மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 23வது மாநில மாநாட்டு பொது கூட்டத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிஷ்ணன் பங்கேற்றுப் பேசினார். கூட்டத்தில் அவர் பேசுகையில், பாஜக அரசு மதச்சார்பின்மையை குலைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கு சில நீதிபதிகளும் துணை போகிறார்கள். பாஜக அரசுக்கு வக்காலத்து வாங்கும் நீதிமன்றங்களையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம்.அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக்கும் சட்டத்தை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தில் 24 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு … Continue reading ”ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஒரு ஓநாய் கூட்டம்; அதன் குகைக்குள் செல்வோம்”
பகுப்பு: சமூகம்
மனைவியின் விருப்பம் இல்லாமல் கணவனே உறவு கொண்டாலும், அது பாலியல் வன்கொடுமையே: கர்நாடக உயர்நீதிமன்றம்
மனைவியின் விருப்பம் இல்லாமல் கட்டாயப்படுத்தி அவருடன் உடலுறவு கொள்வதும் ஒரு வகையான பாலியல் வன்கொடுமை தான் என கூறி கணவர் மீதான வழக்குப் பதிவை நீக்குவதற்கு கர்நாடகா உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.விருப்பமில்லாத மனைவியுடன் பாலியல் வல்லுறவு கொண்டதாக மனைவி அளித்த புகாரின் பேரில் கணவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அவர் தனது மகளையும் கட்டாயப்படுத்தி அவரை பாலியல் வல்லுறவு செய்ததாக புகார் அளித்ததால், அந்த நபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் … Continue reading மனைவியின் விருப்பம் இல்லாமல் கணவனே உறவு கொண்டாலும், அது பாலியல் வன்கொடுமையே: கர்நாடக உயர்நீதிமன்றம்
ஒருவர்கூட உதவிக்கு வரவில்லை | இறந்த மனைவியை சைக்கிளில் எடுத்து சென்ற முதியவர்: உ.பி. அவலம்!
உத்தரப்பிரதேச மாநிலம், ஜான்பூர் மாவட்டம் மதியாரு கோத்வாலி பகுதியில் உள்ள அம்பேர்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் திலக்தாரி சிங், இவருடைய 50 வயது மனைவி பல நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் உமாநாத் சிங் மாவட்ட மருத்துவமனையில் கிசிக்கைக்காக சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த திங்களன்று அவருடைய மனைவியின் உடல்நிலை மோசமடைந்தது. சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்ததால் ஆம்புலன்ஸில் ஏற்றி அப்பெண்ணின் உடலை அவருடைய கிராமத்திற்கு மருத்துவமனை நிர்வாகம் அனுப்பிவைத்தது. இதனிடையே திலக்தாரி சிங்கின் மனைவியின் மரணத்திற்கு துக்கம் … Continue reading ஒருவர்கூட உதவிக்கு வரவில்லை | இறந்த மனைவியை சைக்கிளில் எடுத்து சென்ற முதியவர்: உ.பி. அவலம்!
தலை துண்டிக்கப்பட்ட கடவுள்களின் புதல்வன் “கர்ணன்”
தலித்துகளின் militant குணத்தை ஊக்குவிக்கும், எதிர் தாக்குதலுக்கான வாய்ப்புகளை ஆராயும் கதையாடல்கள் திரைப்படங்களில் தொடர்ந்து வலுவாக நேர்த்தியாக வெளிப்படும் பொழுது அது சாதிய சமூகத்தில் நிச்சயம் ஒரு சலனத்தை ஏற்படுத்தும்
தொ.பரமசிவனை பெரியாரிஸ்ட்கள் எப்படி அணுக வேண்டும்? சுகுணா திவாகர்
தோழர்.வே.மதிமாறன் நான் மிகவும் மதிக்கும் சிந்தனையாளர்; எழுத்தாளர்; பேச்சாளர். பல்லாண்டுகால நண்பர். வாய்ப்பு கிடைக்கும் மேடைகளில் எல்லாம் அம்பேத்கர். பெரியார் சிந்தனைகளை முன்வைப்பவர். எண்ணற்ற இளைஞர்களைத் தன் பேச்சால் ஈர்ப்பவர். ஆனால் சிலசமயம் அவரது தடாலடியான கருத்துகள் ஆழமும் சாரமும் அற்ற அப்போதைய கவர்ச்சிகரம் வாய்ந்தவை, சமயங்களில் பெரியாரியலுக்கு எதிர்த்திசையில் நடைபோடுபவை. அதற்கான சமீபத்திய உதாரணம் தொ.பரமசிவன் குறித்த அவரது அண்மைய வீடியோ. அவரது 'பாரதிய ஜனதா பார்ட்டி' நூலை அறிவுலகம் தேவையற்ற பதற்றத்துடன் எதிர்கொண்டது உண்மைதான். … Continue reading தொ.பரமசிவனை பெரியாரிஸ்ட்கள் எப்படி அணுக வேண்டும்? சுகுணா திவாகர்
முதல் பெண் ஆசிரியர் சாவித்திரிபாய் புலே பிறந்த நாளை ஆசிரியர் தினமாக கொண்டாட வேண்டும்: சபரிமாலா கையெழுத்து இயக்கம்
முதல் பெண் ஆசிரியர் சாவித்திரிபாய் புலே பிறந்த நாளை ஆசிரியர் தினமாக கொண்டாட வேண்டும் என செயல்பாட்டாளர் சபரிமாலா கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளார். https://youtu.be/YxjRpODr-0U
“படைப்பின் நோக்கம் முழுமையடைந்தது”: TNPSC Group 1 தேர்வில் பரியேறும் பெருமாள்!
