பா. ஜெயசீலன் யூ ட்யூப்லிருக்கும் இளையராஜாவின் பழையது, புதியது என கிட்டத்தட்ட எல்லா பேட்டிகளையும் முழுமையாக நான் பார்த்திருக்கிறேன். இளையராஜா குறித்து பிறர் அளித்த எல்லா பேட்டிகளையும் கிட்டத்தட்ட ஒன்று விடாமல் முழுமையாக பார்த்திருக்கிறேன். அந்த பேட்டிகள் வழியாக இளையராஜாவின் மனோநிலை அல்லது உளவியல் குறித்து நான் உருவாக்கிக்கொண்ட சித்திரம் ஒன்று என்னிடம் உண்டு. திரையிசை என்பது ஒரு கண்கட்டு வித்தை என்றும், இசையமைப்பாளர்கள் என்பவர்கள் கண்கட்டு வித்தைக்காரர்கள் என்றும் இல்லாத புறாவை எப்படி மந்திர காரர்கள் … Continue reading இளையராஜா, ரிச்சர்ட் வாக்னர் மற்றும் சாதி ஹிந்துக்கள்| பா. ஜெயசீலன்
பகுப்பு: கருத்து
மனநலத்துறையிலும் திராவிட மாடலை உருவாக்குவோம்: மருத்துவர் சிவபாலன் இளங்கோவன்
மருத்துவர் சிவபாலன் இளங்கோவன்முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு மாநில அரசின் நிதிநிலை அறிக்கை கிட்டத்தட்ட அனைவராலும் பெரிதாக பேசப்படுகிறது. பெண் கல்வியில் இருந்து பெரியாரின் புத்தகங்கள் மொழிபெயர்க்கப்படுவது வரை பெரும்பாலான பட்ஜெட் அறிவிப்புகள் வெகுசன மக்களால் கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் இந்த வருடத்து பட்ஜெட்டின் பெரும்பாலான அறிவிப்புகள் இப்படி பெரிதாக கொண்டாடப்படும் வேளையில் ‘கீழ்பாக்கம் மனநல மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு தமிழ்நாடு மனநல மற்றும் நரம்பியல் மையமாக மேம்படுத்தப்படும்’ என்கிற அறிவிப்பு மட்டும் பகடியாக, கேலியாக பேசப்படுகிறது. … Continue reading மனநலத்துறையிலும் திராவிட மாடலை உருவாக்குவோம்: மருத்துவர் சிவபாலன் இளங்கோவன்
தெருவுக்கு நாலு பேர் எழுதினால் என்ன தப்பு? மு. அகமது இக்பால்
எழுத்தும் எழுத்து ஜனநாயகமும்1982, 83இல் இருந்து சென்னை புத்தக கண்காட்சியை பார்த்து வருகின்றேன், நூல்களை வாங்கி வருகின்றேன். அப்போது அண்ணா சாலை காயிதே மில்லத் பெண்கள் கல்லூரி மைதானத்தில் நடந்தது. 40 அல்லது 50 பதிப்பாளர்கள் மட்டுமே அரங்கு அமைப்பார்கள். அன்னம், அகரம், வானதி, தமிழ்ப்புத்தகாலயம், நர்மதா, காவ்யா, அலைகள், என் சி பி எச், சவ்த் விஷன், க்ரியா, தென்னிந்திய சைவ சித்தாந்த கழகம், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், நேஷனல் புக் ட்ரஸ்ட், சாகித்ய … Continue reading தெருவுக்கு நாலு பேர் எழுதினால் என்ன தப்பு? மு. அகமது இக்பால்
IRS அதிகாரி பூ. கொ. சரவணன் மன்னிப்பு கேட்க வேண்டும் | சிமி மீனா
சிமி மீனா பூ.கொ.சரவணன் மீதான பாலியல் புகார் அதிர்ச்சியளிக்கிறது. பலருடைய நட்பு தொடர்பற்றுப் போனதைப் போல் அவரோடும் இப்போது தொடர்பில்லை என்றாலும் சில வருடங்களுக்கு முன்பு வரை நல்ல நண்பராக இருந்தவர். அக்கா என்று உறவு சொல்லி அழைத்தவர். கடைசியாக ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்வில் சந்தித்ததை இப்போது எண்ணிப் பார்க்கிறேன். தனது முகநூல் ஸ்டேட்டஸ்களைப் போலவே எவ்வளவு முற்போக்காகப் பேசினார்!! ஆர்.எஸ்.எஸ் அஜெண்டாவிற்கு எதிராக நாம் கடுமையாக உழைக்க வேண்டும். ஆனால் அவர்கள் தான் நம்மைவிட … Continue reading IRS அதிகாரி பூ. கொ. சரவணன் மன்னிப்பு கேட்க வேண்டும் | சிமி மீனா
கொரோனா பெருந்தொற்றைவிட அபாயகரமானது தனியார்மயமாக்கல் | மரு. அரவிந்தன் சிவக்குமார்
மரு. அரவிந்தன் சிவக்குமார்பெருந்தொற்று நெருக்கடி மிகுந்த சூழல் என்பதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும், அதற்கு முன்னரே பொது சுகாதாரத்துறையில் தனியார் பங்களிப்பை முதன்மைப்படுத்தி பல்வேறு விசயங்கள் நடந்து கொண்டு தான் இருந்தன.கார்பொரெட் சமூகப் பங்களிப்பின் மூலம் My hospital My pride என்ற திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தும் திட்டம் ஜூலை 2019ல் தொடங்கப்பட்டுள்ளதை நாம் கவனமாய் பார்க்கவேண்டியுள்ளது.மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளின் துறைவாரியாக இருக்கும் செலவுகளுக்கான நிதித்தேவையை சமாளிக்க முதலமைச்சர் காப்பீட்டுத்திட்டத்தின் … Continue reading கொரோனா பெருந்தொற்றைவிட அபாயகரமானது தனியார்மயமாக்கல் | மரு. அரவிந்தன் சிவக்குமார்
சாதி தீண்டாமை ஒழிப்பில் கம்யூனிஸ்டுகளின்கால் தூசுக்கு ஆகமாட்டார்கள்தலித்திய அமைப்பினர்…!!!
