தமிழில் எம். ஏ. படித்து வேலை பெற இதோ சில வழிகள்!

நியாண்டர் செல்வன் "என் இனிய தமிழ் சான்றோர்களே ! நம் மன்றத்தில் எத்துனையோ தமிழறிஞர்கள் உள்ளனர் . எனவே என் ஐயத்தை நீக்க வேண்டுகிறேன் . நான் இளங்களை தமிழ் முதலாமாண்டு பயிலும் சராசரியான, இலக்கியத்தில் சற்று ஈடுபாடுள்ள மாணவன் . என் எதிர்காலத்தில் என் தேவைகளை பூர்த்திக்க இத்துறை எனக்குதவும். எனக்கு என்னென்ன வாய்ப்புகள் இருக்கிறது . அதற்கு நான் இன்றிலிருந்து செய்யவேண்டியதென்ன ? இலக்கிய உலகில் நான் என்ன எவ்வாறு மேம்படுத்திக்கொள்வது ? கூறுங்கள்" … Continue reading தமிழில் எம். ஏ. படித்து வேலை பெற இதோ சில வழிகள்!

ரிலையன்ஸ் உருவாக்கும் இராணுவம்: இந்திய இராணுவத்தில் பணியாற்றிய 16 ஆயிரம் வீரர்கள் தேர்வு!

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னய்யா குமார் கைது விவகாரம், சத்தீஸ்கரில் போராளிகள், பத்திரிகையாளர் மீது தாக்குதல், ஜாட் சமூகத்தினரின் போராட்டம் என ஊடகங்கள் பரப்பரக்காக இயங்கிக் கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் ஒரு முக்கியமான செய்தியை ஊடகங்கள் ‘கண்டுகொள்ளாமல்’ இருக்கின்றன. கண்டுகொள்ளவில்லை என்பதைவிட, அது தம் எஜமானர் விஷயத்தில் தலையிடுவது போன்றதாகிவிடும் என்கிற பயமும் காரணமாக இருக்கலாம். இந்தியாவின் பெரிய ஊடக குழுமங்களில் ஒன்றான நெட்வொர்க் 18 குழுமத்தின் முதலீட்டாளர் முகேஷ் அம்பானி குறித்து செய்திகள் வெளியிடுவதில் கலக்கம் … Continue reading ரிலையன்ஸ் உருவாக்கும் இராணுவம்: இந்திய இராணுவத்தில் பணியாற்றிய 16 ஆயிரம் வீரர்கள் தேர்வு!

டைம்ஸ் நவ் ஒளிபரப்பிய ஜோடிக்கப்பட்ட வீடியோ பித்தலாட்டம்: சித்தார்த் வரதராஜன்

 கன்னையா குமாரின் Morphed விடியோவை,ஒளிபரப்பி,செய்தியாளர்களின் நம்பகத்தன்மையைக் குலைத்ததுடன்  மட்டுமல்லாமல், கன்னையா என்ற இளைஞனை, வெறி பிடித்த நாய்களின் முன் தேச விரோதியாக சித்தரித்ததாக டைம்ஸ் நவ் உள்ளிட்ட ஆங்கில தொலைக்காட்சிகள் மீது குற்றம்சாட்டி "தி வயரில்" கட்டுரை எழுதி இருந்தார் மூத்த பத்திரிக்கையாளர் சித்தார்த் வரதராஜன். அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த டைம்ஸ் நவ், சித்தார்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் செய்தி வெளியிட்டது. இதற்க்கு சித்தார்த் எழுதியுள்ள காட்டமான பதிலின் தமிழாக்கம் கீழே:   டைம்ஸ் … Continue reading டைம்ஸ் நவ் ஒளிபரப்பிய ஜோடிக்கப்பட்ட வீடியோ பித்தலாட்டம்: சித்தார்த் வரதராஜன்

காலங்களை கடந்த காதல்: ராணுவ வீரர்களால் பலாத்காரம் செய்யப்பட்ட நாகாலாந்து பெண்ணின் இறுதி கடிதம்!

ரோஸ். நாகாலாந்தின் பழங்குடியின குழுக்களில் ஒன்றான டேங்கூ (Tangkhul ) இனத்தை சேர்ந்த இளம் பெண். ராணுவம் ஆக்கிரமித்திருக்கும் அத்தனை பகுதிகளிலும் பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறைக்கு,  ரோஸ்ம் ஆளாக நேர்ந்தது.  1974-ம் ஆண்டு மார்ச் மாதம் 4-ம் தேதி, நாகாலாந்தை பாதுகாத்த இந்திய ராணுவ எல்லை பாதுகாப்பு படையின் அதிகாரிகள், ரோஸ் என்கிற அந்த இளம் பெண்ணை மணிக்கணக்கில் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தினர்.  சொந்த நாட்டு ராணுவத்தாலேயே பலாத்காரம் செய்யப்பட்டார் ரோஸ். அதே மாதம் 6-ம் தேதி தற்கொலை … Continue reading காலங்களை கடந்த காதல்: ராணுவ வீரர்களால் பலாத்காரம் செய்யப்பட்ட நாகாலாந்து பெண்ணின் இறுதி கடிதம்!

யார் இந்த டேவிட் ஹெட்லி?

மும்பையில், கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர்26-ஆம் தேதி பயங்கரவாதிகள் 10 பேர் நடத்திய தாக்குதலில் 166 பேர் பலியாகினர். 309 பேர் படு காயம் அடைந்தனர். இந்தத்தாக்குதலில் லஸ்கர்-இ - தொய்பா பயங்கரவாதி டேவிட் ஹெட்லிக்கும் தொடர்பு இருப்பதை போலீசார் கண்டறிந்தனர். டேவிட் ஹெட்லி பாகிஸ்தானிய தந்தைக்கும் அமெரிக்க தாய்க்கும் பிறந்தவர். 2002 முதல் 2005 வரை பாகிஸ்தானுக்கு தீவிரவாத பயிற்சிகளுக்குச் சென்று வந்தார் ஹெட்லி. அமெரிக்காவின் போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் உளவாளியாக இருந்த ஹெட்லி, … Continue reading யார் இந்த டேவிட் ஹெட்லி?

லீவிஸ் எம். சிமோன்ஸ்:இரவு விருந்தில் இந்திரா காந்தியை, சஞ்சய் காந்தி அறைந்த கதை என்ன?

