பழங்குடி சிறுவனை அவமதித்த திண்டுக்கல் சீனிவாசனுக்கு சுயமரியாதை நூல்களை அனுப்பிய DYFI!

முதுமலை யானை முகாமுக்குச் சென்றிருந்த தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அங்கிருந்த பழங்குடியின சிறுவனை அழைத்து தனது காலணிகளை அகற்றச் சொன்னார்.

இது சர்ச்சையான நிலையில், தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்தார். சிறுவன் காவல்நிலையத்தில் அமைச்சரின் செயல் குறித்து புகார் தெரிவித்திருந்த நிலையில், அமைச்சர் சிறுவன் குடும்பத்தினரை அழைத்து நேரில் வருத்தம் தெரிவித்தார்.

இந்நிலையில், சுயமரியாதை குறித்து அறியாத அமைச்சருக்கு பெரியாரின் சுயமரியாதை நூல்களை அனுப்பியுள்ளதாக கூறியுள்ளது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்.

மங்களூருவில் போலீசு துப்பாக்கிச் சூட்டில் போராட்டக்காரர்கள் இருவர் பலி: உறுதி செய்தது போலீசு

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மங்களூருவில் நடந்த போராட்டத்தை ஒடுக்க நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இரண்டு போராட்டக்காரர்கள் பலியாகியுள்ளனர். இதை மங்களூரு போலீசு உறுதி செய்துள்ளது.

போராட்டங்களை அடுத்து மங்களூருவில் ஊரடங்கு உத்தரவு அமலாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கூடியிருந்த போராட்டக்காரர்களை களைக்க போலீசார் முதலில் தடியடி நடத்தியதாகவும், பின்னர் போராட்டக்காரர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதாகவும் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. கல்வீச்சு சம்பவங்களை தடுக்க துப்பாக்குச் சூடு நடத்தப்பட்டதாகவும் அதில் இருவர் பலியானதாகவும் போலீசு தரப்பு கூறுகிறது.

இந்த பலிக்கு பாஜகவினர் உண்டாக்கிய அசாத்திய சூழலே காரணம் என முன்னாள் எம்.எல்.ஏ. தினேஷ் குண்டு ராவ் தெரிவித்துள்ளார்.

அயோத்தி தீர்ப்பை விமர்சித்த இரண்டு பெண்கள் மீது தேச துரோக வழக்கு!

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்குச் சொந்தமானது என்பது குறித்து உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பில் அந்த நிலத்தில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம்.

இந்தத் தீர்ப்பு குறித்து ‘வன்முறையை தூண்டும் விதத்தில்’ பேசியதாகவும் மதத்தின் பெயரால் இரு சமூகங்களுக்கிடையே பகையைத் தூண்டியதாகவும் ஹைதராபாத்தைச் சேர்ந்த இரு பெண்கள் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

காவல்துறையினர் தகவல்படி, சாயிதாபாத்தைச் சேர்ந்த ஜிலி ஹுமா, அவருடைய தங்கை சபிஸ்டா ஆகியோர் உஜாலேசா ஈத்காவில் பெண்கள் சந்திப்பில் ‘வன்முறையை தூண்டுவிதத்தில் பேசியதோடும், முழக்கங்களையும் எழுப்பியுள்ளனர். அதே இடத்தில் பாபர் மசூதி கட்டுவோம் என்றும் ராமர் கோயிலை இடிப்போம் என்றும் அவர்கள் பேசினர்” என்கிறார் சாயிதாபாத் ஆய்வாளர் கே. சீனிவாஸ்.

இந்துக்களுக்கு ஆதரவாக ஆயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து ஹூமா விமர்சித்ததாகவும் போலீசு தரப்பு கூறுவதாக இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சாயிதாபாத் துணை ஆய்வாளர் தீன் தயால் சிங், நிகழ்விடத்தில் இருந்ததாகவும் அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகள் 124A, 153A, 505, 295 மற்றும் 109ன் படி தேச துரோகம், ஒரு சமூகத்தை மற்றொரு சமூகத்துக்கு எதிராக  தூண்டுதல் உள்ளிட்ட வழக்குகள் போடப்பட்டுள்ளன.

முசுலீம்களுக்கு எதிராக நாளொரு மேனி வெறுப்புப் பிரச்சாரங்கள் செய்யும் இந்துத்துவ காவிகளுக்கு ‘பாராட்டுக்கள்’ ஆளும் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றன. அதே நேரத்தில், தாங்கள் பெரும்பான்மை சமூகத்தால் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்கிற விரக்தியில் வெளிப்படும் வார்த்தைகளுக்குக்கூட தேச துரோக வழக்கு பதிவு செய்யப்படுவது, முசுலீம் மக்கள் இரண்டாம்தர குடிமக்களாக மாற்றப்பட்டுள்ளதைக் காட்டுகிறது. 

இஸ்ரோவின் உள்ளே என்ன தான் நடந்துகொண்டிருக்கிறது?

திடீரென லட்சக்கணக்கான மக்கள் மனத்தில் இஸ்ரோ மேல் அன்பு பொங்கி வழிகிறது. இஸ்ரோ விஞ்ஞானிகளைச் சந்தித்து முதுகில் தட்டிக்கொடுக்கும் மோதியைப் பார்த்து மக்கள் நெகிழ்ந்துபோகிறார்கள்

உணர்ச்சிகளைக் கிளறச்செய்து அதன் மூலம் லாபமடையும் நோக்கில் ஆளும் கட்சி செய்யும் நாடகீயங்களைப் பார்க்கும் போது இது ஒரு well planned meeting என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

நாலாப்புறமும் கேமராக்கள் தமது பணியைச் செவ்வனே செய்துகொண்டிருந்தன.

ஹிட்லரின் அமைச்சராக இருந்த கோயபல்ஸ் ஒரு சந்தேகத்தை, ஒரு பொய்யை அது உண்மையாகும்வரை சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும் என்றும் பிறகு அந்தப் பொய் உண்மையென்று எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் தெள்ளத்தெளிவாக உணர்ந்து சொல்லியிருக்கிறார். இதை எப்போது இந்த நாடு உணர்ந்துகொள்ளும் என்பதுதான் தெரியவில்லை. வானொலியும், செய்தித்தாளும் மட்டுமே ஊடகங்களாக இருந்த ஹிட்லர் காலத்திலும், பல்வேறு செய்தி ஊடகங்கள் பெருகிவிட்ட இந்தக் காலத்திலும் கோயபல்ஸின் கூற்று உண்மையாகவே இருக்கிறது. அதன் தீவிரத்தன்மை இக்காலத்தில் அழிவு சக்தியாக மாறிவிட்டது

இஸ்ரோ விஞ்ஞானிகளோடு மானசீகமாக கை கோர்த்து இன்று எல்லோரும் நிற்கிறார்கள். ஆனால் கொஞ்ச நாளுக்கு முன் அவர்களின் ஊதியம் குறைக்கப்பட்டபோது யாரும் அவர்களோடு இருக்கவில்லை.

மோதி அரசு சந்த்ரயான் – 2 ஏவுவதற்கு கொஞ்சம் முன் இஸ்ரோ விஞ்ஞானிகளின் ஊதியம் குறைக்கப்பட்டது. இஸ்ரோ விஞ்ஞானிகளின் சங்கமான ஸ்பேஸ் இஞ்சினியர்ஸ் அசோசியேசன் இஸ்ரோ சேர்மன் டாக்டர் கே சிவன் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதி ஒரு கோரிக்கை வைத்தது. இஸ்ரோ விஞ்ஞானிகளின் ஊதியத்தைக் குறைத்திருக்கும் மத்திய அரசின் ஆணைகளை ரத்து செய்து உதவுங்கள் என அவரிடம் வேண்டிக்கொண்டது. ஏனெனில் விஞ்ஞானிகளுக்கு இந்த ஊதியத்தைத் தவிர சம்பாதிக்க வேறு எந்த வழியுமில்லை என்று விளக்கிச்சொன்னது .

ஆனால், யாரும் எதுவும் பேசவில்லை. சென்ற ஆண்டு அரசு இஸ்ரோவை தனியார் மயமாக்குவதற்கு முயன்றபோது யாரும் எதுவும் பேசவில்லை.

சென்ற ஆண்டு வரலாற்றில் முதல் முறையாக இஸ்ரோ இரண்டு தனியார் கம்பெனிகள் மற்றும் ஒரு பொதுத்துறை அமைப்புடன் இணைந்து 27 செயற்கைக்கோள்கள் உருவாக்க ஒப்பந்தம் செய்தது. கடந்த மூன்று பத்தாண்டுகளில் இஸ்ரோவுக்குக் கிடைத்த முதல் வாய்ப்பு இது. நேவிகெசன் சேட்டிலைட் தயாரிக்கக் கிடைத்த அந்த வாய்ப்பை தனியார் துறைக்குக் கொடுத்துவிட்டது.

தனியார் துறைக்கு இப்படியாக 27 செயற்கைகோள்கள் உருவாக்கும் பணியை ஒப்படைத்ததால் இஸ்ரோவின் செயற்கைக்கோள் தயாரிக்கும் அஹமதாபாத் கிளையின் ஸ்பேஸ் அப்ளிகேசன் செண்டரின் இயக்குநர் டாக்டர் தபன் மிஸ்ரா மிகவும் கோபமடைந்தார்.

சிவன் அவர்களுக்குப் பிறகு தபன் மிஸ்ரா இஸ்ரோவின் அடுத்த தலைவராகும் வாய்ப்பு ஏறக்குறைய முடிவான நிலையில் அவர் தனியார்மயமாவதை எதிர்த்த காரணத்தால் பதவியிறக்கம் செய்யப்பட்டு இஸ்ரோவின் ஆலோசகராக மட்டும் நியமிக்கப்பட்டார்.

இஸ்ரோவின் சேர்மன் கே. சிவன் அவர்கள்,

“தபன் மிஸ்ரா எல்லா பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்கப்படுகிறார். அவர் இஸ்ரோவின் முதன்மை அலுவலகத்தில் ஆலோசகராக நியமிக்கப்படுகிறார். அவர் சேர்மன் க்கு தகவல்களை(ரிப்போர்ட்) தர வேண்டும்” என ஒரு ஆணை பிறப்பிக்கிறார்

அப்போது தபன் மிஸ்ரா போன்ற சிறந்த விஞ்ஞானிக்கும் சிவனுக்கும் இருந்த கருத்து வேறுபாடு கலையப்பட்டதாக அப்போது செய்திகள் எழுந்தன.

கே.சிவன் மேல் ஐயாவுக்கு அவ்வளவு இரக்கம் பொங்கி வழிந்தது ஏன் என்பது இப்போது நீங்கள் புரிந்துகொண்டிருப்பீர்கள். யாருடைய கையசைவில் இந்த உயர் பதவிக்கு அவர் வந்தார் என்பதும் புரிந்திருக்கும்.

தபன் மிஸ்ராவை இவ்விதம் பதவியிறக்கம் செய்தது தொடர்பாக நாட்டின் பல அறிவியல் துறை சார் விஞ்ஞானிகளும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு கடிதம் எழுதி இந்தப் பிரச்சினையில் தலையிட வேண்டுமென கோரிக்கை வைத்தனர். ஆனால், எதுவும் நடக்கவில்லை.

இந்த செயற்கைக்கோள்களைத் தயாரிக்க தேர்வு செய்யப்பட்ட ஆல்ஃபா டிசைன் கம்பெனியானது பனாமா பேபர்ஸில் இணைந்ததாகும். இந்தக் கம்பெனியானது பாதுகாப்பு உபகரணங்களை முழுமையாக்கித் தரும் கம்பெனியாகும்.

அதானி சமூகத்துடன் இந்தக் கம்பெனிக்கு நெருக்கமான உறவு இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. ஆல்ஃபா டிசைன் டெக்னாலாஜிஸ், டிபெண்ஸ் ஃபார்ம் எலக்ட்ரானிக்கின் முக்கியமான இந்திய கூட்டாளியுமாகும். அதன் பெயரானது இந்தியாவில் கமிசன் வழங்கியது தொடர்பான பனாமா பேப்பர்சில் முத்ன்மையாக வந்திருக்கிறது.

கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக இஸ்ரோவுக்குள் இவையெல்லாம் நடந்துகொண்டிருக்கிறது. இந்த விசயங்கள் ஊடகங்களின் குரலாக வெளிப்படுத்தவும், அனைத்து விசயங்களையும் உங்கள் முன்னால் வைக்கும் துணிவும் ஊடகங்களுக்கு இருக்கிறது. ஆனால், அவை உங்களுக்கு ஆளுங்கட்சியின் ஏஜெண்டுகளை மட்டுமே படம்பிடித்துக்காட்டுகின்றன. நீங்கள் உங்கள் கண்களையும் காதுகளையும் திறந்து வைக்கவில்லையென்றால் அவை உங்களை முட்டாளாகவே வைத்திருக்கும்

கிரிஸ் மாள்வியா
தமிழாக்கம்: Naanarkaadan Sara

தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள்தான், ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் குரல் கொடுக்க வேண்டும்: அமர்ஜித் கௌர்

ஏஐடியுசியின் பொதுச் செயலாளர் அமர்ஜித் கௌர் 12.8.2019 அன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மும்பையில், ஏஐடியுசியின் நூற்றாண்டு விழா வருகிற அக்டோபர் 31 ம் நாள் தொடங்குகிறது.இதே நாளில் 1919 ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தியாவின் மூத்த தொழிற்சங்கமான ஏஐடியுசி தனது நூற்றாண்டு விழாவை நாடு முழுவதும் ஓராண்டு காலத்திற்கு 2020 அக்டோபர் வரை கொண்டாடுகிறது.

பணமதிப்பிழப்பு நீக்க நடவடிக்கைகளினால் ஐந்து கோடி பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளதாக சிஐஐ, பிக்கி போன்ற வேலைஅளிப்போர் சங்கங்களே கூறுகின்றன. நமது நாட்டின் பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மோசமாக உள்ளது. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இப்போது கடும் வேலைவாய்ப்பின்மை நிலவுகிறது.

இந்த நிலையில் நூறு இலட்சம் கோடி ரூபாய்க்கு கட்டமைப்பு வேலைகளுக்கு செலவிடப் போவதாக நிதி அமைச்சர் கூறுகிறார். எங்கேயிருந்து கடன் வாங்கப் போகிறார்கள்? எதில் செலவு செய்யப் போகிறார்கள் என்பது போன்ற எந்த விபரங்களையும் அவர் சொல்லவில்லை. இதனால் குடிமக்களின் கடன் சுமைதான் அதிகரிக்கும்; முதலாளிகள் பலன்பெறுவர்.இந்த வரவு செலவு அறிக்கையினால் மாணவர்களுக்கோ, தொழிலாளர்களுக்கோ, பொது மக்களுக்கோ, மருத்துவத்துறைக்கோ பலன் ஏதுமில்லை.

இந்தப் பாராளுமன்றம், 44 தொழிலாளர் நலச் சட்டங்களை நான்கு சட்டங்களாக சுருக்கியிருக்கிறது. இதனால் 77 சத தொழிலாளர்கள் சட்டப் பாதுகாப்பிலிருந்து விலகிவிடுவர். அவர்களால் தொழிலாளர் துறையில் தாவா எழுப்ப முடியாது; நீதிமன்றம் போக முடியாது. ஏற்கெனவே வெள்ளைக்காரர்கள் காலத்தில் தொழிலாளி வர்க்கம் போராடி பெற்ற, தொழிற்சங்க உரிமைகளை ஒரே உத்தரவின் மூலம் இரத்து செய்கிறது. அரசியலமைப்பு சட்டத்தின் மூலம் தொழிலாளர்களுக்குரிய சங்கம் அமைக்கும் உரிமைகளை இந்த திருத்தங்கள் நீர்த்துப் போகச் செய்கின்றன.

குறைந்த பட்ச ஊதியமாக மாதம் 18,000 ரூபாய் தர வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கோரி வருகின்றன. ஆனால் தொழிற் சங்கங்கள் கொடுத்த ஆலோசனைகளை எல்லாம் புறந்தள்ளி விட்டு , முதலாளிகள் கோரியபடி நாளொன்றுக்கு 178 ரூபாய் சம்பளம் என்று அரசு கூறுகிறது; (மாதம் 5000 ரூபாய்க்கும் குறைவாக ) அதுவும் 26 நாட்களுக்கு கொடுக்கப்படும் என்று கூறுகிறது. தேவைப்பட்டால் பூகோளரீதியாக குறைந்த பட்ச சம்பளம் நிர்ணயிக்கப்படும் என்று அரசு கூறுகிறது. இதன்மூலம் ஏற்கெனவே அதிகமாக வாங்கி வரும் தொழிலாளர்களின் சம்பளம் குறைக்கப்படும். மலிவான கூலி உழைப்பு கிடைக்கும் என்று அரசு முதலீட்டாளர்களுக்கு இதன்மூலம் கூற விரும்புகிறது. தொழிலாளர் சம்மந்தமான முடிவுகளை நிதி அமைச்சர் எடுத்து தொழிலாளர் துறையை கையகப்படுத்தி விட்டார். புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு எந்தவிதமான தணிக்கையும் கிடையாது; எந்தவிதமான ஆய்வுகளும் கிடையாது; குறிப்பிட்ட காலத்திற்கு வரி கிடையாது என்ற நடவடிக்கைகளினால் பெருமுதலாளிகள் பலன்பெறுவர்.இத்தகைய சட்டத் திருத்தங்களை எதிர்த்து நாடு முழுவதும் ஏஐடியுசி கடந்த ஆகஸ்டு இரண்டாம் நாள் கண்டன இயக்கங்களை நடத்தியது. இதனை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் வேலை நிறுத்தத்திற்கான அறைகூவல் விடப்படும். இதற்காக அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டம் வருகிற செப்டம்பர் மாதம் தில்லியில் நடைபெறுகிறது.

அமர்ஜித் கௌர் (கோப்புப்படம்)

அணுஆயுத துறையில் பணிபுரிவோரின் பாதுகாப்பு அம்சங்கள் வேறு. சாக்கடை சுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு வரும் நோய் வேறு;மின்துறையில் பணியாற்றுவோரின் துறைசார்ந்த பாதுகாப்பு கவசங்கள் வேறு.ஆனால் இந்திய அரசு எல்லாத் தொழிலுக்கும் சேர்த்து ஒரே சட்டத்தை(Occupational Safety & Health) கொண்டுவந்துளளது. ஒவ்வொரு தொழிலுக்கும் என தனித்தனியான பாதுகாப்புச் சட்டங்கள் வேண்டுமென ஏஐடியுசி கோருகிறது. இதுபோன்ற அறிவிப்புகளை மத்திய அரசு நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பதன் மூலம் இந்த அரசு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு, பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

உலகில், வேலையளிப்போரில் இரண்டாம் இடத்தை வகிக்கும் இரயில்வே துறையின், பெரம்பூர் இரயில் பெட்டி ஆலையை தனியாருக்கு தாரைவார்க்க இந்த அரசு முடிவெடுத்துள்ளது. இருபது பொதுத்துறை வங்கிகளை ஆறு வங்கிகளாக மாற்ற இந்த அரசு முடிவெடுத்து உள்ளது.இதனால் சாதாரண மக்களுக்கு பலன் ஏதுமில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் விஜய் மல்லய்யா, நீரவ் மோடி போன்ற 36 பேர் வங்கியில் இருந்த வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பி ஓடியுள்ளனர். வங்கியில் உள்ள பொதுமக்களின் சேமிப்பை பாதுகாக்க, வங்கிகளை இணைக்கும் சட்டம் உதவாது. இராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்யும் நாற்பதுக்கும் மேற்பட்ட ஆலைளை தனியாருக்கு கொடுக்க இந்த அரசு முடிவெடுத்து உள்ளது. இதனால் ஆவடி தொழிற்சாலை இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது? இதுபோன்ற மக்கள் சார்பான கொள்கைகளுக்காக தமிழ்நாட்டைச் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள்தான், ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் குரல் கொடுக்க வேண்டும்.

முப்பது வருடம் பணி முடித்த, 55 வயதான தொழிலாளர்களின் நிலைபற்றி அறிக்கை அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு எல்லாத்துறைகளையும் கேட்டுள்ளது. அதாவது அரசு ஊழியர்களை கட்டாய ஓய்வில் அனுப்ப எண்ணியுள்ளது. இஎஸ்ஐ, இபிஎஃப் போன்ற நிறுவனங்களில் இருக்கும் எல்லா நிதியையும் ஒரே நிதியாக்கி பிரதமர் தலைமையில் அதை நிர்வாகம் செய்ய அரசு எண்ணியுள்ளது. அதாவது அந்த தொகையை அரசு எடுத்துக் கொள்ள பார்க்கிறது. இது தொழிலாளர், முதலாளிகளின் பணமாகும். இதில் அரசின் நிதி ஏதுமில்லை.

மத்திய அரசுக்கு எதிராக குரல் எழுப்புவர்களை ‘ஆண்டி இந்தியன்’ என்றும் ‘அர்பன் நக்சல்’ என்றும் முத்திரை குத்தி கருத்துரிமையை பறிக்கின்றனர். 370 பிரிவை நீக்கியதன் மூலம் காஷ்மீர் பிரச்சினையை ஒரு சர்வதேச பிரச்சினையாக மோடி மாற்றிவிட்டார். இதனால் பதற்றம் அதிகமாகும்; ஆயுதங்களுக்கு செலவிடப்படும் தொகை அதிகரிக்கும். இதனால் மக்களின் கல்விக்கும், சுகாதாரத்திற்கும் செலவிடப்படும் தொகை குறையும். தனக்கு கிடைத்துள்ள பெரும்பான்மை பலத்தை வைத்து தொழிலாளர் உரிமைகளை, ஜனநாயக உரிமைகளை மோடி பறிக்கிறார்.

வெள்ளைக்காரன் காலத்திலேயே போராடிப் பெற்ற எட்டுமணி நேர வேலை என்பது மாற்றப்படுகிறது. வேலைநேரம் என்ன என்பதை அந்தந்த அரசுகள்(appropriate government) முடிவு செய்யும் என்று சொல்லுவதன் மூலம் எட்டு மணி நேர வேலை என்பதற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. நாடு ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் சென்று கொண்டிருக்கிறது.ஆனால் தொழிலாளிவர்க்கம் எப்பாடுபட்டும் தனது உரிமைகளுக்காக போராடும். அதற்குரிய முன்முயற்சிகளை ஏஐடியுசி எடுக்கும் ” என்று அமர்ஜித் கௌர் கூறினார்.

இவர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளரும் ஆவார்.

சிந்தாதிரிப்பேட்டை ஏஐடியுசி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தப் பேட்டியின் போது தமிழ்நாடு ஏஐடியுசியின் பொதுச் செயலாளர் டி.எம்.மூர்த்தி, துணைப் பொதுச் செயலாளர் கே.இரவி ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்திய ஜனநாயகத்தின் கறுப்பு நாள்: மெகபூபா முஃப்தி, ஒமர் அப்துல்லா

வீட்டுச்சிறையில் இருக்கும் ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரான மெகபூபா முஃப்தி, “இந்திய ஜனநாயகத்தின் கறுப்பு நாள் இன்று” என இந்திய அரசின் நடவடிக்கையை விமர்சித்துள்ளார்.

மெகபூபா முஃப்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜனநாயக முறையில் ஜம்மு காஷ்மீரில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் இன்று வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டிருப்பது எவ்வளவு பெரிய முரண் ஆக உள்ளது. ஜம்மு காஷ்மீர் மக்களின் குரல் ஒடுக்கப்பட்டிருப்பதை இந்த உலகமும் மக்களும் பார்த்துக்கொண்டுதான் உள்ளனர்.

மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியாவை தேர்ந்தெடுத்த ஜம்மு காஷ்மீரில் இன்று நிலவும் அடக்குமுறை கணக்கில் அடங்கா நிலையில் உள்ளது. இந்தியா விழித்துக்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இதைக் கொண்டாட்டமாகப் பார்க்கும் பலருக்கும் இதன் விளைவுகள் இன்னும் புரியவில்லை. இந்திய அரசியல் சாசனம் மாற்றப்பட்ட இத்தினம் இந்திய ஜனநாயகத்தின் கறுப்பு நாள் என்றும் மெகபூபா முஃப்தி தெரிவித்துள்ளார்.

அதுபோல, ஒமர் அப்துல்லா தனது ட்விட்டர் பதிவில், “ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 மற்றும் 35ஆ சட்டப்பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளது மாநில உரிமையின் மீதான அடிப்படையையே கேள்விக்குறி ஆக்கியுள்ளது. இதனால் மிகவும் அபாயகரமான விளைவுகள் ஏற்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அரசியல் சாசன விதியை மீறி ஜம்மு காஷ்மீரின் ஒப்புதல் இன்றி இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் உடன் மட்டும் அம்மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் ஏமாற்றுத்தனமான வேலை என்றும் துரோகம் என்றும் ஒமர் அப்துல்லா பாஜக-வை விமர்சித்துள்ளார்.

“எங்களிடம் பொய் சொல்லி எங்களை வீட்டுச் சிறையில் அடைத்துவிட்டு இந்த துரோகத்தை இந்திய அரசு செய்துள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு எதிராக எதுவும் திட்டமிடப்படவில்லை எனக் கூறிவிட்டு காஷ்மீரின் ஜனநாயகக் குரலை முடக்கி லட்சக்கணக்கான ஆயுதம் தாங்கிய வீரர்களை மாநிலம் முழுவதும் நிறைத்துள்ளது எவ்விதத்தில் நியாயம்” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பா. ரஞ்சித் மீதான வன்மத்துக்குரிய தாக்குதல்: தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் கண்டனம்

இயக்குநர் பா. ரஞ்சித் அவர்கள் மீதான வழக்குகளை கைவிட வேண்டும்; கருத்துரிமை பாதுகாக்கப்பட வேண்டும்!

