இலக்கிய மாமணி விருது, கனவு இல்லம், கலைஞர் நூலகம் | தமுஎகச வரவேற்பு

தமுஎகச மாநிலக்குழு வெளியிட்ட அறிக்கை:தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில், “இலக்கிய மாமணி” என்ற விருதினை உருவாக்கி, தமிழின் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்கள் மூன்று பேருக்கு ஆண்டுதோறும் வழங்குவது என்கிற தமிழ்நாடு அரசின் முடிவை தமுஎகச பாராட்டி வரவேற்கிறது. பாராட்டுப்பத்திரமும் ஐந்து லட்சம் ரூபாய் ரொக்க பரிசும் கொண்ட இவ்விருது ஒன்றிய, மாநில அரசுகளால் இலக்கியத்திற்கென வழங்கப்படுவதிலேயே அதிக தொகையைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களில் ஞானபீடம், சாகித்ய அகாடமி போன்ற தேசிய … Continue reading இலக்கிய மாமணி விருது, கனவு இல்லம், கலைஞர் நூலகம் | தமுஎகச வரவேற்பு

இது பண்பாட்டு அரசியலா? இல்லை மனுநீதியா? : நீலம் பண்பாட்டு மையத்திற்கும், கவிஞர் பச்சோந்திக்கும் சில கேள்விகள்

ஏவின் மனோ#நீலம் பண்பாட்டு மையத்திற்கும், கவிஞர் பச்சோந்திக்கும் சில கேள்விகள்...மதிப்பிற்குரிய ஐயா,வணக்கம்.என் பெயர் ஏவின் மனோ. நான்,5-10,நம்பியான் குளம்,நாவல்காடு,ஈசாந்தி மங்கலம் (Post)கன்னியாகுமரி(Dist).Pin-629852.என்ற முகவரியில் வசித்து வருகிறேன். மேலும் நான் இன்று காலை கவிஞர் பச்சோந்தி எழுதி, தாங்கள் வெளியிட்ட "பீஃப்" கவிதைகள் எனும் கவிதை தொகுப்பின் கீழ்க்காணும் கவிதையை படித்தேன்.அதிலிருந்து எனக்கு சில கேள்விகளும், சந்தேகங்களும் முன்னெழுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட தாங்கள் அதற்கான விளக்கம் தந்து உதவும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.இதோ கவிதை..."மேலத் தெரு பெண் தூக்கில் … Continue reading இது பண்பாட்டு அரசியலா? இல்லை மனுநீதியா? : நீலம் பண்பாட்டு மையத்திற்கும், கவிஞர் பச்சோந்திக்கும் சில கேள்விகள்

பேய்ச்சி நாவல்: ‘ஆபாசமானது என ஒருதலைப்பட்சமாக தீர்ப்பிட்டு தடை செய்திருப்பது ஏற்கத்தக்கதல்ல’

தற்கால மலேசியத் தமிழ் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் ம.நவீன். “பேய்ச்சி” என்கிற அவரது நாவலை மலேசிய அரசின் உள்துறை அமைச்சகம் தடைசெய்திருப்பது கண்டனத்திற்குரியது. தனது வாழ்வனுபவங்களை வரலாற்றோடும் சமகாலத்தோடும் இணைத்தும் விலக்கியும் ஒருவர் எழுதும் புனைவை – அதன் முழுமையால் மதிப்பீடு செய்யவேண்டும். மொழியும் சித்தரிப்பும் தான் புனைவுக்கு வலுவையும் நம்பகத்தையும் வழங்குகின்றன. எனில், தனது கதைக்குத் தேவையெனக் கருதி நாவலாசிரியர் பயன்படுத்தியுள்ள சில சொற்களையும், சித்தரிப்புகளையும் அவற்றின் சூழமைவுக்குள் பொருத்திவைத்துப் பார்க்காமல் தனியே துண்டித்துப் பார்த்து அந்நாவல் … Continue reading பேய்ச்சி நாவல்: ‘ஆபாசமானது என ஒருதலைப்பட்சமாக தீர்ப்பிட்டு தடை செய்திருப்பது ஏற்கத்தக்கதல்ல’

நூல் அறிமுகம்: அ.முத்துலிங்கத்தின் ‘உண்மை கலந்த நாட்குறிப்புகள்’

அ.முத்துலிங்கத்தின் வழக்கமான நடை; அதே எள்ளல், மெல்லிய நகைச்சுவை, ஆழம் என எல்லாமும் உண்டு.

