அறிவழகன் கைவல்யம் நீண்ட நாட்கள் என்று சொல்ல முடியாது, இந்தியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய்ப்படுகை மற்றும் இயற்கை எரிவாயு நிலைகளைக் கண்டறியும் நிறுவனம், இந்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் - ONGC கடன்களற்றதாக மட்டுமல்ல, நாட்டின் மிகப்பெரிய லாபமீட்டும் நிறுவனமாகவும் இருந்தது, அதுமட்டுமல்ல, நாட்டின் Cash Rich நிறுவனமும் கூட. நாட்டின் காவல்காரர் மோடியின் திறமையான ஆட்சிக்காலத்தில் இந்த நிறுவனம் ஒரு பரிதாபமான நிலையை எட்டியிருக்கிறது, 1950-60 ஆம் ஆண்டுகளில் வளர்ச்சி … Continue reading அம்பானிக்காக ONGC நிறுவனத்தை படுகுழியில் தள்ளிய ’தேசபக்தர்’ மோடி!
பகுப்பு: இந்திய பொருளாதாரம்
உர்ஜித் பட்டேலின் ராஜினாமா என்ன விளைவுகளை ஏற்படுத்தும்?
டீமானிடைசேஷன் சமயத்தில் உர்ஜித் பட்டேல் வாயை மூடிக் கொண்டு இருந்தார். ஆனால் இரண்டே வருடங்களில் ரிசர்வ் வங்கியின் ஆய்வே, அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பது தரவுகளோடு நிரூபித்தது.
எளிதாக தொழில் தொடங்குகிற நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னேற்றம்: மோடி அரசின் விளம்பர பித்தலாட்டம்
அருண் நெடுஞ்செழியன் எளிதாக தொழில் தொடங்கும் நாடுகளின் பட்டியலில் 100 வது இடத்திற்கு முன்னேரியுள்ளதை மிகப் பெரும்சாதனையாக பாஜக அமைச்சர்கள் விளம்பரப் படுத்தி வருகிறார்கள். பத்திரிக்கைகளில் முழுப்பக்க விளம்பரங்கள்,நிதி அமைச்சரின் விளம்பரங்கள் என மிகவும் ஆடம்பரமான வகையில் ,போலியான கருத்துரவக்காத்தை மேற்கொள்ள மோடி அரசு முயற்சித்து வருகிறது. உலக வங்கி வெளியிட்டு வருகிற இந்த பட்டியலில்.சென்ற ஆண்டில் 130 ஆவது இடத்தில் இருந்த இந்தியா தற்போது ஒரே ஆண்டில் (2016- ஜூன் முதலாக 2017 -ஜூன் )வரையிலான … Continue reading எளிதாக தொழில் தொடங்குகிற நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னேற்றம்: மோடி அரசின் விளம்பர பித்தலாட்டம்
பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் முதலாண்டு நாளில் தேசம் தழுவிய எதிர்ப்பு – இடதுசாரி கட்சிகளின் அறைகூவல் !
இந்தியா முழுவதும் ஒட்டுமொத்தமாக நிலமைகள் மோசமாகிக் கொண்டு இருக்கின்றன; பொதுமக்களின் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இது குறித்து இடதுசாரி கட்சிகள் கவலை தெரிவிக்கின்றன . வகுப்புவாத அடிப்படையில் மக்களை அணி திரட்டுவது கூர்மையாக நடக்கிறது ; பாராளுமன்ற ஜனநாயக நிறுவனங்களின் மதிப்பு குறைக்கப்படுகிறது ; ஜனநாயக உரிமைகள் மீதும் , குடிமை உரிமைகள் மீதான தாக்குதல்கள் அதிகரிக்கின்றன. எதேச்சதிகார முறையில், திடீரென்று பணமதிப்பு நீக்கத்தை பிரதம மந்திரி அறிவித்து ஓர் ஆண்டு ஆகிறது.இடதுசாரி கட்சிகள் எதிர் … Continue reading பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் முதலாண்டு நாளில் தேசம் தழுவிய எதிர்ப்பு – இடதுசாரி கட்சிகளின் அறைகூவல் !
இந்தியப் பொருளாதாரத்தின் அடிப்படை சிக்கல்கள்: அருண் நெடுஞ்செழியன்
ஆட்சிக்கு வந்தால் ஒரு கோடி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன் என முழங்கிய மோடி, இன்று நான் பொருளாதார மேதையல்ல என தனது பலவீனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பொருளாதாரச் சரிவை எதிர்கொள்ள Dictatorship கூட வரலாம்!
உள்நாட்டு உற்பத்தியிலும், வேளாண்மையிலும் மிகவும் பின் தங்கியிருப்பதைக் குறித்து கவலைப்படாமல், இங்கே பிரச்சனைகள் வந்த போதெல்லாம் அதை சமாளிப்பதற்காகவே மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் அமைந்தன.
பொருளாதார மந்தநிலை: நிதியமைச்சர் அருண்ஜெட்லி நிபுணர்களுடன் ஆய்வு
இந்தியா எதிர்கொண்டிருக்கும் பொருளாதார மந்தநிலை குறித்து நிதியமைச்சர் அருண்ஜேட்லி நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வணிக அமைச்சர் சுரேஷ் பிரபு மற்றும் பொருளாதார நிபுணர்கள் கலந்துகொள்கின்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், தனியார் முதலீடுகளை புதுப்பித்தல் போன்ற விவகாரங்கள் பேசப்பட உள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நடப்பு காலாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் (GDP growth) கடந்த மூன்று ஆண்டுகளில் மிக குறைந்த அளவுவாக … Continue reading பொருளாதார மந்தநிலை: நிதியமைச்சர் அருண்ஜெட்லி நிபுணர்களுடன் ஆய்வு
அன்புள்ள மோடிஜீ… ஒரு மூத்த குடிமகனின் வலிமிக்க கடிதம்!
