“நாங்க என்ன தப்பு செஞ்சோம்? லவ் பண்ணுவது அவ்வளவு பெரிய குற்றமா?”: கவுசல்யா

வன்னி அரசு கடந்த 13.3.16 அன்று உடுமலைப்பேட்டையில் சாதி மறுத்து காதல் மணம் புரிந்த சங்கர் - கவுசல்யா இணையர் சாதிவெறி கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டனர். இதில் சங்கர் கொல்லப்பட்டான், தங்கை கவுசல்யா உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இப்போது உடல் நலம் தேறி சிகிச்சை பெற்று வருகிறார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களின் வழிக்காட்டுதலின்பேரில் தங்கை கவுசல்யாவை சந்திக்க நாங்கள் எடுத்த தொடர் முயற்சியின் விளைவாக மார்ச் 23 … Continue reading “நாங்க என்ன தப்பு செஞ்சோம்? லவ் பண்ணுவது அவ்வளவு பெரிய குற்றமா?”: கவுசல்யா

ஃபீலிங் ஆவ்சம், ஃபீலிங் ஹேப்பி: தலித் இளைஞரின் படுகொலைக்கு முகநூல் சாதி வெறியர்களின் ஸ்டேடஸ்

சமூக ஊடகங்களை தங்களுடைய சாதியத்தை பரப்புவதில் சாதி வெறியர்கள் தீவிரமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு சமீபத்திய உதாரணம் உடுமலைப் பேட்டையில் தேவர் சாதி பெண்ணை திருமணம் செய்துகொண்ட தலித் இளைஞரை பட்டப்பகலில் வெட்டிக் கொன்ற சம்பவம். மனிதர்களை எத்தகைய கொடூர மனோபாவம் உள்ளவர்களாக சாதி வெறி மாற்றியிருக்கிறது என்பதற்கு, முகநூலில் சில சாதி வெறியர்கள் பகிர்ந்திருக்கும் பதிவுகள் உதாரணம். இளைஞனின் வெட்டுண்ட உடலைக் காட்டி எங்களுடைய பெண்களை திருமணம் செய்தால் இப்படித்தான் இனி நடக்கும் என அறைகூவல் … Continue reading ஃபீலிங் ஆவ்சம், ஃபீலிங் ஹேப்பி: தலித் இளைஞரின் படுகொலைக்கு முகநூல் சாதி வெறியர்களின் ஸ்டேடஸ்

கன்னய்யா குமாரை விடுதலை செய்யக்கோரி கோவையில் தொடரும் போராட்டம்

கோவையில் தொடரும் போராட்டம் "சமூக மாற்றத்திற்கான மாணவர் கூட்டமைப்பு" சார்பில், கன்னய்யா குமாரை நிபந்தனையின்றி விடுதலை செய்யக்கோரி திங்கள்கிழமை "பி.எஸ்.என்.எல். அலுவலக முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இதில்,  அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் (AISF) , இந்திய மாணவர் சங்கம் (SFI),.இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO), கேம்பஸ் ஃப்ரெண்ட் ஆப் இந்தியா(CFI), புரட்சிகர மாணவர் முன்னணி (RSF), திராவிடர் மாணவர் கழகம், சமத்துவ மாணவர் கழகம், பொதுநல மாணவர் எழுச்சி இயக்கம் (SUMS), மக்கள் ஜனநாயக இளைஞர் … Continue reading கன்னய்யா குமாரை விடுதலை செய்யக்கோரி கோவையில் தொடரும் போராட்டம்

மணமகன், மணமகள் நெற்றியில் ‘அம்மா ஸ்டிக்கர்’: இது புதுசு!

அதிமுக அரசின் ஆட்சிக்காலம் முடிய இருக்கும் நிலையில், தங்களுடைய ஐந்தாண்டு ஆட்சியை விளம்பரப்படுத்திக் கொள்ளும் வகையில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் அதில் அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதாவின் படத்தை அச்சிடுவது வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை உடுமலைப் பேட்டையில் அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் ஒரேமேடையில் 68 திருமணங்கள் நடைபெற்றன. இந்த 68 ஜோடிகளின் நெற்றியிலும் ஜெயலலிதாவின் படம் பொருத்தப்பட்ட கயிறு கட்டப்பட்டிருந்தது. இது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகி வருகிறது. கார்ட்டூனிஸ்ட் பாலா … Continue reading மணமகன், மணமகள் நெற்றியில் ‘அம்மா ஸ்டிக்கர்’: இது புதுசு!