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற TNPSC Group 1 தேர்வில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த பரியேறும் பெருமாள் திரைப்படம் பற்றிய கேள்வி இடம்பெற்றுள்ளது. அந்த கேள்வியில் ‘தலைசிறந்த படைப்பான பரியேறும் பெருமாள் என்ற தமிழ் திரைப்படம் பற்றிய விமர்சனம் குறித்து கீழ்காணும் கூற்றுகளில் தேர்வு செய்யவும்’ என்றுக் கூறி சில ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த கேள்வியில் ‘தலைசிறந்த படைப்பான பரியேறும் பெருமாள் என்ற தமிழ் திரைப்படம் பற்றிய விமர்சனம் குறித்து கீழ்காணும் கூற்றுகளில் தேர்வு செய்யவும்’ என்றுக் கூறி … Continue reading “படைப்பின் நோக்கம் முழுமையடைந்தது”: TNPSC Group 1 தேர்வில் பரியேறும் பெருமாள்!
அவர்களைத் தனித்து வாழவிடுங்கள்… மீதம் உள்ளவர்களாவது பிழைத்திருக்கட்டும்…!
தீ. ஹேமமாலினி அந்தமான் நிக்கோபர் பிரதேசத்தின் வடக்கு சென்டினலீசு தீவிற்கு (Northern Sentilese Island) சென்ற ஜான் ஆலன் சாவ் என்ற அமெரிக்க இளைஞர் சென்டினல் (Sentinel) பழங்குடியினரால் கொல்லப்பட்டதாக பலரும் தற்போது விவாதித்து வருகிறார்கள்.. அந்தமான் நிக்கோபர் பகுதியில் உள்ள 572 தீவுகளில், சுமார் 36 தீவுகளில் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர்.. இப்பிரதேசத்தின் தொல் பழங்குடிகளாக ஜாரவா, சென்டினல், ஷாம்பென், ஓங்கே, கிரேட் அந்தமானீஸ் போன்றோர் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். நீக்ரிட்டோ வகை பழங்குடி இனத்தைச் சேர்ந்த சென்டினல் … Continue reading அவர்களைத் தனித்து வாழவிடுங்கள்… மீதம் உள்ளவர்களாவது பிழைத்திருக்கட்டும்…!
புயல் பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்கள் சாதி வெறியர்களும் அல்ல; வழிப்பறிக் கொள்ளையர்களும் அல்ல: பாரதி தம்பி
பாரதி தம்பி கஜா புயலில் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்கள் குறித்து இரண்டு வதந்திகள் சுற்றிக்கொண்டு இருக்கின்றன. அவற்றை முதலில் தெளிவுபடுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். முதலில் நிவாரணப் பொருள் ஏற்றி வரும் வாகனங்களை மக்கள் மிரட்டி பொருட்களை வழிபறி செய்கின்றனர் என்பது. இது முற்றிலும் தவறானது; முழு பொய். இந்த மக்கள் யாரும் கொள்ளைக்காரர்கள் இல்லை; திருடர்கள் இல்லை. நிவாரண வாகனங்களில் இருக்கும் பிஸ்கட் பாக்கெட்டுகளையும், அரிசியையும், தண்ணீரையும் வைத்து அவர்கள் ஒன்றும் மாடி வீடு கட்டப் … Continue reading புயல் பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்கள் சாதி வெறியர்களும் அல்ல; வழிப்பறிக் கொள்ளையர்களும் அல்ல: பாரதி தம்பி
பட்டேல் சிலையைப் போல அயோத்தியில் ராமருக்கு சிலை: உ.பி. முதல்வர் ஆதித்யநாத் திட்டம்
குஜராத்தின் நர்மதா நதிக்கரையில் உலகின் உயரமான சிலை என்கிற பெருமையுடன் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு 182 மீட்டர் சிலை அமைத்தது மோடி அரசு. ‘தற்பெருமை’க்காக இந்த சிலையை அமைத்துள்ளதாக இங்கிலாந்தின் அரசியல்வாதிகள் கடுமையாக விமர்சித்தனர். அதுபோல இந்தியாவுக்குள் இது கடுமையான விமர்சனங்களைக் கிளப்பியது. அதுகுறித்து கொஞ்சமும் கருத்தில் கொள்ளாமல், உத்தர பிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத், இந்து கடவுள் ராமருக்கு ஆயோத்தியில் 151 மீட்டர் சிலை அமைக்கவிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. உ.பி. முதலமைச்சர் ஆதித்யநாத், வரவிருக்கும் தீபாவளி தினத்தின் … Continue reading பட்டேல் சிலையைப் போல அயோத்தியில் ராமருக்கு சிலை: உ.பி. முதல்வர் ஆதித்யநாத் திட்டம்
