இந்தியா – பாகிஸ்தான் எல்லை எப்படி இருக்கும்?: ஓர் இராணுவ வீரரின் அனுபவம்

சதீஸ் செல்லதுரை எனது முதல் போஸ்டிங் காஷ்மீர் புல்வாமாவில். அது பார்டர் அல்ல.. அங்கே நடந்த ஒரு நிகழ்வு காஷ்மீரிகள் , பயங்கரவாதிகள் என்ற பொதுப்புத்தியிலிருந்து என்னை மாற்றியது. அடுத்து நான் பஞ்சாப் வந்த போது வேலியினை கடந்து ஜீரோ லைன் என நாங்கள் அழைக்கப்படும் இந்தியா பாகிஸ்தானின் எல்லையில் இந்திய விவசாயிகளின் பாதுகாப்பிற்கும் ,போதை பொருட்கள் கடத்தலை தவிர்க்கவும் காவலுக்கு நிற்போம். புதியதாக போன நிலையில் பாகிஸ்தான் நிலத்தில் மூத்திரம் பெய்து பெரும் வெறி ஒன்றை … Continue reading இந்தியா – பாகிஸ்தான் எல்லை எப்படி இருக்கும்?: ஓர் இராணுவ வீரரின் அனுபவம்

தமிழ்நாட்டின் முதல் கம்யூனிஸ்ட் சிங்காரவேலர் புறக்கணிக்கப்படுகிறாரா?

சந்திரமோகன் 18.2. 1860 ல் மீனவர் சமூகத்தில் பிறந்து வளர்ந்து,1903 ல் பவுத்தத்தை தேர்ந்து, சிறிது காலம் காங்கிரஸ் கட்சியின் சோசலிச முகாமில் பணியாற்றி, 1918 ல் இந்தியாவிலேயே முதல் தொழிற்சங்கத்தை - MLU மெட்ராஸ் லேபர் யூனியன் _ அமைத்து, 1923 ல் நாட்டிலேயே முதன் முறையாக மே தினத்தை கொண்டாடி, தொழிலாளர்கள் விவசாயிகள் கட்சியை HLKP உருவாக்கி, பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உருவான போது, அதன் நிறுவனர்களில் ஒருவராக திகழ்ந்தவர் சிங்காரவேலர்; நாடு … Continue reading தமிழ்நாட்டின் முதல் கம்யூனிஸ்ட் சிங்காரவேலர் புறக்கணிக்கப்படுகிறாரா?

துரைமுருகனின் ஜாதிய உணர்வு திமுகவுக்கு எதிரி!

வேந்தன். இல ஆரம்பத்திலிருந்து விசிக திமுகவின் கூட்டணியில் இணைவதை முகம் சுழித்த பார்வையோடே துரைமுருகன் அவர்கள் பார்த்து வருவது அவரது பேச்சின் வாயிலாக எளிமையாக தெரிந்து கொள்ளலாம். 'இன்னும் கூட்டணியே முடிவாகல..' 'இன்னும் தாலியே கட்டல..' போன்ற நக்கல் தொணி பேச்சுகள் எல்லாம் கடைசி நேரத்தில் கூட விசிக வை தவிர்த்துவிட முடியாதா என்ற அவரின் ஏக்கத்தை தான் வெளிப்படுத்துகின்றன. அவரது கறார் வாதப்படியே 'கூட்டணி என்பது தொகுதி உடன்படிக்கை ஏற்பட்ட பிறகு தான் அது கூட்டணி' … Continue reading துரைமுருகனின் ஜாதிய உணர்வு திமுகவுக்கு எதிரி!

