”ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஒரு ஓநாய் கூட்டம்; அதன் குகைக்குள் செல்வோம்”

மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 23வது மாநில மாநாட்டு பொது கூட்டத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிஷ்ணன் பங்கேற்றுப் பேசினார். கூட்டத்தில் அவர் பேசுகையில், பாஜக அரசு மதச்சார்பின்மையை குலைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கு சில நீதிபதிகளும் துணை போகிறார்கள். பாஜக அரசுக்கு வக்காலத்து வாங்கும் நீதிமன்றங்களையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம்.அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக்கும் சட்டத்தை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தில் 24 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு … Continue reading ”ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஒரு ஓநாய் கூட்டம்; அதன் குகைக்குள் செல்வோம்”

ஸ்டாலின்: ஏகாதிபத்தியம் மற்றும் பாசிச எதிர்ப்பின் மகத்தான வீரன்!

சந்திரமோகன் "ஏகாதிபத்திய சகாப்தத்தில் தனியொரு நாட்டில் சோசலிசத்தை கட்டி எழுப்ப முடியும் " என்ற லெனினியத்தை நடைமுறைப் படுத்தும் சவால்மிக்க கடமைக்கு தன்னை அர்ப்பணித்து கொண்ட தோழர். JV ஸ்டாலின் [ ஜோசப் வி ஸ்டாலின் 18.12.1878] அவர்களின் 140 வது பிறந்த நாள் இன்று! ஏகாதிபத்திய - முதலாளித்துவ சக்திகள் துவங்கி இலக்கியவாதிகள், இடதுசாரிகள் வரை தொடுக்கும் வெறுப்பு விமர்சனங்கள் தாக்குதல்கள் இதுநாள் வரையும் குறையவில்லை. புனையப்பட்ட பொய்களும் ஏராளம். "ஸ்டாலின் மீது எவ்விதமான குறைகளும் … Continue reading ஸ்டாலின்: ஏகாதிபத்தியம் மற்றும் பாசிச எதிர்ப்பின் மகத்தான வீரன்!

மானுட விடுதலை நோக்கி நீண்ட பயணம்: திபங்கர்

பல்வேறு கருத்தியல் நீரோட்டங்களையும் சேர்ந்த, இந்திய முற்போக்காளர்களின் சிந்தனையாளர்களின் பெரும்பிரிவினர், மார்க்சை அறிந்திருக்கின்றனர்; மதிக்கின்றனர்; படிக்கின்றனர். மறுபுறம், மார்க்ஸ் தவறாக புரிந்து கொள்ளப்படுவதும் தவறாக வியாக்கியானப் படுத்தப்படுவதும் கூட பரவலாக நடக்கிறது.

பிரபாத் பட்நாயக்கின் கட்டுரையில் உள்ள சிக்கல்: அருண் நெடுஞ்செழியன்

அருண் நெடுஞ்செழியன் “இந்திய இடதுசாரிகளின் சிக்கல்” என்ற தலைப்பில் தோழர் பிரபாத் பட்நாயக் கட்டுரையொன்றை (http://macroscan.org/cur/dec17/pdf/Indian_Left.pdfon 17-Dec-2017) வெளியிட்டிருந்தார். இரு பகுதிகளான அந்த கட்டுரையில், முதல் பகுதியை மட்டுமே இங்கு விமர்சனத்திற்கு எடுத்துக்கொள்கிறேன். இந்திய இடதுசாரி அணிகளுக்கு இடையிலான முரண்பாட்டின் மையமானது சீர்திருத்திருத்தத்திற்கும் புரட்சிக்கும் இடையிலான இயக்கவியலை சரியாக புரிந்துகொள்ளாதன் விளைவாகும் (கட்டுரையின் முதல் பகுதி) என பிரபாத் பட்நாயக் கருதுகிறார். புரட்சி - இந்த அரசமைப்பு வடிவில் நீடித்துக்கொண்டு சமுதாய சீர்திருத்தத்தை மேற்கொள்ளமுடியாது என்ற நிலைப்பாட்டை கொண்டது. … Continue reading பிரபாத் பட்நாயக்கின் கட்டுரையில் உள்ள சிக்கல்: அருண் நெடுஞ்செழியன்

கார்ல் மார்க்ஸ் 200: எஸ். ராமகிருஷ்ணன் உரை

திருப்பூர் மாவட் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், காரல் மார்க்ஸ் 200வது பிறந்தநாள் விழாவைக் கொண்டாடியது. இதில், காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் உரையாற்றினார். https://youtu.be/mhqRn7HKpZs எஸ். ரா. வின் உரை குறித்து கவிஞர் இரா. தெ. முத்து தெரிவித்துள்ள கருத்துகள்.. “எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் காரல் மார்க்ஸ் குறித்து திருப்பூர் தமுஎகச கூட்டத்தில் பேசிய சுருதி டிவி காணொளி கண்டேன். சகோதரி சந்திரபிரபா ராமகிருஷ்ணன் அனுப்பி இருந்தார். 120 நிமிடம் ஓடும் காணொளி. எந்த … Continue reading கார்ல் மார்க்ஸ் 200: எஸ். ராமகிருஷ்ணன் உரை

அஞ்சலி: நக்சல்பாரி மூத்த தலைவர் கோவை ஈஸ்வரன்

தமிழ் உணர்வில் துவங்கி தொழிலாளர் போராட்டத்தில் இறங்கி, நக்சல்பாரி இயக்கத்திற்கு தமிழ்நாட்டில் விதையிட்டவர்.. அதேசமயம், இடது ஒற்றுமைக்காக அந்தக் காலத்திலும் பணியாற்றியவர்.

