Watch “piyush reveals who is savarkar | why bjp celebrating savarkar

https://youtu.be/pvctDB0YA0I piyush reveals who is savarkar | why bjp celebrating savarkar | savarkar history | hindutva | rss" on YouTube

ராமர் – ராவணனை ஒப்பிட்டு சர்ச்சை கருத்து தெரிவித்த பேராசிரியை பணிநீக்கம்

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள லவ்லி புரோபஷனல் பல்கலைக்கழகத்தின் பெண் பேராசிரியர் ஒருவர் ராமர் குறித்து அவதூறு கருத்துக்களை பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது.குர்சங் ப்ரீத் கவுர் என்ற உதவி பேராசிரியை, மாணவர்களுக்கு வகுப்பு எடுத்துக்கொண்டிருந்த போது ராமரை கடுமையாக விமர்சித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. இதையடுத்து அந்த பேராசிரியை மீது நடவடிக்கை எடுக்குப்படி இந்துத்துவ கும்பல் வலியுறுத்திய நிலையில், பல்கலைக்கழகம் பேராசிரியையை பணியை விட்டு நீக்கியுள்ளது.சம்பந்தப்பட்ட வீடியோவில் அந்த பேராசிரியை, "ராவணன் மிகவும் நல்ல மனிதர் … Continue reading ராமர் – ராவணனை ஒப்பிட்டு சர்ச்சை கருத்து தெரிவித்த பேராசிரியை பணிநீக்கம்

சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் இந்திய பொருளாதாரத்தை பாதிக்கும்: ரகுராம் ராஜன் எச்சரிக்கை!

சிறுபான்மையினருக்கு எதிரான நாடாக இந்தியா மீது ஏற்படும் பிம்பம் இந்திய பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தை பாதிக்கும் என ரகுராம் ராஜன் எச்சரித்துள்ளார். ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும், பொருளாதார நிபுணருமான ரகுராம் ராஜன் தற்போது தமிழ்நாடு அரசின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக உள்ளார். இவர் டெல்லியில் பொருளாதாரம் தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றினார். அந்த கருத்தரங்கில் பேசிய ராஜன், சிறுபான்மையினருக்கு எதிரான நாடாக இந்தியா பற்றி உருவாகும் பிம்பம் இந்திய நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம் … Continue reading சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் இந்திய பொருளாதாரத்தை பாதிக்கும்: ரகுராம் ராஜன் எச்சரிக்கை!

உ.பி.: தவறுதலாக பாகிஸ்தான் பாடலைக் கேட்ட முஸ்லீம் சிறுவர்கள் கைது!

உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் மொபைல் போனில் பாகிஸ்தான் பாடலை வெறும் 40 நொடிகள் கேட்ட இரண்டு மைனர் முஸ்லிம் சிறுவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.உத்தர பிரதேசத்தின் பூட்டா பகுதியைச் சேர்ந்த சிங்காய் முராவன் கிராமத்தைச் சேர்ந்த 16 மற்றும் 17 வயதான நயீம் மற்றும் முஸ்கிம் ஆகியோர் தங்களுடைய உறவினர் நடத்தி வந்த மளிகைக்கடையில் வேலை செய்துள்ளனர். அப்போது கை தவறுதலாக சிறுமி ஒருவர் பாடிய பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்ற பாடலை போனில் ஒலிக்க விட்டுள்ளனர். … Continue reading உ.பி.: தவறுதலாக பாகிஸ்தான் பாடலைக் கேட்ட முஸ்லீம் சிறுவர்கள் கைது!

இன்னும் 15 ஆண்டுகளில் இந்துராஷ்டிரம்; குறுக்கே யார் வருபவர்கள் முடிக்கப்படுவார்கள்: மோகன் பகவத்

“இன்னும் 15 ஆண்டுகளில் அகண்ட பாரதம் அமையும்; குறுக்கே யார் வந்தாலும் அவர்களின் கதை முடிக்கப்படும்” என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியுள்ளார். உத்தரகண்ட் மாநிலம், ஹரித்துவாரில் நடைபெற்ற சாமியார்கள் கூட்டத்தில் பேசிய மோகன் பகவத், இந்தியா அகிம்சையைப் பற்றிப் பேசும், அதேநேரத்தில் தடியையும் தூக்கும் என சங் பரிவாரங்களின் வன்முறையை ஆதரிக்கும் வகையில் பேசினார். சுவாமி விவேகானந்தர் மற்றும் மகரிஷி அரவிந்தரின் கனவான ‘அகண்ட பாரதம்’ இன்னும் 10 அல்லது 15 ஆண்டுகளில் நனவாகும் … Continue reading இன்னும் 15 ஆண்டுகளில் இந்துராஷ்டிரம்; குறுக்கே யார் வருபவர்கள் முடிக்கப்படுவார்கள்: மோகன் பகவத்

பள்ளிகளில் பகவத் கீதை: ஆர்.எஸ்.எஸ். திட்டத்தை அமலாக்கும் பாஜக அரசுகள்!

