“நம்முடைய கனவு ஏன் சிதைக்கப்பட்டது?”: சிறையில் இருக்கும் பேரா.சாய்பாபா தனது மனைவிக்கு எழுதிய உருக்கமான கடிதம்!

நாமெல்லாம் எளிய மனிதர்கள், எளிய மனிதர்களுக்காக எளிய வழிகளில் உழைக்கிறவர்கள். நம்முடைய நம்பிக்கை, அன்பு, கனவு ஆகியவற்றைப் பார்த்து இந்த அசுரத்தனமான அரசு ஏன் பயம் கொள்கிறது? நாம் யாருக்கேனும் தீங்கு இழைத்திருக்கிறோமா? ஏன் நம்முடைய வாழ்க்கை சிதைக்கப்பட்டது? நம்முடைய கனவுகள் ஏன் குற்றமாக்கப்பட்டன?

இந்து முன்னணியைச் சேர்ந்தவரின் காதலுக்கு சாதி எதிர்ப்பு: திருமணம் செய்து வைத்த திராவிடர் விடுதலைக் கழகம்!

திருப்பூரைச் சேர்ந்த சக்தி காமாட்சி - ஆனந்த் தங்கள் காதலுக்கு ஜாதியை காரணம் காட்டி பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் வீட்டை விட்டு வெளியேறி நாமக்கல் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக தலைவர் தோழர் சாமிநாதன் அவர்களிடம் பாதுகாப்பு கோரிவந்தனர். ஆனந்த் ''இந்துமுண்ணனி''யின் தீவிர உறுப்பினர். இவர்களுக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தினர் பாதுகாப்பளித்து சட்டப்படி 25.03.2016 அன்று திருமணம் செய்து வைத்தனர். இதுகுறித்து திவிக வெளியிட்ட குறிப்பில், “இணையரின் ஜாதி மறுப்பு திருமணத்திற்கு பெண் வீட்டார் மிகக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இணையருக்கு … Continue reading இந்து முன்னணியைச் சேர்ந்தவரின் காதலுக்கு சாதி எதிர்ப்பு: திருமணம் செய்து வைத்த திராவிடர் விடுதலைக் கழகம்!

“நாங்க என்ன தப்பு செஞ்சோம்? லவ் பண்ணுவது அவ்வளவு பெரிய குற்றமா?”: கவுசல்யா

வன்னி அரசு கடந்த 13.3.16 அன்று உடுமலைப்பேட்டையில் சாதி மறுத்து காதல் மணம் புரிந்த சங்கர் - கவுசல்யா இணையர் சாதிவெறி கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டனர். இதில் சங்கர் கொல்லப்பட்டான், தங்கை கவுசல்யா உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இப்போது உடல் நலம் தேறி சிகிச்சை பெற்று வருகிறார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களின் வழிக்காட்டுதலின்பேரில் தங்கை கவுசல்யாவை சந்திக்க நாங்கள் எடுத்த தொடர் முயற்சியின் விளைவாக மார்ச் 23 … Continue reading “நாங்க என்ன தப்பு செஞ்சோம்? லவ் பண்ணுவது அவ்வளவு பெரிய குற்றமா?”: கவுசல்யா

சமூக ஊடகங்களின் தாக்கம்: வீட்டுக் காவலில் இருந்து மீட்கப்பட்டார் பிரியங்கா

தலித்தை காதலித்த காரணத்தால் தன்னை ஆணவக் கொலை செய்ய தன்னுடைய அப்பா திட்டமிடுவதாக புதுக்கோட்டையைச் சேர்ந்த ப்ரியங்கா என்ற பெண் அனுப்பிய குறுஞ்செய்தி திங்கள் கிழமை சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பானது. ப்ரியங்கா காதலித்த வினோத் இந்த குறுஞ்செய்தியை வைத்து காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார்.  இந்தச் செய்தி ஊடகங்களிலும் வெளியானது. இந்நிலையில்  இந்த விஷயத்தை கையில் எடுத்த திவிக உள்ளிட்ட இயக்கங்களின் முயற்சியால் பிரியங்கா மீட்கப்பட்டுள்ளார். இதுகுறித்து  தமிழ் இராசேந்திரன் தனது முகநூல் பதிவில், “சகோதரி பிரியங்காவை … Continue reading சமூக ஊடகங்களின் தாக்கம்: வீட்டுக் காவலில் இருந்து மீட்கப்பட்டார் பிரியங்கா

#ஞாயிறுஇலக்கியம்: யூமா வாசுகி, தேவதைகள், குழந்தைகள்!

