‘அடேயப்பா…234 தொகுதியிலும் இரட்டை இலையா?’; ஊடகங்கள் கட்டமைக்கும் அம்மா எனும் புனித பிம்பம்

வா. மணிகண்டன் அதிமுகவின் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படுவதற்கு முன்பு வரை ஐவர் அணி காலி செய்யப்பட்டுவிட்டது. சென்னையை விட்டு விரட்டியடிக்கப்பட்ட செந்தில்பாலாஜி காணாமல் போய்விடுவார். ராஜேந்திர பாலாஜி, ராமஜெயம் போன்ற வாட்ஸ்-அப் புகழ் வேட்பாளர்களுக்கு இடமிருக்காது என்றெல்லாம் புளகாங்கிதம் அடைந்து கொண்டிருந்த ஊடகவியலாளர்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன். கடந்த ஐந்தாண்டுகளாக நடைபெற்ற செயல்பாடற்ற ஆட்சியின் அத்தனை கழிசடைத்தனங்களும் எம்.எல்.ஏக்களாலும் மந்திரிகளாலும்தான் செய்யப்பட்டவையே தவிர அம்மா ஒரு அப்பாவி எனவும் அவருக்கும் கடந்த ஐந்தாண்டுகளின் அசமஞ்சத்தனத்துக்கும் சம்பந்தமேயில்லை என்று கட்டமைக்கப்பட்ட … Continue reading ‘அடேயப்பா…234 தொகுதியிலும் இரட்டை இலையா?’; ஊடகங்கள் கட்டமைக்கும் அம்மா எனும் புனித பிம்பம்

ஊழல் மின்சாரம்: முதலாளிகளுக்கு சொந்தமாகும் மின்சாரத்தின் கதை ஆவணப்படமாக!

திருமுருகன் காந்தி  ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் தனியார் நிறுவனத்திலோ, அல்லது அரசின் ஒப்பந்த தொழிலையோ, அரசியல்வாதியாகவோ மாறி மக்கள் விரோத நகர்வுகளை செய்வதை நாம் வழக்கமாக பார்க்கிறோம். இந்நிலையில் ஓய்வு பெற்ற பின்னரும், தங்களது பணியை நிறுத்தாமல் அரசு நிறுவனங்கள் மக்கள் விரோத அரசியலை செய்வதை தடுக்க சில முன்னாள் அரசு பொறியாளர்கள் தொடர்ந்து போராடுகிறார்கள். இவர்களின் உழைப்பும், அர்ப்பணிப்பும் போற்றுதலுக்குரியது. முல்லைப்பெரியாறு அணைக்காக்கும் ஆவணப்படத்தினை முன்னாள் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் செய்தார்கள். இன்றும் தொடர்கிறார்கள். அவர்கள் … Continue reading ஊழல் மின்சாரம்: முதலாளிகளுக்கு சொந்தமாகும் மின்சாரத்தின் கதை ஆவணப்படமாக!

சாதிய படுகொலைகள்: இப்போதைக்கு சிசிடிவிக்களை நிறுத்தி வைப்போம்!

ஜி. கார்ல் மார்க்ஸ் ஒரு இருபத்திரண்டு வயது இளைஞன், தற்போது தான் கல்லூரியை முடித்தவன், அவனுக்கு பத்தொன்பது வயதில் படிப்பை விட்ட ஒரு மனைவி. வேலை கிடைத்தவுடன் உயிருக்கு ஆபத்தான கிராமத்தை விட்டு நகர வேண்டும். இல்லையில்லை.. ஓடிவிட வேண்டும். அதற்குள் எல்லாரும் பார்க்க வெட்டிக் கொல்லப்படுகிறான். அவளும் வெட்டப்படுகிறாள். இந்த கொலையின் கண்ணிகளைத் தொடர்ந்தால் அது எங்கு போகிறது என்பதை நான் யோசித்துக்கொண்டே இருக்கிறேன். முதலில், இந்தக் கொலையை திட்டமிட்டவர்களைத் தாண்டி, நேரடியாகக் களத்தில் செய்பவர்கள் … Continue reading சாதிய படுகொலைகள்: இப்போதைக்கு சிசிடிவிக்களை நிறுத்தி வைப்போம்!

விவசாயியை அடித்து இழுத்துச் சென்ற போலீஸ்: போலீஸாருக்கு கட்டளை இட்ட அந்த ‘தனியார்’ வங்கியின் பெயர் கோட்டக் மகிந்திரா பேங்க்!

கடன் தவணை கட்டவில்லை என்று விவசாயியை அடித்து இழுத்துச் சென்ற போலீஸார் என செய்திகள் வெளியிடும் பல ஊடகங்கள், விவசாயி எந்த வங்கியில் கடன் வாங்கினார் என சொல்லவேயில்லை. ‘தனியார் வங்கி’ என்றே அந்த வங்கியை விளித்தனர். போலீஸாருக்கு மட்டும் பங்கு இருப்பதாகக் காட்டி, அந்த  தனியார் வங்கியின் சரிபாதி குற்றத்தை யாரும் கேள்வி கேட்கவில்லை. போலீஸ் தரப்பில் கருத்து கேட்ட ஊடகங்கள்,  அந்த தனியார் வங்கியிடம் கடன் தவணை கட்டத் தவறினால் இப்படித்தான் அராஜகத்தை ஏவி … Continue reading விவசாயியை அடித்து இழுத்துச் சென்ற போலீஸ்: போலீஸாருக்கு கட்டளை இட்ட அந்த ‘தனியார்’ வங்கியின் பெயர் கோட்டக் மகிந்திரா பேங்க்!