பிரளயச் செங்கன்னூரில் கண்ணகி தேவியின் தூமை
ஸ்ரீபதி பத்மநாபா பாண்டியனைக் கொன்று தன் இடமுலை திருகி வீசி மதுரையை எரித்தாள் அவள். அதன் பின்னர் மதுரை விட்டு நீங்கி வையையாற்றின் கரை வழியே மேற்றிசை நோக்கிச் சென்று மலைநாட்டை அடைந்து அங்கு திருச்செங்குன்று என்ற மலை மீதேறி ஓர் வேங்கை மரத்தின் நிழலில் வந்து நின்றாள். அங்கு தேவர்கள் பூமாரி பொழிய ஆகாயத்தினின்றும் அழகிய விமானம் கீழே இறங்க, அவ்விமானத்தில் தெய்வ வடிவோடு கோவலன் இலங்க, கண்ணகி களிகூர்ந்து அவ்விமானத்திலேறி விண்ணுலகடைந்தாள். * செங்குன்றூருக்கு … Continue reading பிரளயச் செங்கன்னூரில் கண்ணகி தேவியின் தூமை
குழந்தைகளின் மாமிசங்களை புசிப்பவர்கள் யார்?: மனுஷ்ய புத்திரன்
மனுஷ்ய புத்திரன் அந்தக் கேள்வியை மற்றொரு முறை அதிர்ச்சியுடன் கேட்கிறீர்கள் தினமும் இதுதான் நடக்கிறது தினமும் புத்தம் புதியதாக அதிர்ச்சி அடைகிறீர்கள் பிறகு வேறு அதிர்ச்சிகள் வந்துவிடுகின்றன குழந்தைகளின் மாமிசங்களை வேட்டையாடுபவர்கள் யார்? அவர்கள் குழந்தைகளிடம் அன்பு காட்டுகிறவர்கள் குழந்தைகளின் விளையாட்டு தோழர்களாய் இருப்பவர்கள் குழந்தைகளுக்கு கதைகள் சொல்கிறவர்கள் குழந்தைகளின் தனிமையை போக்குகிறவர்கள் அந்தக் குழந்தைகளை அத்தனை கனிவாய் அணைத்துக்கொள்கிறவர்கக் அவர்கள்தான் பிறகு அந்தக் குழந்தைகளை கழிவறைக்குள் அழைத்துச் சென்று அவர்கள் ஆடைகளை சிரித்துக்கொண்டே கழற்றுகிறார்கள் குழந்தைகள் … Continue reading குழந்தைகளின் மாமிசங்களை புசிப்பவர்கள் யார்?: மனுஷ்ய புத்திரன்
12 வயது குழந்தைக்கு நடந்த கொடுமை: அந்த மிருகங்களுக்கு என்ன தண்டனை?
கவிதா சொர்ணவல்லி: குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்து விட்டோம் என்றாலே, அக்குழந்தை தன்னளவில் சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் தருணம் வரையில் அதற்கான உணவு, அனுசரணை & குறைந்தபட்ச பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது கண்டிப்பாக பெற்றோர்களாகிய நம்முடைய கடமை மட்டுமே. என் வீட்டிலிருப்பது ஆண் குழந்தை. அவன். பள்ளிக்கு வேனில் செல்கிறான். வேனில் செல்கிறான் என்ற ஒரு காரணத்தினாலேயே, அவனுக்கு unneccesary touch-கள் பற்றி மூன்று வயதிலேயே சொல்லிக்கொடுத்திருக்கிறேன். அதையும் மீறி யாராவது தொட முயன்றால், கையில் அழுத்தமாக … Continue reading 12 வயது குழந்தைக்கு நடந்த கொடுமை: அந்த மிருகங்களுக்கு என்ன தண்டனை?
”சங்கர் நினைவேந்தல் போஸ்டரை கிழித்தெறியும் காவல்துறை; பாதுகாப்புத் தர மறுக்கிறது”: கௌசல்யா
ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி மறுக்கவில்லை, சாதி சங்கங்கள் நடத்தும் நிகழ்வுகளுக்குத் தடையில்லை, விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களை அரசே நடத்தித் தருகிறது; இவையெல்லாம் சமூக ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் கெடுக்கும் நோக்கம் கொண்டவை என்பதறிவோம். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு, அம்மா பிறந்த நாள் இவற்றுக்கெல்லாம் பாதுகாப்புக்கு நிற்பவர்தள் காவலர்கள்தானே! அவற்றுக்கெல்லாம் பாதுகாப்பளிக்க முடியும் நமக்கு மட்டும் முடியாதாம்.