வசுமித்ராக்களும் ஸ்ரீராம ஜெயமும் – 3

ப. ஜெயசீலன் https://www.youtube.com/watch?v=0BCB3bBttbo&t=853s இறுதியாக. வசுமித்ரா கண்களில் அறிவுமிளிர அந்த பேட்டியில் அம்பேத்கர் மார்க்ஸையும் புத்தரையும் ஒப்பிட்டதே மிக பெரிய தவறென்று சொன்னதோடு புத்தர் ஒழுக்கவியலை முன்வைத்த ஒரு அறவாதி என்றும் மார்க்ஸ் ஒரு பொருளாதாரவாதி என்றும் ஒரு உன்னதமான உண்மையை நமக்கு அருளியதோடு அம்பேத்கர் புத்தரையும் நபிகளையும்தான் ஒப்பிட முடியுமே தவிர புத்தரை மார்க்ஸோடு ஒப்பிட முடியாது என்றார். இங்கு ஒரு கற்பனை கதை/ நிஜ உதாரணம் சொல்ல விழைகிறேன். இளையராஜா சில வருடங்களுக்கு முன்பு … Continue reading வசுமித்ராக்களும் ஸ்ரீராம ஜெயமும் – 3

வசுமித்ராக்களும் ஸ்ரீராம ஜெயமும்: பகுதி – 2

ப. ஜெயசீலன் வசுமித்ராக்களும் ஸ்ரீராம ஜெயமும்: பகுதி – 1 வசுமித்ரா தனது பேட்டியில் தான் கிராமத்திலிருந்து கிளம்பி வந்து கோவையில் சித்தாள் வேலை பார்த்ததாகவும், பிறகு தொலைக்காட்சி சீரியலுக்கு வசனம் எழுத சென்னை வந்ததாகவும் இதற்கிடையில் கடந்த 20 வருடமாக "நிறைய" படித்ததாகவும் தான் எழுதிய புத்தகத்தின் பின்னணி உழைப்பை பற்றி சொன்னார். 10ஆம் வகுப்பு படித்துவிட்டு கல்விமுறை பிடிக்காமல்,கல்வி வராமல் படிப்பை நிறுத்திவிட்டு சித்தாள் வேலையும், வசனகர்த்தா வேலையும் பார்த்துகொண்டே தலைவன் வசுமித்ர மார்ஸ்சையும், அம்பேத்கரையும் … Continue reading வசுமித்ராக்களும் ஸ்ரீராம ஜெயமும்: பகுதி – 2

சிங்களவர்கள் தெலுங்கர்கள் அல்ல: சீமான் கருத்துக்கு யாழ்ப்பாண பேரா. ந. ரவீந்திரன் மறுப்பு

சந்திரமோகன் அம்பேத்கர் படிப்பு வட்டம் சார்பாக,  சேலத்தில் "சாதியும் சமூக மாற்றமும் " எனும் தலைப்பில் இலங்கை யாழ்ப்பாண பேராசிரியர். ந.ரவீந்திரன் உரை நிகழ்த்தினார். சிங்களர்- தமிழர் இன முரண்பாடு, இலங்கையில் சிறுபான்மை தமிழர் மகாசபை, வர்க்கம் எதிர் சாதி, வருணங்கள், பிராமண மதம், தமிழர் நிலப்பரப்பில் தோன்றிய திணை அரசுகள், மார்க்சியம், ரஷ்யப் புரட்சியில் "ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்றுபடுங்கள்" என்ற அணுகுமுறை எனப் பல்வேறு விசயங்கள் பற்றி விரிவாக பேசினார். "சிங்களர்கள் கண்டி நாயக்கர்கள் என்று … Continue reading சிங்களவர்கள் தெலுங்கர்கள் அல்ல: சீமான் கருத்துக்கு யாழ்ப்பாண பேரா. ந. ரவீந்திரன் மறுப்பு

ஐம்பதாயிரம் சம்பளம் வாங்குகிறவர்கள் ஏன் போராடுகிறார்கள்?

மாதவராஜ் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் ஐயாயிரம், சம்பளம் வாங்கும்போது, அரசுப் பள்ளிகளில் ஐம்பதாயிரம் சம்பளம் வாங்கிக்கொண்டு இன்னும் போதவில்லை என்பது என்ன நியாயம்? என குரல்கள் ஓங்கிக் கேட்கின்றன. சட்டென்று பார்க்க, கேட்க இது நியாயம் போலத் தோன்றுவதால், போராடும் ஆசிரியர்கள். அரசு ஊழியர்கள் மீது பொது சமூகத்தில் வெறுப்பு ஏற்படுகிறது. பொதுத்துறை நிறுவனங்களில், அரசு சார்ந்த பணியிடங்களில் இங்கு அரசால் ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகள், கமிஷன்கள் போன்ற ஏற்பாடுகள் மூலம் ஊதியமும், அலவன்சுகளும் நிர்ணயிக்கப்படுகின்றன. சமீப … Continue reading ஐம்பதாயிரம் சம்பளம் வாங்குகிறவர்கள் ஏன் போராடுகிறார்கள்?