சாதி தீண்டாமை ஒழிப்பில் கம்யூனிஸ்டுகளின் கால் தூசுக்கு ஆகமாட்டார்கள்தலித்திய அமைப்பினர்…!!! தருமபுரி பாலனையும், ஏ.எம் கே- வையும் இணைத்துக் கொள்வோம்…!!! சீனிவாசராவ்ஏ.ஜி.கஸ்தூரிரெங்கன்மணலூர் மணியம்மைவாட்டாடாகுடி இரணியன்ஜாம்பவானோடை சிவராமன் இவர்கள் யாருமே தலித் சமூகத்தைச் சார்ந்தவர்கள் அல்ல.கீழத்தஞ்சையில் இவர்களின் ஈகம் என்பது, ஏதோ சமூக அடுக்கில் ஆதிக்கச் சாதியில் பிறந்து விளிம்புநிலையில் உள்ளோரை மீட்க வந்த மீட்பர்களாக அவர்கள் களத்தில் நிற்கவில்லை. மாறாக,கம்யூனிச சித்தாந்தந்தை ஏற்றும் , கட்சித் திட்டங்களை முன்வைத்தும் களத்தில் நின்று சமூகசமத்துவத்தை முன்னெடுத்தவர்கள். எழுத்தாளர் அழகியபெரியவன் … Continue reading சாதி தீண்டாமை ஒழிப்பில் கம்யூனிஸ்டுகளின்கால் தூசுக்கு ஆகமாட்டார்கள்தலித்திய அமைப்பினர்…!!!
தலை துண்டிக்கப்பட்ட கடவுள்களின் புதல்வன் “கர்ணன்”
தலித்துகளின் militant குணத்தை ஊக்குவிக்கும், எதிர் தாக்குதலுக்கான வாய்ப்புகளை ஆராயும் கதையாடல்கள் திரைப்படங்களில் தொடர்ந்து வலுவாக நேர்த்தியாக வெளிப்படும் பொழுது அது சாதிய சமூகத்தில் நிச்சயம் ஒரு சலனத்தை ஏற்படுத்தும்
ஸொமேட்டோ ஊழியர் பெண்ணை தாக்கினாரா? எது உண்மை?
ராஜசங்கீதன்ஹிதேஷா என்கிற ஒரு பெண் ஒரு காணொளி பதிவிடுகிறார். உணவு ஆர்டர் செய்ததாகவும் அதை டெலிவரி செய்ய வந்தவர் தாமதமாக வந்ததாகவும் அதன் காரணமாக Zomato Customer Care-ல் புகாரளித்து விட்டு பதில் வரும் வரை உணவு கொண்டு வந்தவரை காத்திருக்க சொன்னதாகவும் அது விவாதமாக டெலிவரி கொண்டு வந்தவர் அவர் மூக்கில் குத்தி விட்டதாகவும் மூக்கில் ரத்தம் வடியும் காட்சியையும் உள்ளிட்டு பேசியிருந்தார்.ஹிதேஷா சமூக தளங்களில் influencer ரகத்தை சேர்ந்தவர் என்பதால் காணொளி வைரல் ஆகியிருக்கிறது. … Continue reading ஸொமேட்டோ ஊழியர் பெண்ணை தாக்கினாரா? எது உண்மை?
இவர்களின் வாழ்தலுக்கான போராட்டத்தை வேடிக்கை மட்டும் பார்க்க வேண்டுமா?
சிவபாலன் இளங்கோவன் ஒட்டுமொத்த மாணவர்களின் போராட்டத்தின் முகமாக இருக்கும் அந்த பர்தா அணிந்த, கண்ணாடிபோட்ட பெண்ணிடம் பத்திரிக்கையாளர் “எதற்காக இந்த போராட்டம்” என கேட்கும்போது, அந்த பெண் ஒரே வார்த்தை தான் அதற்கு பதிலாய் சொல்கிறாள் “For existence”. இதை சொல்லும்போது அவள் அத்தனை பதட்டமாக இருக்கிறாள். அவளது கரங்களை இறுக்கமாக பற்றிக்கொண்டு ‘பயப்பட வேண்டாம்’ என சொல்ல வேண்டும் போல் இருக்கிறது. ஆனால் பயப்பட வேண்டாமா? “survival” ஐ தவிர மனிதனுக்கு வேறு என்ன தலையாக … Continue reading இவர்களின் வாழ்தலுக்கான போராட்டத்தை வேடிக்கை மட்டும் பார்க்க வேண்டுமா?
ஜெலட்டின் குச்சி!
ரத்தவெறி கொண்டவர்கள் நாக்கை சப்புக்கொட்டிக் கொண்டு காத்திருக்கிறார்கள்!
குடியுரிமை திருத்த சட்டம்: ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் அரசியலின் புதிய வடிவம்!
