“கோயில், மசூதிக்குச் சென்று நேரத்தை வீணடிப்பதைக் காட்டிலும் பொறியியல், மருத்துவ கல்லூரிக்குச் செல்லுங்கள்”: மார்கண்டேய கட்ஜு

கோயில்களில், மசூதிகளில் பெண்கள் வழிபாட்டு உரிமைக்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள். சனாதனவாதிகளும் பெண்ணியவாதிகளும் ஒரு புறம் இதுகுறித்த விவாதங்களில் ஈடுபட்டிருக்க, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு, ஆன்மீகத்திலிருந்து அறிவியலுக்கு திரும்புங்கள் என்கிறார். இதுகுறித்து தனது முகநூல் பதிவில், “இந்து பெண்கள் சபரிமலை கோயிலுக்குச் செல்வதைப் பற்றி என்னிடம் ஒருவர் கேட்டார். என்னைப் பொருத்தவரை, பெண்கள் உள்பட அனைவரும் கோயில், மசூதிக்குச் சென்று நேரத்தை வீணடிப்பதைக் காட்டிலும்,  அறிவியல் நிறுவனங்கள், பொறியியல், மருத்துவ கல்லூரிகளுக்குப் போக வேண்டும். அதிக அளவில் … Continue reading “கோயில், மசூதிக்குச் சென்று நேரத்தை வீணடிப்பதைக் காட்டிலும் பொறியியல், மருத்துவ கல்லூரிக்குச் செல்லுங்கள்”: மார்கண்டேய கட்ஜு

ராமானுஜன் பிராமணன் அல்ல;அவர் கணிதன்!

விஜய்பாஸ்கர்  கணித மேதை ராமானுஜனத்தை நம்மவர்கள் அணுகும் விதமே சலிப்பாக இருக்கிறது.அவர் சிறுவயதிலேயே வைதீகமாக இருந்தார். வைதீக மந்திரங்கள் சடங்குகளை நம்பினார். தினந்தோறும் மந்திரம் சொன்னார். அதனாலேயே அறிவைப் பெற்றார் என்ற கருத்தை திரும்ப திரும்ப சொல்வது. அல்லது சுற்றி வளைத்து சொல்வது. விஞ்ஞானம் எல்லாமே ஆன்மிகத்தில் அடக்கம் என்று பொத்தாம் பொதுவாய் பேசுவது போன்ற விஷயங்கள் பகுத்தறிவுக்கு எதிரானவை.உண்மையும் கிடையாது. ராமானுஜன் கணித மேதையாக உயர்வதற்கு அவருடைய ”கசடற கற்றல்” திறனே காரணம். அவருடைய வீட்டில் வாடகைக்கு இருக்கும் … Continue reading ராமானுஜன் பிராமணன் அல்ல;அவர் கணிதன்!

20 லட்சம் பேர் மூழுக்குப் போட்ட கும்பகோணம் மகாமகக் குளத்தில் மலக்கழிவு 28%; மூத்திரக்கழிவு 40%: ஆய்வில் தகவல்

புண்ணிய நதிகள் ஒன்று கூடிய காரணத்தால் மகாமகக் குளத்தில் முழுக்குப் போட்டால் 12 வருட பாவங்களும் பறந்தே போகும் என்ற நம்பிக்கையில் 20 லட்சம் பேர் முழுக்குப் போட்ட கும்பகோணம் மகாமகக் குளத்தின் நீரை எடுத்து மாவட்ட ஆட்சியரே பரிசோதனைக்கு அனுப்பினார். அதன் முடிவு பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது. அந்த நீரில் மலம், சிறுநீர் கலந்து பயங்கரமான மாசுக்கு ஆளாகியுள்ளது என்பது அம்பலமாகியுள்ளது. இதுகுறித்து விடுதலை நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், கும்பகோணம் மகாமகம் முடிந்த பிறகு அந்தக் … Continue reading 20 லட்சம் பேர் மூழுக்குப் போட்ட கும்பகோணம் மகாமகக் குளத்தில் மலக்கழிவு 28%; மூத்திரக்கழிவு 40%: ஆய்வில் தகவல்

’ஜீசஸ் ஒரு தமிழ் பிராமணர்:உண்மையான பெயர் கேசவ் கிருஷ்ணா’ ஆர்எஸ்எஸ் அமைப்பின் சர்ச்சை புத்தகம் 70 ஆண்டுகளுக்கு பின் மறுபதிப்பு…

ஏசு கிறிஸ்துவை தமிழகத்தைச் சேர்ந்த ஹிந்துவாகச் சித்திரித்து, மராத்தி மொழியில் எழுதப்பட்ட புத்தகம், சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியிடப்பட உள்ளது. இந்துத்துவா அமைப்பான இந்து மகா சங்கம், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஆகியவற்றின் முன்னோடி என்று கூறப்படும்  வி.டி.சாவர்க்கரின் சகோதரர் கணேஷ் சாவர்க்கர் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். இதுகுறித்து வீர சாவர்க்கர் நினைவு அறக்கட்டளையின் தலைவர் ரஞ்சித் சாவர்க்கர், மும்பையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை பேசினார். அப்போது, அத புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் சில தகவல்களை, அவர் கூறினார். … Continue reading ’ஜீசஸ் ஒரு தமிழ் பிராமணர்:உண்மையான பெயர் கேசவ் கிருஷ்ணா’ ஆர்எஸ்எஸ் அமைப்பின் சர்ச்சை புத்தகம் 70 ஆண்டுகளுக்கு பின் மறுபதிப்பு…

