தந்தி டி.வி.யில் நடந்திருக்கும் பார்ப்பனத் துப்புரவாக்கம் வரவேற்புக்குரியது

தந்தி டிவியை முழுக்க இந்துத்துவம், ஸ்டெர்லைட், ராஜபக்சேவின் ஊதுகுழலாக மாற்றியது பாண்டே இழைத்த தமிழர் விரோத பெருங்குற்றம்.

தமிழ் சாதியும் ஆங்கில நீதியும்

ஜெ. பாலசுப்ரமணியம் ஒரே நிறுவனத்திலிருந்து வெளியாகும் இரு செய்தித்தாள்கள் ஒரு சம்பவத்தை எப்படி பார்க்கின்றன என்பதற்கு ஒரு சான்று. தமிழ் ‘தி இந்து’வும் ஆங்கில ‘தி இந்து’வும் சாதிய விசயங்களை பார்ப்பதில் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது. மதுரை மாவட்டம் பன்னியான் கிராமத்தில் கடந்த 30.10.2017 அன்று மாலை 5 மணி அளவில் தலித் குடியிருப்புகளை அடித்து நொறுக்கியும், பைக்குகள், ஆட்டோக்கள், சுமோ வாகனங்கள் அடித்து தாக்கப்பட்டன. இதை பதிவு செய்த ஆங்கில தி இந்து நாளிதழ் 2ஆம் … Continue reading தமிழ் சாதியும் ஆங்கில நீதியும்

#நீயா_நானா: இதை #குடும்பப்பெண்கள் மட்டும் படிக்கவும்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நீயா நானா என்ற நிகழ்ச்சியில் ‘தமிழ்ப் பெண்கள் அழகா? கேரளப் பெண்கள் அழகா? என்ற தலைப்பில் விவாதம் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒளிப்பரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பெண்ணிய, முற்போக்கு அமைப்பினரின் எதிர்ப்பு காரணமாக நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.  நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது கருத்துரிமையை பறிக்கும் செயல் என நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஆண்டனி தெரிவித்தார். சமூக ஊடகங்களில் சர்ச்சை உருவான நிலையில், திங்கள் கிழமை நியூஸ் 18 தொலைக்காட்சி, ‘காலத்தின் குரல்’ நிகழ்ச்சியில் இதுகுறித்து … Continue reading #நீயா_நானா: இதை #குடும்பப்பெண்கள் மட்டும் படிக்கவும்!

கார்ப்பரேட் விகடனின் ஹைடெக் அரசியல்!

தந்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாத உன்னதப் பொய்யர்களின் கூடாரமான பாஜகவை, அதன் புறக்கடை அரசியலை எந்த விவாதத்துக்கும் உட்படுத்தாமல், மொத்தப் பழியையும் மாநில ஆளும்கட்சி அரசியல்வாதிகள் மீது சுமத்தி அரசு எந்திரத்தைப் பக்குவமாகப் பாதுகாக்கிறது பம்மாத்து விகடன்.

ஆர்எஸ்எஸ் வார இதழை விட ஆபத்தான உங்கள் பத்திரிகையில் எழுத முடியாது;மன்னித்துக் கொள்ளுங்கள் சமஸ்…

நான்கு நாட்களுக்கு முன் ஒரு தொலைபேசி அழைப்பு. "சமஸ் பேசுறேன் சார்" எதிர்பார்க்கவில்லை. யார் தமிழ் இந்து சமசா எனக் கேட்டு உறுதிப் படுத்திக் கொண்டேன். எப்படி இருக்கீங்க ஹிரண்யா ஆபரேஷன் எல்லாம் முடிந்து குணமாயிட்டீங்களா என விசாரித்தேன். என்ன இருந்தாலும் நான் பணி செய்த கல்லூரியில் படித்த மாணவர் அல்லவா. பாசம்.. விஷயத்திற்கு வந்தார். கலைஞர் பொன் விழாவை ஒட்டி திராவிட இயக்கச் சிறப்பிதழ் ஒன்று வெளியிடுகிறார்களாம். இளைஞர்களுக்கு திராவிட இயக்கம் பற்றிய சரியான புரிதலை … Continue reading ஆர்எஸ்எஸ் வார இதழை விட ஆபத்தான உங்கள் பத்திரிகையில் எழுத முடியாது;மன்னித்துக் கொள்ளுங்கள் சமஸ்…

”உ.பி.யில் மூளை அலர்ஜியால் 63 குழந்தைகள் சாவு” புதிய தலைமுறை செய்திக்கு ட்விட்டரில் கொதித்தெழுந்த மக்கள்!

உத்தரப் பிரதேசத்தில் கோராக்பூரில் உள்ள பாபா ராகவ்தாஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக 30 குழந்தைகள் இறந்த செய்தி, நேற்றிலிருந்து இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சாவு எண்ணிக்கை இன்று 63ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய தலைமுறை தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தியில், “உத்தரப்பிரதேசம்: கோரக்பூர் மருத்துவமனையில் மூளை அலர்ஜியால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 63ஆனது” என தெரிவித்துள்ளது. https://twitter.com/PTTVOnlineNews/status/896231859822055429 இந்த ட்விட்டுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள் ட்விட்டர்வாசிகள்.. … Continue reading ”உ.பி.யில் மூளை அலர்ஜியால் 63 குழந்தைகள் சாவு” புதிய தலைமுறை செய்திக்கு ட்விட்டரில் கொதித்தெழுந்த மக்கள்!

நீங்கள் எழுதிய “கீழ்த்தரமான ட்வீட்களுக்கு” எப்போது மன்னிப்பு கேட்பீர்கள் தான்யா..?