முருகானந்தம் இராமசாமி குடியுரிமை திருத்த சட்ட மசோதா ஒரு கொள்ளிக்கட்டையில் தலையைச்சொரியும் வேலை என நினைத்தேன். அதுவும் மயிருள்ள மண்டையிருந்தால் கூட பரவாயில்லை. அதுவுமில்லை என்றால் கபாலம் வரை கிர்ரென்று இறங்கத்தான் செய்யும். மண்டை மேல்மாடி காலியாயிருப்பது கூட பிரச்சனையில்லை. மண்டைக்குள்ளும் சரக்கில்லை என்பவன் இதைச்செய்யாமலிருந்தால்தான் அதிசயம். வங்கதேசத்திலிருந்து வரும் அகதிகளால் பெரிய பிரச்சனை என்பது சங்கிகள் வெகுகாலமாக இடும் ஊளை. காரணம் அவர்கள் பெரிதும் இஸ்லாமியர்கள் என்பது அவர்களின் கணிப்பு. எனவே வேகமாக ஊளையிட்டார்கள். வங்கதேசத்துடனான … Continue reading குடியுரிமை திருத்த சட்டம்: ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் அரசியலின் புதிய வடிவம்!
“பெருந்தன்மையாக நடந்துகொள்ளுங்கள்” – ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கூக்குரலும், பாசிச அரசும்: கனகா வரதன்.
கனகா வரதன் திருநங்கை, திருநம்பி, இடையிலங்க (இன்டர்செக்ஸ்) மற்றும் பல பைனரி அல்லாத பாலின அடையாளங்களை கொண்ட மாற்றுப்பாலின மக்களுக்கான "திருநர் பாதுகாப்பு மசோதா - 2019" அம்மக்களின் பெரும் எதிர்ப்புகளுக்கும், போராட்டங்களுக்குமிடையே இன்று மத்திய அரசால் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இம்மசோதா இப்பொழுது மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ளது. இந்துத்துவா சித்தாந்தத்துடனும், பிற்போக்கு மனப்பான்மையுடனும் பா.ஜ.க அரசால் கொண்டுவரப்பட்ட இம்மசோதா மாற்றுப்பாலின சமூகத்தின் எந்த ஒரு அடிப்படை கோரிக்கைகளுக்கும் செவிசாய்க்காமல் இந்திய அரசியலமைப்புச் சட்டம் … Continue reading “பெருந்தன்மையாக நடந்துகொள்ளுங்கள்” – ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கூக்குரலும், பாசிச அரசும்: கனகா வரதன்.
தெலுங்கானா என்கவுண்டர்: இந்திய சமூகத்திற்கு அளிக்கப்பட்ட போலியான ஆறுதல்- நீதி!
இன்னும் சொன்னால் குற்றவாளிகளும், குற்றங்களுமே சமூகத்தின் உள்ளார்ந்த ஆன்ம நலத்தை பிரதிபலிக்கிறார்கள். a crime gives us the insight in to the cross section of a society's mental wellness. இதை நாம் ஆராய தொடங்கினால் மொத்தமாக இந்தியாவின் மீது அணுகுண்டு போட்டு அழிக்க வேண்டிய முடிவிற்கு நம்மை கொண்டு போய் நிறுத்தும்.
“ஆர்.எஸ். எஸ்ஸை. அழைக்காமல் மரு. ராமதாஸை ஏன் அழைக்கிறீர்கள் காயத்ரி?”
டாக்டர். ஷாலினி டாக்டர். தொல் திருமாவளவன் கோயில்களின் ஆபாச சிலைகளை பற்றி விமர்சித்தார். அதற்கு காயத்ரி ரகுராம் என்பவர், அது ஹிந்து மதத்திற்கு எதிரானது என்று, தொ. திரு. வின் விரைகளை பற்றி பேசினார். அதாவது ஆபாசத்திற்கு எதிரான புகாருக்கு பதில் இன்னும் கொஞ்சம் ஆபாசம். அதற்கு பிறகு ரொம்பவும் விசித்திரமாக அவர் பா ம காவின் தலைவர் டாக்டர் ராமதாஸுக்கு தூது அனுப்பி, அடியாள் வேண்டும் என்று வெளிபடையாகவே கேட்கிறார். இந்த காயத்ரி மாதிரி டுபுக்குக்கள் … Continue reading “ஆர்.எஸ். எஸ்ஸை. அழைக்காமல் மரு. ராமதாஸை ஏன் அழைக்கிறீர்கள் காயத்ரி?”
சமூக நீதி அரசியல் கல்வியே இதற்கான மருந்து!
முருகானந்தம் ராமசாமி நான் சிலகாலம் முன்புவரை பிராமணீயம் என்றே சுட்டி வந்தேன்.. நவீீன ஜனநாயக சமூகப்ரக்ஞைக்கு எதிர்திசையில் இயங்கும் ஆதிக்க கருத்தியல் என்பதால் அதை கருத்தியல் ரீதியாக அப்படிச்சுட்டினேன். இந்திய சமூகவரலாற்றில் பிராமணீயத்தின் தடத்தை கருப்பு வெள்ளையாக அன்றி டி. டி. கோசாம்பி, கெ. தாமோதரன், டாக்டர். எஸ். ராதாகிருஷ்ணன், டாக்டர். பி. ஆர். அம்பேத்கர், தேவிப்ரசாத் சட்டோபாத்யாய, ஆகிய அறிஞர்களை வாசித்த பின் பெற்ற தத்துவார்த்த பின்புலமும் எனது கண்டடைதலுக்கு உண்டு. சிறுகுழுவாக தங்கள் நேரடி … Continue reading சமூக நீதி அரசியல் கல்வியே இதற்கான மருந்து!
கல்வி நிறுவன மரணங்கள்: புறக்காரணிகளை என்ன செய்ய முடியும்?
ஃபாத்திமா நுழைவுத் தேர்வுகளில் முதலிடம் பெற்றவர் எனக் கூறுகிறார்கள். பாயல் தாத்வி மகப்பேறு மருத்துவத்தில் முதுகலை படித்து வந்தவர். நஜீப் நன்றாகப் படித்து வந்த மாணவர். இப்படி இருந்தும், பட்டமா கிடைத்தது?
