கலை துணைவேந்தர் நியமனத்துக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!

நூல் அறிமுகம்: கே.பாலகோபாலின் ‘உரிமைகள் : ஒரு தத்துவக் கண்ணோட்டம்’

பீட்டர் துரைராஜ் தன்முதலான( original) சிந்தனையாளரும் மனித உரிமைப் போராளியுமான,  டாக்டர். கே.பாலகோபால் தெலுங்கில் எழுதியவற்றை "உரிமைகள்: ஒரு தத்துவக் கண்ணோட்டம்" என்ற பெயரில் சிந்தன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. கே.மாதவ் மொழி பெயர்த்துள்ள இந்த நூல் ஜனநாயக ஆர்வலர்கள் மத்தியில் சலனத்தை, தூண்டுதலை கண்டிப்பாக ஏற்படுத்தும். பாலகோபால் முப்பதாண்டு காலம் உரிமைகள் இயக்கப் பயணத்தில் தீர்மானகரமான பங்காற்றியவர். அவருடைய கட்டுரைகள், சொற்பொழிவு, துண்டறிக்கை, பாடத்திட்டம் , கேள்வி-பதில், அஞ்சலி, தலையங்கம் ,பேட்டி இவைகளைத் தொகுத்து இந்த முன்னூறு … Continue reading நூல் அறிமுகம்: கே.பாலகோபாலின் ‘உரிமைகள் : ஒரு தத்துவக் கண்ணோட்டம்’

தினமணி ஆசிரியர் வைத்தியநாதனை கண்டிக்கிறோம்: ‘குரல்’ பத்திரிகையாளர்கள் அமைப்பு

வணக்கம். ஆண்டாள் பிரச்னையில் திருவில்லிபுத்தூர் கோயிலுக்கு நேரில் சென்று அந்த கோயிலின் ஜீயர் சடகோபன் ராமானுஜரை சந்தித்துப்பேசி, கோயிலில்நெடுஞ்சான்கிடையாக விழுந்து மன்னிப்புக் கேட்டிருக்கிறார் தினமணி பத்திரிகையின் ஆசிரியர் வைத்தியநாதன். கட்டுரையை எழுதிய வைரமுத்து தொடக்கத்தில் வருத்தம் தெரிவித்தார். அதன்பிறகும் அவருக்கு எதிரான எதிர்ப்புகள் தொடர்ந்தாலும் அவர் இதுவரை மன்னிப்புக் கேட்கவில்லை. ஆனால் அவர் எழுதிய கட்டுரையை வெளியிட்டதற்காக வைத்தியநாதன் மன்னிப்புக் கேட்டிருக்கிறார். ஒரு பத்திரிகை ஆசிரியர் என்ற பொறுப்பும், மதிப்பும் மிக்க நிலையில் இருந்து அவர் கேட்டிருக்கும் … Continue reading தினமணி ஆசிரியர் வைத்தியநாதனை கண்டிக்கிறோம்: ‘குரல்’ பத்திரிகையாளர்கள் அமைப்பு

பிளவுகளை முறியடித்து ஒற்றுமை காப்போம்: சிபிஐ புத்தாண்டு வாழ்த்து

அனைவருக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் அக்கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2017 ஆம் ஆண்டு நம்மிடமிருந்து விடைபெறும் போது, துயரங்களையும், படிப்பினைகளையும் தந்துவிட்டு சென்றுள்ளது. மாநிலத்தின் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் மறைவுக்கு பின்னர் கடந்த ஓராண்டு காலத்தில் மாநில ஆட்சி மக்களின் நம்பிக்கையை இழந்த நிலையில் உள்ளது. மாநில உரிமைகள், நலன்கள் முற்றாக புறக்கணிக்கப்படுகின்றது. மாநிலத்தின் ஆளுநர் மாநில சுயாட்சி கொள்கைக்கு … Continue reading பிளவுகளை முறியடித்து ஒற்றுமை காப்போம்: சிபிஐ புத்தாண்டு வாழ்த்து

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: ஐந்தாவது சுற்றிலும் தினகரன் முன்னிலை

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு சென்னை ராணி மேரி கல்லூரியில் தொடங்கியது. ஐந்து சுற்று எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தினகரன் 24,550 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை பெற்றுள்ளார். மதுசூதனன் 10687 வாக்குகளும் மருதுகணேஷ் 5519 வாக்குகளும் பெற்றுள்ளனர். நாம் தமிழர் கட்சியின் கலைகோட்டுதயம் 962 வாக்குகளும் பாஜகவின் கரு. நாகராஜன் 318 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

கவிஞர் இன்குலாப் குடும்பம் சாகித்ய அகாடமி விருதை ஏற்க மறுப்பு!

