இரங்கல்: ஸ்டீஃபன் ஆக்கிங்!

அறிவுத் தேடலுக்கு உடல் தேவையில்லை, மூளைதானே தேவை, அந்த மூளை சிறப்பாக வேலை செய்கிறது என்பதைத் தவிர எனக்கு வேறென்ன வேண்டும் எனச் சொன்னார் ஆக்கிங்.

பெண்களை ஒதுக்கிய ஆரியர்கள்; ஆரியர்களின் வருகைக்கு மரபணு ரீதியான ஆதாரம் கண்டுபிடிப்பு

வெண்கல யுகத்தில் நடந்த புலப்பெயரில் பாலியல் சமத்துவமற்ற நிலைமை இருந்திருக்கிறது. அதாவது புலப்பெயர்வில் ஆண்களே அதிகமானோர் இருந்திருக்கிறார்கள். எனவே, இந்திய பெண்களின் தாய்வழி மரபணுக்களை வைத்து இதுநாள் வரை சரியான முடிவை நோக்கி ஆய்வாளர்களால் நகர முடியவில்லை.

இப்போது பரிணாமம் நிகழவில்லையா?

இப்போது ஏன் புழு வகைகளிலிருந்து மீன்கள் தோன்றவில்லை? இப்போது ஏன் மீன்களிலிருந்து ஊர்வன வகைகள் பரிணமிக்கவில்லை? இப்போதும் அது நடந்துக் கொண்டிருக்க வேண்டுமல்லவா?

நியூட்ரினோ ஆயுதங்கள்: நாம் அறியாதவை இவை!

நியூட்ரினோ ஆய்வகத் திட்டம் குறித்த தனது காத்திரமான அறிவியல் பூர்வ விமர்சனத்தால், அத்திட்டம் மீதான விவாதத்தை தொடக்கி வைத்தவர் மக்கள் அறிவியலாளர் விடி பத்மபநாபன். அடிப்படையில் அவர் ஓர் ஜனநாயகவாதி, நியூட்ரினோ திட்டத்தின் மீதான அவரது விமர்சனங்கள் அனைத்தும் அறிவியலை ஜனநாயகப்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலானவை. நியூட்ரினோ திட்டத்தின் மீதான அவரது விமர்சனங்களின் மொழியாக்க தொகுப்பு ‘நியூட்ரினோ அறிவிப்புகளும் உண்மைகளும்’. இந்நூலை நாணல் நண்பர்களும் பூவுலகின் நண்பர்களும் இணைந்து வெளியிட்டுள்ளனர். விடி பத்மநாபன் கட்டுரைகளை தமிழில் தந்திருக்கிறார் அருண் நெடுஞ்செழியன். நூலிலிருந்து ‘இந்திய நியூட்ரினோ … Continue reading நியூட்ரினோ ஆயுதங்கள்: நாம் அறியாதவை இவை!

நோ பிரா டே தினத்தில் எதற்காக பிரா இல்லாமல் இருக்க வேண்டும்?

ஷாஜஹான் ஒரு ரகசியம் உடைந்து விட்டது : கேன்சர் என்பது வியாதி அல்ல, அது ஒரு வியாபாரம் இப்படியொரு தலைப்புடன் ஒரு கட்டுரை சுற்றிக்கொண்டிருக்கிறது. ஹெரால்ட் மேன்னர் என்பவர் எழுதிய நூலின் அடிப்படையில், அவருடைய ஆதரவாளர்கள் அல்லது அந்தக் கட்டுரையின் வாதத்தில் மயங்கியவர்கள் எழுதியது அது. மெடபாலிக் தெரபி என்பது ஹெரால்ட் முன்வைத்த கருத்து. சில நாட்களுக்கு முன்னால் நண்பர் ஒருவர் மேற்கண்ட கட்டுரையின் இணைப்பை அனுப்பினார். வழக்கம்போலவே, கூகுளிட்டு, விஷயத்தை தெளிவுபடுத்திக் கொண்டேன். இது ஆதாரமற்ற … Continue reading நோ பிரா டே தினத்தில் எதற்காக பிரா இல்லாமல் இருக்க வேண்டும்?

ஜப்பானிய ஆய்வாளருக்கு மருத்துவ நோபல்!

