90% இந்திய ஊடகங்கள் அரசாங்கத்தை பாதுகாக்கின்றன: பத்திரிகையாளர் பி சாய்நாத்

தொண்ணூறு விழுக்காடு இந்திய ஊடகங்கள் அரசாங்கத்தை பாதுகாப்பதாக பத்திரிகையாளர் பி சாய்நாத் குற்றம்சாட்டியுள்ளார். ஏப்ரல் 1 ஆம் தேதி கர்நாடகாவின் குவெம்பு பல்கலைக்கழகத்தில் டாக்டர் சாந்திநாத் தேசாய் நினைவு அறக்கட்டளை விரிவுரையை ஆற்றியபோது, பத்திரிகையாளர் பி சாய்நாத், இன்றைய ஊடகங்களை பிரதிநிதித்துவமற்ற, ஒதுக்கிவைக்கும் மற்றும் குறுகிய பாத்திரத்தை வகிப்பதாக கூறினார்.‘இந்தியாவில் இதழியல்: 200 ஆண்டுகளில் நாம் எங்கிருக்கிறோம்?’ என்ற தலைப்பில் பி. சாய்நாத் விரிவுரையாற்றினார்.அப்போது அவர், “சுதந்திரப் போராட்டத்தின் போது சிறிய இந்திய ஊடகங்கள் குறிப்பிடத்தக்க பங்காற்றின. … Continue reading 90% இந்திய ஊடகங்கள் அரசாங்கத்தை பாதுகாக்கின்றன: பத்திரிகையாளர் பி சாய்நாத்

மருத்துவர் புகழேந்தியின் மருத்துவமனைக்கு சீல்!

செயல்பாட்டாளரும் மருத்துவருமான வீ. புகழேந்தியின் மருத்துவமனையை அதிகாரிகள் சீல் வைத்து மூடியுள்ளனர்.இதுகுறித்து செயல்பாட்டாளரும் ஒளிப்பட கலைஞருமான ஆர். ஆர். சீனிவாசன் எழுதியுள்ள தனது முகநூல் பதிவு:இன்று காலையில் செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் சதுரங்கப் பட்டினத்தில் இயங்கி வரும் மருத்துவர் வீ புகழேந்தி அவர்களில் மருத்துவமனை அரசு அதிகாரிகளால் எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் சீல் வைக்கப்பட்டதுகல்பாக்கம் சுற்றியுள்ள ஏழை எளிய மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் தினமும் ஓய்வு இல்லாமல் மருத்துவம் பார்த்து வரும் மக்கள் மருத்துவர் புகழேந்திமற்ற … Continue reading மருத்துவர் புகழேந்தியின் மருத்துவமனைக்கு சீல்!

பேய்ச்சி நாவல்: ‘ஆபாசமானது என ஒருதலைப்பட்சமாக தீர்ப்பிட்டு தடை செய்திருப்பது ஏற்கத்தக்கதல்ல’

தற்கால மலேசியத் தமிழ் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் ம.நவீன். “பேய்ச்சி” என்கிற அவரது நாவலை மலேசிய அரசின் உள்துறை அமைச்சகம் தடைசெய்திருப்பது கண்டனத்திற்குரியது. தனது வாழ்வனுபவங்களை வரலாற்றோடும் சமகாலத்தோடும் இணைத்தும் விலக்கியும் ஒருவர் எழுதும் புனைவை – அதன் முழுமையால் மதிப்பீடு செய்யவேண்டும். மொழியும் சித்தரிப்பும் தான் புனைவுக்கு வலுவையும் நம்பகத்தையும் வழங்குகின்றன. எனில், தனது கதைக்குத் தேவையெனக் கருதி நாவலாசிரியர் பயன்படுத்தியுள்ள சில சொற்களையும், சித்தரிப்புகளையும் அவற்றின் சூழமைவுக்குள் பொருத்திவைத்துப் பார்க்காமல் தனியே துண்டித்துப் பார்த்து அந்நாவல் … Continue reading பேய்ச்சி நாவல்: ‘ஆபாசமானது என ஒருதலைப்பட்சமாக தீர்ப்பிட்டு தடை செய்திருப்பது ஏற்கத்தக்கதல்ல’

தமிழகத்தில் தொடர்கிற கைதுகள்: இருப்பவற்றோடு கூடவே மாண்டவற்றோடும் போராடுகிறோம்..

வரக்கூடிய நாட்களை மக்களுக்கு மென்மேலும் துன்பத்தை வழங்குகிற நாட்களாக அமையவுள்ளன. வேலை வாய்ப்பற்ற போக்கு, விவசாய வீழ்ச்சி, கல்வி சுகாதாரத்தில் அரசின் பாத்திரம் சுருங்கிச் செல்லுதல் என சங்கிலித் தொடர் நிகழ்வுகள் ஒரு மையப் புள்ளியில் குவிவதை நோக்கி செல்கின்றன.

கார்டூனிஸ்ட் பாலா கைது: பத்திரிகையாளர்கள் கூட்டறிக்கை

நெல்லையில் கந்துவட்டி கொடுமைக்கு பலியான இசக்கிமுத்து குடும்பம் தொடர்பாக விமர்சன கார்ட்டூன் வரைந்த கார்டூனிஸ்ட் பாலா சென்னை, போரூர் அருகே, பெரிய பணிச்சேரியில் உள்ள அவரது வீட்டில் வைத்து, இன்று நவம்பர் 5-ம் தேதி பகல் 1.30 மணி அளவில், நெல்லை போலீஸால் கைதுசெய்யப்பட்டார். கார்டூனிஸ்ட் பாலா கடந்த பல ஆண்டுகளாக குமுதம் வார இதழின்  அதிகாரப்பூர்வ கார்டூனிஸ்டாக பணி புரிந்தவர். தற்போது சுதந்திரமான கார்டூனிஸ்டாக பணிசெய்து வரும் அவர், பல்வேறு பிரச்னைகளிலும் தன் கருத்தை வலியுறுத்தி … Continue reading கார்டூனிஸ்ட் பாலா கைது: பத்திரிகையாளர்கள் கூட்டறிக்கை

என்டிடிவி ஒளிபரப்பை முடக்கும் நவம்பர் 9ம் தேதி கருப்புப்பட்டைகளை ஏற்றி எதிர்ப்பு தெரிவிப்போம்: ஆதவன் தீட்சண்யா

