2024 தேர்தல்: காங்கிரஸ் என்ன செய்ய வேண்டும்? பிரசாந்த் கிஷோர் யோசனை

ஐந்து மாநில தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்த நிலையில், கட்சியை மறு சீரமைப்பு செய்யும் நடவடிக்கையில் அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி ஈடுபட்டுள்ளார். இதன் ஒரு கட்டமாக தேர்தல் நடைபெற்ற 5 மாநிலங்களை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களை ராஜினாமா செய்யுமாறு அவர் அறிவுறுத்தி உள்ளார்.இந்நிலையில், ஐக்கிய ஜனதாதளம், பாஜக, திரினாமுல் காங்கிரஸ், திமுக உள்பட பல்வேறு கட்சிகளின் தேர்தல் வெற்றிகளுக்கு பிரச்சார வியூகம் வகுத்து கொடுத்த பிரசாந்த் கிஷோர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் காங்கிரஸ் எப்படிப்பட்ட … Continue reading 2024 தேர்தல்: காங்கிரஸ் என்ன செய்ய வேண்டும்? பிரசாந்த் கிஷோர் யோசனை

யூரோ நாடுகளின் பணவீக்கம் வரலாறு காணாத வகையில் அதிகரிப்பு!

உக்ரைன் _ ரஷ்ய போர் பதற்றத்துக்கிடையே ஐரோப்பிய யூனியன் நாடுகளின் பங்குச்சந்தைகள் பெரிதாக பாதிக்கப்படவில்லை. எனினும், யூரோ நாடுகளின் பணவீக்கம் வரலாறு காணாத உச்சத்திற்கு உயர்ந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் புள்ளியியல் அலுவலகமான யூரோஸ்டாட் வெளியிட்ட மதிப்பீட்டின்படி, யூரோவைப் பகிர்ந்து கொள்ளும் 19 நாடுகளில் பணவீக்கம் எதிர்பாராத விதமாக ஜனவரி மாதாம் 5.1% லிருந்து பிப்ரவரியில் 5.8% என்ற விகிதத்தில் உயர்ந்துள்ளது. ஜனவரியில் 28.8% ஆக இருந்த ஆற்றல் செலவு விகிதம் 31.7%-ஆக உயர்ந்துள்ளது. உயர்ந்த பிறகு ஆற்றல் … Continue reading யூரோ நாடுகளின் பணவீக்கம் வரலாறு காணாத வகையில் அதிகரிப்பு!

அமெரிக்க கேபிடலில் நடந்த சம்பவம் இந்தியாவில் நடந்தால் என்ன ஆகி இருக்கும்?

ராஜசங்கீதன்- இந்துக்களின் நலன் இல்லாத பாராளுமன்றம் தேவையில்லை என 'இந்து இத்யாதி சேனா' போன்றதொரு அமைப்பின் யாருக்குமே தெரியாத தலைவர் பேசி இருப்பார்.- எங்கோ ஒரு விஷ்வ இந்து பரிஷத நபர் பாராளுமன்ற மினியேச்சரை வெடிக்கச் செய்யும் காணொளி சமூக தளங்களில் பரப்பப்படும்.- அந்த காணொளியை கண்டிப்போரின் முகநூல் கணக்குகளை கம்யூனிட்டி ஸ்டாண்டர்டுக்கு எதிராக இருப்பதாக சொல்லி முடக்குவான் மார்க்.- நைஜீரியா முதலிய நாடுகளின் மக்கள் இந்திய பாராளுமன்றம் இந்துக்களுக்கே என ட்விட்டரில் ட்ரெண்ட் செய்வார்கள்.- ராஜ்யசபா … Continue reading அமெரிக்க கேபிடலில் நடந்த சம்பவம் இந்தியாவில் நடந்தால் என்ன ஆகி இருக்கும்?

பாலஸ்தீனத்திற்கு ஆதரவான பொதுக்கருத்தை இந்தியா உருவாக்கக்கோரி கையெழுத்து இயக்கம்: ஆர். நல்லக்கண்ணு தொடங்கி வைத்தார்!

சர்வதேச அளவில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான பொதுக்கருத்தை இந்தியா உருவாக்கக்கோரி கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார் மூத்த அரசியல் தலைவர் ஆர். நல்லக்கண்ணு. இஸ்ரேல் அரசுடனான இராணுவ தொடர்புகளை கைவிட வேண்டும்; பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக சர்வதேச பொதுக்கருத்தை உருவாக்குவதற்கு இந்திய அரசு முக்கிய பங்காற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர். நல்லக்கண்ணு இணையவழி விண்ணப்பத்தை change. org என்ற இணையத்தில் முதல் கையெழுத்து இட்டு தொடங்கி வைத்தார். அவர் தனது கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது … Continue reading பாலஸ்தீனத்திற்கு ஆதரவான பொதுக்கருத்தை இந்தியா உருவாக்கக்கோரி கையெழுத்து இயக்கம்: ஆர். நல்லக்கண்ணு தொடங்கி வைத்தார்!

வெனிசுலாவின் எதிர்காலம் ..?

வெனிசுலாவில் நிறுவப்பட்ட அரசானது, சோசலிச பொருளாதார கொள்கைக்கு ஆதரவளிக்கிற அரசே தவிர, பாட்டாளிகள் விவசாயிகளின் சர்வாதிகார அரசல்ல என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். முதலாளித்துவ ஜனநாயக வடிவத்திலான வர்க்க சமரச ஆட்சியில் எதிர்கட்சிகளை உழைக்கும் வர்க்கத்தின் நலனுக்காக ஒடுக்குவது சாத்தியமற்றது. உழைக்கும் மக்கள் திரளின் ஆதரவின்றி எதிர்க்கட்சிகளை ஒடுக்குகிற மதுராவின் முடிவு அவருக்கு எதிராக திரும்பவே செய்யும்.

பிகினி உடையின் க‌வ‌ர்ச்சிக்குப் பின்னால் ம‌றைந்திருக்கும் அமெரிக்க‌ ஏகாதிப‌த்திய‌த்தின் கோர‌முக‌ம்!

