”12 அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவ படிப்பில் சேரும் வாய்ப்பு: நீட் என்னும் அநீதி”

மருத்துவக் கலந்தாய்வுக்கு தகுதி பெற்ற மாணவர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்தவர்களில் ஒருவர் கூட மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் இல்லை என்பதும் மருத்துவப் படிப்பு சி.பி.எஸ்.இ பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கானது என்பதை உறுதி செய்யும் விஷயங்களாகும்.

நீட் : யாருக்கெல்லாம் இழப்பு?

போலி இருப்பிடச் சான்றிதழ்களின் மூலம் நூற்றுக்கணக்கான வேற்று மாநில மாணவர்கள் குறுக்குவழியில் திருட்டுத்தனமாக இடம்பிடிக்க முயல்கிறார்கள். ஒட்டு மொத்த தமிழ்நாட்டிற்கே இழப்பு!

திராவிட இயக்கத்தை அசைத்துப் பார்க்க எந்தக் கொம்பனாலும் முடியாது: எஸ்.வி.சேகரின் பேச்சுக்கு ஸ்டாலின் விளக்கம்

தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் எழுத்தாளர் மதிமாறனுக்கும் பாஜக பேச்சாளர் நாராயணனுக்கும் இடையே நடந்த 'பார்ப்பனர்' தொடர்பான வாக்குவாதத்தில் எஸ்.வி. சேகர் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். இதில் திமுக செயல்தலைவர் மு. க.ஸ்டாலினை தொடர்பு படுத்தி பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஸ்டாலின் என்ன பதில் சொல்லப்போகிறார் என சமூக ஊடகங்களில் பலரும் குரல் எழுப்பிய நிலையில், ஸ்டாலின் தனது முகநூலில் விளக்க அளித்துள்ளார். அதில், "தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த விவாத நிகழ்ச்சி சம்பந்தமான சர்ச்சையினையடுத்து, நடிகரும் நண்பருமான … Continue reading திராவிட இயக்கத்தை அசைத்துப் பார்க்க எந்தக் கொம்பனாலும் முடியாது: எஸ்.வி.சேகரின் பேச்சுக்கு ஸ்டாலின் விளக்கம்

இந்த ஆண்டு முதல் உயர் சாதியினருக்கு மருத்துவ கல்வியில் 50.5 % இடஒதுக்கீடு; மத்திய அரசு முடிவு

இந்திய அளவில் மருத்துவ கல்வி வழங்கப்படும் இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்படும் இடங்களை குறைத்து,  உயர் சாதியினருக்கு அதாவது பொது பிரிவினருக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக மத்திய சுகாதார செயலர் சி.கே. மிஸ்ரா தெரிவித்துள்ளார். நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்தியில்,  49.5% இடஒதுக்கீடு பெரும் பிரிவினருக்கு தனியாகவும் 50.5 % இடஒதுக்கீடு பெறாத பொதுப்பிரிவினருக்கும் தனியாகவும் இந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நடைபெறும் என மருத்துவ செயலர் தெரிவித்துள்ளார். மேலும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் … Continue reading இந்த ஆண்டு முதல் உயர் சாதியினருக்கு மருத்துவ கல்வியில் 50.5 % இடஒதுக்கீடு; மத்திய அரசு முடிவு

நாய் குரைத்தது, மனிதர் போலிருந்தவர்களோ கடித்தார்கள்: ஆதவன் தீட்சண்யா

ஆதவன் தீட்சண்யா தனிநபர்களுக்கிடையிலான பிரச்னையே சாதிய வன்கொடுமைகளுக்கு காரணம் என்று சொல்லப்பட்டு வருகிறது. உண்மையில் அவை பார்ப்பனீயம் பரப்பியுள்ள மனிதவிரோதக் கருத்தியலின் தூண்டுதலினாலேயே நிகழ்த்தப்படுகின்றன. அந்த வகையில் சாதிய வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்துவரும் பகுதியாக ஹரியானா இருந்து வந்திருக்கிறது. செத்தமாட்டின் தோலை உரித்தார்கள் என்பதற்காக துலீனாவில் (15.10.2002) ஐந்து தலித்துகளை கல்லால் அடித்துக் கொன்றது, கோஹானா (31.8.2005) மற்றும் சல்வான் ( 1.3.2007) கிராமங்களில் தலித்துகளின் வீடுகளை எரித்தழித்தது- என்று ஊடகங்கள் வழியே தெரியவந்த வன்கொடுமைகள் ஒன்றிரண்டுதான். … Continue reading நாய் குரைத்தது, மனிதர் போலிருந்தவர்களோ கடித்தார்கள்: ஆதவன் தீட்சண்யா

இதர பிற்படுத்தப்பட்டோருக்கான வருமான வரம்பை  15 லட்சமாக உயர்த்த வேண்டும்!

இதர பிற்படுத்தப்பட்டோருக்கான வருமான வரம்பை  15 லட்சமாக உயர்த்த வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசின் கல்வி, வேலை வாய்ப்புகளில் ஓ.பி.சி. என்னும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது. இதற்கு ஓ.பி.சி. சான்றிதழ் பெறவேண்டுமானால், பெற்றோரின் ஆண்டு வருமானம் (கிரீமிலேயர்) ஆறு இலட்சம் ரூபாய்க்குள் தான் இருக்க வேண்டும் என்று … Continue reading இதர பிற்படுத்தப்பட்டோருக்கான வருமான வரம்பை  15 லட்சமாக உயர்த்த வேண்டும்!

