முஸ்லிம் இறைச்சி விற்பனையாளரை தாக்கிய பஜ்ரங் தள் அமைப்பினர்!

கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டு, கோயில் திருவிழாக்களில் இஸ்லாமிய வியாபாரிகள் புறக்கணிக்கப்பட்டதை அடுத்து, கர்நாடகாவில் மதவாத அரசியல் தற்போது 'ஹலால்' இறைச்சி விவகாரத்தை கையிலெடுத்துள்ளது. கர்நாடகத்தில் உகாதி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி முஸ்லிம் இறைச்சி விற்பனையாளர்களிடம் இந்துக்கள் ஹலால் செய்யப்பட்ட உணவுகளை வாங்கக்கூடாது என இந்துத்துவ அமைப்புகள் கடந்த ஒரு வாரமாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டன. https://twitter.com/Hatewatchkarnat/status/1509412639268499457?s=20&t=MvPNXMGU3JJjMyfFEpGiZg இந்துத்துவ அமைப்பினரின் இந்த வெறுப்புப் பிரச்சாரத்தின் பகுதியாக, கர்நாடகாவின் ஷிவமொக்கா மாவட்டத்தில் இறைச்சி விற்பனையாளர் ஒருவரை … Continue reading முஸ்லிம் இறைச்சி விற்பனையாளரை தாக்கிய பஜ்ரங் தள் அமைப்பினர்!

ஹிஜாப்: முஸ்லிம்களுக்கு அறிவுரை கூறுவதை நிறுத்துங்கள் | ர. முகமது இல்யாஸ்

ர. முகமது இல்யாஸ்கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணிந்து பள்ளிகளுக்குள் நுழைய மாணவிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று அங்கு நடைபெற்ற பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் சுமார் 21 ஆயிரம் பேர் கலந்து கொள்ளாததை முன்வைத்து முற்போக்காளர்கள் என்று தங்களைத் தாங்களே அழைத்துக் கொள்வோர் முஸ்லிம்களுக்கு அறிவுரை கூறி வருகின்றனர். கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசுவோர், ஹிஜாப் அணிவதையும் தாலி அணிவதையும் ஒப்பிடுவோர், `முட்டாள் முஸ்லிம்களுடன் நில்லுங்கள்’ என்று கூறுவோர், பச்சை சங்கித்தனம் என்று எழுதுவோர் என … Continue reading ஹிஜாப்: முஸ்லிம்களுக்கு அறிவுரை கூறுவதை நிறுத்துங்கள் | ர. முகமது இல்யாஸ்

முஸ்லீமாக பிறந்து, மதமற்றவராக மாறிய பெண்ணுக்கு கோயிலில் நடனம் ஆட வாய்ப்பு மறுப்பு!

தான் இந்து அல்ல என்பதால், கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கோயில் வளாகத்தில் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்க தடை விதித்ததாக, முஸ்லிமாக பிறந்த பரதநாட்டிய நடனக் கலைஞரான மான்சியா வி.பி. குற்றம்சாட்டியுள்ளார்.திருச்சூரில் உள்ள இரிஞ்சாலக்குடாவில் உள்ள கூடல்மாணிக்யம் கோயில் பத்து நாள் திருவிழாவிற்கு தயாராகி வருகிறது. இதில் சுமார் 800 கலைஞர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர். இக்கோயில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேவசம் போர்டு நிர்வாகத்தின் கீழ் உள்ளது.ஏப்ரல் 21 அன்று கோயில் … Continue reading முஸ்லீமாக பிறந்து, மதமற்றவராக மாறிய பெண்ணுக்கு கோயிலில் நடனம் ஆட வாய்ப்பு மறுப்பு!

பிரதமர் வாழ்த்து கூறலாம்; முஸ்லீம் பெண் வாழ்த்து சொல்லக்கூடாதா? பாகிஸ்தான் குடியரசு தினத்துக்கு வாழ்த்து சொன்ன பெண் கைது!

பாகிஸ்தான் குடியரசு தினத்திற்கு அமைதியும் சமூக நல்லிணக்கமும் நிலவட்டும் என வாழ்த்துக்கூறி வாட்ஸ்ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்த கர்நாடகாவை சேர்ந்த இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டம் முதோல் நகரைச் சேர்ந்த குத்மா ஷேக் என்ற அந்தப் பெண், கடந்த 23-ம்தேதி பாகிஸ்தான் குடியரசு தினத்தையொட்டி வாட்ஸ் ஆப் ஸ்டேட்டசை வைத்திருக்கிறார். அதில், அனைத்து நாடுகளிலும் அமைதி, ஒற்றுமை, சமூக நல்லிணக்கம் ஏற்படுவதற்கு இறைவன் அருள்புரிவானாக என்று பதிவிட்டுள்ளார்.இதுதொடர்பாக அருண் குமார் பஜந்திரி என்பவர் காவல் நிலையத்தில் … Continue reading பிரதமர் வாழ்த்து கூறலாம்; முஸ்லீம் பெண் வாழ்த்து சொல்லக்கூடாதா? பாகிஸ்தான் குடியரசு தினத்துக்கு வாழ்த்து சொன்ன பெண் கைது!