தான்யா ராஜேந்திரனுக்கு... வணக்கம்.  இதே பத்திரிகைத்துறையில் எட்டு வருடங்களுக்கு மேலாகக் குப்பை கொட்டுவதாலும், தமிழ் ஊடகவியலாளர்களுக்கும் ஆங்கில ஊடகவியலாளர்களுக்குமான லாபியிங் திறமை என்பது மலைக்கும் மடுவுக்குமானது என்பது பற்றித் தெரியுமென்பதாலும் உங்களுடைய சமீபத்திய செயல்பாடுகள் குறித்து எனக்குள் எழும் சில கேள்விகளை உங்களிடம் கேட்கலாம் என நினைக்கிறேன். “நியூஸ் மினிட்” என்கிற ஆங்கில இணையதளத்திற்கு நீங்கள் “எடிட்டர் இன் சீஃப்” ஆக இருக்கலாம். ஆனால் நீங்கள் செய்தியாளாரா அல்லது வெறும் செய்தி சேகரிப்பாளரா என்பதில் உங்களுக்கே சந்தேகம் … Continue reading நீங்கள் எழுதிய “கீழ்த்தரமான ட்வீட்களுக்கு” எப்போது மன்னிப்பு கேட்பீர்கள் தான்யா..?

பத்திரிகையாளர்களுக்கு வார்த்தையில் நிதானம் வேண்டாமா?

இத விட அவர் பாலியல் தொழில் நடத்த போகலாம்னு சொல்றியா.. சேச்சே, அப்டி பேசுறது தப்பு..’னு ஒரு தலைவர இங்லீஸ்ல நக்கலடிச்சா தொண்டனுக்கு புரியாம போய்றாது.

முன்னாள் முதல்வர்கள், எதிர்கட்சித் தலைவருக்கு இல்லாத ‘சிறப்பான இடம்’ சசிகலாவுக்கு!

உடல்நலக் குறைவால் மறைந்த பத்திரிகையாளர் சோ ராமசாமியின் உடல் சென்னை எம்ஆர்சி நகரில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும், திரையுலகப் பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, சோ உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார் இதுதான் ஊடகங்களில் ‘சிறப்பான இடத்தை’ப் பிடித்தது. தினத்தந்தியின் முதல் பக்கத்தில் முதல் படமாக சசிகலாவின் படம் இடம்பெற்றது. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் கதிர்வேல் ‘என்ன அவசரம்?’ என்ற … Continue reading முன்னாள் முதல்வர்கள், எதிர்கட்சித் தலைவருக்கு இல்லாத ‘சிறப்பான இடம்’ சசிகலாவுக்கு!

டெபாசிட்கூட வாங்காத பாஜக, மூன்றாவது பெரிய கட்சியாக வளர்ந்த ‘கதை’!

தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றிபெற்றனர்.  கிட்டத்தட்ட 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவை வீழ்த்தியது அதிமுக. இந்த மூன்று தொகுதிகளிலும் டெபாசிட்கூட பெறாத அதிகபட்சம் ஆறாயிரம் வாக்குகள் பெற்ற பாஜக மூன்றாம் இடத்துக்கு வந்திருப்பதாக ஊடகங்கள் தலைப்புச் செய்தி வெளியிடுகின்றன. மூன்று தொகுதிகளிலும் பாஜக பெற்ற வாக்கு விவரம்: அரவக்குறிச்சியில் பாஜக வேட்பாளர் பெற்ற வாக்குகள் : 3162  தஞ்சாவூர்: 3806 வாக்குகள் திருப்பரங்குன்றம்:  6930 வாக்குகள் டெபாசிட்கூட … Continue reading டெபாசிட்கூட வாங்காத பாஜக, மூன்றாவது பெரிய கட்சியாக வளர்ந்த ‘கதை’!

போராட்டத்தை ’மாணவியர் குத்தாட்டம்’ என தலைப்பிட்டு செய்தி; தினமலரை எரித்து மாணவர்கள் போராட்டம்

புதிய கல்வி கொள்கைக்கு எதிராக சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய பறையாட்ட விழிப்புணர்வு போராட்டத்தை, சென்னை பல்கலையில் மாணவியர் குத்தாட்டம் என தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது தினமலர் நாளிதழ். https://www.facebook.com/kavinnnn/posts/10211320395028910 https://www.facebook.com/vcheral/posts/916423075126190 https://www.facebook.com/pavan.gopi/posts/1172643226162626 இதற்கு சமூக ஊடகங்களில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தினமலரின் இத்தகைய போக்கைக் கண்டித்து மாணவர்கள் தினமலர் நாளிதழை எரித்து போராட்டம் நடத்தினர். https://www.facebook.com/lakshmikanthdgl.barathi/videos/1164293770326458/  

கருத்துரிமை: காங்கிரஸ்-திமுகவை குறை சொல்லும் தகுதி தினமலருக்கு இருக்கிறதா?…

பதான்கோட் பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவத்தை நேரடியாக ஒளிபரப்பியதற்காக "என்.டி.டிவி'யின் இந்தி சேனலுக்கு ஒரு நாள் தடை விதிக்கப்பட்டது. இதை அனைத்து எதிர் கட்சிகளும் கண்டித்தன. குறிப்பாக காங்கிரசும், திமுக.,வும் கடுமையாகவே கண்டித்தன. இந்நிலையில் "காங்கிரஸ் - தி.மு.க., ஆட்சியில் தடை விதிக்கப்பட்ட 'டிவி' சேனல்கள்" என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டுள்ள தினமலர், அதில், "கருத்துரிமையை பேசும் தகுதி திமுக, காங்கிரஸ்க்கு இருக்கிறதா ?" என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. மேலும் திமுக ஆட்சில் தினமலர் ஆசிரியர் கைது செய்யப்பட்டார் … Continue reading கருத்துரிமை: காங்கிரஸ்-திமுகவை குறை சொல்லும் தகுதி தினமலருக்கு இருக்கிறதா?…

கிறித்துதாஸ் காந்தி மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி இயக்கங்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், செயற்பாட்டாளர்கள் கூட்டறிக்கை

ஓய்வுபெற்ற ஐ ஏ எஸ் அதிகாரி கிறித்துதாஸ் காந்தி மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி தமிழக முற்போக்கு இயக்கங்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அறிக்கையின் விவரம் வருமாறு: தொலைக்காட்சி (தந்தி) விவாதம் ஒன்றில் முன்னாள் கூடுதல் தலைமைச்செயலாளர் கிறித்துதாசு காந்தி அவர்கள் கூறிய கருத்துக்காக, பார்ப்பனிய இந்துத்துவ சக்திகள் அவர் மீது தனிப்பட்ட தாக்குதலில் இறங்கியுள்ளன. அந்த நிகழ்ச்சியில் அவர் தெளிவாக, ” தனிப்பட்ட ஒருவர் எந்த மத நிகழ்ச்சியிலும் பங்கேற்கலாம்; ஆனால் முதலமைச்சராகவோ … Continue reading கிறித்துதாஸ் காந்தி மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி இயக்கங்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், செயற்பாட்டாளர்கள் கூட்டறிக்கை

ராமர் செருப்படி விவகாரம்: கிறிஸ்துதாஸ் காந்தியின் வீட்டு முகவரியை வெளியிட்ட தினமலர்!