#Metoo வும் தமிழ் இலக்கியமும்: பொ. வேல்சாமி

பொ. வேல்சாமி நண்பர்களே…. கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலையை விட metoo விவகாரத்தைப் பலரும் பரவலாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் இலக்கிய வரலாற்றில் Metoo வை போன்ற செய்திகள் சில ஆங்காங்கே பதிவாகி உள்ளன. அவற்றுள் பழந்தமிழ் நூலான அகநானூற்றின் 390 வது பாடலை metoo வுக்கு பொருத்தமான மிகப் பழமையான பாடல் என்று சொல்லலாம். அந்தப் பாடலில் ஒரு ஊருக்கு உப்பு விற்பனை செய்ய வந்த பழங்குடிப் பெண்ணிடம், உன் உடம்பின் விலை … Continue reading #Metoo வும் தமிழ் இலக்கியமும்: பொ. வேல்சாமி

குணா கவியழகனின் ‘விடமேறிய கனவு’ நாவல்: தூக்குமேடைக் குறிப்புகளின் தற்கால வடிவம்

இவன் யார்? என்ன பெயர்? என்ன ரேங்? இது எதுவும் சிங்கள இராணுவத்துக்குத் தெரியாது. அதற்கு எவ்வளவு விவரங்கள் தெரியும் என்று இவனுக்கு தெரியாது. இந்த ஆடு புலி ஆட்டம்தான் கதை.

இலங்கை இடப்பெயர்வின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை காட்டும் குணா கவியழகனின் ’கர்ப்ப நிலம்’

குணா கவியழகன் செய்நேர்த்தியில், அரசியலில், சுவாரசியத்தில், கலைமதிப்பில், பாத்திரப்படைப்பில் வெற்றி பெற்று இருக்கிறார்.குணா கவியழகன் செய்நேர்த்தியில், அரசியலில், சுவாரசியத்தில், கலைமதிப்பில், பாத்திரப்படைப்பில் வெற்றி பெற்று இருக்கிறார்.

பெரிய கலகம் வரப்போகிறது: மனுஷ்ய புத்திரன் கவிதை

மனுஷ்ய புத்திரன் பொம்மை அரசனின் படைகளுக்கு வீரம் இப்போது அதிகரித்துவிட்டது கடமை இப்போது அதிகரித்துவிட்டது அவர்கள் இப்போது சோளக்காட்டு காவல் பொம்மைகளையும் கைது செய்து அழைத்துச் செல்கிறார்கள் எனது ஒரு துண்டு நிலத்தை தரமாட்டேன் என்று சொன்ன மூதாட்டியை இருபது காவலர்கள் புடைசூழ இழுத்துச் செல்லும் புகைப்படங்கள் இன்று காணகிடைக்கின்றன எங்கள் காற்றை நஞ்சாக்காதே என்று சொன்ன ஒரு சிறுவனின் முதுகை சில நாட்களுக்கு முன்னர்தான் அவர்கள் உரித்திருந்தார்கள். அவர்களுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது அச்சம் அவர்களை நிதானமிழக்க … Continue reading பெரிய கலகம் வரப்போகிறது: மனுஷ்ய புத்திரன் கவிதை

கல்வி அகதிகள்: மனுஷ்ய புத்திரன் கவிதை

மனுஷ்ய புத்திரன் தொலை தூர நகரங்களுக்கு தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கு அவசர உதவி எண்கள் அறிவிக்கப்படுள்ளன அவர்கள் ஒன்றும் ஆழிப்பேரலையால் சூழ்ந்துகொள்ளப்பட்டிருக்கவில்லை அவர்களுக்கு பயண உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது அவர்கள் கடும் புயலில் காணாமல் போய்விடவில்லை அவர்களுக்கு உதவத் தயார் என்று கருணைக் கரங்கள் நீட்டப்படுகின்றன அவர்கள் பூகம்பங்களில் இடுபாடுகளில் சிக்கிக்கொண்டிருக்கவில்லை அவர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்படவிருக்கிறது அவர்கள் ஒரு கலவரத்தில் சிதறடிக்கபட்டவர்கள் அல்ல அவர்களுக்கு தங்குமிடம் தர யாரோ அன்புக் கரம் நீட்டுகிறார்கள் அவர்கள் நகரங்கள் … Continue reading கல்வி அகதிகள்: மனுஷ்ய புத்திரன் கவிதை

செம்புலம்: கொங்கு மண்டலத்தின் சமகால வாழ்வியல்!

பாஸ்கர் என்ற திருமணமாகாத தலீத் இளைஞன் அதிகாலையில், சாலை ஓரத்தில் கொலைசெய்யப்பட்டு கிடக்கிறான். அவன் கொலைக்கு காரணம் என்ன? சந்தையில் சாதிசங்க தலைவனை அடித்ததா? கட்டைப் பஞ்சாயத்தா? ‘பொம்பள’ விவகாரமா? மில் விவகாரமா? சமூக போராளி என்பதாலா?

