”இடஒதுக்கீட்டில் படித்தவர்கள் கட்டிய பாலங்கள் விழுந்து நொறுங்கத்தான் செய்யும்”: பிரபல பங்கு வர்த்தகர் மோதிலால் ஆஸ்வாலின் கருத்து

பங்கு வர்த்தகம் செய்யும் நிறுவனமான மோதிலால் ஆஸ்வாலின் நிறுவனர் மோதிலால் ஆஸ்வால், கொல்கத்தாவில் பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்படுத்தியது குறித்து ட்விட்டரில் ஒரு பதிவை எழுதியிருந்தார். நாட்டில் உள்ள பாதி பொறியாளர்கள் இடஒதுக்கீட்டில் படித்து பட்டம் பெற்றவர்கள். அப்படிப்பட்டவர்கள் கட்டிய கட்டடம் இடிந்துவிழத்தான் செய்யும். இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. என்று சனிக்கிழமை காலை ட்விட்டியிருந்தார். இந்த ட்விட்டுக்கும் எதிர்ப்பு வலுக்கவே, சில மணி நேரங்களில் அது ஃபார்வேர்டு செய்யப்பட்ட குறுஞ்செய்தி, எனக் கூறி அதை நீக்கிவிட்டார். https://twitter.com/MrMotilalOswal/status/716133044181053441Continue reading ”இடஒதுக்கீட்டில் படித்தவர்கள் கட்டிய பாலங்கள் விழுந்து நொறுங்கத்தான் செய்யும்”: பிரபல பங்கு வர்த்தகர் மோதிலால் ஆஸ்வாலின் கருத்து

#பாரத்மாதாகீஜெய்: மனித உரிமை போராளியை கைது செய்து கைவிலங்கு இட்ட சங்கிலியால் இழுத்துச் சென்ற போலீஸ்

  வழக்குரைஞர் மில்ட்டன் சட்டீஸ்கரில் முக்தி மோர்ச்சா கட்சியை துவங்கி, வழிநடத்திய சங்கர் குஹார் நியோகியால் சாகித் மருத்துவமனை துவங்கப்பட்டது. சுரங்க தொழிலாளர்கள் அளிக்கும் நிதியால் தான் இம்மருத்துவமனை இயங்கி வருகிறது. அனைவருக்கும் இலவசமாக மருத்துவ சேவை அளித்து கொண்டிருக்கிறது. தொழிலாளிகளின் மருத்துவ சேவையில் 30 ஆண்டுகளாக தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர் மருத்துவர் சாய்பால் ஜனா. 1992-ல் பிலாய் தொழிலக பகுதியில் தொழிலாளர் போராட்டத்தின் பொழுது போலீசு துப்பாக்கிச்சூடு நடத்தியது. 18 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். அதில் காயம்பட்ட தொழிலாளர்களுக்காக மருத்துவ … Continue reading #பாரத்மாதாகீஜெய்: மனித உரிமை போராளியை கைது செய்து கைவிலங்கு இட்ட சங்கிலியால் இழுத்துச் சென்ற போலீஸ்

PPF வட்டி குறைப்பு: எதிர்கால இந்தியாவுக்கு கொள்ளி வைப்பது எப்படி?

நரேன் ராஜகோபாலன் பப்ளிக் ப்ராவிடண்ட் பண்ட் (PPF) என்பது பெரும்பாலான மத்திய வர்க்கம் தங்களுடைய ஒய்வு நாளுக்காக சேர்க்கும் ஒரு திட்டம். இதனுடைய வட்டி விகிதம் 8.7%. இது அரசாங்கத்தால் உறுதியளிக்கப்பட்ட நெடுநாளைய சேமிப்பு திட்டம். இதற்கு வரி விலக்கு உண்டு. நிதி ஆலோசகர்களைக் கேட்டால் ‘compounding' என்கிற ஒரு பதத்தினை சொல்லுவார்கள். அதாவது உங்களுடைய பணம் பெருகுவது என்பது ஒரு மல்டிப்ளையர் எஃபெக்ட். ரூ. 100க்கு 10% வருடாந்திர வட்டி என்றால் முதல்வருடம் 100+10 = … Continue reading PPF வட்டி குறைப்பு: எதிர்கால இந்தியாவுக்கு கொள்ளி வைப்பது எப்படி?

