சிறுபான்மையினருக்கு எதிரான நாடாக இந்தியா மீது ஏற்படும் பிம்பம் இந்திய பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தை பாதிக்கும் என ரகுராம் ராஜன் எச்சரித்துள்ளார். ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும், பொருளாதார நிபுணருமான ரகுராம் ராஜன் தற்போது தமிழ்நாடு அரசின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக உள்ளார். இவர் டெல்லியில் பொருளாதாரம் தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றினார். அந்த கருத்தரங்கில் பேசிய ராஜன், சிறுபான்மையினருக்கு எதிரான நாடாக இந்தியா பற்றி உருவாகும் பிம்பம் இந்திய நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம் … Continue reading சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் இந்திய பொருளாதாரத்தை பாதிக்கும்: ரகுராம் ராஜன் எச்சரிக்கை!
பகுப்பு: இந்தியா
பள்ளிகளில் பகவத் கீதை: ஆர்.எஸ்.எஸ். திட்டத்தை அமலாக்கும் பாஜக அரசுகள்!
9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டு முதல் பகவத் கீதை கற்பிக்கப்படும் என இமாச்சல பிரதேச அரசு தெரிவித்துள்ளது.இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்ட அந்த மாநில கல்வி அமைச்சர் கோவிந்த சிங் தாக்கூர், பள்ளிகளில் சமஸ்கிருதம் மற்றும் ஹிந்தி மொழிகளில் கீதை கற்பிக்கப்படும் எனவும் மூன்றாம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு சமஸ்கிருதம் அறிமுகப்படுத்தப்படும் எனவும் கூறினார். மாணவர்களுக்கு இந்திய கலாச்சாரத்தைப் பற்றி கற்பிக்கவும், அவர்களுக்கு தார்மீக ஊக்கத்தை அளிக்கவும் இந்தப் … Continue reading பள்ளிகளில் பகவத் கீதை: ஆர்.எஸ்.எஸ். திட்டத்தை அமலாக்கும் பாஜக அரசுகள்!
முஸ்லிம் இறைச்சி விற்பனையாளரை தாக்கிய பஜ்ரங் தள் அமைப்பினர்!
கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டு, கோயில் திருவிழாக்களில் இஸ்லாமிய வியாபாரிகள் புறக்கணிக்கப்பட்டதை அடுத்து, கர்நாடகாவில் மதவாத அரசியல் தற்போது 'ஹலால்' இறைச்சி விவகாரத்தை கையிலெடுத்துள்ளது. கர்நாடகத்தில் உகாதி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி முஸ்லிம் இறைச்சி விற்பனையாளர்களிடம் இந்துக்கள் ஹலால் செய்யப்பட்ட உணவுகளை வாங்கக்கூடாது என இந்துத்துவ அமைப்புகள் கடந்த ஒரு வாரமாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டன. https://twitter.com/Hatewatchkarnat/status/1509412639268499457?s=20&t=MvPNXMGU3JJjMyfFEpGiZg இந்துத்துவ அமைப்பினரின் இந்த வெறுப்புப் பிரச்சாரத்தின் பகுதியாக, கர்நாடகாவின் ஷிவமொக்கா மாவட்டத்தில் இறைச்சி விற்பனையாளர் ஒருவரை … Continue reading முஸ்லிம் இறைச்சி விற்பனையாளரை தாக்கிய பஜ்ரங் தள் அமைப்பினர்!
90% இந்திய ஊடகங்கள் அரசாங்கத்தை பாதுகாக்கின்றன: பத்திரிகையாளர் பி சாய்நாத்
தொண்ணூறு விழுக்காடு இந்திய ஊடகங்கள் அரசாங்கத்தை பாதுகாப்பதாக பத்திரிகையாளர் பி சாய்நாத் குற்றம்சாட்டியுள்ளார். ஏப்ரல் 1 ஆம் தேதி கர்நாடகாவின் குவெம்பு பல்கலைக்கழகத்தில் டாக்டர் சாந்திநாத் தேசாய் நினைவு அறக்கட்டளை விரிவுரையை ஆற்றியபோது, பத்திரிகையாளர் பி சாய்நாத், இன்றைய ஊடகங்களை பிரதிநிதித்துவமற்ற, ஒதுக்கிவைக்கும் மற்றும் குறுகிய பாத்திரத்தை வகிப்பதாக கூறினார்.‘இந்தியாவில் இதழியல்: 200 ஆண்டுகளில் நாம் எங்கிருக்கிறோம்?’ என்ற தலைப்பில் பி. சாய்நாத் விரிவுரையாற்றினார்.அப்போது அவர், “சுதந்திரப் போராட்டத்தின் போது சிறிய இந்திய ஊடகங்கள் குறிப்பிடத்தக்க பங்காற்றின. … Continue reading 90% இந்திய ஊடகங்கள் அரசாங்கத்தை பாதுகாக்கின்றன: பத்திரிகையாளர் பி சாய்நாத்
தேர்வு எழுத ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை அனுமதித்த 7 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்
கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள அரசு கல்லூரி ஒன்றில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இது சர்ச்சையான நிலையில், முஸ்லிம் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடகத்தை ஆளும் பாஜக அரசு மதம் தொடர்பான உடைகளை அணிந்து வரக்கூடாது என தடை விதித்தது. இதனை எதிர்த்து பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்களுக்கு அரசியலமைப்பு வழங்கிய உரிமையை அரசு பறிப்பதாகக் கூறி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.ஹிஜாப் விவகாரத்தில் அரசின் முடிவுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்து … Continue reading தேர்வு எழுத ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை அனுமதித்த 7 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்
மாட்டுச்சாணம், கோமியம் வாங்கும் காங்கிரஸ் அரசு!
