சைதை துரைசாமி உள்ளிட்ட ஏழு மேயர்களுக்கு வாய்ப்பு மறுப்பு!

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பட்டியலை அதிமுக பொதுச்செயலளார் திங்கள்கிழமை வெளியிட்டார். இதில் சென்னை மேயர் சைதை துரைசாமி உள்ளிட்ட ஏழு மேயர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. திருப்பூர், வேலூர், கோவை, திருநெல்வேலி மேயர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. திண்டுக்கல் மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால், தற்போதைய மேயர் மருதராஜின் மகள் பொன். முத்துக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சேலம், மதுரை, திருச்சி, திருச்செங்கோடு மேயர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தல் முதல் மேயர் … Continue reading சைதை துரைசாமி உள்ளிட்ட ஏழு மேயர்களுக்கு வாய்ப்பு மறுப்பு!

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பிலேயே அதிமுகவுக்கு ஆதரவு நிலை: ராமதாஸ்

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல்கள் அடுத்த மாதம் 17 மற்றும் 19 ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டதற்கு அடுத்த நாளே வேட்புமனுத் தாக்கல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இது ஆளுங்கட்சியான அதிமுகவுக்கு சாதகமாகவும், மற்ற கட்சிகளுக்கு பாதகமாகவும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும்" என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல்கள் அடுத்த மாதம் 17 மற்றும் 19 ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக … Continue reading உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பிலேயே அதிமுகவுக்கு ஆதரவு நிலை: ராமதாஸ்

உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு

தமிழகத்தில் தற்போதுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் அடுத்த மாதம் அக்டோபர் 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தல் தேதிகளை அறிவித்துள்ளது. தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் சீதாராமன் சென்னையில் தேர்தல் தேதிகளை அறிவித்தார். தேர்தல் 2 கட்டங்களாக அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும் நவம்பர் 2-ஆம் தேதி மேயர் தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நாள்: அக்டோபர் 21ஆம் தேதி.  

மக்கள் நலக்கூட்டணியிலிருந்து வெளியேறுகிறோம்: கி. வீரலட்சுமி

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து பல்லாவரம் தொகுதியில் போட்டியிட்டார் தமிழர் முன்னேற்றப்படை தலைவர் கி. வீரலட்சுமி. தேர்தல் தோல்வியுற்ற அவர், தற்போது மக்கள் நலக்கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். அவருடைய முகநூல் பதிவில், “கடந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நல கூட்டணிக்கு தமிழர் முன்னேற்றப்படை ஆதரவை தெரிவித்தோம். 19:07:2016, இன்று அந்த ஆதரவு நிலையை திரும்ப பெற்று கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம்” என தெரிவித்துள்ளார்.

தனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஊராட்சித் தலைவரை 16 ஆண்டுகளாக காணவில்லை: மகன் புகார்

தனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஊராட்சித் தலைவரை 16 ஆண்டுகளாக காணவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து எழுத்தாளரும் சமூக செயல்பாட்டாளருமான துரை குணா தனது முகநூல் பக்கத்தில்... (தனி) தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப்பெற்று பதவியில் இருக்கும்போதே கோப்புகளுடன் காணாமல்போன ஊராட்சி மன்ற தலைவரைத் தேடி கண்டுப்பிடிக்க இன்று தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் புகார். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா காடுவெட்டிவிடுதி ஊராட்சியை முதல் முதலாக (தனி) தொகுதியாக அறிவித்தப்போது 1996-2001- ன் ஆண்டுக்கான உள்ளாட்சி தேர்தலில் காடுவெட்டி … Continue reading தனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஊராட்சித் தலைவரை 16 ஆண்டுகளாக காணவில்லை: மகன் புகார்

தங்களை பாதிக்கும் பிரச்சினைகளுக்கு மக்களின் எதிர்வினை என்னவாக இருக்கிறது: இந்த வேட்பாளரின் அனுபவத்தை படியுங்கள்!

வெ.ஜீவக்குமார் ஐவகை நிலங்களில் தலையாய மருதமே எமது பிரதேசமாகும். ஊரின் பெயரே ஐந்து நதிகளைச் சுட்டிக்காட்டும் திருவையாறு எமது தொகுதியாகும். தன் பரிவாரங்களுடன் பட்டத்து யானையில் தினமும் பவனி வந்து பார்வை இட்டு கரிகாற் சோழன் கட்டிய கல்லணை இத்தொகுதியில்தான் உள்ளது. பொன்னியின் செல்வன் காலத்தில் வந்தியத் தேவன் ஓட்டிய குதிரையின் குளம்படி தடங்கள் ஆற்றங்கரைகளில் இப்போதும் ஒளிந்து கிடக்கலாம்.எனினும் திருவையாறு சட்டமன்ற பரப்பு காவிரிச் சமவெளி பகுதியை மட்டுமே உள்ளடக்கியது அல்ல. கட்டளை மேட்டு வாய்க்கால், … Continue reading தங்களை பாதிக்கும் பிரச்சினைகளுக்கு மக்களின் எதிர்வினை என்னவாக இருக்கிறது: இந்த வேட்பாளரின் அனுபவத்தை படியுங்கள்!

பினராயி விஜயனுக்கு ஜெயலலிதா வாழ்த்து!