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை, அவரது மகன் சஞ்சய் காந்தி 6 முறை அறைந்த தகவல் தனக்கு எப்படி  கிடைத்தது, அதைப்பற்றிய தன்னுடைய கட்டுரை வெளியான பின் , ராஜீவ்காந்தி, சோனியா காந்தியுடனான சந்திப்பு எப்படி இருந்தது என்றெல்லாம் நினைவு கூறுகிறார் புலிட்சர் விருது பெற்ற வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை நிருபர் லீவிஸ் எம். சிமோன்ஸ். முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி 1975ம் ஆண்டு அவசரநிலையை பிரகடனப் படுத்திய காலகட்டத்தில் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் டெல்லி நிருபராக பணியாற்றியவர் … Continue reading லீவிஸ் எம். சிமோன்ஸ்:இரவு விருந்தில் இந்திரா காந்தியை, சஞ்சய் காந்தி அறைந்த கதை என்ன?

கட்டணம் மட்டும்தான் கல்வி துறையில் உள்ள பிரச்சினையா? பள்ளிகள் சாதியை வளர்க்கும் கூடங்களாக மாறுவதையும் கவனத்தில் கொள்வோம்!

அன்புள்ள தோழர் நியாஸ் அவர்களுக்கு! தங்களின் சமீபத்திய விகடன் கட்டுரை “மக்களே... எல்.கே.ஜி., என்ஜினீயரிங் எது காஸ்ட்லி? - இதுவும் நடக்கும் தமிழகத்தில்!” படித்தேன். உண்மைகளை பேசும் ஒரு சில ஊடகவியலாளர்களில், அதுவும் குறிப்பாக கல்வி குறித்து யாரும் பேசத் தயங்கும் பகுதிகளை கூட எவ்வித சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல் எழுதுபவர்களில், நான் பார்த்து வியந்தவர்களில் நீங்களும் ஒருவர். அதுவும் 2014 ஆம் ஆண்டு தர்மபுரியில் தொடர்ச்சியாக மூன்று பள்ளிக்கூட மாணவிகள் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தை எவ்வித … Continue reading கட்டணம் மட்டும்தான் கல்வி துறையில் உள்ள பிரச்சினையா? பள்ளிகள் சாதியை வளர்க்கும் கூடங்களாக மாறுவதையும் கவனத்தில் கொள்வோம்!

பாரபட்சத்தினால் இழந்த நம்பிக்கை: ரோஹித் வெமுலாவிற்கு அஞ்சலி செலுத்திய கார்ல் சாகனின் மனைவி!

நட்சத்திரங்களுக்கு போக விரும்பிய காலத்தில், கார்ல் சாகனை போல ஒரு அறிவியல் எழுத்தாளராக விரும்பினேன் என்று  ரோஹித் வெமுலா எழுதிய கடிதம் யாராலும் மறந்திருக்க முடியாது.  ரோஹித்தின் இறுதியும், முதலுமான அந்த கடிதத்தை கார்ல் சாகனின் மனைவியும், கார்ல் சாகனின் எழுத்துக்களில், ஆராய்ச்சிகளில் துணை நின்றவருமான ஆன் துருயனுக்கு (Ann Druyan),  Mediaone TV-யின் ராஜீவ் ராமச்சந்திரன் அனுப்பி வைத்துருக்கிறார். அதற்கு ஆன் துருயன் அனுப்பியுள்ள பதிலை தமிழில் மொழி பெயர்த்து கீழே வழங்கி இருக்கிறோம். அன்புள்ள … Continue reading பாரபட்சத்தினால் இழந்த நம்பிக்கை: ரோஹித் வெமுலாவிற்கு அஞ்சலி செலுத்திய கார்ல் சாகனின் மனைவி!

சாதி கலவரத்துக்கு தயாராகும் தென்மாவட்டங்கள்: மாணவர்களை சாதிமையப்படுத்தும் ‘ஆபரேஷன் 100’

சரவணன் சந்திரன் கடந்த அக்டோபர் மாதம் விடுமுறைக்காக தென்மாவட்டத்திலுள்ள சொந்த ஊருக்குச் சென்றிருந்த போது, நீண்ட வருடங்கள் கழித்து பள்ளியில் உடன் படித்த நண்பன் ஒருவனைச் சந்தித்தேன். நண்பனுக்கு வலதுகையில் முழங்கைக்கு கீழே துண்டிக்கப் பட்டிருக்கும். உள்ளூர் தீப்பெட்டி அலுவலகம் ஒன்றில் கடைநிலை ஊழியனாகப் பணிபுரியும் அவனை வறுமை வாட்டியெடுப்பதை அவனது தோற்றத்தைப் பார்த்த எல்லோரும் சொல்லி விடுவார்கள். அப்போது சாரை சாரையாக பல வாகனங்கள் நாங்கள் பேசிக் கொண்டிருந்த பகுதியைக் கடந்தன. அந்த வாகனத்தில் குறிப்பிட்ட … Continue reading சாதி கலவரத்துக்கு தயாராகும் தென்மாவட்டங்கள்: மாணவர்களை சாதிமையப்படுத்தும் ‘ஆபரேஷன் 100’

இராணுவப் பணி: தேச பக்தியா, வயிற்றுப்பாடா?

சரவணன் சந்திரன்  டிஸ்கவரி சேனலில் ‘சியாச்சின்’ எல்லைப் பகுதியில் உள்ள இராணுவ வீரர்கள் குறித்த ஆவணப்படம் ஒளிபரப்பானது. அது பழைய நியாபகங்களையும் பல விஷயங்களையும் கிளறியது. ஒருமுறை இரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த போது, விடுமுறை முடிந்து முகாமிற்குத் திரும்பிக் கொண்டிருந்த வாடிப்பட்டியைச் சேர்ந்த இராணுவ வீரர் ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. ஆரம்பத்தில் இறுக்கமாக உடன் வந்தவர் பின்னர் மெல்லப் பேச ஆரம்பித்தார். அவர் சியாச்சின் குறித்து சில அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். சுற்றிலும் பனிமூடிய சிகரங்களில் … Continue reading இராணுவப் பணி: தேச பக்தியா, வயிற்றுப்பாடா?