9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டு முதல் பகவத் கீதை கற்பிக்கப்படும் என இமாச்சல பிரதேச அரசு தெரிவித்துள்ளது.இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்ட அந்த மாநில கல்வி அமைச்சர் கோவிந்த சிங் தாக்கூர், பள்ளிகளில் சமஸ்கிருதம் மற்றும் ஹிந்தி மொழிகளில் கீதை கற்பிக்கப்படும் எனவும் மூன்றாம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு சமஸ்கிருதம் அறிமுகப்படுத்தப்படும் எனவும் கூறினார். மாணவர்களுக்கு இந்திய கலாச்சாரத்தைப் பற்றி கற்பிக்கவும், அவர்களுக்கு தார்மீக ஊக்கத்தை அளிக்கவும் இந்தப் … Continue reading பள்ளிகளில் பகவத் கீதை: ஆர்.எஸ்.எஸ். திட்டத்தை அமலாக்கும் பாஜக அரசுகள்!

முஸ்லிம் இறைச்சி விற்பனையாளரை தாக்கிய பஜ்ரங் தள் அமைப்பினர்!

கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டு, கோயில் திருவிழாக்களில் இஸ்லாமிய வியாபாரிகள் புறக்கணிக்கப்பட்டதை அடுத்து, கர்நாடகாவில் மதவாத அரசியல் தற்போது 'ஹலால்' இறைச்சி விவகாரத்தை கையிலெடுத்துள்ளது. கர்நாடகத்தில் உகாதி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி முஸ்லிம் இறைச்சி விற்பனையாளர்களிடம் இந்துக்கள் ஹலால் செய்யப்பட்ட உணவுகளை வாங்கக்கூடாது என இந்துத்துவ அமைப்புகள் கடந்த ஒரு வாரமாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டன. https://twitter.com/Hatewatchkarnat/status/1509412639268499457?s=20&t=MvPNXMGU3JJjMyfFEpGiZg இந்துத்துவ அமைப்பினரின் இந்த வெறுப்புப் பிரச்சாரத்தின் பகுதியாக, கர்நாடகாவின் ஷிவமொக்கா மாவட்டத்தில் இறைச்சி விற்பனையாளர் ஒருவரை … Continue reading முஸ்லிம் இறைச்சி விற்பனையாளரை தாக்கிய பஜ்ரங் தள் அமைப்பினர்!

90% இந்திய ஊடகங்கள் அரசாங்கத்தை பாதுகாக்கின்றன: பத்திரிகையாளர் பி சாய்நாத்

தொண்ணூறு விழுக்காடு இந்திய ஊடகங்கள் அரசாங்கத்தை பாதுகாப்பதாக பத்திரிகையாளர் பி சாய்நாத் குற்றம்சாட்டியுள்ளார். ஏப்ரல் 1 ஆம் தேதி கர்நாடகாவின் குவெம்பு பல்கலைக்கழகத்தில் டாக்டர் சாந்திநாத் தேசாய் நினைவு அறக்கட்டளை விரிவுரையை ஆற்றியபோது, பத்திரிகையாளர் பி சாய்நாத், இன்றைய ஊடகங்களை பிரதிநிதித்துவமற்ற, ஒதுக்கிவைக்கும் மற்றும் குறுகிய பாத்திரத்தை வகிப்பதாக கூறினார்.‘இந்தியாவில் இதழியல்: 200 ஆண்டுகளில் நாம் எங்கிருக்கிறோம்?’ என்ற தலைப்பில் பி. சாய்நாத் விரிவுரையாற்றினார்.அப்போது அவர், “சுதந்திரப் போராட்டத்தின் போது சிறிய இந்திய ஊடகங்கள் குறிப்பிடத்தக்க பங்காற்றின. … Continue reading 90% இந்திய ஊடகங்கள் அரசாங்கத்தை பாதுகாக்கின்றன: பத்திரிகையாளர் பி சாய்நாத்

தேர்வு எழுத ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை அனுமதித்த 7 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள அரசு கல்லூரி ஒன்றில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இது சர்ச்சையான நிலையில், முஸ்லிம் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடகத்தை ஆளும் பாஜக அரசு மதம் தொடர்பான உடைகளை அணிந்து வரக்கூடாது என தடை விதித்தது. இதனை எதிர்த்து பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்களுக்கு அரசியலமைப்பு வழங்கிய உரிமையை அரசு பறிப்பதாகக் கூறி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.ஹிஜாப் விவகாரத்தில் அரசின் முடிவுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்து … Continue reading தேர்வு எழுத ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை அனுமதித்த 7 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

”ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஒரு ஓநாய் கூட்டம்; அதன் குகைக்குள் செல்வோம்”

மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 23வது மாநில மாநாட்டு பொது கூட்டத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிஷ்ணன் பங்கேற்றுப் பேசினார். கூட்டத்தில் அவர் பேசுகையில், பாஜக அரசு மதச்சார்பின்மையை குலைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கு சில நீதிபதிகளும் துணை போகிறார்கள். பாஜக அரசுக்கு வக்காலத்து வாங்கும் நீதிமன்றங்களையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம்.அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக்கும் சட்டத்தை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தில் 24 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு … Continue reading ”ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஒரு ஓநாய் கூட்டம்; அதன் குகைக்குள் செல்வோம்”

மாட்டுச்சாணம், கோமியம் வாங்கும் காங்கிரஸ் அரசு!