சமீபத்தில் தந்தி டிவி பிரதமர் நரேந்திர மோடியின் “ஜெய் ஸ்ரீராம் முழக்கம்” குறித்து விவாதம் ஒன்றை நடத்தியது. இதில் முன்னாள் ஐஏஎஸ் கிறிஸ்துதாஸ் காந்தி, மத சுதந்திரம் உள்ள நாட்டில் நாத்திகர்களுக்கு ராமரை செருப்பால் அடிக்கும் உரிமையும் உண்டு எனப் பேசினார். இது இந்துத்துவ அமைப்புகளால் கண்டனத்துக்கு உள்ளானது. பகுத்தறிவாளர்கள் பலர் கிறிஸ்துதாஸ் காந்திக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் தன்னுடைய பேச்சுக்கு விளக்கம் அளித்து, யாருடைய மனதாவது புண்பட்டிருந்தால் அதற்காக பொதுமன்னிப்பு கேட்பதாகவும் கிறிஸ்துதாஸ் காந்தி தெரிவித்திருந்தார். … Continue reading ராமர் செருப்படி விவகாரம்: கிறிஸ்துதாஸ் காந்தியின் வீட்டு முகவரியை வெளியிட்ட தினமலர்!

“அர்ணாப் கோஸ்வாமியின் இடத்தைப் பிடிப்பதற்கு திருவாளர் மதி போட்டியிடலாம்”

அ. பாக்கியம் இன்றைய தினமணியில் திருவாளர் மதி அவர்களின் கார்ட்டூன் பகுதியில் எழுதியிருப்பது அப்பட்டமான திசை திருப்பலாகும். சீத்தாராம் யெச்சூரியின் ஒற்றை வார்த்தையை வெட்டி எடுத்து முடிவை அறிவிக்கும் மூர்க்கத்தனமான எழுத்தாகும். மதியுள்ள மனிதர்கள் அனைவரும் மாந்தர்களின் வாழ்வின் மீது பற்று வைத்து சீத்தாராம் யெச்சூரியின் வார்தையை புரிந்து கொள்வார்கள். குதர்க்க மதி கொண்டவர்கள் தான் திசை திருப்பும் வகையில் அர்த்தப்படுத்திக் கொள்வார்கள். சீத்தாராம் யெச்சூரியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் உரித் தாக்குதலை கடுமையாக கண்டித்திருக்கிறது. பதான்கோட் … Continue reading “அர்ணாப் கோஸ்வாமியின் இடத்தைப் பிடிப்பதற்கு திருவாளர் மதி போட்டியிடலாம்”

“இதுதான் பத்திரிகை தர்மமா?”: அவதூறு பேட்டியை வெளியிட்ட குமுதம் இதழ் மீது இயக்குநர் சந்திரா வழக்கு

28.9.16 தேதியிட்டு கடந்த புதன்கிழமை வெளியான குமுதம் இதழில் நடிகர் கஞ்சா கருப்பு பேட்டி வெளியானது. அந்த பேட்டியில் கள்ளன் பட இயக்குனரும், எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான சந்திரா பற்றியும் அவரது கணவர் வீகே.சுந்தர் மீதும் பல்வேறு அவதூறுகளை சொல்லியிருந்தார் நடிகர் கஞ்சா கருப்பு. இதுகுறித்து வெள்ளிக்கிழமை (23.9.16 அன்று நடிகர் கஞ்சா கருப்பு மீதும், ஒரு பெண் என்றுகூட பாராமல் அநாகரீகமான வார்த்தைகளை பிரசுரித்த குமுதம் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் என்கிற க.ராமச்சந்திரன், நிருபர் மகா, … Continue reading “இதுதான் பத்திரிகை தர்மமா?”: அவதூறு பேட்டியை வெளியிட்ட குமுதம் இதழ் மீது இயக்குநர் சந்திரா வழக்கு

“நிகழ்வுகளில் பங்கேற்பது உங்கள் முன் கைகட்டி நின்று அறிவுரை கேட்க அல்ல!”: பாண்டேவுக்கு சுப.வீ திறந்த மடல்

அன்புள்ள திரு பாண்டே, வணக்கம். இன்று (17.09.2016) மாலை தந்தி தொலைக்காட்சியின் மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் பங்கேற்க என்னையும் அழைத்தமைக்கு முதலில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அந்நிகழ்ச்சி இன்னும் ஒளிபரப்பப்படவில்லை என்றாலும், வெளி அரங்கில், பொது மக்கள் முன்னிலையில்தான் நடைபெற்றது என்பதால், அது குறித்துப் பேசுவதில் பிழை ஏதும் இல்லை என்று கருதி இத்திறந்த மடலை எழுதுகின்றேன். நீங்கள் (அதாவது தொலைக்காட்சியினர்) எங்கள் அரசியல் நிலைப்பாடுகளுக்கு ஊறு விளைவிக்க மாட்டீர்கள்   என்று நம்பியும், உங்களை மதித்தும்தான் … Continue reading “நிகழ்வுகளில் பங்கேற்பது உங்கள் முன் கைகட்டி நின்று அறிவுரை கேட்க அல்ல!”: பாண்டேவுக்கு சுப.வீ திறந்த மடல்