2014ல் நீங்கள் பொறுப்புக்கு வந்த பிறகு மூத்த குடிமக்களுக்கு எதையும் நீங்கள் செய்யவில்லை. உங்களால் புள்ளி விபரங்களைக் குறைக்க முடிந்திருக்கிறதே தவிர விலைகளை குறைக்க முடியவில்லை. பருப்பு, உப்பு, வெங்காயம், இப்போது தக்காளியென தினசரி பயன்படுத்தும் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டிருக்கிறது.
நிதி ஆயோக் துணைத்தலைவர் அரவிந்த் பனகாரியா ராஜினாமா ஏன்?
தாராளப் பொருளாதாரவாதிகள் பெரும்பாலும் வலது பாசிசத்தையும் கம்யூனிசத்தையும் ஒன்றாக பார்க்க கூடியவர்கள். வலது பாசிசத்திற்கும் கம்யூனிசத்திற்கும் இடைப்பட்ட மேற்குலக பாணியிலான முதலாளித்துவ ஜனநாயகத்தை ஆதரிப்பவர்கள். அதைத்தான் இந்தியாவில் அமலாக்க முயன்றனர் ராஜனும் அரவிந்தும். ஆனால், வலது பாபுலிச சக்திகளின் அரசியல் நெருக்கடிகளை தாக்கு பிடிக்க இயலாமல் ஓடுகின்றனர்.
ஜி.எஸ்.டி. அவசியம் தெரிந்துகொள்ள நான்கு விஷயங்கள்!
தனி நபர் வருமானம் என்பது மிக வேகமாக சரிய தொடங்குவதையும், கடன்கள் கூடுவதையும், கடன்களை அடைக்க வழியின்றி குடும்பங்கள் தவிக்க போவதையும், வங்கிகளின் கட்டண உயர்வால் சிக்குண்டு தவிக்கும் சிறு குறு வணிகர்களையும், பெரும் தொழில் நிறுவனங்களால் கைவிடப்படும் தனி நபர் தொழில் முனைவோர்களையும், பெரு நிறுவனங்கள் மட்டுமே கோலோச்சும் ஒரு வணிக தளத்தில் நிற்கவும் இயலாமல் இழுத்து மூடப்படும் சுயதொழில்களையும் மனக்கண்ணால் பார்க்கமுடிக்கிறது.
ஜி.எஸ்.டி.: தோசைக்கு பதிலாக, பீட்சாவை உண்ணச்சொல்கிறது அரசு!
இட்லிக்கும்,தோசைக்கும் 18% ஜிஎஸ்டி. கார்ப்பரேட்காரனின் பீட்சாவுக்கு 5% ஜிஎஸ்டி ஏன்?
வேகமாக வளரும் பொருளாதார நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியா கீழிறங்கியது!
வேகமாக வளரும் பொருளாதார நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியா கீழிறங்கி இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகாலத்தில் இல்லாத அளவுக்கு மார்ச் மாதத்துடன் முடிந்த காலாண்டின் பொருளாதார வளர்ச்சி அட்டவணை குறைந்துள்ளதாக டாய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி அதிர்ச்சி அளிக்கும் வகையில் குறைந்துள்ளதே காரணம் என செய்தி தெரிவிக்கிறது. ஜனவரி-மார்ச் மாதத்துக்கான பொருளாதார வளர்ச்சி 6.1 சதவீதமாக உள்ளது. இது எதிர்பார்த்த அளவைவிட 1 சதவீதம் குறைவு. பொருளாதார நிபுணர்கள் எதிர்ப்பார்த்த அளவு 7.1 … Continue reading வேகமாக வளரும் பொருளாதார நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியா கீழிறங்கியது!
இந்தியாவின் தேசியம் கோமியத்தில் இருக்கிறது!
அவர்களின் தேசியம் உழைப்பில் இருக்கிறது. இங்கே கோமியத்தில் இருக்கிறது. விரைவில் அதையும் பாட்டிலாக சைனாக்காரனே அனுப்பினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
பட்ஜெட் 2017: ஐந்து மாநில தேர்தல் சலுகை பட்ஜெட்!
அருண் நெடுஞ்செழியன் பட்ஜெட் அறிவிப்பு வரவுள்ள ஐந்து மாநில தேர்தலை ஒட்டி சில சலுகைகளை எலும்புத் துண்டுகளைப் போல வீசியுள்ளது. செல்லாக் காசு அறிவிப்பு மற்றும் புதிய சேவை வரியை சுற்றியே பெரும் பொருளாதார மாற்றங்களை சாதனையாக கட்ட முனைகிறது. இதை கார்பரேட் ஊடகங்கள் பெரிதுபடுத்தும். குறிப்பாக ஊரக வேலை வாய்ப்புத் துறைக்கு கூடுதலாக பத்தாயிரம் கோடி ஒதுக்கீடு, சிறு குறு தொழில்களுக்கு சில வரிச்சலுகை போன்றவற்றை கோடிட்டு காட்டலாம். மாறாக பட்ஜெட்டைவிட, பட்ஜெட்டுக்கு முன்பாக வெளியிட்ட பொருளாதார அறிக்கையானது ஆளும்வர்க்க … Continue reading பட்ஜெட் 2017: ஐந்து மாநில தேர்தல் சலுகை பட்ஜெட்!