கேரள முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள பினராயி விஜயனுக்கு தமிழக முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜெயலலிதா, பினராயி விஜயனுக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அண்மையில் நடைபெற்ற கேரள சட்டமன்றத் தேர்தலில் இடதுசாரி ஜனநாயக முன்னணி மகத்தான வெற்றி பெற்று கேரள முதலமைச்சராக  பினராயி விஜயன் பதவியேற்றுள்ளதற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். பினராயி விஜயன் தலைமையில் கேரள மாநிலம் வளர்ச்சி மற்றும் வளம் நிறைந்ததாக மாறுவதற்கு தமது நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாகவும் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

“விஜயகாந்த் பின்னால் சென்ற கம்யூனிஸ்டுகளிடம் எங்கே இருக்கிறார்கள் மார்க்ஸும் எங்கெல்சும்?” என்ற தமிழருவி மணியனுக்கு ஒரு பதில்

அரசியலிருந்து விலகுவதாக அறிவித்த தமிழருவி மணியன், புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டி அளித்திருந்தார். இதில் “விஜயகாந்த் பின்னால் சென்ற கம்யூனிஸ்டுகளிடம் எங்கே இருக்கிறார்கள் மார்க்ஸும் எங்கெல்சும்?" என்று கம்யூனிஸ்டுகள் குறித்து காட்டமாக பேசினார் தமிழருவி மணியன். மணியனின் இந்தப் பேச்சுக்கு பேரா. அருணன் அளித்திருக்கும் பதில்: “நேற்று ஒரு டி வி பேட்டியில் "எம் ஜி ஆர், விஜயகாந்த் என்று நடிகர்கள் பின்னால் சென்ற கம்யூனிஸ்டுகளிடம் எங்கே இருக்கிறார்கள் மார்க்ஸும் எங்கெல்சும் ?" என்று கேலியாக கேட்டார் தமிழருவிமணியன். கடந்த மக்களவைத் தேர்தலில் பா ஜ … Continue reading “விஜயகாந்த் பின்னால் சென்ற கம்யூனிஸ்டுகளிடம் எங்கே இருக்கிறார்கள் மார்க்ஸும் எங்கெல்சும்?” என்ற தமிழருவி மணியனுக்கு ஒரு பதில்

தின்ன சோத்துக்கு ஊறுகா தேடி என்ன பிரயோசனம்? : ஆதவன் தீட்சண்யா

ஆதவன் தீட்சண்யா (‘மண்ணில் இந்தக் காதலன்றி’ என்று எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடியது போன்றோ, வேலையில்லாத பட்டதாரியில் வில்லப்பொடியனிடம் தனுஷ் பேசுவது போன்றோ மூச்சுவிடாமல் கீழ்காணும் பத்தியை வாசிக்கவும்) சட்டமன்றத் தேர்தலை எப்படி நடத்தணும்னு தேர்தல் ஆணையத்திற்கு ஆலோசனை சொல்லி, தேர்தலை எந்தெந்தக் கட்சி எப்படி எதிர்கொள்ளப் போகுது- யார் யாரோடு கூட்டு சேர்ந்து யாரை எதிர்க்க / ஆதரிக்கப் போறாங்கன்னு குறிசொல்லி, எந்தக்கூட்டணி பலமா இருக்கு? பலமா தெரியற கூட்டணியோட பலவீனம் என்ன, பலவீனமா தெரியற கூட்டணியோட … Continue reading தின்ன சோத்துக்கு ஊறுகா தேடி என்ன பிரயோசனம்? : ஆதவன் தீட்சண்யா

குற்றவாளிக் கூண்டில் அதிமுக, திமுக: ஜி. ராமகிருஷ்ணன்

அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளே காரணம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளுக்கான தேர்தல் அறிவிப்பை, தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. ஏற்கனவே தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்ட பிறகு, இடைப்பட்ட காலத்திலும் பணப்பட்டுவாடா நடந்திருப்பதாக ஆணையம் கவலை தெரிவித்துள்ளது. அரவக்குறிச்சியில் மட்டும், அதிமுக வேட்பாளர் ரூ.59.4 கோடியும், திமுக வேட்பாளர் ரூ.39.6 … Continue reading குற்றவாளிக் கூண்டில் அதிமுக, திமுக: ஜி. ராமகிருஷ்ணன்

“இறப்பு என்னைத் தழுவும் இறுதி நாள் வரை அரசியல் உலகத்தில் மீண்டும் அடியெடுத்து வைப்பதில்லை” : தமிழருவி மணியன்

பொது வாழ்வை விட்டுப் போகிறேன்… என்ற தலைப்பில் தமிழருவி மணியன் அளித்துள்ள அறிக்கை: நட்சத்திரங்கள் இல்லாத இரவு நேரத்து வானம், சங்கீத மொழி பேசி சலசலத்து ஓடுவதற்குத் தண்ணீரின்றிக் காய்ந்து கிடக்கும் ஓடை, இலைகள் உதிர்ந்து கிளைகளோடு மட்டும் காட்சிதரும் ஒற்றை மரம் ஆகியவற்றைப் போன்றதுதான் என் அரசியல் வாழ்வும். உண்மை பேசினால் உயரமுடியாது என்று உணர்ந்த பின்பும், பொய்யை விலை பேசி விற்பவருக்குத் தான் பதவியும் அதிகாரமும் வந்து சேரும் என்பதைப் பூரணமாக அறிந்த பின்பும், நேர்மையுடன் … Continue reading “இறப்பு என்னைத் தழுவும் இறுதி நாள் வரை அரசியல் உலகத்தில் மீண்டும் அடியெடுத்து வைப்பதில்லை” : தமிழருவி மணியன்

திமுக: நம்பகமான கூட்டாளியா?