நிர்வாணமாய் தெரியும் ஊடகங்களின் போலி தர்மமும் போலி நியாயமும்

இக்பால் அகமது கடந்த ஏப்ரல் 18, 19 இரு நாட்களும் பெங்களூரில் லட்சக்கணக்கான உழைக்கும் வர்க்கம் வீறுகொண்ட ஆவேசத்துடன் சாலைகளில் திரண்டது; ஆகப்பெரும்பான்மையோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது; அது தன்னெழுச்சியான போராட்டம். மத்திய மோடி அரசு ’தொழிலாளர்களின் சேமிப்பான ஈபிஎஃப்-ஐ அவர்கள் ஓய்வுபெறும்போது அதாவது 58 வயது நிறைந்த பின்னரே மீட்டு எடுக்க முடியும்’ என்று திடீர் ஆணை பிறப்பித்தது; பெங்களூரின் லட்சக்கணக்கான ஆயத்த ஆடைத்தொழிலாளர்கள்தான் கோபாவேசம் கொண்டு வீதிகளில் திரண்டு இரண்டு நாட்கள் பெங்களூரின் அசைவை … Continue reading நிர்வாணமாய் தெரியும் ஊடகங்களின் போலி தர்மமும் போலி நியாயமும்

வீட்டில் தயாரித்த குண்டு வெடித்து இறந்த பாஜக ‘தொண்டர்’ இவர்தான்

சமூக வலைத்தளங்களில் கடந்த இரண்டு நாட்களாக வீட்டில் குண்டு தயாரிக்கும்போது வெடித்து இறந்த பாஜக ‘தொண்டர்’ பற்றி செய்திகள் அதிகமாக பரப்பப் பட்டு வருகின்றன. ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர் இப்படி குண்டு தயாரித்து இறந்திருந்தால் அவரை ‘தீவிரவாதியாக’ சித்தரிக்கும் ஊடகங்கள், பாஜகட்சியைச் சேர்ந்தவர் என்பதால் அவரை ‘தொண்டர்’ என அழைப்பதாக விமர்சனம் வைக்கப்பட்டது. ஒரு செய்தித் தொலைக்காட்சி இணையதளத்தின் லட்சினையுடன் அந்தச் செய்தி பரவியது, தொடர்புடைய நிறுவனம் இது நாங்கள் வெளியிட்ட செய்தி இல்லை என … Continue reading வீட்டில் தயாரித்த குண்டு வெடித்து இறந்த பாஜக ‘தொண்டர்’ இவர்தான்

பேரா. சுபவீ, ஊடகவியலாளர் குணா மற்றும் சிலருக்கு ஒரு திறந்த மடல்: கௌதம சன்னா

கௌதம சன்னா பேராசிரியர் சுபவீ அவர்களுக்கு வணக்கம். இந்த கடிதம் உங்களுக்கும் உங்களைப் போலவே கருத்துத் தெரிவித்துள்ள ஊடகவியலாளர் குணா மற்றும் சூனியர் விகடன் இதழ் குழுமத்திற்குமானது. நீங்கள் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் என்பதால் இதை எழுத வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. என்னை உங்களுக்கு யாரென தெரியாமல் இருக்கலாம். நான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னணி பொருப்பாளராக இருந்தாலும் அந்த தகுதியில் இக்கடிதத்தை எழுதவில்லை. ஒரு சாமான்ய மனிதனாக எனக்கு எழுந்துள்ள கேள்விகளினால் உந்தப்பட்டு இக்கடிதத்தை எழுதுகிறேன். … Continue reading பேரா. சுபவீ, ஊடகவியலாளர் குணா மற்றும் சிலருக்கு ஒரு திறந்த மடல்: கௌதம சன்னா

“அர்னாப் கோஸ்வாமி, நீங்கள் பத்திரிகையாளர் தானா?”: பர்கா தத்

பத்திரிகையாளர் பர்கா தத் சக பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமி மீது மிகக் கடுமையான விமர்சனங்களை வைத்திருக்கிறார். காஷ்மீரில் கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக நடந்துவரும் போராட்டங்கள், கிளர்ச்சிகள் அங்கு வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கையை பெருமளவில் பாதித்திருக்கிறது. குழந்தைகள், இளைஞர்கள் பெல்லட் குண்டுகளால் பார்வை இழப்புகளுக்கும் ஆளாகியிருக்கிறார்கள். 47 பேர் இந்தப் போராட்டங்களின் போது உயிரிழந்துள்ளனர். இத்தகைய சூழலில் டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் அர்னாப் கோஸ்வாமி, பத்திரிகையாளர்கள் சிலர் ஜம்மு காஷ்மீர் பிரச்சினையில் கிளர்ச்சியாளர் ஊக்கப்படுத்துவதாக தொடர்ந்து … Continue reading “அர்னாப் கோஸ்வாமி, நீங்கள் பத்திரிகையாளர் தானா?”: பர்கா தத்

பூணூலைத் தடவிக்கொண்டே ராம்குமாரை தூக்கில் ஏற்ற பரிந்துரைக்கிறது தினமணி!

நீதி எல்லோருக்கும் சமமானதாக இருக்கும்பட்சத்தில் விசாரணை, தண்டனை என இந்திய தண்டனைச் சட்டம், நீதிமன்றம் இயங்கும் அதே முறையில் ஸ்வாதி படுகொலை தொடர்பாக கைதுசெய்யப்பட்டிருக்கும் ராம்குமார் மீதான வழக்கும் விசாரிக்கப்பட வேண்டும். ஆனால், அதற்கான அறிகுறிகளே இங்கே தென்படவில்லை. குற்றம் நிரூபிக்கப்படும்வரை அந்த வழக்கில் கைது செய்யப்பட்டவரை கொலையாளி என எவரும் சுட்டக்கூடாது என்பது விதி.  பெரும்பாலும் பார்ப்பனர் தலைமையில் கீழ் இயங்கும் ஊடகங்கள், பார்ப்பனமயமாக்கப்பட்ட ஊடகங்கள் கொல்லப்பட்டவர் பார்ப்பன சமூகத்தவர் (பெண் என்பதற்காகவெல்லாம் இல்லை; ஜெயந்திரர் … Continue reading பூணூலைத் தடவிக்கொண்டே ராம்குமாரை தூக்கில் ஏற்ற பரிந்துரைக்கிறது தினமணி!