மாட்டு சாணத்துக்கு பணம் வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்தி, கோமியத்தையும் கொள்முதல் செய்ய காங்கிரஸ் கட்சியின் பூபேஷ் பாகேல் தலைமையிலான சத்தீஸ்கர் அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், இதை ஆய்வு செய்ய ஒரு தொழில்நுட்பக் குழு அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.இந்திரா காந்தி வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் காமதேனு பல்கலைக்கழக ஆசிரியர்கள் அடங்கிய குழு, மாட்டு கோமியம் சேகரிப்பு, தர பரிசோதனை மற்றும் அதிலிருந்து என்னென்ன பொருட்களைத் தயாரிக்கலாம் ஆகியவற்றை உள்ளடக்கிய அறிக்கையை … Continue reading மாட்டுச்சாணம், கோமியம் வாங்கும் காங்கிரஸ் அரசு!
கர்நாடகா: ஹலால் இறைச்சியை தடை செய்யக் கோரும் இந்துத்துவ அமைப்புகள்!
கல்விக்கூடங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்து, பாஜகவும் அதன் துணை அமைப்புகளும் கர்நாடகத்தை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளன. சிறுபான்மையினருக்கு எதிராக தினம் ஒரு பிரச்னையை அங்கு கிளப்பி வருகின்றன.அந்த வரிசையில், “ஹலால் இறைச்சி முஸ்லீம் சமூகத்தின் "பொருளாதார ஜிஹாத்தின்" ஒரு பகுதி என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சி.டி. ரவி கூறியுள்ளார்.
2016-20 ஆண்டுகளில் நாடு முழுவதும் 2.76 லட்சம் கலவர வழக்குகள் பதிவு!
2016 முதல் 2020 வரையிலான ஐந்து ஆண்டுகளில் நாட்டில் 3,399 வகுப்புவாத அல்லது மதக் கலவரங்கள் நடந்துள்ளதாக உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை மக்களவையில் தெரிவித்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் ஒட்டுமொத்தமாக 2.76 லட்சத்துக்கும் அதிகமான கலவர வழக்குகள் பதிவாகியுள்ளன. காங்கிரஸ் எம்பி சசி தரூர் மற்றும் பாஜக எம்.பி. சந்திரபிரகாஷ் ஜோஷி ஆகியோர் எழுப்பிய கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் நித்யானந்த் ராய் இந்தத் தகவலை தெரிவித்தார்.அண்மைய ஆண்டுகளில் நாட்டில் இடம்பெற்ற கலவரங்கள் மற்றும் படுகொலைகள் பற்றிய பதிவேடுகளை … Continue reading 2016-20 ஆண்டுகளில் நாடு முழுவதும் 2.76 லட்சம் கலவர வழக்குகள் பதிவு!
ஹிஜாப்: முஸ்லிம்களுக்கு அறிவுரை கூறுவதை நிறுத்துங்கள் | ர. முகமது இல்யாஸ்
ர. முகமது இல்யாஸ்கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணிந்து பள்ளிகளுக்குள் நுழைய மாணவிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று அங்கு நடைபெற்ற பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் சுமார் 21 ஆயிரம் பேர் கலந்து கொள்ளாததை முன்வைத்து முற்போக்காளர்கள் என்று தங்களைத் தாங்களே அழைத்துக் கொள்வோர் முஸ்லிம்களுக்கு அறிவுரை கூறி வருகின்றனர். கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசுவோர், ஹிஜாப் அணிவதையும் தாலி அணிவதையும் ஒப்பிடுவோர், `முட்டாள் முஸ்லிம்களுடன் நில்லுங்கள்’ என்று கூறுவோர், பச்சை சங்கித்தனம் என்று எழுதுவோர் என … Continue reading ஹிஜாப்: முஸ்லிம்களுக்கு அறிவுரை கூறுவதை நிறுத்துங்கள் | ர. முகமது இல்யாஸ்
முஸ்லீமாக பிறந்து, மதமற்றவராக மாறிய பெண்ணுக்கு கோயிலில் நடனம் ஆட வாய்ப்பு மறுப்பு!