1946 ம் ஆண்டு, உல‌கின் முத‌லாவ‌து நைட்ர‌ஜ‌ன் குண்டு பிகினித் தீவின் அருகில் தான் ப‌ரிசோதிக்க‌ப் ப‌ட்ட‌து. அணு குண்டை விட‌ ச‌க்தி வாய்ந்த‌ நைட்ர‌ஜ‌ன் குண்டு ப‌ரிசோதிப்ப‌த‌ற்கு முன்ன‌ர், பிகினித் தீவில் இருந்த‌ ம‌க்க‌ள் வெளியேற்ற‌ப் ப‌ட்ட‌ன‌ர். அமெரிக்க‌ இராணுவ‌ம் அவ‌ர்க‌ளுக்கு பொய்யான‌ வாக்குறுதிக‌ள் வ‌ழ‌ங்கி இன்னொரு தீவில் த‌ங்க‌ வைத்த‌து.

இன்று துருக்கி நாளை இந்தியா; முதலாளித்துவ பாராளுமன்ற முறையில் இருந்து சர்வாதிகாரத்திற்கு…

அருண் நெடுஞ்செழியன் துருக்கியில் ஜனாதிபதி பதவிக்கு மிக அதிகமான அதிகாரம் வழங்குகிற சட்டத் திருத்தம் மீதான ஓட்டெடுப்புக்கு சாதகமாக 51% விழுக்காட்டு மக்கள் ஆதரவளித்துள்ளனர். இன்னும் சில தினங்களில் எர்டோகன் ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொள்வார்.அடுத்து பத்தாண்டுகளுக்கு இவர் துருக்கியின் அரசியல் பொருளாதாரத்தை ஏகபோகமாக தீர்மானித்திட,சர்வாதிகார ஆட்சி நடத்திட சட்ட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.துருக்கியின் நீதிபதிகள், ராணுவம்,அரசியல் தேசிய சபை என அனைத்தும் எர்டோகன் ஒருவரால் கட்டுப்படுத்தப்படும். எர்டோகனின் ஆட்சிக்கு எதிராக கலகம் செய்த லட்சக்கணக்கானோர் சிறையில் உள்ளனர். மதமும் … Continue reading இன்று துருக்கி நாளை இந்தியா; முதலாளித்துவ பாராளுமன்ற முறையில் இருந்து சர்வாதிகாரத்திற்கு…

சிரியாவில் அமெரிக்காவின் வீழ்ச்சி: ஏகாதிபத்திய முகாம்களுக்கு இடையிலான உலகப்போரின் தொடக்கமா?

அருண் நெடுஞ்செழியன் மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணெய் வள வேட்டைக்கான அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்ய நாடுகளின் போரானது, சிரியாவின் அலெப்போ வீழ்ச்சியோடு ஒரு சுற்று முடிவுறுகிறது. அமெரிக்கா-இஸ்ரேல்-அமெரிக்க ஆதரவு கிளர்ச்சியாளர்கள்-குர்துகள் ஒரு முகாமாகவும் ஆசாத்தின் சிரியா அரசு-ரஷ்யா-ஈரான் மற்றொரு முகாமாகவும் மேற்கொண்ட சிரியாவின் மீதான பாகப்பிரிவனை யுத்தமானது கடந்த ஐந்து ஆண்டுகளில் லட்சக் கணக்கான உயிர்களை காவு கொண்டு முடிவடைந்துள்ளது. ஏகாதிபத்திய நாடுகளின் வள வேட்டைக்கான இரண்டாம் சுற்றுப் போரானது,கடந்த சில ஆண்டுகளில் நடைபெற்ற பிராக்சி போராக … Continue reading சிரியாவில் அமெரிக்காவின் வீழ்ச்சி: ஏகாதிபத்திய முகாம்களுக்கு இடையிலான உலகப்போரின் தொடக்கமா?

கியூப புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ காலமானார்

கடந்த சில ஆண்டுகளாக உடல் நிலை நலிவு காரணமாக ஓய்வெடுத்து வந்த கியூப புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ (90) காலமானார். இதை கியூப அரசு தொலைக் காட்சி அறிவித்துள்ளது. பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் ஹவானாவில் வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு இறந்ததாக கியூப ஊடகம் தெரிவித்துள்ளது.  பிடலின் இறப்பை அவருடைய சகோதரரும் தற்போதைய அதிபருமான ரவுல் காஸ்ட்ரோ உறுதிப் படுத்தியுள்ளார். மாணவராக இருந்தபோது அரசியல் செயல்பாட்டில் இறங்கிய பிடல், அதிகாரத்திற்கு எதிராக குரல் எழுப்பி மக்கள் மனதில் … Continue reading கியூப புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ காலமானார்

டொனால்ட் டிரம்ப்பும் மோடியும் சமூகத்தில் செல்வாக்குப் பெற்றது எப்படி?

அருண் நெடுஞ்செழியன் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளாராக அறிவித்த நாள்தொட்டு, அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதுவரை, டொனால்ட் டிரம்பின் எழுச்சியானது, பெருவாரியான ஜனநாயக சக்திகளுக்கு குறிப்பாக கம்யூனிஸ்டுகளுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோ நாட்டு ஏதிலிகளால்தான் அமெரிக்காவிற்கு பிரச்சனை,எனவே அவர்களை ஒட்டுமொத்தமாக அமெரிக்காவை விட்டு வெளியேற்றி,மெக்ஸிகோவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் சுவர்கட்டவேண்டும் என்றவர்.மெக்சிகோ நாட்டு ஏதிலிகள் வன்புணர்வாளர்கள் என்றவர்.குடியரசுக் கட்சி வேட்பாளர் என்பதையும் கடந்த வலது அடிப்படைவாதியாக,இன வெறியராக,பெண்களை இழிவாக பேசுகிற,இஸ்லாம் மத விரோதியாக இருந்தவர் ஜனநாயகமுறையில் நடைபெற்ற தேர்தலில் … Continue reading டொனால்ட் டிரம்ப்பும் மோடியும் சமூகத்தில் செல்வாக்குப் பெற்றது எப்படி?