“எங்கள் குடும்பத்துத்துப் பெண்களுக்கு பாரம்பரியம் என்று எதுவுமில்லை”

ஸ்வாதி படுகொலை வழக்கில் கைதாகியுள்ள ராம்குமாரின் தாயையும் தங்கையும் நக்கீரன், தினமலர் ஆகிய ஊடகங்கள் படம் எடுத்து வெளியிட்டிருக்கின்றனர்,  குற்றம்சாட்டப்பட்டர் சார்ந்த குடும்பத்தினரின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக பலர் இந்தப் போக்குக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். Prasanna Ramaswamy எல்லோருக்கும் அந்தரங்கம் காத்துக் கொள்ளும் உரிமை உண்டு. கொலை செய்ததாக கருதப் படுபவனுக்கும் அவனது குடும்பத்தினருக்கும் கூட. Akb Ariff சுவாதி வெட்டப்பட்ட போட்டோவை பார்த்த போது ஏற்பட்ட அதே பதைபதைப்பு ராம்குமாரின் சகோதரி காவல் நிலையத்தில் முகத்தை மறைத்து … Continue reading “எங்கள் குடும்பத்துத்துப் பெண்களுக்கு பாரம்பரியம் என்று எதுவுமில்லை”

“தோற்றுப்போனவர்கள்” அறிக்கை விடக்கூடாதாம் ஒரு பத்திரிகையாளர் சொல்கிறார்!

மோகன் தேர்தலில் முற்றிலும் மக்களால் நிராகரிக்கப் பட்ட கட்சித் தலைவர்கள் கொஞ்சமும் கூச்சமில்லாமல் தினந்தோறும் அறிக்கை விடுவது , பேட்டி கொடுப்பது என்று பொழுதுபோக்குகிறார்கள்.. சிலகாலம் அமைதி காப்போம்.. சுயபரிசோதனை செய்வோம் என்ற எண்ணம் கூட அவர்களுக்கு இல்லை . அவர்களை பத்திரிக்கைகளும் ஊடகங்களும் சில காலம் காத்திருப்போர் பட்டியலில் வைப்பதே சரியானதாக இருக்கும் — பத்திரிகையாளர் லோகநாதனின் கருத்து அரசியல்வாதிகளை பத்திரிகையாளர்கள் அவரவர் விருப்பத்துக்கு விமர்சிக்கிறோம். ஒரு அரசியல்வாதி பத்திரிகையாளர்களை விமர்சித்துவிட்டால் கோபம் கொள்கிறோம். பத்திரிகையாளர்கள் … Continue reading “தோற்றுப்போனவர்கள்” அறிக்கை விடக்கூடாதாம் ஒரு பத்திரிகையாளர் சொல்கிறார்!

மக்களை மொன்னையாக்கும் தொலைக்காட்சி விவாதங்கள்!

திருமுருகன் காந்தி தொலைக்காட்சி ஊடகங்கள் முதல் அனைத்து ஊடகங்களும் பெரிய தேர்தல் கட்சிகளின் அஜண்டாவை மையப்பத்தியே விவாதங்களை நடத்துகின்றன. திட்டமிட்டு மக்கள் மைய அரசியல் இயக்கங்கள் இந்த விவாதங்களில் புறக்கணிக்கப்படுகின்றன. இந்த பெரிய அதிகார மைய கட்சிகள் ’மக்கள் போராளிகள் போலவும், புரட்சிகர அரசியலை செய்வது போலவும் படம் போடுவதை காண சகிக்க முடியவில்லை. பொதுமக்கள் மீது தேர்தல் அரசியல் மீதும், அரசியல் கட்சிகளின் மீதும் ஒரு நம்பிக்கையை வரவழைக்க முயலுகின்றனர். தேர்தல் கமிசனும் நேர்மையாக நடப்பது … Continue reading மக்களை மொன்னையாக்கும் தொலைக்காட்சி விவாதங்கள்!

#அவசியம்படிக்க: விருத்தாசலத்தில் என்ன நடந்தது? ஊடகங்கள் சொல்வது என்ன?

கதிர்வேல் ஜெயலலிதா பொதுக்கூட்டம். ஆண்களும் பெண்களும் அழைத்து வரப்பட்டார்கள். 11 மணி முதல் திடலுக்குள் விடப்பட்டார்கள். வெயில் கொளுத்தியது. தண்ணீர் தீர்ந்து விட்டது. தாங்க முடியாமல் சிலர் வெளியேற முயன்றார்கள். போலீஸ் தடுத்து விட்டது. சீயெம் வந்து விடுவார்; இப்போ போகக்கூடாது என்றது போலீஸ். அம்மா பேசிட்டு போகும் வரை அசையாமல் இருக்கணும்னுதானே கூட்டியாந்தோம் என்றனர் கட்சிக்காரர்கள். பலவீனமானவர்கள் மயங்கி சாய்ந்தார்கள். முதல்வர் மேடையேறி பேசும்போது மூன்றரை மணி ஆகிவிட்டது. மயக்கமான பெண்களை பார்த்து பதறிய ஆண் … Continue reading #அவசியம்படிக்க: விருத்தாசலத்தில் என்ன நடந்தது? ஊடகங்கள் சொல்வது என்ன?

”இவர்கள் பத்திரிகைகளில் எழுதும் எழுத்துக்களை இனி நாம் எப்படி நம்புவது?”

அ. மார்க்ஸ்  "எழுத்தும் தெய்வம் எழுதுகோலும் தெய்வம்.." (பத்திரிகையாளர்களின் பொறுப்பு குறித்து ஒரு சொல்) பத்திரிகைகள் ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்று. பொதுக் கருத்துக்களை உருவாக்குவதில் பத்திரிகைகளுக்குப் பெரும் பங்குண்டு. சமூக அமைதியை மட்டுமல்ல, வெறுப்பையும் அமைதியின்மையையும் வன்முறையையும் உருவாக்கும் சாத்தியம் பத்திரிகைச் செய்திகளுக்கு உண்டு. பத்திரிகைச் செய்திகளின் நம்பகத் தன்மையின் அடிப்படையில்தான் பல நேரங்களில் நீதிமன்றங்கள் கூடக் கருத்துக்களைத் தெரிவிக்கின்றன; நடவடிக்கைகள் மேற்கொள்கின்றன. அந்த வகையில்தான் பல கருத்து மாறுபாடுகள் இருந்தபோதும் The Hindu போன்ற இதழ்களை … Continue reading ”இவர்கள் பத்திரிகைகளில் எழுதும் எழுத்துக்களை இனி நாம் எப்படி நம்புவது?”