தான் இந்து அல்ல என்பதால், கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கோயில் வளாகத்தில் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்க தடை விதித்ததாக, முஸ்லிமாக பிறந்த பரதநாட்டிய நடனக் கலைஞரான மான்சியா வி.பி. குற்றம்சாட்டியுள்ளார்.திருச்சூரில் உள்ள இரிஞ்சாலக்குடாவில் உள்ள கூடல்மாணிக்யம் கோயில் பத்து நாள் திருவிழாவிற்கு தயாராகி வருகிறது. இதில் சுமார் 800 கலைஞர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர். இக்கோயில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேவசம் போர்டு நிர்வாகத்தின் கீழ் உள்ளது.ஏப்ரல் 21 அன்று கோயில் … Continue reading முஸ்லீமாக பிறந்து, மதமற்றவராக மாறிய பெண்ணுக்கு கோயிலில் நடனம் ஆட வாய்ப்பு மறுப்பு!
பிரதமர் வாழ்த்து கூறலாம்; முஸ்லீம் பெண் வாழ்த்து சொல்லக்கூடாதா? பாகிஸ்தான் குடியரசு தினத்துக்கு வாழ்த்து சொன்ன பெண் கைது!
பாகிஸ்தான் குடியரசு தினத்திற்கு அமைதியும் சமூக நல்லிணக்கமும் நிலவட்டும் என வாழ்த்துக்கூறி வாட்ஸ்ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்த கர்நாடகாவை சேர்ந்த இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டம் முதோல் நகரைச் சேர்ந்த குத்மா ஷேக் என்ற அந்தப் பெண், கடந்த 23-ம்தேதி பாகிஸ்தான் குடியரசு தினத்தையொட்டி வாட்ஸ் ஆப் ஸ்டேட்டசை வைத்திருக்கிறார். அதில், அனைத்து நாடுகளிலும் அமைதி, ஒற்றுமை, சமூக நல்லிணக்கம் ஏற்படுவதற்கு இறைவன் அருள்புரிவானாக என்று பதிவிட்டுள்ளார்.இதுதொடர்பாக அருண் குமார் பஜந்திரி என்பவர் காவல் நிலையத்தில் … Continue reading பிரதமர் வாழ்த்து கூறலாம்; முஸ்லீம் பெண் வாழ்த்து சொல்லக்கூடாதா? பாகிஸ்தான் குடியரசு தினத்துக்கு வாழ்த்து சொன்ன பெண் கைது!
ஹிஜாப் வழக்கு போட்ட மாணவிகள் ‘தீவிரவாதிகள்’ பாஜக தலைவரின் வெறுப்புப் பேச்சு!
கல்லூரி வளாகங்களில் ஹிஜாப் தடையை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுகிய மாணவிகளை பாஜக மூத்த தலைவரும், உடுப்பி அரசுப் பல்கலைக் கழக மேம்பாட்டுக் குழுவின் துணைத் தலைவருமான யஷ்பால் சுவர்ணா, “தேச விரோதிகள்” என்று கூறினார். பியூ கல்லூரி மாணவிகள் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது. ஹிஜாப் இஸ்லாத்தின் இன்றியமையாத மதப் பழக்கம் அல்ல என்றும் எல்லோருக்குமான ஒரே சீருடை என்பது ஒரு நியாயமான கட்டுப்பாடு என்றும் அப்போது நீதிமன்றம் கூறியது.இந்த … Continue reading ஹிஜாப் வழக்கு போட்ட மாணவிகள் ‘தீவிரவாதிகள்’ பாஜக தலைவரின் வெறுப்புப் பேச்சு!
காஷ்மீரிகள் படுகொலையா? குஜராத் படுகொலையா? இதையும் பாருங்க!
தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை பாஜகவினர் கொண்டாடி வரும் நிலையில், குஜராத் இனப்படுகொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பர்சானியா என்ற திரைப்படம் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து, விவேக் அக்னிஹோத்ரி எழுதி இயக்கிய இந்தத் திரைப்படம் மார்ச் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் அனுபம் கெர், தர்ஷன் குமார், மிதுன் சக்ரவர்த்தி மற்றும் பல்லவி ஜோஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தைப் பார்க்க, காவல்துறையினருக்கு விடுமுறை அளிக்கப்படும் … Continue reading காஷ்மீரிகள் படுகொலையா? குஜராத் படுகொலையா? இதையும் பாருங்க!
இனி பொது இடங்களில் ஹிஜாப் அணிய தடை? கர்நாடக தீர்ப்பால் அச்சத்தில் இஸ்லாமிய சமூகம்!
ஹிஜாப் அணிவது இஸ்லாம் மதத்தின் அடிப்படை நடைமுறை இல்லை என கர்நாடக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் பள்ளிகளுக்கு ஹிஜாப் அணிவதற்கு கடந்த பிப்ரவரி மாதம் அம் மாநில அரசு தடை விதித்தது. இதை எதிர்த்து, உடுப்பி மாவட்டம் குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ. கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புக்கு வந்தனர். எனினும் … Continue reading இனி பொது இடங்களில் ஹிஜாப் அணிய தடை? கர்நாடக தீர்ப்பால் அச்சத்தில் இஸ்லாமிய சமூகம்!
‘ஜெய் அகண்ட ரஷ்யா!’ இந்து சேனாவின் ரஷ்ய ஆதரவுக்கு என்ன காரணம்?
