சென்னை மாநகர  உழைக்கும் மக்களின் குடியிருப்பு பிரச்சனை: அருண் நெடுஞ்செழியன்

அருண் நெடுஞ்செழியன் 1 சென்னை மாநகர வளர்ச்சியும் தொழிலாளர் வர்க்கத்தின் உருவாக்கமும் சென்னை பெருநகர உழைக்கும் வர்க்கத்தின் வரலாறானது,19 ஆம் நூற்றாண்டின் பின்பாதியில் வளர்ச்சியுற்ற கிழக்கிந்திய நிறுவனங்களின் தொழில்துறை எழுச்சியோடு தொடங்குகிறது. துறைமுகம், மின்சார உற்பத்தி நிலையம்,ரயில்வே போக்குவரத்து, பஞ்சாலைகள், எண்ணெய்-பெட்ரோல் நிறுவனம், தீப்பெட்டி தொழிற்சாலை,ட்ராம் வே,தோல் பதனிடும் ஆலைகள், அச்சுக்கூடம்  போன்ற ஆலைத் தொழில்களும் போக்குவரத்து சாதானங்களும்  19 ஆம் நூற்றாண்டின் பின்பாதியிலும, 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தோற்றம் பெற்று  பாய்ச்சல் வேகத்தில் விரிவாக்கம் … Continue reading சென்னை மாநகர  உழைக்கும் மக்களின் குடியிருப்பு பிரச்சனை: அருண் நெடுஞ்செழியன்

இடதுசாரிகளின் மேட்டிமைத்தனத்தனம்  மூர்க்க தேசியத்திற்கு ஆயுதங்களைத் தருகிறது: இராமச்சந்திர குஹா

வரலாற்று ஆய்வாளர் இராமச்சந்திர குஹா, கர்நாடகம் உருவான நவம்பர் ஒன்றாம் நாளன்று புதுதில்லியில் நீதிபதி சுனந்தா பண்டாரே (Sunanda Bhandare )  நினைவு சொற்பொழிவு ஆற்றினார். தற்கால அரசியலை மையப்படுத்திய இந்த உரை பல செய்திகளை புதிய கோணத்தில் வைக்கிறது.அரசியலமைப்பு நாட்டுப்பற்று (constitutional patriotism) , மூர்க்க தேசியவாதம், பாகிஸ்தானால் இந்தியாவில் அடிப்படைவாதம்,  யூதர்களை போல முஸ்லிம்கள், பன்மைத்தன்மை போன்ற  கருத்துக்களை மையப்படுத்தி இவரது உரை அமைந்து இருக்கிறது. ஆங்கில ஊடகங்களில் பரவலாக இந்த உரை கவனம் … Continue reading இடதுசாரிகளின் மேட்டிமைத்தனத்தனம்  மூர்க்க தேசியத்திற்கு ஆயுதங்களைத் தருகிறது: இராமச்சந்திர குஹா

கார்ப்பரேட்டுகளுக்கு சிங்கார சென்னை? உழைக்கும் தலித் மக்களுக்கு பெரும்பாக்கமா?

அப்பல்லோவின் health check கட்டிடம் அதிமுகவின் அமைச்சர் வளர்மதி மூலம் அப்பல்லோ நிர்வாகத்திற்குத் தாரை வார்க்கப்பட்டுள்ளது.

ஒரு பண்பாட்டு எழுச்சிக்குள் பன்மைப் பண்பாடுகளின் எழுச்சி: ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்த நினைவுக் குறிப்பு

தமிழர் என்கிற தேசிய இனத்தின் அடையாளம் என்பது பன்மை அடையாளங்களின் கூட்டுத் தொகுப்பு தான். இந்தப் பன்மை அடையாளங்களின் கூட்டுறவும் உயிர்ப்பும்தான் தேசிய அடையாளத்திற்கு வலுவையும் வாழ்வையும் அளித்துக் கொண்டிருக்கின்றன.

‘தென்னகத்தின் குஜராத்தாக மாறிக்கொண்டிருக்கும் கர்நாடகா’: சுட்டுக்கொல்லப்பட்ட கௌரி லங்கேஷ் எழுதிய கட்டுரை

தனது வீட்டு வாசலில் சுட்டுக்கொல்லப்பட்ட கௌரி லங்கேஷ், தீவிர இந்துத்துவ எதிப்பாளராக இயங்கி வந்த பத்திரிகையாளர். கௌரி லங்கேஷ், 2008-ஆம் ஆண்டு எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இங்கே: சமீபத்தில் ஹூப்ளி, ஹொன்னள்ளி ஆகிய இடங்களில் வாகன திருட்டி ஈடுபட்டதாக மூவர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மூவரும் இஸ்லாமியர்களாக இருந்ததால், அடுத்த நாளே, காவல்துறை வட்டாரங்கள் அவர்களை பற்றிய செய்தியை கசியவிட்டது. அதாவது அவர்கள் மூவரும் நாட்டின் வெவ்வேறு இடங்களில் குண்டுவெடிப்பு நடத்த திட்டமிட்டிருப்பதாக காவல்துறை சந்தேகிப்பதாக அந்த … Continue reading ‘தென்னகத்தின் குஜராத்தாக மாறிக்கொண்டிருக்கும் கர்நாடகா’: சுட்டுக்கொல்லப்பட்ட கௌரி லங்கேஷ் எழுதிய கட்டுரை

அ.தி.மு.க. அணிகள் இணைப்பு, அடிமை அணில்களின் முதுகில் மோடி வருடிய கோடுகள்!

நாடாளுமன்ற சனநாயக வானில் இப்போது ’துரோகி’ என்ற ஒலம் கேட்டப்படி இருக்கிறது. சசிகலாவை துரோகி என்கிறார் ஓ.பி.எஸ். ஒ.பி.எஸ்., ஈ.பி.எஸ் ஸையும் துரோகி என்கின்றனர் தினகரன் ஆதரவாளர்கள். நிதிஷை துரோகி என்கிறார்கள் லாலுவும் சரத் யாதவும். மோடியையும் அமித் ஷாவையும் துரோகி என்கின்றனர் அவரால் பதவி விலக்கம் செய்யப்பட்ட பா.ச.க. மூத்த தலைவர்கள்.