பாலேசுவரம் கருணை இல்லத்திற்கான கிறிஸ்தவர்களின் போராட்டம் , குடிமைச் சமூகத்தின் தோல்வியாகும்
செங்கல்பட்டு மாவட்டம் , உத்திரமேரூர் வட்டம், பாலேசுவரம் கிராமத்தில் செயிண்ட் ஜோசப் இறக்கும் தருவாயிலிருக்கும் ஆதரவற்றோருக்கான கருணை இல்லம் ( St..Joseph Hospice for dying destitutes) இருக்கிறது. இது மருத்துவமனை அல்ல; ஒரு Hospice. இதற்கு தமிழக அரசு அரிசி, சர்க்கரை தவிர வேறு எதுவும் தருவதில்லை. கடைசி காலத்தில் கைவிடப்பட்ட முதியவர்களை அடையாளம் கண்டு மருத்துவ சிகிச்சை கொடுத்து மனித மாண்போடு இறப்பதற்கு வழிவகை செய்வது இவர்கள் பணி. காவல்துறையும், மருத்துவமனைகளும் இறக்கும் தருவாயில் … Continue reading பாலேசுவரம் கருணை இல்லத்திற்கான கிறிஸ்தவர்களின் போராட்டம் , குடிமைச் சமூகத்தின் தோல்வியாகும்
சாதிய உளவியலும் பதற்றங்களும்
ஏர் மகாராசன் சங்கர் படுகொலைக் குற்றத்திற்காக கீழமை நீதிமன்றம் வழங்கி இருக்கும் இந்தத் தீர்ப்பைக் குறித்து நாம் கொண்டாட வேண்டிய அவசியமில்லை; எதிர்க்க வேண்டிய தேவையும் இல்லை. வரவேற்க வேண்டிய தீர்ப்பாகவே பார்க்க வேண்டும். இதுவே இறுதித் தீர்ப்பும் அல்ல. இங்குள்ள நீதிமன்றத் தீர்ப்புகள் சாதியத் தன்மைகளோடும் அவற்றின் சார்புகளோடும் தான் பெரும்பாலும் இயங்குகின்றன. விதிவிலக்காய் இந்தத் தீர்ப்பு அவ்வளவே. மரண தண்டனை அல்லாமல் மற்ற தண்டனை வழங்கினால் மட்டும் தீண்டாமையோ படுகொலை நிகழ்வுகளோ நடக்காமல் இருக்கப்போவதில்லை. … Continue reading சாதிய உளவியலும் பதற்றங்களும்
கோவையின் அடையாளம் ஈஷா மையமா? எதிர்ப்பால் பின்வாங்கிய ரயில்வே!
ந.பன்னீர் செல்வம் கோவையிலிருந்து சென்னை செல்லும் சேரன் அதிவிரைவு வண்டியில் கோவையின் அடையாளமாக ஈஷா யோக மையத்தின் லிங்கம் படம் போட்டிருப்பது தவறானது என்றும், கோவை ரயில் நிலையத்தின் படம் போட நடவடிக்கை கோரியும் அண்மையில் கோவையிலிருந்து சென்னை வரை செல்லும் சேரன் அதிவிரைவு வண்டியில் கோவையின் அடையாளமாக ஈஷா நிறுவனத்தின் புகைப்படம் போட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என சமூக நீதிக்கட்சி சார்பில் கண்டனம் தெரிவித்திருந்தோம். தென்னிந்திய இரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லையெனில் வரும் வெள்ளிக்கிழமை தார் … Continue reading கோவையின் அடையாளம் ஈஷா மையமா? எதிர்ப்பால் பின்வாங்கிய ரயில்வே!
இடதுசாரிகளின் மேட்டிமைத்தனத்தனம் மூர்க்க தேசியத்திற்கு ஆயுதங்களைத் தருகிறது: இராமச்சந்திர குஹா
வரலாற்று ஆய்வாளர் இராமச்சந்திர குஹா, கர்நாடகம் உருவான நவம்பர் ஒன்றாம் நாளன்று புதுதில்லியில் நீதிபதி சுனந்தா பண்டாரே (Sunanda Bhandare ) நினைவு சொற்பொழிவு ஆற்றினார். தற்கால அரசியலை மையப்படுத்திய இந்த உரை பல செய்திகளை புதிய கோணத்தில் வைக்கிறது.அரசியலமைப்பு நாட்டுப்பற்று (constitutional patriotism) , மூர்க்க தேசியவாதம், பாகிஸ்தானால் இந்தியாவில் அடிப்படைவாதம், யூதர்களை போல முஸ்லிம்கள், பன்மைத்தன்மை போன்ற கருத்துக்களை மையப்படுத்தி இவரது உரை அமைந்து இருக்கிறது. ஆங்கில ஊடகங்களில் பரவலாக இந்த உரை கவனம் … Continue reading இடதுசாரிகளின் மேட்டிமைத்தனத்தனம் மூர்க்க தேசியத்திற்கு ஆயுதங்களைத் தருகிறது: இராமச்சந்திர குஹா
“தலித்” எங்கிற சொல்லுக்கு அரசியல் சட்டத்தில் விளக்கம் இல்லை!