கவிஞர் இன்குலாபுக்கு வழங்கப்பட்ட 2017-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதை ஏற்க மறுப்பதாக அவருடைய குடும்பம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் குரல்களில் ஒன்றாக இருந்த இன்குலாபுக்கு சாகித்ய அகாதமி விருது வழங்குவது என்பது இப்படிப்பட்ட நிலைகளில் இருந்து வருபவர்களுக்கு ஓர் அங்கீகாரமாக அமையும். அவர்களது எழுத்துக்கள் இன்னும் பரவலான வாசகர் வட்டத்தை அடையலாம். இன்குலாப் விருதுகள் பற்றிக் கூறியது ’’எனக்கு விருதுகள் வரும் என்று எதிர்பார்த்து எழுதுவதில்லை. ஆனால் … Continue reading கவிஞர் இன்குலாப் குடும்பம் சாகித்ய அகாடமி விருதை ஏற்க மறுப்பு!

சிறப்பு நீதிமன்ற தீர்ப்பு பல கேள்விகளை எழுப்புகிறது: சிபிஎம்

2ஜி அலைக்கற்றை வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, பல புதிய கேள்விகளையே எழுப்பியுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. 2ஜி வழக்கு தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள அக்கட்சி, “ 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டின் காரணமாக ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது என்பதை சி.ஏ.ஜி அறிக்கை தெளிவாக்கியிருந்தது. உச்ச நீதிமன்றமும், அலைக்கற்றை ஒதுக்கீட்டில் தவறிழைத்த சில தொலைத்தொடர்பு நிறுவனங்களை குற்றஞ்சாட்டியதுடன் அவர்களுடைய லைசன்சையும் ரத்துச் செய்திருந்தது. சிபிஐ இவ்வழக்கில் போதுமான வாதங்களை … Continue reading சிறப்பு நீதிமன்ற தீர்ப்பு பல கேள்விகளை எழுப்புகிறது: சிபிஎம்

அநீதி வீழ்ந்து அறம் வென்றிருக்கிறது: 2 ஜி வழக்கு தீர்ப்பு குறித்து மு. க. ஸ்டாலின்

திமுக தலைவர் கருணாநிதி “அநீதி வீழும் அறம் வெல்லும்” என்று சொன்னதைப் போல, இன்றைக்கு “அநீதி வீழ்ந்து அறம் வென்றிருக்கிறது” என திமுக செயல் தலைவர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  ஏழு ஆண்டுகளாக சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. நீதிபதி ஓ.பி. சைனி தன்னுடைய தீர்ப்பில் குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் தகவல் தொடர்பு துறை … Continue reading அநீதி வீழ்ந்து அறம் வென்றிருக்கிறது: 2 ஜி வழக்கு தீர்ப்பு குறித்து மு. க. ஸ்டாலின்

அருவி: பவித்ரா உன்னை நினைத்துக்கொள்கிறேன்!

சிவராஜ் விழிமீறும் கண்ணீரையும், நாவைப் பிறழச்செய்யும் சொற்களையும் கடினப்பட்டு கட்டுப்படுத்தி, குரல்வளை கவ்வலின் எச்சிலை விழுங்கிக்கொண்டே இவ்வெழுத்துக்களை எழுதுகிறேன். இந்தத் திரைப்படம் ஏதோவொரு வகையில், மனிதர்களாலும் சூழல்களாலும் உண்டாக்கப்பட்டு மனதின் அடியாழத்தில் தங்கியிருந்த நிறைய கசப்புகளையும் வன்மங்களையும் அக்கக்காக பெயர்த்தெடுத்து, நம்மை திரும்பத்திரும்ப கூண்டிலேற்றுகிறது. நம் சுயத்தை கண்முன் நிறுத்தி நிலைகுலையச் செய்யும் கேள்விதனை விடாமல் எழுப்பி சுயசுத்தத்தை நொடிக்குநொடி யாசிக்கவைக்கிறது இதன் திரைமொழி. இவ்வளவு விரிந்த ஒரு அன்போடு இந்த உலகத்தை ஒருவன் தன்னுடைய படைப்பின் … Continue reading அருவி: பவித்ரா உன்னை நினைத்துக்கொள்கிறேன்!