’பார்பி’ கோவில்பட்டியின் கதை மட்டுமல்ல, திருமங்கலத்தின் கதையும்கூட: லக்ஷ்மி சரவணகுமார்

கோவில்பட்டியில் இத்தனை இலக்கியவாதிகள் செழிப்பாக வந்ததற்குப் பின்னால் அந்த ஊரின் விளையாட்டும் முக்கிய காரணம்.

நூல் அறிமுகம்: திருடன் மணியன் பிள்ளை

நம்முடைய குற்றவியல் நடைமுறை எவ்வளவு செல்லரித்துப்போயுள்ளது என்பதற்கான ஆவணம் இந்த நூல். சமூகம் ஒருவனை எப்படி குற்றவாளியாக்குகிறது என்பதையும் இந்தநூல் மூலம் நாம் விளங்கிக் கொள்ள முடியும்.

நாச்சியாள் சுகந்தியின் ‘கற்பனை கடவுள்’ நூல் விமர்சனம்: முனைவர் அகிலா கிருஷ்ணமூர்த்தி

நாம் கண்டுணர்ந்தவைகளை உணர்வில் கடத்தி கதைகளாகப் பரிமாறுவது ஒருவகையில் சமூகக் கடமையும் கூட. அதைத் தன் முதல் சிறுகதைத் தொகுப்பான கற்பனைக் கடவுளில் துவங்கியிருக்கிறார் எழுத்தாளர் நாச்சியாள் சுகந்தி.

ஆண்டாள் : பெண்மொழியும் எதிர் மரபும்

மகாராசன் சைவம் மற்றும் வைணவ சமயங்களின் இணைவைக் கொண்ட பக்தி இயக்கம் வெகுமக்கள் செல்வாக்கைப் பெற்றதற்கான காரணங்கள் பலவுண்டு. அவற்றுள் குறிப்பிடத்தக்கது, சிற்றின்பம் எனப்பெறும் பாலியல் துய்ப்புளை அங்கீகரித்த நிலையாகும். சமணம் மற்றும் பவுத்த சமயங்கள் பேரின்பத் துய்ப்பை அடைவதற்காகத் துறவை முன்னிறுத்தியதோடு அல்லாமல், காதல், காமம், களிப்பு போன்ற துய்ப்புகளை விலக்கி வைத்திருந்தன. ஆனால், சைவ - வைணவ சமயங்களோ அத்தகைய விலக்கல் முறைகளைப் பின்பற்றவில்லை. மாறாக, காதல்,காமம், களிப்பு, கலை இலக்கிய ஈடுபாடுகள் போன்றவற்றைத் … Continue reading ஆண்டாள் : பெண்மொழியும் எதிர் மரபும்

வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் நாவல் விமர்சனம்!

முனைவர் ராஜேஸ்வரி செல்லையா தமிழ் மொழியின் வரலாறு என்பது மனித சமுதாயத்தின் வரலாறு என்பதை இந்நாவல் வலியுறுத்துகிறது. தமிழ் என்பது ஒரு மாநில மொழியாக இல்லாமல் ஒரு உலகளாவிய கருப்பொருளாக இடம்பெறுவதால் இந்நாவல் சிறந்த மொழிபெயர்ப்பு அந்தஸ்தை பெறுகிறது. இதை பிற மொழிகளில் பெயர்த்து சமூக வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் வாசிக்க உதவினால் நிச்சயமாக தமிழின் தொன்மையை நிறுவும் தமிழ்மகனின் முயற்சியில் நாமும் பங்கு பெறுவோம். தமிழின் தொன்மையை குறைத்து மதிப்பிடும் ஆரிய சதியை முறியடிக்கும் முயற்சியை தீவிரப்படுத்தும் … Continue reading வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் நாவல் விமர்சனம்!

“நிச்சயமின்மைகளுக்கு அப்பாலும் ஜீவித்திருக்கும் சொற்கள்”: கொமோரா நாவல் குறித்து லஷ்மி சரவணகுமார்

“மூன்றாம் உலக நாடுகளிலிருந்து வருகிற ஒரு மனிதனுக்கு கதைகள் எழுத மன அமைதி எப்படி கிடைக்கும்? அதிருஷ்டவசமாக கலை தாரளமாகவும் கருணையோடும் இருக்கிறது. பிரச்சனைகளற்ற சந்தோசங்களை மட்டும் கலை ஆகர்ஷிப்பதில்லை, துன்பத்தில் உழல்பவர்களை அது நிராகரித்து ஒதுக்குவதுமில்லை. அவரவர் நெஞ்சிற்குள் பொங்கும் உணர்வுகளை அவர்களுக்கே உரித்தானதொரு தனிமுறையில் வெளிப்படுத்திக் கொள்ள கலை அனுமதிக்கிறது.” - தனது நோபல் பரிசு ஏற்புரையில் ‘நாகிப் மாஃபஸ். கதைகளை கேட்பதைப் போல் வாசிப்பதைப் போல் எழுதுவதும் மகத்தான ஆறுதலைத் தருவதால்தான் எழுத்தின் … Continue reading “நிச்சயமின்மைகளுக்கு அப்பாலும் ஜீவித்திருக்கும் சொற்கள்”: கொமோரா நாவல் குறித்து லஷ்மி சரவணகுமார்