கும்பகோண மகாமகம்: மனிதக் கழிவுகளை அகற்றுவதற்கு துப்புரவுத் தொழிலாளர்களை வற்புறுத்துவதாகக் குற்றச்சாட்டு

கும்பகோண மகாமகம் கோலாகலமாக நடந்துவரும் நிலையில் துப்புரவுப் பணியாளர்கள் கடும் பணிச்சுமையை சுமப்பதாக ஆதித்தமிழர் பேரவை கண்டனம் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து ஆதித்தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில், “மற்றவர்கள் மாற்றமும் ஏற்றமும் பெற்றிட.. துப்புரவுத் தொழிலாளர்கள் நாற்றத்தைச் சுமந்து சாக வேண்டுமா? தமிழக அரசே! கும்பகோண மகாமக விழாவில் குவியும், குப்பைக் கழிவுகளுடன் கூடிய மனிதக் கழிவுகளை அகற்றுவதற்கு துப்புரவுத் தொழிலாளர்களை வற்புறுத்தி ஊர் ஊராய் அழைத்துச் வந்து கொடுமைப் படுத்துவதை உடனே நிறுத்து! உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள … Continue reading கும்பகோண மகாமகம்: மனிதக் கழிவுகளை அகற்றுவதற்கு துப்புரவுத் தொழிலாளர்களை வற்புறுத்துவதாகக் குற்றச்சாட்டு

ஆண்களுக்கானதா ஆன்மீகம்?!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வரும் நிலையில், ‘ஆன்மிகம் என்பது ஆண்களுக்கு மட்டுமே உரித்தானதா?’ என்று கேரள அரசு மற்றும் சபரிமலை தேவஸ்வம் வாரியத்திற்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதை எதிர்த்து, இந்திய இளம் வழக்கறிஞர்கள் அமைப்பும் 5 பெண் வழக்கறிஞர்களும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பினாகி சந்திரகோஷ், ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்று வருகிறது.இவ்வழக்கு விசாரணையின் ஆரம்பத்திலிருந்தே … Continue reading ஆண்களுக்கானதா ஆன்மீகம்?!

சசிகலா சாமி தரிசனம்!

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள பழனி முருகன் கோவிலில் சசிகலா சாமி தரிசனம் செய்தார். வியாழக்கிழமை மதியம் சுமார் 12 மணியளவில் கோவிலுக்கு வந்த சசிகலாவிற்கு கோவில் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரது வருகையையொட்டி இரண்டு மணி நேரம் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. கூட்டம் அதிகம் இல்லாத நிலையிலும்,  சசிகலாவின் வருகையையொட்டி இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தரிசனத்திற்கு காக்க வைக்கப்பட்டதால் பக்தர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

“முஸ்லிம் இறந்தால் உலகின் பல நாடுகள் குரல் எழுப்பும்; அதுவே ஒரு பிராமின் இறந்தால் யார் குரல் கொடுக்கிறார்?” ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

ஹைதரபாத் பல்கலைக் கழக மாணவர் ரோஹித் வெமூலாவின்  மரணம் சாதிய பிரச்சினையல்ல, அது ஒரு குற்றப் பிரச்சினை என கருத்து சொல்லியிருக்கிறார் சாமியார் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர். மேலும் அவர், இந்தப் பிரச்சினையை அரசியாக்கப் பார்க்கிறார்கள் என்றும் சொல்லியிருக்கிறார். தி க்விண்ட் இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் இப்படிச் சொல்லியிருக்கிறார் சமீபத்தில் பத்ம ஸ்ரீ விருது பெற்ற ரவிசங்கர். “ரோஹித் வெமுலா மரணத்தை சாதியை வைத்து அரசியலாக்கப் பார்க்கிறார்கள். இதுவே இறந்தவர் முஸ்லிம் ஆக இருந்தால் உலகின் பல … Continue reading “முஸ்லிம் இறந்தால் உலகின் பல நாடுகள் குரல் எழுப்பும்; அதுவே ஒரு பிராமின் இறந்தால் யார் குரல் கொடுக்கிறார்?” ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

இறுதிச்சுற்று: குத்துச்சண்டைக்கு மரியாதை, சேரிக்காரனுக்கு அவமானம்!