வாசுதேவன் மாரிமுத்து என்ற யூமா வாசுகியின் கவிதைகளில் தேவதைகளூம், குழந்தைகளும் முத்தமிட்டபடி பிரியத்துடன் வருகிறார்கள். பிரச்சாரம்/முழக்கங்கள் இல்லை. குழந்தைகள் ஆசையுடன் நம்மிடம் விளையாடுகிறார்கள். காதலிகள் ரகசியமாக கவிதைக்குள் நுழைந்து நம்மை தொட்டு அரவணைக்கிறார்கள். முயல்களும்/மான்களும் சட்டென கவிதையிலிருந்து குதித்து நம் மடியில் உட்கார்கிறது. காதலியின் பிரிவின் ஆற்றாமையை ஒரு பறவையின் வாயிலாக உணரமுடியும். நிகழ்காலத்தை மறக்கச்செய்து, கடந்தகாலத்தின் ஏக்கத்தை ஒரு வண்ணத்துப்பூச்சி நினைவுப்படுத்துகிறது. சட்டென, ஒரு டுலிப் மலர் கவிதையிலிருந்து முளைத்து நம் ஆன்மாவை ஆழமாக தொட்டு … Continue reading #ஞாயிறுஇலக்கியம்: யூமா வாசுகி, தேவதைகள், குழந்தைகள்!

#அவசியம்படிக்க: தலித்திய பார்வையில் ’காதலும் கடந்து போகும்’

ஜோஸ்வா ஐசக் ஆசாத் நேத்திக்கு முந்தா நாள் சாய்ந்திரம் காதலும் கடந்து போகும் படத்துக்கு வழக்கம் போல தனியா போனேன். தியேட்டர்ல மொத்தமே 20 பேர் தான் இருந்திருப்பாங்க. அதுல அப்பாகூட வந்திருந்த ஒரு 5 வயசு பொண்ணு ஒண்ணு. தனியா ஜாலியா சிரிக்கிறது எவ்ளோ அழகு. நான் தான் சிரிச்சுன்னு இருந்தேன். சரி படத்த பத்தி எழுதணும்னு வரும் வழில யோசிச்சுன்னு வந்தேன். விஜய் சேதுபதி. விளிம்பு நிலைல இருக்கிற அப்பாவிகள், நல்லவர்கள் ஒருத்தன்கிட்ட அடியாளா … Continue reading #அவசியம்படிக்க: தலித்திய பார்வையில் ’காதலும் கடந்து போகும்’

ஐந்தாயிரத்துக்கெல்லாம் கொடூர கொலை செய்வது தமிழகத்தில் சாதாரணமாகிவிட்டது: தொல். திருமாவளவன் நேர்காணல்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் சிறப்பு நேர்காணலை வெளியிட்டுள்ளது  ‘தீக்கதிர்’(20-03-2016) நாளிதழ். அதனுடைய மறுபிரசுரம்... சந்திப்பு : மதுக்கூர் ராமலிங்கம், சி. ஸ்ரீராமுலு மக்கள் நலக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் ஏற்கெனவே பல்வேறு கூட்டணிகளில் இடம்பெற்றிருந்தன. அதற்கும், தற்போது அமைந்துள்ள மக்கள் நலக் கூட்டணிக்கும் அடிப்படை வேறுபாடு என்ன? மேலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முன்வைத்த கூட்டணி ஆட்சி என்ற முழக்கத்திற்கு இந்தக் கூட்டணி எந்த வகையில் ஒத்திசைவாக உள்ளது? திமுக,அதிமுக ஆகிய இரு … Continue reading ஐந்தாயிரத்துக்கெல்லாம் கொடூர கொலை செய்வது தமிழகத்தில் சாதாரணமாகிவிட்டது: தொல். திருமாவளவன் நேர்காணல்

சாதிய படுகொலைகள்: இப்போதைக்கு சிசிடிவிக்களை நிறுத்தி வைப்போம்!