இந்துவாக உணர்தல் – பெரும்பான்மை சமூகத்தில் உயிர்வாழும் உத்தி!
டி. தருமராஜ் பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பு வழக்கில் கொடுக்கப்பட்ட தீர்ப்பு குறித்து எதையுமே எழுதப்போவது இல்லை என்று தான் முடிவு செய்திருந்தேன். ஆனால், எனது நண்பர்கள் அடையும் மனக் கலக்கம் என் விரதத்தைக் கலைத்திருக்கிறது. எதையுமே எழுதுவதில்லை என்று தீர்மானித்திருந்ததற்கு சில காரணங்கள் இருந்தன. அவை இன்னமும் உயிரோடு இருக்கின்றன. தீர்ப்பு வழங்கப்பட்டதும் ஒரு நாத்திகக் கிறித்தவனான எனக்கு பொக்கென்று இருந்தது. இந்தப் பொக்கை என்னால் விளக்க முடியவில்லை. எனக்கு என்ன தோன்றுகிறது என்பதே எனக்கு விளங்காமல் … Continue reading இந்துவாக உணர்தல் – பெரும்பான்மை சமூகத்தில் உயிர்வாழும் உத்தி!
மாபெரும் கலாச்சார யுத்தத்தை நாம் துவங்க வேண்டும்: லக்ஷ்மி சரவணகுமார்
லக்ஷ்மி சரவணகுமார் ஒற்றை தேசிய சிந்தனையை முன்னிறுத்தும் அரசதிகாரம் நேரடியாக தாங்கள் ஒற்றை தேசியத்தை முன்வைக்கிறோமென சொல்வதில்லை. நாங்கள் சிறுபான்மையினருக்கு எதிரானவர்கள் அல்ல என மாற்று மொழியில் அதனை வெளிப்படுத்துகிறார்கள். பிராமண முட்டாள் (அறிவு) ஜீவிகள் எழுதுவார்களே நான் சைவ உணவு மட்டுமே உண்பேன் ஆனால் மாட்டுக்கறி உணவை ஆதரிக்கிறேனென. அதே போன்ற கயவாளித்தனம். சொல்லப்போனால் அதை விடவும் உக்கிரமான கயவாளித்தனம். ப்ரிட்டிஷ் வருவதற்கு முன்னால் இந்தியா என்பது ஐம்பத்தாறு தேசங்களின் ஒருங்கிணைந்த நிலம். நிலவியல் ரீதியாக … Continue reading மாபெரும் கலாச்சார யுத்தத்தை நாம் துவங்க வேண்டும்: லக்ஷ்மி சரவணகுமார்
இஸ்ரோவின் உள்ளே என்ன தான் நடந்துகொண்டிருக்கிறது?
திடீரென லட்சக்கணக்கான மக்கள் மனத்தில் இஸ்ரோ மேல் அன்பு பொங்கி வழிகிறது. இஸ்ரோ விஞ்ஞானிகளைச் சந்தித்து முதுகில் தட்டிக்கொடுக்கும் மோதியைப் பார்த்து மக்கள் நெகிழ்ந்துபோகிறார்கள் உணர்ச்சிகளைக் கிளறச்செய்து அதன் மூலம் லாபமடையும் நோக்கில் ஆளும் கட்சி செய்யும் நாடகீயங்களைப் பார்க்கும் போது இது ஒரு well planned meeting என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. நாலாப்புறமும் கேமராக்கள் தமது பணியைச் செவ்வனே செய்துகொண்டிருந்தன. ஹிட்லரின் அமைச்சராக இருந்த கோயபல்ஸ் ஒரு சந்தேகத்தை, ஒரு பொய்யை அது உண்மையாகும்வரை … Continue reading இஸ்ரோவின் உள்ளே என்ன தான் நடந்துகொண்டிருக்கிறது?
உரிமைகளுக்கான போராட்டத்தில் அரசதிகாரத்தால் வேட்டையாடப்படும் ஒருவன் பக்கம் நாம் நிற்கவேண்டாமா?
மனுஷ்யபுத்திரன் அதிகாரத்திற்கு எதிராக துணிச்சலுடன் போராடுகிறவர்களை சொந்த விவகாரங்களை வைத்து முடக்க நினைப்பது அதிகாரத்தின் இயல்பு. அதிகாரம் ஒருவரை அழிக்க நினைத்தால் ஒன்று அவரை 'என்கவுண்டர்' செய்கிறது. அல்லது ' கேரக்டர் அசாசினேஷன் ' செய்கிறது. ஆனால் தாங்களும் அதிகாரத்திற்கு எதிரானவர்கள் என்று கூறிக்கொள்பவர்களும் அந்த ஆயுதத்தை எடுப்பதுதான் வியப்பாக உள்ளது. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான விவகாரங்களில் இருவரில் ஒருவர்மீது மற்றவருக்கு புகார்கள் இருக்குமெனில் தனிப்பட்ட முறையிலோ சட்டப்படியோ அதற்கு தீர்வுகளை காண உரிமையுண்டு. ஆனால் … Continue reading உரிமைகளுக்கான போராட்டத்தில் அரசதிகாரத்தால் வேட்டையாடப்படும் ஒருவன் பக்கம் நாம் நிற்கவேண்டாமா?
ராஜராஜன் புகழ் பாடுவது தமிழர்கள் சுயமரியாதை இழப்பதின் அடையாளம்!