வில்லவன் இராமதாஸ் (இது பட விமர்சனம் அல்ல) தமிழகத்தில் முற்றாக இந்துமயமான முதல் துறை என்றால் அது சினிமாத்துறைதான். வில்லனின் ஆசைநாயகியர் பெயர்கள் எல்லாம் ரீட்டா. மேரி என கிருஸ்தவ பெயர்களாகவே இருக்கும். ஆனால் அத்தகைய பாத்திரங்களை ஏற்று நடித்த நடிகைகள் 100% இந்துக்கள். வரலாற்றை சிதைப்பதில் காவிக்கூடாத்துக்கு கடும் சவால் விடக்கூடியவர்கள் இந்தத்துறையில் இருப்பவர்களதான். பவுத்த மதத்தை சேர்ந்த போதிதர்மனுக்கு காவி பெயிண்ட் அடித்து குறளிவித்தைக்காரனாக்கினார் முருகதாஸ். பாரபட்சமில்லாமல் எல்லா இயக்குனர்களும் முஸ்லீம்களை தீவிரவாதியாக சித்தரித்து … Continue reading இறுதிச்சுற்று: குத்துச்சண்டைக்கு மரியாதை, சேரிக்காரனுக்கு அவமானம்!

ஒரு கம்யூனிஸ்டுக்கு கடவுள் நம்பிக்கை காணாமல் போன கதை!

கதிர்வேல் கேரளாவின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்தத் தலைவர் V S அச்சுதானந்தனக்கு 92 வயது பூர்த்தியாகி விட்டது. தோழர் நல்ல மூடில் இருந்தபோது ஒரு கேள்வி கேட்கப்பட்டது. "எப்படி தோழர் உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லாமல் ஆனது...?" ஒரு நிமிடம் கண்களை மூடி மவுனமாகிறார். பின் கண்களை திறந்து நிலத்தை பார்த்தபடி பேசுகிறார். "அப்பா, அம்மா, சகோதரர்கள் அடங்கிய ஒரு அன்பான குடும்பம் என்னுடையது. என் அம்மாவுக்கு தொற்று நோயான வைசூரி வந்துவிட்டது. அப்பல்லாம் வைசூரி வந்தால் … Continue reading ஒரு கம்யூனிஸ்டுக்கு கடவுள் நம்பிக்கை காணாமல் போன கதை!

#ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை முன்வைத்து: இறைவனைக் காட்டி மூடப்பழக்கங்களை ஒழிக்க முடியுமா?

வில்லவன் இராமதாஸ் இறைவன் நம்மை காப்பான் என உறுதியாக நம்பும் பல்லாயிரக்கணக்கான இசுலாமிய மக்கள் ஆண்டுதோறும் கொல்லப்படுகிறார்கள். இன்றளவும் உலகின் மிக மோசமான வறுமைக்கும் கல்வியின்மைக்கும் முகம்கொடுப்பது இஸ்லாமிய சமூகம். அவற்றைக் களைவதற்காக ஒரு கூட்டு நடவடிக்கைக்கோ மக்கள்திரள் போராட்டத்துக்கோ பெரிய முயற்சிகள் நடைபெறாத ஊரில் கடவுளை காப்பாற்ற (இணைவைத்தலில் இருந்து) ஒரு மாபெரும் மாநாட்டை நடத்தியிருக்கிறது தவ்ஹீத் ஜமாத். வட்டரத்துக்கே உரிய பழக்கங்களின் செல்வாக்கு என்பது எல்லா மதங்களிலும் இருந்தே தீரும். நான் படித்த கிருஸ்தவ … Continue reading #ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை முன்வைத்து: இறைவனைக் காட்டி மூடப்பழக்கங்களை ஒழிக்க முடியுமா?

#சர்ச்சை: வகாபிச சிந்தனையை வளர்க்கிறதா ஷிர்க் ஒழிப்பு மாநாடு?

ஸ்ரீதர் சுப்ரமணியம் தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் 'ஷிர்க் ஒழிப்பு மாநாடு' என்பது சிலை வழிபாட்டு முறைகளை ஒழித்து 'தூய இஸ்லாம்' திசையை நோக்கி தமிழ் முஸ்லிம்களை கொண்டு செல்லும் முயற்சி. வஹாபிசம், சலஃபிசம் போன்ற தீவிர சுன்னி இஸ்லாம் சிந்தனைகளின் விளைவுதான் இது. இந்த கோட்பாட்டை ஒட்டிதான் பாமியான் புத்தர் சிலைகளை தாலிபான்கள் வெடித்து நொறுக்கினார்கள். இதே கோட்பாட்டை ஒட்டிதான் ஐஎஸ்ஐஎஸ் கும்பல் சிரியா மற்றும் ஈராக் போன்ற தேசங்களில் உள்ள பழமையான இஸ்லாம் அல்லாத வரலாற்றுச் … Continue reading #சர்ச்சை: வகாபிச சிந்தனையை வளர்க்கிறதா ஷிர்க் ஒழிப்பு மாநாடு?

காப்பிக்கும் டீ க்கும் இடையில் சாதிய உளவியல் இருக்கிறது!