ஸ்டாலின் ராஜாங்கம் அதிமுக பெரும்பான்மை பலம் பெற்றிருக்கிறது. திமுக வலிமையான எதிர்க்கட்சியாக மாறியிருக்கிறது. தலித் கட்சிகளின் பிரதிநிதிகள் மட்டுமல்லாது இடதுசாரிகள் கூட இல்லாத சட்டசபையாகியிருக்கிறது. இது தொடர்பாக பொறுமையாக பின்னால் எழுத வேண்டும். இப்போதைக்கு சிறு கணக்கீடு மட்டும் இங்கே. இத்தேர்தலில் தலித் தலைவர்கள் குறைந்த வாக்குவித்தியாசத்தில் தோல்வி அடைந்திருக்கிறார்கள். திருமாவளவன் 87,டாக்டர் கிருஷ்ணசாமி 493,சிவகாமி 6853 ஆகிய வாக்குகள் வித்தியாசங்களிலேயே தோற்றிருக்கின்றார்கள். திருமாவளவனுக்கு காட்டுமன்னார்கோயிலும் கிருஷ்ணசாமிக்கு ஒட்டப்பிடாரமும் செல்வாக்கான தொகுதிகள். தங்களுக்கிருக்கும் ஓட்டுகளோடு மற்றொரு கட்சியின் … Continue reading திமுக: நம்பகமான கூட்டாளியா?

“93 வயதிலும் நான் தான் முதல்வர் என்பதும் தயாநிதியுடன் சேர்ந்துகொண்டு பிரசாரத்துக்குப் போவதும் நெஞ்சழுத்தம் அல்லாது வேறென்ன?”

ஜி. கார்ல் மார்க்ஸ் ஜெயா ஜெயித்ததற்காக அறச்சீற்றத்தில் கொந்தளிக்கும் அதே நேரத்தில் திமுக தோற்றதற்காகவும் சிலர் வெம்பி வெடிப்பது நகைமுரண். ஜெயலலிதா எப்படி வெற்றி பெறத் தகுதி இல்லாத ஒருவரோ அதே அளவுக்கு தகுதியற்ற ஒருவர்தான் கருணாநிதியும் என்பது தான் மக்கள் சொல்லியிருக்கும் செய்தி. ஒப்பாரியையும், வசையையும், முத்திரை குத்தலையும் நிறுத்திவிட்டு கட்சி அபிமானிகளுக்கு இதில் யோசிக்க சில விஷயங்கள் உண்டு. இப்போதும் கண்முன் இருக்கும் உதாரணங்கள் நிறைய: கருணாநிதி ஒன்றும் எம்ஜியார் கிடையாது படுத்துக்கொண்டே ஜெயிப்பதற்கு. … Continue reading “93 வயதிலும் நான் தான் முதல்வர் என்பதும் தயாநிதியுடன் சேர்ந்துகொண்டு பிரசாரத்துக்குப் போவதும் நெஞ்சழுத்தம் அல்லாது வேறென்ன?”

“வெற்றி வாய்ப்பை இழந்தாலும் எமது சேவை தன்னலமின்றி தொடரும்”: ஜவாஹிருல்லா

தேர்தல் முடிவுகள் குறித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா: நடந்து முடிந்துள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிகார பலம், பண பலம், ஓரவஞ்சனையுடன் செயல்பட்ட தேர்தல் ஆணையத்தின் துணையுடன் தேர்தலை சந்தித்த அதிமுகவை விட 1.2 சதவீதம் வாக்குகள் மட்டுமே குறைவாகப் பெற்று திமுக கூட்டணி சாதனைப் படைத்துள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சி நிலைகூட இல்லாத திமுக இன்று மிகப்பெரும் எண்ணிக்கையில் எதிர்க்கட்சியாக உருவாகி இருக்கின்றது. இந்த நிலையை உருவாக்கிட திமுக தலைமையிலான … Continue reading “வெற்றி வாய்ப்பை இழந்தாலும் எமது சேவை தன்னலமின்றி தொடரும்”: ஜவாஹிருல்லா

அதிமுக அரசின் புதிய அமைச்சர்கள் பட்டியல்

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 134 தொகுதிகளில் வெற்றி பெற்று அதிமுக மீண்டும் ஆட்சியமைக்கிறது. இன்று ஆளுநரை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆட்சியமைக்க உரிமை கோரினார். அப்போது அமைச்சரவை பட்டியலையும் சமர்பித்தார்.  தற்காலிக சபாநாயகராக முன்னாள் அமைச்சர் செ. செம்மலை நியமனம் செய்யப்பட்டுள்ளார். அமைச்சர்கள் பட்டியல்: ஜெயலலிதா- முதலமைச்சர், இந்திய ஆட்சிப்பணி, காவல், உள்துறை ஒ.பன்னீர்செல்வம்- நிதித்துறை நிர்வாக சீர்திருத்தம் திண்டுக்கல் சீனிவாசன்- வனத்துறை எடப்பாடி பழனிச்சாமி- பொதுப்பணித்துறை செல்லூர் ராஜூ- தொழிலாளர் … Continue reading அதிமுக அரசின் புதிய அமைச்சர்கள் பட்டியல்

திமுக தோல்விக்கு வைகோ காரணமா?: உடன் பிறப்புகளுக்கு 11 கேள்விகள்!

