உத்தமர் வாஜ்பாயிக்கு புகழஞ்சலி கூட்டம்: கட்சிகளை விளாசுகிறது முகநூல்!

தமிழக பாஜக ஏற்பாடு செய்துள்ள வாஜ்பாயி புகழஞ்சலி கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். பாஜகவின் கொள்கைகளை எதிர்க்கும் திமுக, சிபிஐ, சிபிஎம், காங்கிரஸ், விசிக போன்ற கட்சிகளின் தலைவர்கள் இந்த புகழஞ்சலி கூட்டத்தில் பேசுகின்றனர்.

இந்த புகழஞ்சலி கூட்டத்தின் அழைப்பிதழ் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. பல்வேறு தரப்பினர் சொன்ன கருத்துக்களின் தொகுப்பு இங்கே!

அரசியல் விமர்சகர் வில்லவன்:

இந்தியாவின் பெரிய அச்சுறுத்தல் இந்துத்துவா.

அடுத்ததாக வரப்போவது இந்த அரசியல் நாகரீகம்தான் போல..

விசி மற்றும் இரண்டு கம்யூனிஸ்ட் இயக்கங்களும் வாஜ்பாயை என்ன சொல்லி புகழப்போகின்றன?

செத்தவர்கள் எல்லோருமே புகழத்தக்கவர்கள் என்றால் அடுத்து இந்து மகாசபா போன்ற இயக்கங்கள் கோட்ஸேவுக்கு புகழஞ்சலி செலுத்த கூப்பிடும். போவீர்களா?

பாஜகவை மகிமைப்படுத்துவதான் விளைவுகள் எவ்வளவு மோசமாக இருக்கும் என்பதை மோடி டெமோ காட்டிவிட்டார். டெட்பாடிக்கு பாவ புண்ணியம் பார்க்க வேண்டாம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் ஆர்.எஸ்.எஸ்சுக்கு டெட்பாடிகள்தான் மூலதனம்

எழுத்தாளர் யமுனா ராஜேந்திரன்

எல்லாரும் ஒன்னாச் சேர்ந்து பாரதிய ஜனதா கட்சிக்கு ஜனநாயகச் சாந்து அடிக்குறாங்க. பாசிசம் பத்தி இனிமே வகுப்பு எடுக்காம இருங்க..

பத்திரிகையாளர் கவின்மலர்

வாஜ்பாய் நல்ல கவிஞர். அமைதியே உருவானவர். அதனால்தான் குஜராத்தின் புகழ்பெற்ற கவிஞரான வலிகுஜராத்தியின் கல்லறையை மோடி இடித்தபோது வாஜ்பாய் அமைதியாய் இருந்தார். மெல்லிய மனம் படைத்த வாஜ்பாயால் மோடியின் இந்த செயலுக்கு எப்படி எதிர்ப்பு தெரிவிக்கமுடியும்? அதனால்தான் குஜராத் வன்முறைகளின்போதும் அமைதிகாத்தார். தன் ஆசீர்வாதம் கிடைக்கவில்லை என்றால் மோடி வருத்தப்படுவார் என்பதை உணர்ந்து குஜராத் வன்முறைகளை நிறைவாகச் செய்யும்படி ஆசீர்வதித்த உத்தமர் அவர். பாபர் மசூதியை இடிக்கப் புறப்பட்டு வந்த கரசேவகர்களின் மனம் கோணாமல் அவர்களுக்கு ஆதரவளித்த மஹான் வாஜ்பாயி. எவர் மனதையும் நோகடிக்காத மென்மையான கவிமனம் அவருக்கு…

  • இப்படித்தான் உரையாற்றப் போகிறீர்களா தோழர்களே?

அரசியல் செயல்பாட்டாளர் நிவேதா:

அடுத்ததாக
சாத்வீக தீவிரவாதி வாஜ்பாய் ஜி அவர்களுக்கு தோழர் புகழஞ்சலி செலுத்துவார்…

அரசியல் விமர்சகர் திரு யோ:

“அரசியல் நாகரீகம்” கருதி அனைத்து கட்சிகளும் ஒன்றாக இணைந்தால் தேர்தல் செலவு மிஞ்சும். அப்போ இனிமேல் சாவர்க்கர் நினைவு தினம், கோட்சே தியாகநாள், கோல்வால்கர் நினைவுநளெல்லாம் தோழர்கள் கொண்டுவார்களா என்கிறார் ஆர்வமிகுதி கொண்ட ஒருவர்.

அவருக்கு என்ன பதிலைத் தருவது தோழர்களே? (இந்த கேள்வி சிவப்பிற்கும், நீலத்திற்கும்)

எழுத்தாளர் சம்சுதீன் ஹீரா:

என்ன சொல்லிப் புகழப்போகிறீர்கள் தோழர்களே..?

நரகலை மிதித்துவிட்டதைப் போல அருவெறுப்பாய் இருக்கிறது. அரசியல் நாகரிகம், மண்ணாங்கட்டி என்று பிழைப்பு வாதிகளைப்போல பசப்பப்போகிறோமா..? அவநம்பிக்கையாய் உணர்கிறேன். இனம் புரியாத பதட்டமும் கடும் எரிச்சலும் கலந்த மனநிலையில் எதாவது மரியாதைக் குறைவாக எழுதிவிடுவேனோ என்ற அஞ்சுகிறேன்.

கம்யூனிஸ்டுகளுக்கென்று ஒரு பாரம்பரியமுண்டு.. பாசிஸ்ட்டுகளைப் புகழ்ந்து பேச கம்யூனிஸ்டுகளின் நா எழுமா..?

#கொடுமை..

ஊடகவியலாளர் கீற்று நந்தன்:

இவங்க எல்லாம் வருசா வருசம் பசும்பொன் முத்துராமலிங்கத்துக்கு திதி கொடுக்கிறதை நினைச்சிப் பார்த்தால், இதுக்கு ஷாக் ஆக மாட்டீங்க…

செயல்பாட்டாளர் முருகன் கண்ணா:

வாஜ்பாயை நாமும் கொஞ்சம் புகழுவோமா ?

சுதந்திர போராட்டத்தை வேடிக்கை பார்க்க வந்ததாக பிரிட்டிஷ் அரசிடம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த மிக சிறந்த போராளி.

சர்வதேச முதலாளிகள் மிக எளிதாக தங்களின் சரக்குகளை நகர்த்தி செல்ல தங்க நாற்கர சாலை திட்டத்தை செயல்படுத்திய ஒரு சிறந்த கார்ப்ரேட் எடுப்பு.

குஜராத் படுகொலை உள்ளிட்ட சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை அரங்கேற்ற துணையாக இருந்த சிறந்த மனிதநேய பண்பாளர்.

ராமர் கட்டிய பாலத்தை கண்டு பிடித்து இடிக்கவிடாமல் தடுத்து தேச வளர்ச்சிக்கு உதவிடும் சேதுசமுத்திர திட்டத்தை நிறுத்திய மிக சிறந்த பொறியியல் வல்லுனர்.

ராணுவ வீரர்களுக்கு சவபெட்டி வாங்கும் போது எப்படி ஊழல் செய்யனும் என்று கற்றுக் கொடுத்த முன்மாதிரி அரசின் மிக சிறந்த பிரதமர்.

மொத்தத்தில் ஆர்.எஸ்.எஸ்ன் ஒரு சிறந்த சங்கி

போதுமா இன்னும் புகழனுமா ?

காவிரிக்காக #IndiaBetraysTamilnadu டிவிட்டர் பரப்புரையின் மகத்தான வெற்றி.

ஆழி செந்தில்நாதன்

senthilnathan
ஆழி செந்தில்நாதன்

#IndiaBetraysTamilnadu டிவிட்டர் பரப்புரையில் 70,000 ட்வீட்களுக்கும் மேல் கடந்த 24 மணி நேரத்தில் பகிர்ந்துகொள்ளப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியா முதல் அமெரிக்கா வரை அனைத்து நாடுகளிலும் வாழும் தமிழர்கள் மிகுந்த ஈடுபாட்டோடு அதில் பங்கெடுத்திருக்கிறார்கள். சிங்கப்பூர், வளைகுடா நாடுகள், பிரிட்டன் என முக்கியமான பகுதிகளில் வாழும் தமிழர்கள் பரப்புரையில் கலந்துகொண்டார்கள். தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட எல்லா நகரங்களிலிருந்தும் இந்தப் பரப்புரையில் பங்களித்திருக்கிறார்கள்.

இந்த பரப்புரையின் உச்சத்தில் சென்னை, இந்திய அளவிலான டிவிட்டர் டிரெண்டிங்கில் முதல் இடங்களிலிலிருந்த இந்த ஹேஷ்டேகை அதிலிருந்து நீக்கியிருக்கிறது டிவிட்டர். இந்திய அரசின் கரசேவை இதில் வெளிச்சமாகத் தெரிகிறது. பரிதாபத்துக்குரியவர்கள்! மக்களின் குரலைக் காதுகொடுத்து கேட்க மறுத்து, இணைய உலக ஜனநாயகத்தையும் மறுக்கும் இந்திய ஆட்சியாளர்களும் அதற்கு துணைபோகும் டிவிட்டர் நிறுவனமும் பரிதாபத்துக்குரியவர்களே.

தமிழர் உரிமை தொடர்பாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட டிவிட்டர் பரப்புரையில் இதுதான் மிகப்பெரியது என நண்பர்கள் கூறுகிறார்கள். 24 மணிநேரத்தில் 70,000 ட்வீட்கள் என்பது சாதாரணமான எண்ணிக்கை அல்ல. தமிழர்களின் ஒற்றுமையால் மட்டுமே இது சாத்தியமாகியிருக்கிறது. வெறிகொண்ட உற்சாகத்தோடு நமது இளம்தலைமுறை இந்தியாவின் கண்களில் விரலைவிட்டு ஆட்டியிருக்கிறது. இந்த டிவிட்டர் பரப்புரைக்கு முன்முயற்சி எடுத்த அணியின் சார்பாக, அதைத் தொடங்கிய அணியில் இருந்த தோழர்கள் பெ.பழநி, பா.ச.பாலாசிங், வே.தாண்டவமூர்த்தி, கவிதா உள்ளிட்ட அனைவரின் சார்பாக கலந்துகொண்ட உங்கள் அனைவருக்கும் எங்களுடைய வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம். நீங்கள் வரலாறு படைத்திருக்கிறீர்கள்.

மார்ச் 30, 2018 வெள்ளிக்கிழமை மாலையில்தான், நாங்கள் கூடி இதற்கான முதல் பணிகளைத் தொடங்கினோம். அடுத்த 36 மணி நேரத்தில் காட்டுத் தீ போல பரவிய இந்த டிவிட்டர் பரப்புரையின் முதல் மணி நேரங்கள் மிகவும் சாதாரணமானவை. பழநியும் பாலாசிங்கும் தாண்டவமூர்த்தியும் மெல்ல மெல்ல பங்கேற்பாளர் அணிகளை உருவாக்கினார்கள், நான் முழக்கங்களை உருவாக்குவதிலும் ஆதரவுத்தளங்களை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தினேன். ஞாயிறு காலை 9 மணிக்கு துல்லியமாக இந்த தாக்குதலைத் தொடுக்கவேண்டும் என பலரிடம் பேசி ஆயத்தமானோம். ஆனால் தாக்குதல் சற்று முன்னதாகவே தொடங்கிவிட்டது. கட்சி வித்தியாசமின்றி, அமைப்பு வித்தியாசமின்றி உற்சாகத்தோடு நமது நண்பர்கள் இதில் கலந்துகொள்ள, சில மணி நேரங்களில் பொதுமக்களையும் அது சென்றடைந்தது.

நியூஸ் 18, தினகரன், ஒன் இந்தியா போன்றவற்றில் செய்தி வந்ததற்குப் பிறகும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய ட்வீட்டில் இந்த ஹேஷ்டேகைப் பயன்படுத்திய பிறகும் பரவலாக சென்றடைந்தது. பல மூத்தத் தோழர்கள் – அவர்களுடைய நேரடி இணைய அனுபவம் குறைவு என்பதால் – இதைப் பார்த்து வியப்படைந்து தங்கள் ஆதரவை வழங்கினார்கள்.

தமிழ் சமூக ஊடக உலகம் விஸ்வரூபமெடுத்தது. ஒரு குறிப்பிட்ட சமயத்தில், ஒரு நிமிடத்துக்கு 290 ட்வீட்கள்வரை போடப்பட்டிருக்கிறது என்றால் எவ்வளவு வேகமாக நமது மக்கள் பங்கெடுத்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

டிவிட்டர் டிரெண்ட் தொடர்பான பகுப்பாய்வு கருவிகளைப் பயன்படுத்தி, எவ்வளவு ட்வீட்கள், எங்கேயிருந்தெல்லாம் போடுகிறார்கள் என்பதையெல்லாம் பார்த்தபோது, மகத்தான வெற்றியை அடைந்திருக்கிறோம் என்பது மட்டும் புரிந்தது. பங்களிப்புகள் குறித்த விவரங்களை டிவிட்டர்மேப்ஸிலிருந்து எடுத்து இத்தோடு இணைத்திருக்கிறேன் பாருங்கள். பரப்புரை நடந்த நாடுகள், பகுதிகள், தமிழ்நாட்டில் எவ்வளவு பரவலாக இது நடந்தது உள்ளிட்ட விவரங்களை இதில் காணலாம்.

சில நாட்களுக்கு முன்பு தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பேசியபோது, தமிழ்நாடு பெட்ரோல் ஏரி போல இருக்கிறது. யார் தீ உரசினாலும் அது பற்றிக்கொள்ளும் என்று கூறியிருந்தேன். நேற்று அதை கண்கூடாகப் பார்த்தோம்.

நேற்று, திரு வேல்முருகன் அவர்கள் தலைமையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நடத்திய டோல் பிளாசாக்கள் மீதான தாக்குதல்கள் “தேசிய” நெடுஞ்சாலைகளில் தமிழர்களின் சீற்றத்தைக் காட்டின. மற்றொரு புறம், நாம் முன்னெடுத்த #IndiaBetraysTamilnadu பரப்புரை “சைபர்” நெடுஞ்சாலையில் தமிழர்களின் கோபத்தைக் காட்டியது.

தன்னாட்சித் தமிழகம் முன்னெடுத்த இந்தப் பரப்புரையில் கலந்துகொண்ட அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை மாபெரும் நன்றி. இணைத்துக்கொண்ட பல்வேறு அமைப்பினருக்கும் கட்சிகளுக்கும் ஆதரவளித்த ஊடகங்களுக்கும் முன்னெடுத்து இரண்டு நாள் தூங்காமல் வேலைசெய்த தன்னாட்சித் தமிழகத் தோழர்களுக்கும் நன்றி.

நமது போராட்டங்கள் தொடரும் – மெய் உலகிலும் மெய் நிகர் உலகிலும்.

ஆழி செந்தில்நாதன், ‘தன்னாட்சித் தமிழகம்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்.

மாற்று ஊடகத்துக்கு நன்கொடை தாருங்கள்!

சமூகத்தின் பட்டகம், (தி டைம்ஸ் தமிழ் டாட் காம்) தமிழின் மாற்று ஊடகமாக இயங்கி வருகிறது.  வெகுஜன ஊடகங்கள் பேசத் தயங்கும் விடயங்களைப் பேசுவதே எங்கள் நோக்கம். குறிப்பாக மொழி, இன, சாதி, மத, பாலின சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை, ஒடுக்குமுறைகளை ஆவணப்படுத்தி வருகிறோம். இதைப்போலவே பேச மறுக்கப்படும் அரசியலையும் பேச முனைகிறோம். நீங்கள் தரும்நன்கொடை எங்களை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தும்!

குறைந்தபட்சம் ரூ. 100 நன்கொடை அளிக்கலாம்.இந்த லிங்கை க்ளிக் செய்து பணம் செலுத்தலாம்..

பொதுவெளியில் இயங்கும் பெண்கள் ஏன் “ஐட்டம்” ஆகிறார்கள்?

எழுத்தாளரும் செயல்பாட்டாளுமான கொற்றவை தனது முகநூலில் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவின் முகநூல் பதிவுக்கு எதிர்வினையாற்றும் விதமாக,  இந்து கடவுள் படத்தையும் மனுஸ்மிருதி என எழுதிய தாளையும் கொளுத்தினார்.

இது குறித்து அவர்,

“வெறும் பேச்சோடு நின்றுவிட மாட்டோம்!

அன்புக்கு அன்பு! வன்மத்திற்கு வன்மம்! இதுவே சரி! அராஜகவாதிகள் ஆளும் மண்ணில் அஹிம்சை என்பது வெறும் கற்பிதம்!

வாழ்க பெரியார்! ஜெய் பீம்! செங்கொடி வாழ்க! உழைக்கும் வர்க்க ஒற்றுமை ஓங்குக! – கொற்றவை

#LeninStatueRazed #AmbedkarStatue #PeriyarStatue” என பதிவிட்டு, வீடியோ பதிவு ஒன்றையும் இணைத்திருக்கிறார். 

இந்தப் பதிவின் கீழே, கொற்றவைக்கு எதிர்வினையாற்றுகிறோம் என்கிற பெயரில் பல ட்ரோல்கள் அவரை மிகக் கீழ்த்தரமான வார்த்தைகளால் எழுதியுள்ளனர்.  அவர்கள் அத்தனை பேருடைய வார்த்தைகளிலும் மிக பிரதானமாக உள்ளது “ஐட்டம்” என்கிற சொல். பொதுவெளியில் செயல்படுகிற பெண் எப்போது ஆண்கள் புணர்வதற்காகவே இருக்கிறவள் என்கிற பொருள்பட எழுதிவருகின்றனர். இவர்களில் பலர் இந்திய தேசிய கொடியை தங்களுடைய பக்கங்களில் வைத்திருக்கிறவர்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது.

சில வசைகளின் ஸ்கிரீன் ஷாட் இந்தப் பதிவுடன் இணைக்கப்படுகிறது. பெண்கள் தினம் கொண்டாடும் இந்திய பொது சமூகத்தின் உளவியலையும் இதன் மூலம் தெரிந்துகொள்வோம்.

ஒரு பெண் பொதுவெளியில் ஒரு குறிப்பிட்ட மதத்தின் நம்பிக்கையை சிதைக்கும்படியான செயலில் ஈடுபடுகிறார் எனில், அவருக்கு எதிர்வினையாற்ற வழக்குப் போடுவது உள்பட எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன. ஆனால், அவரை ஐட்டம் என்றும் விலைமகள் என்றும் படுக்கைக்குரியவளாக பார்ப்பது ஆண்கள் தங்களுடைய மொத்த நம்பிக்கையையும் ஆண்குறிக்குள் வைத்திருப்பதையே காட்டுகிறது.

பொதுவெளியில் செயல்படும் பெண்களை சூனியக்காரிகள், வேசிகள் என்று ஆதி கிறித்துவர்கள் அடித்துக் கொன்றார்கள். தாலிபான்கள் பெண்களை படிக்கக்கூட அனுமதிக்கவில்லை. பணிபுரியும் பெண்கள் வேசிகள் என்றொரு முத்தை உதிர்த்த சங்கராச்சாரி வழிவந்த இந்துத்துவர்கள், பொதுவெளியில் இயங்கும் பெண்களை ஐட்டம் என்கிறார்கள். கொற்றவைக்கு நிகழ்ந்தது போல, பல பெண்களுக்கும் நிகழ்ந்திருக்கிறது. இதன் மூலம் மன உளைச்சலை ஏற்படுத்தலாம்; ஆனால் வரலாறு இந்த ட்ரோல்களை சமூகத்தின் கசடுகளாகவே எழுதிச்செல்லும்!

’காலா படத்துக்கும் ஜெயந்திரர் மரணத்துக்கும் என்ன தொடர்பு?’

நடிகர் ரஜினிகாந்தின் அடுத்து வெளிவர இருக்கும் படம் ‘காலா’. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் தனுஷ் தயாரிப்பில் இந்தப் படம் தயாராகிக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்தின் டீஸர் திங்கள்கிழமை வெளியாகவிருந்தது. இந்நிலையில் நடிகர் தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “ஜெயந்திரர் மறைவை ஒட்டி, அவரை போற்றும்விதத்தில் காலா டீஸர் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். இது சமூக ஊடகங்களில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

சினிமா செயல்பாட்டாளர் அருண், “ஜெயேந்திர சரஸ்வதிக்கும் காலாவுக்கும் என்ன என்ன தொடர்பு? ஶ்ரீதேவிக்காக காலா டீசரை தள்ளிவைத்தாலும் ஒரு நியாயம் இருக்கு, காஞ்சி மடாதிபதிக்காக ஏன்?” என கேட்டுள்ளார்.

சமூக-அரசியல் விமர்சகர் ராஜசங்கீதன், ராக்கெட் அறிவியலுக்கு எலுமிச்சை பழத்தை வைக்கிற முட்டாள்தனம் போன்றது தனுஷின் அறிவிப்பு என கடுமையாக விமர்சித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் வந்த விமர்சனங்கள் சில இங்கே…

 

திருச்சி பாஜக பொதுக்கூட்டத்திற்கு 93 தொண்டர்கள்தான் வந்தார்களா?: வீடியோவைப் பாருங்கள்…

திமுகவுக்கு பதிலடி தரும்வகையில் பாஜக  திருச்சியில் பொதுக்கூட்டத்தை நடத்தியது. அந்தக்கூட்டத்துக்கு ஆட்களே வரவில்லை என சமூக ஊடகங்களில் படங்கள் போட்டு பலர் எழுதினர். இந்நிலையில் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநில செயலாளர் தமிழிசை சவுந்தர்ராஜன், கூட்டம் தொடங்கும் முன் போடப்பட்டிருந்த காலியான நாற்காலிகளை படம் பிடித்து சமூக ஊடகங்களில் சிலர் எழுதிவருவதாக குற்றம்சாட்டினார். இந்நிலையில் ஆதரத்துடன் பலர் திருச்சி பொதுக்கூட்டம் பற்றிய வீடியோக்களையும் படங்களையும் பகிர்ந்துவருகின்றனர். அதில் ஒருவர் பகிர்ந்துள்ள வீடியோவில் மத்திய இணை அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் பேசும்போது எடுத்த வீடியோவை சமூக ஊடகத்தில் பதிவு செய்திருக்கிறார்.