அன்பே செல்வா காப்பிக்கும் டீ க்கும் இடையில் ஒரு சாதிய உளவியல் இருக்கிறது, காப்பி அருந்துபவர்கள் மேட்டுக் குடிகளாகவும், டீ சாமான்யர்கள் அருந்துவதாகவும் நம்மையறியாத ஒரு மைண்ட் செட் எல்லோருக்கும் ஏற்படுகிறது. கட்டுப் பாடற்ற சந்தை இந்த இடைவெளியை குறைத்திருக்கிறது, இன்று யார் வேண்டுமானாலும் காப்பி அருந்தலாம்.. அது வேறு.. ஆனால் இவையிரண்டும் கிருஸ்தவ மிஷனேரிகளால் வெகுஜன மக்களுக்கு அறிமுகப்படுத்த பட்ட காலத்தில் காப்பியை உயர்சாதியினர் தேர்ந்தெடுத்து கொள்கிறார்கள், அதனாலேயே அதற்க்கு உயர்ந்த பண்பு கிடைக்கிறது, கும்பகோணம் டிகிரி … Continue reading காப்பிக்கும் டீ க்கும் இடையில் சாதிய உளவியல் இருக்கிறது!

தமிழ் புத்தாண்டு எது?: தொ.பரமசிவன் சொல்கிறார்!

தொ.பரமசிவன் சித்திரை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்பது சமய நம்பிக்கை உள்ளவர்களின் வாதம். உழைப்பவர்கள் கொண்டாடும் தை முதல் நாள் தான் தமிழ்ப்புத்தாண்டு என்பது தமிழறிஞர்களின் வாதம். அதற்கேற்ப தமிழக அரசு தை முதல் நாளையே தமிழ்ப்புத்தாண்டாக அறிவித்திருக்கிறது. ஆனால் இவ்விரண்டு வாதங்களையும் மறுத்து தைப்பூசம் தான் தமிழ்ப்புத்தாண்டு என்கிறார் ஆய்வாளர் தொ.பரமசிவன். தமிழர்களின் சமயங்கள், நம்பிக்கைகள், திருவிழாக்கள், தொன்மங்கள், வழிபாடுகள் எனப் பல அம்சங்கள் குறித்தும் ஆய்வுபூர்வமாக எழுதி வரும் தொ.பரமசிவத்தின் பொங்கல் … Continue reading தமிழ் புத்தாண்டு எது?: தொ.பரமசிவன் சொல்கிறார்!

இறை இசையாக இருந்த பறை இசையின் வரலாறைத் தெரிந்துகொள்ளுங்கள் ஐயன்மீர்!

தயாமலர் விடியலுக்கு முன்பான மூன்று மணி நேரமான கடைசி யாமத்தில் நடத்தப்பட்ட வைகறை ஆட்டத்திற்கு இசையமைக்க தலைமையேற்பவரை "தலைப்பறை" எனவும் அவருக்குக் கீழ்பணிபுரிவோரை கீழாள் எனவும் ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்த திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.வைகறை ஆட்டத்தின் போது விளக்கெரிக்கும் பொருட்டு அளிக்கப்பட்ட நிவந்தங்களையும் இவர்களே ஏற்று செய்திருக்கின்றனர். சென்னை திருவான்மியூரில் உள்ள கல்வெட்டில் தலைப்பறை ஒருவரும் அவருக்குக்கீழ் 14 பேரும், குத்தாலத்தில் தலைப்பறை ஒருவரின் கீழ் 11 பேரும் பணி புரிந்திருக்கின்றனர்.தலைப்பறையின் கீழ் பணி … Continue reading இறை இசையாக இருந்த பறை இசையின் வரலாறைத் தெரிந்துகொள்ளுங்கள் ஐயன்மீர்!

எம். எஸ். சுப்புலட்சுமியின் பாடலைத் தடை செய்த யூ ட்யூப்!

மார்கழி மாதம் அதிகாலையில் எம். எஸ். சுப்புலட்சுமியின் விஷ்ணு சகஸ்ரணாமம் பாடலைக் கேட்கலாம் என யூ ட்யூப் திறந்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இந்தப் பாடல் உரிமை ‘சரிகம’ நிறுவனத்துக்குச் சொந்தமானது என அறிவிப்புதான் வந்தது, பாடலைக் காணோம். இத்தனை நாள் வரை கேட்டுவந்த பாடல் இன்று இசை வெளியீட்டு நிறுவனத்தின் காப்புரிமை தலையீட்டால் தடை செய்யப்பட்டுள்ளது என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் எழுதி வருகின்றனர். எம். எஸ். சுப்புலட்சுமி போன்ற முன்னோடி கர்நாடக இசைப்பாடகர்களின் பாடல்களை காப்புரிமை என்ற … Continue reading எம். எஸ். சுப்புலட்சுமியின் பாடலைத் தடை செய்த யூ ட்யூப்!

பிரம்மச்சாரி ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க மாட்டோம்: வரிந்து கட்டுகிறார்கள் அர்ச்சகர்களும் அரசியல்வாதிகளும்.