விஷ்வா விஸ்வநாத் கடந்த ரெண்டு நாளாக வைகோவை எண்ணி எண்ணி குமுறி குமுறி நிலத்தில் புரண்டு புரண்டு சின்னப்புள்ளங்க மாதிரி அழுது கதறி கதறி சிலர் எழுதிட்டு இருப்பதை பார்க்கும்போது அடிப்படையான சில கேள்விகள் எழுகின்றன. 1. வைகோ திமுகவில் பொறுப்பு வகித்து கொண்டே அக்கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து உள்குத்து வேலை செய்யவில்லை. அவர் தனக்கென்று ஒரு தனிக்கட்சி வைத்துள்ளார். தேர்தல் காலத்தில் ஒரு கூட்டணியை ஒருங்கிணைக்கிறார். இதில் என்ன தவறு ? 2. அவர் … Continue reading திமுக தோல்விக்கு வைகோ காரணமா?: உடன் பிறப்புகளுக்கு 11 கேள்விகள்!

சீமானைவிட அதிக வாக்குகள் பெற்ற கி.வீரலட்சுமி, மூன்றாவது இடத்தில்!

நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் பல்லாவரம் தொகுதியில் போட்டியிட்ட தமிழர் முன்னேற்றப்படை நிறுவனர் கி. வீரலட்சுமி 14083 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர், அதிமுக வேட்பாளருக்கு அடுத்த படியாக வந்துள்ளார். மதிமுகவின் பம்பரம் சின்னத்தில் மக்கள் நலக் கூட்டணி சார்பில் வீரலட்சுமி போட்டியிட்டார். அதிமுக சார்பில் போட்டியிட்ட சி. ஆர். சரஸ்வதியின் வெற்றியை இவர் வெகுவாக பாதித்திருக்கிறார். சரஸ்வதி 90, 000 வாக்குகளும் திமுக வேட்பாளர் 1லட்சத்து 11 ஆயிரம் வாக்குகளையும் பெற்றுள்ளார். கி.வீரலட்சுமி குறித்து … Continue reading சீமானைவிட அதிக வாக்குகள் பெற்ற கி.வீரலட்சுமி, மூன்றாவது இடத்தில்!

மாற்றத்திற்கான மையப்புள்ளி திருமாவளவன்..!

மு.ரா. பேரறிவாளன் மக்கள் நலக்கூட்டணி என்ற மாற்று முயற்சி படுதோல்வி அடைந்ததாக ஊடகங்களால், இணையதள அறிவாளிகளால் எடுத்துரைக்கப்படும் மூடத்தனமான பரப்புரைகளுக்கு பின்னால், மக்கள் நலக்கூட்டணி ஏற்படுத்தி பெரிய அதிர்வு வெகு சாமர்த்தியமாக மறைக்கப்படுகிறது என்பதை நாம் கவனிக்கவேண்டும். மக்கள் நலக்கூட்டணி உதயமானது முதலே நிலவிய தி.மு.க தரப்பு பதட்டங்களும், அ.தி.மு.க தரப்பின் அமைதியும் சமூக வளைதளத்தை உபயோகிக்கும் சாமானியருக்கும் தெரிந்திருக்கும். நாம் முன்பே குறிப்பிட்டதை போல எந்த காரணத்தாலும் அ.தி.மு.க தொண்டர்கள் வாக்கை மாற்ற மாட்டார்கள் என்ற … Continue reading மாற்றத்திற்கான மையப்புள்ளி திருமாவளவன்..!

அதிமுக ஏன் மீண்டும் வென்றது? திமுக எதனால் தோற்றது?: ஜெயமோகன்

தேர்தல் முடிவுகள் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் தனது வலைப்பக்கதில் எழுதியுள்ள கட்டுரை: ஜெயலலிதா அரசு மேல் மக்களுக்கு மிகக்கடுமையான வெறுப்பும் அவநம்பிக்கையும் இருக்கிறது. செயல்படாத அரசு, ஊழல் அரசு என்றே பெரும்பாலானவர்கள் நினைக்கிறார்கள் அதற்கு மாற்றாக திமுக அன்றி வேறு எந்த கட்சியும் இல்லை என்றும் நினைக்கிறார்கள். ஆனால் கணிசமானவர்கள் திமுகவுக்கு வாக்களிக்கத் தயாராக இல்லை. குறிப்பாகப் பெண்கள் திமுகவுக்குப் போடுவதைவிட மீண்டும் ஜெயலலிதாவுக்கு வாக்களிக்கவே விரும்புகிறார்கள் அதற்கு முதற் காரணம் ஜெயலலிதாவின் அரசின் செயல்பாடுகள் எப்படி … Continue reading அதிமுக ஏன் மீண்டும் வென்றது? திமுக எதனால் தோற்றது?: ஜெயமோகன்

“அதிமுக பிரச்சாரத்தில் இறந்தவர்கள் பற்றி பேசாமல், நான் கண்ணயர்ந்ததை திரும்ப திரும்ப காட்டீனீர்களே ஏன்?” நியூஸ் 7க்கு திருமா கேள்வி