என்டிடிவி ஒளிபரப்பை முடக்கும் நவம்பர் 9ம் தேதி கருப்புப்பட்டைகளை ஏற்றி மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிப்போம் என எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா அழைப்பு விடுத்திருக்கிறார். இதுகுறித்து தனது முகநூலில் ஆதவன் தீட்சண்யா எழுதிய குறிப்பு: “'என்டிடிவி இந்தியா' செய்தி தொலைக்காட்சியின் ஒளிபரப்பை ஒருநாள் நிறுத்திவைக்கும் மத்திய அரசின் முடிவானது கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை ஒடுக்குவதில் அதன் நிலை மேலும் மூர்க்கமடைந்திருப்பதைக் காட்டுகிறது. ஊடகங்கள் மீது தொடங்கும் இப்படியான ஒடுக்குமுறைகள், எல்லாத்தளங்களிலும் வரவிருக்கும் எதேச்சதிகாரத்தின் முன்னறிவிப்பேயாகும். இன்று என்.டி.டி.வி.க்கான … Continue reading என்டிடிவி ஒளிபரப்பை முடக்கும் நவம்பர் 9ம் தேதி கருப்புப்பட்டைகளை ஏற்றி எதிர்ப்பு தெரிவிப்போம்: ஆதவன் தீட்சண்யா

ஜெயலலிதா உடல்நலம் குறித்து தங்களுக்குள் பேசிக்கொண்ட வங்கி ஊழியர்கள் கைது!

ச. பாலமுருகன் இன்று 14.10.2016 கோயமுத்தூர் தொண்டாமுத்தூரில் கனரா வங்கி ஊழியர்கள் வங்கியில் தங்களுக்குள் முதல்வரின் உடல்நிலை குறித்து பேசி வந்ததாகவும் அதனை வாடிக்கையாளரான அ.தி.மு.க உறுப்பினர் கேட்டு போலிசில் புகார் கொடுத்ததாகவும் அதன் அடிப்படையில் வதந்தி பரப்புதல், மிரட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு தாக்கல் செய்து காவல்துறை சிறைபடுத்தியுள்ளதை அறிய முடிகின்றது. காவல்துறையின் இந்த நடவடிக்கை அடிப்படை சனநாயக உரிமைகளை நசுக்கும் செயலாக உள்ளது. தனது இரண்டு நண்பர்கள் தமிழக முதல்வர் குறித்து உரையாடுவதே குற்றசெயலாக … Continue reading ஜெயலலிதா உடல்நலம் குறித்து தங்களுக்குள் பேசிக்கொண்ட வங்கி ஊழியர்கள் கைது!

“அகந்தை, அறியாமையின் ஆபத்தான கலவை ஸ்மிருதி இரானி”

மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டஸ்மிருதி இரானி, அகந்தை மற்றும் அறியாமையின் ஆபத்தான கலவை என வரலாற்றாசிரியர் ராமசந்திர குஹா கருத்து தெரிவித்துள்ளார். யேல் மற்றும் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் விரிவுரையாற்றியிருக்கும் ராமச்சந்திர குஹா, ஸ்மிருதி இரானி தன்னுடைய அமைச்சகத்தின் நம்பகத்தன்மையை கணிசமான அளவு சீர்குலைத்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். என்டிடீவி செய்தி ஊடகத்துக்கு அளித்த நேர்காணலில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மூத்த பேராசிரியர்களை ஸ்மிருதி இரானி நடத்திய விதம் குறித்து நினைவுகூர்ந்த குஹா, “கூட்டமொன்றில் ஐஐடி இயக்குனர்கள் ஒருவர், … Continue reading “அகந்தை, அறியாமையின் ஆபத்தான கலவை ஸ்மிருதி இரானி”

‘தேச துரோகி’கள் நிறைந்த ஜேஎன்யூ, எச்என்யூவை சிறந்த பல்கலைக்கழகங்களாக அறிவித்தார் ஸ்மிருதி இரானி!

ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகமும், ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகமும் நாட்டின் சிறந்த பல்கலைக் கழகங்களாக விளங்குகின்றன என்று அரசாங்கத்தின் ஆய்வறிக்கைகளே ஒப்புக் கொண்டிருக்கின்றன.தேசியவாதம் மற்றும் பேச்சுரிமை தொடர்பான விவாதங்களில் மத்திய அரசின் படுமோசமான நடவடிக்கைகளின் மூலம் மாணவர் சமுதாயத்தின் மத்தியில் கோபாவேசத்தை எழுப்பியுள்ள இந்த இரு பல்கலைக் கழகங்களும் தான் நாட்டின் முதன்மையான பல்கலைக் கழகங்களில் முதல் இரண்டு இடங்களை வகிக்கின்றன. மாணவர்களுக்கு ஆராய்ச்சி படிப்புகளுக்கான வசதிகளைச் செய்து தருவதிலும் சரி, அவர்கள் படித்து முடிந்தபின் … Continue reading ‘தேச துரோகி’கள் நிறைந்த ஜேஎன்யூ, எச்என்யூவை சிறந்த பல்கலைக்கழகங்களாக அறிவித்தார் ஸ்மிருதி இரானி!

“எது உண்மையான புரட்சிகர கட்சி?”

சிந்தன் "எது உண்மையான புரட்சிகர கட்சி?" "என்னைவிட நீ என்ன பெரிய புரட்சி பண்ணிட்ட?" "நீ கலந்துக்கிற தேர்தலால் புரட்சியைக் கொண்டுவந்துவிடமுடியா?" "லெனின் கூட புரட்சிக்கான சூழல் வரும்வரையில் தற்காலிகமா தேர்தலில் போட்டியிடலாம்னு சொல்லிருக்கார். நீ வெறுமனே போஸ்டர் அடிச்சிட்டே புரட்சி பண்ணிடுவியா?" இப்படியான கேள்விகளும் விவாதங்களும்(?!?) இன்று நேற்றல்ல, இங்குமங்கும் மட்டுமல்ல, ரஷியப் புரட்சிக்குப்பின்னர் உலகெங்கிலும் கடந்த 100 ஆண்டுகளாக நடந்துகொண்டுதானிருக்கின்றன. ஆனால் அதற்கான விடையினை யாராலும் நடைமுறையில் கண்டுபிடிக்கமுடியவில்லை. புரட்சிக்கு ஏதும் பார்முலாவும் இல்லை; … Continue reading “எது உண்மையான புரட்சிகர கட்சி?”