மனுவின் மூத்த அடிமைகளின் துல்லியபதிவு: செம்புலம் நாவல் அறிமுகம்

செகா சாதியப் புறக்கணிப்பால் அவமானத்திற்குள்ளாகி , வேற்றூருக்கு அமைதியான வாழ்க்கைக்காக குடும்பத்தோடு புலம்பெயர இருக்கும் இடைச்சாதியைச் சார்ந்த நபராகவோ அல்லது அந்த நண்பர்களை உடைய நபராகவே இருப்பவர்களா? பத்து பேர் சேர்ந்து இருக்கும் கூட்டம்,"மாப்பிள்ளை மச்சான் " என்கிற சாதிய விளிச்சொற்களால் ஒரு தனிக்குழுவாகி உங்களை அம்போவென விடுகிற அவல நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறீர்களா? அம்பேத்கரைத் தவிர வேறு யாருடைய நூல்களை வேண்டுமானாலும் படி என்கிற வழிகாட்டல் உங்களுக்கு கிடைக்கப்பட்டிருக்கிறதா ? கற்பித்தல் சூழலில் சாதியை மட்டுமே … Continue reading மனுவின் மூத்த அடிமைகளின் துல்லியபதிவு: செம்புலம் நாவல் அறிமுகம்

எழுத்தாளர்கள் ராஜ் கௌதமன், சமயவேலுக்கு 2016 ஆம் ஆண்டின் ‘விளக்கு’ விருதுகள்!

அமெரிக்கத் தமிழர்களின் ’விளக்கு’ இலக்கிய அமைப்பின் 2016 ஆண்டிற்கான “புதுமைப்பித்தன் நினைவு” விருதுகள் எழுத்தாளர்கள்  ராஜ் கௌதமன், சமயவேல் ஆகிய இருவருக்கும் வழங்கப்படுகின்றன. 1996 ஆம் ஆண்டு முதல் அளிக்கப்பட்டு வரும் விளக்கு விருது இவ்வாண்டிலிருந்து இருவருக்கு வழங்குவதென முடிவு செய்யப்பட்டு எழுத்தாளர்கள் ராஜ் கௌதமன், சமயவேல் ஆகிய இருவரையும் எழுத்தாளர் அம்பை, கவிஞர் தமிழச்சி, கவிஞர் பெருந்தேவி ஆகிய மூன்று உறுப்பினர்களைக் கொண்ட நடுவர் குழு தேர்வு செய்துள்ளது. ஒவ்வொன்றும் ரூ 75,000 மதிப்புள்ள இவ்விருதுகள் விரைவில் … Continue reading எழுத்தாளர்கள் ராஜ் கௌதமன், சமயவேலுக்கு 2016 ஆம் ஆண்டின் ‘விளக்கு’ விருதுகள்!

கார்ல் மார்க்ஸ் 200: எஸ். ராமகிருஷ்ணன் உரை

திருப்பூர் மாவட் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், காரல் மார்க்ஸ் 200வது பிறந்தநாள் விழாவைக் கொண்டாடியது. இதில், காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் உரையாற்றினார். https://youtu.be/mhqRn7HKpZs எஸ். ரா. வின் உரை குறித்து கவிஞர் இரா. தெ. முத்து தெரிவித்துள்ள கருத்துகள்.. “எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் காரல் மார்க்ஸ் குறித்து திருப்பூர் தமுஎகச கூட்டத்தில் பேசிய சுருதி டிவி காணொளி கண்டேன். சகோதரி சந்திரபிரபா ராமகிருஷ்ணன் அனுப்பி இருந்தார். 120 நிமிடம் ஓடும் காணொளி. எந்த … Continue reading கார்ல் மார்க்ஸ் 200: எஸ். ராமகிருஷ்ணன் உரை

ஹெச்.ஜி.ரசூலின் ஊர் விலக்கத்திற்கான பெருங்காரணம் எது?

ரசூல் மீதான ஊர்விலக்கத்திற்கு மைலாஞ்சியின் ஒரு கவிதை மட்டும் காரணம் அன்று; குடிகலாச்சாரம் குறித்த உயிர்மை கட்டுரை மட்டும் காரணம் அன்று.

நூல் அறிமுகம்: ‘இலங்கையின் சுஜாதா ‘ அ.முத்துலிங்கம் எழுதிய “நாடற்றவன்”!