சந்தை நிலையை காரணம் காட்டி, தனியார்மயம்… பட்ஜெட்டில் மத்திய அரசு செய்யப்போவது இதுதானா?
அருண் நெடுஞ்செழியன் உலகப் பொருளாதாரம் பெரும் மந்த நிலையில் 3.1 % விழுக்காடிற்கு தடுமாறிக் கொண்டிருக்கிற நிலையில்,சர்வதேச அரசியல் அரங்கில் ரஷ்யா-சீனா-ஈரான் கூட்டணி புதிய உலக அடுக்காக வளர்ந்து வருகிற நிலையில்,அமெரிக்காவின் புதிய அதிபர் டிரம்ப்பின் அதிரடி protectinist கொள்கையானது உலகப் பொருளாதாரத்தில் குழப்பம் ஏற்படுத்திவருகிற நிலையில், நாளை இந்தியாவின் ஆளும்வர்க்கம் 2017-18 ஆண்டிற்கான பட்ஜெட்டை அறிவிக்க உள்ளது முக்கியத்துவம் வாய்ந்த அரசியல்-பொருளாதார நிகழ்வாக காணவேண்டியுள்ளது. இந்திய முதலாளிய வர்க்கத்தைப் பொறுத்தவரை அதன் வரலாற்று வளர்ச்சிப் போக்கில் … Continue reading சந்தை நிலையை காரணம் காட்டி, தனியார்மயம்… பட்ஜெட்டில் மத்திய அரசு செய்யப்போவது இதுதானா?
நிதி மூலதன எழுச்சிப் போக்கும், இந்தியப் பொருளாதாரத்தின் நெருக்கடி நிலையும்…
அருண் நெடுஞ்செழியன் 2008 ஆம் ஆண்டில் அமெரிக்க வங்கிகளின் நிதி நெருக்கடியால் ஏற்பட்ட சர்வதேச பொருளாதார தேக்க நிலையின் போது, இங்கிலாந்து ராணி, முதலாளித்துவ பொருளாதார அறிஞர்களிடம் ஒரு கேள்வி கேட்டாராம். இவ்வளவு அறிஞர்கள், உள்கட்டமைப்பு வசதிகள், ஆய்வு நிறுவனங்கள் இருந்தும் இவ்வாறு ஒரு நெருக்கடி வர உள்ளது என முன் கூட்டியே உங்களால் ஏன் சொல்ல இயலவில்லை? என்றாராம். முதலாளித்துவ அறிவாளிப் பிரிவினர் இந்நெருக்கடியை அவதானிக்க இயலாமைக்கு காரணம் உண்டு. அவர்களின் சொந்த அமைப்பு முறையின் பலவீனங்களை அவர்களால் … Continue reading நிதி மூலதன எழுச்சிப் போக்கும், இந்தியப் பொருளாதாரத்தின் நெருக்கடி நிலையும்…
”ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெறும் முடிவு ரிசர்வ் வங்கியின் நம்பகத்தன்மையை பாதித்துள்ளது”
ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெறும் முடிவு ரிசர்வ் வங்கியின் நம்பகத்தன்மையை பாதித்துள்ளதாக ஸ்டாண்டர்ட் & புவர் என்ற பன்னாட்டு கடன் அளகீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் பிரதமர் நரேந்திரமோடி கணக்கில் வராத பணத்தை ஒழிக்கும் நோக்கமாக ரூ. 500, ரூ. 1000 நோட்டுகள் இனி செல்லாது என அறிவித்தார். 86 சதவீத மக்கள் பயன்படுத்து பணப்பறிமாற்றம் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டது. முன்னாள் பிரதமரும் நிதியமைச்சருமான மன்மோகன் சிங், நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்திய சென், … Continue reading ”ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெறும் முடிவு ரிசர்வ் வங்கியின் நம்பகத்தன்மையை பாதித்துள்ளது”
புழக்கத்திற்கு அதிகமாக வங்கிகளுக்குள் பணம்: விபரீதமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் இந்திய பொருளாதாரம்
மாதவராஜ் வினை விதைத்தவன் வினையை அறுப்பான் என்பதும், கத்தியை எடுத்தவன் கத்தியால் சாவான் என்பதும் உண்மையானால் ருபாய் நோட்டுகளால் மக்களை வதைத்தவன் ருபாய் நோட்டுகளாலேயே தன் முடிவைக் காண்பான் என்பதும் உண்மையாகலாம். இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் 500 மற்றும் 1000 ருபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு 15.44 லட்சம் கோடி. இந்த ருபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த நவம்பர் 8ம் தேதி அன்று ரிசர்வ் வங்கி அறிக்கைப்படி வங்கிகளுக்குள் இருந்த 500 மற்றும் 1000 ருபாய் … Continue reading புழக்கத்திற்கு அதிகமாக வங்கிகளுக்குள் பணம்: விபரீதமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் இந்திய பொருளாதாரம்
50 நாட்களில் தட்டுப்பாடு தீராது: சங்கம் தரும் புள்ளிவிவரம்
நவம்பர் மாதம் முதல் வாரத்திலேயே பணம் அச்சிடப்படும் பணி தொடங்கப்பட்டிருந்தாலும் தேவையான அளவு 500 ரூபாய்த் தாள்களை அச்சடித்து முடிக்க 2017 ஏப்ரல் இறுதியாகும் என்று இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் தெரிவித்துள்ளது. இவ்வமைப்பின் தமிழ்நாட்டுப் பொதுச்செயலர் சி.பி.கிருஷ்ணன் இது பற்றி வெளியிட்ட அறிக்கையிலிருந்து... ரிசர்வ் வங்கிக்குச் சொந்தமான பாரதிய ரிசர்வ் பாங்க் நோட் முத்ரன் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம், கர்நாடக மாநிலத்தில் மைசூரிலும், மேற்குவங்க மாநிலத்தில் சல்போனியிலும் உள்ள ரூபாய் நோட்டு அச்சடிக்கும் இரண்டு … Continue reading 50 நாட்களில் தட்டுப்பாடு தீராது: சங்கம் தரும் புள்ளிவிவரம்
வரலாறு காணாத நிர்வாக சீரழிவு; நன்மை விளைவதற்குள் இறந்திருப்போம் : ரூபாய் நோட்டு விவகாரத்தில் மன்மோகன் சிங் காட்டம்…..