கடத்தப்பட்ட விமானம்: சுப. உதயகுமாரன்

பிரம்மாண்டமான பிரமிக்கவைக்கும் அழகிய விமானமாம் பூமி தற்போது சில வல்லரசு கடத்தல்காரர்களால் கடத்தப்பட்டிருக்கிறது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, ரஷ்யா, சீனா எனும் ஐந்து கடத்தல்காரர்கள் அழித்தொழிக்கும் அணுகுண்டுகள் தங்களிடம் இருப்பதாகச் சொல்லி, நாம் அனைவரும் ஒன்றாகப் பயணிக்கும் இந்த அரிய அற்புதமான விமானத்தை கண நேரத்தில் தகர்க்க முடியும் என்றும், பயணிகள் அனைவரின் உடைமைகளையும், உயிர்களையும் அழிக்க முடியும் என்றும் மிரட்டுகின்றனர்.

“எங்கள மாட்டுக்கறி திங்கச் சொல்றதும், அவுகள மாட்டுக்கறி திங்காதீகன்னு சொல்றதும் அதிகாரம் பண்றதுக்குச் சமானந் தம்பி”

ஒரு மாடு சார்ந்த பண்பாடு தமிழர்களாய் இணைத்தது. அதே மாடு சார்ந்த உணவுப் பழக்கப் பண்பாடு தமிழர்களிடம் பிளவுகளை ஏற்படுத்தும் சூழ்ச்சி உருவாக்கப்படுகிறது.

உம்பேர்ட்டொ ஈக்கோ: ஃபாசிஸத்தின் 14 தன்மைகள்! தமிழில் விஜயசங்கர் ராமச்சந்திரன்

விஜயசங்கர் ராமச்சந்திரன் உலகின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான உம்பேர்ட்டொ ஈக்கோ, முசோலியின் ஃபாசிஸம் ஆட்சிக்காலத்தில் இத்தாலியில் வாழ்ந்தவர். ‘ஃபாசிஸ விளையாட்டு பல வடிவங்களை எடுக்கும். ஆனால் அதன் பெயர் மட்டும் மாறாது,” என்று சொன்னவர். அவர் அதனை ஊர் ஃபாசிஸம் அல்லது நிரந்தர ஃபாசிஸம் என்று அழைத்தார். அதன் 14 “பிரத்யேக” தன்மைகளைப் பட்டியலிட்டார். “இந்த தன்மைகளை ஒரு அமைப்புக்குள் ஒழுங்குபடுத்திட முடியாது. அவற்றுள் ஒன்றுக்கொன்று முரணானவை; வேறு விதமான சர்வாதிகாரத்திற்கும் வெறித்தனத்திற்கும் இதே தன்மைகள் உண்டு. … Continue reading உம்பேர்ட்டொ ஈக்கோ: ஃபாசிஸத்தின் 14 தன்மைகள்! தமிழில் விஜயசங்கர் ராமச்சந்திரன்

“கேள்வி கேட்க மக்களுக்கு பயிற்சி அளிப்பதே கல்வியின் நோக்கமாகும்”

(ரொமீலா தாப்பர் தன் கருத்துக்களை  நேர்மையாகவும் வெளிப்படையாகவும் தெரிவிக்கும் புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர் ஆவார். The Wire இணைய இதழுக்கு பிரபல பத்திரிக்கையாளர் சித்தார்த் வரதராஜனுக்கு விரிவான பேட்டியளித்திருக்கிறார். அது 'The media today is not communicating reality, Buy propagate ideology ' என்ற தலைப்பில் வெளி வந்துள்ளது. அந்த பேட்டியின் சுருக்கப்பட்ட மொழி பெயர்ப்பு இது) சித்தார்த் வரதராஜன் : நீதிமன்றம் , மத்திய வங்கி , பாராளுமன்றம் , ஊடகம் என கிட்டத்தட்ட … Continue reading “கேள்வி கேட்க மக்களுக்கு பயிற்சி அளிப்பதே கல்வியின் நோக்கமாகும்”

இளவரசன் கண்டிப்பாக “தற்கொலை செய்து கொள்ளவில்லை” : பிரேத பரிசோதனை செய்த மருத்துவரின் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி…

தருமபுரி மாவட்டத்தின் நத்தம் கிராமத்தை சேர்ந்த தலித் சமூக இளவரசனுக்கும், செல்லங்கோட்டையைச் சேர்ந்த வன்னிய சமூக திவ்யாவும், காதலித்துத் திருமணம் செய்ததால் ஏற்பட்ட கலவரமும், அதன் பின்னரான தொடர் போராட்டங்களும், இறுதியில் ரயில் தண்டவாளத்தில் இளவரசன் உடல் கண்டுபிடிக்கப்பட்டது வரையிலான சம்பவங்கள் தமிழ்நாட்டின் வரலாற்றில் கருப்புப் பக்கங்கள். இளவரசனின் மரணத்தில், இது வரையிலும் சந்தேகம் தீர்ந்தபாடில்லை என்றாலும், அது குறித்த சிபிசிஐடி அறிக்கையை ஏற்று, அது தற்கொலைதான் என்று சில வாரங்களுக்கு முன் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு … Continue reading இளவரசன் கண்டிப்பாக “தற்கொலை செய்து கொள்ளவில்லை” : பிரேத பரிசோதனை செய்த மருத்துவரின் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி…

செம்மரத் தொழிலாளர்கள் படுகொலைகளும் எடுபிடி முதலாளித்துவமும்

அருண் நெடுஞ்செழியன் ஆந்திர மாநிலம், திருப்பதி சேசாசல வனப்பகுதியில் சென்ற ஆண்டு ஏப்ரல் 7 ஆம் தேதியில், தமிழகத்தைச் சேர்ந்த 20 கூலித் தொழிலாளர்கள் போலி மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆந்திர அதிரடிப்படையினரின் இக்காட்டுமிராண்டிச் செயலுக்கு எதிராக தமிழகத்தின் அரசியல் கட்சிகள் மற்றும் இரு மாநில மனித உரிமை அமைப்புகள் திரண்டதை அடுத்து,விசாரணைக் குழுவொன்றை அமைக்க உத்தரவிட்டார் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு.இதுவரை இவ்விசாரணைக் குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கிப்படவில்லை.என்கவுண்டர் வழக்குத் தொடர்பான குற்றப் பத்திரிக்கையும் தாக்கல் … Continue reading செம்மரத் தொழிலாளர்கள் படுகொலைகளும் எடுபிடி முதலாளித்துவமும்

வரலாறு திரும்புகிறது?: 1988-ஆம் ஆண்டு நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்ற ஜானகி அணி கலைக்கப்பட்டது!