2016-ஆம் ஆண்டுக்கான மருத்துவத் துறை நோபல் விருதைப் பெறுகிறார் ஜப்பானிய ஆய்வாளர் யோஷினாரி ஒசுமிக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செல்களின் அடிப்படை செயல்பாடான மறுசுழற்சு மற்றும் தரமிழத்தல் அதாவது  செல்கள் தன்னைதானே அழித்துக்கொள்வது (mechanisms of autophagy)  குறித்த வழிமுறைகளைக் கண்டறிந்ததற்காக இந்த விருது அளிக்கப்பட்டிருக்கிறது. ஒசுமி, ஜப்பானின் யொகோஹாமா நகரில் அமைந்துள்ள டோக்கியோ இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாஜியில் பேராசிரியராக இருக்கிறார். நோபல் பரிசு குழு அறிக்கையில், “ஒசுமியின் ஆய்வு, செல்கள் வறிய சூழலை எப்படி கையாள்கின்றன என்றும் … Continue reading ஜப்பானிய ஆய்வாளருக்கு மருத்துவ நோபல்!

“கோயில், மசூதிக்குச் சென்று நேரத்தை வீணடிப்பதைக் காட்டிலும் பொறியியல், மருத்துவ கல்லூரிக்குச் செல்லுங்கள்”: மார்கண்டேய கட்ஜு

கோயில்களில், மசூதிகளில் பெண்கள் வழிபாட்டு உரிமைக்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள். சனாதனவாதிகளும் பெண்ணியவாதிகளும் ஒரு புறம் இதுகுறித்த விவாதங்களில் ஈடுபட்டிருக்க, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு, ஆன்மீகத்திலிருந்து அறிவியலுக்கு திரும்புங்கள் என்கிறார். இதுகுறித்து தனது முகநூல் பதிவில், “இந்து பெண்கள் சபரிமலை கோயிலுக்குச் செல்வதைப் பற்றி என்னிடம் ஒருவர் கேட்டார். என்னைப் பொருத்தவரை, பெண்கள் உள்பட அனைவரும் கோயில், மசூதிக்குச் சென்று நேரத்தை வீணடிப்பதைக் காட்டிலும்,  அறிவியல் நிறுவனங்கள், பொறியியல், மருத்துவ கல்லூரிகளுக்குப் போக வேண்டும். அதிக அளவில் … Continue reading “கோயில், மசூதிக்குச் சென்று நேரத்தை வீணடிப்பதைக் காட்டிலும் பொறியியல், மருத்துவ கல்லூரிக்குச் செல்லுங்கள்”: மார்கண்டேய கட்ஜு

“600 ஆய்வுக்கட்டுரைகளையும் 81 நூல்களையும் எழுதியிருக்கும் என்னை பேராசிரியாராகக்கூட ஐஐடி கருதவில்லை”: பேரா. வசந்தா கந்தசாமி

  சென்னை ஐ.ஐ.டி.யில் கடந்த 1995-ஆம் ஆண்டு ஜனவரியில் இணைப் பேராசிரியர்கள், பேராசிரியர்கள் தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. கணிதத் துறையில் இணைப் பேராசிரியர் பதவிக்கு, டாக்டர் டபிள்யூ.பி.வசந்தா கந்தசாமி விண்ணப்பித்தார். ஆனால் அவர் தேர்வாகவில்லை. அதே சமயம், பேராசிரியர் தேர்வில் கலந்து கொண்ட அவர், இணை பேராசிரியராக நியமிக்கப்பட்டார். பேராசிரியர் பணிக்கு தன்னை தேர்வு செய்யாததை எதிர்த்தும், அடிப்படை தகுதிகள் இல்லாத சிலர் இணை பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டதாகக் கூறியும், அவர்களின் நியமனத்தை எதிர்த்தும், இந்த முறைகேடுகள் குறித்து … Continue reading “600 ஆய்வுக்கட்டுரைகளையும் 81 நூல்களையும் எழுதியிருக்கும் என்னை பேராசிரியாராகக்கூட ஐஐடி கருதவில்லை”: பேரா. வசந்தா கந்தசாமி

ராமானுஜன் பிராமணன் அல்ல;அவர் கணிதன்!

விஜய்பாஸ்கர்  கணித மேதை ராமானுஜனத்தை நம்மவர்கள் அணுகும் விதமே சலிப்பாக இருக்கிறது.அவர் சிறுவயதிலேயே வைதீகமாக இருந்தார். வைதீக மந்திரங்கள் சடங்குகளை நம்பினார். தினந்தோறும் மந்திரம் சொன்னார். அதனாலேயே அறிவைப் பெற்றார் என்ற கருத்தை திரும்ப திரும்ப சொல்வது. அல்லது சுற்றி வளைத்து சொல்வது. விஞ்ஞானம் எல்லாமே ஆன்மிகத்தில் அடக்கம் என்று பொத்தாம் பொதுவாய் பேசுவது போன்ற விஷயங்கள் பகுத்தறிவுக்கு எதிரானவை.உண்மையும் கிடையாது. ராமானுஜன் கணித மேதையாக உயர்வதற்கு அவருடைய ”கசடற கற்றல்” திறனே காரணம். அவருடைய வீட்டில் வாடகைக்கு இருக்கும் … Continue reading ராமானுஜன் பிராமணன் அல்ல;அவர் கணிதன்!