ராஜ்யசபாவில் இன்று செல்லாத ரூபாய் நோட்டு தொடர்பாக விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், அரசின் நிர்வாக கோளாறுகளை கடுமையாக சாடினார். அவருடைய பேச்சின் தமிழாக்கத்தை கீழே அளித்திருக்கிறோம். "ரூபாய்நோட்டு விவகாரத்தில் மத்திய அரசின் நோக்கத்தை எதிர்க்கவில்லை. ஆனால், அணுகுமுறையை கடுமையாக எதிர்க்கிறோம். இதை நடைமுறைபடுத்துவதில் வரலாறு காணாத நிர்வாக சீரழிவு ஏற்பட்டிருக்கிறது. இந்த நடவடிக்கையின் இறுதி விளைவு எப்படி இருக்கும் என்பது நமக்கு தெரியாத சூழலில், மக்கள் கடும் அவஸ்தையில் இருப்பதை … Continue reading வரலாறு காணாத நிர்வாக சீரழிவு; நன்மை விளைவதற்குள் இறந்திருப்போம் : ரூபாய் நோட்டு விவகாரத்தில் மன்மோகன் சிங் காட்டம்…..
“தாராளமயம்” ஏகாதிபத்தியத்தின் இறுதிக் கட்டமா?: அருண் நெடுஞ்செழியன்
அருண் நெடுஞ்செழியன் மூலதனத்தின் அடிப்படை முரண்பாடுகளை முதலாளியம் களையாதவரை,அதற்கு நிரந்தர தீர்வென்று எதுவும் இல்லை.அப்படி அது களையும் பட்சத்தில் அது முதலாளித்துவமாக இருக்க முடியாது. மூலதனத்தை திரட்டுதல்,மறு உற்பத்தியில் உபரி மூலதனத்தை முதலீடு செய்தல்,மீண்டும் உபரி மூலதனத்தை படைத்தல் என்ற அதன் சுற்றோடத்தில் எழுகிற அடிப்படை முரண்பாடுகளாக டேவிட் ஹார்வி(மார்க்சின் வழி) சுட்டிக் காட்டுவது • மூலதனத்திற்கும் உழைப்பிற்கும் இடையிலான அடிப்படையான முரண்பாடுகள் • உபரி மூலதனத்தை பங்கிடுவதில் எழுகிற (வறுமைx வளம்) ஏற்றத்தாழ்வுகளை மேலாண்மை செய்வதில் … Continue reading “தாராளமயம்” ஏகாதிபத்தியத்தின் இறுதிக் கட்டமா?: அருண் நெடுஞ்செழியன்
டெபிட் கார்டு மூலம் ரூ. 2000 பெறலாம்: மத்திய அரசின் முகவராக பிக் பஜார்!
ரூ. 500. ரூ. 1000 நோட்டுகள் தடை அறிவிக்கப்பட்டதை அடுத்து நாடு முழுவதும் கடும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை போக்கும் விதமாக, மத்திய அரசு பெட்ரோல் பங்குகளில் செல்லாத நோட்டுக்களுக்கு சில்லறை பெறலாம என அறிவித்திருந்தது. இந்நிலையில் பிக் பஜார் என்ற தனியார் ரீ டெயில் நிறுவனம் மூலமாக டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி ரூ. 2000 பெறலாம் என பிக் பஜாரின் நிறுவனர் கிஷோர் பியானி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். நாளை மறுநாள் முதல் இது … Continue reading டெபிட் கார்டு மூலம் ரூ. 2000 பெறலாம்: மத்திய அரசின் முகவராக பிக் பஜார்!
வாராக் கடன்களை வசூலிக்க ரகுராம் ராஜன் ஏன் தீவிரம் காட்டினார்?
அருண் நெடுஞ்செழியன் 2008 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதாரா நெருக்கடி, அதைத்தொடர்ந்து 2012-13 இல் ஸ்பெயின்,கிரீசில் ஏற்பட்ட நெருக்கடி தற்போது 2016 இல் வளர்ந்து வருகிற நாடுகளான சீனா, இந்தியா மற்றும் பிரேசிலை சுற்றி சுருக்குக் கயிறாக சுற்றி வளைதுள்ளது. நெருக்கடியின் முதல் சுற்றானது, வளர்ந்த தொழில்மய நாடுகளில் துவங்கி அதன் இரண்டாம் சுற்று எம்ர்ஜிங் எகனாமி என சொல்லப்படுகிற ஆசிய, இலத்தீன் அமெரிக்க நாடுகளை முகாமிட்டுள்ளது. ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரமானது 3.5 விழுக்காடு அளவிற்கு … Continue reading வாராக் கடன்களை வசூலிக்க ரகுராம் ராஜன் ஏன் தீவிரம் காட்டினார்?
