Saving Private Ryan: போர் குறித்த மனித மனதின் படிமங்களையும் நிஜங்களையும் ஒரு புள்ளியில் இணைக்கும் கலைப்படைப்பு!

அறிவழகன் கைவல்யம் கடந்த வாரத்தில் இரண்டு பழைய திரைப்படங்களைப் பார்த்தேன், ஒன்று "Mulholland Drive", இன்னொன்று "Saving Private Ryan". இரண்டுமே மிக நீண்ட காலமாகப் பார்க்க வேண்டும் என்று பட்டியலில் இட்டிருந்த படங்கள், பல்வேறு திரைப்படங்கள் சார்ந்த நூல்களில் இந்த இரண்டு படங்களைப் பற்றிய குறிப்புகள் இருந்தது, பல்வேறு இணையதளங்களிலும் சிறந்த பத்துப் படங்களின் பட்டியலில் இந்த இரண்டு படங்களும் இருந்தன. ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கின் "Saving Private Ryan" குறித்து அவ்வப்போது நினைவு கொள்வேன், ஆனால், … Continue reading Saving Private Ryan: போர் குறித்த மனித மனதின் படிமங்களையும் நிஜங்களையும் ஒரு புள்ளியில் இணைக்கும் கலைப்படைப்பு!

ழாக் தாத்தி என்ற பெயரில் ஒரு சினிமாக் கலைஞன்

ஆர்.ஆர்.சீனிவாசன் ஆழ்ந்த தனிமையிலிருந்தும், வாழ்க்கை அபாயத்திற்குள்ளாக்கும் முயற்சியிலிருந்தும் நகைச்சுவை பிறக்கிறது. கலைப்படைப்பை போல. நகைச்சுவையை மாபெரும் கலைப்படைப்பாக்கி இவ்வுலகத்தை வசீகரம் செய்தவர்களில் முதன்மையானவர் சாப்ளின். ஃபிரெஞ்சு நாட்டைச் சார்ந்த ழாக் தாத்தி (Jacques Tati) தனது விபரீதமான விளையாட்டிகளின் மூலம் உலக சினிமாவின் போக்கை கொஞ்சம் தடுமாற வைத்தான். நகைச்சுவை நடிகன், நகைச்சுவை சினிமா என்றும்இவனது உலகத்தை 'குழந்தைகள் சினிமா' என்றும் அழைப்பது இவனது படைப்புகளைக் சுருக்குவதும் அதே வேளையில் அற்புதமான விஷயமாகவும் இருக்கிறது. 'குழந்தைகள் சினிமா' … Continue reading ழாக் தாத்தி என்ற பெயரில் ஒரு சினிமாக் கலைஞன்

“எங்களுக்குப் பின்னும் தமிழ் சினிமாவில் முள்ளும் மலரும் தொடரும்”: பாலுமகேந்திரா

பூனே திரைப்பட கல்லூரியின் ஒளிப்பதிவு துறையில் என் மூன்று வருட படிப்பை 1969-ல் முடித்துக் கொள்கிறேன். எவரிடமும் உதவி ஒளிப்பதிவாளராக வேலை பார்க்காமலே 1971-ல் ஒளிப்பதிவாளராக பணியாற்றத் துவங்குகிறேன். பணியாற்றிய முதல் படம் “நெல்லு” இது மலையாளப்படம். இதன் இயக்குனர் ராமு கரியத். முதல் படத்திலேயே கேரள அரசின் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது எனக்குக் கிடைக்கிறது. 71 -முதல் 75 வரை ஐந்து வருடங்கள் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றுகிறேன். பெரும்பாலானவை மலையாளப் படங்கள். இந்த ஐந்து வருடங்ளுக்குள் மூன்று … Continue reading “எங்களுக்குப் பின்னும் தமிழ் சினிமாவில் முள்ளும் மலரும் தொடரும்”: பாலுமகேந்திரா

தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளில் தயாராகிறது ‘சய்ரத்’!

மராத்தியில் வெளியாகி வசூலைக் குவித்த சாதி ஆணவக் கொலை தொடர்பான படமான ‘சய்ரத்’ தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு தென்னிந்திய மொழிகளில் வெளியாகிறது. நாக்ராஜ் மஞ்சுளே இயக்கிய இந்தப் படம் ரூ. 100 கோடியை ஈட்டியுள்ளது. இந்தப் படத்தின் மொழியாக்க உரிமையை வாங்கியிருக்கிறார் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ். நடிகர்கள் தேர்வு விரைவில் தொடங்க இருப்பதாகவும் ஆகஸ்டு மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

#புத்தகம்2016: புத்தகச் சந்தையில் சினிமா தொடர்பான புதிய நூல்கள்!