Krishna Kpm Krishnamoorthy 
இந்த பக்த்ஸ்லாம் செம்ம டுபாகூர்ன்னு அறிஞ்சி தான்டா, ஃபோட்டா ஷாப்ல ஆட்சி நடத்துறவங்க ன்றத உணர்ந்து தான்டா 😂😂😂நேத்து பத்துக்கும் மேற்பட்ட பேஜ் அட்மின்ஸ் திருச்சி பாஜக பொதுக்கூட்டத்துக்கே நேர்ல போய் லைவ் போட்டாங்க 😜😜

எங்க தரப்புல இருந்து மூனு பேர் கொண்ட குழுவை அனுப்பி மேன்யுலா எத்தன பேர் வந்திருந்தாங்கன்னு எண்ணினோம்.

மொத்த ஆட்களின் எண்ணிக்கை 312
அதுல செக்யூரிட்டி 24 பேர்,
எல்ஈடி டெக்னீஸியன்ஸ் 6 பேர்
மைக் செட் காரர்கள் 4 பேர்
லைட்டிங் ஆட்கள் 6 பேர்
க்ரேன் கேமரா ஆப்ரேட்டர்ஸ் டீம் 4 பேர்
சேர் கான்ட்ராக்டர்ஸ் 6 பேர்

லாஜிஸ்டிக்ஸ் ஆட்கள் 20 பேர்
மீம் கிரியேட்டர்ஸ் 32 பேர்
திருச்சி லயன்ஸ் க்ளப் வாக்கர்ஸ் க்ளப் பிரதிநிதிகள் 82 பேர் ( தனியா பேட்ஜ் அணிந்திருந்தனர்)

மீதி இருந்தவங்க 146 பேர்
அதுல டீ பிஸ்கட் விற்க வந்தவங்க மூனு பேர்
ஒரு மசாலா பொரி விக்கிறவர்,
பாஜக நிர்வாகிகள் மேடையில 23 பேர்,
மேடைக்கு கீழே கேமரா மேன் 4 பேர்,
பிராமணர் சங்க நிர்வாகிகள் 7 பேர்,
நம்மாட்களையும் கழிச்சிட்டா மீதம் இருந்தது 93 தொண்டர்கள் 😂😂😂😂

இவனுங்க ஃபோட்டோவுல ஈஸியா கூதல் பண்ணிடுவாங்க ன்னு தெரிஞ்சி தான் நேர்ல போய் லைவ் போட்டதே 😜😜😜பொன்னார் உக்கிரமா பேசிட்டு இருந்தப்போ லயன்ஸ் க்ளப் உறுப்பினர்கள் அடித்த கமென்ட்கள் லாம் உலக தரம் வாய்ந்த செம்ம மீம் களுக்கு நிகரானதாம் 😝😝😝

மொத்தத்துல பாஜக வால தமிழ்நாட்டுல பொதுக்கூட்டத்துக்கு உண்டான மரியாதையே போச்சி 😝😝😝😝

P S யாருமே இல்லாத டீக்கடைல யாருக்குடா டீ ஆத்துறீங்க ன்றதே நேற்றைய திருச்சி மக்களின் மைன்ட் வாய்ஸ் எனலாம்!!

ஸ்வாதியின் பாடையை வைத்து எப்போது கேலிசித்திரம் வரையப்போறேள் Mr.குருமூர்த்தி?…

ப்ளஸ் டூவில் அதிக மதிப்பெண்கள் வாங்கிய அனிதா என்கிற சிறு பெண் , நீட் தேர்வினால் மருத்துவ படிப்பு கிடைக்காமல் தற்கொலை செய்து கொண்டார். இது ஜாதி மத பேதமில்லாமல் அனைவரிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பார்ப்பனர்களைத் தவிர என்றால் அதில் எவ்வித ஆச்சர்யமும் இல்லை எனலாம்.

அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக வந்திருக்கிறது செப்டம்பர் மாத துக்ளக் இதழ். சோ.ராமசாமியின் மரணத்திற்கு பின் துக்ளகிற்கு பொறுப்பு ஏற்றிருக்கும் பாரதீய ஜனதாவின், இல்லை இல்லை ஆர்எஸ்எஸ்ஸின் கோட்பாடுகளை வகுக்கும் குழுவில் ஒருவர் என்று விமர்சிக்கப்படும்,விதந்தோதப்படும் குருமூர்த்தியின் மன வக்கிரத்தை தாங்கியபடி இருக்கிறது அதன் முன் அட்டை.

நீட் மாணவி தற்கொலை என்று சிறு வட்டத்திற்குள் எழுதி, ஒரு பாடையை வைத்து அதன் பக்கத்தில் லுங்கி அணிந்த தாடி மீசை கிருதா வைத்த இருவர், அந்தப்பாடையை வைத்து பிச்சை எடுப்பதாக சுட்டிக்காட்டும் ஒரு கேலிசித்திரத்துடன் இருக்கிறது அந்த அட்டைப்படம்.

துக்ளக்கின் இந்த அட்டைப்படம் பார்ப்பனீய மனநிலையை அப்படியே வெளிப்படுத்துவதாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

2

இராமயணமோ, துக்ளக்-கோ – அது காட்டும் கதை மாந்தர்களின் தோற்றம் கண்டே சொல்லி விடலாம். நீட் தேர்வும் ஒரு ஆரியர்-திராவிடர் போர்தான்.

மீசை, தாடி, சாரம்(லூங்கி/கைலி),
கருப்பு நிறம், வெட்டாத முடி என அயோக்கியத்தனமான கார்ட்டூனில் கூட நம்மை எவ்வாறு குறிக்கிறார்கள் என்று பாருங்கள்!
இது தான் அந்த ஏழெழுத்து..

Villavan Ramadoss

நான் 35 எடுத்தாலும் அதுதான் 100.

நீ 95 எடுத்தாலும் அது 35.

நாங்க சொல்றதுதான் டேட்டா.

பொணமானாலும் எங்காத்து பொண்ணு சுவாதித்தான் ஒசந்த பொணம்.

நாங்க பாவம் பண்ணினாலும் அது தர்மம்.

நீங்க தர்மம் செஞ்சாலும் அது பாபம்.

குருமூர்த்திஜி.

துக்ளக் குருமூர்த்தியின் சாதித் திமிர் தடித்தனத்தின் உச்சம். மரண மடைந்த மாணவியை இழிவுபடுத்துகிறார்.

எனக்கு ஓரளவிற்கு கேலி சித்திரங்களும் கோட்டோவியங்களும் வரைய வரும். தூரிகையால் மிகுந்த சிரத்தையுடன் தீட்டப்பட்டதாய் தோன்றும் ஓவியத்தைவிட, இந்த கேலி சித்திரங்களில் இருக்கும் ஒவ்வொரு நெளிவும், வளைவும், புள்ளியும், கோடுகளும் அத்தனை கவனத்துடன் முழு சுயப்பிரக்ஞையுடன் வரையப்படுபவை.

எதிர்க்கட்சி என்று காட்சிப்படுத்தப்பட்டவர்களை கவனியுங்கள். கருந்தேகம், தடித்த மீசை, ரோமக்கரங்கள், பரட்டை தலை, முரட்டு கிரிதா… அறுபதாண்டு காலமாக நாங்கள் ஒடுக்கப்படுகிறோம் என்று வாய்க்கூசாமல் சொல்லும் அம்பிகளுக்கும் அவர்களது சொம்பிகளுக்கும் இருக்கும் மனசுத்தம் இப்படியானதுதான்.

அதை விடுங்கள். அந்த சடலத்தை வரைய அந்த ஈன கபோதிக்கு எப்படி கை வந்திருக்கும்? ஒரு வினாடி அந்த பிஞ்சு சடலத்தை அங்கே பொருத்தி பார்க்கவே கூசுகிறது.

கொலை செய்த குற்றவுணர்வு உங்களுக்கு இல்லாவிடினும் பரவாயில்லை. கொஞ்சம் கொண்டாடாமல் இருங்கள். ஏற்கனவே உங்களுக்கு பாவமன்னிப்பு மறுக்கப்பட்டிருக்கும்.

Don Ashok

இதோ சோ எனும் பார்ப்பானின் வழிவந்த குருமூர்த்தி எனும் பார்ப்பானின் துக்ளக் அட்டைப்படம். அதோ வெள்ளைத்துணியில் சுருட்டிவைக்கப்பட்டிருப்பவள் எங்கள் தங்கை அனிதா. அதோ பிணத்தைக் காட்டி பிச்சை எடுக்கும் லுங்கி கட்டிய ஆட்கள் அனிதாவிற்காக நியாயம் கேட்கும் நாங்கள். இந்த வக்கிரம் பார்ப்பானைத் தவிர இங்கே எவனுக்கு உள்ளது? பார்ப்பனியத்தை முதல் எதிரியாக நாங்கள் கருதுவது எப்படித் தவறு? ஸ்வாதி கொலையை வைத்து ஒய்.ஜி.மகேந்திரனும், எஸ்.வீ.சேகரும் ஒப்பாரி வைத்தார்களே, துக்ளக் அதை இப்படி வரைவாரா? நீங்களே சொல்லுங்கள். இதைப் பார்க்கும்போது ரத்தம் கொதிக்குமா கொதிக்காதா? எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருக்கிறோம். உங்கள் பாவப்பட்டியல் நிறைந்துகொண்டே இருக்கிறது. தயாராக இருங்கள். தயாராக இருங்கள்.

தம் மகளுக்கு ஒருநீதி அனிதாவுக்கு இன்னொரு நீதியா?: மரு. கிருஷ்ணசாமி குறித்து முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி எழுதிய வைரல் பதிவு

நீட்டை ஆதரித்தும் அரியலூர் மாணவியின் மரணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையிலும் பேசிவருகிறார் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் மருத்துவர். கிருஷ்ணசாமி. இவரை விமர்சித்து சமூக ஊடகங்களும் பல கட்சிகளைச் சேர்ந்தவர்களும் விமர்சித்து வரும் நிலையில், முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி எழுதிய முகநூல் பதிவு வைரலாகி வருகிறது…

“2015 சட்டமன்றத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி பேசிக்கொண்டிருந்தபோது அமைச்சர் ஒருவர் எழுந்து உங்கள் மகளுக்கு போதிய மதிப்பெண்கள் இல்லாதபோதும் முதலமைச்சரிடம் வந்து மெடிக்கலில் சேர உதவி கேட்டீர்கள்.
அடுத்த நிமிடமே அம்மா அவர்கள் மெடிக்கல் ஷீட் கொடுத்தாரே மறந்துவிட்டீர்களா எனக்கேட்க அப்போது கிருஷணசாமி நான் மறக்கவில்லை. அதற்காக இப்போதும் நன்றி கூறுகிறேன் எனக்கூறி முதலமைச்சரைப் பார்த்து வணக்கம்போட இந்த வணக்கத்தை வேறு எங்காவது போடு என்பதுபோல் வெடுக்கென்று முதலமைச்சர் முகத்தை திருப்பிக்கொள்ள ..டாக்டர் கிருஷ்ணசாமியின் சுயநலம் அப்போது சட்டமன்றத்தின் மேஜைமீது பொத்தென்று விழுந்தது.

தலித் குழந்தைக்கு அத்தகைய உதவி பெற்றதில் தவறே இல்லை. ஆனால், இப்படி புறவாசல்வழியாக உதவியைப் பெற்றுக்கொண்டவர் தம்மகளுக்கு ஒருநீதி அனிதாவுக்கு இன்னொரு நீதி என முழங்கி வருகிறார். தோழர் பிரின்சு, எம்எல்ஏ சிவசங்கர் மீது குற்றம் சுமத்துகிறார், பாஜக அதிமுக வேடிக்கைபார்க்கிறார்கள். ஊடகங்கள் இந்த நியாயவாதியாரைத் தேடிப்பிடித்து அவர் கருத்தைக் கேட்கிறார்களாம். கேப்பையில நெய்வடியுதாம்.” என்பதே அந்தப் பதிவு.

”தமிழன் தலையில் கோமாளிக்குல்லா”: கமல் ட்விட்டும் ரசிகர்களின் மீமும்

அதிமுக மூன்று அணிகளாக பிரிந்துள்ள நிலையில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையிலான அணியும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியும் இணையப்போவதாக செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. தற்போதைய பரபரப்பான அரசியல் நிலவரம் குறித்து நடிகர் கமல்ஹாசன்  ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். காந்திகுல்லா, காவிக்குல்லா, காஷ்மீர்குல்லா! தற்போது கோமாளிக்குல்லா தமிழன் தலையில் என அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கமல்ஹாசனின் ட்விட்டுக்கு அவருடைய ரசிகர் பலர் மீம் போட்டு வரவேற்பு தெர்வித்துவருகின்றனர்.

வாஞ்சிநாதன், தமிழ் இந்து, முகநூல் பகடிகள்

தமிழறிஞர் பொ. வேல்சாமி தனது முகநூலில் எழுதிய பதிவு:

ஜவஹர்லால் நேருவிற்கு தமிழ் இலக்கியத்தை அறிமுகப்படுத்தினேன்….

நண்பர்களே….

ஜவஹர்லால் நேரு ஒருமுறை தமிழ்நாட்டிற்கு வருகை தந்தபோது தமிழ்மொழியின் சிறப்பைப் பற்றி கேள்வியுற்று அதைப்பற்றி தெரிந்துகொள்ள ஆவல் கொண்டார். அப்பொழுது நண்பர்கள் என்னைச் சிபாரிசு செய்தார்கள். நேருவுக்கு நான் தான் தமிழ்மொழியின் வரலாற்றுப் பெருமைகளைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தேன். தமிழகத்தில் என்னிடம் தமிழின் வரலாற்றுச் சிறப்பைப் பற்றிய செய்திகளை கேட்டுக் கொண்டார் நேரு. பின்னர் வங்க இலக்கிய வரலாறு என்ற நூலுக்கு ஒரு முன்னுரை எழுதுகின்றார். அந்த முன்னுரையில் இதைப் பற்றி குறிப்பிடுகின்றார். அதன் பின்பு நேரு அவர்கள் என்னிடம் தொலைபேசியில் பேசும்போது, அவரை நான் நேரு மாமா என்றுதான் கூப்பிடுவேன். காரணம் எனக்கு வயது ஐந்து.

குறிப்பு
உண்மையில் நேரு அவர்களுக்கு தமிழ்மொழியின் வரலாற்றுச் சிறப்பைப் பற்றி கூறியவர் பள்ளியக்ரஹாரம் அறிஞர் கந்தசாமி பிள்ளை அவர்கள் என்பதை பேராசிரியர் பாவலரேறு ச.பாலசுந்தரம் ஐயா அவர்கள் என்னிடம் கூறினார்.

முரளிதரன் காசி விஸ்வநாதன் அவர்களுக்கு நன்றி.

எழுத்தாளர் வாசுதேவன் தனது முகநூலில் எழுதிய பதிவு:

வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மைகள்..

முத்துராமலிங்க தேவர் அவர்கள் பால்ய பருவத்தில் தவக்கோலத்தில் இருந்தபோது, அவருடைய அன்னை தேவரின் தேஜஸ் முகத்தை பார்த்து தன் குலதெய்வ கோவில் பூசாரி ஒச்ச தேவரிடம் அழைத்துப்போனார்…பூசாரி அம்மையாரை உச்சிமுகர்ந்து, இது சாதாரண குழந்தை இல்லை… தாய்க்கு பெருமை சேர்க்கும் குழந்தை என்றவர், அந்த குழந்தையின் காதில் ரகசியமாக ஒரு கட்டளையிட்டார்….

கட்டளையை கேட்ட குழந்தை, துள்ளிகுதித்து ரேக்ளா வண்டியில் புயல் வேகத்தில் விரட்டி அடுத்து 48 மணிநேரத்தில் மஹாராஷ்டிரா ரத்தினகிரி சிறைச்சாலைக்குள் நுழைந்தது….அங்கு சிறையில் இருந்து சாவர்க்கர் எழுதிய Essentials of Hinduvata என்ற நூலை அவரிடமிருந்து பெற்று அதே வாயு வேகத்தில் அடுத்த 48 மணிநேரத்தில் ரேக்ளா வண்டியில் பசும்பொன்னில் இறங்கினார்…..இந்த நூலை முதலில் தமிழில் மொழி பெயர்த்தவர் தேவர் அவர்கள்…

இந்த சம்பவம் அவர் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை…பின்னாளில் ஃபார்வார்ட் ப்ளாக் கட்சியை தொடங்கி, அக்கட்சியின் முக்கிய கொள்கையான தேசியமும், ஆன்மீகமும் என்ற முழக்கத்தை முன்வைத்தார்….முதுகளத்தூரில் இம்மானுவேல் சேகருக்கும் தேவர் அவர்களுக்கும் கைகலப்பு வந்தபோது அதற்காக மத்தியஸ்தம் செய்ய பர்மாவிலிருந்து நேதாஜி வந்தார்…குறிப்பிட்ட பஞ்சாய்த்து நடக்கும் நாளில் நேதாஜி அவர்களுக்கு கடும் காய்ச்சல், தொண்டை வலி….சைகையால் பஞ்சாயத்தை நடத்தினார்….இருப்பினும் நிலைமை கை மீறி போனதை செய்வதறியாமல் பார்த்த நேதாஜி, மன உளைச்சலுடன் பர்மாவுக்கு திரும்பினார்….

இதெல்லாம், தேவர் அவர்களின் தாய் மாமனின் மூத்த புதல்வன் இப்போது துபாயில் வசிக்கிறார்…நம்பர்-6, விவகானந்தர் தெரு, துபாய் குறுக்கு சந்து, துபாய் மெயின் ரோடு, துபாய் என்ற முகவரியில் வசிப்பவரும் தன்னை இஸ்லாமியராக மதம் மாறிக்கொண்ட முகம்மது அபு அல் ஹசான் என்பவரின் உண்மையான பெயர் மாயாண்டி தேவர். . இப்போது நம்மிடையே வாழும் மேதை! இது வரையில் அவரை சந்தித்தது சாண்டோ சின்னப்பா தேவர் ஒருவர் மட்டுமே….இவரை சந்தித்த தாக்கத்தினாலும், உண்மையை அறிந்ததால் தன் திரைப்படங்களுக்கு “ தாயை காத்த தனயன்”, ”தர்மம் தலை காக்கும்” “தாய் மீது சத்தியம்” என திரைப்ப்ட பெயரிலேயே முத்துராமலிங்க தேவரின் புகழ் பாடும் விதமாக பெயர் சூட்டினார்…..

இந்த வெளிவராத உணமைகளை மரியாதைக்குரிய முகம்மது அபு அல் ஹசான் என்ற மாயாண்டி தேவரின் அரேபிய மொழியில் எழுதிய சுயசரிதை, தமிழ் மொழியாக்கம் அக்மார்க் தரத்துடன் பிழையின்றி காலச்சுவடு பதிப்பகம் வெளியிடயிருக்கிறது….
இதுவரையில் நாம் நம்பிய வரலாறு அனைத்தையும் புரட்டிப்போடுவது உறுதி!
(புகைப்படத்தில்- முகம்மது அபு அல் ஹசான் தொழுகையின் போது எடுத்தது)

எழுத்தாளர் திரு. யோ எழுதியது:

வாஞ்சிநாதனை இப்போது தான் பிரஸ்ஸல்ஸ் வானூர்தி நிலையத்தில் சந்தித்தேன். தமிழ் இந்துவிடம் “நான் அவனில்லை” என்று சொல்ல சொன்னார்.

 

தரமணி படத்துக்கு ஆனந்தவிகடன் தந்த 50 மார்க்!

தயாளன்

உதயகீதம் படத்திலன்னு நினைக்கிறேன். கவுண்டமணி செந்தில்கிட்ட கேப்பார். என்ன பண்னிட்டு ஜெயிலுக்கு வந்தன்னு கேப்பார். செந்தில் எட்டணா நாணயம் அடிச்சேன்னு சொல்வார். பளார்னு ஒன்னு விடுவார் கவுண்டமணி. கள்ள நோட்டு அடிக்கனும் முடிவு பண்ணிட்டு ஏண்டா எட்டணா அடிச்சே, ஐம்பது நூறுன்னு அடிக்கவேண்டியதுதான அப்படின்னு சொல்லிட்டு கோயம்புத்தூர் ஊர் பேரையே கெடுத்துட்டியேன்னு இன்னொரு பளார் விடுவார். அத மாதிரி மார்க் கொடுக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டீங்க. 1000, 2000ன்னு கொடுத்திற வேண்டியதுதானே சார். எதுக்கு சார் 50, 48 எல்லாம்…

தயாளன், ஊடகவியலாளர்.

 

#stand_with_udayachandran_ias : ஐஏஎஸ் அதிகாரி உதயசந்திரனுக்கு ஆதரவாக ஹேஷ்டேக் எனும் பேராயுதம்!

சரா சுப்ரமணியம்

சரா சுப்ரமணியம்

‘உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ். துறை மாற்றம் செய்யப்படலாம்’ என்ற நம்பத்தகுந்த தகவல் பரவியதும், ஃபேஸ்புக்கில் பள்ளி ஆசிரியர்கள் பலரும் #stand_with_udayachandran_ias முதலான ஹேஷ்டேகுகள் கொண்டு கருத்துகளைக் குவித்து வருகின்றனர். அதை ஆற்றாமையின் வெளிப்பாடு என்கிறார் சிறார் இலக்கிய எழுத்தாளர் உமாநாத் செல்வன். பள்ளி ஆசிரியர்களுக்கு அவ்வப்போது பாடமெடுத்து வழிகாட்டும் இவரே இப்படிச் சொல்வது சற்றே கவலை கலந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுவும் சமூக வலைதளத்தை தீவிரமாகப் பயன்படுத்தி வரும் அவரே இப்படிச் சொல்வதை கண்டுகொள்ளாமல் இருக்க முடியவில்லை. ‘உங்கள் வகுப்பறையில் இருந்துதான் அதனைத் துவங்க வேண்டும்’ என்ற பாரம்பரியம் மிக்க வாக்கியத்தையும் அவர் உதிர்த்திருப்பது மெச்சத்தக்கது.