வசுமித்ராக்களும் ஸ்ரீராம ஜெயமும்: பகுதி – 1

ப. ஜெயசீலன் நரேன் ராஜகோபாலன்(கருப்பு குதிரை என்ற புத்தகத்தை எழுதி உள்ளார்) என்று ஒரு முக நூல் பதிவர் சென்ற பாராளுமன்ற தேர்தலின் போது வெறித்தனமான முரட்டுத்தனமான பிஜேபி எதிர்ப்பாளராக, திமுக ஆதரவாளராக தன்னை வெளிப்படுத்திக்கொண்டார். he is really a character. ஒரு நாள் திடீரென்று நான் ஏன்தான் இவ்வளவு விஷயம் தெரிந்த அறிவாளியாக இருக்கிறேன் என்று எனக்கு சலிப்பாயிருக்கிறது. இப்பொழுது பாருங்கள் ஒரு புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறேன். அதன் மூலம் இந்தியா ஒரு மிக பெரிய … Continue reading வசுமித்ராக்களும் ஸ்ரீராம ஜெயமும்: பகுதி – 1

ஆர். எஸ். எஸ்.காரன் “தமிழ் வாழ்க!” என்று சொன்னால்கூட அதற்கு “தமிழ் ஒழிக!” என்றுதான் அர்த்தம்!

ஆழி. செந்தில்நாதன் 2017 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 21 - உலகத் தாய்மொழிகள் நாளுக்காக புது தில்லியில் ஜந்தர் மந்தரில் ஒரு ஆர்பாட்டம் நடத்துவதற்காக வேலைசெய்துகொண்டிருந்த நேரம்... அதே ஜந்தர் மந்தரில் ஒரு டென்ட் கொட்டாய் இருந்தது. அதில் பாரதிய பாஷா அண்டோலனோ என்னவோ பெயரில் கொஞ்சம் பேர் வருடக்கணக்காக உண்ணாவிரதம் (ஆள் மாற்றி ஆள் மாற்றி) இருக்கிறார்கள். இந்திய மொழிகளுக்காக குரல் கொடுக்கிறார்களாம். எங்களோடு களத்தில் இருந்த ஒரு தோழர் அவர்களைப் பார்த்து எங்களுடைய … Continue reading ஆர். எஸ். எஸ்.காரன் “தமிழ் வாழ்க!” என்று சொன்னால்கூட அதற்கு “தமிழ் ஒழிக!” என்றுதான் அர்த்தம்!

இந்தியாவின் சமூக நீதியை மட்டுல்ல, ஜனநாயக அமைப்புகளையும் மோடி அரசு சிதைத்திருக்கிறது!

அறிவழகன் கைவல்யம் தேச பக்தாளே, மோடியும் அல்லக்கைகளும் இந்தியாவின் சமூக நீதியை மட்டும் சிதைக்கவில்லை, இந்தியாவின் ஜனநாயக அமைப்புகள் என்று நம்பப்பட்ட, நம்பப்படுகிற அரசுத் துறை நிறுவனங்களை எல்லாம் ஊற்றி மூடி விட்டார்கள். அரசுத் துறை என்றவுடன் ஏதோ வணிக நிறுவனங்கள் என்று நினைத்துக் குழம்பி விடாதீர்கள். மோடியும், காவி அல்லக்கைகளும் குழி தோண்டிப் புதைத்தது இந்தியாவின் உழைக்கும் எளிய மக்களையும், சமூக நீதியையும் மட்டுமல்ல. மிக முக்கியமான இந்திய ஜனநாயகத்தின் தூண்களான பொதுத்துறை நிறுவனங்களின் நம்பகத்தன்மையை, … Continue reading இந்தியாவின் சமூக நீதியை மட்டுல்ல, ஜனநாயக அமைப்புகளையும் மோடி அரசு சிதைத்திருக்கிறது!

“இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சி மிகவும் சுணங்கிப் போய்க்கொண்டிருக்கிறது”

இப்படியே தொடருமானால், எதிர்காலத்தில் சிந்திக்கும் திறனற்ற, உலகம் கண்டுபிடித்துக் கொடுக்கும் பொருள்களுக்கு முதன்மை நுகர்வோராக, அதே சமயத்தில் பழம்பெருமைப் பீற்றலில் முதன்மையானவர்களாக இருப்போம்.

அம்பேத்கரும்,மார்க்ஸும், தமிழக மேதாவி கம்யூனிஸ்டுகளின் கையில் கிடைத்த பூமாலையும்

அம்பேத்கரியமும் மார்க்சியமும் இந்திய சூழலில் தராசின் எதிர் முனைகள் அல்ல மாறாக சமத்துவம் என்னும் தேரின் இருபெரும் சக்கரங்கள். ஒன்று இன்னொன்றை புறம்தள்ளுவது என்பது அந்த தேரை சாய்த்து விடும்.

பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு சட்டத்திருத்தத்தை சி.பி.எம் ஆதரித்து வாக்களித்தது சரியா?

பிரபாகரன் அழகர்சாமி உயர் சாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு மசோதா தாக்கலின் போது மாநிலங்களவையில் நடந்த விவாதத்தின் போது, இந்த மசோதாவை முதலில் தேர்வு குழு விவாதத்திற்கு அனுப்ப வேண்டும் என்று கனிமொழி செய்த முயற்சிக்கு சி.பி.எம் ஆதரவளித்தது, அதுக்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பிலும் டி.கே.ரங்கராஜன் கனிமொழிக்கு ஆதரவாகதான் வாக்களித்திருக்கிறார். அவர் நேற்று அவையில் பேசிய உரையிலும் இந்த மசோதவின் குறைகளை சுட்டிக்காட்டி விமர்சித்துதான் பேசியிருக்கிறார். மசோதாவில் இரண்டு திருத்தங்களை சி.பி.எம் முன்மொழிந்தது, அதுவும் பாஜகவால் நிராகரிக்கப்பட்டது. இத்தனைக்கு … Continue reading பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு சட்டத்திருத்தத்தை சி.பி.எம் ஆதரித்து வாக்களித்தது சரியா?

அரசியவாதி ரஜினி 1.0? அல்லது வியாபாரி ரஜினி 2.0?

உண்மையிலேயே தமிழகத்தின் மீது ஒரு துளி அக்கரையாவது இருந்தால், உடனடியாக அனைத்து படத்திட்டங்களையும் உதறிவிட்டு அரசியலில் குதித்திருக்கலாமே? இன்னும் படம் நடிக்கவேண்டிய அவசியம் என்ன?

“அதனால்தான் இது பெரியார் மண்”!

இந்த சிந்தனைகளை தந்தவர் பெரியார் ஒருவரே. அதனாற்தான் இது பெரியார் மண். யார் நரம்பு புடைக்கக் கத்தினாலும் தமிழ்நாடு பெரியார் மண் என்பது மாறவே மாறாது.

மைய நீரோட்டத்தின் இரு கரைகள்: அண்ணன் திருமாவும் ராக்கெட் ராஜாவும்

அண்ணன் திருமாவளவனுக்கு : பகுதி - 1 ப. ஜெயசீலன் சமகால அரசியல் தலைவர்களில் அரசியல் தலைமைத்துவம்(political leadership) பெற்றவர் யாரென்று கேட்டால் திருமாவளவன் என்று எளிதாக சொல்லிவிடலாம். சீமான்,அன்புமணி, ஸ்டாலின், கமல் போன்ற அனைவரும் நிர்வாகம்(administration) மற்றும் மேலாண்மை(management)(ரோடு போடுவோம், பாலம் கட்டுவோம், மாடு மேய்க்க வைப்போம், இலவச மருத்துவம் தருவோம்) குறித்து மட்டுமே திரும்ப திரும்ப தங்களது பார்வையாக(vision) முன்வைக்கிறார்கள். இன்னும் சொன்னால் கமல் ஒரு பேட்டியில் நமக்கு இன்றைய காலத்திற்க்கு தேவை அரசியல்வாதிகள் அல்ல … Continue reading மைய நீரோட்டத்தின் இரு கரைகள்: அண்ணன் திருமாவும் ராக்கெட் ராஜாவும்