அ. மார்க்ஸ் ராஜராஜன் புகழ் பாடும் ஒரு வீடியோ கிளிப்பிங்கை பார்த்தேன். முற்றிலும் வரலாற்று உணர்வு இல்லாமல் ராஜராஜன் வழிபாடு இங்கே அரங்கேற்றப்படுகிறது,. அறிவுபூர்வமான சிந்தனைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு மடமை தமிழ் சமூகத்தில் இப்படிப் பரவுவது ஒரு பேராபத்து. நீதிபதிகள் எல்லாமும்கூட இந்தச் சூழலுக்குப் பலியாகிறார்கள். நான் பார்த்த வீடியோவில் பேசுகிற நபர் முன்வைக்கும் ராஜராஜப் புகழின் பின்னுள்ள வரலாற்றுப் புரிதலற்ற வழிபாட்டு மனோபாவத்தை விளக்க ஒரு எடுத்துக்காட்டைச் சொல்வதென்றால் ராஜராஜனின் இலங்கைப் படை எடுப்பைப் பற்றி … Continue reading ராஜராஜன் புகழ் பாடுவது தமிழர்கள் சுயமரியாதை இழப்பதின் அடையாளம்!
கழிப்பறை கவலைகளும் தமிழர் பண்பாடும்
ஆர்த்தி வேந்தன் இப்போதாவது இதைக்குறித்துப் பேச எனக்குப் போதுமான தைரியம் வந்திருக்கிறது. மனதில் பட்டதை அப்படியே சொல்லப்போகிறேன். என்னை யாரேனும் இரவு விருந்துக்கு அழைத்தாலோ, என்னை மொழிபெயர்ப்பு பணி சார்ந்து அழைத்தாலோ நான் கேட்கிற முதல் கேள்வி அது தான். ஒரு வங்கிக்கு போவது என்றாலும், ஷாப்பிங் செய்ய அழைக்கப்பட்டாலும் அதே கேள்வி தான் முதலில் வந்து விழும். "நாம போற இடத்துல ரெஸ்ட் ரூம் இருக்கா?". நான் ஒரு பேருந்தில் பயணிக்க நேரிடுகிற போதெல்லாம், அந்தப் … Continue reading கழிப்பறை கவலைகளும் தமிழர் பண்பாடும்
பா. ரஞ்சித்தும் சோழர்களும்
வாசுகி பாஸ்கர் தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் பகுதிக்கு சமீபத்தில் ஒரு நிகழ்வுக்குச் சென்று திரும்பிய இயக்குனர் பா.ரஞ்சித்தின் உரையின் ஒரு பகுதி மட்டும் விவாதத்திற்குள்ளாகி இருக்கிறது, அது இராஜராஜ சோழன் காலத்தில் பிடுங்கப்பட்ட நிலம் தொடர்பான கருத்து. அவர் பேசியதில் இரண்டு முக்கியமான அம்சம் உள்ளது, அந்த இரண்டுக்குமே நெருங்கிய தொடர்புமுள்ளது, இவ்விரண்டுக்கும் உள்ள தொடர்பினால் உருவாகும் மும்முனை மௌனம் சுவாரசியமானது. ரஞ்சித் பேசியதில் குறிப்பிடத்தக்க இரு முக்கிய அம்சங்கள்; 1 . இராஜராஜ சோழன் காலத்தில் … Continue reading பா. ரஞ்சித்தும் சோழர்களும்
“நடுநிலையாளர்” பாண்டேவுக்கு ஒரு பதில்: சுப. வீரபாண்டியனின் திறந்த மடல்
அன்புள்ள திரு ரங்கராஜ் (பாண்டே) அவர்களுக்கு, வணக்கம். 'ஹிந்தி திணிப்பு உண்மையா?' என்னும் தலைப்பில், சாணக்கியாவில் நீங்கள் ஆற்றியுள்ள உரையைக் காணொளி வடிவில் முழுமையாகப் பார்த்தேன். பல ஆண்டுகளுக்குப் பின்,'புரட்சி வெடிக்கும், கிளர்ச்சி வெடிக்கும்' என்னும் குரல்கள் கேட்பதாக, ஒரு மெலிதான ஏளனத்துடன் தொடங்கும் அந்த உரை குறித்துச் சில செய்திகளைப் பகிர்ந்து கொள்ளவே இந்தத் திறந்த மடலை எழுதுகின்றேன். புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய, டி.எஸ்.ஆர். சுப்பிரமணியம் தலைமையில் குழு அமைக்கப்பட்டதும், அதன் பிறகு, … Continue reading “நடுநிலையாளர்” பாண்டேவுக்கு ஒரு பதில்: சுப. வீரபாண்டியனின் திறந்த மடல்
மு. க. ஸ்டாலினுக்கு வெற்றியைத் தேடித் தந்தது எது?
பாவெல் தருமபுரி பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியின் வெற்றிக்குப் பிற்பாடு மு.க. ஸ்டாலின் அவர்களை கதாநாயகனாகவும், ரட்சகன் போலவும் பிம்பங்கள் கட்டமைக்கப் படுகின்றன. இன்னொரு பக்கம் இது பெரியார் மண் என்றும் இங்கே எந்த காலத்திலும் பா.ஜ.க குடியேற முடியாது என்றும் பரவலாக கருத்துக்கள் பகிரப்படுகின்றன. இது உண்மைதானா? ஸ்டாலினின் கள வியூகமும், அவரின் தொடர் பிரச்சாரங்களும், திராவிட கோட்பாடும்தான் தி.மு.க கூட்டணிக்கு வெற்றியினை கொண்டுவந்து கொடுத்ததா? நிச்சயமாக இல்லை. ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்ததை விடுங்கள், … Continue reading மு. க. ஸ்டாலினுக்கு வெற்றியைத் தேடித் தந்தது எது?
“தமிழக எம்.பி.-க்களால் தில்லியில் எதுவும் செய்ய முடியாதா?”