1. ரசிகை பார்வை பா. ஜீவசுந்தரி கயல் கவின் வெளியீடு தமிழ் சினிமா: காண்பதுவும் காட்டப்படுவதும் அ. ராமசாமி உயிர்மை பதிப்பகம்   3. பேசுவதை நிறுத்திக்கொண்ட சிறுவன் யமுனா ராஜேந்திரன் பிரக்ஞை வெளியீடு 4. போர்த்திரை விஜய் ஆம்ஸ்ட்ராங்க் டிஸ்கவரி புக் பேலஸ் எதிரிணைகளின் சினிமா ஆர். பிரேம்குமார் கீற்று இளையராஜா: இசையின் தத்துவமும் அழகியலும் பிரேம் ரமேஷ் டிஸ்கவரி புக் பேலஸ் திரையின்றி அமையாது உலகு: தமிழ் சினிமாவின் சாதிய முகம் குமரன் தாஸ் கருப்புப் பிரதிகள் பிம்பச் … Continue reading #புத்தகம்2016: புத்தகச் சந்தையில் சினிமா தொடர்பான புதிய நூல்கள்!

இனப்படுகொலை நாளான மே 17 குறித்து படத்தில் காட்சியமைத்ததுதான் கார்த்திக் சுப்புராஜ் மீதான தடைக்குக் காரணமா?

‘இறைவி’ படத்தில் தயாரிப்பாளர்களை ‘மோசமாக’ சித்தரித்ததாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மீது படங்களை இயக்க தடை விதித்துள்ளது தயாரிப்பாளர் சங்கம். இயக்குநர்களின் கருத்து சுதந்திரம் பாதிக்கப்படுவதாக பலரும் கார்த்திக் சுப்புராஜுக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், வேறு காரணங்களையும் சமூக வலைத்தளங்களில் மக்கள் அலசி வருகிறார்கள். Panneer Perumal தமிழக சினிமாவில் ஈழப்படுகொலைகளை நினைவு படுத்தும் குறியீடுகளுடான சினமாக்கள் வருவது மிக மிக அறிது. அப்படிபட்ட சூழலில் தான் இறைவி படம் வந்துள்ளது. மே பதினேழு என்றதுமே … Continue reading இனப்படுகொலை நாளான மே 17 குறித்து படத்தில் காட்சியமைத்ததுதான் கார்த்திக் சுப்புராஜ் மீதான தடைக்குக் காரணமா?

#இறைவி: இது பெண்ணிய படமில்லாமல் வேறு எது பெண்ணிய படம்: விஜய் பாஸ்கர்விஜய்

விஜய்பாஸ்கர் விஜய் இறைவியில் இதை கவனித்தீர்களா ? -1 அதில் ஒரு தயாரிப்பாளர் டைரக்டரை மன்னிப்பு கேட்கச் சொல்வார். டைரக்டர் மன்னிப்புக் கேட்டதும் காலை நீட்டி கேட்கச் சொல்வார். பின்னர் வருந்தி விளக்கம் கொடுக்கும் போது “சார் அவன் மன்னிப்பு கேட்டா போதும்ன்னுதான் நினைச்சேன். ஆனா அவன பாத்த உடனே சர்ருன்னு ஏறிகிச்சி காலைத் தொட்டு மன்னிப்பு கேட்கச் சொன்னேன்” என்பார். பாபியை சேதுபதி மன்னித்து பிரச்சனையில்லாமல்தான் செல்ல நினைக்கிறார் ஆனால் திடீரென்று அவருக்கு சர்ருன்னு ஏறிக்கொள்ள … Continue reading #இறைவி: இது பெண்ணிய படமில்லாமல் வேறு எது பெண்ணிய படம்: விஜய் பாஸ்கர்விஜய்

“மலக்கிடங்கு பேனா புடிச்சு எழுதுனா சந்தனமாவா இருக்கும்?” சாருவின் இறைவி பட விமர்சனத்துக்கு யமுனா ராஜேந்திரனின் எதிர்வினை