6 லட்சம் கோடி ரூபாய் வாராக்கடன் ; பெரு நிறுவனங்கள் மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் எப்போது மிஸ்டர் மோடி ?
ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை செல்லாதவை என்று அறிவித்ததன் மூலம் இந்தியாவில் புரட்சியை தொடங்கியிருக்கிறார் மோடி என்று ஊடகங்கள் பாராட்டி தள்ளிகொண்டு இருக்கின்றன. அது உண்மையா என்று பார்த்தால், சந்தேகமே ஏற்படுகிறது. சில கணக்குகளை கீழே பார்க்கலாம். இந்திய வங்கிகளில் வராமல் இருக்கும் கடன் தொகை கிட்டத்தட்ட ஆறு லட்சம் கோடிகளை எட்டி இருக்கிறது. பொதுத்துறை வங்கிகளின் உயிர் கிட்டத்தட்ட ஊசலாடி கொண்டிருக்கிறது. மிகப்பெரும் தொகைகளை வங்கிகளுக்கு அளிக்காவிட்டால், வங்கிகள் திவாலாவதை தடுக்க முடியாத சூழல் ஏற்பட்டிருப்பதாக … Continue reading 6 லட்சம் கோடி ரூபாய் வாராக்கடன் ; பெரு நிறுவனங்கள் மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் எப்போது மிஸ்டர் மோடி ?
இந்திய வங்கிகளின் நிதி மூலதன திவால் நிலையும்,மோடியின் பொருளாதார பயங்கரவாதமும்!
அருண் நெடுஞ்செழியன் 1 வங்கியும் நிதி மூலதன ஒன்றுகுவிப்பும்: நிலவுகிற சமூக அமைப்பினில்,பணம் - பொருள் பரிவர்த்தனைக்கான இடைத்தரக வேலையை செய்கிறது. வங்கி,பணப் பரிவர்த்தனைக்கான இடைத்தரக வேலையை செய்கிறது. பணமும் வங்கியும் முதலாளியப் பொருளாதாரத்தை சமூகமயப்படுத்துவதற்கு முக்கியப் பங்காற்றுகின்றன. இந்தியா போன்ற அரை தொழில்மய நாடுகளில்,ரொக்கப் பணமே பொருள் பரிமாற்று சாதனமாக 95 விழுக்காட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது.ஆனாலும் இந்த ரொக்கப் பணம்,அதாவது இந்த பண மூலதனம் முழுவதும், மையப்படுத்தப்பட்ட வகையில்,இந்திய முதலாளிய அரசு இதுவரை திரட்டியது இல்லை. ஒட்டுமொத்த … Continue reading இந்திய வங்கிகளின் நிதி மூலதன திவால் நிலையும்,மோடியின் பொருளாதார பயங்கரவாதமும்!
பத்தி: 7-ஆவது சம்பளக் கமிஷன்; நாம் அறிந்தவையும் அறியாதவையும்
கண்ணன் ராமசாமி 7-ஆவது சம்பளக் கமிஷன் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே அரசு ஊழியர்களுக்கு போனான்சா என்று அனைத்து ஊடகங்களும் கூப்பாடு போடத் துவங்கி விட்டன. 7000 ரூபாயாக இருந்த சம்பளம் தற்போது 18000 ரூபாயாக உயர்ந்திருக்கிறது என்பதே இவர்களது கவலை. இதன் கணக்கை சரிபார்த்துக் கொண்டு மேற்படி கட்டுரையை தொடருகிறேன். சராசரியாக ஒரு அடிமட்ட மத்திய அரசுத் தொழிலாளியின் சம்பளம் எவ்வளவாக இருந்தது? அடிப்படை சம்பளம்: 7000 ரூ, அகவிலைப்படி 8750, மொத்தம் 15750. இதில் தேசிய … Continue reading பத்தி: 7-ஆவது சம்பளக் கமிஷன்; நாம் அறிந்தவையும் அறியாதவையும்
“மாநிலங்களை கையேந்தும் நிலைக்குத் தாழ்த்திவிடாதீர்”: நாடாளுமன்றத்தில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு
சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டமுன்வடிவு கொண்டுவரப்படுகையில் மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படக்கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி எம்.பி. கூறினார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. புதனன்று மாநிலங்களவையில் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்புக்கு (ஜிஎஸ்டி) வகை செய்யும் விதத்தில் அரசமைப்புச்சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதற்கான சட்டமுன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது. இதில் பங்கேற்று சீத்தாராம் யெச்சூரி பேசியது: இப்போது கொண்டுவந்திருக்கிற இந்தச் சட்டத்திருத்தம் அரசமைப்புச் சட்டத்தில் மிகவும் முக்கியமான திருத்தம். … Continue reading “மாநிலங்களை கையேந்தும் நிலைக்குத் தாழ்த்திவிடாதீர்”: நாடாளுமன்றத்தில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு
மோடி + அதானி = மோடானி