’பகத் சிங் தூக்கிடப்படும்போது “பாரத் மாதா கி ஜே” சொன்னார்’: பிஜேபி புதிய ஆய்வு!

ஜவஹர்லால் நேரு பல்கலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சசி தரூர், பிரிட்டிஷார் ஆட்சியில்,  பகத் சிங் தேச விரோத வழக்கில் சிறை சென்றார். அதேபோல, கன்னையா குமார் சிறை சென்றிருக்கிறார் என்று கூறினார். சசி தரூருக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாரதீய ஜனதாவின் ஷாநவாஸ் ஹூசைன்,  "பகத் சிங் நாட்டின் சுதந்திரத்திற்காக பாரத் மாதா கி ஜே எனக்கூறி சிறை சென்றார் என்றும்  பகத் சிங்குடன், கன்னையா குமாரை ஒப்பிடுவது , சுதந்திர போராட்ட வீரர் மற்றும் தேசபக்தர்களுக்கு … Continue reading ’பகத் சிங் தூக்கிடப்படும்போது “பாரத் மாதா கி ஜே” சொன்னார்’: பிஜேபி புதிய ஆய்வு!

மதுரையில் நடக்கவிருந்த ’இஸ்லாமியர் வாழ்வும் வகிபாகமும்’ கருத்தரங்குக்குத் தடை

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த  ‘இஸ்லாமியர் வாழ்வும் வகிபாகமும்' என்ற கருத்தரங்கம் காவல் துறையால் இறுதி நேரத்தில் தடைசெய்யப்பட்டிருக்கிறது. இதுகுறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர், திவ்ய பாரதி தனது முகநூலில், ‘சூல் வாசிப்பு தளம் சார்பாக இன்று நடக்க இருந்த முழு நாள் கருத்தரங்கிற்கு காவல்துறை அனுமதி மறுப்பு. கூடுதல் தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்’ என தெரிவித்துள்ளார். எதற்காக இந்தக் கருத்தரங்கம்? சையது அப்துல் காதர் சொல்கிறார்: நாளை காலை மதுரையில் ஒரு முழு நாள் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. "இஸ்லாமியர் … Continue reading மதுரையில் நடக்கவிருந்த ’இஸ்லாமியர் வாழ்வும் வகிபாகமும்’ கருத்தரங்குக்குத் தடை

#விவாதம்: “என் சாதி உயர்வானது என்று சொல்லும் எல்லோருமே பிராமணர்கள்தான்”

தமயந்தி இரண்டு நாட்களாய் இணையத்தில் நெஞ்சுரம் கொண்ட ஆணவக் கொலைக்கெதிரான கட்டுரை( புகைப்படம் ) பார்த்த போதே அதன் பின்னிருக்கும் அரசியல் எனக்கு நன்கு புரிந்தது. இணையத்தில் இதைப் புரிந்து கொள்ளாமல் அவரவர் அரசியல் புரிதலும் அவசரமான பழி வாங்கும் சொற்களும் மிக ஆபாசமாக பகிர்ந்து கொள்ளப்பட்டன. கொற்றவை, குட்டி ரேவதி ,முக்கியமாக ஜோதியின் களப்பணி நான் அறிந்ததே. அவர்கள் ஒருபோதும் அப்படிப்பட்ட நிலைப்பாட்டை எடுக்க முடியாதென திண்ணமாக எண்ணினேன். நம்பினேன். தனிவிரோத தாக்குதல்களாய் தூக்கி வீசப்பட்ட … Continue reading #விவாதம்: “என் சாதி உயர்வானது என்று சொல்லும் எல்லோருமே பிராமணர்கள்தான்”

உமர் காலித், அனிர்பென் பட்டாச்சார்யா பிணையில் விடுதலை!

ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவுக்கு ஆதரவாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததாகக் கூறி தேசத் துரோக குற்றம் சாட்டப்பட்ட மாணவர்கள் உமர் காலித், அனிர்பென் பட்டாச்சார்யா இருவருக்கு பிணை வழங்கியிருக்கிறது உயர்நீதிமன்றம். உமர், அனிர்பென் விடுதலை கொண்டாடும் ஜேஎன்யூ மாணவர்கள் http://www.youtube.com/watch?v=bcb4-MAUJCY

பெண்களுக்கு சாதி இருக்கமுடியுமா?

மீனா கந்தசாமி How did you become an upper caste woman? Because your mother was asked to marry a man from her caste. Her cunt was controlled. How did she become an upper caste woman? Because your grandmother was asked to marry a man from her caste. Her cunt was controlled. How did your grandmother's mother … Continue reading பெண்களுக்கு சாதி இருக்கமுடியுமா?

“கண்ணையா என்னுடைய நண்பர்; நான் புரபஸர் அல்ல; அந்தப் படத்தை நான்தான் என்னுடைய முகநூலில் பதிவிட்டேன்”: பக்தர்களின் அவதூறுக்கு பாதிக்கப்பட்ட பெண் பதில்

கடந்த மூன்று நாட்களாக ஜேஎன்யூ மாணவர் சங்கத் தலைவர் கண்ணையா குமார் ஒரு பெண்ணுடன் அமர்ந்திருக்கும் படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. கண்ணையா குமார் சோஃபாவில் அமர்ந்திருப்பது போலவும் சோஃபாவின் கைப்பிடி பகுதியில் அந்தப் பெண் அமர்ந்து, கண்ணையா தோளில் கைப் போட்டிருப்பது போலவும் அந்த படம் வெளியானது. இந்தப் படத்தை “ஜேஎன்யூவில் கல்வி, இந்த ஆசிரியர் கண்ணையா குமாரின் மடி மீது அமர்ந்து  பாடம் நடத்துகிறார்; செவ்வணம்” என்ற வாசகத்துடன் பலர் பகிர்ந்துகொண்டனர். இதுகுறித்து விளக்கம் … Continue reading “கண்ணையா என்னுடைய நண்பர்; நான் புரபஸர் அல்ல; அந்தப் படத்தை நான்தான் என்னுடைய முகநூலில் பதிவிட்டேன்”: பக்தர்களின் அவதூறுக்கு பாதிக்கப்பட்ட பெண் பதில்

#அவசியம்படியுங்கள்: கண்ணையாவை கொண்டாடுங்கள் ஆனால் அதோடு நிறுத்திக் கொள்ளாதீர்கள்!