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ், இலங்கை மற்றும் பூட்டானை ஆக்கிரமித்து 'அகண்ட பாரதம்' வேண்டும் என்பது இந்துத்துவவாதிகளின் நீண்ட நாள் வேலைத்திட்டம். அதனால் ரஷ்ய அதிபர் புதின் சோவியத் யூனியனை மறு உருவாக்கம் செய்ய களமிறங்கியிருப்பதற்கு இந்து சேனா என்ற வலதுசாரி அமைப்பு ஆதரித்து போஸ்டர் ஒட்டியுள்ளது! இதுகுறித்து டெல்லியின் மண்டி இல்லத்தில் அமைந்துள்ள ரஷ்ய கவிஞர் ரஷ்கின் பாண்ட் சிலைக்குக் கீழே ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், “சோவியத் யூனியனை மீண்டும் உருவாக்க இருக்கும் புதினுடன் இந்தியா இருக்கிறது. … Continue reading ‘ஜெய் அகண்ட ரஷ்யா!’ இந்து சேனாவின் ரஷ்ய ஆதரவுக்கு என்ன காரணம்?
அகமதாபாத் குண்டுவெடிப்பு வழக்கு: வரலாற்றில் முதன்முறையாக 38 பேருக்கு தூக்கு!
2008 ஆம் ஆண்டு அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்குகளை விரைந்து விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றம் 49 குற்றவாளிகளில் 38 பேருக்கு மரண தண்டனை விதித்தது. மற்ற 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. இந்தியாவின் சட்ட வரலாற்றில் ஒரே வழக்கில் இத்தனை பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை! 2008, ஜூலை 26 அன்று குஜராத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான அகமதாபாத்தில் அரசு மருத்துவமனை, அகமதாபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் நடத்தும் மருத்துவமனை, வெவ்வேறு … Continue reading அகமதாபாத் குண்டுவெடிப்பு வழக்கு: வரலாற்றில் முதன்முறையாக 38 பேருக்கு தூக்கு!
நீதிமன்ற உத்தரவை பொருட்படுத்தாது கைவிலங்கிட்டு அழைத்து வரப்பட்ட உமர் காலித்!
2020 டெல்லி கலவர வழக்கில் இன்று பாட்டியாலா நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் உமர் காலித், கைவிலங்குகளுடன் ஆஜர்படுத்தப்பட்டார். டெல்லி காவல்துறை கைவிலங்குடன் ஆஜர்படுத்துவதற்கான மனுக்களை டெல்லி நீதிமன்றம் நிராகரித்திருந்தது. உமர்காலித்தை கைவிலங்கிட்டு அழைத்து வரக்கூடாது எனவும் நீதிமன்றம் ஆணையிட்டிருந்தது. இதைப் பொருட்படுத்தாது டெல்லி காவல்துறை உமர் காலித்தை கைவிலங்கிட்டு அழைத்து வந்துள்ளது. இந்த நிலையில், நீதிபதி அமிதாப் ராவத்தின் நீதிமன்ற அறையில் கைவிலங்குடன் உமர்காலி ஆஜர்படுத்தப்பட்டதாக … Continue reading நீதிமன்ற உத்தரவை பொருட்படுத்தாது கைவிலங்கிட்டு அழைத்து வரப்பட்ட உமர் காலித்!
மோடி – இப்போது இந்தியாவின் சாபம் அல்ல, உலகின் துயரம் !
சுப்ரமணியம் ஜெய்ஷங்கர், ஒரு மிகக்கடினமான பணியில் ஈடுபட்டிருக்கிறார், ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு இந்தியாவில் இருந்து வரும் முதல் மூத்த அமைச்சரின் இந்த அதிகாரப்பூர்வமான அமெரிக்கப் பயணம் மோசமான காலத்தில் திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்திய அரசுக்கும், அமெரிக்க சமூக இணையதள ஊடகங்களுக்கும் இடையில் மண்டிக்கிடக்கும் புகை மண்டலத்துக்கு இடையே இந்தப் பயணம் ஏற்பாடாகி இருக்கிறது, அவருடைய பயணத்தின் மிக முக்கிய நோக்கம் இந்தியாவுக்காக தடுப்பூசிகளை வாங்குவது, அது சாத்தியமாகுமா? இந்தியா தொடர்ந்து கோவிட் 19, பெருந்தொற்றால் … Continue reading மோடி – இப்போது இந்தியாவின் சாபம் அல்ல, உலகின் துயரம் !
ஒருவர்கூட உதவிக்கு வரவில்லை | இறந்த மனைவியை சைக்கிளில் எடுத்து சென்ற முதியவர்: உ.பி. அவலம்!