கால எந்திரம் ஒன்றைக் கட்டமைப்பது எப்படி?: ஸ்டீபன் ஹாக்கிங்

ஹலோ. என் பெயர் ஸ்டீபன் ஹாக்கிங். இயற்பியலாளன், பிரபஞ்சத்தோற்றக் கோட்பாட்டாளன், ஒருவிதக் கனவாளி. என்னால் நகர முடியாது என்றாலும், கணினி ஊடகம் வழியாகப் பேச முடியும். என் மனதால் நான் சுதந்திரமானவன். காலத்தினுள் பயணிப்பது சாத்தியமா? இறந்தகாலத்துக்குச் செல்லும் நுழைவாயிலைத் திறக்க நம்மால் முடியுமா? அல்லது எதிர்காலத்துக்குச் செல்லும் குறுக்குவழி ஒன்றைக் கண்டுபிடிக்க முடியுமா? இயற்கையின் விதிகளைப் பயன்படுத்தி நாம், சாசுவதமாக காலத்தின் மேல் ஆதிக்கம் செலுத்துபவர்களாக மாற முடியுமா? : இவை போன்ற மகத்தான கேள்விகளைக் … Continue reading கால எந்திரம் ஒன்றைக் கட்டமைப்பது எப்படி?: ஸ்டீபன் ஹாக்கிங்

விண்வெளியில் இருந்து கிளம்பினார் ஸ்காட் கெல்லி: உலகின் அழகை விண்வெளியிலிருந்து படம்பிடித்த விண்வெளி வீரர்

கடந்த ஓராண்டு காலமாக சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்த விண்வெளி வீரர் ஸ்காட் கெல்லி, பூமி திரும்பினார். ஓராண்டாக ஒவ்வொரு நாளும் உலகின் அழகை விண்வெளியிலிருந்து படம் பிடித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார் ஸ்காட் கெல்லி. சமீபத்திய புகைப்படங்கள் இங்கே... https://twitter.com/StationCDRKelly/status/704768329358012416 https://twitter.com/StationCDRKelly/status/704731247629611008 https://twitter.com/StationCDRKelly/status/704705817661083649 https://twitter.com/StationCDRKelly/status/704699984298389504 https://twitter.com/StationCDRKelly/status/704695238703476737 https://twitter.com/StationCDRKelly/status/704691369227358208 https://twitter.com/StationCDRKelly/status/704680442826350592 https://twitter.com/StationCDRKelly/status/704477416643698689 https://twitter.com/StationCDRKelly/status/704470338097156097 https://twitter.com/StationCDRKelly/status/704457470303842304 https://twitter.com/StationCDRKelly/status/704447180573003776 https://twitter.com/StationCDRKelly/status/704440529816150016 https://twitter.com/StationCDRKelly/status/704331894637199360 https://twitter.com/StationCDRKelly/status/704093555996790784 https://twitter.com/StationCDRKelly/status/704016704263815168 https://twitter.com/StationCDRKelly/status/703986267139260416 https://twitter.com/StationCDRKelly/status/703974446772703232 https://twitter.com/StationCDRKelly/status/703966280928387072 https://twitter.com/StationCDRKelly/status/703730025376288768 https://twitter.com/StationCDRKelly/status/703693484558041088 https://twitter.com/StationCDRKelly/status/703667193318346756 https://twitter.com/StationCDRKelly/status/703649158666842113Continue reading விண்வெளியில் இருந்து கிளம்பினார் ஸ்காட் கெல்லி: உலகின் அழகை விண்வெளியிலிருந்து படம்பிடித்த விண்வெளி வீரர்

ஜான்சன்&ஜான்சன் டால்கம் பவுடரில் கேன்சர் காரணிகள்:மனித உயிரை மதிக்காத கார்ப்பரேட் பேராசையை வெளிக்கொண்டு வந்த வழக்கு !!!