அமெரிக்க அதிபர் தேர்தல்: டொனால்டு ட்ரம்ப் வெற்றி

சர்சைகளுடன் களம் கண்ட 45வது ஐக்கிய அமெரிக்க தேர்தல் களம் முடிவுக்கு வந்துள்ளது. ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்டு ட்ர்ம்ப் தோற்கடித்தார். முஸ்லிம்கள் அமெரிக்கா வருவதை தடை செய்வோம், அகதிகள் வருவதை தடுக்க தடுப்புச் சுவர் எழுப்புவோம் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்களை சொன்னதோடு பெண்களிடன் முறைகேடாக நடந்துகொண்டதாகவும் ட்ரம்ப் மீது குற்றச்சாட்டு தொடர்ந்து வந்துகொண்டேயிருந்தது. இந்நிலையில் முன்னேறிய சமூகமாகச் சொல்லிக்கொள்ளும் அமெரிக்கர்கள் பிற்போக்குத்தனமான கருத்துகளை முன்வைத்த ட்ரம்பை தேர்ந்தெடுத்துள்ளனர்.

அமெரிக்காவின் அடுத்த அதிபர்: ட்ரம்ப் முன்னிலையில்..

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது.  டிரம்ப் - ஹிலாரி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதுவரை வெளியான முடிவுகளில் டொனால்டு டிரம்ப்:  248 இடங்களிலும் ஹிலாரி கிளிண்டன்: 218 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். மொத்த இடங்கள் 538. அறிவிக்கப்பட்டவை 466.  

“உங்களை கைவிட்டதற்காக எங்களை மன்னியுங்கள் மார்க்”: முகநூல் தணிக்கைக்கு காஷ்மீரிகளின் மாறுபட்ட கண்டனம்

காஷ்மீரில் 15 நாட்களுக்கும் மேலாக நடந்துவரும் போராட்டங்களால் இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளனர். பல நூறு பேர் பெல்லட் எனப்படும் குண்டுகளால் பார்வையிழப்பை சந்தித்துள்ளனர். போராட்டங்களில் ஈடுபடுபவர்களை ஒடுக்க பெல்லட் குண்டுகளைப் பயன்படுத்துகிறது இந்திய ராணுவம். இதில் பாதிக்கப்படுவது பெரும்பாலும் குழந்தைகளும் இளைஞர்களுமாகவே உள்ளனர். இந்நிலையில் காஷ்மீர் பிரச்சினையில் இந்திய அரசும் ஊடகங்களும் பிரபலங்களும் பாராமுகமாக இருக்கிறார்கள் என்பதை உணர்த்தும் வகையில் ‘நெவர் ஃபர்கெட் பாகிஸ்தான்’ என்கிற மனித உரிமை குழு தனது முகநூல் பக்கத்தில் உருக்கான … Continue reading “உங்களை கைவிட்டதற்காக எங்களை மன்னியுங்கள் மார்க்”: முகநூல் தணிக்கைக்கு காஷ்மீரிகளின் மாறுபட்ட கண்டனம்

#கபாலி பின்னணி கதை: மலேசியா வாழ் தமிழர்கள் ஏன் கேங்கஸ்டர் ஆனார்கள்?

Jeyannathann Karunanithi சிங்கையில் இருந்த ஒன்றரை வருடங்களும் இங்கு நான் படித்த புத்தகங்களும், கேட்ட கதைகளும் எதற்கு பிரயோஜனமாகும் என்ற கேள்வி என் மனதில் என்றும் இருந்திருக்கிறது. இந்த மண்ணிலிருந்து வெளியாகும் நேரத்தில் வந்தது அதற்கான விடை, மலேசிய வாழ் தமிழர்களில் பெரும்பான்மையானவர்களான தோட்ட கூலித் தொழிலாளர்களின் கதையை பேசும் கபாலியை புரிந்துகொள்ளவேயென்று. காலம் காலமாக ரப்பர் தோட்டங்களில் வேலை செய்த தமிழர்கள் பின் உலகமயமாக்கல், மலிவான செயற்கை ரப்பர் உற்பத்தி தொழிற்நுட்பம், இயற்கை ரப்பரின் விலை … Continue reading #கபாலி பின்னணி கதை: மலேசியா வாழ் தமிழர்கள் ஏன் கேங்கஸ்டர் ஆனார்கள்?

ஆட்சிக் கவிழ்ப்பு சதியின் பின்னணியில் அமெரிக்கா: துருக்கி அதிபர் குற்றச்சாட்டு

ஐரோப்பிய நாடுகளில் ‌ஒன்றான துருக்கியில் ஆட்சியைக் கைப்பற்ற ராணுவம் திடீரென முயற்சி மேற்கொண்டது. 13 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியில் இருந்து வரும் அதிபர் தாயிப் எர்டோகனுக்கு எதிராக ராணுவத்தின் ஒரு பிரிவினர் ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்டனர். மக்களின் ஆதரவின்மையால் ராணுவத்தின் இந்த  முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், துருக்கி அதிபர் இந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியின் பின்னணியில் அமெரிக்கா உள்ளதாக குற்றம்சாட்டியிருக்கிறார். அமெரிக்காவில் வசிக்கும் மதகுரு ஃபெதுல்லா குலனின் தூண்டுதலில் துருக்கி ராணுவத்தில் உள்ள ஒரு பகுதியினர் ஆட்சிக்கவிழ்ப்பில் … Continue reading ஆட்சிக் கவிழ்ப்பு சதியின் பின்னணியில் அமெரிக்கா: துருக்கி அதிபர் குற்றச்சாட்டு

பிரான்ஸ் நீஸ் நகரில் தாக்குதல் நடத்தியவர் இஸ்லாமிய பயங்கரவாதி அல்ல; பொருளாதார பயங்கரவாதி!