சபரிமலை கோவிலுக்குள் வயது கட்டுப்பாடு இன்றி பெண்களை அனுமதிக்க வேண்டும்” என்று தாக்கல் செய்யப்பட பொதுநல மனு மீது, பத்தாண்டுகள் கழித்து நேற்று விசாரணை நடைபெற்றது. அப்போது நீதிபதிகள்  தீபக்மிஸ்ரா, பினாகி சந்திரகோஷ் மற்றும் என்.வி.ரமணா ஆகியோர்  “கோவிலுக்கு பெண்கள் போவது என்பது அவர்களுடைய தனிப்பட்ட உரிமையாகும் எனும்போது, எந்த அடிப்படையில் அவர்களை தடுக்க முடியும்? என்று கேள்வி எழுப்பினர். நீதிபதிகளின் கருத்து தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த கேரள அறநிலையத்துறை அமைச்சர்  சிவக்குமார்  "சபரிமலை … Continue reading பிரம்மச்சாரி ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க மாட்டோம்: வரிந்து கட்டுகிறார்கள் அர்ச்சகர்களும் அரசியல்வாதிகளும்.

’சபரிமலைக்கு ஏன் பெண்கள் போகக்கூடாது?’

சபரிமலை கோவிலுக்கு 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் செல்லக்கூடாது என கோவில் நிர்வாகம் சார்பில் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் பக்திபசாரிஜா, லட்சுமி சாஸ்திரி உள்ளிட்டோர் சார்பில் 2006 ஆம் ஆண்டு பொது நல வழக்கு தொடரப்பட்டது. கோவில் நிர்வாகத்தின் உத்தரவை மாநில அரசும் பின்பற்றுவதால், பெண்கள் சபரிமலை கோவிலுக்கு செல்லமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இது, இந்திய அரசியல் சாசனப்பிரிவு 14-ன் படி ஆண், பெண் சரிநிகர் என்ற … Continue reading ’சபரிமலைக்கு ஏன் பெண்கள் போகக்கூடாது?’

கோயில்களில் ஆடைக்கட்டுப்பாடு: உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை

தமிழகம் முழுவதும் உள்ள இந்து கோவில்களுக்குள் செல்வோருக்கு, ஆடை கட்டுப்பாடு விதித்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை சமீபத்தில் உத்தரவிட்டது. இதுகுறித்து தினமணி வெளியிட்டுள்ள செய்தி... அதை தொடர்ந்து, புத்தாண்டு முதல், தமிழகத்தில் உள்ள, 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்களில், ஆடை கட்டுப்பாட்டு விதிமுறைகளை, இந்து சமய அறநிலையத்துறை அமல்படுத்தியது. உயர்நீதிமன்றக் கிளை தனி நீதிபதி,'அரைக்கால் டிரவுசர், மினி ஸ்கர்ட்ஸ், மிடி, ஸ்லீவ்லெஸ்டாப்ஸ், குட்டையான ஜீன்ஸ் அணிந்து வரும் பக்தர்களை கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது. ஆண் … Continue reading கோயில்களில் ஆடைக்கட்டுப்பாடு: உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை

”மோடிக்கு அறிவியல் சொல்லிக்கொடுக்க நான் தயார்!”: முன்வந்த விஞ்ஞானி!

அறிவியலையும் மதத்தையும் ஒன்று கலக்கக்கூடாது; நம் பிக்கையை அறிவியலோடு சேர்த்து குழப்பிக் கொள்ளக் கூடாது என்று பாரத ரத்னா விருது பெற்ற விஞ்ஞானி சி.என்.ஆர். ராவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தீக்கதிர் வெளியிட்டுள்ள செய்தியில்... சி.என்.ஆர்.ராவ் இந்தியாவில் பல பிரதமர்களுக்கு அறிவியல் ஆலோசகராக பணியாற்றி ஆழ்ந்த அனுபவம் பெற்றவர். சிறந்த அறிவியலாளருக்கான பாரத ரத்னா விருது பெற்றவர். பெங்களூரில் மோடியின் அறிவியல் கொள்கை மற்றும் மதம், சகிப்பின்மை குறித்து பேட்டி அளித்தார். அந்த பேட்டியில், “தனி நபர் ஒருவரோ … Continue reading ”மோடிக்கு அறிவியல் சொல்லிக்கொடுக்க நான் தயார்!”: முன்வந்த விஞ்ஞானி!

சங்கு ஊதினால் நோய் குணமாகும்;சிவனே சூழலியல் முன்னோடி: இந்திய அறிவியல் மாநாடா? இந்திய ஆன்மீக மாநாடா?

“தினமும் இரண்டு நிமிடம் புனித சங்கை ஊதினால், எல்லா நோய்களும் நம்மை விட்டு ஓடிப்போய்விடும்” இதைச் சொல்வது ஏதோ மரத்தடி சாமியார் அல்ல, ஒரு ஐஏஎஸ் அதிகாரி. அவர் பெயர் ராஜுவ் சர்மா. சொன்ன இடம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அது சமீபத்தில் மைசூருவில் நடந்த இந்திய அறிவியல் மாநாடு. அகிலேஷ் கே. பாண்டே என்ற பேராசிரியர் சமர்பித்த ஆய்வுக்கட்டுரை எதைப்பற்றியது தெரியுமா? இந்துக் கடவுள் சிவன் தான், முன்னோடி சூழலியலாளராம். “கைலாய மலையில் இருக்கும் சிவன், … Continue reading சங்கு ஊதினால் நோய் குணமாகும்;சிவனே சூழலியல் முன்னோடி: இந்திய அறிவியல் மாநாடா? இந்திய ஆன்மீக மாநாடா?