கல்வி காவிமயம் ஆவதில் என்ன தவறு? சர்ச்சையை கிளப்பிய வெங்கையா நாயுடு பேச்சு

ஹிந்துத்துவா கல்வித் திட்டத்தில் என்ன குறை இருக்கிறது? என குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கேள்வி எழுப்பியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.உத்தராகண்ட் மாநிலம், ஹரித்வாரில் உள்ள தேவ் சமஸ்கிருதி விஷ்வ வித்யாலயாவில் தெற்காசிய அமைதி மற்றும் நல்லிணக்க மையத்தை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக நீடித்த காலனி அரசு, நம் கலாசாரம், பாரம்பரிய அறிவாற்றலை நாமே வெறுக்கும்படி சொல்லிக் கொடுத்ததாக குற்றம் சாட்டினார்.இந்தியாவின் 75வது … Continue reading கல்வி காவிமயம் ஆவதில் என்ன தவறு? சர்ச்சையை கிளப்பிய வெங்கையா நாயுடு பேச்சு

ஹிஜாப் வழக்கு போட்ட மாணவிகள் ‘தீவிரவாதிகள்’ பாஜக தலைவரின் வெறுப்புப் பேச்சு!

கல்லூரி வளாகங்களில் ஹிஜாப் தடையை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுகிய மாணவிகளை பாஜக மூத்த தலைவரும், உடுப்பி அரசுப் பல்கலைக் கழக மேம்பாட்டுக் குழுவின் துணைத் தலைவருமான யஷ்பால் சுவர்ணா, “தேச விரோதிகள்” என்று கூறினார். பியூ கல்லூரி மாணவிகள் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது. ஹிஜாப் இஸ்லாத்தின் இன்றியமையாத மதப் பழக்கம் அல்ல என்றும் எல்லோருக்குமான ஒரே சீருடை என்பது ஒரு நியாயமான கட்டுப்பாடு என்றும் அப்போது நீதிமன்றம் கூறியது.இந்த … Continue reading ஹிஜாப் வழக்கு போட்ட மாணவிகள் ‘தீவிரவாதிகள்’ பாஜக தலைவரின் வெறுப்புப் பேச்சு!

காஷ்மீரிகள் படுகொலையா? குஜராத் படுகொலையா? இதையும் பாருங்க!

தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை பாஜகவினர் கொண்டாடி வரும் நிலையில், குஜராத் இனப்படுகொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பர்சானியா என்ற திரைப்படம் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து, விவேக் அக்னிஹோத்ரி எழுதி இயக்கிய இந்தத் திரைப்படம் மார்ச் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் அனுபம் கெர், தர்ஷன் குமார், மிதுன் சக்ரவர்த்தி மற்றும் பல்லவி ஜோஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தைப் பார்க்க, காவல்துறையினருக்கு விடுமுறை அளிக்கப்படும் … Continue reading காஷ்மீரிகள் படுகொலையா? குஜராத் படுகொலையா? இதையும் பாருங்க!

“திரு. மோடி…என் ஆடையால் என்னை அடையாளம் காண முடியுமா?”

டிசம்பர் 15-ஆம் தேதி, ஜார்க்கண்டில் நடந்த பேரணியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “கலவரக்காரர்களை அவர்களின் ஆடைகளால் அடையாளம் காண முடியும்” என்று கூறினார். குடியுரிமை திருத்தச் சட்டம் பாரபட்சமானது இசுலாமியர்களுக்கு எதிரானது என இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் எதிர்ப்புக்கள் வெடித்த நேரத்தில் மோடியின் பேச்சு அதை உறுதி செய்யும்வகையில் இருந்தது. நான்கு நாட்களுக்குப் பிறகு, சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் கொச்சியில் போராட்டம் நடத்தியபோது. ஒரு இளம்பெண் பிடித்திருந்த பதாகை அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. 18 … Continue reading “திரு. மோடி…என் ஆடையால் என்னை அடையாளம் காண முடியுமா?”

‘தெலுங்கு நாயக்கர்’ விஜய் சேதுபதி 7 தமிழர்களின் விடுதலைக்காக பேசக்கூடாது: நாம் தமிழர்கள்

25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் சாந்தன், முருகன், பேரரறிவாளன் உள்ளிட்ட எழுவரின் விடுதலையை வலியுறுத்தி வரும் 11ம் தேதி வேலூரிலிருந்து சென்னை வரை வாகனப் பேரணி நடைபெற இருக்கிறது. இதை பிரபலப்படுத்தும் வகையில் நடிகர்கள், இயக்குநர்கள் சிலர் தன்னார்வத்துடன் சமூக வலைத்தளங்களின் மூலம் அழைப்பு விடுத்து வருகின்றனர். இதில் நடிகர் விஜய் சேதுபதியும் ஒருவர். இந்நிலையில் ‘நாம் தமிழர்’ கட்சியைச் சேர்ந்த சிலர், விஜய் சேதுபதியை நாயக்கர் சாதியைச் சேர்ந்த தெலுங்கர் என்றும் அவர் தமிழருக்காக … Continue reading ‘தெலுங்கு நாயக்கர்’ விஜய் சேதுபதி 7 தமிழர்களின் விடுதலைக்காக பேசக்கூடாது: நாம் தமிழர்கள்

“நான் தமிழர் இல்லையென்றால் கல்லால் அடித்துக் கொல்லட்டும்”: சீமானுக்கு வீரலட்சுமி சவால்!