“தலித்துகளின் குடிசைகளைக் கொளுத்தியதில் பங்குள்ள அன்புமணி சமூக நீதியைப் பற்றி ஜேஎன்யூவில் பேசுவதா?”: உமர் காலித்

“தலித்துகளின் குடிசைகளைக் கொளுத்திய சாதிய கட்சியைச் சேர்ந்த அன்புமணி சமூக நீதியைப் பற்றி ஜேன்யூவில் பேசுவதா?” என எதிர்ப்பு தெரிவித்துள்ளார் ஜேஎன்யூ  மாணவர் சங்கத்தைச் சேர்ந்த உமர் காலித். ஓபிசி ஃபாரம் ஏற்பாடு செய்திருந்த சமூக நீதி குறித்த கருத்தரங்கில் பேச அன்புமணி ராமதாஸுக்கு அழைப்பு விடுக்கப் பட்டிருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உமர் காலித் தனது முகநூலில் வெளியிட்டுள்ள பதிவில், “தர்மபுரி எம்பியான பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி ராமதாஸ் சமூக நீதி குறித்து … Continue reading “தலித்துகளின் குடிசைகளைக் கொளுத்தியதில் பங்குள்ள அன்புமணி சமூக நீதியைப் பற்றி ஜேஎன்யூவில் பேசுவதா?”: உமர் காலித்

“உடம்பு சரியில்லை”: பெரியாரை அவமதித்த வழக்கில் ஆறு வாய்தா வாங்கிய பாண்டே நீதிபதியிடம் சொன்ன காரணம்! 

சென்னியப்பன் வழக்குரைஞர் பெரியாரை அவமதிப்பு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்து வந்த பாண்டே,   தொடர்ந்து ஆஜராகத் தவறினால் பிடிவாரண்ட் பிறப்பிப்பேன் என்று நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து, கடந்த 13.6.2016 அன்று திருப்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நேரிடையாக ஆஜரானார். பாண்டேவைப் பார்த்து நீதிபதி கேட்ட முதல் கேள்வி, "சட்டத்தை மதிக்க வேண்டும் என்று கிலோ கணக்கில் டிவியில் அறிவுரை சொல்றீங்களே நீங்கள் கடந்த ஆறு வாய்தாக்கள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லையே ஏன்? என்பதுதான்.    இதற்கு … Continue reading “உடம்பு சரியில்லை”: பெரியாரை அவமதித்த வழக்கில் ஆறு வாய்தா வாங்கிய பாண்டே நீதிபதியிடம் சொன்ன காரணம்! 

“துப்புரவு பணியாளர்கள் லிஃப்டை பயன்படுத்தினால் சம்பள பிடித்தம் செய்யப்படும்”: இந்திய பார் கவுன்சில் சுற்றறிக்கை 

இந்திய பார் கவுன்சில் கட்டத்தில் உள்ள லிஃப்டை யார் பயன்படுத்த வேண்டும், யார் பயன்படுத்தக் கூடாது என்பது குறித்து பார் கவுன்சில் தலைவர் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார். இதில், பணியாளருக்கும் கீழே உள்ள துணை செயலாளர்கள் போன்றோர், 50 வயதுக்கும் கீழே உள்ளவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள் தவிர மற்றவர்கள் லிஃப்டைப் பயன்படுத்தினால் அவர்களுடைய அந்த நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும். அதுபோல, துப்புரவாளர்கள்,  வெளி ஏஜென்ஸிகள் மூலம் பணியாற்ற வருபவர்கள்  50 வயதுக்கும் கீழே உள்ளவர்கள், … Continue reading “துப்புரவு பணியாளர்கள் லிஃப்டை பயன்படுத்தினால் சம்பள பிடித்தம் செய்யப்படும்”: இந்திய பார் கவுன்சில் சுற்றறிக்கை 

முதுகுளத்தூரில் தொடரும் சாதி வன்மம்!

திவ்ய பாரதி கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி முதுகுளத்தூர் அருகே உள்ள கடலாடி என்கிற ஊரில் ஊராட்சி மன்ற பொது கழிப்பறை செப்டிக் டேங்கை சுத்தம் செய்கையில் பாலமுருகன் என்கிற தொழிலாளி விசவாயு தாக்கி உயிரிழந்தார். அது குறித்து கடலாடி காவல் நிலையம் உரிய பிரிவுகளின் கீழ் FIR பதியவில்லை . இது தொடர்பாக இறந்து போனவரின் மனைவியுடன் கடந்த இரண்டு நாட்களாக ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம், sp அலுவலகம், முதுகுளத்தூர் dsp அலுவலகம் என்று … Continue reading முதுகுளத்தூரில் தொடரும் சாதி வன்மம்!

புனித திரு உரு’ பிம்பங்கள்!

அ. மார்க்ஸ் நமது அரசியல் தலைவர்கள் பற்றிய 'திரு உரு'பிம்பங்களைக் கட்டமைப்பது, அப்பழுக்கற்ற iconic images உருவாக்குவது முதலியன ஆபத்தானது என அருள் எழிலன் கூறியுள்ளது முக்கியமான ஒன்று. காமராசர் பற்றிக் கிட்டத் தட்ட ஒரு குட்டிக் கடவுள் என்கிற அளவு பிம்ப உருவாக்கம் நடதுள்ளதை அவர் குறிப்பாகக் கூறியுள்ளார் காமராசர் குறைகளே இல்லாதவர் என்பதல்ல. ஆனால் காமராசர், கக்கன் முதலானோருக்கு இத்தகைய பிம்பம் உருவானது எப்படி என்பது பற்றியும் நாம் ஆராய வெண்டும். இன்றைய தலைவர்களுடன் … Continue reading புனித திரு உரு’ பிம்பங்கள்!