அமெரிக்காவின் அலபாமாவில் வசித்து வந்த plaintiff Jacqueline Fox என்ற பெண்மணி, கடந்த சில வருடங்களுக்கு முன் மிசோரி நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.  அதில், கடந்த 35 வருடங்களாக ஜான்சன்&ஜான்சன் பேபி பவுடர் மற்றும்  Shower to Shower  பவுடரை அந்தரங்க சுகாதாரதிற்காக உபயோகபடுத்தி வந்ததாகவும், அதன் காரணமாக தனக்கு கருப்பை கேன்சர் ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டி இருந்தார். கருப்பை கேன்சர் இருப்பதாக 2013-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட காலத்திற்கு முன்பாகவே, கடந்த … Continue reading ஜான்சன்&ஜான்சன் டால்கம் பவுடரில் கேன்சர் காரணிகள்:மனித உயிரை மதிக்காத கார்ப்பரேட் பேராசையை வெளிக்கொண்டு வந்த வழக்கு !!!

#MustRead: இந்த நூற்றாண்டின் மிக முக்கிய கண்டுபிடிப்பு!

த. வி. வெங்கடேஸ்வரன் சூரியனை போல 29 மற்றும் 36 மடங்கு நிறை கொண்ட ராட்சச கருந்துளைகள் இரண்டு ஒன்றை ஒன்று சுற்றிக் கொண்டே மோதி பிணைந்த பிரளய நிகழ்வில் காலவெளி பரப்பே அதிர்ந்து, ஏரியின் ஒரு முனையில் படகு செல்லும் போது ஏற்படும் அலைகள் ஏரியின் மறுபுறம் சென்று கரையை சென்று சேர்வதுபோல, அந்த நிகழ்வில் புறப்பட்ட ஈர்ப்பு கவர்ச்சி அலைகள் பிரபஞ்சம் முழுவதும் பரவி பூமியில் உள்ள உணர்வு கருவியில் பட்டு சிக்னல் ஏற்பட்டுள்ளது. … Continue reading #MustRead: இந்த நூற்றாண்டின் மிக முக்கிய கண்டுபிடிப்பு!

#விடியோ: புதிதாக நோய்கள் ஏன் வருகின்றன? கிருமி என்பது என்ன?

எபோலா ஒழிந்து இப்போது ஜிகா வைரஸ் நோய் வேகமாக பரவி வருவதாக உலகமே கவலை கொள்கிறது. புதிது புதிதாக நோய்கள் ஏன் வருகின்றன? கிருமி என்றால் என்ன? குடும்பத்தில் ஒருவரைத் தாக்கும் நோய், மற்றவர்களை ஏன் எதுவும் செய்வதில்லை? இந்தக் கேள்விகளுக்கு எளிமையான பதில்களைத் தருகிறார் அக்கு ஹீலர் அருள்ராஜ். http://www.youtube.com/watch?v=w8o0rSdPuZ4

திறப்புவிழா காண்பதற்குள் உடைக்கப்பட்ட நினைவிட தூண்கள்: இதுதான் அப்துல் கலாமுக்கு கிடைக்கும் மரியாதையா?

 மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அமைக்கப்பட்டுள்ள அதிவெளிச்ச மின் கோபுரத்தின் சுற்றுவேலி திறப்பு விழா காண்பதற்குள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் உடலடக்கம் செய்யப்பட்ட இடத்தில், மத்திய அரசு நினைவிடம் அமைப்பதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜாவின் தொகுதி மேம்பாட்டு நிதிமூலம், கடந்த மாதம் இங்கு அதிவெளிச்ச மின் கோபுரம் அமைக்கப்பட்டது. தரை தளத்தில் கோபுரத்தைச் சுற்றிலும் சுற்றுவேலியும் அமைக்கப்பட்டது. இன்னும் திறப்புவிழா காணாத இந்த … Continue reading திறப்புவிழா காண்பதற்குள் உடைக்கப்பட்ட நினைவிட தூண்கள்: இதுதான் அப்துல் கலாமுக்கு கிடைக்கும் மரியாதையா?

#ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை முன்வைத்து: இறைவனைக் காட்டி மூடப்பழக்கங்களை ஒழிக்க முடியுமா?

