” ‘துணை சபாநாயகர் லெட்டர் பேடை பயன்படுத்தி சசிகலா முதலமைச்சராக வேண்டும் என அறிக்கை விடுவது வெட்கக்கேடு”: மு. க. ஸ்டாலின்

"தம்பி துரை, 'துணை சபாநாயகர் லெட்டர் பேடை பயன்படுத்தி சசிகலா முதலமைச்சராக வேண்டும் என அறிக்கை விடுவது வெட்கக்கேடானது என திமுக பொருளாளர் மு. க. ஸ்டாலின் சாடியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதலமைச்சராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும்” என்று பாராளுமன்ற துணை சபாநாயகராக இருக்கும் மு.தம்பித்துரை வெளியிட்டுள்ள அறிக்கை, அரசியல் சட்டத்தின் மாண்புகளையும், ஜனநாயகத்தையும் சீர்குலைக்கும் விதத்தில் அமைந்திருப்பது கண்டு அதிர்ச்சியடைவதாக தெரிவித்துள்ளார். மேலும், "முதலமைச்சராக இருந்த அம்மையார் ஜெயலலிதா அவர்கள் மரணமடைந்தவுடன் இரவோடு … Continue reading ” ‘துணை சபாநாயகர் லெட்டர் பேடை பயன்படுத்தி சசிகலா முதலமைச்சராக வேண்டும் என அறிக்கை விடுவது வெட்கக்கேடு”: மு. க. ஸ்டாலின்

ஆங்கில ஏடுகளில் அறிவு ஜீவிகள் அஸ்திரங்களை ஏவுகின்றனர்: கி.வீரமணி காட்டம்

அ.தி.மு.க.வுக்குள் பிளவை உண்டாக்கிட முயற்சிக்கும் ஆரிய சக்திகளிடம் எச்சரிக்கையுடன் இருப்பீர்! என்ற தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவசர செய்தி அறிக்கை: அ.இ.அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெ.ஜெயலலிதாஅவர்கள் மறைந்து மூன்று நாள்களே ஆன நிலையில், அக்கட்சிக்குள்ளும், ஆட்சிஅமைப்புக்குள்ளும் பிளவுகளை ஏற்படுத்திட, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம் என்றதிட்டத்துடன் ஆரிய சக்திகள் தூண்டிலைத் தூக்கிக்கொண்டு திரியும் நிலையில், இந்தக்கட்டுரை - அறிக்கை மிகவும் முக்கியமானது - ஊன்றிப் படியுங்கள் - படியுங்கள்!) மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் … Continue reading ஆங்கில ஏடுகளில் அறிவு ஜீவிகள் அஸ்திரங்களை ஏவுகின்றனர்: கி.வீரமணி காட்டம்

வன்னியர் கல்வி அறக்கட்டளை VS எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம்: மோசடியில் யார் நம்பர் 1?

வேந்தர் மூவிஸ் மதனுக்கும் எஸ் ஆர் எம் அதிபர் பாரிவேந்தர் பச்சமுத்துவுக்கும் ஏற்பட்ட பிணக்கை அறிக்கைவிட்டு அடுத்த ட்விஸ்ட் கொடுத்தவர் பாமக நிறுவனர் ராமதாஸ். ராமதாஸின் அறிக்கை இப்படிச் சொன்னது: எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்து என்கிற பாரிவேந்தருக்கு நெருக்கமானவரும், வேந்தர் மூவீஸ் நிறுவனத்தின் அதிபருமான மதன் தலைமறைவாகி ஒரு வாரத்திற்கு மேலாகியும், அவரை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது பச்சமுத்துவுக்கும், மதனுக்கும் இடையிலான பிரச்சினை என்ற நிலையைத் தாண்டி, நூற்றுக்கணக்கான மாணவர்களை பாதிக்கும் சிக்கலாக மாறியிருக்கிறது. … Continue reading வன்னியர் கல்வி அறக்கட்டளை VS எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம்: மோசடியில் யார் நம்பர் 1?

