எவிடென்ஸ் கதிர் மதுரை - பேரையூர் அருகில் உள்ள வீராளம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுகன்யா. அகமுடையார் சமூகத்தை சேர்ந்தவர். இவரும் ஈரோடு அருகில் சித்தோடு பகுதியை சேர்ந்த பூபதி என்பவரும் காதலித்து வந்து உள்ளனர். இந்த காதலுக்கு சுகன்யாவின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததனால் கடந்த ஜனவரி 2017 மாதம் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டு உள்ளனர். பூபதி நாடார் சமூகத்தை சேர்ந்தவர். கடந்த ஏப்ரல் மாதம் பூபதியிடம் சுகன்யா குடும்பத்தினர், இங்கு கோவில் திருவிழா … Continue reading மீண்டும் ஒரு ஆணவக் கொலை; சாம்பலாக்கப்பட்ட சுகன்யா
பகுப்பு: சாதி கொலைகள்
8 மாத குழந்தை பாலியல் கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதில் காதல் எங்கிருந்து வந்தது? ராமதாஸுக்கு ஜி. ஆர். கேள்வி
பெண்களின் பாதுகாப்பு குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அனைத்துக் கட்சியினருக்கும் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பதில் அளித்துள்ளது. அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் இதுகுறித்து விடுத்துள்ள அறிக்கையில், “பெண்களின் பாதுகாப்பு குறித்து அரசியல் கட்சிகள் குரல் கொடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும், சில ஆலோசனைகளையும் உள்ளடக்கிய உங்கள் கடிதம் கிடைத்தது. நன்றி. பெண்கள் மீதான வன்முறை பல வகைப்பட்டது. பெண் என்பதால் வரும் பாலியல் தாக்குதல்; தொழிலாளி, விவசாயி, அலுவலக ஊழியர் … Continue reading 8 மாத குழந்தை பாலியல் கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதில் காதல் எங்கிருந்து வந்தது? ராமதாஸுக்கு ஜி. ஆர். கேள்வி
ஒரு செய்தியின் அடிப்படையிலான விவாதத்திற்காக குணசேகரன் ஏன் மன்னிப்புக்கோர வேண்டும்?: மனுஷ்யபுத்திரன்
மனுஷ்யபுத்திரன் விழுப்புரம் செந்தில் என்பவர் நவீனா என்ற பெண்ணை ஒருதலையாய் காதலித்து அந்தப்பெண் மறுத்தன் விளைவாக நாட்களுக்கு முன்பு தன்னைத்தானே கொளுத்திக்கொண்டு நவீனாவிற்கும் தீக்காயங்களை நான்கு நான்கு நாட்களுக்கு முன்பு ஏற்படுத்தினார் . செந்தில் அன்றே இறந்துவிட்டார். இது குறித்து கடந்த ஞாயிறு அன்றே நானும் பத்ரியும் புதிய தலைமுறையில் விவாதித்தோம். 70 சதத் தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நவீனாவும் இன்று மரணமடைந்தார். சென்ற ஆண்டே இந்த விவகாரம் வேறொரு கோணத்தில் பிரச்சினையாக மாறியது. அப்போது … Continue reading ஒரு செய்தியின் அடிப்படையிலான விவாதத்திற்காக குணசேகரன் ஏன் மன்னிப்புக்கோர வேண்டும்?: மனுஷ்யபுத்திரன்
சாதி மறுப்பு திருமணம் செய்த இளம்பெண் படுகொலை
நாமக்கல்லில் சாதி மறுப்பு மற்றும் காதல் திருமணம் செய்து கொண்ட இளம்பெண் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட கொடூரம் நடந்துள்ளது.இது சாதி ஆணவக் கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் தில்லைபுரம் பிள்ளையார் கோயில் தெருவில் வசிப்பவர் சந்தோஷ். இவரது மனைவி சுமதி. இவர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புகாதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது குடும்பத்தில் இத்தம்பதியினரை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனிடையே தனியார் … Continue reading சாதி மறுப்பு திருமணம் செய்த இளம்பெண் படுகொலை
துரை குணாவின் ஊரார் வரைந்த ஓவியம் ஒரு வாக்குமூலம் போன்ற குறுநாவல்: தர்மினி
தர்மினி 'கலகத்தை முதலில் தன் குடும்பத்திலிருந்தும் தன் உறவு முறைகளிடமிருந்தும் சொந்தச் சாதிக்குள்ளிருந்தும் தான் தொடங்கவேண்டும். எனக்கு அப்படித்தான் தொடக்கம்...’ என எழுதும் துரை. குணா நேற்று அதிகாலை காரணமெதுவும் சொல்லாமல் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டிருக்கிறார். ‘ஊரார் வரைந்த ஓவியம்’ என்ற நூலை வெளியிட்டதனால் தன் சொந்த ஊருக்குள்ளேயே விலக்கப்பட்டுத் துரத்தப்பட்டதை அதனால் அவரும் அவரது குடும்பத்தினரும் படும் துயரையும் எதிர்கொள்ளும் வழக்குகள் தடைகளைத் தொடர்ச்சியாகத் தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டு வருவதை காண்கிறோம்.கடந்த ஏப்ரல் 5ம் … Continue reading துரை குணாவின் ஊரார் வரைந்த ஓவியம் ஒரு வாக்குமூலம் போன்ற குறுநாவல்: தர்மினி
ஜுன் 28: கோகுல்ராஜ் மரணத்துக்கு நீதி தரும் நாளாக இருக்குமா?