மாட்டு சாணத்துக்கு பணம் வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்தி, கோமியத்தையும் கொள்முதல் செய்ய காங்கிரஸ் கட்சியின் பூபேஷ் பாகேல் தலைமையிலான சத்தீஸ்கர் அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், இதை ஆய்வு செய்ய ஒரு தொழில்நுட்பக் குழு அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.இந்திரா காந்தி வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் காமதேனு பல்கலைக்கழக ஆசிரியர்கள் அடங்கிய குழு, மாட்டு கோமியம் சேகரிப்பு, தர பரிசோதனை மற்றும் அதிலிருந்து என்னென்ன பொருட்களைத் தயாரிக்கலாம் ஆகியவற்றை உள்ளடக்கிய அறிக்கையை … Continue reading மாட்டுச்சாணம், கோமியம் வாங்கும் காங்கிரஸ் அரசு!

கர்நாடகா: ஹலால் இறைச்சியை தடை செய்யக் கோரும் இந்துத்துவ அமைப்புகள்!

கல்விக்கூடங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்து, பாஜகவும் அதன் துணை அமைப்புகளும் கர்நாடகத்தை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளன. சிறுபான்மையினருக்கு எதிராக தினம் ஒரு பிரச்னையை அங்கு கிளப்பி வருகின்றன.அந்த வரிசையில், “ஹலால் இறைச்சி முஸ்லீம் சமூகத்தின் "பொருளாதார ஜிஹாத்தின்" ஒரு பகுதி என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சி.டி. ரவி கூறியுள்ளார்.

2016-20 ஆண்டுகளில் நாடு முழுவதும் 2.76 லட்சம் கலவர வழக்குகள் பதிவு!

2016 முதல் 2020 வரையிலான ஐந்து ஆண்டுகளில் நாட்டில் 3,399 வகுப்புவாத அல்லது மதக் கலவரங்கள் நடந்துள்ளதாக உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை மக்களவையில் தெரிவித்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் ஒட்டுமொத்தமாக 2.76 லட்சத்துக்கும் அதிகமான கலவர வழக்குகள் பதிவாகியுள்ளன. காங்கிரஸ் எம்பி சசி தரூர் மற்றும் பாஜக எம்.பி. சந்திரபிரகாஷ் ஜோஷி ஆகியோர் எழுப்பிய கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் நித்யானந்த் ராய் இந்தத் தகவலை தெரிவித்தார்.அண்மைய ஆண்டுகளில் நாட்டில் இடம்பெற்ற கலவரங்கள் மற்றும் படுகொலைகள் பற்றிய பதிவேடுகளை … Continue reading 2016-20 ஆண்டுகளில் நாடு முழுவதும் 2.76 லட்சம் கலவர வழக்குகள் பதிவு!

ஹிஜாப்: முஸ்லிம்களுக்கு அறிவுரை கூறுவதை நிறுத்துங்கள் | ர. முகமது இல்யாஸ்

ர. முகமது இல்யாஸ்கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணிந்து பள்ளிகளுக்குள் நுழைய மாணவிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று அங்கு நடைபெற்ற பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் சுமார் 21 ஆயிரம் பேர் கலந்து கொள்ளாததை முன்வைத்து முற்போக்காளர்கள் என்று தங்களைத் தாங்களே அழைத்துக் கொள்வோர் முஸ்லிம்களுக்கு அறிவுரை கூறி வருகின்றனர். கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசுவோர், ஹிஜாப் அணிவதையும் தாலி அணிவதையும் ஒப்பிடுவோர், `முட்டாள் முஸ்லிம்களுடன் நில்லுங்கள்’ என்று கூறுவோர், பச்சை சங்கித்தனம் என்று எழுதுவோர் என … Continue reading ஹிஜாப்: முஸ்லிம்களுக்கு அறிவுரை கூறுவதை நிறுத்துங்கள் | ர. முகமது இல்யாஸ்

முஸ்லீமாக பிறந்து, மதமற்றவராக மாறிய பெண்ணுக்கு கோயிலில் நடனம் ஆட வாய்ப்பு மறுப்பு!

தான் இந்து அல்ல என்பதால், கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கோயில் வளாகத்தில் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்க தடை விதித்ததாக, முஸ்லிமாக பிறந்த பரதநாட்டிய நடனக் கலைஞரான மான்சியா வி.பி. குற்றம்சாட்டியுள்ளார்.திருச்சூரில் உள்ள இரிஞ்சாலக்குடாவில் உள்ள கூடல்மாணிக்யம் கோயில் பத்து நாள் திருவிழாவிற்கு தயாராகி வருகிறது. இதில் சுமார் 800 கலைஞர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர். இக்கோயில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேவசம் போர்டு நிர்வாகத்தின் கீழ் உள்ளது.ஏப்ரல் 21 அன்று கோயில் … Continue reading முஸ்லீமாக பிறந்து, மதமற்றவராக மாறிய பெண்ணுக்கு கோயிலில் நடனம் ஆட வாய்ப்பு மறுப்பு!