நக்சல்பாரியின் 50: லீலா மஜூம்தார் – சாருவின் துணைவியார் மட்டுமல்ல!

சி. மதிவாணன் “என் தாய் லீலா சாரு மஜூம்தாரின் துணைவியார் மட்டுமல்ல“, என்று சொல்கிறார் அவரின் மகன் அபிஜித். அவர் இப்போது CPI ML (Liberatin) கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினரும் கூட. ஒரு பல்கலைக்கழக பேராசிரியரும் கூட. “என் தாய் சுதந்திரப் போராட்ட வீரர். என் தாயின் உருவாக்கத்திற்கு என் தாயே காரணம்“ என்கிறார் அபிஜித்.“என் தாயின் வாழ்க்கை துன்பத்தின் வாழ்க்கை. அவர் ஒரு போதும் என் தந்தையையோ, எங்கள் இயக்கத்தையோ பழித்ததில்லை“, என்று கம்யூனிஸ்டுகளின் … Continue reading நக்சல்பாரியின் 50: லீலா மஜூம்தார் – சாருவின் துணைவியார் மட்டுமல்ல!

“நாட்டுக்கு தேவை வேலை வாய்ப்புகள்” வெற்று ஆரவாரங்கள் அல்ல !

அடுத்த மூன்று ஆண்டுகளில் ஆண்டொன்றுக்கு 2 லட்சம் அய்டி ஊழியர்கள் வேலையிழப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.

கம்யூனிஸ்டுகளை சந்தேகப்படலாமா?

மாதவராஜ் சி.பி.எம் கட்சியின் தலைமை உயர்ஜாதி பிராமணர்கள் கையில் இருக்கிறது, அதுதான் சிபிஎம் கட்சியின் பின்னடைவுக்கும், தவறான நிலைபாடுகளுக்கும் காரணம் என்று இங்கு பேசப்படுகிறது. மட்டமான கிண்டலும், நக்கலுமாக இந்தக் கருத்துகள் சொல்லப்பட்ட போதிலும், கம்யூனிஸ இயக்கத்தை எதாவது சொல்லி களங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கமே அவைகளில் இருந்த போதிலும், பொதுவெளியில் அதுகுறித்து வெளிப்படையாகவும், நேர்மையாகவும் பேசுவதே சரியாக இருக்கும் என நினைக்கிறேன். எனது தனிப்பட்ட புரிதலில் இருந்து சில கருத்துக்களை முன்வைக்கத் தோன்றுகிறது. சிபிஎம்மின் தலைமைப் … Continue reading கம்யூனிஸ்டுகளை சந்தேகப்படலாமா?

பாஜகவின் வெற்றிக்குக் காரணம் கம்யூனிஸ்ட் கட்சிகளா?!

மாதவராஜ் பாரதீய ஜனதா அரசியல் அதிகாரத்தில் செல்வாக்கு பெற்றதற்கு, கம்யூனிஸ்ட் கட்சிகளின் அரசியல் நிலைபாடுகள்தான் காரணம் என்னும் கருத்து இந்த நேரத்தில் முன்வைக்கப்படுகிறது. சென்ற பாராளுமன்றத் தேர்தலில், ‘பாஜக, காங்கிரஸ் இரண்டையும் நிராகரிப்போம்’ என்று சி.பி.எம் எடுத்த அரசியல் நிலைபாடு விமர்சிக்கப்படுகிறது. காங்கிரஸை ஆதரித்து பாஜகவை வீழ்த்துவதே இப்போதைய நோக்கம் என பரப்பப்படுகிறது. சென்ற பாராளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்கு அடிப்படையான காரணமே காங்கிரஸ் ஆட்சியின் அட்டூழிய நடவடிக்கைகளும், அநியாயமான ஊழல் குற்றச்சாட்டுகளும்தான். மக்களின் கடும் … Continue reading பாஜகவின் வெற்றிக்குக் காரணம் கம்யூனிஸ்ட் கட்சிகளா?!

மாவோயிஸ்டுகள் .. அதிதீவிர இடது சீர்குலைவுவாதிகள்: மாவோயிஸ்டுகள் என்கவுண்டர் குறித்து பிரகாஷ் காரத்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக்குழுவின் அதிகாரப்பூர்வ வார ஏடான பீப்பிள்ஸ் டெமாக்ரசி’யில், ‘THINKING TOGETHER’ என்ற தலைப்பில் கேள்வி - பதில் வெளியாகி வருகிறது. கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும்,பீப்பிள்ஸ் டெமாக்ரசி’ ஏட்டின் ஆசிரியருமான பிரகாஷ் காரத் பதிலளிக்கிறார். சமீபத்தில் கேரளத்தில் மாவோயிஸ்டுகள் காவல்துறை என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்த கேள்விக்கு பிரகாஷ் காரத் பதிலளித்துள்ளார். கேள்வி: இரண்டு மாவோயிஸ்டுகள் காவல்துறையின ரால் கேரளா வனப்பகுதியில் சமீபத்தில் கொல்லப்பட்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளரும் வேறு சில குடியுரிமை … Continue reading மாவோயிஸ்டுகள் .. அதிதீவிர இடது சீர்குலைவுவாதிகள்: மாவோயிஸ்டுகள் என்கவுண்டர் குறித்து பிரகாஷ் காரத்

தமிழ் நாட்டின் CPIML கட்சி நிறுவனத் தலைவர்களில் ஒருவரான பி.வி.சீனிவாசன் மறைந்தார்!