1987-ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த எம்ஜியார் மரணமடைந்ததை அடுத்து அவருக்குப் பின் யார் முதல்வராவது என்று அதிமுகவில் குழப்பம் நிலவியது. ஆர். எம். வீரப்பனின் ஆதரவுடன் எம்ஜியாரின் மனைவி ஜானகி ராமச்சந்திரன் முதல்வரானார். ஆனால் அதை கட்சியின் மற்றொரு முக்கிய தலைவரான ஜெ. ஜெயலலிதா ஏற்கவில்லை. 132 சட்ட மன்ற உறுப்பினர்கள் கொண்ட அதிமுகவில் 33 பேர் ஜெயலலிதாவை ஆதரித்தனர், மற்றவர்கள் ஜானகியை ஆதரித்தனர். எட்டாவது சட்டமன்றத்தின் பேரவைத் தலைவர் பி. எச். பாண்டியனும் ஜானகியை … Continue reading வரலாறு திரும்புகிறது?: 1988-ஆம் ஆண்டு நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்ற ஜானகி அணி கலைக்கப்பட்டது!

இங்கே உழவர்களே விலை நிர்ணயம் செய்கிறார்கள்; தஞ்சை விவசாயிகளின் புதிய முயற்சி!

வறட்சி, மழை பெய்யவில்லை ஒருபுறம், பாழாய் போன மழை இப்பவா பேய்ஞ்சு என் குடியை கெடுக்கனும் என்று ஒருபுறம் இப்படி தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமங்களில் இருந்தும் விவசாயிகள் தற்கொலை என்ற செய்தியை கேட்காத நாளில்லை. இந்த வருடத்தில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட ஏழை விவசாயிகள் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் தம் விவசாய நிலத்திலேயே தமது உயிரை உரமாக்கி வருகின்றனர். எனினும் இதனைத் தடுக்க எந்த அரசாங்கமும் நமக்கு உதவுவதாகவும் தெரியவில்லை. மாபெரும் புரட்சியாக … Continue reading இங்கே உழவர்களே விலை நிர்ணயம் செய்கிறார்கள்; தஞ்சை விவசாயிகளின் புதிய முயற்சி!

தமிழக நலன்களுக்காகவா ஜெயிலுக்கு சென்றீர்கள் சசிகலா..?

திருமதி.சசிகலா நடராஜனுக்கு வணக்கம்... உங்கள் உடன்பிறவா சகோதரி ஜெயலலிதா, முதன் முதலாக ஆட்சிக்கு வந்தபோது எனக்கு ஐந்து வயது. அந்த வயதிலேயே அரசியலா ? என்று ஆச்சர்யப்பட வேண்டாம். ஆயிரத்தில் ஒருவன் எம்ஜிஆரையும், அம்பேத்கரையும் ஒரே இடத்தில் வைத்து வழிபட்ட, மிக ஒடுக்கப்பட்ட சமூகத்தின், கழக வாரிசு நான். (அதிமுகவின் சிறந்த அடிமைகள், அதுவும் பரம்பரை அடிமைகள் எங்கள் சாதியினர்தான். அது தெரியுமா உங்களுக்கு ? ) அந்த ஐந்து வருட ஆட்சி முடிவுக்கு வந்த காலத்தில், … Continue reading தமிழக நலன்களுக்காகவா ஜெயிலுக்கு சென்றீர்கள் சசிகலா..?

ஜல்லிக் கட்டு: அனைத்து தமிழர்களின் பண்பாடா ? மரபா? விளையாட்டா ?

சந்திரமோகன் PETA போன்ற அமைப்புகள் முன் வைக்கும் விலங்குகள் வதை, மனித நலன் என்ற விவாதம் இதுவல்ல! பாரதீய ஜனதா,காங்கிரஸ், அ.இ.அ.தி.மு.க, திமுக, மதிமுக, பா.ம.க, விசிக, தமிழ் அமைப்புகள், சிபிஐ,சிபிஎம்'மில் துவங்கி லிபரல் மா.லெ தமிழ் தேசிய குழுக்கள் வரையிலுமான பல வண்ண முற்போக்கு அமைப்புகள் வரை, "ஜல்லிக்கட்டு"க்கு கொடி பிடித்துள்ளனர். 'சல்லிக்கட்டு' மொத்த தமிழ் சமூகத்தின் பண்பாடா, பாரம்பரியமா? அனைத்துத் தமிழர்களின் வீர விளையாட்டா? சங்க காலப் பண்பாடும், ஆயர்குடிகளும், ஏறு தழுவுதலும்... ஐந்திணைகளில் (குறிஞ்சி,முல்லை, … Continue reading ஜல்லிக் கட்டு: அனைத்து தமிழர்களின் பண்பாடா ? மரபா? விளையாட்டா ?

ஜெ. கதாபாத்திரத்திற்கு யார் பொருத்தமாக இருப்பார்? ஜெயலலிதாவே தேர்வு செய்த நடிகை யார் தெரியுமா..?