பிரதமர் வாழ்த்து கூறலாம்; முஸ்லீம் பெண் வாழ்த்து சொல்லக்கூடாதா? பாகிஸ்தான் குடியரசு தினத்துக்கு வாழ்த்து சொன்ன பெண் கைது!

பாகிஸ்தான் குடியரசு தினத்திற்கு அமைதியும் சமூக நல்லிணக்கமும் நிலவட்டும் என வாழ்த்துக்கூறி வாட்ஸ்ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்த கர்நாடகாவை சேர்ந்த இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டம் முதோல் நகரைச் சேர்ந்த குத்மா ஷேக் என்ற அந்தப் பெண், கடந்த 23-ம்தேதி பாகிஸ்தான் குடியரசு தினத்தையொட்டி வாட்ஸ் ஆப் ஸ்டேட்டசை வைத்திருக்கிறார். அதில், அனைத்து நாடுகளிலும் அமைதி, ஒற்றுமை, சமூக நல்லிணக்கம் ஏற்படுவதற்கு இறைவன் அருள்புரிவானாக என்று பதிவிட்டுள்ளார்.இதுதொடர்பாக அருண் குமார் பஜந்திரி என்பவர் காவல் நிலையத்தில் … Continue reading பிரதமர் வாழ்த்து கூறலாம்; முஸ்லீம் பெண் வாழ்த்து சொல்லக்கூடாதா? பாகிஸ்தான் குடியரசு தினத்துக்கு வாழ்த்து சொன்ன பெண் கைது!

கல்வி காவிமயம் ஆவதில் என்ன தவறு? சர்ச்சையை கிளப்பிய வெங்கையா நாயுடு பேச்சு

ஹிந்துத்துவா கல்வித் திட்டத்தில் என்ன குறை இருக்கிறது? என குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கேள்வி எழுப்பியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.உத்தராகண்ட் மாநிலம், ஹரித்வாரில் உள்ள தேவ் சமஸ்கிருதி விஷ்வ வித்யாலயாவில் தெற்காசிய அமைதி மற்றும் நல்லிணக்க மையத்தை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக நீடித்த காலனி அரசு, நம் கலாசாரம், பாரம்பரிய அறிவாற்றலை நாமே வெறுக்கும்படி சொல்லிக் கொடுத்ததாக குற்றம் சாட்டினார்.இந்தியாவின் 75வது … Continue reading கல்வி காவிமயம் ஆவதில் என்ன தவறு? சர்ச்சையை கிளப்பிய வெங்கையா நாயுடு பேச்சு

ஹிஜாப் வழக்கு போட்ட மாணவிகள் ‘தீவிரவாதிகள்’ பாஜக தலைவரின் வெறுப்புப் பேச்சு!

கல்லூரி வளாகங்களில் ஹிஜாப் தடையை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுகிய மாணவிகளை பாஜக மூத்த தலைவரும், உடுப்பி அரசுப் பல்கலைக் கழக மேம்பாட்டுக் குழுவின் துணைத் தலைவருமான யஷ்பால் சுவர்ணா, “தேச விரோதிகள்” என்று கூறினார். பியூ கல்லூரி மாணவிகள் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது. ஹிஜாப் இஸ்லாத்தின் இன்றியமையாத மதப் பழக்கம் அல்ல என்றும் எல்லோருக்குமான ஒரே சீருடை என்பது ஒரு நியாயமான கட்டுப்பாடு என்றும் அப்போது நீதிமன்றம் கூறியது.இந்த … Continue reading ஹிஜாப் வழக்கு போட்ட மாணவிகள் ‘தீவிரவாதிகள்’ பாஜக தலைவரின் வெறுப்புப் பேச்சு!

காஷ்மீரிகள் படுகொலையா? குஜராத் படுகொலையா? இதையும் பாருங்க!

தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை பாஜகவினர் கொண்டாடி வரும் நிலையில், குஜராத் இனப்படுகொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பர்சானியா என்ற திரைப்படம் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து, விவேக் அக்னிஹோத்ரி எழுதி இயக்கிய இந்தத் திரைப்படம் மார்ச் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் அனுபம் கெர், தர்ஷன் குமார், மிதுன் சக்ரவர்த்தி மற்றும் பல்லவி ஜோஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தைப் பார்க்க, காவல்துறையினருக்கு விடுமுறை அளிக்கப்படும் … Continue reading காஷ்மீரிகள் படுகொலையா? குஜராத் படுகொலையா? இதையும் பாருங்க!

இனி பொது இடங்களில் ஹிஜாப் அணிய தடை? கர்நாடக தீர்ப்பால் அச்சத்தில் இஸ்லாமிய சமூகம்!