ரொஹித் வெமுலாவை மகனாகப் பார்க்கும் ஸ்மிருதி இரானியின் தாயுள்ளமும் வெமூலாவின் தாயை இழுத்துச் சென்ற காவல்துறையும்

ஹைதரபாத் பல்கலைக் கழகத்தில் பாஜக மாணவர் அமைப்பான ஏபிவிபிக்கு எதிராக மாணவர்களை திரட்டினார்கள் என்பதற்காக பல்கலை விடுதியில் இருந்து துரத்தப்பட்டு, உதவித் தொகை நிறுத்தப்பட்டு பழிவாங்கப்பட்ட ஐந்து தலித் மாணவர்களில் ரோஹித் வெமுலாவும் ஒருவர்.  போராட்டங்களை நடத்திப்பார்த்து துவண்ட அல்லது துவண்ட மனநிலைக்குத் தள்ளப்பட்ட வெமுலா சென்ற மாதம் தற்கொலை செய்துகொண்டார். பல்கலை வளாகத்தின் சாதி ஒடுக்குமுறை வெளிச்சத்துக்கு வந்த நிலையில், மாணவர்களிடையே தன்னிச்சையான போராட்டத்தைக் கிளப்பியது. இந்நிகழ்வின் தொடர்ச்சியாக டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் … Continue reading ரொஹித் வெமுலாவை மகனாகப் பார்க்கும் ஸ்மிருதி இரானியின் தாயுள்ளமும் வெமூலாவின் தாயை இழுத்துச் சென்ற காவல்துறையும்

தி டெலிகிராப்: சாயாத நான்காவது தூண்! இதோ டெலிகிராப் நாளிதழின் சில முகப்பு பக்கங்கள்…

பாஜக தலைமையில் மத்தியில் அமைத்திருக்கும் ஆட்சி இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, இந்தியாவின் மதச்சார்பின்னைக்கு விடப்பட்ட மிகப்பெரும் சவாலாக உள்ளது. இதை நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி 2014-ஆம் ஆண்டு அமைந்த ஒவ்வொரு கணத்திலும் இந்தியர் உணரவே செய்கிறார்கள். ஆனால், வெகுஜென ஊடகங்கள்,  பாஜக அரசை- அவர்கள் முன்னெடுக்கும் மத அரசியலை கண்டும் காணாதது போல் செல்கின்றனர். ஆனால், இந்தியாவில் அதிக விற்பனையாகும் நாளிதழ்களில் ஒன்றான தி டெலிகிராப், துணிவோடு பாஜகவின் முகத்திரையை, அவர்களுடைய பொய்களை கட்டவிழ்க்கிறது. அதற்கு உதாரணங்களாக டெலிகிராப் … Continue reading தி டெலிகிராப்: சாயாத நான்காவது தூண்! இதோ டெலிகிராப் நாளிதழின் சில முகப்பு பக்கங்கள்…

சமூக நீதியை பெண்கள் எழுதினால் தமிழக பத்திரிகைகள் பயந்து அலறுவது ஏன்?

மீனா சோமு பெண்களாகிய நாங்கள் (மீனா சோமு, கீதா இளங்கோவன், தயா மலர்) சமூக நீதிக்கு குரல் கொடுக்கிறோம் என்பதை செய்தியாகவும் தன் ப்ளாகிலும் பகிர்ந்த தோழர் இரா. எட்வின் அவர்களது செய்கை ஆரோக்கியமான மாற்றத்தை விதைக்கும். கட்டுண்டு கிடக்கும் பெண்களுக்கும் ஆணாதிக்க சாதிய சிந்தனைகளால் கட்டப்பட்டு இருக்கும் மக்களுக்கும் விழிப்புணர்வை தரும். தோழர். இரா எட்வின் அவர்களுக்கு நன்றியும் அன்பும். பெண்களுக்கான தளம் என்பது எழுத்திலும் சிந்தனையிலும் செயலிலும் கூட வரையறை செய்யும் சமூகம் இது. … Continue reading சமூக நீதியை பெண்கள் எழுதினால் தமிழக பத்திரிகைகள் பயந்து அலறுவது ஏன்?

#ஊடகங்கள்பேசாபொருள்: சசிகலா மீதான அன்னிய செலாவணி வழக்கிலிருந்து நீதிபதிகள் ஏன் விலகுகிறார்கள்?

கடந்த 1996-ம் ஆண்டு மத்திய அரசின் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சசிகலா, டி.டி.வி.தினகரன், பாஸ்கரன் ஆகியோர் மீது அன்னிய செலாவணி மோசடி வழக்கை பதிவு செய்தனர். ஜெ.ஜெ.டி.விக்கு செயற்கைகோள் இணைப்பு பெற்றபோதும், மேலும் சில பண பரிவர்த்தனையின் போதும் அன்னிய செலாவணி மோசடி நடந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டது. இது தொடர்பான வழக்கில் சென்னை எழும்பூர் 1-வது பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்று சசிகலாவும், டி.டி.வி.தினகரனும் கோர்ட்டில் மனு … Continue reading #ஊடகங்கள்பேசாபொருள்: சசிகலா மீதான அன்னிய செலாவணி வழக்கிலிருந்து நீதிபதிகள் ஏன் விலகுகிறார்கள்?