மோடியின் கோவை மாநாட்டை காலி நாற்காலிகள் நிரப்பியதா?:போலீஸ் மீது பாஜக குற்றச்சாட்டு

கோவை கொடிசியா மைதான பொதுக்கூட்டத்தில்  பிரதமர் மோடி பேச வைதத்தன்  மூலம், தமிழக சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தை பாரதீய ஜனதா தொடங்கியது. இந்த கூட்டத்திற்கு  “தாமரை மலரட்டும்:தமிழகம் நிமிரட்டும்” என்றும் லோகோ வடிவமைக்கப்பட்டது. இதனிடையே பிரதமர் மோடியின் கொடிசியா கூட்டம் குறித்து நேரலை மூலம் செய்திகளை அளித்து கொண்டிருந்த தி ஹிந்து, மாநாட்டு அரங்கத்தில் காலி நாற்காலிகளே அதிகம் காணப்பட்டதாக குறிப்பிட்டது. காவல்துறையின் அதிக பாதுகாப்பு காரணமாக, தொண்டர்களை மாநாட்டு திடலுக்குள் அனுமதிக்கவில்லை என்றும் அதனால்தான் கூட்டம் … Continue reading மோடியின் கோவை மாநாட்டை காலி நாற்காலிகள் நிரப்பியதா?:போலீஸ் மீது பாஜக குற்றச்சாட்டு

தலித் பெண் பிரதிநிதியை கொடியேற்ற விடாமல் தடுத்த அதிமுக செயலாளர்!

தீக்கதிர் இந்தியா 67-ஆவது குடியரசு தினத்தைக் கொண்டாடும் வேளையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலித்மற்றும் பெண் பிரதிநிதிகளை தேசியக் கொடியேற்ற விடாமல் தடுத்த சம்பவம் திருப்பூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.மேலும், மாநிலத்தை ஆளும் அதிமுகவின் ஒன்றியச் செயலாளர் ஒருவரே, தலித் மற்றும் பெண் பிரதிநிதிகளை தேசியக் கொடியை ஏற்ற விடாமல் தடுத்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடியரசு தின கொடியேற்று விழாசெவ்வாயன்று நடைபெற்றது. இந்த விழாவிற்காக அதிமுகவை சேர்ந்த ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர் கு.கலையரசி, … Continue reading தலித் பெண் பிரதிநிதியை கொடியேற்ற விடாமல் தடுத்த அதிமுக செயலாளர்!

வன்னியர் சாதி பெண்ணை காதலித்ததால் இஸ்மாயில் கொல்லப்பட்டாரா?

சேலம் ஓமலூரை சேர்ந்த சையது இஸ்மாயில் ஆட்டோ ஒட்டுநர். இவர் ஓமலூர் பகுதியில் உள்ள ரெயில்வே தண்டாவாளத்தில் இறந்த நிலையில் கிடந்தார். அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் இஸ்மாயில் சாவுக்கு அவர் திவ்யா என்ற வன்னியர் சாதிப் பெண்ணை காதலித்ததே காரணம் என அவருடைய உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.  அந்தப் பெண்ணின் உறவினர்களால் இஸ்மாயில் மிரட்டப்பட்டார் என்றும்  அவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கோவையில் கைதான மாவோயிஸ்ட்களுக்கு ஜாமின்

கோவையில், கைதான மாவோயிஸ்டுகள் 5 பேரையும் நிபந்தனை ஜாமினில் விடுவிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை கருமத்தம்பட்டியில் கடந்த ஆண்டு மே 4ம் தேதி மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த ஐந்து பேரை க்யூ பிரிவு போலீசார் கைது செய்தனர். கைதான ரூபேஷ் மற்றும் அவரது மனைவி சைனா, அனூப், வீரமணி, கண்ணன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஜாமினில் விடுவிக்கக் கோரி, அவர்கள் தாக்கல் செய்த மனுக்களை கீழ்நீதிமன்றம் நிராகரித்த நிலையில், அந்த உத்தரவை ரத்து செய்யக் … Continue reading கோவையில் கைதான மாவோயிஸ்ட்களுக்கு ஜாமின்

ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் சாதிய ஒடுக்குமுறை காரணமாக தற்கொலை செய்து கொண்ட தமிழ் மாணவர்!