பிரான்ஸ் நாட்டின் தேசிய தின கொண்டாட்டத்தின் போது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது. நீஸ் நகரின் ‌கடற்கரையில் திரண்டிருந்த பொதுமக்கள், அந்நாட்டு தேசிய தினத்தைக் கொண்டாடிக்கொண்டிருக்கும்போது, லாரி ஒன்றை அதிவேகமாக ஓட்டியவாறு ஒருவர், திரண்டிருந்த கூட்டத்திற்குள் நுழைந்தார். அந்த நபர், கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்களை துப்பாக்கியால் சுடத்தொடங்கினார். இதில் 80 பேர் உயிரிழந்தனர்;பலர் காயமடைந்தனர். இதையடுத்து, காவல்துறையினர் ‌அந்த நபரை சுட்டுக்கொன்றனர். இதைத்தொடர்ந்து பிரான்சில் பதட்டம் அதிகரித்துள்ளதால் அவசர நிலை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக … Continue reading பிரான்ஸ் நீஸ் நகரில் தாக்குதல் நடத்தியவர் இஸ்லாமிய பயங்கரவாதி அல்ல; பொருளாதார பயங்கரவாதி!

இத்தனை எளிமையான கேமரூன் பனாமா பேப்பர்ஸ் முறைகேட்டில் சிக்கியது எப்படி?

பிரிட்டன் பிரதமராக இருந்த டேவிட் கேமரூன் பதவியை பிரிக்சிட் வாக்கெடுப்புக்குப் பிறகு ராஜினாமா செய்தார்.  அரசு மாளிகையை விட்டு அவருடைய குடும்பம் அண்மையில் வெளியேறியது இதையொட்டி முகப்பில் இருக்கும் படம், உலகம் முழுக்க வைரலானது. இங்கிருப்பவர்கள் கேமரூனின் எளிமையை புகழ்ந்து தள்ளிவிட்டார்கள். சில பதிவுகளைப் பாருங்கள்:   Thadagam Mugund பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் பதவியை ராஜினாமா செஞ்சுட்டு ஆபிச காலி பண்ணும் போது...நம்ப ஊரு வார்ட் மெம்பரிடம் கூட இதெல்லாம் எதிர்பார்க்க முடியுமானு தெரியல. … Continue reading இத்தனை எளிமையான கேமரூன் பனாமா பேப்பர்ஸ் முறைகேட்டில் சிக்கியது எப்படி?

#ஒளிப்படம்: கலைக்காக இந்த நிர்வாண ஊர்வலம்!

நூற்றுக்கணக்கான மக்கள் உடலில் நீல நிறத்தை பூசி இங்கிலாந்தின் ஹல் நகரில் ஒன்று கூடியினர். இது முழுக்க கலைக்காக. ஹல் நகரின் கடலுடனான உறவைக் குறிக்கும் வகையில் நீல நிறத்தைப் பூசி ஒளிப்படங்களுக்காக நின்றனர் இந்த மக்கள். இந்தக் கலை நிகழ்வை  சீ ஆஃப் ஹல் என்ற பெயரில், நியூயார்க் கலைஞர் ஸ்பென்சர் ட்யூனிக் நிகழ்த்தினார்.

‘’ஐரோப்பிய யூனியன் ஒரு தோல்வியடைந்த திட்டம் ‘’

ஐரோப்பிய யூனியனிலிருந்து இங்கிலாந்து பிரிவதாக ஓட்டெடுப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சம கால உலக அரசிலில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக இது கருதப்படுகிறது. உலகமயமாக்கலுக்கு விழுந்த அடியாக இதை பொருளாதார நிபுணர்கள் கணிக்கிறார்கள்.  ஐரோப்பிய யூனியனில் தொடரலாமா? வெளியேறலாமா? என பிரிட்டனில் வாக்கெடுப்பு நடந்தது. வாக்கெடுப்பு முடிவுகளின்படி 52% மக்கள் வெளியேறவும் 48% மக்கள் தொடரவும் வாக்களித்துள்ளனர். இதனால் ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறியது பிரிட்டன். வாக்கெடுப்பு முடிவு குறித்து இங்கிலாந்தின் UKIP தலைவர் நைஜல் ஃபரேஜ், “இது சாமானியர்களின் வெற்றி” என கருத்து … Continue reading ‘’ஐரோப்பிய யூனியன் ஒரு தோல்வியடைந்த திட்டம் ‘’

தனிமனிதனென்னும் அரசியல் விலங்கு: அ. ராமசாமி

அ. ராமசாமி ஒரு நிகழ்வு : பலபார்வை என்பது அறிவுச் சமூகத்தின் பண்பாடு. இன்னொரு விதத்தில் அது பன்னாட்டு மூலதனத்தின் தேவையும் கூட. அமெரிக்காவில் பன்னாட்டு மூலதனக் குழுமங்கள் தான் ஊடகங்களைக் கட்டுப்படுத்துகின்றன. கல்விக்கூடங்களை நடத்துகின்றன. ஆய்வுகளுக்கு நிதி வழங்குகின்றன. 2000 -க்குப் பின்னர் உலகமெங்கும் உருவாகிவரும் அடையாள அரசியல் சொல்லாடல்கள் கூடத் தன்னெழுச்சியாகத்தோன்றுகின்றனவா? பன்னாட்டுக் குழுமங்களின் மறைமுகத்தூண்டுதலால் உருவாக்கப்படுகின்றனவா? என்ற ஐயங்களும் முன்வைக்கப்படுகின்றன. பன்னாட்டுக் குழுமங்களின் அதிகார அமைப்புகளும் வலைப்பின்னல்களும் எப்போதும் அடையாள அரசியலை அனுமதிப்பதுபோலக் … Continue reading தனிமனிதனென்னும் அரசியல் விலங்கு: அ. ராமசாமி

“இரண்டு ஆண்கள் முத்தமிடுவதைப் பார்த்து அவன் எரிச்சலடைந்தான்”: ஒர்லாண்டோ தாக்குதலை நடத்தியவரின் தந்தை