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முதல்முறையாகக் கலந்துகொண்டார். நியூஸ் 7 தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் பல முக்கியமான கேள்விகளுக்கு பதிலளித்திருக்கிறார். அதில், ஊடகங்கள் குறித்தும் சில உண்மைகளைப் பேசியிருக்கிறார்.  நேர்கண்டவர் செந்தில். ஏன் இந்தக் கூட்டணி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்ற கேள்விக்கு, “ஜெயலலிதாவை பார்க்க வந்து மாண்டுபோனவர்கள் பற்றி திரும்ப திரும்ப ஒளிபரப்பாமல் திருமாவளவன் தூங்கியதை திரும்ப திரும்ப காட்டினீர்கள். இதெல்லாம் எங்கள் அணியை சிதைக்கும் முயற்சிதான்” … Continue reading “அதிமுக பிரச்சாரத்தில் இறந்தவர்கள் பற்றி பேசாமல், நான் கண்ணயர்ந்ததை திரும்ப திரும்ப காட்டீனீர்களே ஏன்?” நியூஸ் 7க்கு திருமா கேள்வி

பேரா. அருணனுக்கு விட்ட சவால் என்ன ஆனது? சீமானின் பதில்!

கடந்த சில மாதங்களுக்கு முன் தந்தி தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், “மக்கள் நலக் கூட்டணியை விட அதிக வாக்குகளை நாங்கள் பெறுவோம். குறைவாகப் பெற்றால் நாம் தமிழர் கட்சியைக் கலைத்துவிட்டு, கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்துவிடுகிறேன்” என்று பேசினார். இதைப் படியுங்கள்: #வீடியோ: “ஏய், சும்மா லூசு மாதிரி பேசுக்கிட்டு இருக்காதய்யா” தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேராசிரியர் அருணனை ஏசிய சீமான்; சிரித்து ரசித்த பாண்டே! தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியிருக்கின்றன. நாம் … Continue reading பேரா. அருணனுக்கு விட்ட சவால் என்ன ஆனது? சீமானின் பதில்!

ஷுட்டிங் புறப்பட்ட விஜயகாந்த்!

தமிழக தேர்தல் முடிவுகள் வெளியாகி எதிர்பார்த்த வெற்றி கிடைக்காத நிலையில் ‘தமிழன் என்று சொல்’ படப்பிடிப்பில் இருப்பதாக ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார் தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த். https://twitter.com/iVijayakant/status/733594228278730752 https://twitter.com/iVijayakant/status/733593916461580288 https://twitter.com/iVijayakant/status/733588272580952064 https://twitter.com/iVijayakant/status/733577518544916481  

“தேர்தலை உடனடியாக நடத்தாவிட்டால் நானே போராட்டத்தில் ஈடுபடுவேன்”: கருணாநிதி

பணப்பட்டுவாடா நடத்தப்பட்டதாக ஒத்திவைக்கப்பட்ட தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தலை மீண்டும் ஒத்திவைக்க இருப்பதாக தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பாஜக, பாமக தேர்தலை ரத்து செய்யக் கோரி தொடர்ந்த வழக்கில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு.கருணாநிதி மீண்டும் தேர்தல் ஒத்திவைக்கப்படுவது திமுகவுக்கு எதிரான சதி என்றும் தேர்தல் ஆணையம் ஆளும் கட்சி ஆதரவாக செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், தேர்தலை உடனடியாக நடத்தாவிட்டால் தானே போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் எச்சரித்தார். முன்னதாக தேர்தல் முடிவுகள் குறித்து … Continue reading “தேர்தலை உடனடியாக நடத்தாவிட்டால் நானே போராட்டத்தில் ஈடுபடுவேன்”: கருணாநிதி

நோட்டாவால் வாய்ப்பிழந்த 15 திமுக வேட்பாளர்கள்!

நடந்து முடிந்த தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் நோட்டா வேட்பாளர்களின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் வகையில் செயல்பட்டிருக்கிறது. இதில் காட்டுமன்னார்கோயிலில் போட்டியிட்ட விசிக தலைவர் திருமாவளவனைத் தவிர, மற்ற அனைவரும் திமுக வேட்பாளர். இந்தத் தொகுதிகளில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வென்றுள்ளது. (தகவல்: Su Po Agathiyalingam) ஆவடி தொகுதியில் நோட்டாவுக்கு விழுந்த வாக்குகள் 4994. இந்தத் தொகுதியில் 1395 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறார் திமுக வேட்பாளர். பர்கூர் தொகுதியில் நோட்டாவுக்கு 1382 வாக்குகள். … Continue reading நோட்டாவால் வாய்ப்பிழந்த 15 திமுக வேட்பாளர்கள்!

மாற்று முழக்கம் தோற்றுவிட்டதா?

மாதவராஜ் தமிழக தேர்தல் முடிவுகள், நம்பிக்கைகளை தொலை தூரத்தில் காட்டுவதாகவே இருக்கின்றன. ஆளும் கட்சியான அதிமுகவின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக இணைந்து போராட்டங்கள் நடத்தும் உறுதியோடு இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும், மதிமுகவும் இணைந்து மக்கள் நலக் கூட்டு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. சில மாதங்களில் எதிர்வந்த தேர்தலையொட்டி, இந்த கூட்டு இயக்கமானது ஊழல் மலிந்த, அரசியல் நேர்மையற்ற, சர்வாதிகார மனப்பான்மை கொண்ட, மக்கள் விரோத திமுக, அதிமுகவுக்கு மாற்றாக மக்கள் நலக் கூட்டணியாக … Continue reading மாற்று முழக்கம் தோற்றுவிட்டதா?