2008ஆம் ஆண்டே, பட்டியல் சாதியினருக்கான தேசிய ஆணையம் (National Commission for Scheduled Castes) , தலித் என்கிற சொல்லுக்கு அரசியல் சட்ட அங்கீகாரம் கிடையாது, எனவே அந்த சொல்லை அரசு ஆவணங்களில் பயன்படுத்தக்கூடாது என்று மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறது.
முதலமைச்சரின் சொந்த மாவட்டத்தில் டெங்குக் காய்ச்சல் கட்டுப்படுத்த முடியாமல் பரவுகிறது!
புதிய பாதாள சாக்கடைத் திட்டம் துவங்கப்படவில்லை. சாக்கடை கழிவு செல்வதற்கு வழிகளே இல்லை. ஆங்காங்கே தேங்கிக் கிடந்த சாக்கடை நீர், பெய்து வரும் பெருமழையில் நிரம்பி ஓடுகிறது. வீடுகள், கடைகளில் மழைநீர் புகுந்து விடுகிறது. மாநகர சாலைகள் முதல் நெடுஞ்சாலைகள் வரை ஆறுகள் போல மழைநீர் புரண்டு ஓடுகிறது.
“புத்தகம் எழுதியதற்காக யாரையும் தூக்கிலிட முடியாது”!
புத்தகம் எழுதியதற்காக யாரையும் தூக்கிலிட முடியாது என பேராசிரியர் காஞ்ச இலையாவுக்கு எதிரான போராட்டங்களை கண்டித்துள்ளது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தெலுங்கானாவைச் சார்ந்த தலீத்திய சிந்தனையாளர் பேராசிரியர் காஞ்ச இலையாவை தூக்கிலிடப்போவதாக பகிரங்கமாக கொலை மிரட்டலை சில சக்திகள் கொடுத்து இருப்பதை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய குழு கண்டிக்கிறது. அவர் எழுதிய நூலை எதிர்த்து ஆந்திராவிலும் , தெலுங்கானாவிலும் பல ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. அவர் எழுதிய … Continue reading “புத்தகம் எழுதியதற்காக யாரையும் தூக்கிலிட முடியாது”!
சீமானின் சாதிய முகம்!
சீமான் பல்லக்கு முறை கார் வந்ததால் மாறிவிட்டதாக சொல்கிறார். அடடே என்ன ஒரு கண்டுபிடிப்பு?
பழங்குடியினரின் வேலை வாய்ப்பைப் பறிக்கும் போலி பழங்குடிகள்!
994 ல் தான் போலிச் சான்றிதழ்களை களையெடுக்க SC க்கு மாவட்ட விழிப்புணர்வு குழுவும், ST பழங்குடிக்கு மாநில கூர்நோக்கு குழுவும் உருவாக்கப்பட்டன. கேரளாவில் "SC & ST சாதி சான்றிதழ் நெறிப்படுத்தும் சட்டம் 1996" உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ் நாட்டில் இன்றுவரை அத்தகைய பாதுகாப்பு வழங்கப்படவில்லை.
வெள்ளை கோட்டு போட்டுகிட்டு காலேஜுக்கு போக வேண்டிய புள்ளைய இப்படி, கட்டையில.. ஏத்திட்டீங்களே.?
ஏழு லட்சமும்...ஒரு அரசு வேலையும்னு சொல்லி ஏழைங்க வாயை மூடுறீங்களே..
இவ்வளவு நாளா ஓட்டுக்கு விலை வைச்சி ஆண்டீங்க...
இப்போ உசுருக்கும் லட்சியத்துக்கும் கூட
விலைபேசி அடிக்கிறீங்க...
