2016: இதுவரை இல்லாத அளவுக்கு மக்கள் மீது தாக்குதல்கள் தொடுக்கப்பட்ட ஆண்டு!

நவம்பரில் ரூபாய் நோட்டு தடையை பிரதமர் அறிவித்தபோது, 50 நாட்களில் சகஜ நிலை திரும்பிவிடும் என்று அவர் சொன்னார். டிசம்பரில், நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ரொக்கமற்ற பரிமாற்றமும், மின்னணு பரிமாற்றமும் இந்தியாவின் ‘புதிய சகஜ நிலை’ என்கிறார். வறிய மக்களுக்கு நன்மைகள், வசதி படைத்தவர்களுக்கும் ஊழல்வாதிகளுக்கும் தண்டனை என்ற வாக்குறுதிகளுடன்தான் ரூபாய் நோட்டுத் தடை கொண்டுவரப்பட்டது. ஆனால், உண்மை நோக்கம் அதற்கெதிரானது என்று இப்போது தெளிவாகத் தெரிந்துவிட்டது. ரொக்கத்தை அடிப்படையாகக் கொண்டு முறைசாரா பொருளாதாரத்தை, சிறுவர்த்தகர்களை, சிறுவிவசாயிகளை, … Continue reading 2016: இதுவரை இல்லாத அளவுக்கு மக்கள் மீது தாக்குதல்கள் தொடுக்கப்பட்ட ஆண்டு!

முதல்வருக்கு மாரடைப்பு; அப்பலோவில் திரண்ட தொண்டர்கள்; தமிழகமெங்கும் போலீஸார் குவிப்பு

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டது. இதய ரத்தநாள அடைப்பை சரிசெய்வதற்காக இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அது முடிந்தபிறகு முதலமைச்சர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார். இந்தநிலையில், லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே ஆலோசனையின்படி முதல்வருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லண்டனிலிருந்து அவர் தரும் ஆலோசனையின்படி அப்போலோ மருத்துவர்கள் முதல்வருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அப்போலோ மருத்துவர்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அனைத்து சிகிச்சைகளையும் அளித்து வருவதாகவும், அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக … Continue reading முதல்வருக்கு மாரடைப்பு; அப்பலோவில் திரண்ட தொண்டர்கள்; தமிழகமெங்கும் போலீஸார் குவிப்பு

“தாலிக்கு தங்கம் வாங்கும்” திட்டத்தில் ஊழல்; மு.க.ஸ்டாலின்

“தாலிக்கு தங்கம் வாங்கும்” திட்டத்தில் ஊழல் நடந்துள்ளதாக தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு. க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், “தாலிக்கு தங்கம் வாங்கும் திட்டத்தின் கீழ் 111.43 கோடி ரூபாய் அதிக விலை கொடுத்திருப்பதாக “ஜூனியர் விகடன்” பத்திரிக்கையில் வெளியிடப்பட்டுள்ள புலனாய்வுச் செய்தி அதிமுக ஆட்சியில் ஏழை எளியவர்களின் திருமாங்கல்யத் திட்டம் கூட முறையாக செயல்படுத்தப்படவில்லை என்பதை திட்டவட்டமாக அறிவிக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது. 18.8.2011 அன்று துவங்கி 29.12.2015 வரை சமூக நலத்துறை செய்துள்ள … Continue reading “தாலிக்கு தங்கம் வாங்கும்” திட்டத்தில் ஊழல்; மு.க.ஸ்டாலின்

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நெல்லித்தோப்பு தொகுதியில் வெற்றி

கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியது. தேர்தலில் போட்டியிடாத நிலையில் முதல்வராக நாராயணசாமி பதவியேற்றார். 6 மாதங்களுக்குள் அவர் எம்.எல்.ஏவாக வேண்டும் என்ற நிலையில் நெல்லித்தோப்பு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார், நாராயணசாமிக்காக தனது பதவியை ராஜிநாமா செய்தார். இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வாக்குப்பதிவு கடந்த 19-ம் தேதி நடைபெற்றது.  இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி  எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகரை விட 11, 144 … Continue reading புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நெல்லித்தோப்பு தொகுதியில் வெற்றி

தத்தளித்தாலும் ஓ.பன்னீர் … : ஸ்டாலின் சொல்லாட்டம்

முதலமைச்சரின் துறைகளை முழுமையாக பொறுப்பேற்றுள்ள ஓ.பன்னீர்செல்வம் ஒரு அறிக்கையாவது வெளியிட்டிருக்க வேண்டும். அப்படி அவர் அறிக்கை வெளியிடாத நிலையில் தத்தளித்துக் கொண்டிருந்தாலும் தலைமைச் செயலாளர் அல்லது நிதித்துறை செயலாளராவது ஒரு அறிக்கை விட்டிருக்கவேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.  இன்று சென்னை, வில்லிவாக்கம் தொகுதியில் உள்ள அயனாவரம் சந்தை பகுதி, பெரம்பூர் இந்தியன் வங்கி ஆகிய பகுதிகளில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது: 500 ரூபாய் ஒருவருக்கு வியாபாரம் … Continue reading தத்தளித்தாலும் ஓ.பன்னீர் … : ஸ்டாலின் சொல்லாட்டம்

ஜல்லிக்கட்டு தடை நீக்கம் இல்லை: உச்சநீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது!

