வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு அரசியலமைப்புக்கு எதிரானது: உச்சநீதிமன்றம்

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, வன்னியர் இடஒதுக்கீடு அரசியலமைப்பிற்கு எதிரானது என்று கூறி தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்தது.இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. … Continue reading வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு அரசியலமைப்புக்கு எதிரானது: உச்சநீதிமன்றம்

100 மார்க் பிராமணனும் 35 மார்க் எஸ்சியும்; எஸ்.வி.சேகர்கள் தெரிந்துகொள்ள சில உண்மைகள்…

உங்களுக்கு தேவை அனிதாக்கள் பத்துப் பாத்திரம் தேய்த்தோ, பீ அள்ளியோ திரிய வேண்டும்.

இந்த ஆண்டு முதல் உயர் சாதியினருக்கு மருத்துவ கல்வியில் 50.5 % இடஒதுக்கீடு; மத்திய அரசு முடிவு

இந்திய அளவில் மருத்துவ கல்வி வழங்கப்படும் இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்படும் இடங்களை குறைத்து,  உயர் சாதியினருக்கு அதாவது பொது பிரிவினருக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக மத்திய சுகாதார செயலர் சி.கே. மிஸ்ரா தெரிவித்துள்ளார். நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்தியில்,  49.5% இடஒதுக்கீடு பெரும் பிரிவினருக்கு தனியாகவும் 50.5 % இடஒதுக்கீடு பெறாத பொதுப்பிரிவினருக்கும் தனியாகவும் இந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நடைபெறும் என மருத்துவ செயலர் தெரிவித்துள்ளார். மேலும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் … Continue reading இந்த ஆண்டு முதல் உயர் சாதியினருக்கு மருத்துவ கல்வியில் 50.5 % இடஒதுக்கீடு; மத்திய அரசு முடிவு

இதர பிற்படுத்தப்பட்டோருக்கான வருமான வரம்பை  15 லட்சமாக உயர்த்த வேண்டும்!

இதர பிற்படுத்தப்பட்டோருக்கான வருமான வரம்பை  15 லட்சமாக உயர்த்த வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசின் கல்வி, வேலை வாய்ப்புகளில் ஓ.பி.சி. என்னும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது. இதற்கு ஓ.பி.சி. சான்றிதழ் பெறவேண்டுமானால், பெற்றோரின் ஆண்டு வருமானம் (கிரீமிலேயர்) ஆறு இலட்சம் ரூபாய்க்குள் தான் இருக்க வேண்டும் என்று … Continue reading இதர பிற்படுத்தப்பட்டோருக்கான வருமான வரம்பை  15 லட்சமாக உயர்த்த வேண்டும்!

“600 ஆய்வுக்கட்டுரைகளையும் 81 நூல்களையும் எழுதியிருக்கும் என்னை பேராசிரியாராகக்கூட ஐஐடி கருதவில்லை”: பேரா. வசந்தா கந்தசாமி

  சென்னை ஐ.ஐ.டி.யில் கடந்த 1995-ஆம் ஆண்டு ஜனவரியில் இணைப் பேராசிரியர்கள், பேராசிரியர்கள் தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. கணிதத் துறையில் இணைப் பேராசிரியர் பதவிக்கு, டாக்டர் டபிள்யூ.பி.வசந்தா கந்தசாமி விண்ணப்பித்தார். ஆனால் அவர் தேர்வாகவில்லை. அதே சமயம், பேராசிரியர் தேர்வில் கலந்து கொண்ட அவர், இணை பேராசிரியராக நியமிக்கப்பட்டார். பேராசிரியர் பணிக்கு தன்னை தேர்வு செய்யாததை எதிர்த்தும், அடிப்படை தகுதிகள் இல்லாத சிலர் இணை பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டதாகக் கூறியும், அவர்களின் நியமனத்தை எதிர்த்தும், இந்த முறைகேடுகள் குறித்து … Continue reading “600 ஆய்வுக்கட்டுரைகளையும் 81 நூல்களையும் எழுதியிருக்கும் என்னை பேராசிரியாராகக்கூட ஐஐடி கருதவில்லை”: பேரா. வசந்தா கந்தசாமி

“பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு இந்திய அரசியல் சாசனதுக்கு எதிரானது”: குஜராத் நீதிமன்றம்

  உயர்சாதியினரில் பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்காக 10% இடஒதுக்கீடு அளிக்கும் குஜராத் பாஜக அரசின் அவசரச் சட்டத்தை அம்மாநில உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீட்டை அனுமதிக்க முடியாது. அவ்வாறான இடஒதுக்கீடு இந்திய அரசியல் சாசனத்தில் உள்ள அடிப்படை உரிமைகளை மீறுவது ஆகும் என நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தீக்கதிர் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, படிட்தார் சமூகத்தினர் இட ஒதுக்கீடு கோரி நடத்திய போராட்டத்தின் காரணமாக குஜராத் முதல்வர் ஆனந்திபென் படேல் கடந்த … Continue reading “பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு இந்திய அரசியல் சாசனதுக்கு எதிரானது”: குஜராத் நீதிமன்றம்

கடந்த ஆறு ஆண்டுகளாக ஒரேஒரு தலித்/பழங்குடி நீதிபதிகூட உச்சநீதிமன்றத்தில் நியமனம் பெறவில்லை!

எழுதியவர்: Maneesh Chhibber கடந்த ஆறு ஆண்டுகளாக ஒரேஒரு தலித்/பழங்குடி நீதிபதிகூட உச்சநீதிமன்றத்தில் நியமனம் பெறவில்லை என இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி கட்டுரை வெளியிட்டுள்ளது. 2010 -ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த கே.ஜி. பாலகிருஷ்ணன் ஓய்வுபெற்றதற்குப் பிறகு, தலித் வகுப்பைச் சேர்ந்த எவரும் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படவில்லை. இதேபோல்தான் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களும் நியமிக்கப்படவில்லை. இந்திய மக்கள் தொகையில் 16 சதவீத மக்கள் தொகையுள்ள தலித்துகளில் ஒருவர்கூட நீதிபதியாக நியமனம் பெறவில்லை. கடந்த … Continue reading கடந்த ஆறு ஆண்டுகளாக ஒரேஒரு தலித்/பழங்குடி நீதிபதிகூட உச்சநீதிமன்றத்தில் நியமனம் பெறவில்லை!

தலித் கிறிஸ்தவர் போராட்டம் : எது சாத்தியம்?

அன்புசெல்வம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் பொருளாதார வளர்ச்சியில் இட ஒதுக்கீட்டுக்கு சிறப்பான இடம் இருக்கிறது. இது வரையிலும் அவர்களுக்கு கிடைக்காத சம வாய்ப்பு என்ற நோக்கத்தில் இந்திய அரசியல் அமைப்பும் இதனை உறுதி செய்து, பத்தாண்டுக்கு ஒருமுறை நீட்டித்து வருகிறது. கிட்டத்தட்ட ஆறு பத்தாண்டுகள் கடந்து விட்டன. இத்தனை ஆண்டுகளில் தலித்துகள் உள்ளிட்ட அனைவருக்கும் வழங்கப்பட்ட இடஒதுக்கீடு எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது என்பதை மறு ஆய்வு செய்திருக்க வேண்டும். அப்படியொரு ஆரோக்கியமான சூழல் இந்திய ஜனநாயக அரசியல் … Continue reading தலித் கிறிஸ்தவர் போராட்டம் : எது சாத்தியம்?

UPSC தேர்வில் முதலிடம் பெற்ற டினா பெயரில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான கருத்தை திணிக்கும் மோடி பக்தர்கள்!