பெரிய மாயத்தேவர் பாரதிராஜா பெயர் சர்ச்சையும் அறிவுத்துறை பெரும்பான்மைவாதமும்

ஸ்டாலின் ராஜாங்கம் 1)தேர்தல்பணிகள் தொடங்கிய நேரத்தில் கட்சி கூட்டமொன்றில் திமுக பொன்முடி, சாதி பற்றி பேசினார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது பொன்முடியின் சொந்த குடும்பத்தில் நடந்திருக்கும் கலப்புமணங்களை வரிசைப்படுத்திக் காட்டி அவரை சாதிரீதியாக யோசிக்கக் கூடாது என்று எழுதப்பட்டது. 2)இப்போது முகநூல்பக்கத்தில் தன்பெயரை மட்டுமே போட வாய்ப்பிருந்தும் சாதிப்பட்டத்தோடு கூடிய 'மாற்றமுடியாத'தன் அப்பாவின் பெயரோடு தன் பெயரை குறிப்பிட்டிருக்கிறார் பாரதிராஜா.(பெரிய மாயத்தேவர் பாரதிராஜா)இந்நிலையில் சினிமாத்துறையைச் சேர்ந்த சிவா என்பவர் இதை விமர்சித்து பதிவிட்டிருக்கிறார். வாசிக்க: “ஓட்டு போடும் … Continue reading பெரிய மாயத்தேவர் பாரதிராஜா பெயர் சர்ச்சையும் அறிவுத்துறை பெரும்பான்மைவாதமும்

தமிழகத்தில் சமூக நீதி எங்கே இருக்கிறது?

“தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக திராவிட கலாச்சாரம் மற்றும் திராவிட அரசியல் பற்றி பேசுகிற அரசியல் கட்சிகளே இருந்திருக்கின்றன. உண்மையில் சொல்லப் போனால், கடந்த 50 ஆண்டுகளில் ஈ.வே.ரா. பெரியார் முன்வைத்த ஒட்டுமொத்த சமூக சீர்திருத்த பிரச்சனையை இக்கட்சிகள் ஆழக் குழி தோண்டி புதைத்துவிட்டன” என தெரிவித்துள்ளார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் பிருந்தா காரத். தமிழக வாக்காளர்களிடன் வீடியோ மூலம் பேசியுள்ள அவர், http://www.youtube.com/watch?v=fMFg-FcLp2k “சமூக சீர்திருத்தம் இங்கு செயல்படுத்தப்படவில்லை என்பதுடன் மட்டுமின்றி, அதற்குப் … Continue reading தமிழகத்தில் சமூக நீதி எங்கே இருக்கிறது?

மாணவர்களின் தாய் ஸ்மிருதி இரானிக்கு கன்னய்யா குமார் கடிதம்!

ஜேஎன்யு வளாகத்தில் பிப்ர வரி 9 அன்று நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து விசாரணை செய்த உயர் மட்ட அளவிலான விசாரணைக் குழு அந்த நிகழ்வு குறித்து ஜோட னையாகப் புனையப்பட்ட வீடி யோவை ஆதாரமாகக் கொண்டு இடதுசாரி மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் மீது பல்வேறுவிதமான தண்டனைகளை விதித்துள்ளது. இதனை எதிர்த்து அவர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவர்கள் அனைவருமே என் குழந்தைகள் போன்றவர்கள் என்று ஒருசமயம் ஸ்மிருதி இரானி … Continue reading மாணவர்களின் தாய் ஸ்மிருதி இரானிக்கு கன்னய்யா குமார் கடிதம்!

கையில் தாலியுடன் திருமாவளவன்: அதிமுக பிரச்சாரப் படம் வெளிப்படுத்தும் சாதி அரசியல்!

மினியன்கள் பாணியில் தமிழகத்தின் ‘சனியன்’களை வரைந்துள்ளதாக ஸ்ரீராம் என்பவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் தமிழக அரசியல் தலைவர்களின் படங்களை வெளியிட்டுள்ளார். அதில் கருணாநிதி, வைகோ, விஜயகாந்த், ஸ்டாலின், திருமாவளவன், மோடி, பிரேமலதா போன்றோர் இடம்பெற்றுள்ளனர். அதிமுக நபர் ஒருவர் தேர்தல் பிரச்சாரத்துக்காக இந்தப் படங்களை வரையச் சொன்னதாக சொல்லியிருக்கிறார் ஸ்ரீராம் . பிரச்சாரத்துக்காக வரையப்பட்டுள்ள இந்தப் படங்களில், திருமாவளவனை மிகக் கீழ்தரமான சாதியத்துடன் வரைந்துள்ளார். கையில் தாலியுடன் இருக்கிறார் திருமாவளவன். இதுகுறித்து ஒருவர் பின்னூட்டமிட்டு கேட்டபோது, திருமாவளவன் குறித்து தாம் … Continue reading கையில் தாலியுடன் திருமாவளவன்: அதிமுக பிரச்சாரப் படம் வெளிப்படுத்தும் சாதி அரசியல்!

சத்யராஜ் அரசியலுக்கு வரவேண்டும்; ஏன்?

செந்தில்குமார்   தமிழ் சினிமா பேச தொடங்கிய காலத்திலேயே அது சமூக நீதியை வலியுறுத்தும் முற்போக்கு கருத்துக்களையும் சேர்த்தே பேச தொடங்கியது . அந்த காலகட்டத்தில் சமூக நீதியை பேசுவது சினிமாவில் பேசுவது மிக சிரமமான ஒன்று . காரணம் யாரெல்லாம் சமூக நீதிக்கு எதிராக இருந்தார்களோ அவர்கள் கையில்தான் சினிமாவும் இருந்தது . பிறகு அவ்வப்போது பட்டும் படாமலும் தொட்டும் தொடாமலும் சமூக நீதி பற்றிய கருத்துக்கள் சினிமாவில் இடம் பெற்றாலும் கூட அது சமூக … Continue reading சத்யராஜ் அரசியலுக்கு வரவேண்டும்; ஏன்?

மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு ஏன் கூடாது? காரணங்கள் இதோ..!

மருத்துவ இளங்கலை படிப்பில் சேருவதற்காக பொது நுழைவுத்தேர்வு ஒன்றை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை சில நாட்களாக எழுப்பப்பட்டு வருகிறது. இது குறித்து நடந்து வரும் வழக்கில், பொது நுழைவு தேர்வு நடத்த மத்திய அரசின் அனுமதி பெற்று விட்டதாக மருத்துவ கவுன்சில் உச்ச நீதிமன்றத்தில் கூறியதை அடுத்து உச்ச நீதிமன்றம் அவ்வாறு நடத்துவதற்கு மருத்துவ கவுன்சிலுக்கு அனுமதி அளித்துள்ளது. தமிழக அரசு பொது நுழைவு தேர்விற்கு எதிராக தனது நிலையை ஏற்கனவே தெரியப்படுத்தியுள்ளது. இந்நிலையில் பொது நுழைவுத்தேர்வு என்பது மாணவர்களின் … Continue reading மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு ஏன் கூடாது? காரணங்கள் இதோ..!

