இப்போது ஆக்சிஜன்… அப்புறம்?

எழுத்தாளர் நக்கீரன் சில வாரங்களுக்கு முன்பு ஆனந்த விகடனுக்கு நான் அளித்த பேட்டியில், ஆட்சி அமைக்க போகும் கட்சி நிதிநிலைமை மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றை காரணம் காட்டி கார்ப்பரேட் நிறுவனங்களுடன் ஒத்துப்போகும் என்ற கருத்தை தெரிவித்திருந்தேன். இப்போது அதற்கு முன்னரே 'ஆக்சிஜன்' சிக்கலில் பெரும்பாலான கட்சிகள் உடன்பட்டுவிட்டன. கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் சிக்கல் ஆக்சிஜன் உற்பத்தியில் இல்லை, விநியோகம் மற்றும் போக்குவரத்தில்தான் உள்ளது என்று தெரிகிறது. இந்நிலையில் வேதாந்தா மட்டுமே. ஆக்சிஜனுக்கு ஒரே தீர்வு என்பது போன்ற … Continue reading இப்போது ஆக்சிஜன்… அப்புறம்?

வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலையும் மக்கள் போராட்டமும்

தமிழகத்தில் புற்றுநோயால் பாதிக்கப்படும் நபர்கள் அதிகம் சிகிச்சை பெறுவது தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்தான். சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையிலும் தூத்துக்குடி மாவட்டம்தான் தமிழகத்தில் முதலிடம் வகிக்கின்றது.

சேலம் உருக்காலை- ஜிண்டால்: நட்டமாகும் கம்பெனியை வாங்குவதற்கு கார்ப்பரேட்டுகள் முட்டாள்களா?

சந்திரமோகன் 4000 ஏக்கர் நிலப்பரப்பு, ரூ.15,000 கோடி சொத்து மதிப்பு, 1400 நிரந்தரமான தொழிலாளர்கள், அலுவலர்கள், ஒப்பந்தம் /மறைமுக வேலை வாய்ப்பு பெறுபவர்கள் 3000 பேர், சேலம் ஸ்டெயின்லெஸ் என்ற பிராண்ட் புகழ், இந்தியாவின் நாணயங்கள், ரெயில்வே, செயற்கை கோள்கள் முதல் வீடுகள், ஓட்டல்களின் பாத்திரங்கள் வரைத் தயாரிக்க பயன்படும் துருப்பிடிக்காத எஃகு தகடுகள் தயாரிக்கும் ஆலை, சேலம் உருக்காலை ஆகும். 1970 களில், தமிழகத்திற்கு கிடைத்த பெருமை மிகுந்த பொதுத்துறை நிறுவனம். "இரும்பாலை வருகிறது , … Continue reading சேலம் உருக்காலை- ஜிண்டால்: நட்டமாகும் கம்பெனியை வாங்குவதற்கு கார்ப்பரேட்டுகள் முட்டாள்களா?

ரிலையன்ஸ் ஜியோ ‘மாடலாக’ பிரதமர் நரேந்திர மோடி: எந்த பிரதமரும் செய்யாத சாதனை!

தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ள ரிலையன்ஸ் ஜியோ இணைய சேவை திட்டத்துக்கு மாடலாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வைத்து வெளியான விளம்பரம் பத்திரிகைகளில் வந்துள்ளது. ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழின் டெல்லி, குர்ஹான் உள்ளிட்ட நான்கு பதிப்புகளின் முதல் பக்கத்தில் இந்த விளம்பரம் வெளியாகியுள்ளது. டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழிலும் வெளியாகியுள்ளது. இந்திய பிரதமரின் படங்கள் அரசு சார்ந்த திட்டங்களின் விளம்பரங்களில் மட்டுமே பயன்படுத்துவது வழக்கம். ஆனால் ரிலையன்ஸ் தன்னுடைய வியாபார விஸ்தரிப்புகளுக்காக (தன் … Continue reading ரிலையன்ஸ் ஜியோ ‘மாடலாக’ பிரதமர் நரேந்திர மோடி: எந்த பிரதமரும் செய்யாத சாதனை!