அனிதாவின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வந்துட்டதா? காவல்துறை விசாரித்து சொல்லிவிட்டார்களா?: டாக்டர் கிருஷ்ணசாமி
நீட் தேர்வால் மருத்துவ கனவு சிதைந்துபோனதை அடுத்து தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதா குறித்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, அனிதாவின் தற்கொலைக்கு நீட் காரணம் அல்ல என்றும் மருத்துவம் படிக்க முடியவில்லை என்றால் வேறு படிப்புக்கு முயற்சிக்க வேண்டும் என்று பேசியிருந்தார். டாக்டர் கிருஷ்ணசாமியின் கருத்து, சமூக ஊடகங்களில் பலத்த எதிர்ப்பை கிளப்பியது. டாக்டர் கிருஷ்ணசாமியின் கருத்தை ஒட்டி விவாதம் நடத்தியது நியூஸ் 7 தொலைக்காட்சி விவாதம் நடத்தியது. இந்த விவாதத்தில் … Continue reading அனிதாவின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வந்துட்டதா? காவல்துறை விசாரித்து சொல்லிவிட்டார்களா?: டாக்டர் கிருஷ்ணசாமி
17 வயது தலித் பெண்ணின் மருத்துவ கனவு தூக்கில் தொங்கவிடப்பட்டது…
மத்திய அரசின் அரக்கத்தனம், மாநில அரசின் கையாலாகாத்தனம் - இவை இரண்டும் மட்டுமா அனிதாவின் மரணத்திற்குக் காரணம்?
நமக்குப் போதிய சுரணை எப்போது வரப் போகிறது?
ஆணவக் கொலைகளை தடுக்க தனிப் பிரிவு: தீண்டாமை ஒழிப்பு முன்னணி வழக்கால் வெற்றி!
தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச்செயலாளர் சாமுவேல் ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசார ணைக்கு வரவுள்ளதையொட்டி மதுரை மாநகர் மற்றும் சேலத்தில் மட்டும் சாதி ஆணவக் கொலைகளை தடுப்பதற்கான சிறப்புப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்துள்ள பூதிப்புரத்தைச் சேர்ந்தவர் விமலாதேவி. இவர் உசிலம்பட்டி போலிப்பட்டியைச் சேர்ந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த திலீப்குமார் என்ற இளைஞரை திருமணம் செய்துகொண்டார். இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத சாதி ஆதிக்க சக்திகள் விமலாதேவியை 1.10.2014 அன்று … Continue reading ஆணவக் கொலைகளை தடுக்க தனிப் பிரிவு: தீண்டாமை ஒழிப்பு முன்னணி வழக்கால் வெற்றி!
ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதியை ஆதரித்து கையெழுத்து இயக்கம்!
இப்போது திவ்யபாரதி எதிர்கொள்கிற பிரச்சினை, அவர்மீது தொடுக்கப்படும் தாக்குதல் என்பது தனிமனிதனின் உயிர்வாழும் உரிமையின் மீது நடத்தப்படும் தாக்குதலாகும்; கருத்துச் சுதந்திரத்தின் மீது நடத்தப்படும் தாக்குதலாகும்.
செயல்பாட்டாளர் கருப்பு கருணா குடும்பத்தை இழிவுபடுத்தும் வீடியோ பதிவு: நடவடிக்கை எடுக்க தமுஎகச வலியுறுத்தல்
திருவண்ணாமலையில் நித்தியானந்தா சீடர்களின் மலை நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைளை மக்கள் ஆதரவோடு தடுத்த போராட்டத்திலும், முற்போக்குக் கருத்துகளைப பரப்புரை செய்வதிலும் முன்னணியில் நிற்பவரான கருப்பு கருணா, அவரது குடும்பத்தினர், தோழர்களை இழிவுபடுத்தித் தயாரிக்கப்பட்ட காணொளிக் காட்சி சமூகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்திருப்பதோடு, தமிழக அரசும் காவல்துறையும் உடனடியாகத் தலையிட்டு இந்தக் கோழைத்தனமான இழிசெயலில் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளது. சங்கத்தின் துணைப் பொதுச்செயலாளருமான கருணா … Continue reading செயல்பாட்டாளர் கருப்பு கருணா குடும்பத்தை இழிவுபடுத்தும் வீடியோ பதிவு: நடவடிக்கை எடுக்க தமுஎகச வலியுறுத்தல்
லஞ்சம் வாங்கிய போலீஸ் கைது; பட்டாசு வெடித்த மக்கள்: காரணம் என்ன?
திருக்கோவிலூர் போலீசாரால் 4 இருளர் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது அனைவருக்கும் நினைவிருக்கும். அப்பெண்களின் உறவினர்கள் 9 பேரை விழுப்புரத்தில் ஒரு லாட்ஜில் அடைத்து வைத்து சித்திரவதை செய்தவர் ஆய்வாளர் தமிழ்மாறன்.
ஐந்தாம் வகுப்பில் பொதுத்தேர்வு: குலக்கல்விக்கொரு முன்னொட்டம்!
படிப்பதற்கு அமைதியான சூழல் கூட கிடைக்காத ஒடுக்கப்பட்ட(அனைத்து சாதியிலும்) குழந்தைகள் தங்கள் படிப்பை ஐந்தாம் வகுப்புடன் அல்லது எட்டாம் வகுப்புடன் நிறுத்தும் அவலங்கள் நடக்கலாம். நடக்கும்.
புனித பசு மீன் உண்கிறது: சமூக வலைத்தளத்தில் பரவிவரும் வீடியோ!