டிராக்டர் வாங்கிய விவசாயியை தற்கொலைக்குத் தள்ளிய சோழமண்டலம் ஃபைனான்ஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகேயுள்ள ஒரத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் அழகர், விவசாயி. இவர் பெரம்பலூர் தோகைமலையிலுள்ள தனியார் நிதி நிறுவனமான சோழ மண்டலம் ஃபைனான்ஸ் மூலம் ரூ.7 லட்சம் கடன் வாங்கியிருந்தார். அதில் ரூ. 5 லட்சத்து 10 ஆயிரம் திருப்பிச் செலுத்தியுள்ளார். இந்நிலையில் மீதித் தொகையைக் கேட்டு தனியார் நிதி நிறுவன ஊழியர்கள், அழகரை தரக்குறைவாக பேசி, தாக்கி டிராக்டரை ஜப்தி செய்துள்ளனர். இதனால் மனமுடைந்த அழகர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். … Continue reading டிராக்டர் வாங்கிய விவசாயியை தற்கொலைக்குத் தள்ளிய சோழமண்டலம் ஃபைனான்ஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

இந்தியாவில் பில்லியனர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு; என்ன காரணம்? பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா எழுதுகிறார்

பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா பணக்காரர்கள் மீது வரியும் போடமாட்டோம், பொதுத்துறை பங்குகளையும் சகாய விலையில் அவர்களிடம் ஒப்படைப்போம் என்ற அரசின் கொள்கை பொதுத்துறையை பற்றி வைத்துள்ள அணுகுமுறை இதுதான்: ‘லாபத்தில் செயல்பட்டால் விற்று விடு, நட்டத்தில் இருந்தால் மூடி விடு’ வழக்கம் போல் மத்திய நிதி அமைச்சர் ஜெட்லி பிப்ரவரி இறுதி நாள் பட்ஜெட்டை சமர்ப்பித்தார். ஆனால் இதற்கு ஒருமாதம் முன்னதாகவே, முதலாளித்துவ பத்திரிகைகளிலும் தொலைக் காட்சி மற்றும் சமூக ஊடகங்களிலும் இந்த பட்ஜெட் எப்படி இருக்கவேண்டும் … Continue reading இந்தியாவில் பில்லியனர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு; என்ன காரணம்? பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா எழுதுகிறார்

டாட்டா காட்டி மல்லையாவை அனுப்பிய வைத்த இந்திய அரசு!

பிரபல மதுபான ஆலை அதிபரும், ‘கிங் பிஷர் ஏர்லைன்ஸ்’ உரிமையாளருமான விஜய் மல்லையா, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட 17 பொதுத்துறை வங்கிகளிடம், 6 ஆயிரத்து 963 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார். ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியிடம் ரூ. 1,600 கோடி, பஞ்சாப் நேஷனல் மற்றும் ஐடிபிஐ வங்கிகளிடம் தலா ரூ. 800கோடி, பேங்க் ஆஃப் இந்தியாவிடம் ரூ. 650 கோடி, பேங்க் ஆஃப்பரோடாவிடம் ரூ. 550 கோடி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் … Continue reading டாட்டா காட்டி மல்லையாவை அனுப்பிய வைத்த இந்திய அரசு!

#வீடியோ;ஓசியில் 100 வடா-பாவ் : கொடுக்காத கடை ஊழியரை தாக்கும் சிவசேனா பிரமுகர்…

மும்பையின் புறநகர் பகுதியான வைல் பார்லேவில் உள்ள கடையில் 100 வடா-பாவ் பணம் கொடுக்காமல் வாங்கி வரும்படி சிவசேனா கட்சிக்காரரான சுனில் மஹாதிக் என்பவர் தன்னுடைய ஊழியர்களிடம் கூறியுள்ளார். ஆனால் கடையில் வேலை பார்ப்பவர் தங்களிடம் இருப்பு இல்லை என்று தெரிவித்திருக்கிறார். இதனை அடுத்து கடைக்கு போன் செய்து திட்டியுள்ளார் சுனில் மஹாதிக். அத்துடன் விடாமல், மறுநாளும் அதே  கடையை தொடர்பு கொண்ட சுனில், ‘‘ஒரு பையனை அனுப்புவேன், அவனிடம் 100 வடா-பாவ்-களை உடனே கொடுத்து அனுப்பு’’ … Continue reading #வீடியோ;ஓசியில் 100 வடா-பாவ் : கொடுக்காத கடை ஊழியரை தாக்கும் சிவசேனா பிரமுகர்…