வன்னியர் சாதி பெண்ணை காதலித்து, மணந்தார் என்பதற்காக அலைக்கழிக்கப்பட்ட அந்த இளைஞர் தருமபுரி ரயில் தண்டவாளத்தில் உடல் துண்டாகிக் கிடந்தார். அவர் இளவரசன். தற்கொலை வழக்காக சொல்லப்பட்டு கொலை வழக்காக விசாரணை நடந்து வரும் நிலையில் இளவரசனின் மரணத்துக்குக் காரணமானவர்களுக்கு கிடைக்க வேண்டிய தண்டனையும் நீதியும் எந்த திசையில் இருக்கிறது என்றே தெரியவில்லை. இந்நிலையில் திருச்செங்கோடில் பொறியியல் படித்துக்கொண்டிருந்த கோகுல்ராஜின் கொலை நடந்தேறியது. இதுவும் தண்டவாளத்தில் நடந்த கொலைதான். இந்த முறை கவுண்டர் சாதி அவரைக் கொன்றதில் பெருமைத் … Continue reading ஜுன் 28: கோகுல்ராஜ் மரணத்துக்கு நீதி தரும் நாளாக இருக்குமா?
கௌரவக் கொலைகளைத் தடுக்க சட்டம் இயற்றக் கோரி வழக்கு:அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் நடைபெறும் கௌரவக் கொலைகளைத் தடுப்பதற்கு புதிய சட்டத்தை இயற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய மக்கள் மன்றத்தின் நிறுவனத் தலைவர் வாராகி தாக்கல் செய்த மனுவில் , “தமிழகத்தில் மாறி மாறி திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்துள்ளன. ஆனால், இந்தக் கட்சிகள் கௌரவக் கொலைகளை தடுப்பதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சுயநலப் போக்குடன்தான் திராவிட கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. … Continue reading கௌரவக் கொலைகளைத் தடுக்க சட்டம் இயற்றக் கோரி வழக்கு:அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
சாதி மறுப்பு திருமணத்துக்கு உதவியதாக கர்ப்பிணிப் பெண் சாதி வெறியர்களால் வெட்டிக் கொலை!
தலித் இளைஞன் விஸ்வநாதன் - தேவர் இனம் சார்ந்த காவேரி இருவரும் கல்லூரி காலத்திலேயே காதலித்து வந்துள்ளனர். எதிர்ப்புகளை மீறி இந்த காதலர்கள் மணம் முடிக்க உதவியவர் கல்பனா . இவர் , விஸ்வநாதனின் சகோதரி. சமீபத்தில் நடைபெற்ற இந்த கலப்புமணத்தை நடத்திவைத்தவர் கல்பனா என்பதையறிந்த காவேரி குடும்பத்தினர் கல்பனாவின் வீட்டுக்கு வந்து, தங்கள் பெண்ணை வீட்டுக்கு அனுப்பச்சொல்லி பிரச்சினை செய்துள்ளனர். அவர்கள் அங்கில்லை என்பதை கல்பனா கூறியிருக்கிறார். ஆத்திரமடைந்த காவேரி குடும்பத்தினர், கல்பனாவை வெட்டி கொன்றுள்ளனர். கல்பனா … Continue reading சாதி மறுப்பு திருமணத்துக்கு உதவியதாக கர்ப்பிணிப் பெண் சாதி வெறியர்களால் வெட்டிக் கொலை!