“தமிழர்களின் திருநாளான பொங்கல் திருநாளில் தொடங்கி பல மாதங்கள் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று தமிழக அரசு தாக்கல் செய்த   மறு ஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. ஜல்லிக்கட்டு குறித்த உச்சநீதிமன்றத்  தீர்ப்பு எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான் என்றாலும், அதற்கான காரணங்கள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன” என பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு முடிவு … Continue reading ஜல்லிக்கட்டு தடை நீக்கம் இல்லை: உச்சநீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது!

ரூபாய் நோட்டை திரும்பப் பெறுதல்: மக்களின் சிரமங்களை அரசு போக்க வேண்டும்!

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் அறிவித்தது தொடர்பாக கருத்து தெரிவித்த திமுக பொருளாளர் மு. க. ஸ்டாலின், "நாட்டினுடைய பொருளாதார நிலையை உயர்த்த, இந்திய நாட்டினுடைய சீர்திருத்தத்திற்காக இந்த அறிவிப்பு உண்மையிலேயே உதவியாக இருக்கும் என்றால், திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரையில் இதை வரவேற்கக் கூடிய நிலையில் தான் இருக்கிறது” என தெரிவித்தார். மேலும் " பிரதமர் மோடி அவர்கள் தேர்தல் நேரத்தில் வெளிநாட்டில் இருக்கக் கூடிய கறுப்பு பணத்தை மீட்டு, … Continue reading ரூபாய் நோட்டை திரும்பப் பெறுதல்: மக்களின் சிரமங்களை அரசு போக்க வேண்டும்!

நெற்களஞ்சியமாகத் திகழ்ந்த தஞ்சை மண்டலம் தற்கொலைக் களமாக மாறிக்கொண்டிருக்கிறது: ஸ்டாலின்

“அதிமுக ஆட்சியில் நடக்கும் விவசாயிகள் தற்கொலை அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அடுத்தடுத்து நிகழ்ந்த தற்கொலை செய்தி கேட்டு ஒரு காலத்தில் தமிழகத்தின் நெற்களஞ்சியமாகத் திகழ்ந்த தஞ்சை மண்டலம் இப்படி தற்கொலைக் களமாக மாறக் கூடிய அவலமான நிலை இந்த அதிமுக ஆட்சியில் உருவாகியிருக்கிறது” என கடுமையாக விமர்சித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் மு. க. ஸ்டாலின். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தஞ்சை கீழ்த்திருப்பந்துருத்தி ராஜேஷ்கண்ணா, திருவாருர் கோட்டூர் அருகேயுள்ள ஆதிச்சியபுரம் அழகசேன், திருத்துறைப்பூண்டி கோவிந்தராஜ் ஆகிய … Continue reading நெற்களஞ்சியமாகத் திகழ்ந்த தஞ்சை மண்டலம் தற்கொலைக் களமாக மாறிக்கொண்டிருக்கிறது: ஸ்டாலின்

மவுலிவாக்கம் விபத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் உடனடியாக இழப்பீடு தொகையை வழங்க வேண்டும்: ஸ்டாலின்

மவுலிவாக்கம் விபத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் உடனடியாக இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தை உலுக்கிய சென்னை, மவுலிவாக்கம் 11 மாடிக் கட்டிட விபத்தில் சிக்கி 61 பேர் உயிரிழந்த பயங்கரம் கடந்த 28.6.2014 அன்று நிகழ்ந்தது. அந்த கட்டிடத்திற்குள் சிக்கிய 88பேருக்கும் மேல் மீட்கப்பட்டாலும், அந்த பேராபத்தில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களின் மன உளைச்சலுக்கு இன்னும் மருந்து போட முடியவில்லை. மவுலிவாக்கத்தில் … Continue reading மவுலிவாக்கம் விபத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் உடனடியாக இழப்பீடு தொகையை வழங்க வேண்டும்: ஸ்டாலின்

ஆளுநர் அரசியல் சட்டத்தின் பரிமாணங்கள் அனைத்தையும் பரிசீலித்திருப்பாரா?