வில்லவன் இராமதாஸ் கண்ணையா குமாரின் உரை பாமரத்தனமானதாக இருப்பதாகவும் அதனை உணராமல் பலரும் பரவசத்தோடு பதிவதாகவும் சில (இடதுசாரிகள்)  பதிவுகளை காண நேர்ந்தது. மேலும் இப்படி உருவான முன்னாள் மாணவர் தலைவர்கள் கடைசியில் இந்த அமைப்போடு சமரசம் செய்துகொண்டதாகவும் சில தரவுகள் பகிரப்பட்டிருக்கின்றன (அசாம் கன பரிசத் கட்சி ஒரு மாணவ தலைவரால் உருவாக்கப்பட்ட கட்சி). இவற்றை முரட்டுத்தனமான மறுப்பது சரியாக இருக்காது. முதலில் பாமரத்தனம் என்பது ஆட்களைப் பொறுத்து மாறுபடும். இந்தியாவின் சிறந்த மார்க்சியவாதியை தெரிவுசெய்து … Continue reading #அவசியம்படியுங்கள்: கண்ணையாவை கொண்டாடுங்கள் ஆனால் அதோடு நிறுத்திக் கொள்ளாதீர்கள்!

பெண்களுக்கு எதிரான கருத்துக்கள்: சொன்னதுபோல மனுஸ்மிருதியை கொளுத்திய ஏபிவிபி மாணவர்கள்!

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ஏபிவிபி மாணவர் அமைப்பின் இன்னாள் மற்றும் முன்னாள் தலைவர் சிலர் சேர்ந்து பெண்களுக்கு எதிரான கருத்துக்கள் உள்ள மனுதர்மத்தின் சில பக்கங்களை பெண்கள் தினத்தில் கொளுத்தினர். ஆண்களை மயக்கும் குணம் கொண்டவளாகப் பெண் இறைவனால் படைக்கப்பட்டிருக்கிறாள் (அத்தியாயம் 213-2)  பெண்கள் சிறு வயதில் தந்தையின் பாதுகாப்பிலும், மணமானவுடன் கணவன் பாதுகாப்பிலும் கணவனுக்குப்பின் மகனின் பதுகாப்பிலும் இருக்க வேண்டும்.  (அத்தியாயம் 148 - 5) என்ற இரண்டு வாக்கியங்களை படித்தார் ஏபிவிபியின் முன்னாள் இணை செயலாளர் பிரதீப் … Continue reading பெண்களுக்கு எதிரான கருத்துக்கள்: சொன்னதுபோல மனுஸ்மிருதியை கொளுத்திய ஏபிவிபி மாணவர்கள்!

“நான் ஏன் சீமானை எதிர்க்கிறேன்?”: வி. சபேசன்

வி. சபேசன் சீமான் இரண்டு கோட்பாடுகளை கொச்சைப்படுத்துகிறார். ஓன்று திராவிடம் மற்றது தமிழ்த் தேசியம். இந்த இரண்டு கோட்பாடுகள் பற்றிய மிகத் தவறான விடயங்களை இளைஞர்களுக்கு சீமான் போதிக்கிறார். திராவிடத்தின் மீதும் தமிழ்த் தேசியத்தின் மீதும் பற்றுள்ள ஒருவன், இதை அலட்சியப்படுத்தி விட்டு கடந்து செல்ல மாட்டான். சீமானுக்கு எதிரான கருத்தியல் போரை நடத்துவான். தந்தை பெரியாரின் திராவிடக் கோட்பாடுகளில் தமிழ்த் தேசியமும் அடங்கி விடுகிறது. ஆயினும் திராவிடம் என்பது ஒரு மனிதனின் சுயமரியாதை, ஆரிய பார்ப்பனிய … Continue reading “நான் ஏன் சீமானை எதிர்க்கிறேன்?”: வி. சபேசன்

#வீடியோ: ஜேஎன்யூவில் கன்னய்யா குமார் பேசியதன் தமிழ் டப்பிங்!

மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, நாடாளுமன்றத்தில் ரோஹித் வெமுலா தற்கொலை, ஜேஎன்யூ மாணவர்கள் விவகாரம் குறித்து பேசியதை தமிழக பாஜக தமிழில் டப் செய்து வெளியிட்டது. இப்போது இரானிக்கும் மோடிக்கும் பதிலடி கொடுக்கும்வகையில் பேசிய, கன்னய்யா குமாரின் பேச்சை தமிழில் டப் செய்திருக்கிறது தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. வீடியோ இணைப்பு கீழே... http://www.youtube.com/watch?v=SjDIS29Mquc

விடுதலைக்குப் பின் ஜேஎன்யூவில் கண்ணையா குமார் ஆற்றிய முழு உரை! தமிழில்: விஜயசங்கர் ராமச்சந்திரன்

விடுதலைக்குப் பின் ஜேஎன்யூவில் கண்ணையா குமார் உரையாற்றினார். அதன் தமிழாக்கம் இங்கே... ஆங்கில மூலம்: இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில்: விஜயசங்கர் ராமச்சந்திரன்   இங்கிருக்கும் ஊடகங்களின் வாயிலாக ஜேஎன்யூவிற்கு ஆதரவாக நின்ற உலக மக்கள் அனைவருக்கும் நான் நன்றிசொல்ல விரும்புகிறேன். ஊடகங்களுக்கும், சிவில் சமூகத்திற்கும், அரசியலுக்கும் அரசியலுக்கு அப்பாற்பட்டும் ஜேஎன்யூவைக் காப்பாற்றவும், ரோஹித் வேமுலாவுக்கு நீதி கேட்டும் போராடும் அனைவருக்கும் நான் செவ்வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக அவர்களின் போலீஸ், அவர்களின் ஊடகங்கள் வாயிலாக எது சரி, எது தவறு … Continue reading விடுதலைக்குப் பின் ஜேஎன்யூவில் கண்ணையா குமார் ஆற்றிய முழு உரை! தமிழில்: விஜயசங்கர் ராமச்சந்திரன்