ரோஹித் வெமுலா முற்றுப்பெறாத ஓவியம்: பிறப்பு முதல் மரணம் வரை ரோஹித் வாழ்க்கையை விட்டு துரத்தப்பட்டதன் ஆவணம்

சுதிப்டோ மோண்டல் தமிழில்: கவின் மலர் குண்டூரில், 1971 ஆம் ஆண்டு கோடைகாலத்தில் ரோஹித் வெமுலா பிறப்பதற்கு 18 ஆண்டுகளுக்கு முன் அவர் வாழ்க்கையின் பின்னணிக்கதை தொடங்குகிறது. அந்த ஆண்டுதான் ரோஹித்தின் வளர்ப்புப் ‘பாட்டி’ அஞ்சனி தேவியின் சில செயல்களால், அந்த அறிஞன் பின்னாளில் தன் தற்கொலைக் குறிப்பில் ”மரணத்தையொத்த விபத்து என் பிறப்பு’ என்று எழுதும்படி நேர்ந்தது. ”அது ஒரு மதிய உணவு நேரம். நல்ல வெயில். பிரஷாந்த் நகரில் உள்ள எங்கள் வீட்டிற்கு வெளியே … Continue reading ரோஹித் வெமுலா முற்றுப்பெறாத ஓவியம்: பிறப்பு முதல் மரணம் வரை ரோஹித் வாழ்க்கையை விட்டு துரத்தப்பட்டதன் ஆவணம்

துணைவேந்தர் பதவிக்கு லஞ்சம் ரூ.14 கோடி: உங்களில் எத்தனை பேருக்கு இதைக் கேட்டதும் ஆத்திரம் வருகிறது?

வில்லவன் இராமதாஸ் தமிழகத்தில் துணைவேந்தர் பதவிகளுக்கான லஞ்சம் 14 கோடி எனும் செய்தியைக் கண்டு ஆத்திரமடைந்த மக்களின் சதவிகிதம் எத்தனையிருக்கலாம்? மூன்று மாணவிகளின் தற்கொலைச் செய்தி கண்டு ஆத்திரம் கொள்ளாதவர்கள் சதவிகிதம் எத்தனையிருக்கலாம்? நாம் அனேகமாக எல்லா தற்கொலைகளின்போதும் கோபம் கொள்கிறோம். ஆனாலும் இந்த நிறுவனப்படுகொலைகள் தொடர்கின்றன. காரணம் இந்த படுகொலைகளுக்கு காரனமான ஊழல்மயமான நிர்வாக அமைப்பை நாம் கண்டுகொள்வதில்லை. 14 கோடி கொடுக்கும் ஒருவர் அதனைக்காட்டிலும் பன்மடங்கு அதிக லாபத்தை சம்பாதிக்க முனைவார். அதற்கான வழி … Continue reading துணைவேந்தர் பதவிக்கு லஞ்சம் ரூ.14 கோடி: உங்களில் எத்தனை பேருக்கு இதைக் கேட்டதும் ஆத்திரம் வருகிறது?

மலிவுவிலைவில் வீட்டுத்தோட்டம்: தமிழக அரசு விநியோகிக்கும் கிட்டில் மரபணு மாற்றப்பட்ட விதைகள்?

ஶ்ரீஜா வெங்கடேஷ் நேற்றும் முந்தைய தினமும் தமிழ்நாடு தோட்டக்கலைத் துறையினர் சுமார் 50,000 மாடித்தோட்ட பொருட்களை சென்னை முழுவதும் சலுகை விலையில் அளித்திருக்கிறார்கள். நான் சென்று கேட்டபோது தீர்ந்து விட்டது. இனி சென்னையின் அனைத்து வீட்டு மொட்டை மாடிகளிலும் கத்திரி, வெண்டை என்று காய்கள் விளையப் போகின்றன என்று மகிழ்ந்தேன். என் சந்தோஷம் என் தம்பி வீட்டுப் போனதும் மறைந்து போனது. அவர் இந்தப் பொருட்களை வாங்கி வைத்திருந்தார். ஆர்வ மிகுதியால் விதைகளைப் பார்த்தேன். சரியான அதிர்ச்சி. … Continue reading மலிவுவிலைவில் வீட்டுத்தோட்டம்: தமிழக அரசு விநியோகிக்கும் கிட்டில் மரபணு மாற்றப்பட்ட விதைகள்?

விருது மறுப்பின் அரசியல்:தானே வெட்டிய குழிக்குள் விழுந்த ஜெயமோகன்…

ஜி.கார்ல் மார்க்ஸ் ஜெயமோகன் பத்மஸ்ரீ விருதை மறுத்தவுடன், எனது நண்பர்கள் சிலர் கண்ணீருடன் நெகிழ்ந்திருந்தனர். ஜெமோவின் மாமனாருக்கும் மாமியாருக்கும் கூட விருதை மறுத்ததில் வருத்தம்தான் என்று அவரே பதிவு செய்திருந்ததால், அந்த ஈரத்தில் நானும் நனைந்து போனேன். விருதுக்காக முயற்சி செய்த நண்பர்களுக்கு கூட ஜெமோ வருத்தம் தெரிவித்திருந்த பண்பு என்னை மிகவும் கவர்ந்தது. நான் இந்த அரசு தரும் எந்த விருதையும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று அவர் முன்பே அறிவித்திருந்தார். பிறகு ஏன் அவரது நண்பர்கள் அது தெரியாமல் விருதுக்கு … Continue reading விருது மறுப்பின் அரசியல்:தானே வெட்டிய குழிக்குள் விழுந்த ஜெயமோகன்…

குடியரசு தினத்தை ஏன் அம்பேத்கர் நாளாக கொண்டாட வேண்டும்?

இரா. முருகப்பன் புரட்சியாளர் அம்பேத்கர் என்கிற தனி ஒரு மனிதனால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு சட்டம், நாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்ட குடியரசு தினத்தை அம்பேத்கர் நாளாக போற்றப்படவேண்டும். அதற்கான காரணத்தை இந்தியாவிற்கான அரசியலமைப்பு உருவான வரலாற்றுப் பின்னணியுடன் தருகிறேன். அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழு 1947 ஆகஸ்ட் 29 -இல் அரசியல் நிர்ணய சபை நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுத புரட்சியாளர் அம்பேத்கர் தலைமையில் அவர் உட்பட ஏழுபேர் கொண்ட அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு (Drafting committee) … Continue reading குடியரசு தினத்தை ஏன் அம்பேத்கர் நாளாக கொண்டாட வேண்டும்?