“வள்ளுவர் என்னை வலது கன்னத்தில் அடித்தார்”: ஆனந்தவிகடன் கட்டுரையை எழுதிய பத்திரிகையாளர் திருமாவேலன் வைகோவுக்கு விளக்கம்

ஆனந்த விகடனில் கடந்த வாரம்(6.4.2016)வெளியான ‘போர்வாள் அட்டக்கத்தி ஆன கதை’ என்ற கட்டுரை மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோவும் இடதுசாரிகளும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதற்கு கட்டுரை எழுதிய பத்திரிகையாளர் ப. திருமாவேலன் ‘வைகோவின் புரிதலும் எனது விளக்கமும்!’ என்ற தலைப்பில் தன்னுடைய முகநூலில் ஒரு குறிப்பு எழுதியிருக்கிறார். அதில், “மக்கள் நலக்கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு ஆதரவாக வைகோ பேசிய பேச்சுகளை விமர்சித்து ஆனந்த விகடன் இதழில், 'போர் வாள் அட்டக்கத்தி ஆன … Continue reading “வள்ளுவர் என்னை வலது கன்னத்தில் அடித்தார்”: ஆனந்தவிகடன் கட்டுரையை எழுதிய பத்திரிகையாளர் திருமாவேலன் வைகோவுக்கு விளக்கம்

‘அடேயப்பா…234 தொகுதியிலும் இரட்டை இலையா?’; ஊடகங்கள் கட்டமைக்கும் அம்மா எனும் புனித பிம்பம்

வா. மணிகண்டன் அதிமுகவின் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படுவதற்கு முன்பு வரை ஐவர் அணி காலி செய்யப்பட்டுவிட்டது. சென்னையை விட்டு விரட்டியடிக்கப்பட்ட செந்தில்பாலாஜி காணாமல் போய்விடுவார். ராஜேந்திர பாலாஜி, ராமஜெயம் போன்ற வாட்ஸ்-அப் புகழ் வேட்பாளர்களுக்கு இடமிருக்காது என்றெல்லாம் புளகாங்கிதம் அடைந்து கொண்டிருந்த ஊடகவியலாளர்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன். கடந்த ஐந்தாண்டுகளாக நடைபெற்ற செயல்பாடற்ற ஆட்சியின் அத்தனை கழிசடைத்தனங்களும் எம்.எல்.ஏக்களாலும் மந்திரிகளாலும்தான் செய்யப்பட்டவையே தவிர அம்மா ஒரு அப்பாவி எனவும் அவருக்கும் கடந்த ஐந்தாண்டுகளின் அசமஞ்சத்தனத்துக்கும் சம்பந்தமேயில்லை என்று கட்டமைக்கப்பட்ட … Continue reading ‘அடேயப்பா…234 தொகுதியிலும் இரட்டை இலையா?’; ஊடகங்கள் கட்டமைக்கும் அம்மா எனும் புனித பிம்பம்

நியூஸ் 7 தமிழ்: ஜேர்னலிஸ்டிக் எதிக்ஸ்னு எதாச்சு இருக்கா உங்களுக்கு?

ஜோஷ்வா ஐசக் ஆசாத் 'தாரை தப்பட்டை' படத்திற்காக இசைஞானிக்கு இன்று தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நியூஸ் 7 தமிழ் செய்தி தொலைக்காட்சியில் இன்று அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகள் தொடர்பான செய்தி வருகிறது. இன்று தமிழ் திரைப்பட துறையில் யாரெல்லாம் தேசிய விருது வாங்கியிருக்கிறார்கள் என்று காட்டுகிறார்கள். அதற்கு அடுத்த செய்தி தேசிய விருதுகள் தேர்வுக் குழுவில் நடுவராக இருந்த கங்கை அமரனிடம் டெல்லியில் எடுத்த பேட்டியை போடுகிறார்கள். என்ன செய்தினா 'தேசிய விருதுக்கு இளையராஜாவின் பெயரை நான் … Continue reading நியூஸ் 7 தமிழ்: ஜேர்னலிஸ்டிக் எதிக்ஸ்னு எதாச்சு இருக்கா உங்களுக்கு?

ஊடகங்கள் வழங்கிய தீர்ப்பு: நோயின் மயக்கத்தில் தள்ளாடியவரை குடிகாரனாக்கிய அவலம்!

Wafiq Sha பல்வேறு நேரங்களில் பல நல்ல காரணங்களுக்காக சமூக வலைதளங்கள் பயன்படுத்தப்பட்டாலும் ஒரு கொடிய தொற்று நோய் நாட்டில் பரவுவதை விட புரளிகளையும் பொய்யான தகவல்களையும் வேகமாக பரவச் செய்யவும் அது உதவுகிறது. இதனால் சமீபத்தில் பாதிக்கப்பட்டவர் டில்லி காவல்துறையின் தலைமை காவலர் சலீம். 40 வயதான சலீம் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் குடி போதையில் டில்லி மெட்ரோவில் பயணித்ததாக வீடியோ ஒன்று வைரலாக பரவியது. அந்த வீடியோவில் சலீம் நிலை தடுமாறி நிற்க … Continue reading ஊடகங்கள் வழங்கிய தீர்ப்பு: நோயின் மயக்கத்தில் தள்ளாடியவரை குடிகாரனாக்கிய அவலம்!

தமிழர்களின் தேசிய உணவான தயிர் சாதமும் ’தமிழச்சி’ பத்மா லக்ஷ்மியும்!