“ராண்டேவூ வித் சிமி” என்கிற நிகழ்ச்சி மட்டுமே இன்று வரை ஜெயலலிதாவின் சிறந்த பேட்டியாக கணிக்கப்படுகிறது. எடிட் செய்யப்படாத அந்த பேட்டியின் முழு பதிப்பையும், ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், நிகழ்ச்சி தொகுப்பாளர் சிமி தன்னுடைய யூ டியூபில் வெளியிட்டு இருக்கிறார். வெளிவராத இந்த பகுதியில் மிக சுவாரஸ்யமான, கூடுதல் வெளிப்படையான ஜெயாவை பார்க்க முடிகிறது. அதையும் உங்களுக்காக தமிழில் மொழி பெயர்த்து அளித்திருக்கிறோம். சிமி: உங்களின் வாழ்க்கை திரைப்படமாக்கப்பட்டால், ஜெயலலிதா வேடத்தில் யார் நடிக்க வேண்டும் ? … Continue reading ஜெ. கதாபாத்திரத்திற்கு யார் பொருத்தமாக இருப்பார்? ஜெயலலிதாவே தேர்வு செய்த நடிகை யார் தெரியுமா..?

மாடு தழுவல் எனும் ஏறு தழுவுதல்: வேளாண் உற்பத்தியின் நிகழ்த்துச் சடங்கு

மகாராசன் அய்வெளி சூழ்ந்த இந்நிலப் பேரண்டத்தில் உயிரினங்களாகத் தோன்றியிருக்கும் நீர் மற்றும் நிலத்து வாழ் உயிரினங்களான பயிர்கள், பூச்சிகள்,பறவைகள்,விலங்குகள்,மனிதர் உள்ளிட்ட எல்லா உயிரினங்களுக்கும் உடலியல் உணர்வாகவும் தேவையாகவும் அமைந்திருப்பது பசி தான். மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின் கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும் பசி வந்திடப் பறந்து போம் எனப் பசி வந்தால் பத்தும் போகும் என்று மனிதரின் பசி குறித்துப் பேசுகிறது நல்வழி நூல். இந்தப் … Continue reading மாடு தழுவல் எனும் ஏறு தழுவுதல்: வேளாண் உற்பத்தியின் நிகழ்த்துச் சடங்கு

வி.என்.சசிகலா யாருடைய ஆள்? ; 20 வருடங்களுக்கு முன் வலம்புரி ஜான் எழுதியது உண்மையா?

பிரபல எழுத்தாளர், பேச்சாளர், அதிமுக முன்னாள் எம்பி,  வலம்புரி ஜான் எழுதிய "வணக்கம்" புத்தகத்தில் இருந்து சில வரிகள்..... "சீவகசிந்தாமணி காப்பியத்தில் வரும் சச்சந்தனைப் போல், தான் வீழ்வது தெரியாமலே வீழ்ந்து வருகிறார். படோபகரமான முதல்வராக இருந்தாலும், சசிகலா, நடராஜன் என்கிற கடற்கொள்ளையர்களின் கரங்களில் அகப்பட்ட அடிமைப் பெண்ணாகத்தான் இருக்கிறார். ஜெ.,யின் விசுவாசமிக்க ஊழியர்களை, ஒவ்வொருவராக பழிவாங்கி, உடன் பிறந்த சகோதரன் ஜெயக்குமாரை கூட, ஜெ.,யோடு சேர விடாமல் செய்து, உண்மைகளை அறிய விடாமல் செய்தனர்.தங்களுக்கு சகாயம் … Continue reading வி.என்.சசிகலா யாருடைய ஆள்? ; 20 வருடங்களுக்கு முன் வலம்புரி ஜான் எழுதியது உண்மையா?

கீழ்வெண்மணியில் நடந்தது என்ன?: ஓர் வரலாற்று ஆவணம்

சந்திரமோகன் “இந்திய கிராமங்கள் மிகவும் புராதனமானவை. நிலம் சமூகத்தின் பொதுச் சொத்தாக இருக்கிறது. விவசாயமும், கைத்தொழில்களும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், வேலைப் பிரிவினைகள் மாற்ற முடியாத வகையில் கலாச்சார தர்மப்படி ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன என்று கூறிய கார்ல் மார்க்ஸ், ´நியூயார்க் ட்ரிப்யூன்´ பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் “இந்தியாவின் சமுதாய அமைப்பைப் புரிந்து கொள்ள கிராமத்தின் அமைப்பைப் புரிந்து கொள்வதுதான் முக்கியமானது” என்கிறார். வர்க்கப் போராட்டம் இந்தியாவைப் பொருத்தவரை சாதியத் தன்மையும் கொண்டிருக்கிறது..... தமிழ்நாட்டில் நடந்த வர்க்கப்போராட்டங்களில் சாதியப் போராட்டத்தின் … Continue reading கீழ்வெண்மணியில் நடந்தது என்ன?: ஓர் வரலாற்று ஆவணம்

சென்னைக்குத் தேவை அதன் நுரையீரலே: சூழலியலாளர் நக்கீரன்

நக்கீரன் சென்னையில் அடித்த புயலில் ஆயிரக்கணக்கில் மரங்கள் வீழ்ந்து விட்டன. இயற்கையாக வீழ்ந்த மரங்களோடு மீட்பு படையினர் வருவதற்கு முன்னதாக ஆங்காங்கே செயற்கையாகவும் மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டதாக ஊடகத் தோழர் ஒருவர் தெரிவித்தார். இச்செய்கை பச்சை அயோக்கியத்தனமானது. வருங்காலத்தில் திரும்பவும் புயலடித்தால் இம்மரங்கள் தங்கள் இடத்தின் மேல் வீழ்ந்து விடாதிருக்க இந்த முன்னெச்சரிக்கை ஏற்பாடாம். மரங்களற்ற சென்னை எப்படி அமையும் என்பது உங்களுக்குத் தெரியுமா? கான்கிரீட் கட்டிடங்கள் நிறைந்த ஒவ்வொரு நகரமும் ஒரு வெப்ப தீவுதான். குறைந்த … Continue reading சென்னைக்குத் தேவை அதன் நுரையீரலே: சூழலியலாளர் நக்கீரன்