அண்மையில் இயக்குநர் பா. ரஞ்சித், சோழ மன்னர் ராஜன்ராஜன் குறித்து முன்வைத்த கருத்தொன்று சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டுள்ளது. ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல, என்னதான் மிகச்சிறந்த ஆட்சியைத் தந்திருந்தாலும் ஒரு அரசர் அல்லது ஒரு ஆட்சிக்கு இரண்டு பக்கங்கள் இருக்கும். நன்மையை பேசுவதுபோல, அந்த ஆட்சியால் ஏற்பட்ட தீமைகளையும் சேர்த்தே பேசுவதே கருத்துரிமை. கருத்துரிமைக்கும் அவதுறுக்கும் பாரதூரமான வேறுபாடு உள்ளது. இயக்குநர் பா. ரஞ்சித் பேசியது கருத்துரிமையின் பேரில் வருமே தவிர, அது அவதூறு அல்ல.

தமிழகத்தின் மிக முக்கியமான வரலாற்றாசிரியர்கள் ராஜன்ராஜன் குறித்து எழுதிய பல்வேறு கருத்துக்கள், வெகுமக்கள் அறியாதவை; விவாதத்துக்குரியவை. பா. ரஞ்சித் இல்லாத ஒன்றை பேசிவிடவில்லை.

சமூகத்தின்பால் அக்கறை கொண்ட படைப்பாளியாக ஒவ்வொரு சமூக பிரச்சினையிலும் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் பா. ரஞ்சித், அதே அக்கறையின்பேரிலேயே ராஜராஜன் குறித்த கருத்தை பேசியுள்ளார். இந்தக் கருத்து குறித்து விவாதிக்க வேண்டுமே அன்றி, அதைச் சொன்னார் என்றே ஒரே காரணத்துக்காக, பா. ரஞ்சித் மீது வழக்குகள் தொடுப்பது சந்தேகத்தைக் கிளப்புகிறது.

அடுக்கடுக்கான வழக்குகள் போடப்படுவது, பா. ரஞ்சித் என்னும் சமூக அக்கறை கொண்ட படைப்பாளியை அலைக்கழிக்க வைக்கும்; சமூகத்தின் மீது அக்கறை கொண்ட படைப்பாளிகளை வாயடைக்க வைக்கும்.

எனவே, இயக்குநர் பா. ரஞ்சித் அவர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற்று, கருத்துரிமையைக் காப்பாற்ற வேண்டும் என தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் கேட்டுக்கொள்கிறது. அதுபோல, சக கலைஞரான பா. ரஞ்சித் மீதான வன்மத்துக்குரிய தாக்குதல்களையும் கண்டிக்கின்றோம்.

இவண்
தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம்.

நவீன அரங்கியலை உள்வாங்கிய நவீன அரசியல்வாதி ராகுல்!

அ. ராமசாமி

அ.ராமசாமி

அரங்க அமைப்புக் கலையை அறிந்தவர்கள் இந்த மேடை அமைப்பை முன்முற்ற அரங்கம் (Front Project Stage ) என்று சொல்வார்கள். அழகிப் போட்டிகள், ஆடை கள், அலங்காரப் பொருட்களின் அறிமுகம் போன்றவற்றை அறிமுகப்படுத்தும் நோக்கத்திற்குப் பயன்படும் தன்மை இந்த அரங்க அமைப்புக்கு உண்டு. இயல்பான உரையாடல் வழியாகப் பார்வையாளர்களோடு நெருங்கிவிட விரும்பும் இந்த அமைப்பைப் பிரேசிலின் நவீன அரசியல் நாடகக்காரன் அகஸ்டோ போவெல் 1980 களின் தொடக்கத்தில் முன்வைத்தான். அவனைத் தமிழ் நாடகக்காரர்கள் கண்ணுக்குப் புலப்படாத அரங்கியல்காரனாக (Invisible Theater) அறிவார்கள். புலப்படா அரங்கிற்கும் முன்னால் அவன் இயங்கிய அரங்கத்திற்குப் பெயர் முன் முற்றமேடை (Forum Theatre)

இதுவரை நமக்கு அறிமுகமான படச்சட்டகச் செவ்வக மேடையில் (Proscenium Stage) சிறப்பான ஒளியமைப்புகள் மூலம் பேச்சாளர்களின் மீது கவனக் குவிப்பைச் செய்ய முடியும். என்றாலும் அதில் பார்வையாளர்கள் நெருக்கமாக உணரும் சாத்தியங்கள் குறைவு. செவ்வக மேடையில் பேசும் நபர் அசையும் நபராக இருக்கவிரும்பினால் கூடத் தட்டையாக ஒரு நேர்கோட்டில் தான் நகர முடியும். இடவலமாகவும் வல இடமாகவும் பார்வையாளர்களுக்கு உடலைப் பாதியளவு காட்டியபடி நகரும்போது மேலிருந்தோ பக்க வாட்டிலிருந்தோ வரும் ஒளியின் குவிதல்வழி பார்வையாளர்களின் கவனத்தை அவர் மீது நிரப்பி விடலாம். அந்த முயற்சிகளைக் கூட இந்திய அரசியல்வாதிகள் தங்கள் மேடைப்பேச்சுகளில் அதிகம் முயற்சி செய்ததில்லை.

தமிழக அரசியல் மேடையில் எம்.ஜி.ராமச்சந்திரன் சில முயற்சிகள் செய்திருக்கிறார். நிலையான ஒலிபெருக்கியை விட்டு விலகி மேடையின் முன்னால் வந்து குறிப்பான பார்வையாளரை நோக்கிக் கேள்விகளை எழுப்பிப் பதிலைப் பெற்று உரையாடும் ஒருசில காட்சிகளை அவரது மேடைப்பேச்சில் நானே பார்த்திருக்கிறேன்.இந்திய அளவில் ராகுல் காந்தியின் தந்தை ராஜீவ்காந்தி இதே போல முயன்றிருக்கிறார்.அந்த முயற்சியில் சில ஆபத்துகள் உண்டு.

எதிர்க்கதாபாத்திரத்தோடு பேசும்போது கண்ணைப் பார்த்துப் பேசவேண்டும் (Eye contact) ) என்பது நடிப்புக்கலையில் முக்கியமான பாடம்/ பயிற்சி. கண்களைத் தொடர்தல் ஒரு சுவாரசியமான விளையாட்டு. நாடகப் பயிலரங்குகளில் எப்போதும் முயல்வதுண்டு.

கண்களைப் பார்த்துப் பேசுவதன் மூலம் நெருங்கி வரவேண்டும் என்ற நோக்கம் நிறைவேறும்.இந்த முன் முற்றமேடை அதற்கான நல்லதொரு வடிவம். இந்த முறையை எல்லா இடங்களிலும் செயல்படுத்தி விட முடியாது.

ஒழுங்குபடுத்தப்பட்ட -ஸ்டெல்லா மேரிஸ் போன்ற கல்லூரிகளில் அரசியல் புரிதல் கொண்ட மாணவப் பார்வையாளர்களோடு நடத்தும் உரையாடலில் வெற்றிகரமாக முயற்சி செய்யலாம். அதைச் செய்ததால் இன்று நடந்த தேர்வில் ராகுல் காந்தி 90 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்கள் பெறும் மிகத்தரமான (Out standing ) அரசியல்வாதியாக ஆகிவிட்டார். அவருக்குத் தேர்வு வைத்த மாணவிகளின் வினாக்களும் தேர்ச்சியான நிபுணர்களின் வினாத்தாளைப் போல இருந்தன.

நடந்தது கொண்டாட்டமான கலைநிகழ்ச்சியா?
அரிஸ்டாடியலிய இன்பியல் நாடகமா?
இந்திய குடிமைத்தேர்வில் ஆட்சிப்பணிக்குத் தேர்வில் நேர்காணல் செய்யப்படும் ஒருவருக்கு நடக்கும் நேர்காணல் தேர்வா? எனப் பலவிதமான அனுமானங்களை உருவாக்கித் தந்த நிகழ்வாக இருந்தது.

இந்திய அரசியல் நவீனத்தன்மைக்குள் நுழைந்து கொண்டிருக்கிறது. அதற்கான தகுதியோடு ஒரு நவீனத்தலைவர் உருவாகியிருக்கிறார் . அந்த முக்கால் மணி நேர நிகழ்ச்சியை ஒன்றிரண்டு தடவை பார்த்தேன்; கேட்டேன்; மகிழ்ச்சியாக இருக்கிறது.

அ. ராமசாமி, பேராசிரியர்; எழுத்தாளர்.

மாதம் ரூ.3000 ஓய்வூதியம் என்ற அறிவிப்பு ஒரு மோசடி : ஏஐடியுசி

அமைப்புச் சாரா தொழிலாளிக்கு மாதம் ரூ.3000 ஓய்வூதியம் தரப்போவதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பெரிய விளம்பரம் செய்யப்பட்ட து. பத்திரிக்கைகள் பாராட்டின. ஆனால் இதனால் தொழிலாளர்களுக்கு எந்தப் பலனும் இல்லையென்று ஏஐடியுசி மாநிலப் பொதுச் செயலாளர் டி.எம்.மூர்த்தி தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், மோடி அறிவித்து உள்ள திட்டத்தில் 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்களே சேர முடியும். இது ஒரு விருப்பபூர்வமான(optional) திட்டம்தான்; அனைத்து தொழிலாளர்களுக்கும் பொருந்தாது. ஒவ்வொரு தொழிலாளியும் 18 வயது முதல் 40 வயதுவரை மாதாமாதம் ( 55 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை ) பிரிமியம் செலுத்த வேண்டும். இதற்கு ஈடான தொகையை மத்திய அரசு தன் பங்கிற்கு செலுத்தும். இப்படி செலுத்தி வரும் தொழிலாளிக்கு இருபது ஆண்டுகள் கழித்து 60 வயது ஆனவுடன் மாதம் 3000 ரூபாய் ஓய்வூதியமாக கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஏற்கெனவே கட்டுமான தொழிலாளர் நலவாரியம் உள்ளிட்ட அமைப்புச்சாரா நலவாரியங்களில் பதிவு செய்து கொண்ட தொழிலாளர்களுக்கு அவர்கள் 60 வயது ஆனவுடன் மாதம் ஆயிரம் ரூபாய் தற்போது ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இது ஓரளவு நல்ல திட்டமாகும்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள திட்டம் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு அறிவித்துள்ள திட்டமாகும். இதற்கு சொற்பமான நிதியே (ஐநூறு கோடி ரூபாய் மட்டுமே) மத்திய அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியம் இருபது ஆண்டுகளுக்குப் பின்னர்தான் வழங்கப்டும். 41 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் இந்த திட்டத்தில் சேர முடியாது.

இந்த திட்டத்தினால் ஏற்கெனவே நடைமுறையில் மாநில அரசால் நல்ல முறையில் நலவாரியங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிற ஓய்வூதியத்திற்கும் பாதிப்பு வரும் அபாயம் உள்ளது.

எனவே மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த திட்டத்தை ஏஐடியுசி நிராகரிக்கிறது. 60 வயதான அனைத்து அமைப்புச் சாரா தொழிலாளர்களுக்கும் மாதம் ரூ.3000 ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு ஏஐடியுசி கேட்டுக் கொள்கிறது என தெரிவித்துள்ளார்.

ஐசிஐசிஐ வங்கியை தேசியமயமாக்கு: அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம்

இந்தியாவின் பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியை தேசியமாக்க வேண்டும் என்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

ஐசிஐசிஐ வங்கியின் தலைமை நிர்வாகியாக இருந்த சந்தா கொச்சார் விதிமுறைகளை மீறி தன் கணவர் பணிபுரிந்த வீடியோகான் நிறுவனத்திற்கு கடன் கொடுத்து 5000 கோடி ரூபாய்களுக்கு நட்டம் ஏற்படுத்தி உள்ளார். எனவே அவர் வங்கியின் பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டார். அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு குற்றவியல் நடவடிக்கைகளை எதிர் கொண்டு உள்ளார்.

ஏற்கெனவே இந்த வங்கியில் இருந்த போது சிறப்பாக பணியாற்றியமைக்காக மத்திய அரசு அவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கி இருந்தது. ஐசிஐசிஐ வங்கியை விட நன்கு செயல்பட்ட பொதுத்துறை வங்கிகளின் நிர்வாகிகளுக்கு மத்திய அரசு பத்மபூஷன் விருது வழங்கவில்லை. பொதுத்துறை வங்கிகள் சமூகநலம் சார்ந்த திட்டங்களுக்கு பெருமளவில் கடன் வழங்கி இருந்தன. தனியார் வங்கிகள் சிறப்பாக செயல்படுகின்றன என்று காட்டுவதற்காக மத்திய அரசு சந்தா கொச்சாருக்கு இந்த விருதை வழங்கி இருந்தது.

இந்நிலையில் இ.அருணாச்சலம் தலைமையில் சமீபத்தில் கூடிய தமிழ்நாடு வங்கி ஊழியர் சங்க மாநில மாநாட்டில் ஐசிஐசிஐ வங்கியை தேசியமயமாக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்ட து. இந்திரா காந்தி வங்கிகளை 1969 ஆண்டு தேசியமயமாக்கினார். அதன் பொன்விழா ஆண்டு இது. இந்நிலையில் இந்தக் கோரிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.

மோடி ஆட்சி மாணவர்களைப் பார்த்து ஏன் அஞ்சுகிறது?

CPIMLஅறிக்கை
இன்னும் மூன்று மாதங்களில் மக்களவை தேர்தல்கள் வரவுள்ள நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு முந்தைய தேசத்துரோக வழக்கில் டில்லி காவல்துறை ஜேஎன்யு மாணவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. காரணம் மிகவும் வெளிப்படையாகத் தெரிகிறது.

தேசத் துரோக குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள ஜேஎன்யு மாணவர் தலைவர்களும் நாடெங்கும் உள்ள மாணவர், இளைஞர் இயக்கங்களும், இந்தியாவின் பொருளாதாரத்தை அதன் சமூக இழையை நாசமாக்கும் மோடி ஆட்சிக்கு எதிரான மிகவும் துடிப்பான, தீவிரமான குரல்களில் ஒன்றாக எழுந்துள்ளன.

இந்திய மக்கள் முன், ஆடைகள் இல்லாத அரசராக மோடியை அடையாளப்படுத்தும் இந்த இளைய குரல்களின் நம்பகத்தன்மையை போக்க, அவற்றை அச்சுறுத்த, நசுக்க எடுக்கப்படும் முயற்சியாகத்தான், டில்லி காவல்துறை இந்த பொய்யான தேசத் துரோக குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.

ஜேஎன்யு மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் கன்னயா குமார் மற்றும் பிற மாணவர்கள் மீது போடப்பட்ட இதே தேசத் துரோக நடவடிக்கைகளுக்காகத்தான், அவர்களை தண்டிக்க ஜேஎன்யு நிர்வாகம் எடுத்த முயற்சிகளை, சட்டவிரோதத் தன்மை, காரணகாரியமற்ற தன்மை, நடைமுறை தவறுகள் இருப்பதாகச் சுட்டிக்காட்டி, 2018 ஜூலையில் டில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 2016 பிப்ரவரி 6 அன்று நடந்த சம்பவங்கள் தொடர்பாக டில்லி அரசாங்கம் உத்தரவிட்ட நீதி விசாரணையில், தொலைக்காட்சி அலைவரிசைகளில் வெளியிடப்பட்ட காணொளி காட்சிகள், மக்களுக்கு தவறான தோற்றம் தரும் நோக்கத்துடன் சித்தரிக்கப்பட்டவை என்று சொல்லப்பட்டது.

ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள், விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குவது, பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வது, ஊழலை ஒழிப்பது ஆகிய வாக்குறுதிகளை நிறைவேற்றாததற்காக மோடி அரசாங்கம் குற்றவாளிக் கூண்டில் நிற்கிறது.

மாறாக, மோடியின் அலுவலகமே, அவரது அரசாங்கமே, இந்தியா இது வரை காணாத படுமோசமான கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கைகளின், ஊழல்களின் உறைவிடமாக இருக்கிறது. அவரது ஆட்சி, கொலைகார பணமதிப்பகற்றத்தை, ஜிஎஸ்டியை கொண்டு வந்த, இந்திய பொருளாதாரத்தை நாசமாக்கிய, கடந்த ஆண்டில் மட்டும் ஒரு கோடி வேலை வாய்ப்புகளை அழித்த, இந்திய பல்கலை கழகங்கள் மீது தாக்குதல் தொடுத்த, இன்னமும் உருவாக்கப்படாத கல்வி வர்த்தக மய்யங்களான ஜியோ பல்கலைகழகம் போன்றவற்றை முன்னகர்த்துகிற, அறிவியல் என்ற பெயரில் இருண்மைவாத அபத்தங்களை முன்தள்ளுகிற, உரிமைகளுக்காகப் போராடுகிற விவசாயிகளுக்கு துரோகம் இழைத்த, அவர்கள் மீது தாக்குதல் தொடுத்த ஆட்சியாகும்.

தேசத் துரோக சட்டப் பிரிவு, தேசிய பாதுகாப்புச் சட்டம், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் ஆகியவை, இப்போது, பஞ்சாப் மற்றும் ஜேஎன்யு மாணவர்கள் மீது, அசாமில் மதச்சார்பற்ற அரசியல்சாசனத்தைப் பாதுகாக்கப் போராடுபவர்கள் மீது, நகர்ப்புற நக்சல்கள் என்று முத்திரை குத்தப்படுகிற மனித உரிமைப் போராளிகள் மீது, உத்தரபிரதேசத்தில் கும்பல் படுகொலைகளால் பாதிக்கப்பட்டவர்கள் மீது ஏவப்படும் ஆயுதங்களே!

ஜேஎன்யு முதல் வாரணாசி இந்து பல்கலை கழகம் வரை, பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராகப் போராடும் பெண் மாணவர்கள் பழிவாங்கப்படுகிறார்கள். தண்டனைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

மூன்று ஆண்டுகளுக்கு முன் மாணவர்கள் மோடி ஆட்சிக்கு பாடம் கற்பித்தனர்; ஆயினும் எதிர்க்கருத்து சொல்பவர்கள் மீது, ஜனநாயகத்தை பாதுகாக்கப் போராடுபவர்கள் மீது, முத்திரை குத்தும் அதே பழைய தந்திரங்களை மீண்டும் பிரயோகிக்கிறார்கள்.

மூன்று ஆண்டுகளுக்கு முன் இந்த தேசத் துரோக குற்றச்சாட்டுகள் திருப்பித் தாக்கின; ஜேஎன்யு மாணவர் செயல்பாட்டாளர்கள் குரல்கள், ஜேஎன்யு வளாகம் தாண்டியும் எதிரொலித்து, நாட்டு மக்களுக்கு நம்பிக்கையும் துணிவும் தந்தது.

அம்பானியின் ஜியோ பல்கலைகழகத்தின் வடிவில், உயர்கல்வியை அழித்து, இருண்மைவாத மதவெறிக்கு, கார்ப்பரேட் வழிபாட்டுக்கு வழிவகுக்கும் ஆட்சியின் நோக்கத்துக்கு எதிராக ஜேஎன்யு ஆசிரியர்களும் மாணவர்களும் துணிச்சல்மிக்க போராட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

கன்னையா, உமர், அனிர்பன் ஆகியோருடன் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள காஷ்மீர மாணவர்கள் இந்தப் பொய்யான தேசத்துரோகக் குற்றச்சாட்டு தொடர்பாக மிகப்பெரிய விலை தர வேண்டியிருக்கும். இந்த மாணவர்களும் காஷ்மீரின் பிற மாணவர்களும் இளைஞர்களும் ஏற்கனவே எதிர்கொள்ளும் தவறான சித்தரிப்பு, பாகுபாடு, வன்முறை ஆகியவற்றை, இந்தத் தேசத்துரோக குற்றச்சாட்டு மேலும் அதிகரிக்கும்.

ஜேஎன்யு மாணவர்களை தேசத் துரோகிகள் என்று, தேச விரோதிகள் என்று பழிக்க, பொய் காணொளி காட்சிகளையும் பொய்ச் செய்திகளையும் வெளியிட்ட பிரச்சார அலைவரிசைகள், ஜேஎன்யு மாணவர்களை, அவர்கள் எழுப்பிதாகச் சொல்லப்படும் முழக்கங்கள் அடிப்படையில், இந்தியாவை துண்டாடும் கும்பல் என்று, மீண்டும் முத்திரை குத்துகின்றன.

வன்முறையை தூண்டாத வெறும் முழக்கங்கள் மட்டும் தேசத் துரோகம் ஆகாது என்று கேதார்நாத் சிங் எதிர் பீகார் அரசு, பல்வந்த் சிங் எதிர் பஞ்சாப் அரசு ஆகிய வழக்குகளில் உச்சநீதிமன்றம் மீண்டும் மீண்டும் சொல்லியுள்ளது. ஆயினும் எதிர்ப்புக் குரல்களின் நம்பகத்தன்மையை அழிக்க, தேசத் துரோகக் குற்றச்சாட்டு ஓர் அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது.

இன்று, இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பை உடைத்து, இந்துக்கள் எதிர் இசுலாமியர்கள் என்று இந்தியாவை உடைத்து, குடியுரிமை திருத்த மசோதா மூலமும் பொருளாதாரரீதியாக பின்தங்கியவர்களுக்கு 10% இடஒதுக்கீட்டின் மூலமும் இந்தியாவின் அரசியல் சாசனத்தை உடைத்து, ரிசர்வ் வங்கி, மத்திய புலனாய்வுத் துறை, நீதிமன்றங்கள் ஆகியவற்றை சீர்குலைத்து இந்தியாவின் ஜனநாயத்தை உடைத்து, ஊடக சுதந்திரத்தை, பேச்சுரிமை, வெளிப்பாட்டு உரிமைகளை உடைக்க முயற்சி செய்து இந்தியாவை துண்டாடும் கும்பல் மோடி ஆட்சிதான் என்பதை மறுக்க முடியாது.

இந்த துண்டாடும் கும்பல், இந்திய மக்களின் உறுதியை உணர்வை உடைக்க முடியாது. நமது நாட்டை, அதன் ஜனநாயகத்தை அழித்துவிட முயற்சி செய்யும் இந்த ஆட்சிக்கு வருகிற மக்களவைத் தேர்தல்களில் இந்தியா நிச்சயம் பொருத்தமான பதில் தரும்.

சிறந்த பத்திரிகையாளருக்கான ராம்நாத் கோயங்கா விருது பெற்றார் பத்திரிகையாளர் மு. குணசேகரன்

இந்திய ஊடகவியலாளர்களின் மதிப்புமிக்க விருதாக கருதப்படும், ‘ராம்நாத் கோயங்கா இதழியல் சிறப்பு விருது’ தமிழக பத்திரிகையாளர் மு.குணசேகரனுக்கு வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஊடகத்துறை சாதனையாளர்களுக்கு ராம்நாத் கோயங்கா இதழியல் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. பத்திரிகையாளர்களின் நேர்மையான, மிகச்சிறப்பான பங்களிப்பை போற்றும் வகையில் வழங்கப்பட்டு வரும் இந்த விருதை பத்திரிகையாளர் மு. குணசேகரன் பெற்றுள்ளார். 2007-ஆம் ஆண்டு தமிழகத்தை தாக்கிய ஒக்கி புயல் பாதிப்பு குறித்த தொடர்ச்சியான பதிவுக்காகவும், மக்களின் குரலை ஒலிக்க வைத்தமைக்காவும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக நியூஸ் 18 தெரிவிக்கிறது.

2017 ம் ஆண்டுக்கான விருதுகளை முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.என்.ஸ்ரீகிருஷ்ணா, பேராசிரியை பமீலா பிலிப்போஸ் ஆகியோரைக் கொண்ட நடுவர்குழு தேர்வு செய்தது. 2017ம் ஆண்டுக்கான விருதுகளில், பிராந்திய மொழிகளில் சிறந்து விளங்கிய ஊடகவியலாளருக்கான விருதுக்கு, நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் முதன்மை ஆசிரியர் மு.குணசேகரன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் என நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்டுள்ள செய்தி சொல்கிறது.

ஊடகவியலாளர்களால் தேசிய விருதுக்கு இணையாக கருதப்படும், பெருமதிப்புமிக்க இவ்விருதை தமிழ் ஊடகங்களிலிருந்து பெறும் முதல் பத்திரிகையாளர் மு.குணசேகரன். தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த குணசேகரன் அரசு பள்ளியில் படித்தவர். கல்லூரி படிப்பை தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் முடித்தவர், இதழியில் பணியை தினமணி நாளிதழில் தொடங்கினார். பின்னர் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ், புதிய தலைமுறை தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் பணியாற்றிவிட்டு, தற்சமயம் நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி தொலைக்காட்சியின் முதன்மை ஆசிரியராக உள்ளார்.

தனக்கு வழங்கப்பட்டுள்ள இந்த விருது குறித்து தனது முகநூலில் கருத்து தெரிவித்துள்ள பத்திரிகையாளர் மு. குணசேகரன், “எனது தனித்திறமை, அறிவுக்கு கிடைத்தது அல்ல. என்னுடன் பணியாற்றும் எண்ணற்ற பல நண்பர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடும் சலிப்பின்றியும் களத்தில் ஆற்றிய கடும் பணிக்கு கிடைத்த அங்கீகாரம்” என தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர் மு. குணசேகரன்

மேலும், அந்தப் பதிவில் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். முழு பதிவு…

“பாராட்டு, வாழ்த்துகள் வழியே நண்பர்கள் அன்பைப் பொழிந்து கொண்டு இருக்கிறார்கள். ராம்நாத் கோயங்கா விருது பெற்றது பெருமிதம் தந்த தருணம்.

இந்த விருது எனது தனித்திறமை, அறிவுக்கு கிடைத்தது அல்ல. என்னுடன் பணியாற்றும் எண்ணற்ற பல நண்பர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடும் சலிப்பின்றியும் களத்தில் ஆற்றிய கடும் பணிக்கு கிடைத்த அங்கீகாரம். இந்த அங்கீகாரமும் விருதும் அவர்கள் எல்லோருக்குமானது. கூட்டு உழைப்பின் கனியை அவர்கள் சார்பில் நான் பெற்றிருக்கிறேன் அவ்வளவே.