பினராயி விஜயனின் கருத்து மகிழ்ச்சியளிக்கிறது: கருணாநிதி

 முல்லைப் பெரியாறு அணை விவகாரம் பற்றித் தமிழக அரசுடன் சுமூகமாகப் பேசித் தீர்வு காண விரும்புவதாகக் கேரள முதலமைச்சர், பினராயி விஜயன் தெரிவித்திருந்தார். இதற்கு திமுக தலைவர் மு. கருணாநிதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்த அறிக்கையில், “கேரள முதல்வராகப் பொறுப்பேற்ற பின் டெல்லிக்குச் சென்ற பினராயி விஜயனிடம், செய்தியாளர்கள் முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரள அரசின் நிலைப்பாடு குறித்துக் கேட்ட போது இவ்வாறு கூறியிருக்கிறார். மேலும் “தற்போதுள்ள முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக புதிய அணை கட்ட … Continue reading பினராயி விஜயனின் கருத்து மகிழ்ச்சியளிக்கிறது: கருணாநிதி

புகையிலை ஒழிப்பு சட்டங்களை முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும்: அன்புமணி

புகையிலை ஒழிப்பு சட்டங்களை முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். புகையிலை ஒழிப்பு நாளில் அவர் விடுத்துள்ள அறிக்கையில், “உலகில் மிக அதிகமானோரைக் கொல்லும் தீமை புகையிலைதான். சிகரெட், பீடி, குட்கா, மூக்குப் பொடி உள்ளிட்ட புகையிலைப் பொருட்களால் ஆண்டுக்கு 60 லட்சம் பேர் கொலை செய்யப்படுகிறார்கள். புகையிலையால் புற்றுநோய், மாரடைப்பு, பக்கவாதம், நுரையீரல் பாதிப்பு, தோல்நோய் எனப் பல கேடுகள் நேருகின்றன.  இத்தீமையால் இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 12 லட்சம் … Continue reading புகையிலை ஒழிப்பு சட்டங்களை முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும்: அன்புமணி

மோடிக்கு ஏன் பாஸ் மார்க் போட்டேன்? கருணாநிதி காரணங்களை அடுக்குகிறார்

திமுக தலைவர் கருணாநிதி, மத்திய பட்ஜெட் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தான் ஏன் மோடிக்கு பாஸ் மார்க் போட்டேன் என்பதற்கு காரணங்களை அடுக்குகிறார். இதோ அவர் வெளியிட்ட முழு அறிக்கையும்! “நடப்பு நிதி ஆண்டான 2015-2016 டிசம்பர் மாதம் வரை, மத்திய அரசின் அமைச்சகங்கள், ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் எந்த அளவுக்கு திட்டச் செலவுகளை மேற்கொண்டிருக்கின்றன என்று பார்த்தால், பத்து அமைச்சகங்கள் பாதி அளவு நிதியைக் கூட செலவு செய்யவில்லை என்பதும்; ஏழு அமைச்சகங்கள் நிதியாண்டின் ஒன்பது … Continue reading மோடிக்கு ஏன் பாஸ் மார்க் போட்டேன்? கருணாநிதி காரணங்களை அடுக்குகிறார்

ஆந்திரா சிறையில் இருந்த தமிழர்களின் விடுதலை: உரிமை கொண்டாடும் அதிமுக, திமுக; உண்மையில் இந்த வழக்கறிஞரின் சலிக்காத போராட்டம்தான் காரணம்!

2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எல். ஸ்ரீதர், டேவிட் கருணாகர் ஆகிய இருவரும் சேஷாச்சலம் வனப் பகுதியில் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டனர். இதில் இவர்களுடன் சென்ற பி. ரமணா என்ற அதிகாரி உயிர் தப்பினார். இவர் ரேணிகுண்டா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கில் ஆந்திர காவல்துறை 453 பேர் மீது 26 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்தது. அடுத்த சில நாட்களில் 351 பேர் இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் 288 பேர் தமிழ்நாட்டின் வேலூர், … Continue reading ஆந்திரா சிறையில் இருந்த தமிழர்களின் விடுதலை: உரிமை கொண்டாடும் அதிமுக, திமுக; உண்மையில் இந்த வழக்கறிஞரின் சலிக்காத போராட்டம்தான் காரணம்!