ஆளுநர் மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை: வலுக்கும் எதிர்ப்பு

தமிழக ஆளுநர் பன்வாரிலால் ப்ரோகித், கோவை ஆட்சியருடன் இன்று ஆய்வுக்கூட்டம் நடத்தினார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும்போது, நியமனம் செய்யப்பட்ட ஆளுநர் ஆட்சிப் பணிகளில் தலையிடுவதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். முன்னதாக ஆளுநர் ஆலோசனை நடத்திய விருந்தினர் மாளிகைக்கு எதிரே தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

கவின் கலை கல்லூரி மாணவர் பிரகாஷ் தற்கொலைக்கு நீதிகேட்டு போராட்டம்

சென்னை கவின் கலைக் கல்லூரி மாணவர் பிரகாஷ் கடந்த மாதம் தற்கொலை செய்துக் கொண்டார். கல்லூரியின் துறைத்தலைவர் ரவி்க்குமார் மற்றும் சிவராஜ் ஆகியோரின் சாதிய, மதவெறிக்கொண்டு கொடுத்த சித்ரவதை காரணமாகவே தான் தற்கொலை செய்வதாக அவர் கடிதம் மூலமாகவும் வீடியோவில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பிரகாஷின் மரணத்துக்கு நீதி கேட்டு கவின் கலைக் கல்லூரியின் முன்னாள், இன்னாள் மாணவர்கள் போராட்டம் நடத்துகின்றனர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நவம்பர் 15-ஆம் தேதி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

காவல்துறையின் அரசாக தமிழகம் மறிவிட்டது: பியூசிஎல் அறிக்கை

பத்திரிக்கைச் செய்தி தமிழகம் இதுவரைக் கண்டிராத அளவிற்கு சிவில் மற்றும் உரிமை மறுப்பு மாநிலமாக மாறி உள்ளது. ஜல்லிக்கட்டுப் போரட்டத்திற்குப் பின் அரசின் திட்டங்களுக்கு, செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எந்தவிதப் பொதுநிகழ்வுகளுக்கும் காவல் துறை அனுமதி அளிப்பதில்லை. அரசை பொது வெளிகளில் விமர்சிக்கும் பலர் பொருத்தமில்லா சட்டங்களின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்படுகின்றனர். இங்கு ஜனநாயக வெளிகள் சுருக்கப்பட்டு வருகிறது. இன்று அரசின் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை இல்லை. ஜனநாயக பூர்வமான செயல் பாடுகள் இல்லை என்பது … Continue reading காவல்துறையின் அரசாக தமிழகம் மறிவிட்டது: பியூசிஎல் அறிக்கை

வழக்கறிஞர் செம்மணி மீது தாக்குதல்: நீதிமன்ற புறக்கணிப்புக்கு வழக்கறிஞர் சங்கம் அழைப்பு

நாளை 07/11/2017 தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் பணிபுறக்கணிப்பு செய்ய அனைத்து வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை பெருமன்றம் அழைப்பு விடுத்துள்ளது. திருநெல்வேலி மாறன்குளம் வழக்கறிஞர் இராஜரத்தினம் @ செம்மணி அவர்கள் தனது கட்சிக்கார் ஒருவரது புகாரை பெற மறுத்த போலீசார் மீது நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்துள்ளார் இவர். அதனால்,  3/11/17 இரவு வீட்டில் இருந்த அவரை குற்றத்தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் செல்லதுரை, பலவந்தமாக வெளியே இழுத்துள்ளார். ராதாபுரம் உதவி ஆய்வாளர் … Continue reading வழக்கறிஞர் செம்மணி மீது தாக்குதல்: நீதிமன்ற புறக்கணிப்புக்கு வழக்கறிஞர் சங்கம் அழைப்பு

கேலிச்சித்திரம் ஆபாசமென்றால், கந்துவட்டி கொடுமையும் இசக்கிமுத்து குடும்பத்தின் நிர்வாணச் சாவும் ஆபாசமில்லையா?