“இரண்டு ஆண்கள் முத்தமிடுவதைப் பார்த்து அவன் எரிச்சலடைந்தான்” என அமெரிக்காவின் ஒர்லாண்டோ நகரில் ஓரினச் சேர்க்கையாளர் விடுதியில் தாக்குதலை நடத்தியவரின் தந்தை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் அவர், தீவிரவாதிகளுடன் எவ்வித தொடர்பும் தன் மகனுக்கு இருந்ததில்லை என்றும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ஒர்லாண்டா நகரில் உள்ள பல்ஸ் என்ற பெயரிலான ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான விடுதியில் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் இறந்தனர். 50க்கு அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதல் நடத்தியவர் அமெரிக்க காவல் துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். … Continue reading “இரண்டு ஆண்கள் முத்தமிடுவதைப் பார்த்து அவன் எரிச்சலடைந்தான்”: ஒர்லாண்டோ தாக்குதலை நடத்தியவரின் தந்தை

ரமலான் நேரத்தில் திண்பண்டங்கள் விற்ற முதியவரை தாக்கிய பாக். போலீஸ்; சமூக ஊடகங்களின் தலையீட்டால் கைதானார்!

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் முதியவர் கோகுல் தாஸ், ரமலான் நேரத்தில் திண்பண்டங்கள் விற்றார் என்பதற்காக, உள்ளூர் போலீஸால் கடுமையாகத் தாக்கப்பட்டார். முதியவர் ரத்தக் காயங்களுடன் இருந்த படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவின. பல பாகிஸ்தான் பிரபலங்கள், முன்னாள் அதிபர் பெனாசிர் புட்டோவின் மகள் பக்தவார் புட்டோ உள்பட பலர் கோகுல்தாஸுக்கு நீதி கிடைக்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் எழுதினார்கள். இந்நிலையில் சிந்து மாகாணத்தின் ஐஜி விரைந்து நடவடிக்கை எடுத்து, முதியவரைத் தாக்கிய குற்றத்துக்காக அந்தக் … Continue reading ரமலான் நேரத்தில் திண்பண்டங்கள் விற்ற முதியவரை தாக்கிய பாக். போலீஸ்; சமூக ஊடகங்களின் தலையீட்டால் கைதானார்!

ஓரினச் சேர்க்கையாளர் விடுதியில் துப்பாக்கிச் சூடு; 20 பேர் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒர்லாண்டா நகரத்தில் ஓரினச் சேர்க்கையாளர் விடுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.  துப்பாக்கிச்சூடு நடத்தியவர் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. “தீவிர’ கருத்துகளில் நம்பிக்கையுடையவரின் நடவடிக்கையாகத்தான் இதைப் பார்க்கிறோம். மேற்கொண்டு விசாரித்து வருகிறோம்” என்று தாக்குதலுக்கான காரணம் குறித்து காவல்துறை தெரிவித்துள்ளது. https://twitter.com/OrlandoPolice/status/741955142774325248 https://twitter.com/OrlandoPolice/status/741931400392249344

”இனி நான் அடிமை இல்லை”: குத்துச்சண்டை வீரர் முகமது அலிக்கு அஞ்சலி!

புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரர் முகமது அலி, 74 வயதில் வெள்ளிக்கிழமை காலமானார். சுவாசப் பிரச்சினையால் அவதியுற்ற அவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். 1960 களிலிருந்து அமெரிக்க மக்களை  மட்டுமல்ல, உலக மக்களின் கவனத்தை ஈர்த்தவர். உலகம் முழுமைக்கும் ரசிகர்களை தன் வயப்படுத்தியவர். கிளாசியஸ் கிளே என்ற இயற் பெயர் கொண்ட முகமது அலி, 1960 ஆம் ஆண்டும் ரோமில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் உலகின் கவனம் பெற்றார். “நான் வீரன் மட்டுமல்ல, … Continue reading ”இனி நான் அடிமை இல்லை”: குத்துச்சண்டை வீரர் முகமது அலிக்கு அஞ்சலி!

“டொனால்டு ட்ரம்பால் மட்டுமே உலகத்தை காப்பாற்ற முடியும்”: டொனால்டு ட்ரம்பின் வெற்றிக்காக யாகம் வளர்த்த இந்து சேனா!

அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் டொனால்டு ட்ரம்பின் வெற்றிக்காக டெல்லியில் யாகம் வளர்த்திருக்கிறது இந்து சேனா. டெல்லி கேரள இல்லத்தில் மாட்டிறைச்சி சமைப்பதாக புரளியைக் கிளப்பி போலீசார் சோதனையிட்டு, அதனால் சர்ச்சைகளை உருவாக்கிய பிறகு கைதான விஷ்ணு குப்தா என்பவரின் இந்து சேனாதான் யாகத்தை வளர்த்திருக்கிறது. https://twitter.com/timesofindia/status/730372832551636995 “இஸ்லாமிய பயங்கரவாதத்தால் உலகமே கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கிறது. இந்தியாவிலும் இந்த நிலைமைதான். டொனால்டு ட்ரம்பால் மட்டுமே இதை மாற்ற முடியும்” என்கிறார் விஷ்ணு குப்தா. https://twitter.com/AisiTaisiDemo/status/730342688441032705 டொனால்டு ட்ரம்ப் மூஸ்லீம்கள் அமெரிக்காவுக்கு வருவதை … Continue reading “டொனால்டு ட்ரம்பால் மட்டுமே உலகத்தை காப்பாற்ற முடியும்”: டொனால்டு ட்ரம்பின் வெற்றிக்காக யாகம் வளர்த்த இந்து சேனா!