“தமிழரெல்லாம் மானத்தோடு தலை நிமிர்ந்து வாழ்வதற்கு யார் காரணம்? அம்பேத்கர் என்று கூறனும்”!

ப்ரேமா ரேவதி மிக சுத்தமான உயர்தரமான சில சாலைகள் சில பகுதிகள் சென்னை மாநகரத்தில் உண்டு. அதில் முக்கியமான ஒன்று சேத்துப்பட்டில் இருக்கும் ஹாரிங்டன் சாலை. பல முறை துப்புரவு செய்யப்பட்டு பல பன்னாட்டு உணவு விடுதிகள் மிளிரும் இச்சாலையை பலமுறை கடந்திருக்கிறேன். இன்று அதிகாலை அதைக் கடக்கும்போது திடீரென “தமிழரெல்லாம் மானத்தோடு தலை நிமிர்ந்து வாழ்வதற்கு யார் காரணம்? அம்பேத்கர் என்று கூறனும்” என்ற பாடல் மிக உரக்க ஒலித்தபோது இது ஹாரிங்டன் சாலைதானா என … Continue reading “தமிழரெல்லாம் மானத்தோடு தலை நிமிர்ந்து வாழ்வதற்கு யார் காரணம்? அம்பேத்கர் என்று கூறனும்”!

‘வெளிச்சம்’ தொலைக்காட்சி அவசியம், ஏன்?

குட்டி ரேவதி பெரும்பான்மையான ஊடகங்களின் கருத்துகளை, விவாதங்களை, நிலைப்பாடுகளைக் கவனித்தோமானால் அவை ஆதிக்கசாதிச் சிந்தனையின் பக்கம் சாய்ந்ததாகவே இருக்கும். போலீஸ் ஸ்டேஷனின் சாயலில். அழகு, கோலம், சமையல், புடவை, பெண்ணுரிமைச் சிந்தனைகள் எல்லாமே இருபத்தைந்து வருடங்களுக்கு முன் நிலைபெற்ற பார்ப்பனீய அடையாளங்களை இன்றும் பின்தொடர்வதே தவிர கறுப்பு, கல்வி, உழைப்பு, கூட்டுப்பொருளாதாரம், உடலரசியல், பொதுசமூகப் பணி ஆகியவற்றை அங்கீகரித்த சிந்தனை இல்லை. இந்நிலையில், தொடரும் சாதிய வன்முறைகளை ஆவணப்படுத்தவும், ஒடுக்கப்பட்டோரின் கருத்தியல் நிலைப்பாடுகளை முன்வைத்து சமூகநீதி பேசவும், … Continue reading ‘வெளிச்சம்’ தொலைக்காட்சி அவசியம், ஏன்?

திருவாளர் திமுக சாதியை எதிர்க்கிறீர்களாமே..?

கௌதம சன்னா வைகோ பேசிய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை, அதே நேரத்தில் உடனே அவர் மன்னிப்பும் கேட்டுவிட்டார். அந்த மன்னிப்பு கோரலை ஏற்பதும் தண்டிப்பதும் கலைஞர் அவர்களின் பெருந்தன்மையைப் பொருத்தது.. ஆனால் இந்த நேரத்தில் பழைய கதைகளைப் பேசலாமா என்பது திமுகவினர் யோசிக்க வேண்டும். பழைய கதைகளைப் பேசினால் திருவாளர் திமுகவினரின் முற்போக்கான சாதிய நடவடிக்கைகள் அம்பலமாகும் என்பதை அவர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். அருவருக்கத்தக்க வகையில் அவர்கள் மேற்கொள்ளும் … Continue reading திருவாளர் திமுக சாதியை எதிர்க்கிறீர்களாமே..?

தலித்துகளுக்கு ஓட்டலில் உணவில்லை என்று தீண்டாமையை கடைப்பிடித்த உரிமையாளர் கைது!

ஈரோடு மாவட்டம் கெம்பநாயக்கன்பாளையத்தில் தலித் மக்களை உணவகத்திற்குள் உள்ளே நுழைய அனுமதிக்காத அம்மன் ஓட்டல் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். உணவகத்திற்குள் தலித் மக்களை அனுமதித்தால் மற்ற சமூகத்தினர் வரமாட்டார்கள் என இந்த உணவகத்தின் உரிமையாளர் பேசிய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானது. தி டைம்ஸ் தமிழும் வெளியிட்டது. http://www.youtube.com/watch?v=iNyzsuRwyvQ இந்நிலையில் இந்த தீண்டாமைக்கு எதிராக சமூகநீதிக் கட்சியினர் காவல் நிலையத்தில் வன்கொடுமை சட்டத்தின் படி புகார் அளித்தனர். அதன் பேரில் உணவக உரிமையாளர் கைது செய்யப்பட்டிருக்கிறார். சமூகநீதிக் கட்சி தலித்துகளை … Continue reading தலித்துகளுக்கு ஓட்டலில் உணவில்லை என்று தீண்டாமையை கடைப்பிடித்த உரிமையாளர் கைது!

பெரியாரிஸ்ட்டாக வாழும் க. பொன்முடி குறித்த செய்திக்கு சில விளக்கங்களும் சில கேள்விகளும்!