நெல்லையில் சாதி ஆணவகொலை
திருநெல்வேலி வண்ணார்பேட்டையை சேர்ந்த விசுவநாதன் (இரயில்வே ஊழியர்) என்ற தலித் இளைஞனும் தச்சநல்லூரை சேர்ந்த சங்கர் (தேவர்) என்பவரின் மகள் காவேரியும் சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். கடந்த 3 ஆம் தேதி இருவரும் திருமணம் செய்துகொண்டு பெற்றோரின் மிரட்டலுக்குப் பயந்து இருவரும் தலைமறைவாக உள்ளனர். காவேரியின் தந்தை தொடர்ந்து விசுவநாதனின் குடும்பத்தை மிரட்டி வந்துள்ளார். விசுவநாதனின் குடும்பத்தார் காவல்துறை துணை ஆணையரிடம் புகார் கொடுதுதுள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடு்க்கவில்லை. புகார் கொடுத்ததால் மேலும் ஆத்திரம் … Continue reading நெல்லையில் சாதி ஆணவகொலை
“நாங்கள் உங்களோடு இருப்போம்” கௌசல்யாவுக்கு ஜி.ராமகிருஷ்ணன் ஆறுதல்
வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்குச் செல்வதற்கான உங்கள் முயற்சிகளில் நாங்கள் உங்களோடு இருப்போம். மனத் தைரியத்தோடு இருங்கள் என்று தற்கொலை முயற்சி மேற்கொண்ட உடுமலைப்பேட்டை கௌசல்யாவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஆறுதல் தெரிவித்தார். திருப்பூர் மாவட்டம், உடுமலைப் பேட்டையைச் சேர்ந்த சங்கர் மற்றும் கௌசல்யா ஆகியோர் காதலித்து சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, கூலிப்படையை வைத்து மார்ச் 13 ஆம் தேதியன்று சங்கரை, கௌசல்யாவின் பெற்றோர் ஆணவக் கொலை … Continue reading “நாங்கள் உங்களோடு இருப்போம்” கௌசல்யாவுக்கு ஜி.ராமகிருஷ்ணன் ஆறுதல்
சங்கரின் சமாதியில் ஒரு மணி நேரம் அழுத கௌசல்யா…
சாதி வெறியர்களால் கொல்லப்பட்ட சங்கரின் மனைவி கௌசல்யா, தற்கொலைக்கு முயன்று கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்கொலைக்கு தன் கணவரின் பிரிவுத் துயரலிருந்து மீளாததே காரணம் என முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சங்கரின் மறைவுக்குப் பிறகு, தனது படிப்பைத் தொடரப் போவதாகவும் சங்கரின் குடும்பத்தைக் காப்பாற்றுவேன் என்றும் சொல்லி வந்த கௌசல்யாவுக்கு பல்வேறு அமைப்பினர் நேரில் சந்தித்து ஆறுதல் சொன்னார்கள். ஆனால், கடந்த சில நாட்களாக மிகவும் சோர்வாகக் காணப்பட்ட கௌசல்யா, முந்தினம் சங்கரின் … Continue reading சங்கரின் சமாதியில் ஒரு மணி நேரம் அழுத கௌசல்யா…
”லவ் பண்ணுவியாடா பள்ளத் தேவி*** மகனே” என்றபடியே சங்கரை வெட்டினார்கள்: கௌசல்யாவின் வாக்குமூலம்
என் பெயர் கௌசல்யா. எனக்கு வயது 19. என்னுடைய பெற்றோர் சின்னசாமி – அன்னலெட்சுமி. உடன்பிறந்த தம்பி ஒருவன் இருக்கிறான். அவன் பெயர் கௌதம். நாங்கள் பிறமலை கள்ளர் சாதியைச் சேர்ந்தவர்கள். என் அப்பாவின் பூர்வீகம் உத்தமபாளையம் அருகில் உள்ள கோகிலாபுரம். அம்மாவின் பூர்வீகம் குப்பன்பாளையம். நாங்கள் குடியிருக்கும் பழனிக்கு அருகில் உள்ளது. என் அப்பா டிராவல்ஸ் நடத்தி வருகிறார். வட்டி தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார். என் குடும்பத்தினர் என் மீது உயிராக இருந்தனர். அவர்களுக்கு நான் … Continue reading ”லவ் பண்ணுவியாடா பள்ளத் தேவி*** மகனே” என்றபடியே சங்கரை வெட்டினார்கள்: கௌசல்யாவின் வாக்குமூலம்
தூக்கில் தொங்கிய நிலையில் காதலர்கள் மரணம்: சாதிவெறியர்கள் பின்னணிக்கு வலுவான காரணங்கள்..