இயற்கை வளங்களையும், மனித உழைப்பையும் சுரண்டுவதே `மோடானி மாடல்’ என்று நில பாதுகாப்பு இயக்கத்தின் மூன்று நாள் சிறப்பு மாநாட்டில் பங்கேற்ற அறிஞர்கள் சாடியுள்ளனர்.நில பாதுகாப்பு இயக்கத்தின் சிறப்பு மாநாடு குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் கடந்த வாரம் நடைபெற்றது. இம்மாநாட்டில் குஜராத் வளர்ச்சி என்ற மாயை உடைத்து நொறுக்கப்பட்டது.குஜராத் மாநிலத்தில் பாஜக கடந்த 17 ஆண்டுகளாக அதிகாரத்தில் உள்ளது. வளர்ச்சி வளர்ச்சி என்று முன்னிறுத்தப்பட்ட குஜராத்தின் இருண்ட பக்கங்கள் வெளியே வந்திருக்கின்றன என மாநாட்டில் உரையாற்றிய … Continue reading மோடி + அதானி = மோடானி
இந்துத்துவமும் நவதராளவாதமும் : அ.மார்க்ஸ்
அ.மார்க்ஸ் (ஒரு கருத்தரங்கில் ‘இந்துத்துவமும் பொருளியலும்’ எனும் தலைப்பில் பேசியது) பொருளியல் (economics) என்பது இன்று எல்லோராலும் புறக்கணிக்கப்பட்டுள்ள சூழலில் பொருளியல் குறித்த ஒருநாள் கருத்தரங்கொன்றை ஏற்பாடு செய்துள்ளது உண்மையில் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. பொருளியல் பற்றியே பேசிக் கொண்டிருப்பவர்கள் எனக் கருத்தப்பட்ட இடதுசாரிகளும் கூட இன்று மிக வேகமாக இந்தியப் பொருளாதாரம் அந்நியமூலதனத்துடன் பிணைக்கப்படும் சூழலில் அதிர்ந்துபோய் வாயடைத்துப் போயிருக்கும் சூழல்தான் இன்று நிலவுகிறது. பொதுப்புலத்தில் இன்று பொருளாதாரம் ஒரு பேச்சுப் பொருளாக இல்லை. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் … Continue reading இந்துத்துவமும் நவதராளவாதமும் : அ.மார்க்ஸ்
இந்திய வறுமையின் வரைபடம்…
சு. இரவிக்குமார் இது 2010 ல் இந்தியாவில் நிலவிய வறுமையின் வரைபடம். பீகார், சத்தீஷ்கர், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்ட மக்கள் வறுமையின் பிடியில் வாழ்கிறார்கள். மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், ஒரிஸ்ஸா, ஜார்க்கண்ட், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் 35 -40 சதவீத மக்கள் வறுமையில் வாழ்கிறார்கள். மேற்கு வங்கம், அருணாசலப் பிரதேசத்தில் 25-35 சதம் மக்கள் வறுமையின் பிடியில் இருக்கிறார்கள். தமிழ்நாடு, ஆந்ரா, கர்னாடகா, மகாராஷ்டிரம், குஜராத், ராஜஸ்தான், அரியானா, பஞ்சாப், உத்தரகண்ட், மேகாலயா, நாகலாந்து, … Continue reading இந்திய வறுமையின் வரைபடம்…
#Brexit: தேசியவாதத்தின் எழுச்சியும் உலகமயமாக்கல் எதிர்கொள்ளவிருக்கும் நெருக்கடியும்: எம். கே. வேணு
எம். கே. வேணு எதிர்பாராத விதமாக ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிவதற்கு ஆதரவாக மக்கள் வாக்களித்ததை அடுத்து பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், தனது பதவியை துறந்திருக்கிறார். ஐயூவிலிருந்து பிரிவதால் ஏற்படும் விளைவுகளை பிரிட்டன் எப்படி சமாளிக்கப் போகிறது என்கிற கேள்வி அப்படியே இருக்கிறது. வருகிற அக்டோபரின் நடைபெறவிருக்கும் தேர்தல் வரை கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக நீடிக்கப்போவதாக கேமரூன் அறிவித்துள்ளார். அதுவரை அவர் இடைக்கால பிரதமராக இருப்பார். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் பிரதமர்தான், ஐயூவிலிருந்து பிரிட்டன் பிரிந்துவருவதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்துவார் எனவும் … Continue reading #Brexit: தேசியவாதத்தின் எழுச்சியும் உலகமயமாக்கல் எதிர்கொள்ளவிருக்கும் நெருக்கடியும்: எம். கே. வேணு
அரசுத் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்.லுக்கு கட்டணத் திட்டங்களை வரையறுத்தது ரிலையன்ஸ்: எஸ்ஸார் டேப் வெளிப்படுத்தும் அதிர்ச்சி
By Meetu Jain with Ushinor Majumdar ‘எஸ்ஸார் டேப்ஸ்’ பெருமுதலாளிகள் இந்திய நீதித்துறையை, நாடாளுமன்றத்தை, வங்கிகளை, போட்டியாளர்களை, நிர்வாகிகளை எப்படி கையாண்டார்கள் என்பது குறித்து பயமுறுத்தும் உண்மையைச் சொல்கின்றன. ராடியா உரையாடல்களுக்கு பத்தாண்டுகளுக்கு முன்பே அரசாங்கம் எப்படியான மோசடிகளில் ஈடுபட்டது என்பதையும் இது காட்டுகிறது. முந்தைய பதிவை இங்கே படிக்கவும்: ராடியாவுக்கு முன்பே வாஜ்பாயி ஆட்சியில் இந்திய குடியரசு விற்பனைக்கு வந்தது; அதை வாங்கியது ரிலையன்ஸ்! எஸ்ஸார் ஒட்டுக்கேட்பு விவகாரத்தை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தவரான உபால், … Continue reading அரசுத் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்.லுக்கு கட்டணத் திட்டங்களை வரையறுத்தது ரிலையன்ஸ்: எஸ்ஸார் டேப் வெளிப்படுத்தும் அதிர்ச்சி