ஆதவன் தீட்சண்யா இந்திய குடிமைப்பணி தேர்வாணையம் (UPSC), மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC), தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) போன்றவை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிந்தனையிலிருந்து பிறந்தவை. பணிநியமனத்தில் நிலவும் சாதிரீதியான சாய்மானத்தையும் பாரபட்சத்தையும் தடுப்பதற்கான முதற்படியாக மத்திய மாநில அரசுகள் தத்தமக்கான தேர்வாணையங்களை அமைக்கவேண்டும் என்று அவர் எழுப்பிய கோரிக்கையே பிற்காலத்தில் செயல்வடிவம் பெற்றது. அரசியல் சாசன அவையில் அங்கம் வகிக்க தனக்கு கிடைத்த வாய்ப்பை அவர் இந்திய குடிமைப்பணி தேர்வாணையம் என்கிற … Continue reading UPSC தேர்வில் முதலிடம் பெற்ற டினா பெயரில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான கருத்தை திணிக்கும் மோடி பக்தர்கள்!

#வீடியோ: இடஒதுக்கீடு ஏன் தேவை என்று சாயிஃப் அலிகான் பாடம் எடுக்கிறார்!

இடஒதுக்கீடு பற்றி வட இந்தியாவில் எதிர்மறையான பிரச்சாரமே ஓங்கிவருகிறது.  2011-ஆம் ஆண்டில் பிரகாஷ் ஜா இயக்கிய ஆராக்‌ஷான்(ஒதுக்கீடு என பொருள்) என்ற ஹிந்தி படத்தில் நாயகனாக நடித்த சாயிஃப் அலிகான் இடஒதுக்கீடு ஏன் தேவை என்பதை ஒரு காட்சியில் சொல்கிறார். வீடியோ இணைப்பு கீழே...ஆங்கில சப் டைட்டிலுடன் http://www.youtube.com/watch?v=WSXmkzypFWs

#அவசியம்படியுங்கள்: கண்ணையாவை கொண்டாடுங்கள் ஆனால் அதோடு நிறுத்திக் கொள்ளாதீர்கள்!

வில்லவன் இராமதாஸ் கண்ணையா குமாரின் உரை பாமரத்தனமானதாக இருப்பதாகவும் அதனை உணராமல் பலரும் பரவசத்தோடு பதிவதாகவும் சில (இடதுசாரிகள்)  பதிவுகளை காண நேர்ந்தது. மேலும் இப்படி உருவான முன்னாள் மாணவர் தலைவர்கள் கடைசியில் இந்த அமைப்போடு சமரசம் செய்துகொண்டதாகவும் சில தரவுகள் பகிரப்பட்டிருக்கின்றன (அசாம் கன பரிசத் கட்சி ஒரு மாணவ தலைவரால் உருவாக்கப்பட்ட கட்சி). இவற்றை முரட்டுத்தனமான மறுப்பது சரியாக இருக்காது. முதலில் பாமரத்தனம் என்பது ஆட்களைப் பொறுத்து மாறுபடும். இந்தியாவின் சிறந்த மார்க்சியவாதியை தெரிவுசெய்து … Continue reading #அவசியம்படியுங்கள்: கண்ணையாவை கொண்டாடுங்கள் ஆனால் அதோடு நிறுத்திக் கொள்ளாதீர்கள்!

“நீ எல்லாம் உயர்கல்வி படிப்பதற்கு ஏன் வந்த?’’ தலித் மாணவரை அலைக்கழிக்கும் உ.பி பல்கலை; மாணவர் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக பிரதமருக்குக் கடிதம்!

ஹரிஷ் குமார் வரலாற்றுத்துறை மாணவர். இவர் 2005ஆம் ஆண்டு பல்கலைக் கழக தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சியடைந்து மீரட், சௌத்ரி சரண்சிங் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவராகச் சேர்ந்தார். தாய் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர். தந்தை ஒரு தையற்காரர். ஹரிஷ் குமார் 25க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்திருக்கிறார். ஆயினும் அவரால் தன்ஆராய்ச்சியைத் தொடர முடியவில்லை. இவருக்குத் தன் ஆராய்ச்சியை மேற்கொள்ள ஒரு மேற்பார்வையாளர் கிடைக்கவில்லை. இவர் சந்தித்த பேராசிரியர்கள் அனைவருமே, “நீ எல்லாம் உயர்கல்வி படிப்பதற்கு ஏன் வந்த?’’ என்று கூறி … Continue reading “நீ எல்லாம் உயர்கல்வி படிப்பதற்கு ஏன் வந்த?’’ தலித் மாணவரை அலைக்கழிக்கும் உ.பி பல்கலை; மாணவர் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக பிரதமருக்குக் கடிதம்!