எழுத்தாளர் சாரு நிவேதா இறைவி படம் குறித்து “கையைக் காலைக் கட்டி மலக்கிடங்கில் போட்டது போல் இருந்தது” என எழுதியிருந்தார். இந்தப் பதிவுக்கு எழுத்தாளர் யமுனா ராஜேந்திரன் தனது முகநூலில் அளித்திருக்கும் எதிர்வினை, “தமிழ்ல்ல எந்தக் கொறஞ்ச இன்டக்ரிடியும் இல்லாத ஒரு ஒளருவாயர் சாரு நிவேதிதா. அம்பானி குடும்பத்த அரிச்சந்திர நாடகம் லெவலுக்குச் சொன்ன மணிரத்னத்தினுடைய குரு படத்துக்கு இல்லாத இன்டர்பிரடேசன் எல்லாம் குடுப்பாரு. மிஷ்கின் நண்பரா இருக்கிறவரை அவரு படம் காவியம். முரண்பட்டா மொதல்ல எழுதுனதெல்லாம் வாபஸ். என்னய்யா இது … Continue reading “மலக்கிடங்கு பேனா புடிச்சு எழுதுனா சந்தனமாவா இருக்கும்?” சாருவின் இறைவி பட விமர்சனத்துக்கு யமுனா ராஜேந்திரனின் எதிர்வினை

#‎இறைவி‬ ஆண் எழுதி, ஆண் இயக்கி, ஆண்கள் நடித்து, ஆண்கள் பார்வையில் பெண்களைப் பற்றி ஒரு ‘புதிய’ படைப்பு…!

Vinitha P M Swamy #‎இறைவி‬ ஆண் எழுதி, ஆண் இயக்கி, ஆண்கள் நடித்து, ஆண்கள் பார்வையில் பெண்களைப் பற்றி ஒரு 'புதிய' படைப்பு... இதில் என்ன புதுமை?! ஏவாள் காலம் தொட்டு இது தானே நடக்கின்றது? சரி, இந்தப் படைப்பு சொல்ல வரும் கருத்து தான் என்ன? பெண்கள், அவர்களின் வாழ்க்கையை, தீர்மானங்களை, அதற்கான போராட்டத்தைக் கையிலெடுக்க வேண்டும்... நன்று! ஆனால் அந்த களத்திற்கான நீளம், அகலம், ஆழம், எல்லாம் ஆண்களே வரையறுத்தால் எப்படி? "எங்கள் … Continue reading #‎இறைவி‬ ஆண் எழுதி, ஆண் இயக்கி, ஆண்கள் நடித்து, ஆண்கள் பார்வையில் பெண்களைப் பற்றி ஒரு ‘புதிய’ படைப்பு…!

இறைவிக்குள்ளே இறைவனைப் பார்க்கிறேன்: ச.விசயலட்சுமி

  ச.விசயலட்சுமி இறைவி படம் குறித்து பரபரப்பாக பேசப்பட்டது.தலைப்புக்குள்ளே என்ன சொல்ல வருகிறார்கள் என கவனித்தபோது இது பெண்களுக்கான படம் என அழுத்தி உச்சரிக்கப்பட்டது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பீட்ஸா பார்க்கவில்லை. ஜிகர்தண்டா பார்த்திருந்தேன். பெண்களுக்காக மட்டுமே பேசிவிடும் படம் என்றால் கமர்ஷியலாக படம் ஹிட் அடிக்குமா?அதற்கான வரவேற்பு மனநிலை உண்மையில் இருக்கிறதா? இத்தனை ஊடகங்களும் காமிராக்களும் விழித்துக் கொண்டிருக்கும் காலத்தில் பட்டப்பகலில் கௌரவக் கொலைகள் எனப்படும் ஆணவக் கொலைகள் நடக்கிற சமூக அரசியல் சூழலில் இதெல்லாம் … Continue reading இறைவிக்குள்ளே இறைவனைப் பார்க்கிறேன்: ச.விசயலட்சுமி

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் – ஓநாய்களிடம் மாட்டிக்கொண்ட ஆட்டுக்குட்டி: தமிழ் ஸ்டுடியோ அருண்

அருண் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என்கிற புத்தகம் பற்றி ஓராண்டுகளாக தொடர்ந்து எழுதி வருகிறேன். அந்த புத்தகம் வெறுமனே திரைக்கதை வசனம் அடங்கிய ஒன்று என்கிற கூற்றை ஒட்டியே இன்றுவரை விவாதம் நடந்து வருகிறது. ஒரு இயக்குனர் ஒவ்வொரு ஷாட்டுக்கும் அதன் தொழில் நுட்பக்காரணம், அதன் தேவை, என முழுக்க முழுக்க தொழில்நுட்பம் சார்ந்தும், திரைக்கதையின் அமைப்புக் குறித்தும் வாசகர்களுக்கு விளக்கும் மிக முக்கியமான நூல். தமிழ் சினிமா வரலாற்றில் இதுதான் முதல்முயற்சி. உலக அளவில் புகழ்பெற்ற சினிமா … Continue reading ஓநாயும் ஆட்டுக்குட்டியும் – ஓநாய்களிடம் மாட்டிக்கொண்ட ஆட்டுக்குட்டி: தமிழ் ஸ்டுடியோ அருண்