ஓலக்குடி காலனி தெருவில் வசித்துவரும் நாகப்பன் மகன் குரு மூர்த்தி என்பவரும், அதேஊரைச் சேர்ந்த மெயின் ரோட்டில் வசிக்கும் சுப்பிர மணியன் மகள் சரண்யாவும் காதலித்து வந்துள்ளனர். குரு கட்டட வேலை பார்த்து வந்தார். DYFIல் அங்கம் வகித்தவர். தங்கள் காதலுக்கு சாதியைக் காரணம் காட்டி எதிர்ப்பு கிளம்பியதால் குருவும் சரண்டாவும் தங்கள் வீட்டை விட்டு 16.4.16 வெளியேறியுள்ளனர். குருவின் குடும்பத்தினர் நண்பர்கள் வீட்டுக்குச் சென்று திருமணம் செய்துகொண்டிருக்கலாம் என்று கருதியிருக்கின்றனர். சரண்யாவின் தந்தை சுப்பரமணியம் தங்கள் பெண்ணைக் காணவில்லை என … Continue reading தூக்கில் தொங்கிய நிலையில் காதலர்கள் மரணம்: சாதிவெறியர்கள் பின்னணிக்கு வலுவான காரணங்கள்..
காதலை கொல்லும் சாதி: சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்கள் தூக்கில் தொங்கிய நிலையில் பிணங்களாக மீட்பு
மனிதர்களை மனிதர் காதலிப்பதற்கு எத்தனை எதிர்ப்புகள்...அதுவும் சாதியைக் காட்டி காதலர்களை கொலை செய்யும் கலாச்சாரம் இந்தியாவில் மட்டுமே நடக்கும். தமிழகத்தில் காதல் சாதிய கொலைகள் நடந்தபடியே இருக்கின்றன. ஒன்று காதலர்கள் வெட்டிக் கொல்லப்படுகிறார்கள், இல்லையேல், விரக்திக்குத் தள்ளப்பட்டு தங்களையே கொலை செய்துகொள்கிறார்கள். தூக்கில் தொங்கிய நிலையில் ஒரு இணையின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தீக்கதிர் வெளியிட்டுள்ள செய்தி கீழே... நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் எடுத்துக்கட்டியை அடுத்த ஆத்துப்பாக்கம் கிராமத்தில் புதர்காடு ஒன்றிலிருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து பொதுமக்கள் … Continue reading காதலை கொல்லும் சாதி: சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்கள் தூக்கில் தொங்கிய நிலையில் பிணங்களாக மீட்பு
”தே…பசங்களா! க…பசங்களா!” என ராமதாஸுக்கு கருப்புக்கொடி காட்டியவர்களை அடிக்கப் பாய்ந்த இரா. அருள், சேலம் மேற்கு தொகுதி பாமக வேட்பாளர்!
2013-ஆம் ஆண்டு ராமதாஸுக்கு கருப்புக் கொடி காட்டி, அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்த 10 எண்ணிக்கைக்குள் இருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை போலீஸ் கட்டுப்பாட்டையும் மீறி ”தே...பசங்களா! க...பசங்களா!” எனக் கூறி நீண்ட கட்டையை எடுத்து அடிக்கப் பாய்கிறார் இரா. அருள். இவர் பாமகவின் மாநில துணைப் பொதுச் செயலாளர். தற்போது பாமக வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் சேலம் மேற்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். ஆட்சி, அதிகாரத்தில் இல்லாத பொழுதே, காவல்துறையினரை மிரட்டி கட்டுப்படுத்தி தங்கள் கட்சித் தலைவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தவர்களை … Continue reading ”தே…பசங்களா! க…பசங்களா!” என ராமதாஸுக்கு கருப்புக்கொடி காட்டியவர்களை அடிக்கப் பாய்ந்த இரா. அருள், சேலம் மேற்கு தொகுதி பாமக வேட்பாளர்!