திமுக முன்னாள் அமைச்சர் க. பொன்முடி  “ஓட்டு போடும் போது சாதி பார்க்கக்கூடாது. திருமணம் செய்யும் போது சாதி பார்க்க வேண்டும், வாக்களிக்க சாதி பார்த்தால் அப்புறம் வருஷம் முழுதும் கஷ்டம்தான்” என விழுப்புரம் திமுக கூட்டத்தில் பேசியதாக  ஒரு நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது. இது சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டது. அதை ஒட்டியும் நாளிதழில் வந்த செய்தியை அடிப்படையாகக் கொண்டும் தி டைம்ஸ் தமிழ் செய்தி வெளியிட்டது. க. பொன்முடியின் சம்பந்தியும் ஆய்வாளருமான சுபகுணராஜன், இந்தச் … Continue reading பெரியாரிஸ்ட்டாக வாழும் க. பொன்முடி குறித்த செய்திக்கு சில விளக்கங்களும் சில கேள்விகளும்!

“தாலி கட்டித்தான் திருமணம் நடக்க வேண்டும் என வற்புறுத்திய பெரியார்”: அ.மார்க்ஸ்

அ.மார்க்ஸ் நெ.து. சுந்தரவடிவேலு நினைவிருக்கிறதா? கல்வித்துறையில் உயர் பதவிகள் வகித்தவர். சென்னைப் பல்கலைக்கழகத் துணை வேந்தராகவும் இருந்தவர்.. பெரியார் தொண்டர். மாணவப் பருவம் முதல் மறையும் வரை சுயமரியாதைக்காரர். வட தமிழக சைவ முதலியார் வகுப்பினர். இறுக்கமான சாதீயச் சமூகப் பின்னணி இருந்தும் பிடிவாதமாகக் கலப்புத் திருமணம், சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டவர். குத்தூசி குருசாமி அவர்களின் கொழுந்தியாள், அதாவது மனைவி குஞ்சிதம் அம்மையார் அவர்களின் ச்கோதரி காந்தம் அம்மையாரைத் திருமணம் செய்து கொண்டவர். அவரது “தன் … Continue reading “தாலி கட்டித்தான் திருமணம் நடக்க வேண்டும் என வற்புறுத்திய பெரியார்”: அ.மார்க்ஸ்

திருமண மண்டபத்தில் கூட தீண்டாமை: காங்கேயம் அதிமுக எம் எல் ஏ நடராஜனுக்குச் சொந்தமான மண்டபத்தில் தலித் திருமணங்கள் நடத்த முடியாது!

தமிழகத்தின் கொங்கு மண்டலம் தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகளை அரங்கேற்றுவதில் தனி முத்திரை பதித்துவருகிறது. தருமபுரி இளவரசன், ஓமலூர் கோகுல்ராஜ், உடுமலைப் பேட்டை சங்கர் என சாதிய வன்மத்துக்கு தலித் இளைஞர்கள் பலியாகி வருகின்றனர். இந்நிலையில் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி கொங்கு பகுதியில் நிலவிவரும் சாதியம், தீண்டாமை குறித்து புலனாய்வு செய்தி ஒன்றை வழங்கியிருக்கிறது. இதில், கொங்குமண்டலத்தின் பல பகுதிகள் குறிப்பாக, வெள்ளக் கோயில், காங்கேயம் போன்ற பகுதிகளில் தலித்துகள் கோயில்களில் வழிபடும் உரிமை மறுக்கப்பட்டு வருவதாகவும் ஒடுக்கும் … Continue reading திருமண மண்டபத்தில் கூட தீண்டாமை: காங்கேயம் அதிமுக எம் எல் ஏ நடராஜனுக்குச் சொந்தமான மண்டபத்தில் தலித் திருமணங்கள் நடத்த முடியாது!

“நாங்க என்ன தப்பு செஞ்சோம்? லவ் பண்ணுவது அவ்வளவு பெரிய குற்றமா?”: கவுசல்யா

வன்னி அரசு கடந்த 13.3.16 அன்று உடுமலைப்பேட்டையில் சாதி மறுத்து காதல் மணம் புரிந்த சங்கர் - கவுசல்யா இணையர் சாதிவெறி கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டனர். இதில் சங்கர் கொல்லப்பட்டான், தங்கை கவுசல்யா உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இப்போது உடல் நலம் தேறி சிகிச்சை பெற்று வருகிறார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களின் வழிக்காட்டுதலின்பேரில் தங்கை கவுசல்யாவை சந்திக்க நாங்கள் எடுத்த தொடர் முயற்சியின் விளைவாக மார்ச் 23 … Continue reading “நாங்க என்ன தப்பு செஞ்சோம்? லவ் பண்ணுவது அவ்வளவு பெரிய குற்றமா?”: கவுசல்யா

திமுகவின் பலவீனத்தை ஸ்டாலினை விட தெளிவாக புரிந்து கொண்டவர் விஜயகாந்த்!

ஜி. கார்ல் மார்க்ஸ் நடைபெற இருக்கிற தேர்தலில் சிறப்பே, கூட்டணி பேரத்தில் எல்லா கட்சிகளும் குறைந்தது இரண்டு முறைக்கு மேல் அசிங்கப்பட்டது தான். ஆனால், எல்லா இடங்களிலும் ஜெயலலிதாவுக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அதற்குக் காரணம், இந்த அரசு மீது 'அதிருப்தி அலை' இல்லை. ஜெயாவின் இந்த செயல்படாத அரசு மீது உள்ள முணுமுணுப்பு, திமுகவுக்கான அலையாக ஏன் மாறவில்லை? போன ஐந்து வருடத்தில் திமுக ஆடிய ஆட்டம், மக்களுக்கு மறக்கவில்லை. அதுதான். மட்டுமல்லாமல் திமுகவின் … Continue reading திமுகவின் பலவீனத்தை ஸ்டாலினை விட தெளிவாக புரிந்து கொண்டவர் விஜயகாந்த்!