நேற்றைய தேதியோடு வரலாறு தேங்கிவிடவில்லை!

அ.குமரேசன் கம்யூனிஸ்ட்டுகளைப் பொறுத்தவரையில் சமத்துவ சமுதாய மாற்றமே இலக்கு. அதற்கான ஒரு பாதைதான் நாடாளுமன்ற - சட்டமன்றத் தேர்தல். தேர்தலே இறுதி இலக்கல்ல. அந்த ஒரு பாதை மற்றவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால் பயணத்தை நிறுத்துவதற்கில்லை. இலக்கை அடைவதற்கான வீரமிகு போராட்டங்கள், இயல்பான தன்னலமில்லா தியாகங்கள், தீவிரமும் எளிமையுமான கருத்துப் பரவல் இயக்கங்கள், பாதிக்கப்படுவோருக்காகத் தன்னுணர்வான தொண்டுகள், சமரசமற்ற முற்போக்கு அடையாளங்கள், மக்களைத் திரட்டும் மாபெரும் முயற்சிகள்... ஆகிய பாதைகளை மூடுவதற்கில்லை. பதிவான வாக்குகளில் அதிமுக-வுக்கு சுமார் 41 சதவீதம் … Continue reading நேற்றைய தேதியோடு வரலாறு தேங்கிவிடவில்லை!

“இந்த முடிவுகளில் நமக்குப் பெரிய ஆச்சரியம் இல்லை”

தேர்தல் முடிவுகள் குறித்து சிபிஐ  மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன் கருத்து: தமிழக தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. இந்த முடிவுகளில் நமக்குப் பெரிய ஆச்சரியம் இல்லை. இத்தகைய வெற்றியைப் பெற்றமைக்காக அதிமுக, திமுக கட்சிகள் வெட்கப்பட வேண்டும். மே மாதம் 16 ம் தேதி இயற்கை மழை பொழிந்தது. அதற்கு முன்னதாக ஊழல் மூலம் சேர்த்த கோடிக்கணக்கான ரூபாய்களைக் கொண்டு ஏற்கெனவே ஆண்ட கட்சியும், ஆளுகின்ற கட்சியும் தமிழ்நாடு முழுவதும் நீக்கமற பணமழையை பொழிந்தன. அண்ணா , காமராஜர் போன்ற தலைவர்கள் … Continue reading “இந்த முடிவுகளில் நமக்குப் பெரிய ஆச்சரியம் இல்லை”

“தர்மம் மீண்டும் வெல்லும்”

தேர்தல் முடிவுகள் குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருத்து: “தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் நடந்த போரில், ஜனநாயகத்தை பணநாயகம் வென்றுள்ளது. ஆனால் எல்லா நேரங்களிலும் சத்தியமே ஜெயிக்கும் என்பதை வரும் காலங்கள் உணர்த்தும். “தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், ஆனால் தர்மம் மீண்டும் வெல்லும்”. தேமுதிக, தமாகா, மக்கள் நலக்கூட்டணியை ஆதரித்து வாக்களித்த அனைத்து வாக்காள பெருமக்களுக்கும் நன்றி!  

”ஊழல் பணநாயகம் வென்றுள்ளது”

தேர்தல் முடிவுகள் குறித்து தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி - தமாகா அணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் ஊழல் பணநாயகம் வென்றுள்ளது அதிமுகவும், திமுகவும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயை வாரி இறைத்து வாக்குகளை ‘வாங்கி’ இருக்கின்றன. தமிழகத்தில் இந்த நச்சுச் சுழல் தொடரவிடாமல், மக்கள் ஆட்சித்தத்துவம் காக்க உத்வேகத்துடன் தொடர்ந்து போராடுவோம். மாற்று அரசியலை முன்னெடுத்துச் செல்ல அகரம் எழுதி இருக்கின்ற தேசிய முற்போக்கு திராவிட கழகம் … Continue reading ”ஊழல் பணநாயகம் வென்றுள்ளது”

கருத்து திணிப்புகள் மீண்டும் பொய்த்துப்போன தேர்தல் இது!

Thiru Yo தேர்தல் மற்றும் வர்த்தக நோக்கங்களுக்கு நடத்தப்படுகிற கருத்துக் கணிப்புகள் எவ்வளவு போலியான கருத்துத் திணிப்புகள் என்பதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. லயோலா முன்னாள் மாணவர்கள், அந்நாள் மாணவர்கள், முந்தாநாள் மாணவர்கள் துவங்கி விகடன், நக்கீரன் என இதழ்களும், தொலைக்காட்சிகளும் உற்பத்தி செய்த தேர்தலுக்கு முந்தைய, தேர்தலுக்கு பிந்தைய அனைத்து கருத்துத் திணிப்புகளும் அப்பட்டமாக தடைசெய்யப்பட வேண்டியவை. அவை அனைத்தும் விளம்பரங்கள் மற்றும் கட்சிகளிடமிருந்து பலனை எதிர்பார்த்து உருவாக்கப்பட்டவை. ஊடகங்களின் நேர்மையை இத்தேர்தல் அம்பலப்படுத்தியது. … Continue reading கருத்து திணிப்புகள் மீண்டும் பொய்த்துப்போன தேர்தல் இது!