மத்தியில் பாஜக அரசு அமைந்த பிறகு, இறைச்சி உண்பது புனிதமற்ற உணவுப் பழக்கமாக தொடர்ந்து பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் மாட்டிறை உணவுக்கு தடை விதிக்கப்பட்டது. அடுத்து மாட்டிறைச்சி வைத்திருப்பதாகக் கூறி, பல வடமாநிலங்களில் கும்பல் கொலைகள் நிகழ்த்தப்பட்டன். மேற்கு வங்கத்தில் பார்ப்பனர்கள் மீன் உணவை தங்களுடைய உணவுப் பழக்கமாக பின்பற்றிவருகிறார்கள். மீன் உண்பது விஷ்ணு (இந்துகடவுள்)வை உண்பதுபோல என சொல்லி மேற்கு வங்கத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார்கள் இந்துத்துவ அமைப்புகள். இந்நிலையில் புனிதமாக கருதப்படும் … Continue reading புனித பசு மீன் உண்கிறது: சமூக வலைத்தளத்தில் பரவிவரும் வீடியோ!
பேரக் குழந்தைகளை வளர்க்கும் கொத்தடிமைகளா பெற்றோர்கள்?…
மலேசிய வீடியோ அது. ஆறு அல்லது ஏழு வயது பெண் குழந்தையை அறுபது வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவர் ஸ்கேலினால் அடி வெளுத்து எடுக்கிறார். பார்த்தவுடன் பதறிப் போகிற அளவுக்கு அப்படி ஒரு அடி. பொங்கி பீராய்ந்து உடனடியாக அந்த வயதான அம்மாவைத்திட்டி ஸ்டேடஸ் எழுதி என்னுடைய கடமையை ஆற்றினேன். இருந்தும் அந்த வீடியோ கண்ணுக்குள்ளயே நின்றுகொண்டிருந்தது. எதற்காக இவ்வளவு எமோஷன் ? நீ அடி வாங்கினதே இல்லையா ? என்று உடன்பணிபுரிபவர் கேட்டதும்தான் அதில் இருந்து … Continue reading பேரக் குழந்தைகளை வளர்க்கும் கொத்தடிமைகளா பெற்றோர்கள்?…
வேலு பிரபாகரன் ஷெர்லி திருமணம்; கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை!
திருமண வயதைத் தாண்டிய மணமக்கள் இருவரும் ஒருவரையொருவர் விரும்பி திருமணம் செய்வதை யாரும் தடை செய்யவும் முடியாது..!
சென்னை சில்க்ஸ் அணையா தீ; விதிமீறலில் 500க்கும் மேற்பட்ட கட்டடங்கள்!
இன்னமும் 500க்கு மேற்பட்ட இடிக்கபடவேண்டிய கட்டிடங்கள் இருக்கின்றன.. இடிப்பார்களா? இல்லவே இல்லை இதுவும் சென்னை சில்க்ஸ் பெரும் கரும்புகை போல கடந்து போகும்…
வாட்ஸ் அப் வதந்தி: ஜார்க்கண்டில் பொதுவெளியில் அடித்து கொல்லப்படும் மக்கள்..
குழந்தைகளை கடத்துகிறார்கள் என்கிற வாட்ஸ் அப் வதந்தியை நம்பி ஜார்க்கண்ட் மாநிலத்தில் 6 பேர் கொல்லப்பட்டிருப்பது நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக ஆளும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் சமீப மாதங்களாக தலித்துகள், இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்களும் அவர்கள் வன்முறை கும்பலால் அடித்துக்கொல்லப்படுவதும் அதிகரித்துள்ளது. இத்தகைய சூழலில் குழந்தைகளை கடத்த வருகிறார்கள் என்கிற வதந்தி செய்தியை நம்பி, ஒரே நாளில் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர். காவலர்கள் முன்பே ஜாம்ட்ஷெட்பூரில் மூன்று குழந்தைகளுக்கு தந்தையான முகமது நயீம் என்பவர் அடித்துகொல்லப்படும் காட்சி வீடியோ … Continue reading வாட்ஸ் அப் வதந்தி: ஜார்க்கண்டில் பொதுவெளியில் அடித்து கொல்லப்படும் மக்கள்..
“நான் இந்து அல்ல” ஒரு பழங்குடியின் முகத்தில் அறையும் பதில்!