ட்விட்டர், ஃபேஸ்புக் மூலமாக மக்கள் பேசத் தொடங்கியதும் உலக அளவில் அரசு – அதிகார மையங்கள் டரியல் ஆவதும், புரட்சிகளால் புரட்டிப் போடப்படுவதும் இன்றளவும் நீடித்துக் கொண்டிருக்கிறது. துனீசியாவில் தொடங்கி ஓவியா ஆர்மி வரை இதை வெவ்வேறு தளங்களில் முன்னுதாரணங்கள் சொல்ல முடியும். மெயின் ஸ்ட்ரீம் மீடியா ஏற்படுத்தும் தாக்கத்தை விடவும், அதன் மீதான அதிகார மையங்கள் கொண்டுள்ள அச்சத்தை விடவும் இன்றையச் சூழலில் சோஷியல் மீடியா ஏற்படுத்தும் தாக்கமும் நேர்மறை அச்சுறுத்தல்களும்தான் மேட்டர்.

ஆதார், ரேஷன்கார்டு உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய, மாநில அரசுகள் டரியல் ஆகி, உடனுக்குடன் விளக்கம் கொடுத்தது எல்லாம் சமூக வலைதளங்களில் ஹேஷ்டேக் மூலம் கொட்டப்பட்ட மக்களின் பதிவுகள் ஏற்படுத்திய தாக்கம்தான் முக்கியக் காரணம் என்பது சமீபத்திய சான்றுகள்.

இலங்கைத் தமிழர் பிரச்சினை, மீனவர் பிரச்சினை, கூடங்குளம் பிரச்சினை, ஜல்லிக்கட்டு, நெடுவாசல்… இப்படி எத்தனையோ பிரச்சினைகளை தேச ஊடகங்களும், சர்வதேச ஊடகங்களும் முக்கியச் செய்திகளாக்கியதற்கு தமிழர்கள் ஆங்கிலத்தில் பயன்படுத்திய ஹேஷ்டேகுகளுக்கு மிக முக்கியப் பங்கு உண்டு என்று நம்புகிறேன். போராட்டச்சுவையையும் பலனையும் அனுபவிக்க ஆரம்பித்துவிட்ட எல்லா தரப்பு பொதுமக்களும் தங்களைப் பாதிக்கும் எந்த விவகாரத்திலும் எதிர்ப்புக்குரலைப் பதிவு செய்யத் தொடங்கிவிட்டனர் என்பதும் தெளிவு.

பள்ளிக் கல்வித் துறை செயலர் அதிகாரி உதயசந்திரன்

இத்தகைய சூழலில், இதுவரை வெளிப்படையாக அரசுக்கு எதிராக குரல் கொடுக்க முன்வராத ஆசிரியர் சமூகம் இப்போது முதல் முறையாக ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியை தங்கள் துறைக்குத் தக்கவைத்துக் கொள்ள குரல் கொடுப்பது என்பதும் சமூக வலைதளமும் ஹேஷ்டேகுகளும் கொடுத்த நம்பிக்கை. தங்கள் மீதான துறை ரீதியில் நடவடிக்கை வருவதற்கான சாத்தியங்கள் இருந்தபோதும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் பள்ளிக் கல்வித் துறையின் நன்மை ஒன்றை மட்டுமே கருத்தில்கொண்டு ஆசிரியர்கள் நேரடியாகக் களமிறங்கியிருப்பது வேற லெவல் கெத்து.

எல்லா பக்கமும் மக்களின் அதிருப்தியை ஈட்டியுள்ள தமிழக அரசு, பள்ளிக்கல்வி போன்ற மிகச் சில அமைச்சகங்கள், துறைகளில்தான் ஓரளவு திருப்தி இருப்பதைக் கண்கூடாகப் பார்க்கிறது. எனவேதான் தான் நினைத்த மாத்திரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை ‘முடிவு’ செய்தாலும் உடனடியாக தூக்கியடிக்காமல் நிதானத்துடன் தயங்குகிறது. மக்களின் மனநிலைக்கு வலு சேர்க்கும் வகையில் ஆசிரியர்கள் ஒட்டுமொத்தமாகக் குரல்கொடுத்தால் அந்த டரியல் இன்னும் அதிகமாகும். இதுபோன்ற நெருக்கடியே ‘சரியான’ முடிவை அரசு எடுக்கும் நிர்பந்தத்தை ஏற்படுத்தும் என்றும் நம்பலாம்.

ஹேஷ்டேக் என்று வந்துவிட்டால் ஓவியா ஆர்மியை முன்வைத்து வீரியத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. ஹேஷ்டேக் என்பது போராட்டத்துக்கான பேராயுதம் மட்டுமல்ல; பொழுதுபோக்குக்கான குவியமும் கூட. ஓவியா ஆர்மி முதலான ஹேஷ்டேகுகள் கொடுத்த அழுத்தம்தான் அவரது கேரக்டர் அசாசினேட் செய்யப்படாமல் எந்தப் பாதிப்புமின்றி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றி இயல்பு நிலைக்குத் திரும்பவும் வித்திட்டிருக்கிறது என்றும் நம்புகிறேன். இதுதான் ஹேஷ்டேக் ஏற்படுத்தும் தாக்கம்.

மெயின் ஸ்ட்ரீம் மீடியாவை விட சமூக வலைதளத்தில் மக்கள் என்ன பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை அரசும், அதிகார மையங்களும் தீவிரமாக கவனித்து வரும் சூழலில், ஓர் அதிகாரியை தக்கவைத்துக் கொள்வதற்கான இந்தப் போராட்டத்தில் அனைத்து தரப்பினரும் ஆதரிக்க வேண்டும் என்றே விரும்புகிறேன். குறிப்பாக, ஆசிரியர்கள் – மாணவர்கள் குறித்து அக்கறையுள்ள, அவர்களைத் தொடர்ந்து தங்கள் பதிவுகளால் வழிநடத்தும் சிறார் இலக்கிய எழுத்தாளர் விழியன் போன்றவர்களின் ஆதரவு மிக முக்கியமானது என்று மட்டும் இப்போதைக்குச் சொல்லிக்கொள்கிறேன்.

சரா சுப்ரமணியம், பத்திரிகையாளர்.

எஸ். வி. சேகருக்கு பதிலடியாக ட்ரெண்டாகும் இந்துத்துவான்னா என்ன ஹேஷ் டேக்!

திராவிடம்னா என்ன என்ற தலைப்பில் பாஜகவைச் சேர்ந்தவரும் நடிகருமான எஸ். வி. சேகர் தன்னுடைய முகநூலில் பதிவொன்றை எழுதியுள்ளார்.

இதற்கு பதிலடியாக பலர் எஸ். வி.சேகரின் பதிவிலேயே பின்னூட்டம் இட்டிருந்தனர்.  

இது அதிகமாக பரவி #இந்துத்துவா என்ற ஹேஷ் டேக் முகநூலில் ட்ரெண்டாகி வருகிறது.  அதில் வந்த சில பதிவுகள் இங்கே…

Kiruba Munusamy:
மதசார்பற்ற நாட்டை இந்து நாடென அரசியலமைப்புக்கு எதிராக பறைசாற்றுவது. #இந்துத்துவா
Rajasangeethan John:

#இந்துத்துவா ன்னா என்னண்ணே?

புத்தன் பேசிய புலால் உண்ணாமைய குதிரைக்கறிய மொங்கிக்கிட்டே ஆட்டய போட்டது.

வாசுகி பாஸ்கர்: 
Rajarajan RJ:

#இந்துத்துவா னா என்ன அண்ணே?
சைவ இந்து, அசைவ இந்து, மாட்டுக்கறி இந்து என பிரித்தது!

பிரதாபன் ஜெயராமன்:

மனிதர்களுக்கு எதிரான கருத்தியல் #இந்துத்துவா

 

திராவிட இயக்கத்தை அசைத்துப் பார்க்க எந்தக் கொம்பனாலும் முடியாது: எஸ்.வி.சேகரின் பேச்சுக்கு ஸ்டாலின் விளக்கம்

தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் எழுத்தாளர் மதிமாறனுக்கும் பாஜக பேச்சாளர் நாராயணனுக்கும் இடையே நடந்த ‘பார்ப்பனர்’ தொடர்பான வாக்குவாதத்தில் எஸ்.வி. சேகர் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். இதில் திமுக செயல்தலைவர் மு. க.ஸ்டாலினை தொடர்பு படுத்தி பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஸ்டாலின் என்ன பதில் சொல்லப்போகிறார் என சமூக ஊடகங்களில் பலரும் குரல் எழுப்பிய நிலையில், ஸ்டாலின் தனது முகநூலில் விளக்க அளித்துள்ளார். அதில்,

“தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த விவாத நிகழ்ச்சி சம்பந்தமான சர்ச்சையினையடுத்து, நடிகரும் நண்பருமான எஸ்.வி.சேகர் அவர்கள் என்னிடம் அலைபேசியில் பேசினார். சட்டமன்ற நிகழ்வுகளில் பங்கேற்றிருந்த நிலையில், “நீங்கள் சொல்வதை கவனிக்கிறேன்” எனத் தெரிவித்து, அது பற்றிக் கவனம் செலுத்துமாறு கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. அவர்களிடம் தெரிவித்தேன். சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற்று வந்தநிலையில், மக்கள் பிரச்சினைகளில் தொடர்ந்து கருத்தைச் செலுத்திட வேண்டிய அவசரமும் அவசியமும் ஏற்பட்டதால், இது குறித்து உடனடியாக கவனம் செலுத்த நேரமோ வாய்ப்போ நேர்ந்திடவில்லை. டி.வி. விவாதம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் கழகத்தின் சார்பில் பங்கேற்கவிருந்த உறுப்பினரும் எனது கருத்தினை அறிந்தபின் பங்கேற்கலாம் என்பதால் அந்த நிகழ்வைக் கடமை உணர்வோடு தவிர்த்திருக்கிறார்.

இதன் தொடர்ச்சியாக, தனிமனித நட்புக்கு அரசியல் வண்ணம் பூசப்பட்டு,சமூக ஊடகங்களில் விமர்சனங்களாகி வருவதை பின்னர் அறிந்தேன். நூறாண்டு கால திராவிட இயக்கம் எந்த சமூக நீதிக் கொள்கையையும் சமநீதியையும் சமத்துவத்தையும் முன்வைத்துப் பாடுபடுகிறேதா அந்தக் கொள்கைகளுக்கு குன்றிமணி அளவிலும் குந்தகம் ஏற்படாத வகையிலும் பகுத்தறிவுடனும் சுயமரியாதையுடனும் தி.மு.க. தொடர்ந்து செயல்படும் என்பதில் எவருக்கும் எள்ளளவும் சந்தேகம் ஏற்பட வேண்டியதில்லை. தந்தை பெரியாருக்கு மூதறிஞர் ராஜாஜியுடனும் நட்பு உண்டு, தவத்திரு குன்றக்குடி அடிகளாருடனும் நட்பு உண்டு. அதற்காகத் தனது கொள்கைகளை எப்போதும் அவர் விட்டுத் தந்ததில்லை. அதுபோலவே பேரறிஞர் அண்ணாவும், தலைவர் கலைஞர் அவர்களும் தனிப்பட்ட முறையில் பலருடனும் நட்பு பாராட்டினாலும் கொள்கைகளில் கொண்டிருந்த உறுதியை எதற்காகவும் தளர்த்தியதில்லை. அவர்களின் வழியில் இந்தப் பேரியக்கத்தின் செயல்தலைவர் என்ற பொறுப்பில் உள்ள நான், எந்தச் சூழலிலும் திராவிட இயக்கத்தின் உயிர் மூச்சான கொள்கைகளை உயர்த்திப் பிடிப்பேன். அதற்காக எதையும் யாரையும் எதிர்கொள்வேன். யாரிடமும் எனக்கு தனி மனித விரோதமில்லை; பேதமுமில்லை. அதேநேரத்தில், தனிப்பட்ட நட்புக்காக, திராவிட இயக்கக் கொள்கைகளை விட்டுக் கொடுப்பது-சமரசம் செய்து கொள்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. திராவிட இயக்கத்தை அசைத்துப் பார்க்க எந்தக் கொம்பனாலும் எந்தத் தருணத்திலும் முடியவே முடியாது என்பதே எனது உறுதியான நிலைப்பாடு” என தெரிவித்துள்ளார்.

நீதிபதிக்குரிய கண்ணியம்கூட இல்லையா? நீதிபதி கர்ணனுக்கு ஆதரவாக எழும் குரல்கள்!

உச்ச நீதிமன்றத்தால் ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்ட நீதிபதி கர்ணன், செவ்வாய்கிழமை மேற்கு வங்க போலீஸாரால் கோவையில் கைதுசெய்யப்பட்டார். நீதிபதி கர்ணன், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனை மறுபரிசீலனை செய்யும்படி மூன்று முறை மனு செய்திருந்தார். உச்சநீதிமன்றத்தால் அவை தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில் அவருடைய கைது சம்பவம் நடந்திருக்கிறது. நீதிபதி கர்ணனின் கைதை கண்டித்து, சமூக ஊடகங்களில் எதிர்ப்பு குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

எழுத்தாளர் மாலதி மைத்ரி, “தலித்துகளைக் கொன்ற கொலையாளிகளை விடுதலை செய்வதும் ஊழல் மலிந்தது நீதித்துறை என்ற தலித் நீதிபதியைக் கைது செய்வதும்தான் உச்ச நீதி இந்நாட்டில். #StandForJusticeKarnan” என்கிறார்.

பதிப்பாளர் கருப்பு நீலகண்டன், அரசியலமைப்பு படி பாரளுமன்றத்தில் இம்பீச்மெண்ட் மட்டுமே செய்து நீக்க முடியும் என்கிற நீதிபதி கர்ணனின் பதவியின் கண்ணியத்துக்கு ஒரு சிறிய அளவு மரியாதையும் தராமல் விரட்டி விரட்டி கைதுசெய்கிறது பார்ப்பன பண்ணையார்களால் ததும்பி வழியும் உச்சநீதிமன்றம்” என்று தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்.

தலித் அரசியல் செயல்பாட்டாளர் தி. ஸ்டாலின், “கழுத்தறுத்த யுவராஜன்கள் கூட அவனுங்களா கிடைச்சாதான் கைது. ஆனால் நீதிபதி கர்ணனோ விரட்டி விரட்டி கைது! #சட்டம் சாதியின் கரங்களில்!” என்கிறார்.

செயல்பாட்டாளர் ரமேஷ் பெரியார், “IPC 1986 section 84 (இந்திய தண்டனைச்சட்டம் 1986, செக்சன் 84) படி மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை தண்டிக்கவோ,கைது செய்யவோ கூடாதென்கிறது..

உச்ச நீதிமன்றம் நீதிபதி கர்ணன் அவர்களை மனநல பரிசோதனைக்குட்படுத்த வேண்டுமென்று உத்தரவிட்டது..அந்த உத்தரவு நிலுவையிலிருக்கும் போதே…நீதிபதி கர்ணன் அவர்கள் நீதிமன்ற அவமதிப்பு செய்த குற்றத்திற்கு 6மாத சிறை தண்டனை மற்றும் கைது செய்வதென்பதெல்லாம் இந்திய தண்டனைச்சட்டம் 1986, செக்சன் 84ன்படி சட்ட விரோதமில்லையா…? உச்சநீதிமன்றமே சட்டத்திற்கு புறம்பாக நடக்கலாமா…?” என கேட்கிறார்.

எழுத்தாளரும், அரசியல் செயல்பாட்டாளருமான கௌதம சன்னா,

நீதித் துறையின் வீழ்ச்சி.. கர்ணன் கைது.

முன்னாள் நீதிபதி கர்ணன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அரசமைப்புச் சட்ட வழிகாட்டுதல்களை அப்பட்டமாக குழி தோண்டி புதைத்துவிட்டு, நீதிமன்ற அவமதிப்பு எனும் ஆயுதத்தால் கர்ணன் தண்டிக்கப்பட்டுள்ளார். மேல்முறையீட்டு மன்றமே இதை செய்துள்ளதின் மூலம் தனி நபருக்கு கிடைக்க வேண்டிய சட்ட நிவாரணங்களையும் சவக்குழிக்கு அனுப்பியுள்ளது உச்ச நீதி மன்றம். இது ஐநா வழிகாட்டுதல்களுக்கு எதிரானது என்பது கூடுதல் அம்சம்.

நாடாளுமன்றம் தீர்க்க வேண்டிய பிரச்சனையை நீதிமன்ற அவைக்குள் தீர்க்கும் புது நடைமுறையை உருவாக்கி அரசமைப்பு சட்டத்தை கேலிக்குரியதாக்கியுள்ளனர் உச்ச நீதி மன்ற நீதிபதிகள். ஜனநாயகத்தின் ஒரு தூண் சரிந்துள்ளது. காப்பாற்ற வேண்டிய மற்ற தூண்களும் தூங்கிக் கொண்டுள்ளன. நான்காவது தூணான ஊடகம் ஜால்றா அடித்துக் கொண்டிருக்கிறது.

எனினும் கீழமை நீதிமன்றங்களானாலும், உயர்நீதிமன்றங்களானாலும் இதுவரை பதவி நீக்கம் செய்யப்பட்டவர்கள் 90 சதவிகிதம் பேர் தலித்துகளே. சாதி வெறி தலைவிரித்தாடும் நாட்டில், நீதித்துறையானது ஊழலும், சாதி வெறியும் மலிந்த துறை என்பது இதன் மூலம் வெளிச்சமாகியுள்ளது.

தமிழர்களும், சமூக நீதிக் காவலர்களும் வாய் முடி பேசா மடந்தைகளாக இருங்கள். அதுதானே நீங்கள் எப்போதும் செய்வது.

சட்டத்தின் ஆட்சி செத்துவிட்டது” என ஆதங்கப்பட்டிருக்கிறார்.

வரதராஜ் கிருஷ்ணசாமி, “நீதிபதி கர்ணனை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்ட அதே நாள் தான் விஜய் மல்லையா வழக்கை ஜூலை மாதத்திற்கு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்.

மல்லையா மீதும்அதே நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் ஒன்றில் தான் அந்த தீர்ப்பு. மல்லையா ஒரு மூறை கூட ஆஜராக வில்லை. கர்ணன் ஒரு முறை ஆஜரானார்.

இன்னொன்றும் இருக்கிறது.

ஆந்திர/ தெலுங்கானா உயர் நீதிமன்ற நீதிபதி நாகர்ஜூனா ரெட்டி மீது பல கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. (உதவியாளர் ஒருவரை உயிரோடு கொளுத்திய வழக்கு உட்பட) சமீபத்தில் அவர் மீது impeachment தீர்மானம் ( impeachment – procedure to remove judge by passing the impeachment motion in the parliament) கொண்டு வர எம்.பிக்கள் முடிவு செய்தனர். ஆனால் முடியவில்லை. அந்த நாகர்ஜூனா ரெட்டி மீது ஒரு நடவடிக்கை கூட இந்த உச்ச நீதிமன்றம் எடுக்க வில்லை.

கர்ணன் என்னை impeach செய்யுங்கள் நான் பாராளுமன்றத்தை சந்திக்க தயராக இருக்கிறேன்என்றார். ஆனால் அது நடக்க வில்லை மாறாக அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இது தான் இந்திய நீதித்துறை.

இங்கு பார்ப்பானுக்கு ஒரு நீதி, சூத்திரனுக்கு ஒரு நீதி, பஞ்சமர்களுக்கு ஒரு நீதி..

இந்திய அரசியல் சாசனத்தை எழுதிய அம்பேத்கர் இன்று இருந்திருப்பாரே ஆனால் இந்திய நீதித்துறையை பார்த்து காரி துப்புவார்” என்கிறார்.

எழுத்தாளரும் வழக்கறிஞருமான இரா. முருகவேள், “அதுசரி. உச்சநீதி மன்ற நீதிபதிகளுக்கு கர்ணன் பிறப்பித்த வாரண்ட் என்ன ஆனது? என்ன பிரச்சினை இருந்தாலும் அது கல்கத்தா உயர்நீதி மன்றம் பிறப்பித்த பிடியாணைதானே? ஒருவேளை அதை உச்சநீதி மன்றம் தடை கிடை செய்து விட்டதா?

அப்புறம் மனநலம் சரியில்லை என்று பரிசோதனைக்குப் போகும் படி உத்திரவிடப்பட்ட ஒருவரை எப்படி கைது செய்து . . . ஒரே குழப்பம்.

இந்தியன் லூனசி சட்டம் . . . நீதிமன்ற அவமதிப்பு ” என்கிறார்.

 

 

 

 

கூவத்தூர் எம் எல் ஏக்கள் பேரம்; பரபரக்கும் சமூக ஊடகங்கள்!

எடப்பாடி பழனிச்சாமி அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பு கூவத்தூர் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த எம்எல்ஏக்களுக்கு கோடிகளில் பணம் கொடுக்கப்பட்டதாக டைம்ஸ் நவ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள வீடியோ இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஸ்டிங் ஆபரேஷன் மூலம் மதுரை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ. சரவணனிடம் பேரம் பேசியது குறித்து எடுக்கப்பட்ட வீடியோதான் சமூக ஊடகங்களில் இன்றைய டாபிக்!

சரவணன் அந்த வீடியோவில் எம் எல் ஏக்களை எப்படி சசிகலா அணியினர் பேரம் பேசினர் என்றும் 3 எம் எல் ஏக்களுக்கு மட்டும் ரூ. 10 கோடி பேரம் பேசப்பட்டதாக அவர் தெரிவித்திருக்கிறார். சரவணின் பேச்சு குறித்து முகநூலில் வெளியான சில கருத்துகள்…

saravanan chandran: மிடிலை. அப்புறம் கூவத்தூரில் சத்தியா கிரகமா இருந்தார்கள்? பெட்டியும் ரொக்கமும் தங்கமும் பாட்டிலும் கட்டிலும் கலந்து வாழ்வாங்கு வாழ்ந்தது தெரியாதா என்ன? வேற எடத்துக்கு நகந்துட்டாங்க பாஸ்! இதெல்லாம் ரெம்பப் பழசு. எங்க ஒரு ஓவாவ பிடிங்க பாப்போம். புதிதாக டுவிஸ்ட் இருக்கா சொல்லுங்க?

கருப்பு கருணா:

தெய்வமே…தெய்வமே…
நன்றி சொன்னேன் தெய்வமே..
வாங்கினேன்…வாங்கினேன்..
பத்து கோடி தெய்வமே…

அந்த அழகு தெய்வத்தின் மகனா இவன்…ச்ச்சே!