திமுக தலைவர் மு. கருணாநிதி அறிக்கை: 11-10-2016 அன்று என்னுடைய "உடன்பிறப்பு" மடலில், "முதல் அமைச்சர் ஜெயலலிதா மருத்துவ மனையிலே இருக்கின்ற காரணத்தால், சரியான வழி காட்டுதலின்றி தமிழக அரசே செயல்பாடற்ற நிலையில் திணறிக் கொண்டிருக் கிறது என்பது தான் அனைவரின் கருத்து. அ.தி.மு.க. அரசின் சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டமோ, அமைச்சரவைக் கூட்டமோ, சட்ட மன்றச் சிறப்புக் கூட்டமோ எதுவும் நடத்தப்படவில்லை" என்றும்; "தமிழகத்திலே உள்ள பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் தனித்தனியாக பல்வேறு பிரச்சினைகள் குறித்து … Continue reading ஆளுநர் அரசியல் சட்டத்தின் பரிமாணங்கள் அனைத்தையும் பரிசீலித்திருப்பாரா?

பொய்களையும் வதந்திகளையும் பரப்பியவர்கள் யார்?

சி.ராஜூ செப்டம்பர் 22 –ந்தேதி : ஜெயலலிதா அப்போலாவில் அனுமதிக்கப்பட்டார். செப்டம்பர் 23 –ந்தேதி : காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைவு. செப்டம்பர் 24 –ந்தேதி : வழக்கமான உணவையே எடுத்துகொள்கிறார். செப்டம்பர் 25 –ந்தேதி : உடல்நிலை சீராக இருக்கிறது. செப்டம்பர் 26 –ந்தேதி : விரைவில் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவார். செப்டம்பர் 27 –ந்தேதி : இன்னும் சில தினங்கள் இருந்துவிட்டு தன் பணிகளுக்குத் திரும்புவார். செப்டம்பர் 28 –ந்தேதி : உடல் நிலையில் நல்ல … Continue reading பொய்களையும் வதந்திகளையும் பரப்பியவர்கள் யார்?

“இதுபோன்ற சடங்குகளுக்கு ஏழைக் குழந்தைகள்தான் கிடைத்தார்களா?”

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பூரண நலம்பெற வேண்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள கோயில்களில் அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் சிறப்பு வழிபாடுகள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர் என்கிறது ஜெயா டிவி இணையதளம். மேலும் இந்த செய்தியில் தமிழகம் முழுக்க முதலமைச்சர் நலனுக்கான நடைபெற்ற பிரார்த்தனைகள் பற்றிய விவரங்கள் சொல்லப்பட்டுள்ளன. முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா பூரண நலம்பெற வேண்டி, டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, நேத்தாஜி நகரில் அமைந்துள்ள அருள்மிகு முருகன் கோயிலில் … Continue reading “இதுபோன்ற சடங்குகளுக்கு ஏழைக் குழந்தைகள்தான் கிடைத்தார்களா?”

அரசியல் சட்டத்தைக் கேலிக்கூத்தாக்கிய மோடி அரசு: வைகோ கண்டனம்

காவிரி பிரச்சினையில் அரசியல் சட்டத்தைக் கேலிக்கூத்தாக்கியுள்ளதாக மோடி அரசுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “காவிரி நதி நீர்ச் சிக்கலுக்குத் தீர்வு காண, அக்டோபர் 4 ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் செப்டம்பர் 30 ஆம் தேதி, மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இன்று (3.10.2016) மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக … Continue reading அரசியல் சட்டத்தைக் கேலிக்கூத்தாக்கிய மோடி அரசு: வைகோ கண்டனம்

“தமிழ்நாடு இன்னொரு பாகிஸ்தான் அல்ல”: சமூக ஊடகங்களில் மத்திய அரசுக்கு எதிர்ப்பு

காவிரி நதி நீர்ச் சிக்கலுக்குத் தீர்வு காண, அக்டோபர் 4 ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி, மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. திங்கள்கிழமை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க முடியாது; நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றிய பின்னரே அமைக்க முடியும்; இரண்டு நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க … Continue reading “தமிழ்நாடு இன்னொரு பாகிஸ்தான் அல்ல”: சமூக ஊடகங்களில் மத்திய அரசுக்கு எதிர்ப்பு

“அதனால்தான் தேர்தல்களைச் சந்திக்கக் பயப்படுகிறார் ஜெயலலிதா”

ஜெயலலிதா ‘பூரண குணம்’ பெற வாழ்த்துக்கள் என்ற தலைப்பில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ஏடான மாலெ தீப்பொறி வெளியிட்டுள்ள பதிவு: ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் வந்து கருணாநிதி முதல் தமிழ்நாட்டின் அரசியல்வாதிகள் அத்தனை பேரும் அவர் நலம் பெற்று பணிக்குத் திரும்ப வாழ்த்துச் சொன்னார்கள். மாபெரும் அரசியல் நாகரிகத்தை வெளிப்படுத்திவிட்டதாக அனைவரும் தமக்குத் தாமே முதுகுத் தட்டிக் கொண்டிருந்தபோது அந்த அறிவிப்பு வந்தது. அக்டோபர் 17 மற்றும் 19 தேதிகளில் தமிழ்நாட்டின் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படும்! யாருக்கும் எந்த கால … Continue reading “அதனால்தான் தேர்தல்களைச் சந்திக்கக் பயப்படுகிறார் ஜெயலலிதா”