“ஸ்டாலின் குடும்பம் திமுகவைக் கட்டுப்படுத்துகிறது”: மு.க. அழகிரி யின் பேட்டியும் கருணாநிதியின் பதில் அறிக்கையும்

திமுகவிலிருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி, மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்படுவார் என சமீபத்தில் சொல்லப்பட்டது. ஆனால், காங்கிரஸ்- திமுக கூட்டணி உறுதியானதற்குப் பிறகு தந்தி டிவிக்கு அளித்த தொலைபேசி வழி பேட்டியில் அவர் திமுக மீது கடும் விமர்சனத்தை வைத்திருக்கிறார். காங்கிரஸ் திமுக கூட்டணி வெல்ல வாய்ப்பே இல்லை. அதிமுக பலமாக உள்ளது; அதை வீழ்த்த முடியாது. திமுகவில் கலைஞர் ஓரம்கட்டப்பட்டுள்ளார். ஸ்டாலின் குடும்பம் திமுகவைக் கட்டுப்படுத்துவதால் திமுக ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பே இல்லை” என பேசியிருக்கிறார் அழகிரி. http://www.youtube.com/watch?v=ofKkH1RMSn4Continue reading “ஸ்டாலின் குடும்பம் திமுகவைக் கட்டுப்படுத்துகிறது”: மு.க. அழகிரி யின் பேட்டியும் கருணாநிதியின் பதில் அறிக்கையும்

அம்மா கதையும் அப்பா கதையும் வதைபடும் மக்கள் கதையும்!

மதுரை சொக்கன் தமிழக அமைச்சர்கள் உள்ளிட்ட 14 பேரின் இல்லத் திருமணங்களை சென்னையில் நடத்தி வைத்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசும் போது,‘தந்தை -மகன்’ கதை ஒன்றை கூறியுள்ளார். இதற்கு முன்பு அதிமுக சார்பில் நடத்தி வைக்கப்பட்ட இலவச திருமணங்களின் போது மணமக்கள் அனைவரது நெற்றியிலும் அம்மா படம் பதித்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. இந்தத் திருமணத்தில் அப்படி இல்லை. இலவசமாக எது கொடுத்தாலும், அது வெள்ள நிவாரணப் பொருட்களாக இருந்தாலும், விலையில்லா ஆடு, மாடாக இருந்தாலும், இலவச … Continue reading அம்மா கதையும் அப்பா கதையும் வதைபடும் மக்கள் கதையும்!

“அதிமுகவை விமர்சிக்க அச்சமும் இல்லை; ஊழல் வழக்குகள் மிச்சமும் இல்லை!”

திமுக தலைவர் கருணாநிதி கேள்வி- பதில் வடிவில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிமுகவை நேரடியாக விமர்சிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அச்சம் என்று குறிப்பிட்டுள்ளார். “இரண்டு திராவிடக் கட்சிகளுடைய ஆட்சியில் ஏழையெளிய மக்களின் வாழ்க்கையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றும், அவர்களின் முன்னேற்றத்திற்காக எதுவும் செய்யவில்லை என்றும் சொல்லியிருக்கிறார். 1967ஆம் ஆண்டு தி.மு.க.வுடனும், 1977ஆம் ஆண்டு அ.தி.மு.க.வுடனும், 1980ஆம் ஆண்டு அ.தி.மு.க.வுடனும், 1989ஆம் ஆண்டு தி.மு.க.வுடனும், 2001ஆம் ஆண்டு அ.தி.மு.க.வுடனும், 2006ஆம் ஆண்டு தி.மு.க.வுடனும், 2011ஆம் ஆண்டு அ.தி.மு.க.வுடனும் … Continue reading “அதிமுகவை விமர்சிக்க அச்சமும் இல்லை; ஊழல் வழக்குகள் மிச்சமும் இல்லை!”