அரசுத் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்.லுக்கு கட்டணத் திட்டங்களை வரையறுத்தது ரிலையன்ஸ்: எஸ்ஸார் டேப் வெளிப்படுத்தும் அதிர்ச்சி

By Meetu Jain with Ushinor Majumdar ‘எஸ்ஸார் டேப்ஸ்’ பெருமுதலாளிகள் இந்திய நீதித்துறையை, நாடாளுமன்றத்தை, வங்கிகளை, போட்டியாளர்களை, நிர்வாகிகளை எப்படி கையாண்டார்கள் என்பது குறித்து பயமுறுத்தும் உண்மையைச் சொல்கின்றன. ராடியா உரையாடல்களுக்கு பத்தாண்டுகளுக்கு முன்பே அரசாங்கம் எப்படியான மோசடிகளில் ஈடுபட்டது என்பதையும் இது காட்டுகிறது. முந்தைய பதிவை இங்கே படிக்கவும்: ராடியாவுக்கு முன்பே வாஜ்பாயி ஆட்சியில் இந்திய குடியரசு விற்பனைக்கு வந்தது; அதை வாங்கியது ரிலையன்ஸ்! எஸ்ஸார் ஒட்டுக்கேட்பு விவகாரத்தை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தவரான உபால், … Continue reading அரசுத் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்.லுக்கு கட்டணத் திட்டங்களை வரையறுத்தது ரிலையன்ஸ்: எஸ்ஸார் டேப் வெளிப்படுத்தும் அதிர்ச்சி

33 கோடி மக்களுக்கு தண்ணீர் இல்லை;ஆனால், நாடே சுப்ரமணிய சாமியின் நாடாளுமன்ற தெருச் சண்டையில் லயித்திருக்கிறது!

அன்பே செல்வா 33 கோடி மக்கள் குடிக்கக் கூட தண்ணீர் இன்றி தவித்துக் கொண்டிருக்கிறார்கள், மாராஷ்டிரா, தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு என்று 12 மாநில மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக வல்லுனர்கள் சொல்கிறார்கள், ஆனால் மோடி சர்க்கார் இது மாநிலங்களின் பிரச்னை மொத்தமாக கைவிட்டு விட்டது, நமது தேசிய மீடியாக்களும் நாடாளுமன்றமும் சுப்பிரமணிய சாமி எழுப்பிய ராணுவ தளவாட ஊழலில் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருக்கையில் மகாராஸ்ட்ராவில் மட்டும் 1891 விவசாயிகள் தற்கொலை செய்து முடித்திருக்கிறார்கள், பெட்ரோல் விலை ஏற்றத்தையே அதுக்கும் மத்திய அரசுக்கும் … Continue reading 33 கோடி மக்களுக்கு தண்ணீர் இல்லை;ஆனால், நாடே சுப்ரமணிய சாமியின் நாடாளுமன்ற தெருச் சண்டையில் லயித்திருக்கிறது!

கேரள கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் சுரண்டலுக்கு எதிராக இவர்கள் வெற்றி பெற்றது எப்படி?

தமிழகத்தின் சரவணா ஸ்டோர்ஸ், போத்தீஸ் போன்ற விற்பனை நிறுவனங்களில் அடிப்படையான எவ்வித உரிமைகளும் கிடைக்கப் பெறாமல் ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் வதைபடுகிறார்கள். சம்பளம், வேலை நேரம் உள்ளிட்ட விஷயங்களில் இதுபோன்ற நிறுவனங்கள் எவ்வித ஒழுங்கையும் பேணுவதில்லை. கொத்தடிமைகளைப் போலவே தங்களுடைய ஊழியர்களை வைத்திருக்கின்றன. தொழிலாளர்கள் ஒன்றுபட்டு போராடாடுவதன் மூலமே இத்தகைய ஒடுக்குமுறைகளை சுரண்டல்களை ஒழிக்க முடியும் என நிரூபித்த கேரள கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவன ஊழியர்கள் போராடி பெற்ற வெற்றியை உதாரணமாகக் கொள்ள வேண்டும். கேரளத்தில் முன்னணி … Continue reading கேரள கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் சுரண்டலுக்கு எதிராக இவர்கள் வெற்றி பெற்றது எப்படி?