Joshua Isaac Azad ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்காக ஆராய்ச்சி மாணவனாக படித்து வந்தார் செந்தில் குமார். பன்றிகளை வளர்த்து மேய்க்கும் 'பன்னியாண்டி' என்னும் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த இவரின் சொந்த ஊர் சேலம் மாவட்டம். அந்த சாதியிலேயே அதிகம் படித்தவர். பள்ளி, கல்லூரி காலம் முழுவதும் பதக்கங்கள் சான்றிதழ்கள் என்று குவித்தவர். கனவு காணுங்கள் என்று சொன்ன கலாம் இவருக்கு மிகவும் பிடித்தமானவர். எப்படியாவது படித்து முன்னேறி தன் குடும்பத்தின் நிலையை மாற்றிட வேண்டுமென்ற … Continue reading ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் சாதிய ஒடுக்குமுறை காரணமாக தற்கொலை செய்து கொண்ட தமிழ் மாணவர்!

ஒரே வீட்டில் 4 குடும்பங்கள்; தெருவில் தூங்கும் இளைஞர்கள்: தலித் குடும்பங்களின் அகதி வாழ்க்கை இது!

சி.முருகேசன் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சாணமாவு கிராமத்தில் ஆதிதிராவிடர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கியும் 17 ஆண்டுகளாக நிலத்துக்குள் அனுமதிக்காத கொடுமை நீடிக்கிறது. 4 குடும்பங்கள் வரை ஒரே வீட்டில் வசிப்பதால் தெருக்களிலும் கோவிலுக்குள்ளும் தூங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தீக்கதிர் நாளிதழில் வந்த செய்திக் கட்டுரை... ஓசூரிலிருந்து தருமபுரி செல்லும் மாநில நெடுஞ்சாலையை ஒட்டி உள்ள கிராமம் சாணமாவு. இங்கு 50 வீடுகளில் நுற்றுக்கும் மேற்பட்ட தலித் குடும்பங்கள் வசிக்கின்றன. நிலமற்ற கூலி தொழிலாளிகளான … Continue reading ஒரே வீட்டில் 4 குடும்பங்கள்; தெருவில் தூங்கும் இளைஞர்கள்: தலித் குடும்பங்களின் அகதி வாழ்க்கை இது!

கரூர் கிராமத்தில் தொடரும் தீண்டாமை: பள்ளிகளில், டீ கடைகளில் இரட்டை டம்ளர் முறை; புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த தலித் இளைஞருக்கு அடி!

புத்தாண்டு கொண்டாடிய தலித் இளைஞர் மீது சாதிஆதிக்கச் சக்தியினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். புகார் அளித்தும் குற்றவாளிகளை கைது செய்யாமல் அலட்சியமாக காவல்துறையினர் உள்ளதாக தீக்கதிர் செய்தி வெளியிட்டுள்ளது. கரூர் மாவட்டம், ராயனூர்அடுத்துள்ள கோடங்கிப்பட்டியைச் சேர்ந்தவர் முருகன். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் கரூர் நகரக்குழு உறுப்பினர் ஆவார். இவர் தலித் சமூகத்தை சேர்ந்தவர். இவரது மகன் கேசவன். இவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கோடங்கிபட்டி கிளை துணைத் தலைவராக உள்ளார். புத்தாண்டு தினத்தை வரவேற்கும் விதமாக … Continue reading கரூர் கிராமத்தில் தொடரும் தீண்டாமை: பள்ளிகளில், டீ கடைகளில் இரட்டை டம்ளர் முறை; புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த தலித் இளைஞருக்கு அடி!

பஞ்சாலைகளில் நடந்த பாலியல் வன்முறைகளை எதிர்த்து தூக்கு மேடை ஏறிய நால்வர்!

ஒடியன்  ஜனவரி 8 கோவை வரலாற்றில் முக்கியமான நாள். இங்கே பஞ்சாலைகள்கொடிகட்டிப்பறந்த காலம் ஒன்று இருந்தது. அப்படி புகழ் பெற்ற பஞ்சாலைகளில் ஒன்று ரங்கவிலாஸ் மில். 1911ல் ல் ஜின்னிங் பேக்டரியாக தொடங்கப்பட்ட ரங்கவிலாஸ் 1922ல் நூற்பாலையாக மாறுகிறது. ராமையன், ரங்கண்ணன், வெங்கடாசலம், சின்னையன் நால்வரும் இந்த மில்லின் துடிப்பும் துணிவும் மிக்க இளம் தொழிலாளிகள் . சின்னியம்பாளையத்துக்காரர்கள். 15 மணி நேரம் உழைப்புக்கு .. மாத சம்பளம் 15 ரூபாய். ஆலை முதலாலிகள் வைத்திருந்த பஞ்சாலை பாதுகாவலர்கள் சங்க ரவுடிகளின் … Continue reading பஞ்சாலைகளில் நடந்த பாலியல் வன்முறைகளை எதிர்த்து தூக்கு மேடை ஏறிய நால்வர்!