உத்தரப்பிரதேச மாநிலம், ஜான்பூர் மாவட்டம் மதியாரு கோத்வாலி பகுதியில் உள்ள அம்பேர்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் திலக்தாரி சிங், இவருடைய 50 வயது மனைவி பல நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் உமாநாத் சிங் மாவட்ட மருத்துவமனையில் கிசிக்கைக்காக சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த திங்களன்று அவருடைய மனைவியின் உடல்நிலை மோசமடைந்தது. சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்ததால் ஆம்புலன்ஸில் ஏற்றி அப்பெண்ணின் உடலை அவருடைய கிராமத்திற்கு மருத்துவமனை நிர்வாகம் அனுப்பிவைத்தது. இதனிடையே திலக்தாரி சிங்கின் மனைவியின் மரணத்திற்கு துக்கம் … Continue reading ஒருவர்கூட உதவிக்கு வரவில்லை | இறந்த மனைவியை சைக்கிளில் எடுத்து சென்ற முதியவர்: உ.பி. அவலம்!
மங்களூருவில் போலீசு துப்பாக்கிச் சூட்டில் போராட்டக்காரர்கள் இருவர் பலி: உறுதி செய்தது போலீசு
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மங்களூருவில் நடந்த போராட்டத்தை ஒடுக்க நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இரண்டு போராட்டக்காரர்கள் பலியாகியுள்ளனர். இதை மங்களூரு போலீசு உறுதி செய்துள்ளது. https://twitter.com/IndiaToday/status/1207686276167749632?s=20 போராட்டங்களை அடுத்து மங்களூருவில் ஊரடங்கு உத்தரவு அமலாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கூடியிருந்த போராட்டக்காரர்களை களைக்க போலீசார் முதலில் தடியடி நடத்தியதாகவும், பின்னர் போராட்டக்காரர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதாகவும் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. கல்வீச்சு சம்பவங்களை தடுக்க துப்பாக்குச் சூடு நடத்தப்பட்டதாகவும் அதில் இருவர் பலியானதாகவும் போலீசு தரப்பு கூறுகிறது. இந்த பலிக்கு … Continue reading மங்களூருவில் போலீசு துப்பாக்கிச் சூட்டில் போராட்டக்காரர்கள் இருவர் பலி: உறுதி செய்தது போலீசு
“திரு. மோடி…என் ஆடையால் என்னை அடையாளம் காண முடியுமா?”
டிசம்பர் 15-ஆம் தேதி, ஜார்க்கண்டில் நடந்த பேரணியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “கலவரக்காரர்களை அவர்களின் ஆடைகளால் அடையாளம் காண முடியும்” என்று கூறினார். குடியுரிமை திருத்தச் சட்டம் பாரபட்சமானது இசுலாமியர்களுக்கு எதிரானது என இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் எதிர்ப்புக்கள் வெடித்த நேரத்தில் மோடியின் பேச்சு அதை உறுதி செய்யும்வகையில் இருந்தது. நான்கு நாட்களுக்குப் பிறகு, சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் கொச்சியில் போராட்டம் நடத்தியபோது. ஒரு இளம்பெண் பிடித்திருந்த பதாகை அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. 18 … Continue reading “திரு. மோடி…என் ஆடையால் என்னை அடையாளம் காண முடியுமா?”
‘இரண்டு குஜராத்தி குண்டர்கள்’: மோடி – ஷாவை விமர்சித்தவர் பாஜகவிலிருந்து நீக்கம்!
இந்தி பேசும் மாநில மக்களை கடந்த ஐந்து ஆண்டுகளாக இரண்டு குஜராத்தி குண்டர்கள் ஏமாற்றி வருகிறார்கள்
கோட்சே வாக்குமூலத்தை பள்ளிப் பாடத்தில் சேர்க்க வேண்டும்: இந்து மகா சபை கேட்கிறது!
இந்திய அரசியலமைப்பின் மீது நம்பிக்கையற்றவர்கள் இவர்கள். நாட்டில் உச்சநீதிமன்றம் இருக்கும்போது பிரிட்டீஷ் ராணியிடம் மன்னிப்பு மனுவை தானே அனுப்பியவர் கோட்சே
தேசத்துக்காக மனம் இரங்குங்கள்!
தேசத்துக்காக மனம் இரங்குங்கள் லாரன்ஸ் ஃபெர்லிங்கிட்டி (கலீல் ஜிப்ரானின் இதே தலைப்பிட்ட கவிதையை முன்வைத்து) —- எந்த தேசத்தில் மக்கள் ஆட்டு மந்தைகளாக உள்ளனரோ எங்கு மேய்ப்பர்கள் அவர்களை வழி தவறச் செய்கின்றனரோ அந்த தேசத்துக்காக மனம் இரங்குங்கள் எந்த தேசத்து தலைவர்கள் பொய் பேசுகின்றனரோ எங்கு சான்றோர் வாய்ப் பேச்சற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளனரோ எங்கு சிறுமதியாளர்கள் குரல் காற்றில் கலந்து உரத்து ஒலிக்கின்றதோ அந்த தேசத்துக்காக மனம் இரங்குங்கள் மனம் இரங்குங்கள் வெற்றிவாகைச் சூடிய தலைவனை வாழ்த்த … Continue reading தேசத்துக்காக மனம் இரங்குங்கள்!