இந்திய அரசியலின் இந்துத்துவ மயமாக்கம் : இடைநிலைச்சாதிகள் பிராமணிய மையத்தன்மை

பிரேம்  பிராமணியம் என்ற சமூக அரசியல் மரபு இந்தியாவில் உருவாகி, வளர்ந்து, ஆதிக்கம் பெறத் தொடங்கிய காலத்திலிருந்தே பிராமணிய எதிர்ப்பு, பிராமணிய வெறுப்பு என்னும் சமூக உளவியலும் தொடங்கி விட்டது எனலாம். பிராமணியத்தின் விரிவான வரலாற்றை ஒரு வகையில் பிராமணிய எதிர்ப்பு இலக்கியங்கள் மற்றும் இயக்கங்களின் வழியாக நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. வேதங்கள், உபநிஷத்துகள், சுருதிகள், சாஸ்திரங்கள், புராண-இதிகாசத் தொகுப்புகள் அனைத்திலும் தன்னை மேல் நிலையில் நிறுத்திக்கொள்ளும் பிராமணிய-பார்ப்பனிய மரபின் மொத்த இருப்பையும் இயக்கத்தையும் புரிந்து … Continue reading இந்திய அரசியலின் இந்துத்துவ மயமாக்கம் : இடைநிலைச்சாதிகள் பிராமணிய மையத்தன்மை

‪#‎NotHindiRepublic‬ : ஹிந்திக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இந்தியர்கள்!

நரேன் ராஜகோபாலன் மொழிப் போர் தியாகிகளுக்கு அஞ்சலிகள். குடியரசு தினத்தன்று இந்தியாவின் எல்லா மொழிகளும் அரசியல் பிரதிநிதித்துவத்தையும், அங்கீகாரத்தையும் பெறுதல் அவசியமென்பதற்காக இந்தியா முழுக்க இணையத்தில் இணைந்து ‪#‎NotHindiRepublic‬ என்கிற ஹாஷ் டேக்கோடு தங்களின் கருத்தினைப் பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள். ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழியல்ல என்பதை எத்தனை தரவுகளோடும், விளக்கங்களோடும் சொன்னாலும், 'ஹிந்தி படித்தால் வேலை கிடைக்கும், இந்தியா முழுக்க இருக்கலாம்' என்பது மாதிரியான கற்பிதங்கள் மாறவேயில்லை. Hindi Heartland என்று சொல்லும் வடக்கு இந்தியாவிலேயே கூட … Continue reading ‪#‎NotHindiRepublic‬ : ஹிந்திக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இந்தியர்கள்!

நிர்பயாவின் ஜாதியை கேட்டீர்களா ? ரோஹித் வெமுலாவின் ஜாதியை கேட்பவர்களுக்கு அவருடைய தாய் சீற்றத்துடன் கேள்வி

ஆர்.எஸ்.எஸ்சின் இளைஞர் அமைப்பான ஏ.பி.வி.பீ.யின் தூண்டுதல் காரணமாக ஐதராபாத் பல்கலையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதாலும், மத்திய அமைச்சர்களின் நெருக்குதல் கார்ரனமாகவும் தற்கொலை செய்து கொண்ட தலித் ஆராய்ச்சி மாணவன் ரோஹித் வெமுலாவின் மரணம், நாடு முழுவதும் உள்ள மாணவர்களை வீதிக்கு போராட அழைத்து வந்திருக்கிறது.  அமைச்சர்கள் தத்தாத்ரேயா, ஸ்மிருதி சூபின் இரானி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். போராட்டத்தின் தொடர்ச்சியாக லக்னோவில் பாபாசாகேப் அம்பேத்கர் பல்கலையில் உரைநிகழ்த்திய பிரதமர் மோடிக்கு, அங்கிருந்த ஒரு … Continue reading நிர்பயாவின் ஜாதியை கேட்டீர்களா ? ரோஹித் வெமுலாவின் ஜாதியை கேட்பவர்களுக்கு அவருடைய தாய் சீற்றத்துடன் கேள்வி

அம்பேத்கர் ஆர் எஸ் எஸ்ஸை ஆதரித்தாரா? ஆர்கனைசரின் விஷப் பிரச்சாரத்துக்கு தமிழக அறிவுஜீவிகளின் எதிர்வினை என்ன?

அ. மார்க்ஸ் நேற்றைய ஆங்கில இந்து நாளிதழில் ஒரு செய்தி. டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நூற்றி இருபத்தைந்தாவது பிறந்த நாளை ஒட்டி ஆர்.எஸ்.எஸ் சின் அதிகாரபூர்வ இதழான 'ஆர்கனைசர்' இதழில் அம்பேத்கர் ஆர்.எஸ்.எஸ்சைப் பாராட்டினார் எனவும் ஆர்.எஸ்.எஸ்ஸில் சாதி வேறுபாடுகள் முதலியன இல்லை எனவும் இம்மாதிரியான பல விஷயங்களை எழுதியிருந்தனர். ஹைதராபாத் பல்லைக் கழகப் பேராசிரியர்கள் கே. லக்‌ஷ்மணையா மற்றும் கே.ஒய்.இரத்தினம் உட்பட நான்கு தலித் அறிவுஜீவிகள் இந்த அபத்தங்களை மறுத்தும், அம்பேத்கர் எப்படி இந்துத்துவக் கருத்தியல்களுக்கு … Continue reading அம்பேத்கர் ஆர் எஸ் எஸ்ஸை ஆதரித்தாரா? ஆர்கனைசரின் விஷப் பிரச்சாரத்துக்கு தமிழக அறிவுஜீவிகளின் எதிர்வினை என்ன?

காப்பிக்கும் டீ க்கும் இடையில் சாதிய உளவியல் இருக்கிறது!

அன்பே செல்வா காப்பிக்கும் டீ க்கும் இடையில் ஒரு சாதிய உளவியல் இருக்கிறது, காப்பி அருந்துபவர்கள் மேட்டுக் குடிகளாகவும், டீ சாமான்யர்கள் அருந்துவதாகவும் நம்மையறியாத ஒரு மைண்ட் செட் எல்லோருக்கும் ஏற்படுகிறது. கட்டுப் பாடற்ற சந்தை இந்த இடைவெளியை குறைத்திருக்கிறது, இன்று யார் வேண்டுமானாலும் காப்பி அருந்தலாம்.. அது வேறு.. ஆனால் இவையிரண்டும் கிருஸ்தவ மிஷனேரிகளால் வெகுஜன மக்களுக்கு அறிமுகப்படுத்த பட்ட காலத்தில் காப்பியை உயர்சாதியினர் தேர்ந்தெடுத்து கொள்கிறார்கள், அதனாலேயே அதற்க்கு உயர்ந்த பண்பு கிடைக்கிறது, கும்பகோணம் டிகிரி … Continue reading காப்பிக்கும் டீ க்கும் இடையில் சாதிய உளவியல் இருக்கிறது!