”இதோ ஒரு தலைவன் பிறந்துவிட்டான்”: கன்னய்யா குமாரின் உரை தலைப்புச் செய்திகளில்…

பிணையில் வெளிவந்த கன்னய்யா குமார், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் வியாழன் இரவு ஆற்றிய உரை குறித்துதான் இந்தியா இப்போது பேசிக்கொண்டிருக்கிறது. அவர் உரை குறித்து ஊடகவியலாளர்கள், அரசியல் தலைவர்கள் செய்த அவதானிப்புகளின் தொகுப்பு இங்கே...   தி வயர் இணையதளத்தின் நிறுவன ஆசிரியர் சித்தார்த் வரதராஜனின் பாராட்டு... https://twitter.com/svaradarajan/status/705483479228624896 கன்னய்யாவின் உரையை பலமுறை கேட்டேன். சிந்தனை தெளிவுமிக்க உரை. மக்கள் என்ன நினைக்கிறார்களோ அதைச் சொன்னார். கடவுள் ஆசிர்வதிக்கட்டும் - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் … Continue reading ”இதோ ஒரு தலைவன் பிறந்துவிட்டான்”: கன்னய்யா குமாரின் உரை தலைப்புச் செய்திகளில்…

தேசவிரோத குற்ற வழக்கில் கைதான கண்ணய்யா குமாருக்கு புல்லட் புரூஃப் காவலர் உடை, ஹெல்மெட்: என்ன காரணம்?

டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஜேஎன்யூ மாணவர் சங்கத் தலைவர் கண்ணய்யா குமாரின் ஜாமீன் மனு புதன்கிழமை விசாரணைக்கு வருகிறது. வழக்கறிஞர்கள் சிலர் தாக்குதல் நடத்துவோம் என அறிவித்துள்ள நிலையில் கன்னய்யா குமாருக்கு புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட், ஹெல்மெட்,  காவலர் சீருடை அணிந்து,  நீதிமன்றம் அழைத்து வருகிறது டெல்லி போலீஸ். வழக்கறிஞர்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்கவே இந்த ஏற்பாடு என சொல்கிறது டெல்லி போலீஸ்.   தாக்குதல் நடத்துவோம் என பகிரங்கமாக அறிவித்த வழக்கறிஞர்கள் கைதாகி, ஜாமீனில் வெளியே வந்துவிட்டார்கள் … Continue reading தேசவிரோத குற்ற வழக்கில் கைதான கண்ணய்யா குமாருக்கு புல்லட் புரூஃப் காவலர் உடை, ஹெல்மெட்: என்ன காரணம்?

தெலுங்கர் பேராசிரியர் அருணன் எழுதிய தமிழ் நூல்களின் பட்டியல் இதோ…

செவ்வாய்கிழமை தந்தி டிவியில் ஒளிபரப்பான விவாத நிகழ்ச்சியில் சீமானின் பேச்சுக்கு சிலர் தமிழ் தேசியம் முலாம் பூசுகின்றனர். அவர்கள் பேராசிரியர் அருணனை தெலுங்கர் என்ற முகமூடி அணிவிக்கின்றனர். தெலுங்கரானபேரா. அருணன்  எழுதிய தமிழ் நூல்களின் பட்டியல் இதோ... தமிழரின் தத்துவ மரபு (2 பாகங்கள்) காலந்தோறும் பிராமணியம் (8 பாகங்கள்) தமிழகத்தில் சமூக சீர்திருத்தம் – இரு நூற்றாண்டு வரலாறு மூட நம்பிக்கைகளிலிருந்து விடுதலை! கடவுளின் கதை (5 பாகங்கள்) யுகங்களின் தத்துவம் பேராசிரியர் அருணன் ஐந்து தொகுதிகளாக பகுத்து … Continue reading தெலுங்கர் பேராசிரியர் அருணன் எழுதிய தமிழ் நூல்களின் பட்டியல் இதோ…

#MustRead: கைதான ஜேஎன்யூ மாணவர்கள் உமர் காலித், அனிர்பன் பட்டாசார்யாவிடம் போலீஸ் நடத்திய விசாரணை எப்படி இருந்திருக்கும்?

டெல்லி போலீசால் கைது செய்யப்பட்ட் ஜேஎன்யூ மாணவர்கள் உமர் காலித், அனிர் பன் பட்டாசார்யா ஆகியோரின் போலீஸ் விசாரணை எப்படி இருந்திருக்கும் என்று ஒரு கற்பனை உரையாடல். எழுதியவர்: எழுத்தாளர் ஆரிஃப் அயாஸ் பார்ரே; தமிழில்: விஜயசங்கர் ராமச்சந்திரன்   போலீஸ்: ஜேன்யூவில் நீங்கள் ஏன் ஒரு தேசவிரோத ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தீர்கள்? அனீர்பன்: பெனடிக்ட் ஆண்டர்சனின் பார்வையில் தேசம் என்பது கற்பனை செய்யப்பட்ட சமூகம். தங்களை அந்த சமூகத்தின் அங்கமாக நம்பும் மக்கள் சமூகரீதியாகக் கட்டுவதே … Continue reading #MustRead: கைதான ஜேஎன்யூ மாணவர்கள் உமர் காலித், அனிர்பன் பட்டாசார்யாவிடம் போலீஸ் நடத்திய விசாரணை எப்படி இருந்திருக்கும்?

#JNU_FlashBack: இந்திரா காந்தியை வேந்தர் பதவியிலிருந்து விலகச் சொல்லி சீதாராம் யெச்சூரி தலைமையில் மாணவர்கள் போராட்டம்; என்ன செய்தார் இந்திரா?

1977-ஆம் ஆண்டில் எமர்ஜென்ஸிக்குப் பிறகு, நடந்த தேர்தலில் இந்திரா காந்தி தோற்றார். அந்தக் காலக்கட்டத்தில் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் மாணவர் சங்கத் தலைவராக இருந்தவர், சீதாராம் யெச்சூரி (இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர்). எமர்ஜென்ஸிக்கு எதிராக போராடிய காரணத்தால் சில காலம் தலைமறைவாக இருந்து, கைதாகி சிறையில் இருந்தவர். எமர்ஜென்ஸி விலக்கிக் கொள்ளப்பட்டப் பிறகு, இந்திரா காந்தி தேர்தலில் தோல்வியுற்ற பிறகும் அவர் ஜேஎன்யூவின் வேந்தர் பதவியில் இருந்து விலகாமல் இருப்பதைக் கண்டித்து … Continue reading #JNU_FlashBack: இந்திரா காந்தியை வேந்தர் பதவியிலிருந்து விலகச் சொல்லி சீதாராம் யெச்சூரி தலைமையில் மாணவர்கள் போராட்டம்; என்ன செய்தார் இந்திரா?