இடதுசாரி கட்சியின் சாதிக் கான் லண்டன் மேயராக தேர்வு: இஸ்லாமியர் மேயராவது இதுவே முதல்முறை

லண்டன் மேயருக்கான தேர்தலில் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த சாதிக் கான் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். “நான் பெருமைப் படுகிறேன். பயம் காட்டி பிரித்தாளும் பேச்சுகளுக்கிடையே நம்பிக்கையை லண்டன் மக்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்” என்று தன் வெற்றி அறிவிப்புக்குப் பிறகு சாதிக் கருத்து தெரிவித்தார். சாதிக் கானை எதிர்த்துப் போட்டியிட்ட கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த கோல்டு ஸ்மித், கானை இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு ஆதரவாளராக முன்னிறுத்தி பிரச்சாரம் செய்தார்.  இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தின் போது, சாதிக் கான் தொடர்ந்து இதைப் … Continue reading இடதுசாரி கட்சியின் சாதிக் கான் லண்டன் மேயராக தேர்வு: இஸ்லாமியர் மேயராவது இதுவே முதல்முறை

“போராடுங்கள்.. எனது மக்களே போராடுங்கள்”: கவிதை மொழிபெயர்ப்புக்காக வீட்டுக் காவலில் வைத்த இஸ்ரேல் அரசு

அஷ்ரப் ஷிஹாப்தீன் பலஸ்தீன எழுத்தாளரும் கவிஞருமான தாரீன் தாத்தூர் இஸ்ரேலிய அரசினால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். “போராடுங்கள்.. எனது மக்களே போராடுங்கள்” என்ற அவரது அரபுக் கவிதையின் ஹீப்ரு மொழிபெயர்ப்பே இத்தண்டனைக்கான காரணி. தங்களைக் காத்துக் கொள்ளப் போராடுங்கள் என்ற கருத்திலமைந்த அந்தக் கவிதையை இஸ்ரேலிய அரசுக்கெதிரான தூண்டுதல் என்று கருதி அவர் கடந்த ஒக்டோபர் இறுதியில் நீதிமன்றில் நிறுத்தப்பட்டு 3 மாதங்கள் சிறையில் வைக்கப்பட்டிருந்தார். தற்போது டெல்அவிவ் புறநகர்ப் பகுதியில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். “எமது மக்களைக் … Continue reading “போராடுங்கள்.. எனது மக்களே போராடுங்கள்”: கவிதை மொழிபெயர்ப்புக்காக வீட்டுக் காவலில் வைத்த இஸ்ரேல் அரசு

#உலகசினிமா:The Sapphires போர்க்களத்துக்கு அருகே இசைக்கும் வானம்பாடிகள்!

பால் நிலவன் The Sapphires /2012/Australia/ Dir: Wayne Blair ஆஸ்திரேலியா, 1968. வியட்நாம் போரின்போது ராணுவ வீரர்களுக்கு இசைவிருந்து படைக்க மெல்போர்னிலிருந்து சென்ற மகளிர் இசைக்குழுவினர் பற்றிய படம். ஆஸ்திரேலிய கிராமத்து தொல்குடிப் பெண்கள் நால்வரின் இசையார்வத்தை நன்கு உணர்ந்த தேவ் எனும் வெள்ளையின ராணுவ வீரன் அவர்களை குரல் தேர்வுக்கு கலந்துகொள்ள ஏற்பாடு செய்கிறான். அவர்களில் இளையவளான ஜுலியை விட்டுவிட்டு குரல்தேர்வுககு அவர்கள் மட்டும் நகரத்திற்குச் செல்கிறார்கள். அவள் மிகவும் சின்னப்பெண் என்பதால் உருவான … Continue reading #உலகசினிமா:The Sapphires போர்க்களத்துக்கு அருகே இசைக்கும் வானம்பாடிகள்!

#LahoreBlast இவர்கள் என்ன குற்றம் செய்தார்கள்: குழந்தைகள், பெண்கள் மீது லாகூரில் தற்கொலைப் படைத்தாக்குதல்

பாகிஸ்தானின் லாகூரில் உள்ள குல்சான்-ஐ-இக்பால் பார்க் அருகே நிகழ்த்தப்பட்ட இந்த தாக்குதலில், 56 பேர் இறந்துள்ளனர். இதில் குழந்தைகளும், பெண்களுமே அதிகம் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை மற்றும் ஈஸ்டர் தினம் என்பதால் குடும்பத்துடன் பெண்கள், குழந்தைகள் அதிகம் கூடியிருந்த பூங்காவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. https://twitter.com/ShivAroor/status/714117089854775296 https://twitter.com/aichaansary/status/714116352810704896 https://twitter.com/AbrarUmerzai/status/714101221909508096 https://twitter.com/TheAnonnMessage/status/714127444018642944 https://twitter.com/iEshaalK/status/714124585533378562 https://twitter.com/Benazir_Shah/status/714124289595850752  

தீண்டப்படாத கிறிஸ்தவரின் பாதத்தை இயேசுவின் பெயரால் யார் தீண்டுவார்?

அன்பு செல்வம் உங்களில் தலைவராக இருக்க விரும்புகிறவர் முதலில் எப்படி ஒரு தொண்டராக இருக்க வேண்டும் என்பதற்காகவும், யூத கலாச்சாரத்தின் பஸ்கா விருந்து அடையாளத்துக்காகவும் இயேசு தனது இயக்கத் தோழர்களுக்கு செய்து காண்பிக்கும் ஒரு வேலைத்திட்ட‌ நிகழ்வு தான் இந்த "பாதம் கழுவுதல் - Foot Washing Ceremony". இதனை "நான் செய்தது போல நீங்களும் செய்யுங்கள்" (John. 13 : 14) என்று மாபெரும் கட்டளையாகவும் கூறுவார். தனது தோழர்களுக்கு அவர் விதித்த ஒரே கட்டளையும் … Continue reading தீண்டப்படாத கிறிஸ்தவரின் பாதத்தை இயேசுவின் பெயரால் யார் தீண்டுவார்?

தமிழர்களின் தேசிய உணவான தயிர் சாதமும் ’தமிழச்சி’ பத்மா லக்ஷ்மியும்!