வில்லவன் இராமதாஸ் இறைவன் நம்மை காப்பான் என உறுதியாக நம்பும் பல்லாயிரக்கணக்கான இசுலாமிய மக்கள் ஆண்டுதோறும் கொல்லப்படுகிறார்கள். இன்றளவும் உலகின் மிக மோசமான வறுமைக்கும் கல்வியின்மைக்கும் முகம்கொடுப்பது இஸ்லாமிய சமூகம். அவற்றைக் களைவதற்காக ஒரு கூட்டு நடவடிக்கைக்கோ மக்கள்திரள் போராட்டத்துக்கோ பெரிய முயற்சிகள் நடைபெறாத ஊரில் கடவுளை காப்பாற்ற (இணைவைத்தலில் இருந்து) ஒரு மாபெரும் மாநாட்டை நடத்தியிருக்கிறது தவ்ஹீத் ஜமாத். வட்டரத்துக்கே உரிய பழக்கங்களின் செல்வாக்கு என்பது எல்லா மதங்களிலும் இருந்தே தீரும். நான் படித்த கிருஸ்தவ … Continue reading #ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை முன்வைத்து: இறைவனைக் காட்டி மூடப்பழக்கங்களை ஒழிக்க முடியுமா?

விண்வெளி நிலையத்தில் அந்த 300 நாட்கள்!

https://twitter.com/StationCDRKelly/status/690339331416915968 https://twitter.com/StationCDRKelly/status/690333498196951040 https://twitter.com/StationCDRKelly/status/690296944183218177 https://twitter.com/StationCDRKelly/status/690274265556332544

காப்பிக்கும் டீ க்கும் இடையில் சாதிய உளவியல் இருக்கிறது!

அன்பே செல்வா காப்பிக்கும் டீ க்கும் இடையில் ஒரு சாதிய உளவியல் இருக்கிறது, காப்பி அருந்துபவர்கள் மேட்டுக் குடிகளாகவும், டீ சாமான்யர்கள் அருந்துவதாகவும் நம்மையறியாத ஒரு மைண்ட் செட் எல்லோருக்கும் ஏற்படுகிறது. கட்டுப் பாடற்ற சந்தை இந்த இடைவெளியை குறைத்திருக்கிறது, இன்று யார் வேண்டுமானாலும் காப்பி அருந்தலாம்.. அது வேறு.. ஆனால் இவையிரண்டும் கிருஸ்தவ மிஷனேரிகளால் வெகுஜன மக்களுக்கு அறிமுகப்படுத்த பட்ட காலத்தில் காப்பியை உயர்சாதியினர் தேர்ந்தெடுத்து கொள்கிறார்கள், அதனாலேயே அதற்க்கு உயர்ந்த பண்பு கிடைக்கிறது, கும்பகோணம் டிகிரி … Continue reading காப்பிக்கும் டீ க்கும் இடையில் சாதிய உளவியல் இருக்கிறது!

கரை ஒதுங்கிய திமிங்கலங்கள் கொல்லப்பட்டனவா ? புகுஷிமா கதிர்வீச்சால் டால்பின்கள் இறந்ததை சுட்டிக்காட்டி அதிகரிக்கும் கண்டனம்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள் கரை ஒதுங்கிய நிலையில்,  புதன்கிழமை காலை வரை சுமார் 40-க்கும் அதிகமான திமிங்கலங்கள் உயிரிழந்து விட்டன. மேற்கூறிய கடற்கரை பகுதிகள் அருகில் தான் கூடன்குளம் அணுமின் நிலையம், தாது மணல் குவாரிகள், தாரங்கதாரா கெமிக்கல்ஸ் ஆலைகள் உள்ளன. மேலும், அண்மையில் பெய்த மழையின் போது தூத்துக்குடி பக்கிள்ஓடை வழியாக ஸ்டெர்லைட், விவி டைட்டானியம் ஆலைக் கழிவுகள் கடலில் கலந்து விட்டதாக புகார் எழுந்தது. #Video: கொத்துகொத்தாக கரை ஒதுங்கிய … Continue reading கரை ஒதுங்கிய திமிங்கலங்கள் கொல்லப்பட்டனவா ? புகுஷிமா கதிர்வீச்சால் டால்பின்கள் இறந்ததை சுட்டிக்காட்டி அதிகரிக்கும் கண்டனம்

#Video: கொத்துகொத்தாக கரை ஒதுங்கிய திமிங்கிலங்கள்: என்னதான் நடக்கிறது கூடங்குளம் கடல்பகுதிகளில்?