கையில் சூளாயுதத்துடன் இந்துத்துவ வெறியர்கள்: நாடாளுமன்றத்தில் துர்க்கையை பற்றி அவதூறாக பேசியதாக சீதாராம் யெச்சூரிக்கு கொலை மிரட்டல்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சீத்தாராம் யெச்சூரிக்கு மதவெறியர்கள் மீண்டும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.ரோஹித் வெமுலா தற்கொலை, ஜேஎன்யு பல்கலைக் கழக மாணவர்கள் மீதான அடக்குமுறை குறித்து மாநிலங்களவையில் சீத்தாராம் யெச்சூரி உரையாற்றினார். அவருடைய உரை, மதவெறியர்களை ஆதாரத்துடன் அம்பலப்படுத்துவதாக அமைந்தது. அதற்குப் பதிலளித்து ஸ்மிருதி இரானி பொய்மூட்டைகளை அவிழ்த்துவிட்டார். அவை அனைத்தும் ஆதாரமற்ற பொய் என்பது அம்பலமாகிவிட்டது. இந்த நிலையில், சீத்தாராம் யெச்சூரியின் ஆற்றல் மிக்க உரையால் ஆத்திரமடைந்துள்ள இந்துத்துவா மதவெறியர்கள் … Continue reading கையில் சூளாயுதத்துடன் இந்துத்துவ வெறியர்கள்: நாடாளுமன்றத்தில் துர்க்கையை பற்றி அவதூறாக பேசியதாக சீதாராம் யெச்சூரிக்கு கொலை மிரட்டல்!

#அவசியம்வாசிக்க: ‘காவிக் கிண்ணத்தில் ஊழல் வழிகிறது’ சீதாராம் யெச்சூரியின் நேர்காணல்

பாஜக இந்து வாக்குவங்கியை ஒருமுகப்படுத்துவதற்காகவே, ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தேசவிரோத முழக்கங்களை எழுப்பினார்கள் என்று பொய்யாக ஜோடனை செய்து நடவடிக்கை எடுத்திருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார். டெக்கான் ஹெரால்ட் நாளேட்டின் நிருபர்கள் சஞ்சய் பசக் மற்றும் நம்ராதா பிஜி அஹூஜா ஆகியோருக்கு யெச்சூரி அளித்த நேர்காணல். தீக்கதிருக்காக தமிழாக்கம் செய்தவர் ச. வீரமணி கேள்வி: ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் எழுப்பப்பட்ட தேச விரோத முழக்கங்களை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? சீத்தாராம் யெச்சூரி: … Continue reading #அவசியம்வாசிக்க: ‘காவிக் கிண்ணத்தில் ஊழல் வழிகிறது’ சீதாராம் யெச்சூரியின் நேர்காணல்

ரொஹித் வெமுலாவை மகனாகப் பார்க்கும் ஸ்மிருதி இரானியின் தாயுள்ளமும் வெமூலாவின் தாயை இழுத்துச் சென்ற காவல்துறையும்

ஹைதரபாத் பல்கலைக் கழகத்தில் பாஜக மாணவர் அமைப்பான ஏபிவிபிக்கு எதிராக மாணவர்களை திரட்டினார்கள் என்பதற்காக பல்கலை விடுதியில் இருந்து துரத்தப்பட்டு, உதவித் தொகை நிறுத்தப்பட்டு பழிவாங்கப்பட்ட ஐந்து தலித் மாணவர்களில் ரோஹித் வெமுலாவும் ஒருவர்.  போராட்டங்களை நடத்திப்பார்த்து துவண்ட அல்லது துவண்ட மனநிலைக்குத் தள்ளப்பட்ட வெமுலா சென்ற மாதம் தற்கொலை செய்துகொண்டார். பல்கலை வளாகத்தின் சாதி ஒடுக்குமுறை வெளிச்சத்துக்கு வந்த நிலையில், மாணவர்களிடையே தன்னிச்சையான போராட்டத்தைக் கிளப்பியது. இந்நிகழ்வின் தொடர்ச்சியாக டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் … Continue reading ரொஹித் வெமுலாவை மகனாகப் பார்க்கும் ஸ்மிருதி இரானியின் தாயுள்ளமும் வெமூலாவின் தாயை இழுத்துச் சென்ற காவல்துறையும்

ஆர். எஸ். எஸ். பிரச்சாரகரின் பேரன் தேசத்துரோகியான கதை

விஜயசங்கர் ராமச்சந்திரன் கன்ஹையா குமாருடன் தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் அஷுதோஷ் குமார் யாதவ் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். அவருடைய தாத்தா பிரபலமான ஆர். எஸ். எஸ். பிரச்சாரகர். ரஷ்யாவைக் குறித்த ஆய்வு மாணவரான யாதவ் கூறுவதைக் கேளுங்கள்: “நாங்கள் கூட்டுக்குடும்பத்தில் வசித்தோம். எங்கள் குடும்பம் இந்துத்வ மதிப்பீடுகளில் நம்பிக்கை கொண்டது. நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது காவிக் கொடியை வைத்து விளையாடியதும், சங் அமைப்பின் அதிகாரப்பூர்வ ஏடான பஞ்சஜன்யாவைப் படித்ததும் நினைவில் இருக்கிறது. ... என் தாத்தா 1992இல் … Continue reading ஆர். எஸ். எஸ். பிரச்சாரகரின் பேரன் தேசத்துரோகியான கதை

நான் கம்யூனிஸ்ட் இல்லை;ஆனால் கம்யூனிஸ்ட்டின் பேச்சுரிமைக்காகவும் குரல் கொடுப்பேன்:பாராட்டை அள்ளும் திரிணாமுல் எம்பி.யின் உரை!!!

ஜே.என்.யூ மாணவர்கள் தேசவிரோத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது தொடர்பாக பாராளுமன்ற மக்களவையில் நேற்று விவாதம் நடைபெற்றது. அதில் பேசிய, ஹார்வார்டில் பாடங்கள் எடுத்தவரும், முப்பது வருடங்களாக பேராசிரியராக பணிபுரிந்தவருமான , திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி சுகதோ போசின் உரை, பெரும் பாராட்டை பெற்றுள்ளது. டிவிட்டரில் #praisesugato என்ற ஹேஷ் டேக் பிரபலமடைந்துள்ளது.  அந்த அற்புதமான உரையின் தமிழாக்கம் கீழே. *30 வருடங்களுக்கு மேலாக ஆசிரியராக இருந்தவன் என்கிற முறையில்,  மாண்புமிகு சக உறுப்பினர்கள், என்னுடைய உரையை … Continue reading நான் கம்யூனிஸ்ட் இல்லை;ஆனால் கம்யூனிஸ்ட்டின் பேச்சுரிமைக்காகவும் குரல் கொடுப்பேன்:பாராட்டை அள்ளும் திரிணாமுல் எம்பி.யின் உரை!!!