பத்மா லக்ஷ்மி சமையல்கலை நிபுணர், மாடல். எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் முன்னாள் காதலியாக உலகப் புகழ்பெற்றவர். சமீபத்தில் இவர் அமெரிக்காவில் பிரபலமான Ellen Degeneres’ show என்ற தொலைக்காட்சி  நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் பத்மா லக்ஷ்மி பிராமணர்களின் ரெசிபியான தயிர்சாதத்தை சமைத்தார். சென்னையில் தமிழ் பிராமண குடும்பத்தில் பிறந்த பத்மா, நான்கு வயதில் தன் தாயுடன் அமெரிக்காவில் குடியேறினார். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பத்மாவின் தயிர் சாத ரெசிபியை ரசித்த வெளிநாடு வாழ் இந்தியர்கள், அதைப் பற்றி சமூக வலைத்தளங்களில் … Continue reading தமிழர்களின் தேசிய உணவான தயிர் சாதமும் ’தமிழச்சி’ பத்மா லக்ஷ்மியும்!

ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் இடம் பெற்ற திருநங்கை, ஆஸ்கர் விழாவை புறக்கணிக்கிறார்: ஏன்?

Anohni, பிரிட்டனைச் சேர்ந்த திருநங்கை. பாடகர், பாடலாசிரியர். உலக வெப்பமயமாதல் தொடர்பான Racing Extinction ஆவணப்படத்தில் இவர் இயற்றிய “Manta Ray” பாடல் ஆஸ்கர் விருது பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது. ஆஸ்கர் விருது பட்டியலில் இடம் பெற்ற பாடல்களை தொடர்புடையவர்கள் மேடையில் பாடுவது வழக்கம். இதன் அடிப்படையில் இந்த வருடம் நோஹ்னி உடன் விருது பட்டியலில் இடம் பெற்றுள்ள  லேடி காகா, சாம் ஸ்மித் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் ஆஸ்கர் விருது விழாவில் பாடுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. … Continue reading ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் இடம் பெற்ற திருநங்கை, ஆஸ்கர் விழாவை புறக்கணிக்கிறார்: ஏன்?

சியாச்சினில் ஒவ்வொரு மாதமும் 2 இராணுவ வீரர்கள் மரணமடைகிறார்கள்; எதிரியால் அல்ல; பனியால்!

இமயமலைத் தொடரில் இருக்கும் சியாச்சின் பனிமலைச் சிகரம், உலகின் மிக உயர்ந்த இடத்தில் இருக்கும் போர்முனை என்று வர்ணிக்கப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து 22 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கிறது இந்தப் பனிச்சிகரம். மைனஸ் 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் காவல் காக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள் இந்திய வீரர்கள். சியாச்சின் பனிப்புயலில் சிக்கி இந்த மாதம் 10 வீரர்கள் பலியாயினர். இந்தியாவின் ஒட்டுமொத்த கவனம் பெற்றிருக்கிறது இந்த மரணங்கள். ஆனால், இராணுவத்தைப் பொறுத்தவரை இது இயல்பாக நடக்கும் விஷயம் … Continue reading சியாச்சினில் ஒவ்வொரு மாதமும் 2 இராணுவ வீரர்கள் மரணமடைகிறார்கள்; எதிரியால் அல்ல; பனியால்!

உலகில் அடிப்படைவாதம் மிகுந்த நாடுகளில் அமெரிக்காவுக்கு முதலிடம்: நோம் சாம்ஸ்கி

"அமெரிக்கா, அடிப்படைவாதம் மிகுந்த நாடு. மதவாதம் மலிந்த நாடு. உலக நாடுகளில் அமெரிக்காவில்தான் மேற்கூரிய தன்மைகள் மிதமிஞ்சிய அளவில் இருக்கின்றன" என்கிறார் நோம் சாம்ஸ்கி. சமகாலத்தில் அமெரிக்காவின் ஆகச்சிறந்த அரசியல் விமர்சகராக போற்றப்படுபவர். தி ஒயர் ஆன்லைன் தளத்துக்கு அவர் அளித்த பேட்டியில்தான் இவ்வாறான விவாதக்கருவாகக் கூடிய விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அவர் பேட்டியின் முழுவடிவம்: தமிழில்: மது பாரதி "அமெரிக்கா, அடிப்படைவாதம் மிகுந்த நாடு. மதவாதம் மலிந்த நாடு. உலக நாடுகளில் அமெரிக்காவில்தான் மேற்கூரிய தன்மைகள் மிதமிஞ்சிய அளவில் இருக்கின்றன. அமெரிக்கா உருவான நாள் முதலே … Continue reading உலகில் அடிப்படைவாதம் மிகுந்த நாடுகளில் அமெரிக்காவுக்கு முதலிடம்: நோம் சாம்ஸ்கி

இஸ்லாமிய அடிப்படைவாதம் ஆக்கிரமிக்கும் முன் ஈரானிய பெண்கள்!

1979-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை பெண்களுக்கான முன்னேற்றத்துக்கு வாய்ப்புக் கொடுக்கும் தேசமாக இருந்த ஈரான், இஸ்மாயிய அடிப்படைவாதத்தால் பின்னோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது என்கிறார் ஈரானைச் சேர்ந்த பத்தி எழுத்தாளர் ரீடா. இஸ்லாமிய ஆட்சி அமைந்தபிறகு, சிறுமிகள்கூட ஹிஜப் அணிந்துகொள்ள வற்புறுத்தப்பட்டனர் என்கிறார். https://twitter.com/RitaPanahi/status/694024501399453696 https://twitter.com/RitaPanahi/status/694025507361280000 https://twitter.com/RitaPanahi/status/693934478884909056 ஹிஜப் அணிய வற்புறுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 1979-ஆம் ஆண்டில் பெண்கள் நடத்திய பேரணி https://twitter.com/RitaPanahi/status/693933421836390400

உலகமே தேடிய “பாலிதீன் கவர்” மெஸ்சி:ஐந்து வயது கால்பந்து ரசிகனின் விருப்பம் நிறைவேறுமா?…

கால்பந்து சூப்பர் ஸ்டார் மெஸ்சியின் பத்தாம் நம்பர் ஜெர்சியை,  அணிந்த குழந்தை ஒன்றின் புகைப்படம் சில நாட்களுக்கு முன் டிவிட்டரில் வெளியானது. அது ஜெர்சி அல்ல. வெள்ளை நிறத்தில் நீல வண்ண கோடுகள் இருந்த பிளாஸ்டிக் பை என்றும், அதில் கருப்பு மை கொண்டு MESSI 10 என்று எழுதபட்டிருப்பதும் தெரிந்தபோது, அந்த புகைப்படத்தை உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் உணர்ச்சிவசப்பட்டு பகிர தொடங்கினர். மெஸ்சியின் கவனத்திற்கும் இந்த புகைப்படம் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவரது டீமும் … Continue reading உலகமே தேடிய “பாலிதீன் கவர்” மெஸ்சி:ஐந்து வயது கால்பந்து ரசிகனின் விருப்பம் நிறைவேறுமா?…

தென் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவிவரும் Zika வைரஸ்: இந்த வைரஸ் எப்படி பரவுகிறது? தடுப்பு முறை என்ன?