சாந்தா கொச்சாருக்கு வழங்கிய பத்ம பூஷன் விருதைத் திரும்பப்பெறு : சி.எச்.வெங்கடாசலம்
தன் கணவரின் நிறுவனம் பயன்பெறும் வகையில் ரூ. 5000 கோடியைக் கடனாகக் கொடுத்து ஐசிஐசிஐ வங்கிக்கு நட்டம் ஏற்படுத்திய சாந்தா கொச்சாருக்கு வழங்கி இருந்த பத்ம பூஷண் விருதை திரும்ப பெற வேண்டும் என்று சென்னையில் சமீபத்தில்(3.2.2019) நடந்த வங்கி ஊழியர் சங்க மாநில மாநாட்டில் அதன் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் கேட்டுக் கொண்டார். வங்கிக் கடனை திரும்ப செலுத்தாதவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து, அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும். இப்படி கறாக நடவடிக்கைகளை … Continue reading சாந்தா கொச்சாருக்கு வழங்கிய பத்ம பூஷன் விருதைத் திரும்பப்பெறு : சி.எச்.வெங்கடாசலம்
மோடி ஆட்சி மாணவர்களைப் பார்த்து ஏன் அஞ்சுகிறது?
மூன்று ஆண்டுகளுக்கு முன் இந்த தேசத் துரோக குற்றச்சாட்டுகள் திருப்பித் தாக்கின; ஜேஎன்யு மாணவர் செயல்பாட்டாளர்கள் குரல்கள், ஜேஎன்யு வளாகம் தாண்டியும் எதிரொலித்து, நாட்டு மக்களுக்கு நம்பிக்கையும் துணிவும் தந்தது.
பட்டேல் சிலையைப் போல அயோத்தியில் ராமருக்கு சிலை: உ.பி. முதல்வர் ஆதித்யநாத் திட்டம்
குஜராத்தின் நர்மதா நதிக்கரையில் உலகின் உயரமான சிலை என்கிற பெருமையுடன் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு 182 மீட்டர் சிலை அமைத்தது மோடி அரசு. ‘தற்பெருமை’க்காக இந்த சிலையை அமைத்துள்ளதாக இங்கிலாந்தின் அரசியல்வாதிகள் கடுமையாக விமர்சித்தனர். அதுபோல இந்தியாவுக்குள் இது கடுமையான விமர்சனங்களைக் கிளப்பியது. அதுகுறித்து கொஞ்சமும் கருத்தில் கொள்ளாமல், உத்தர பிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத், இந்து கடவுள் ராமருக்கு ஆயோத்தியில் 151 மீட்டர் சிலை அமைக்கவிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. உ.பி. முதலமைச்சர் ஆதித்யநாத், வரவிருக்கும் தீபாவளி தினத்தின் … Continue reading பட்டேல் சிலையைப் போல அயோத்தியில் ராமருக்கு சிலை: உ.பி. முதல்வர் ஆதித்யநாத் திட்டம்
ஆதித்யா நாத்தின் தோல்விக்கு என்ன காரணம்?
உத்தர பிரதேசத்தில் இரண்டு மக்களவை தொகுத்களுக்கான இடைத்தேர்தல் வாக்குப் பதிவு 40 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தபோதே, முடிவுகள் எப்படி வரும் என்பதை யூகிக்க முடிந்தது. இடைத்தேர்தல் வரலாறுகளை (சமீபத்திய) எடுத்துக்கொண்டால், குறைந்தபட்சம் 65 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகள் பதிவாகும். ஆளும் அரசுகள் தங்களுடைய கவுரப்பிரச்னையாக ஒவ்வொரு இடைத்தேர்தலையும் கருதி, கீழே இறங்கி பணியாற்றும். பணவிநியோகம், அதிகாரத்தை பயன்படுத்துதல் போன்றவை சர்வசாதாரணமாக இருக்கும். ஆளும் கட்சியின் அத்தனை தலைவர்களும் தொகுதியில் முகாமிடுவார்கள். உ.பி. இடைத்தேர்தல், ஆளும் ஆதித்யநாத் தலைமையிலான … Continue reading ஆதித்யா நாத்தின் தோல்விக்கு என்ன காரணம்?