ஊதியம் கிடைக்கும் பணி என்றாலும், ஊடகப் பணியை, மக்கள் நலன், எளியோர் நீதிபெற உழைப்பது, மக்கள் ஆற்றாது அல்லல்படும் தருணத்தில் அவர்களோடு நிற்பது என்ற உணர்வை எல்லோரும் பெற்றிருந்தது எமது நியூஸ்18 குழுவின் சிறப்பு என்றே கூறுவேன்.

இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தங்கள் சொந்தங்களின் கதி என்னவென்று தெரியாத நிலையில், துயரம் கவ்விய கொந்தளிப்பான மனநிலையிலும் குமரிக் கடலோர கிராமங்களில் திரண்டிருந்த ஒவ்வொருவரிடமும் பேசுவதற்கு சூடான சொற்கள் இருந்தன.

தங்கள் துயரத்தை பரிவிப்பை அரசு எந்திரம் மட்டுமல்ல; கடற்கரைக்கு அப்பால் நிலப்பரப்பில் கேட்பதற்கு யாருமே இல்லையா என்று அவர்கள் வெளிப்படுத்தி ஆதங்கம் இன்னும் செவிகளில் எதிரொலிக்கிறது. நடுக்கடலிலும் கடலோரத்திலும் மீனவர் வாழ்வின் துயரை, அவர்களது வாழ்க்கை பற்றிய புரிதலை, பரந்துபட்ட பொதுசமூகத்தின் கவனத்துக்கு கொண்டுசெல்லும் முயற்சியாக அது விரிவடைந்தது.

12 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வரும் இவ்விருதை, தமிழ் அச்சு, ஊடகத்துறை சார்பில் முதல்முறையாக நான் பெற்றிருக்கிறேன். எதிர்வரும் காலங்களில் திறமையான எனது இளைய தலைமுறை இன்னும் அதிகம் பெற்று சாதிக்கும்; தமிழ்க்கொடியை டெல்லியில் உயரப் பறக்கவிடும் என்ற நம்பிக்கை எனக்கு மிகவும் அதிகம்.

தமிழ்நாட்டின் மூலைமுடுக்குகளில் காத்திரமான பங்களிப்பை, அற்புதமான களப்பணியை இதழியலில் மேற்கொள்ளும் பலர் வெளிச்சம் பெறாமலே போய்விடுகின்றனர். அந்த நிலை நிச்சயம் மாறும்; மாற வேண்டும்!

எனது கரங்கள் ஏந்தி இருக்கும் இந்த விருதை தங்கள் கரங்களுக்கானது என நினைத்து பெருமிதம் கொள்ளும் நண்பர்களே எனது பெரும்பேறு! ஆம், எல்லா உயர்வும் வெற்றிகளும் சமூகம் தருபவை; நம் சமூகத்திற்கானவை.
நன்றி நண்பர்களே!”.

#நிகழ்வுகள்: அம்ஷன்குமாரின் ‘மனுசங்கடா’ படம் சிறப்பு திரையிடல்

உலகத் திரைப்பட விழாவில் விருதுகள் பெற்ற #மனுசங்கடா தமிழ் திரைப்படம் திரையிடல் மற்றும் இயக்குனர் #அம்ஷன்குமார் மற்றும் குழுவினருடன் உரையாடல்.

நன்கொடை: ரூபாய் 100/

நுழைவுச்சீட்டு கிடைக்குமிடங்கள்: பரிசல் புத்தக நிலையம் – திருவல்லிக்கேணி 044-48579646, பாரதி புத்தகாலயம், தேனாம்பேட்டை 044-24332924, நியூ புக்லேண்ட் – தி .நகர் 044-28158171, டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே.நகர் 9566236967, கூகை திரைப்பட இயக்கம் – வளசரவாக்கம் 9710505502, பனுவல் புக் ஸ்டோர் – திருவான்மியூர் 044-43100442.

தொடர்புக்கு :9382853646,9445124576,7338823667,8939114423

அரூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; வழக்குப் பதிய பெற்றோரிடம் லஞ்சம் வாங்கிய போலீஸார்!

சந்திரமோகன்

தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், மலையடிவார கிராமமான சிட்லிங்கி ஊராட்சியைச் சார்ந்தவர் அண்ணாமலை. மலையாளி பழங்குடி இனத்தைச் சார்ந்த இவரின் மகளான செளமியா (வயது 16) பாப்பிரெட்டிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் +1 ம் வகுப்பு படித்து கொண்டு இருந்தார். தீபாவளி விடுமுறைக்காக விடுதி மூடப்பட்டதால், நவம்பர் 5 ந் தேதியன்று ஊருக்கு திரும்பியுள்ளார். பெற்றோர் இருவரும் கூலித் தொழிலாளர்கள் என்பதால் வேலைக்கு சென்றுவிட்டனர்.

காலை 11.30 மணியளவில், இயற்கை உபாதையாக ஓடை பக்கம் தனியாக சென்ற பொழுது, அதே பகுதியைச் சார்ந்த சாராய வியாபாரி ஒருவரின் மகன் சதீஷ் மற்றும் அவனது கூட்டாளி ரமேஷ் இருவரும் பலாத்காரமாக பாலியல் வன்கொடுமை (Rape) செய்துவிட்டனர். உதிரப்பெருக்குடன் மாணவி செளமியா வீட்டுக்கு திரும்பினார். வேலைக்கு சென்று திரும்பிய பெற்றோர் மகளது நிலையறிந்து உடனே அழைத்து கொண்டு 10 கி.மீ தொலைவில் உள்ள கோட்டப்பட்டி காவல்நிலையம் சென்றனர்.

அவப்பெயர் மிக்க கோட்டப்பட்டி காவல்நிலையம்

குற்றவாளி சதீஷ் தாயார் சாராய வியாபாரி என்பதாலும், கோட்டப்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு “மாமூல் ” உடனடியாக குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்யாமல் இழுத்தடித்தனர். பிறகு, செளமியா பெற்றோரிடம் ரூ. 5000 பணம் வாங்கிக் கொண்டு முதல் தகவல் அறிக்கை FIR போட்டுள்ளனர். அதிலும் பாலியல் வன்கொடுமை (RAPE) எனப் பதிவு செய்யாமல், பாலியியல் பலாத்கார முயற்சி தான் / Attempt to Rape எனப் பதிவு செய்துள்ளனர்.

கூடுதலான குற்றமய அலட்சியம் /Criminal negligence என்னவெனில், உதிரப்போக்கு மற்றும் உடல் வலி, காய்ச்சல் உடனிருந்த மாணவியை அருகாமையில் உள்ள அரூர் அரசு மருத்துவமனை அல்லது தருமபுரி அரசு மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கவில்லை.

மாறாக, அடுத்த நாளான நவ.6 ந் தேதியன்று கோட்டப்பட்டி காவல்நிலையம் சார்ந்த ஒரு பெண் போலீஸ் & ஆண் போலீஸ் ஒவ்வொருவரும் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து ரூ.4000 பணம் பறிப்பதிலேயே குறியாக இருந்துள்ளனர். (இணைப்பிலுள்ள மாணவியின் தந்தை அண்ணாமலை கடிதங்களை படிக்கவும்). பணத்தை பறித்துக் கொண்ட போலீசார், உதிரப் போக்கு & காய்ச்சல் உடனிருந்த மாணவிக்கு மருத்துவ சிகிச்சைக்கு எதுவும் செய்யாமல், மனசாட்சியே இல்லாமல் CWC கட்டுப்பாட்டில் உள்ள தருமபுரி வள்ளலார் குழந்தைகள் காப்பகத்தில் கொண்டு போய் விட்டுவிட்டு சென்றுவிட்டனர். அங்கும் எந்த மருத்துவ உதவிகளும் தரப்படவில்லை.

அடுத்த நாள் நவம்பர் 7 ந் தேதி குழந்தைகள் காப்பகம் சென்ற பெற்றோர், மகளின் நிலையைப் பார்த்து பரிதவித்து, காப்பக பொறுப்பாளரிடம் வேண்டுகோள் விடுத்து, மாலையில் தருமபுரி மாவட்ட அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மோசமான நிலையில் அனுமதிக்கப்பட்ட மாணவி செளமியா சிகிச்சை பலனின்று, நவம்பர் 10 ந் தேதி உயிரிழந்தார்.

ஆனால், அதுவரையிலும் பாலியல் குற்றவாளிகளை காவல்துறை கைது செய்யவில்லை; குற்றவாளிகள் தரப்பில் பெரும் தொகையை இலஞ்சாமாக வாங்கிக் கொண்டு தப்பவிட்டு விட்டனர். சிட்லிங்கி ஊர் பொதுமக்கள் கூட்டுரோட்டில் அணிதிரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களையும் தடியடி செய்து விரட்ட தான் கோட்டப்பட்டி காவல்துறை வந்தது.

நவம்பர் 10, 11 இரண்டு நாட்கள் மக்கள் போராட்டத்தின் காரணமாக தாசில்தார், ஆர்டிஓ, மாவட்ட ஆட்சியர் ஆகியோர் மக்களை சந்தித்து உரிய நடவடிக்கை எடுத்து தண்டனை வாங்கித் தருவதாக வாக்குறுதி தந்துள்ளனர். குற்றவாளி சதீஷ் கைது செய்யப்பட்டுள்ளான். இன்று பிரேத பரிசோதனை நடக்கிறது.

இலஞ்ச ஊழல், கிரிமினல் அக்கிரமங்கள், சாராய வியாபாரிகள், வேலனூர் ஆற்று மணல் கொள்ளையர் குற்றவாளிகளுடன் கூட்டு சேர்ந்து, இன்ஸ்பெக்டர் முத்து கிருஷ்ணன் தலைமையில் மொத்த கோட்டப்பட்டி காவல்நிலையமும் செயல்படுவது அனைவரும் அறிந்ததே! கடந்த மாதத்தில் இதே சிட்லிங்கி ஊராட்சியில் கொல்லப்பட்ட பழங்குடி பாட்டி ஒருவர் விஷயத்தில் கொலையாளிகளை விசாரணை செய்து அவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு வெளியில் விட்டுவிட்டு, பேத்தியை கைது செய்த அவப்பெயர் மிக்கது, கோட்டப்பட்டி காவல்நிலையம்.

காவலர்களை கூண்டோடு பணிநீக்கம் செய்க!

தமிழ்நாட்டில் எஸ்சி மற்றும் எஸ்டி சிறுமிகள், பெண்கள் மீது தொடுக்கப்படும் வன்முறைகள் அரசாங்கத்தால் சரியாக கையாளப் படுவதில்லை. இந்த நிலை மாற வேண்டும்.

1)சட்டங்களை மதிக்காததும், பாலியல் வன்கொடுமையை வெறும் முயற்சி என வழக்கு பதிவு செய்ததும், தங்களது கடமைகளை செய்யத் தவறியதும் மட்டும் அல்லாமல் … மனசாட்சியே இல்லாமல், பாலியல் வன்முறைக்கு உள்ளான சிறுமிக்கு உரிய மருத்துவ சிகிச்சை கூட வழங்காமல், இலஞ்ச நலன்களுக்காக, கிரிமினல் அலட்சியத்துடன் செயல்பட்ட கோட்டப்பட்டி காவல்நிலையத்தில் உள்ள அனைவரையும் உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும்.

2)காவல்நிலையத்தின் அலட்சியம் காரணமாகவே பழங்குடி ST இனம் சார்ந்த மாணவி செளமியா உயிரிழந்ததால், எஸ்சி & எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் / SC& ST (POA) Amendment Act 2015 ன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட கோட்டப்பட்டி காவல்நிலைய ஆய்வாளர் மற்றும் காவலர்கள் மீதும் வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும்.

சந்திரமோகன், அரசியல் செயல்பாட்டாளர்.

பட்டேல் சிலையைப் போல அயோத்தியில் ராமருக்கு சிலை: உ.பி. முதல்வர் ஆதித்யநாத் திட்டம்

குஜராத்தின் நர்மதா நதிக்கரையில் உலகின் உயரமான சிலை என்கிற பெருமையுடன் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு 182 மீட்டர் சிலை அமைத்தது மோடி அரசு.  ‘தற்பெருமை’க்காக இந்த சிலையை அமைத்துள்ளதாக இங்கிலாந்தின் அரசியல்வாதிகள் கடுமையாக விமர்சித்தனர். அதுபோல இந்தியாவுக்குள் இது கடுமையான விமர்சனங்களைக் கிளப்பியது. அதுகுறித்து கொஞ்சமும் கருத்தில் கொள்ளாமல், உத்தர பிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத், இந்து கடவுள் ராமருக்கு ஆயோத்தியில் 151 மீட்டர் சிலை அமைக்கவிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

உ.பி. முதலமைச்சர் ஆதித்யநாத், வரவிருக்கும் தீபாவளி தினத்தின் போது ராமர் சிலை கட்டுமானம் குறித்த அறிவிப்பை வெளியிட இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

என்.டி.டீ.விக்கு உ.பி. துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா இதுகுறித்து உறுதிபடுத்தாவிட்டாலும், ‘அயோத்தியில் மிகப்பெரிய சிலையை அமைப்பதை யார் தடுத்து விடுவார்கள்?’ என தெரிவித்துள்ளார். மேலும் அவர், ‘பாபரின் பெயரால் இனி யவரும் அயோத்தியில் எதுவும் செய்துவிட முடியாது என்பதை மட்டும் உறுதியாக சொல்ல முடியும்’ என கூறினார்.

பாஜக அரசின் ராமர் சிலை அறிவிப்பு குறித்து காங்கிரசைச் சேர்ந்த சசி தரூர் விமர்சித்துள்ளார். ‘ஒற்றுமைக்கான சிலை, ராமர் கோயில், அயோத்தியில் ராமர் சிலை போன்ற விவகாரங்கள் திசை திருப்பும் வகையில் உருவாக்கப்படுபவை. மக்கள் இந்த திசை திருப்பலில் விழுந்துவிடாமல் தங்களுடைய அன்றாட வாழ்க்கை சார்ந்த பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

”திருமுருகன் காந்தி இடதுசாரி இல்லை என்பதால்தான் நீங்கள் ஆதரிக்கவில்லையா?”

ராதிகா சுதாகர்

இவர்கள் எல்லாம் இந்தியாவிற்கு ஆபத்தானவர்களா என்ற தலைப்பிட்டு கைதானவர்கள் சிலரின் படங்கள் தமிழ் சமூக வெளியில் பகிரப்பட்டு வருகின்றன. அதில் ஆச்சரியம் என்னவென்றால் தமிழகத்தில் கடுமையான UAPA சட்டத்தால் சமீபத்தில் கைதான திருமுருகன் காந்தியின் படம் இல்லை. கேள்வி அரசாங்கம் இடதுசாரிகளை மட்டுமா நசுக்குகிறது? திருமுருகனுக்காக வேறு ஒரு இயக்கம் நடத்துபவர் போராட வேண்டும் என்றெல்லாம் கேட்கவில்லை. தகவலாக பதியும் ஒன்றில் பெயர் கூட கொடுக்க கூடாது என்று இருப்பது நேர்மை கிடையாது. திருமுருகன் மட்டும் அல்ல நந்தினி, முகிலன் என இன்னும் சிலரும் இருக்கிறார்கள். இவர்களில் திருமுருகன் மீது UAPA சட்டம் பாய்ந்தது என்பது பெரிய அநியாயம். தமிழ் வெளியில் அதை தட்டி கேட்க இந்தியத்தின் முகத்திரை கிழிக்க செய்தியாக கூட பகிர மாட்டேன் என்று சொல்வது நேர்மை கிடையாது. மேலும் தலைப்பே இந்தியாவிற்கு எதிராக போராடாதீர்கள் என்று சொல்கிறது! அப்படி போராடுவது என்ன குற்றமா என்பது தார்மீக கேள்வி?

பகிர்ந்த தோழர் ஒருவரின் பக்கத்தில் பின்னூட்டம் இட்டதை இங்கேயும் பதிகிறேன், ஆற்றாமையினால்.

சிக்கல் என்ன தெரியுமா தோழர் எப்பொழுதும். இந்த (பட) வரிசையில் திருமுருகன் காந்தி பெயர் இல்லாதது. தில்லி சேனல்கள் திருமுருகனை கூவியிருந்தால் நாம் கூவலாம் என்ற மனநிலையா இது? தமிழக பிரச்சனைகள், ஆட்களை பின்னுக்கு தள்ளிவிட்டு பன்னாட்டு பிரச்சனைகளை மட்டும் பேசுவது. உள்நாட்டில் நடக்கும் அடக்குமுறைகளை சிறு மோதல் நிலைக்கு சுருக்கி வெளிநாடுகளில் பெரும் பிரச்சனை பற்றி மட்டும் பேசவைத்து மக்களை உள்நாட்டு பிரச்சனைகளுக்கு போராடாமல் வைத்திருக்கவே உதவும். நியாயமான போராட்டங்களில் ஒரு ஒற்றுமையை ஏற்படுத்தாது மட்டுமல்ல சிதைக்கும், மக்களுக்கு ஆபத்தை உணர்த்தாது. மேலே கொடுத்த படம் என்ன செய்தி சொல்கிறது? தமிழகத்தில் பிரச்சனையே இல்லை என்பதைத்தானே. இதைத்தான் தமிழகத்தில் இயங்கும் ஆங்கில மற்றும் பார்ப்பன தமிழ் ஊடகங்கள் செய்துக்கொண்டிருக்கின்றன. மேலே கொடுத்த படமும் இப்படி ஒரு பிம்பத்தை மக்களுக்கு வெளிச்சம் போட்டு வேறு காட்டுகிறது.

மேலே போட்டு உள்ள படங்களில் தமிழகத்தில் UAPA சட்டத்தில் அநியாயமாக கைதாகியிருக்கும் திருமுருகன் காந்தியின் படம் இல்லாமல் இருப்பது எப்படி நியாயமாகும்? தமிழகத்தில் தானே இயங்குகிறீர்கள்? UAPA தீவிர அடக்குமுறை இல்லையா? இடதுசாரிகளுக்கு/ இடதுசாரிகள் ஆதரவாளர்களுக்கு அல்லது தமிழகத்தில் இல்லாதோருக்கு மட்டுமே எங்கள் ஆதரவு என்ற நோக்கம் என்றால் உள்ளூர்காரருடன் பழகுவதிலேயே அர்த்தமில்லை. எப்படியும் உள்ளூர்காரன் கண்டுகொள்ள போவதில்லை. உங்கள் கட்சியின் அறிவித்த அல்லது அறிவிக்கப்படாத கொள்கை இப்படி என்றால் வெளிநபர்கள் ஒன்றும் சொல்வதற்கு இல்லை. ஆதரவு சக்திகள் விமர்சனம் செய்துவிட்டு நண்பர்களிடம் வருத்தம் தெரிவித்து தனித்து வேலையை பார்க்க நகரலாம். இடதுசாரிகளின் இந்த மனநிலை தெரிந்து தான் ப.ச.க. தமிழகத்தில் விளையாடுகிறது, இந்த மனநிலையைத்தான் ப.ச.க. விரும்புகிறது என்று சொல்வதைத்தவிர வேறொன்றும் சொல்வதற்கு இல்லை. இவ்வளவு பாரிய சிக்கலில் தனித்தனியாக போராடுவோம். நான் மே பதினேழு இயக்க உறுப்பினர் அல்ல.

ராதிகா சுதாகர், பத்திரிகையாளர்.

தி.மு.க தலைவர் கலைஞர்.மு.கருணாநிதி அவர்களுக்கு மக்கள் அதிகாரம் அஞ்சலி!

கலைஞர் மு கருணாநிதி மறைந்து விட்டார்.
கலைஞர் என்றழைப்பதில் உறவைச் சொல்லி அழைப்பதைப் போன்றதொரு நேசம் பழகி விட்டது.
காவிரி மருத்துவமனையின் வாசலில் நாம் கண்டது அப்போலோ வாசலில் பார்த்த கூட்டத்தை ஒத்ததல்ல, இவர்கள் வேறு. மூப்பும் மரணமும் இயற்கை என்ற போதிலும், அரசியல் விமரிசனங்கள் நினைவில் நிழலாடிய போதிலும், கண்ணீர் தன் போக்கில் கண்களில் திரண்டு நிற்கிறது.

தொலைக்காட்சிகளில் பராசக்தி வசனம் ஒலிக்கிறது.

“பிறக்க ஒரு நாடு பிழைக்க ஒரு நாடு, தமிழ்நாட்டின் தலையெழுத்துக்கு நான் என்ன விதிவிலக்கா?” என்ற கேள்வி அன்று முதல் இன்று வரை வயிற்றுப் பாட்டுக்காக நாடு விட்டு நாடு அலையும் உழைப்பாளி வர்க்கத்தின் குரலை ஒலிக்கிறது. அது அன்று தமிழன் என்ற அடையாளத்தைக் கடந்தும் ஒலித்த இயல்பான வர்க்க கோபம்.

“அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள்?” என்ற கேள்வி பகுத்தறிவாளனின் அறிவு எழுப்பும் கேள்வியாக மட்டும் இல்லை. “கடவுளே உனக்கு கண்ணில்லையா” என்று கையறுநிலையில் நின்று கதறும் பக்தனின் இதயத்திலிருந்து வடியும் கண்ணீரும் அந்த வரிகளில் இருக்கிறது.
அந்த வசனங்களின் வாயிலாக, தாமே அறியாமலிருந்த தமது உள்ளக்குமுறலை தமிழ் மக்களின் காதுகளில் ஒலிக்கச் செய்த இளைஞன் கருணாநிதியின் முகம் நம் மனத்திரையிலிருந்து அகல மறுக்கின்றது.

தமிழ்த்தாய் வாழ்த்தைக் கேட்கும்போது, இந்து இந்தியாவுக்கு எதிராக குமரியில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் திருவள்ளுவரைக் காணும்போது, தமிழகம் முழுவதும் பரவியிருக்கும் சமத்துவபுரங்களைக் கடந்து செல்லும்போது, அண்ணா நூலகத்தில் அமர்ந்திருக்கும்போது, தேர்தல் அரசியலின் குறுகிய எல்லையை மீற விழையும் கலைஞர் தெரிகிறார்.
அவசர நிலையை எதிர்த்த கருணாநிதி, “மாநிலங்கள் என்ன உள்நாட்டு காலனியா” என்று கேள்வி எழுப்பிய கருணாநிதி, இந்திய அமைதிப்படை எனும் ஆக்கிரமிப்புப் படையை வரவேற்க மறுத்த கருணாநிதி, “ராமன் என்ன எஞ்சினீயரா” என்று கேள்வி எழுப்பிய கருணாநிதி, தமிழை வடமொழியின் பிடியிலிருந்தும், தமிழ்ப்புத்தாண்டை பார்ப்பனியத்திடமிருந்தும் விடுவிக்கத் துடித்த கருணாநிதி – நம் நினைவில் நிற்கிறார்.

பெண்கள், திருநங்கைகள், குறவர்கள், புதிரை வண்ணார், ஊனமுற்றவர்கள், பிச்சைக்காரர்கள், குடிசை வாழ் மக்கள், கட்டிடத்தொழிலாளிகள் போன்ற உதிரித் தொழிலாளிகள்.. என சமூகத்தின் புறக்கணிக்கப்பட்ட மக்கட்பிரிவினரின் பால் இயல்பான பரிவு கொண்டிருந்த கருணாநிதி, அத்தகைய அரசியல்வாதி வேறு யார் என்று நம்மை சிந்திக்கத் தூண்டுகிறார்.


நினைவில் உறுத்தும் சமரசங்களும் சரணடைவுகளும் இருக்கத்தான் செய்கின்றன. அவை தேர்தல் அரசியலின் வரம்பும், பிழைப்புவாதக் கட்சியின் நிர்ப்பந்தங்களும் ஏற்படுத்திய தெரிவுகள்.
இந்திராவுடனும், பாஜக வுடனும் ஏற்படுத்திக்கொண்ட கூட்டணிகள், அபாண்டமாக சுமத்தப்பட்ட ராஜீவ் கொலைப்பழியை எதிர்த்து நிற்கத்தவறிய அச்சம், தில்லிக்குப் பணிந்து ஏவப்பட்ட அடக்குமுறைகள், ஈழத்தின் இனப்படுகொலையின் போதும் கூட துறக்க முடியாத பதவி மயக்கம், இன்னும் தேர்தல் அரசியல் கட்சிகளுக்குரிய சீரழிவுகள் பலவற்றைப் பட்டியலிடலாம்.

அவை, இந்த அரசியல் கட்டமைப்பின் வரம்புக்குள் நின்று இலட்சிய சமூகத்தைப் படைக்க விழையும் எந்த ஒரு தனிநபரும், அரசியல் கட்சியும் எதிர்கொள்ள வேண்டிய வீழ்ச்சிகள். “திமுக என்ற கட்சி வேறு விதமாக இருந்திருக்க இயலுமா” என்றொரு கேள்வியை எழுப்பினால், அதற்கான விடையை திமுக வின் வரலாற்றில் தேடுவதே பொருத்தமானது. அந்த அளவில், தான் ஆற்றிய பாத்திரத்துக்கு அவரும் பொறுப்பு.

அன்றி, “கலைஞர் நினைத்திருந்தால்” என்று பேசுவோரின் பார்வை பிழையானது, தனிநபரின் வழியாக அரசியலையும் வரலாற்றையும் பார்ப்பவர்கள் தனிநபரை வழிபடுகிறார்கள், அல்லது அவரைத் தனிப்பட்ட முறையில் குற்றப்படுத்துகிறார்கள்.

இவ்வீழ்ச்சிகள் அனைத்தும் திராவிட இயக்கமும் அதன் சமூக அடித்தளமாக அமைந்த மக்கட்பிரிவினரும், மெல்ல அரசதிகாரத்தில் நிறுவனமயமானதுடன் தொடர்பு கொண்டவை. இந்திய தேசிய அரசமைப்பில் நிறுவனமயமானவர்களுள் வெகு வேகமாக வீழ்ச்சியடைந்தவர்கள் திராவிட இயக்கத்தினரா, கம்யூனிஸ்டுகளா, சோசலிஸ்டுகளா, தலித் இயக்கத்தினரா என்றொரு ஒப்பாய்வு வேண்டுமானால் இவ்விசயத்தைப் புரிந்து கொள்ள நமக்கு உதவக்கூடும்.