”தலித்துகளை அரசியல் ஆனாதை ஆக்கணும்; சோத்துக்கு அலைய விடணும்”: செங்குட்டுவன் வாண்டையாரின் அருவருப்பூட்டும் பேச்சு

பிரேம் பிரேம் நீங்கள் சாதி பார்ப்பதில்லை ஆனால் சாதி உங்களைப் பார்த்துக்கொண்டே இருக்கிறது சாதி உளவியலைத் துடைத்து அழிக்காத யாரும் மனித அறம் பற்றிப் பேசத் தகுதியற்றவர்கள் என்பதற்கு விளக்கம் கேட்பவர்கள் அறிவிலிகள் மட்டும் இல்லை அய்யோக்கியர்களும் கூட. தீண்டாமைையை நான் கடைபிடிப்பதில்லை என்று சொல்லிவிட்டு தீண்டாமை அமைப்பை, அதன் உளவியலை, அதற்கான இந்திய நம்பிக்கைகளை எதிர்த்துப் போராடமல் இருப்பது தீண்டாமையைச் செலுத்துவதைவிட கொடிய குற்றம். நவீன மனம், நவீன அறிவு தனக்கு உள்ளதாக நம்பம் ஒவ்வொருவரும் … Continue reading ”தலித்துகளை அரசியல் ஆனாதை ஆக்கணும்; சோத்துக்கு அலைய விடணும்”: செங்குட்டுவன் வாண்டையாரின் அருவருப்பூட்டும் பேச்சு

ஐந்தாயிரத்துக்கெல்லாம் கொடூர கொலை செய்வது தமிழகத்தில் சாதாரணமாகிவிட்டது: தொல். திருமாவளவன் நேர்காணல்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் சிறப்பு நேர்காணலை வெளியிட்டுள்ளது  ‘தீக்கதிர்’(20-03-2016) நாளிதழ். அதனுடைய மறுபிரசுரம்... சந்திப்பு : மதுக்கூர் ராமலிங்கம், சி. ஸ்ரீராமுலு மக்கள் நலக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் ஏற்கெனவே பல்வேறு கூட்டணிகளில் இடம்பெற்றிருந்தன. அதற்கும், தற்போது அமைந்துள்ள மக்கள் நலக் கூட்டணிக்கும் அடிப்படை வேறுபாடு என்ன? மேலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முன்வைத்த கூட்டணி ஆட்சி என்ற முழக்கத்திற்கு இந்தக் கூட்டணி எந்த வகையில் ஒத்திசைவாக உள்ளது? திமுக,அதிமுக ஆகிய இரு … Continue reading ஐந்தாயிரத்துக்கெல்லாம் கொடூர கொலை செய்வது தமிழகத்தில் சாதாரணமாகிவிட்டது: தொல். திருமாவளவன் நேர்காணல்

சாதி ஆதிக்க பரப்புரை: உங்கள் நோக்கம் தான் என்ன?

வன்னிஅரசு இன்று காலை தான் இப்போது.காம் என்ற இணையதளத்தின் பெயரில் வெளியிடப்பட்டிருந்த படங்களை பார்க்க நேர்ந்தது. பல பெண்ணிய செயற்பாட்டாளர்கள் 'நான் உயர் சாதிப் பெண்' 'நான் ஆதிக்க சாதிப் பெண்' என்று அறிமுகமாகி 'இருந்தாலும்' ஆணவக்கொலையைக் கண்டிக்கிறேன் என்று முடியும் வாசகங்களுடன் அவர்களின் படங்களும் அதில் இருந்தது. அந்த 'ஆதிக்க சாதி ஆணவ விளம்பரத்தில்' வந்திருந்த பெண்களில் சிலரின் செயல்பாடுகளை அறிந்தவன் என்ற முறையில் எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. பிறகு விசாரித்ததில் தான் பல … Continue reading சாதி ஆதிக்க பரப்புரை: உங்கள் நோக்கம் தான் என்ன?

நீதிபதியின் சாதி மனசாட்சி..!

வன்னி அரசு. சாதி மறுத்து காதல் மணம் புரிந்த சங்கர் கவுசல்யாவை பட்டப்பகலில் அரிவாளால் வெட்டிச் சாய்த்தது சாதிவெறி கும்பல். காதல் மணம் புரிந்த எட்டு மாதங்கள் முழுக்க கொலை மிரட்டல்கள், லட்சங்களில் பணம் தருகிறோம் என்று அவன் காதலுக்கு விலை சொல்லப்பட்ட போதும், இரண்டு முறை கொலை முயற்சி நடந்தபோதும் எந்த விதத்திலும் தன் காதலை விட்டுத்தராமல், உறுதியோடு நின்று, இந்த முறை நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டான் எங்கள் வீரன் சங்கர். எல்லாவற்றையும் விட தான் … Continue reading நீதிபதியின் சாதி மனசாட்சி..!

சாதிய படுகொலைகள்: இப்போதைக்கு சிசிடிவிக்களை நிறுத்தி வைப்போம்!

ஜி. கார்ல் மார்க்ஸ் ஒரு இருபத்திரண்டு வயது இளைஞன், தற்போது தான் கல்லூரியை முடித்தவன், அவனுக்கு பத்தொன்பது வயதில் படிப்பை விட்ட ஒரு மனைவி. வேலை கிடைத்தவுடன் உயிருக்கு ஆபத்தான கிராமத்தை விட்டு நகர வேண்டும். இல்லையில்லை.. ஓடிவிட வேண்டும். அதற்குள் எல்லாரும் பார்க்க வெட்டிக் கொல்லப்படுகிறான். அவளும் வெட்டப்படுகிறாள். இந்த கொலையின் கண்ணிகளைத் தொடர்ந்தால் அது எங்கு போகிறது என்பதை நான் யோசித்துக்கொண்டே இருக்கிறேன். முதலில், இந்தக் கொலையை திட்டமிட்டவர்களைத் தாண்டி, நேரடியாகக் களத்தில் செய்பவர்கள் … Continue reading சாதிய படுகொலைகள்: இப்போதைக்கு சிசிடிவிக்களை நிறுத்தி வைப்போம்!