தமிழ்நாட்டில் “அரசியல் வெற்றிடம்”: பகுதி -2

அருண் நெடுஞ்செழியன் இந்துதேசியவாதத்திற்கு எதிரான பாட்டாளி வர்க்கத்தின் சுயநிர்ணய உரிமைக்கான அரசியல் போராட்டம். நிலவுகிற முதலாளித்துவ அரசியல் அமைப்பிற்கு சேவை செய்கிற குறிப்பான அரசியல் கட்சித் தலைமையின் மரணம், எந்தவகையிலும் பாட்டாளி வர்க்க அரசியலில் வெற்றிடத்தை உருவாக்கவில்லை எனப் பார்த்தோம். அதேநேரத்தில், அதிமுக கட்சித் தலைமையின் மரணத்திற்கு முன்பாக,மருத்துவமனையில் கவலைக்கிடமாக ஜெயா அம்மையார் அனுமதிக்கப்பட்டபோதே, பாசகா எனும் இந்துத்துவ தேசியவாத கட்சியின் பிடியில் அதிமுக முகாம் உள்வாங்கப்படுகிற நிகழ்வுப்போக்கானது கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாகவே தொடங்கிவிட்டது. ஜெயா … Continue reading தமிழ்நாட்டில் “அரசியல் வெற்றிடம்”: பகுதி -2

“அரசியல் வெற்றிட” கோஷம் எந்த வர்க்கத்திற்கானது? பகுதி -1

அருண் நெஞ்செழியன் ஜெயா அம்மையாரின் மரணத்திற்குப் பிந்தைய சூழலில், தமிழ்நாட்டில் “அரசியல் வெற்றிடம்” பற்றின விவாதம் மேலெழும்பி வருகிறது.விவாதத்தின் குவிமையாக முறையே அதிமுக கட்சியின் அரசியல் எதிர்காலம், தமிழக அரசியிலில் பசகவின் தலையீடு என்ற பிரச்சனை விவாதிக்கப்படுகின்றன. முதல் பிரச்சனையில் கட்சியின் அதிகார மையம் என்ற கேள்வியில் சசிகலா குடும்பம், பன்னீர்செல்வம், மற்றும் பிற திரை மறை கோஷ்டிகளுக்கு இடையே ஆன இணை/பகை முரண்பாடுகள் ஒருபக்கம். இரண்டாம் பிரச்சனையில், மைய அரசின் கொள்கை முடிவுகளை தமிழகத்தில் அமுலாக்கல், … Continue reading “அரசியல் வெற்றிட” கோஷம் எந்த வர்க்கத்திற்கானது? பகுதி -1

இந்த அரசியல் நெருக்கடியை தமிழகம் எப்படி எதிர்கொள்ளப் போகிறது?

முதலமைச்சர் ஜெயலலிதா கவலைக்கிடமான நிலைமையில் நீடிப்பதாக அப்பலோ மருத்துவமனை செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. அப்பலோ மருத்துவமனையில் அவசரமாக கூடிய அதிமுக எம் எல் ஏக்கள் முக்கிய முடிவுகள் எடுத்ததாக ஊடகங்கள் பரபரப்புகின்றன. இந்நிலையில் மாநில பொறுப்பு ஆளுநரும், மத்திய அரசு பிரதிநிதிகள் மட்டுமே முதலமைச்சரின் உடல்நிலை குறித்து தகவல்கள் அளிக்கின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளும் அதிமுக அரசின் முதலமைச்சரை தவிர்த்த பிரதிநிதிகள் மவுனத்தையே சாதித்து வருகிறார்கள். தமிழக அரசு நிர்வாகம் நெருக்கடியை சந்தித்து வருவதாக தொடர்ந்து விமர்சனங்கள் வருகின்றன. … Continue reading இந்த அரசியல் நெருக்கடியை தமிழகம் எப்படி எதிர்கொள்ளப் போகிறது?

புல்லட் ரயில் கொண்டு வருவதுபோலவே, இந்தியாவை ரொக்கப் பரிமாற்றமற்ற பொருளாதாரமாக மாற்றுவதும் மேட்டுக்குடி கற்பனை!

500, 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியாகி இரண்டு வாரங்களாகிவிட்டன. நாட்டில் புழக்கத்தில் இருந்த மொத்த பணத்தின் மதிப்பில் 80%அய் ஒரே நடவடிக்கையில் அரசாங்கம் திரும்பப் பெற்றுவிட்டது. இப்படி திரும்பப் பெற்றது மிகப்பெரிய அளவிலும் உடனடியாகவும் நடந்தபோது, புதிய தாள்களை புகுத்துவது வலி தரும் அளவுக்கு மந்தமாக இருந்தது. மொத்த பணத்தில் 10% மட்டுமே முதல் பத்து நாட்களில் திரும்பப் புகுத்தப்பட்டுள்ளது. அதுவும் 2000 ரூபாய் தாள்களாகவே உள்ளது. இதன் விளைவாக ரொக்கத்துக்கு கடுமையான … Continue reading புல்லட் ரயில் கொண்டு வருவதுபோலவே, இந்தியாவை ரொக்கப் பரிமாற்றமற்ற பொருளாதாரமாக மாற்றுவதும் மேட்டுக்குடி கற்பனை!

ஏன் சில்லறை வணிகர்கள் குறிவைக்கப்படுகிறார்கள்? : மோடி நிகழ்த்திய பொருளாதாரப் பேரழிவு – 4

கௌதம சன்னா மோடி பேசும் பொய்களை நம்புவதற்கும் அதை பரப்புவதற்கும் அவரது அடிபொடிகள் தயாராக இருக்கலாம் ஆனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஏன் அப்படி இருக்க வேண்டும். ரூபாய்களை ரத்துச் செய்ததால் விலைகள் குறையும் என்று நம்பச் சொல்கிறார் மோடி. அது நடப்பதற்கு சாத்தியம் இல்லை மாறாக ஒட்டுமொத்த நாசம்தான் விளையப் போகிறது. போன கட்டுரையில் சில்லறை வணிகம் எப்படி அடித்தட்டு மக்களை பாதித்து சீரழிக்கும் என்பதை பார்த்தோம். இந்த கட்டுரையில் ஏன் சில்லறை வணிகம் மோடியினால் குறிவைக்கப்படுகிறது … Continue reading ஏன் சில்லறை வணிகர்கள் குறிவைக்கப்படுகிறார்கள்? : மோடி நிகழ்த்திய பொருளாதாரப் பேரழிவு – 4