சந்திரமோகன் தோழர்.கணேசன்/பி.வி.எஸ் என்று தமிழக நக்சல்பாரி இயக்கத்தில் நன்கு அறியப்பட்ட தோழர்.பி.வி.சீனிவாசன் அவர்கள், நோய்வாய்ப் பட்டிருந்த நிலையில், இன்று டிசம்பர் 6 அதிகாலை சுமார் 3.30 மணியளவில், டில்லியில் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். அவருக்கு வயது 79. டில்லியில் உள்ள CPIML Liberation கட்சி அலுவலகத்தில் தோழரது உடல் வைக்கப்பட்டுள்ளது. இறுதி மரியாதைக்குப் பிறகு எரியூட்டப்படவுள்ளது. செவ்வணக்கம்! நக்சல்பாரி இயக்கத்தின் ஆளுமை : புரட்சிகர இலட்சியங்களை நெஞ்சில் ஏந்திய, களத்தில் இறங்கிய தலைவர் பி.வி.எஸ் … Continue reading தமிழ் நாட்டின் CPIML கட்சி நிறுவனத் தலைவர்களில் ஒருவரான பி.வி.சீனிவாசன் மறைந்தார்!

கியூப புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ காலமானார்

கடந்த சில ஆண்டுகளாக உடல் நிலை நலிவு காரணமாக ஓய்வெடுத்து வந்த கியூப புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ (90) காலமானார். இதை கியூப அரசு தொலைக் காட்சி அறிவித்துள்ளது. பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் ஹவானாவில் வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு இறந்ததாக கியூப ஊடகம் தெரிவித்துள்ளது.  பிடலின் இறப்பை அவருடைய சகோதரரும் தற்போதைய அதிபருமான ரவுல் காஸ்ட்ரோ உறுதிப் படுத்தியுள்ளார். மாணவராக இருந்தபோது அரசியல் செயல்பாட்டில் இறங்கிய பிடல், அதிகாரத்திற்கு எதிராக குரல் எழுப்பி மக்கள் மனதில் … Continue reading கியூப புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ காலமானார்

மத்திய அரசுக்கு எதிராக கிளர்ச்சி நடவடிக்கை; இடதுசாரிகள் அறிவிப்பு

500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததன்மூலம் மக்களின் வயிற்றில் அடித்த மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக நவம்பர் 24 முதல் 30வரை அகில இந்திய அளவில் தீவிரமான கிளர்ச்சி இயக்கங்களை மேற்கொள்ள இடதுசாரிக் கட்சிகள் அறைகூவல் விடுத் துள்ளன.இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி(எம்எல்)-லிபரேசன், புரட்சி சோசலிஸ்ட் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், எஸ்.யு.சி.ஐ.(கம்யூனிஸ்ட்) ஆகிய கட்சிகளின் தலைவர்கள் செவ்வாய் அன்று சந்தித்து, … Continue reading மத்திய அரசுக்கு எதிராக கிளர்ச்சி நடவடிக்கை; இடதுசாரிகள் அறிவிப்பு

மாற்று ஏற்பாடுவரை பழைய ரூபாய்த்தாளே தொடர வேண்டும்: சிபிஎம் போராட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 3 நாள் சிறப்பு மாநாடு நெல்லையில் நவம்பர் 12 முதல் நடந்துவருகிறது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், மாநிலச்செயலாளர் ஜி.இராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராஜன், டி.கே.ரங்கராஜன், உ.வாசுகி, பி.சம்பத், கே.பாலகிருஷ்ணன் மற்றும் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள், மாநிலக்குழு உறுப்பினர்கள், பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இரண்டாம் நாளான 13 நவ. அன்று மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: 500, 1000 ரூபாய் நோட்டுகள் இனி … Continue reading மாற்று ஏற்பாடுவரை பழைய ரூபாய்த்தாளே தொடர வேண்டும்: சிபிஎம் போராட்டம்

முதலாளித்துவத்திற்கு மாற்று கம்யூனிசமே!: ரசியப் புரட்சியின் 100-ஆம் ஆண்டு விழா அழைப்பு

மாமேதை மார்க்ஸ் பிறந்தநாள் 200-ஆம் ஆண்டு  மற்றும் ரசியப் புரட்சியின் 100-ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாடும் விதமாக மக்கள் கலை இலக்கியக் கழகம் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகிறது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “அன்பார்ந்த உழைக்கும் மக்களே! வாழ்க்கையில் நமக்குப் பல பிரச்சினைகள் இருக்கின்றன. வாழ்க்கையே பிரச்சினையாக இருக்கிறது என்றும் கூறலாம். கோடிக் கணக்கானவர்களுக்கு வேலை இல்லை. வேலை இருந்தாலும் நல்ல சம்பளம் இல்லை. தினமும் 10, 12 மணி நேரம் உழைக்கிறோம். நல்ல வீடில்லை, உணவில்லை, உடையில்லை. பொருளாதாரப் … Continue reading முதலாளித்துவத்திற்கு மாற்று கம்யூனிசமே!: ரசியப் புரட்சியின் 100-ஆம் ஆண்டு விழா அழைப்பு

நவம்பர் புரட்சி நூற்றாண்டு துவக்க விழா: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் கொடியேற்றத்துடன் துவக்கம்

நவம்பர் புரட்சியின் நூற்றாண்டை முன்னிட்டு நவ.7ம் தேதி திங்கட்கிழமை மாலை 4 மணிக்கு சென்னை, தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கத்தில் நவம்பர் புரட்சி நூற்றாண்டு துவக்க விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், சுதந்திரப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான என். சங்கரய்யா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், … Continue reading நவம்பர் புரட்சி நூற்றாண்டு துவக்க விழா: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் கொடியேற்றத்துடன் துவக்கம்

தொடரும் என்கவுண்டர்; எமர்ஜென்ஸி நிலையைப் போன்ற போலீஸ் ஆட்சியின் அறிகுறி!