“பாகிஸ்தான் கலைஞர்கள் தீவிரவாதிகள் அல்லர்”: சல்மான்கான்

பாகிஸ்தான் - இந்தியமக்களிடையே எந்த பிரச்சனையும் இல்லை; நடப்பது இருநாட்டு அரசுகளுக்கு இடையிலானது மட்டுமே என்று புகழ்பெற்ற திரைப் பட இயக்குநர் ஷியாம் பெனகல் கூறியுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது தீக்கதிர். மேலும் அந்தச் செய்தியில், இந்தியா - பாகிஸ்தான் சர்வேதேச கட்டுப்பாட்டு பகுதிக்கு அப்பால் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நிகழ்த்தியதையடுத்து இருநாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனையடுத்து, இந்தியா, பாகிஸ்தான் இடையே இயல்பு நிலை திரும் பும் வரை, பாகிஸ்தான் … Continue reading “பாகிஸ்தான் கலைஞர்கள் தீவிரவாதிகள் அல்லர்”: சல்மான்கான்

வதந்திகளை உருவாக்கி உள்ளாட்சி தேர்தலில் பலனடையப் பார்க்கிறதா அதிமுக?

மனுஷ்யபுத்திரன் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து வதந்திகளை பரப்புவோருக்கு எதிராக காவல்துறை தினமும் கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. பிரான்ஸில் வசிக்கும் தமிழச்சி மீது ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்தே இந்த வதந்திகள் மிகப்பெரிய அளவில் தொடர்ந்து பரவிக்கொண்டே இருக்கின்றன. இதை யார் பரப்புகிறார்கள்? இவை வைரலாக எப்படி தொடர்ந்து மக்களிடம் சென்று சேர்கின்றன? வதந்திகளை பரப்புவோரின் நோக்கம் என்ன? வதந்திகள் என்பவை தானாக உருவாகின்றவை அல்ல. அவற்றிற்குப் பின்னே திட்டவட்டமான … Continue reading வதந்திகளை உருவாக்கி உள்ளாட்சி தேர்தலில் பலனடையப் பார்க்கிறதா அதிமுக?

தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்து எழுதிய தமிழச்சி மீது வழக்கு

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்தது முகநூலில் அவதூறான பதிவுகளை எழுதியதாக பிரான்ஸைச் சேர்ந்த தமிழச்சி மீது தமிழக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ஒருவாரத்திற்கு முன்பாக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்களை   தமிழச்சி என்ற பெண் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவு வைரலான நிலையில், அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் ராமச்சந்திரன் காவல்துறையில் புகார் … Continue reading தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்து எழுதிய தமிழச்சி மீது வழக்கு

தலைமைச் செயலகமான மருத்துவமனை: காவிரி விவகாரத்தை அதிகாரிகளுடன் ஆலோசித்தார் முதலமைச்சர்!

சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதா, காவிரி விவகாரம் குறித்து அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் தலைமைச் செயலர் ராம மோகன ராவ், தலைமை வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி, அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர்‌ பங்கேற்றனர். காவிரி வழக்கில் கர்நாடக அரசு மேலும் 3 நாளைக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிட உத்தரவிட்டது குறித்தும் முதலமைச்சரிடம் அதிகாரிகள் எடுத்துரைத்ததாக இது குறித்து வெளியான செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காவிரி … Continue reading தலைமைச் செயலகமான மருத்துவமனை: காவிரி விவகாரத்தை அதிகாரிகளுடன் ஆலோசித்தார் முதலமைச்சர்!

உள்ளாட்சி தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்; மக்கள் நலக் கூட்டணி தொடர்கிறது

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல், அடுத்த மாதம் (அக்டோபர்) 17 மற்றும் 19-ந் தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று தொடங்கிய நிலையில் முதல் நாளில் மட்டும், 4,748 பேர் தங்களது வேட்புமனுவினை தாக்கல் செய்துள்ளனர். அதிமுக வேட்புமனு தாக்கல் உள்ளாட்சித் தேர்தலுக்கு பல்வேறு கட்சிகளும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், சென்னை உள்ளிட்ட 12 மாநகராட்சி மற்றும் 31 மாவட்ட ஊராட்சி வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பட்டியலை முதல் … Continue reading உள்ளாட்சி தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்; மக்கள் நலக் கூட்டணி தொடர்கிறது

சைதை துரைசாமி உள்ளிட்ட ஏழு மேயர்களுக்கு வாய்ப்பு மறுப்பு!