கரன்சியில் நடத்திய நாடகம்: மோடி நிகழ்த்திய பொருளாதாரப் பேரழிவு-2

கௌதம சன்னா ஜப்பானுக்கு விமானம் ஏறிய மோடி படியில் நின்று புன்னகைத்தவாறு கையசைத்தத் தோற்றத்ததைப் பார்த்த போது, ஓர் அமெரிக்க சிப்பாய் இந்தியாவின் மீது அணு குண்டை வீசிவிட்டு பெருமிதத்தோடு தப்பி ஓடுவதைப் போலத் தோன்றியது. ஒரு பொருளாதாரப் பேரழிவை நிகழ்த்திவிட்டு எந்தவிதமான பதட்டமும் இல்லாமல் அவர் காணப்படுவதைப் போலவே அவரது தேச பக்தர்களும் இருப்பது ஆச்சர்யம்தான். மோடி எதற்காக புதிய கரன்சிகளை அச்சிட்டு வெளியிட்டார் என்பது எல்லோருக்கும் தெரிந்த ரகசியம்தான்.. மக்களின் தேவைகளை பார்த்து அவற்றை … Continue reading கரன்சியில் நடத்திய நாடகம்: மோடி நிகழ்த்திய பொருளாதாரப் பேரழிவு-2

பங்கு சந்தை வீழ்ச்சி: மோடி நிகழ்த்திய பொருளாதாரப் பேரழிவு-1

கௌதம சன்னா யாரும் எதிர்பாராத நேரத்தில் கொரில்லாத் தாக்குதலைப் போல மோடியால் நிகழ்த்தப்பட்ட இந்த ரூபாய் மாற்றம் எனும் பொருளாதாரத் தாக்குதலின் சிதைவுகளை, விளைவுகளை பார்ப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை. சீர்திருத்தம் என்ற இந்த மாயையின் பின்னால் திரளும் தேச பக்தர்களின் அறிவுக்கு எட்டாத பகுதிகளுக்கு போவது நமது கடமை.. அன்டிலியா என்பது மும்பையின் நடுவில் வானைத் துருத்திக் கொண்டு நிற்கும் 11000ம் கோடி ரூபாய் மதிப்புள்ள உலகின் ஓர் அதிக விலையுள்ள 26 அடுக்கு மாடி … Continue reading பங்கு சந்தை வீழ்ச்சி: மோடி நிகழ்த்திய பொருளாதாரப் பேரழிவு-1

வர்க்கப் பிரச்சனைகளை புறந்தள்ளிவிட்டு தலித் இயக்கம் முன் செல்ல முடியாது: ஜிக்னேஸ் மேவானி

உனா தலித் அத்யாச்சார் லதாய் சமிதி (Una Dalit Atyachar Ladhai Samiti) தலைவர் ஜிக்னேஷ் மேவானி நேர்காணலின் கட்டுரை வடிவம் தமிழில்: சி. மதிவாணன் தலித்துகள் தங்களை அணிதிரட்டிக்கொள்கிறார்கள் என்பது மிகவும் முக்கியமானது. அதேசமயம், அம்பேத்கரிய இயக்கங்கள் மத்தியில் கடுமையான முட்டல்- மோதல் நடந்துகொண்டிருக்கிறது. இளைஞர்கள் இயக்கங்களை நோக்கிப் பெருமளவில் ஈர்க்கப்படுகிறார்கள். ரோஹித் வெமுலாவிற்குப் பின்பு, ஜவஹர்லால பல்கலைக்கழக சம்பவங்களுக்குப் பின்பு, புனே திரைப்படக் கல்லூரி நிகழ்வுகளுக்குப் பின்பு இளைஞர்கள் பெருமளவில் இயக்கங்களை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். நாட்டில் … Continue reading வர்க்கப் பிரச்சனைகளை புறந்தள்ளிவிட்டு தலித் இயக்கம் முன் செல்ல முடியாது: ஜிக்னேஸ் மேவானி

”ஏன் பௌத்தம் தழுவினேன்?”: அம்பேத்கரின் உரை

1956 -ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி நவ இந்தியாவின் வரலாற்றில் ஒரு மறக்க முடியாத தினமாகும். ஏனென்றால் இந்த தினத்தில்தான் டாக்டர் அம்பேத்கரும் அவருடைய 5,00,000 ஆதரவாளர்களும் திரிசரணத்தையும் பஞ்ச சீலத்தையும் பாராயணம் செய்து பகிரங்கமாக புத்த மதத்தை தழுவினர். மகாராஷ்டிரா பிரதேசத்தைச் சேர்ந்த நாகபுரி நகரில் 14 ஏக்கர் காலி நிலத்தில் இந்த மாபெரும் நிகழ்ச்சி நடைபெற்றது. டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் தாம் மதம் மாறியது சம்பந்தமான சொற்பொழிவை  1956 அக்டோபர் 15 ஆம் … Continue reading ”ஏன் பௌத்தம் தழுவினேன்?”: அம்பேத்கரின் உரை

உறவுகளை கேள்விக்குள்ளாக்கும் அதிரடி எழுத்து; எழுத்தாளர் ஜெயலலிதாவின் நாவல் பற்றிய விமர்சனம்…

அதிஷா முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் ஜெயலலிதா என்றொரு எழுத்தாளர் இருந்தார். அவர் எண்பதுகளில் கல்கியிலும் குமுதத்திலும் இரண்டு முழுநீள நாவல்களை எழுதியவர். சிறுகதைகளும் கவிதைகளும் எழுதியுள்ளாரா என்பது தெரியவில்லை. திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்று தமிழகம் அறிந்த நடிகையாக வாழ்ந்த நாட்களில் எழுதியவை அந்த இரண்டு நாவல்களும்.  பின்னாளில் அவர் புரட்சித் தலைவியாகி தமிழக முதல்வர் ஆனதெல்லாம் வரலாறு. அவர் எழுத்தாளராக இருந்தார் என்பதுதான் ஆச்சர்யமான செய்தி. எழுத்தாளராகவே இருந்திருக்கலாம்! ஜெ எழுதிய இந்நாவல் குறித்து கேள்விப்பட்டிருந்தாலும் அது … Continue reading உறவுகளை கேள்விக்குள்ளாக்கும் அதிரடி எழுத்து; எழுத்தாளர் ஜெயலலிதாவின் நாவல் பற்றிய விமர்சனம்…

காவிரி பிரச்சினை: மோடி அரசே முதன்மை குற்றவாளி!