தலித், பழங்குடி மக்களின் 76 ஆயிரம் கோடி நிதி எங்கே போனது?: தலித்-பழங்குடி அமைப்புகள் கேள்வி

மத்திய அரசு திங்கள் கிழமை வெளியிட்ட பட்ஜெட்டில் தலித்-பழங்குடி மக்களின் நிதி ஒதுக்கீடு 54 சதவீதம் குறைத்திருப்பதாக தலித்,பழங்குடியின உரிமைகளுக்கான அமைப்பினர் குற்றம் சாட்டியிருக்கின்றனர். இதன் மூலம் லட்சக்கணக்கான பெண்கள், குழந்தைகள், மாணவர்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டிருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். https://twitter.com/ajaydalit/status/704603443063697408 https://twitter.com/ajaydalit/status/704593745195315200 https://twitter.com/ajaydalit/status/704591957448794112 https://twitter.com/ajaydalit/status/704550017780940800 https://twitter.com/deepaknikarthil/status/704571343811928064 https://twitter.com/deepaknikarthil/status/704569748680388608 https://twitter.com/deepaknikarthil/status/704569140598722560 https://twitter.com/deepaknikarthil/status/704281119860981760 https://twitter.com/deepaknikarthil/status/704281010029002754

மோடிக்கு ஏன் பாஸ் மார்க் போட்டேன்? கருணாநிதி காரணங்களை அடுக்குகிறார்

திமுக தலைவர் கருணாநிதி, மத்திய பட்ஜெட் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தான் ஏன் மோடிக்கு பாஸ் மார்க் போட்டேன் என்பதற்கு காரணங்களை அடுக்குகிறார். இதோ அவர் வெளியிட்ட முழு அறிக்கையும்! “நடப்பு நிதி ஆண்டான 2015-2016 டிசம்பர் மாதம் வரை, மத்திய அரசின் அமைச்சகங்கள், ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் எந்த அளவுக்கு திட்டச் செலவுகளை மேற்கொண்டிருக்கின்றன என்று பார்த்தால், பத்து அமைச்சகங்கள் பாதி அளவு நிதியைக் கூட செலவு செய்யவில்லை என்பதும்; ஏழு அமைச்சகங்கள் நிதியாண்டின் ஒன்பது … Continue reading மோடிக்கு ஏன் பாஸ் மார்க் போட்டேன்? கருணாநிதி காரணங்களை அடுக்குகிறார்

1949-ம் ஆண்டில் வருமான வரி உச்ச வரம்பு எவ்வளவு தெரியுமா ?:பட்டியலை பாருங்கள் !!!

சுதந்திரத்திற்கு பின் இரண்டாடுகள் கழித்து, அதாவது 1949-ம் வருடத்தில் ஆயிரத்து  500 ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் பெறுபவர்களுக்கு மட்டுமே வருமான வரி விதிக்கப்பட்டது. 1960-ம் ஆண்டில், மூன்றாயிரம் ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் பெறுபவர்களுக்கு மட்டுமே வருமான வரி விதிக்கப்பட்டுள்ளது. 70-ம் ஆண்டில், ஐந்தாயிரம் ரூபாய்க்கு அதிகமாக வருமானம் பெறுபவர்களுக்கும், 80-ம் ஆண்டில், எட்டாயிரம் ரூபாய்க்கு அதிகமாகவும், 90-ம் ஆண்டில் 22 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக வருமானம் பெறுபவர்களுக்கு மட்டுமே வருமான வரி விதிக்கப்பட்டிருந்திருக்கிறது. 1999, 2000, 2001, … Continue reading 1949-ம் ஆண்டில் வருமான வரி உச்ச வரம்பு எவ்வளவு தெரியுமா ?:பட்டியலை பாருங்கள் !!!

வரி ஏய்ப்பாளர்களை அன்பாக அழைப்பது எப்படி? அருண் ஜெட்லி வழிகாட்டுகிறார்!

பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயா பட்ஜெட் உரைகளில் ஆரவாரமான சொற்களும் கரவொலிக்கான அறிவிப்புகளுமாக இருக்கும். அதை வைத்து உண்மை பட்ஜெட்டை மதிப்பிட முடியாது. இந்த பட்ஜெட்டிலும் அப்படிப்பட்ட பகட்டுகள் நிறைய இருக்கின்றன.ஆனால், உண்மையான பட்ஜெட் அறிவிப்புகளோ மோசமான முன்னுதாரணமாக இருக்கின்றன. வரி ஏய்ப்பாளர்களுக்கு தாராள சலுகை அப்பட்டமாக தேசத்துரோகச் செயலில் ஈடுபடுகிறவர்களான வரி ஏய்ப்பாளர்களுக்கு அன்பான அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் தாங்கள் இதுவரை செலுத்தாத வரியில் 30 சதவீதத்தைச் செலுத்தினால் போதும், அதன் மீது ஒரு ஏழரை சதவீதம் … Continue reading வரி ஏய்ப்பாளர்களை அன்பாக அழைப்பது எப்படி? அருண் ஜெட்லி வழிகாட்டுகிறார்!