Rajarajan RJ:

கருணாஸ், தனியரசு, தமீம் அன்சாரி ஆகியோருக்கு கூவத்தூர் தீர்மானத்தில் பத்து கோடி கொடுக்கப்பட்டது! இவர்கள் தனிநபர்களாக இல்லாமல் தங்கள் சமூகத்தின் லாபியிஸ்டுகளாக இருந்ததால் விலை அதிகம் போல. #MLAsForSale

பிரதாபன் ஜெயராமன்:

ஆண்டபரம்பரையை 10 கோடிக்கு அடகு வைத்த கருணாஸ், தனியரசு

#MLAsForSale

Swara Vaithee:

இன்னும் கொஞ்ச நாளைக்கி பிரேக்கிங் நியூஸா போட்டு கொல்லப்போறாய்ங்க.

அது நம்மள நோக்கி தான் வருது
எல்லாரும் தாழ்வான பகுதிய நோக்கி ஓடுங்க. 🏃🏃🏃

koovathur

Ezhil Arasan:

கன்டெய்னர் ரோட்டுலேயே நின்னுச்சு..அது என்னாச்சுனு யாரும் கேக்கல..இப்ப புலனாய்வு ஒன்னுதான் குறைச்சல்..

Vinayaga Murugan:

டைம்ஸ் நவ்வை பார்த்தால் இந்த ஆட்சியை கலைச்சுடுவாங்க போலிருக்கே. நம்ம ஸ்கூட்டி என்னாகுறது?

Saravanan Savadamuthu: 

ஆட்சிக் கலைப்புக்கு தோதான ஒரு அயிட்டம் இப்பவே மோடி மஸ்தான் கைல சிக்கியிருச்சு.. பார்த்துக்கிட்டேயிருங்க.. வைச்சு செய்யப் போறாரு மோடி என்னும் கேடி..

தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்கப் போன வழக்குன்னு சொன்னவுடனேயே விழுந்தடிச்சு கேஸை போட்டு தூக்கி உள்ளார வைச்சாங்களே.. அது மாதிரி இதுவும் சீக்கிரமா ஒர்க்கவுட்டு ஆகும்ன்னா நினைச்சீங்களா..? ஆகவே ஆகாது..!

ஜனாதிபதி தேர்தல் முடிஞ்சவுடனேதான் இந்தப் பிரச்சினையை கேடியும், ஜெட்லியும் இதை கைல எடுப்பாங்க.. அதுவரைக்கும் ஊறப் போடுதல்தான்..!

Bala G:

இதுல கவனிக்க வேண்டியது என்னனா.. மோடியின் கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கைக்கு அப்புறம் தான் இவ்வளவு அமவுண்டு கொடுத்து எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கிருக்காங்க..

அவ்வளவுதான் மோடியின் அந்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கின் லட்சணம்.. 😉

ஈழ நினைவேந்தல் நிகழ்வு நடத்தியதற்காக திருமுருகன் காந்தி மீது குண்டர் சட்டம்; செயல்பாட்டாளர்கள் கடும் எதிர்ப்பு

மெரினாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடத்த மே 17 இயக்கத்துக்குக் காவல்துறை அனுமதி மறுத்தது. இதையடுத்து, மே 21ஆம் தேதி தடையை மீறி மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகியோர் தலைமையில் மெரினாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து, சட்டவிரோதமாக கூடியதாகக் கூறி திருமுருகன் காந்தி உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நான்கு பேரும் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் இவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

நினைவேந்தல் நடத்தியவர்கள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டதைக் கண்டித்து சமூக ஊடகங்களில் செயல்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் என பல தரப்பினர் கடுமையான கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

Arun Mo

3 hrs ·

தோழர் திருமுருகன் காந்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கு கடுமையான கண்டங்களை பதிவு செய்கிறேன். கையில் மெழுகு ஏந்தி போராடுபவர்கள் எல்லாம் குண்டர்களா, தமிழ்நாட்டில் உண்மையில் மத்திய அரசுதான் ஆட்சி செய்கிறது என்பதற்கு இதெல்லாம் சாட்சி. திருமுருகன் காந்தி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அரசியல் வேற்றுமை மறந்து இது போன்ற தருணங்களில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம்.

குண்டர்கள் கையில் குண்டர் சட்டம் கிடைத்தால் இப்படித்தான் திருமுருகன் காந்தி என்ன ? மகாத்மா காந்தியே குண்டராக வேண்டிய நிலை தான் ஏற்படும்.

நீங்கள் திருமுருகன்காந்தியோடு முரண்படலாம். உங்கள் கடுமையான விமரசனத்திற்கும் எதிர்ப்பிற்கும் கூட அவரும் மே17 ஆளாகலாம். அதுவல்ல தற்போதைய விடயம். அரசியல் போராட்டங்களையும், தங்கள் உறவுகளின் கொலைகளுக்கு கண்ணீர் சிந்துகிறவர்களையும் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி முடக்கப்பார்க்கின்றன பார்ப்பனீய இந்துத்துவமும் அதன் எடுபிடிகளான எடப்பாடிகளும். இந்த நேரத்தில் ஒன்று திரண்டு எதிர்க்காவிடில் நாளை உங்கள் மீதும், உங்களது கட்சிகள் மீதும் இதைவிட மோசமான தாக்குதலை நிகழ்த்த காத்திருக்கிறது நாக்பூர்.

இது தமிழர்களின் அரசியலுக்கு விடப்படிருக்கிற வெளிப்படையனத் தாக்குதல். மோசடி அரசு நேரடியாக களமிறங்கியுள்ளது. நாக்பூர் நடத்துகிற இத்தாக்குதலில் ஒவ்வொருவரையும் தனிமைப்படுத்தி முடக்கப்பார்க்கிறது. காட்டெருமைகளின் ஒற்றுமைப் போல பொதுஎதிரியை நோக்கித் திரளாவிடில் வீழ்வீர்கள் தனித்தனியாக. உள்முரண்பாடுகளல்ல இணைக்கிற புள்ளிகளும், சரடுகளுமே தற்காலத்தின் தேவை.

நினைவேந்தலுக்கு குண்டர் சட்டமா? அப்போ மோடி யாரு? அமீத்ஷா யாரு? அத்வானி யாரு?

#StandWithThirumuruganGandhi

தோழர் திருமுருகன் காந்தி உட்பட நான்கு தோழர்களை தமிழக அரசு குண்டர் சட்டத்தில் கைது செய்திருப்பது ஜனநாயக விரோத நடவடிக்கை.

நாளை குண்டர் சட்டம் என் மீதோ? உங்கள் மீதோ?

அரசியல் முரண்பாடுகள் கடந்து கைதை கண்டிப்போம்.

மே17 திருமுருகன் காந்தி மீது குண்டர் சட்டம்

வன்மையான கண்டனம்.

பிஜேபி-யோட எடுபுடி அரசு திருமுருகன் காந்தி மேல குண்டர் சட்டம் போட்டதுக்கு உடன்பிறப்புகள் ரொம்ப ஆனந்தப்படுறாங்க… என்ன எழவு டிசைன்-ன்னு தெரியல…

#இன்று திருமுருகன்; நாளை நான்; இன்னுமோர் நாளில் நீ…
#ReleaseThiru

சென்னையில் இருக்கும் அதிகாரம் என்பதெல்லாம், தில்லியில் இருக்கும் பார்ப்பனிய தரகு முதலாளிய ஏகாதிபத்திய அதிகாரத்தின் அடிமை எடுபிடி அதிகாரம் என்பது இப்போதும் தெரிகிறது. தமிழர் பகை மற்றும் துரோக அதிகாரத்தை வீழ்த்த அணி திரள்வோம்.

Kiruba Munusamy

1 hr ·

I condemn the State repression to arrest Thirumurugan Gandhi under Goondas Act!

Vikkranth Uyir Nanban

தோழர் திருமுருகன் காந்தி மேல குண்டர் சட்டம்… சாதாரணமா பெயில்ல வர முடியாத வழக்கு.. கடந்த ஆறு மாசத்துல மட்டுமே அவரும் அவரது இயக்கமும் நடத்திய தமிழக நலன் சார்ந்த போராட்டங்கள் மட்டும் ஏராளம்..

WTO’ல மோடி அரசு போட்ட ஒரு ஒப்பந்தத்தின் படி நம்ம ஊர்ல ரேஷன் கடைகள் மூடப்படும் ஒரு இமாலய விவகாரம் பற்றி வேறு எந்த கட்சியும் வாய் திறக்காத நிலையில் இவரு மட்டுமே போராடி வந்தார்… இந்திய அரசை விமர்சிச்சிட்டாங்கன்ற காரணத்துக்கு இதோ தமிழக அரசு இவர் மேல இந்த கொடுமையான வழக்கை போட்டு தன் ஹிந்திய விசுவாசத்தை காமிச்சிருக்கு…

கைல கத்தி கபடாவோட ஊர்வலம் போன RSS கூட்டத்திற்கு அனுமதி… கையில் மெழுகுவர்த்தி ஏந்தி இறந்தவர்ளுக்கு அஞ்சலி செலுத்த வந்தவர்கள் தடியடி.. கூடி அழக்கூட உரிமையில்லாத ஒரு தேசத்திற்கு துரோகம் செய்தால்தான் என்ன என்று யோசிக்க வைக்கிறார்கள்..

மே 17 இயக்க தோழர்களின் மேல் குண்டர் சட்டத்தை ஏவிய எடப்பாடி அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

தமிழக முதல்வரே மே 17 தோழர்களை உடனடியாக விடுதலை செய்.

மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்திருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.சனநாயகத்தின் குரலை, கருத்துரிமையை முடக்கும் அதிகார மீறல் இது.

தோழர் திருமுருகன் காந்தி மீது குண்டர் சட்டத்தை ஏவிய பிஜேபி வழிநடத்தும் தமிழக அரசுக்கு கடும் கண்டனங்கள். பச்சையான அரசியல் பழி வாங்கல்.

இன்று மே 17 திருமுருகன் மீது குண்டர் சட்டம் பாய்ந்திருக்கிறது. நாளை நம்மில்
யார் மீதும் பாயலாம். வன்மையான கண்டனங்கள்.

ஈழத்தமிழர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்திய மே 17 இயக்கத் தோழர் திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதிற்கு என் வன்மையானக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதப் போக்கிற்கு எதிராகப் போராடும் அனைவரும் குண்டர்கள் எனில் நானும் குண்டர்தான்..

மெழுகுவர்த்தி ஏந்தி நம் தமிழனத்திற்கு அஞ்சலி செலுத்தியதற்கு குண்டர் சட்டமா?? ஜனநாயகநாடா இது கேடுகெட்ட பாசிச அரசு அழியும் காலம் நெருங்கிவிட்டது..

மெழுகுவர்த்திக்கே குண்டாசா..?

பாசிசத்தின் எடுபிடியாகிப்போன எடப்பாடியாரே.. மக்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அரசியல் அனாதையாகப் போகிறீர்கள், நீங்களும் உங்கள் அடிப்பொடிகளும். உயிருக்கு ஊசலாடுகிற உங்கள் கட்சியும்..!!

தமிழகத்தின் பிற எந்த அரசியல் தலைவரையும் விட திருமுருகன் காந்தி தமிழ் மக்கள் நலனை முன்னிறுத்திச் செயல்படுகிற புதிய யுக அரசியல் பிரக்ஞை கொண்ட தலைவர். மெயின்ஸ்ட்ரீம் அரசியல் வாதிகளுக்குக் கூட அவரது முன்னெடுப்புகள் சவாலாகவே இருக்கும். முழு தேசிய அரசியலையும் ‘குண்டர்’ அரசியலாக ஆக்கியிருப்பவர்களுக்கு ஜனநாயக வழியில் போராட்டங்களை முன்னெடுக்கிற திருமுருகன் காந்தி ‘அச்சம் தரும் குண்டராக’ ஆகியிருப்பது ஆச்சர்யமில்லைதான். எல்லா வெகுமக்கள் போராட்டங்களையும் கிரமினலைஸ் பண்ணுவதும், அதனது தலைவர்களைத் தனிமைப்படுத்தி சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாக மாற்றுவதும் இன்றைய உலகில் எல்லா எதேச்சாதிகார அரசுகளும் கண்டுபிடித்திருக்கும் அண்மைய தந்திரம். இளைய யுக அரசியல் தலைமுறையை அச்சுறுத்தும் மோடி அரசினது நடவடிக்கையின் தொடர்ச்சி இது. ரோகித் வெமுலா, கன்னய்ய குமார் என இப்போது திருமுருகன் காந்தி. அஸாதி.. அஸாதி..

திருமுருகன் காந்தி கைது கடும் கண்டனத்துக்குரியது. எடப்பாடி அரசு ஆட்சியில் தொடர எந்த தார்மீக நியாயமும் இல்லை. மோடியின் எடுபிடி தான் எடப்பாடி என்பது ஊரறிந்த சேதி. சாதாரணமான இந்த காலத்திலே கூட அசாதாரண ஒடுக்குமுறையை ஏவும் அதிமுகவை விடவும் திமுக தான் தங்களை அதிகமாக ஒடுக்கியதாக நெஞ்சறிந்த பொய்யை திருமுருகன் இனி மேலும் தொடர மாட்டார் என்று நம்புவோம்.

மே-17 இயக்கத்தின் திருமுருகன் மற்றும் தோழர்கள் மீது குண்டர் சட்டம் என்பது அப்பட்டமான அராஜகம்! முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த இனப்படுகொலையில் மரித்த ஈழதமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தியதற்காக குண்டர் சட்டத்தில் கைது செய்வதெல்லாம் கடுமையாக கண்டிக்கதக்கது.

#DravidaNadu – கேரளம் நினைப்பது என்ன?

ஆழி செந்தில்நாதன்

அக்மார்க் இந்தியர்களாக இதுவரை இருந்த கேரளர்கள் இன்று ட்விட்டரில் நடத்திய #DravidaNadu பரப்புரை ஒரு தன்மை மாற்றத்தைப் புலப்படுத்துவதாகவே கருதுகிறேன். மாட்டிறைச்சி விவகாரம் மலையாளிகளை உலுக்கியெடுத்திருக்கிறது. முன்பு ஒரு முறை ஓணம் அன்று வாமன கிருஷ்ண ஜெயந்திக்கு வாழ்த்துச் சொல்லி அமித் ஷா பட்டபாடு நமக்கெல்லாம் தெரியும். அண்மையில் மத்திய அரசின் சர்வாதிகாரத்துக்கு எதிராக முழங்கிவரும் பினரயி விஜயனின் அரசு மோடிக்கு சிம்மசொப்பனமாக ஆகிவருகிறது.

உண்மையில், இங்கே திராவிட நாடு என்ற சொல் இப்போது நிறைய பேருக்கு பிடிக்காது. ஆனால் தென் மாநிலங்களில் சமீப காலத்தில் ஏற்பட்டுவரும் மாறுதல்களைத் தெரிந்து கொள்ளவாவது இதை அவர்களும் படிக்கவேண்டும். திராவிடநாடு என்ற சொல்லோடு உடன்பாடு உடைய, – ஆனால் அதை ஒரு கெட்டக்கனவாக மறந்துவிட்டவர்களும் – இதைப் பார்க்கவேண்டும்!

கேரளாவே கொதித்து எழுந்துவிட்டது என்று நான் கூற வரவில்லை. ஒரு சிலரின் ட்வீட்களைத்தான் நாம் பார்க்கிறோம், அதற்கு எதிரான எதிர்வினைகளும் இருக்கின்றன. ஆனால் இந்த சிறிய அளவிலான கருத்துப் பரப்பல்கூட ஒரு காலத்தில் கேரளத்தில் கனவு கூட காண இயலாது.

அது அனைத்திய காங்கிரசும் சர்வதேசிய இடதுசாரிகளும் ஆண்டுவரும் பூமி.

ஆனால் இன்றைய #DravidNadu ட்வீட்கள் கேரளத்தில் நடந்து கொண்டிருக்கும் மாற்றத்தை உங்களுக்குப் புலப்படுத்தும். அத்துடன் வங்காளம், பஞ்சாப் போன்ற இடங்களிலிருந்தும் இதை ஆதரித்து ட்வீட் செய்திருக்கிறார்கள். தமிழர்கள் சிலர் இதை எதிர்த்து ட்வீட் செய்திருக்கிறார்கள்.

உங்கள் பார்வைக்கு, திராவிடநாட்டுக்கு ஆதரவான சில சில ட்வீட்களின் வாசகங்களை மட்டுமே இங்கே தொகுத்திருக்கிறேன் (முழு சரவெடிக்கு ட்விட்டருக்குச் சென்று #DravidaNadu எனத் தேடவும்):

The future is simple for India. Either give the South 50% representation in Parliament, or we take our #DravidaNadu. Second Partition.

Amazing! Even non Mallus are saying that it is time for #Kerala to leave the Indian Colonial State! #DravidaNadu begins now!

making kerala people take about #Dravidanadu is the biggest achievement of BJP in 3 years.. i support #Dravidanadu

North Indian gundagardi has gone too far! Enough is enough! Time for #DravidaNadu to stand up! #PoMoneModi #BeefBan

Oh I lov it. Malyalis, kannadigas and telugus talking abt #Dravidanadu. only wish Periyar was alive. Nice to see this freedome rise in south

Of course North Indians will oppose #DravidaNadu! Without us they won’t have half of their wealth, technology, resources or places to work!

#Dravidanadu is trending @karthickselvaa @GunasekaranMu @sumanthraman @RKRadhakrishn @mkstalin @PTTVOnlineNews @RangarajPandeyR @news7tamil
(யாருக்கெல்லாம் டேக் ஆகியிரு்ககு பாருங்க!)

Bengal has been as much of a victim of #HindiImposition as #DravidaNadu! We must unite to fight these Sanghi imperialists!

You asked for sambar, they served you dal tadka instead! Tch #DravidaNadu rasam fighters. #lolsalam

Time to put up “Welcome to #DravidaNadu” boards in our country.

The more u impose Hindi the more #Dravidanadu will reach people so please #StopHindiChauvinism

Now if center stepped in, it would be infringement into state subject. Delhi dictating terms to Tamils, #DravidaNadu talks start.

#Panjab is with #UnitedSouthIndia #DravidaNadu
#Punjab https://twitter.com/DasBolshevik/status/850538611749511168

And Commies suggests #Dravidanadu… and so on.. Yes it is peaceful.. Lol…

Unlike India, #DravidaNadu will be federal in letter & spirit. No forcible imposition of cultural mores on others.

#MannKiBaat of #sanghi #TarunVijay: We’re Not #racist, We Live With South Indians. #UnitedSouthIndia #DravidaNadu

An independent #DravidaNadu, with GDP over $650bn & literacy > 70% would be a regional superpower ahead of even many European states!

europian union kind of #dravidanadu with TN, kerala, KN, AP, Telungana. 5 PMs and a group decision on major things.

மேலும் ட்வீட்களுக்கு டிவிட்டரில் பாருங்கள்.

கடைசியில் ஒன்றுதான் சொல்லமுடியும்:

மலையாளிகளையே பிரிவினைவாதம் பேசவைத்துவிட்டார் என்றால், மோடியைப் போல வலுவானவர் இந்த உலகத்திலேயே யாரும் இருக்கமுடியாது!

மோடி அரசுதான் இந்தியாவின் மிகமோசமான ‘தேசவிரோத’ அரசு என்று எதிர்காலத்தில் வட இந்திய வரலாற்றாசிரியர்கள் எழுதத்தான் போகிறார்கள்.

இந்தியாவிலிருந்து பிரிந்து ‘திராவிட நாடு’ உருவாக வேண்டும்: ட்விட்டரில் ட்ரெண்டாகும் #dravidanadu

மாட்டிறைச்சி உண்பதற்கு மத்திய அரசு விதித்துள்ள மறைமுக தடைக்கு கடந்த இரண்டு நாட்களாக சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக தென் இந்திய மக்கள் அதிகமாக தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இதன் அடுத்த நிலையாக, இந்தியாவிலிருந்து பிரிந்து திராவிட மொழிகளை பேசும் மக்கள் வசிக்கும் மாநிலங்கள் இணைந்து ஒரு நாடாக உருவாக வேண்டும் என ‘சீரியஸாக’ மக்கள் ட்விட்டி வருகின்றனர்.

 என்ற ஹேஷ் டேக் தற்போது ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. கடந்த மூன்றாண்டுகால மோடி அரசின் சாதனை பிரிந்திருந்த திராவிடர்களை ஒன்றாகியதுதான் என்றும் பலர் பதிவிட்டுள்ளனர்.

தமிழர்கள்தான் எப்போதும் திராவிட நாடு என பேசிக்கொண்டிருப்பார்கள்; ஆனால் இப்போது தெலுங்கர்கள், கன்னடர்கள், மலையாளிகள் திராவிட நாடு என பேசுகிறார்கள் எனவும் எழுதி வருகின்றனர்.

அதுபோல, முகநூலில் இதுகுறித்த உரையாடல் தொடங்கியிருக்கிறது…

தே.கி. மலையமான்:  தருண்விஜய் தென்னிந்தியர்கள் கருப்பானவர்கள் என சொன்னவுடன் முதல் குரல் கன்னடர்களிடம் வந்தது..பாராளுமன்றத்திலே மல்லிகார்ஜுன கார்கே எதிர்த்து முழங்கினார் இப்படியே போனால் தனியாய் பிரிந்துபோகும் வாய்ப்பை நீங்களே ஏற்படுத்திவிடாதீர்கள் என்று…இன்று கேரளா மாட்டுக்கறி தடைக்கெதிராக தனது எதிர்விணையை கடுமையாக ஆற்றிக்கொண்டிருக்கிறது..நாம் எப்போதும் இந்தி திணிப்பெதிராக போர்க்களம் பூண்டெழுகிறோம்…ஆக உணர்வால் நாம் திராவிடர்களாய்தான் இருக்கிறோம்..

பால் பேதமில்லாத முரட்டு மிருகங்களா காவல்துறையினர்?: சமூக ஊடகங்களில் கொந்தளிப்பு

திருப்பூர் சாமளாபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை தாக்கிய ஏடிஎஸ்பி பாண்டியராஜனுக்கு சமூக ஊடகங்களில் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இரா எட்வின் (எழுத்தாளர்)

டிஎஸ்பி  பாண்டியராஜனிடம், ஈஸ்வரி என்கிற பெண்மணி அறைவாங்கிய அதே போராட்டத்தில்தான் இதுவும் நடைபெற்றுள்ளது.