தலித் படுகொலை: “அறிக்கை விடாத மத்தவங்களையும் கேளுங்க; எங்களை மட்டும் ஏன் கேட்கறீங்க?”: அன்புமணி ராமதாஸ்

தேவர் சாதி பெண்ணை திருமணம் செய்துகொண்டார் என்பதற்காக தலித் இளைஞர் சங்கர், உடுமலைப் பேட்டையில் பகல் நேரத்தில் நடுசாலையில் வைத்து வெட்டிக் கொல்லப்பட்டார். அவர் மணந்த கவுசல்யாவுக்கு அரிவாள் வெட்டுகள் விழுந்தன. இந்த சம்பவம் குறித்து உங்களுடைய கருத்தென்ன என்று பாமக நிறுவனர் ராமாதாஸிடம் தொலைக்காட்சி நிருபர் கேள்வி எழுப்பினார். அதற்கு, “இதைவிட எவ்வளவு செய்தி இருக்கு அதைப் போடுங்க” என்று சொல்லி கிளம்பினார். இதையும் படியுங்கள்: ’எவ்ளோ முக்கியமான செய்திகள் சொல்லியிருக்கேன்..மொதல்ல இதப் போடுங்க; பிறகு அதபத்திப் … Continue reading தலித் படுகொலை: “அறிக்கை விடாத மத்தவங்களையும் கேளுங்க; எங்களை மட்டும் ஏன் கேட்கறீங்க?”: அன்புமணி ராமதாஸ்

’எவ்ளோ முக்கியமான செய்திகள் சொல்லியிருக்கேன்..மொதல்ல இதப் போடுங்க; பிறகு அதபத்திப் பேசலாம்”தலித் இளைஞர் படுகொலைப் பற்றி ராமதாஸ் கருத்து

திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டையில் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட தம்பதி சங்கர், கவுசல்யா ஆகியோரை நடு சாலையில்  பகல் நேரத்தில பல பேர் முன்னிலையில் மூன்று பேர் படுகொலை செய்தனர். சாதி மறுத்து தலித் இளைஞரை திருமணம் செய்துகொண்டதால் கவுசல்யாவின் தந்தை, இந்த படுகொலைகளை ஆள் வைத்து செய்ததாகச் சொல்லி நீதிமன்றத்தில் சரணடைந்திருக்கிறார். இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸிடன் இந்த படுகொலை குறித்து நியூஸ் 7 நிருபர்  வேலூரில் பத்திரிகையாளர் சந்திப்பின் போது கருத்து கேட்டிருக்கிறார்கள். … Continue reading ’எவ்ளோ முக்கியமான செய்திகள் சொல்லியிருக்கேன்..மொதல்ல இதப் போடுங்க; பிறகு அதபத்திப் பேசலாம்”தலித் இளைஞர் படுகொலைப் பற்றி ராமதாஸ் கருத்து

அதிமுகவின் மணல் கொள்ளைக்கு மு.க. ஸ்டாலின் பினாமியா?: கனகராஜ் கேள்வி

கனகராஜ் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், மக்கள் நலக் கூட்டணியை `அதிமுகவின் பினாமி அணி’ என்று விமர்சித்திருக்கிறார். இதற்கு முன்பும் கூட திமுக, காங்கிரஸ்காரர்கள் மக்கள் நலக்கூட்டணியை அதிமுக வின் பி.டீம் என்று விமர்சித்துள்ளனர். கொள்கை அடிப்படையில் விமர்சிப்பதற்கு தார்மீக தைரியம் இல்லாதபோது அவதூறுகளைப் பொழிவதில் அதிமுக, திமுக இரண்டும் ஒரே அணிதான். இதுமட்டுமல்ல, ஊழலில் பிரித்தறிய முடியாத அளவிற்கு இரண்டும் ஒரே அணி என்பதையும் தமிழக மக்கள் புரிந்துவைத்திருக்கி றார்கள். தமிழகத்தின் ஆறுகள் ஒட்டச் சுரண்டப்படுகின்றன. 500 … Continue reading அதிமுகவின் மணல் கொள்ளைக்கு மு.க. ஸ்டாலின் பினாமியா?: கனகராஜ் கேள்வி

தலித் ஒடுக்குமுறை: திமுகவின் சமூக நீதிப் பாதையில் ’முள்வேலி’ ஏன் வந்தது?

கரூர் மாவட்டம் கடவூர் வட்டம், தரகம்பட்டியில் பொது சாலையில் தலித் மக்கள் நடமாட தடை விதித்து, அந்தப் பகுதியில் திமுகவைச் சேர்ந்தவர்கள் முள்வேலி அமைத்துள்ளதாக படங்களுடன் செய்தி பகிர்ந்திருக்கிறார் பூவை லெனின். அவருடைய பதிவில் லெனின் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “தரகம்பட்டி வடக்கு தெருகாலனியில் பொது சாலையில் தலித் மக்கள் நடமாட தடை. பொதுப்பாதையில் முள்வேலி போட்டு தடுப்பு. தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் தயாளன் மற்றும் அவர் தம்பி ராகுல்காந்தி சாதி வெறியாடட்டம். தட்டி கேட்ட சகோதரர் … Continue reading தலித் ஒடுக்குமுறை: திமுகவின் சமூக நீதிப் பாதையில் ’முள்வேலி’ ஏன் வந்தது?