இந்தியாவில் பில்லியனர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு; என்ன காரணம்? பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா எழுதுகிறார்

பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா பணக்காரர்கள் மீது வரியும் போடமாட்டோம், பொதுத்துறை பங்குகளையும் சகாய விலையில் அவர்களிடம் ஒப்படைப்போம் என்ற அரசின் கொள்கை பொதுத்துறையை பற்றி வைத்துள்ள அணுகுமுறை இதுதான்: ‘லாபத்தில் செயல்பட்டால் விற்று விடு, நட்டத்தில் இருந்தால் மூடி விடு’ வழக்கம் போல் மத்திய நிதி அமைச்சர் ஜெட்லி பிப்ரவரி இறுதி நாள் பட்ஜெட்டை சமர்ப்பித்தார். ஆனால் இதற்கு ஒருமாதம் முன்னதாகவே, முதலாளித்துவ பத்திரிகைகளிலும் தொலைக் காட்சி மற்றும் சமூக ஊடகங்களிலும் இந்த பட்ஜெட் எப்படி இருக்கவேண்டும் … Continue reading இந்தியாவில் பில்லியனர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு; என்ன காரணம்? பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா எழுதுகிறார்

சென்னை பள்ளிகளில் உங்கள் பிள்ளையை விற்க போகிறீர்களா?; அப்படியெனில் விலையைத் தெரிந்து கொள்ளுங்கள் !!!

சென்னையில் உள்ள பிரபல பள்ளிகளில், புது வருடத்திற்கான சேர்க்கை தொடங்கி விட்டது. விண்ணப்பங்களை வாங்குவதற்காக இரவும் பகலுமாக சாலையில் தவம் கிடக்கும் பெற்றோர்களின் புகைப்படங்களை பத்திரிக்கைகளில் நீங்கள் பார்த்திருக்கக் கூடும். விண்ணப்பம் பெறும் பெற்றோர்கள் எல்லாம், தங்கள் பிள்ளைகளுக்கு அந்த பள்ளிகளில் இடம் வாங்கி விடுகிறார்களா ? என்றால் இல்லை. அடித்து பிடித்து முதலில் நின்று விண்ணப்பம் வாங்கினால் கூட,  "கையெழுத்திட்ட வெற்று காசோலையோடு" நிற்கும் பெற்றோரின் பிள்ளைகளுக்குதான் அங்கு படிக்க வாய்ப்பு கிடைக்கிறது. சென்னையின் பிரபல … Continue reading சென்னை பள்ளிகளில் உங்கள் பிள்ளையை விற்க போகிறீர்களா?; அப்படியெனில் விலையைத் தெரிந்து கொள்ளுங்கள் !!!

ஜான்சன்&ஜான்சன் டால்கம் பவுடரில் கேன்சர் காரணிகள்:மனித உயிரை மதிக்காத கார்ப்பரேட் பேராசையை வெளிக்கொண்டு வந்த வழக்கு !!!

அமெரிக்காவின் அலபாமாவில் வசித்து வந்த plaintiff Jacqueline Fox என்ற பெண்மணி, கடந்த சில வருடங்களுக்கு முன் மிசோரி நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.  அதில், கடந்த 35 வருடங்களாக ஜான்சன்&ஜான்சன் பேபி பவுடர் மற்றும்  Shower to Shower  பவுடரை அந்தரங்க சுகாதாரதிற்காக உபயோகபடுத்தி வந்ததாகவும், அதன் காரணமாக தனக்கு கருப்பை கேன்சர் ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டி இருந்தார். கருப்பை கேன்சர் இருப்பதாக 2013-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட காலத்திற்கு முன்பாகவே, கடந்த … Continue reading ஜான்சன்&ஜான்சன் டால்கம் பவுடரில் கேன்சர் காரணிகள்:மனித உயிரை மதிக்காத கார்ப்பரேட் பேராசையை வெளிக்கொண்டு வந்த வழக்கு !!!