அவர்களின் துன்புறுத்தல் எங்கள் காதலை மேலும் வலுவாக்குகிறது! ஜூலியன் அசாஞ்சேவுடன் திருமணம் குறித்து ஸ்டெல்லா மோரீஸ்

புதன்கிழமை, விக்கிலீக்ஸ் இணை நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே, ஸ்டெல்லா மோரிஸ் ஆகியோர் லண்டனில் உள்ள பெல்மார்ஷ் உயர் பாதுகாப்பு சிறையில் ஆறு விருந்தினர்கள் மட்டுமே கலந்து கொண்ட ஒரு சிறிய விழாவில் திருமணம் செய்து கொண்டனர். நான்கு விருந்தினர்கள் மற்றும் இரண்டு சாட்சிகள் விழாவில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர், ஆனால் பத்திரிகையாளர்கள் அல்லது புகைப்படக்காரர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களில் அமெரிக்க இராணுவம் செய்த தவறுகளை விக்கிலீக்ஸ் வெளியிட்டது தொடர்பாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த செயல்பாட்டாளரான் ஜூலியன் … Continue reading அவர்களின் துன்புறுத்தல் எங்கள் காதலை மேலும் வலுவாக்குகிறது! ஜூலியன் அசாஞ்சேவுடன் திருமணம் குறித்து ஸ்டெல்லா மோரீஸ்

உக்ரைனுடன் ரஷ்யா போர்: கார்ல் மார்க்ஸின் பெயரை நீக்கிய புளோரிடா பல்கலை

கடந்த 20 நாட்களுக்கும் மேலாக உக்ரைனுடன் ரஷ்யா போரில் ஈடுபட்டு வருகிறது. பெரும்பாலான மேற்குலக நாடுகளும், மேற்கின் ஆதரவு நாடுகளும் உக்ரைனுக்கு ஆதரவாகவும் ரஷ்யா மீது பல்வேறு தடைகளை அறிவித்தும் வருகின்றன. பொருளாதார தடைகள் மட்டுமல்லாது ரஷ்ய விளையாட்டு வீரர்கள், கலைஞர்கள், புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர்களின் எழுத்துக்களுக்கு எனத் தொடரும் இந்தத் தடைகளின் பட்டியலில், தற்போது ஜெர்மனிக்காரான் கார்ல் மார்க்ஸும் இணைந்துள்ளார். கடந்த வாரம், புளோரிடா பல்கலைக்கழகம், தனது மாணவர்கள் படிப்பறை ஒன்றுக்கு இட்ட பெயரான 'கார்ல் … Continue reading உக்ரைனுடன் ரஷ்யா போர்: கார்ல் மார்க்ஸின் பெயரை நீக்கிய புளோரிடா பல்கலை

#Brexit: தேசியவாதத்தின் எழுச்சியும் உலகமயமாக்கல் எதிர்கொள்ளவிருக்கும் நெருக்கடியும்: எம். கே. வேணு

எம். கே. வேணு   எதிர்பாராத விதமாக ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிவதற்கு ஆதரவாக மக்கள் வாக்களித்ததை அடுத்து பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், தனது பதவியை துறந்திருக்கிறார். ஐயூவிலிருந்து  பிரிவதால் ஏற்படும் விளைவுகளை பிரிட்டன் எப்படி சமாளிக்கப் போகிறது என்கிற கேள்வி அப்படியே இருக்கிறது.  வருகிற அக்டோபரின் நடைபெறவிருக்கும் தேர்தல் வரை கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக நீடிக்கப்போவதாக கேமரூன் அறிவித்துள்ளார். அதுவரை அவர் இடைக்கால பிரதமராக இருப்பார். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் பிரதமர்தான், ஐயூவிலிருந்து பிரிட்டன் பிரிந்துவருவதற்கான  பேச்சுவார்த்தைகளை நடத்துவார் எனவும் … Continue reading #Brexit: தேசியவாதத்தின் எழுச்சியும் உலகமயமாக்கல் எதிர்கொள்ளவிருக்கும் நெருக்கடியும்: எம். கே. வேணு

‘’ஐரோப்பிய யூனியன் ஒரு தோல்வியடைந்த திட்டம் ‘’