கேலிச்சித்திரம் ஆபாசமென்றால், கந்துவட்டி கொடுமையும் இசக்கிமுத்து குடும்பத்தின் நிர்வாணச் சாவும் ஆபாசமில்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேலிச்சித்திரங்களை வரையும் ஓவியர் 'கார்டூனிஸ்ட்' பாலாவைத் தமிழகக் காவல்துறை திடீரென கைது செய்துள்ளது. அவர் தனது கேலிச்சித்திரங்களின் மூலம் ஆபாசத்தை பரப்பினார் என வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். அண்மையில் ஆட்சியாளர்களையும் அதிகாரிகளையும் விமர்சித்து அவர் தீட்டிய கேலிச்சித்திரம் இலட்சக்கணக்கான மக்களின் கவனத்தை … Continue reading கேலிச்சித்திரம் ஆபாசமென்றால், கந்துவட்டி கொடுமையும் இசக்கிமுத்து குடும்பத்தின் நிர்வாணச் சாவும் ஆபாசமில்லையா?

பத்திரிகையாளர் சங்க பொதுச்செயலாளர் மோகன் மரணம்

சென்னை பத்திரிகையாளர் சங்கம்(எம்யுஜே) பொது செயலாளர் மோகன்(வயது 54). இவர் சென்னை திருவல்லிக்கேணியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இன்று காலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.  உடனடியாக அவர் சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள கல்யாணி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். மோகன் சென்னை தினகரன் பத்திரிகையில் மூத்த நிருபராக பணியாற்றி வந்தார். அவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.    

பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் முதலாண்டு நாளில் தேசம் தழுவிய எதிர்ப்பு – இடதுசாரி கட்சிகளின் அறைகூவல் !

இந்தியா முழுவதும் ஒட்டுமொத்தமாக நிலமைகள் மோசமாகிக் கொண்டு இருக்கின்றன; பொதுமக்களின் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இது குறித்து இடதுசாரி கட்சிகள் கவலை தெரிவிக்கின்றன . வகுப்புவாத அடிப்படையில் மக்களை அணி திரட்டுவது கூர்மையாக நடக்கிறது ; பாராளுமன்ற ஜனநாயக நிறுவனங்களின் மதிப்பு குறைக்கப்படுகிறது ; ஜனநாயக உரிமைகள் மீதும் , குடிமை உரிமைகள் மீதான தாக்குதல்கள் அதிகரிக்கின்றன. எதேச்சதிகார முறையில், திடீரென்று பணமதிப்பு நீக்கத்தை பிரதம மந்திரி அறிவித்து ஓர் ஆண்டு ஆகிறது.இடதுசாரி கட்சிகள் எதிர் … Continue reading பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் முதலாண்டு நாளில் தேசம் தழுவிய எதிர்ப்பு – இடதுசாரி கட்சிகளின் அறைகூவல் !

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் கந்துவட்டியால் மூவர் தற்கொலை: மூவர் கைது

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகே உள்ள காசிதர்மத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி இசக்கிமுத்து (வயது28). இவரது மனைவி சுப்புலெட்சுமி (25). இவர்களது மகள்கள் மதி சாருண்யா (4), அக்சயா பரணிகா (2). திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை இசக்கிமுத்து, அவரது மனைவி, இரண்டு குழந்தைகள் தீ குளித்தனர். கந்துவட்டி கொடுமை காரணமாக இந்த தற்கொலைக்கு முயன்றது பின்னர் தெரியவந்தது. எழுபத்தைந்து சதவீத காயங்களுடன் நால்வரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தாயும் குழந்தைகளும் சிகிச்சை பலினின்றி இறந்தனர். இந்நிலையில், … Continue reading நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் கந்துவட்டியால் மூவர் தற்கொலை: மூவர் கைது

எச். ராஜாவுக்கு எதிராக அறிக்கைவிட்டதுதான் நடிகர் விஷால் அலுவலக ரெய்டுக்குக் காரணமா?

நடிகர் விஷாலுக்கு சொந்தமான தயாரிப்பு நிறுவன அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் நடத்தி வருகின்றனர். அண்மையில் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவுக்கு எதிராக அறிக்கைவிட்டதுதான் நடிகர் விஷால் அலுவலக ரெய்டுக்குக் காரணம் என்ற கருத்து சமூக ஊடகங்களில் எழுப்பப்பட்டிருக்கிறது. https://www.facebook.com/rajasangeethan.john/posts/10214837569879767 https://www.facebook.com/dayalan.shunmuga/posts/1570779452965732 https://www.facebook.com/sonia.arunkumar/posts/1692221857475008

“சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பாஜகவில் இருப்பது கடினம்”: பாஜக மாநில மகளிரணி செயலாளர்

தமிழக பாஜகவின் மகளிரணி செயலாளராக இருந்தவர் ஜெமீலா. பாஜகவிலிருந்து விலகுவதாக முகநூலில் எழுதியிருக்கும் இவர், ‘பாஜகவில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பயணிப்பது கடினம்’ என பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். “நான் கடந்த 2 வருடங்களாக பாரதிய  ஜனதா கட்சியில் இணைந்து, மாநில மகளிரணி செயலாளர் மற்றும் ஊடக செய்தி தொடர்பாளர் என்ற பொறுப்புகளுடன் உண்மையான தொண்டராக கட்சிப் பணி செய்து வந்தேன் . பாரதிய ஜனதா கட்சியின் கொள்கைகள் மற்றும் பிரதமர் மோடியின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு, மாண்புமிகு மத்திய … Continue reading “சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பாஜகவில் இருப்பது கடினம்”: பாஜக மாநில மகளிரணி செயலாளர்

துப்பறிவாளன்: கொடூரர்களின் மரணங்களும் சோக கீதமும்!

எனக்கு ஒட்டுமொத்தமாக நிறைவு தந்த சமீபத்திய படங்களுள் ஒன்று #துப்பறிவாளன். இரண்டே முக்கால் மணி நேரத்துக்கு திரையை விட்டு கண்கள் அகலாத வகையில் கவனித்துக் கொண்டதே கச்சிதத்தைக் காட்டியது. வலித்துத் திணித்து உருவாக்கப்பட்ட பாகுபாடுகள் ஏதுமின்றி, எல்லா தரப்பு ரசிகர்களும் கடைசி காட்சி வரை இருக்கையில் நெளியாமல் பார்த்துக்கொண்டதே மிஷ்கின் திரைமொழியின் நேர்த்தியைச் சொன்னது. நல்லவர்கள் - கெட்டவர்கள் கூட்டத்தில் அதீதமானவர்களைக் கதாபாத்திரங்களாகக் கொண்டு கதை சொல்லப்பட்ட இந்தப் படைப்பு, இரு தரப்பு உணர்வுகளின் உச்சங்களையும் காட்சிப்படுத்தியது. … Continue reading துப்பறிவாளன்: கொடூரர்களின் மரணங்களும் சோக கீதமும்!

பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்: தமிழக அரசுக்கு ஆதித்தமிழர் பேரவை கண்டனம்

ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் இரா.அதியமான் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசால் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் இருந்து விடுதலையான திருமுருகன்காந்தி மீண்டும் கைது செய்யப்பட்டிருப்பதாக வரும் தகல்களும், நெல்லை பணகுடி காவல் நிலையத்தில் பத்திரிக்கையாளர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை கண்டித்து போராட்டம் நடத்திய நெல்லை பத்திரிக்கையாளர்கள் மீது காவல்துறை கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி கைது செய்திருப்பது, கட்டுப்பாடற்ற தமிழக அரசின் கையாலாகாத நிர்வாக முறையையே காட்டுகிறது. இதை ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கிறது. சனநாயக … Continue reading பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்: தமிழக அரசுக்கு ஆதித்தமிழர் பேரவை கண்டனம்

விசிக மாநில சுயாட்சி மாநாடு: நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இன்று சென்னையில்  மாநில சுயாட்சி மாநாடு நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மாநில அரசுகளின் அதிகாரங்களைப் பறிக்கும் வகையில் மத்திய அரசு வலிந்து திணித்துள்ள 'நீட்' என்னும் தேர்வு முறையால் பாதிக்கப்பட்டு தன்னைத்தானே மாய்த்துக் கொண்ட மாணவி குழுமூர் அனிதாவுக்கும்; மதவெறியர்களின் வெறுப்பு அரசியலை எதிர்த்துக் களமாடியதால்  படுகொலையான ஊடகவியலாளர் கௌரி லங்கேஷ் அவர்களுக்கும்; சாதிய- மதவாத கும்பலின் வெறியாட்டத்தால் அண்மையில் படுகொலையான தோழர்கள்  சிவகங்கை-வேம்பத்தூர் முருகன், மதுரை-வடபழஞ்சி முத்தமிழன், .விரகனூர் … Continue reading விசிக மாநில சுயாட்சி மாநாடு: நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!