சுப. உதயகுமாரன்  இடிந்தகரை முதல் மணப்பாடு வரையிலான கடற்கரை எங்கும் நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள் கரை ஒதுங்கியிருக்கின்றன, அல்லது இறந்து கிடக்கின்றன. கூடங்குளம் அணுஉலைப் பகுதியில் ஏராளமான காவல் துறையினர், துணை இராணுவத்தினர் குவிக்கப்படுகின்றனர். நேற்று (சனவரி 11) இரவு முழுவதும் கூடங்குளம் பகுதியில் சிறியரக விமானங்கள் பறந்த வண்ணமிருந்தன. அணுஉலையில் சில பரிசோதனைகள் நடப்பதாக நேற்று செய்திகள் வந்தன. அங்கே என்னவோ குழப்பம் நடக்கிறது. ஆனால் அதிகாரவர்க்கம் வழக்கம்போல அமைதிகாக்கிறது, அல்லது மூடிமறைக்க முனைகிறது. பேய்க்கு வாழ்க்கைப்பட்டோரே, … Continue reading #Video: கொத்துகொத்தாக கரை ஒதுங்கிய திமிங்கிலங்கள்: என்னதான் நடக்கிறது கூடங்குளம் கடல்பகுதிகளில்?

”மோடிக்கு அறிவியல் சொல்லிக்கொடுக்க நான் தயார்!”: முன்வந்த விஞ்ஞானி!

அறிவியலையும் மதத்தையும் ஒன்று கலக்கக்கூடாது; நம் பிக்கையை அறிவியலோடு சேர்த்து குழப்பிக் கொள்ளக் கூடாது என்று பாரத ரத்னா விருது பெற்ற விஞ்ஞானி சி.என்.ஆர். ராவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தீக்கதிர் வெளியிட்டுள்ள செய்தியில்... சி.என்.ஆர்.ராவ் இந்தியாவில் பல பிரதமர்களுக்கு அறிவியல் ஆலோசகராக பணியாற்றி ஆழ்ந்த அனுபவம் பெற்றவர். சிறந்த அறிவியலாளருக்கான பாரத ரத்னா விருது பெற்றவர். பெங்களூரில் மோடியின் அறிவியல் கொள்கை மற்றும் மதம், சகிப்பின்மை குறித்து பேட்டி அளித்தார். அந்த பேட்டியில், “தனி நபர் ஒருவரோ … Continue reading ”மோடிக்கு அறிவியல் சொல்லிக்கொடுக்க நான் தயார்!”: முன்வந்த விஞ்ஞானி!

சங்கு ஊதினால் நோய் குணமாகும்;சிவனே சூழலியல் முன்னோடி: இந்திய அறிவியல் மாநாடா? இந்திய ஆன்மீக மாநாடா?

“தினமும் இரண்டு நிமிடம் புனித சங்கை ஊதினால், எல்லா நோய்களும் நம்மை விட்டு ஓடிப்போய்விடும்” இதைச் சொல்வது ஏதோ மரத்தடி சாமியார் அல்ல, ஒரு ஐஏஎஸ் அதிகாரி. அவர் பெயர் ராஜுவ் சர்மா. சொன்ன இடம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அது சமீபத்தில் மைசூருவில் நடந்த இந்திய அறிவியல் மாநாடு. அகிலேஷ் கே. பாண்டே என்ற பேராசிரியர் சமர்பித்த ஆய்வுக்கட்டுரை எதைப்பற்றியது தெரியுமா? இந்துக் கடவுள் சிவன் தான், முன்னோடி சூழலியலாளராம். “கைலாய மலையில் இருக்கும் சிவன், … Continue reading சங்கு ஊதினால் நோய் குணமாகும்;சிவனே சூழலியல் முன்னோடி: இந்திய அறிவியல் மாநாடா? இந்திய ஆன்மீக மாநாடா?

வட மாநிலங்களில் நூற்றாண்டின் மிக பெரும் பூகம்பம்: தேசிய பேரிடர் மேலாண்மை மையம் எச்சரிக்கை

வடஇந்தியாவை விரைவில் அதி பயங்கர பூகம்பம் ஒன்று தாக்க உள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இமாலயப் பகுதிகளில் பெரிய அளவில் பூகம்பம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், ரிக்டர் அளவுகோளின் படி அது எட்டுக்கு மேல் இருக்கும் என்றும் தேசியப் பேரிடர் மேலாண்மை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். சமீபத்தில் மணிப்பூரில் நிகழ்ந்த பூகம்பத்தை விட இது அதிக சக்தி கொண்டதாக இருக்குமெனவும் கூறப்படுகிறது. நேபாளில் நிகழ்ந்த பூகம்பத்தை ஆய்வு செய்ததில், அதே போன்றவை வட இந்தியா முழுவதும் நிகழ வாய்ப்பிருப்பதாகவும் … Continue reading வட மாநிலங்களில் நூற்றாண்டின் மிக பெரும் பூகம்பம்: தேசிய பேரிடர் மேலாண்மை மையம் எச்சரிக்கை

விண்வெளியில் இருந்து தமிழகம் இப்படித்தான் தெரியும்!