விவசாயத்தை கார்ப்பரேட் தொழிலாக்குங்கள்: பொருளாதார ஆய்வறிக்கை அரசுக்கு பரிந்துரை

இந்திய விவசாயத்தில் உணவு தானியத்திற்கான விவசாயம் பெரும் நட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அதனால் அதற்கு மாற்றாக மரபணு மாற்றுப்பயிர்கள் குறித்த பரிசோதனைகளை 6 மாதங்களுக்குள் முடித்துநாடு முழுவதும் விரிவாக அமல்படுத்தப்படும் எனவும் மோடி அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தீக்கதிர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் வந்துள்ள தகவல்கள்... பல ஆண்டுகளாக பெரும்பான்மையான இந்திய விவசாயத்தில் உணவுக்கான உற்பத்தியே நடந்து வருகிறது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் மட்டும் பணப்பயிர்களும் ஆடம்பரப் பயிர்களும் நமது விவசாயத்தில் திணிக்கப்பட்டன. இதன் … Continue reading விவசாயத்தை கார்ப்பரேட் தொழிலாக்குங்கள்: பொருளாதார ஆய்வறிக்கை அரசுக்கு பரிந்துரை

ஜான்சன்&ஜான்சன் டால்கம் பவுடரில் கேன்சர் காரணிகள்:மனித உயிரை மதிக்காத கார்ப்பரேட் பேராசையை வெளிக்கொண்டு வந்த வழக்கு !!!

அமெரிக்காவின் அலபாமாவில் வசித்து வந்த plaintiff Jacqueline Fox என்ற பெண்மணி, கடந்த சில வருடங்களுக்கு முன் மிசோரி நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.  அதில், கடந்த 35 வருடங்களாக ஜான்சன்&ஜான்சன் பேபி பவுடர் மற்றும்  Shower to Shower  பவுடரை அந்தரங்க சுகாதாரதிற்காக உபயோகபடுத்தி வந்ததாகவும், அதன் காரணமாக தனக்கு கருப்பை கேன்சர் ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டி இருந்தார். கருப்பை கேன்சர் இருப்பதாக 2013-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட காலத்திற்கு முன்பாகவே, கடந்த … Continue reading ஜான்சன்&ஜான்சன் டால்கம் பவுடரில் கேன்சர் காரணிகள்:மனித உயிரை மதிக்காத கார்ப்பரேட் பேராசையை வெளிக்கொண்டு வந்த வழக்கு !!!

இந்தியாவில் தேச துரோகிகளால் நிரம்பிய மாநிலம் எது தெரியுமா ?: பட்டியலை பாருங்கள் !

இந்தியாவில் தேச விரோத குற்றத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையை, தேசிய குற்றவியல் ஆவண காப்பகம் வெளியிடும் வருடாந்திர அறிக்கையை வைத்து, அதுல் தாகூர் என்பவர் ஆய்வு செய்ததில், தேச விரோதிகள் அதிகம் வசிக்கும் மாநிலங்கள் எவை எவை என்று கண்டறிந்திருக்கிறார். *அதன்படி, 2014-ம் ஆண்டு தேச விரோத குற்றத்தின் கீழ், பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்களே அதிகம் கைது செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. *தீவிர இடதுசாரி  இயக்கங்கள் உள்ள  இந்த இரண்டு மாநிலங்களில் ,  … Continue reading இந்தியாவில் தேச துரோகிகளால் நிரம்பிய மாநிலம் எது தெரியுமா ?: பட்டியலை பாருங்கள் !

தொடங்குகிறது பட்ஜெட் கூட்டுத்தொடர்: அல்வாவை கிளறி முடித்த அருண்ஜெட்லி!