ஆண் போலீஸ்தான் என்றில்லை தோழியரே அரசாங்கத்தை எதிர்த்து போராடினால் காக்கியில் இருப்பது ஆணாயிருந்தாலும் பெண்ணாயிருந்தாலும் திருநங்கையாகவே இருந்தாலும் இதுதான் நிலை

நாம்தான் மாற வேண்டும். எல்லோரும் படமெடுத்து ஆவணப் படுத்தத் தேவையில்லை. சிலர் அதை செய்வதும் மற்றவர்கள் ஒன்றிணைந்து தற்காப்பதும் மீறியும் தாக்கினால் எதிர்த்து அடிப்பதுமே தேவை

வேடியப்பன் (பதிப்பாளர்)

அரசாங்கம் தன் அதிகாரத்தை காப்பாற்றிக்கொள்ள சம்பளம் கொடுத்து வைத்துள்ள அடியாள்கள்தான் போலிஸ் என்பதை அவ்வப்போது கனம் போலிஸார் அவர்களே நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். கேட்டால் மேலிடத்து உத்தரவு என்பார்கள். எல்லா அடியாட்களும் மேலிடத்து உத்தரவுப்படிதான் நடக்கிறார்கள் என்பது காக்கிச்சட்டைகள் அறியாதது இல்லை.

வில்லவன் இராமதாஸ் (விமர்சகர்)

பொலீஸ் தாக்கியதால் காயமடைந்தவர்களுக்கு அவர்கள் விரும்பிய மருத்துவமனையில் சிகிச்சை (அரசு செலவில்) அளிக்க உத்தரவு.

வழக்கு முடித்துவைப்பு.

நீதிபதிகளுக்கு வேண்டிய பல்வேறு சேவைகளை செய்வது போலீஸ்தான். அவர்களை தடவிக் கொடுப்பதைத் தாண்டி நீதிமன்றம் எதையும் செய்யாது. ஆகவே இவர்களிடம் ரொம்ப எதிர்பார்க்காதீர்கள்.

இரவிக்குமார் (ஓவியர், கவிஞர்)

சாமளாபுரம் டாஸ்மாக்கை மூட கலெக்டர் உத்தரவு.

பெண்களை வெறி கொண்டு தாக்கிய அந்த வெறிபிடித்த ஏடிஎஸ்பியை என்ன செஞ்சீங்க கலெக்டர் சார்?

கோவி. லெனின் (நக்கீரன் ஆசிரியர்)

நெடுஞ்சாலைகளில் மூடிவிட்டு ஊருக்குள் டாஸ்மாக் மதுபானக் கடை திறக்க நினைக்கும் அரசின் செயல்பாடுகளுக்கு காவல்துறையினரும் வருவாய்த்துறை அதிகாரிகளும் முழு ஒத்துழைப்பாக செயல்படுகின்றனர்.
“டாஸ்மாக் கடை திறந்து வியாபாரம் நடந்தால்தான் ரேஷனில் அரிசி, பருப்பு, இலவச பொருட்கள் தரமுடியும். உங்க புருசனும் புள்ளைகளும் டாஸ்மாக் பக்கம் போகாதபடி நீங்கதான் பார்த்துக்கணும்” என்று போராட்டத்தில் ஈடுபடும் பெண்களிடம் போலீசார் சமாதானம் பேசுகிறார்கள்.

“சரிங்க சார்.. எங்க வீட்டு ஆம்பளைங்களை கடைக்கு அனுப்பாம நாங்க பாதுகாத்தால் அப்புறம் எப்படி உங்களுக்கு வருமானம் நடக்கும்.எங்களுக்கு எப்படி அரிசி, பருப்பு கொடுப்பீங்க? ஆம்பளைங்க குடிக்க வரணும்ங்கிறதுக்காகத்தானே கடையையே திறக்குறீங்க!!” எனத் திருப்பிக் கேட்கும் பெண்களுக்கு போலீசாரின் வாயிலிருந்து பதில் வருவதில்லை. கைதான் பேசுகிறது.

நெட்டீசன்களே இளையராஜாவை விட்டுவிடுங்கள்..!

சரா சுப்ரமணியம்

சரா

விவரம் அறிந்தவர்கள் பலர் சரியான விளக்கங்களை அளித்த பின்னரும் இளையராஜாவை கலாய்ப்பதும், கடுமையாக விமர்சிப்பதும் நொந்துகொள்ளத்தக்கது. இளையராஜாவின் இயல்புத்தன்மையும் வெளிப்படைத்தன்மையும் அவர் மீது தவறான கண்ணோட்டத்துக்கு வழிவகுத்துள்ளது என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், காப்பிரைட் – ராயல்டி விவகாரத்தில் பலராலும் பல கோடி ரூபாய் ஏமாற்றப்பட்டுள்ள அவர் மீது வெறுப்புணர்வை வெவ்வேறு வடிவங்களில் கொட்டுவதை ஏற்க முடியவில்லை.

நம் காதல் உள்ளிட்ட உணர்வுகளை இசையால் வளர்த்தவர்; மன அழுத்தத்தில் இருந்தபோதெல்லாம் இனிய கீதத்தால் மீட்டவர்; வெற்று இரவுகளை இன்னிசையால் நிரப்பியவர்… இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம், ராஜாவின் மேன்மைகளை. இவற்றை அனுபவித்தவர்கள் கூட இப்போது அவரைக் கழுவியூற்றுவது கவன ஈர்ப்புக் காலக் கொடுமை.

ஆம், ராஜா அப்டேட்டாக இல்லைதான். சமகால திரையிசையில் அவருக்கான இடம் இல்லைதான். (அந்த இடமும் தேவையில்லை. அவர் ஓய்வு எடுக்கட்டும்.) அந்த விரக்தி அவருக்கு இப்போது இருக்கத்தான் செய்யும். வாழ்ந்துகெட்ட ஜமீன் போல வாழும் அவருக்கு, தன் கலைச் சொத்துகள் கண்முன்னே சூறையாடப்படுவது இன்னும் விரக்தியைக் கூட்டும் என்பது தெளிவு. ஒருவேளை, தற்போதும் திரையிசையில் அவர் வேற லெவலில் இருந்திருந்தால், இந்த மேட்டர்களை சில்லறையாகக் கருதி கண்டுகொள்ளாமல் போயிருக்கலாம்.

சமூக வலைதளத்தில் நீண்ட நாட்களாகவே அப்டேட்டாய் இருக்கும் எஸ்.பி.பி. டீம், இந்த மேட்டரை எப்படி அணுகினால், எந்தெந்த வார்த்தையை – எப்படிப்பட்ட சொற்றொடரைப் பயன்படுத்தினால் நெட்டிசன்களின் ஆதரவைப் பெற முடியும் என்பதைத் தெளிவாக உணர்ந்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. நெட்டிசன்களின் ஆதரவைப் பெறும் வகையில் சிம்ப்பதி கிரியேட் செய்யும் பாணியைப் பின்பற்றுவதோடு மட்டுமின்றி, இளையராஜாவை கழுவியூற்றுவதற்கான எல்லா ஸ்கோப்களையும் உருவாக்கிவிட்டு பம்மிக்கொண்டிருக்கிறது எஸ்.பி.பி. டீம்.

இளையராஜா மீதான கடந்த கால கசப்புகளை ஒன்றுதிரட்டி, இந்த விவகாரத்தில் அவரை காய்ச்சி எடுப்பது, நமக்கு கலை வடிவில் நன்மைகளையும் பெருமைகளையும் ஈட்டித் தந்த நம் வீட்டுப் பெரியவர் ஒருவரை நாமே பங்கம் செய்வதற்கு ஒப்பானது.

இந்த விவகாரம் ட்ரெண்ட் ஆனபோதே வேண்டினேன், உடனடியாக நம் நெட்டிசன்களின் கவனம் ஈர்க்கத்தக்க வேறு முக்கிய விவகாரங்கள் தலைதூக்க வேண்டும் என்று. ஆனால், வெச்சு செய்யத்தக்க வேறு எந்த மேட்டரும் சரியாக பிடிபடாததால் இளையராஜா இன்னமும் பலரால் வைத்துச் செய்யப்படுவது வருந்தத்தக்கது.

சரா சுப்ரமணியம், ஊடகவியலாளர்.

மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு… மன்னார்குடிய நம்பி வெச்சிக்காத ஆப்பு…! வைரலாகும் பாடல்

கடந்த ஆறு நாட்களாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரிசார்டில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தனக்கு ஆதரவாக உள்ள இந்த எம். எல்.ஏக்களை இப்படி ‘அடைத்து’ வைத்திருப்பதாக செய்தி வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில்,  முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ரிசார்டில் இருக்கும் எம்.எல்.ஏக்களுக்கு தொலைபேசியில் பேசி ஓ.பீ. எஸ்ஸுக்கு ஆதரவளிக்கும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் “மக்களின் தீர்ப்பே  மகேசன் தீர்ப்பு… மன்னார்குடிய நம்பி  வெச்சிக்காத ஆப்பு…!” என்ற பாடல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டிருக்கிறது.

எங்க போன எம்.எல்.ஏ.
எங்க ஊரு எம்.எல்.ஏ…
ஊரு பக்கம் வாயான்னா
ஊரு ஊரா பிக்னிக் போற…

அம்மா பேச்ச கேட்டு
போட்டமைய்யா ஓட்டு…
எங்க பேச்ச கேட்கலைன்னா
வெச்சிருவோம் வேட்டு…

மக்களின் தீர்ப்பே
மகேசன் தீர்ப்பு…
மன்னார்குடிய நம்பி
வெச்சிக்காத ஆப்பு…

மாட்டுக்கே கூடுன
மானமுள்ள கூட்டம்…
நாட்டுக்காக கூடுனா
என்னாகும் உங்க ஆட்டம்…

ஓட்டுப்போட்ட உரிமையில்
ஒன்னே ஒன்னு கேட்கிறோம்
உங்க பேஸ்டில் உப்பிருந்தா
ஊரு பேச்ச கேளுங்க…

எங்க போன எம்.எல்.ஏ.
எங்க ஊரு எம்.எல்.ஏ…
ஊரு பக்கம் வாயான்னா
ஊரு ஊரா பிக்னிக் போற…

பாடலை இங்கே கேட்கலாம்…

நன்றி: தளவாய் சுந்தரம்.

#standwithjothimani: ஓர் எளிய அரசியல்வாதிக்கு சமூகம் கொடுக்கும் மரியாதை ஆசிட் வீச்சு, பாலியல் வன்புணர்வு மிரட்டல்தானா?

அரசியல் செயல்பாட்டாளர் ஜோதிமணி மீது பாஜக ட்ரோல்கள் நடத்திய தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஜோதிமணிக்கு ஆதரவாகவும் சமூக ஊடகங்களில் எழுதப்பட்ட பதிவுகளின் தொகுப்பு இங்கே…

சிவசங்கர் எஸ்.எஸ்

சகோதரி ஜோதிமணி (Jothimani Sennimalai) ஒரு எளிய அரசியல்வாதி. பொது நலத் தொண்டர். தன் கருத்துகளை முகநூலில் தொடர்ந்து எழுதுபவர். மோடியின் ‘செல்லாக்காசு’ திட்டத்தை ஆரம்பத்தில் இருந்து எதிர்த்து எழுதி வருபவர். இதை எதிர்க்கிறோம் என்று ஒரு கும்பல் வெறித் தாக்குதல் நடத்துகிறது.

அவர் தன் கட்சி சார்ந்த சில செயல்பாடுகளில் இணக்கம் இல்லையென்றாலே, மாற்றுக் கருத்து வெளியிடுபவர்.

ஜோதிமணி கருத்துக்கு எதிர்வினையாக தங்கள் கருத்தை பதிவு செய்யும் பா.ஜ.கவினர் இருக்கிறார்கள். அவர்களை மதிக்கிறோம்.

ஆனால் சகோதரி ஜோதிமணி அலைபேசிக்கு நாகரீகமற்ற முறையில் பேசுவது மனிதத் தன்மையற்றது. வெளிநாட்டிலிருந்தும் இணையத்தின் மூலமும் தொடர்ந்து அழைத்து அவருக்கு மனரீதியான சித்திரவதை கொடுக்கிறது ஒரு கூட்டம்.

மோடி இன்றைக்கு பிரதமர், நாளை என்னவோ?

நாம் மனிதர்கள் என்பதை மறந்து மிருகத்தனமான இந்த செயல் செய்யும், பா.ஜ.கவில் இருக்கும் அந்த பாசிச கூட்டத்தை கண்டிக்கிறேன்.

இங்கு கட்சி ரீதியாக வாதம் செய்து கொண்டு இருக்க வேண்டாம். ஜோதிமணியை என் சகோதரியாக எண்ணி இதை சொல்கிறேன்.

# நாகரீகமற்ற மிருகங்களை கண்டிப்போம் !

ஜோதிமணி மீதான ஆபாச தாக்குதல் பற்றி அம்பலப்படுத்திய செய்த அவரின் பதிவுகளை பேஸ்புக் நீக்கியுள்ளது.

ஆபாசம் எழுதியோர், மொபைல் எண்களை பகிர்ந்து, தாக்குதலுக்கு தூண்டியோர் பத்திரமாக இருக்கிறார்கள். இன்னமும் அவருக்கு அழைப்புகள் வந்துகொண்டுள்ளன.

அரசியல் வேறுபாடுகளை கடந்து சிந்திக்க வேண்டிய நேரமிது. ஆபாசக் குப்பைகளைக் கொண்டு வாயடைக்கும் முயற்சிகளுக்கு எதிராக தொடர்ந்து எழுதுவோம்.

சங்கி முகாம்களிலும் இதற்கு எதிரான ஒரே ஒரு குரலாவது இருக்கிறதானால், அவர்களையும் கண்டனம் பதிய வையுங்கள். #தனிமைப்படுத்துவோம்

#standwithjothimani

 

 

எழுத்தாளர், களச் செயற்பாட்டாளர், இளம் அரசியல் தலைவர் என பன்முக ஆளுமையாக விளங்கும் அன்புச் சகோதரி ஜோதிமணி மீது, சங்பரிவார வன்முறைக் கும்பல், ஆபாசத் தாக்குதல் நடத்தியுள்ளனர். தம்மோடு முரண்படும் பெண்கள் மீது அமிலம் வீசும் மிருகங்களுக்கும் இவர்களுக்கும் வேறுபாடில்லை.

ஏற்கெனவே, இதுபோன்ற ஆபாசத் தாக்குதலுக்கு பத்திரிக்கையாளர்கள் கவின்மலர், கவிதா முரளிதரன் போன்ற பலரும் இலக்காகியுள்ளனர். அதை காவல்துறையின் கவனத்துக்கு எடுத்துச் சென்றும் பயனில்லை. இப்போது ஜோதிமணி தாக்கப்பட்டுள்ளார். இத்தகைய வன்முறைகளை அனைவரும் கண்டிப்பதோடு, பாசிச கும்பலுக்கு எதிராக ஒருங்கிணைவோம்.

தமிழ் நாஜிக்களை எதிர்த்து தொடர்ந்து எழுதியும், பேசியும் வந்தபோது என்னை மிகவும் ஆபாசமாக திட்டி நிறைய பதிவுகளை எழுதுவார்கள் தமிழ்நாஜிக்கள். அதில் ஒரு ஆச்சரியமானவிஷயம் என்னவென்றால் எல்லாமே என் குடும்பப் பெண்களை நோக்கியதாக இருக்கும். உச்சகட்டமாக எனது குடும்பப் படத்தை பகிர்ந்து ஆபாசமாக பின்னூட்டமிடும் வேலையையும் ஒருநாள் செய்தார்கள். நேற்று ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடுத்திருக்கும் இளைஞர் ஒருவர் அவரது மனைவியுடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான தமிழ்நாஜிக்கள் ஆபாசமாக பின்னூட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். இதோ நேற்று காங்கிரஸ் ஜோதிமணியின் மீது சொல்லொன்னா ஆபாச அர்ச்சனைகளை தொடுத்திருக்கிறார்கள் பாஜக கட்சியினர்.

ஆக, ஒரு ஆணை தாக்க வேண்டுமென்றால் அவனது குடும்பப் பெண்களின் மீதும், ஒரு பெண்ணைத் தாக்க வேண்டுமென்றால் நேரடியாக அவளது உடலின் மீதும் தான் குரூரமும், வக்கிரமும் வீசப்படுகிறது. இந்துத்துவாவும், தமிழ்நாஜியிசமும் சேரும் இடமும் இதுதான். அவன், பெண் என்றால் வீட்டில் இருந்து சமைக்கவேண்டும் என்பான். இவன், பெண் என்றால் பொட்டு வைத்து, பூ வைத்து தமிழ் கலாச்சாரத்தோடு இருக்க வேண்டும் என்பான். அவன் பெண்கள் வேலைக்கு போதல் பாவம் என்பான். இவன் வேலைக்குப் போகாத பெண்களே குடும்பப் பெண் என்பான். இப்படி மதத்திற்கும், தமிழ் கலாச்சாரத்திற்குமான ஒற்றுமைகள் நிறைய இருக்கிறது. அந்த ஒற்றுமையின் ஒரு முக்கிய அம்சம்தான் ஆணின் மானத்தை அவன் சார்ந்த பெண்களின் உடலிலும், பெண்ணின் மானத்தை அவளது உடலிலும் வைப்பது.

ஒரு ஆங்கில நாளிதழ் பாஜகவின் சமூகவலைதள செயற்பாட்டு முறைகளில் ‘ஒருவரை கருத்தினால் வெல்ல முடியாவிட்டால் அவரை மன ரீதியாக தாக்குங்கள். பெண்கள் என்றால் கும்பலாக சேர்ந்துகொண்டு வார்த்தைகளால் பாலியல் தாக்குதலை தொடுங்கள்.,” என உத்தரவிடபட்டுள்ளதாக எழுதிருக்கிறது. ஏனெனில் பெண்களை வக்கிரமாக திட்டினால் பயந்து ஓடிவிடுவார்கள் என்ற கணக்கு. அப்படித்தான் இன்று ஜோதிமணியை தாக்கியிருக்கிறார்கள். பாஜவினர் இதைச் செய்வது முதல் முறை அல்ல. கனிமொழி, குஷ்பூ, விஜயதாரணி உள்ளிட்ட பெண் அரசியல்வாதிகள் தமிழ்நாஜிக்களாலும், பாஜகவினராலும் இதுபோன்ற தாக்குதல்களைச் சந்தித்திருந்தாலும் ஜோதிமணி விஷயத்தில் பன்மடங்கு எல்லைமீறிச் சென்றிருக்கிறார்கள் பாஜகவினர். இப்படியான ஆட்களும் தமிழகத்தில் இருக்கிறார்கள் என நினைக்கும் போதே கூசச் செய்கிறது.

ஆனால் ஒன்றே ஒன்று தெளிவு. ஜோதிமணியால் இந்த மிருகங்கள் மிகவும் கோபமடைந்திருக்கின்றன. அதனால்தான் ராபீஸ் நாய்களைப் போல வெறிகொண்டு பற்களைக் காட்டிக்கொண்டு நிற்கின்றன. ஜோதிமணி மட்டுமல்ல, பொதுக்கருத்துக்கள் சொல்லும் எந்தப் பெண் ஆனாலும் சரி, இதுபோன்ற தாக்குதல்கள் தொடுக்கப்படும்போது அசராமல் திரும்பி நின்று கல்லை எடுத்தால் போதும் நாய்கள் இருக்கும் இடம் தெரியாமல் சிதறி ஓடிவிடும். தன் மீதான தாக்குதலை #ஜோதிமணி எதிர்கொண்ட விதம் பாராட்டுக்குரியது.

தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே தற்போதைய அதிமுக்கிய தேவை மதவாதம், கலாச்சாரவாதம் பேசும் பிற்போக்குவாத பைத்தியங்களை துணிந்து, எதிர்த்து கேள்விக்குள்ளாக்கி, அடித்து ஓடவிடும் பெண்கள் தான். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பெண்ணாவது இதைச் செய்யத் துவங்கும்போதுதான் பெண் வெறும் உடலாகப் பார்க்கப்படும் இந்தியக் கலாச்சாரம் மரணிக்கும். ஆண்கள் உறுதுணையாக இருக்கலாமே தவிர பெண்கள்தான் இதை நேரடியாக கையில் எடுக்க வேண்டும். ஏன் பெண்கள் தான் செய்யவேண்டும் எனச் சொல்கிறேன் என்றால் பெரியார் சொன்னதைப் போல, எலிகளின் விடுதலையை எந்நாளும் பூனைகள் பெற்றுத்தராது. அது எலிகள் ஒன்று சேர்ந்தால் மட்டுமே முடியும்.

-டான் அசோக்

 https://www.facebook.com/donashok/posts/1200255156749114

ஜெ. இறுதி ஊர்வல கவரேஜுக்கு அதிக பார்வையாளர்கள்: சர்ச்சையாகும் தந்தி டிவி விளம்பரம்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி காலமானார். செய்தி தொலைக்காட்சியான தந்தி டிவி. டிசம்பர் 5-ஆம் தேதி 5 மணியளவில் ஜெயலலிதா இறந்துவிட்டதாக அறிவித்தது. மருத்துவமனை செய்தியை மறுத்த நிலையில், ஜெ. இரவு 11 மணியளவில் இறந்ததாக செய்தி அதிகாரப் பூர்வமான அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், டிசம்பர் 6-ஆம் தேதி நடந்த இறுதி ஊர்வல கவரேஜை தந்தி டிவியில்தான் அதிகமானோர் பார்த்ததாக விளம்பரத்தை வெளியிட்டுள்ளது தந்தி டிவி. ஜெயலலிதா இறு ஊர்வல படத்தைப் போட்டு இந்த விளம்பரம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த விளம்பரம் சமூக ஊடகங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

https://twitter.com/thoatta/status/811830557940150272

சசிகலாவை சந்தித்தபோது தோள்களிலிருந்து சிவப்புத்துண்டை கம்யூனிஸ்ட் தலைவர் தா. பாண்டியன் ஏன் இறக்கினார்?; சமூக ஊடகங்கள் அலசல்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியாக கருதப்பட்ட சசிகலாவுக்கு ஆறுதல் சொல்லும் வகையில் அவரை போயஸ் இல்லத்தில் சந்தித்தார் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா. பாண்டியன். சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஜெயலலிதா மறைந்தபோது கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் சசிகலா உட்பட யாரையும் அப்போது சந்தித்து பேச இயலவில்லை. அதனால் இன்று சசிகலாவை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன். நானும் சசிகலாவும் அரசியல்வாதி. போயஸ் கார்டனுக்கு வரும் பல்லாயிரக்கணக்கான மக்களும் கூட அரசியல்வாதிகள். சசிகலாவுக்கு பின்னால் மக்களின் சக்தி இருக்கிறது”என தா. பாண்டியன் கூறினார்.

