பெண்களுக்கு எதிரான கருத்துக்கள்: சொன்னதுபோல மனுஸ்மிருதியை கொளுத்திய ஏபிவிபி மாணவர்கள்!

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ஏபிவிபி மாணவர் அமைப்பின் இன்னாள் மற்றும் முன்னாள் தலைவர் சிலர் சேர்ந்து பெண்களுக்கு எதிரான கருத்துக்கள் உள்ள மனுதர்மத்தின் சில பக்கங்களை பெண்கள் தினத்தில் கொளுத்தினர். ஆண்களை மயக்கும் குணம் கொண்டவளாகப் பெண் இறைவனால் படைக்கப்பட்டிருக்கிறாள் (அத்தியாயம் 213-2)  பெண்கள் சிறு வயதில் தந்தையின் பாதுகாப்பிலும், மணமானவுடன் கணவன் பாதுகாப்பிலும் கணவனுக்குப்பின் மகனின் பதுகாப்பிலும் இருக்க வேண்டும்.  (அத்தியாயம் 148 - 5) என்ற இரண்டு வாக்கியங்களை படித்தார் ஏபிவிபியின் முன்னாள் இணை செயலாளர் பிரதீப் … Continue reading பெண்களுக்கு எதிரான கருத்துக்கள்: சொன்னதுபோல மனுஸ்மிருதியை கொளுத்திய ஏபிவிபி மாணவர்கள்!

“நான் ஏன் சீமானை எதிர்க்கிறேன்?”: வி. சபேசன்

வி. சபேசன் சீமான் இரண்டு கோட்பாடுகளை கொச்சைப்படுத்துகிறார். ஓன்று திராவிடம் மற்றது தமிழ்த் தேசியம். இந்த இரண்டு கோட்பாடுகள் பற்றிய மிகத் தவறான விடயங்களை இளைஞர்களுக்கு சீமான் போதிக்கிறார். திராவிடத்தின் மீதும் தமிழ்த் தேசியத்தின் மீதும் பற்றுள்ள ஒருவன், இதை அலட்சியப்படுத்தி விட்டு கடந்து செல்ல மாட்டான். சீமானுக்கு எதிரான கருத்தியல் போரை நடத்துவான். தந்தை பெரியாரின் திராவிடக் கோட்பாடுகளில் தமிழ்த் தேசியமும் அடங்கி விடுகிறது. ஆயினும் திராவிடம் என்பது ஒரு மனிதனின் சுயமரியாதை, ஆரிய பார்ப்பனிய … Continue reading “நான் ஏன் சீமானை எதிர்க்கிறேன்?”: வி. சபேசன்

தெலுங்கர் பேராசிரியர் அருணன் எழுதிய தமிழ் நூல்களின் பட்டியல் இதோ…

செவ்வாய்கிழமை தந்தி டிவியில் ஒளிபரப்பான விவாத நிகழ்ச்சியில் சீமானின் பேச்சுக்கு சிலர் தமிழ் தேசியம் முலாம் பூசுகின்றனர். அவர்கள் பேராசிரியர் அருணனை தெலுங்கர் என்ற முகமூடி அணிவிக்கின்றனர். தெலுங்கரானபேரா. அருணன்  எழுதிய தமிழ் நூல்களின் பட்டியல் இதோ... தமிழரின் தத்துவ மரபு (2 பாகங்கள்) காலந்தோறும் பிராமணியம் (8 பாகங்கள்) தமிழகத்தில் சமூக சீர்திருத்தம் – இரு நூற்றாண்டு வரலாறு மூட நம்பிக்கைகளிலிருந்து விடுதலை! கடவுளின் கதை (5 பாகங்கள்) யுகங்களின் தத்துவம் பேராசிரியர் அருணன் ஐந்து தொகுதிகளாக பகுத்து … Continue reading தெலுங்கர் பேராசிரியர் அருணன் எழுதிய தமிழ் நூல்களின் பட்டியல் இதோ…