முதலில், கொடூரமான குஜராத் படுகொலை நிகழ்த்த சங் பரிவாரை சுதந்திரமாக அனுமதித்து, பிறகு, அரசு எந்திரத்தை பயன்படுத்தி சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் செய்து, குஜராத்தில் மோடி தனது ஆட்சியை உறுதிப்படுத்திக் கொண்டார். சட்டத்தின் ஆட்சியை இப்படி முழுவதுமாக சீர்குலைவுக்கு உள்ளாக்கியதை நியாயப்படுத்த, (குஜராத் கவுரவம் என்ற) சோதனைக்குட்படுத்தப்பட்ட, நம்பகமான மூர்க்கமான பிராந்திய வெறிவாத வாய்வீச்சையும், பாகிஸ்தான் எதிர்ப்பு தேசவெறிவாதத்ததையும் (அவரது தேர்தல் பரப்புரைகள் மியான் முஷ்ரப்பை குறிவைப்பதாக இருந்தன) பயன்படுத்தினார். அவரது பதவி காலத்தின் பாதி காலம் … Continue reading தொடரும் என்கவுண்டர்; எமர்ஜென்ஸி நிலையைப் போன்ற போலீஸ் ஆட்சியின் அறிகுறி!

சேலம் உருக்காலை- ஜிண்டால்: நட்டமாகும் கம்பெனியை வாங்குவதற்கு கார்ப்பரேட்டுகள் முட்டாள்களா?

சந்திரமோகன் 4000 ஏக்கர் நிலப்பரப்பு, ரூ.15,000 கோடி சொத்து மதிப்பு, 1400 நிரந்தரமான தொழிலாளர்கள், அலுவலர்கள், ஒப்பந்தம் /மறைமுக வேலை வாய்ப்பு பெறுபவர்கள் 3000 பேர், சேலம் ஸ்டெயின்லெஸ் என்ற பிராண்ட் புகழ், இந்தியாவின் நாணயங்கள், ரெயில்வே, செயற்கை கோள்கள் முதல் வீடுகள், ஓட்டல்களின் பாத்திரங்கள் வரைத் தயாரிக்க பயன்படும் துருப்பிடிக்காத எஃகு தகடுகள் தயாரிக்கும் ஆலை, சேலம் உருக்காலை ஆகும். 1970 களில், தமிழகத்திற்கு கிடைத்த பெருமை மிகுந்த பொதுத்துறை நிறுவனம். "இரும்பாலை வருகிறது , … Continue reading சேலம் உருக்காலை- ஜிண்டால்: நட்டமாகும் கம்பெனியை வாங்குவதற்கு கார்ப்பரேட்டுகள் முட்டாள்களா?

ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை கதைகளாக்கிய விந்தன்!

சுந்தரவள்ளி ஒரு படைப்பாளி சமூகத்தின் செவியாக இதயமாக கண்ணாக இருக்க வேண்டும். சமகால நிகழ்வுகளை அவற்றின் மீதான கண்ணோட்டத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்று மாக்சிம் கார்க்கி கூறுகிறார்.அந்த வழியில் எழுத்தாளர் விந்தன் சமூகத்தின் ஆன்மாவாக இருந்திருக்கிறார். 1916 ஆம் ஆண்டு பிறந்து 1975 ஆம் ஆண்டு மறைந்த விந்தன் தமது 59 ஆண்டு கால வாழ்க்கையில் துயரத்தை கண்ணீரை அவமரியாதையைத் தாங்கி நின்று படைப்புகளைத் தந்திருக்கிறார். அவர் இடைநிலைக்கல்வியைக் கூட தாண்டவில்லை இரவுப்பள்ளியிலே படித்து எழுத்தறிவை … Continue reading ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை கதைகளாக்கிய விந்தன்!

“அர்ணாப் கோஸ்வாமியின் இடத்தைப் பிடிப்பதற்கு திருவாளர் மதி போட்டியிடலாம்”

அ. பாக்கியம் இன்றைய தினமணியில் திருவாளர் மதி அவர்களின் கார்ட்டூன் பகுதியில் எழுதியிருப்பது அப்பட்டமான திசை திருப்பலாகும். சீத்தாராம் யெச்சூரியின் ஒற்றை வார்த்தையை வெட்டி எடுத்து முடிவை அறிவிக்கும் மூர்க்கத்தனமான எழுத்தாகும். மதியுள்ள மனிதர்கள் அனைவரும் மாந்தர்களின் வாழ்வின் மீது பற்று வைத்து சீத்தாராம் யெச்சூரியின் வார்தையை புரிந்து கொள்வார்கள். குதர்க்க மதி கொண்டவர்கள் தான் திசை திருப்பும் வகையில் அர்த்தப்படுத்திக் கொள்வார்கள். சீத்தாராம் யெச்சூரியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் உரித் தாக்குதலை கடுமையாக கண்டித்திருக்கிறது. பதான்கோட் … Continue reading “அர்ணாப் கோஸ்வாமியின் இடத்தைப் பிடிப்பதற்கு திருவாளர் மதி போட்டியிடலாம்”