ஜி. கார்ல் மார்க்ஸ் ஒரு இருபத்திரண்டு வயது இளைஞன், தற்போது தான் கல்லூரியை முடித்தவன், அவனுக்கு பத்தொன்பது வயதில் படிப்பை விட்ட ஒரு மனைவி. வேலை கிடைத்தவுடன் உயிருக்கு ஆபத்தான கிராமத்தை விட்டு நகர வேண்டும். இல்லையில்லை.. ஓடிவிட வேண்டும். அதற்குள் எல்லாரும் பார்க்க வெட்டிக் கொல்லப்படுகிறான். அவளும் வெட்டப்படுகிறாள். இந்த கொலையின் கண்ணிகளைத் தொடர்ந்தால் அது எங்கு போகிறது என்பதை நான் யோசித்துக்கொண்டே இருக்கிறேன். முதலில், இந்தக் கொலையை திட்டமிட்டவர்களைத் தாண்டி, நேரடியாகக் களத்தில் செய்பவர்கள் … Continue reading சாதிய படுகொலைகள்: இப்போதைக்கு சிசிடிவிக்களை நிறுத்தி வைப்போம்!

ஒடுக்கப்பட்ட மக்கள் மீது அவதூறு;ஜாதி வெறியைத் தூண்டும் தினமலர்: செங்கொடியை அவமானப்படுத்திய நாளிதழின் அடுத்த டார்கட்!!!

சாதி வன்மத்தைத் தூண்ட தமிழகத்தில் அதிகம் விற்பனையாகும் நாளிதழ்களில் ஒன்றான தினமலரில் "அவசரம் வேண்டாம் பெண்களே!" என்ற தலைப்பில் " விசித்திர சித்தன், சமூக ஆர்வலர்" என்ற பெயரில் வெளிவந்துள்ள கட்டுரை இது. எழுதியவர் உண்மையிலே சமூகத்தின் மேல் ஆர்வம் கொண்டவராக இருந்தால் உண்மையான பெயரைப் போட்டு எழுதியிருக்க வேண்டும். விசித்திர சித்தன் என்ற பெயரில் ஒளிந்துகொண்டு எழுதுவது இப்படி விசித்திரமானதாகத்தான் இருக்கும். எத்தனை வன்மம். வெகுஜென நாளிதழ் என்ற போர்வையில் சாதிய வன்மத்தை, வர்ணாசிரமத்தை நிலைநிறுத்த … Continue reading ஒடுக்கப்பட்ட மக்கள் மீது அவதூறு;ஜாதி வெறியைத் தூண்டும் தினமலர்: செங்கொடியை அவமானப்படுத்திய நாளிதழின் அடுத்த டார்கட்!!!

ஃபீலிங் ஆவ்சம், ஃபீலிங் ஹேப்பி: தலித் இளைஞரின் படுகொலைக்கு முகநூல் சாதி வெறியர்களின் ஸ்டேடஸ்

சமூக ஊடகங்களை தங்களுடைய சாதியத்தை பரப்புவதில் சாதி வெறியர்கள் தீவிரமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு சமீபத்திய உதாரணம் உடுமலைப் பேட்டையில் தேவர் சாதி பெண்ணை திருமணம் செய்துகொண்ட தலித் இளைஞரை பட்டப்பகலில் வெட்டிக் கொன்ற சம்பவம். மனிதர்களை எத்தகைய கொடூர மனோபாவம் உள்ளவர்களாக சாதி வெறி மாற்றியிருக்கிறது என்பதற்கு, முகநூலில் சில சாதி வெறியர்கள் பகிர்ந்திருக்கும் பதிவுகள் உதாரணம். இளைஞனின் வெட்டுண்ட உடலைக் காட்டி எங்களுடைய பெண்களை திருமணம் செய்தால் இப்படித்தான் இனி நடக்கும் என அறைகூவல் … Continue reading ஃபீலிங் ஆவ்சம், ஃபீலிங் ஹேப்பி: தலித் இளைஞரின் படுகொலைக்கு முகநூல் சாதி வெறியர்களின் ஸ்டேடஸ்

#வீடியோ: சாதிமறுப்புத் திருமணம் செய்த இளைஞர் நடுரோட்டில் வெட்டிக்கொலை: நூற்றுக்கணக்கான மக்கள் மத்தியில் மனைவியின் உறவினர்கள் வெறியாட்டம்!!!