“கொள்கை வேறுபட்டிருக்கலாம்; ஆனால் சகித்துக்கொள்ளமாட்டேன்”: லெனின் சிலை தகர்ப்பு குறித்து மமதா
திரிபுரா மாநிலத்தில் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியாகி, புதிய அரசு பதவியேற்காத நிலையில் பாஜகவினர் மாநிலம் முழுவதும் வன்முறையை அரங்கேற்றி வருகின்றன. இடதுசாரி அரசியல்வாதிகள், தொண்டர்கள், ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்திவருகின்றனர். தெற்கு திரிபுராவில் உள்ள பெலோனா நகரத்தின் கல்லூரி சதுக்கத்தில் அமைந்திருந்த புரட்சியாளர் லெனின் சிலையை பாஜகவினர் ஜெசிபி இயந்திரம் துணையுடன் அகற்றினர். லெனின் சிலை மண்ணில் வீழ்ந்தபோது 'பாரத் மா கி ஜெய்' என அவர்கள் முழங்கினர். இது வீடியோவாக வெளியாகி … Continue reading “கொள்கை வேறுபட்டிருக்கலாம்; ஆனால் சகித்துக்கொள்ளமாட்டேன்”: லெனின் சிலை தகர்ப்பு குறித்து மமதா
இடதுசாரிகளின் மேட்டிமைத்தனத்தனம் மூர்க்க தேசியத்திற்கு ஆயுதங்களைத் தருகிறது: இராமச்சந்திர குஹா
வரலாற்று ஆய்வாளர் இராமச்சந்திர குஹா, கர்நாடகம் உருவான நவம்பர் ஒன்றாம் நாளன்று புதுதில்லியில் நீதிபதி சுனந்தா பண்டாரே (Sunanda Bhandare ) நினைவு சொற்பொழிவு ஆற்றினார். தற்கால அரசியலை மையப்படுத்திய இந்த உரை பல செய்திகளை புதிய கோணத்தில் வைக்கிறது.அரசியலமைப்பு நாட்டுப்பற்று (constitutional patriotism) , மூர்க்க தேசியவாதம், பாகிஸ்தானால் இந்தியாவில் அடிப்படைவாதம், யூதர்களை போல முஸ்லிம்கள், பன்மைத்தன்மை போன்ற கருத்துக்களை மையப்படுத்தி இவரது உரை அமைந்து இருக்கிறது. ஆங்கில ஊடகங்களில் பரவலாக இந்த உரை கவனம் … Continue reading இடதுசாரிகளின் மேட்டிமைத்தனத்தனம் மூர்க்க தேசியத்திற்கு ஆயுதங்களைத் தருகிறது: இராமச்சந்திர குஹா
பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் முதலாண்டு நாளில் தேசம் தழுவிய எதிர்ப்பு – இடதுசாரி கட்சிகளின் அறைகூவல் !
இந்தியா முழுவதும் ஒட்டுமொத்தமாக நிலமைகள் மோசமாகிக் கொண்டு இருக்கின்றன; பொதுமக்களின் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இது குறித்து இடதுசாரி கட்சிகள் கவலை தெரிவிக்கின்றன . வகுப்புவாத அடிப்படையில் மக்களை அணி திரட்டுவது கூர்மையாக நடக்கிறது ; பாராளுமன்ற ஜனநாயக நிறுவனங்களின் மதிப்பு குறைக்கப்படுகிறது ; ஜனநாயக உரிமைகள் மீதும் , குடிமை உரிமைகள் மீதான தாக்குதல்கள் அதிகரிக்கின்றன. எதேச்சதிகார முறையில், திடீரென்று பணமதிப்பு நீக்கத்தை பிரதம மந்திரி அறிவித்து ஓர் ஆண்டு ஆகிறது.இடதுசாரி கட்சிகள் எதிர் … Continue reading பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் முதலாண்டு நாளில் தேசம் தழுவிய எதிர்ப்பு – இடதுசாரி கட்சிகளின் அறைகூவல் !
“புத்தகம் எழுதியதற்காக யாரையும் தூக்கிலிட முடியாது”!
புத்தகம் எழுதியதற்காக யாரையும் தூக்கிலிட முடியாது என பேராசிரியர் காஞ்ச இலையாவுக்கு எதிரான போராட்டங்களை கண்டித்துள்ளது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தெலுங்கானாவைச் சார்ந்த தலீத்திய சிந்தனையாளர் பேராசிரியர் காஞ்ச இலையாவை தூக்கிலிடப்போவதாக பகிரங்கமாக கொலை மிரட்டலை சில சக்திகள் கொடுத்து இருப்பதை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய குழு கண்டிக்கிறது. அவர் எழுதிய நூலை எதிர்த்து ஆந்திராவிலும் , தெலுங்கானாவிலும் பல ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. அவர் எழுதிய … Continue reading “புத்தகம் எழுதியதற்காக யாரையும் தூக்கிலிட முடியாது”!
கௌரி லங்கேஷ் படுகொலை அதிர்ச்சி அளிக்கிறது: பினராயி விஜயன்
மூத்த பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கௌரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், 'கௌரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது. இந்தச் சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது. இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் உடனடியாக கைதுசெய்யப்படவேண்டும்' என்று பதிவிட்டுள்ளார்.
மூழ்கியது நாள்… மிதந்தது மும்பை!
அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை தொடர வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது, மும்பை, தென் மும்பை, தென் குஜராத், கொங்கன், கோவா மற்றும் விதர்பா பகுதிகளில் கனமழை வாய்ப்புள்ளதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
#கோரக்பூர் படுகொலை: யோகி பதவி விலக வேண்டும் !