தேர்தலில் கற்க நிறைய இருக்கிறது!

பரமேசுவரி திருநாவுக்கரசு ஆசிரியப் பணியாகவும் தேர்தல் பணியாகவும் தொடர்ந்து கிராமங்களில் பணியாற்றுவதை சிற்சில இடர்ப்பாடுகள் கடந்து வரமாகவே நினைக்கிறேன். இந்தத் தேர்தல் முடிவு சில மாதங்களுக்கு முன்னரே உள்ளுணர்வு உணர்த்திய ஒன்று. அதிமுகவின் இந்த வெற்றி கொண்டாடப்பட வேண்டியதல்ல. சற்றே நிதானிக்க, சிந்திக்க வேண்டிய இடத்தில் மக்கள் நிறுத்தியிருக்கிறார்கள் என்பதை உணர வேண்டும். வளர்ச்சித் திட்டங்களைச் சிந்தியாமல், செயல்படுத்தாமல் அதீத இலவசங்களுக்கே மக்கள் பெரும்பான்மை அளித்து விடுவார்களென்று நினைத்ததற்கான மரண அடியிது. சென்றமுறைபோல் அதீதப் பெரும்பான்மைஆட்சி இந்த … Continue reading தேர்தலில் கற்க நிறைய இருக்கிறது!

“எமது நோக்கம் உன்னதமானது! எமது பயணம் தொய்வின்றித் தொடரும்!”: தொல்.திருமாவளவன்

தமிழக தேர்தல் முடிவுகள் குறித்து விடுதலை சிறுத்தைகள் நிறுவனத் தலைவர் தொல். திருமாவளவன்: “2016-சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் எமது கூட்டணி முன் வைத்த 'மாற்று அரசியலுக்கு' ஆதரவாக அமையவில்லை என்பது சற்று அதிர்ச்சி அளிக்கவே செய்கிறது. எனினும், மக்கள் அளித்த தீர்ப்புக்குத் தலை வணங்குகிறோம் ! எமது நோக்கம் உன்னதமானது; மக்கள் நலன்களை அடிப்படையாகக் கொண்டது! எமது முயற்சியும் உழைப்பும் தூய்மையானது;தொலைநோக்குப் பார்வை கொண்டது! நாங்கள் விதைத்த மாற்று அரசியல் ஒரு வருடத்தில் விளையும் பயிர் அல்ல … Continue reading “எமது நோக்கம் உன்னதமானது! எமது பயணம் தொய்வின்றித் தொடரும்!”: தொல்.திருமாவளவன்

வெற்றி, தோல்வியை வைத்து விமர்சிக்காதீர்!

அன்பு செல்வம் தலைவர் திருமா அவர்களுக்கு பாராட்டுக்கள்! தலைவர் வெற்றியடைந்திருந்தால் அதீத மகிழ்ச்சியே. ஆனாலும் தன‌க்கான தனித்தன்மையோடு வெற்றிக்கு மிக அருகில் இணையாகத் தான் இருக்கிறார் (48450 / 48363). கிட்டத்தட்ட அனைத்து ம.ந. கூட்டணித் தலைவர்களுக்கும், வேட்பாளர்களுக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டு, கிடைத்த சொற்ப நேரத்தில் தனது தொகுதி மக்களிடமும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு, சொந்த சமூகத்தைச் சார்ந்தவரையே எதிர்கொண்டு களத்தில் நிற்க வேண்டியிருக்கிறதே அது மிகவும் துயரமானது. எனினும் அதையும் கடந்து அவர் பெற்ற வாக்குகள் இத்தனையென்றால் … Continue reading வெற்றி, தோல்வியை வைத்து விமர்சிக்காதீர்!

ஜெயலலிதா அவர்களே…வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

இராசையா சின்னத்துரை ஜெயலலிதா அவர்களே... தொண்ணுறுகளுக்கு பின் தமிழகத்தில் தொடர்ச்சியாக இரண்டாவது முறை யாரும் தேர்தலில் வென்று ஆட்சியை பிடித்ததில்லை. அதிகாரத்தைக் கைப்பற்றி இருக்கின்றீர்கள். வாழ்த்துகள். மக்கள் நல்லவர் கெட்டவர் கொள்கை கோட்பாடுகள் பார்த்து வாக்களிப்பதில்லை என்பதால் இதை சாதனையாக கருதுவது எளிய மனங்களின் செயல்பாடுகள் மட்டுமே. விதந்தோத ஒன்றும் இல்லை. ஆனால், காலம் உங்களுக்கு வாய்ப்பளித்துள்ளது மக்களுக்கு நிறைய செய்யமுடியும். உலகம் எப்போது சுதந்திர மனிதர்களால் நிறைந்துள்ளதோ அன்றுதான் மனிதகுலத்தின் விடுதலை சாத்தியமாகும். அதிகாரத்தில் இல்லாதவர்கள் … Continue reading ஜெயலலிதா அவர்களே…வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

“வேதனையும் விரக்தியும் மேலெழுந்து நிற்கின்றன”