இந்த சந்திப்பின் போது வழக்கமாக தா. பாண்டியன் அணியும் சிவப்புத் துண்டு அவருடைய தோள்களிலிருந்து இறங்கி கைகளில் இருந்தது. இந்தப் புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்புச் செய்தியாகியுள்ளது. சமூக ஊடகங்களில் சில கருத்துகளை இங்கே பகிர்கிறோம்…

Mathi Vanan: ஜெயலலிதா மரணத்தின் பின் சசிகலாவைச் சந்தித்து CPI கட்சியின் மூத்த தலைவர் த. பாண்டியன் ஆறுதல் சொன்னாராம்… அப்படியென்ன தேவை என்று நமக்குத் தெரியவில்லை. அது நிற்க, அவர் கையில் உள்ள சிவப்புத் துண்டை கவனியுங்கள். பார்க்க முதல் படம்.

முக்குலத்தோர் புலிப்படை கருணாஸ், புரட்சி பாரதம் பூவை ஜெகன் மூர்த்தி ஆகியோரும் சசிகலாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்களாம். இன்று டெக்கான் கிரானிக்கல் ஆங்கில நாளேட்டின் அதிபர் சாந்தி ரெட்டி, அதன் ஆசிரியர் பகவான்சிங் ஆகியோரும் சசிகலாவை நேரில் சந்தித்தனர். அது இரண்டாவது படம்.

சிவப்புத் துண்டு அடிமைகளின் அடையாளம் ஆனதற்கு என்ன செய்யப் போகிறீர்கள்? அவமானங்களை அழிக்க என்ன வழி?

Shunmugam Ganesan:

உதிரத்தால் சிவந்த செங்கொடியை இறக்கமாட்டோம்
உயிரை வேண்டும்மாலும் இழப்போம் என்று இன்னுயிரை இழந்த வெண்மணி தியாகிகள் உயர்த்திபிடித்த செங்கொடி…
இடிப்பில் துண்டு கட்டமாட்டோம்
தோளில் சிவப்பு துண்டை போடுவோம்
என்று கீழ்தஞ்சை விவசாயதொழிலாளர்களின் வாரிசு நாங்க..
பாவம் சிலபேருக்கு புரிந்தால் சரி

Raghavendra Aara:

துண்டு
அரைக் கம்பத்தில்
பறக்கக் காரணம்
துக்கமா…
அல்லது!

Natarajan:

‘மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குப் பிறகு அதிமுகவுக்குத் தலைமை ஏற்று வழிநடத்தக்கூடிய பொறுப்பும், தகுதியும் சசிகலாவுக்குத்தான் உள்ளது.’ – தா.பாண்டியன்.

இதுதான்யா கம்யூனிசம். தன்னைப் பத்தியோ, தன் கட்சியைப் பத்தியோ கவலைப்படாம பிறரைப் பத்திக் கவலைப்படற பெருந்தன்மை!

நீங்க இதே ரூட்ல போங்க மிஸ்டர் தா.பா!

முதல்வர் இறந்ததாக செய்தி; சமூக ஊடகங்களில் தந்தி டிவிக்கு கடும் எதிர்ப்பு

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா இறந்துவிட்டதாக முதன் முதலில் செய்தி வெளியிட்டது தந்தி டிவி. இந்தச் செய்திக்கு அடுத்து அனைத்து ஊடகங்களும் அப்படியே வெளியிட்டன.

இதற்கு சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.

தந்தி டிவி முழு பொறுப்பேற்க வேண்டும்

எந்த அடிப்படையில் ஊடகங்கள் ஜெயா மரணம் என அறிவித்தது ?

ஒரு மாநில முதல்வர் குறித்த செய்தியே இப்படி நம்பகத்தன்மை அற்றதாக இருக்கிறதே.

இவர்கள் சாமானியர்கள் குறித்துச் சொல்லும் செய்தியை எப்படி நம்புவது??

சுயபுத்தி இல்லாத கோமாளி ஊடகங்கள் …

மற்றவர்களின் மரணத்திலும், வீழ்ச்சியிலும் மகிழ்வது மனநோய்..தமிழ்நாட்டு ஊடகங்கள் மரணத்தை எதிர்நோக்கியே இருக்கிறது..ஒருவர் வாழவேண்டும் என்ற கருணையும் இவர்களுக்கு கிடையாது..எந்த விமர்சனங்கள், தம் கருத்துக்கு மாறுபட்டவராக இருந்தாலும்., ஒரு மனிதனை மனதளவில் சாகடித்து, செய்திகளை முந்தித்தரவேண்டும் என்ற வெறியில் ஊடகங்கள் ஊழித்தாண்டவம் ஆடுகிறது..தமிழ்நாட்டு (சில விதிவிலக்குகள் உண்டு) ஊடகங்கள் பல நடிகைகளின் தொடைக்கறி காட்சிகள், கேளிக்கைகள், மரண அறிவிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு பதிலாக மெரினா கடற்கரையில் பிச்சை எடுத்து கவுரமாக வாழலாம்…கேவலம்…

  • எழுத்தாளர் வாசுதேவன்

என்ன நடந்து கொண்டிருக்கிறது இங்கே?

சற்று முன் ஜெயலலிதா மறைந்தார் என எல்லா தமிழ் தொலைகாட்சிகளும் சொல்லின.

அரைக்கம்பத்தில் பறக்கும் அதிமுக கொடியும் காட்டப்பட்டது.

இப்போது அப்போலோ அந்த செய்தியை மறுக்கிறது. இன்னும் சிகிட்சையில் இருக்கிறார் என்கிறது

கொடியும் மறுபடி ஏற்றப்பட்டுவிட்டது.

அப்படியெனில் ஊடகங்களுக்கு அந்த செய்தியை சொன்னது யார்?

வதந்தியை நம்பி ஒரு கட்சி தன் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமா?

யாரோ ஒரு சக்திவாய்ந்த நபர்தான் இந்த தகவலை சொல்லியிருக்க வேண்டும்.

யார் அது?

சற்று முன்பு தந்தி டிவி, புதிய தலைமுறை போன்றவை முதல்வர் குறித்த தவறான தகவலை வெளியிட்டன. கடும் அதிர்வை ஏற்படுத்தியது. அடுத்த சில நிமிடங்களில் அந்த செய்தியை நிறுத்திக்கொண்டன. ஆனால் தேசிய செய்தி சேனல்களான NDTV, CNN NEWS 18, India Today, Times Now போன்றவை அவசரப்படவில்லை.

தமிழக அரசு, மருத்துவமனை, காவல்துறை என எந்த தரப்பில் இருந்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை வராமல் முன்னணி ஊடகங்கள் இப்படி செய்தியை வெளியிட்டது என்ன மாதிரியான தர்மம்? முன்பு நாளிதழ்/ பத்திரிக்கைகளில் ஒரு செய்தியை தவறாக போட்டால் மறுநாள்/வாரம் மன்னிப்பு கேட்பார்கள்.

ஆனால் அதைக்கூட செய்யாமல் கமுக்கமாக பழைய செய்திக்கே மாறிவிட்டார்கள். இவர்கள் செய்த தவறுக்கு ஒரே ஆதாரம் சோசியல் மீடியா ஆட்கள் எடுத்து வைத்திருக்கும் ஸ்க்ரீன் ஷாட்கள் மட்டுமே. செய்திகளை முந்தித்தருவதில் இப்படி ஒரு ஆர்வக்கோளாறா? சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பினால் மட்டும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்பவர்கள் இவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள்? தவறான தகவல் சொன்ன தமிழக செய்தி சேனல்கள் குறைந்தபட்சம் மன்னிப்பாவது கேட்டாக வேண்டும்.

இனி சமூக வலைத்தளங்களை விமர்சிக்கும் தார்மீக உரிமை உங்களுக்கு உள்ளதா என்பதை 100 முறை சுயபரிசீலனை செய்து கொள்ளுங்கள்.

மத்திய அரசு தங்கத்துக்கு கட்டுப்பாடு: சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு

தங்க நகைகள் வைத்திருப்பவர்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது. திருமணமான பெண் ஒருவர் 500 கிராமும், திருமணமாகாத பெண் 250 கிராமும், ஆண் ஒருவர் 100 கிராம் தங்க நகைகளை மட்டுமே வைத்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பரம்பரை நகைகளுக்கு வரி விதிக்கப்பட மாட்டாது என்றும் வருமான வரித்துறை சோதைனையில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக நகைகள் பறிமுதல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் அறிவிப்புக்கு சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திரை செயல்பாட்டாளர் மோ. அருணின் முகநூல் பதிவு இது:

“உண்மையில் மக்கள் வெகுண்டெழக்கூடிய நேரம் வந்துவிட்டது என்றே நினைக்கிறேன். எவ்வளவு பணம் எடுக்க வேண்டும் என்கிற நிலை மாறி இப்போது எவ்வளவு தங்கம் வைத்திருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அதன்படி ஆண்கள் 100 கிராமும், திருமணம் ஆகாத பெண்கள் 250, திருமணம் ஆன பெண்கள் 500 கிராம் தங்கம் வைத்துக்கொள்ளலாம் என்று அறிவித்திருக்கிறது. நடப்பது மக்களாட்சியா, அல்லது பாசிசவாதிகளின் சர்வாதிகாரமா, அங்கமாக பாஜக வின் அந்திமக்காலம் நெருங்கிவிட்டது என்றே நினைக்கிறேன். குடிமக்களை மதிக்க தெரியாத இந்த தேசத்தில் வாழ்வதையே பாவமாக நினைக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. இன்னமும் இரண்டரை வருடங்கள் என்னென்ன கூத்து நடக்கப்போகிறதோ?

ஆண்கள் எப்படி உடை அணிய வேண்டும், பெண்கள் எப்படி உடை அணியவேண்டும், என்ன சாப்பிட வேண்டும், எப்போது உறங்க வேண்டும், எப்போது கலவிக்கொள்ள வேணும் என்றெல்லாம் கூட அறிவிக்கைகள் வரும் என்றே நினைக்கிறேன்.

ஆனா என்கிட்டே பொட்டுத் தங்கம் கூட கிடையாது. எனவே தங்கம் இல்லாத ஆண்களுக்கு மத்திய அரசே 100 கிராம் தங்கத்தை கொடுக்குமா?” என்கிறார்.

எழுத்தாளர் சரவணன் சந்திரன்,  “மக்களின் அடிமடியில் கைவைத்துவிட்டார்கள் இனி இவர்கள் (பாஜக அரசு) பிழைப்பது கடினம்” என விமர்சித்திருக்கிறார். அவருடைய முகநூல் பதிவில்,

“நகை இந்திய மக்களின் கௌரவம். அவர்களின் அடியாழத்து ஆன்மா. குண்டுமணி தங்கத்தில் துவங்கி ஆளுயர தங்க மாலைகள் வரை இந்த அம்சம் பொருந்தும். தங்கம் இங்கு மங்கலத்தோடும் சம்பந்தப்பட்டிருக்கிறது. ஆக அடிமடியில் கைவைத்து வைட்டார்கள். இனி இவர்கள் பிழைக்க மாட்டார்கள்.” என்கிறார்.

ஆவணப்பட இயக்குநர் கருப்பு கருணாவின் பகடி இது: 

“திருமணமான பெண்கள் இத்தனை நாளுக்குள் கர்ப்பந்தரிக்க வேண்டும்.

திருமணமாகாத பெண்கள் இத்தனை நாளுக்குள் திருமணம் செய்தாக வேண்டும்.

ஆண்கள் இத்தனை நாளுக்குள் தங்களை ஆண் என்று நிரூபிக்க வேண்டும்.

# விரைவில் வரவிருக்கும் தேசபக்தி அறிவிப்புகளில் சில.”

 

“மனுசங்கடா நாங்க மனுசங்கடா”: இன்குலாபின் புகழ்பெற்ற பாடலை நினைவுகூரும் செயல்பாட்டாளர்கள்

மக்கள் கவிஞர் இன்குலாப் மறைவையொட்டி அவர் எழுதிய “மனுசங்கடா நாங்க மனுசங்கடா” பாடலை நினைவுகூர்ந்து இடதுசாரி செயல்பாட்டாளர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

சிபிஎம்எல்(விடுதலை) மாநில கமிட்டி உறுப்பினரும் பத்தியாளருமான சந்திரமோகன் தனது முகநூலில் எழுதிய அஞ்சலி:

பலநூறு முறை மக்கள் மத்தியில் நான் பாடிய அப் பாடலை நினைவு கூர்ந்து அஞ்சலி!

“மனுசங்கடா நாங்க மனுசங்கடா ”

“மனுசங்கடா நாங்க மனுசங்கடா
உன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு ஒசரமுள்ள
மனுசங்கடா நாங்க மனுசங்கடா !

எங்களோட மானம் என்ன தெருவில கிடக்கா — உங்க
இழுப்புக்கெல்லாம் பணியுறதே எங்களின் கணக்கா – அட
உங்களோட முதுகுக்கெல்லாம் இரும்புல தோலா
நாங்க ஊடு புகுந்தா உங்க மானம் கிழிஞ்சு போகாதா ?

உங்க தலைவன் பொறந்த நாளு போஸ்டர் ஒட்டவும்
உங்க ஊர்வலத்தில தர்ம அடிய வாங்கிக் கட்டவும் — அட
எங்க முதுகு நீங்க ஏறும் ஏணியாகவும் — நாங்க
இருந்தபடியே இருக்கணுமா காலம் பூராவும்?

கிணத்துத் தண்ணியும் சாதி எழவ எழுதிக் காட்டுமா?-

எங்க குழந்தைக்கெல்லாம் உங்க சாதி விவரம் எட்டுமா?

குளப்பாடி கிணத்துத் தண்ணி புள்ளய சுட்டது
தண்ணியும் தீயாய்ச் சுட்டது — இந்த
ஆண்டைகளின் சட்டம் எந்த மிராசைத் தொட்டது…?

சதையும் எலும்பும் நீங்க வச்சத் தீயில் வேகுது — உங்க

சர்க்காரும் கோர்ட்டும் அதுல எண்ணய ஊத்துது
எதைஎதையோ சலுகையின்னு அறிவிக்கிறீங்க — நாங்க
எரியும்போது எவன் மசுர புடுங்கப் போனீங்க?

— டேய்
மனுசங்கடா நாங்க மனுசங்கடா
உன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு ஒசரமுள்ள
மனுசங்கடா நாங்க மனுசங்கடா”

CPML( விடுதலை) செயல்பாட்டாளர் சி. மதிவாணன்:

கவிஞர் இன்குலாப் மறைந்தார். செவ்வஞ்சலி.

“உனது மலைகளை, உனது கடல்களை நேசிப்பதொன்றே தேசப்பற்றாகுமா?“

CPML-மக்கள் விடுதலை செயல்பாட்டாளர் அருண்சோரி:

தோழர் இன்குலாப்பிற்கு செவ்வணக்கம்.

புரட்சியின் மீது தீரா காதல் கொண்டு, சமூக மாற்றத்திற்கு மார்க்சிய-லெலினிய சித்தாந்தமே சரி என்று அதனை தன் வாழ்வியல் கோட்பாடாக ஏற்று, சமூக இழிவுகளின் மீது சாட்டை சொடுக்கி நெருப்பு கவிதைகள் பல தந்த தோழர் இன்குலாப் நம்மை விட்டு பிரிந்தார். தோழர் இன்குலாப்பிற்கு செவ்வணக்கம்.

சமூக செயல்பாட்டாளர் முத்துகிருஷ்ணன்:

மக்கள் பாவலர் கவிஞர் இன்குலாப் காலமானார், பொதுவுடமை-தலித் அரசியல் மேடைகளில் நள்ளிரவில் கேட்ட ”மனுசங்கடா” காதுகளில் ரீங்கரித்துக் கொண்டேயிருக்கிறது…. எம் வழிகாட்டிகளில் ஒருவர் விடைபெறுகிறார்…

எழுத்தாளர் ஸ்ரீபதி பத்மநாபா:

Red Salute Comrade Inquilab!

சென்று வருக மக்கள் கவியே!
கவிஞர் இன்குலாப்

நீளும் கைகளில் தோழமை தொடரும்
நீளாத கையிலும் நெஞ்சம் படரும்
எனக்கு வேண்டும் உலகம் ஓர் கடலாய்
உலகுக்கு வேண்டும் நானும் ஓர் துளியாய்!

ஊடகவியலாளர் செந்தில்குமார்:

மனுசங்கடா நாங்க மனுசங்கடா
உன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு ஒசரமுள்ள
மனுசங்கடா நாங்க மனுசங்கடா
எங்களோட மானம் என்ன தெருவில கிடக்கா — உங்க
இழுப்புக்கெல்லாம் பணியுறதே எங்களின் கணக்கா – அட
உங்களோட முதுகுக்கெல்லாம் இரும்புல தோலா
நாங்க ஊடு புகுந்தா உங்க மானம் கிழிஞ்சு போகாதா
உங்க தலைவன் பொறந்த நாளு போஸ்டர் ஒட்டவும்
உங்க ஊர்வலத்தில தர்ம அடிய வாங்கிக் கட்டவும் — அட
எங்க முதுகு நீங்க ஏறும் ஏணியாகவும் — நாங்க
இருந்தபடியே இருக்கணுமா காலம் பூராவும்
குளப்பாடி கிணத்துத் தண்ணி புள்ளய சுட்டது
தண்ணியும் தீயாய்ச் சுட்டது — இந்த
ஆண்டைகளின் சட்டம் எந்த மிராசைத் தொட்டது
சதையும் எலும்பும் நீங்க வச்சத் தீயில் வேகுது — உங்க
சர்க்காரும் கோர்ட்டும் அதுல எண்ணய ஊத்துது
எதைஎதையோ சலுகையின்னு அறிவிக்கிறீங்க — நாங்க
எரியும்போது எவன் மசுர புடுங்கப் போனீங்க — டேய்
மனுசங்கடா நாங்க மனுசங்கடா
உன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு ஒசரமுள்ள
மனுசங்கடா நாங்க மனுசங்கடா”……….

வீர வணக்கம் தோழர்

ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம்:

“நாங்க எரியும் போது
எவன் மசுர புடுங்க போனீங்க-டேய்

மனுசங்கடா நாங்க மனுசங்கடா”

எழுத்தாளர் பாரதி நாதன்:

அடிமை இருளைக் கிழிக்கப் புறப்பட்டவன் செல்லும் இடமெல்லாம் கிழக்கும் பின் தொடரும் என்று முழங்கிய தோழர் கவிஞர் இன்குலாப் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார். போய் வாருங்கள் புரட்சிக் கவியே… உங்கள் எழுத்துக்கள் எம்மை வழி நடத்தும். செவ்வணக்கம்.

மனநல மருத்துவர் அரவிந்தன் சிவக்குமார்:

மாவோ பற்றி கவிஞர்……

‘ எதிரிகளுக்காகப் போராடிச் சாவது
இறகு வீழ்வதுபோன்று இலேசான மரணம்.
மக்களுக்காகப் போராடி மடிவதோ
தை மலையின் தாக்கம் போன்றது’
என்று சொன்னவனும் நீயே.
……………

நிமிரவே தெரியாதவர்
நிலத்தின் அடிமைகள்
என்ற கற்பனை பூமியின் சாய
சேற்றையே நோக்கும் முகத்தை நிமிர்த்தினர்.

அழுக்கு படாத நீண்ட நகங்களுக்கு
உழவர் ரத்தத்தில் சாயம் பூசிய
பண்ணைப் பிரபுக்களின் மார்பிலும் முகத்திலும்
சேற்றுக் கால்களின் அழுத்தமான தடயங்கள்.

” பயங்கரம்
இது
பலாத்காரம்”

ஊளைகளுக்கிடையில்
தெளிவாய் ஒருகுரல்.

” உண்மைதான்
ஒருபுரட்சி.
புரட்சியென்பது மாலைவிருந்தல்ல….”

புரட்சி!
பசப்பத் தெரியாத
உழைக்கும் வர்க்கத்தின்
ரத்தப் பிரகடனம்

இந்த பலாத்காரத்துக்கு
ஆதாரக்குருதி
மனிதாபிமானம்.

கூர்மைப்பட்ட வாட்கள் முன்னால்
மயில்கள் பீலிகள்,
மல்லிகை பூக்களா
தோட்டாக்கள் உடைக்கும்?

கவிஞர் மாலதி மைத்ரி:

தமிழ் இலக்கிய நெடும் பரப்பில் ஒரு அவ்வை ஒரு இன்குலாப் போன்ற விலைபோகாத எதிர் குரல்கள் அரிது. அதிகாரத்துக்கு அடிபணியாத கவிக்குரலை தமிழுலகம் இழந்தது. “மனுசங்கடா நாங்க மனுசங்கடா” என நம் மொழி வாழும்வரை முழங்குவோம் கவியே.செவ்வணக்கம் தோழரே.

சமூக செயல்பாட்டாளர் கி. நடராசன்:

நக்சல்பாரி இயக்கத்தின், தமிழ்தேசியத்தின், ஈழ விடுதலையின் மாபெரும் கலைஞன் இன்குலாப். அவர்களின் விரிந்த சோசலிச பார்வையுடன் அவருடைய நினைவை போற்றுவோம்.. சிறு தீப்பொறி அல்ல .. மானுட விடுதலையின் பெரும் காட்டாறு.

பத்திரிகையாளர் சுகுணா திவாகர்:

’மனுசங்கடா’ என்பதை மனிதர்களுக்கு உணர்த்திய மகத்தான கவிஞர் இன்குலாபுக்கு அஞ்சலிகள்!