“சாதியொழிப்பு வேலைகளைச் செய்வேன்”: கௌசல்யா
ரமேசு பெரியார் கௌசல்யா அது வெறும் பெயர்ச்சொல் அல்ல.,! ஆதிக்க சாதிவெறியர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கபோகும் வினைச்சொல்..!! அவளுடைய கண்ணில் சாதிவெறியர்களை களையெடுக்க வேண்டும் என்ற கோவமும், சாதிமறுப்பு திருமணம் செய்யும் காதலர்களை பாதுகாக்க வேண்டுமென்ற ஆதங்கமும் தெரிகிறது...சாதிவெறி பிடிச்ச என்னுடைய பெற்றோர்களையும் கடுமையாக தண்டிக்கனும், தூக்குத்தண்டனை வாங்கிதரணும்ண்ணா..!!! நான் இப்படியே இருந்திரமாட்டேன் விரைவிலே இதிலிருந்து மீண்டுவருவேன் என்னால் இயன்றவரை சாதியொழிப்பு வேலைகளை செய்வேன் என்று நம்பிக்கையோடு இருக்கிறாள்...,கழிப்பிட வசதிகூட இல்லாத ஏழையான சங்கரை காதலிச்சு அவன் … Continue reading “சாதியொழிப்பு வேலைகளைச் செய்வேன்”: கௌசல்யா
யார் இந்த நீதிபதி மகேந்திரபூபதி: அதிர்ச்சியளிக்கும் பின்னணி தகவல்கள்!
வன்னி அரசு மதுரை கிரானைட் வழக்கு என்பது அரசின் அனுமதி இல்லாமல் கிரானைட் வெட்டி எடுத்தது, கிரானைட் கற்களை பட்டா நிலங்களில் வைத்தது என பல்வேறு வழிகளில் இயற்கையை அழித்து மக்களின் வாழ்வாதாரங்களை சீர்குலைத்ததை ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அவர்களின் விசாரணை கமிஷன், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பல்வேறு சமூக இயக்கங்களின் உழைப்பில் வெளிக்கொணரப்பட்டு தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதில் மிக முக்கியமான பிஆர்பி கிரானைட்ஸ் தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பி.ஆர்.பழனிச்சாமி … Continue reading யார் இந்த நீதிபதி மகேந்திரபூபதி: அதிர்ச்சியளிக்கும் பின்னணி தகவல்கள்!
சாலையோரத்தில் பூ விற்ற பெண்ணை விரட்டியடித்த போலீஸ்; தப்பித்து ஓடியவர் ரயிலில் அடிப்பட்டு மரணம்
சிதம்பரம் - கடலூர் சாலையில் ஆலப்பாக்கம் ரயில்வே கேட் அருகில் பூ விற்கும் பெண்களை வழக்கமாக புதுச்சத்திரம் காவலர்கள் குறிப்பாக ஆய்வாளர் ரவிச்சந்திரன், உதவி ஆய்வாளர் அண்ணாமலை, சண்முகம் ஆகியோர் ஆபாசமாக திட்டி விரட்டியடிப்பார்களாம். அதுபோல வியாழன் (31-3-2016) மாலை 6 மணியளவில் புதுச்சத்திரம் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஏழு காவலர்கள், விரட்டியடிக்கும் போது கீழ் அனுவம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த புஷ்பா(38) க/பெ மணிவேல் என்ற பெண் ரயிலில் அடிபட்டு இறந்து விட்டார். இறந்த புஷ்பாவின் கணவர் மணிவேல் ஒரு … Continue reading சாலையோரத்தில் பூ விற்ற பெண்ணை விரட்டியடித்த போலீஸ்; தப்பித்து ஓடியவர் ரயிலில் அடிப்பட்டு மரணம்
திருமண மண்டபத்தில் கூட தீண்டாமை: காங்கேயம் அதிமுக எம் எல் ஏ நடராஜனுக்குச் சொந்தமான மண்டபத்தில் தலித் திருமணங்கள் நடத்த முடியாது!
தமிழகத்தின் கொங்கு மண்டலம் தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகளை அரங்கேற்றுவதில் தனி முத்திரை பதித்துவருகிறது. தருமபுரி இளவரசன், ஓமலூர் கோகுல்ராஜ், உடுமலைப் பேட்டை சங்கர் என சாதிய வன்மத்துக்கு தலித் இளைஞர்கள் பலியாகி வருகின்றனர். இந்நிலையில் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி கொங்கு பகுதியில் நிலவிவரும் சாதியம், தீண்டாமை குறித்து புலனாய்வு செய்தி ஒன்றை வழங்கியிருக்கிறது. இதில், கொங்குமண்டலத்தின் பல பகுதிகள் குறிப்பாக, வெள்ளக் கோயில், காங்கேயம் போன்ற பகுதிகளில் தலித்துகள் கோயில்களில் வழிபடும் உரிமை மறுக்கப்பட்டு வருவதாகவும் ஒடுக்கும் … Continue reading திருமண மண்டபத்தில் கூட தீண்டாமை: காங்கேயம் அதிமுக எம் எல் ஏ நடராஜனுக்குச் சொந்தமான மண்டபத்தில் தலித் திருமணங்கள் நடத்த முடியாது!