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பட்டியலை அதிமுக பொதுச்செயலளார் திங்கள்கிழமை வெளியிட்டார். இதில் சென்னை மேயர் சைதை துரைசாமி உள்ளிட்ட ஏழு மேயர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. திருப்பூர், வேலூர், கோவை, திருநெல்வேலி மேயர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. திண்டுக்கல் மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால், தற்போதைய மேயர் மருதராஜின் மகள் பொன். முத்துக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சேலம், மதுரை, திருச்சி, திருச்செங்கோடு மேயர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தல் முதல் மேயர் … Continue reading சைதை துரைசாமி உள்ளிட்ட ஏழு மேயர்களுக்கு வாய்ப்பு மறுப்பு!

“நான் உங்களைப் பார்த்து பயந்துவிடவில்லை”: செருப்பு வீச்சு சம்பவத்து ராகுல் எதிர்வினை

அடுத்த ஆண்டு வரவிருக்கிற உத்திரபிரதேச மாநில தேர்தலையொட்டி கிஷான் யாத்ரா என்ற பெயரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்  காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி. திங்கள் கிழமை உத்தர பிரதேசத்தின் லக்னௌ நகரத்தின் அருகே உள்ள சிதாபூரில் பிரச்சார வாகனத்தில் ராகுல் காந்தி வந்தபோது,  அவர் மீது செருப்பு வீசப்பட்டது. அவர் மீது செருப்பு படாமல் பின்னால் நின்றுகொண்டிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜிதின் பிரசாதா மீது பட்டது அந்த செருப்பு. இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட … Continue reading “நான் உங்களைப் பார்த்து பயந்துவிடவில்லை”: செருப்பு வீச்சு சம்பவத்து ராகுல் எதிர்வினை

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பிலேயே அதிமுகவுக்கு ஆதரவு நிலை: ராமதாஸ்

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல்கள் அடுத்த மாதம் 17 மற்றும் 19 ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டதற்கு அடுத்த நாளே வேட்புமனுத் தாக்கல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இது ஆளுங்கட்சியான அதிமுகவுக்கு சாதகமாகவும், மற்ற கட்சிகளுக்கு பாதகமாகவும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும்" என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல்கள் அடுத்த மாதம் 17 மற்றும் 19 ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக … Continue reading உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பிலேயே அதிமுகவுக்கு ஆதரவு நிலை: ராமதாஸ்

வெளிநாட்டில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை: மருத்துவர் குழு மறுப்பு

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சிகிச்சையளிக்கப்பட வேண்டிய தேவை இல்லை என அப்பலோ மருத்துவமனை மருத்துவர் குழு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளது. முன்னதாக ஜெயலலிதா சிகிச்சைக்காக வெளிநாடு செல்லவிருப்பதாக தகவல் வெளியானது. அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள மருத்துவர்கள். முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது. முதலமைச்சர் வழக்கமான உணமை உட்கொண்டு வருகிறார்; சில தினங்களில் வீடு திரும்புவார் எனத் தெரிவித்தனர்.

கோவையில் கடையை உடைத்து செல்போன்களை அள்ளும் இந்து முன்னணியினர்; சிசிடிவி கேமராவில் சிக்கினர்

இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொல்லப்பட்டார். இதைக் கண்டிப்பதாகக் கூறி இந்து முன்னணி, பாஜக உள்ளிட்ட் இந்துத்துவ அமைப்பினர் கோவையில் வன்முறையில் ஈடுபட்டனர். வன்முறை காரணமாக கடைகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில், கடைகளின் பூட்டை உடைத்து அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர். கோவை துடியலூரில் மொபைல் கடையை உடைத்து கையில் செல்போன்களை அள்ளிச் சென்ற காட்சி அந்தக் கடையில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. https://youtu.be/BwqQkGOU7N8 வீடியோ உதவி: ஒடியன் லட்சுமணன்

“முதல்வர் ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது”: மருத்துவர்கள்

காய்ச்சல், நீர்ச்சத்து இழப்பு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டார். முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அறிக்கையில், “முதல்வர் ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் குணமான நிலையில், தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதல்வர் ஜெயலலிதா வழக்கமான உணவுகளை உட்கொண்டார். தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடைய அதிமுக அமைச்சர்கள் பலர்  மருத்துவமனை வாசலில் காத்திருக்கின்றனர். தொண்டர்கள்  பலர் குவிந்துள்ளதால் காவல்துறையினர் தடுப்புகளை வைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி … Continue reading “முதல்வர் ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது”: மருத்துவர்கள்

வீடியோ: இந்து முன்னணி பிரமுகர் தனிப்பட்ட காரணங்களுக்காக கொலை; மதக் கலவரமாக மாற்ற முனையும் இந்துத்துவ அமைப்புகள்!