மக்கள் வரிப்பணத்தில் படித்துவிட்டு வெளிநாடுகளுக்கு சேவை செய்பவர்கள்தான் தேசபக்தர்களா?

பூ.கொ.சரவணன் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். பட்டதாரிகள் மக்களின் வரிப்பணத்தில் படித்துவிட்டு, வெளிநாடுகளுக்கு ஓடுகிறார்கள் என்று இடதுசாரிகள், போராளிகள் விமர்சித்த பொழுதெல்லாம் ‘அதுல என்ன இருக்கு?’ என்கிற ரீதியில் பதில்கள் இந்தியாவைக் குறைச்சொல்லி வந்தன. இட ஒதுக்கீட்டை முக்கியமான காரணமாக வேறு கைகாட்டினார்கள். அற்புதமான கல்வி நிறுவனங்களை உருவாக்குவதில் நம்முடைய கல்விமுறை அடைந்த தோல்வியும் இப்படியொரு பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது என்பதையும் உணர முடிகிறது. அது இருக்கட்டும்.பல கோடி மக்களின் வரிப்பணத்தில் படித்துவிட்டு தேசபக்திக்குத் துரோகம் செய்யும்வகையில் காஷ்மீர் தீவிரவாதி ஒருவருக்கு … Continue reading மக்கள் வரிப்பணத்தில் படித்துவிட்டு வெளிநாடுகளுக்கு சேவை செய்பவர்கள்தான் தேசபக்தர்களா?

“முஸ்லிம் இறந்தால் உலகின் பல நாடுகள் குரல் எழுப்பும்; அதுவே ஒரு பிராமின் இறந்தால் யார் குரல் கொடுக்கிறார்?” ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

ஹைதரபாத் பல்கலைக் கழக மாணவர் ரோஹித் வெமூலாவின்  மரணம் சாதிய பிரச்சினையல்ல, அது ஒரு குற்றப் பிரச்சினை என கருத்து சொல்லியிருக்கிறார் சாமியார் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர். மேலும் அவர், இந்தப் பிரச்சினையை அரசியாக்கப் பார்க்கிறார்கள் என்றும் சொல்லியிருக்கிறார். தி க்விண்ட் இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் இப்படிச் சொல்லியிருக்கிறார் சமீபத்தில் பத்ம ஸ்ரீ விருது பெற்ற ரவிசங்கர். “ரோஹித் வெமுலா மரணத்தை சாதியை வைத்து அரசியலாக்கப் பார்க்கிறார்கள். இதுவே இறந்தவர் முஸ்லிம் ஆக இருந்தால் உலகின் பல … Continue reading “முஸ்லிம் இறந்தால் உலகின் பல நாடுகள் குரல் எழுப்பும்; அதுவே ஒரு பிராமின் இறந்தால் யார் குரல் கொடுக்கிறார்?” ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

#வீடியோ: மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தில் போலீஸின் அடக்குமுறையை இந்தப் பெண் எப்படி எதிர்கொள்கிறார் என்பதைப் பாருங்கள்!

அரசு பணிகளில் மூன்று சதவீத இட ஒதுக்கீடு, உதவித்தொகையை ரூ.1000-இருந்து ரூ 5000 ஆக உயர்த்த வேண்டும் உட்பட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மாற்றுத் திறனாளிகள் திங்கள் கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். சென்னை காமராஜர் சாலையில் மறியல் செய்ய முயன்ற மாற்றுத் திறனாளிகள் கைது செய்யப்பட்டு, திங்கள் கிழமை மாலை வேப்பேரியில் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். ஆனால், அங்கு குடிநீர், கழிப்பறை, உணவு ஆகிய அடிப்படை வசதிகள் எதுவும் அவர்களுக்கு செய்து தரப்படவில்லை என … Continue reading #வீடியோ: மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தில் போலீஸின் அடக்குமுறையை இந்தப் பெண் எப்படி எதிர்கொள்கிறார் என்பதைப் பாருங்கள்!