“தலைமைப் பண்பின் இலக்கணம்!”

வேந்தன். இல கேட்கப்படும் கேள்விக்கு பின்னே சதி உள்ளதோ அல்லது யாரோ எழுதிக்கொடுத்ததோ. ஆனால் ஒரு கேள்வியையோ விமர்சனங்களையோ எதிர்கொள்ளும் பக்குவம் ஒரு தலைவருக்கு இருக்கவேண்டும். அப்படி இருப்பது தான் தலைமை பண்புக்கு அழகு. பெரியாரின் வரலாற்றை அறிந்த, அண்ணாவுடன் அரசியல் பயின்ற கலைஞருடன் வளர்ந்தவர் என்று சொல்லப்படும் மதிமுக தலைவர் வைகோ அவர்களுக்கு இது இருக்க வேண்டும் என்று சொல்லித் தெரிய தேவையில்லை. உணர்ச்சிவயப்பட்டு பேசுவதால், தான் சார்ந்திருக்கும் கொள்கைக்கும் கூட்டணிக்கும் மிகப்பெரிய சிக்கல் ஏற்படும் … Continue reading “தலைமைப் பண்பின் இலக்கணம்!”

புயல் கரையை கடந்துவிடும்.. சாதி?: இரா.வினோத்

இரா.வினோத் திருமணமான மூன்றே மாதங்களில் புதுமண தம்பதியை பெண்ணின் குடும்பத்தினரே கொடூரமாக கொலை செய்து, சடலங்களை க‌ர்நாடக ஆற்றில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. காதல் கைக்கூடிய அந்த இளம் ஜோடியின் கனவு, சாதி வெறியினால் சின்னாபின்னமாக்கப்பட்டு இருக்கிறது. கிருஷ்ணகிரி போலீஸ் எஸ்.பி.மகேஷ்குமார் அனுப்பிய கொலை படங்களும், மண்டியா போலீஸார் பகிர்ந்து கொண்ட தகவல்களும் ஏற்படுத்திய அதிர்வலையில் இருந்து மீள முடியவில்லை. ஓசூரை அடுத்துள்ள சூடகொண்டப்பள்ளியை சேர்ந்தவர் நந்தீஷ் (25). பட்டியல் வகுப்பை சேர்ந்த இவரும் … Continue reading புயல் கரையை கடந்துவிடும்.. சாதி?: இரா.வினோத்

அம்மியில் அரைத்தால் சுகப்பிரசவம் ஆகுமா?

ஜி. கார்ல் மார்க்ஸ் பெண்கள் உடலுழைப்பில் ஈடுபடுவது, அவர்களை நோயிலிருந்தும் சிசேரியன் போன்ற பிரச்சினைகளில் இருந்தும் காக்கும் என்பது போன்ற விவாதங்களை சமூக ஊடகங்களில் அடிக்கடி காண நேர்கிறது. நான் சொந்த வாழ்க்கையில் இருந்தே இதைப் புரிந்துகொள்ள முயல்கிறேன். எனது சிறுவயதில், குழந்தைகள் நாங்கள் மட்டும் ஐந்து பேர். அப்பா அம்மா தாத்தா பாட்டி சேர்த்தால் ஒன்பது பேர். தோப்பில் மட்டை முடையும் ஆட்கள், வயலில் வேலை செய்யும் ஆட்கள் என வாரத்தில் இரண்டு நாட்களுக்கு குறைந்தது … Continue reading அம்மியில் அரைத்தால் சுகப்பிரசவம் ஆகுமா?