ஆழி செந்தில்நாதன் தமிழ்நாட்டில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திமுக கூட்டணி எம்.பி.களால் என்ன செய்யமுடியும் என்று சில பத்திரிகைகளும் புத்திசாலிகளும் கேட்கிறார்கள். சாதாரண மக்களிடம் அந்தக் கேள்வி இருந்தால் அதை அறியாமை என்று கூறலாம். பாஜக ஆதரவாளர்களும் பத்திரிகையாளர்களும் கேட்பதை என்ன என்று கூறுவது? இங்கே ஒரு விசமப் பிரச்சாரம் நடக்கிறது. தேர்தலுக்கு முன்பு திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டபோது மத்திய அரசு விவகாரங்களில் மாநிலக் கட்சிகள் வாக்குறுதி தரலாமா என்று கேள்வி கேட்டார்கள். தமிழ் இந்து இன்று … Continue reading “தமிழக எம்.பி.-க்களால் தில்லியில் எதுவும் செய்ய முடியாதா?”
எக்சிட் போல் முடிவுகள் உண்மையா? உள்நோக்கமுடையதா?
கா. ஐயநாதன் இந்திய நாடாளுமன்றத்தின் 17வது மக்களவையைத் தேர்ந்தெடுக்கும் 7ஆம் கட்ட வாக்குப்பதிவு ஞாயிற்றுக் கிழமை முடிவடைந்த சில நிமிடங்களிலேயே “மீண்டும் மோடி ஆட்சியே அமையப் போகிறது” என்று கூறும் வாக்குக் கணிப்பு முடிவுகள் (Exit Poll Results) தொலைக் காட்சிகளில் வெளியாகியுள்ளன. முன் திட்டமிடப்பட்டுபோல் எல்லா தொலைக்காட்சிகளின் வாக்குக் கணிப்பு முடிவுகளும் மோடியின் தலைமையில் மீண்டும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான கூட்டணி அரசு அமையும் என்று கூறியுள்ளன. பாஜக தலைமையிலான தேச ஜனநாயகக் கூட்டணி … Continue reading எக்சிட் போல் முடிவுகள் உண்மையா? உள்நோக்கமுடையதா?
குஜராத் விவசாயிகள் மீது பெப்சி தொடுத்த போர்!
சந்திரமோகன் குசராத் மாநிலம் அகமதாபாத் நீதிமன்றத்தில், சபர்கந்தா பகுதியில் உள்ள நான்கு விவசாயிகள் மீது பெப்சி கம்பெனி வழக்கு தொடுத்துள்ளது. "பெப்சி நிறுவனம் லேஸ் என்ற பிராண்ட் சிப்ஸ்க்கு பயன்படுத்தும் FC5, FL- 2027 என்ற ரக உருளைக்கிழங்கை நான்கு விவசாயிகள் கள்ளத்தனமாக பயிர் செய்கிறார்கள் ; எனவே ஒவ்வொருவரும் ரூ.1.05 கோடி நட்ட ஈடு தர வேண்டும் " என்பது வழக்காகும். துப்பறியும் நிபுணர்களை வைத்து விவசாயிகளை நேரில் சந்தித்து பேசுவதை வீடியோ செய்து வழக்கு … Continue reading குஜராத் விவசாயிகள் மீது பெப்சி தொடுத்த போர்!
‘இந்திய நாஜிகள்’: ஆர்.எஸ்.எஸ். பற்றி ஜெயகாந்தன் !
எழுத்தாளர் ஜெயகாந்தன், கல்பனா’ மாத இதழின் ஆசிரியராக இருந்தபோது,எனது பார்வையில் ஆர்.எஸ்.எஸ்.‘ என்ற தலைப்பில், அந்த சஞ்சிகையின் 1980 ஜனவரி இதழில் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி இது.எவ்வளவு தீர்க்கமான பார்வையுடன் அவர் இருந்திருக்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். அவர் பிறந்த நாளை ( ஏப்ரல் 24) முன்னிட்டு வாசகர்களுக்காக தருகிறோம். ...................................................................................................... `ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கம்’ என்ற இந்தப் பெயர் எனது இளமைப் பருவ காலத்தில் மிகப் பிரபலமாயிருந்தது. 1945, 46, … Continue reading ‘இந்திய நாஜிகள்’: ஆர்.எஸ்.எஸ். பற்றி ஜெயகாந்தன் !
பாசிசத்தை ஒழிக்க வந்த பாசிஸ்டுகள்: வாசுகி பாஸ்கர்
வாசுகி பாஸ்கர் நடந்து முடிந்த தேர்தல் நேரத்தில், "பாசிச பாஜக வந்துடும்" என்று சொல்லிக்கொண்டே பல பேர் பாசிஸ்டுகளாக மாறியிருந்தார்கள். இதை தேர்தல் நேரத்திலேயே எழுதியிருக்கலாம், ஒரு பாதகமுமில்லை. ஆனால் தங்களின் முகநூல் பதிவுகள் மூலம் தான் மக்கள் திரண்டுபோய் வாக்களிப்பதாக நம்பிக்கொண்டிருந்த பலர் ஏற்படுத்திய கருத்துருவாக்கத்திற்கு நானும் மதிப்பளித்து, இதை தேர்தல் முடிவடைந்ததும் எழுதுவது என்று திட்டமிட்டுக்கொண்டேன். அம்பேத்கரை அம்பேத்கரின் எழுத்துக்கள் வாயிலாகவே புரிந்துக்கொள்ள நாம் முயன்றோமானால், ஜனநாயகம் / அதிகாரம், இவையிரண்டையுமே அவர் எப்படி … Continue reading பாசிசத்தை ஒழிக்க வந்த பாசிஸ்டுகள்: வாசுகி பாஸ்கர்
அம்பானி நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கும் அமித்ஷா!