திருப்பூர் மாவட்டம், உடுமலை, கொமரலிங்கம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (22). இவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். இவருக்கும் பழனியைச் சேர்ந்த கவுசல்யா (19) என்ற பெண்ணுக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்னர் காதல் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் வீட்டில் இருந்து வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வெவ்வேறு சாதி என்பதால் பெண்ணின் வீட்டுத்தரப்பில் கடும் எதிர்ப்பு இருந்தது. குறிப்பாக அந்தப்பெண் தேவர் ஜாதி என்றும் அந்த … Continue reading #வீடியோ: சாதிமறுப்புத் திருமணம் செய்த இளைஞர் நடுரோட்டில் வெட்டிக்கொலை: நூற்றுக்கணக்கான மக்கள் மத்தியில் மனைவியின் உறவினர்கள் வெறியாட்டம்!!!

“நீ காதல்காரனோ காதல் காரியோ உனக்குதான் பால் பேதம் கிடையாதே!”

மாலினி ஜீவரத்னம் feeling love my self. சரியான காதல்காரி நீ... காதலிப்பதும் காதலிக்கப் படுவதுமாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறாய் ... யாராவது கொஞ்சி பேசினால் காதல் வந்துவிடுகிறது உனக்கு ... நாய் குட்டியா நீ கொஞ்சி தலைகோதிவிடும் யாரோ தெரியாத ஒருவர் பின்னால் வாலாட்டி வாஞ்சையுடன் செல்கிறாய் ... அவர்கள் சொல்கிறார்கள் நாய் இல்லையாம் பூனைக்குட்டியாம் நீ Ha ha ha... எதோ ஒன்று அன்புக்காக எங்கும் ஜீவனுக்கு பேதம் ஏது.. சரி போகட்டும் ... உன் … Continue reading “நீ காதல்காரனோ காதல் காரியோ உனக்குதான் பால் பேதம் கிடையாதே!”

முருகேசன் கண்ணகி காதல் கதை உங்களுக்குத் தெரியுமா?

ஆண்டு: 2003 ஊர்: விருத்தாச்சலம் புதுகூர்ப்பேட்டை காதலர்கள்: முருகேசன் (தலித்) கண்ணகி (வன்னியர்) என்ன கதை அது?: இருவரும் மனப்பூர்வமாகக் காதலித்தனர். இருவரையும ஊர் நடுவிலேயே வைத்து வன்னியர்கள் அடித்து உதைத்தனர். இருவரும் பிரிந்துவிடுங்கள் இல்லையென்றால் இந்த விஷத்தைக் குடித்து சாகுங்கள் என்று அவர்கள்முன் விஷம் வைக்கப்பட்டது. பிரிவு என்பதைத் தூக்கி எரிந்துவிட்டு விஷத்தை அருந்தினர். விஷயம் அருந்தியப் பிறகும் உங்களுக்கு இவ்வளவுத் திமிரா என்று அடிக்கப்பட்டனர். சாகும்வரை அடிவாங்கினர். செத்தும்கூட அடி வாங்கினார்கள். பிறகு ஊர் … Continue reading முருகேசன் கண்ணகி காதல் கதை உங்களுக்குத் தெரியுமா?

“காதல் திருமணம் செய்யும் பெண்கள் சாதி ஆணவத்துடன் கொலை செய்யப்படுகின்றனர்; பெரியாரின் மாண்புகளை குழி தோண்டி புதைக்கின்றன அதிமுகவும் திமுகவும்”

சாதி ஆணவக் கொலைகளை தடுத்து நிறுத்திட மத்திய-மாநில அரசுகள் சிறப்பு சட்டம் இயற்றக் கோரி தருமபுரி மாவட்ட அனைத்து பெண்கள் அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு சார் பில் சிறப்பு மாநாடு சனிக்கிழமை நடை பெற்றது. அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்க மாநில துணைத் தலைவர் என்.அமிர்தம் தலை மை வகித்தார். மாவட்டச் செயலாளர் எஸ். கிரைஸா மேரி வரவேற்றார். அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி துவக்கி வைத்துப் பேசினார். இம்மாநாட்டில் உரையாற்றிய மாதச் சங்கப் … Continue reading “காதல் திருமணம் செய்யும் பெண்கள் சாதி ஆணவத்துடன் கொலை செய்யப்படுகின்றனர்; பெரியாரின் மாண்புகளை குழி தோண்டி புதைக்கின்றன அதிமுகவும் திமுகவும்”