ஓர் அரசியல் ஆளுமை என்ற முறையில் கருணாநிதியோடு ஒப்பிடத்தக்க பன்முக ஆளுமை கொண்டவர் யார்? ஆக ஒடுக்கப்பட்ட, அவமதிக்கப்பட்ட ஒரு சமூகத்தில் பிறந்து, தன் போராட்டக் குணத்தால் ஆளுமைத் திறனையும் ஆற்றலையும் வளர்த்துக் கொண்டு, இந்த சாதி ஆதிக்க சமூகத்தில் சாதித்து நிற்பது சாதாரணமல்ல. இது வெறும் அரசியல் சாமர்த்தியம் அல்ல. கருணாநிதியை ஒப்பிடுகையில் இந்திய அரசியலில் பலரும் சித்திரக் குள்ளர்களே.
எனினும் தமிழர்களுக்கு எதிராக இந்து- இந்தி தேசியம் கொண்டிருக்கும் தனிச்சிறப்பான வெறுப்பின் முதன்மை இலக்காக இருந்தவர் கருணாநிதி.

டில்லியிடம் சரணடைந்து விட்டதாக அவரை யார் எவ்வளவு விமரிசித்தாலும், டில்லியும், பார்ப்பன ஆதிக்க சக்திகளும் கருணாநிதியையும் திமுகவையும் எல்லாக் காலத்திலும் எதிரியாகத்தான் கருதியிருக்கின்றனர் என்பது மறுக்கவியலாத உண்மை.

1971 தேர்தலில் திமுக பெற்ற வெற்றியைக் கண்டு அஞ்சிய காங்கிரசு எம்ஜிஆரை வைத்து திமுகவை உடைத்தது. பிறகு ராஜீவ் கொலைக்கு திமுக மீது பொய்ப்பழி சுமத்தி ஜெயலலிதாவை பதவியில் அமர்த்தியது. அடுத்து இந்தியாவின் ஏகபோகத் திருடர்களான பார்ப்பன பனியா கும்பலின் கட்சியான பாரதிய ஜனதா, ஒன்றே முக்கால் லட்சம் கோடி அலைக்கற்றை ஊழல் என்ற மாபெரும் சதி நாடகத்தை அரங்கேற்றி, நாட்டையே திமுக கொள்ளையடித்து விட்டதைப் போன்றதொரு பொய்மைக்குள் நம்மைப் புதைத்தது.

எந்த விதமான கொள்கையுமற்ற ஊழல் – கிரிமினல் கும்பலின் தலைவியான தண்டிக்கப்பட்ட குற்றவாளி ஜெயலலிதாவையும் அதிமுகவையும் தமது “இயற்கையான கூட்டாளிகள்” என்றே பாஜகவும் சங்க பரிவாரமும் கருதுகின்றன. அதாவது “அவர்களுடைய இயற்கையான எதிரி” கருணாநிதி. வாஜ்பாயியை ஜெயலலிதா கழுத்தறுத்த போதிலும், திமுக அவரது நம்பகமான கூட்டணிக் கட்சியாக நடந்து கொண்ட போதிலும், “நீரடித்து நீர் விலகாது” என்று போயஸ் தோட்டத்துடன்தான் இந்திய தேசியப் பார்ப்பனியர்கள் ஒட்டிக் கொண்டார்கள்.
ஆகவே, சங்கபரிவாரத்தின் இயற்கையான எதிரியை நாம் நமது இயற்கையான நட்பு சக்தியாகக் கொள்வது தவிர்க்கவியலாதது. “திமுகவுக்கும் அதிமுகவுக்கும் வேறுபாடு இல்லை” என்று யார் கூறினாலும் அவ்வாறு கூறுவோர் அதிமுக வை ஆதரிக்கின்றனர். அல்லது பாஜக வின் கருத்தைப் பேசுகின்றனர். இரண்டு திராவிடக் கட்சிகளையும் எதிர்ப்பதாகப் பேசுபவர்களும் அத்தகையோரே.

“திராவிடத்தால் வீழ்ந்தோம்” என்று பேசும் தமிழ் பாசிஸ்டுகளும், “திராவிட இயக்கங்களின் ஆட்சி தமிழகத்தை குட்டிச்சுவராக்கி விட்டது” என்று பேசும் பார்ப்பன தேசியவாதிகளும் ஒரே சுருதியில் இணைகிறார்கள். உண்மையில் அவர்கள் உள்ளத்தில் இருப்பது வெறி பிடித்த கருணாநிதி துவேசம், திமுக வெறுப்பு.

கருணாநிதியோடு ஒப்பிட்டு ஜெயலலிதாவின் தைரியத்தை மெச்சுபவர்களும், எம்ஜியார் காட்டிய “ஏட்டிக்குப்போட்டி தமிழுணர்வை” சிலாகிப்பவர்களும் ஒரு வகையில் ஜனநாயக உணர்வற்ற அடிமை மனோபாவத்தையே வெளிப்படுத்துகிறார்கள்.


கலைஞர் விடை பெற்றுக் கொள்கிறார்.
“கொடியவர்கள் கோயில்களைத் தம் கூடாரமாக்கிக் கொள்ள முனையும் காலத்தில்” கலைஞர் விடைபெற்றுக் கொள்கிறார்.

“மாநிலங்கள் உள்நாட்டுக் காலனிகளாக மாற்றப்படும் காலத்தில்” கலைஞர் விடைபெற்றுக் கொள்கிறார்.

“இந்தியும் சமஸ்கிருதமும் மத மவுடீகங்களும் மீண்டும் கோலோச்சத் துடிக்கும் காலத்தில்” கலைஞர் விடை பெற்றுக் கொள்கிறார்.

இந்துத்துவப் பாசிசம் அச்சுறுத்தும் காலத்தில் அவர் விடைபெற்றுக் கொள்கிறார்.

காலத்தின் தேவைகள் அவற்றை அடைவதற்குப் பொருத்தமான பாதையைப் பின்பற்றுமாறு நம்மைக் கோருகின்றன.

கடந்து வந்த பாதையைக் காய்தல் உவத்தல் இன்றி மீளாய்வு செய்வதும், அதனடிப்படையில் இனி செல்ல வேண்டிய பாதையைத் தீர்மானிப்பதும், கண் கலங்கி நிற்கும் அனைவரின் கடமை.

கலைஞரின் குடும்பத்தினர்க்கும் தி.மு.க தொண்டர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

07-08-2018
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு

இயற்கை முறையில் வீட்டிலேயே பிரசவ பயிற்சி தருவதாக விளம்பரம்: ஹீலர் பாஸ்கர் கைது!

இயற்கை முறையில் பிரசவம் பார்க்க இலவச பயிற்சி என விளம்பரம் கொடுத்த ஹீலர் பாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார். இலவச பயிற்சி எனக் கூறிக்கொண்டு ரூ. 5000 வசூலித்ததாகவும் அவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் வீட்டிலேயே பிரசவம் பார்த்த கிருத்திகா என்ற பெண் இறந்தார். இந்நிலையில் வீட்டிலேயே எளிய முறையில் சுகபிரசவம் செய்ய பயிற்சி என விளம்பரம் செய்த ஹீலர் பாஸ்கர் மீது சுகாதாரத்துறை இணை இயக்குநர் பானுமதி புகார் அளித்திருந்தார். மேலும் மனிதி என்ற அமைப்பும் புகார் தெரிவித்திருந்தது.

புகாரின் பேரில் கோவை குனியமுத்தூர் காவல் துறை அவரை கைது செய்துள்ளது.  கைது செய்யப்பட்டுள்ள பாஸ்கரின் மீது மோசடி செய்தல், ஏமாற்றுதல் என்ற இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

“எட்டுவழிச்சாலை மரணத்தின் மீது நீள்வதை யாரால் தாங்கிக் கொள்ள முடியும்?”

சேலம் – சென்னை எட்டு வழிச்சாலைக்கு நிலம் தர மறுப்பு தெரிவித்து, திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்வணக்கம்பாடி காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி சேகர் என்பவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து சமூக ஊடகங்களில் எழுதப்பட்டுள்ள கருத்துக்கள்:

தொழிற்சங்க செயல்பாட்டாளர் மாதவராஜ்

சேலம் – சென்னை எட்டுவழிச்சாலைக்கு தன் நிலம் பறிபோவதைத் தாங்க முடியாமல், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்வணக்கம்பாடி காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி சேகர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நிலமே என் உயிர், நிலமே என் வாழ்க்கை என அந்த எளிய மனிதர் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். இரக்கமும், மனிதாபிமானமும் அற்றவர்களின் செவிகளில் இந்த உயிரின் வேதனைக் குரல் கேட்காமல் போகலாம் அல்லது முக்கியமற்றுப் போகலாம்.

பூச்சி மருந்தைக் கையில் வைத்துக்கொண்டு அவர் என்னவெல்லாம் சிந்தித்து இருப்பார்? அனாதரவாக விடப்பட்டதாக எப்படியெல்லாம் உணர்ந்திருப்பார்?

எட்டுவழிச்சாலை அவரது மரணத்தின் மீது நீள்வதை யாரால் தாங்கிக் கொள்ள முடியும்?

அரசியல் செயல்பாட்டாளர் சந்திரமோகன்:

எட்டுவழிச் சாலை திட்டத்தால் முதல் உயிர்பலி. விவசாயி சேகர் துயர மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் பசுமை வழி சாலைக்காக, எதிர்ப்பையும் மீறி, மேல் வணக்கம்பாடியைச் சேர்ந்த சேகர் என்ற விவசாயிக்கு சொந்தமான சுமார் 5 ஏக்கர் நிலம் மற்றும் வீடு உள்ளிட்டவை அளவீடு செய்யப்பட்டது.

இதனால் அவர் கடும் மனஉளைச்சலுக்கு உள்ளானார். இந்நிலையில் திடீரென அவரது விளை நிலத்தில் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்து சேகர் உயிரிழந்துள்ளார்.

எட்டுவழிச் சாலையும் வேண்டாம்; விவசாயிகள் உயிர்ப்பலியும் வேண்டாம்.
Stop Green Corridor 8way Project!

ஊடகங்களை மிரட்டும் காவிக் கும்பல்: ‘குரல்’ பத்திரிகையாளர் அமைப்பு கண்டனம்

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நெறியாளர் கார்த்திகேயனை பாஜகவினர் சமூக ஊடகங்களில் மிரட்டி வருவது கண்டிக்கத்தக்கது என ‘குரல்’ பத்திரிகையாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“’மாதவிடாய் காலத்தில் பெண் தெய்வங்கள் கோயிலை விட்டு வெளியேறிவிடுகின்றனவா?’ – என பொருள்படும் கவிதையை நிகழ்ச்சி ஒன்றில் மேற்கோள் காட்டியதற்காக, புதிய தலைமுறை தொலைக்காட்சி நெறியாளர் கார்த்திகேயன், பா.ஜ.க., இந்து முன்னணி மதவாத கும்பலால் மிக வெளிப்படையாக மிரட்டப்பட்டு வருகிறார். கார்த்திகேயன் சொன்ன வார்த்தைகளில் எவ்வித தவறும் இல்லை எனினும், அவர் அதற்காக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வருத்தம் தெரிவித்திருக்கிறார். இருந்தபோதிலும், ‘அவரை பணி நீக்கம் செய்யும் வரையிலும் விடப்போவதில்லை’ என்று மிரட்டுகிறது இந்த காவிக் கும்பல்.

வளர்த்துவிட்ட நச்சுப்பாம்பு தன்னையே கொத்த வருகிறது என்பதை இப்போதேனும் தமிழ் ஊடகங்கள் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் அமைப்பு பலமோ,மக்கள் செல்வாக்கோ துளியும் இல்லாத, வெறும் வாய்ச்சவடால் கும்பலான பாரதிய ஜனதா கட்சியை, எப்போதும் பரபரப்பு செய்தியில் இடம்பெறும் வகையில் பராமரித்தவர்கள் இந்த 24 மணி நேர செய்தித் தொலைக்காட்சிகள்தான். தலைப்புக்கு தொடர்பு இருந்தாலும், இல்லை என்றாலும் பா.ஜ.க. சார்பாக ஒருவரை அழைத்துவந்து விவாத நிகழ்ச்சிகளில் கத்தவிடும் கலாசாரத்தை வளர்த்து எடுத்தவர்கள் இவர்கள்.

தெரிந்தே பொய் சொல்வது, பொய் அம்பலப்படும்போது கூச்சமே இல்லாமல் கூச்சலிடுவது, சரக்கே இல்லாமல் சர்வரோக நிவாரணியாக அனைத்துப் பிரச்னைகளிலும் அடித்துவிடுவது, கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், ‘நீ மட்டும் யோக்கியமா?’ என திசைதிருப்பல் கேள்விகளில் தந்திரமாக ஒளிந்துகொள்வது… – இவைதான் பா.ஜ.க. ஊடகப் பேச்சாளர்களின் தகுதிகள். இருந்தும் இவர்களை விவாத நிகழ்ச்சிகளுக்கு அழைத்து பாரதிய ஜனதா கட்சி என்ற செத்துப்போன பாம்புக்கு உயிர்த்தண்ணீர் ஊற்றும் வேலையை செய்து வந்தன ஊடகங்கள். இப்போது அந்த பாம்புகள் கொத்த தொடங்கியிருக்கின்றன.

இது கார்த்திகேயன் விவகாரத்தில் தொடங்கவில்லை. ஏற்கெனவே இதே புதிய தலைமுறையில் தீபாவளி தொடர்பான ஒரு விவாதத்திலும் வேண்டும் என்றே சர்ச்சை கிளப்பினார்கள். தாலி தொடர்பான ஒரு விவாதத்தில் புதிய தலைமுறை மீது டிபன்பாக்ஸ் வெடிகுண்டு வீசினார்கள். நியூஸ் 7 விவாதம் ஒன்றில் கலந்துகொண்ட பா.ஜ.க-வை சேர்ந்த எஸ்.வி.சேகர், ’நியூஸ் 7 விவாதங்களுக்கு வே.மதிமாறனை அழைக்கக்கூடாது’ என நியூஸ் 7 உரிமையாளர் வைகுண்டராஜனுக்கே போன் போட்டு பேசினார். அதை வெளிப்படையாக அறிவிக்கவும் செய்தார்.

தினமணியில் வைரமுத்து எழுதிய ஆண்டாள் கட்டுரைக்கு, தமிழக பார்ப்பன கும்பல் தங்கள் இயல்புக்கு பொருந்தாத வகையில் பல போராட்டங்களை நடத்தியது. தமிழ் இதழியல் வரலாற்றிலேயே இல்லாத வகையில், வைரமுத்து எழுதிய கட்டுரையை வெளியிட்டதற்காக தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் திருவில்லிபுத்தூருக்கே நேரில் சென்று மன்னிப்புக் கேட்டார். திருப்பதி நாராயணன் போன்ற பா.ஜ.க. ஊடகப் பேச்சாளர்கள் ஸ்டுடியோவில் அமர்ந்துகொண்டு சக பங்கேற்பாளர்களையும், நெறியாளரையும் நேரடியாக மிரட்டுவதையும் பார்க்கிறோம். இது ஒரு லைவ் நிகழ்ச்சி; மக்கள் பார்க்கிறார்கள் என்ற அச்சமோ, பதற்றமோ இல்லாமல் இவர்கள் துணிந்து பொய் சொல்கிறார்கள்.

கர்நாடகாவில் கவுரி லங்கேஷையும், எம்.எம்.கல்புர்கியையும், மஹாராஷ்டிராவில் நரேந்திர தபோல்கரையும், கோவிந்த் பன்சாரேவையும் கொலை செய்த மரபு கொண்டவர்கள் இவர்கள். ஊடகங்களில் பா.ஜ.க.வை விமர்சித்தும், அந்தக் கட்சியின் பொய்களை அம்பலப்படுத்தியும், இந்த ஆட்சியின் அவலங்களை தோலுரித்தும் எழுதி வரும்; இயங்கி வரும் பத்திரிகையாளர்கள் மிரட்டப்படுகின்றனர்; கொல்லப்படுகின்றனர். வட இந்தியாவில் நிகழ்ந்துவரும் இந்த கருத்துலக அடாவடியின் மற்றுமொரு வடிவம்தான் இப்போது தமிழ்நாட்டில் நடக்கிறது.

சபரிமலை அய்யப்பன் கோயிலில் பெண்கள் வழிபடுவது தொடர்பான விவாதத்தில்தான் கார்த்திகேயன் அந்த கவிதையை மேற்கோள் காட்டினார். மாதவிடாய் நாட்கள் காரணமாகத்தான் பெண்கள் அனுமதிக்கப்படுவது இல்லை என்றால், பெண் தெய்வங்களை என்ன செய்வீர்கள் என்ற அந்த கேள்வி மிக இயல்பானது; நியாயமானது. இதை பாரதிய ஜனதாவினர் எதிர்க்கும்போது, நியாயமாக, சபரிமலைக்கு பெண்கள் செல்வதை தடுத்து வைத்திருக்கும் இந்து மதத்தின் அடிப்படை விவாதப் பொருளாக மாறியிருக்க வேண்டும். கோயிலின் கருவறைக்குள் சூத்திரர்கள் செல்லக்கூடாது; கோயில் வளாகத்துக்குள் தலித்துகள் செல்லக்கூடாது; கோயில் இருக்கும் பக்கமே பெண்கள் செல்லக்கூடாது என்ற இந்து மதத்தின் இழிவான படிநிலை அமைப்பு பேசப்பட்டிருக்க வேண்டும். மாறாக காவிக்கும்பலின் மிரட்டலுக்கு பதில் சொல்வதாக மற்றவர்களின் பணி சுருங்கிவிட்டது.

இந்த ’தடுப்பாட்ட’ எல்லைக்குள் நம்மை நிறுத்தி வைத்து காவிக்கும்பல் தாக்குதல் ஆட்டத்தை ஆடி வருகிறது. நாம் மீண்டும், மீண்டும் இவர்களுக்கு விளக்கம் சொல்வோராகவும், இவர்களின் பொய்களை அம்பலப்படுத்துவோராகவும் இருந்து வருகிறோம். அவர்கள் நம்மை மூச்சிரைக்க ஓர் இடத்தில் நிறுத்திவிட்டு அடுத்த வதந்தியை ஆற, அமர தயார் செய்கிறார்கள்.

‘கார்த்திகேயனை பணி நீக்கம் செய்ய வேண்டும்’ என்ற இந்த பச்சையான மிரட்டலை புதிய தலைமுறை நிர்வாகம் நேரடியாக எதிர்கொண்டிருக்க வேண்டும். முன் எப்போதும் அப்படி நடைபெறாததைப்போலவே இப்போதும் நடைபெறவில்லை. நெருக்கடியான சந்தர்ப்பங்களில் பத்திரிகையாளர்கள் நிர்வாகங்களால் கைவிடப்படும் தமிழ் இதழியலின் மரபு இப்போதும் தொடர்கிறது. இதன்மூலம், இனிமேல் ’அடக்கி வாசிக்கும்படி’ பத்திரிகையாளர்கள் நேரடியாகவும்; மறைமுகமாகவும் நிர்பந்திக்கப்படுகின்றனர். இந்த அவலமான சூழலில் நிறுவனம் என்ற குடையின் கீழ் அல்ல… பத்திரிகையாளர்கள் என்ற பணியின் பொருட்டு நாம் இணைந்து குரல் கொடுக்க வேண்டும். இந்த எதிர்ப்பு காவிக் கும்பலின் அடாவடிக்காக அல்ல… பத்திரிகையாளர் என்ற வேலையை மனசாட்சியுடன் செய்வதற்கே அவசியமானது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“விடுதலை அறிவிப்புக்கு நன்றி; பாகுபாடு இன்றி விடுதலை செய்க!”:  அ.மார்க்ஸ் 

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நீண்ட காலசிறைவாசிகளை விடுதலை செய்வது என்ற தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின்  முடிவை சென்னையில், சனியன்று  நடந்த தேசிய மனித உரிமைகளின் கூட்டமைப்பு (NCHRO) சார்பாக நடந்த கலந்துரையாடல்  பாராட்டியது. அதேவேளையில் விடுதலையில் பாகுபாடு  காட்டக்கூடாது; நிபந்தனைகள் போடக்கூடாது; பத்து ஆண்டுகள் சிறையில் இருந்த அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுப்பப்பட்ட து.
“கடந்த காலங்களில் விடுதலைக்கு தகுதியானவர்கள் அனைவரும் ஒரே நாளில், குறிப்பிட்ட விழா நாளன்று விடுதலை செய்யப்படுவார்கள். ஆனால் அறிவிப்பு வந்த சில மாதங்கள் கடந்த பின்னரும் இதுவரை  இருநூறுக்கும் சற்று அதிகமானவர்களே விடுதலை செய்யப்பட்டுள்ளனர். முன் விடுதலைக்கு தகுதியான, பத்து ஆண்டுகள் சிறையில் இருந்த  1500க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் இன்னமும் சிறையில் உள்ளனர். சிறை என்பது ஒரு சீர்திருத்தம் நடைபெறும் இடம்தானே தவிர, வாழ்நாள் முழுவதும்  குற்றவாளியை அடைத்து  வைக்கும் இடம் இல்லை ” என்று  தியாகு குறிப்பிட்டார்.
நீண்டகால சிறைவாசிகளை  விடுதலை செய்வதில் கடந்த காலங்களில் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு  முன்னோடியாக இருந்துள்ளது. இது குறித்து சட்டத்துறை  அமைச்சரையும், முதலமைச்சரையும் நேரில் சந்தித்து முறையிடுவது என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
கூட்டத்தின் முடிவில் பேரா. அ. மார்க்ஸ், தியாகு ஆகிய இருவரும் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தனர்.

பத்தாயிரம் கோடி ரூபாய் விரைவு சாலையும் கதவுகள் இல்லாத சிறை கழிவறைகளும்: தோழர் சந்திரமோகன்

சந்திரமோகன்

சந்திர மோகன்

“விவசாயிகளை, விவசாயத்தை, பொதுமக்களை, சுற்றுச்சூழலை பாதிக்கும் சென்னை – சேலம் எட்டு வழி பசுமை விரைவுச் சாலை (8 way Express Greenfield Corridor) வேண்டாம் ” என ஒரு போராட்டத்தை, நான்கு இடதுசாரி கட்சிகளின் விவசாய சங்கங்கள் கடந்த ஜூலை 6 ந் தேதியன்று, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடத்த முடிவு செய்து அனுமதி கேட்டு கடிதம் தரப்பட்டும் இருந்தது. இத் திட்டத்திற்கு ஒரு அடையாள எதிர்ப்பாக நகல் அரசாணை எரிப்பு ஆர்ப்பாட்டம் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. காவல்துறை அனுமதி மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை.

தோழர். P.சண்முகம், பொது செயலாளர், த.நா.விவசாயிகள் சங்கம் – Cpim தலைமையில், பாதிக்கப்படும் சிறு, குறு விவசாயிகள் மற்றும் CPIM, CPI, CPIML & SUCI(C) தோழர்கள் அணிதிரண்டு முழக்கங்களை எழுப்பிக் கொண்டு இருந்தோம். சுற்றி வளைத்த காவல்துறை ஆர்ப்பாட்டக்காரர்கள் கையிலிருந்த ஜெராக்ஸ் பேப்பர்களை பறிப்பது, அவற்றின் மீது Water pocket canon மூலமாக தண்ணீர் பீச்சியடிப்பது என பரபரப்பு ஏற்படுத்தி, பெரும்பான்மையான விவசாயிகளுக்கு குழப்பம் & அச்சத்தை ஏற்படுத்தி கலைத்து விட்டு, 44 பேர்களை மட்டும் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தது.

எளிதில் பிணையில் வரமுடியாத பிரிவு 7 (1) CLA அடிப்படையில், பொது சொத்துக்கு சேதம் விளைவித்ததாகவும், திட்டமிட்டதாகவும் பொய் வழக்கை புனைந்தது. தவறான பிரிவு சேர்க்கப்பட்டதால், FIR ல் தோழர்கள் கையெழுத்திட மறுத்தனர். “இதே மாதிரியான நிகழ்ச்சிகளை நடத்திய அரூர் மற்றும் காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டகாரர்களை விடுவித்த தமிழக காவல்துறை சேலம் மற்றும் திருவண்ணாமலை போராட்டக்காரர்கள் மீது மட்டும் ஏன் பொய் வழக்கு போட வேண்டும்? ” என்ற கேள்விக்கு சரியாக பதில் அளிக்கவில்லை.

தனியார் மண்டபத்திலேயே நேரம் அதிகமாக, இரவு ஆகிவிட்டது ; ஊடகங்கள் குவிந்து விட்டன. உளவுத் துறையின் ஆலோசனை பெற்று “அரசாணை பொது சொத்து, அதை எரித்ததால்” இப் பிரிவு சேர்க்கப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் விளக்கம் தந்தனர்.” எங்கள் காசு போட்டு ஜெராக்ஸ் எடுத்து வந்த பேப்பர்களை எரிக்க முயற்சித்தால், அந்த நடவடிக்கையில் எங்கு பொதுச் சொத்துக்கு சேதம், சதி எல்லாம் வருகிறது ?” என்ற கேள்விக்கு பதிலளிக்க முடியாத அதிகாரிகள் “மேலிடத்து உத்தரவு ” (காவல்துறை அமைச்சர் முதல்வர் தான்! ) என்ற உண்மையை உரைத்து விட்டு, பொய் வழக்கு போடும் குற்ற உணர்வே இல்லாமல் காவல்துறையினர், எங்களை ரிமாண்ட் செய்யும் நீதித்துறை நடவடிக்கையில் இறங்கினர். இது மேலிடத்து உத்தரவு என்று சொன்ன போதும், சிறைக்குள் சந்தித்த குற்றம் புரிந்த சிறைவாசிகள் பலரும் சொன்ன செய்தி காவல்துறை சட்டங்களை, நியாயங்களை கைவிடுகின்றன என்பது தான்!