கீழடியில் ஜி. ராமகிருஷ்ணன்; தமிழர்களின் வரலாற்றை பாதுக்காக்க வலியுறுத்தல்

சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஒரு நகர நாகரிகம் இருந்ததற்கான தொல்லியல் சான்றுகள் கடந்த இரண்டாண்டுகளாக நடைபெற்று வரும் ஆய்வின் மூலம் கிடைக்கப்பெற்றுள்ளது. இங்கு சுமார் 5ஆயிரத்திற்கும் அதிகமான பொருட்கள் இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இங்கு கிடைக்கப்பெற்ற பொருட்களை இங்கேயே பாதுகாத்து ஒரு அருங்காட்சியகம் அமைக்க வேண்டுமென தமுஎகச மற்றும் சமூக ஆர்வலர்கள், கீழடி கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இவர்களது கருத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க இரண்டு ஏக்கர் நிலம் … Continue reading கீழடியில் ஜி. ராமகிருஷ்ணன்; தமிழர்களின் வரலாற்றை பாதுக்காக்க வலியுறுத்தல்

“கிளர்ந்தெழுங்கள்.. கலகத்தின் பதாகையை உயர்த்திப் பிடியுங்கள்”: பகத் சிங்

“விடுதலை வேண்டும் என்று நினைக்கும் ஒருவர்தான் முதல் தாக்குதலைத் தொடுக்க வேண்டும் (என்பதை மறவாதீர்கள்). தனக்கென்று தனி உரிமைகள் உள்ள வர்க்கத்தைச் சேர்ந்த எந்த ஒருவரும் தன் உரிமையை அனுபவிக்க மட்டுமே முயற்சி செய்வார். அவருக்குக் கீழ் உள்ளவரை ஒடுக்குவதற்கு முடிந்தவரை அனைத்தையும் செய்வார். உரிமையற்றவர்களைத் தன் குதிகாலால் நசுக்குவார். இப்படித்தான், வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்றாகிறது. எனவே, ஒன்றுபட்டு, உங்கள் சொந்தக் காலில் நின்றுகொண்டு இன்றைய சமூகத்தை எதிர்த்து நிற்க சற்றும் தயங்காதீர்கள். உங்களின் உரிமையை … Continue reading “கிளர்ந்தெழுங்கள்.. கலகத்தின் பதாகையை உயர்த்திப் பிடியுங்கள்”: பகத் சிங்

தோழர் பாலனின் நாயக்கன் கொட்டாய்!

கண்ணன் செப் 12-ஆம் தேதி தோழர். அப்பு, தோழர்.பாலன் சிலைகள் அமைக்கப்பட்டுள்ள தருமபுரி நத்தம், நாயக்கன் கொட்டாய் பகுதிக்கு சென்றோம். நத்தம் கிராம மக்கள் எங்களை அன்புடன் வரவேற்றார்கள். அப்பகுதியில் அமைந்திருந்த பம்பு செட்டில் அனைவரும் குளித்துவிட்டு இருவர் இருவராக பிரிந்து அப்பகுதி கிராம மக்கள் வீட்டில் காலை உணவை உண்டோம். அப்பகுதி மக்களும் புன்முறுவலோடு எங்களை உபசரித்தார்கள். அதில் மிக முக்கிய விடயம் அவர்கள் அனைவரும் எங்களை தோழர்கள் என அழைத்தப்போதுதான்,  தோழர்.பாலன் சாகவில்லை என்பதை … Continue reading தோழர் பாலனின் நாயக்கன் கொட்டாய்!

இசைக்கலைஞர் திருவுடையான் குடும்பப் பாதுகாப்பு நிதி தாருங்கள்: தமுஎகச வேண்டுகோள்

  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ச.தமிழ்செல்வன், பொதுச் செயலாளர் (பொறுப்பு) கே.வேலாயுதம் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில், ‘தமிழக உழைப்பாளி மக்களின் உள்ளங்களில் இடம்பிடித்த முற்போக்கு இசைக்கலைஞர் திருவுடையானின் எதிர்பாரா மரணம் நம் எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இடதுசாரி இயக்க மேடைகளிலும் பெரியாரிய அம்பேத்காரிய மேடைகளிலும் பல்வேறு தொழிற்சங்க மேடைகளிலும் முற்போக்கான சிந்தனைகளை முன்னெடுக்கும் அனைத்து அரங்குகளிலும் பாடி நம் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்தவர் தோழர் ப.திருவுடையான். வணிகநோக்கம் ஏதுமின்றி, இசைக்காகவே வாழ்ந்து, கொள்கை … Continue reading இசைக்கலைஞர் திருவுடையான் குடும்பப் பாதுகாப்பு நிதி தாருங்கள்: தமுஎகச வேண்டுகோள்

பொது வேலைநிறுத்தம் ஏன்?: சீத்தாராம் யெச்சூரி

பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி நாடுமுழுவதும் உள்ள தொழிற்சங்கங்கள் வெள்ளிக்கிழமை பொது வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளன. இந்த வேலை நிறுத்தம் ஏன் என சீத்தாராம் யெச்சூரி அளித்திருக்கும் கேள்வி-பதில் அறிக்கை: ஏன் இன்றைய தினம் (செப்டம்பர் 2) அகில இந்திய பொது வேலைநிறுத்தம் நடைபெறுகிறது? 12 கோரிக்கைகளை முன்வைத்து, அனைத்து தொழிற்சங்கங்களால் கூட்டாக வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கைகளை ஓராண்டுக்கு முன்பே அவர்கள் அரசாங்கத்திடம் சமர்ப்பித்துவிட்டார்கள். இந்தக் கோரிக்கைகள் நமது நாட்டின் உழைக்கும் மக்களது உரிமைகளையும், அடிப்படை வாழ்வாதாரங்களையும் உறுதிப்படுத்துவதற்காக … Continue reading பொது வேலைநிறுத்தம் ஏன்?: சீத்தாராம் யெச்சூரி