“நாங்க என்ன தப்பு செஞ்சோம்? லவ் பண்ணுவது அவ்வளவு பெரிய குற்றமா?”: கவுசல்யா
வன்னி அரசு கடந்த 13.3.16 அன்று உடுமலைப்பேட்டையில் சாதி மறுத்து காதல் மணம் புரிந்த சங்கர் - கவுசல்யா இணையர் சாதிவெறி கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டனர். இதில் சங்கர் கொல்லப்பட்டான், தங்கை கவுசல்யா உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இப்போது உடல் நலம் தேறி சிகிச்சை பெற்று வருகிறார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களின் வழிக்காட்டுதலின்பேரில் தங்கை கவுசல்யாவை சந்திக்க நாங்கள் எடுத்த தொடர் முயற்சியின் விளைவாக மார்ச் 23 … Continue reading “நாங்க என்ன தப்பு செஞ்சோம்? லவ் பண்ணுவது அவ்வளவு பெரிய குற்றமா?”: கவுசல்யா
”தலித்துகளை அரசியல் ஆனாதை ஆக்கணும்; சோத்துக்கு அலைய விடணும்”: செங்குட்டுவன் வாண்டையாரின் அருவருப்பூட்டும் பேச்சு
பிரேம் பிரேம் நீங்கள் சாதி பார்ப்பதில்லை ஆனால் சாதி உங்களைப் பார்த்துக்கொண்டே இருக்கிறது சாதி உளவியலைத் துடைத்து அழிக்காத யாரும் மனித அறம் பற்றிப் பேசத் தகுதியற்றவர்கள் என்பதற்கு விளக்கம் கேட்பவர்கள் அறிவிலிகள் மட்டும் இல்லை அய்யோக்கியர்களும் கூட. தீண்டாமைையை நான் கடைபிடிப்பதில்லை என்று சொல்லிவிட்டு தீண்டாமை அமைப்பை, அதன் உளவியலை, அதற்கான இந்திய நம்பிக்கைகளை எதிர்த்துப் போராடமல் இருப்பது தீண்டாமையைச் செலுத்துவதைவிட கொடிய குற்றம். நவீன மனம், நவீன அறிவு தனக்கு உள்ளதாக நம்பம் ஒவ்வொருவரும் … Continue reading ”தலித்துகளை அரசியல் ஆனாதை ஆக்கணும்; சோத்துக்கு அலைய விடணும்”: செங்குட்டுவன் வாண்டையாரின் அருவருப்பூட்டும் பேச்சு
சமூக ஊடகங்களின் தாக்கம்: வீட்டுக் காவலில் இருந்து மீட்கப்பட்டார் பிரியங்கா
தலித்தை காதலித்த காரணத்தால் தன்னை ஆணவக் கொலை செய்ய தன்னுடைய அப்பா திட்டமிடுவதாக புதுக்கோட்டையைச் சேர்ந்த ப்ரியங்கா என்ற பெண் அனுப்பிய குறுஞ்செய்தி திங்கள் கிழமை சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பானது. ப்ரியங்கா காதலித்த வினோத் இந்த குறுஞ்செய்தியை வைத்து காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார். இந்தச் செய்தி ஊடகங்களிலும் வெளியானது. இந்நிலையில் இந்த விஷயத்தை கையில் எடுத்த திவிக உள்ளிட்ட இயக்கங்களின் முயற்சியால் பிரியங்கா மீட்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தமிழ் இராசேந்திரன் தனது முகநூல் பதிவில், “சகோதரி பிரியங்காவை … Continue reading சமூக ஊடகங்களின் தாக்கம்: வீட்டுக் காவலில் இருந்து மீட்கப்பட்டார் பிரியங்கா
கைவிடப்பட்டுக்கிடக்கிறாள் கௌசல்யா!
ச. தமிழ்ச்செல்வன் கோவை அரசு மருத்துவமனையில் ஒரு சர்வதேச அனாதையைப்போல கைவிடப்பட்டுக்கிடக்கிறாள் கௌசல்யா. காதல் மணம் புரிந்த சங்கர் கண் முன்னால் வெட்டிச் சாய்க்கப்பட்டதைக் கண்ட அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல்.. இதுவரை மார்க்சிஸ்ட் கட்சித்தோழர்கள், ஜனநாயக மாதர் சங்கத்தினர், தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர், அய்யா வைகோ, அறிவியல் இயக்கத்தோழர்கள் மோகனா, உதயன் போல வெகு சிலரே சென்று அந்தப் பெண் குழந்தையைக் கண்டு வந்துள்ளனர். குறைந்த பட்சம் கோவை வட்டாரத்தில் உள்ள பல்வேறு அமைப்பினர் முறை வைத்துத் … Continue reading கைவிடப்பட்டுக்கிடக்கிறாள் கௌசல்யா!