கோயில் யானைகள் முகாமுக்குள் நுழைந்த காட்டு யானைகள்!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் இன்று துவங்கியது. இந்த முகாமிற்கு தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் இருந்து 30 யானைகள் வந்துள்ளன. தமிழக அமைச்சர்கள் காமராஜ், ஆனந்தன் ஆகியோர் யானைகளுக்கான முகாமை துவக்கி வைத்தனர். இந்நிலையில் அப்பகுதிக்குள் திடீரென காட்டு யானைகள் புகுந்தன. இதனையடுத்து அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினரும், அறநிலைய துறையினரும் ஈடுபட்டுள்ளனர்.  

மூதாயைத் தேடி நீர் நாடோடிகள்; கோவைக்கு வருகிறார்கள்!

ச.முருகபூபதி நாடக நிலத்திலிருந்து நண்பர்களுக்கு வணங்களுடன், இயற்கை பெய்ததை பேரிடராக்கிய நிறுவனங்கள்,மூழ்கியபடி குரலெழுப்பிய குடும்ப அமைப்புகள் என இப்பெருநகரின் சூழியல் நெருக்கடியை நீந்திக்கடந்தன இளம் மனங்கள். நம்பிக்கையற்றுப் போய் நாம் ஒதுக்கி வைத்த அந்த இளம் கைகளே பேரிடர்கால நெருக்கடியின் கொடும் பசிக்கு உணவளித்து மீட்டன. காலாவதியான கல்வியால், ஊடக குப்பைகளால் நாம் புதைத்து அழித்திருந்த அந்த நுட்ப மனங்கள் காட்டியிருப்பது நம் அனைவருக்குமான மீளெழுச்சி.செயல்பட்டு,கேள்விகேட்டு, உரையாட அழைக்கிறார்கள். இயற்கையை, அதன் நுட்பத்தை, இயங்குதலை, எதிர்வினையை எடுத்து சமூகத்திடம் … Continue reading மூதாயைத் தேடி நீர் நாடோடிகள்; கோவைக்கு வருகிறார்கள்!

MTR குலோப்ஜாமூன் மாவில் ஜாமூன் செய்யலாம்; புழுவை என்ன செய்வது?

திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் உள்ள ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோரில், அதே பகுதியைச் சேர்ந்த செண்பகம் என்பவர் MTR குலோப்ஜாமூன் மாவு பாக்கெட்டை, ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற சலுகையில் வாங்கியுள்ளார். வீட்டிற்குச் சென்ற செண்பகம், பாக்கெட்டை பிரித்த போது மாவில் புழுக்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். காலாவதி தேதி முடியும்முன்னரே, புழுக்கள் இருந்ததால் திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி விஜய்யிடம் செண்பகம் புகார் அளித்தார். குற்றச்சாட்டிற்கு உள்ளான MTR  குலோப்ஜாமூன் மாவை பரிசோதித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் … Continue reading MTR குலோப்ஜாமூன் மாவில் ஜாமூன் செய்யலாம்; புழுவை என்ன செய்வது?

Follow-up: மருத்துவமனையில் பிறந்த நாளைக் கொண்டாடிய தேவிபாரதி!

எழுத்தாளர் தேவிபாரதி விபத்தில் அடிப்பட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில் அவருடைய பிறந்த நாள் புதன்கிழமை வந்தது. பிறந்த நாளுக்கு பலர் ஃபேஸ்புக் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் உடல் தேறிவரும் தேவிபாரதி தன்னுடைய நண்பர்களுடன் பிறந்த நாளைக்கொண்டாடியிருக்கிறார். இதுகுறித்து தாமோதர் சந்ரூ, “எழுத்தாளர் நண்பர் தேவிபாரதி விபத்தில் தலையில் அடிபட்டு கடந்த பதினைந்து நாட்களாக மருத்துவனையில் இருக்கிறார். இன்று அவருக்குபிறந்தநாள்.. உண்மையிலேயே மறுபிறவிதான். நண்பர்களுடன் மருத்துவமனையில் டாக்டர், செவிலியர்களுடன் அவரின் பிறந்தநாளைக் கொண்டாடினோம்” என்று தன்னுடைய ஃபேஸ்புக் பதிவில் … Continue reading Follow-up: மருத்துவமனையில் பிறந்த நாளைக் கொண்டாடிய தேவிபாரதி!

எழுத்தாளர் தேவிபாரதிக்கு உதவுங்கள்!