இரா. எட்வின் பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர் திரு. அமித்ஷா குஜராத் மாநிலம் காந்திநகர் மக்களவைத் தொகுதிக்கு போட்டியிடுகிறார். தனது வேட்புமனு தாக்கலின்போது அவர் கணக்கில் காட்டியுள்ள சொத்து விவரங்களை இன்றைய தீக்கதிரில் பார்க்க முடிந்தது. அவர் காட்டியுள்ள கணக்கின்படி அவரது சொத்து மதிப்பு 30,49,00,000 ரூபாய். வாசிக்க சிரமமாய் இருக்கும் என்பதால் எழுத்திலும் தருகிறேன். அவரது சொத்தின் மதிப்பு முப்பது கோடியே நாற்பத்தியொன்பது லட்சம் ரூபாய். இதில் நமக்கொன்றும் பிரச்சினையில்லை. இவ்வளவுதானா என்ற கேள்விக்குள்ளும் நானிப்போது போகவில்லை. இவ்வளவாகவே … Continue reading அம்பானி நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கும் அமித்ஷா!
கட்டற்ற பாலியல் சுதந்திரத்தை கொண்டாடும் சூப்பர் டீலக்ஸ்
ஈஸ்வரி சென்னை போக்குவரத்தில் சூப்பர் டீலக்ஸ் பேருந்து வரவினால் அடித்தட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன் இத்தகையை பேருந்துகளினால் அவர்களின் பொருளாதாரத்தின் ஒரு பகுதி கரைந்தது. சாதாரண பேருந்து கட்டணத்தை விட 3 மடங்கு கட்டணம் அதிகம்! இதனால் அத்தி பூத்தாற்போல் வரும் சாதாரண பேருந்திற்கு மணிக்கணக்கில் காத்திருந்து ஒரு திருவிழா கூட்டத்தை போல ஏறும் ஆண்களுக்குக்கிடையே இடிப்பட்டு ஏறும் பெண்களின் நிலை சொல்லி மாளாது. அலுவலகத்திலும் வீட்டிலும் உழைப்பு சுரண்டலினால் சக்கையாய் பிழியப்பட்டு வரும் பெண்கள் … Continue reading கட்டற்ற பாலியல் சுதந்திரத்தை கொண்டாடும் சூப்பர் டீலக்ஸ்
அம்பானிக்காக ONGC நிறுவனத்தை படுகுழியில் தள்ளிய ’தேசபக்தர்’ மோடி!
அறிவழகன் கைவல்யம் நீண்ட நாட்கள் என்று சொல்ல முடியாது, இந்தியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய்ப்படுகை மற்றும் இயற்கை எரிவாயு நிலைகளைக் கண்டறியும் நிறுவனம், இந்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் - ONGC கடன்களற்றதாக மட்டுமல்ல, நாட்டின் மிகப்பெரிய லாபமீட்டும் நிறுவனமாகவும் இருந்தது, அதுமட்டுமல்ல, நாட்டின் Cash Rich நிறுவனமும் கூட. நாட்டின் காவல்காரர் மோடியின் திறமையான ஆட்சிக்காலத்தில் இந்த நிறுவனம் ஒரு பரிதாபமான நிலையை எட்டியிருக்கிறது, 1950-60 ஆம் ஆண்டுகளில் வளர்ச்சி … Continue reading அம்பானிக்காக ONGC நிறுவனத்தை படுகுழியில் தள்ளிய ’தேசபக்தர்’ மோடி!
ஐந்து ஆண்டுகளில் வெறும் 30 நாட்கள் மட்டுமே பாராளுமன்றத்துக்கு வந்த சௌகிதார் மோடி!
மாநிலங்களவை உறுப்பினரும், இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தேசியக் குழு, செயலாளருமான பினாய் விஸ்வம் பிரதம மந்திரி திரு.நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள பகிரங்க கடிதம் எழுதியுள்ளார். மதிப்பிற்குரிய சௌகிதார் திரு நரேந்திர மோடி அவர்களே , உங்களுக்கு நீங்களே சௌகிதார் என்ற பட்டத்தைக் கொடுத்துக் கொண்ட போது, நீங்கள் இந்த நாட்டின் காவலாளி என்று நாட்டு மக்களிடம் சொன்னீர்கள். பாராளுமன்றத்தையும், அரசியல் அமைப்புச் சட்டத்தையும் பாதுகாக்கிற பொறுப்பை நீங்கள் எடுத்துள்ளதாக பலர் நம்பினார்கள். ஆனால், நீங்கள் சொன்னதற்கும் செய்ததற்கும் உள்ள … Continue reading ஐந்து ஆண்டுகளில் வெறும் 30 நாட்கள் மட்டுமே பாராளுமன்றத்துக்கு வந்த சௌகிதார் மோடி!
கமலஹாசன் பேசுவது மாற்று அரசியலா? மநீம குறித்து ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றம்!
சந்திரமோகன் நடிகர் கமலஹாசன் உருவாக்கியுள்ள மக்கள் நீதி மையம் கட்சியானது, காங்கிரஸ் கட்சி மூலமாக திமுக கூட்டணியில் இடம் பெற செய்த முயற்சி தோல்வியுற்றதால், தனித்து போட்டியிடுகிறது. ஆனாலும், MNM கட்சிகாரர்களும், சில செய்தி ஊடகங்களும் மாற்று அரசியல் மூன்றாவது அணி என்றெல்லாம் ஊதிப் பெருக்க முயற்சிக்கின்றன. உண்மை என்ன? தமிழகத்தில் பார்ப்பனர் தலைமையிலான கட்சிகள்/ இயக்கங்கள் வரவேற்பு பெறுவதில்லை! சுதந்திரப் போராட்ட காலத்தில், காங்கிரஸ் கட்சி வாயிலாக மயிலாப்பூர், மாம்பலம் பார்ப்பனர்கள், சத்தியமூர்த்தி, ராஜாஜி போன்ற … Continue reading கமலஹாசன் பேசுவது மாற்று அரசியலா? மநீம குறித்து ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றம்!