#காணொலி “சிவப்பு காவியாகிறது”: கேரளாவில் காவி மயமாகிவரும் கம்யூனிஸ்டுகள்!

கேரளாவில் பாஜக, ஆர் எஸ் எஸ் காலூன்றி வருவதைத் தடுத்த, யோகாவை நடத்துவது, ஐயப்பன் பூசை, கிருஷ்ண ஜெயந்தி விழா போன்றவற்றை கேரள மார்க்சிஸ்ட் கட்சி நடத்திக் கொண்டிருக்கிறது. இவை சர்ச்சைக்குள்ளாகிவரும் நிலையில், கேரள கன்னூரில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சி ஒன்றுக்காக கேரள மார்க்சிஸ்ட் தலைவர்களான பினராயி விஜயனை கிருஷ்ண அவதாரமாகவும் அர்ஜுனராக ஜெயராஜனையும் சித்தரித்து போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.  இது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது. திரு யோ கணபதி பூசை, கிருஷ்ணன் அவதார கொண்டாட்டம், கீதை அர்சுனனாக … Continue reading #காணொலி “சிவப்பு காவியாகிறது”: கேரளாவில் காவி மயமாகிவரும் கம்யூனிஸ்டுகள்!

#சர்ச்சை: நாத்திகத்தை தூக்கிப் பிடிப்பது கம்யூனிஸ்டுகளா? திராவிட இயக்கங்களா?

எழில் அரசன் வெள்ளிக்கிழமை காலையில் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சியைப் பார்த்தேன். மதிப்பிற்குரிய தோழர் அருணன் அவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுந்தான் சித்தாந்த அடிப்படையிலான ‘விஞ்ஞானபூர்வ நாத்திக’ கட்சி என்றும் ‘நாங்கள் வறட்டு நாத்திகவாதிகள் அல்ல’ என்பதுபோலவும் சொன்னார். தமிழ்நாட்டில் அருணன் இப்படி சொல்லியிருப்பதால், திராவிடர் இயக்கத்தினர் ‘வறட்டு நாத்திகவாதம்’ பேசுகிறவர்கள் என்றுதான் மறைமுகமாக சொல்கிறார் என்று நான் புரிந்துகொள்கிறேன். உழைக்கும் மக்களின் பொருளாதார மற்றும் சமூகவியல் சிக்கல்களை தீர்த்துவிட்டால் கடவுளும் மதமும் தாமாக … Continue reading #சர்ச்சை: நாத்திகத்தை தூக்கிப் பிடிப்பது கம்யூனிஸ்டுகளா? திராவிட இயக்கங்களா?

கருணாநிதியுடன் திருப்பதி தேவஸ்தான அர்ச்சகர்கள்: தொலைகாட்சி தொடர் பற்றி பேசினார்களா ?

திமுக தலைவர் கருணாநிதியை, திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் அர்ச்சகர்கள் இன்று அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து பேசினார். எதற்காக இந்த சந்திப்பு நடைபெற்றது என்பது குறித்து கருணாநிதி தன்னுடைய ஃபேஸ்புக்கில் எழுதியுள்ளார். Kalaignar Karunanidhi எனது கை வண்ணத்தில் "கலைஞர் தொலைக்காட்சி" யில் ஒளி பரப்பாகி வரும் "மதத்தில் புரட்சி செய்த மகான் ராமானுஜர்" தொடரை தெலுங்கில் ஒளிபரப்பு செய்திட அனுமதி கோரி, திருப்பதி தேவஸ்தான தலைவர் சதனவாடா கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நிர்வாகிகள் என்னை இன்று … Continue reading கருணாநிதியுடன் திருப்பதி தேவஸ்தான அர்ச்சகர்கள்: தொலைகாட்சி தொடர் பற்றி பேசினார்களா ?

இருமுடி கட்டி சபரிமலை கிளம்பினார் ஒ.பி.எஸ்!

தமிழக நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சபரிமலை சென்றார். புதன்கிழமை இருமுடி கட்டி சபரிமலை பயணமானார் ஓ.பன்னீர்செல்வம்.

#MustRead புடவைதான் பர்தாவுக்கு அடுத்து உலகின் மிகக் கொடூரமான ஆடை!

வில்லவன் இராமதாஸ் புத்தாண்டு யாருக்கு நன்றாக விடிகிறதோ இல்லையோ தமிழ்நாட்டு கடவுள்களுக்கும் அவர்தம் ஆகம விதிப்படியான முகவர்களுக்கும் கொழுத்த தட்சணையோடுதான் விடிகிறது. இந்த முறை தமிழக அரசு பகவானுக்கு ஒரு கூடுதல் புத்தாண்டு போனஸை அறிவித்திருக்கிறது. வெற்று மார்போடு பூசை செய்யும் அர்ச்சகர்களை சகித்துக்கொள்ளும் கடவுளுக்கு, துப்பட்டா இல்லாமல் வரும் பெண்களையும் ஜீன்ஸ் அணிவோரையும் சகித்துக்கொள்ளும் சக்தியில்லை என ஆகவிதிகளின் காவலனான நீதிமன்றம் கண்டறிந்து, அவற்றை கோயிலுக்குள் அணிய தடை செய்திருக்கிறது. எதிர்காலத்துக்கான பயிற்சியாக குழந்தைகளும் உடலை … Continue reading #MustRead புடவைதான் பர்தாவுக்கு அடுத்து உலகின் மிகக் கொடூரமான ஆடை!