திரைப்பட ஆய்வாளர் வெங்கடேஷ் சக்ரவர்த்தி:

தோழர் இன்குலாப் மறைந்துவிட்டதாக அதிர்ச்சி அளிக்கும் செய்தி வந்திருக்கிறது. புரட்சி உணர்வு மங்காத கவிஞர். அருமையான மனிதர். அவருக்கு என்னுடைய அஞ்சலி.

திரை செயல்பாட்டாளர் மோ. அருண்:

புரட்சியையே புனைபெயராக கொண்ட மக்கள் கவிஞனுக்கு மகத்தான அஞ்சலி செலுத்த வேண்டியது ஒவ்வொருவரின் கடமை.

சமயம் கடந்து மானுடம் கூடும்
சுவரில்லாத சமவெளி தோறும்
குறிகளில்லாத முகங்களில் விழிப்பேன்
மனிதம் என்றொரு பாடலை இசைப்பேன்!
-இன்குலாப்

தொழிலாளர் செயல்பாட்டாளர் ஹூண்டாய் ராஜவேலு:

#மக்கள்_பாவலர்_இன்குலாப்_மறைந்தார்
#செவ்வணக்கம்

ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்
பறவைகளோடு எல்லை கடப்பேன்
பெயர் தெரியாத கல்லையும் மண்ணையும்
எனக்குத் தெரிந்த சொல்லால் விளிப்பேன்
ஒவ்வொரு புல்லையும்…

நீளும் கைகளில் தோழமை தொடரும்
நீளாத கையிலும் நெஞ்சம் படரும்
எனக்கு வேண்டும் உலகம் ஓர் கடலாய்
உலகுக்கு வேண்டும் நானும் ஓர் துளியாய்
ஒவ்வொரு புல்லையும்…

கூவும் குயிலும் கரையும் காகமும்
விரியும் எனது கிளைகளில் அடையும்
போதியின் நிழலும் சிலுவையும் பிறையும்
பொங்கும் சமத்துவப் புனலில் கரையும்!
ஒவ்வொரு புல்லையும்…

எந்த மூலையில் விசும்பல் என்றாலும்
என் செவிகளிலே எதிரொலி கேட்கும்
கூண்டில் மோதும் சிறகுகளோடு
எனது சிறகிலும் குருதியின் கோடு!
ஒவ்வொரு புல்லையும்…

சமயம் கடந்து மானுடம் கூடும்
சுவரில்லாத சமவெளி தோறும்
குறிகளில்லாத முகங்களில் விழிப்பேன்
மனிதம் என்றொரு பாடலை இசைப்பேன்!
ஒவ்வொரு புல்லையும்…

– மக்கள் பாவலர் இன்குலாப்

எழுத்தாளர் யமுனா ராஜேந்திரன்:

“ தாஹிரா, என் தாஹிரா, உன் தாளங்களால் என்னை ஈடேற்று..”

“ நொடிகளின் இடைவெளியில் வாழ்வதென்றாலும் விடுதலை மின்னலாய் மின்னுவதன்றி அடிமைச் சாசனத்திற்கு அடிபணியமாட்டோம் “

குழந்தையின் இதயமும் தணலின் மொழியும் கொண்ட உன்னத மனிதனே, உங்களது பிரியம் குழைத்த தமிழை கண்ணீருடன் நினவுகூர்கிறேன்..

எழுத்தாளர் சல்மா:

நிஜமான மக்கள் கவிஞன் மறைந்தான் இன்குலாப் ஜிந்தாபாத்

மோடி விமர்சன பதிவுகள்: தமுஎகச மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் எஸ்.கருணாவின் முகநூல் முடக்கம்

தமுஎகச மாநிலத் துணைப் பொதுச் செயலாளரரும் ஆவணப்பட இயக்குநருமான எஸ்.கருணாவின் முகநூல் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி கருப்புப் பண நடவடிக்கையான செலாவணி நீக்கம் எத்தகைய பாதிப்பை மக்களுக்கு ஏற்படுத்தியது என தனது பதிவுகளில் விமர்சனம் செய்து வந்தார் கருணா. இறுதியாக சேலத்தில் பாஜக பிரமுகரிடம் கைப்பற்ற ரூ. 20 லட்சம் குறித்த செய்தியை பகிர்ந்திருந்தார். கருணாவை கிட்டத்தட்ட12 ஆயிரத்து ஐநூறு பேர் பிந்தொடர்கிறார்கள்.

 

இதுகுறித்துவழக்கறிஞர் பிரதாபன் ஜெயராமன் பதிவு செய்துள்ள கருத்து:

தோழர் கருப்பு கருணா அவர்களின் முகநூல் பக்கத்தை முடக்கிய கயவர்களை கண்டிக்கிறோம். பதில் சொல்ல திறன் இல்லாமல், கருத்தை முடக்கும் இந்த செயல் கேவலமானது.

பதிவிடவும்,கருத்திடவும்,லைக் போடவும்,எவ்வித வினையாற்றவும் தடை விதிக்கப்பட்டிருக்கு…இது கருத்துரிமைக்கு எதிரானது

#lift_ban #கருப்புகருணா

முகநூலில் பலரும் தடை நீக்கக்கோரி கோரிக்கை விடுத்துள்ளனர்.

மன்மோகன் சிங்கின் நாடாளுமன்ற உரை: சமூக ஊடக மக்கள் என்ன சொல்கிறார்கள்?

முன்னாள் பிரதமரும் பொருளாதார நிபுணருமான டாக்டர் மன்மோகன் சிங், மோடி அரசின் கருப்புப் பண அழிப்பு நடவடிக்கை குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை நாடாளுமன்றத்தில் முன்வைத்தார். இது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது. சமூக ஊடகங்களில் மக்கள் தெரிவித்த சில கருத்துகளின் தொகுப்பு இங்கே…

Rajarajan RJ: வருங்காலம் அவரை கனிவுடன் பார்க்கும் என்றார். நிகழ்காலமே அவரை கனிவுடனும் மரியாதையுடனும் பார்க்கிறது
#ManmohanSingh

Senthil Kumar: நீங்க இந்த மாதிரி நல்லா கேள்வி கேட்கிறவருன்னு நாலு வருஷத்துக்கு முன்னாடி தெரிஞ்சிருந்தா இந்த நன்னாரி பயலுக கிட்ட நாங்க மாட்டி இருக்க மாட்டோம்.

Kani Oviya: மோடி செய்த ஒரே ஒரு சாதனை மன்மோகன்சிங்கை பேச வைத்தது தான்…

பாவெல் சக்தி: “இந்த நீண்ட பயணத்தில் நாம் இறந்து போவோம்”
இன்று #மன்மோகன்சிங் பேசியதில் என்னை மிகவும் கவர்ந்த மேற்கோள்..

Rabeek Raja: ஆளும் மக்கள் விரோத பாஜக அரசை விமரிசிக்காமல்,மோடியை விமரிசனம், மட்டமான வார்த்தைகளால் வசை என்று வரிசைகட்டியதன் விளைவு,மன்மோகன் சிங் மீட்பராக வந்துவிட்டார். மோடியோ, மன்மோகன் சிங்கோ இங்கு பிரச்சனை இல்லை.நிலவுகிற இந்திய அரசு முறைமை தான் பிரச்சனை. தேவை அரசியல் மாற்றில்லை; மாற்றரசியல்.

Arivazhagan Kaivalyam: பாரதீய ஜனதாக் கட்சி ஒரு நவீனப் பார்ப்பனீயக் கட்சி என்றால், காங்கிரஸ் ஒரு ஆர்தடாக்ஸ் பார்ப்பனீயக் கட்சி, மோடிக்கள் ஒளிவு மறைவின்றி உழைக்கும் எளிய மக்களைக் கொல்வார்கள் என்றால் காங்கிரஸ் கனவான்கள் மறைமுகமாக அதையே தான் செய்தார்கள், காவிகள் சிங்களவனை நேரடியாக எங்கள் மூதாதையர் என்று சொல்லி அணைத்துக் கொள்வார்கள், கதராடைக் கண்ணியவான்கள் எதிர்ப்போம், எதிர்ப்போம் என்று சொல்லிக் கொண்டே திரைமறைவில் ஆயுதம் வழங்கி எம்மை அழித்தார்கள். இன்றைக்கு நாடாளுமன்றத்திலே எளிய மக்களுக்காகக் குரல் கொடுத்திருக்கிறார் முன்னாள் பிரதமர் மன்மோகன், வரவேற்போம், மகிழ்ச்சி.

அதற்காகக் காங்கிரஸ் கட்சி எளிய மக்களுக்காக உழைத்து ஓடாய்த் தேய்ந்து போன கட்சி என்றோ, இந்தக் காவி பயங்கரவாதிகளை அரியணை ஏற்றியதில் காங்கிரஸ் கட்சிக்குப் பங்கில்லை என்றோ ஒப்புக் கொள்ள முடியாது, என்னைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சியில் இன்றைக்கும் கோலோச்சும் பார்ப்பனீயச் சிந்தனை கொண்ட லாபியின் செயலாக்கத் தோல்வியில் தான் பாரதீய ஜனதாவின் காவி அரசியல் கனவுகள் நனவாக்கப்பட்டது. அங்கிருந்து நேரடியாக வர்ணக் கோட்பாடுகளை உயிர்ப்பிக்க இயலாதவர்களால் தான் பாரதீய ஜனதாவின் அரசியல் செயல்திட்டங்கள் முழுமையாக்கப்பட்டன.

சிக்கல் உண்மையில் கட்சிகளின் பெயரிலோ, செயல்திட்டங்களிலோ இல்லை, அது உண்மையில் உறைவிடம் கொண்டிருப்பது இந்த தேசத்தின் உயர் பதவிகளிலும், அதிகார மையங்களிலும் அமர்ந்திருக்கும் பார்ப்பனீய, பனியாக் கூட்டத்தின் உழைப்புச் சுரண்டலிலும், இயற்கை வளச் சுரண்டலிலும் இருக்கிறது. இந்திய மக்களின் வரிப்பணத்தில் உண்டு கொழுத்த ஆங்கிலேயனுக்கு அடிமைச் சேவகம் புரிந்த அதே கூட்டத்தின் அடுத்த தலைமுறைதான் இங்கு கட்சிகளும், ஆட்சியும், அதிகாரமும்.

காவிகளோ, கதரோ இங்கிருக்கும் உழைக்கும் எளிய மக்களின் துயரங்களைக் கண்டு பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை என்பதற்கான ஏராளமான சான்றுகளில், நிகழ்வுகளில் இந்த பணத்தை இல்லாதொழித்த முடிவால் நிகழ்கிற எல்லாத் துயரமும் அடங்கும், இது காவிகளின் முட்டாள்தனமான திட்டமிடப்படாத முடிவு என்று சொல்லி முழுப் பூசணிக் காயை சோற்றில் மறைக்கும் தேசபக்தர்கள், காவிகள் செய்த திட்டமிட்ட குற்றங்களில் இருந்து அவர்களைத் தப்பிக்க வைக்க முயற்சி செய்கிறார்கள்.

மன்மோகன் சிங் இன்றைய அவரது பேச்சால் மட்டும் புனிதராகி விட மாட்டார், தன்னால் தடுத்து நிறுத்த முடியும் என்கிற உயர் நிலையில் இருந்தபோதும் பல்லாயிரம் மனித உயிர்கள் கொன்றழிக்கப்பட்டபோது கண்ணை மூடிக் கொண்டு உலகம் இருண்டு கிடக்கிறது என்று சொன்னவர் தான் இதே மன்மோகன் சிங், வெளியுறவுக் கொள்கை என்கிற முகமூடியைப் போட்டுக் கொண்டு அன்றைக்கு எமது மக்களின் குருதியை உறிஞ்சிக் குடித்த ஒரு கொலையாளியின் கூட்டாளியை ஒருபோதும் எளிய மக்களின் தலைவன், அவர்களுக்காகக் குரல் கொடுத்த மகான் என்று சொல்வதற்கு ஏனோ நாக்கூசுகிறது.

விவசாயத்தை விட்டு வெளியேறுங்கள் என்று விவசாயிகளால் உருவாக்கப்பட்ட இந்த நாட்டின் மக்களை நோக்கிச் சொன்ன மன்மோகன் சிங்கின் முதலாளித்துவ முட்டுக் கொடுத்தலை அவரது இன்றைய “திட்டமிடப்பட்ட கொள்ளை, சட்டப்படியான குற்றம்” போன்ற சொற்களால் வீழ்த்தி விட முடியாது.

# # காங்கிரஸ் ஆட்சியில் விதைக்கப்பட்ட பொருளாதார விதைகளைத் தான் இப்போது மோடி உரமேற்றிக் கொண்டிருக்கிறார், மன்மோகன் மரத்தில் பழுக்கவைத்திருப்பார், மோடி மூட்டம் போட்டு நாளையே பழுக்க வைக்க முயற்சி செய்து பார்த்திருக்கிறார், மற்றபடி மோடிக்கும், மன்மோகனுக்கும் தலைப்பாகை மட்டும்தான் வேறுபாடு # #

Vaa Manikandan: நம் நாட்டில் மட்டும் ஒரே ஒரு பேச்சில் ஹீரோ ஆகிவிடலாம். மோடி ஆனார். பிறகு கன்னையா குமார் ஆனார். இப்பொழுது மன்மோகன் சிங்கையும் ஆக்கிவிட்டார்கள். எமோஷனலைக் குறைக்கவே மாட்டோம் போலிருக்கு 🙂

Yamuna Rajendran: மன்மோகன் சிங்கின் உரையை இரு விதங்களில் பார்க்க வேண்டும் என நினைக்கிறேன். மோடியின பொருளாதாரக் கொள்கைகளின் ஆதாரபுருஷனாக அவரைப் பார்ப்பது ஒன்று. மோடியின் கள்ளப் பணக் கொள்கையின் உடனடி மனித அவலத்தையும் அதற்கு அவர்கள் கொடுத்த உயிர்விலை எனும் உணர்ச்சிகரமான பிரச்சினைகளையும் பார்ப்பது பிறிதொன்று. மன்மாகன் சிங் மோடியின் கொள்கைகளின் நடைமுறையாக்கத்தில் இருக்கிற மனித அவலத்தைத் துல்லியமான சொற்களில் விவரித்திருக்கிறார். இந்தப் பிரச்சினையில் மோடியின் மனம் உறைந்த வன்மனம். மன்மோகன் சிங்கிடம் இன்னும் கொஞ்சம் ஈரம் இருக்கிறது. இன்றைய நிலைமையில் அதனை ஒப்புவதில் என்ன பிழை இருக்க முடியும்?

பன்றிக்குட்டியுடன் ஏடிஎம் வரிசையில் நின்ற நடிகர்!

ரூபாய் நோட்டு விவகாரத்தால் மக்கள் வங்கிகள், ஏடிஎம் மையங்களை நோக்கி படையெடுத்து வரும் நிலையில், தெலுங்கு நடிகர் ரவி பாபு ஏடிஎம் வரிசையில் பன்றிக்குட்டியுடன் நின்றது சமூக ஊடகங்களில் வைரல் செய்தியாகியுள்ளது. அரசு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இப்படி நடந்துகொண்டாரா என ஊடகங்கள் பரபரவென கேட்க, ரவி பாபு அளித்த விளக்கம் என்ன தெரியுமா?

‘பன்றிக்குட்டி ’அதிகோ’ எனும் படத்தில் என்னுடன் நடிக்கிறது. பன்றிக்குட்டியுடன் படப்பிடிப்புக்குச் சென்று கொண்டிருந்தபோது, காருக்கு பெட்ரோல் நிரப்ப பணம் இல்லாததால் ஏடிஎம்பில் பணம் எடுக்க வரிசையில் நின்றேன். கூடவே பன்றிக்குட்டியையும் வைத்துக்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது’ என்கிறார்.

வங்கியில் பணத்தை மாற்ற வரிசையில் நின்றவர்கள் கம்பு ஒடிய அடித்து விரட்டிய போலீஸ்

வங்கியில் பணத்தை மாற்ற வரிசையில் நின்றவர்களை காவலர் ஒருவர் கம்பு ஒடிய அடித்து விரட்டிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோ ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா கிளை ஒன்றில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எந்த மாநிலம் என்பது தெரியவில்லை.

பணம் மாற்ற வந்த எளியவர்களை காரணமே இல்லாமல் தாக்கும் அதிகாரத்தை காவலருக்கு யார் கொடுத்தது எனவும் இதுதான் மோடி அரசு சாமானியர்களுக்கு தரும் பரிசா எனவும் சமூக ஊடகங்களில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

 

SBI ரூ. 7000 கோடி வாராக் கடன் தள்ளுபடி: சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு

பொதுத் துறை வங்கியான எஸ் பி ஐ 63 தொழிலதிபர்களின் வாராக் கடனை தள்ளுபடி செய்ய உத்தேசித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மக்கள் நூறு ரூபாய்க்கு அலைந்துகொண்டிருக்கும் நிலையில் ரூ. 7000 கோடி வாராக் கடன் தள்ளுபடி அறிவிக்கலாமா என சமூக ஊடகங்களில் மக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. சில பதிவுகள் இங்கே…

எழுத்தாளர் மாலதி மைத்ரி தன்னுடைய முகநூலில் எழுதியுள்ள பதிவு:

SBI தலைவர் ஏழை மல்லையாவின் வாராக்கடன் 1201 கோடி உட்பட 63 கோடிஸ்வர ஏழைகளின் 7,016 கோடியைத் தள்ளுபடி செய்திருக்கிறார்.

சிறு வணிக, விவசாய, தொழிலாளர் சங்கங்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை ஏன் அறிவிக்கக் கூடாது.

வங்கி கணக்கை மூடும் போராட்டம் தொடங்குவோம் மக்களே. மக்களிடம் பிடுங்கி மாபியாவுக்கு கொடுக்கும் பகல் கொள்ளையை அனுமதியோம். புதுவையிலுள்ள என் SBI கணக்கை மூடப் போகிறேன்.”

வாசுகி பாஸ்கர்:

விஜய் மல்லையா உட்பட 7 016 கோடியை SBI writes off என செய்தி வருகிறது, writes off என்றால் தள்ளுபடி இல்லை, ஆனால் negotiation இருக்கும், செலுத்துதப்பட வேண்டிய தொகையை தவணைகளில், குறைத்து செலுத்துவதற்கான வசதிகள் இதில் உண்டு!

நாடு நல்லா இருக்க முப்பது பேர் சாக மாட்டிங்களா, வரிசையில் நிக்க மாட்டாங்களா என கேள்வி கேக்குற கூமுட்டைங்க எல்லாம், மல்லையா வீட்டுக்கு ஆளை அனுப்பி, உளவியல் ரீதியா சாக அடிச்சி, அசிங்க படுத்தி, மல்லையா தூக்கு மாட்டி சாகுற அளவு எல்லாம் கொண்டு போக மாட்டாங்க, கொடுக்கிறதை கொடுங்கன்னு கேஸை முடிப்பாங்க!

சாகுறதுக்கு நாம தான்! ரெண்டு due கட்டாம விட்டு பாருங்க, கலெக்ஷன் மேனேஜர் நாக்கை புடுங்குற மாதிரி கேப்பான்!

ஆனா நம்புங்க, இது எல்லாமே நம்ம நல்லா இருக்கிறதுக்கு!

Stay Calm and stay, Modi is Awesome!

Natarajan: 

பொதுத்துறை வங்கிகள் வாராக்கடன் கணக்குகளை முடிக்க இரண்டு வழிகள் வைத்திருக்கின்றன.

  1. ரிலையன்ஸ் நிறுவனத்துக்குக் கடனைப் பாதிக்கு விற்று, கடன் வாங்கியவர்களிடம் கெடுபிடியாக அவர்களை வசூலிக்கச் செய்வது. இது ஏழை மாணவர்கள் கடன் கணக்கை முடிக்கும் வழி.

  2. வாராக்கடன் ஆயிரமாயிரம் கோடிகளாக இருந்தாலும் தள்ளுபடி செய்வது. இது மல்லையாக்களுக்கான கடன் கணக்கை முடிக்கும் வழி.

வாழ்க பாரதம்!

 

‘விரைவில் ஏடிஎம்களுக்கு பிரதமர் மோடி தலைமையில் அஞ்சலி’!

கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக ரூ.500. ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த 8ம் தேதி அறிவித்தார். தங்களிடம் உள்ள செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் வங்கிகளை நாடி வருகின்றனர். ஏடிஎம்களில் பணம் எடுப்பதும் கடினமாக உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலை நிலையில், கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில், ஏ.டி.எம் இயந்திரங்களில் பணம் இல்லாததால் கோபமான மக்கள் அங்குள்ள ஏடிஎம் இயந்திரம் ஒன்றிற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

மலர் வளையத்தோடு,“தனது காலத்திற்கு முன்னரே எங்களை விட்டுச்சென்ற ஏடிஎம் இயந்திரத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்; இறுதி அஞ்சலி, ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி நாடு திரும்பியவுடன் நடக்கும்” என்று எழுதியுள்ளனர். இது படமாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வைரலாக பரவி வருகிறது.

சூரத் தொழிலதிபர் ரூ. 6000 கோடி ஒப்படைத்த செய்தி பொய்!

குஜராத் மாநிலம், சூரத் நகரைச் சேர்ந்தவர் லால்ஜிபாய் படேல். வைர வியாபாரியான இவர், அமெரிக்க அதிபர் ஒபாமாவுடனான சந்திப்பில் பிரதமர் மோடி அணிந்திருந்த சூட்டை பரிசளித்தவர். ஒவ்வொரு தீபாவளியின் போதும் தனது ஊழியர்களுக்கு விலையுயர்ந்த பரிசுகளை அளித்து செய்தியில் இடம்பெறுபவர்.

இந்நிலையில் பிரதமரின் ரூபாய் நோட்டுக்களைத் திரும்பப் பெறும் அறிவிப்பின் பின்னணியில் தன்னிடமிருந்த கணக்கில் வராத ரூ.6 ஆயிரம் கோடியை அரசிடம் ஒப்படைத்ததாக சமூக ஊடகங்களில் வைரலாக செய்தி பரவியது. இதை ஊடகங்களும் செய்தியாக்கின. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை என லால்ஜிபாய் விளக்கம் அளித்திருக்கிறார்.