ஜாதா எழுதிய ' கற்றதும் பெற்றதும் ' எப்படி இருக்குமோ அந்த தொனியில், அதே பாடுபொருளில்தான் இந்த நூலும் இருக்கிறது.

”ஞானக்கூத்தன் படைப்புகளை வெளியிட அவரது குடும்பத்தினரிடம் அனுமதி பெறுங்கள்”

ஞானக்கூத்தன் தமது ஆக்கங்களை (கடிதங்கள், நேர்காணல்கள், சிற்றிதழ்கள் உள்பட) யார், எப்போது, எப்படி வெளியிட வேண்டும் என்று அவரே முடிவு செய்தார். அவர் இறந்த பின்பு இந்த உரிமை அவருடைய குடும்பத்தினருடையது. இது தார்மீக உரிமை. எங்களிடம் அனுமதி பெறாமல் அவருடைய ஆக்கங்கள் எவற்றையும் வெளியிடக் கூடாது. ஆள்தான் இல்லையே, இவர் எழுதினது எதையாவது போடுவோம் என்று மிக இயல்பாகச் செய்கிறார்கள். எங்கள் வீட்டுக்குள் வந்து அவருடைய பொருட்களை எடுத்துச் செல்வது போன்ற செயல் இது. ‍ … Continue reading ”ஞானக்கூத்தன் படைப்புகளை வெளியிட அவரது குடும்பத்தினரிடம் அனுமதி பெறுங்கள்”

லட்சியவாதி ’அஃக்’ பரந்தாமனுக்கு அஞ்சலி!

திருவல்லிக்கேணியின் நெரிசலான ஒரு தெருவில் அஃக் பரந்தாமன் குடும்பத்துடன் வசித்துவந்தார். குங்குமத்தில் நான் எழுதிக்கொண்டிருந்த 'நான்' தொடருக்காக ஆசிரியர் கே.என்.சிவராமன், அஃக் பரந்தாமன் பற்றி எழுதுங்கள் என சொல்லியிருந்தார். குங்குமம் ஆசிரியர் குழுவில் பரந்தாமன் குறித்து சொல்லி அனுமதி வாங்கினேன். அஃக் பரந்தாமன் சென்னையில் இருக்கிறார்;ஆனால் அவர் முகவரி தெரியாது விசாரித்தவர்களிடமிருந்து பதில் வந்துகொண்டிருந்தது. அப்போது சந்தியா பதிப்பகம், அஃக் தொகுப்புகளை நூலாக்கியிருந்தது. அவர்களிடம் கேட்டு அவருடைய வீட்டின் முகவரியைப் பெற்றேன். 'நான்' தொடருக்காக இலக்கியத்தில் இயங்கிய … Continue reading லட்சியவாதி ’அஃக்’ பரந்தாமனுக்கு அஞ்சலி!

”கலையையும் விளையாட்டையும் ஒன்றிணைக்கும் புள்ளி வாசிப்பு” ’பல்லாங்குழி’ இனியன் பேட்டி

வாசிப்பு பழக்கம் அருகி வரும் காலமிது. பெரும்பாலான நேரத்தை நவீன பொழுதுபோக்கு சாதனங்கள் எடுத்துக்கொண்ட நிலையில் புத்தக வாசிப்பு என்பதே பலருக்கு புதிதான விஷயமாக இருக்கிறந்து. வாசிப்பின் மூலம் புதிய புதிய திறப்புகளை அறிந்துகொள்ள வேண்டிய குழந்தைகளோ மதிப்பெண்களை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். புத்தகங்கள் தூசி படர்ந்த நூலக அலமாறிகளில் தூங்கிக்கொண்டிருக்கின்றன. புத்தகங்களை தூசி தட்டி, அவற்றில் இருக்கும் உலகங்களை திறந்து பார்க்க வைக்கும் பணியை சிலர் அவ்வவ்போது செய்துகொண்டு இருக்கிறார்கள். பல்லாங்குழி அமைப்பைச் சேர்ந்த இனியன், அத்தகையதொரு … Continue reading ”கலையையும் விளையாட்டையும் ஒன்றிணைக்கும் புள்ளி வாசிப்பு” ’பல்லாங்குழி’ இனியன் பேட்டி

அனார், என். சத்தியமூர்த்தி 2017ம் ஆண்டுக்கான கவிஞர் ஆத்மாநாம் விருது!