செவ்வாயன்று தொடங்கும் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரில் ரோஹித் வெமுலா தற்கொலை, ஜவஹர்லால் பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தலைவர் கன்னய்யகுமார் கைது உள்ளிட்ட பிரச்சனைகள் மற்றும் பதான்கோட் தீவிரவாதிகள் தாக்குதல் ஆகிய பிரச்சனைகள் பெரும் கொந்தளிப்பை உருவாக்கும் என சொல்கிறது தீக்கதிர் நாளிதழ்.  செவ்வாயன்று துவங்கும் பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதி மார்ச் 16 வரை நீடிக்கிறது. இரண்டாவது பகுதி ஏப்ரல் 25லிருந்து தொடங்கி மே13 வரை நடைபெறுகிறது. நடைபெறவுள்ள முதல் பட் ஜெட் கூட்டத்தொடரில் … Continue reading தொடங்குகிறது பட்ஜெட் கூட்டுத்தொடர்: அல்வாவை கிளறி முடித்த அருண்ஜெட்லி!

ரிலையன்ஸ் உருவாக்கும் இராணுவம்: இந்திய இராணுவத்தில் பணியாற்றிய 16 ஆயிரம் வீரர்கள் தேர்வு!

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னய்யா குமார் கைது விவகாரம், சத்தீஸ்கரில் போராளிகள், பத்திரிகையாளர் மீது தாக்குதல், ஜாட் சமூகத்தினரின் போராட்டம் என ஊடகங்கள் பரப்பரக்காக இயங்கிக் கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் ஒரு முக்கியமான செய்தியை ஊடகங்கள் ‘கண்டுகொள்ளாமல்’ இருக்கின்றன. கண்டுகொள்ளவில்லை என்பதைவிட, அது தம் எஜமானர் விஷயத்தில் தலையிடுவது போன்றதாகிவிடும் என்கிற பயமும் காரணமாக இருக்கலாம். இந்தியாவின் பெரிய ஊடக குழுமங்களில் ஒன்றான நெட்வொர்க் 18 குழுமத்தின் முதலீட்டாளர் முகேஷ் அம்பானி குறித்து செய்திகள் வெளியிடுவதில் கலக்கம் … Continue reading ரிலையன்ஸ் உருவாக்கும் இராணுவம்: இந்திய இராணுவத்தில் பணியாற்றிய 16 ஆயிரம் வீரர்கள் தேர்வு!

மக்கள் வரிப்பணத்தில் படித்துவிட்டு வெளிநாடுகளுக்கு சேவை செய்பவர்கள்தான் தேசபக்தர்களா?

பூ.கொ.சரவணன் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். பட்டதாரிகள் மக்களின் வரிப்பணத்தில் படித்துவிட்டு, வெளிநாடுகளுக்கு ஓடுகிறார்கள் என்று இடதுசாரிகள், போராளிகள் விமர்சித்த பொழுதெல்லாம் ‘அதுல என்ன இருக்கு?’ என்கிற ரீதியில் பதில்கள் இந்தியாவைக் குறைச்சொல்லி வந்தன. இட ஒதுக்கீட்டை முக்கியமான காரணமாக வேறு கைகாட்டினார்கள். அற்புதமான கல்வி நிறுவனங்களை உருவாக்குவதில் நம்முடைய கல்விமுறை அடைந்த தோல்வியும் இப்படியொரு பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது என்பதையும் உணர முடிகிறது. அது இருக்கட்டும்.பல கோடி மக்களின் வரிப்பணத்தில் படித்துவிட்டு தேசபக்திக்குத் துரோகம் செய்யும்வகையில் காஷ்மீர் தீவிரவாதி ஒருவருக்கு … Continue reading மக்கள் வரிப்பணத்தில் படித்துவிட்டு வெளிநாடுகளுக்கு சேவை செய்பவர்கள்தான் தேசபக்தர்களா?

“ரத்தத்தால் திலகமிடுவோம்; குண்டுகளால் ஆரத்தி எடுப்போம்” என்று முழங்கிய ஏபிவிபி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? தேசத்துரோக குற்றம்சாட்டப்பட்ட கன்னையா குமார் கேள்வி