நீட்டிற்கு பின்னுள்ள ’லாப’ அரசியல்!: வி.களத்தூர் எம்.பாரூக்

கல்வித்துறையில் அயல்நாட்டு வர்த்தகர்களை, தனியார் முதலாளிகளை அனுமதிக்க வேண்டும் என்பதில் இந்த அரசு தீயாக வேலையாற்றுகிறது.

உமா தேவியின் “கண்ணம்மா”!

கலை வெளிப்பாட்டில் ஒருபோதும் பெண்களை ஆண்களால் நெருங்க முடியாது என்பது எனது கருத்து. பெண்களின் வெளிப்பாடு மிகவும் உண்மையாகவும் பாசங்கற்றும் வெளிப்படும் தமையுடையதாய் இருக்கிறது

“காலம் வரும்..! #காலா வரட்டும்…!”: இயக்குநர் மீரா கதிரவன்

காலாவின் எல்லைக்குள் நின்றே ரஞ்சித்தை விமர்சிக்கவேண்டும். காலாவிற்கு வெளியே நின்றே ரஜினியை விமர்சிக்கவேண்டும்.

கமலின் அட்டைக்கத்தி: மனுஷ்ய புத்திரன்

அய்யாக்கண்ணுவின் கடந்தகால பா.ஜ.க தொடர்புகள் ஊரறிந்தது. சிறு அமைப்புகள் நடத்தும் பலவீனமான அடையாளப்போராட்டங்களை தொடர்ந்து ஊக்குவித்தால் பெரும் திரளாக விவசாயிகள் ஒன்றுகூட விடாமல் திசை திருப்பலாம் என்பது மத்திய அரசுக்கு தெரியும்.

எந்த ஓர் உயிர் இழப்பையும் தியாகம் என்று கொண்டாடுவது சாதியச் சிந்தனை: குட்டி ரேவதி

இந்தியாவில் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக, இதுவரை போராட்டக்களத்தில் பணயமாக, இரையாக வைக்கப்பட்டது ஒடுக்கப்பட்டவர்களின் உடல்கள் தான்.

“காலா…எங்களுக்கு அது கலகக்குரல்!”

ரஞ்சித் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் அல்ல. அவர்மீது விமர்சனங்கள் செய்வது எந்த தவறும் இல்லை. ஆனால் அவரது நோக்கத்தை கேள்விக்குள்ளாக்குவதும், உள்நோக்கம் கற்பிப்பதும், ஏதோ தலித் அரசியலை பேசி காசாக்க வந்தவர் என்னும் ரீதியில் உதாசீனப்படுத்துவதும் சில்லறைத்தனம் அன்றி வேறொன்றும் இல்லை.

காலாவை புறக்கணிக்க கோரிக்கை… க்யா ரே செட்டிங்கா? – 1

சாதி ஹிந்துக்களால், சூத்திரர்களால் ஒருபோதும் தலித்துகளின் sensibilities யை உள்வாங்கமுடியாது. தலித்துகளின் கலை இலக்கிய செயல்பாடுகளை புரிந்துகொள்ளமுடியாது.

யார் நீ ரஜினி?

சூழ்ச்சிகள், மோசடிகள், அப்பட்டமான அத்துமீறல்கள், அச்சுறுத்தல்கள் என பல வழிகளிலும் மக்களை அடிமைப்படுத்த மேலிருந்து முயற்சிக்கிறது இந்துத்துவா சக்தி.

“ரஞ்சித்திடமிருந்து ரஜினியை பிரிப்பது எப்படி?”: மனுஷ்ய புத்திரன்

காலா ரஜினி படம் அல்ல , ரஞ்சித் படம் என்று சொல்பவர்கள் தங்களைத்தாங்களே ஏமாற்றிக்கொள்கிறார்களா அல்லது மற்றவர்களை ஏமாற்ற முயற்சிக்கிறார்களா என்று தெரியவில்லை. கபாலிக்கு முன்பும் ரஞ்சித் படம் எடுத்திருக்கிறார்.

“கோவா, மணிப்பூர், மேகாலயா, உச்ச நீதிமன்ற நீதிபதி தற்போது மீண்டும் கர்நாடகா..!”