விண்வெளி வீரர் ஸ்காட் கெல்லி 283 நாட்களாக சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் இருக்கிறார். விண்வெளியில் இருந்தபடி புவியின் அழகை வெவ்வேறு பகுதிகளை படம் பிடித்துவருகிறார். சமீபத்தில் இவர் தென்னிந்திய பகுதிகளை படப்பிடித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்டார்...   https://twitter.com/StationCDRKelly/status/683751822767423488 https://twitter.com/StationCDRKelly/status/683652831023362048 https://twitter.com/StationCDRKelly/status/683643600127803392

ஆஸ்துமாவுக்கு உயிரோடு இருக்கும் மீனை விழுங்கச் செய்யும் மருத்துவம்: அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை எனத் தடை

புதுவை அறிவியல் இயக்கம் மீன் மருந்து கொடுத்தா இனி ஜெயில்தான் அறிவியல் முன்னேற்றம் என்பது அதி வேகமாக முன்னேறிக் கொண்டு செல்கையில், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மீன் மருத்துவம், மீன் மருந்து என்ற பெயரில், அப்பாவி மக்களை மோசடி செய்வதோடு நில்லாமல், நவநாகரிக உலக மக்களையும், மருத்துவ சமுகத்தினரையும் தலை கவிழச் செய்யும் விதமாக அரங்கேறும் அவலங்களுக்குப் பஞ்சமில்லை. மீன் மருத்துவம், மீன் மருந்து வாயிலாக ஆஸ்துமா நோயைப் போக்குகிறோம் என்று அறிவியலுக்கு முற்றிலும் முரணான, புறம்பான … Continue reading ஆஸ்துமாவுக்கு உயிரோடு இருக்கும் மீனை விழுங்கச் செய்யும் மருத்துவம்: அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை எனத் தடை

#‎boycottfreebasics‬: மோடியை மார்க் கட்டியணைத்த ரகசியம் இதுதான்!

நரேன் ராஜகோபாலன் ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ள What Net Neutrality Activists Won't Tell you on The Top 10 Facts about Free Basics என்கிற விளம்பரத்தில் இடம்பெற்ற குறிப்புகளுக்கான எதிர்வினை... 1 . "Free basics is open to any carriers. Any mobile operator can join us in connecting India." எல்லா டெலிகாம் ஆபரேட்டர்களும் டேட்டா பயன்பாட்டினை அதிகரிக்க தான் 4ஜி அலைவரிசையினை வாங்கி இருக்கிறார்கள். ஆக, … Continue reading #‎boycottfreebasics‬: மோடியை மார்க் கட்டியணைத்த ரகசியம் இதுதான்!

65 ரூபாயில் பேப்பர் நுண்நோக்கி: குழந்தைகளுக்காக கலிபோர்னியா பேராசிரியரின் கண்டுபிடிப்பு

சுந்தரம் தினகரன்  கலிபோர்னியாவின் ஸ்டான்போர்ட் பல்கலையை சேர்ந்த பேராசிரியர் மனுபிரகாஷும் அவர் தம் குழுவினரும் பேப்பரில் மடிக்கக்கூடிய நுண்நோக்கியை கண்டுபிடித்துள்ளார்கள். இதன் விலை ஒரு டாலர் தான்! நம்மூர் மதிப்பில் ரூபாய் 65 இருக்கலாம். எளிமையாக உருவாக்கிவிடலாம். இந்த நுண்நோக்கியின் மூலம் 150 அல்லது 500 மடங்கு பெரிதுபடுத்தமுடியும். அதற்கான மிகச்சிறிய லென்சையும் உருவாகியுள்ளார். அனைத்துமே பேப்பரால் ஆனது. இதை உருவாக்க அவருக்கு உந்துதல் அளித்த இடம் மதுரை காந்தி அருங்காட்சியகம் என்றால் ஆச்சர்யம் தான்! அங்கு வந்தபோது … Continue reading 65 ரூபாயில் பேப்பர் நுண்நோக்கி: குழந்தைகளுக்காக கலிபோர்னியா பேராசிரியரின் கண்டுபிடிப்பு

அவசியம் படியுங்கள்: ஃபேஸ்புக் சொல்வதும் சொல்லாததும்!