 2017-ஆம் ஆண்டுக்கான கவிஞர் ஆத்மாநாம் விருது, கவிஞர் அனாருக்கும் கவிஞர் என். சத்தியமூர்த்திக்கும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த் அறிவிப்பில்... தமது முன்னோடியான கவிதைகள் மூலமாக நவீன தமிழ்க் கவிதைக்குக் காத்திரமான பங்களிப்பை வழங்கியுள்ளவர்களைக் குறித்து யோசிக்கும்பொழுது தவறாமல் நினைவுக்கு வரும் கவி ஆளுமை கவிஞர் ஆத்மாநாம். தமிழ் நவீனக் கவிதையின் செழுமையான காலகட்டமான 1970-களில் தனது ஈடுபாடுமிக்க கவி ஆர்வத்தைக் கவிதைகள், கவிதையியல் பற்றிய உரையாடல், கவிதைக்கென ஒரு பத்திரிகை, கவிதை மொழிபெயர்ப்பு எனப் பன்முகமான பங்களிப்பின் மூலமாக … Continue reading அனார், என். சத்தியமூர்த்தி 2017ம் ஆண்டுக்கான கவிஞர் ஆத்மாநாம் விருது!

புதிய தடத்தில் ரஷ்ய இலக்கியம்: ஏ.சண்முகானந்தம்

ஏ.சண்முகானந்தம் கடந்த 1970-களில் தொடங்கி நாளது வரை தமிழ்ச் சூழலில் ரஷ்ய இலக்கியங்களின் பாதிப்பு தமிழ்ப் படைப்பாளிகளிடம் இருந்து வருகிறது. தாய், அன்னா கரீனைனா, தந்தையரும் தனயரும், கசாக்குகள், புத்துயிர்ப்பு, குற்றமும் தண்டனையும், போரும் அமைதியும், முதல் ஆசிரியர், ஜமீலா, வெண்ணிற இரவுகள் என தமிழர்களை ஈர்த்த ரஷ்ய இலக்கியங்களின் வரிசை மிக நீண்டது. அந்த வரிசையில், நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்கியின், 'வீரம் விளைந்தது' நாவல் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. செர்மன் நாட்டு படையின் ஊடுருவல், உள்நாட்டு முதலாளிகளின் போர், … Continue reading புதிய தடத்தில் ரஷ்ய இலக்கியம்: ஏ.சண்முகானந்தம்

நாட்டுப்புறவியல் எழுத்தாளர் கழனியூரன் மறைவு

திருநெல்வேலி மாவாட்டம் கழுநீர்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்த நாட்டுப்புறவியல் எழுத்தாளர் கழனியூரன், சென்னையில் இன்று காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கழனியூரன், சிகிச்சை பலினின்றி இறந்தார். சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படும் அவருடைய உடல், நாளை நல்லடக்கம் செய்யப்படவிருக்கிறது. பள்ளி ஆசிரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற கழனியூரனி இயற்பெயர் எம்.எஸ்.அப்துல்காதர். திருநெல்வேலி மாவட்டத்தின் நாட்டார் வழக்காறுகள், நாட்டுப்புறக் கதைகள் என தொகுத்து 40-க்கும் அதிகமான நூல்களாக கொண்டுவந்துள்ளார். அவருக்கு சமூக ஊடகங்களில் செலுத்தப்பட்ட அஞ்சலிகளின் … Continue reading நாட்டுப்புறவியல் எழுத்தாளர் கழனியூரன் மறைவு

பிக் பாஸ் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்: மனுஷ்ய புத்திரன் கவிதை

பிக் பாஸ் நிகழ்ச்சியொன்றில் நான் நுழைந்து மூன்று வருடங்கள் கழிந்து விட்டன எண்ணற்ற மர்ம சம்பவங்கள் இந்த வீட்டில் நடந்துகொண்டிருக்கின்றன எல்லாவற்றையும் பிக் பாஸ் கண்காணிக்கிறார் அதன் எடிட் செய்யப்பட்ட சில வினோதங்களை நீங்களும் காண்கிறீர்கள் பிக் பாஸிற்கு தெரியாதது என்று ஒன்றுமில்லை நான் ஒரு காண்டம் வாங்கினாலும் அது பிக் பாஸிற்கு தெரிந்துதான் வாங்க வேண்டும் எனது கிரெடிட் கார்ட் எண் என் ஆதார் அட்டையோடு இணைக்கப்பட்டிருக்கிறது அதில் என் விழிப்படலத்தின் ரேகைகள் பதியப்பட்டிருக்கின்றன நான் … Continue reading பிக் பாஸ் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்: மனுஷ்ய புத்திரன் கவிதை

ஜுனைத் வீடு திரும்பவில்லை: மனுஷ்ய புத்திரன் கவிதை

இப்போது இன்னொரு பெயர் திடீரெனெ பிரபலமாகிவிட்டது ஜுனைத் என்ற பதினாறு வயது பையனை ஓடும் ரயிலில் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டார்கள் ரத்தம் வெள்ளத்தில் மிதக்கும் படங்கள் பரவலாகக் காணக்கிடைக்கின்றன ஒரே நாளில் நாம் பிரலமாவதற்கு தேச பக்தர்களால் நாம் கொல்லபடுவதைவிட சிறந்த வழி வேறு எதுவுமில்லை ஜுனைத் என்பது ஒரு பையன் அல்ல ஒரு பெயர் கூட அல்ல அது ஒரு அடையாளம் அவ்வளவுதான் அக்லக் என்பது எப்படி ஒரு அடையாளமோ அதேபோல ரோஹித் வெமூலா … Continue reading ஜுனைத் வீடு திரும்பவில்லை: மனுஷ்ய புத்திரன் கவிதை

‘மொக்க ஃபிகரு” யுவபுரஸ்கார் விருதுபெற்ற மனுஷிக்கு மூத்த எழுத்தாளரின் ‘வாழ்த்து’!