ஹிஜாப் அணிவது இஸ்லாம் மதத்தின் அடிப்படை நடைமுறை இல்லை என கர்நாடக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் பள்ளிகளுக்கு ஹிஜாப் அணிவதற்கு கடந்த பிப்ரவரி மாதம் அம் மாநில அரசு தடை விதித்தது. இதை எதிர்த்து, உடுப்பி மாவட்டம் குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ. கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புக்கு வந்தனர். எனினும் … Continue reading இனி பொது இடங்களில் ஹிஜாப் அணிய தடை? கர்நாடக தீர்ப்பால் அச்சத்தில் இஸ்லாமிய சமூகம்!

‘ஜெய் அகண்ட ரஷ்யா!’ இந்து சேனாவின் ரஷ்ய ஆதரவுக்கு என்ன காரணம்?

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ், இலங்கை மற்றும் பூட்டானை ஆக்கிரமித்து 'அகண்ட பாரதம்' வேண்டும் என்பது இந்துத்துவவாதிகளின் நீண்ட நாள் வேலைத்திட்டம். அதனால் ரஷ்ய அதிபர் புதின் சோவியத் யூனியனை மறு உருவாக்கம் செய்ய களமிறங்கியிருப்பதற்கு இந்து சேனா என்ற வலதுசாரி அமைப்பு ஆதரித்து போஸ்டர் ஒட்டியுள்ளது! இதுகுறித்து டெல்லியின் மண்டி இல்லத்தில் அமைந்துள்ள ரஷ்ய கவிஞர் ரஷ்கின் பாண்ட் சிலைக்குக் கீழே ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், “சோவியத் யூனியனை மீண்டும் உருவாக்க இருக்கும் புதினுடன் இந்தியா இருக்கிறது. … Continue reading ‘ஜெய் அகண்ட ரஷ்யா!’ இந்து சேனாவின் ரஷ்ய ஆதரவுக்கு என்ன காரணம்?

அகமதாபாத் குண்டுவெடிப்பு வழக்கு: வரலாற்றில் முதன்முறையாக 38 பேருக்கு தூக்கு!

2008 ஆம் ஆண்டு அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்குகளை விரைந்து விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றம் 49 குற்றவாளிகளில் 38 பேருக்கு மரண தண்டனை விதித்தது. மற்ற 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. இந்தியாவின் சட்ட வரலாற்றில் ஒரே வழக்கில் இத்தனை பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை! 2008, ஜூலை 26 அன்று குஜராத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான அகமதாபாத்தில் அரசு மருத்துவமனை, அகமதாபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் நடத்தும் மருத்துவமனை, வெவ்வேறு … Continue reading அகமதாபாத் குண்டுவெடிப்பு வழக்கு: வரலாற்றில் முதன்முறையாக 38 பேருக்கு தூக்கு!

ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர் சிகிச்சையை விட்டுக்கொடுத்து மரணித்தாரா? உண்மை என்ன?

கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 85 வயதான ஆர். எஸ். எஸ். அமைப்பைச் சேர்ந்த நாராயண்ராவ் தபாட்கர் என்ற முதியவர், 40 வயதான ஆண் ஒருவருக்கு சிகிச்சைக்காக தன் படுக்கையை விட்டுக்கொடுத்ததாகவும், வீடு திரும்பிய அவர் மூன்று நாட்களில் உயிரிழந்ததாகவும் சமூக ஊடகங்களில் வெகுஜென ஊடகங்களில் செய்தி வேகமாக பரப்பப்பட்டு வருகிறது. இந்த செய்தியை முதன்முதலில் அறிக்கையாக வெளியிட்டது ஆர். எஸ். எஸ் அமைப்பு. அந்த அறிக்கையில், “இந்திரா காந்தி ருக்னலே மருத்துவமனையில் நாராயண் படுக்கைகள் நிரம்பிய … Continue reading ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர் சிகிச்சையை விட்டுக்கொடுத்து மரணித்தாரா? உண்மை என்ன?

இந்தியா, மோடியின் எரியும் பிணக்காடு | ரானா அய்யூப்

ரானா அய்யூப்தமிழில்: கை. அறிவழகன்டாக்டர். ஜலீல் பார்க்கர், இந்தியாவின் தலைசிறந்த நுரையீரல் நிபுணர்களில் ஒருவர், முகத்தில் கடுமையான சோர்வு தெரிகிறது, மும்பை மாநகரத்தின் லீலாவதி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகளைக் கவனித்தபடி தொலைக்காட்சிகளிலும் தோன்றி கோரமான கோவிட் இரண்டாம் அலை எப்படி ஆயிரக்கணக்கில் இந்தியர்களை தினமும் விழுங்கிக் கொண்டிருக்கிறது என்று சொல்கிறார்.கடந்த ஆண்டில் அவருக்கே கொரோனா தோற்று ஏற்பட்டு ஏறத்தாழ இறப்பின் விளிம்பு வரை சென்று வந்தார், இப்போது அமைதியிழந்தவராக நாம் அறிந்திராத பல உண்மைகளை … Continue reading இந்தியா, மோடியின் எரியும் பிணக்காடு | ரானா அய்யூப்

“போயி வேற வேலை பாருங்கடா”!: காட்டமான விஜய் சேதுபதி

சமீபத்தில் நடிகர் விஜய் வீட்டில் நடந்த வருமான வரி சோதனைகளின் பின்னணிக்கு கிறித்தவ மதமாற்ற நடவடிக்கைகளே காரணம் என பாஜக தரப்பினர் சொல்லி வந்தனர். நடிகர் விஜய், ஆர்யா, விஜய் சேதுபதி ஆகியோரின் பெயர் இந்த விவகாரத்தில் அடிபட்டது. இந்நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் காட்டமாக எதிர்வினை ஆற்றியுள்ளார் விஜய் சேதுபதி.