மக்கள் கலை இலக்கியக் கழகம் கடந்த பதினைந்து நாட்களாக கர்நாடகாவில் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இவ்வளவு நடந்த பிறகும் பிரதமரோ, இந்தியாவின் உட்சப்பட்ச அதிகார அமைப்பான உச்சநீதி மன்றமோ இப்பிரச்சினையில் தலையிடவில்லை. கர்நாடக முதல்வர் எட்டு முறை கடிதம் எழுதியும் மோடியிடமிருந்து பதில் இல்லை. நேரில் சந்திக்கவும் அனுமதிக்கவில்லை. வன்முறைக்கு யார் காரணம்? காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீரை திறந்துவிடுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு தான் தமிழர்கள் மீதான தாக்குதல்கள் துவங்கின. தமிழர்களின் … Continue reading காவிரி பிரச்சினை: மோடி அரசே முதன்மை குற்றவாளி!

திறக்க மறுக்கப்படும் சிறைக்கதவுகள்; இந்திய சிறைகளில் முஸ்லிம்கள்!

அபூஷேக் முஹம்மத் இந்தியா முழுவதும் உள்ள சிறைகளில் 3 லட்சத்து 81 ஆயிரம் பேர் கைதிகளாக உள்ளனர். இவர்களில் 2 லட்சத்து 54 ஆயிரம் பேர் விசாரணை கைதிகள் ஆவார்கள். விசாரணை கைதிகளில் மக்கள் தொகை கணக்கீட்டின்படி மற்ற மதத்தினரை விட முஸ்லீம்களே அதிக அளவில் உள்ளனர். விகிதாச்சாரபடி இந்துக்களை விட முஸ்லிம்கள் 2 மடங்கு உள்ளனர். 21 சதவீத முஸ்லிம்கள் விசாரணை கைதிகளாக இந்தியா முழுவதும் உள்ள சிறைகளில் உள்ளனர். இதில் உத்தரபிரதேசம், பீகார், மராட்டியம், … Continue reading திறக்க மறுக்கப்படும் சிறைக்கதவுகள்; இந்திய சிறைகளில் முஸ்லிம்கள்!

பணம், பணம் அல்லது மூங்கில் -அதுதான் பியூஸ்! ஆதாரங்களுடன் ஒரு பதிவு

சந்திரமோகன் மனித உரிமைகள் /மாண்புகளை மதிக்கிறேன். சிறைக்குள் பியூஸ் மீது தாக்குதல் நடைபெற்றதாக அறிந்த பின்னர், "கண்டிக்கிறேன் " எனப் பதிவு செய்திருந்தேன். அதை மறு உறுதி செய்கிறேன். விரிவான விமர்சனம் தேவை என பியூஸ் ஆதரவாளர்கள், ஊடக நண்பர்கள் சிலர் கேட்டுக் கொண்டதற்கு ஏற்ப இக் குறிப்புரைகளை பதிவு செய்கிறேன். அவர் ஜாமீனில் வெளிவந்த பிறகுதான் எழுதுகிறேன். "நிறைய வியாபாரம், கொஞ்சம் சண்டை -இதுதான் பியூஸ்" எனவும், "மூங்கில், நிலம், நீர் சார்ந்த சாமர்த்தியமான வியாபாரி … Continue reading பணம், பணம் அல்லது மூங்கில் -அதுதான் பியூஸ்! ஆதாரங்களுடன் ஒரு பதிவு

இந்துத்துவ பிரச்சாரத்தை முன்னெடுக்கும் அஷுதோஷ் கோவரிகரின் மொஹஞ்சதாரோ; வரலாறு என்பது இதுவல்ல!

Ajoy Ashirwad Mahaprashasta இயக்குநர் அஷுதோஷ் கோவரிகரின் நல்ல சினிமாவுக்கான தேடல், பிரம்மாண்ட அரங்க வடிவமைப்பு, மிகப் பெரிய நட்சத்திரங்கள் என்பதாக முடிந்திருக்கிறது. ஹிந்தி பட இயக்குநர்கள், திடீரென, வரவேற்புக்குரிய வகையில் வரலாற்று நிகழ்வுகள் மீது ஆர்வம் வந்திருக்கிறது. இவர்களுடைய வரலாற்றுப் பார்வையில் உள்ள கோளாறுகள், மேம்பட்ட பார்வையாளர்களுக்கு இது கசப்பை சுவைத்தது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. சஞ்சய் லீலா பன்சாலியின் பாஜிராவ் மஸ்தானி சளைக்காத ஹிந்து போர்வீரனாக வடிவமைக்கப்பட்டார். காவிக் கொடி ஏந்தி, இந்தியாவின் எதிரிகளான … Continue reading இந்துத்துவ பிரச்சாரத்தை முன்னெடுக்கும் அஷுதோஷ் கோவரிகரின் மொஹஞ்சதாரோ; வரலாறு என்பது இதுவல்ல!