 'இலவச அடிப்படை இணையம் (Free Basics)' என்ற சங்கதிக்கு ஆதரவு தருமாறு கேட்டு பேஸ்புக் பரப்புரை செய்கிறது. இது உங்களின் கருத்து சுதந்திரத்தையும், இலவச தகவல் அறியும் உரிமையையும் பாதிக்கும் செயல் மட்டுமல்ல. உங்களிடமிருந்து பெரிய அளவில் கார்ப்பரேட் கம்பெனிகள் கொள்ளையடிக்கும் திட்டமுமாகும்.  மேம்போக்காக பார்த்தால் அனைவருக்கும் இலவச இணையம் கிடைப்பது போன்ற பரப்புரையாக சமூக அக்கறை உடையதாக தெரியலாம். ஆனால் இதில் அவர்கள் சேர்த்திருக்கும் வார்த்தை மிக மிக உண்ணிப்பாக ஆராயப்பட வேண்டியது.  "Basics" அதாவது 'அடிப்படை.' அதென்ன … Continue reading அவசியம் படியுங்கள்: ஃபேஸ்புக் சொல்வதும் சொல்லாததும்!

’எங்கும் நிறைந்துள்ளதே நியூட்ரினோ; அதனால் எந்த பாதிப்பும் கிடையாது’ நியூட்ரினோ ஆய்வு திட்ட இயக்குநர் 

அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான ஆராய்ச்சி மையத்தின் (இன்ஸ்பயர்) சார்பில், பள்ளி மாணவர்களுக்கான ஐந்து நாள் அறிவியல் முகாம், மதுரை யாதவா கல்லூரியில் புதன்கிழமை தொடங்கியது. இதில் கலந்துகொண்ட இந்திய நியூட்ரினோ ஆய்வு மையத் திட்ட இயக்குநர் நாபா.கே. மண்டல் சிறப்புரை ஆற்றினார். “புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளில் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக, நாடு முழுவதும் இதுபோன்ற அடிப்படை அறிவியல் நிகழ்ச்சிகளை அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான ஆய்வு மையம் நடத்தி வருகிறது. இந்தியாவில் 1957-ஆம் ஆண்டு நியூட்ரினோ ஆய்வு நடத்தப்பட்டது. 1965-ஆம் ஆண்டு நியூட்ரினோ தொடர்பான … Continue reading ’எங்கும் நிறைந்துள்ளதே நியூட்ரினோ; அதனால் எந்த பாதிப்பும் கிடையாது’ நியூட்ரினோ ஆய்வு திட்ட இயக்குநர் 

“விண்ணெளியிலிருந்து உலகைப் பார்க்கிறேன்”: ஒரு விண்வெளி வீரரின் பதிவுகள்

ஸ்காட் கெல்லி, அமெரிக்க விண்வெளி வீரர். 260 நாட்களுக்கும் மேலாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் பறந்துகொண்டிருக்கிறார். இவர் தன்னுடைய ஒவ்வொரு நாளையும் ஒளிப்படங்கள் வழியாக பதிவு செய்கிறார். அதாவது விண்வெளியிலிருந்து இந்தப் புவியின் ஒவ்வொரு பகுதியையும் பல்வேறு சூழலில் ஒளிப்படங்களாக பதிகிறார். இந்தப் புவி எத்தனை அழகானது என்பதை இவரின் ஒளிப்படங்கள் உணர்த்துகின்றன. இதோ ஸ்காட் கெல்லியில் சமீபத்திய சில பதிவுகள்...

மகிழ்ச்சிக்கும் நீண்ட ஆயுளுக்கும் தொடர்பில்லையாம்! ஆய்வு சொல்கிறது

மகிழ்ச்சியாக இருப்பவர்கள்தான் நீண்ட ஆயுளுடன் இருப்பார்கள் என்று நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால் ஒருவர் மகிழ்ச்சியாக இருப்பதற்கும் நீண்ட ஆயுளுக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்கிறது ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு. “நோய்கள் உங்களுக்கு மகிழ்ச்சியின்மையை ஏற்படுத்தலாம்; ஆனால் மகிழ்ச்சியின்மை நோய்களை ஏற்படுத்தாது” என்கிறார் ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் பெட்டி லீ. பிரிட்டனைச் சேர்ந்த 7 லட்சம் நடுத்தர வயது பெண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகிழ்ச்சியோ, மகிழ்ச்சியின்மையோ ஒருவருடைய … Continue reading மகிழ்ச்சிக்கும் நீண்ட ஆயுளுக்கும் தொடர்பில்லையாம்! ஆய்வு சொல்கிறது