நாக்ராஜ் மஞ்சுளேவின் ‘சய்ரத்’ சென்னையில் திரையிடப்படுகிறது!

இயக்குநர் நாகராஜ் மஞ்சுளேவின் வெற்றிப்படமான ‘சய்ரத்’ சென்னையில் உள்ள பிவிஆர் சினிமாஸில் திரையிடப்படுகிறது. ஜுன் 11-ஆம் தேதி காலை 8.30 மணிக்கு  திரையிடப்படுகிறது. “சென்னையில் Sairat படம் திரையிடுவதற்கான வாய்ப்புகள் ஏதும் உள்ளனவா என்று கேட்ட நண்பர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவும். இந்திய சினிமாவின் போக்கை மிகவும் தீவிரமான பாதைக்கும் அதே சமயம் வெற்றிகரமான பாதைக்கும் அழைத்துச் சென்றிருக்கிறார் நாகராஜ் மஞ்சுளே. திரைத்துறையில் இயங்குபவர்கள், களத்தில் பணியாற்றுபவர்கள், சினிமாவை வெறுப்பவர்கள் என எல்லோரும் பார்க்கவேண்டிய படம்” … Continue reading நாக்ராஜ் மஞ்சுளேவின் ‘சய்ரத்’ சென்னையில் திரையிடப்படுகிறது!

ஆஸ் – ‘Oass – The Dew Drop’ : பனித்துளிகளின் பெருவலிகள்!

கீட்சவன் நம்பிக்கை, விடாமுயற்சி, மன உறுதி... உச்சா போவது தொடங்கி உச்சம் தொடுவது வரை எல்லாவற்றுக்குமே மிகச் சாதாரணமாக பயன்படுத்தப்படுவதால் இந்தச் சொற்கள் மூன்றுமே தமது வீரியத்தை வெகுவாக இழந்துவிட்டன. இருப்பினும், 2012-ல் வெளிவந்த 'ஆஸ்' எனும் இந்தி படத்தின் 11 வயது ப்ரொட்டாகனிஸ்ட் சிறுமி கிகு பற்றி குறிப்பிடும்போது இந்த மூன்று சொற்களுமே தனக்கே உரிய கம்பீரத்தைப் பெற்றுவிடும். ஆள்கடத்தலில் அதிகம் குறிவைக்கப்படும் சிறுமிகள், அவர்களை பாலியல் தொழிலில் சிக்கவைத்து சீரழிக்கும் அவலங்கள் எனும் பெருங்கடலின் … Continue reading ஆஸ் – ‘Oass – The Dew Drop’ : பனித்துளிகளின் பெருவலிகள்!

#உலகசினிமா:The Sapphires போர்க்களத்துக்கு அருகே இசைக்கும் வானம்பாடிகள்!

பால் நிலவன் The Sapphires /2012/Australia/ Dir: Wayne Blair ஆஸ்திரேலியா, 1968. வியட்நாம் போரின்போது ராணுவ வீரர்களுக்கு இசைவிருந்து படைக்க மெல்போர்னிலிருந்து சென்ற மகளிர் இசைக்குழுவினர் பற்றிய படம். ஆஸ்திரேலிய கிராமத்து தொல்குடிப் பெண்கள் நால்வரின் இசையார்வத்தை நன்கு உணர்ந்த தேவ் எனும் வெள்ளையின ராணுவ வீரன் அவர்களை குரல் தேர்வுக்கு கலந்துகொள்ள ஏற்பாடு செய்கிறான். அவர்களில் இளையவளான ஜுலியை விட்டுவிட்டு குரல்தேர்வுககு அவர்கள் மட்டும் நகரத்திற்குச் செல்கிறார்கள். அவள் மிகவும் சின்னப்பெண் என்பதால் உருவான … Continue reading #உலகசினிமா:The Sapphires போர்க்களத்துக்கு அருகே இசைக்கும் வானம்பாடிகள்!