‘விஜயின் தந்தையை 1%கூட நம்பாதீர்கள்’ என்கிறார் மாரிதாஸ்!

அண்மையில் நடிகர் விஜய் தொடர்புடைய தயாரிப்பாளர், ஃபைனான்சியர்களிடம் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. நடிகர் விஜய்யிடம் அவருடைய குடும்பத்தாரிடமும் வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விஜய் - பாஜக மோதல் ஒரு காரணம் என சொல்லப்பட்டாலும், ஒரு சிலர் விஜய் மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதே பாஜக அரசின் கோபத்துக்குக் காரணம் என சுட்டிக்காட்டினர். இந்த நிலையில், பாஜக ஆதரவாளரான மாரிதாஸ், “திரைத்துறை கிறிஸ்தவ மதமாற்றும் கூட்டத்தின் பிடியில் வலுவாகச் சிக்கியுள்ளது. தமிழன் என்று அந்த கூட்டம் தன் … Continue reading ‘விஜயின் தந்தையை 1%கூட நம்பாதீர்கள்’ என்கிறார் மாரிதாஸ்!

மங்களூருவில் போலீசு துப்பாக்கிச் சூட்டில் போராட்டக்காரர்கள் இருவர் பலி: உறுதி செய்தது போலீசு

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மங்களூருவில் நடந்த போராட்டத்தை ஒடுக்க நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இரண்டு போராட்டக்காரர்கள் பலியாகியுள்ளனர். இதை மங்களூரு போலீசு உறுதி செய்துள்ளது. https://twitter.com/IndiaToday/status/1207686276167749632?s=20 போராட்டங்களை அடுத்து மங்களூருவில் ஊரடங்கு உத்தரவு அமலாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கூடியிருந்த போராட்டக்காரர்களை களைக்க போலீசார் முதலில் தடியடி நடத்தியதாகவும், பின்னர் போராட்டக்காரர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதாகவும் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. கல்வீச்சு சம்பவங்களை தடுக்க துப்பாக்குச் சூடு நடத்தப்பட்டதாகவும் அதில் இருவர் பலியானதாகவும் போலீசு தரப்பு கூறுகிறது. இந்த பலிக்கு … Continue reading மங்களூருவில் போலீசு துப்பாக்கிச் சூட்டில் போராட்டக்காரர்கள் இருவர் பலி: உறுதி செய்தது போலீசு

“திரு. மோடி…என் ஆடையால் என்னை அடையாளம் காண முடியுமா?”

டிசம்பர் 15-ஆம் தேதி, ஜார்க்கண்டில் நடந்த பேரணியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “கலவரக்காரர்களை அவர்களின் ஆடைகளால் அடையாளம் காண முடியும்” என்று கூறினார். குடியுரிமை திருத்தச் சட்டம் பாரபட்சமானது இசுலாமியர்களுக்கு எதிரானது என இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் எதிர்ப்புக்கள் வெடித்த நேரத்தில் மோடியின் பேச்சு அதை உறுதி செய்யும்வகையில் இருந்தது. நான்கு நாட்களுக்குப் பிறகு, சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் கொச்சியில் போராட்டம் நடத்தியபோது. ஒரு இளம்பெண் பிடித்திருந்த பதாகை அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. 18 … Continue reading “திரு. மோடி…என் ஆடையால் என்னை அடையாளம் காண முடியுமா?”

இவர்களின் வாழ்தலுக்கான போராட்டத்தை வேடிக்கை மட்டும் பார்க்க வேண்டுமா?

சிவபாலன் இளங்கோவன் ஒட்டுமொத்த மாணவர்களின் போராட்டத்தின் முகமாக இருக்கும் அந்த பர்தா அணிந்த, கண்ணாடிபோட்ட பெண்ணிடம் பத்திரிக்கையாளர் “எதற்காக இந்த போராட்டம்” என கேட்கும்போது, அந்த பெண் ஒரே வார்த்தை தான் அதற்கு பதிலாய் சொல்கிறாள் “For existence”. இதை சொல்லும்போது அவள் அத்தனை பதட்டமாக இருக்கிறாள். அவளது கரங்களை இறுக்கமாக பற்றிக்கொண்டு ‘பயப்பட வேண்டாம்’ என சொல்ல வேண்டும் போல் இருக்கிறது. ஆனால் பயப்பட வேண்டாமா? “survival” ஐ தவிர மனிதனுக்கு வேறு என்ன தலையாக … Continue reading இவர்களின் வாழ்தலுக்கான போராட்டத்தை வேடிக்கை மட்டும் பார்க்க வேண்டுமா?

குடியுரிமை திருத்த சட்டம்: ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் அரசியலின் புதிய வடிவம்!