“ஈழப் பிரச்சனைக்காகப் போராடிய தமிழ்நாட்டு மாணவர்கள் எங்கே போனார்கள்? இந்துத்துவ அடக்குமுறைக்கு எதிராக போராட வேண்டாமா?”

ஹைதராபாத் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ரோஹித் வெமூலா தற்கொலை விஷயத்திலும் ஜஹவர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னய்யா குமார் கைது, மேலும் ஐந்து மாணவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்ட விஷயத்திலும் தமிழக பெரும்பான்மை மாணவ சமூகம் போராடவில்லை. இடதுசாரி மாணவ அமைப்புகள், இஸ்லாமிய மாணவ அமைப்புகள் மட்டுமே போராடிக் கொண்டிருக்கின்றன. ஈழப் பிரச்சினைக்காக லயோலா கல்லூரி, சென்னை பல்கலைக் கழக மாணவர்கள் போராடினர். ஆனால் மாணவர் சமூகத்தின் கருத்து சுதந்திரத்துக்கும் … Continue reading “ஈழப் பிரச்சனைக்காகப் போராடிய தமிழ்நாட்டு மாணவர்கள் எங்கே போனார்கள்? இந்துத்துவ அடக்குமுறைக்கு எதிராக போராட வேண்டாமா?”

” உமர் நாத்திகவாதி என்பது குடும்பத்திற்கு இன்னும் வலிமையூட்டக்கூடியது”: தீவிரவாத ஆதரவாளர் என குற்றம்சாட்டப்பட்டு தேடப்படும் மாணவர் உமர் காலித்தின் சகோதரி

அப்சல் குரு தொடர்பாக நிகழ்ச்சி நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் எட்டு பேரில் கன்னய்யா குமார் கைது செய்யப்பட்டுள்ளார். மற்ற ஐவர் தலைமறைவாக உள்ளனர். அதில் உமர் காலித், அதிகம் பேசப்படும் நபராக இருக்கிறார். காரணம் அவர் இஸ்லாமியர் என்பதுதான். அவரை தீவிரவாத ஆதரவாளர் என்ற பொய்ப் பிரச்சாரம் ஒரு சில ஊடகங்களிலும் சமூக ஊடகங்களில் தீவிரமாக பரப்பப்பட்டது. அவர் பகுத்தறிவு பேசும் இடதுசாரி என்று தெரியவந்த பிறகு சற்றே பிரச்சாரங்கள் ஓய்ந்தன. … Continue reading ” உமர் நாத்திகவாதி என்பது குடும்பத்திற்கு இன்னும் வலிமையூட்டக்கூடியது”: தீவிரவாத ஆதரவாளர் என குற்றம்சாட்டப்பட்டு தேடப்படும் மாணவர் உமர் காலித்தின் சகோதரி

டைம்ஸ் நவ் ஒளிபரப்பிய ஜோடிக்கப்பட்ட வீடியோ பித்தலாட்டம்: சித்தார்த் வரதராஜன்

 கன்னையா குமாரின் Morphed விடியோவை,ஒளிபரப்பி,செய்தியாளர்களின் நம்பகத்தன்மையைக் குலைத்ததுடன்  மட்டுமல்லாமல், கன்னையா என்ற இளைஞனை, வெறி பிடித்த நாய்களின் முன் தேச விரோதியாக சித்தரித்ததாக டைம்ஸ் நவ் உள்ளிட்ட ஆங்கில தொலைக்காட்சிகள் மீது குற்றம்சாட்டி "தி வயரில்" கட்டுரை எழுதி இருந்தார் மூத்த பத்திரிக்கையாளர் சித்தார்த் வரதராஜன். அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த டைம்ஸ் நவ், சித்தார்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் செய்தி வெளியிட்டது. இதற்க்கு சித்தார்த் எழுதியுள்ள காட்டமான பதிலின் தமிழாக்கம் கீழே:   டைம்ஸ் … Continue reading டைம்ஸ் நவ் ஒளிபரப்பிய ஜோடிக்கப்பட்ட வீடியோ பித்தலாட்டம்: சித்தார்த் வரதராஜன்

காஃபி, சாப்பாடு, சுடச்சுட பெயில்: ‘அவர் என்ன சாதாரண மனிதரா?’ கவனிப்புடன் ஜாமீனில் வெளிவந்த அடிதடி புகழ் பாஜக எம்.எல்.ஏ. சர்மா!

செவ்வாய் கிழமை டெல்லி பாட்டியாலா கோர்ட் வளாகத்தில் கன்னையா குமார் ஆஜர் படுத்தப்படும்போது, மாணவர்கள், ஆசிரியர்கள், பத்திரிகையாளர் என பலரும் குழுமியிருந்தனர். அப்போது சில வழக்கறிஞர்கள் அவர்களைச் சூழ்ந்து கொண்டு கடுமையாகத் தாக்கினர். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் பாஜக வழக்கறிஞர்கள் மட்டுமல்லாது, பாஜக எம்.எல்.ஏ. ஓ.பி.ஷர்மா, மனித உரிமை செயல்பாட்டாளரும் இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவாளருமான அமீக் ஜேமியை பாட்டியாலா கோர்ட் வாசலில் கீழே புரட்டி அடித்தார். இது ஊடகங்களில், சமூக வலைத்தளங்களில் வெளியாகி கண்டத்துக்கு உள்ளானது. ஓ.பி.ஷர்மா கைது … Continue reading காஃபி, சாப்பாடு, சுடச்சுட பெயில்: ‘அவர் என்ன சாதாரண மனிதரா?’ கவனிப்புடன் ஜாமீனில் வெளிவந்த அடிதடி புகழ் பாஜக எம்.எல்.ஏ. சர்மா!

கன்னய்யா குமார் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்த கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு கொலை மிரட்டல்!