மகிழ்நன் பா.ம தேசத்துரோக குற்றம் சுமத்தப்பட்டு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் தலைவர் கண்ணையா குமார் ஏன் கைது செய்யப்பட்டார் என்பதற்கு வலுவான காரணங்கள் இருக்கின்றன. ஏனெனில் அவர், காவி பயங்கரவாதத்தை கடுமையாக எதிர்த்தவராக இருந்திருக்கிறார். அவர் ஆற்றிய ஒரு உரையின் தமிழாக்கம் இது: “எங்களுக்கு தேசபக்திக்கான சான்றிதழ் ஆர்.எஸ்.எஸிடமிருந்து வேண்டாம். 80 விழுக்காட்டிற்கும் மேல் ஏழைகள் வசிக்கும் இந்த நாட்டில், நாங்கள் ஏழைகள் நலனுக்காகவே உழைப்போம். அதுவே எங்களை பொறுத்தவரை தேசபக்தியாகும் எங்களுக்கு பாபாசாகேப் அம்பேத்கர் மீது … Continue reading “ரத்தத்தால் திலகமிடுவோம்; குண்டுகளால் ஆரத்தி எடுப்போம்” என்று முழங்கிய ஏபிவிபி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? தேசத்துரோக குற்றம்சாட்டப்பட்ட கன்னையா குமார் கேள்வி

#FreeBasics: ஃபேஸ்புக்கும் புதிய காலனிய ஆதிக்கமும்

Shan Karuppusamy இந்தியாவில் ஃப்ரீ பேசிக்ஸ் அனுமதிக்கப்படவில்லை என்ற செய்தியைக் கேட்டதும் மார்ஸ் ஏமாற்றமடைந்ததாக தெரிவித்தார். அதே நேரத்தில் அவர்களின் போர்ட் ஆஃப் டைரக்டர்களில் ஒருவரான மார்ஸ் ஆண்ட்ரீசன் "காலனி ஆதிக்கத்தை எதிர்த்து பொருளாதார அழிவிற்கு செல்வது இந்தியாவில் பல ஆண்டுகளாக நடப்பதுதானே.. இப்போது மட்டும் எதற்கு அதை மாற்ற வேண்டும்?" என்று ஒரு ட்வீட் வெளியிட்டிருக்கிறார். இதன் மூலம் இரண்டு கருத்துகளை அவர் வெளிப்படுத்துகிறார். இந்தியா காலனி ஆதிக்கத்தில் இருப்பதுதான் அதற்கு நல்லது என்பதையும் ஃபேஸ்புக் … Continue reading #FreeBasics: ஃபேஸ்புக்கும் புதிய காலனிய ஆதிக்கமும்

உயிர்காக்கும் மருந்துகளின் விலையை உயர்த்துவதுதான் மேக் இன் இந்தியாவா?

கடந்து போன பிப்ரவரி 4-ஆம் தேதி உலக புற்றுநோய் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. அப்போது அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சாந்தா, “இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் புற்றுநோயாளிகள் உருவாகிறார்கள்” என்ற அதிர்ச்சித் தகவலைப் பகிர்ந்துகொண்டார். வளர்ந்து வரும் நாடான இந்தியாவுக்கு புற்றுநோய் போன்ற உயிர்க்கொல்லி நோய்கள் பெருகுவது நல்ல அறிகுறி அல்ல.  எது ‘வளர்ச்சி’ என்கிற அறியாமை இருப்பதே இந்த நோய் வேகமாகப் பரவிவரக் காரணம். புகையிலை, மது, வேண்டாத கொழுப்பு சத்துள்ள உணவு, … Continue reading உயிர்காக்கும் மருந்துகளின் விலையை உயர்த்துவதுதான் மேக் இன் இந்தியாவா?

நிறுவனங்கள் விற்பனைக்கு: பெல், ஓஎன்ஜிசி, இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம்!

நிதியமைச்சர் அருண் ஜெட்லியால் தாக்கல் செய்யப்படவுள்ள 2016 - 17க்கான பட்ஜெட் பெரும்முதலாளிகளால் உற்றுநோக்கப்படுகிறது. இப்பட்ஜெட்டில் விவசாயம், போக்குவரத்துத் துறை ஆகியவற்றுடன் பாரத மிகுமின் நிறுவனம் (பெல்) போன்ற மதிப்பு மிக்க நிறுவனங்கள், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம், இந்திய எண்ணெய் கழகம், இந்துஸ்தான் பெட்ரோலிய கழகம் , பாரத் பெட்ரோலிய கழகம், இந்துஸ்தான் ஏரோனெடிக்ஸ் லிமிடெட்  மற்றும் பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட்  போன்ற எண்ணெய் மற்றும் பாதுகாப்புத் துறையில் உள்ள மிகமிக முக்கிய … Continue reading நிறுவனங்கள் விற்பனைக்கு: பெல், ஓஎன்ஜிசி, இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம்!