ஐரோப்பிய யூனியனிலிருந்து இங்கிலாந்து பிரிவதாக ஓட்டெடுப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சம கால உலக அரசிலில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக இது கருதப்படுகிறது. உலகமயமாக்கலுக்கு விழுந்த அடியாக இதை பொருளாதார நிபுணர்கள் கணிக்கிறார்கள்.  ஐரோப்பிய யூனியனில் தொடரலாமா? வெளியேறலாமா? என பிரிட்டனில் வாக்கெடுப்பு நடந்தது. வாக்கெடுப்பு முடிவுகளின்படி 52% மக்கள் வெளியேறவும் 48% மக்கள் தொடரவும் வாக்களித்துள்ளனர். இதனால் ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறியது பிரிட்டன். வாக்கெடுப்பு முடிவு குறித்து இங்கிலாந்தின் UKIP தலைவர் நைஜல் ஃபரேஜ், “இது சாமானியர்களின் வெற்றி” என கருத்து … Continue reading ‘’ஐரோப்பிய யூனியன் ஒரு தோல்வியடைந்த திட்டம் ‘’

தனிமனிதனென்னும் அரசியல் விலங்கு: அ. ராமசாமி

அ. ராமசாமி ஒரு நிகழ்வு : பலபார்வை என்பது அறிவுச் சமூகத்தின் பண்பாடு. இன்னொரு விதத்தில் அது பன்னாட்டு மூலதனத்தின் தேவையும் கூட. அமெரிக்காவில் பன்னாட்டு மூலதனக் குழுமங்கள் தான் ஊடகங்களைக் கட்டுப்படுத்துகின்றன. கல்விக்கூடங்களை நடத்துகின்றன. ஆய்வுகளுக்கு நிதி வழங்குகின்றன. 2000 -க்குப் பின்னர் உலகமெங்கும் உருவாகிவரும் அடையாள அரசியல் சொல்லாடல்கள் கூடத் தன்னெழுச்சியாகத்தோன்றுகின்றனவா? பன்னாட்டுக் குழுமங்களின் மறைமுகத்தூண்டுதலால் உருவாக்கப்படுகின்றனவா? என்ற ஐயங்களும் முன்வைக்கப்படுகின்றன. பன்னாட்டுக் குழுமங்களின் அதிகார அமைப்புகளும் வலைப்பின்னல்களும் எப்போதும் அடையாள அரசியலை அனுமதிப்பதுபோலக் … Continue reading தனிமனிதனென்னும் அரசியல் விலங்கு: அ. ராமசாமி

”இந்தியாவும் அமெரிக்கவும் உலகக் கூட்டாளிகள்” அறிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு அலுவலகத்தில் நடை பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது அரசியல் தலைமைக்குழு சார்பில்அறிக்கை வெளியிடப்பட்டது. பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ள சமயத்தில் “அமெரிக்காவும் இந்தியாவும்: 21ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டுள்ள உலகக் கூட்டாளிகள் - 1” என்னும் தலைப்பிட்டு 50 பத்திகளுடன் இந்திய - அமெரிக்க கூட்டறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. இது அமெரிக்காவின் உலகளாவிய நீண்டகால நயவஞ்சகச் சூழ்ச்சிகளுக்கு இந் தியாவை, ஓர் இளைய பங்காளியாக மாற்றி இருக்கிறது. ஒப்பந்தத்தில் அநேகமாக இரு நாடுகளுக்கும் இடையேயான … Continue reading ”இந்தியாவும் அமெரிக்கவும் உலகக் கூட்டாளிகள்” அறிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்

புகுஷிமா அணு விபத்து: குழந்தைகளிடம் அதிகரிக்கும் தைராய்டு புற்றுநோய்!

ஜப்பானில் உள்ள புகுஷிமாவில் 2011-ஆம் ஆண்டும் மார்ச் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கம் அதற்குப் பிறகான சுனாமியால் அங்குள்ள டாய்சி அணு உலையில் அணுக் கசிவு ஏற்பட்டது. கதிரியக்க கசிவால் உடல் பாதிப்புகள், குறிப்பாக புற்றுநோய் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக என்பது குறித்து ஜப்பானிய அரசு தொடர்ந்து சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது. தற்போது இரண்டாம் கட்டமாக 3 லட்சம் பேரிடம் புற்றுநோய் பாதிப்பு சோதனைகள் நடத்தப்பட்டிருக்கின்றன. இந்த விபத்தின் போது 18 வயதுக்குக் கீழ் இருந்தவர்களிடம் இந்தச் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது. … Continue reading புகுஷிமா அணு விபத்து: குழந்தைகளிடம் அதிகரிக்கும் தைராய்டு புற்றுநோய்!