ஆஸ்துமாவுக்கு உயிரோடு இருக்கும் மீனை விழுங்கச் செய்யும் மருத்துவம்: அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை எனத் தடை

புதுவை அறிவியல் இயக்கம் மீன் மருந்து கொடுத்தா இனி ஜெயில்தான் அறிவியல் முன்னேற்றம் என்பது அதி வேகமாக முன்னேறிக் கொண்டு செல்கையில், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மீன் மருத்துவம், மீன் மருந்து என்ற பெயரில், அப்பாவி மக்களை மோசடி செய்வதோடு நில்லாமல், நவநாகரிக உலக மக்களையும், மருத்துவ சமுகத்தினரையும் தலை கவிழச் செய்யும் விதமாக அரங்கேறும் அவலங்களுக்குப் பஞ்சமில்லை. மீன் மருத்துவம், மீன் மருந்து வாயிலாக ஆஸ்துமா நோயைப் போக்குகிறோம் என்று அறிவியலுக்கு முற்றிலும் முரணான, புறம்பான … Continue reading ஆஸ்துமாவுக்கு உயிரோடு இருக்கும் மீனை விழுங்கச் செய்யும் மருத்துவம்: அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை எனத் தடை

கோயில்களில் ஆடைக் கட்டுப்பாடு: “இராம கோபாலனுக்கு யார் அதிகாரம் கொடுத்தது ?”

தமிழக கோயில்களுக்குள் லெகின்ஸ், டி சர்ட் போன்ற ஆடைகளை அணியத் தடை விதிக்கப்பட்டிருப்பதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எந்த ஆடை அணிவது, அதை எப்படி அணிவது என்பதை அவரவர் விருப்பத்திற்கு விட்டுவிட வேண்டும். இந்த விவகாரத்தில் மூக்கை நீட்டுவதற்கு இந்துத்துவா சக்திகளுக்கு அதிகாரம் இல்லை. தமிழகத்தில் உள்ள கோயில்கள் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறதே தவிர, இந்து முன்னணியின் கட்டுப்பாட்டில் இல்லை. இந்து … Continue reading கோயில்களில் ஆடைக் கட்டுப்பாடு: “இராம கோபாலனுக்கு யார் அதிகாரம் கொடுத்தது ?”

குழந்தைகளுக்கும் டிரஸ் கோட்: தமிழக கோவில்களில் இன்று முதல் “ஆடைக்கட்டுப்பாடு”

தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களுக்குள் செல்ல ஆடைக் கட்டுப்பாடு வெள்ளிக்கிழமை ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவின்படி “தமிழகத்தில் உள்ள கோவில்களுக்குள் வரும் ஆண்கள், மேல் சட்டை, வேட்டி, பைஜாமா, சாதாரண பேண்ட் சட்டை அணிந்து வர வேண்டும் என்றும் பெண்கள் சேலை, தாவணி, துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் மற்றும் குழந்தைகளும் உடல் முழுவதும் மூடப்பட்ட ஆடைகளை அணிந்து வர வேண்டும் என்றும்  கூற பட்டிருந்தது. இந்த ஆடைக் கட்டுப்பாட்டை … Continue reading குழந்தைகளுக்கும் டிரஸ் கோட்: தமிழக கோவில்களில் இன்று முதல் “ஆடைக்கட்டுப்பாடு”

ஏ. ஆர். ரஹ்மானின் கிறுத்துமஸ் பரிசு : சூஃபிகள் இசையில் வாழ்த்து

ஏ. ஆர். ரஹ்மான் இசையில் சூஃபி இசை வடிவத்தில் கிறித்துமஸ் பாடல் உருவாகியிருக்கிறது. டாடா ஸ்கை நிறுவனம் தன்னுடைய கிறித்துமஸ் தின வாழ்த்தாக இந்த இசைக் கோர்வையை வெளியிட்டிருக்கிறது. இதோ இரண்டு மதங்கள் இணையும் அந்த இசை அனுபவத்தைக் கேளுங்கள்... http://www.youtube.com/watch?v=n0n-6eyQ0Po

கோயில்களில் இனி லெக்கின்ஸ், லுங்கிக்குத் தடை

வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் தமிழக கோயில்களுக்குச் செல்லும்போது லெக்கின்ஸ், லுங்கி அணிந்து செல்ல முடியாது. சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை பரிந்துரைத்திருப்பதன் பேரில் தமிழக இந்து அறநிலையத் துறை முக்கிய உத்தரவை பிறப்பித்திருக்கிறது. இதன்படி ஜனவரி 1-ஆம் தேதி முதல் தமிழக கோயில்களில் ஆடைக் கட்டுப்பாடு நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்கள் மேல்சட்டையுடன் வேட்டி, பைஜாமா போன்றவற்றையும் ஜீன்ஸ் தவிர்த்த பேண்ட்டுகளையும் அணியலாம். பெண்கள் புடவை, தாவணி, துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் அணிந்து வர வேண்டும் … Continue reading கோயில்களில் இனி லெக்கின்ஸ், லுங்கிக்குத் தடை

மாட்டிறைச்சி வேண்டாம்; ஆனால் மாட்டிறைச்சி நிறுவனம் தரும் நன்கொடை வேண்டும்- பாஜகவின் இரண்டு முகம்!