#விசாரணை படத்தில் “கோட்டாவுல உள்ள வந்தவன், சிஸ்டம் புரியாம பிரச்சன பண்றான்” இடஒதுக்கீட்டு முறைக்கு எதிரான உரையாடல் ஏன்?

காட்டாறு “கோட்டாவுல உள்ள வந்தவன், சிஸ்டம் புரியாம பிரச்சன பண்றான்” விசாரணை படத்தில் இடஒதுக்கீட்டு முறைக்கு எதிரான உரையாடல். வெற்றிமாறன், தனுஷ் தயாரிப்பில், வெற்றிமாறன் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘விசாரணை’. இடைவேளை வரை கோவையில் ஆட்டோ ஓட்டுநராகப் பணியாற்றும் மு.சந்திரகுமார் அவர்களின் ‘லாக்அப்’ நாவலை அடிப்படையாக வைத்தும், அதற்குப் பிறகு இயக்குநர் வெற்றிமாறனின் எழுத்திலும் ‘விசாரணை’ நடக்கிறது. தமிழ்சினிமாவின் அனைத்துக் கதாநாயகர்களும் ஏதாவது ஒரு திரைப்படத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக நடித்திருப்பார்கள். கதாநாயகர்களே ஏற்று நடித்த வேடம் என்பதால், … Continue reading #விசாரணை படத்தில் “கோட்டாவுல உள்ள வந்தவன், சிஸ்டம் புரியாம பிரச்சன பண்றான்” இடஒதுக்கீட்டு முறைக்கு எதிரான உரையாடல் ஏன்?

#தலித்முதல்வர் விவாதம்: சுபவீயின் கேள்வி புறக்கணிக்கக்கூடியதா?

மதிவண்ணன் பத்திரிக்கையாள நண்பரொருவர் தலித் முதல்வர் ஆக வேண்டும் என்கிற விவாதத்தில் உங்கள் கருத்து என்ன எனக் கேடடார்;. அவரிடம்; சொன்னதும் சொல்ல நினைத்ததுமான சில கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன் தலித் முதல்வர் ஆக வேண்டும் என்கிற கருத்து எனக்கு உடன்பாடானதே. இன்னும் கூடுதலாக அழுத்திச் சொல்வதென்றால் ஒடுக்குமுறையில் உச்சபட்சத்தை அனுபவிக்கின்றதும் உற்பத்தியில் உடல் உழைப்பில் நற்பண்புகளில் முதன்மை இடத்தை வகிப்பதுமான அருந்ததியர் வகுப்பில் ஒருவர் முதல்வர் ஆவது கருத்தியல் ரீதியில் பொருத்தமான ஒன்று. நடைமுறையில் … Continue reading #தலித்முதல்வர் விவாதம்: சுபவீயின் கேள்வி புறக்கணிக்கக்கூடியதா?

பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு பேராசிரியர்களாக பணிபுரிய தகுதி இல்லையா?: வெளிச்சத்திற்கு வரும் ஜவஹர்லால் நேரு பல்கலை நிலவரம்…

Anoop Manav கிரண் என்பவர் தாக்கல் செய்த தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம், டெல்லியின் புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில், இதர பிற்படுத்தப்பட்ட இனத்தை சேர்ந்த பேராசிரியர்களோ, இணை பேராசிரியர்களோ  ஒருவர் கூட இல்லை என்பது தெரிய வந்துள்ளது. அதிகபட்சமாக, இதர பிற்படுத்தப்பட்ட இனத்தில் இருந்து 29 துணை பேராசியர்கள் மட்டுமே அங்கு பணிபுரிவதும் கண்டறிய பட்டுள்ளது. பல்கலைகழகத்தில்  மொத்தமுள்ள 612  பேராசிரியர்களில், 29 பேர் மட்டுமே, அதுவும் துணை பேராசிரியர்களாக பணி புரிகிறார்கள் என்றால், … Continue reading பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு பேராசிரியர்களாக பணிபுரிய தகுதி இல்லையா?: வெளிச்சத்திற்கு வரும் ஜவஹர்லால் நேரு பல்கலை நிலவரம்…