“சின்னச் சின்ன குற்றங்களில் தெரிந்தோ, தெரியாமலோ ஈடுபட்ட எங்கள் மீது திருந்துவதற்கு வாய்ப்பு எதுவும் வழங்காமல், “ரவுடிகளை ஒழிப்பது” என்ற பெயரால், காவல்துறை அதிகாரிகள் மீண்டும் மீண்டும் பொய் வழக்குகளை போட்டு உள்ளே தள்ளியுள்ளனர்.” “இந்திய தண்டனை சட்டங்கள் IPC கடுமையாக இருக்கும் பொழுது பொய் வழக்குகளை ஏன் காவல்துறை நாடுகிறது? ” என்பது நீதித்துறையும், மனித உரிமை ஆணையமும் அக்கறை கொள்ள வேண்டிய கேள்வியாகும்.

சிறைக்குள் …

மருத்துவ பரிசோதனைகளுக்கு பின்னர், நீதித்துறை முன்பாக ஆஜர்படுத்தப்பட்டு, 14 நாட்கள் ரிமாண்ட் என்ற உத்தரவுபடி, நள்ளிரவில் சேலம் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டோம். சேலம் மத்திய சிறையின், கடந்த 2001ம் ஆண்டு சில நாட்கள் சிறைவாசம் அனுபவத்தை ஒப்பிடும்போது, நிச்சயமாக நிறைய மாற்றங்கள் பார்க்க முடிந்தது. அதே சிறை, அதே செல்கள், அதே கழிப்பறைகள், குளியல் தொட்டிகள் தான் எனினும், வழங்கப்படும் உணவில், மருத்துவ சோதனை, மருந்து, மாத்திரைகள் வழங்குவதில் முன்னேற்றம் இருந்தது.

மிகவும் குறிப்பிட வேண்டியது:-

ஒன்றிரண்டு விதிவிலக்கான வார்டன்கள் தவிர, அனைவரிடமும் (வார்டன்கள் துவங்கி சூப்பிரடெண்டட் வரை) மனித முகங்களை பார்க்க நேரிட்டது. கெடுபிடிகளை தவிர்த்து மனித உறவுகளை (Human Relations) பேண, தற்போதுள்ள சேலம் மத்திய சிறை நிர்வாகம் முயற்சிப்பது போல தெரிகிறது. இது கடந்த கால மோசமான நிலைமையோடு ஒரு ஒப்பீடு தான்! அரசியல் சிறைவாசிகள், மறியல் வழக்கு சார்ந்தவர்கள் என்பதாலும் ஒரு நிதானமான அணுகுமுறை இருப்பது வழக்கமானது தான்!

எட்டு வழி சாலைக்கு சிறைக்குள்ளும் எதிர்ப்பு!

பசுமைசாலை திட்டத்தை எதிர்த்ததால் தான் சிறைபட்டிருக்கிறோம் என்பதை அறிந்த சிறைவாசிகள் (Prisoners) முதல், சீருடைவாசிகள் வரை தார்மீக ஆதரவை வெளிப்படையாக காட்டினர். விவசாய சமூகத்தைச் சார்ந்த எவரொருவரும் வேறு எப்படி நினைக்க முடியும் ? ஒன்றிரண்டு சிறை அதிகாரிகள் மட்டும், “இத்தகைய போராட்டங்கள் அதிகரித்தால் நக்சல்பாரி இயக்கம் வளர்ந்து விடும்” என அரசாங்கம் கருதுவதாக, அரசாங்க நிலைப்பட்டை தெரிவித்தனர்.

பத்தாயிரம் கோடி ரூபாய் விரைவு சாலையும் கதவுகள் இல்லாத சிறை கழிவறைகளும்

நான்கு நாட்கள் சிறையின் 8 மற்றும் 7 வது தொகுதிகளில் இருக்க நேர்ந்தது. நல்லது, கெட்டது என பலவற்றையும் பார்க்க, கேட்க நேரிட்டது. தமிழக அரசாங்கம் சிறைகளை எவ்வளவு மோசமாக கருதுகிறது, அணுகுகிறது என அறிந்து கொள்ள முடிகிறது.

நிதி ஒதுக்கீடும் பணியாட்கள் ஒதுக்கீடும் இல்லாத அவலநிலையில்…

இந்தியாவின் நவீன அதிவிரைவு சாலைகளில், சென்னை -சேலம் 8 வழி பசுமை விரைவு சாலை, இரண்டாம் இடத்தில் உள்ளது. NHAI தேசீய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் சாத்தியக் கூறு அறிக்கை / Feasibility Report அடிப்படையில், இந்த சாலைக்காக ரூ.10,000 கோடி முதல் ரூ.13,000 கோடி ரூபாய் வரை ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்திய சுற்றுச்சூழல் & வனத்துறை அமைச்சகம் MoEF & CC இதுவரையிலும் சுற்றுச்சூழல் ஒப்புதல் /EC வழங்கப்படாத திட்டத்திற்கு, குறிப்பான பரிசீலிக்க வேண்டிய நிபந்தனைகளில் (Specific Terms of Reference /Specific ToR) 1)சாத்தியமான வேறு வழிகளை alignment கண்டறிய சொல்லி இருக்கும் நிலையில், 2) செங்கம் – சேலம் இடையே கல்ராயன் வனப்பகுதி பாதிக்காத வகையில் மாற்று வழியை Realignment உருவாக்க சொல்லி இருக்கும் நிலையில்…

ஏராளமான பணத்தை கட்சிகாரர்கள், அதிகாரிகளிடம் வழங்கி, “விவசாயிகள் தங்கள் நிலத்தை/ சொத்துக்களை இத் திட்டத்திற்கு வழங்கி விட்டார்கள்” என்ற நிலையை உருவாக்க சாம, பேத,தான, தண்ட என அனைத்து வழிமுறைகளையும் எடப்பாடி பழனிசாமி அரசாங்கம் கையாள்கிறது.

ஆனால் … முதலமைச்சர் சிறை மேம்பாட்டுக்கு என எந்த நிதியையும் ஒதுக்கவில்லை.

1) சேலம் மத்திய சிறையில், பல கழிப்பறைகளில் கதவுகள் இல்லை.

2) கட்டியுள்ள 7 கழிப்பறைகள் முடிக்கப்படாமல் உள்ளன.

3) குடிநீர் உள்ளது ; ஆனால், பாதுகாக்கப்பட்ட குடிநீர் இல்லை.

4) காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவே இல்லை; 800 சிறைவாசிகளுக்கு சமைத்துப் போட, இரண்டு சமையல்காரர்கள் மட்டுமே உள்ளனர். (40 சிறைவாசிகளுக்கு ஒரு Cook என இருக்க வேண்டும்.). தினசரி 30 சிறைவாசிகள் சமையலறையில் சம்பளம் வாங்காமல் பணியாற்றி வருகின்றனர்.

5)தூய்மை பணிகளுக்கு என ஒரு பணியாளர் கூட இல்லை. எந்தவிதமான சுத்தப்படுத்தும் கருவிகளும் இல்லை. “சிறைவாசிகளே கூட்டுகிறார்கள்” என்பதில் குற்றம் காண என்ன இருக்கிறது என்ற அதிகார வர்க்கத்தின் குரலுக்கு அப்பால், #வெறுங்கால்களை பிரஸ் போல் பயன்படுத்தி, மணலை போட்டு கழிவறை பேசின்களை சுத்தம் செய்யும் அவலங்களை மனித உரிமை ஆணையமும், த.நா. சட்டமன்ற உறுப்பினர்களின் ஆய்வுக் குழுவும் வந்து பார்வை இட வேண்டும். Green Corridor பற்றி பேசும் முதல்வர் இவை பற்றியும் கவலைப்பட வேண்டும்.

6)நாடு முழுவதும் 8 மணிநேரம் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்சக் கூலி சட்டம் பொருந்தும். சுமார் 150 தண்டனை கைதிகளில், 100 பேர் வரை சிறை வளாகத்தில் உள்ள Factory யில் பணியாற்றி வருகின்றனர். அவர்களது 8 மணி நேர உழைப்புக்கு கூலி ரூ.18 மட்டுமே!

இளையோர் சீர்திருத்த பள்ளி :-

மிகப்பெரிய மனித உரிமை மீறல் 18 வயது முதல் 21 வயது வரையுள்ள இளைய குற்றவாளிகளை, மத்திய சிறையின் ஓரிடத்தில் அடைத்து வைத்திருப்பதாகும்.சங்ககிரி இளையோர் சீர்திருத்தப் பள்ளி கட்டிடம் இடிந்து விட்டது என்ற பெயரால் பல மாதங்களாக, 50 க்கும் மேற்பட்ட இளையோர் எவ்வித நடமாடும் சுதந்திரமும் இல்லாமல், ஒரு தளத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். HSC அதி பாதுகாப்பு செல் போல அவர்கள் கட்டுப்படுத்தப் பட்டுள்ளனர். காரணங்கள் எதுவாக இருப்பினும், இது தவறானது. அவர்கள் புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட வேண்டும்.

8 வழி சாலை பற்றி மட்டுமே கவலைப்படும் முதல்வர் இவை பற்றியும் அக்கறை கொள்ள வேண்டும்.

இன்னும் பல செய்திகள் உள்ளன. வேறொரு தருணத்தில் பார்ப்போம். சிறைவாசம் பெற்ற 44 பேர்களில் 10 க்கும் மேற்பட்டவர்கள் மூத்த குடிமக்கள் ஆவார். 80 வயது தாண்டிய தோழர்களும் இருந்தனர். அவர்களது உணர்வு, உறுதி மதிக்கத்தக்கதாகும்.

சிறைவாசம் பற்றி சிறிதளவும் கவலைப்படாத இடதுசாரி பட்டாளம், எண்ணிக்கையில் அதிகமான மக்களை திரட்ட உறுதி பூண்டது. நாங்கள் சிறையிலிருந்த போது, நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் “விடுதலை செய்” எனத் தோழர்கள் போராடிய செய்தியும், நான்காம் நாள் சிறைவாசலில் தந்த உற்சாகமான வரவேற்பும் கம்யூனிஸ்ட் போராட்டஉறுதியை உயர்த்தியது!

சந்திரமோகன், அரசியல் செயல்பாட்டாளர்.

கேரளா மாதிரி கல்விக் கடன் திட்டத்தை தமிழகத்திலும் அமலாக்க வேண்டும்: மாணவர் பெருமன்றம் கோரிக்கை

கேரளா மாதிரி கல்விக் கடன் திட்டத்தை தமிழகத்திலும் அமலாக்க வேண்டும் என மாணவர் பெருமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அவ்வமைப்பின் மாநில செயலாளர் எஸ். தினேஷ் விடுத்துள்ள அறிக்கையில்,

“கல்வியை அரசே வழங்க வேண்டும். ஆனால் இன்றைய சூழலில் அரசும் தனியாரும் சேர்ந்தே கல்வியில் பங்காற்றுகின்றனர். தனியார் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்க ஏழை எளிய மாணவர்களுக்கு வங்கிகள் கல்வி கடன் வழங்கி வருகின்றன. கல்வி கடன் பெறுவதில் பொறியியல் மாணவர்கள் தான் அதிகம். வேலைவாய்ப்புகளை அதிகளவில் அரசினால் உருவாக்க முடியாததால் பொறியியல் பட்டதாரிகள், தான் படித்த படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காமல், கிடைத்த வேலைக்கு மிக குறைந்த சம்பளத்திற்கு செல்லுவதால் கடனை திருப்பி செலுத்துவதில் சிரமம் ஏற்படுகிறது.

பாரத ஸ்டேட் வங்கி வழங்கிய கல்வி கடனில் வாராக்கடனாக உள்ளது ரூ.847 கோடி. இதனை வசூலிக்கிற வேலையை ஒப்பந்தடிப்படையில் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. மதுரையை சார்ந்த லெனின் என்னும் பொறியியல் மாணவன் தான் வாங்கிய கடனை திருப்தி செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டதால் ரிலையன்ஸ் நிறுவனத்தின் அடியாட்கள் லெனின் வீட்டிற்கே சென்று கடனை கட்டு இல்லையென்றால் உன் சான்றிதழ்களை தரமாட்டோம் என்று மிரட்டியதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.

கேரளத்தில் ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் அதனிடமிருந்த ரூ.130 கோடி வாராக்கடனை ரிலையன்ஸ் நிறுவனத்திடம் ரூ.63 கோடிக்கு விற்ற போது மிகப்பெரிய போராட்டம் வெடித்தது. பின்பு அரசு தலையிட்டதை அடுத்து திருவாங்கூர் வங்கி அதன் முடிவை திரும்பப் பெற்றது. ஆனால் தமிழக அரசு தற்போது வரை மாணவர்களின் துயரத்தை வேடிக்கை மட்டுமே பார்க்கிறது.

தற்போது கேரள அரசு மாணவர்களின் நலன் கருதி கல்வி கடன் திருப்பி செலுத்துவதில் புதிய திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதன்படி

மாணவர் வாங்கிய கடனில்

முதலாம் ஆண்டு அரசு 90%, மாணவர் 10%,
இரண்டாம் ஆண்டு அரசு 75%, மாணவர் 25%,
மூன்றாம் ஆண்டு அரசு 50%, மாணவர் 50%,
நான்காம் ஆண்டு அரசு 25%, மாணவர் 75% என்னும் விகிதத்தில் அரசும், மாணவரும் இணைந்து கடனை கட்டுவார்கள்.
இந்த கடன் தொகைக்கான வட்டியினை வங்கிகள் ரத்து செய்ய வேண்டும்.

மற்றொரு திட்டத்தின்படி

திரும்பச் செலுத்த முடியாத நிலுவையில் உள்ள கடன் தொகையில் 60 சதவீதத்தை அரசும், 40 சதவீதத்தை மாணவரும் செலுத்த வேண்டும். அதிகபட்சமாக ரூ.4 லட்சம் வரை கல்விக்கடன் பெற்ற மாணவர்களுக்கு மட்டுமே இந்த திட்டம் பொருந்தும்.
ரூ.4 லட்சத்துக்கு மேல் ரூ.9 லட்சம் வரை கடன் பெற்றவர்களுக்கு 50 சதவீத தொகையை அரசு செலுத்தும். மீதமுள்ளதை மாணவர்கள் செலுத்த வேண்டும். விபத்து உள்ளிட்ட காரணங்களால் மாணவர்கள் பாதிப்பு அடைந்தாலோ அவர்களுக்கான கல்விக்கடன் தொகை முழுவதும் ரத்து செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும். ரூ.6 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ள பெற்றோர்களின் குழந்தைகளுக்கு மட்டுமே இந்த விதிமுறை பொருந்தும் என கேரள அரசு அறிவித்துள்ளது.

இத்திட்டம் அனைவரிடத்திலும் வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்றிருக்கிறது. தமிழக அரசும் இதேபோல் புதிய கல்வி கடன் திட்டத்தை கொண்டுவந்து தமிழக மாணவர்களின் நலனை காக்க வேண்டுமென அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் வலியுறுத்துகிறது” என தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் தேவர் மகன் எடுத்த அகிரா குரோசோவா: பகுதி – 3

பா.ஜெயசீலன்

ஏழு சாமுராய் விமர்சனத்திற்கு போவதற்கு முன்பு சாமுராய்கள் பற்றி சென்ற கட்டுரையில் விடுபட்டுவிட்ட சில முக்கிய விஷயங்கள் முதலில். ஏற்கனவே சொன்னதை போல சாமுராய்கள் போர் செய்வதற்கு என்றே புணர்ந்து பிள்ளை ஈன்ற கூடியவர்கள். 4 வயதில் குழந்தைகளுக்கு தொடங்கும் அடிப்படை சண்டை பயிற்சி அந்த குழந்தைகளின் 14 வயதில் போர்க்களத்தில் அடிப்படை வேலைகளை (ஆயுதங்களை சுமந்து செல்லுதல் போன்றவை) செய்வதற்கு தயார்படுத்திவிடும். 16 வயதில் சாமுராய்களின் குழந்தைகள் போர்க்களத்திற்கு சண்டை செய்ய தயாராகிவிடுவார்கள். சாமுராய்களின் குழந்தைகள் பிறந்த நாள்தொட்டு சாமுராய்களின் கடுமையான சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வாழ பயிற்றுவிக்கப்படுவார்கள். சாமுராய்களின் நடத்தை/வாழ்வியல் முறைகள்(code of conduct) Bushido எனப்படுகிறது. சாமுராய் எதை செய்யலாம், எதை செய்யக்கூடாது என்று Bushido விதிகள் தெளிவாக சொல்கிறது. சொந்த சாதி திருமணம், Damiyo எஜமானருக்கு கேள்விகளற்ற விசுவாசம், எந்த சூழ்நிலையிலும் பின்வாங்குதலோ/சரணடைதலோ கூடாது, சதா 24/7 உயிரை விடுவதற்கு தயாராகிருக்கும் மனநிலையோடு இருத்தல் என்று அதிரி புதிரியான சட்டதிட்டங்களை கொண்டதுதான் Bushido. Bushidoவின் முக்கிய ஏழு வாழ்வியல் விதிகளாக நீதி(morality), துணிவு(courage), கனிவு(benevolence), மரியாதை(respect),நேர்மை(honesty), கெளரவம்(honor), விசுவாசம்(loyalty) போன்றவை இருக்கின்றன.

கீதாசாரத்தை கேட்டால் தோன்றுவதை போல் மேலோட்டமாக பார்த்தால் நல்ல கருத்தாதானே சொல்லியிருக்காங்க என்று தோன்றலாம். ஆனால் நீங்கள் கவனித்து பார்த்தால் தான் அதன் அயோக்கியத்தனம் தெரியும். உதாரணத்திற்கு நீதியையும், கனிவையையும் Bushido வலியுறுத்தும் அதே வேளையில்தான் சாமுராய்கள் தங்களுக்கு கீழிருக்கும் சாதியினரை நினைத்த நேரத்தில் கொல்லவும், பெண்களை வன்புணரவும் அனுமதிக்கப்பட்டவர்களாய் இருந்தார்கள். ஒருவகையில் Bushido விதிகள் சாமுராய்களை மூளை சலவை செய்து, சாமுராய்களை பற்றிய போலி கற்பிதங்களை/பெருமைகளை ஊட்டி, அவர்களை தாங்கள் அடியாளாகயிருக்கும் Damiyo எஜமானருக்காக எந்த நேரத்திலும் தங்களை பலியிட்டு கொள்ளும் இளிச்சவாய தியாக தீபங்களாக வளர்த்தெடுக்கும் நோக்கத்தை கொண்டிருந்தன. சாமுராய்களின் இந்த காட்டுத்தனமான மாட்டு மூளையால் பல்லாயிரக்கணக்கான சாமுராய்கள் தங்களது உயிரை தேவையில்லாத விஷயத்துக்கெல்லாம் விட்டார்கள் என்று வரலாறு சொல்கிறது. உதாரணத்திற்கு சாமுராய்களின் எஜமானர் தன்னிடம் வேலை பார்க்கும் 10 சாமுராய்களை கூட்டி, அந்த ஊருல 1000 பேரு வந்துட்டு இருகாங்க, போயிட்டு எல்லாத்தயும் கொன்னுட்டுவாங்க என்று சொன்னால், இந்த 10 சாமுராய்களும் ok ஜி..சிறப்பா பண்ணிரலாம் ஜி என்று குதிரை ஏறி கிளம்பி சென்று வெட்டுப்பட்டு செத்தார்கள். ஒரு சாமுராய்யை  திடீரென்று எதிரிகள் சுற்றிவளைத்து மாட்டிக்கொண்டால் மான் கராத்தே போடாமல்(Bushido படி பின்வாங்குதல் தப்பு என்பதால்) வயிற்றை அறுத்துக்கொண்டு செத்தார்கள்.

சாமுராய்கள் தங்களுக்கு தாங்களாகவே வயிற்றை அறுத்து கொண்டு மகிழ்ச்சியாக சாகும் சடங்கிற்கு பெயர் Sepukku. ஜப்பானிய படங்களை ரசித்து ருசித்து என்ஜாய் பண்ணி பார்த்து அதையே சில்பான்ஸ் பண்ணி தமிழில் எடுக்கும், உலகையே கருப்பு வெள்ளையாக மட்டுமே பார்ப்பேன் என்று அடம்பிடித்து 24/7 கருப்பு கண்ணாடி அணிந்திருக்கும் மிஷ்கினின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் மாறுவேட போட்டியில் சாமுராய் வேடம் போட்ட கோமாளிபோல இருக்கும் ஒரு கதாபாத்திரம் சம்மந்தம் இல்லாமல் Sepukku பண்ணி மட்டையாகும் காட்சி வருவதை நீங்கள் கவனித்திருக்கலாம். சாமுராய்களின் Bushido எந்தெந்த நேரங்களில் ஒரு சாமுராய் Sepukku செய்து கொள்ளவேண்டும் என்று அவர்களுக்கு சொல்லியிருக்கிறது. தோல்வி உறுதியாகும் பொழுது, எதிரியிடம் பிடிபடும் சூழல் வரும்பொழுது, சாமுராய் வேலைசெய்துவந்த எஜமானர் இறக்கும்/கொல்லப்படும்போது, சாமுராயின் எஜமானர் ஒரு சாமுராய்யை சாதி நீக்கம்/பணி நீக்கம் செய்யும்பொழுது போன்றான சூழ்நிலைகளின் போது  சாமுராய்கள் தங்களது கவுரவத்தை காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டு (நம் ஊரில் பிறரை கவுரவ கொலைகள் செய்யும் சைக்கோ மண்டையன்களுக்கு தங்களையே கொன்று கொள்ளும் சாமுராய்  மண்டையன்கள் எவ்ளோவோ பரவாயில்லை) Sepukku செய்துகொள்வார்கள். ஒரு சாமுராய் தனது எதிரியிடம் பிடிபட்ட பின்னரும் கூட தான் Sepukku செய்து கொள்ள விரும்புவதாய் சொன்னால் அவர்கள் அதை அனுமதிப்பார்கள். அதே போல தனக்கு தானே Sepukku செய்து கொள்ள முடியாத காயம்பட்ட நிலையில் ஒரு சாமுராயிருந்தால், அவர் பிறரின் உதவியோடு sepukku செய்து கொள்வார். ஜப்பானுக்கு வந்த ஐரோப்பியர்கள் இதையெல்லாம் பார்த்து,கேள்விப்பட்டு இந்த முட்டாள்தனங்களை பார்த்து டெரராகி போனார்கள். ஏதோ ஒரு ஐரோப்பியர் (போர்த்துகீசியர் என்று நினைக்கிறன்) இந்த சாமுராய் மண்டையன்களின் கோமாளித்தனங்களை பார்த்துவிட்டு இப்படி மரணத்திற்காக அலையும், மரணத்தை, மனித உயிரை  இவ்வளவு எளிமையாக எடுத்து கொள்ளும் இன்னொரு இனக்குழுவை உலகில் தான் வேறெங்கிலும் கேள்விப்பட்டதோ, பார்த்ததோ இல்லை என்று பதிவு செய்திருக்கிறார்.

சாமுராய்கள் மத்தியில் மிகவும் கீழானவர்களாக Ronin சாமுராய்கள் பார்க்க பட்டார்கள் என்று சொல்லியிருந்தேன். அதற்கு ஒரு முக்கிய காரணம் எஜமானர் அற்ற/இழந்த சாமுராய் Sepukku செய்து கொள்ளவேண்டும் என்பது bushido விதி. அப்படி செய்துகொண்டு அவர்கள் சாகாமல் இன்னமும் சுற்றி கொண்டிருக்கிறார்கள் என்பதே மற்ற சாமுராய்கள் Ronin சாமுராய்களை சாதி விலக்கு செய்ய முக்கிய காரணம். கடைசியாக Ronin சாமுராய்கள் பற்றி. ஒரு சாமுராய் தனது Bushido சட்டத்தை மீறி நடந்து விட்டால் அந்த சாமுராயின் எஜமானர் Daimyo அந்த சாமுராய்யை நிரந்தரமாகவோ/தற்காலிகமாகவோ விளக்கி வைத்துவிடுவார். கிட்டத்தட்ட நாட்டாமை ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பதை போன்றது. அது ஒரு சாமுராய்க்கு மிக பெரிய அவமானம். ஒரு Daimyo விலக்கிவிட்ட சாமுராய்யை வேறுயாரும் சேர்த்து கொள்ளமாட்டார்கள். இந்நிலையில் அந்த சாமுராய் Sepukku செய்து கொள்ளவேண்டியதுதான். சிலநேரங்களில் Daimyo விடம் முரண்பட்டு போடா மயிராண்டி என்று சொல்லிவிட்டு கிளம்பி சென்ற சாமுராய்களும் உண்டு. அவ்வாறு பிரிந்து சென்ற சாமுராய்கள் ஒரு படையை திரட்டி Daimyoகளை ஓடவிட்டு அடித்த நிகழ்வுகளும் ஜப்பானிய வரலாற்றில் உண்டு. பொதுவாக இப்படி சாதிநீக்கம் செய்யப்பட்டு Sepukku செய்து கொள்ளாமல் சுற்றி திரிந்த சாமுராய்களுக்கு தங்களது சாதி திமிரையும் விட முடியாமல், வேறு வேலைகளும் செய்ய தெரியாமல் கொள்ளையர்களாகவும், பணக்காரர்களின் காவல்காரர்களாவும், பணத்திற்கு வேலை செய்யும் அடி ஆள்களாகவும் வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இங்கு நாம் மனதில் கொள்ளவேண்டியது Ronin சாமுராய்கள், சாமுராய்களால் சாதி விலக்கு செய்யப்பட்டாலும், அவர்களுடைய சமூக அந்தஸ்து என்பது மற்ற சாதியினரைவிட மேலானதாகவே கருதப்பட்டது.

19ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஐரோப்பியர்கள் மற்றும் அமெரிக்கர்கள் தங்களது வியாபாரத்திற்கு ஜப்பானிய நிலவுடைமை முறை சிக்கலாகயிருப்பதை உணர்ந்து அதை முடிவுக்கு கொண்டுவர விரும்பினார்கள். அதற்கு ஏற்றத்தை போல ஜப்பானை கிட்டத்தட்ட 300 ஆண்டுகாலம் 16ஆம் நூற்றாண்டிலிருந்து 18ஆம் நூற்றாண்டுவரை இரும்புக்கரம் கொண்டு ஆண்ட Shogunகள் மேற்கத்தியர்களை உள்ளே விட்டால் தங்கள் கலாச்சாரம் கெட்டுவிடும் என்று கூறி தங்களை உலகிலிருந்து துண்டித்து கொண்டு பழமையில் முழுகினார்கள். போர்களற்ற ஒற்றை தலைமையிலான ஆட்சியில் ஜப்பானில் பல சமூக மாற்றங்கள் ஏற்பட்டது. அமைதியான சமூக சூழலில் தாழ்த்தப்பட்ட சாதியான வியாபாரிகள் செழித்தார்கள். அக்கினி சட்டியில் பிறந்தவர்கள் என்று கோமாளித்தனமாக பேசி திரிந்த சாமுராய்கள் சோற்றிற்கே வழியில்லாமல் தெருவில் திரிய வேண்டிய நிலைவந்தது. இந்நிலையில் அமெரிக்காவிலிருந்து 3 அதி நவீன ஆயுத கப்பலோடு வந்த Mathew Perry என்ற அமெரிக்க தளபதி ஜப்பானிய ராஜா உடனான அமைதி உடன்படிக்கையில், ஜப்பானில் இறக்குமதியாகும் பொருட்களுக்கு வரி வசூலிக்கும் அனுமதியைப் பெற்றார்.

அதோடு இன்னமும் வில், அம்பு, வேல் கம்பு, திருப்பாச்சி அருவா என்று எந்த நவீனமும், தொழிநுட்பமும் தெரியாமல் நம் ஊரின் ஆதிக்க சாதி கோமாளிகளை போல சுற்றி கொண்டிருந்த அக்கினி சட்டி சாமுராய்களை துப்பாக்கிகள், பீரங்கிகள் கொண்டு தூக்கிப்போட்டு மிதித்தார். 19ஆம் நூற்றாண்டிலும் சாமுராய்கள் அந்த சண்டைகளில் Sepukku செய்தார்கள் என்றால் அவர்கள் எந்த அளவுக்கு மங்கூஸ் மண்டயன்கள் என்பதை யூகித்துக்கொள்ளலாம். ஒருவழியாக சாமுராய் மண்டயன்களை அடக்கி ஒடுக்கி ஜப்பானை அரசியல் சாசன மன்னராட்சி(constitutional monarchy) முறையாக மாற்றி நிலவுடமை சமூக முறையையும், அதன் நிர்வாக முறையையும் முற்றிலுமாக தடைசெய்யப்பட்டது.

இதன் மூலம் பெரும் நன்மையடைந்த சாதி வியாபார சாதிகள். அடுத்த நன்மை அடைந்த சாதிகள் வேளாண்சாதிகள். இதன்மூலம் கிட்டத்தட்ட 1000 ஆண்டு காலம் தாங்கள் அனுபவித்து வந்த சமூக அந்தஸ்தையும், தங்களது அதிகாரத்தையும், ஆதிக்கத்தையும் சாமுராய் சாதிகள் இழந்தன. போர் வீரர்களாக இருந்த அவர்கள் ஜப்பானிய அதிகாரவர்க்கமாக, அதிகாரத்தோடு தொடர்புடையவர்களாக(bureaucrat)  மாறிப்போனார்கள். இந்த காலத்தில் அப்படி bureaucrat ஆக இருந்த சாமுராய்கள் நல்ல வசதியான வியாபார சாதியினரோடு திருமண உறவு வைத்துக்கொண்டார்கள். அந்த புள்ளியில் நம்மூரில் நாடார் சாதி எழுந்துவந்ததைப் போல வியாபார சாதியினரும் தங்களது சாதிய அந்தஸ்தை கூட்டிக்கொண்டவர்களாய் ஆனார்கள். இதுபோன்ற ஒரு கால பின்னணியில்தான் அகிராவின் சாமுராய் சாதி அப்பாவிற்கும், வியாபார சாதி அம்மாவிற்கும் நடந்த திருமணத்தை நாம் புரிந்து கொள்ளவேண்டும். என்னதான் சாமுராய்கள் ஜப்பானிய சமூகத்தில் அதிகாரவர்க்கமாக, ஆளும் வர்க்கத்தோடு தொடர்புடையவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு பாண்டவர் பூமி ராஜ்கிரணை போல தங்களது கடந்த காலத்தின் மீது ஏக்கமிருந்தது. நினைத்த நேரத்தில் கொல்லவும், நினைத்த நேரத்தில் வண்புணரவும் தங்களுக்கிருந்த அதிகாரத்தின் மீது ஏக்கம் இருக்கத்தானே செய்யும்?

இரண்டாம் உலகப்போரில் வாண்டடாக போய் தலையை குடுத்து( இரண்டாம் உலகப்போரில் பின்விளைவுகளை யோசிக்காமல் காட்டுத்தனமாக செயல்பட்ட ஜப்பானிய  அரசின், ராணுவத்தின் உயர்பதவிகளில் இருந்த சாமுராய்களின் ரோல் என்ன என்பது முக்கியத்துவம் பெறுகிறது..இதைப்பற்றி எனக்கு தெரியவில்லை..ஆனால் ஜப்பானின் காட்டுத்தனமான செயல்பாடுகளுக்கு பின்னால்  மாட்டு மூளை சாமுராய்கள் செயல்பட்டிருப்பார்கள் என்று எனக்கு தோன்றுகிறது) நாயடி பேயடி வாங்கி லச்சக்கணக்கான மக்களை காவுகொடுத்து ஜப்பான் திக்கி திணறி எழ முயன்று கொண்டிருக்க, உலக நாடுகள் அப்பா என்னா அடியா ஜப்பானுக்கு என்று பரிதாபப்பட்டு முடிக்காத காலத்தில் 1954ல் சாமுராய் அகிரா எழுதி, இயக்கிய seven samurai வருகிறது. seven samurai திரைப்படத்தின் கதை நடக்கும் காலம் 16ஆம் நூற்றாண்டு. முதல் சுற்று ஜப்பானிய நிலவுடைமை முறை முடிவுற்று ஜப்பானில் மிகப்பெரிய அதிகார போட்டி நடந்துகொண்டிருந்த காலம் அது. ஓவ்வொரு Damiyoகலும்  தங்களுக்குள் அடித்துக்கொண்டிருந்த காலம் அது. தொடர் சண்டைகளால் ஏரளமான Damiyoகள் கொல்லப்பட்டு அவர்களிடம் இருந்த சாமுராய்கள் Ronin சாமுராய்களாய் மாறி சுற்றிக்கொண்டிருந்த காலம் அது. அதில் பெரும்பான்மையினர் கொள்ளைக்காரர்களாய் மாறி விவசாயிகளையும், வியாபாரிகளையும் தெறிக்க விட்டுக்கொண்டிருந்த 16ஆம் நூற்றாண்டில் நடக்கும் செவன்  சாமுராய் கதையில் சாமுராய் அகிரா, சாமுராய்களின் அதுவும் Ronin சாமுராய்களின் Bushidoவை முன்வைத்து சாமுராய்கள் எவ்வளவு தங்கமானவர்கள், எவ்வளவு வீரமானவர்கள் என்று ஜப்பானியர்களுக்கு நினைவுபடுத்தி பாடம்/படம் எடுக்கிறார்.

சாமுராய்களை பற்றிச்சொல்லவே இந்த கட்டுரை சரியாய் போச்சு…விமர்சனம் அடுத்தக்கட்டுரையில்…

பா. ஜெயசீலன், சமூக-அரசியல் விமர்சகர். 

மக்கள் அதிகாரம் அமைப்பை பற்றி மீனவ சங்க பிரதிநிதிகள் புகார் மனு கொடுக்க போலீசின் அச்சுறுத்தலே காரணம்.

மக்கள் அதிகாரம் அமைப்பை பற்றி மீனவ சங்க பிரதிநிதிகள் புகார் மனு கொடுக்க போலீசின் அச்சுறுத்தலே காரணம் என மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளரும் வழக்கறிஞருமான சி. ராஜு விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“மீனவர்களின் மனுவை சாக்காக வைத்து மக்கள் அதிகாரம் அமைப்பை பற்றி தீவிரவாதி, பயங்கரவாதி, என பா.ஜ.க. அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனின் பேச்சு கண்டிக்க தக்கது. பாசிச இந்துத்வா கொள்கையை வைத்துக்கொண்டு மக்கள் அதிகாரம் அமைப்பை பற்றி தீவிரவாதம், பயங்கரவாதம் என பேசுவது, வேடிக்கையானது” எனவும் கண்டனம் தெரிவித்துள்ளார். மீனவ பிரதிநிதிகளின் மனுவை மேற்கோள் காட்டி விளக்கமளிக்கப்பட்டுள்ள அறிக்கையில்,

“காவல் துறையினரால் மீனவ மக்கள் தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர். மீனவ மக்கள் மீது வழக்குகள் பதிய தேடுதல் என்ற பெயரில் நெருக்கடிகள் கொடுத்து இதனால் அமைதியற்ற சூழலில் பய உணர்வுடன் வாழ்ந்து வருகிறோம்.
தற்போது அந்த 2 வழக்கறிஞர்களும் தங்களை காத்துக்கொள்வதற்காக உயர் நீதிமன்றத்தில் மீனவ அமைப்புகளே மே 22 போராட்டத்தை முன்னெடுத்து சென்றன என்றும், தங்களுக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் தவறான வாதங்களை முன்வைப்பதாக அறிகிறோம்.

‘‘தூத்துக்குடி வன்முறை சம்பவத்துக்கும் மீனவர்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. மக்கள் அதிகாரம் அமைப்பினர்தான் இளைஞர்களை மூளைச் சலவை செய்து, உணர்வுகளைத் தூண்டி மே 22 போராட்டத்தில் பங்கேற்க செய்தனர்’’ என மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரிடம் மீனவர் அமைப்பு நிர்வாகிகள் 29-6-2018 அன்று மனு அளித்தனர்“.
மொத்த மனுவின் சாரம் மேற்கண்ட சில வரிகள்தான்.

நூற்றுக்கணக்கான வழக்குகள் பதிவு செய்து, யாரை வேண்டுமானாலும் கைது செய்கிறது போலீசு. ஸ்டெர்லைட்டைவிட அதிக ஆபத்து போலீசின் இந்த அடக்குமுறைதான். ஒரு சில மீனவ சங்க நிர்வாகிகளை அச்சுறுத்தி மூளைச்சலவை செய்து, இரண்டு வழக்கறிஞர்கள் மீதும், மக்கள் அதிகார அமைப்பின் மீதும் அவதூறு பிரச்சாரத்தை போலீசு கட்டவிழ்த்துவிட்டுள்ளது. மே 22 போராட்டம் மீனவ அமைப்புகள் முன்னெடுத்தார்கள் என எந்த நீதிமன்றத்திலும் யாரும் சொல்லவில்லை. மீனவ சங்க பிரதிநிதிகள் கொடுத்த மனுவில் போலீசின் தற்போதைய அடக்குமுறையை கண்டித்து, துப்பாக்கிச்சூடு படுகொலையை கண்டித்து ஒரு வரிகூட கிடையாது. அவர்கள் சுதந்திரமாக இந்த புகாரை கொடுக்கவில்லை. இரு வழக்கறிஞர்களும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் அல்ல. போலீசு தனது பித்தலாட்ட நடவடிக்கையை நியாயபடுத்த அவ்வாறு இட்டுகட்டி பரப்பி வருகிறது.

போராடும் மக்களுக்கு உண்மையாக உதவியதற்காக இன்று வழக்கறிஞர்கள் வாஞ்சிநாதன் எண்ணற்ற வழக்குகளில் போலீசின் சித்ரவதையில் பாளையம் கோட்டை சிறையில் உள்ளார். எப்போது வெளியே வருவார் என தெரியாது. எதையும் செய்ய தயங்காத போலீசார் உயிரோடு விடுவார்களா என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. பல கோடிகள் புரளும் மதுரை பல்கலைகழக துணைவேந்தரை உச்சநீதிமன்றம் வரை சென்று பணி நீக்கம் செய்தவர் வாஞ்சிநாதன். வழக்கறிஞர் தொழிலில் பல லட்சங்கள் சம்பாதிக்கும் திறமை உடையவர்.

வழக்கறிஞர் அரிராகவன் தூத்துக்குடி நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக வழக்கறிஞராக தொழில் செய்து வருகிறார் நீிமன்றத்தில் அவரை பற்றி விசாரித்து பாருங்கள். மக்கள் அதிகாரம் அமைப்பின் கொள்கை செயல்பாடு பற்றி தமிழக மக்கள் அறிவார்கள். இந்நிலையில் போலீசார் சொல்வதை வேறு வழியில்லாமல் புகாராக கொடுத்த மீனவ பிரதிநிதிகளின் மனுவை அப்படியே அனைத்து பத்திரிக்கைகளும் உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு போல் வெளியிட்டதன் நோக்கம் நேர்மையற்றது.
மே 22 போராட்டம் தூத்துக்குடி மக்கள் நடத்திய மாபெரும் தன்னெழுச்சி போரட்டம். ஜல்லிகட்டுபோல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமைதியாக பெரும் மக்கள்திரள் அமர்ந்து விட்டால் என்ன செய்வது?. அதனால்தான் ஸ்டெர்லைட்டும். போலீசாரும் திட்டமிட்டு வன்முறை வெறியாட்டத்தை நடத்தி போராட்டத்தை முடித்து உள்ளனர். தமிழகத்தில் இனி யாரும் எதற்கும் போராடகூடாது என்பதன் அச்சுறுத்தல்தான் தூத்துக்குடி மாடல் துப்பாக்கிசூடு படுகொலை. அதன்பிறகான போலீசின் அடக்குமுறைகள்.

இந்த படுகொலை குற்றத்தை திசை திருப்ப யார்மீது பழிபோடுவது என பொறியில் அகபட்ட எலியாக தூத்துக்குடி போலீசு துடிக்கிறது. தென் மாவட்டங்களில் மக்கள் அதிகார தோழர்களை, ஏறத்தாழ அனைவரையும் மோசடியாக ஒப்புதல் வாக்குமூலத்தில் ஜோடித்து எழுதி வைத்துக்கொண்டு வீடுவீடாக வேட்டடையாடி வருகிறது. ஆறு தோழர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம். இரண்டு தோழர்கள் மீது 52 க்கும் மேற்பட்ட வழக்குகளில் கைது. 19 வயதுடைய இரண்டு மாணவர்கள் மீது என்.எஸ்.ஏ. சரவணன் என்ற கூலித்தொழிலாளி வலிப்பு நோயால் அவதி பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சரியான சிகிச்சையின்றி சித்ரவதையை அனுபவத்து வருகிறார். அவரை ஈவு இரக்கமின்றி தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைத்துள்ளார்கள்.

மக்கள் அதிகாரத் தோழர்கள் எந்த வன்முறை தீ வைப்பு சம்பவத்திலும் ஈடுபடவில்லை. எந்த ஆதாரத்தையும் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யோ, அல்லது பா.ஜ.க அமைச்சர் பொன்னாரோ காட்ட முடியாது. தூத்துக்குடி மக்களின் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போரட்டத்தை பா.ஜ.க. அதிமுக. தவிர தமிழகத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் அங்கு சென்று ஆதரித்தார்கள். எந்த பாகுபாடு, வேறுபாடுமின்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து போராடினார்கள். இதில் மூளைச்சலவை எங்கு வருகிறது. வெளியிலிருந்து தூண்டுவது எங்கு வருகிறது?. இதில் யார் சமூக விரோதிகள்?. ஸ்டெர்லைட்டை மூடி விட்டார்கள் என்ற ஆத்திரத்தின் வெளிப்பாடுதான் பா.ஜ.க பொன்னாருக்கு ஒருவிதமாகவும், ஜக்கி வாசுதேவ், பாபா ராம் தேவ் சாமியாருக்கு வேறுவிதமாகவும் வெளிப்படுகிறது.

பா.ஜ.க. அமைச்சர் “ பயங்கரவாதிகள் சமூக வலைதளங்கள், ஊடகங்கள் மூலமாக வலம் வருகின்றனா். அரசியல் கட்சிகளிலும் பயங்கரவாதிகள் நுழைந்து இருக்கிறார்கள். பயங்கரவாத அமைப்புகளை தடை செய்தால் வேறு பெயரில் செயல்படுவார்கள் அதனால் அவா்களை கரு அறுக்க வேண்டும். வேரோடு பிடுங்கி எறிய வேண்டும். என தூக்கத்தில் நடக்கும் வியாதிபோல் பிதற்றிவருகிறார்.

“மீத்தேன், கெயில், சேலம் விமான நிலைய விரிவாக்கம், எட்டுவழிச்சாலை, சாகர்மாலா, ஆகியவற்றால் பாதிக்கபட்ட மக்கள் போராடுகிறார்கள். அவர்களின் கோரிக்கைகளை நேரடியாக சென்று ஆதரிக்கவோ, எதிர்க்கவோ முடியாத இந்த பாசிச கோழைகள்தான், மக்களோடு மக்களாக நின்று போலீசின் அடக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் அமைப்புகளை பற்றி தீவிரவாதி, பயங்கரவாதி என பீதியூட்ட முயல்கிறார்கள்..

தூத்துக்குடி ஸ்டெர்லைட் சதி வழக்கை உயிர் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரிக்கட்டும். கொலைகார போலீசே கொலைக்கான காரணத்தை விசாரிக்கிறது. ஸ்டெர்லைட்டிடம் கோடிகணக்கில் பணம் பெற்ற பா.ஜ.க கட்சியை சார்ந்த அமைச்சர் தீவிரவாதம், பயங்கரவாதம் என போலீசை உசுப்பேற்றி விடுகிறார். இதன்மூலம் அனைத்து மக்கள் போராட்டங்களையும் போலீசு அடக்கி ஒடுக்க வேண்டும் என பிரச்சாரம் செய்கிறார்கள். பொது அமைதிக்கு, பொது ஒழுங்குக்கு எதிராக தொடர்ந்து பேசி வரும் இவர்களை தேசியபாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைத்தால்தான் தமிழகத்தில் அமைதி நிலவும். அதற்காக அனைவரும் போராட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் தொடரும் போலீசின் சித்திரவதை: மக்கள் அதிகாரம் குற்றச்சாட்டு

உயர்நீதிமன்ற உத்தரவை காலில் மிதித்துவிட்டு, தூத்துக்குடி மாவட்டப் போலீசு போராட்டக்காரர்களை  சித்திரவதை செய்வதாக மக்கள் அதிகாரம் அமைப்பு கடுமையாக குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து மக்கள் அதிகாரம் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்…

“கடந்த மாதம் இறுதியில் மக்கள் அதிகாரம் அமைப்பின் நெல்லை பகுதி ஒருங்கிணைப்பாளரும் நெல்லை மாவட்ட நீதிமன்ர வழக்கறிஞருமான தங்கபாண்டியன் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக போலீசு மக்களின் வீடுகளுக்கு இரவில் சென்று தேடுதல் வேட்டை செய்கிறது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்தார்.சம்மன் அனுப்பியே விசாரிக்க வேண்டும் சந்தேகப்படுவோரின் வீடுகளுக்கு சென்று தொந்தரவு செய்யக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு வழங்குகிறது. இந்த உத்தரவை போலீசு எப்படி மதிக்கிறது என்பதற்கு சில சம்பவங்கள்.

சம்பவம் :1

கடந்த வாரம் (தீர்ப்பு வழங்கி 20 நாட்கள் பின்னர்) கோவில் பட்டியைச்சேர்ந்த மாரிமுத்து என்ற மக்கள் அதிகாரம் உறுப்பினரின் வீட்டுக்கு இரவு இரண்டு மணிக்கு பத்துக்கும் மேற்பட்ட போலீசு திடீரென நுழைகிறது. உறங்கிக்கொண்டு இருந்த அவரின் அம்மாவைப்பார்த்து “ தூங்கறீயா, ஒழுங்க எந்திரி, தலையிலேயே பூட்ஸ்கால்ல மெதிச்சுடுவேன்” என்று மிரட்டுகிறார் ஒருபோலீசு. என்ன புள்ளய வளத்து வச்சுருக்க, தூத்துக்குடியில 13 பேரை கொன்னுருக்கான், இவனை பெத்ததுக்கு நீ சாவணும் என்று கண்டபடி கத்துகிறார். மற்ற போலீசு சேர்ந்து கொண்டு வசை பாடுகிறது. பள்ளியில் படிக்கும் அவரது தம்பியின் முகவரியை வாங்கிக்கொண்டு டேய் மாரி வரல உன்னை நாளைக்கு தூக்கிக்கிட்டு போயிடுவோம் என்று மிரட்டல் விடுக்கிறது. வீட்டில் உள்ள பொருட்களை கலைத்துப்போடுகிறது. தொடர்ந்து வந்து வீட்டில் மிரட்டிக்கொண்டே இருக்கிறது. எந்த கெட்டப்பழக்கமும் இல்லாமத்தான நான் எம் மவன வளர்த்தேன், அவனை கொலைகாரன்னு சொல்றாங்களே என்று கண்ணீர் விட்டுக்கொண்டு இருக்கிறார் அந்தத்தாய்.

சம்வம்: 2

தூத்துக்குடி இலுப்பையூரணி

ராமர் என்பவர் மக்கள் அதிகாரம் அமைப்பின் ஆதரவாளர். ராமரின் மனைவியும் அவரின் தம்பி மனைவியும் சிறு வயது குழந்தைகள் மட்டுமே இம்மாதம் 10ம் தேதி இரவு 3 மணி அனைவரும் உறங்கிக்கொண்டு இருக்கும் போது சுமார் 40 போலீசுக்காரர்கள். சுவரேறி குதிக்கிறார்கள். பெண்கள் உறங்கொக்கொண்டு இருக்கும் போது டார்ச் லைட் அடித்துப்பார்க்கிறார்கள். கதவுகளை ஓங்கி டமால் டமால் என்று அடிக்கிறார்கள். பதறி என்ழுந்த பெண்களை வெளியே வரச்சொல்லி வீடுகளுக்குள் சென்று துழாவுகிறார்கள். சுவரேறி குதித்து வந்த போலீசு வெளியே செல்வதற்கு கதவை திறந்து விடச்சொல்லியிருக்கிறது. எதுக்கு இந்த நேரத்துக்கு வந்தீங்க, பகல்ல தினமும் வரீங்க, பதில் சொல்றோமா இல்லையா , சுவரேறி குதிச்சு வரீங்கலே இதெல்லாம் சரியா இருக்கா என்று இரு பெண்களும் கேட்க, சரிம்மா இனிமேல் கேட்டை பூட்டாம வச்சிரு நாங்க வர வசதியாக இருக்கும் என்று தெனாவெட்டாக பேசியிருக்கிறது போலீசு. நாங்க எல்லாம் தெருவில படுத்துக்கிரோம் கேட்சாவி, வீட்டுசாவி எல்லாத்தையும் பூட்டாம வெக்கிறோம் என்று பதிலளித்து இருக்கிறார்கள். அடுத்த இரு நாட்கள் கழித்து மாறு வேடத்தில் வந்த போலீசு வண்டி வாடகை எடுத்துட்டு காசு தராம இருக்கான் உன் வீட்டுக்காரன், போனும் எடுக்க மாட்டேங்கிறான் என்று காலையில் சத்தம் போட்டு இருக்கிறது. பின்னர் குழந்தைகளை கூட்டிக்கொண்டு போய் தனியே விசாரிக்க ஆரம்பித்தவுடன், போலீசை கண்டறிந்த பெண்கள் கேள்விகேட்டவுடனேயே செல்கிறது. எப்போது போலீசு வீட்டுக்கு வருமோ என்ற பயத்தில் இரவெல்லாம் உறங்காமல் இருக்கிறார்கள் பெண்களும் குழந்தைகளும்.

இச்சம்பவம் நடந்த அடுத்த நாளில் ராமரின் வீட்டுக்கு 10 வீடு தள்ளி இருக்கும் ஜெபமாலை என்பவரை பிடித்துச்சென்று சித்தரவதை செய்கிறது அதனால் உடலெல்லாம் காயங்கள் ஏற்படுகின்றன. அவரை ரிமாண்ட் செய்கிறது.

சம்பவம் : 3

இடம் :ஒத்தகடை

இப்பகுதியில் உள்ள எவர்சில்வர் தொழிலாளரான சரவணன் என்பவரது வீட்டின் கதவை இரவு 3 மணிக்கு ஓங்கி பலமாக அடிக்கிறது போலீசு. சரவணனின் மனைவி யார்” என்று கேட்கிறார். போலீசு வந்திருக்கோம், கதவைத்திற என்கிறார்கள். “நைட் 3 மணிக்கு வந்தா கதவைத்திறக்க முடியாது, பகல்ல வாங்க” என்கிறார். ஒரு மணி நேரம் அந்த ஏரியாவையே அதகளப்படுத்திவிட்டு செல்கிறது போலீசு. தொடர்ந்து பக்கத்து வீட்டுல் சரவணனின் போட்டோவை காட்டி யார் தெரியுமா என்று பீதியூட்டிக்கொண்டு இருக்கிறது போலீசு.