’ஒடியன்’ லட்சுமணன் பழங்குடிகளின் பல்வேறு்கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுதும் தனது போர்முழக்கத்தை தொடங்குகிறது தமிழ்நாடு் பழங்குடி மக்கள் சங்கம். கடம்பூர் ராமசாமி அந்தப்போராட்ட நோட்டீசின் நகலை அனுப்பியிருந்தார். அதிலொரு கோரிக்கை 'பழங்குடிகளுக்கு இனச்சன்று வழங்கும்போது மத அடையாளங்களை குறிப்பிடுவதை நிறுத்து' 2006வனச்சட்டத்தை அமுல் படுத்துதல், NTCA வை திரும்பப்பெறல் உள்ளிட்ட முக்கியமான கோரிக்கைகளோடு பண்பாட்டுக்கோரிக்கைகளையும் முன்னெடுப்பது உற்சாகமளிக்கிறது. இது எனக்கு 1998 ஆம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தை நினைவுக்கு கொண்டுவருகிறது காரமடை வனச்சரகத்தில், அடர்ந்த வனம் … Continue reading “நான் இந்து அல்ல” ஒரு பழங்குடியின் முகத்தில் அறையும் பதில்!
அசைவத்தினால் ஆன உலகு; தினசரி வாழ்வில் நம்மை சூழ்ந்திருக்கும் அசைவம் பற்றித் தெரியுமா சைவத் தீவிரவாதிகளே….
முத்துகிருஷ்ணன் 1. கண் விழித்ததும் நீங்கள் தேடும் உங்களின் பற்பசையில், கோமாதா என்று உங்களால் வணங்கப்படும் பசு மாட்டின் கொழுப்பில் இருந்து தயாரிக்கப்பட்ட கிளிசரின் கலந்திருக்கவில்லை என்று உங்களால் உறுதிப்படுத்த முடியுமா ? ஆமாம். கிளிசரின் மாட்டுக்கொழுப்பில் இருந்துதான் தயாரிக்கப்படுகிறது. அது கோல்கேட், க்ளோஸ்-அப், பியர்ஸ் அல்லது நீங்கள் உபயோகிக்கும் எந்த ஒரு பிரான்ட் பற்பசையாக வேண்டுமானால் இருக்கலாம். அதில் பயன்படுத்தப்பட்டுள்ள கிளிசரின் சோயா அல்லது பனை போன்ற சைவ பொருட்களில் உருவாக்கப்பட்டது என்று எண்ணுகிறீர்களா ? … Continue reading அசைவத்தினால் ஆன உலகு; தினசரி வாழ்வில் நம்மை சூழ்ந்திருக்கும் அசைவம் பற்றித் தெரியுமா சைவத் தீவிரவாதிகளே….
இசையிலும் மதம் வந்துவிட்டதா? ; இந்து மதப்பாடலை பாடிய இஸ்லாமிய பெண்ணிற்கு அடிப்படைவாதிகள் கடும் எதிர்ப்பு…
கர்நாடகத்தின் ஷிவ்மோகாவில் உள்ள சாகர தாலுகாவை சேர்ந்த 22 வயது சுஹானா சையத், ஜீ டிவியின் நடைபெற்று வரும் நிகழ்ச்சி ஒன்றில், அந்த நிகழ்ச்சியை கண்டு களித்த அத்தனை ரசிகர்களையும், தன்னுடைய அற்புதமான குரலினால், ஆத்மார்த்தமான உணர்வினால் வசீகரித்தார் என்று கூறினால், அது மிகையில்லை. கன்னடப்படமான கஜாவில் வரும் "ஸ்ரீகரனே ஸ்ரீநிவாசனே " என்ற பக்தி பாடலை, சுஹானா பாடி முடித்தபோது, அந்நிகழ்ச்சியின் நடுவர்களும், பார்வையாளர்களும் ஆரவாரமான வரவேற்பை அளித்தார்கள். இஸ்லாமிய பெண் இந்து பக்தி பாடலை பாடுகிறார் … Continue reading இசையிலும் மதம் வந்துவிட்டதா? ; இந்து மதப்பாடலை பாடிய இஸ்லாமிய பெண்ணிற்கு அடிப்படைவாதிகள் கடும் எதிர்ப்பு…
கார்ப்பரேட் சாமியார்கள் ஏன் தேவைப்படுகிறார்கள்?
இளங்கோ கிருஷ்ணன் கார்ப்பரேட் சாமியார்கள் ஏன் தேவைப்படுகிறார்கள் என்பதற்கு சமூகரீதியான காரணிகள் என்ன என்று சிந்தித்துக்கொண்டிருந்தேன். என்னால் தெளிவாக சொல்ல முடியவில்லை. ஆனால் சில அவதானங்களுக்கு வர முடிகிறது அதைப் பற்றி நிறைய கேள்விகள் உள்ளன.. ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய, தொடர்பற்ற குழப்பமான கேள்விகள் இவை... இவற்றை தொகுக்க முயன்றுகொண்டிருக்கிறேன். இவை கறாரான சிந்தனைகள் அல்ல என்னுள் இருப்பதன் கரட்டு வடிவங்கள் என்பதால் இது குறித்து முழுமையாக ஏதும் சொல்லாமல் இருக்கிறேன். 1.தொன்னூறுகளின் பிற்பகுதியில்தான் கார்ப்பரேட் சாமியார்கள் … Continue reading கார்ப்பரேட் சாமியார்கள் ஏன் தேவைப்படுகிறார்கள்?