 ஜவர்ஹலால் நேரு பல்கலைகழக மாணவர் அமைப்பின் தலைவர் கன்னய்யா குமார் தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்கள் போராடி வருகின்றனர். மாணவர்களின் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆதரவு தெரிவித்திருந்தார்.  ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு வந்த சிலர் கட்சி பலகை மீது ‘பாகிஸ்தானின் ஏஜெண்ட்’ என எழுதிவிட்டுச் சென்றனர். இந்நிலையில் சீதாராம் யெச்சூரிக்கு கொலை மிரட்டல் விடுத்து தொலைபேசி … Continue reading கன்னய்யா குமார் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்த கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு கொலை மிரட்டல்!

“ஜனநாயகத்தின் நான்காவது தூண் விலை போகுது; ஆனந்த விகடனும் தி இந்துவும்தான் உதாரணங்கள்” ராமதாஸ் கடும் தாக்கு

பாமக நிறுவனர் ராமதாஸ், சென்னை தி. நகரின் நடந்த பாமக நிர்வாகிகள் கூட்டத்துக்குப் பிறகு, பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, ஊடகங்கள் அனைத்தும் திமுக ஆதரவு ஊடகங்களாக மாறிவிட்டன; ஜனநாயகத்தின் நான்காவது தூண் விலை போகிறது என குற்றம்சாட்டினார். அப்போது நிருபர்கள், “ஜனநாயகம் விலை போய்விட்டதாக எதை வைத்துச் சொல்கிறீர்கள்” எனக் கேட்டனர். அதற்கு, “ஜனநாயகத்தின் நான்காவது தூண் விலை போகுது, அடிச்சி. அடிச்சி அடிச்சி சொல்றேன். ஆனந்தவிகடன் குழுமம், தி ஹிந்து அதுக்கு உதாரணங்கள்” என்றார். அதற்கு … Continue reading “ஜனநாயகத்தின் நான்காவது தூண் விலை போகுது; ஆனந்த விகடனும் தி இந்துவும்தான் உதாரணங்கள்” ராமதாஸ் கடும் தாக்கு

நாங்கள் தாக்கம் செலுத்துகிறோம்!: சாதி ஆணவ கொலை செய்வோம் என மிரட்டிய சாதியவாதிகளை கைது செய்யக்கோரி வலுக்கிறது கோரிக்கை

கொங்கு பகுதியின் சாதிய குழுக்களின் வன்மத்தை வெளிச்சமிட்டுக் காட்டும் இந்த ஒலிப்பதிவு வாட்ஸ் அப்பில் அதிகமாக பகிரப்பட்டாலும் இணையத்தில் முதன் முதலாக பதிவேற்றியது தி டைம்ஸ் தமிழ் டாட் காம். http://www.youtube.com/watch?v=p8Cxc20_Vug இதன் விளைவாக கொலை மிரட்டல் விடுத்த சாதியவாதிகளை கைது செய்ய வலியுறுத்தி மக்கள் இயக்கங்கள் கோரிக்கை வைத்திருக்கின்றன. செவ்வாய்கிழமை திராவிடர் விடுதலைக் கழகம் சாதி ஆணவ கொலை செய்வோம் என மிரட்டிய நபர்களை கைசெய்ய வலியுறுத்தி காவல்துறையில் புகார் அளித்திருக்கிறது. இதுகுறித்து வைரம் தி.வி.க தன்னுடைய முகநூலில், … Continue reading நாங்கள் தாக்கம் செலுத்துகிறோம்!: சாதி ஆணவ கொலை செய்வோம் என மிரட்டிய சாதியவாதிகளை கைது செய்யக்கோரி வலுக்கிறது கோரிக்கை

ஆர்.எஸ்.எஸ்சுக்கு ஆதரவு திரட்டும் தினமலர் பாணி அறிவுஜீவித்தனம்: இது சமஸின் ஷிர்க்!

வில்லவன் இராமதாஸ்  தமிழ் இந்து கட்டுரையில் த.ந.த.ஜவின் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை விமர்சனம் செய்து சமஸ் எழுதியிருக்கிறார். அது விமர்சிக்கப்படவேண்டியது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதனை பல இசுலாமியர்களே விமர்சனம் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் சமஸ் வார்த்தைகளில் ஒரு நுட்பமான அரை இந்துத்துவ பிரச்சாரம் இருக்கிறது. இந்த வாஹாபியிச குழுக்கள் அதிகாரம் பெற்றால் அவர்கள் கோயில்களையும் இடிப்பார்களா எனும் கேள்வி முற்றிலும் விஷமத்தனமானது. மேலும் இவர்களை லாவகமாக இந்துத்துவ தீவிரவாதிகளோடு இணைவைக்கிறார் சமஸ். இந்துத்துவ கும்பல் வெளிப்படையாக இசுலாமியர்களையும், … Continue reading ஆர்.எஸ்.எஸ்சுக்கு ஆதரவு திரட்டும் தினமலர் பாணி அறிவுஜீவித்தனம்: இது சமஸின் ஷிர்க்!

#விசாரணை: அதிகார மையத்துக்கு எதிராக மிக காத்திரமாக ஒலிக்கும் குரல்!

மீரா கதிரவன் சிறப்புக்காட்சியில் விசாரணை பார்க்க வாய்த்தது. தொடர்ச்சியாக கருத்துரிமை நசுக்கப்பட்டும் "கொல்லப்பட்டும்"வருகிற இன்றைய சூழலில்.. புரையோடிப்போன அதிகார மையத்திற்கு எதிராக மிக காத்திரமாக ஒலிக்கும் விசாரனையின் குரல் முக்கியமானது.கொண்டாடப் பட வேண்டியது! கதைப்பாத்திரங்களின் உருவாக்கம், அதற்கான நடிகர்களின் தேர்வு என எல்லா வகையிலும் ஒரு முழுமையான சினிமா அனுபவத்தை தருவதில் வெற்றிமாறன் ஜெயித்திருக்கிறார்.அவருடைய சினிமா வாழ்க்கையிலும் தமிழ் சினிமா வரலாற்றிலும் விசாரணை மிக முக்கியமான படம். அறிவுத் திருட்டு ஒரு கலாச்சாரமாகிக் கொண்டிருக்கும் சூழலில் லாக்கப் … Continue reading #விசாரணை: அதிகார மையத்துக்கு எதிராக மிக காத்திரமாக ஒலிக்கும் குரல்!