20 லட்சம் பேர் மூழுக்குப் போட்ட கும்பகோணம் மகாமகக் குளத்தில் மலக்கழிவு 28%; மூத்திரக்கழிவு 40%: ஆய்வில் தகவல்

புண்ணிய நதிகள் ஒன்று கூடிய காரணத்தால் மகாமகக் குளத்தில் முழுக்குப் போட்டால் 12 வருட பாவங்களும் பறந்தே போகும் என்ற நம்பிக்கையில் 20 லட்சம் பேர் முழுக்குப் போட்ட கும்பகோணம் மகாமகக் குளத்தின் நீரை எடுத்து மாவட்ட ஆட்சியரே பரிசோதனைக்கு அனுப்பினார். அதன் முடிவு பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது. அந்த நீரில் மலம், சிறுநீர் கலந்து பயங்கரமான மாசுக்கு ஆளாகியுள்ளது என்பது அம்பலமாகியுள்ளது. இதுகுறித்து விடுதலை நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், கும்பகோணம் மகாமகம் முடிந்த பிறகு அந்தக் … Continue reading 20 லட்சம் பேர் மூழுக்குப் போட்ட கும்பகோணம் மகாமகக் குளத்தில் மலக்கழிவு 28%; மூத்திரக்கழிவு 40%: ஆய்வில் தகவல்

இறுதிச்சுற்று: குத்துச்சண்டைக்கு மரியாதை, சேரிக்காரனுக்கு அவமானம்!

வில்லவன் இராமதாஸ் (இது பட விமர்சனம் அல்ல) தமிழகத்தில் முற்றாக இந்துமயமான முதல் துறை என்றால் அது சினிமாத்துறைதான். வில்லனின் ஆசைநாயகியர் பெயர்கள் எல்லாம் ரீட்டா. மேரி என கிருஸ்தவ பெயர்களாகவே இருக்கும். ஆனால் அத்தகைய பாத்திரங்களை ஏற்று நடித்த நடிகைகள் 100% இந்துக்கள். வரலாற்றை சிதைப்பதில் காவிக்கூடாத்துக்கு கடும் சவால் விடக்கூடியவர்கள் இந்தத்துறையில் இருப்பவர்களதான். பவுத்த மதத்தை சேர்ந்த போதிதர்மனுக்கு காவி பெயிண்ட் அடித்து குறளிவித்தைக்காரனாக்கினார் முருகதாஸ். பாரபட்சமில்லாமல் எல்லா இயக்குனர்களும் முஸ்லீம்களை தீவிரவாதியாக சித்தரித்து … Continue reading இறுதிச்சுற்று: குத்துச்சண்டைக்கு மரியாதை, சேரிக்காரனுக்கு அவமானம்!

ஒரு கம்யூனிஸ்டுக்கு கடவுள் நம்பிக்கை காணாமல் போன கதை!

கதிர்வேல் கேரளாவின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்தத் தலைவர் V S அச்சுதானந்தனக்கு 92 வயது பூர்த்தியாகி விட்டது. தோழர் நல்ல மூடில் இருந்தபோது ஒரு கேள்வி கேட்கப்பட்டது. "எப்படி தோழர் உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லாமல் ஆனது...?" ஒரு நிமிடம் கண்களை மூடி மவுனமாகிறார். பின் கண்களை திறந்து நிலத்தை பார்த்தபடி பேசுகிறார். "அப்பா, அம்மா, சகோதரர்கள் அடங்கிய ஒரு அன்பான குடும்பம் என்னுடையது. என் அம்மாவுக்கு தொற்று நோயான வைசூரி வந்துவிட்டது. அப்பல்லாம் வைசூரி வந்தால் … Continue reading ஒரு கம்யூனிஸ்டுக்கு கடவுள் நம்பிக்கை காணாமல் போன கதை!