தன்னை தெலுங்கர் என்று சொல்லும் நாம் தமிழர் கட்சியினருக்கு  தமிழர் முன்னேற்றப் படை  நிறுவனர் கி.வீரலட்சுமி சவால் விடுத்துள்ளார். தனது முகநூலில், “நாம் தமிழர் கட்சி தொண்டர்களுக்கு காங்கிரசோ சிங்கள இனவாதமோ எதிரிகள் அல்ல ;இந்த வீரலட்சுமி மட்டும் எதிரியாம் நாம் தமிழர் கட்சி சீமான் அவர்களை பல்வேறு தரப்பட்ட மக்கள் மலையாளி என்று முகநூலில் பதிவு செய்கிறார்கள். கடந்த மூன்று மாதங்களாக நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் எம்மை தெலுங்கர் என்று முகநூலில் பதிவிட்டுகொண்டிருக்கிறார்கள். முதலில் … Continue reading “நான் தமிழர் இல்லையென்றால் கல்லால் அடித்துக் கொல்லட்டும்”: சீமானுக்கு வீரலட்சுமி சவால்!

“எனக்கென்று சொந்தங்களுமில்லை, என்னை யாரும் பார்ப்பதற்கும் தயாரில்லை”:முன்னாள் விடுதலை புலியின் கண்ணீர்க் கதை!

“எனக்கென்று சொந்தங்களுமில்லை, என்னை யாரும் பார்ப்பதற்கும் தயாரில்லை” என்கிறார் முன்னாள் போராளியான இளையதம்பி தவராணி. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி தனது சொந்த ஊரான மட்டக்களப்பிற்கு வரும் போது தனக்கு 24 வயது என தவராணி குறிப்பிடுகின்றார். ஐ.பி.சி தமிழ் பிரிவுக்கு வழங்கிய பிரத்யேக பேட்டியில் தவராணி, “தவராணி ஆகிய நான் 9 வருடங்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இருந்துள்ளேன். எனக்கு தாயுமில்லை. தந்தையுமில்லை, எனக்குரிய காணித்துண்டு … Continue reading “எனக்கென்று சொந்தங்களுமில்லை, என்னை யாரும் பார்ப்பதற்கும் தயாரில்லை”:முன்னாள் விடுதலை புலியின் கண்ணீர்க் கதை!

பாட்டன்களை மாற்றிக்கொண்டிருக்கும் சீமானின் கொள்கை பற்றி ஓர் ஆய்வு!

மதுரை சொக்கன் சீமான் இயக்கிய `பாஞ்சாலக்குறிச்சி’ படத்தில் நகைச்சுவை காட்சி ஒன்று உண்டு. முழு போதையில் வீட்டுக்கு வரும் வடிவேலு ஒரு ஓலைப் பாயை விரித்து படுத்துக் கொள்ள முயல்வார். அது எப்படி விரித்தாலும் சுருட்டிக்கொண்டே வரும். கடைசியில் பாயை விரித்து வைத்துக் கொண்டு அதில் தொபுக்கடீர் என்று விழுவார். பார்த்தால் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டும். அப்படியும் விடாமல் “சின்னான்னா சும்மாவா” என்று கெத்தாக பேசுவார்.சீமானும் கிட்டத்தட்ட சின்னான் போல ஆகிவிட்டார். தமிழ்தேசியம் என்ற ஒரு … Continue reading பாட்டன்களை மாற்றிக்கொண்டிருக்கும் சீமானின் கொள்கை பற்றி ஓர் ஆய்வு!

“புரட்சி பேசிவிட்டு யார் என்றே தெரியாத ஒருவர் வீட்டு வாசலில் காத்திருக்கிறார்கள்” மக்கள் நலக் கூட்டணியினர் பற்றிசீமான்

மக்கள் நல கூட்டணியில் உள்ள வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் புரட்சி பேசிவிட்டு, தற்போது யார் என்றே தெரியாத ஒருவர் வீட்டு வாசலில் காத்திருப்பது வருத்தம் அளிப்பதாக சீமான் தெரிவித்துள்ளார். கரூர் அருகே உள்ள மண்மங்கலத்தில் பூட்டிக்கிடக்கும் நெசவாளர் கூட்டுறவு சங்க கட்டிடத்தை சமுதாயக்கூடமாக மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நெசவாளர் கட்டிடத்தை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்காவிட்டால் … Continue reading “புரட்சி பேசிவிட்டு யார் என்றே தெரியாத ஒருவர் வீட்டு வாசலில் காத்திருக்கிறார்கள்” மக்கள் நலக் கூட்டணியினர் பற்றிசீமான்