இந்து புராண புரட்டுகள் மூலம் அசுரனாக்கப்பட்ட மகிஷன் ஒரு பவுத்த அரசன்: பேராசிரியர் குருவின் ஆய்வுக் கட்டுரை

மைசூர் அல்லது மகிஷ மண்டலா ராஜாங்கத்தின் மிகச் சிறந்த ஆட்சியாளராக இருந்தவர் மகிஷா. புத்தமத கலாச்சாரத்திலும் மரபிலும் வந்த மகிஷா, மனிதநேயத்தையும் ஜனநாயக கொள்கைகளையும் தனது ஆளுடையில் பின்பற்றினார். ஆனால், கர்நாடகத்தின் கலாச்சார மற்றும் அறிவுசார் தலைநகரமான மைசூரை, புராணங்கள் மூலம் பார்ப்பன சக்திகள் திட்டமிட்டே புதைத்தனர் என்கிறார் பேராசிரியர் மகேஷ் சந்திர குரு. விரைவில் வெளிவரவிருக்கும்  Mahishasur: Brahmanizing a Myth என்ற நூலிலிருந்து இந்த கட்டுரையை ஃபார்வர்டு பிரஸ் வெளியிட்டுள்ளது. அதன் தமிழாக்கம் இங்கே: மகிஷ … Continue reading இந்து புராண புரட்டுகள் மூலம் அசுரனாக்கப்பட்ட மகிஷன் ஒரு பவுத்த அரசன்: பேராசிரியர் குருவின் ஆய்வுக் கட்டுரை

“எங்களுக்குப் பின்னும் தமிழ் சினிமாவில் முள்ளும் மலரும் தொடரும்”: பாலுமகேந்திரா

பூனே திரைப்பட கல்லூரியின் ஒளிப்பதிவு துறையில் என் மூன்று வருட படிப்பை 1969-ல் முடித்துக் கொள்கிறேன். எவரிடமும் உதவி ஒளிப்பதிவாளராக வேலை பார்க்காமலே 1971-ல் ஒளிப்பதிவாளராக பணியாற்றத் துவங்குகிறேன். பணியாற்றிய முதல் படம் “நெல்லு” இது மலையாளப்படம். இதன் இயக்குனர் ராமு கரியத். முதல் படத்திலேயே கேரள அரசின் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது எனக்குக் கிடைக்கிறது. 71 -முதல் 75 வரை ஐந்து வருடங்கள் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றுகிறேன். பெரும்பாலானவை மலையாளப் படங்கள். இந்த ஐந்து வருடங்ளுக்குள் மூன்று … Continue reading “எங்களுக்குப் பின்னும் தமிழ் சினிமாவில் முள்ளும் மலரும் தொடரும்”: பாலுமகேந்திரா

கேரள கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் சுரண்டலுக்கு எதிராக இவர்கள் வெற்றி பெற்றது எப்படி?

தமிழகத்தின் சரவணா ஸ்டோர்ஸ், போத்தீஸ் போன்ற விற்பனை நிறுவனங்களில் அடிப்படையான எவ்வித உரிமைகளும் கிடைக்கப் பெறாமல் ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் வதைபடுகிறார்கள். சம்பளம், வேலை நேரம் உள்ளிட்ட விஷயங்களில் இதுபோன்ற நிறுவனங்கள் எவ்வித ஒழுங்கையும் பேணுவதில்லை. கொத்தடிமைகளைப் போலவே தங்களுடைய ஊழியர்களை வைத்திருக்கின்றன. தொழிலாளர்கள் ஒன்றுபட்டு போராடாடுவதன் மூலமே இத்தகைய ஒடுக்குமுறைகளை சுரண்டல்களை ஒழிக்க முடியும் என நிரூபித்த கேரள கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவன ஊழியர்கள் போராடி பெற்ற வெற்றியை உதாரணமாகக் கொள்ள வேண்டும். கேரளத்தில் முன்னணி … Continue reading கேரள கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் சுரண்டலுக்கு எதிராக இவர்கள் வெற்றி பெற்றது எப்படி?

இந்தியாவில் பில்லியனர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு; என்ன காரணம்? பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா எழுதுகிறார்

பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா பணக்காரர்கள் மீது வரியும் போடமாட்டோம், பொதுத்துறை பங்குகளையும் சகாய விலையில் அவர்களிடம் ஒப்படைப்போம் என்ற அரசின் கொள்கை பொதுத்துறையை பற்றி வைத்துள்ள அணுகுமுறை இதுதான்: ‘லாபத்தில் செயல்பட்டால் விற்று விடு, நட்டத்தில் இருந்தால் மூடி விடு’ வழக்கம் போல் மத்திய நிதி அமைச்சர் ஜெட்லி பிப்ரவரி இறுதி நாள் பட்ஜெட்டை சமர்ப்பித்தார். ஆனால் இதற்கு ஒருமாதம் முன்னதாகவே, முதலாளித்துவ பத்திரிகைகளிலும் தொலைக் காட்சி மற்றும் சமூக ஊடகங்களிலும் இந்த பட்ஜெட் எப்படி இருக்கவேண்டும் … Continue reading இந்தியாவில் பில்லியனர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு; என்ன காரணம்? பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா எழுதுகிறார்

பெங்களூரு கழிவில் மிதக்கும் நகரம்!

வா. மணிகண்டன் அல்சூர் ஒரு காலத்தில் தமிழர்களின் பேட்டை. இப்பொழுதும் கூட தமிழர்கள்தான் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். அந்தக் காலத்தில் கவிஞர் கண்ணதாசன் இங்கே ஒரு வீடு வைத்திருந்தாராம். பங்களா. அவரிடம் சாவியை வாங்கிக் கொண்டு அந்தக் காலத்து நடிகர்கள் வந்து குடித்து கும்மாளமடித்துவிட்டுச் செல்வார்களாம். மலை வாசஸ்தலத்தைப் போன்ற குளிரும் மரங்களும் பெங்களூருவை நோக்கி நடிகர்களை ஈர்த்திருக்கின்றன. அவை தவிரவும் ஏகப்பட்ட காரணங்கள் இருந்திருக்கக் கூடும். யாருக்குத் தெரியும்? கும்மாளமடிப்பதோடு நில்லாமல் வீட்டை நாறடித்து விடுவார்களாம். பார்க்கும் … Continue reading பெங்களூரு கழிவில் மிதக்கும் நகரம்!