கோவை இந்து முன்னணி அமைப்பின் செய்தி தொடர்பாளர் சசிகுமார், தமது பணிகளை முடிந்து வியாழக்கிழமை நள்ளிரவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். கோவை சுப்பிரமணியம் பாளையம், சர்க்கரை விநாயகர் கோயில் அருகே வந்தபோது, மர்ம நபர்கள் சிலர், வழிமறித்து ஆயுதங்களால் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிய சசிகுமாரை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சசிகுமார் உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த இந்து முன்னணியினர் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியதில் மருத்துவமனை கண்ணாடிகள் உடைந்தன. … Continue reading வீடியோ: இந்து முன்னணி பிரமுகர் தனிப்பட்ட காரணங்களுக்காக கொலை; மதக் கலவரமாக மாற்ற முனையும் இந்துத்துவ அமைப்புகள்!

காவிரி மேலாண்மை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு: அரசியல் கட்சிகள் வரவேற்பு

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும், காவிரி விவகாரத்தை விசாரணை செய்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், காவிரி நதிநீர் விவகாரத்தில் மேற்பர்வை குழுவை தமிழக மற்றும் கர்நாடக மாநிலங்கள் எதிர்ப்பதால் காவிரி மேலாண்மை வாரியமே முடிவு செய்யும். எனவே, உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, லலித் … Continue reading காவிரி மேலாண்மை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு: அரசியல் கட்சிகள் வரவேற்பு

ராம்குமார் சாவில்  மர்ம முடிச்சு  அவிழ்க்கப்பட்டாக வேண்டும்: கருணாநிதி

ராம்குமார் மரணம் தொடர்பாக நீதிவிசாரணை நடத்தப்பட வேண்டும் என திமுக தலைவர் மு. கருணாநிதி கேட்டிருக்கிறார்கள். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கைள்: சென்னை நுங்கம்பாக்கம் புகைவண்டி நிலையத்தில் பட்டப் பகலில் சுவாதி என்ற பெண்ணைக் கொடூரமாகக் கொலை செய்ததாகக் கூறப்படும் குற்றவாளி ராம்குமார் என்பவரைக் காவல் துறையினர் கண்டுபிடித்துக் கைது செய்ததைப் பற்றி நான் 8-7-2016 அன்று விரிவாக  தெரிவித்திருந்தேன். நெல்லையில் இருந்து  சென்னைக்கு போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்சில் ராம்குமார் அழைத்து வரப்பட்ட போது விடிய விடியத் … Continue reading ராம்குமார் சாவில்  மர்ம முடிச்சு  அவிழ்க்கப்பட்டாக வேண்டும்: கருணாநிதி

சிறையில் ராம்குமார் மரணம்; சிறை நிர்வாகம் என்ன செய்துகொண்டிருந்தது?: அரசியல் கட்சிகள் கண்டனம்

புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கொலை வழக்கில் கைதான ராம்குமார் மரணமடைந்தது குறித்து நீதிவிசாரணை நடத்த வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. விசிக தலைவர் தொல் திருமாவளவன்: ராம்குமார் சாவுக்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். இதை தற்கொலை என்று மூடி மறைக்க அரசு முயற்சிக்க கூடாது. அவர் தற்கொலை செய்துக் கொண்டாரா இல்லை கொலை செய்யப்பட்டாரா என்று விசாரிக்க வேண்டும். அவர் உடலை உடனே அடக்கம் செய்யக்கூடாது. சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன்: … Continue reading சிறையில் ராம்குமார் மரணம்; சிறை நிர்வாகம் என்ன செய்துகொண்டிருந்தது?: அரசியல் கட்சிகள் கண்டனம்

ஆறு மாவட்டங்களில் அம்மா திருமண மண்டபம்: சமூக நலக்கூடங்கள் ஏன் மூடங்கின?

மதுரை உள்பட 6 இடங்களில், 11 அம்மா திருமண மண்டபங்கள் கட்டப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், “ஏழை -எளிய மக்கள், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை திருமண மண்டபங்களில் நடத்த வாடகையாக அதிகம் செலவிட வேண்டியுள்ளது. எனவே, அவர்கள் பயன்பெறும் வகையில், அம்மா திருமண மண்டபங்கள் கட்ட உத்தரவிட்டுள்ளேன். இந்த மண்டபங்களில் மணமகன் -மணமகளுக்குத் தனி அறைகள், விருந்து உண்ணும் அறை உள்பட அனைத்து வசதிகளும் இருக்கும். தமிழ்நாடு … Continue reading ஆறு மாவட்டங்களில் அம்மா திருமண மண்டபம்: சமூக நலக்கூடங்கள் ஏன் மூடங்கின?

“ஒரு வழக்கு தற்கொலை செய்துகொண்டது”

மென்பொறியாளர் ஸ்வாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் தற்கொலை செய்துகொண்டதாக தமிழக காவல்துறை அறிவித்துள்ளது. சிறையில் இருந்த ராம்குமார் எப்படி தற்கொலை செய்துகொண்டிருக்க முடியும்? என சமூக ஊடகங்களில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. சில கண்டனக் குரல்கள் இங்கே: Vijayasankar Ramachandran: ஒரு வழக்கு தற்கொலை செய்துகொண்டது. பிரதாபன் ஜெயராமன்: இரு ஆணவக்கொலைகள் Joshua Isaac Azad: Ramkumar murdered by the state!!!! #CustodialMurder #I_Stand_By_Ramkumar #JusticeForRamkumar Aravindan Sivakumar: ராம்குமார் இறந்தார் என்று போடாமல் தற்கொலை என்று எப்படி … Continue reading “ஒரு வழக்கு தற்கொலை செய்துகொண்டது”

அக்னிக்குஞ்சுகள்!