“கொற்றவையாகிய நான் இனி எழுதப் போவதில்லை”
கொற்றவை வணக்கம் தோழர்களே, இச்சமூகத்தில் என்னை நான் என்னவென்று அடையாளப்படுத்திக் கொள்வது என்று வருந்தும் நிலைக்கு இன்று நான் ஆளாக்கப்பட்டுள்ளேன். இதுவரை நான் எத்தனையோ விதமான விமர்சனங்களை சந்தித்துள்ளேன். அதை துணிவுடன் ஒற்றை ஆளாக நின்றே எதிர்கொண்டும் உள்ளேன். நான் சொன்ன எந்த கருத்திலிருந்தும் - அது என்னுடைய அறிவிற்கும் - சமூக மாற்றத்திற்கும் சரியானதே என்று கருதிய எந்த கருத்திலிருந்தும் நான் பின்வாங்கியதில்லை. ஆனால் விமர்சனம் என்பது வேறு அவதூறு என்பது வேறு. அதிலும் சாதிய … Continue reading “கொற்றவையாகிய நான் இனி எழுதப் போவதில்லை”
“எங்க அப்பா என்னை கவுரவ கொலை பண்ண திட்டம் போடறாங்க; என்னைக் காப்பாத்துங்க” தலித் இளைஞரை காதலித்த பிரியங்கா கண்ணீர்
உடுமலைப் பேட்டை சாதி வெறித் தாக்குதல் சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ள நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே, தலித்தை காதலித்தார் என்பதற்காக பிரியங்கா என்ற பெண், கடுமையாக தாக்கப்பட்டுள்ள செய்தி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. திவிக மதுரை மாவட்ட செயலாளர் மணிகண்டன் மா.பா தன்னுடைய முகநூல் பதிவில் இவ்வாறு பகிர்ந்துள்ளார். ஆணவ படுகொலை செய்யப்படவிருக்கும் பெண்ணின் உயிரை காக்க உதவுங்கள் ........ புதுக்கோட்டை ஆலங்குடி பகுதி பிரியங்கா - வினோத் இருவரும் 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். வினோத் தலித் , … Continue reading “எங்க அப்பா என்னை கவுரவ கொலை பண்ண திட்டம் போடறாங்க; என்னைக் காப்பாத்துங்க” தலித் இளைஞரை காதலித்த பிரியங்கா கண்ணீர்
ஐந்தாயிரத்துக்கெல்லாம் கொடூர கொலை செய்வது தமிழகத்தில் சாதாரணமாகிவிட்டது: தொல். திருமாவளவன் நேர்காணல்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் சிறப்பு நேர்காணலை வெளியிட்டுள்ளது ‘தீக்கதிர்’(20-03-2016) நாளிதழ். அதனுடைய மறுபிரசுரம்... சந்திப்பு : மதுக்கூர் ராமலிங்கம், சி. ஸ்ரீராமுலு மக்கள் நலக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் ஏற்கெனவே பல்வேறு கூட்டணிகளில் இடம்பெற்றிருந்தன. அதற்கும், தற்போது அமைந்துள்ள மக்கள் நலக் கூட்டணிக்கும் அடிப்படை வேறுபாடு என்ன? மேலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முன்வைத்த கூட்டணி ஆட்சி என்ற முழக்கத்திற்கு இந்தக் கூட்டணி எந்த வகையில் ஒத்திசைவாக உள்ளது? திமுக,அதிமுக ஆகிய இரு … Continue reading ஐந்தாயிரத்துக்கெல்லாம் கொடூர கொலை செய்வது தமிழகத்தில் சாதாரணமாகிவிட்டது: தொல். திருமாவளவன் நேர்காணல்
சாதிய நகைமுரணும் பெண்ணியப்போலிகளும் சாதிமறுப்புப் பாசாங்குகளும்!: குட்டி ரேவதி
குட்டி ரேவதி 'நான் உயர்சாதி' என்ற அறிவிப்பைப் பார்த்ததுமே நாட்டாமைத்தனத்துடனும், ‘நான் பெரிய முற்போக்காளராக்கும்' என்ற தொனியுடனும் ஓடிவந்து பதிவிடுபவர்கள் எவரிடமும் இதுகாறும் குறைந்தபட்ச சாதிமறுப்பு உணர்வைக்கூடப் பொதுவெளியில் நான் பார்த்தே இராததால் இதை எழுத வேண்டியிருக்கிறது. *நான் வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும், எல்லோரும் நான் பிறந்து வந்த சாதியை அறிவார்கள் என்ற புரிதலுடன்தான் நான் இந்த உலகத்தில் வாழ்கிறேன். ஏனெனில், எல்லா சமூகத்தளங்களிலும், பொதுவெளிகளிலும் அந்த விழிப்புடன் தான் எல்லாமே அணுகப்படுகின்றன என்பது யாரும் அறியாதது அல்ல. … Continue reading சாதிய நகைமுரணும் பெண்ணியப்போலிகளும் சாதிமறுப்புப் பாசாங்குகளும்!: குட்டி ரேவதி
சாதி ஆதிக்க பரப்புரை: உங்கள் நோக்கம் தான் என்ன?