சம்பவம் : 4

இடம்: திருமங்கலம்

பரமன் வயது 55 மக்கள் அதிகாரம் அமைப்பின் ஆதரவாளராக இருக்கிறார். இவரை கடந்த 15 நாட்களுக்கு முன் விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீசு ஒரு நாள் முழுக்க விசாரித்துவிட்டு தூத்துக்குடிக்கு செல்லவில்லை என்பதை தெரிந்து கொண்டு விடுவித்தது. இந்த நிலையில் 22.06.2018 அன்று காலை 9 மணிக்கு 7 தூத்துக்குடி போலீஸார் பரமனை வீட்டில் இருந்து கடத்திக்கொண்டு செல்கின்றனர். போலீசு வேனில் வைத்து பலமாக அடித்துள்ளனர். பின்னர் கண்ணில் துணியைக்கட்டி ஒரு காட்டில் இறக்கிவிட்டு துப்பாக்கியை கையால் தொட்டுப்பார்க்கச் சொல்லி அங்கேயும் அடித்துள்ளனர். ”டேய் அவுசாரி மவனே இந்தத் துப்பாக்கியிலதான் உன்னை சுடப்போறோம், எங்கடா குருசாமி” என்று தொரந்து அடித்துள்ளனர். இரவு வரை வண்டியில் தூக்கிக்கொண்டு சென்ற போலீசு பின்னர் ஒரு லாட்ஜில் வைத்து இரவு 9 வரை அடித்துள்ளனர். பிறகு திருமங்கலம் தாண்டி ஒரு காட்டில் இறக்கிவிட்டுவிட்டு சென்றுள்ளனர். கிளம்பும் போது “உன்னை பாவம்னு மன்னிச்சுட்டேன், குருசாமி போன் செஞ்சா இந்த நம்பருக்கு சொல்லு என்று” ராஜமாணிக்கம் என்ற எஸ்.ஐ சொல்லிவிட்டு சென்றுள்ளார். மகனோ ராணுவத்தில் உள்ள நிலையில் மாடு கன்றை பராமரிக்க வேண்டிய நிலையில் உள்ள அவரால் வீட்டை விட்டும் போக முடியாத நிலை. வீட்டில் இருந்தாலும் எப்போது வந்து போலீசு கடத்திக்கொண்டு செல்லும் என்ற நிலை.

இவ்வாறு அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகரும் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளருமான வழக்கறிஞர் வாஞ்சிநாதன்
நள்ளிரவில் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதுகுறித்து மக்கள் அதிகாரம் அமைப்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
“மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல வழக்கில், மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை பணி நீக்கம் செய்யப்படட்டு செல்லத்துரை தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அந்த வழக்கிற்காக மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வாஞ்சிநாதன் டெல்லி சென்றார். வழக்கை முடித்து விட்டு வரும் போது சென்னை விமான நிலையத்தில் 20-6-2018 அன்று இரவு 12 மணியளவில் மப்டியில் வந்த போலீசாரால் கைது செய்யப்பட்டு போலீசு வேனில் தூத்துக்குடி அழைத்து செல்லப்பட்டார்.
ஸ்டெர்லைட் பாதிப்பே பரவாயில்லை என நினைக்கும் அளவிற்கு தூத்துக்குடி மக்களுக்கு போலீசு தொல்லை, அச்சுறுத்தல் தொடர்கிறது. கிராம போராட்டக்குழுவினர் பலர் இன்றுவரை தலைமறைவாக உள்ளனர். கிராமங்களில் ஆண்கள், இளைஞர்கள் இல்லாமல் வெறிச்சோடி கிடக்கிறது. பெண்கள் இரவில் போலீசுக்கு பயந்து மாதா கோவிலில் தங்குகின்றனர்.  உயர்நீதி மன்றம் இப்படி சட்ட விரோத கைதுகளை செய்யக்கூடாது என உத்தரவிட்டும் அதை மதிக்காமல் தொடர்ந்து போலீசார் கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழுவிற்கு சட்ட உதவிகளை செய்ததற்காக பழிவாங்கும் நோக்கில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலர் வழக்கறிஞர் அரிராகவன் மீதும், மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீதும் இருபதுக்கும் மேற்பட்ட பொய்வழக்குகளை புனைந்துள்ளனர். இதை அம்பலப்படுத்தி இருவரும் சமீபத்தில் சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து விளக்கமளித்தனர்.
மக்கள் தங்கள் உரிமைகளுக்காக ஜனநாயக வழியில் போராடும் பொழுதெல்லாம், அவர்களுக்கு பாதுகாப்பு கேடயமாக மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் களத்திலும், சட்ட ரீதியாகவும் போராடியுள்ளது.  வாழ்வுரிமைகளுக்காக போராடும் மக்களுக்கு சட்ட உதவிகளையும் போராட்டத்திற்கு ஆதரவு தருவது குற்றமல்ல. அது வழக்கறிஞர்களின் கடமை. அதற்காக கைது, சிறை, பொய் வழக்கு என்றால் அதை அனைவரும் ஒன்று திரண்டு போராடி முறியடிக்க வேண்டும்.
நடப்பது போலீசு ஆட்சி, கிரிமினல்களின் ஆட்சி. சட்டம், நேர்மை, நியாயம், மக்கள் நலன் எதற்கு மதிப்பில்லை. போராட்டம் ஒன்றே தீர்வு. அதைதான் தூத்துக்குடி மக்கள் செய்தார்கள். தமிழக மக்களும் செய்வார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்கள் மீது அரசு ஏவும் ஒடுக்குமுறைக்கு மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டனம்

தூத்துக்குடி போராட்டத்தில் பங்கேற்றவர்கள் என ஒரு பெரிய பட்டியலை கையில் வைத்துக் கொண்டு காவல் துறை இரவு நேரங்களில் வீடு வீடாகப் புகுந்து விசாரணை என்ற பெயரில் அச்சுறுத்துவது, கேவலமாக ஏசுவது போன்ற செயல்கள் செய்தும் வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது.

மேலும் ஏற்கனவே கைதானவர்கள் மீது இருபது வழக்குகள்வரை பதிவு செய்யப்பட்டு, கடந்த இருதினங்களில் மேலும் 25 வழக்குகள் அவர்கள் மீதே போடப்பட்டுள்ளன. சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுள்ளதின் நோக்கம் கடுமையான அச்சத்தை போராடுபவர்கள் மனதில் உருவாக்கத்தான்.

தேசிய பாதுகாப்பு சட்டத்தின் மீது வழக்குகள் பதிவு செய்வது என்பது சட்டத்தினை தவறான வழியில் அரசு பயன் படுத்துவதாகும். மக்கள் அதிகாரம் போன்ற அமைப்புகளின் மீது ஏற்கனவே உள்ள பழியைத் தீர்ப்பது போலாகும். வீடீயோ பதிவுகளை வைத்து அதில் குரல் எழுப்பும் அனைவரையும் குற்றவாளிகளாக்கப் பார்க்கிறது காவல்துறை. ஊரில் உள்ள ஆண்கள் ஊரைவிட்டே செல்லக்கூடிய கடுமையான அடக்குமுறை பிரயோகிக்கப்படுவதை மக்கள் சிவில் உரிமைக் கழகம் வன்மையாகக் கண்டிகிறது.

நடந்த படுகொலைகளுக்காக அரசு தரப்பில் யாரும் கைது செய்யப்படவில்லை என்பதிலிருந்தே அரசு போராடிய அப்பகுதி மக்கள் மீது தங்கள் வன்மத்தை தீர்த்துக் கொள்ளமுயல்கிறது என்பது தெளிவாகிறது.

தூத்துக்குடி மட்டுமின்றி, சேலத்தில் பசுமைச்சாலை திட்டத்திற்கு எதிராக குரல் எழுப்பிய பியூஷ் மனுஷ் மற்றும் நடிகர் மன்சூர் அலிகான், வளர்மதி போன்றோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளதை மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டிக்கிறது. இம்மாதிரி மக்கள் நலன் குறித்த அக்கறையில் ஜனநாயக ரீதியாக குரல் எழுப்பும் சமூகச் செயல்பாட்டாளர்கள் அனைவரையும் அரசு அடக்க நினைப்பது ஜனநாயக விரோதச் செயலாகும். எனவே தூத்துக்குடியில் காவல்துறை கைது வேட்டை நடத்துவதையும், ஏற்கனவே கைதானவர்கள் மீது மேலும் மேலும் வழக்குகளை புனைவதையும் உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் பி.யு.சி.எல். கோருகிறது.

தூத்துக்குடியில் பதட்டம் குறைக்கப்பட்டு, அமைதியை உருவாக்குவதற்கு பதிலாக அரசே பதட்டநிலையை அதிகரிக்கச்செய்வது நியாயமல்ல.

தூத்துகுடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு மற்றும் சேலம் பசுமைவழி எதிர்ப்பு போராட்டத்தில் கைதான அனைவரையும் மக்கள் நலனையும், நாட்டில் பாதுகாக்கப்படவேண்டிய ஜனநாயகப் பண்பாட்டையும் கருத்தில் கொண்டு தமிழக அரசு விடுவிக்க வேண்டும் என பி.யு.சி.எல் கோருகிறது.

கண.குறிஞ்சி
மாநிலத்தலைவர்

இரா.முரளி மாநிலச்செயலர்

மக்கள் சிவில் உரிமைக் கழகம், தமிழ்நாடு.
( People’s Union for Civil Liberties — PUCL )

தூத்துக்குடியில் போராடிய மக்கள் அதிகாரம் அமைப்பினர் 30க்கும் மேற்பட்டோர் கைது!

தூத்துக்குடியில் ஸ்டெட்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் அதிகாரம் அமைப்பினர் 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடும் போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தோழர் ஜெயராமனது ஊர் ஆரியப்பட்டி. இந்த கிராமத்திற்கு அருகே உள்ள முண்டுவேலன்பட்டியில் தோழர் கோட்டை என்பவர் இரு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனார். தற்போது பள்ளியில் படித்திக் கொண்டிருக்கும் அவரது 15 வயது மகனை கைது செய்து உசிலம்பட்டி போலீஸ் நிலையத்தில் வைத்திருக்கிறது. கேட்டால் தடுப்புக் காவல் – கைது என்கிறது.

மதுரை நகரின் ஒத்தக்கடை அருகே உள்ள தாமிரப்பட்டியைச் சேர்ந்த தோழர் முருகேசன், தாயாம்பட்டியைச் சேர்ந்த தோழர் சதீஷ் ஆகிய மக்கள் அதிகாரம் உறுப்பினர்களை நேற்று நள்ளிரவு கைது செய்திருக்கிறது. இருவரும் அன்றாடம் கூலி வேலை செய்து பிழைக்கும் தோழர்கள். அவர்களை எங்கே வைத்திருக்கிறார்கள் என்ற விவரம் தெரியவில்லை.

தற்போது தென்மாவட்டங்களில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட தோழர்களின் எண்ணிக்கை முப்பதைத் தாண்டிவிட்டது. அறிவிக்கப்படாத அடக்குமுறையை கட்டவிழ்த்துக் கொண்டிருக்கும் தமிழக அரசின் ஒடுக்குமுறையை அனைவரும் கண்டிக்குமாறு கோருகிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகப்பில் மக்கள் அதிகாரம் அமைப்பு வெளியிட்டுள்ள போஸ்டர்.

பேரறிவாளனின் தாய் அற்புதமம்மாளின் கடிதம்!

பேரறிவாளனின் தாய் அற்புதமம்மாள் தமிழக முதலமைச்சருக்கு கடிதம்:

வணக்கம்.

ஜுன் 11 ஆம் தேதியோடு எனது புதல்வன் பேரறிவாளனை அரசு சிறையிலடைத்து
27 (இருபத்தேழாண்டுகள்) முடியப் போகிறது!
அவரோடுள்ள ஏனைய அறுவரும் அவ்வாறே!!

எங்கள் வாழ்நாளுக்குள்
எம் ஒரே புதல்வன் பேரறிவாளன் விடுதலையாகி
வருவாரா எனும் அச்சம் மிகுகிறது !

ஏன் கொலைக் குற்றம் சுமத்தினார்கள்.
ஏன் தண்டித்தார்கள்.
ஏன் 27 ஆண்டுகளாக சிறையில் அடைத்து வைத்துள்ளார்கள்
என்று புரியவில்லை?

ஒப்புதல் வாக்குமூலம் எழுதிய CBI அதிகாரி திரு.தியாகராசன் IPS.அவர்கள் தவறாக எழுதிவிட்டதாக உச்சநீதி மன்றத்திலேயே முறையிட்டும்…..

தீர்ப்பளித்த உச்சநீதி மன்ற தலைமை நீதியரசர் மேதகு தாமஸ் அவர்கள், தான் தவறான தீர்ப்பளித்துவிட்டதாக வருத்தம் தெரிவித்ததுடன் விடுதலை செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைத்து
ஊடகங்கள் வழியேவும் சோனியா அம்மையாருக்கு எழுதிய கடிதத்தின் வாயிலாகவும் கருத்தறிவித்த பின்னரும்….

அதை உச்ச நீதிமன்றமும் நடுவன் அரசும் கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனையளிக்கிறது.

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் அவர்கள்
விடுதலை செய்யும் தீர்மானத்தை அனைத்துக்கட்சிகளும் ஆமோதித்து சட்டப் பேரவையிலேயே நிறைவேற்றி நடுவன் அரசுக்கு அனுப்பியும்
நடுவனரசு பாரா முகமாக இருந்து வருகிறது!

தமிழக அனைத்துக் கட்சித் தலைவர்களும் விடுதலை செய்யக் குரல் கொடுத்தும்
கேளா காதினராக இருந்து வருகிறது நடுவனரசு.

சட்ட நீதிப்படியும் இத்தண்டனை
முரணானது!
அரசியல் நாகரீகத்தின் படியும்
ஞாயமற்றது
என்று மக்கள் உணர்ந்து கொண்டதால் பல்வேறு வடிவங்களில் ஆர்ப்பாட்டம் போராட்டங்களில் ஏழு தமிழர் விடுதலைக்கு முயற்சிக்கலாயினர்!

உச்சநீதி மன்றம் கடந்த 23.01.2018 அன்று நடுவன் அரசு எழுவர் விடுதலை குறித்தான மாநில அரசின் முடிவு குறித்து மூன்று திங்களுக்குள் முடிவு அறிவிக்க உத்தரவிட்ட பின்னரும் காலம் கடத்துகிறது நடுவன் அரசு!

அன்புக்குரியவர்களே!
தாங்கள் ஏழு தமிழர்களுக்காக மகத்தான பணியாற்றியதை நான் மட்டுமல்ல உலகே அறியும்.
அந்த உழைப்பும் முயற்சியும் விழலுக்கிறைத்த நீராக
வீண்தானோ என்றும்;
தமிழ்நாட்டு மக்களின் போராட்டங்கள் கொச்சைப்படுத்தப் பட்டு விடுமோ ! என்றும் எண்ணிச் சோர்வடையச் செய்கிறது!

எனக்கு வயது 71 என் துணைவருக்கு 77 !

நான் மகனை மீட்க முடியாமல் இருப்பதை எண்ணி அழுவதா;
எனக்குள்ள நோய்கள் தரும் வலியைக் தாங்க முடியாமல் அழுவதா;
என் முதுமையால் அலைந்து திரிய இயலாமையை எண்ணி அழுவதா;
இறுதிக் காலத்தில் நோய்களாலும் முதுமையாலும் அல்லல்படும் என் துணைவருக்கு உதவிடாது
அவரைப் பிரிந்து இருக்க வேண்டியதை எண்ணி அழுவதா;

என்னால் இயலவில்லை!
மீண்டும் உங்களை நாட வேண்டியுள்ளமைக்கு வருந்துகிறேன்.

பல்வேறு போராட்டங்கள் உங்களைச் சூழ்ந்து கொண்டுள்ளதை அறிவேன்.
ஒன்றின் மேல் ஒன்று வந்து முதலாவதை மறக்கடிக்கச் செய்யும் என்பதை அறிவேன்.

நாம் அவ்வாறு மறக்க வேண்டும் என்பதுதான் சூழ்ச்சியின் எதிர்பார்ப்பு.

எங்கள் கண்ணீரைத் துடைக்க உங்களைத் தவிர வேறு எவருள்ளார்!
விரைந்து தங்கள் கவனத்தை
எங்கள் பக்கமும் திருப்பிட வேண்டுகிறேன்.

விடுதலை செய்வித்து எங்களைக் காத்திட வேண்டுகிறேன்.
நன்றி.

மிகவும் எதிர்பார்ப்புடன்
தங்கள் அன்பின்
தி.அற்புதம்

கல்லூரிகளில் அரசியல் பின்னணி கொண்டோர் பேசத் தடை : சுற்றறிக்கையை திரும்பப் பெற தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் வலியுறுத்தல்

கல்லூரிகளில் அரசியல் பின்னணி கொண்டோர் பேச அழைக்கக்கூடாதென தமிழ்நாடு அரசின் கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதை திரும்பப் பெற தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்த அறிக்கையில்,

பல்கலைக்கழகம் ,கல்லூரிகளில் அரசியல் பின்னணி கொண்டவர்கள்களை பேச அழைக்கக் கூடாது என்று தமிழ்நாடு அரசின் கல்லூரிக் கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். இது கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் செயலாகும். கல்வி நிலையங்கள் ஜனநாயக உரிமைகளைக் காக்கும் தளங்கள். விடுதலைப் போராட்ட காலத்திலும் ,பின்னரும் இராஜாஜி, பெரியார், காமராஜர், அண்ணா போன்றோர் கல்லூரி ,பல்கலைக்கழகங்களின் நிகழ்வுகளில் பங்கேற்று மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டியுள்ளனர். சமகால அறிவினை இத்தகு அறிஞர்களின் கருத்துரைகளே வழங்கும்.எனவே தமிழ்நாடு அரசின் சுற்றறிக்கையினை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

மாற்று ஊடகத்துக்கு நன்கொடை தாருங்கள்!

சமூகத்தின் பட்டகம், (தி டைம்ஸ் தமிழ் டாட் காம்) தமிழின் மாற்று ஊடகமாக இயங்கி வருகிறது.  வெகுஜன ஊடகங்கள் பேசத் தயங்கும் விடயங்களைப் பேசுவதே எங்கள் நோக்கம். குறிப்பாக மொழி, இன, சாதி, மத, பாலின சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை, ஒடுக்குமுறைகளை ஆவணப்படுத்தி வருகிறோம். இதைப்போலவே பேச மறுக்கப்படும் அரசியலையும் பேச முனைகிறோம். நீங்கள் தரும்நன்கொடை எங்களை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தும்!

குறைந்தபட்சம் ரூ. 100 நன்கொடை அளிக்கலாம்.இந்த லிங்கை க்ளிக் செய்து பணம் செலுத்தலாம்..

பாஜக கோட்டையான உ.பி.யில் வெற்றிகண்ட முதல் முஸ்லிம் பெண் எம்.பி.!

சமீபத்தில் நடந்த நான்கு மக்களவை தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் பாஜக வென்றுள்ளது. பாஜக இழந்த இரண்டு தொகுதிகளிலில் முக்கியமானது உத்தரபிரதேச மாநிலத்தின் கைரானா தொகுதி. பாஜகவை வெற்றி கொண்டவர், ஒரு முஸ்லிம் பெண். முஸ்லிம்கள் கணிசமாக வாழும் உ.பி.யில் 2014 மக்களவை, 2017 சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக ஒரு முஸ்லிம் வேட்பாளரைக் கூட நிறுத்தவில்லை. இந்நிலையில் ராஷ்ட்ரிய லோக் தள் கட்சியின் சார்பில் கைரானா தொகுதியில் போட்டியிட்ட தபஸும் ஹசன் வெற்றி கண்டுள்ளது, மிகுந்த முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.

தபஸும் ஹசனுக்கு காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ்வாதி கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன. 43 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தபஸும் வெற்றி கண்டுள்ளார்.  ‘ஜின்னாவைவிட உணவு நமக்கு முக்கியம்’ என்பதை முழக்கமாக முன்வைத்து ராஷ்ட்ரிய லோக் தள் பிரச்சாரம் செய்தது.  உ.பி. முதல்வர் ஆதித்யநாத் மீதான மக்களின் கசப்புணர்வு இடைத்தேர்தல் வெற்றியில் பிரதிபலிப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். எதிர்க்கட்சிகள் இணைந்தால் மட்டுமே, மதவாத சக்திகளை அப்புறப்படுத்த முடியும் என்பதை உணர்வதாக எதிர்க்கட்சியினர் கருத்து தெரிவிக்கின்றனர்.

2014- ஆம் ஆண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்த பாஜக, இதுவரை நடந்த 27 இடைத்தேர்தல்களில் 5 இடங்களில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது. பாஜக கோட்டையான உ.பி.யில் தற்போது ஆண்டுகொண்டிருக்கும் முதல்வர், துணை முதல்வர்  வகித்த மக்களவை தொகுதிகளை இழந்தது குறிப்பிடத்தகுந்தது. பிளவுபடுத்தும் அரசியல் மூலம் கடந்த தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி கண்ட கைரானா தொகுதியை இழந்திருக்கிறது பாஜக. இந்தத் தொகுதி பாஜக எம்.பி. ஹகும் சிங் மறைந்ததை அடுத்து இங்கு தேர்தல் நடத்தப்பட்டது. ஹகும் சிங்கின் மகளான மிராங்கா சிங் பாஜக சார்பில் நிறுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

மாற்று ஊடகத்துக்கு நன்கொடை தாருங்கள்!

சமூகத்தின் பட்டகம், (தி டைம்ஸ் தமிழ் டாட் காம்) தமிழின் மாற்று ஊடகமாக இயங்கி வருகிறது.  வெகுஜன ஊடகங்கள் பேசத் தயங்கும் விடயங்களைப் பேசுவதே எங்கள் நோக்கம். குறிப்பாக மொழி, இன, சாதி, மத, பாலின சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை, ஒடுக்குமுறைகளை ஆவணப்படுத்தி வருகிறோம். இதைப்போலவே பேச மறுக்கப்படும் அரசியலையும் பேச முனைகிறோம். நீங்கள் தரும்நன்கொடை எங்களை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தும்!

குறைந்தபட்சம் ரூ. 100 நன்கொடை அளிக்கலாம்.இந்த லிங்கை க்ளிக் செய்து பணம் செலுத்தலாம்..

 

கவுரி லங்கேஷ் கொலை: குற்றப்பத்திரிக்கை தாக்கல்

பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொலைவழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக்குழு (எஸ்.ஐ.டி) குற்றம் சாட்டப்பட்டுள்ள நவீன்குமாருக்கு எதிராக 650 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

நவீன் மீது கொலை, குற்றவியல் சதித்திட்டம் மற்றும் ஆதாரங்களை அழிக்க முற்பட்டது உள்ளிட்ட பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் மற்றொரு கன்னட எழுத்தாளர் பகவானை கொல்ல சதித்திட்டம் தீட்டிய வழக்கில் தொடர்புடைய பிரவீனுக்கும் இந்த கொலையில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. மேலும் அதற்கு உடந்தையாக இருந்த அமோல்கால், அமித் தேகிவேக்கர் மற்றும் மனோகர் எடவ் ஆகியோரையும் விசாரிக்க எஸ்.ஐ.டி திட்டமிட்டுள்ளது. பிரவீனை காவலில் எடுத்து விசாரிக்க எஸ்.ஐ.டி.யின் துணை ஆணையர் அனுசெத் நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்

650 பக்க குற்றப்பத்திரிக்கையில் 130 சாட்சிகளைத் தவிர, நவீன் தனது நண்பரிடம் கௌரியின் கொலையை பெருமையாக பேசிய தொலைபேசி உரையாடலையும் ஆதாரமாக சமர்பித்துள்ளது. 2017-ல் இருந்து பல்வேறு கட்டங்களாக பல்வேறு குழுக்கள் இணைந்து திட்டம் தீட்டி கவுரியை கொலை செய்ததாக குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகளிரணி அணி பெண்களுக்கு ரஜினி அளித்த மனுஸ்மிருதி; இதுதான் ஆன்மீக அரசியலா?

கட்சி தொடங்க இருக்கும் நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர் மன்ற பிரதிநிதிகளை சந்தித்துவருகிறார். பெண் பிரதிநிதிகளை சமீபத்தில் சந்தித்த ரஜினி, அவர்களுக்கு மனுஸ்மிருதியை பரிசளித்தார். பெண்களை பாகுபாட்டுடன் சித்தரிக்கும் மனுஸ்மிருதியை பரிசளிப்பதுதான் ஆன்மீக அரசியலா என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Prabaharan Alagarsamy

பெண்கள் பாவயோனியில் இருந்து பிறந்தவர்கள் என்று சொல்கிற மனுதர்ம சாஸ்த்திரத்தை, தன் கட்சியின் மகளிரணியினருக்கு பரிசாக வழங்கியிருக்கிறார் ரஜினி.இதுதான் ஆன்மீக அரசியல்..

சிஸ்டம் கெட்டுப்போய்விட்டதாக சொல்கிற ரஜினி, அதை சரி செய்வதற்கு வைத்திருக்கும் கையேடு (manual) இந்த மனுநீதியைதான்…

கெட்டப்பய சார் இந்த ரஜினி…

கி. நடராசன்

ஆன்மீக அரசியல் என்றால் என்ன?-ரஜினி விடை மனுநீதி.. பெண்களை இழிவு படுத்தும் நூலை பெண்கள் அமைப்பு தலைவிக்கு பரிசளிக்கும் ரஜினி

இந்துக்கள்’ இழந்தனர். இந்துக்களின் நலன்கள் பாதிக்கப்பட்டன ஆகிய ஆர்.எஸ்.எஸ் புகார்களில் இந்துக்கள் என்பதன் அர்த்தம் இந்து ஆதிக்கச் சாதிகள்,அதிலும் ஆண்கள் என்பதே!