வா. மணிகண்டன் விக்னேஷ் இறந்துவிட்டான். திருவாரூரைச் சேர்ந்த விக்னேஷ் பாண்டியன். இரண்டு நாட்களுக்கு இந்தப் பெயரைப் பேசுவார்கள். முத்துக்குமார் எரிந்து கருகிய போதும் இப்படித்தான் பேசினார்கள். செங்கொடி தீக்கு தன்னை இரையாக்கிய போதும் இதே மாதிரிதான் பேசினார்கள். இதற்கும் முன்பு எத்தனையோ பேர் எரிந்து வீணாகப் போனார்கள். மண்டல் கமிஷன் போராட்டத்திலிருந்து, தன் தலைவனை கட்சியை விட்டு நீக்குகிறார்கள் என்பது வரை எத்தனையோ காரணங்களுக்காக இளைஞர்களை தீ காவு கொண்ட மண் இது. முத்துக்குமார் ஞாபகத்தில் இருக்கிறான். … Continue reading அக்னிக்குஞ்சுகள்!

தீக்குளித்த விக்னேஷ் சிகிச்சை பலனின்றி மரணம்

கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி நடத்திய பேரணியில் கலந்துகொண்ட அக்கட்சியின் தொண்டர் விக்னேஷ் தீக்குளித்தார். 90 சதவீத காயங்களுடன் மருத்துமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக நாம் தமிழர் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்த அறிக்கையில், “கர்நாடகாவில் தமிழர்களைத் தாக்கியும் தமிழகப் பேருந்துகளை அடித்து நொறுக்கியும் காவேரியில் தமிழர்களுக்குத் தண்ணீர் தர மறுத்தும் போராடுகிற கன்னடர்களைக் கண்டித்து சென்னை எழும்பூரில் நேற்று (15-09-2016) மாலை 3 மணிக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்ற … Continue reading தீக்குளித்த விக்னேஷ் சிகிச்சை பலனின்றி மரணம்

கழன்று விழும் இந்துமதவெறியர்களின் முகமூடிகள்

சு. இரவிக்குமார் "காவி"கள் உருவாக்கும் காவிரிச்சிக்கலின் பின்புலத்தில் இன்னுமொரு மதவெறி நிகழ்ச்சி நிரலும் உள்ளது. தற்காலத்தின் முதல்வர்களில் அவர் காங்கிரஸ் முதலமைச்சராய் இருந்த போதிலும், மூடநம்பிக்கைகளுக்கு எதிராக உறுதியான நிலைபாடு எடுப்பதோடு, மூடநம்பிக்கைகளுக்கும், மூடப்பழக்க வழக்கங்களுக்கும் எதிராக உருப்படியான சட்டங்களையும் இயற்றியவர் சித்தராமய்யா. அதுதான் சித்தராமய்யாவைப் பதவியிலிருந்து அகற்றிவிட்டு, அங்கே பாஜக ஆட்சியை அமைப்பதன் மூலம், இத்தகைய முற்போக்கான சட்டங்களை நீர்த்துப் போகச் செய்யவோ அல்லது இல்லாமலே ஆக்கவோ செய்ய வேண்டும் என்பதும் பாஜகவின் உள்ளக் கிடக்கைகளில் … Continue reading கழன்று விழும் இந்துமதவெறியர்களின் முகமூடிகள்

“காவிரி நீர் வந்துகொண்டிருக்கும்போது ஓர் இளைஞர் தீக்குளிக்கிறார்; சீமானிடமிருந்து தமிழக இளைஞர்களைக் காப்பாற்றுங்கள்”

வி. சபேசன் நாம் தமிழர் கட்சி இன்று நடத்திய ஆர்ப்பாட்டத்தில் விக்னேஸ் என்ற இளைஞர் தீக்குளித்து மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார். விக்னேஸ் தீக்குளித்த செய்தி வந்த பொழுது, நான் அதைப் பெரிது படுத்தவில்லை. ஊர்வலத்தில் தனக்குத்தானே தீமூட்ட முயற்சித்திருப்பான், உடனடியாகவே அவனை பக்கத்தில் நின்ற தொண்டர்கள் காப்பாற்றியிருப்பார்கள், சிறிய தீக்காயம்தான் ஏற்பட்டிருக்கும், இன்றைக்கே வீடு வந்து விடுவான்' இப்படி எனக்கு நானே நினைத்துக் கொண்டேன். ஆனால் நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் சிலர் விக்னேஸ் பற்றி … Continue reading “காவிரி நீர் வந்துகொண்டிருக்கும்போது ஓர் இளைஞர் தீக்குளிக்கிறார்; சீமானிடமிருந்து தமிழக இளைஞர்களைக் காப்பாற்றுங்கள்”

கர்நாடகாவிடம் இருந்து நாம் கற்க வேண்டியவை என்னென்ன?