வெளுக்குது 2000 ரூபா நோட்டு!: வீடியோ வெளியிட்ட திவ்யா ஸ்பந்தனா

ரூ. 500, 1000 ரூபாய்களை தடை செய்துவிட்டு புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளது ரிசர்வ் வங்கி. இதில் தற்போது 2000 ரூபாய் நோட்டுகள் பரவலாக கிடைக்க ஆரம்பித்துள்ளது. முன்னதாக இந்த ரூபாய் நோட்டில் பல பாதுகாப்பு அம்சங்கள் உள்ளதாக சமூக ஊடகங்களில் பல புனைவுகள் வெளியாகின. அதையெல்லாம் மறுத்தது ரிசர்வ் வங்கி. இந்நிலையில் 2000 ரூபாய் நோட்டின் வெளிர் சிவப்பு நிற வெளுப்பதாக நிரூபித்து பதிவொன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இட்டிருக்கிறார் நடிகரும் காங்கிரஸ்காரருமான திவ்யா ஸ்பந்தனா.

வீடியோ ஒன்றை வெளியிட்டு, அவர் எழுதிய ட்விட்…

 

ரூபாய் நோட்டு அதிருப்தி: ஒரே நாளில் 3 லட்சத்துக்கு அதிகமானோர் மோடியை அன்ஃபாலோ செய்தனர்

நாடு முழுவதிலும் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி கடந்த 8-ஆம் தேதி திடீர் அறிவிப்பு வெளியிட்டார். பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பிற்கு கருப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கை என பலர் வரவேற்பு தெரிவித்திருந்தனர். அதேசமயம் கடுமையான விமர்சனங்களும் எழுந்தன. ஆனால் நடுத்தர வர்க்க மக்கள் மகிழ்ந்ததாக செய்திகள் வெளியாயின. இந்நிலையில் இந்த அறிவிப்பால் அதிருப்தி அடைந்த 3 லட்சத்துக்கு அதிகமானோர் ட்விட்டர் பக்கத்தில் மோடியை அன்ஃபாலோ செய்துள்ளனர். 2 கோடிக்கும் அதிகமானோர் மோடியை பிந்தொடர்ந்தாலும் ஒரே நாளில் 3 லட்சத்து 18 ஆயிரம் பேர் பின்வாங்கியது மோடி அரசின் முடிவுக்குக் கிடைத்த பின்னடைவாகவே கருதலாம்.

மநகூ தோற்றதற்கு கூடுதல் காரணம் வைகோ தேர்தல் போட்டியிலிருந்து பின்வாங்கியதே: பேரா. அருணன்

மக்கள் நலக் கூட்டணி தோற்றதற்கு கூடுதல் காரணம் வைகோ தேர்தல் போட்டியிலிருந்து பின்வாங்கியதே என பேராசிரியர் அருணன் கருத்திட்டுள்ளார். இதுகுறித்து தனது முகநூல் பதிவில்,

“மக்கள் நலக் கூட்டணி தோற்றதற்கு முக்கிய காரணம் அதிமுகவும் திமுகவும் அவிழ்த்து விட்ட பணபலமும் ஊடக பலமும். கூடுதல் காரணம் எது என்றால் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ அவர்கள் கடைசி நேரத்தில் போட்டியிலிருந்து விலகியது. அதுவும் கூட்டணியின் இதர கட்சி தலைவர்களை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக அந்த முடிவை எடுத்தது. போட்டியிடுமாறு தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தும் அவர் மறுத்தது. இது வாக்காளர்கள் மத்தியில் கூட்டணி பற்றிய அவநம்பிக்கையை உருவாக்கியது. அதிமுக ஆட்சி மீது மக்களுக்கிருந்த அதிருப்தியின் பலனை திமுக தேர்தலில் அறுவடை செய்து கொண்டது. அதிமுக-திமுக இருதுருவ அரசியலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனும் நல்ல நோக்கம் தோல்விகண்டு இன்னும் கறாரான இருதுருவ அரசியலாய் வந்து நின்றது. இந்த உண்மையை ஏற்காமல் வேறு ஏதேதோ காரணங்களை வைகோ அவர்கள் முன்வைப்பது நியாயமான அரசியல் ஆய்வு அல்ல” என தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு எதிர்வினையாக வந்துள்ள சில கருத்துகள்…

உத்திர குமாரன்: மாற்று அணிக்கு இடதுசாரிகள் தலைமைப்பொறுப்பு ஏற்காதவரை இப்படித்தான் ஆகும்.

செல்வின் பிச்சைக்கனி: தேமுதிக மற்றும் தமாக வை சேர்த்ததும் காரணங்கள். கூட்டணியில் இருந்த மிகத்திறமையான ஆளுமையான தலைவரை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்காததும் தவறு.

அண்ணாமலை: அதுதான் சிறப்பான உண்மை.அது மட்டும் அல்ல.அவரின் வரம்புக்கு உட்படாத எல்லை மீறிய தேர்தல் பிரச்சாரமும் சேர்ந்துதான் பாதிப்பை ஏற்படுத்தியது.

ராஜமணி: வைகோவின் ஆளுமையை ஒடுக்கிவிட வேண்டும் என்று விரும்பும் சக்திகள் தற்போது வேகமாக இயங்குகின்றன. அடிப்படை நோக்கம் கடந்த 15 மாதகாலமாகவே மக்கள்நலக்கூட்டணி எனும் மாற்று அரசியலை விரும்பாத பல சுயநல சக்திகள், பணபலம், ஊடகபலம், அவதூறு பிரச்சாரம் போன்றவைகளை கையிலெடுத்து இயங்கி வருகின்றன. குறிப்பாக ஆரம்பத்திலிருந்தே வைகோ வின் மீதான தனிப்பட்ட தாக்குதலை அந்த சக்திகள் கையாளுவதை மதிமுக தவிர மற்றவர்கள் கண்டு கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

நடன சுந்தரம்: ஜெயலலிதாவிற்கு தெரிந்திருக்கிறது கம்யூனிஸ்ட்களை எங்கு வைக்க வேண்டும் என்று..வைகோ அவர்களுக்கு தெரியவில்லை.. எல்லோரையும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடினால் இப்படி தான்.. இனியேனும் வைகோ அவர்கள் கட்சியின் பக்கம் கவனத்தை திருப்ப வேண்டும்.

நாகூர் மீரான்: மநகூ வீழ்ச்சியடைய முதல் காரணமே விஜயகாந்த் உடனான கூட்டணி தான்.. இல்லையென்றால் குறைந்தபட்சம் திருமா ஒருவராச்சும் வென்று இருப்பார்.

விஜயகாந்தை ஒரு காமெடியா பார்த்து ரசிச்சங்களே தவிர அவரை பொறுப்பில் வைத்து பார்க்க மக்கள் விரும்பவில்லை .. அதனால் அவரையும் அவரை சார்ந்தவர்களையும் மக்கள் புறக்கணித்து திமுக பக்கம் கணிசமாக சென்று விட்டனர்

விஜயகாந்தை உள்ளே கொண்டுவந்ததுமே மநகூ பற்றிய பிம்பம் பரவலாக போய்விட்டது .. அதன்பின் வைகோ செய்த செயல்கள் .. வைகோவை எல்லாம் யாரும் ஆரம்பத்துல இருந்தே நம்பல ..அதனால அவர் செய்தது எல்லாம் ஒரு காரணமாகவும் எடுத்துக்கொள்ள இல்லை என்பதே நிதர்சனம்.

வைகோவை விரட்டிவிட்டுட்டு இரண்டு கம்யூனிஸ்ட் , விசிக மட்டுமே இருந்திருந்தாலும் இந்நேரம் கூடுதல் வாக்குகள் அதனால் வந்திருக்கும் என்பது மறுக்க இயலாது.

செய்யது அலி மு: மக்கள் நலக்கூட்டனி தோற்றதற்கு வைகோ தான் முக்கிய காரணம் அடுத்தது அதிமுக திமுகவின் பணமும் விஜயகாந்தின் மேடைப்பேச்சும் சரியா இல்லாததும் தான் வைகோவின் செயல்பாடுகள் எல்லாமே அதிமுகவிற்கு சாதகமானதாக தோன்றியதும் காரணம்.

மலிவு விலை மாடல்!

ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ விளம்பரத்தில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை அனுமதியில்லாமல் பயன்படுத்தியதாக மத்திய அரசு கூறியது.  பிரதமரின் படத்தை விளம்பரத்துக்கு பயன்படுத்தியதற்காக ரிலையன்ஸுக்கு அபராதம் விதிக்கப்பட  இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதன் படி, முத்திரைகள் மற்றும் பெயர்கள் (முறையற்ற பயன்பாடு தவிர்ப்பு) 1950 சட்டத்தின் கீழ் வரும் பிரிவின் 3-ன் படி, ரிலையன்ஸ் நிறுவனம் பிரதமர் மோடியின் புகைப்படத்தை விளம்பரத்துக்குப் பயன்படுத்தியதற்காக சுமார் 500 ரூபாய் வசூலிக்கப்படலாம் என்கிறது மத்திய அரசு.

இந்த முடிவு குறித்து சமூக ஊடகங்களில் கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்டது.

 

“லிவிங் டுகெதரெல்லாம் நம்ம நாட்டுக்கு செட்டாகாது”: கௌதமி-கமல் பிரிவு குறித்து விவாதம்

“13 ஆண்டுகால வாழ்க்கைப் பிறகு நானும் திரு. கமல்ஹாசனும் பிரிகிறோம்” என நடிகர் கௌதமி தன்னுடைய வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார். இது சமூக ஊடகங்களில் விவாதிக்கப்படும் பொருளாகியுள்ளது.

சமூக ஊடக மக்கள் பகிர்ந்துகொண்ட சில முக்கியமான கருத்துகள், விவாதங்கள் இங்கே:

“13 வருடங்கள் லிவிங் டுகதரில் வாழ்ந்தது உன்மையில் இந்திய சூழலில் ஒரு சாதனைதான்.

அதைவிட, நான் பிரிகிறேன் என்று ரொம்ப மெஜஸ்டிக்கா சொல்ற கவுதமியின் பேராண்மை (இது சரியான வார்த்தை சொல்லவும்)பாராட்டுக்குரியது. இந்த பிரிவினால் ஏற்படும் வலியைத் தாங்கும் பக்குவம் உங்களுக்கு இருக்கும் கவுதமி. ஐ லவ் யுவர் மெஜஸ்டிக்னெஸ் கவுதமி!”  எழுத்தாளரும் ஊடகவியலாளருமான நாச்சியாள் சுகந்தி சொன்ன கருத்து.

“இந்திய குடும்ப அமைப்புகளில் இது போன்று லிவிங் டூ கெதர் செட்டப் செட்டாகுது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்..

என்னதான் படித்தவர்களாக இருந்தாலும், பணக்காரர்களாக இருந்தாலும் தான் ஆடாவிட்டாலும் தன் சதையாடும் என்பதை போல பெற்ற பிள்ளைகள் போல் வந்து சேர்ந்த பிள்ளைகளையோ, போகும் இடத்தில் இருக்கும் பிள்ளைகளையோ பார்த்துக் கொள்ள முடியாது. அவர்களிடத்தில் முழுமையான நட்பையும், அன்பையும் எதிர்பார்க்கவும் முடியாது..!

என்றாவது ஒரு நாள் ஒரு வார்த்தை.. ஒரு சொல்.. ஒரு பேச்சு போதும்.. எல்லாத்தையும் மூட்டை கட்ட..! கட்டியாகிவிட்டது..!” என்ற ஊடகவியாளர் சரவணன் சவடமுத்துவின் நிலைத்தகவலுக்கு ஆர். பிரபாகர் இட்ட கருத்து..

இதற்கு முன்பு கமல் தாலி கட்டிதான் கல்யாணம் செய்திருந்தார். அது மட்டும் செட்டாயிற்றா? காதலோ லிவிங் டுகதரோ கல்யாணமோ இதில் விசயமில்லை. இனி ஆணும் பெண்ணும் என்றென்றைக்குமாக சேர்ந்து வாழ்வதற்கான வாய்ப்புகள் குறைந்து கொண்டே இருக்கிறது.. இனி இப்படி நிறைய நடக்கும்.”

கௌதமி-கமலுக்கு வாழ்த்து சொல்கிறார் சாம் நாதன்:

“விதிகளுக்கு அப்பாற்பட்டு சேர்ந்து வாழ்தல் என்பதற்கு சாட்சியாக இருந்தவர்கள் நீங்கள். தசைகள் சுருங்கும் காலத்தில் நிபந்தனையற்ற அன்போடு கூடிக் கலப்பது வரம். உங்களுக்கு அமைந்தது. அன்பு குறையும்போது சரி செய்வதற்கான வழிகளைத் தேடலாம். அன்பேயில்லாத பாசாங்கில் ஒரு நிமிடம் கூடத் தங்கக் கூடாது. கவர்மெண்ட் ஊழியன்போல வேலையும் காலந்தள்ள ஒரு பெண்ணும் போதும் – வாழ்ந்துவிடலாம் என்பது மனித இனத்திற்கே விரோதமானது.

வருங்காலங்களிலும் அன்பு தழைக்க வாழ்ந்து அறம் காக்க வாழ்த்துக்கள். Love தலைவா & கவுதமி”

இயக்குநரும் எழுத்தாளருமான சந்திராவின் கருத்து:

“சுயமரியாதைக்கும் அதீதமான காதல் உணர்வுக்கும் இடையே பிரிவு என்ற ஒரு முடிவை எடுப்பது எதையும்விட துயரமானதுதான்.”

விமர்சகர் தீபா லட்சுமியின் கருத்து: கவுதமியின் கடிதத்திலிருந்த கண்ணியமும் கம்பீரமும் மனதைத் தொட்டது. கமலைப் பற்றிய புகழ்ச்சி கொஞ்சம் அதிகம் போல் தோன்றினாலும், அந்தப்பெருந்தன்மை அவலின்றி மெல்லும் வெறும் வாய்களைக் கொஞ்சம் மூட உதவும்.

எழுத்தாளர் யமுனா ராஜேந்திரன் கருத்து: கௌதமி ஒரு ஸ்டேட்மென்ட் விட்டிருக்காங்க. இது பிரபலமானவங்களுக்கு இருக்குற டிராஜடி. மத்தபடி இது ஒரு வெகு சாதாரணமான நிகழ்வு. இந்த ஸடேட்மென்டுக்கான காரணம் கூட லீகல் அளவுல, அநாவசிய ஊகங்கள் என்கிற அளவுல, அவங்க ஸ்டேட்டசை க்ளியர் பண்ணிக்கறதுதான். அவங்க ஸ்டேட்மென்ட்ல எந்த அநாவசிய சென்டிமென்ட்டும் இல்லை. டிபரன்ஸ் ஆப் பிரையாரிட்டிஸ். இத யாரும் ரெஸ்பெக்ட் பண்ணனும். யாரு மேலயும் குற்றம் சாட்ட ஒண்ணும் இல்ல. இதுல அழுவறதுக்கு ஒண்ணுமேயில்லை.

மனநலமருத்துவர் ருத்ரன் கருத்து: living together for convenience and living together with conviction தெரியாமல் பேசுவோர் பலர். புத்தகம் படித்து விட்டுப் பேசுபவனல்ல நான், அனுபவத்தில் பேசுபவன்.

ஆவணப்பட இயக்குநர் திவ்ய பாரதி கருத்து: சில இணையர்களின் பிரிவு தான் நமக்கும் பெரும் சங்கடத்தை கொடுக்கும். அப்படி தான் கௌதமி-கமலின் இன்றைய பிரிவு அறிவிப்பு ஏதோ செய்கிறது மனதை. அவர்களிருவரும் 13 ஆண்டுகளாக கம்பீரமாக அழகாக சேர்ந்து வாழ்ந்ததும், இன்று பிரிவதாக அறிவித்திருப்பதும் தமிழ் சூழலில் நல்ல முன்நகர்வு தான்.

இந்த பிரிவு ஏன் எதற்கு என்கிற மூன்றாம் தர ஆய்வுகளுக்குள் இறங்காமல் இருவரின் தனிபட்ட உணர்வையும் முடிவையும் வலியையும் மதிப்போமாக.

மதிப்பிற்குரிய கௌதமி அவர்களின் மனஉறுதி இன்னும் அதிகமாகும் என்கிற நம்பிக்கையில், அவர் வாழ்வின் அடுத்த கட்ட நகர்விற்கு என் வாழ்த்துகளையும் அன்பையும் உரித்தாக்குகிறேன்.

ஊடகவியலாளர் செந்தில் குமார்: கமலும் கவுதமியும் சொல்லிவிட்டா சேர்ந்தார்கள் … ஏன் இப்போது சொல்லிவிட்டு பிரிக்கிறார்க ள்… ஒருவேளை மீடியாவின் மூலம் இருவரும் தங்களுக்கு vacancy போர்ட் மாட்டிக்கொல்கிறார்களா …

களப்பணியாளர் ஜோஷ்வா ஐசக் ஆசாத்:

இன்று நாம் பார்க்கும் ‘ப்ரைவசி’ ‘தனிநபர் விஷயம்’ ‘பர்சனல் இஷ்யூ’ போன்ற வாதங்கள், அறிவுரைகள் எல்லாம் ‘கமல்ஹாசன்’ என்னும் இடத்தில் வேறு ஏதாவதொரு பெயர் இருந்திருந்தால் நடந்திருக்குமா என்று யோசிக்கிறேன். அவருக்கு ஏன் இந்த கன்செஷன் என்பதல்ல.. அவருக்கு மட்டுமா இந்த கன்செஷன் என்பதே?

இந்த லிவிங் டூ கெதர் எல்லாம் இந்த சமூகம் ஏற்றுக் கொண்டு முதிர்ச்சியடஞ்சிடுச்சா? எனக்கு தெரிஞ்சவர கடசியா உடுமலைப்பேட்டையில் சங்கர வெட்டி கொன்னது தான் நியாபகம் இருக்கு? இங்க இவங்க இவங்க இத செஞ்சா மட்டும் தான் முற்போக்கு முன்னேற்றம் எல்லாமா? இங்க socially accepted normsனு யார் முடிவு செய்றாங்க?

ஒரு உதாரணமாக LGBTQ குழுக்களில் ஊடகத்தில், விருது நிகழ்ச்சிகளில் கலர்புல் போராட்ட களங்களில் நாம் பார்க்கும் ஆட்கள் யார்? என்ன சாதி/சமூக பின்னணியில் இருந்து வந்திருக்காங்கனு பாத்தா புரியும். அவங்க வைக்கிற கோரிக்கை, சுதந்திரம், தங்களுக்கு தேவையான உரிமை என்னனு பேசுறதிலும், அதே குழுக்களில் சாதியாலும்/வர்க்கத்தாலும் கீழே இருப்பவர்களிடமிருந்து அவர்கள் தேவைகளிலிருந்து வேறுபட்டே இருக்கும். இதுவே மனித உரிமை ஆர்வலர்கள், அமைப்புகள், பெண்ணிய அமைப்புகள்னு எல்லா தளங்களிலும் பாக்கலாம்.

இங்க லிவிங் டூ கெதர் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதா? பொது சிவில் சட்டம் பேசும்போது இதெல்லாம் எங்க வரும்? கமல்ஹாசனின் ஒழுக்க நெறி தனிநபர் சார்ந்ததா? அது விவாதத்துக்கு அப்பாற்பட்டதா? இந்த privilege எல்லாருக்கும் கிடைக்குமா? அந்த luxurious privilege கிடைக்க என்ன தான் தகுதி? ஒரு பையன் ஒரு பொண்ணு கூட பேச்சின்னு இருந்தான்கிறதுக்காகவே தலை அறுத்தாங்க இந்த ஊர்ல.. இவங்க ஒன்னா வாழ்ந்துட்டு டுவிட்டர்ல அறிவிச்சுட்டு பிரியறத பாத்தா இது வெறும் luxury இல்ல vulgar luxuryயா தான் எனக்கு தெரியுது.

வங்கிப் பணியாளர் ஏன் இப்படி நடந்துகொள்கிறார்? வெளியான தகவல்

எழுத்தாளர் ஜெயமோகன், மெதுவாகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒரு வங்கிப் பணியாளரின் வீடியோவைப் போட்டு அதுகுறித்து ‘தேவாங்கு’ எனும் பெயரில் ஒரு பதிவை எழுதியிருந்தார். இதுகுறித்து டைம்ஸ் தமிழ் செய்தி வெளியிட்டிருந்தது. அது பரவலாகப் பகிரப்பட்டு,  சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது. எழுத்தாளர் ஜெயமோகன், வங்கிப் பணியாளரை தேவாங்கு என்றும் ஒருமையில் விளித்து எழுதியதற்கும் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அந்த வங்கிப் பணியாளர் குறித்து, தற்போது தகவல் தெரியவந்துள்ளது. அந்தப் பெண்ணின் பெயர் பிரேமலதா ஷிண்டே என்றும் அவர் பக்கவாதத்தாலும் இருமுறை ஹார்ட் அட்டாக்காலும் பாதிக்கப்பட்டவர் என்றும் தெரியவந்துள்ளது. தன்னுடைய விடுப்பு காலம் அனைத்தும் சிகிச்சைக்காக முடிந்துவிட்டநிலையில், அவர் வேறு வழியின்றி வங்கிப் பணிக்குத் திரும்பியதாகவும் பிப்ரவரி 2017-ஆம் ஆண்டு ஓய்வு பெற உள்ளதால் அதுவரை வங்கிக்கு வந்துபோக வங்கித் தலைமை உதவி செய்திருப்பதாகவும் தெரிகிறது.  கணவர் இறந்துவிட்ட நிலையில்,  பிரேமலதா தன்னுடைய சிகிச்சைக்காக பணியாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்திருக்கிறார்.

பிரேமலதா மெதுவாக பணிபுரிவதால் அதை ஈடுகட்டும்விதமாக வங்கி மற்றொரு கவுண்டரை திறந்துவைத்துள்ளது. இதை அறியாமல் ஏதோ பொதுத் துறை வங்கி ஊழியர்களே மெத்தனமாக இருப்பதாக காட்ட இந்த வீடியோவை எடுத்து போட்டிருக்கிறார் ஹர்ஷ்த் கோட்கே என்பவர்.

எழுத்தாளர் ஜெயமோகன், ‘தேவாங்கு’ என்ற பதிவை நீக்கியிருக்கிறார்.