ஏகபோகமாக மத்தியில் ஆட்சிக்கு வந்த பாஜக, கருப்பு பணத்தை மீட்டதோ இல்லையோ, நாட்டை வளர்ச்சிக்குப் பாதைக்குக் கொண்டுச் சென்றதோ இல்லையோ ‘மாட்டிறைச்சி’யை வைத்து நன்றாக அரசியல் செய்தது. மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது நரேந்திர மோடி, “காங்கிரஸ் வெளிர் சிவப்பு(பிங்க் ரெவல்யூஷன்)புரட்சி செய்ய விரும்புகிறது” என மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா முன்னணியில் இருப்பதை கேலி செய்தார். ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்த பிறகும் 2014-2015 -ஆம் ஆண்டில் இந்தியா மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முன்னணியில் இருக்கிறது. பாஜகவை சேர்ந்தவர்களே மாட்டிறைச்சி … Continue reading மாட்டிறைச்சி வேண்டாம்; ஆனால் மாட்டிறைச்சி நிறுவனம் தரும் நன்கொடை வேண்டும்- பாஜகவின் இரண்டு முகம்!

“நீயெல்லாம் அர்ச்சகராகலாம்னு கனவு காண்றியா’ என்று பார்ப்பன அர்ச்சகர்கள் எங்களை கேலிப் பேசினார்கள்”

(அர்ச்சகர் வழக்கில் பார்ப்பனியத்தை தந்திரமாக பாதுகாக்கும் அம்சங்களை கொண்ட மழுப்பலான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியது. இதனை கண்டித்து 17.12.2015 அன்று அண்ணாசாலையில் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் மற்றும் மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தின் தலைவர் வா.ரங்கநாதன் வெளியிட்ட அறிக்கை.) என் சொந்த ஊர் திருவண்ணாமலை. நான் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தின் தலைவர். அனைத்து … Continue reading “நீயெல்லாம் அர்ச்சகராகலாம்னு கனவு காண்றியா’ என்று பார்ப்பன அர்ச்சகர்கள் எங்களை கேலிப் பேசினார்கள்”

தமிழக அரசின் ஆணை நிராகரிப்பு: ஆகம விதிகளின்படியே அர்ச்சகர் நியமனம் நடக்க வேண்டும்: உ.நீ

பயிற்சி பெற்ற இந்துக்கள் அனைவரும் அர்ச்சகராகலாம் என தமிழக அரசு கொண்டு வந்த ஆணையை நிராகரித்துள்ளது உச்சநீதிமன்றம். தமிழக அரசின் இந்த ஆணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் புதன்கிழமை மிக முக்கியமான தீர்ப்பு ஒன்றை வழங்கியிருக்கிறது. கடந்த 1971ம் ஆண்டு திமுக தலைமையிலான அரசு, பாரம்பரிய முறைப்படி கோவில்களில் அர்ச்சகர்கள் நியமிக்கப்படுவதற்கு மாறாக, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் வகையில், இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்தது. அதை எதிர்த்து  உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. பிறகு … Continue reading தமிழக அரசின் ஆணை நிராகரிப்பு: ஆகம விதிகளின்படியே அர்ச்சகர் நியமனம் நடக்க வேண்டும்: உ.நீ

திருமணஞ்சேரி கோயிலில் நடக்கும் கொள்ளை!

கொடுமைக் கொடுமைன்னு கோயிலுக்குப் போனால் அங்க ஒரு கொடுமை வந்து ஜிங்கு ஜிங்குன்னு ஆடுனுச்சாம் அந்தக் கதையாக இருக்குது இந்த காலத்துல கோயிலுக்குச் செல்லும் பக்தர்களின் நிலைமை. திருமணஞ்சேரி என்றாலே பலருக்கும் தெரியும், தஞ்சைக்கு அருகிலுள்ள மாயவரத்திற்கும் குத்தாலத்திற்கும் இடையில் அமைந்துள்ளது இத்திருத்தளம். திருமணம் ஆக வேண்டி ஆண்களும் பெண்களும், அன்றாடம் பல்வேறு ஊர்களிலிருந்தும், மாநிலங்களில் இருந்தும் இந்த கோயிலுக்கு வந்து செல்வது உண்டு. இக்கோயிலில் கல்யாணசுந்தரரும், கோகிலாம்பிகையும் திருமணக்கோலத்தில் காட்சியளிப்பதைக் காண மக்கள் கூட்டம் அலைமோதுவது … Continue reading திருமணஞ்சேரி கோயிலில் நடக்கும் கொள்ளை!