பத்மா லக்ஷ்மி சமையல்கலை நிபுணர், மாடல். எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் முன்னாள் காதலியாக உலகப் புகழ்பெற்றவர். சமீபத்தில் இவர் அமெரிக்காவில் பிரபலமான Ellen Degeneres’ show என்ற தொலைக்காட்சி  நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் பத்மா லக்ஷ்மி பிராமணர்களின் ரெசிபியான தயிர்சாதத்தை சமைத்தார். சென்னையில் தமிழ் பிராமண குடும்பத்தில் பிறந்த பத்மா, நான்கு வயதில் தன் தாயுடன் அமெரிக்காவில் குடியேறினார். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பத்மாவின் தயிர் சாத ரெசிபியை ரசித்த வெளிநாடு வாழ் இந்தியர்கள், அதைப் பற்றி சமூக வலைத்தளங்களில் … Continue reading தமிழர்களின் தேசிய உணவான தயிர் சாதமும் ’தமிழச்சி’ பத்மா லக்ஷ்மியும்!

சாதிய நகைமுரணும் பெண்ணியப்போலிகளும் சாதிமறுப்புப் பாசாங்குகளும்!: குட்டி ரேவதி

குட்டி ரேவதி 'நான் உயர்சாதி' என்ற அறிவிப்பைப் பார்த்ததுமே நாட்டாமைத்தனத்துடனும், ‘நான் பெரிய முற்போக்காளராக்கும்' என்ற தொனியுடனும் ஓடிவந்து பதிவிடுபவர்கள் எவரிடமும் இதுகாறும் குறைந்தபட்ச சாதிமறுப்பு உணர்வைக்கூடப் பொதுவெளியில் நான் பார்த்தே இராததால் இதை எழுத வேண்டியிருக்கிறது. *நான் வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும், எல்லோரும் நான் பிறந்து வந்த சாதியை அறிவார்கள் என்ற புரிதலுடன்தான் நான் இந்த உலகத்தில் வாழ்கிறேன். ஏனெனில், எல்லா சமூகத்தளங்களிலும், பொதுவெளிகளிலும் அந்த விழிப்புடன் தான் எல்லாமே அணுகப்படுகின்றன என்பது யாரும் அறியாதது அல்ல. … Continue reading சாதிய நகைமுரணும் பெண்ணியப்போலிகளும் சாதிமறுப்புப் பாசாங்குகளும்!: குட்டி ரேவதி

ஒடுக்கப்பட்ட மக்கள் மீது அவதூறு;ஜாதி வெறியைத் தூண்டும் தினமலர்: செங்கொடியை அவமானப்படுத்திய நாளிதழின் அடுத்த டார்கட்!!!

சாதி வன்மத்தைத் தூண்ட தமிழகத்தில் அதிகம் விற்பனையாகும் நாளிதழ்களில் ஒன்றான தினமலரில் "அவசரம் வேண்டாம் பெண்களே!" என்ற தலைப்பில் " விசித்திர சித்தன், சமூக ஆர்வலர்" என்ற பெயரில் வெளிவந்துள்ள கட்டுரை இது. எழுதியவர் உண்மையிலே சமூகத்தின் மேல் ஆர்வம் கொண்டவராக இருந்தால் உண்மையான பெயரைப் போட்டு எழுதியிருக்க வேண்டும். விசித்திர சித்தன் என்ற பெயரில் ஒளிந்துகொண்டு எழுதுவது இப்படி விசித்திரமானதாகத்தான் இருக்கும். எத்தனை வன்மம். வெகுஜென நாளிதழ் என்ற போர்வையில் சாதிய வன்மத்தை, வர்ணாசிரமத்தை நிலைநிறுத்த … Continue reading ஒடுக்கப்பட்ட மக்கள் மீது அவதூறு;ஜாதி வெறியைத் தூண்டும் தினமலர்: செங்கொடியை அவமானப்படுத்திய நாளிதழின் அடுத்த டார்கட்!!!

தன்னைவிட வயது குறைவான ஆணை காதலிப்பது குற்றம்: கலாச்சார காவலர்களான ஊடகங்கள் தரும் உடனடி தண்டனை!

இன்றைய தமிழ் நாளிதழ்கள் அனைத்திலும் தவிர்க்கப்படாமல் வந்திருக்கும் செய்தி “மாணவனுடன் ஓடிய ஆசிரியர் கைது”; “ மாணவனுடன் ஓடிய ஆசிரியை சிக்கினார்” என்று இந்தச் செய்தியில் தொடர்புடைய பெண்ணை மிகக் குறிய மனோபாவத்துடன் எதிர்மறையாக எழுதியிருந்தனர். எந்தவொரு ஊடகமும் இதிலிருந்து தப்பவில்லை. விட்டால், இவர்களே தீர்ப்பு எழுதி, அந்தப் பெண்ணை கல்லால் அடித்துக் கொள்ளுங்கள் என தாலிபான் பாணியில் உடனடி நீதியும் தண்டனையும் அளித்திருப்பார்கள். அந்தப் என்ற பெண், எம். எஸ்ஸி படித்தவர். இவருடைய வயது என்ன என்பதை … Continue reading தன்னைவிட வயது குறைவான ஆணை காதலிப்பது குற்றம்: கலாச்சார காவலர்களான ஊடகங்கள் தரும் உடனடி தண்டனை!

என்னிடம் பெற்ற உதவிகளை மறந்துவிடாதீர்கள்; அவை ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன: ஊடகங்களின் முகத்திரையை கிழிக்கும் விஜய் மல்லையா!

வங்கிகளில் 9 ஆயிரம் கோடி கடன் பெற்று, திருப்பிச் செலுத்தாமல், வெளிநாடு தப்பிச் சென்றதாக விஜய் மல்லையா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மல்லையாவை தப்பிக்க விட்டதாக, பாராளுமன்றத்திலும், மத்திய அரசு மீது கடுமையாக புகார் கூறப்பட்டது.இந்நிலையில் சமூக வலைதளமான டிவிட்டரில், தான் இந்தியாவை விட்டு ஓடி ஒளியவில்லை என்றும் தொழிலதிபர் என்பதால் தான் அடிக்கடி வெளிநாடு செல்வது வழக்கம் என்றும் விஜய் மல்லையா டிவிட் செய்துள்ளார். **** **** அது மட்டுமல்லாமல், பல வருடங்களாக தன்னிடம் பெற்ற … Continue reading என்னிடம் பெற்ற உதவிகளை மறந்துவிடாதீர்கள்; அவை ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன: ஊடகங்களின் முகத்திரையை கிழிக்கும் விஜய் மல்லையா!