பொங்கல் பறவைகள் – 2016

UYIRI

பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு (ஜனவரி 15-18) இரண்டாம் ஆண்டும் (2016) இனிதே நடந்து முடிந்தது. தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து பலர் பங்கு கொண்டனர். நான்கு நாட்கள் நடந்த இக்கணக்கெடுப்பில் இதுவரை (18 ஜனவரி 22:30 மணிவரை) 530 பறவைப் பட்டியல்கள் eBird இணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. சுமார் 322 வகையான பறவைகள் பார்த்து பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் விவரங்களுக்கு birdcount.inல் இப்பக்கத்தைக் காண்க.

என் பங்கிற்கு பல வகையான பறவைகளை பார்த்து பட்டியலிட்டுக் கொண்டிருந்தேன். பார்த்த எல்லா பறவைகளும் அழகுதான். அவற்றில் சிலவற்றை படமெடுத்துக் கொள்ள முடிந்தது. எடுத்த சில படங்களில் ஒழுங்காக வந்தவைகளில், எனக்குப் பிடித்தவைகளில் சிலவற்றை கீழே காணலாம்.

கம்பி வால் தகைவிலான் (Wire-tailed swallow) கம்பி வால் தகைவிலான் (Wire-tailed swallow)

கம்பி வால் தகைவிலான்கள் கம்பி வால் தகைவிலான்கள்

கம்பி வால் தகைவிலான் (Wire-tailed swallow) பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பில் பார்த்த பறவைகளில் மனதில் நின்ற முக்கியமான தருணங்களில் ஒன்று இப்பறவைகளைக் கண்டது. தஞ்சையில் உள்ள வெண்ணாறு ஆற்றுப்பாலத்தில் இருந்து வெகுநேரம் இப்பறவைகள் பறந்து திரிவதையும், பாலத்தின் அருகில் சென்ற கம்பியில் வந்தமர்ந்ததையும் பார்த்துக் கொண்டிருந்தோம்.

மடையான் Indian pond heron மடையான் Indian pond heron

அல்லிக் குளத்தில் அல்லி இலைகளின் மேல் வந்திறங்க முயற்சித்து இலைகள் அமிழ்ந்து போக மீண்டும் குளத்தின் கரையோரமாகவே சென்று அமர்ந்தது இந்த மடையான். தஞ்சையிலிருந்து பட்டுக்கோட்டை போகும் வழியில் இருந்த புலவன்காடு எனும் ஊரின் அருகில் சாலையோரமாக இருந்தது இந்த அழகான அல்லிக்குளம்.

மாடு மேய்க்கும் பறவைகள் - உண்ணிக்கொக்கு, கரிச்சான் மற்றும் மைனா. மாடு…

View original post 39 more words

”தவறு செய்யும் மாணவர்களை தண்டிக்கும் உரிமை பல்கலைக்கு உண்டு” ரோஹித் நீக்கத்தை ஆதரித்து தினமணி தலையங்கம்!

ரோஹித் வெமூலாவின் நீக்கத்தை நியாயப்படுத்தியும் அவருடைய மரணத்துக்கு நீதி கேட்கும் அரசியல் கட்சிகளின் நிலைப்பாட்டையும் விமர்சித்து தினமணி தலையங்கம் எழுதியிருக்கிறது. அரசியலாக்குகிறார்கள்! ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்ட ஆய்வு மாணவரான ரோஹித் வேமூலா தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை அரசியலாக்க முற்பட்டிருக்கிறார்கள். சமீபகாலமாக மாணவர்கள் மத்தியில் ஏற்படும் பிரச்னைகளை மையப்படுத்தி அரசியல் ஆதாயம் தேடும்போக்கு அதிகரித்து வருகிறது. முனைவர் பட்ட ஆய்வு மாணவரான ரோஹித் வேமூலாவின் இடைநீக்கத்துக்குக் காரணம் ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் இயங்கும் இரு மாணவர் அமைப்புகளின் … Continue reading ”தவறு செய்யும் மாணவர்களை தண்டிக்கும் உரிமை பல்கலைக்கு உண்டு” ரோஹித் நீக்கத்தை ஆதரித்து தினமணி தலையங்கம்!

மக்குப்பிள்ளை நந்தா IRS: டிஸ்லெக்சியா பாதிப்புக்கு ஆளானவரின் வெற்றிக்கதை!

கலு. அப்துல்லாஹ் ரஹ்மத்துல்லாஹ் ஆறாம் வகுப்போடு படிப்பை நிறுத்திக் கொண்டார். பள்ளிக்குச் செல்வது வேப்பங்காயாய் கசந்தது. கற்கும் பாடங்கள் நினைவில் நிற்பதில்லை. கற்றல் குறைபாடு அவருக்கு தீராதப் பிரச்சினையாக இருந்தது. ஆங்கிலத்தில் டிஸ்லெக்சியா (Dyslexia) என்று அழைக்கப்படும் இந்த உளவியல் பிரச்சினை கற்றல் தொடர்பானது. பள்ளிக்குச் செல்வதை நிறுத்தும் மாணவர்கள் வழக்கமாக நம்மூரில் என்னவெல்லாம் செய்வார்களோ, அதையே தான் நந்தாவும் செய்தார். லாட்டரி டிக்கெட் விற்றார். வீடியோ கடையில் எடுபிடியாக வேலை பார்த்தார். மெக்கானிக் ஷெட்டில் கையில் … Continue reading மக்குப்பிள்ளை நந்தா IRS: டிஸ்லெக்சியா பாதிப்புக்கு ஆளானவரின் வெற்றிக்கதை!

இசைஞானி 1000: இளையராஜாவின் பாடல்கள் ஓவியமாகின்றன!

தமிழத்தின் மாபெரும் கலைஞரான இசைஞானி மேஸ்ட்ரோ இளையராஜா அவர்கள் தமது இடையீடற்ற படைப்பாற்றலினாலும், கடுமையான உழைப்பினாலும் ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து உலகின் தன்னிகரற்ற கலைஞராக மிளிர்கிறார். உலக இசையமைப்பாளர்கள் 25பேரில் 9ம் இடத்தில் இருக்கும் ஒரே இந்தியர் என உலக ஆய்வு தெரிவிக்கிறது. இந்திய அரசும் நூற்றாண்டு சாதனையாளர் என்று அறிவித்து கவுரவித்திருக்கிறது. இவையெல்லாம் ஒரு புறமிருக்க தமிழ் மற்றும் இந்திய இசை கலை மரபான ஆன்மீகமும் அன்பும் இசைந்த அம்சமாக கடந்த நாற்பது ஆண்டுகளாக … Continue reading இசைஞானி 1000: இளையராஜாவின் பாடல்கள் ஓவியமாகின்றன!