களையெடுக்கப்பட வேண்டிய தூய்மைவாத அரசியல்!
ராஜராஜன் ஆர்.ஜெ. இன்றைய நவீன உலகில், ஆபத்தான ஒரு அரசியல் கோட்பாடு இருக்கிறதென்றால், அது தூய்மைவாதம் தான். தூய்மைவாதம் என்றால் என்ன? என் இனம் தான் உலகத்திலேயே சிறந்த இனம், பிற இனங்கள் என் இனத்திற்கு கீழானது. என் மதம் தான் உலகத்திலேயே சிறந்த மதம், பிற மதங்கள் என் மதத்திற்கு கீழானது. என் மொழி தான் உலகத்திலேயே சிறந்த மொழி, பிறமொழிகள் என் மொழிக்கு கீழானது. என் நாடு தான் உலகத்திலேயே சிறந்த நாடு, பிற … Continue reading களையெடுக்கப்பட வேண்டிய தூய்மைவாத அரசியல்!
நவீன அரங்கியலை உள்வாங்கிய நவீன அரசியல்வாதி ராகுல்!
அ. ராமசாமி அரங்க அமைப்புக் கலையை அறிந்தவர்கள் இந்த மேடை அமைப்பை முன்முற்ற அரங்கம் (Front Project Stage ) என்று சொல்வார்கள். அழகிப் போட்டிகள், ஆடை கள், அலங்காரப் பொருட்களின் அறிமுகம் போன்றவற்றை அறிமுகப்படுத்தும் நோக்கத்திற்குப் பயன்படும் தன்மை இந்த அரங்க அமைப்புக்கு உண்டு. இயல்பான உரையாடல் வழியாகப் பார்வையாளர்களோடு நெருங்கிவிட விரும்பும் இந்த அமைப்பைப் பிரேசிலின் நவீன அரசியல் நாடகக்காரன் அகஸ்டோ போவெல் 1980 களின் தொடக்கத்தில் முன்வைத்தான். அவனைத் தமிழ் நாடகக்காரர்கள் கண்ணுக்குப் … Continue reading நவீன அரங்கியலை உள்வாங்கிய நவீன அரசியல்வாதி ராகுல்!
முற்றிய மனநோயாளிகள்!
லக்ஷ்மி சரவணகுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னால் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணைக்கு வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவர் தொடர்ந்து பொது இடங்களில் பெண்களின் மீது பாலியல் அத்துமீறல் செய்த வழக்கில் கைதானவர். வழக்கை விசாரித்த நீதிபதி குற்றவாளியின் மனநிலையைப் புரிந்து கொள்கிறார். அவரது தீர்ப்பில் இப்படி ஒரு விஷயத்தைக் குறிப்பிடுகிறார். 'பெண்கள் குறித்தான எந்தவித அடிப்படை புரிதல்களும் இல்லாமல் நீங்கள் வளர்க்கப்பட்டிருக்கிறீர்கள், உங்களுக்கு குறைந்தபட்சம் பெண்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பதே சிக்கலாய் உள்ளது. பதினைந்து நாட்களுக்கு கொடைக்கானல் … Continue reading முற்றிய மனநோயாளிகள்!
தோற்றுப்போன மோடியின் இராணுவ அஸ்திரம்!
ஜி. கார்ல் மார்க்ஸ் எதிர்பாராத திருப்பமாக நடந்து முடிந்திருக்கிறது பாக் தீவிரவாத முகாம்களின் மீதான தாக்குதல். அரசு நிறுவனங்களின் இறுக்கத்துக்கு சற்றும் பொருத்தமில்லாத வகையில் மக்கள் அபிநந்தனின் விடுதலையை கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். அப்பா, மகன், சிறைபிடிக்கப்பட்டிருக்கும் இந்திய வீரன் போன்ற அவர் மீதான பிம்பங்கள் ஊதப்பட்டதில், மோடி ஊதிப்பெருக்க விரும்பிய “இந்திய பராக்கிரமம்” எனும் பிம்பம் அதன் வசீகரத்தை இழந்து மூலையில் சாத்தப்பட்டதுதான் இந்த சம்பவத்தின் துயரம். இந்த விவகாரத்தில் மிகவும் முக்கியமான ஒன்றாக நான் கருதுவது, நாற்பது … Continue reading தோற்றுப்போன மோடியின் இராணுவ அஸ்திரம்!
இம்ரான்கானை செயல்பட வைக்கும் அதிகார வர்க்கம்!
கே. என். சிவராமன் நேற்றும் இன்றும் உரையாற்றியது இம்ரான் கான்தான் என்றாலும் அவ்விரு பேச்சுகளின் சாராம்சத்தை எழுதிக் கொடுத்தவர்கள் அந்நாட்டு அதிகார வர்க்கத்தினர். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இன்று அவர் நிகழ்த்திய உரையில் விடுதலைப் புலிகள், தற்கொலைப் படைத் தாக்குதல் என பல விவரங்கள் கொட்டின. நிச்சயமாக 30 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேச அரசியலை கவனித்து வரும் அதிகார வர்க்கத்தினரால் மட்டுமே இப்படிப்பட்ட புள்ளிவிபரங்களை எடுத்து அதுவும் இந்த சூழலில் உலகத்தின் முன் வைத்து ஒட்டுமொத்தப் பார்வையையும் தங்கள் … Continue reading இம்ரான்கானை செயல்பட வைக்கும் அதிகார வர்க்கம்!