“இது ஒரு அற்புதமான கூட்டுப் பயணமாக இருந்தது!”: ஆர் பி ஐ ஊழியர்களுக்கு ரகுராம் ராஜன் எழுதிய இறுதி கடிதம்
தமிழாக்கம்: கண்ணன் ராமசாமி அன்புக்குரிய சக பணியாளர்களே, நான் செப்டம்பர் 2013 ல் ரிசர்வ் வங்கியியின் 23 ஆவது கவர்னராக பதவி ஏற்றுக் கொண்டேன். அந்த நேரத்தில், இந்திய ரூபாயின் மதிப்பு தினமும் ஊசலாடிக் கொண்டிருந்தது; பண வீக்கம் அதிகமாக இருந்தது மற்றும் வளர்ச்சி பலவீனமாக இருந்தது. இந்தியா, ‘உடையக் கூடிய ஐந்து நாடுகள்’ எனும் பட்டியலில் ஒன்றாகக் கருதப் பட்டது. கவர்னராக என்னுடைய தொடக்க உறையில், நான் உங்களுடன் கலந்து ஆலோசித்து ஒரு செயல்திட்டத்தை முன்வைத்தேன். அதில் … Continue reading “இது ஒரு அற்புதமான கூட்டுப் பயணமாக இருந்தது!”: ஆர் பி ஐ ஊழியர்களுக்கு ரகுராம் ராஜன் எழுதிய இறுதி கடிதம்
“உலக பொருளாதார மந்தநிலையில் மேக் இன் இந்தியா அறிவிப்பு திவாலாகிப் போவதற்கான அடையாளம்” பேரா. பிரபாத் பட்நாயக்
பேராசிரியர் பிரபாத் பட்நாயக் உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்கள் முதலீடு செய்யவே மறுத்துக் கொண்டிருக்கும் சூழலில், அவர்கள் தயாராக இல்லாத சூழலில்- மோடிஅரசாங்கம் “மேக் இன் இந்தியா” என்று உலக முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்திருப்பது என்பது கவனிக்கப்படாத ஒன்றாகவே உள்ளது. நமது நாட்டில் தாராளமயமாக்கலுக்குப் பிறகு விவசாயபொருட்களின் உற்பத்தி வீழ்ச்சியடைந்தது. குறிப்பாக உணவுப் பொருள் உற்பத்தியிலும் வீழ்ச்சியை சந்தித்தது. பொருள் உற்பத்தி குறைந்தது. அதேநேரம் தாராளமயம் காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியடைந்து வருகிறது என்று பெருமையுடன் … Continue reading “உலக பொருளாதார மந்தநிலையில் மேக் இன் இந்தியா அறிவிப்பு திவாலாகிப் போவதற்கான அடையாளம்” பேரா. பிரபாத் பட்நாயக்
அந்நிய முதலீட்டை குறைக்க வேண்டும் என்று சொன்னதுதான் ரகுராம் ராஜனை நீக்கக் கோரும் சுவாமியின் கடிதத்துக்குக் காரணமா?
ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனின் செயல்பாடுகளால் இந்தியப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக பாஜக எம்.பி.யும், அக்கட்சியின் மூத்த தலைவருமான சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டியுள்ளார். எனவே, அவரை உடனடியாக பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் சுவாமி வலியுறுத்தியுள்ளார். ரகுராம் ராஜனை ரிசர்வ் வங்கி ஆளுநராக முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு கடந்த 2013-ஆம் ஆண்டில் நியமித்தது. அவரது மூன்று ஆண்டு பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ள நிலையில், அவருக்கு பதவிநீட்டிப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், … Continue reading அந்நிய முதலீட்டை குறைக்க வேண்டும் என்று சொன்னதுதான் ரகுராம் ராஜனை நீக்கக் கோரும் சுவாமியின் கடிதத்துக்குக் காரணமா?
ரேஷன் கடைகள் மூடப்படுகிறதா? விவசாய மானியம் நிறுத்தப்படுகிறதா?: உலக வர்த்தக அமைப்புடன் என்னதான் ஒப்பந்தம் செய்திருக்கிறது மோடி அரசு?
இந்திய அரசு - உலக வர்த்தக அமைப்புடன் டிசம்பர் 2015-ல் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, இந்தியாவில் உள்ள ரேஷன் கடைகள் படிப்படியாக மூடப்படும் என்றும், விவசாயிகளுக்கான மானியம் முற்றிலும் நிறுத்தப்படும் என்றும் மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியுள்ளார். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அவருடைய பேட்டியின், முக்கியமான பகுதிகளை எழுத்து வடிவில் கீழே அளித்திருக்கிறோம். *வெளிநாட்டில் இருந்து உணவு பொருட்களை இந்தியாவிற்குள் தாராளமாக இறக்குமதி செய்வதற்கு பாரதீய ஜனதா அரசு, உலக வர்த்தக … Continue reading ரேஷன் கடைகள் மூடப்படுகிறதா? விவசாய மானியம் நிறுத்தப்படுகிறதா?: உலக வர்த்தக அமைப்புடன் என்னதான் ஒப்பந்தம் செய்திருக்கிறது மோடி அரசு?