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு இடது பக்கம் செயல்படாமல் இருக்கிறார் எழுத்தாளர் ரமேஷ் பிரேதன்; ஆனாலும் எழுதிக் கொண்டிருக்கிறார். நீங்கள் நினைத்தால் அவரை மேலும் எழுதவைக்கலாம்!

Kaala Subramaniam நோயுற்றிருக்கும் எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் அவர்களுக்கு நலநிதி திரட்டித் தருவதற்கான வேண்டுகோள் கூட்டறிக்கை ------------------------------------------------------------------------------------------ தமிழையும் இலக்கியத்தையும் மானுடத்தையும் உயிர்களையும் நேசிக்கும் அன்பர்களே! வணக்கம். புதுச்சேரியில் பிறந்த கவிஞர், கதாசிரியர், நாடக ஆசிரியர், கோட்பாட்டாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர் என்று பன்முக ஆளுமையாகத் திகழும் ரமேஷ் பிரேதன் அவர்கள் பக்கவாதம் (Paralysis Attack) என்னும் கொடுநோய் தாக்கி, உடல் இயக்கம் குன்றிய நிலையில், கடந்த ஒன்றைரை ஆண்டுகாலமாக ஒரு சிறு அறையில் முடங்கிக் கிடக்கின்றார். தமிழ் … Continue reading பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு இடது பக்கம் செயல்படாமல் இருக்கிறார் எழுத்தாளர் ரமேஷ் பிரேதன்; ஆனாலும் எழுதிக் கொண்டிருக்கிறார். நீங்கள் நினைத்தால் அவரை மேலும் எழுதவைக்கலாம்!

ஆர் எஸ் எஸ் நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவருக்கு என்ன வேலை?

ராக்கெட் அனுப்புவதற்கு பஞ்சாங்கப்படி நல்ல நேரம் பார்ப்பதும், ராக்கெட் கிளம்புவதற்கு முன்பு தேங்காய் உடைப்பதும் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் குறித்து இதுவரை இருந்துவந்த சர்ச்சைகள். இந்த சர்ச்சைகளுக்கெல்லாம் பின்னணி இருப்பதுபோல இஸ்ரோ முன்னாள் தலைவரின் ஆர் எஸ் எஸ் உறவு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 2009-ஆம் ஆண்டு முதல் 2014 டிசம்பர் வரை இஸ்ரோ தலைவராக இருந்தவர் கே.ராதாகிருஷ்ணன். பெங்களூருவில் ஆர் எஸ் எஸ் நடத்திய ஸ்வராஞ்சலி என்ற நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டார். விருந்தினராகக் கலந்துகொண்டது … Continue reading ஆர் எஸ் எஸ் நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவருக்கு என்ன வேலை?

#Exclusive: சமூக நீதிக்கு எதிரானதை பெரியாரியம் கைவிடும்; ஜல்லிக்கட்டில் தலித்துக்கான இடம் தப்படிப்பது மட்டும்தானா?

கார்ல் மார்க்ஸ் ஜல்லிக்கட்டு' தொடர்பான விவாதங்களை உற்று நோக்குகையில் அது பலரை முட்டுச்சந்தில் கொண்டுபோய் நிறுத்தியிருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இதில் தலித்தியம் பேசுபவர்களும் அடக்கம். இப்போது பெரியார் இருந்திருந்தால், ஜல்லிக்கட்டை ஆதரித்திருப்பாரா அல்லது எதிர்த்திருப்பாரா என்ற சுவராஸ்யமான விவாதத்தையும் பார்க்க முடிந்தது. ஜல்லிக்கட்டு நமது பாரம்பரியம் என்று ஒரு வாதம் முன் வைக்கப்படுகிறது. இந்தப் பாரம்பரியத்தில் தலித்துகளின் இடம் என்ன என்ற கேள்விதான் தலித்தியர்கள் எதிர்கொள்ள விழைவது. அதை ஒரு பாரம்பரியம் இல்லை என்று அவர்களால் முழுக்கவும் … Continue reading #Exclusive: சமூக நீதிக்கு எதிரானதை பெரியாரியம் கைவிடும்; ஜல்லிக்கட்டில் தலித்துக்கான இடம் தப்படிப்பது மட்டும்தானா?

#Video: கொத்துகொத்தாக கரை ஒதுங்கிய திமிங்கிலங்கள்: என்னதான் நடக்கிறது கூடங்குளம் கடல்பகுதிகளில்?

சுப. உதயகுமாரன்  இடிந்தகரை முதல் மணப்பாடு வரையிலான கடற்கரை எங்கும் நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள் கரை ஒதுங்கியிருக்கின்றன, அல்லது இறந்து கிடக்கின்றன. கூடங்குளம் அணுஉலைப் பகுதியில் ஏராளமான காவல் துறையினர், துணை இராணுவத்தினர் குவிக்கப்படுகின்றனர். நேற்று (சனவரி 11) இரவு முழுவதும் கூடங்குளம் பகுதியில் சிறியரக விமானங்கள் பறந்த வண்ணமிருந்தன. அணுஉலையில் சில பரிசோதனைகள் நடப்பதாக நேற்று செய்திகள் வந்தன. அங்கே என்னவோ குழப்பம் நடக்கிறது. ஆனால் அதிகாரவர்க்கம் வழக்கம்போல அமைதிகாக்கிறது, அல்லது மூடிமறைக்க முனைகிறது. பேய்க்கு வாழ்க்கைப்பட்டோரே, … Continue reading #Video: கொத்துகொத்தாக கரை ஒதுங்கிய திமிங்கிலங்கள்: என்னதான் நடக்கிறது கூடங்குளம் கடல்பகுதிகளில்?

ஜல்லிக்கட்டு: கவனிக்கப்படாத 10 உண்மைகள்!

செந்தில் குமார் 1.  ஜல்லிக்கட்டு நிகழ்வைக் குறிப்பிடும் போது ஆங்கில பத்திரிகைகளில் bull taming என்றும் தமிழ்ப் பத்திரிகைகளில் காளைகளை அடக்குதல் என்றும் குறிப்பிடுகிறார்கள். இது தவறான பிரயோகம். தமிழில் அதைப் பற்றிய சரியான குறிப்புகள் ஏறு தழுவுதல், மாடு பிடித்தல் என்றுதான் கூறுகின்றன. வாடிவாசலிலிருந்து கிளம்பும் காளைகளின் திமிலின் மீது குறிப்பிட்ட தூரம் தொங்கிச் செல்வதுதான் இந்த நிகழ்வு. காளைகளின் இரு கொம்புகளையும் இணைக்கும் வகையில் அதன் அடிப்பகுதிகளில் கட்டப்பட்ட பொருளை எடுப்பதை வைத்து இதை … Continue reading ஜல்லிக்கட்டு: கவனிக்கப்படாத 10 உண்மைகள்!