அருண் நெடுஞ்செழியன் அதிகாரத்தில் உள்ளவர்கள் பிடில் வாசித்தால் கீழே உள்ளவர்கள் நடனமாடுவதைத் தவிர வேறு என்னதான் செய்ய முடியும்? காங்கிரஸ்தான் என்ன செய்ய முடியும்? ஆர். எஸ். எஸ். சின் அரசியல் முன்னணியான பாஜக, சட்டபூர்வ ஆட்சியை நடத்துவதாக பாசாங்கு செய்துகொண்டு முதலாளித்துவ குடியரசு பண்புகளை கேலிக் கூத்தாக மாற்றி வருகிறது . உச்சநீதிமன்றம், ஆளுநர் மாளிகை,தேர்தல் கமிஷன் என அதன் நாட்டியங்கள் அரங்கேறாத அரங்குகள் இல்லை .. பாரம்பரிய காங்கிரஸ் கட்சியோ, "இந்த ஆட்சிக்கு அடிபணிவும் தெரியாது. … Continue reading “கோவா, மணிப்பூர், மேகாலயா, உச்ச நீதிமன்ற நீதிபதி தற்போது மீண்டும் கர்நாடகா..!”

கர்நாடக தேர்தல் முடிவுகள்: காங்கிரஸ் செய்த தவறு…

மாதவராஜ் காலை 11 மணியிலிருந்து மதியம் 2 மணி வரை பாஜக தலைவர்களும், ஊடக மேதாவிகளும் அடித்த அரட்டைகளும், ஆடிய ஆட்டங்களும் கொஞ்ச நஞ்சமல்ல. ஒரு சமயத்தில் பிஜேபி 112 முன்னிலை என்று காட்டியதும், “That is the magic number” என்று ஓவென்று பாஜக தொண்டர்களை விட ஊடக அறிவிப்பாளர்கள் கத்தித் தொலைத்தார்கள். தாமரைச் சின்னம் பொறித்த கொடிகள் ஆனந்தக் கூத்தாடியதை திரும்பத் திரும்ப காண்பித்துக் கொண்டிருந்தனர். முன்னிலை மேலும் அதிகமாகி 117 என்றதும் ஊடகங்களின் … Continue reading கர்நாடக தேர்தல் முடிவுகள்: காங்கிரஸ் செய்த தவறு…

நிர்மலாதேவி விவகாரம்: நவீன தேவதாசி முறை!: பேரா. டி. தருமராஜ்

அந்த உரையாடல் முழுக்க நிர்மலாதேவி ஆசை காட்டிக் கொண்டே இருக்கிறார். மதிப்பெண்கள், உதவித்தொகை, மேற்படிப்பு, வருமானம், முடிந்தால் வேலை வாய்ப்பு என்று ஒரு உயர் கல்வி நிறுவனத்திலிருந்து பொருளாதார ரீதியாய் எதை எதையெல்லாம் எதிர்பார்க்க முடியுமோ அத்தனையையும் அவர் ஆசையாகக் காட்டுகிறார்.

தமிழக மாணவர்களுக்கு மட்டும் சோதனை என்கிற சித்ரவதை ஏன்?

தேர்வெழுத வந்தவர்களை மனிதர்களாக, தன் வீட்டுப்பிள்ளைகளாக மலையாளிகள் நடத்தினார்கள். ஆனால் தமிழகத்தின் நிலை?

#நீட்2018: கேள்வித்தாளாவது தமிழில் கிடைக்குமா?

தமிழகத்திலேயே தேர்வு மையங்களை மாற்றித்தர கால அவகாசம் இல்லை என்கிறது சிபிஎஸ்இ இதுகூடச்செய்ய முடியாத ஓர் அமைப்புதான் தேர்வுகளை நடத்துகிறது என்பது எவ்வளவு பெரிய அபத்தம்?

நாம் எப்போதும் ரொட்டிக்காக கையேந்திக் கொண்டிருக்க வேண்டுமா?