கேரள கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் சுரண்டலுக்கு எதிராக இவர்கள் வெற்றி பெற்றது எப்படி?
தமிழகத்தின் சரவணா ஸ்டோர்ஸ், போத்தீஸ் போன்ற விற்பனை நிறுவனங்களில் அடிப்படையான எவ்வித உரிமைகளும் கிடைக்கப் பெறாமல் ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் வதைபடுகிறார்கள். சம்பளம், வேலை நேரம் உள்ளிட்ட விஷயங்களில் இதுபோன்ற நிறுவனங்கள் எவ்வித ஒழுங்கையும் பேணுவதில்லை. கொத்தடிமைகளைப் போலவே தங்களுடைய ஊழியர்களை வைத்திருக்கின்றன. தொழிலாளர்கள் ஒன்றுபட்டு போராடாடுவதன் மூலமே இத்தகைய ஒடுக்குமுறைகளை சுரண்டல்களை ஒழிக்க முடியும் என நிரூபித்த கேரள கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவன ஊழியர்கள் போராடி பெற்ற வெற்றியை உதாரணமாகக் கொள்ள வேண்டும். கேரளத்தில் முன்னணி … Continue reading கேரள கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் சுரண்டலுக்கு எதிராக இவர்கள் வெற்றி பெற்றது எப்படி?
மல்லையா போன்ற வங்கிக் கடன் மோசடிக்காரர்களை எப்படி எதிர்கொள்வது?
அ. மார்க்ஸ் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது," "கோதாவரி - கிருஷ்ணா பேசினில் ஏராளமாக எரிவாயு இருப்பதைக் கண்டு பிடித்துள்ளோம். இன்னும் இரண்டாண்டுகளில் எரிவாயு உற்பத்தியைத் தொடங்கி விடுவோம்" என அதிரடியாக அறிவித்து 11 ஆண்டுகள் ஆகியும் வாயு மட்டுமல்ல ஒரு ஏப்பம் கூட வெளிவரவில்லை. ஆனால் பொதுத்துறை வங்கிகளிலிருந்து இதுவரை 19,726 கோடி ரூபாய் அந்தத் திட்டத்திற்குக் கடன் பெறப்பட்டுள்ளது என்கிற உண்மையை சென்ற மார்ச் 31 அன்று CAG தணிக்கை அறிக்கை அம்பலப்படுத்தியது … Continue reading மல்லையா போன்ற வங்கிக் கடன் மோசடிக்காரர்களை எப்படி எதிர்கொள்வது?
கட்ட முடியாத கடன்; தற்கொலைக்கு தள்ளும் வறட்சி;சாப்பாட்டுக்கு வாய்க்கரிசியை நம்பியிருக்கும் குடும்பம்: இந்திய விவசாயியின் நிலை இதுதான்….
"பிள்ளைகளை கவனித்துக்கொள்" என்பதுதான், கனகையா என்ற விவசாயியின், தற்கொலைக்கு முன்னான கடைசி வார்த்தையாக இருந்திருக்கிறது. எப்போதாவது தலைகாட்டும் மின்சாரத்திற்காகவும், அரிதிலும் அரிதாக வரும் தண்ணீருக்காகவும், பாளம் வெடித்த தன்னுடைய இரண்டு ஏக்கர் விவசாய நிலத்தில் இரவு தங்குவது என்பது கனகய்யாவுக்கு இயல்பான ஒன்றுதான். ஆனால், "பிள்ளைகளை கவனித்துக்கொள்" சொன்ன அந்த கடைசி தொலைபேசிக்கு பின், எந்த ஒரு அழைப்பும் இல்லாததால், தெரிந்தவர்களை அழைத்து கொண்டு, அந்த ரெண்டு ஏக்கர் நிலத்திற்கு போன அவரின் மனைவி பார்த்தது, அங்கிருந்த … Continue reading கட்ட முடியாத கடன்; தற்கொலைக்கு தள்ளும் வறட்சி;சாப்பாட்டுக்கு வாய்க்கரிசியை நம்பியிருக்கும் குடும்பம்: இந்திய விவசாயியின் நிலை இதுதான்….
ஒரு கிலோ வெங்காயம் 30 பைசா!
ஆறு மாதத்துக்கு முன்பு வெங்காயம் விலை ரூ. 150 வரை விற்கப்பட்டது. உள்நாட்டின் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் வெளிநாட்டில் இருந்து வெங்காயம் இறக்குமதி ஆனது. ஆனால், இப்போது வெங்காயம் விலை ஒரு ரூபாய்க்கும் குறைந்திருக்கிறது. மத்திய பிரதேசத்தில் வெங்காய உற்பத்தி அதிகமாகிவிட்ட காரணத்தால், மொத்த விலை மண்டிகளில் வெங்காயம் கிலோ 30 பைசாவுக்கு விற்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப் பட்டிருக்கிறார்கள். மத்திய பிரதேசத்தின் நிமூச் மிகப் பெரிய வெங்காய சந்தை உள்ளது. இங்கே அதிகப் … Continue reading ஒரு கிலோ வெங்காயம் 30 பைசா!