முருகானந்தம் இராமசாமி குடியுரிமை திருத்த சட்ட மசோதா ஒரு கொள்ளிக்கட்டையில் தலையைச்சொரியும் வேலை என நினைத்தேன். அதுவும் மயிருள்ள மண்டையிருந்தால் கூட பரவாயில்லை. அதுவுமில்லை என்றால் கபாலம் வரை கிர்ரென்று இறங்கத்தான் செய்யும். மண்டை மேல்மாடி காலியாயிருப்பது கூட பிரச்சனையில்லை. மண்டைக்குள்ளும் சரக்கில்லை என்பவன் இதைச்செய்யாமலிருந்தால்தான் அதிசயம். வங்கதேசத்திலிருந்து வரும் அகதிகளால் பெரிய பிரச்சனை என்பது சங்கிகள் வெகுகாலமாக இடும் ஊளை. காரணம் அவர்கள் பெரிதும் இஸ்லாமியர்கள் என்பது அவர்களின் கணிப்பு. எனவே வேகமாக ஊளையிட்டார்கள். வங்கதேசத்துடனான … Continue reading குடியுரிமை திருத்த சட்டம்: ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் அரசியலின் புதிய வடிவம்!

“ஆர்.எஸ். எஸ்ஸை. அழைக்காமல் மரு. ராமதாஸை ஏன் அழைக்கிறீர்கள் காயத்ரி?”

டாக்டர். ஷாலினி டாக்டர். தொல் திருமாவளவன் கோயில்களின் ஆபாச சிலைகளை பற்றி விமர்சித்தார். அதற்கு காயத்ரி ரகுராம் என்பவர், அது ஹிந்து மதத்திற்கு எதிரானது என்று, தொ. திரு. வின் விரைகளை பற்றி பேசினார். அதாவது ஆபாசத்திற்கு எதிரான புகாருக்கு பதில் இன்னும் கொஞ்சம் ஆபாசம். அதற்கு பிறகு ரொம்பவும் விசித்திரமாக அவர் பா ம காவின் தலைவர் டாக்டர் ராமதாஸுக்கு தூது அனுப்பி, அடியாள் வேண்டும் என்று வெளிபடையாகவே கேட்கிறார். இந்த காயத்ரி மாதிரி டுபுக்குக்கள் … Continue reading “ஆர்.எஸ். எஸ்ஸை. அழைக்காமல் மரு. ராமதாஸை ஏன் அழைக்கிறீர்கள் காயத்ரி?”

ஐஐடி உணவுக்கூடத்தில் மனு தர்ம சாத்திரம்!

படம் 1: ஐஐடி உணவுக்கூடத்தில் அசைவம் சாப்பிடுவோருக்கு மட்டும் எதிராக எழுதப்பட்ட #அதர்மம். படம் 2: #ஐஐடிசைவங்கள் இருவகைப்படும். 'வெங்காயம்-பூண்டு இல்லா சைவம்' அதில் ஒருவகை. இரண்டு சைவத்துக்கும் தனித்தனி உணவுக்கூடம். படம் 3: அசைவம்/சைவம் சாப்பிடும் இடம்தான் தனித்தனியாக பார்த்திருக்கிறேன்... ஆனால், #கைகழுவுமிடமும் #தனித்தனியாக ஐஐடியில்தான் காண்கிறேன். இதில் இரண்டை கேள்விக்குட்படுத்தி கொஞ்சம் சிந்திப்போம்: அசைவதுக்கு எதிராக மட்டும் வைக்கப்பட்டது போல... பூண்டு-வெங்காயத்துக்கு எதிரான ஏதேனும் ஒரு வாசகம், அதை சாப்பிடும் இடத்தில் ஏதுமில்லையே ஏன்..? … Continue reading ஐஐடி உணவுக்கூடத்தில் மனு தர்ம சாத்திரம்!

அயோத்தி தீர்ப்பை விமர்சித்த இரண்டு பெண்கள் மீது தேச துரோக வழக்கு!

முசுலீம்களுக்கு எதிராக நாளொரு மேனி வெறுப்புப் பிரச்சாரங்கள் செய்யும் இந்துத்துவ காவிகளுக்கு ‘பாராட்டுக்கள்’ ஆளும் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றன.

கோட்சே வாக்குமூலத்தை பள்ளிப் பாடத்தில் சேர்க்க வேண்டும்: இந்து மகா சபை கேட்கிறது!

இந்திய அரசியலமைப்பின் மீது நம்பிக்கையற்றவர்கள் இவர்கள். நாட்டில் உச்சநீதிமன்றம் இருக்கும்போது பிரிட்டீஷ் ராணியிடம் மன்னிப்பு மனுவை தானே அனுப்பியவர் கோட்சே

சமூக நீதி அரசியல் கல்வியே இதற்கான மருந்து!