கவனியுங்கள் சென்னை மெட்ரோவை வெளிமாநிலங்களுக்கு அனுப்பவில்லை, பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மாணவர்கள் நிறைந்த தென்மாவட்ட மாணவர்கள்தான் அலைக்கழிக்க படுகிறார்கள், மேற்கு வட மாவட்ட மாணவர்களும் இருக்கலாம்

நீட் தேர்வு மைய குளறுபடி: தெரிந்தே புறக்கணிப்படுகிறதா தமிழகம்?

தமிழகம் மாற்றான் தாய் மனப்பான்மையுடன் பார்க்கப்படுகிறதா இல்லையா

திணிக்கப்படும் ‘பரதமுனி’: பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்ரமணியத்தின் அபத்தம்!

பரத முனி தான் நாட்டிய சாஸ்திரத்திற்கு இலக்கணம் வகுத்தவராம்! என்னே ஒரு பித்தலாட்டம்!

எண்ணெய் சுத்திகரிப்பு குறித்த இந்தியா சவுதி அரேபியா ஒப்பந்தம்: அரசில்- பொருளாதார பலன்கள் என்ன?

எப்போதும் துயரமான சம்பவங்களையே சமூக ஊடகங்களில் படிக்க வேண்டியிருக்கிறது என்று நொந்து கொள்பவர்கள் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து படித்து சந்தோஷப்படலாம்.

பாலேசுவரம் காப்பக பிரச்சினையில் மார்க்சிஸ்ட் கட்சி மீது உண்மை அறியும் குழு அதிருப்தி

பீட்டர் துரைராஜ் பாலேசுவரம் கிராமத்தில் ஏழாண்டுகளுக்கு மேலாகச் செயல்பட்டு வரும் புனித ஜோசப் மரணத் தருவாய் பராமரிப்பு நிலையம் ( St.Joseph's Hospice ) எனும் சேவை நிலையத்தில் முறைகேடுகள் உள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டு அதன் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது; இதனை எதிர்த்து இந்த காப்பக பொறுப்பாளர் தாமஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து உள்ளது. இந்த காப்பகத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்டவர்களை மீண்டும் அங்கு சேர்க்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த … Continue reading பாலேசுவரம் காப்பக பிரச்சினையில் மார்க்சிஸ்ட் கட்சி மீது உண்மை அறியும் குழு அதிருப்தி

அழகை ஆராதிக்கும் விஜயபாஸ்கர்… அழகை அர்ச்சனை பண்ணும் புரோகிதர்

கிறிஸ் கெய்ல் தன்னிடம் கேள்விகேட்ட பெண் ஊடவியலாளரை "டார்லிங்" என்ற பதத்தை பயன்படுத்தி பேசினார் என்பதற்காக கடும் கண்டனத்திற்கு உள்ளானதோடு அடுத்த தொடரிலிருந்தே நீக்கப்பட்டார்.

தமிழக அரசியலின் சமூக நீதி தளத்தில் தவிர்க்க முடியாத சக்தியா திமுக ?!…

ஜி. கார்ல் மார்க்ஸ் திமுக மீதான சாதிப் பாகுபாடு குறித்த விமர்சனங்கள் ஒன்றும் தமிழக அரசியலில் புதிதல்ல. அண்ணாவின் காலத்தில் அது முதலியார் கட்சி என்று விமர்சிக்கப்பட்டது. காஞ்சிபுரம் தேர்தலில், அண்ணாவின் சாதியப் பின்னொட்டுடன் தேர்தல் பிரச்சார போஸ்டர்கள் அடிக்கப்பட்டபோது, “எங்கிருந்து புதிதாக முளைத்தது இந்த முதலியார் என்னும் வால்...” என்று பெரியார் விமர்சித்ததெல்லாம் ஆவணமாக இருக்கிறதுதான். திகவில் இருந்து பிரிந்து வெகுஜன தேர்தல் கட்சியாக திமுக வெளியேறிய போதே அதன் சமரசங்கள் தொடங்குகின்றன. இது திகவுக்கும் … Continue reading தமிழக அரசியலின் சமூக நீதி தளத்தில் தவிர்க்க முடியாத சக்தியா திமுக ?!…