#ஞாயிறுஇலக்கியம் சோளக்கொல்லை மோகினிகள் சாதி பார்ப்பதில்லை: சுகிர்தராணியின் நாவல்

எழுத்தாளர் சுகிர்தராணி தற்சமயம் நாவல் ஒன்றை எழுதிக்கொண்டிருக்கிறார். அவர் எழுதிக்கொண்டிருக்கும் நாவலின் சில பகுதிகள் இங்கே... சுகிர்தராணி எங்க வாழ்க்கையிலிருந்து கொஞ்சம்.. *************************************************** குழந்தையை அணைத்தவாறு ஒருக்களித்துப் படுத்திருந்த குணபூஷணத்தை காலால் நிமிண்டினாள் கன்னியம்மாள்.அரைத்தூக்கத்தில் இருந்தவள் சட்டென விழித்துக் கொண்டாள். தலையைமட்டும் உயர்த்திப் பார்த்தவளுக்கு இருட்டில் மசமசவென கன்னியம்மா நின்றிருந்தது தெரிந்தது.. குள்ளமான உருவமும் உயர்த்திப் போட்ட கோடரிமுடிச்சுக் கொண்டையும் எப்படிப்பட்ட இருட்டிலும் அவளைக் காட்டிக் கொடுத்துவிடும். இன்னாமே இந்நேத்திக்கு வந்து நிக்கிற..? பொகலைக்காம்பு எதுனா வேணுமா..இன்னிக்கெல்லாம் … Continue reading #ஞாயிறுஇலக்கியம் சோளக்கொல்லை மோகினிகள் சாதி பார்ப்பதில்லை: சுகிர்தராணியின் நாவல்

“ஜெயலலிதா ஃபாசிஸ்ட் மட்டுமில்லை; சுயநலவாத க்ரூயலிஸ்ட்” ஏன்?

அறிவழகன் கைவல்யம்  அலுவலகம் வரும் வழியில் "ரவீந்திர கலாக்க்ஷேத்ரா" என்று ஒரு மிகப்பெரிய மன்றம் இருக்கிறது, சுவையான இஞ்சி எலுமிச்சைத் தேநீர் கிடைக்கும் அங்கே, குடிக்கலாம் என்று உள்ளே நுழையப் போனேன், "காவலர்கள், சார், அந்தப் பக்கம் போங்க", என்றார்கள், பெரும்பாலும் முதல்வரோ, நடுவண் அமைச்சர்களோ வந்தால் மட்டுமே உள்ளே நுழையக் கெடுபிடி காட்டுவார்கள், அமைச்சர்களில் இருந்து, காவல்துறை பெரிய அதிகாரிகள் வரை கர்நாடக மாநிலத்தில் மிக எளிமையாக மக்களோடு உரையாடுபவர்கள், நெருக்கமாக இருப்பவர்கள். ஏதோ விழா … Continue reading “ஜெயலலிதா ஃபாசிஸ்ட் மட்டுமில்லை; சுயநலவாத க்ரூயலிஸ்ட்” ஏன்?

வாழ்தலைப் பற்றி மகளுடன் ஒரு தந்தையின் உரையாடல்!

அறிவழகன் கைவல்யம் பெரிய கரப்பான் பூச்சி கழிப்பறையில் இருக்கிறதென்று அழுதுகொண்டே ஓடி வருகிறாள் அன்பு மகள், "கரப்பான் பூச்சி ஒரு சின்ன உடல் பொருந்திய உயிர், மனிதர்களைக் கண்டு ஓடி ஒளிந்து கொள்கிற, மனிதர்களின் கழிவுகளைத் தின்று வாழ்கிற ஒரு சிறிய பூச்சியைக் கண்டா நீ அஞ்சுகிறாய் மகளே" சமாதானம் செய்துவிட்டுச் சொல்கிறேன். "அம்மா, கரப்பான் பூச்சிகளும் வாழ்ந்தாக வேண்டுமே!" "அப்பா, வாழ்தல் என்பது என்ன?" மிகச் சிக்கலான கேள்விதான், கொஞ்ச நேரம் நானும் யோசித்துப் பார்க்கிறேன், … Continue reading வாழ்தலைப் பற்றி மகளுடன் ஒரு தந்தையின் உரையாடல்!

ஆட்டோவை அடகு வைத்து பயணியின் உயிரைக் காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநர்!

ஆட்டோ ஓட்டுநர்கள் என்றாலே பொதுவாக அதிகமாக கட்டணம் கேட்பவர்கள், கேட்கும் இடத்திற்கு வரமாட்டார்கள், ஆட்டோ ஸ்டாண்டில் அரட்டை அடித்துக்கொண்டிருப்பவர்கள் என்று தான் பொதுக் கருத்து உருவாக்கப்பட்டுள்ளது. பயணிகள் தவறவிட்ட லட்சக்கணக்கான பணத்தையும் நகைகளையும் முக்கியமான ஆவணங்களையும் உரியவர்களிடம் ஒப்படைக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் பற்றிய செய்திகளும் அவ்வவ்போது வந்துகொண்டு இருக்கின்றன. தற்போது அவை அனைத்திற்கும் மேலாக ரவிச்சந்திரன் என்ற ஒரு ஆட்டோ ஓட்டுநரின் செயல் அமைந்துவிட்டது. இதுகுறித்து தீக்கதிரில் வெளியாகியிருக்கும் ஒரு நெகிழ்ச்சி சம்பவம் இது... சென்னை பழைய … Continue reading ஆட்டோவை அடகு வைத்து பயணியின் உயிரைக் காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநர்!