சபரிநாதன், இசை, கதிர்பாரதி, அதீதன் சுரேன், ஜீனத் நஜீபா, தேவேந்திர பூபதி, தேன்மொழிதாஸ், ராஜன் ஆத்தியப்பன், வே.பாபு, வெய்யில் இப்படி எத்தனையோ பேர் உள்ள மொழியில் மொக்க பிகருகளை நோக்கி பெறுமதிகள் சரிவது கேவலமானது, வெட்கக் கேடானது. தரகர்கள் தங்கள் தள்ளாத வயதில் ரொம்பவும்தான் தள்ளாடுகிறார்கள் பாவம்.

அரசர் பாபாராம்தேவ்வைவிட சிறப்பாக காலை உயர்த்துகிறார்! யோகா தினத்தில் 2 கவிதைகள்!

யோகா வேறு யாருக்கெல்லாம் சிறந்தது?
தற்கொலை செய்துகொள்ளும்
விவசாயிகளின் பிரேதங்களுக்கு சிறந்தது
மாட்டுக்கறி உண்பதற்காக
தோல் உறிக்கப்படுபவர்களுக்கு சிறந்தது

ஆயுத எழுத்து: புலிகள் இயக்கத்தில் சேர்ந்த ‘அவன்’களின் கதை!

புதிதாகத் திருமணமான ஒரு தளபதியின் காவலுக்கு அழைக்கப்படுகிறான் அவன். 'அந்த தளபதிக்கு விளக்குப் பிடிக்க நான் இயக்கத்துக்கு வரவில்லை' என்று மறுக்கிறான். இப்படி அவன் பேசியதை தளபதியின் புது மனைவி கேட்டு விடுகிறாள். அடுத்தநாளே அவனைக் கொலை செய்ய தளபதியிடமிருந்து கட்டளை வருகிறது.

உங்கள் வாசிப்பின் ஆரம்பப்புள்ளி எது? புதிதாக வாசிப்பவர்களுக்கு நீங்கள் பரிந்துரைக்கும் புத்தகம் என்ன?

விஜி பழனிச்சாமி ஆழ்வார்ப்பேட்டை வட்டார நூலகத்தில் ஞாயிறன்று வாசகர் வட்டம் சார்பில் 'வாசிப்பும் நானும்' நிகழ்வு நடைபெற்றது. வாசகர் வட்டத்தின் சார்பில் அமுதன் ஒருங்கிணைத்து ஆரம்பித்து வைத்தார். பரிசல் புத்தக நிலையம் செந்தில்நாதன் தலைமை ஏற்று ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்தியதோடு, ஒவ்வொருவர் பேசி முடித்ததும் அதையொட்டி தனது கருத்தையும் பகிர்ந்துகொண்டார். பரிசல் செந்தில்நாதன் ஒரு தேர்ந்த பாடகர் என்பதும் அவர் பாடிய 'வானத்தின் மீது மயிலாடக்கண்டேன்' பாடல் மூலம் நேற்று தெரிந்தது! முதலில் பேசிய கிருபா முனுசாமி தனது சமீபத்திய … Continue reading உங்கள் வாசிப்பின் ஆரம்பப்புள்ளி எது? புதிதாக வாசிப்பவர்களுக்கு நீங்கள் பரிந்துரைக்கும் புத்தகம் என்ன?

மெளனம்: கனிமொழி கருணாநிதி கவிதை

தமிழ் வாழ்வின் தாழ்வுகளுக்கெல்லாம்
நீயே காரணம் என்றவர்கள்
எல்லோரும் இன்று
காத்துக்கிடக்கிறார்கள் எங்களோடு.