இந்தியாவின் 70ஆவது சுதந்திர தினத்துக்கு சற்று முன்பு, கோரக்பூரின் அரசு மருத்துவமனை ஒன்றில் 79 குழந்தைகள் உயிரிழந்திருப்பது நமது ஜனநாயகத்தின், அரசியலின் ஆரோக்கியம் சந்திக்கிற நோய் பற்றிய கொடூரமான வெளிப்பாடாக இருக்கிறது. அந்தக் குழந்தைகள் ஏதோ ஒரு பெருஞ்சோகம் நடந்து அதனால் உயிரிழக்கவில்லை. மத்தியிலும் உத்தரபிரதேசத்திலும் உள்ள அரசாங்கங்களின் தான்தோன்றித்தனத்தால், கொடூரமான அலட்சியத்தால் உயிரிழந்தன. ஆக்சிஜன் தடைபட்டதால் குழந்தைகள் உயிரிழந்த பிஆர்டி மருத்துவ கல்லூரியில் இருந்து அரை கி.மீ தொலைவில் நடந்த ஒரு தேர்தல் பிரச்சார கூட்டத்தில், … Continue reading #கோரக்பூர் படுகொலை: யோகி பதவி விலக வேண்டும் !
திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்காரின் சுதந்திர தின உரைக்கு தடை: சிபிஐ கண்டனம்
திரிபுரா மாநில முதலமைச்சர் மாணிக் சர்க்கார் சுதந்திர தின உரை ஒலிபரப்புக்குத் தடை விதிக்கப்பட்டதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திரிபுரா முதலமைச்சர் திரு.மாணிக் சர்க்கார் அவர்களின் சுதந்திர தின உரையை திருத்தம் செய்ய வேண்டும் என்று கூறி அவரது உரையை அரசின் செய்தி நிறுவனங்கள் ஒலிபரப்பு செய்யவில்லை; இது கண்டிக்கத்தக்கது .வேலைவாய்ப்பு , நாட்டின் பொருளாதார சுதந்திரம் குறித்த விபரங்களை ,இந்த நாட்டை குறிப்பிட்ட … Continue reading திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்காரின் சுதந்திர தின உரைக்கு தடை: சிபிஐ கண்டனம்
சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்தவரின் குடும்பத்தாரிடம் மன்னிப்பு: கேரள முதல்வரின் மாண்பு
தமிழகத்தைச் சேர்ந்த முருகன் என்ற கூலித் தொழிலாளி, சமீபத்தில் கொல்லம் அருகே சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். ஆனால், அவருக்கு சிகிச்சை வழங்க கொல்லம் திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள் மறுத்துவிட்டன. ஏழு மணி நேர போராட்டத்திற்குப் பின், அவர் ஆம்புலன்சிலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். இந்நிலையில், இந்த பிரச்சினை நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதயடுத்து, கேரள முதல்வர் பினராயி விஜயன் மன்னிப்புக் கோரியுள்ளார். இப்படிச் செய்ததன் மூலமாக, மருத்துவமனைகள் மிகப் … Continue reading சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்தவரின் குடும்பத்தாரிடம் மன்னிப்பு: கேரள முதல்வரின் மாண்பு
ஏழைகளை வதைக்கும் மத்திய அரசின் மற்றொரு தாக்குதல்: மார்க்சிஸ்ட் கண்டனம்
மத்திய அரசு வழங்கும் சமையல் எரிவாயுக்கான மானியத்தை நிறுத்த முடிவு செய்துள்ளது மக்கள் மீது மத்திய அரசு தொடுத்துள்ள நேரடியான இன்னும் ஒரு தாக்குதல் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசு சமையல் எரிவாயுக்கான மானியத்தை முற்றிலுமாக இன்னும் 8 மாதத்தில் கைவிடுவது என்றும், அதற்கு ஏதுவாக மாதந்தோறும் ரூ. 4/- அதிகப்படுத்துவது என்றும் முடிவு செய்துள்ளது. வறட்சி, வேலையின்மை, ஏழ்மை ஆகியவற்றால் துயருற்றிருக்கும் மக்கள் மீது மத்திய … Continue reading ஏழைகளை வதைக்கும் மத்திய அரசின் மற்றொரு தாக்குதல்: மார்க்சிஸ்ட் கண்டனம்
ஐந்தாம் வகுப்பில் பொதுத்தேர்வு: குலக்கல்விக்கொரு முன்னொட்டம்!
படிப்பதற்கு அமைதியான சூழல் கூட கிடைக்காத ஒடுக்கப்பட்ட(அனைத்து சாதியிலும்) குழந்தைகள் தங்கள் படிப்பை ஐந்தாம் வகுப்புடன் அல்லது எட்டாம் வகுப்புடன் நிறுத்தும் அவலங்கள் நடக்கலாம். நடக்கும்.
கமலின் கருத்துகள் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை : கனிமொழி
நடிகர் கமல்ஹாசனை திமுக இயக்குவதாக கூறுவதில் உண்மை இல்லை என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,“திமுக என்பது மாபெரும் இயக்கம். அதில் நிறைய தலைவர்கள் இருக்கிறார்கள். எங்களுக்கு வேறு யாருடைய உதவியும் தேவையில்லை. கமலை இயக்க வேண்டிய அவசியம் திமுகவிற்கு இல்லை. கமல் போன்ற பிறரின் உதவி திமுகவிற்கு தேவையில்லை. கமல்ஹாசன் அவருடைய கருத்துக்களை சொல்லி வருகிறார். அது பற்றி நான் ஒன்றும் சொல்வதிற்கில்லை” … Continue reading கமலின் கருத்துகள் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை : கனிமொழி