முருகானந்தம் ராமசாமி நான் சிலகாலம் முன்புவரை பிராமணீயம் என்றே சுட்டி வந்தேன்.. நவீீன ஜனநாயக சமூகப்ரக்ஞைக்கு எதிர்திசையில் இயங்கும் ஆதிக்க கருத்தியல் என்பதால் அதை கருத்தியல் ரீதியாக அப்படிச்சுட்டினேன். இந்திய சமூகவரலாற்றில் பிராமணீயத்தின் தடத்தை கருப்பு வெள்ளையாக அன்றி டி. டி. கோசாம்பி, கெ. தாமோதரன், டாக்டர். எஸ். ராதாகிருஷ்ணன், டாக்டர். பி. ஆர். அம்பேத்கர், தேவிப்ரசாத் சட்டோபாத்யாய, ஆகிய அறிஞர்களை வாசித்த பின் பெற்ற தத்துவார்த்த பின்புலமும் எனது கண்டடைதலுக்கு உண்டு. சிறுகுழுவாக தங்கள் நேரடி … Continue reading சமூக நீதி அரசியல் கல்வியே இதற்கான மருந்து!

பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீஃப் முன்வைக்கும் 10 கேள்விகள்

பார்ப்பனிய ஆதிக்கத்தால் நிறுவனப் படுகொலை செய்யப்பட்ட பாத்திமா லத்தீஃப்பின் தந்தை அப்துல் லத்தீஃப் முன்வைக்கும் 10 கேள்விகள். எனது மகள் கடிதம் எழுதும் பழக்கம் உடையவள். வீட்டில் என்ன நடந்தாலும் கடிதம் எழுதுவாள். அப்படியிருக்க தற்கொலை செய்ததாக சொல்லப்படும் நேரத்தில் என் மகள் கண்டிப்பாக கடிதம் எழுதியிருப்பாள் .. அது எங்கே..? ஹாஸ்டல், உணவகம், நூலகம்போன்ற இடங்களின் CCTV பதிவுகளை ஐஐடி நிர்வாகம் தருவதற்கு தாமதிப்பது ஏன்..? என் மகள் கயிற்றில் தூக்கு மாட்டிக் கொண்டாள் என்று … Continue reading பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீஃப் முன்வைக்கும் 10 கேள்விகள்

கல்வி நிறுவன மரணங்கள்: புறக்காரணிகளை என்ன செய்ய முடியும்?

ஃபாத்திமா நுழைவுத் தேர்வுகளில் முதலிடம் பெற்றவர் எனக் கூறுகிறார்கள். பாயல் தாத்வி மகப்பேறு மருத்துவத்தில் முதுகலை படித்து வந்தவர். நஜீப் நன்றாகப் படித்து வந்த மாணவர். இப்படி இருந்தும், பட்டமா கிடைத்தது?

ஃபாத்திமா மரணம்: இஸ்லாமிய வெறுப்பின் சிக்கலாகவும் பேசவேண்டும்

ரபீக் ராஜா "என் பெயரே அவர்களுக்குப் பிரச்சனை" அன்பு மகள் ஃபாத்திமா லத்தீஃபின் இந்த விசும்பலை எளிதில் கடந்துவிடக்கூடாது. பாஜக இரண்டாம் முறையாக ஆட்சிக்கு வந்தபிறகு, "இனி இஸ்லாமியர்களின் வாழ்வியல் என்னவாகும்?" என்ற எனது பதிவுக்கு, மூத்த இடதுசாரித் தோழர் ஒருவர், "மற்றோர் எல்லாம் என்ன பெருவாழ்வு வாழ்ந்திடப் போகிறார்கள்?" என்று கேட்டு, பதிவின் வீரியத்தைப் பொதுமைப்படுத்திப் பலவீனமாக்கினார். "இஸ்லாமியர்களே அவர்களது முதல் குறி" என்றேன். "கல்புர்கி, கௌரி எல்லாம் முஸ்லீம்களா?" என்றார். அதற்கு, "இந்து அடிப்படைவாதத்தை … Continue reading ஃபாத்திமா மரணம்: இஸ்லாமிய வெறுப்பின் சிக்கலாகவும் பேசவேண்டும்

இஸ்லாமிய வெறுப்பும் சாதிய உணர்வுகளும் நிரம்பிய துறை அது: ஐஐடி மாணவி அல்பியா ஜோஸ்

அல்பியா ஜோஸ் நான் ஒரு ஐஐடி மெட்ராஸின் மாணவர். எனது கல்வி வளாகம் ஒரு உயரடுக்கு சாதியவாத, இனவாதம் பேசும் வன்முறைகூடம். மிக முக்கியமாக அது இஸ்லாமோபோபியாவை கடைப்பிடிக்கிறது. நவம்பர் 8ம்தேதி ஐஐடி மெட்ராஸில் முதலாமாண்டு எம்.ஏ மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் மாணவி ஃபாத்திமா லத்தீஃப் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். (நானும் அந்த துறையைச் சார்ந்தவர் தான்). இந்த கல்வி வளாகத்தின் அலட்சியம் குறித்தும் அதன் இயல்பான ஆதிக்க தன்மை குறித்தும் குறிப்பாக இங்குள்ள மாணவர்கள் … Continue reading இஸ்லாமிய வெறுப்பும் சாதிய உணர்வுகளும் நிரம்பிய துறை அது: ஐஐடி மாணவி அல்பியா ஜோஸ்