தெலுங்கர் பேராசிரியர் அருணன் எழுதிய தமிழ் நூல்களின் பட்டியல் இதோ…

செவ்வாய்கிழமை தந்தி டிவியில் ஒளிபரப்பான விவாத நிகழ்ச்சியில் சீமானின் பேச்சுக்கு சிலர் தமிழ் தேசியம் முலாம் பூசுகின்றனர். அவர்கள் பேராசிரியர் அருணனை தெலுங்கர் என்ற முகமூடி அணிவிக்கின்றனர். தெலுங்கரானபேரா. அருணன்  எழுதிய தமிழ் நூல்களின் பட்டியல் இதோ... தமிழரின் தத்துவ மரபு (2 பாகங்கள்) காலந்தோறும் பிராமணியம் (8 பாகங்கள்) தமிழகத்தில் சமூக சீர்திருத்தம் – இரு நூற்றாண்டு வரலாறு மூட நம்பிக்கைகளிலிருந்து விடுதலை! கடவுளின் கதை (5 பாகங்கள்) யுகங்களின் தத்துவம் பேராசிரியர் அருணன் ஐந்து தொகுதிகளாக பகுத்து … Continue reading தெலுங்கர் பேராசிரியர் அருணன் எழுதிய தமிழ் நூல்களின் பட்டியல் இதோ…

#அவசியம்வாசிக்க: ‘காவிக் கிண்ணத்தில் ஊழல் வழிகிறது’ சீதாராம் யெச்சூரியின் நேர்காணல்

பாஜக இந்து வாக்குவங்கியை ஒருமுகப்படுத்துவதற்காகவே, ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தேசவிரோத முழக்கங்களை எழுப்பினார்கள் என்று பொய்யாக ஜோடனை செய்து நடவடிக்கை எடுத்திருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார். டெக்கான் ஹெரால்ட் நாளேட்டின் நிருபர்கள் சஞ்சய் பசக் மற்றும் நம்ராதா பிஜி அஹூஜா ஆகியோருக்கு யெச்சூரி அளித்த நேர்காணல். தீக்கதிருக்காக தமிழாக்கம் செய்தவர் ச. வீரமணி கேள்வி: ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் எழுப்பப்பட்ட தேச விரோத முழக்கங்களை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? சீத்தாராம் யெச்சூரி: … Continue reading #அவசியம்வாசிக்க: ‘காவிக் கிண்ணத்தில் ஊழல் வழிகிறது’ சீதாராம் யெச்சூரியின் நேர்காணல்

நான் கம்யூனிஸ்ட் இல்லை;ஆனால் கம்யூனிஸ்ட்டின் பேச்சுரிமைக்காகவும் குரல் கொடுப்பேன்:பாராட்டை அள்ளும் திரிணாமுல் எம்பி.யின் உரை!!!

ஜே.என்.யூ மாணவர்கள் தேசவிரோத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது தொடர்பாக பாராளுமன்ற மக்களவையில் நேற்று விவாதம் நடைபெற்றது. அதில் பேசிய, ஹார்வார்டில் பாடங்கள் எடுத்தவரும், முப்பது வருடங்களாக பேராசிரியராக பணிபுரிந்தவருமான , திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி சுகதோ போசின் உரை, பெரும் பாராட்டை பெற்றுள்ளது. டிவிட்டரில் #praisesugato என்ற ஹேஷ் டேக் பிரபலமடைந்துள்ளது.  அந்த அற்புதமான உரையின் தமிழாக்கம் கீழே. *30 வருடங்களுக்கு மேலாக ஆசிரியராக இருந்தவன் என்கிற முறையில்,  மாண்புமிகு சக உறுப்பினர்கள், என்னுடைய உரையை … Continue reading நான் கம்யூனிஸ்ட் இல்லை;ஆனால் கம்யூனிஸ்ட்டின் பேச்சுரிமைக்காகவும் குரல் கொடுப்பேன்:பாராட்டை அள்ளும் திரிணாமுல் எம்பி.யின் உரை!!!

ரோஹித் வெமுலாவை சோதிக்க மருத்துவர்களை அனுமதிக்கவில்லை என நாடாளுமன்றத்தில் பொய் சொன்ன ஸ்மிருதி இரானி: வீடியோ ஆதாரம் இங்கே…

மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, புதன்கிழமை மாநிலங்களவையில் ரோஹித் வெமுலா தற்கொலை விவகாரத்தின் மீது பேசிய போது, ரோஹித் தற்கொலை செய்துகொண்டு இறந்த பிறகு, அவரைப் பார்க்க மருத்துவர்கள் அனுமதிக்கப்படவில்லை. அவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என சோதிக்கஅடுத்த நாள் காலை 6.30 மணி வரை அனுமதிக்கப்படவில்லை என்று பேசியிருந்தார். ஆனால், ரோஹித் ஹைதராபாத் பல்கலை மாணவர் விடுதியில் தற்கொலை செய்துகொண்டதை அறிந்த நண்பர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் தெலுங்கானா காவலர்களும் … Continue reading ரோஹித் வெமுலாவை சோதிக்க மருத்துவர்களை அனுமதிக்கவில்லை என நாடாளுமன்றத்தில் பொய் சொன்ன ஸ்மிருதி இரானி: வீடியோ ஆதாரம் இங்கே…

கும்பகோண மகாமகம்: மனிதக் கழிவுகளை அகற்றுவதற்கு துப்புரவுத் தொழிலாளர்களை வற்புறுத்துவதாகக் குற்றச்சாட்டு

கும்பகோண மகாமகம் கோலாகலமாக நடந்துவரும் நிலையில் துப்புரவுப் பணியாளர்கள் கடும் பணிச்சுமையை சுமப்பதாக ஆதித்தமிழர் பேரவை கண்டனம் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து ஆதித்தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில், “மற்றவர்கள் மாற்றமும் ஏற்றமும் பெற்றிட.. துப்புரவுத் தொழிலாளர்கள் நாற்றத்தைச் சுமந்து சாக வேண்டுமா? தமிழக அரசே! கும்பகோண மகாமக விழாவில் குவியும், குப்பைக் கழிவுகளுடன் கூடிய மனிதக் கழிவுகளை அகற்றுவதற்கு துப்புரவுத் தொழிலாளர்களை வற்புறுத்தி ஊர் ஊராய் அழைத்துச் வந்து கொடுமைப் படுத்துவதை உடனே நிறுத்து! உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள … Continue reading கும்பகோண மகாமகம்: மனிதக் கழிவுகளை அகற்றுவதற்கு துப்புரவுத் தொழிலாளர்களை வற்புறுத்துவதாகக் குற்றச்சாட்டு