இடதுசாரி கட்சியின் சாதிக் கான் லண்டன் மேயராக தேர்வு: இஸ்லாமியர் மேயராவது இதுவே முதல்முறை

லண்டன் மேயருக்கான தேர்தலில் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த சாதிக் கான் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். “நான் பெருமைப் படுகிறேன். பயம் காட்டி பிரித்தாளும் பேச்சுகளுக்கிடையே நம்பிக்கையை லண்டன் மக்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்” என்று தன் வெற்றி அறிவிப்புக்குப் பிறகு சாதிக் கருத்து தெரிவித்தார். சாதிக் கானை எதிர்த்துப் போட்டியிட்ட கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த கோல்டு ஸ்மித், கானை இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு ஆதரவாளராக முன்னிறுத்தி பிரச்சாரம் செய்தார்.  இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தின் போது, சாதிக் கான் தொடர்ந்து இதைப் … Continue reading இடதுசாரி கட்சியின் சாதிக் கான் லண்டன் மேயராக தேர்வு: இஸ்லாமியர் மேயராவது இதுவே முதல்முறை

ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் இடம் பெற்ற திருநங்கை, ஆஸ்கர் விழாவை புறக்கணிக்கிறார்: ஏன்?

Anohni, பிரிட்டனைச் சேர்ந்த திருநங்கை. பாடகர், பாடலாசிரியர். உலக வெப்பமயமாதல் தொடர்பான Racing Extinction ஆவணப்படத்தில் இவர் இயற்றிய “Manta Ray” பாடல் ஆஸ்கர் விருது பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது. ஆஸ்கர் விருது பட்டியலில் இடம் பெற்ற பாடல்களை தொடர்புடையவர்கள் மேடையில் பாடுவது வழக்கம். இதன் அடிப்படையில் இந்த வருடம் நோஹ்னி உடன் விருது பட்டியலில் இடம் பெற்றுள்ள  லேடி காகா, சாம் ஸ்மித் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் ஆஸ்கர் விருது விழாவில் பாடுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. … Continue reading ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் இடம் பெற்ற திருநங்கை, ஆஸ்கர் விழாவை புறக்கணிக்கிறார்: ஏன்?

நான் கம்யூனிஸ்ட் இல்லை;ஆனால் கம்யூனிஸ்ட்டின் பேச்சுரிமைக்காகவும் குரல் கொடுப்பேன்:பாராட்டை அள்ளும் திரிணாமுல் எம்பி.யின் உரை!!!

ஜே.என்.யூ மாணவர்கள் தேசவிரோத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது தொடர்பாக பாராளுமன்ற மக்களவையில் நேற்று விவாதம் நடைபெற்றது. அதில் பேசிய, ஹார்வார்டில் பாடங்கள் எடுத்தவரும், முப்பது வருடங்களாக பேராசிரியராக பணிபுரிந்தவருமான , திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி சுகதோ போசின் உரை, பெரும் பாராட்டை பெற்றுள்ளது. டிவிட்டரில் #praisesugato என்ற ஹேஷ் டேக் பிரபலமடைந்துள்ளது.  அந்த அற்புதமான உரையின் தமிழாக்கம் கீழே. *30 வருடங்களுக்கு மேலாக ஆசிரியராக இருந்தவன் என்கிற முறையில்,  மாண்புமிகு சக உறுப்பினர்கள், என்னுடைய உரையை … Continue reading நான் கம்யூனிஸ்ட் இல்லை;ஆனால் கம்யூனிஸ்ட்டின் பேச்சுரிமைக்காகவும் குரல் கொடுப்பேன்:பாராட்டை அள்ளும் திரிணாமுல் எம்பி.யின் உரை!!!

“நான் என்னைப் பற்றிப் பேசுவதை நிறுத்திவிட்டேன், இனி மற்றவர்கள் அதைத் தொடரட்டும்”: உம்பர்தோ இக்கோ மறைவுக்கு எழுத்தாளர் பிரேமின் அஞ்சலி