விவசாயியை அடித்து இழுத்துச் சென்ற போலீஸ்: போலீஸாருக்கு கட்டளை இட்ட அந்த ‘தனியார்’ வங்கியின் பெயர் கோட்டக் மகிந்திரா பேங்க்!

கடன் தவணை கட்டவில்லை என்று விவசாயியை அடித்து இழுத்துச் சென்ற போலீஸார் என செய்திகள் வெளியிடும் பல ஊடகங்கள், விவசாயி எந்த வங்கியில் கடன் வாங்கினார் என சொல்லவேயில்லை. ‘தனியார் வங்கி’ என்றே அந்த வங்கியை விளித்தனர். போலீஸாருக்கு மட்டும் பங்கு இருப்பதாகக் காட்டி, அந்த  தனியார் வங்கியின் சரிபாதி குற்றத்தை யாரும் கேள்வி கேட்கவில்லை. போலீஸ் தரப்பில் கருத்து கேட்ட ஊடகங்கள்,  அந்த தனியார் வங்கியிடம் கடன் தவணை கட்டத் தவறினால் இப்படித்தான் அராஜகத்தை ஏவி … Continue reading விவசாயியை அடித்து இழுத்துச் சென்ற போலீஸ்: போலீஸாருக்கு கட்டளை இட்ட அந்த ‘தனியார்’ வங்கியின் பெயர் கோட்டக் மகிந்திரா பேங்க்!

ஆனந்த விகடனுக்கு ஏன் ஆத்திரம் வருகிறது? : ஆதவன் தீட்சண்யா

ஆதவன் தீட்சண்யா "கண்ஹையா குமாரும் கம்யூனிசமும் போகும் பாதை சரிதானா? என்கிற தலைப்பிலான கட்டுரை ஒன்றை விகடன்.காம் இன்று வெளியிட்டிருந்தது கட்டுரையாளரின் பெயரில்லை. வழக்கமாக கட்டுரைக்கு கீழே பின்னூட்டங்களைப் பதிவதற்கென விடப்படும் இடமும் இல்லை. "இது பற்றிய கருத்துகளை இன்பாக்ஸில் பதியவும்" என்று புதுவகையான அறிவிப்பு. கட்டுரையின் முதலெழுத்து தொடங்கி முற்றுப்புள்ளிவரை இடதுசாரிகள் மீது வசவும் அவதூறும் மலிந்து கிடந்தன. ஜிகினா வேலை காட்டி அரசதிகாரத்தை கைப்பற்றியுள்ள தங்களால் நாட்டில் அன்றாடம் நிகழ்ந்து வரும் அட்டூழியங்களை இந்த கன்னைய … Continue reading ஆனந்த விகடனுக்கு ஏன் ஆத்திரம் வருகிறது? : ஆதவன் தீட்சண்யா

“மனசாட்சி அறியும், வீடியோவில் தெரியும்”: சீமானின் வரம்பு மீறிய பேச்சை கட்டுப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு பாண்டே விளக்கம்

செவ்வாய்கிழமை தந்தி டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பான ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் ‘விஜயகாந்துக்கு மவுசு- வாக்கு வங்கியா? காலச்சூழலா?’ என்ற தலைப்பில் விவாதம் நடந்தது. இதில் பேராசிரியர் அருணன்(மக்கள் நலக் கூட்டணி), வானதி ஸ்ரீனிவாசன்(பாஜக), சரவணன்(திமுக), சீமான்(நாம் தமிழர் கட்சி) ஆகியோர் கலந்துகொண்டனர். ரங்கராஜ் பாண்டே இந்த நிகழ்ச்சியை நெறியாள்கை செய்தார். நிகழ்ச்சியின் ஒரு கட்டத்தில் சீமான் “ஏய், சும்மா லூசு மாதிரி பேசிக்கிட்டு இருக்காதய்யா” என அநாகரிகமான முறையில் பேரா.அருணனை ஏசினார். இதைப் படியுங்கள்: தந்தி … Continue reading “மனசாட்சி அறியும், வீடியோவில் தெரியும்”: சீமானின் வரம்பு மீறிய பேச்சை கட்டுப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு பாண்டே விளக்கம்

ரொஹித் வெமுலாவை மகனாகப் பார்க்கும் ஸ்மிருதி இரானியின் தாயுள்ளமும் வெமூலாவின் தாயை இழுத்துச் சென்ற காவல்துறையும்

ஹைதரபாத் பல்கலைக் கழகத்தில் பாஜக மாணவர் அமைப்பான ஏபிவிபிக்கு எதிராக மாணவர்களை திரட்டினார்கள் என்பதற்காக பல்கலை விடுதியில் இருந்து துரத்தப்பட்டு, உதவித் தொகை நிறுத்தப்பட்டு பழிவாங்கப்பட்ட ஐந்து தலித் மாணவர்களில் ரோஹித் வெமுலாவும் ஒருவர்.  போராட்டங்களை நடத்திப்பார்த்து துவண்ட அல்லது துவண்ட மனநிலைக்குத் தள்ளப்பட்ட வெமுலா சென்ற மாதம் தற்கொலை செய்துகொண்டார். பல்கலை வளாகத்தின் சாதி ஒடுக்குமுறை வெளிச்சத்துக்கு வந்த நிலையில், மாணவர்களிடையே தன்னிச்சையான போராட்டத்தைக் கிளப்பியது. இந்நிகழ்வின் தொடர்ச்சியாக டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் … Continue reading ரொஹித் வெமுலாவை மகனாகப் பார்க்கும் ஸ்மிருதி இரானியின் தாயுள்ளமும் வெமூலாவின் தாயை இழுத்துச் சென்ற காவல்துறையும்