தமிழக தேர்தல் முடிவுகள் குறித்து காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கருத்து: ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை 1984 முதல் அ.தி.மு.க.வும்  தி.மு.க.வும்  தமிழகத்து ஆட்சி நாற்காலியில் மாறி மாறி அமரும் சூழல் இன்று முறியடிக்கப்பட்டு அ.தி.மு.க.,வே   மீண்டும் ஆட்சியில் தொடரும் நிலை வாய்த்திருக்கிறது.  இது முதல்வர் ஜெயலலிதாவின் அதீத நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி என்றாலும் இந்த முடிவு ஆரோக்கியமான அரசியல் நடவடிக்கைகளையும், ஊழலற்ற ஆட்சிமுறையையும், நேர்த்தியான நிர்வாகத்திறனையும் ஏக்கத்துடன் எதிர்பார்க்கும் சமூகப் பொறுப்புணர்வு மிக்க … Continue reading “வேதனையும் விரக்தியும் மேலெழுந்து நிற்கின்றன”

ஜெயலலிதாவின் வெற்றியும் மக்களின் எதிர்பார்ப்பும்!

நாச்சியாள் சுகந்தி போயஸ் தோட்ட வீட்டில் ஜெயலலிதா வெற்றியின் புன்னைகையோடு அமர்ந்திருக்கிறார். அதிகாரிகள் வண்ண வண்ண மலர்செண்டுகளுடன் கும்பிடு போடுகிறார்கள். அதில் ஒருசிலர் இப்போதுதான் புதிதாக குனியக் கற்றுக்கொண்டார்கள் போலும்.. அத்தனை திருத்தமாக குனியமுடியவில்லை. ஒரு ரோஸ் கலர் சேலை அணிந்த பெண்மணி பூங்கொத்தை கொடுத்து முடித்து, ஜெயலைதாவைப் பார்த்து கைகளை விரித்து ஒரு சிறு ஆட்டம் போட, ஜெயலலிதாவின் முகத்தில் அப்படியொரு சிரிப்பு. அநேகமாக அண்மைகாலத்தில் அவர் இத்தனை சந்தோஷத்துடன் சிரித்தது அப்பெண்ணால்தான். நன்றி சொல்லும்போது, … Continue reading ஜெயலலிதாவின் வெற்றியும் மக்களின் எதிர்பார்ப்பும்!

“தர்ம யுத்தம் தொடரும்”!

"தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. தமிழகத்தில் எது நடக்கக் கூடாது என நல்லவர்கள் நினைத்தார்களோ, துரதிருஷ்டவசமாக அது தான் நடந்திருக்கிறது. தமிழகத் தேர்தலில் ஜனநாயகம் படுதோல்வி அடைந்திருக்கிறது; பணநாயகம் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. அதே நேரத்தில் திராவிடக் கட்சிகளுக்கு எதிரான பாமகவின் தர்ம யுத்தம் இன்னும் முடிவடையவில்லை. இந்த தேர்தலில் பா.ம.கவுக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என பாமக நிறுவனர் ராமதாஸ் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள … Continue reading “தர்ம யுத்தம் தொடரும்”!

அதிமுக வெற்றி; அமைச்சர்கள் தோல்வி!

அதிமுக அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா அகியோர் சட்டப் பேரவைத் தேர்தலில் தோல்வியுற்றுள்ளனர். ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட வளர்மதி, திமுக வேட்பாளர் செலவத்திடம் சுமார் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார். அண்ணா நகர் தொகுதியில் போட்டியிட்ட கோகுல இந்திரா, திமுக வேட்பாளர் எம்.கே. மோகனிடம் சுமார் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார். இதேபோல அமைச்சர்கள் வைத்திலிங்கம், நத்தம் விஸ்வநாதன் ஆகியோரும் தோல்வியுற்றனர்.

திருமாவளவன் 87 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்

காட்டுமன்னார்கோயிலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், 87 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். MURUGUMARAN.N All India Anna Dravida Munnetra Kazhagam 48450 THIRUMAAVALAVAN.THOL Viduthalai Chiruthaigal Katchi 48363 MANIRATHINEM. DR .K.I Indian National Congress 37346 SOZHAN.ANBU Pattali Makkal Katchi 25890 ANBALAGAN.K Independent 1360 JAYASRI.E Naam Tamilar Katchi 1055 SARAVANAN.S.P Bharatiya Janata Party 822 KALAIVANAN.S Bahujan Samaj Party … Continue reading திருமாவளவன் 87 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்

ஜெயலலிதாவின் உத்திக்கு கிடைத்த வெற்றியா?

சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளிவர ஆரம்பித்திருக்கின்றன. ஆரம்ப முடிவுகள் அதிமுக வெற்றி பெறும் என காட்டியிருக்கின்றன. இதுகுறித்து பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சகர்களின் கருத்துகளின் தொகுப்பு... தளவாய் சுந்தரம் ஜெயலலிதாவின் உத்தி / தந்திரத்துக்கு (strategy) கிடைத்த வெற்றியாகவே இந்த முடிவுகளைப் பார்க்கிறேன். முதலில் உள்ளாட்சி தேர்தலில் தனித்து நின்று ஒரு பரிட்சார்த்த முயற்சியை செய்தார் ஜெயலலிதா. அதில் பெற்ற வெற்றியை அடுத்து மக்களவை தேர்தலில் அதனைத் தொடர்ந்தார். அதிலும் அவர் கணக்கு வெற்றிபெற்றது. அதுவே இப்போதும் … Continue reading ஜெயலலிதாவின் உத்திக்கு கிடைத்த வெற்றியா?