“தொழிலாளர்களுக்கு இரட்டை ஆயுள் பெற்றுத்தந்த வனிதா மோகனுக்கு நன்னெறிச் செம்மல் விருதா?” சூழலியலாளர்கள் எதிர்ப்பு

தொழிலாளர்களின் விரோதியும் கார்ப்பரேட் முதலாளியுமான கோவை பிரிக்கால் ஆலை இயக்குனர் வனிதா மோகனுக்கு “நன்னெறிச் செம்மல்” விருது வழங்குகிற கேலிக்கூத்து நிகழ்வைக் கண்டித்து புறக்கணிப்போம்” என சூழலியல் செயல்பாட்டாளர் அழைப்பு விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், “யாரிந்த வனிதா மோகன்? கோவை,பிரிக்கால் ஆலையின் அடக்குமுறைகளுக்கு எதிராக போராடிய தொழிலாளர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்தவர். தொழிலாளர் முன்னோடிகள் 8  பேருக்கு போலீஸ், நீதிமன்றத் துணையுடன்  இரட்டை ஆயுள் பெறுவதற்கு காரணமாக இருந்தவர். ஆலைத் தொழிலாளர்களின் அனுமதியின்றியே தனது … Continue reading “தொழிலாளர்களுக்கு இரட்டை ஆயுள் பெற்றுத்தந்த வனிதா மோகனுக்கு நன்னெறிச் செம்மல் விருதா?” சூழலியலாளர்கள் எதிர்ப்பு

தோழமை அன்பின் திருவுடையான்: ஸ்ரீரசா

ஸ்ரீரசா 2016 ஆகஸ்டு 29ம் தேதியின் காலைப் பொழுது ஒரு கலைஞனை விழுங்கிக் கொண்டா விடிய வேண்டும்? ஓர் அகால நேரத்தில், வாடிப்பட்டியின் நெடுஞ்சாலையோரம் மரணத்தின் பாடலால் இசைக்கப்பட்ட அபூர்வக் கலைஞன் திருவுடையான். தானே பாடுவான், அருமையாகத் தபேலாவோடு விரல்களை விளையாட விடுவான். தபேலா வாசித்துக் கொண்டே பாடுவான். பழம பாடல்களின் தீராக் காதலன். புதிய பாடல்களுக்கு மெட்டமைப்பதிலும் வல்லவன்... திரையிசையிலும் தலைகாட்டியவன்.. ஆனால் மக்கள் அரங்க மேடைகள் தோறும் தனித்துவத்தோடு தன் குரலைப் பரவ விட்டவன். … Continue reading தோழமை அன்பின் திருவுடையான்: ஸ்ரீரசா

மக்கள் பாடகர் திருவுடையான்: அஞ்சலி!

தமுஎகசவின் திருநெல்வேலி மாவட்டச் செயலாளராக பணியாற்றிய தோழர் திருவுடையான் (48) சேலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு தனது சொந்த ஊரான சங்கரன் கோவிலுக்கு காரில் திரும்பி சென்ற போது, லாரி ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளாகி அவருடன் காரில் சென்ற அவரது சகோதரரும், ஓட்டுநரும் படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சம்பவ இடத்திலேயே திருவுடையான் உயிரிழந்தார். அவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அஞ்சலி செலுத்தியுள்ளது. “இச்சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. தோழர் திருவுடையான் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் … Continue reading மக்கள் பாடகர் திருவுடையான்: அஞ்சலி!

பத்தி: நீலம் – பச்சை – சிவப்பு : தலித் அரசியல் குறியீடாகுமா!

அன்புசெல்வம் குஜராத் - உனா எழுச்சி தேசம் தழுவிய பேரியக்கமாக உருவெடுக்க வேண்டும் என்பதில் பலருக்கும் ஆர்வம். அதற்கான சூழல் உடனடியாக அமையவில்லை என்றாலும் குறைந்த பட்சம் "தலித் - ப‌ழங்குடியினர் - இஸ்லாமியர் - இடதுசாரி" அமைப்புகளையாவது ஒருங்கிணைப்போம் என்கிற குரல் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. பொதுவாக, கட்சிகள் வாக்கு வங்கி அரசியலையும், சாதிப் பெரும்பாண்மையையும்சார்ந்திருப்பவை. அவற்றின் குழு அடையாள அரசியலும் அதற்கேற்றார் போலவே செயல்படும். இப்போதைய அரசியல் நடைமுறையில் அவை தலித் எழுச்சியை ஆதரிப்பதில் ஆச்சரியப்பட … Continue reading பத்தி: நீலம் – பச்சை – சிவப்பு : தலித் அரசியல் குறியீடாகுமா!