பெண்கள் பேச்சை நம்ப முடியாது. அதனால் நீதிமன்றங்களில் பெண்களின் சாட்சியம் செல்லாது- பார்ப்பனீய தர்மம் எனும் நாரத ஸ்மிருதி

கணவன் – மகன் அனுமதி இல்லாமல் பெண்கள் செய்யும் விற்பனை, வாங்குதல், கணக்கு, தானம் ஆகிய சொத்து லேவாதேவிகள் செல்லாது – மனுஸ்மிருதி

கணவன் இல்லாத நேரத்தில் மனைவி மகிழ்ச்சியாக பொழுது போக்க கூடாது. அலங்கரித்து கொள்ள கூடாது -விஷ்ணு ஸ்மிருதி

தான் உயர்ந்தவளென, தன் வீட்டார் உயர்வானவர்கள் என்று கருதி கணவன் பால் தனது கடமைகளை அலட்சியப்படுத்தும் பெண்கள் அனைவரையும் காணும் இடத்தில் உயிருடன் நாய்களை கடிக்கவிட்டு சாகடிக்க வேண்டுமென்று மனு ஸ்மிருதி கூறுகிறது. அவளுக்கு சாதாரணமரண தண்டனை போதாது.
தான் உயர்ந்தவள், தன் வீட்டார் உயர்ந்தவரென கணவன்பால் கடமையை அலட்சியப்படுத்தும் பெண்களை நாய்களை கடிக்கவிட்டு சாகடிக்க வேண்டும்- மனு

நிரபராதியை தண்டிப்பதும் குற்றவாளியை விட்டுவிடுவதலும் இரண்டும் சமமான பாவச்செயல்களே- பார்ப்பனீய தர்மம்

பெண்ணுக்கு சுதந்திரமாக வாழும் தகுதி இல்லை- மனுஸ்மிருதி மட்டுமல்ல பெளதாயன், யாக்ஜ்வல்கியன், வசிஷ்டன், விஷ்ணு, நாரதனும் அதே அதே

”பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸைக் காட்டிலும் இந்திய அமைப்புகள் பெரியவை”: ராகுல் காந்தி

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மை பெறாதநிலையில் அதிக இடங்களைப் பெற்ற எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் நம்பிக்கை வாக்கெடுப்பு அடுத்த நாளே நடைபெற்றது. கர்நாடக விதான் சபாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதத்தில் பேசிய எடியூரப்பா, பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

எதிர்க்கட்சிகள் ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றியாக இதை கொண்டாடினர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். பாஜக, ஆர்.எஸ். எஸ்ஸை கடுமையாக சாடினார் ராகுல் காந்தி.

அவர் பேசியதிலிருந்து…

“நீங்கள் கவனித்தீர்களா? கர்நாடக விதான் சபையிலிருந்து பாஜக சட்டமன்ற உறுப்பினர்களும் சபாநாயகரும் தேசிய கீதம் முழுவதும் இசைத்து முடிக்கும் முன்பே கிளம்பிவிட்டதை… அதிகாரத்தில் இருந்தால் எல்லா அமைப்புகளையும் அவர்கள் அவமதிப்பார்கள் என்பதையே இது காட்டுகிறது. பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸும் இந்த அவமரியாதையை செய்வார்கள் இதை எதிர்த்துதான் நாங்கள் போராடிக்கொண்டிருக்கிறோம். அதிகாரத்தில் இருக்கும் மமதையில் நீங்கள் யாரை வேண்டுமானாலும் அவமதிக்கலாம். பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்ஸும் இதை மீண்டும், மீண்டும், மீண்டும் செய்கின்றன..

ஜனநாயக விதிகளை தளர்த்தி முறையற்ற வழிகளில் அவர்கள் ஆட்சியைக் கைப்பற்ற முனைவார்கள்.  கர்நாடகத்தில் நடந்தது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் அன்றி வேறில்லை. அதை காங்கிரஸும் ம.ஜ.த.வும் வெற்றிகரமாக முறியடித்துள்ளன.

எம்.எல்.ஏக்களை வாங்க பிரதமரே நேரடியாக அங்கீகரிக்கிறார் என்பதை நேரடியாக பார்த்திருப்பீர்கள் என்பதை நான் இந்திய மக்களுக்கு , குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு சொல்ல விரும்புகிறேன். ஊழலுக்கு எதிராக போராடுவேன் என்பதெல்லாம் சுத்த பொய். அவரே ஊழல்மயமானவர்தான். நாட்டின் அமைப்புகளை சீர்குலைக்கும்படியாகவே அனைத்தையும் அவர் செய்கிறார். பாஜகவினர் எம்.எல்.ஏக்களை விலைபேசும் தொலைபேசி பேச்சுக்கள் உள்ளன. அவையெல்லாம் டெல்லி மேலிடத்தின் மேற்பார்வையில் நடந்தவை.

கர்நாடகா, கோவா, மணிப்பூரில் மக்கள் அளித்த தீர்ப்பை அவர்கள் அமதிப்பார்கள். அதிகாரமும் பணமும் அனைத்தையும் சாதித்துவிடாது என அவர்கள் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மக்களின் விருப்பமே அனைத்தையும் தீர்மானிக்கும்.

மோடியும் அமித் ஷா அனைத்து அமைப்புகளையும் அழித்து விடலாம் என நினைக்கிறார்கள். பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் 15 நாட்கள் அவகாசம் தருகிறார். இந்திய அமைப்புகள் பாஜகவால் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றன. பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸைக் காட்டிலும் இந்திய அமைப்புகள் பெரியவை.

மக்களைவிட பிரதமர் பெரியவரல்ல. இந்திய அமைப்புகளைவிட தான் பெரியவர் என நினைப்பதை பிரதமர் நிறுத்த வேண்டும்.  ஆர்.எஸ்.எஸ்ஸால் வாழ்க்கை முழுவதும் பயிற்சி தரப்பட்ட அவர் அப்படித்தான் நடந்துகொள்வார் என நான் சந்தேகிக்கிறேன்.

உங்கள் அகந்தைக்கு அளவு உண்டு. நீங்கள் இந்த நாட்டை எப்படி நடத்த விரும்புகிறீர்கள் என்பதற்கு ஒரு எல்லை உண்டு.  நாட்டின் அமைப்புகளை அவமதிக்க முடியாது என்பதை ஆர்.எஸ். எஸ். புரிந்துகொள்ளும் என நினைக்கிறேன்.  பிரதமரின் ஆட்சி, ஜனநாய முறையிலானது அல்ல, எதேச்சதிகாரமானது.  இது அனைவருக்கும் தெரியும். ஏன் பிரதமரும் அறிவார்.

ஆளுநருக்கு வேறு வழியில்லை. அவருக்கு அதிகாரம் இல்லை. அதிகாரம் பிரதமரிடத்திலும் ஆர்.எஸ்.எஸ்ஸிடமும் இருக்கிறது. அவர் ராஜினா செய்தால் நல்லது, ஆனால் அந்த இடத்துக்கு வரும் வேறு நபர் இதையேதான் செய்வார்.

ஊடகங்கள் உள்ளிட்ட அமைப்புகளின் மீதான பெரும் தாக்குதல், மக்கள் மீது நிகழ்த்தப்படும் நேரடி தாக்குதலாகும்!”

மாற்று ஊடகத்துக்கு நன்கொடை தாருங்கள்!

சமூகத்தின் பட்டகம், (தி டைம்ஸ் தமிழ் டாட் காம்) தமிழின் மாற்று ஊடகமாக இயங்கி வருகிறது.  வெகுஜன ஊடகங்கள் பேசத் தயங்கும் விடயங்களைப் பேசுவதே எங்கள் நோக்கம். குறிப்பாக மொழி, இன, சாதி, மத, பாலின சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை, ஒடுக்குமுறைகளை ஆவணப்படுத்தி வருகிறோம். இதைப்போலவே பேச மறுக்கப்படும் அரசியலையும் பேச முனைகிறோம். நீங்கள் தரும்நன்கொடை எங்களை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தும்!

குறைந்தபட்சம் ரூ. 100 நன்கொடை அளிக்கலாம்.இந்த லிங்கை க்ளிக் செய்து பணம் செலுத்தலாம்...

எம்.எல்.ஏக்களை விலைபோகாமல் ‘காப்பாற்றிய’ call recorder!

நரேந்திர மோடி – அமித் ஷா கூட்டணியின் சாணக்ய தனத்தை மெச்சிய பெரும்பாலான ஊடகங்கள், பெரும்பான்மை இல்லாதபோதும் பாஜக கர்நாடகத்தில் ஆட்சியமைக்கும் என நம்பினர்.  அவர்களுடைய ராஜதந்திரங்களுக்கு உதாரணமாக சமீபத்திய திரிபுரா வெற்றியை சொல்லலாம். வாக்கு வங்கியே இல்லாத பாஜக, காங்கிரஸ் கட்சித் தலைவர்களை விலைக்கு வாங்கி, இடது முன்னணி அரசை ஆட்சியிலிருந்து அகற்றியது. எனவே, இந்தக் கூட்டணி நினைத்தால் ‘எப்படியாவது’ ஆட்சியைப் பிடித்து விடலாம் என பலர் ‘நம்பிக்கை’ தெரிவித்தனர்.

ஆனால், தேர்தல் அரசியலில் காங்கிரஸ் சில சமயம் தூங்கிவிட்டாலும் மேகாலயா, கோவா, மணிப்பூரில் அதன் காரணமாக ஆட்சியை இழந்தாலும் கர்நாடகாவில் விழித்துக்கொண்டது.

தேர்தல் முடிவுகள் வெளியாகி, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வெற்றி பெற்ற சான்றிதழ்களை வாங்கிய பிறகு, அவர்கள் எல்லோரையும் பேருந்து மூலம் ஈகிள்டம் ரிசார்ட்டுக்கு அழைத்துப் போனது காங்கிரஸ் தலைமை.  எம்.எல்.ஏக்களை பாதுகாப்பதில் அனுபவமுள்ளவர்கள் என்றபோது, இந்த முறை செல்போனை பிடிங்கி வைக்கவில்லை. அனைத்து எம்.எல்.ஏக்களையும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த அன்று வரை போனில் தொடர்புகொள்ள முடிந்ததாக செய்தியாளர்கள் தெரிவிக்கிறார்கள். ஏன் இதைச் செய்தார்கள்?

அனைத்து எம்.எல்.ஏக்களையும் அட்டோமெடிக் கால் ரெக்கார்ட்டர் செயலியை செல்போனில் ஏற்றி செயல்படுத்துமாறு காங்கிரஸ் தலைமை பணித்துள்ளது. இதுதான் பாஜகவினரிடமிருந்து அணி மாறச் சொல்லி வரும் அழைப்புகளை பதிவு செய்திருக்கிறது.

ஜனார்த்தன ரெட்டி, எடியூரப்பாவின் மகன், எடியூரப்பா ஆகிய மூவர் காங்கிரஸ் எம்.எல். ஏக்களிடம் பேசிய ஆடியோவை இப்படித்தான் சேகரித்து தக்க சமயத்தில் வெளியிட்டு, பாஜக-வின் நகர்வுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது காங்கிரஸ்.

இந்த ஆடியோக்களை ஒன்றன் பின் ஒன்றாக ஊடகங்களில் வெளியிட்டதன் மூலமாக மக்களிடையே பாஜக குறித்த எதிர்மறை பிம்பத்தை ஏற்படுத்தவும் தங்களுடைய தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிக்கு நியாயம் சேர்க்கவும் இதை காங்கிரஸ் பயன்படுத்திக் கொண்டது.

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன் விதான் சபையில் பேசிய எடியூரப்பா, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சிலரிடம் பேச முயற்சித்ததாக ஒப்புக்கொண்டார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

மாற்று ஊடகத்துக்கு நன்கொடை தாருங்கள்!

சமூகத்தின் பட்டகம், (தி டைம்ஸ் தமிழ் டாட் காம்) தமிழின் மாற்று ஊடகமாக இயங்கி வருகிறது.  வெகுஜன ஊடகங்கள் பேசத் தயங்கும் விடயங்களைப் பேசுவதே எங்கள் நோக்கம். குறிப்பாக மொழி, இன, சாதி, மத, பாலின சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை, ஒடுக்குமுறைகளை ஆவணப்படுத்தி வருகிறோம். இதைப்போலவே பேச மறுக்கப்படும் அரசியலையும் பேச முனைகிறோம். நீங்கள் தரும்நன்கொடை எங்களை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தும்!

குறைந்தபட்சம் ரூ. 100 நன்கொடை அளிக்கலாம்.இந்த லிங்கை க்ளிக் செய்து பணம் செலுத்தலாம்..

 

வாய்பாயி பாணியில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் முன்பே ராஜினாமா செய்த எடியூரப்பா!

பெரும்பான்மை இல்லாதபோதும் பலத்த சர்ச்சைக்குகளுக்கு இடையே, கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்றார். காங்கிரஸ், மஜத தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க உரிமை கோரியபோதும் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார் ஆளுநர் வஜுபாய் வாலா. பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் முதலமைச்சராக இருந்தபோது அமைச்சராக இருந்தவர் வஜுபாய் வாலா. மேலும், வாலாவின் ஆர்.எஸ்.எஸ்.  பின்னணியும் பாஜகவுக்கு சாதகமாக நடந்துகொள்வதற்கான காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

இந்நிலையில் ஆளுநரின் அழைப்பை எதிர்த்து காங். – மஜத நள்ளிரவில் உச்சநீதிமன்றம் சென்றது. காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் மனு சங்வி ஆஜராகி தங்கள் தரப்புக்கு ஆதரவாக மூன்று மணி நேரம் வாதாடினார். ஆனாலும் எடியூரப்பாவின் பதவி ஏற்புக்கு நீதிமன்றம் தடைவிதிக்கவில்லை. வழக்கு ஒத்திவைக்கப்பட்டு, அடுத்த நாள் எடியூரப்பாவுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க வழங்கப்பட்ட 15 நாள் கெடுவை, ஒரே நாளில் நிரூபிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியது. இது ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்துவதாக நீதிமன்றம் போன கட்சிகள் தெரிவித்தன.

பெரும்பான்மை இல்லாத நிலையில், காங்கிரஸ்-மஜத எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க முயற்சித்தது பாஜக. பேர பேச்சுக்கள் அடங்கிய மூன்று ஆடியோக்கள் இந்தக் கூட்டணியால் வெளியிடப்பட்டன. ஒரு ஆடியோவில் முதலமைச்சர் எடியூரப்பாவே, அமைச்சர் பதவி தருவதாக பேரம் பேசியது வெளியானது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று காலை எம்.எல்.சிக்களாக பதவியேற்ற உறுப்பினர்கள் மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்றனர். நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் எடியூரப்பா, வாக்கெடுப்பு நடக்கும் முன்பே ராஜினாமா செய்வதாக அறிவித்துவிட்டு அவையை விட்டு வெளியேறினார்.

தேர்தல் பரப்புரையின் போது, மே 17-ஆம் தேதி முதலமைச்சராக பதவியேற்பேன் என அறிவித்த எடியூரப்பா, அதுபோலவே தன்கட்சி மத்தியில் ஆட்சியில் செல்வாக்கை பயன்படுத்தி அவசர அவசரமாக பதவியேற்றார். அதுபோலவே, 52 மணி நேர முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கிளம்பினார்.

1996-ஆம் ஆண்டு 13 நாட்களே பிரதமராக இருந்த வாஜ்பாய், பெரும்பான்மை கிடைக்காது என்கிற நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் முன்பே  பதவியை ராஜினாமா செய்தார். அதுபோல, எடியூரப்பாவும் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

மாற்று ஊடகத்துக்கு நன்கொடை தாருங்கள்!

சமூகத்தின் பட்டகம், (தி டைம்ஸ் தமிழ் டாட் காம்) தமிழின் மாற்று ஊடகமாக இயங்கி வருகிறது.  வெகுஜன ஊடகங்கள் பேசத் தயங்கும் விடயங்களைப் பேசுவதே எங்கள் நோக்கம். குறிப்பாக மொழி, இன, சாதி, மத, பாலின சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை, ஒடுக்குமுறைகளை ஆவணப்படுத்தி வருகிறோம். இதைப்போலவே பேச மறுக்கப்படும் அரசியலையும் பேச முனைகிறோம். நீங்கள் தரும்நன்கொடை எங்களை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தும்!

குறைந்தபட்சம் ரூ. 100 நன்கொடை அளிக்கலாம்.இந்த லிங்கை க்ளிக் செய்து பணம் செலுத்தலாம்..

“நீ இதுவரைக்கும் சம்பாதித்ததைவிட 100 மடங்கு சம்பாதிக்க முடியும்”: காங்.எம்.எல்.ஏவை விலைபேசிய ஜனார்த்தன ரெட்டி!

கர்நாடக தேர்தல் முடிந்து, பெரும்பான்மையில்லாதா நிலையில் அவசர அவசரமாக முதல்வர் பதவியேற்றார் பாஜக தலைவர் எடியூரப்பா. காங்கிரஸ், மஜத தேர்தல் பிந்தைய கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க உரிமை கோரிய போதும் ஆளுநர் வாலா, பாஜவுக்கு வாய்ப்பளித்தார். இது உச்சநீதிமன்றம் சென்ற நிலையில் நாளை சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க இருக்கிறது. எப்படியாவது எம்.எல்.ஏக்களை சேர்த்துவிட வேண்டும் என்கிற முனைப்பில் பாஜக உள்ளது.  கிரானைட் முறைகேட்டில் தொடர்புடைய ரெட்டி சகோதரர்களும் அவர்களின் கூட்டாளியான பாஜக பிரமுகர் ஸ்ரீராமுலுவும் எம்.எல்.ஏக்களை ‘பிடிக்கும்’ பணியில் அமர்த்தப்பட்டிருப்பதாக செய்திகள் சொல்கின்றன.

ரூ. 100 கோடி விலை பேசப்படுகிறது என மஜத தலைவர் குமாரசாமி குற்றம்சாட்டிய நிலையில், ஜனார்த்தன ரெட்டி காங்கிரஸ் எம்.எல்.ஏ பசன்கவுடா தத்தாலுடன் பேரம் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சி இந்த ஆடியோவை வெளியிட்டுள்ளது.

அதில், “உங்களுக்கு என்ன வேண்டும் சொல்லுங்கள், நமக்குள்ளே பேசிக்கொண்டு அடுத்த கட்டத்துக்குப் போகலாம்… ஆனால், இன்று நீங்கள் அமைச்சராக முடியும்.  பெரிய மனிதர்களுடன் தனியாக சந்தித்து பேச நான் உறுதி தருகிறேன். அவர்கள் சொன்னதை செய்வார்கள். அவர்கள் நாட்டை ஆள்கிறார்கள். நீ இதுவரைக்கும் சம்பாதித்ததைவிட 100 மடங்கு சம்பாதிக்க முடியும்” என அதில் பேசுகிறார் ஜனார்த்தன ரெட்டி.

ஆடியோ விவரங்கள்…

ஜனார்த்தன ரெட்டி: இது பசன்கவுடா? ஃப்ரீயா?

பசன்கவுடா: ஆமா நாந்தான்.

ஜ: நடந்தெல்லாம் மறந்துடுங்க, கெட்டதையெல்லாம் மறந்துடுங்க. நான் சொல்றேன்..என்னோட நல்ல நேரம் வந்துடுச்சி. அப்புறம், எங்களோட தேசிய தலைவர் (அமித் ஷா)கிட்ட மீட்டிங் அரேஜ் பண்ணித் தர்றேன். அவர்கிட்ட நீங்க நேரடியா, அடுத்த கட்டத்தைப் பத்தி பேசலாம்.

ப: இல்ல சார், எங்க போறதுன்னு தெரியாம இருந்த சமயத்துல அவங்கதான் என்னை எம்.எல்.ஏ. ஆக்கினாங்க.

ஜ: நான் உங்கிட்ட ஒரு விஷயத்தை சொல்றேன். நான் கட்சி ஆரம்பிச்சப்போ, நம்ம நேரம் சரியில்லை. நமக்கு நிறைய எதிர்ப்பு இருந்தது. எங்களை நம்பினதால உனக்கு நிறைய இழப்புன்னு எங்களுக்குத் தெரியும். ஆனால், ஒன்னு சொல்றேன், இப்போ 100 மடங்கு வளர முடியும். சிவன்னா கவுடா நாயக் என்னாலதான் அமைச்சர் ஆகியிருக்காரு. இப்போ அவரு பலமாகிட்டாரு, அவர அவரால பார்த்துக்க முடியும். இதெல்லாம் என்னாலதான் முடிஞ்சது. ராஜு கவுடாகூட என்னாலதான் பலன் அடைஞ்சிருக்காரு.

ப: ஆமா.

ஜ: உனக்கு அதிருஷ்டம் இல்லாததாலதான் நேரம் சரியில்லாம போச்சு. இன்னிக்கு சிவன்னாகவுடா ஜெயிச்சிருந்து பிரயோசனம் இல்லை. நீ அமைச்சர் ஆக முடியும். சொன்னது புரிஞ்சதா? நேரடியா அந்த பெரிய மனுஷரை மீட் பண்ண வைக்கிறேன். நான் அவர்கிட்ட பேசறேன்…நீ இதுவரைக்கும் சம்பாதித்ததைவிட 100 மடங்கு சம்பாதிக்க முடியும்.

ப: என்ன மன்னிச்சுடுங்க சார். வழிதெரியாம இருந்தப்போ அவங்கதான் எனக்கு டிக்கெட் கொடுத்தாங்க, ஜெயிக்க வெச்சாங்க. இந்தமாதிரி சூழ்நிலையில அவங்களுக்கு நான் துரோகம் பண்ண முடியாது. நான் உங்களை மதிக்கிறேன்…

19.05.2018 அன்று 8.25க்கு பதிவு மேம்படுத்தப்பட்டது.

மாற்று ஊடகத்துக்கு நன்கொடை தாருங்கள்!

சமூகத்தின் பட்டகம், (தி டைம்ஸ் தமிழ் டாட் காம்) தமிழின் மாற்று ஊடகமாக இயங்கி வருகிறது.  வெகுஜன ஊடகங்கள் பேசத் தயங்கும் விடயங்களைப் பேசுவதே எங்கள் நோக்கம். குறிப்பாக மொழி, இன, சாதி, மத, பாலின சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை, ஒடுக்குமுறைகளை ஆவணப்படுத்தி வருகிறோம். இதைப்போலவே பேச மறுக்கப்படும் அரசியலையும் பேச முனைகிறோம். நீங்கள் தரும்நன்கொடை எங்களை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தும்!

குறைந்தபட்சம் ரூ. 100 நன்கொடை அளிக்கலாம்.இந்த லிங்கை க்ளிக் செய்து பணம் செலுத்தலாம்..

 

16 எம்.எல்.ஏக்களை நீக்கியதற்காக உச்சநீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டவர் போபையா!

கர்நாடக முதல்வராக பதவியேற்றிருக்கு எடியூரப்பா தனது பெரும்பான்மையை நாளை 4 மணிக்கு சட்டமன்றத்தில் நிரூபிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

இதன் அடிப்படையில் கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா, தற்காலிக சபாநாயகராக கே.ஜி.போயையாவை நியமித்தார். யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் மூத்த சட்டமன்ற உறுப்பினரையே தேர்ந்தெடுப்பது வழக்கம். எட்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆர்.வி. தேஷ்பாண்டே இருக்கும்போது மூன்று முறை எம்.எல்.ஏவாக தேர்வான போபையாவை தேர்ந்தெடுத்தது மீண்டும் சர்ச்சையானது. காங்கிரஸ் கட்சி இந்த தேர்வை எதிர்த்து நீதிமன்றம் செல்ல இருப்பதாக செய்திகள் சொல்கின்றன.

போபையாவுக்கு ஏன் எதிர்ப்பு கிளம்புகிறது?

போபையா ஏற்கனவே கர்நாடக சட்டப்பேரவையாக பதவி வகித்தவர். 2010-ஆம் ஆண்டு நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எடியூரப்பா அரசுக்கு ஆதரவாக இவர் செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. அப்போது 11 பாஜக அதிருப்தி எம்.எல்.ஏக்கள், 5 சுயேட்சை எம்.எல்.ஏக்களை பதவி நீக்கினார் போபையா. உச்சநீதிமன்றம் சென்ற இந்த விவகாரத்தில் போபையா சார்புடன் நடந்துகொண்டதாக நீதிமன்றம் சொன்னது.

பாஜகவின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தில் உறுப்பினராக இருந்தவர் போபையா. ஆர்.எஸ். எஸ். அமைப்பிலும் நெருக்கமான தொடர்புடையவர். பாஜகவின் கொடகு பகுதி செயலாளர் ஆன பிறகு, 2004, 2008-ஆம் ஆண்டு மடிகேரி தொகுதிகளில் நின்று வெற்றி பெற்றவர். இந்த முறை விராஜ்பேட் தொகுதியில் வெற்றி கண்டுள்ளார்.

மாற்று ஊடகத்துக்கு நன்கொடை தாருங்கள்!

சமூகத்தின் பட்டகம், (தி டைம்ஸ் தமிழ் டாட் காம்) தமிழின் மாற்று ஊடகமாக இயங்கி வருகிறது.  வெகுஜன ஊடகங்கள் பேசத் தயங்கும் விடயங்களைப் பேசுவதே எங்கள் நோக்கம். குறிப்பாக மொழி, இன, சாதி, மத, பாலின சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை, ஒடுக்குமுறைகளை ஆவணப்படுத்தி வருகிறோம். இதைப்போலவே பேச மறுக்கப்படும் அரசியலையும் பேச முனைகிறோம். நீங்கள் தரும்நன்கொடை எங்களை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தும்!

குறைந்தபட்சம் ரூ. 100 நன்கொடை அளிக்கலாம்.இந்த லிங்கை க்ளிக் செய்து பணம் செலுத்தலாம்..

இன்று ஜனநாயகத்தின் கறுப்பு நாள்: கேரளா முதல்வா் பினராயி விஜயன்

கர்நாடக ஆளுநா் வஜுபாய் வாலாவின் செயல்பாட்டுக்கு எதிா்ப்பு தொிவித்துள்ள கேரளா முதல்வா் பினராயி விஜயன் இன்று ஜனநாயகத்தின் கறுப்பு நாள் என்று கருத்து தொிவித்துள்ளாா்.

தனது ட்விட்டா் பக்கத்தில், “இன்று கா்நாடகாவின் துயரமான நாள். இந்திய ஜனநாயகத்தின் கறுப்பு நாள். கர்நாடகம் மற்றும் இந்திய ஜனநாயகத்திற்கு ஒரு சோகமான நாள். கர்நாடகா கவர்னர் பிஜேபிக்கு அழைப்பு விடுக்கும் முடிவை நீதித்துறை மறு ஆய்வு செய்ய வேண்டும். இது போன்ற செயல்பாடுகள் ஆளுநர் என்ற பதவியின் மாண்பை குறைத்து விடும். ஆளுநரின் இச்செயல் குதிரை பேரத்திற்கு வழிவகை செய்யும்” என்று கருத்து தொிவித்துள்ளாா்.