நீங்கள் சம்பளம் வாங்கும் அடிமையா? பணியாளரா? தெரிந்துகொள்ள 11 வழிகள்…

த. கலையரசன் சம்பளம் வாங்கும் அடிமைகளுக்கான அறிகுறிகள்: "என்ன செய்கிறீர்கள்?" என்று யாராவது கேட்டால் உங்களது பதில் வேலை பற்றியதாக இருக்கிறது. ஓய்வு நாட்களிலும் வேலைக்கு செல்லும் அதே நேரத்திற்கு எழுந்திருக்கிறீர்கள். சுகயீனம் இல்லாத நேரத்திலும் விடுப்பு எடுப்பதில் குற்றவுணர்ச்சியை உணர்கிறீர்கள். வேலைக்கு செல்ல வேண்டி இருப்பதால் வாழ்வில் முக்கியமான கொண்டாட்டங்களை இழக்கிறீர்கள். வேலை செய்யுமிடத்தில் நீங்கள் ஓர் அவசியமான ஆள் என்று நம்புகிறீர்கள். வேலை இல்லாத நேரங்களிலும் உங்களது உரையாடல் வேலை பற்றியே இருக்கின்றது. சக … Continue reading நீங்கள் சம்பளம் வாங்கும் அடிமையா? பணியாளரா? தெரிந்துகொள்ள 11 வழிகள்…

ராஜா vs ரஹ்மான்: ரஹ்மானைக் கொண்டாடும் ஒருவர் ஏன் இளையராஜாவை அவமதிக்கிறார்?

கார்ல் மார்க்ஸ் ரஹ்மானின் பிறந்தநாளில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து நிறையப் பதிவுகளை சமூக ஊடகங்களில் காண முடிந்தது. முத்தாய்ப்பாக ''என்னை விமர்சிப்பவர்களைத் திட்டாதீர்கள்'' என்ற ரஹ்மானின் கோரிக்கையையும். அவரை விமர்சித்தது விஜய் ரசிகர்களாகவோ, அஜித் ரசிகர்களாகவோ இருக்க முடியாது. வேறு யார்? அவர்கள் இளையராஜா ரசிகர்கள். ஏன் விமர்சிக்கிறார்கள்? ரஹ்மானை வாழ்த்திய சிலர், இளையராஜாவை சீண்டி விட்டார்கள். பொறுக்க முடியுமா ராஜா ரசிகர்களால்? பொங்கிவிட்டார்கள். ''நல்ல இசையமைப்பாளராக மட்டும் இல்லாமல், நல்ல மனிதராகவும் இருக்கும் ரஹ்மானுக்கு வாழ்த்துகள்'' … Continue reading ராஜா vs ரஹ்மான்: ரஹ்மானைக் கொண்டாடும் ஒருவர் ஏன் இளையராஜாவை அவமதிக்கிறார்?

அதிமுக அரசின் ஊழல்களா? அதிமுக அரசுக்கு எதிரான ஊழல்களா? ஊழல் செய்திகளை எழுதுவது எப்படி?

தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக அரசின் ஊழல் பட்டியலை புத்தகமாக வியாழக்கிழமை வெளியிட்டார். இந்தச் செய்தியை தமிழகத்தின் முன்னணி ஊடகங்கள் வெளியிட்ட விதம் விமர்சனத்துக்குரியதாக இருக்கிறது. அதிமுக அரசுக்கு எதிரான ஊழல் என தினமலரும் புதிய தலைமுறையும் சொல்கின்றன. அப்படியென்றால் அதிமுக அரசுக்கு எதிராக ஊழல் செய்தது யார்? இந்த ஊடகங்கள்தான் விளக்க வேண்டும்! தினமலர் செய்தி: அதிமுக ஊழல் பட்டியல்: இளங்கோவன் வெளியீடு சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது அதிமுக அரசுக்கு … Continue reading அதிமுக அரசின் ஊழல்களா? அதிமுக அரசுக்கு எதிரான ஊழல்களா? ஊழல் செய்திகளை எழுதுவது எப்படி?

#MustRead புடவைதான் பர்தாவுக்கு அடுத்து உலகின் மிகக் கொடூரமான ஆடை!

வில்லவன் இராமதாஸ் புத்தாண்டு யாருக்கு நன்றாக விடிகிறதோ இல்லையோ தமிழ்நாட்டு கடவுள்களுக்கும் அவர்தம் ஆகம விதிப்படியான முகவர்களுக்கும் கொழுத்த தட்சணையோடுதான் விடிகிறது. இந்த முறை தமிழக அரசு பகவானுக்கு ஒரு கூடுதல் புத்தாண்டு போனஸை அறிவித்திருக்கிறது. வெற்று மார்போடு பூசை செய்யும் அர்ச்சகர்களை சகித்துக்கொள்ளும் கடவுளுக்கு, துப்பட்டா இல்லாமல் வரும் பெண்களையும் ஜீன்ஸ் அணிவோரையும் சகித்துக்கொள்ளும் சக்தியில்லை என ஆகவிதிகளின் காவலனான நீதிமன்றம் கண்டறிந்து, அவற்றை கோயிலுக்குள் அணிய தடை செய்திருக்கிறது. எதிர்காலத்துக்கான பயிற்சியாக குழந்தைகளும் உடலை … Continue reading #MustRead புடவைதான் பர்தாவுக்கு அடுத்து உலகின் மிகக் கொடூரமான ஆடை!

சாதிச்சட்டையை உரிக்க பிரயத்தனப்படும் பாமக: உண்மையில் சாதிக் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்க முடியுமா?

Sivasankaran Saravanan விழுப்புரத்தில் பாமக வின் மண்டல மாநாடு. மருத்துவர் ராமதாஸ், பாமக ஒரு சாதிக்கட்சி இல்லை என்பதை ஒரு சில உதாரணங்களோடு விளக்கிக்கொண்டிருந்தார். பாட்டாளி மக்கள் கட்சி தமிழகத்தில் இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் செய்து வருகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தல் வரை அது, தான் ஒரு சாதிக்கட்சி இல்லை என்பதை நிறுவுவதற்கு பிரயத்தனப்பட்டதே இல்லை. 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு சாதிக்கட்சி என்கிற அந்தஸ்தை அது விரும்பவில்லை. டிவி விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகிற … Continue reading சாதிச்சட்டையை உரிக்க பிரயத்தனப்படும் பாமக: உண்மையில் சாதிக் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்க முடியுமா?

விண்வெளியில் இருந்து தமிழகம் இப்படித்தான் தெரியும்!

விண்வெளி வீரர் ஸ்காட் கெல்லி 283 நாட்களாக சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் இருக்கிறார். விண்வெளியில் இருந்தபடி புவியின் அழகை வெவ்வேறு பகுதிகளை படம் பிடித்துவருகிறார். சமீபத்தில் இவர் தென்னிந்திய பகுதிகளை படப்பிடித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்டார்...   https://twitter.com/StationCDRKelly/status/683751822767423488 https://twitter.com/StationCDRKelly/status/683652831023362048 https://twitter.com/StationCDRKelly/status/683643600127803392