சிக்கன் குனியா, டெங்கு போல கொசுக்கள் மூலம் பரவும் மனிதர்களுக்கு பரவும் வைரஸ் Zika. https://twitter.com/WHO/status/690557013756100609 Zika வைரஸ் பாதிப்பின் அறிகுறி என்ன? லேசான காய்ச்சல், தோலில் அரிப்பு, குமட்டல், தசை வலி, சோர்பு போன்ற அறிகுறிகள். https://twitter.com/WHO/status/690564125366292484 கர்ப்பிணி பெண்களும் கர்ப்பம் தரிக்கும் திட்டத்தில் உள்ள பெண்களும் கொசுக்கடியிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும். https://twitter.com/WHO/status/690572100877324289 தென் அமெரிக்கா நாடுகளில் இந்நோய் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. தற்போது ஐரோப்பிய நாடுகளிலும் இந்நோய் தாக்குதல் கண்டறியப்பட்டுள்ளது. https://twitter.com/WHO/status/690572357530951681 இந்நோய் பாதிப்புக்கு இதுவரை தடுப்பு … Continue reading தென் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவிவரும் Zika வைரஸ்: இந்த வைரஸ் எப்படி பரவுகிறது? தடுப்பு முறை என்ன?

ஹாலிவுட் நாயகனாகிறார் தனுஷ்!

The Extraordinary Journey Of The Fakir Who Got Trapped In An Ikea Cupboard” என்ற படத்தில் தனுஷ் ஹாலிவுட் உலகிற்கு அறிமுகமாக உள்ளார். தனது முதல் படத்திலே பிரபல ஹாலிவுட் நடிகை உமா த்ருமன் மற்றும் அலெக்ஸாண்டிரா டட்டரியோவுடன் நடிக்கிறார், தனுஷ். ஒரு ரகசிய திட்டத்துக்காக தன் தாயாரால் இந்தியாவில் இருந்து பாரீஸுக்கு அனுப்பப்படும் மாயாஜாலக்காரராக நடிக்கிறார் தனுஷ். வேடிக்கையான, நகைச்சுவையான, கருணை உள்ளம் மிகுந்த மாயாஜாலக்காரன் வேடத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக ஆங்கில நாளிதழிற்கு … Continue reading ஹாலிவுட் நாயகனாகிறார் தனுஷ்!

#அதிர்ச்சி ஆதாரம் வெளியானது: அம்மாக்கள் முன்பே சிறுவர்களை பாலியல் பலாத்காரம் செய்த அமெரிக்க படையினர்

ஈராக் போரின் போது, அமெரிக்கப் படையினர், பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக பல செய்திகள், புத்தகங்கள் ஆதாரங்களோடு வெளியாகியுள்ளன. இந்நிலையில் ஈராக்கில் அபு காரிப் என்ற இடத்தில் அமெரிக்க சித்தரவதைக் கூடத்தில் சிறுவர்களை பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கியதாக ஆதாரத்துடன் செய்தி வெளியாகியுள்ளது. இப்படி சிறுவர்கள் பலாத்காரம் செய்யப்படுவது, அவர்களுடைய அம்மாக்கள் முன்பே நடந்ததாகவும் இதை அமெரிக்க படையில்  இருந்த பெண்களே படம் பிடித்து ரசித்ததாகவும் கவுண்டர்கரண்ட்ஸ் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. இப்படி படம் பிடிக்க விடியோ ஒன்று … Continue reading #அதிர்ச்சி ஆதாரம் வெளியானது: அம்மாக்கள் முன்பே சிறுவர்களை பாலியல் பலாத்காரம் செய்த அமெரிக்க படையினர்

’குட்டி ஆயிலான் வளர்ந்திருந்தால் என்னவாகியிருப்பான்? ஜெர்மனியில் பொறுக்கியாகி இருப்பான்!’ கருத்து சுதந்திரத்துக்காக போராடும் Charlie Hebdoவின் வக்கிர இனவாதம்!

சிரியாவிலிருந்து புகலிடம் தேடி கடல் வழியாகப் பயணப்பட்ட அயிலான் என்ற சிறுவன், கடலில் மூழ்கி உயிரிழந்தான். சிரிய அகதிகள் பிரச்சினையில் மேற்குலகின் கரிசனத்தைக் கோரியது அயிலானின் மரணம். ஆனால், அகதிகள் பிரச்சினையில் மேற்குலகின் கண்ணோட்டம் மட்டும் மாறவேயில்லை. சார்லி ஹெபடோ என்ற பிரெஞ்சு கார்ட்டூன் இதழ், தொடர்ந்து இஸ்லாமியர்கள் மீதான பயத்தை, வன்மத்தை பரப்புவதில் இனவாதப் போக்குடன் கார்ட்டூன்களை வெளியிட்டு வருகிறது. இந்தப் பத்திரிகையின் மீது கடந்த ஆண்டு, இஸ்லாமிய வன்முறையாளர் தாக்குதல் நடத்தி பல பத்திரிகையாளர்கள் … Continue reading ’குட்டி ஆயிலான் வளர்ந்திருந்தால் என்னவாகியிருப்பான்? ஜெர்மனியில் பொறுக்கியாகி இருப்பான்!’ கருத்து சுதந்திரத்துக்காக போராடும் Charlie Hebdoவின் வக்கிர இனவாதம்!