8 மாத குழந்தை பாலியல் கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதில் காதல் எங்கிருந்து வந்தது? ராமதாஸுக்கு ஜி. ஆர். கேள்வி

  பெண்களின் பாதுகாப்பு குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அனைத்துக் கட்சியினருக்கும் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பதில் அளித்துள்ளது. அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் இதுகுறித்து விடுத்துள்ள அறிக்கையில், “பெண்களின் பாதுகாப்பு குறித்து அரசியல் கட்சிகள் குரல் கொடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும், சில ஆலோசனைகளையும் உள்ளடக்கிய உங்கள் கடிதம் கிடைத்தது. நன்றி. பெண்கள் மீதான வன்முறை பல வகைப்பட்டது. பெண் என்பதால் வரும் பாலியல் தாக்குதல்; தொழிலாளி, விவசாயி, அலுவலக ஊழியர் … Continue reading 8 மாத குழந்தை பாலியல் கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதில் காதல் எங்கிருந்து வந்தது? ராமதாஸுக்கு ஜி. ஆர். கேள்வி

பழங்குடி தலைவர் K.A.குணசேகரன் அஞ்சலி

சந்திர மோகன் தமிழ்நாடு செட்யூல்டு டிரைப் (மலையாளீ) பேரவையின் நிறுவனத் தலைவரும், தென்னிந்திய பழங்குடியினர் யூனியன் தலைவருமான மதிப்பிற்குரிய K.A.குணசேகரன் அவர்கள், 71 வயதில் நோயின் காரணமாக இறந்தார். மாலை 4 மணியளவில், பள்ளிப்பாளையம் மின்மயானத்தில் அவரது உடல் எரியூட்டப்பட்டது. கொல்லிமலையைப் பூர்வீகமாகக் கொண்ட மலையாளீ பழங்குடியைச் சார்ந்தவர். தொலைத் தொடர்புத் துறையில் அரசுப் பணியில் ஊழியராக வாழ்க்கையைத் துவங்கிய அவர், 45 ஆண்டுகளுக்கும் மேலாக பழங்குடி மக்களுக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்து கொண்டார். நான் பயின்ற … Continue reading பழங்குடி தலைவர் K.A.குணசேகரன் அஞ்சலி

மார்க்சியத்தை மார்க்சியத்தால் வீழ்த்துவது: ரங்கநாயக்கம்மா நூலை முன்வைத்து…

சி.மதிவாணன் தமிழ்நாட்டிற்கு புதியதோர் புத்தகம் வருகை தந்திருக்கிறது. ரங்கநாயகம்மா என்ற ஒரு எழுத்தாளர் எழுதிய ‘சாதி ஒழிப்பிற்கு புத்தம் போதாது அம்பேத்கர் போதாது, மார்க்சியமே தீர்வு‘ என்ற புத்தகம் குறளி பதிப்பகத்தால் (ஆங்கிலம் வழி) தமிழில் விற்பனை செய்யப்படுகிறது. அதனை ஸ்வீட் ஹோம் என்ற ஆந்திர நிறுவனம் வெளியிட்டுள்ளது. புத்தகத்தின் தலைப்பே புத்தகம் என்ன சொல்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது. வெளியான பிரதிகள் விற்றுத் தீர்ந்துவிட்டதாகவும் அடுத்த பதிப்பு தயாராகிக்கொண்டிருக்கிறது என்றும் சொல்கிறார்கள். தமிழகத்தின் இன்றைய நிலையைச் சற்று … Continue reading மார்க்சியத்தை மார்க்சியத்தால் வீழ்த்துவது: ரங்கநாயக்கம்மா நூலை முன்வைத்து…

அரசியல்வாதிகள், முதலாளிகள், பியூஸ் சேத்தியா வகை சமூக ஆர்வலர்கள் அபகரித்த பழங்குடியினர் நிலங்கள்!

சந்திர மோகன் நிலங்கள் பறிபோனதால் திருப்பதி காடுகளில் சாகின்றனர்! கல்வராயன் மலையானது, சேலம்,விழுப்புரம் மாவட்டங்களில் 600 ச.கி.மீ பரப்பளவில் பரந்து விரிந்த இலட்சக்கணக்கான ஏக்கர் செழிப்பான நிலங்களைக் கொண்டதாகும். 50,000 ற்கும் மேற்பட்ட (தமிழ் பேசுகின்ற) "மலையாளி" பழங்குடியினர் வசிக்கும் முக்கியமான மலையும் ஆகும். இம் மலையிலிருந்து கடந்த சில ஆண்டுகளாக திருப்பதிக் காடுகளுக்கு செம்மரங்களை வெட்டச் சென்றவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்; வன அதிகாரிகள் கொலை வழக்கில், 2016 மே மாதத்தில் ஆந்திர சிறைகளிலிருந்து விடுதலையான 287 … Continue reading அரசியல்வாதிகள், முதலாளிகள், பியூஸ் சேத்தியா வகை சமூக ஆர்வலர்கள் அபகரித்த பழங்குடியினர் நிலங்கள்!

புரட்சி எப்பொழுது தனியுடைமையானது?: பிரேம்

பிரேம்   ஆதிக்க பக்தி கொண்ட, அடக்குமுறையை நியாயப்படுத்துகிற கட்சிகளின், அமைப்புகளின் அடிப்படை உளவியல் தகவமைப்பு, “நீயே உலகம், உன்னால்தான் அனைத்தும், நீயே அனைத்தையும் செய்தாக வேண்டும். நீ மற்றும் இறைமை கொண்ட கட்சி அல்லது அமைப்பு மட்டும்தான் இந்த உலகம். அதற்காக நீ கொலை செய்யலாம், கொலை செய்யப்படலாம், அனைத்தும் புனிதமானவை, நீ புனிதமானவன்.” என நீள்கிறது. இந்த உள அமைப்பு பாசிச, அடிப்படைவாத வன்முறைகளைத் தன் புனிதக் கடமையாக எண்ணிக் கொள்ளும். ஆனால் இதே … Continue reading புரட்சி எப்பொழுது தனியுடைமையானது?: பிரேம்

“அகந்தை, அறியாமையின் ஆபத்தான கலவை ஸ்மிருதி இரானி”

மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டஸ்மிருதி இரானி, அகந்தை மற்றும் அறியாமையின் ஆபத்தான கலவை என வரலாற்றாசிரியர் ராமசந்திர குஹா கருத்து தெரிவித்துள்ளார். யேல் மற்றும் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் விரிவுரையாற்றியிருக்கும் ராமச்சந்திர குஹா, ஸ்மிருதி இரானி தன்னுடைய அமைச்சகத்தின் நம்பகத்தன்மையை கணிசமான அளவு சீர்குலைத்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். என்டிடீவி செய்தி ஊடகத்துக்கு அளித்த நேர்காணலில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மூத்த பேராசிரியர்களை ஸ்மிருதி இரானி நடத்திய விதம் குறித்து நினைவுகூர்ந்த குஹா, “கூட்டமொன்றில் ஐஐடி இயக்குனர்கள் ஒருவர், … Continue reading “அகந்தை, அறியாமையின் ஆபத்தான கலவை ஸ்மிருதி இரானி”

அஞ்சலி: தோழர் நவமணி

பிரதாபன் ஜெயராமன் 1946ஆம் ஆண்டு இந்தியாவை உலுக்கிய கடற்படை எழுச்சி பம்பாயில் தொடங்கி, கல்கத்தா, சென்னை என்று அனைத்துப் பகுதிகளுக்கும் பரவியது. கடற்படையிலிருந்த இந்திய வீரர்கள் அந்நிய ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தார்கள். அந்தப் போராட்டத்தை முறியடிக்க ஆங்கிலேய அரசு கடுமையான ஒடுக்கு முறையை ஏவிவிட்டது. இந்தியக் கடற்படை வீரர்களின் போராட்டத்திற்குக் கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவு அளித்தது. கடற்படை வீரர்கள் போராட்டத்தை ஆதரித்து மதுரையில் ஒரு பேரணியை சங்கரய்யா தலைமை தாங்கி நடத்தினார். பேரணியைக் கைவிடுமாறு அவரை … Continue reading அஞ்சலி: தோழர் நவமணி

படுகொலை செய்யப்பட்ட கேரள தலித் மாணவி ஜிசாவின் தாயாருக்கு கன்னய்யா குமார், ஷெஹ்லா ரஷீத் ஆறுதல்

ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவர் சங்க நிர்வாகிக்கள் கன்னய்யா குமார், ஷெஹ்லா ரஷீத் படுகொலை செய்யப்பட்ட கேரள தலித் மாணவி ஜிசாவின் தாயாரைச் சந்தித்து  ஆறுதல் கூறினர். கேரளாவில் அமைந்திருக்கும் புதிய அரசு, ஜிசாவின் கொலையை விரைந்து விசாரிக்கும் எனவும் ஜிசாவின் தயாருக்கு தேவையான உதவிகளை செய்யும் எனவும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

வயலுக்குச் சென்ற பெண்ணை வன்புணர்வு செய்து, மாவோயிஸ்ட் என சீருடை அணிவித்து என்கவுண்டர்

சத்தீஸ்கரின் கோம்பாட் என்ற கிராமத்தில் மத்கம் ஹித்மெ என்ற பழங்குடி பெண்ணை வன்புணர்வு செய்து, அவரை மாவோயிஸ்ட் என்று கூறி என்கவுண்டர் செய்துள்ளது போலீஸ். இந்தத் தகவலை பத்திரிகையாளர் ராகுல் பண்டிடா தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். மத்கம் வயலுக்குச் சென்றிருந்தபோது அவரை, போலீஸ் அழைத்துச் சென்றதாகவும் பிறகு அவர் என்கவுண்டர் செய்யப்பட்டது தெரியவந்ததாகவும் தெரிவித்துள்ள கிராம மக்கள் அவருடைய உடலை அடக்கம் செய்ய மறுத்து போராடி வருகின்றனர். தங்களுடைய குரல்களை பத்திரிகையாளர்களும் செயற்பாட்டாளர்களும் கேட்க வேண்டும் … Continue reading வயலுக்குச் சென்ற பெண்ணை வன்புணர்வு செய்து, மாவோயிஸ்ட் என சீருடை அணிவித்து என்கவுண்டர்

“உலக பொருளாதார மந்தநிலையில் மேக் இன் இந்தியா அறிவிப்பு  திவாலாகிப் போவதற்கான அடையாளம்” பேரா. பிரபாத் பட்நாயக்

பேராசிரியர் பிரபாத் பட்நாயக் உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்கள் முதலீடு செய்யவே மறுத்துக் கொண்டிருக்கும் சூழலில், அவர்கள் தயாராக இல்லாத சூழலில்- மோடிஅரசாங்கம் “மேக் இன் இந்தியா” என்று உலக முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்திருப்பது என்பது கவனிக்கப்படாத ஒன்றாகவே உள்ளது. நமது நாட்டில் தாராளமயமாக்கலுக்குப் பிறகு விவசாயபொருட்களின் உற்பத்தி வீழ்ச்சியடைந்தது. குறிப்பாக உணவுப் பொருள் உற்பத்தியிலும் வீழ்ச்சியை சந்தித்தது. பொருள் உற்பத்தி குறைந்தது. அதேநேரம் தாராளமயம் காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியடைந்து வருகிறது என்று பெருமையுடன் … Continue reading “உலக பொருளாதார மந்தநிலையில் மேக் இன் இந்தியா அறிவிப்பு  திவாலாகிப் போவதற்கான அடையாளம்” பேரா. பிரபாத் பட்நாயக்