எழுத்தாளர் தேவிபாரதி  20.12.2015 அன்று சாலை விபத்தில் ஏற்பட்ட கடுமையான காயங்களுடன் ஈரோடு பரணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவருகிறார். அவருக்குத் தலையில் ஏற்பட்ட காயங்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கபட்ட பிறகு, இப்போது முகத்தில் பல இடங்களில் எலும்புகள் நொறுங்கியுள்ளதற்கான அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர் பேசமுடியாத நிலையில் இருந்துவருகிறார். அவரது உடல்நலத்தை மீட்பதற்கு அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் மிகவும் போராடி வருகின்றனர். இருந்தபோதிலும் மருத்துவச் செலவுகள் அவர்களுடைய வாய்ப்பெல்லையைத் தாண்டிச் சென்றுகொண்டுள்ளது. தொடர்ந்து பலநாட்கள் … Continue reading எழுத்தாளர் தேவிபாரதிக்கு உதவுங்கள்!

#BeepSong: மத பிரச்சினையாக மாற்ற முயலும் இந்து அமைப்புகள்!

நடிகர் சிம்புவின் பீப் பாடலுக்கு, தமிழகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக போராட்டம் நடத்தப்படும் என தமிழர் முன்னேற்ற படை சொல்லிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சிவசேனா கட்சியினரும் தங்கள் ஆதரவை சிம்புக்கு தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனா கட்சியின் மாநில அமைப்பாளர் முத்துகிருஷ்ணன், இதனை தெரிவித்திருக்கிறார். நடிகர் சங்கத்தேர்தலில் நாசருக்கு எதிராக செயல்பட்டதாலேயே தற்போது சிம்புவிற்கு எதிராக நாசர் செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து நடிகர் சிம்புவிற்கு எதிராக போராட்டம் நடத்தினால் … Continue reading #BeepSong: மத பிரச்சினையாக மாற்ற முயலும் இந்து அமைப்புகள்!

திருமணத்தை மீறிய உறவு: இளம்பெண்ணின் கழுத்தை அறுத்து இளைஞர் தற்கொலை முயற்சி

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள காமலாபுரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் வந்த ஓர் ஆணும் பெண்ணும் தவறி விழுந்தனர். அவர்களை மீட்ட அப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், அந்த பெண் தீவட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜெயபால் என்பவரின் மனைவி என்பதும், உடன் சென்றவர் காமலாபுரம் பகுதியைச் சேர்ந்த சண்முகம் (27) என்பதும் தெரியவந்தது. சேலத்துக்கு வேலைக்குச் சென்றபோது, சண்முகத்துடன் அனுபிரியாவுக்கு … Continue reading திருமணத்தை மீறிய உறவு: இளம்பெண்ணின் கழுத்தை அறுத்து இளைஞர் தற்கொலை முயற்சி

கர்ப்பிணி மனைவி தற்கொலை: கணவன் கைது

கோவை கணபதி அருகே கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அவரது கணவரை போலீஸார் கைது செய்தனர். கோவை கணபதியை அடுத்த காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் எம்.நந்தகுமார்(24). இவரும், கோவை பழைய சக்தி சாலையைச் சேர்ந்த சாரதா என்பவரும் கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பாக காதல் திருமணம் செய்து கொண்டனர். நந்தகுமார் சரிவர வேலைக்குச் செல்லாததால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, சாரதா சாணிப்பவுடர் குடித்து செவ்வாய்க்கிழமை மயங்கி விழுந்துள்ளார். … Continue reading கர்ப்பிணி மனைவி தற்கொலை: கணவன் கைது

இதோ நல்ல செய்தி: அரசு மருத்துவமனையில் திருநங்கைகளுக்கு நர்ஸ் வேலை!

கோவை அரசு மருத்துவமனையில் செவிலியர்,  உதவியாளர் மற்றும் கடைநிலை ஊழியர் போன்ற பணியிடங்கள் திருநங்கைகளுக்கு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக மருத்துவமனைமுதல்வர் தெரிவித்துள்ளார். கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திருநங்கைகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி புதனன்று மருத்துவமனை முதல்வர் எட்வின் ஜோ தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்டம் முழுவதும் வந்திருந்த 86 திருநங்கைகளுக்கு சான்றிதழ்கள் வழங்கிய பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஓரு மாதத்திற்கு முன்பே இதுகுறித்து திட்டமிட்டு உடல் கூறு ரீதியான சோதனைகள் நடத்தப்பட்டு, … Continue reading இதோ நல்ல செய்தி: அரசு மருத்துவமனையில் திருநங்கைகளுக்கு நர்ஸ் வேலை!