பிரேம் எனக்கு மிகப்பிடித்தமான எழுத்தாளர்களின் வரிசையில் ழோர் பெரக், உம்பர்தோ இக்கோ, மிலோராத் பாவிக் என்ற மூன்று பெயர்கள் எப்பொழுதும் இருக்கும். இதில் இக்கோவின் பெயர் அதிக கனமானது. கோட்பாடு, அறிதல் முறை இரண்டிலும் நான் அதிகம் இவரிடம் கற்றிருக்கிறேன். அதனைவிட புனைகதையின் பலதளங்களைக் கண்டறிய அவரது கதைகள் எப்போதும் ஊக்கமளிப்பவை. தொடர்ந்து வாசிக்கச் சொல்லும் எழுத்துகள் அவருடையவை.. அவரது இறுதிக் கதையெழுத்தாக அமைந்துவிட்ட Numero Zero (Richard Dixon மொழிபெயர்ப்பில்) நாவலின் இறுதிப் பகுதியில் காணும் … Continue reading “நான் என்னைப் பற்றிப் பேசுவதை நிறுத்திவிட்டேன், இனி மற்றவர்கள் அதைத் தொடரட்டும்”: உம்பர்தோ இக்கோ மறைவுக்கு எழுத்தாளர் பிரேமின் அஞ்சலி

“மண்ணைக் கட்டுப்படுத்தி, நாடுகளைக் கைப்பற்றும் மான்சான்டோ”

‘மான்சான்டோவுக்கு விஞ்ஞானி சவால்!’ என்று மேற்கத்திய ஊடக செய்திகளில் சமீபத்தில் இடம்பிடித்தார் சிவா அய்யாதுரை. ‘இ மெயில் தமிழன்’ என்பதுதான் இவருடைய அடையாளம். ஆனால், இப்போது மரபணு மாற்றப் பயிர்கள் பிரச்சினையைக் கையில் எடுத்து, சுற்றுச்சூழல் செயல்பாட்டாளராகவும் மாறியுள்ளார் சிவா. மான்சான்டோவின் மரபணு மாற்ற சோயாவில் புற்றுநோய் ஏற்படுத்தும் காரணிகள் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன என்ற தனது ஆய்வைப் பொய் என நிரூபித்தால், 10 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 60 கோடி) மதிப்புள்ள தன்னுடைய … Continue reading “மண்ணைக் கட்டுப்படுத்தி, நாடுகளைக் கைப்பற்றும் மான்சான்டோ”

சியாச்சினில் ஒவ்வொரு மாதமும் 2 இராணுவ வீரர்கள் மரணமடைகிறார்கள்; எதிரியால் அல்ல; பனியால்!

இமயமலைத் தொடரில் இருக்கும் சியாச்சின் பனிமலைச் சிகரம், உலகின் மிக உயர்ந்த இடத்தில் இருக்கும் போர்முனை என்று வர்ணிக்கப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து 22 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கிறது இந்தப் பனிச்சிகரம். மைனஸ் 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் காவல் காக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள் இந்திய வீரர்கள். சியாச்சின் பனிப்புயலில் சிக்கி இந்த மாதம் 10 வீரர்கள் பலியாயினர். இந்தியாவின் ஒட்டுமொத்த கவனம் பெற்றிருக்கிறது இந்த மரணங்கள். ஆனால், இராணுவத்தைப் பொறுத்தவரை இது இயல்பாக நடக்கும் விஷயம் … Continue reading சியாச்சினில் ஒவ்வொரு மாதமும் 2 இராணுவ வீரர்கள் மரணமடைகிறார்கள்; எதிரியால் அல்ல; பனியால்!

#FreeBasics: ஃபேஸ்புக்கும் புதிய காலனிய ஆதிக்கமும்

Shan Karuppusamy இந்தியாவில் ஃப்ரீ பேசிக்ஸ் அனுமதிக்கப்படவில்லை என்ற செய்தியைக் கேட்டதும் மார்ஸ் ஏமாற்றமடைந்ததாக தெரிவித்தார். அதே நேரத்தில் அவர்களின் போர்ட் ஆஃப் டைரக்டர்களில் ஒருவரான மார்ஸ் ஆண்ட்ரீசன் "காலனி ஆதிக்கத்தை எதிர்த்து பொருளாதார அழிவிற்கு செல்வது இந்தியாவில் பல ஆண்டுகளாக நடப்பதுதானே.. இப்போது மட்டும் எதற்கு அதை மாற்ற வேண்டும்?" என்று ஒரு ட்வீட் வெளியிட்டிருக்கிறார். இதன் மூலம் இரண்டு கருத்துகளை அவர் வெளிப்படுத்துகிறார். இந்தியா காலனி ஆதிக்கத்தில் இருப்பதுதான் அதற்கு நல்லது என்பதையும் ஃபேஸ்புக் … Continue reading #FreeBasics: ஃபேஸ்புக்கும் புதிய காலனிய ஆதிக்கமும்