வன்னிஅரசு இன்று காலை தான் இப்போது.காம் என்ற இணையதளத்தின் பெயரில் வெளியிடப்பட்டிருந்த படங்களை பார்க்க நேர்ந்தது. பல பெண்ணிய செயற்பாட்டாளர்கள் 'நான் உயர் சாதிப் பெண்' 'நான் ஆதிக்க சாதிப் பெண்' என்று அறிமுகமாகி 'இருந்தாலும்' ஆணவக்கொலையைக் கண்டிக்கிறேன் என்று முடியும் வாசகங்களுடன் அவர்களின் படங்களும் அதில் இருந்தது. அந்த 'ஆதிக்க சாதி ஆணவ விளம்பரத்தில்' வந்திருந்த பெண்களில் சிலரின் செயல்பாடுகளை அறிந்தவன் என்ற முறையில் எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. பிறகு விசாரித்ததில் தான் பல … Continue reading சாதி ஆதிக்க பரப்புரை: உங்கள் நோக்கம் தான் என்ன?
பெண்களுக்கு சாதி இருக்கமுடியுமா?
மீனா கந்தசாமி How did you become an upper caste woman? Because your mother was asked to marry a man from her caste. Her cunt was controlled. How did she become an upper caste woman? Because your grandmother was asked to marry a man from her caste. Her cunt was controlled. How did your grandmother's mother … Continue reading பெண்களுக்கு சாதி இருக்கமுடியுமா?
நீதிபதியின் சாதி மனசாட்சி..!
வன்னி அரசு. சாதி மறுத்து காதல் மணம் புரிந்த சங்கர் கவுசல்யாவை பட்டப்பகலில் அரிவாளால் வெட்டிச் சாய்த்தது சாதிவெறி கும்பல். காதல் மணம் புரிந்த எட்டு மாதங்கள் முழுக்க கொலை மிரட்டல்கள், லட்சங்களில் பணம் தருகிறோம் என்று அவன் காதலுக்கு விலை சொல்லப்பட்ட போதும், இரண்டு முறை கொலை முயற்சி நடந்தபோதும் எந்த விதத்திலும் தன் காதலை விட்டுத்தராமல், உறுதியோடு நின்று, இந்த முறை நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டான் எங்கள் வீரன் சங்கர். எல்லாவற்றையும் விட தான் … Continue reading நீதிபதியின் சாதி மனசாட்சி..!
குதிரைக்கு குரல்; ஆணவ கொலைக்கு ? த்ரிஷாவிடம் மோதும் ரசிகர்கள்…
நடிகை திரிஷா பிராணிகள் நல பாதுகாப்புக்கு குரல் கொடுத்து வருகிறார். வெறிபிடித்த தெருநாய்களை கொன்றுவிட மாநகராட்சி முடிவு எடுத்தபோது கண்டித்தார். அவற்றுக்கு ஊசி போட்டு இன பெருக்கத்தை கட்டுப்படுத்தலாம் என்று யோசனை தெரிவித்தார். விலங்குகள் அமைப்பான பீட்டாவின் விளம்பர தூதுவராகவும் இருக்கிறார். ஜல்லிக்கட்டை இந்த அமைப்பு எதிர்த்தபோது, திரிஷா தமிழ் அமைப்புகளின் கண்டனத்துக்கு உள்ளானார். அந்த அமைப்பில் இருந்து அவர் விலக வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டார். இந்த நிலையில், தற்போது பாஜக எம். எல் .ஏ. குதிரையொன்றின் … Continue reading குதிரைக்கு குரல்; ஆணவ கொலைக்கு ? த்ரிஷாவிடம் மோதும் ரசிகர்கள்…