மாடு தழுவுதலும் மாட்டுக்கறி உணவுப் பழக்கமும்: தமிழ்ப் பன்மைப் பண்பாடுகளின் திரட்சி

மாட்டுக்கறி உணவுப் பழக்கமும் பழந்தமிழரின் உணவுப் பழக்கங்களுள் ஒன்று என்பதற்குச் சங்க காலப் பாடல் ஒன்று

உனக்கு நான் வழங்குவது – ஆஸாங் வாங்கடெ கவிதை

இரண்டு வேளைச் சோற்றுக்காக
உனது மலத்தை அள்ளுகிறேன்
அதைச் செய்யாவிட்டால்
இந்தக் குடியரசில்
நான் பட்டினியுடன் உறங்க வேண்டும்
சோப்பும் ஷாம்பூவும்
உனது அறியாமையை வளர்க்கின்றன

”முழுக்கவே போலியான எழுத்து”: ஜெயமோகனின் சிறுகதை குறித்து அராத்து

00 ஆண்டுகளுக்கு முன்பான சிறுகதையை ஜெயமோகன் போன்ற ஆட்களே எழுதிக்கொண்டிருந்தால் எப்படி ?

எங்கோ ஒரு திராவிட மாடு உக்கிரமாக கனைக்கிறது!: மனுஷ்யபுத்திரன் கவிதை

திராவிட மாடு ……………………………. மாட்டுக்கு கொம்பு சீவு வண்ணம் தடவு நம் திராவிட மாட்டுக்கு மாட்டை கட்டிய கயிறை தறி வரலாற்றின் பட்டிகளைத் திற திராவிட மாட்டை அவிழ்த்து விடு திராவிட மாடுகள் வயலில் ஆழ உழுபவை திராவிட மாடுகள் வாடிவாசலில் சீறிப் பாய்பவை திராவிட மாட்டுபால் சத்துக்கள் நிறைந்தவை திராவிட மாட்டுக்கறி மனதிற்கு இச்சை தருபவை மாட்டுத்திருடன் அதிகாரத்தின் மாறுவேடங்களில் வருகிறான் தந்திரமாக பட்டிக்குள் நுழைகிறான் நீ இப்போது திராவிட மாடுகளை அவிழ்த்து கையில் பிடித்துக்கொண்டு … Continue reading எங்கோ ஒரு திராவிட மாடு உக்கிரமாக கனைக்கிறது!: மனுஷ்யபுத்திரன் கவிதை

”ஷோபா சக்தியை கண்டால் முகத்தை திருப்பிக் கொள்வேன்”: சாரு நிவேதிதா

எழுத்தாளர் ஷோபா சக்தி தனது முகநூலில் எழுத்தாளர் சாரு நிவேதிதா குறித்து பதிவொன்றை எழுதியிருந்தார். “.இலக்கிய விமர்சனத்திலோ இலக்கிய மதிப்பீட்டிலோ சாருவுக்கு எந்த இடமும் கிடையாது’ என்ற புரிதலோடு எப்படி நான் இருந்தேனோ’ அதுபோலவே இப்போது சாருவால் பாராட்டப்படும் இளைஞர்களும் இருந்துகொள்ளுங்கள்” என எழுதியிருந்த ஷோபா சக்தியின் பதிவுக்கு சாரு நிவேதிதா தனது வலை தளத்தில் கடுமையாக எதிர்வினையாற்றியிருக்கிறார். முதலில் ஷோபா சக்தியின் பதிவை முழுமையாக படிக்கவும்: நாங்கள் முதன்முதலில் சந்தித்தபோது எனக்கு 30 வயது. சாரு நிவேதிதாவுக்கு … Continue reading ”ஷோபா சக்தியை கண்டால் முகத்தை திருப்பிக் கொள்வேன்”: சாரு நிவேதிதா

திறமை வாய்ந்தவர்களின் இந்தியாவை கண்டுபிடிக்கும் வழிமுறை: மனுஷ்ய புத்திரன் கவிதை

மனுஷ்ய புத்திரன்   தன் மகளின் கழற்றப்பட்ட உள்ளாடையை கையில் வைத்துக்கொண்டு தேர்வு மைய வாசலில் அமர்ந்திருந்தார்கள் பொறுப்பு மிக்க தந்தையர்கள் தேர்வு முடிந்தது வெளியே வந்த மகள்கள் மறுபடி உள்ளாடைகளை அணிந்துகொண்டதும் ஒளிமயமான எதிர்காலம் நோக்கி வீடு திரும்பினார்கள் ஜல்லிக்கட்டு மாடுகளை அவிழ்த்துவிடும்படி முஷ்டிகளை உயர்திக்காட்டிய இளைஞர்கள் தங்கள் சட்டையின் கைகள் கத்தரிக்கப்படுவதை சிரித்துக்கொண்டே பார்த்துக்கொண்டிருந்தார்கள் விமான நிலையங்களில் கறுப்பு இந்தியர்களின் ஆடைகளுக்குள் வெள்ளை அமெரிக்கர்கள் கைவிட்டு சோதனை நடத்தியபோது பொங்கி எழுந்த தேசபக்தர்கள் மாணவர்களின் … Continue reading திறமை வாய்ந்தவர்களின் இந்தியாவை கண்டுபிடிக்கும் வழிமுறை: மனுஷ்ய புத்திரன் கவிதை