வில்லவன் இராமதாஸ் கர்னாடகாவில் தமிழக வாகனங்கள் மற்றும் ஓட்டுனர்கள் மீதான தாக்குதலுக்குப் பிறகு இருவகையான எதிர்வினைகளை சமூக ஊடகங்களில் பார்க்க முடிகிறது. அதாவது பெங்களூர் பாதுகாப்பாக இருக்கிறது எனும் feel good பதிவுகள் அல்லது இந்த கன்னடர்களே இப்படித்தான் எனும் பதிவுகள் வெளியாகின்றன. இரண்டும் உண்மை இல்லை எனும் பதிவுகளும் இருக்கின்றன அவையும் தெளிவான கர்நாடக சூழலை காட்டுவதாக இல்லாமல் காவிரியின் வரலாறும் கர்நாடகாவின் வன்முறைகளுக்கான பிண்ணனி பற்றிய புரிதல் அற்றவைகளாக உள்ளன. இதற்கான தீர்வுகள் என … Continue reading கர்நாடகாவிடம் இருந்து நாம் கற்க வேண்டியவை என்னென்ன?

காவிகளின் கையில் சிக்கியிருக்கும் அரசியல் ஆயுதம் ‘காவிரி’!

அறிவழகன் கைவல்யம் கன்னடர்களுக்கும், தமிழர்களுக்கும் வாழ்வியல் பண்புகளில் பெரிய அளவில் வேறுபாடுகள் ஏதுமில்லை, குறிப்பாக ஊரகப் பகுதிகளில் தொல் குடிகளாக வசிக்கும் கன்னட உழைக்கும் மக்கள், விவசாயிகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் இன்னும் பெரிய அளவில் அரசியல் விழிப்புணர்வு இல்லாதவர்கள், அடிப்படை வசதிகளான சாலை, குடிநீர் மற்றும் கல்வி வேலை வாய்ப்புகளில் மிகவும் பின்தங்கி குரல் கொடுக்கவும் இயலாமல் இருப்பவர்கள். அங்கிருக்கும் ஆதிக்க சாதிகளான ஒக்கலிகர் (கௌடர்கள்) மற்றும் லிங்காயத்துகள் அரசியல் மற்றும் பொருளாதார வளர்ச்சியை தங்கள் … Continue reading காவிகளின் கையில் சிக்கியிருக்கும் அரசியல் ஆயுதம் ‘காவிரி’!

முழு அடைப்புப் போராட்டம்; கட்சிகள் ஆதரவு; தனியார் பள்ளிகள், பெட்ரோல் பங்குகள் மூடல்

கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து, விவசாய சங்கங்கள், வணிகர் சங்கங்களின் சார்பில் தமிழகத்தில் செப்டம்பர் 16-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முழு கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது. தமிழ்நாடு அனைத்து விவசாயச் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு, வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, தமிழ்நாடு லாரி உரிமையாளர்களின் சம்மேளனம், தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம், ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் போன்ற பல்வேறு அமைப்புகளின் சார்பில் இந்தப் போராட்டம் நடைபெற உள்ளது. இந்த முழு கடையடைப்புப் போராட்டத்துக்குத் திமுகவின் … Continue reading முழு அடைப்புப் போராட்டம்; கட்சிகள் ஆதரவு; தனியார் பள்ளிகள், பெட்ரோல் பங்குகள் மூடல்

பேரறிவாளனைத் தாக்கிய கைதி தற்கொலைக்கு முயற்சி; வேலூர் சிறையில் என்ன நடக்கிறது?

வேலூர் சிறையில் உயர் பாதுகாப்புப் பிரிவில் உள்ள பேரறிவாளனை, மதுரையைச் சேர்ந்த ஆயுள் கைதியான ராஜேஷ்கண்ணா (46) இரும்புக் கம்பியால் தாக்கியதில், அவரது தலையில் பலத்தகாயம் ஏற்பட்டு 4 தையல்கள் போடப்பட்டன. இந்நிலையில், ரத்த அழுத்தத்துக்கான மாத்திரைகளை அதிகளவில் ராஜேஷ் கண்ணா உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். மயங்கிக் கிடந்த அவரைக் காவலர்கள் மீட்டு சிறை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ராஜேஷ் கண்ணாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள், ராஜேஷ் கண்ணா, பேரறிவாளனுடன் நட்புடன் … Continue reading பேரறிவாளனைத் தாக்கிய கைதி தற்கொலைக்கு முயற்சி; வேலூர் சிறையில் என்ன நடக்கிறது?